وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَات فأتمهنَّ (البقرة) 124
இன்று நமக்கு சுன்னத்தாக இருக்கும் பல விஷயங்கள் இப்றாஹீம் அலை அவர்களுக்கு ஃப்ர்ளாக ஆக்கப்பட்டிருந்தது
عَنِ ابْنِ عَبَّاسٍ رض وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَات قَالَ: ابْتَلاهُ اللَّهُ بِالطَّهَارَةِ خَمْسٌ فِي الرَّأْسِ وَخَمْسٌ فِي الْجَسَدِ:فِي الرَّأْسِ قَصُّ الشَّارِبِ وَالْمَضْمَضَةُ وَالاسْتِنْشَاقُ وَالسِّوَاكُ وَفَرْقُ الرَّأْسِ، وَفِي الْجَسَدِ: تَقْلِيمُ الأَظَافِرِ وَحَلْقُ الْعَانَةِ وَالْخِتَانُ وَنَتْفُ الإِبْطِ وَغَسْلُ أَثَرِ الْغَائِطِ وَالْبَوْلِ بِالْمَاءِ(تفسير ابن كثير)مصنف عبد الرزاق –
பத்து காரியங்களைக் கொண்டு அல்லாஹ் இப்றாஹீம் அலை அவர்களை சோதித்தான். அதாவது ஃபர்ளாகவே ஆக்கினான். அதை இப்றாஹீம் அலை அவர்கள் வாழ்க்கை முழுவதும் முறையாக நிறைவேற்றினார்கள்
தலையுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து. உடலுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து. அத்தனையும் சுத்தம் சம்பந்தமான விஷயங்களாகும். தலையுடன் சம்பந்தப்பட்டவை 1.மீசையைக் கத்தரிப்பது 2. வாய் கொப்பளிப்பது 3.நாசிக்கு நீர் செலுத்துவது 4. மிஸ்வாக் செய்வது 5. தலைமுடியில் நேர் மாங்கு எடுத்து வாருவது. உடலுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து 1.நகம் வெட்டுவது 2.மறைவிட ரோமங்களைக் களைவது 3. கத்னா செய்வது 4. அக்குள் முடிகளைக் களைவது 5. தண்ணீரைக் கொண்டு மல, ஜல சுத்தம் செய்வது.
மேற்காணும் சுன்னத்துகளில் சிலவற்றை விரிவாக காண்போம்
மீசையைக் கத்தரிப்பதும் தாடி வளர்ப்பதும் சுன்னத்தாகும்
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ (بخاري)
ஏதேனும் ஓதினால் அவர்களின் தாடி அசையும் அளவுக்கு நபி ஸல் அவர்களின் தாடி இருந்தது
عَنْ أَبِي مَعْمَرٍ قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ قُلْنَا بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ (بخاري)
நபி ஸல் அவர்கள் லுஹரிலும் அசரிலும் கிராஅத் ஓதுவார்களா என கப்பாப் ரழி அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். எதை வைத்து நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் நபி ஸல் அவர்களின் தாடி அசைவதைக் கொண்டு தெரிந்து கொள்வோம் என்றார்கள்.
கையால் பிடித்து உலுக்கும் அளவுக்கு தாடி வைத்திருந்த ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்
قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي.. (94)سورة طه
தாடி உடல் ரீதியான பலன்
ஒரு முஸ்லிம் ஐந்து நேரத்தொழுகையை முழுமாக தொழும்போது அவனுடைய முதுகுத்தண்டு குறைந்த பட்சம் 34 தடவையாவது வளைத்தெடுக்கப்படுவதால் அவனுடைய கிட்னிக்கு மேல் தொப்பி போல் இருக்கிற ஒரு வித சுரப்பி தூண்டப்பட்டு ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியையும்,பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியையும் உண்டாக்குகிறது. அதுபோல் ஆண்கள் தாடி வைப்பதால் ஒரு வித சுரப்பி தூண்டப்பட்டு ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
மருத்துவ ஆய்வின் படி தாடி வளர்ப்பது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கிறது தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கும் இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பாக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. தலைமுடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது ஆச்சரியமாக உள்ளது
சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
1973ல் கலிபோனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதுள்ள எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார். 1.முழு தாடியுடன் 2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன் 3. மீசையுடன் 4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்) ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது Pelligrini இன் ஆய்வின் முடிவில் முகத்தில் அதிக முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாக, அழகிய தோற்றமுடையவர்களாக, கம்பீரமுடையவர்களாக, தக்க வளர்ச்சி யுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.
மறைந்த மாமேதை அல்லாமா ஹழ்ரத் கிப்லா தங்களுடைய பயானில் அடிக்கடி கூறுவார்கள். தாடி வைப்பதன் சிறப்பைப் பற்றி பெண்களிடம் அதிகம் பேச வேண்டும். காரணம் பல வீடுகளில் ஆண்கள் தாடி வைக்க நினைத்தாலும் பெண்கள் விடுவதில்லை
மீசையைக் கத்தரிப்பது, நகம் வெட்டுவது, அக்குள் மற்றும் மறைவிட ரோமங்களை நீக்குவதில் அதிக பட்ச கெடு.
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ فَلَيْسَ مِنَّا(ترمذي)
எவர் மீசையைக் கத்தரிக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல.
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُصُّ أَوْ يَأْخُذُ مِنْ شَارِبِهِ وَكَانَ إِبْرَاهِيمُ خَلِيلُ الرَّحْمَنِ يَفْعَلُهُ (ترمذي)
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ الْفِطْرَةِ حَلْقُ الْعَانَةِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ (بخاري
عَنْ أَنَسِ رض قَالَ وَقَّتَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَلْقَ الْعَانَةِ وَتَقْلِيمَ الْأَظْفَارِ وَقَصَّ الشَّارِبِ وَنَتْفَ الْإِبِطِ أَرْبَعِينَ يَوْمًا مَرَّةً (ابوداود
அனஸ் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் மீசையைக் கத்தரிப்பது, மறைவிட ரோமங்களைக் களைவது, அக்குள் முடிகளைக் களைவது நகம் வெட்டுவது ஆகியவை அதிகம் பட்சம் நாற்பது நாட்களுக்கு மேல் இவ்வறைக் களையாமல் விடக் கூடாது என எங்களுக்கு கெடு விதித்தார்கள்.
இது அதிக பட்ச அளவாகும். குறைந்த பட்சம் நகம், மீசை ஆகியவற்றை ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் அக்குள் முடிகளை நாற்பது நாட்களுக்கு ஒருமுறையும், மர்மஸ்தான முடிகளை இருபது நாட்களுக்கு ஒருமுறையும் களைவது சிறப்பு
عن ابن عمر رضي الله عنهما أن النبي كان يأخذ أظفاره ويحفي شاربه في كل جمعة ويحلق العانة عشرين يوما وينتف الإبط في كل أربعين يوما ولا عذر في تركه وراء الأربعين (مرقاة المفاتيح) قَالَ الْقُرْطُبِيّ فِي"الْمُفْهِم" ذِكْر الْأَرْبَعِينَ تَحْدِيد لِأَكْثَر الْمُدَّة وَلَا يَمْنَع تَفَقُّد ذَلِكَ مِنْ الْجُمُعَة إِلَى الْجُمُعَة وَالضَّابِط فِي ذَلِكَ الِاحْتِيَاج(فتح الباري)
நபி ஸல் அவர்கள் வாரம் ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் நகம் வெட்டுபவர்களாகவும் மீசையைக் கத்தரிப்பவர்களாகவும் இருபது நாட்களுக்கு ஒருமுறை மறைவிட ரோமங்களைக் களைபவர்களாகவும் நாற்பது நாட்களுக்கு ஒருமுறை அக்குள் ரோமங்களைக் களைபவர்களாகவும் இருந்தார்கள் இப்னுஉமர் ரழி கூறினார்கள்
وَالْمُرَاد إِزَالَة مَا يَزِيد عَلَى مَا يُلَابِس رَأْس الْإِصْبَع مِنْ الظُّفْر لِأَنَّ الْوَسَخ يَجْتَمِع فِيهِ فَيُسْتَقْذَر وَقَدْ يَنْتَهِي إِلَى حَدّ يَمْنَع مِنْ وُصُول الْمَاء إِلَى مَا يَجِب غَسْله فِي الطَّهَارَة وَلَمْ يَثْبُت فِي تَرْتِيب الْأَصَابِع عِنْد الْقَصّ شَيْء مِنْ الْأَحَادِيث (فتح الباري)
நீளமான நகங்களுக்கிடையில் அழுக்குகள் தங்கும். அவற்றை சரிவர சுத்தம் செய்யவும் முடியாது. ஆகவே நீளமான நகம் உள்ளவரின் உளூ, கடமையான குளிப்பு ஆகியவை நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு
لَكِنْ جَزَمَ النَّوَوِيّ فِي"شَرْح مُسْلِم" بِأَنَّهُ يُسْتَحَبّ الْبُدَاءَة بِمُسَبِّحَةِ الْيُمْنَى6 ثُمَّ بِالْوُسْطَى7 ثُمَّ الْبِنْصِر8 ثُمَّ الْخِنْصَر9 ثُمَّ الْإِبْهَام10 ، وَفِي الْيُسْرَى بِالْبَدَاءةِ بِخِنْصَرِهَا ثُمَّ بِالْبِنْصِرِ إِلَى الْإِبْهَام وَيَبْدَأ فِي الرِّجْلَيْنِ بِخِنْصَرِ الْيُمْنَى إِلَى الْإِبْهَام وَفِي الْيُسْرَى بِإِبْهَامِهَا إِلَى الْخِنْصَر، وَلَمْ يَذْكُر لِلِاسْتِحْبَابِ مُسْتَنَدًاوَتَوْجِيه الْبُدَاءَة بِالْيُمْنَى لِحَدِيثِ عَائِشَة الَّذِي مَرَّ فِي الطَّهَارَة " كَانَ النَّبِىُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِى شَأْنِهِ كُلِّهِ فِى طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ (بخاري) باب يَبْدَأُ بِالنَّعْلِ الْيُمْنَى – كتاب اللباس)وَالْبُدَاءَة بِالْمُسَبِّحَةِ مِنْهَا لِكَوْنِهَا أَشْرَف الْأَصَابِع لِأَنَّهَا آلَة التَّشَهُّد ، وَأَمَّا اِتِّبَاعهَا بِالْوُسْطَى فَلِأَنَّ غَالِب مَنْ يُقَلِّم أَظْفَاره يُقَلِّمهَا قَبْل ظَهْر الْكَفّ فَتَكُون الْوُسْطَى جِهَة يَمِينه فَيَسْتَمِرّ إِلَى أَنْ يَخْتِم بِالْخِنْصَرِ ثُمَّ يُكْمِل الْيَد بِقَصِّ الْإِبْهَام وَأَمَّا الْيُسْرَى فَإِذَا بَدَأَ بِالْخِنْصَرِ لَزِمَ أَنْ يَسْتَمِرّ عَلَى جِهَة الْيَمِين إِلَى الْإِبْهَام (فتح الباري)لِلِاسْتِحْبَابِ مُسْتَنَدًاமுஸ்தஹப் என்பதற்கு ஆதாரம் கூறவில்லை
இமாம் நவவீ ரஹ் கூறினார்கள். நகம் வெட்டுவதில் முஸ்தஹப்பாகிறது வலது கையின் கலிமா விரலில் ஆரம்பித்து அடுத்து நடுவிரல் பிறகு மோதிர விரல் பிறகு சுண்டு விரல் பிறகு பெருவிரல் நகங்களை வெட்ட வேண்டும். அதேபோல இடது கையில் முதலாவதாக சுண்டு விரல் பிறகு நடுவிரல் பிறகு நடுவிரல் பிறகு ஆட்காட்டி விரல் பிறகு பெருவிரல் என்று வருவது முஸ்தஹப்பாகும். காரணம் நபி ஸல் அவர்கள் அனைத்திலும் வலது புறம் துவங்குவதை விரும்பியுள்ளார்கள். கலிமா விரலைக் கொண்டு துவங்குவதன் நோக்கம் அதுதான் விரல்களில் சிறந்த விரலாக இருக்கிறது என்பதாலும் அத்தஹிய்யாத் ஓதும்போது அது பயன்படுகிறது என்பதாலும் அது நல்லதாகும். அடுத்து நடுவிரல் நகத்தை வெட்ட வேண்டும் என்பதற்கான காரணம் பெரும் நகம் வெட்டுபவர்கள் உள்ளங்கையை மேல் நோக்கி வைத்தவாறு வெட்டுவார்கள் எனவே கலிமா விரல் நகத்தை வெட்டிய பின்பு அடுத்த வலது புற வரிசையில் நடுவிரல் தான் இருக்கும் என்பதால் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதேபோல இடது கை விரல் நகங்களை வெட்டும்போது உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்போது சுண்டு விரல் தான் முதலில் வலது புறத்தில் இருக்கும்.
நீளமான நகங்கள் நரகவாதிகளின் அடையாளங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது
عَنْ أَنَسِ رضي الله عنه قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ11 يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ12 (ابوداود) بَاب فِي الْغِيبَةِ -كِتَاب الْأَدَبِ
மிஃராஜுக்கு என்னை அழைத்துச் செல்லப்பட்ட போது நான் சில மனிதர்களைக் கடந்து சென்றேன் அவர்களின் நகங்கள் செம்பால் ஆனதாக, (மிகவும் கூர்மையானதாக) இருந்தன. அவற்றின் மூலம் அவர்கள் தமக்குத் தாமே தமது முகங்களையும் நெஞ்சுகளையும் தங்களின் நகங்களால் குத்தி காயப் படுத்திக் கொள்வதைக் கண்டு, இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள். இவர்கள் தான் உலகில் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள். (புறம் பேசியவர்கள்) அதாவது அடுத்தவர்களின் மானம் மரியாதையை பாழ்படுத்தியவர்கள்
வெட்டிய நகங்களை புதைப்பது பற்றிய விபரங்கள்
நம் உடலில் இருந்து நீக்கப்பட்ட நகம், முடிகளை குப்பையில் போடுவதை விட முடிந்தால் அவற்றை புதைப்பது சிறப்பு
قال الحافظ ابن حجر: قلتُ لأحمد : يأخذ من شعره وأظفاره أيدفنه أم يلقيه ؟ قال : يدفنه . قلت : بَلَغَكَ فيه شيء ؟ قال : كان ابن عمر يدفنه " وقد استحب أصحابنا دفنها لكونها أجزاء من الآدمي والله أعلم (فتح الباري)
وَرُوِيَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِدَفْنِ الشَّعْر وَالْأَظْفَار وَقَالَ : لَا يَتَلَعَّب بِهِ سَحَرَة بَنِي آدَم . قُلْت وَهَذَا الْحَدِيث أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ مِنْ حَدِيث وَائِل بْن حُجْرٍ نَحْوه . وَقَدْ اِسْتَحَبَّ أَصْحَابنَا دَفْنهَا لِكَوْنِهَا أَجْزَاء مِنْ الْآدَمِيّ وَاَللَّه أَعْلَم (فتح الباري)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது. நகம், முடி வெட்டியவர் தனது முடியை புதைப்பது நல்லதா அல்லது வெறுமனே தூக்கிப் போடுவது போதுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் புதைக்க வேண்டும் என பதில் கூறினார்கள் இது விஷயமாக தங்களிடம் ஆதாரம் ஏதேனும் கிடைத்துள்ளதா என்று கேட்க, அதற்கு அவர்கள் ஆம் இப்னு உமர் ரழி அவர்கள் நகம், முடிகளை புதைப்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் நபி ஸல் அவர்கள் நகம், முடிகளை புதைக்கும்படி ஏவினார்கள் மேலும் கூறினார்கள் நகம், முடிகள் மூலமாக மனிதர்களில் சூனியக்காரர்கள் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் புதைப்பதே நல்லது.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் கூறும்போது நகம், முடி என்பது மனிதனின் உடல் அங்கங்களாக இருப்பதால் மனிதனை எப்படி மண்ணில் புதைப்போமோ அவ்வாறு மண்ணில் புதைப்பது நல்லது என்று கூறினார்கள்.
மிஸ்வாக் என்ற சுன்னத்தும் இப்றாஹீம் அலை அவர்களுக்கு கட்டளையிடப் பட்டிருந்தது
عَنْ أَبِي أَيُّوبَ قَاَل قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَالتَّعَطُّرُ وَالسِّوَاكُ وَالنِّكَاحُ (ترمذي) - كِتَاب النِّكَاحِ
عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ (بخاري) وَقَالَتْ عَائِشَةُ رضي الله عنها عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم (السواك) مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ (بخاري) باب السِّوَاكِ– كتاب الجمعة
தொழுகை அல்லாத நேரங்களிலும் நபி ஸல் அவர்கள் மிஸ்வாக் செய்வார்கள்
عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنْ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ(بخاري) باب السِّوَاكِ– كتاب الجمعةعَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ لِعَائِشَةَ بِأَىِّ شَىْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمإِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ "بِالسِّوَاكِ" (مسلم) بَاب السِّوَاكِ- كِتَاب الطَّهَارَةِ
வீட்டுக்கு வந்தவுடன் நபி ஸல் அவர்கள் எந்த செயலைக் கொண்டு தொடங்குவார்கள் என்று ஆயிஷா ரழி அவர்களிடம் கேட்கப்பட்ட போது வீட்டுக்கு வந்தவுடன் மிஸ்வாக் செய்வார்கள் என ஆயிஷா ரழி அவர்கள் பதில் கூறினார்கள்
சகராத் நிலையிலும் மிஸ்வாக் செய்வதை விரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
عن عَائِشَةَ رضي الله عنها كَانَتْ تَقُولُ إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي وَفِي يَوْمِي وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي13 وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ14 رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ15 فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُهُ فَأَمَرَّهُ وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ يَشُكُّ عُمَرُ فِيهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ فِي الرَّفِيقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ (بخاري) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ-كتاب المغازى
அல்லாஹ் எனக்குத் தந்த அருட்கொடைகளில் ஒன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது வீட்டில் என்னுடன் தங்கும் நாளில் என்னுடைய கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையே தலை சாய்த்த நிலையில் வஃபாத்தானார்கள். அல்லாஹ் அவர்களின் கடைசி நேரத்தில் எனது உமிழ் நீரையும் அவர்களின் உமிழ் நீரையும் ஒன்று சேர்த்தான். அதாவது என் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரழி என்னிடம் வருகை தந்தார். அவரிடம் ஒரு மிஸ்வாக் குச்சி இருந்தது. நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை என் மடியில் சாய்த்து வைத்திருந்த நிலையில் அவர்கள் அந்த மிஸ்வாக் குச்சியையே பார்ப்பதை நான் கண்டு அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை உங்களுக்கு வாங்கித் தரட்டுமா என்று கேட்ட போது ஆம் என்று தலையசைத்தாரகள். அதை நான் வாங்கித் தந்தேன். ஆனால் புதிய மிஸ்வாக் என்பதால் அவர்களுக்கு அது சிரமமாக இருந்தது. அதை உங்களுக்கு மிருதுவாக்கித் தரட்டுமா என்று கேட்ட போது ஆம் என்று தலையசைத்தாரகள். அதை பற்களால் கடித்து அவர்களுக்கு மிருதுவாக்கித் தந்தேன். அதை வாங்கி பற்களில் தேய்த்தார்கள். அவர்களின் முன்னிலையில் ஒரு குவளை நீர் இருந்த து. அவர்களின் இரு கைகளையும் அதில் நுழைத்து பின்பு அந்தக் கைகளால் முகத்தைத் தடவினார்கள். பிறகு கலிமா சொன்னவர்களாக நிச்சயமாக ஒவ்வொரு மவ்த்துக்கும் சகராத் உண்டு என்று கூறி, தன் கைகளை மேலே தூக்கி உயர்த்தி உயர்ந்த சுவனத்திலே...என்ற வார்த்தையைக் கூறிய நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது.அவர்களின் கைகள் தானாக கீழே சரிந்தது.
நாசிக்கு நீர் செலுத்துவதும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடமையாக்கப் பட்டிருந்தது
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَيْقَظَ أُرَاهُ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلَاثًا فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ (بخاري) باب صِفَةِ إِبْلِيسَ وَجُنُودِهِ– كتاب بدء الخلق -(خيشومه ) هو الأنف وقيل أقصى الأنف-
உங்களில் ஒருவர் தூங்கி எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை மூக்கை சுத்தம் செய்து கொள்ளட்டும் ஏனெனில் ஷைத்தான் அவருடைய மூக்கந் தண்டின் மீது இரவைக் கழித்திருப்பான்.
மறைவிட ரோமங்களை சிரைப்பதையும், அக்குள் முடிகளை பிடுங்குவதையும்அல்லாஹ்
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் ஃபர்ளாக்கினான்.
மர்மஸ்தான ரோமங்களை சிறைப்பது என்றும், அக்குள் முடிகளை பிடுங்குவது என்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இது சிறப்பு என்ற அடிப்படையில் கூறப்பட்டதாகும். அக்குள் முடிகள் அடிக்கடி வளரும் என்பதால் பிடுங்குவது சிறப்பு. அதனால் வலி ஏற்படும் என்றிருந்தால் சிரைப்பதும் கூடும்
يُستحب حَلْقُ جَمِيع مَا عَلَى الْقُبُل وَالدُّبُر وَحَوْلهمَا قَالَ وَذَكَرَ الْحَلْق لِكَوْنِهِ هُوَ الْأَغْلَب وَإِلَّا فَيَجُوز الْإِزَالَة بِالنَّوْرَةِ4 وَالنَّتْف وَغَيْرهمَاوَقَالَ النَّوَوِيّ: السُّنَّة فِي إِزَالَة شَعْر الْعَانَة الْحَلْق بِالْمُوسَى3 فِي حَقّ الرَّجُل وَالْمَرْأَة مَعًا- وَالْمُسْتَحَبّ الْبُدَاءَة فِيهِ بِالْيُمْنَى
இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறும்போது மர்மஸ்தான முடிகளை கத்தி போன்றதைக் கொண்டு சிரைப்பது சுன்னத் என்றும் அதிலும் வலது புறத்தைக் கொண்டு முதலில் ஆரம்பிப்பது சிறப்பு என்றும் கூறியுள்ளார்கள்
عَنْ يُونُس بْن عَبْد الْأَعْلَى قَالَ دَخَلْت عَلَى الشَّافِعِيّ وَرَجُل يَحْلِق إِبْطه فَقَالَ :إِنِّي عَلِمْت أَنَّ السُّنَّة النَّتْف وَلَكِنْ لَا أَقْوَى عَلَى الْوَجَع-قَالَ الْغَزَالِيّ : هُوَ فِي الِابْتِدَاء مُوجِع وَلَكِنْ يَسْهُل عَلَى مَنْ اِعْتَادَهُ قَالَ: وَالْحَلْق كَافٍ لِأَنَّ الْمَقْصُود النَّظَافَة رواه اِبْن أَبِي حَاتِم فِي "مَنَاقِب الشَّافِعِيّ
யூனுஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர்களுக்கு ஒரு நாவிதர் அக்குள் முடிகளை சிரைத்துக் கொண்டிருந்தார். அப்போது இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அக்குள் முடிகளைப் பிடுங்குவது தான் சுன்னத். இருந்தாலும் என்னால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் இவ்வாறு செய்கிறேன் என்றார்கள். இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறும்போது பிடுங்குவது என்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக இலகுவாகி விடும். (அடிக்கடி முடிகள் வளராமல் இருக்க பிடுங்குவதே சிறப்பாகும்). இருந்தாலும் சிரைப்பதும் கூட போதுமாகும். காரணம் நமக்கு சுத்தம் தான் நோக்கம். அது எப்படியிருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்கள்.
மறைவிட ரோமங்களைக் களைவதில் கவனக்குறைவு கணவன் மனைவிக்கு மத்தியிலும் பிரிவை ஏற்படுத்தி விடலாம்
-عَنْ جَابِرِ رضي الله عنهقَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا أَيْ عِشَاءً كَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ5وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ (مسلم)- بَاب كَرَاهَةِ الطُّرُوقِ- كِتَاب الْإِمَارَةِ-النورة : أخلاط من أملاح تستعمل لإزالة الشعر
நாங்கள் நபி ஸல் அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம். நாங்கள் மதீனாவை அடைந்த போது உடனே வீட்டுக்குச் செல்ல நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் கூறினார்கள். சற்று தாமதியுங்கள். நாம் இரவானதும் வீட்டுக்குச் செல்வோம். காரணம் நாம் வந்த தகவல் இப்போதுதான் நம் மனைவிமார்களுக்குத் தெரிந்திருக்கும். இத்தனை நாட்கள் கணவன் இல்லாததால் தன்னை அலங்கரித்துக் கொள்ளாத மனைவிமார்கள் தலை வாரி அலங்கரித்துக் கொள்ளட்டும். மறைவிடங்களில் கத்தியைப் பயன்டுத்தி (சுத்தம் செய்து) கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
படிப்பினை- நீண்ட நாட்கள் கழித்துத் திரும்பும் கணவன் திடீரென்று வீட்டுக்குள் வந்து விட்டால் ஒருவேளை மனைவி தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள நேரம் இல்லாமல் போகலாம். அத்துடன் கணவன் உறவு கொண்டால் அவள் மீது வெறுப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அது பிரிவை ஏற்படுத்தி விடலாம் என்பதால் நபி ஸல் அவ்வாறு கூறினார்கள்.
சுன்னத் எனும் கத்னாவும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடமையாக்கப்பட்டதாகும்
عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ اخْتَتَنَ إِبْرَاهِيمُ عليه السلام بَعْدَ ثَمَانِينَ سَنَةً وَاخْتَتَنَ بِالْقَدُومِ (بخاري) باب الْخِتَانِ بَعْدَ الْكِبَرِ وَنَتْفِ الإِبْطِ -كتاب اللباس- عَنْ عُثَيْمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِأَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ أَسْلَمْتُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ يَقُولُ احْلِقْ -قَالَ الراوي- وأَخْبَرَنِي آخَرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِآخَرَ مَعَهُ أَلْقِ عَنْكَ شَعْرَ (شِعَار) الْكُفْرِ وَاخْتَتِنْ (ابوداود) بَاب فِي الرَّجُلِ يُسْلِمُ فَيُؤْمَرُ بِالْغُسْلِ- كِتَاب الطَّهَارَةِوَعَنْ أَحْمَد وَبَعْض الْمَالِكِيَّة : يَجِب وَعَنْ أَبِي حَنِيفَة وَاجِب وَلَيْسَ بِفَرْضٍ . وَعَنْهُ سُنَّة يَأْثَم بِتَرْكِهِ .وَذَهَبَ أَكْثَر الْعُلَمَاء وَبَعْض الشَّافِعِيَّة إِلَى أَنَّهُ لَيْسَ بِوَاجِبٍ (فتح الباري)
கத்னாவை சிறு வயதிலேயே செய்வது சிறந்தது
وَاخْتُلِفَ فِي الْوَقْت الَّذِي يُشْرَع فِيهِ الْخِتَان قَالَ الّمَاوَرْدِيّ: لَهُ وَقْتَانِ وَقْت وُجُوب وَوَقْت اِسْتِحْبَاب فَوَقْت الْوُجُوب الْبُلُوغ وَوَقْت الِاسْتِحْبَاب قَبْله ، وَالِاخْتِيَار فِي الْيَوْم السَّابِع مِنْ بَعْد الْوِلَادَة وَقِيلَ مِنْ يَوْم الْوِلَادَة فَإِنْ أَخَّرَ فَفِي الْأَرْبَعِينَ يَوْمًا ، فَإِنْ أَخَّرَ فَفِي السَّنَة السَّابِعَة ، فَإِنْ بَلَغَ وَكَانَ نِضْوًا نَحِيفًا يُعْلَم مِنْ حَاله أَنَّهُ إِذَا اُخْتُتِنَ تَلِفَ سَقَطَ الْوُجُوب . وَيُسْتَحَبّ أَنْ لَا يُؤَخَّر عَنْ وَقْت الِاسْتِحْبَاب إِلَّا لِعُذْرٍ وَقَالَ أَبُو الْفَرَج السَّرَخْسِيّ: فِي خِتَان الصَّبِيّ وَهُوَ صَغِير مَصْلَحَة مِنْ جِهَة أَنَّ الْجِلْد بَعْد التَّمْيِيز يَغْلُظ وَيَخْشُن فَمِنْ ثَمَّ جَوَّزَ الْأَئِمَّة الْخِتَان قَبْل ذَلِكَ
وَقَالَ مَالِك : يَحْسُن إِذَا أَثْغَرَ أَيْ أَلْقَى ثَغْره وَهُوَ مُقَدَّم أَسْنَانه ، وَذَلِكَ يَكُون فِي السَّبْع سِنِينَ وَمَا حَوْلهَا ، وَعَنْ اللَّيْث يُسْتَحَبّ مَا بَيْن سَبْع سِنِينَ إِلَى عَشْر سِنِينَ ،قَالَ الْوَلِيد فَسَأَلْت مَالِكًا عَنْهُ فَقَالَ : لَا أَدْرِي ، وَلَكِنَّ الْخِتَان طُهْرَة فَكُلَّمَا قَدَّمَهَا كَانَ أَحَبّ إِلَيَّ . وَأَخْرَجَ الْبَيْهَقِيُّ حَدِيث جَابِر: أَنَّ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام خَتَنَ إِسْحَاق وَهُوَ اِبْن سَبْعَة أَيَّام .(فتح الباري)
கத்னாவை ஏழாவது நாளில் நிறைவேற்றலாம். அது தப்பி விட்டால் நாற்பதாவது நாளில் நிறைவேற்றலாம். அதுவும் தப்பி விட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அளவுக்கு நிறைவேற்றலாம். அதிக பட்சம் ஏழு வயதிற்குள் நிறைவேற்ற வேண்டும்.
பருவ வயதை அடைந்த பின்பு இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் அந்த வயதில் கத்னா செய்தால் ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்படும் என்றிருந்தால் வாஜிப் நீங்கி விடும்.
பொருள்- 5,வெளியூர் சென்ற கணவனை பிரிந்திருந்த மனைவி தன்னை அலங்கரித்து, தன் மறைவிட ரோமங்களை நீக்குவதற்காக6,கலிமா விரல் 7,நடுவிரல் 8,மோதிர விரல் 9,சுண்டு விரல் 10,பெருவிரல் 11,செம்பு 12,புறம் பேசுபவர்கள் 13,என் கழுத்துக்கும், நெஞ்சுக்குமிடையில் 14,நெஞ்சில் சாய்த்து 15,மிருதுவாக்கித் தரட்டுமா ?