வியாழன், 27 ஜனவரி, 2022

தஜ்ஜால் வருவதற்கு முன் ஏற்படும் சில சோதனைகள்

 


28-01-2022


بسم الله الرحمن الرحيم                     

தஜ்ஜால் வருவதற்கு முன் ஏற்படும் சில சோதனைகள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்



يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (208)البقرة

உலகம் தற்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இந்த சோதனைகளைப் பார்க்கும்போது தஜ்ஜால் வெளிப்படும் காலம் நெருங்கி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது

தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ......   وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ.  (ابن ماجة)

அபூ உமாமா ரழி அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த  நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை. .... 

தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம்  அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். 

மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.  அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை  முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர்,  தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)

தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு

عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم

தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.

தவறுகள் சுட்டிக் காட்டப் பட்டு அதை திருத்திக் கொள்ளாத சூழ்நிலை அதிகமானால் அதுவும் அழிவு நாளின் அறிகுறியாகும்.

عن أبي أمية الشعباني قال : سألت أبا ثعلبة عن هذه الآية { يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم } فقال أبو ثعلبة لقد سألت عنها خبيرا أنا سألت عنها رسول الله صلى الله عليه و سلم قبلا فقال : يا أبا ثعلبة مروا بالمعروف و تناهوا عن المنكر فإذا رأيت شحا مطاعا و هوى متبعا و دنيا مؤثرة و رأيت أمرا لا بد لك من طلبه فعليك نفسك و دعهم و عوامهم فإن وراءكم أيام الصبر صبر فيهن كقبض على الجمر للعامل فيهن أجر خمسين يعمل مثل عمله  (حاكم) وفي رواية ابن حبان إذا رأيت شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثرة وإعجاب كل ذي رأي برأيه فعليك نفسك

அபூ உமய்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் அபூ தஃலபா ரழி அவர்களிடம் இறைவசனமாகிய உங்களை மட்டும் நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள் என்ற வசனம் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் நீங்கள் உண்மையில் மிகப் பெரிய விஷயத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். நான் இது பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு  அவர்கள்  என்னிடம்  அபூ தஃலபாவே நன்மையை ஏவிக் கொண்டே இரு.. தீமையைத் தடுத்துக் கொண்டே இரு.. ஆனால் எப்போது மக்களிடம் மாபெரும் கஞ்சத்தனத்தையும், மனோ இச்சைக்கு அடிமைப் படுதலையும், உலகமே கதி என்ற நிலையையும், ஒவ்வொருவரும் தன் சிந்தனையை மட்டுமே பெரிதாக க் கருதி மற்றவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தும் காலம் வருமோ அப்போது நீ உன்னை மட்டும் பார்த்துக் கொள். நெருப்புக் கங்கை பற்றிப் பிடித்திருப்பது போன்ற சிரமமான அந்த சூழ்நிலையிலும் நபியின் நடைமுறையை செயல் படுத்துபவருக்கு  அவரைப் போன்ற ஐம்பது பேரின் நன்மை வழங்கப்படும்.                            

  عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"أَنَّ مِنْ أَكْبَرِ الذَّنْبِ أَنْ يَقُولَ الرَّجُلُ لأَخِيهِ: اتَّقِ اللَّهَ، فَيَقُولُ: عَلَيْكَ نَفْسَكَ أَنْتَ تَأْمُرُنِي".- عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:"كَفَى بِالْمَرْءِ إِثْمًا إِذَا قِيلَ لَهُ: اتَّقِ اللَّهَ غَضِبَ". (المعجم الكبير للطبراني

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்- பாவங்களில் மிகப்பெரிய பாவமாகிறது தன் முஸ்லிமான சகோதரரிடம் அல்லாஹ்வை அஞ்சு என்று சொல்லும்போது  நீ உன் வேலையைப் பார். நீ என்ன எனக்கு ஏவுவது என்று கூறுகிறானே அதுதான்  பாவங்களில் மிகப்பெரிய பாவமாகும்.

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்- ஒருவரிடம் அல்லாஹ்வை அஞ்சு என்று சொல்லும்போது  எவன் கோபமடைகிறானோ அவன் பாவி என்பதற்கு அதுவே போதுமானது. 

காலங்கள் வேகமாக நகருவதும் கியாமத்தின் அடையாளம்

عن أنس بن مالك قال : قال رسول الله صلى الله عليه و سلم لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار (ترمذي

தஜ்ஜால் வந்த பின் இதற்கு நேர் மாற்றமாக காலங்கள் மிக மெதுவாக நகரும். அவனுடைய முதல் நாள் ஒரு வருடம் போன்றிருக்கும். அதாவது ஆறு மாதங்கள் பகலாகவே இருக்கும். அதன் பின்பு ஆறு மாதங்கள் இரவாகவே இருக்கும். இரண்டாம் நாள்  ஒரு மாதம் போன்றும்,  மூன்றாம் நாள் ஒரு வாரம் போன்றும் நான்காம் நாள் எப்போதும் போலவும் நகரும். அந்நேரத்தில் தொழுகை எப்படி என நபித்தோழர்கள் கேட்ட போது நேரத்தைக் கணக்கிட்டுத் தொழுது கொள்ள வேண்டும் என்றார்கள். அதாவது ஆறு மாதம் பகலாகவே இருக்கும்போது  இரண்டு தொழுகை மட்டுமே கடமை என்பதாக ஆகாது.  மாறாக சூரியனின் உதயத்தையோ மறைவையோ கவனிக்காமல் கடிகாரத்தை மட்டும் பார்த்து இப்போது தொழுவது போலவே தொழ வேண்டும். நன்கு வெயில் இருக்கும். ஃபஜ்ர்  தொழுது கொண்டிருப்போம்.  நன்கு இருட்டு இருக்கும். லுஹர்  தொழுது கொண்டிருப்போம்.  

عن النواس بن سمعان قال:ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال... قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِى الأَرْضِ قَالَ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ  قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِى كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ قَالَ  لاَ اقْدُرُوا لَهُ قَدْرَهُ (مسلم

விதமான கலாச்சாரச் சீர்கேடுகள் நிகழ்ந்தால் உலகில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்

عن  أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافه شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع " . رواه الترمذي

1.பொதுச்சொத்துக்களில் ஊழல் 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5. மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது  8.மஸ்ஜித்களில் வீண் சப்தம்  9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது  11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை   13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது  14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது 


வியாழன், 20 ஜனவரி, 2022

குடியரசு ஆட்சியின் இலக்கணம் நம் முன்னோர்கள்

21-01-2022

 بسم الله الرحمن الرحيم 

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். ஆனால் அத்தகைய குடியரசுத் தத்துவத்திற்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தம் இல்லை. உண்மையான குடியாட்சியை அதாவது மக்கள் விரும்பும் ஆட்சியைத் தந்தவர்கள் நம் முன்னோர்கள் தான். மக்கள் பிரதிநிதிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையைக் கடைபிடிக்க அறிவுரை கூறிய உமர் ரழியல்லாஹு அன்ஹு 

 عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِرضي الله عنه كَانَ إِذَا بَعَثَ عُمَّالًا اشْتَرَطَ عَلَيْهِمْ: أَلَا تَرْكَبُوا بِرْذَوْنَا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ (بيهقي في شعب الايمان) 

 அதிகாரிகளை அனுப்பும்போது அவர்களுக்கு பின்வருமாறு கட்டளையிடுவார்கள். நீங்கள் உயர்தரமான வாகனங்களில் பயணிக்க க்கூடாது. உயர்தரமான உணவுகளை உண்ணக்கூடாது. உயர்தரமான ஆடைகளை உடுத்தக் கூடாது. மக்கள் தமது கோரிக்கைகளை முன் வைக்க வரும்போது உங்கள் கதவுகள் மூடப்பட்டிருக்க க் கூடாது. இக்கட்டளைகளை மீறினால் உங்களை இந்த அரசு தண்டிக்கும். என்று எச்சரித்து அதிகாரிகளை அனுப்பி வைப்பார்கள். 

 وروي لما استقر عمر بن العاص رض في مصر تعدي ابنه علي احد الاقباط من اهالي مصر وضربه فذهب القبطي المضروب الي الخليفة عمر بن الخطاب رضي الله عنه في المدينة واستعاذ به فبعث الخليفة الي عمرو بن العاص رض فاستقدمه وابنه فلما جاء أعطي الخليفة الي القبطي سوطا وامره أن يضرب ابن عمرو فضربه وأراد أن يضرب اباه عمرو فقال عمرو رض انما ابني الذي ضربك؟ فقال له الخليفة "ياعمرو متي استعبدتم الناس)2وقد ولدتهم أمهاتهم أحرارا؟ (دروس التاريخ الاسلامي) 

 உமர் ரழி அவர்களின் ஆட்சியில் எகிப்தின் ஆளுனராக இருந்த அம்ருப்னுல் ஆஸ் அவர்களின் மகன் எகிப்தைச் சார்ந்த மாற்று மத த்தவரை அடித்து விட்டார். அடி வாங்கிய அவர் நேராக அம்ருப்னுல் ஆஸ் அவர்களிடம் கூற சொல்லாமல் உமர் ரழி அவர்களிடம் வந்து புகார் கூறினார். உடனே உமர் ரழி அந்த மகனையும் அழைத்துக் கொண்டு ஆளுனரையும் உடன் வரச் சொன்னார்கள். வந்தவுடன் உமர் ரழி அவர்கள் அடி வாங்கிய எகிப்தியரிடம் சாட்டையைக் கொடுத்து நீ திருப்பி அடி என்று கூறியவுடன் அவர் அடித்தார். பிறகு ஆளுனரைக் காட்டி அவரையும் அடி என்று உமர் ரழி அவர்கள் கூறிய போது ஆளுனரையும் அடிக்க அவர் முனைந்த போது ஆளுனர் அவர்கள் என் மகன் தானே உன்னை அடித்தான் நான் அடிக்கவில்லையே என்று கூற, அவர் சாட்டையைக் கீழே போட்டார். ஆளுனரை அடிக்கவில்லை. பிறகு உமர் ரழி அவர்கள் ஆளுனரையும் அவரது மகனையும் நோக்கி இவர்களின் தாய்மார்கள் இவர்களை சுதந்திரமானவர்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்படி இவர்களை அடிமை போல் அடிக்கலாம் என்று கூறி எச்சரித்தார்கள். பாதிக்கப்பட்ட மாற்று மதத்தவருக்கு நீதி வழங்குவதில் உமர் ரலி அவர்கள் காட்டிய அவசரம்


 لما قارب الخليفة عمر رضي الله عنه بيت المقدس أتاه رجل نصراني(ذمي) وله بستان عنب :وقال له "كرمي هذا تعرضوا لهوانا رجل ذمة ,فما كان من عمر الا أن طلب برذونا وركب مسرعا, فرأي أبا هريرة يحمل عنبا فقال له وأنت أيضا يا ابا هريرة فقال ياامير المؤمنين أصابتنا مخمصة شديدة فكان أحق من اكلنا من ماله من حاربنافتركه ثم جاء البستان فوجد الناس فيه فطلب عمر الذمي وقال له "بكم كنت تستغله؟ قال بكذا قال فخل سبيله ودفع له الثمن كما قال وأباحه للعسكر(دروس التاريخ) 

 உமர் ரழி அவர்களின் படை பைத்துல் முகத்தஸை நெருங்கிய நேரத்தில் ஒரு திம்மீ கிறிஸ்தவரின் தோட்டத்தில் சில முஸ்லிம்கள் பசியின் காரணமாக உள்ளே புகுந்து திராட்சைகளைச் சாப்பிட்டனர். இதுபற்றி அவர் உமர் ரழி அவர்களிடம் புகார் கொடுத்த போது உடனே உமர் ரழி வேகமாக வர, அபூஹுரைரா ரழி அவர்கள் ஒரு திராட்சைக்குலையை கையில் வைத்திருப்பதைக் கண்டார்கள். கடும் பசியினால் நாங்கள் இப்படிச் செய்தோம் என்று அவர்கள் காரணம் கூற, உடனே உமர் ரழி அந்த திம்மீயிடம் உன் தோட்டத்தில் இவர்கள் பறித்தவற்றின் விலை என்ன என்று கேட்டு அதைக் தந்தார்கள். மராட்டிய மன்னன் சிவாஜியின் மத உணர்வுகளை மதித்த அவுரங்கசீப் ரஹ் இந்துக்கள் மாபெரும் தலைவராக கருதும் மராட்டிய மன்னன் (சத்ரபதி) சிவாஜியை அவுரங்கசீப் சிறையில் அடைத்ததாகவும், அவரை மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்று நூல்களில் திரித்து எழுதுவார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் சிவாஜி சிறை பிடிக்கப்பட்டாரே தவிர, மற்றபடி சிறையில் அவர் இருக்கும்போது கவுரமாக நடத்தப்பட்டார். மேலும் அவுரங்கசீப் ரஹ் அவர்கள் சிவாஜியின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு முறை சிவாஜி மதுராவில் இருக்கும் கோவிலுக்கு தாம் இரண்டு குதிரைகளை தானமாக வழங்க எண்ணியிருப்பதாகவும் அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று அவுரங்கசீப் அவர்களிடம் கோரிக்கை வைத்த போது அவுரங்கசீப் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்ற வசதி ஏற்படுத்திக் கொடுத்தார் உண்மையான குடியரசு ஆட்சியை நடத்தியவர்கள் சிறந்த முஃமினாகவும் இருந்து விட்டால் அவர் கேட்கும் துஆக்களை அல்லாஹ் உடனே ஒப்புக் கொள்வான்


 عن شداد بن أوس عن كعب قال : كان في بني إسرائيل ملك إذا ذكرناه ذكرنا عمر و إذا ذكرنا عمر ذكرناه و كان إلى جنبه نبي يوحي إليه فأوحى الله إلى النبي أن يقول له : اعهد عهدك و اكتب إلي وصيتك فإنك ميت إلى ثلاثة أيام فأخبره النبي بذلك فلما كان اليوم الثالث وقع بين الجدار و السرير ثم جاء إلى ربه فقال : اللهم إن كنت تعلم أني كنت أعدل في الحكم و إذا اختلفت الأمور اتبعت هداك و كنت و كنت فزد في عمري حتى يكبر طفلي و تربو أمتي فأوحى الله إلى النبي أنه قال قال كذا و كذا ـ و قد صدق ـ و قد زدته في عمره خمس عشرة سنة ففي ذلك ما يكبر طفله و تربو أمته فلما طعن عمر قال كعب : لئن سأل عمر ربه ليبقينه الله فأخبر بذلك عمر فقال : اللهم اقبضني إليك غير عاجز و لا ملوم (تاريخ الخلفاء 


 பனீ இஸ்ராயீலில் ஒரு நல்ல அரசர் இருந்தார். அவரை நினைவு கூறும்போதெல்லாம் நாங்கள் உமர் ரழி அவர்களை நினைவு கூறுவோம். உமர் ரழி அவர்களை நினைவு கூறும்போதெல்லாம் அவரை நினைவு கூறுவோம். அவருக்கு நெருக்கமானவராக ஒரு நபி இருந்தார். இந்நிலையில் அவருக்கு மரணம் நெருங்கிய போது அல்லாஹ் அந்த நபியிடம் சொல்லி அதை உணர்த்தும்படி கூறினான். தனக்கு மவத் வருவதை முன்பே அறிந்த அவர் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் எவ்வளவு நீதமாக இருந்தேன் என்று நீ அறிவாய். எவ்வளவு சோதனைகள் வந்த போதும் உனது நேர்வழியை நான் பின்பற்றினேன். எனவே என் பிள்ளைகள் பெரிதாகும் வரை, என் நாட்டு மக்களுக்கு இன்னும் நல்ல முன்னேற்றம் வரும் வரை என் ஆயுளை அதிகமாக்கு என துஆச் செய்தார். அவரது துஆவை அல்லாஹ் ஏற்று அந்த நபியிடம் அவர் கூறுவது உண்மை தான் எனவே அவரது ஆயுளை பதினைந்து வருடங்கள் அதிகமாக்கி விட்டேன் என வஹீ அறிவித்தான். இச்செய்தியை கஃப் ரழி அவர்கள் உமர் ரழி அவர்களின் மரணப் போராட்டத்தின் போது நினைவு படுத்தி, அந்த அரசர் கேட்டதைப் போன்று உமர் ரழி அவர்களும் துஆ கேட்டால் அல்லாஹ் ஆயுளை அதிகப்படுத்துவான் என்று கூறினார்கள். 

இதைக் கேள்விப்பட்ட உமர் ரழி அவர்கள் யாஅல்லாஹ் என்னை உன்னிடமே கைப்பற்றிக் கொள் என்றார்கள். குடியாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஆட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்களும் முஸ்லிம்களின் பொறுமையும் சிலுவை யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம்களில் பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது அந்த சிறைவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் அவர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலும் அவர்களுக்கு மத்தியில் ஒரு ஆலிம் பேசினார். அப்போது அந்த வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணி அவரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார். அவரிடம் விசாரணை நடந்தது. ஆலிமிடம் இராணி கூறினார். இறைவன் எங்கள் பக்கம் தான் இருக்கிறார். அதற்கு அந்த ஆலிம் இல்லை இறைவன் எங்கள் பக்கம் தான் என்றார். உடனே அந்த இராணி இறைவன் எங்கள் பக்கம் இருப்பதால் தான் உங்களைத் தோற்கடித்து எங்களை ஜெயிக்க வைத்துள்ளார். என்று கூற அதற்கு அந்த ஆலிம் கூறினார். காரணம அதுவல்ல. ஆடுகளை மேய்ப்பதற்கு சில நேரங்களில் நாய்களைப் பயன்படுத்துவார்கள். நாய்களுக்கப் பயிற்சி கொடுத்திருப்பார்கள். ஆடுகள் பாதை மாறும்போதும் அந்த நாய் குரைக்கும்.

 அப்போது அந்த ஆடுகள் சீராகச் செல்லும். அதுபோலத்தான் நாங்கள் பாதை மாறிச் செல்லும்போது எங்களை எச்சரிப்பதற்குத் தான் உங்களைப் போன்றவர்களை இறைவன் எங்கள் மீது சாட்டியுள்ளான். நாங்கள் சீராக இருந்தால் உங்களுக்கு வேலை இல்லை. என்றார். அதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை. பண்டைய தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சிக்கு ஒரு உதாரணம் சேதுபதி மன்னர்களைப் பற்றி வரலாற்றில் நாம் அறிந்திருப்போம். இராமநாதபுரம் சேதுபதிமன்னர்களில் ஒருவர் விஜயரகுநாத சேதுபதி. இவர் 1713 TO 1725 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கீழக்கரையும் இடம் பெற்றிருந்தது.சேதுபதி மன்னர் தனக்கு மிகவும் நெருக்கமான கீழக்கரை சதக்கத்துல்லா அப்பாவை மந்திரி சபையில் இடம்பெற அழைத்தபோது அவர் “எனக்கு அதில் அறவே விருப்பம் இல்லை.

 வேண்டுமானால் உங்களுக்கு நல்ல ஒரு நபரை நான் தருகிறேன்” என்று கூறி வள்ளல் சீதக்காதி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதன்படி வள்ளல் சீதக்காதி சேதுபதி மன்னரின் மந்திரி சபையில் இடம்பெற்றார். அப்போது இராமேஸ்வரம் பகுதியில் பெரிய இந்து ஆலயம் எழுப்ப வேண்டும் என்று மன்னர் ஆசைப்பட்டபோது அதற்கான பொறுப்பை சீதக்காதியிடமே ஒப்படைத்தார். எந்தப் பகுதியில் இருந்து கற்களைச் சேகரித்துக் கட்டினால் கட்டிடம் நிலைத்திருக்கும் என்றெல்லாம் நன்கு ஆய்வு செய்து வள்ளல் சீதக்காதி அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தார். வாலி நோக்கம் பகுதியில் இருந்து சுமார் 100 யானைகளில் ஆலயம் கட்டத் தேவையான தூண்கள் இராமேஸ்வரத்திற்கு சுமந்து வரப்பட்டன. ஆலயம் கட்டி முடித்த பின் மிச்சத் தூண்கள் இருந்தன. அப்போது வள்ளல் சீதக்காதி அவர்கள் மன்னரிடம் “கீழக்கரையில் முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் உள்ளது.ஆனால் இந்துக்களுக்கு எந்த ஆலயமும் இல்லை. எனவே மீதித் தூண்களை வைத்து கீழக்கரையில் இந்துக்களுக்கு ஒரு ஆலயம் எழுப்பலாமா? என்று கேட்டபோது“வேண்டாம். கீழக்கரை முஸ்லிம்கள் நிறைந்த இடம். அங்கு கோவில் கட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. வேண்டுமானால் ஒரு மஸ்ஜித் கட்டுங்கள்” என்று மன்னர் கூறினார். ===============

புதன், 12 ஜனவரி, 2022

நோய்களைக் கட்டுப்படுத்துபவன் அல்லாஹ் ஒருவனே

 

14-01-2022

 

بسم الله الرحمن الرحيم 

நோய்களைக் கட்டுப்படுத்துபவன் அல்லாஹ் ஒருவனே

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

إُ

நாளுக்கு நாள் பல்வேறு புதுப்புது வைரஸ்களின் பெயரைச் சொல்லி அரசு லாக் டவுனை அறிவித்து வருகிறது. நோய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் அரசு முயற்சி செய்கிறது. ஆனால் நோய்கள் குறைவதாக இல்லை. முஸ்லிம்கள் அனைவரும் பாவமன்னிப்பைக் கொண்டு அல்லாஹ்விடம் மீண்டால் நிச்சயம் அல்லாஹ் இந்த முஸீபத்தை நீக்குவான். ஆனால் முஸ்லிம்களிடம் பாவங்கள் தான் பெருகிக் கொண்டே வருகிறது. முஃமின்களில் சிலர் மட்டும்தான் இது அல்லாஹ்வின் தண்டனை என்று விளங்கி திருந்தி வாழ ஆரம்பித்துள்ளனர் நோய்களை கட்டுப்படுத்துபவன் அல்லாஹ் ஒருவனே

 وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ (80) وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ (81) الشعراء 

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தன் தந்தையிடம் அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறியபோது எனக்கு நோய் வந்தால் என்னை குணப்டுத்துபவனும் அவனே என்று கூறினார்கள் 

عَنْ جَابِرٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ (مسلم 

 நோயை விட்டும் தப்பிக்க ஊரை விட்டு ஓடிய மக்கள் மரணத்தை விட்டும் தப்பவில்லை

 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ (243) البقرة عَنْ اِبْن عَبَّاس " أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارهمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْت " قَالَ : كَانُوا أَرْبَعَة آلَاف خَرَجُوا فِرَارًا مِنْ الطَّاعُون قَالُوا : نَأْتِي أَرْضًا لَيْسَ بِهَا مَوْت حَتَّى إِذَا كَانُوا بِمَوْضِعِ كَذَا وَكَذَا قَالَ اللَّه لَهُمْ" مُوتُوا " فَمَاتُوا فَمَرَّ عَلَيْهِمْ نَبِيّ مِنْ الْأَنْبِيَاء فَدَعَا رَبّه أَنْ يُحْيِيَهُمْ فَأَحْيَاهُمْ فَذَلِكَ قَوْله عَزَّ وَجَلَّ " أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارهمْ وَهُمْ أُلُوف حَذَرَ الْمَوْت " الْآيَة ذَكَرَ غَيْر وَاحِد مِنْ السَّلَف أَنَّ هَؤُلَاءِ الْقَوْم كَانُوا أَهْل بَلْدَة فِي زَمَان بَنِي إِسْرَائِيل اِسْتَوْخَمُوا أَرْضهمْ وَأَصَابَهُمْ بِهَا وَبَاء شَدِيد فَخَرَجُوا فِرَارًا مِنْ الْمَوْت هَارِبِينَ إِلَى الْبَرِّيَّة فَنَزَلُوا وَادِيًا أَفْيَح فَمَلَئُوا مَا بَيْن عُدْوَتَيْهِ فَأَرْسَلَ اللَّه إِلَيْهِمْ مَلَكَيْنِ أَحَدهمَا مِنْ أَسْفَل الْوَادِي وَالْآخَر مِنْ أَعْلَاهُ فَصَاحَا بِهِمْ صَيْحَة وَاحِدَة فَمَاتُوا عَنْ آخِرهمْ مَوْتَة رَجُل وَاحِد (تفسير ابن كثير) قال الحسن : أماتهم الله قبل آجالهم عقوبة لهم ثم بعثهم إلى بقية آجالهم وقيل : إنما فعل ذلك بهم معجزة لنبي من أنبيائهم قيل : كان اسمه شمعون - قال مجاهد: إنهم لما أحيوا رجعوا إلى قومهم يعرفون أنهم كانوا موتى ولكن سحنة الموت على وجوههم، ولا يلبس أحد منهم ثوبا إلا عاد كفنا حتى ماتوا لآجالهم التي كتبت لهم. (قرطبي) 

பனீ இஸ்ராயீல் சந்ததிகளில் 4000 பேர் கொண்ட ஒரு சமூகம் அவர்களின் ஊரில் ஏற்பட்ட காலரா நோயை விட்டும் தப்பிக்க வேறு ஊருக்கு கூட்டமாக இடம் பெயர்ந்தார்கள். அந்த ஊருக்குச் சென்றவுடன் அல்லாஹ் அங்கு வைத்து அவர்களை மொத்தமாக மவ்த்தாக்கினான். மற்றொரு அறிவிப்பில் அவர்கள் ஒரு பள்ளத்தாக்கை அடைந்து அங்கு வசிப்பிடத்தை ஆக்கியவுடன் அங்கு இரு மலக்குகளை அல்லாஹ் நியமித்தான். ஒருவர் அந்த பள்ளத்தாக்கின் மேல் பகுதியிலுருந்தும் மற்றொருவர் அதன் கீழ் பகுதியிலிருந்தும் சப்தமிட்டனர். அவ்வாறு சப்தமிட்டவுடன் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்தனர். குர்துபீ தஃப்ஸீரில் அவர்கள் தங்களுடைய மவ்த்துக்கான தவணை வரும் முன்பே தண்டனை என்ற அடிப்படையில் இறந்தனர். 

பிறகு சில காலங்கள் கழித்து அந்த வழியாகச் சென்ற நபி ஷம்ஊன் அலை அந்த மனித்ரகளை மறுபடியும் உயிராக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார். அல்லாஹ் உயிராக்கினான். அந்த நபியின் மூலம் இத்தகைய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டவே அல்லாஹ் அந்த மக்களின் ஆயுட்காலம் முடியும் முன்பே மவ்த்தாக்கி பிறகு எழுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிராக்கப்பட்ட அவர்கள் அவர்களின் உண்மையான ஆயுட்காலம் முடியும் வரை வாழ்ந்தாலும் மவ்த்தின் அடையாளம் அவர்கள் மீது இருக்கும் நிலையில் தான் வாழ்ந்தார்கள். பிண வாடையும் அவர்கள் மீது இலேசாக இருந்தது. அவர்கள் எத்தகைய சிறந்த உடை அணிந்தாலும் அது உடனே கஃபனாக மாறி விடும். – குர்துபீ நோய்கள் நீங்க ஆன்மீக மருத்துவமும் மிக அவசியம்

 وعن زينب امرأة عبد الله بن مسعود أن عبد الله رأى في عنقي خيطا فقال : ما هذا ؟ فقلت : خيط رقي لي فيه قالت : فأخذه فقطعه ثم قال : أنتم آل عبد الله لأغنياء عن الشرك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " إن الرقى والتمائم والتولة شرك " فقلت : لم تقول هكذا ؟ لقد كانت عيني تقذف وكنت أختلف إلى فلان اليهودي فإذا رقاها سكنت فقال عبد الله : إنما ذلك عمل الشيطان كان ينخسها بيده فإذا رقي كف عنها إنما كان يكفيك أن تقولي كما كان رسول الله صلى الله عليه وسلم يقول : " أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما " . رواه أبو داود - مشكاة 

ஹழ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் மனைவி அறிவித்துள்ளார்கள் என் கணவர் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் என் கழுத்தில் அறியாமைக் காலத்தில் மந்திரித்துப் போடப்பட்ட கயிற்றைப் பார்த்து விட்டு இது என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அறியாமைக் காலத்தில் மந்திரித்துப் போடப்பட்ட கயிறு என்று பதில் கூறினேன். உடனே அதைக் கழற்றி விட்டு, இந்த அப்துல்லாஹ்வின் குடும்பத்தினராகிய நீங்கள் ஷிர்க்கை விட்டும் அப்பாற்பட்டவர்கள். நபி ஸல் அவர்கள் ஷிர்க்கான வாசகங்கள் மூலம் மந்திரித்தல், ஷிர்க்கான எழுத்துக்களால் கயிறு போடுதல், கணவனுக்கு எதிரான சூனியம் ஆகியவை ஷிர்க் என எச்சரித்துள்ளார்கள் என்று என் கணவர் கூற, அதற்கு நான் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் 

அறியாமைக் காலத்தில் எனக்குக் கண்வலி இருந்தது. நான் அந்தப் பாதிரியாரிடம் சென்று அந்த தாயத்தை அணிந்தவுடன் அந்த கண் வலி சரியாகி விட்டது. என்று கூற அதற்கு அப்துல்லாஹ் ரழி அவர்கள் இது ஷைத்தானுடைய வேலை தான். அவன் உன்னை அந்தப் பாதிரியாரிடம் செல்ல வைப்பதற்காக உன் கண்ணில் குத்தி விடுவான். நீ அங்கே சென்று அவர் தரும் தாயத்தை அணிந்தவுடன் அவன் குத்துவதை நிறுத்திக் கொள்வான். இனி உனக்கு அந்த மாதிரி ஏற்பட்டால் நபி ஸல் அவர்கள் ஓதியது போல பின்வருமாறு ஓதினால் போதும். என்று அந்த துஆவை சொல்லிக் கொடுத்தார்கள். நம்முடைய சோதனைகள் நீங்குவதற்கு நோன்பும் ஒரு கேடயம். பெண்களுக்கும் தற்போதைய சூழ்நிலையை விளக்கிச் சொல்லி வாரம் ஒருமுறையேனும் திங்கட்கிழமை நோன்பு வைக்கச் சொல்ல வேண்டும். 

 தனக்கு ஒரு வேதம் வேண்டும் என்று மூஸா அலை கேட்ட போது நோன்பு வைக்கும்படி அல்லாஹ் ஏவினான். அந்த வேதத்தை வாங்கிக் கொண்டு வந்தபோது மக்கள் இணை வைப்பதைக் கண்டு, கடும் கோபத்தில் தவ்ராத்தை வீசினார்கள். பல துண்டுகளாக வேதம் சிதறியது. எத்தனை துண்டுகளாகச் சிதறியதோ அத்தனைக்கும் பகரமாக அல்லாஹ் நோன்பு வைக்கச் சொன்னான். ஒவ்வொரு நோன்பு முடியும் போது ஒவ்வொரு துண்டுகளும் ஒட்டின. இறுதியில் எல்லாம் ஒன்று சேர்ந்தன.

 وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142)........ وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ (150)الاعراف قال ابن القاسم: سمعت مالكا يقول: كان موسى عليه السلام إذا غضب طلع الدخان من قلنسوته، ورفع شعر بدنه جبته.– قرطبي قال ابن عباس : لما ألقى موسى عليه السلام الألواح تكسرت فصام أربعين يوماً ، فأعاد الله تعالى الألواح (قرطبي – تفسير الرازي) 

 யூனுஸ் அலை ஓதிய துஆவை சோதனையான நேரத்தில் ஓதும் முஃமின்கள் அனைவருக்கும் ஈடேற்றம் கிடைக்கும்

 فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ (88) أَيْ إِذَا كَانُوا فِي الشَّدَائِد وَدَعَوْنَا مُنِيبِينَ إِلَيْنَا وَلَا سِيَّمَا إِذَا دَعَوْا بِهَذَا الدُّعَاء فِي حَال الْبَلَاء.. عن سَعْد اِبْن أَبِي وَقَّاص رَضِيَ اللَّه عَنْهُ قَالَ مَرَرْت بِعُثْمَان بْن عَفَّان رَضِيَ اللَّه عَنْهُ فِي الْمَسْجِد فَسَلَّمْت عَلَيْهِ فَمَلَأَ عَيْنَيْهِ مِنِّي ثُمَّ لَمْ يَرُدّ عَلَيَّ السَّلَام فَأَتَيْت عُمَر بْن الْخَطَّاب فَقُلْت يَا أَمِير الْمُؤْمِنِينَ هَلْ حَدَثَ فِي الْإِسْلَام شَيْء مَرَّتَيْنِ قَالَ لَا وَمَا ذَاكَ قُلْت لَا إِلَّا أَنِّي مَرَرْت بِعُثْمَان آنِفًا فِي الْمَسْجِد فَسَلَّمْت عَلَيْهِ فَمَلَأَ عَيْنَيْهِ مِنِّي ثُمَّ لَمْ يَرُدّ عَلَيَّ السَّلَام قَالَ فَأَرْسَلَ عُمَر إِلَى عُثْمَان فَدَعَاهُ فَقَالَ مَا مَنَعَك أَنْ لَا تَكُون رَدَدْت عَلَى أَخِيك السَّلَام قَالَ مَا فَعَلْت قَالَ سَعْد قُلْت بَلَى حَتَّى حَلَفَ وَحَلَفْت قَالَ ثُمَّ إِنَّ عُثْمَان ذَكَرَ فَقَالَ بَلَى وَأَسْتَغْفِر اللَّه وَأَتُوب إِلَيْهِ إِنَّك مَرَرْت بِي آنِفًا وَأَنَا أُحَدِّث نَفْسِي بِكَلِمَةٍ سَمِعْتهَا مِنْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَا وَاَللَّه مَا ذَكَرْتهَا قَطُّ إِلَّا تَغْشَى بَصَرِي وَقَلْبِي غِشَاوَة قَالَ سَعْد فَأَنَا أُنَبِّئك بِهَا إِنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ لَنَا أَوَّل دَعْوَة ثُمَّ جَاءَ أَعْرَابِيّ فَشَغَلَهُ حَتَّى قَامَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّبَعْته فَلَمَّا أَشْفَقْتُ أَنْ يَسْبِقنِي إِلَى مَنْزِله ضَرَبْتُ بِقَدَمِي الْأَرْض فَالْتَفَتَ إِلَيَّ رَسُول اللَّه فَقَالَ "مَنْ هَذَا أَبُو إِسْحَاق" قَالَ قُلْت نَعَمْ يَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "فَمَه " قُلْت لَا وَاَللَّه إِلَّا أَنْ ذَكَرْت لَنَا أَوَّل دَعْوَة ثُمَّ جَاءَ هَذَا الْأَعْرَابِيّ فَشَغَلَك قَالَ " نَعَمْ دَعْوَة ذِي النُّون إِذْ هُوَ فِي بَطْن الْحُوت "لَا إِلَه إِلَّا أَنْتَ سُبْحَانك إِنِّي كُنْت مِنْ الظَّالِمِينَ" فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا مُسْلِم رَبّه فِي شَيْء قَطُّ إِلَّا اِسْتَجَابَ لَهُ "(أحمد-باب:مسند سعد بن ابي وقاص 

 ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரழி அவர்கள் ஒரு முறை மஸ்ஜிதில் உஸ்மான் ரழி அவர்களை பார்த்து ஸலாம் கூற, அப்போதுஏதோ ஓதிக் கொண்டிருந்த உஸ்மான் ரழி அவர்கள் ஸஃது ரழி அவர்களை நன்றாக பார்த்த பிறகும் ஸலாமுக்கு பதில் கூறாமல் இருந்து விட, உடனே ஸஃது ரழி அவர்கள் ஜனாதிபதி உமர் ரழி அவர்களிடம் இஸ்லாத்தில் ஏதேனும் புதிய கட்டளைகள் வந்துள்ளதா ? என்று கூறி முறையிட, உடனே அவர்கள் உஸ்மான் ரழி அவர்களை அழைத்து விசாரிக்கிறார்கள் அப்போது உஸ்மான் ரழி அவர்கள் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என மறுக்க, ஸஃது ரழி அவர்கள் நடந்ததை சத்தியமிட்டு கூறிய போது, சற்று யோசித்து விட்டு உஸ்மான் ரழி அவர்கள் “ நான் யூனுஸ் அவர்களுடைய துஆவை மன ஓர்மையுடன் ஓதிக் கொண்டிருந்ததால் என் கண்கள் குருடாகி விட்டதைப் போன்றாகி விட்டது. என் உள்ளம் முழுவதும் அந்த தஸ்பீஹ் நிரம்பி இருந்ததால் நீங்கள் ஸலாம் சொன்னதை நான் கவனிக்கவில்லை என உஸ்மான் ரழி கூறிவிட்டு, அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பும் கேட்டார்கள். அப்போது ஸஃது ரழி அவர்கள் அந்த துஆவைப் பற்றி தனக்குத் தெரிந்த தகவலையும் கூறுகிறார்கள். 

அதாவது நபி ஸல் அவர்கள் ஒரு முறை “ முதல் துஆ...என்று ஏதோ துஆவின் சிறப்பை சொல்ல ஆரம்பித்த போது ஒரு கிராமவாசி வந்து ஏதோ கேட்டு, நபி ஸல் அவர்களின் கவனத்தை திசை திருப்ப, நபி ஸல்அவர்கள் அவர் பின்னால் சென்று விட்டார்கள்.நபி ஸல் வீட்டுக்குப்புறப்படும் போது நான் என் காலால் தரையில் தட்டி அவர்களுக்கு நினைவூட்டினேன்.அப்போது தான் அவர்கள் மீன் வயிற்றுக்குள் நபி யூனுஸ் அலை ஓதிய துஆ தான் அந்த துஆ..எவர் அதை ஓதி துஆ கேட்பாரோ அவருடைய கோரிக்கை நிறைவேறும் என்றார்கள்.
=====================

வியாழன், 6 ஜனவரி, 2022

 

07-01-2022

03-06-1443

 

بسم الله الرحمن الرحيم 

ஆலிமின் மரணம் பெரும் இழப்பு

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ (28) فاطر

சிறந்த ஆலிம் பெருமகனாரின் மரணம் என்பது இந்த உலகத்துக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சிறந்த திறமையான ஆலிம்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டும் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا  (بخاري

திறமையான ஆலிம்கள் இருக்க்கும்போதே அவர்கள் மூலம் பயனடைந்து கொள்ள வேண்டும்

عن أبي أمامة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إن لقمان قال لابنه: يا بني عليك بمجالسة العلماء،واسمع كلام الحكماء،فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر". (مجمع الزوائد

லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்தார்கள். மகனே உலமாக்களுடன் அமர்ந்து உபதேசம் செய்வதை அவசியமாக்கிக் கொள்.  மார்க்க மாமேதைகளில் தத்துவமாக மார்க்கத்தைப் பேசுபவர்களின் பேச்சைக்  கவனித்துக் கேள். ஏனெனில் இதுபோன்றவர்களின் பேச்சைக்  கொண்டு அல்லாஹ் உள்ளங்களை உயிராக்குவான். மழை மூலம் பயிர்களை செழிப்பாக்குவது போல..

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ، فَارْتَعُوا، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا رِيَاضُ الْجَنَّةِ؟ قَالَ:مَجَالِسُ الْعِلْمِ. (طبراني

சுவனப் பூங்காங்களை நீங்கள் கடந்து சென்றால் நன்றாக மேயந்து கொள்ளுங்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி ஸல் சுவனப் பூங்காங்கள் என்றால் எது என்று கேட்க, உலமாக்களின் இல்முடைய மஜ்லிஸ் என நபி ஸல் பதில் கூறினார்கள்

وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ انْظُرْ مَا كَانَ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاكْتُبْهُ فَإِنِّي خِفْتُ دُرُوسَ الْعِلْمِ وَذَهَابَ الْعُلَمَاءِ وَلَا تَقْبَلْ إِلَّا حَدِيثَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْتُفْشُوا الْعِلْمَ وَلْتَجْلِسُوا حَتَّى يُعَلَّمَ مَنْ لَا يَعْلَمُ فَإِنَّ الْعِلْمَ لَا يَهْلِكُ حَتَّى يَكُونَ سِرًّا  (بخاري- بَاب كَيْفَ يُقْبَضُ الْعِلْمُ

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள்  அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும்போது  நபி ஸல் அவர்களின் ஹதீஸ்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் தேடிக் கண்டு பிடித்து எழுதுங்கள் ஏனெனில்  உலமாக்களின் மறைவை எண்ணி அஞ்சுகிறேன்.  இலமைப் பரப்புங்கள்.  இல்முடைய மஜ்லிஸில் அமருங்கள்.  ஏனெனில கல்வி என்பது மிக இரகசியமாகவே மக்களிடம் இருந்து எடுக்கப்படும்.

திறமையான ஆலிம்களை மக்கள்  மதிக்காததால்  ஆலிம்கள்  பல்வேறு  துறைகளில் ஈடுபடுகின்றனர். கடைசி காலத்தில் தொழ வைக்க இமாம் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை  ஏற்படும்.

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ (ابوداود

شرح (إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام. (مرعاة

மஸ்ஜித்களில் இமாம் இல்லாமல் பொதுமக்கள் தொழ வைக்கும் நிலை தான் ஏற்படும். அதுவும் நீடிக்காது.  ஒருவர் மற்றவரை ஏவுவார். அவர் பதிலுக்கு இவரை ஏவுவார். தொழ வைக்கத் தெரியாது என மக்கள் ஒதுங்குவார்கள். இறுதியில் இமாம் இல்லாமல் தான் தொழுகை நடைபெறும்.

மார்க்கக் கல்வியை முறையாக கற்காத பாமரரின்  தவறான தீர்ப்பு பாவம் செய்தவரை திருத்தாமல் மீண்டும் பாவியாக்கியது

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَسَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَاهِبٍ فَأَتَاهُ فَقَالَ إِنَّهُ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ لَا فَقَتَلَهُ فَكَمَّلَ بِهِ مِائَةً ثُمَّ سَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَجُلٍ عَالِمٍ فَقَالَ إِنَّهُ قَتَلَ مِائَةَ نَفْسٍ فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ نَعَمْ وَمَنْ يَحُولُ بَيْنَهُ وَبَيْنَ التَّوْبَةِ انْطَلِقْ إِلَى أَرْضِ كَذَا وَكَذَا فَإِنَّ بِهَا أُنَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدْ اللَّهَ مَعَهُمْ وَلَا تَرْجِعْ إِلَى أَرْضِكَ فَإِنَّهَا أَرْضُ سَوْءٍ فَانْطَلَقَ حَتَّى إِذَا نَصَفَ الطَّرِيقَ أَتَاهُ الْمَوْتُ فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَقَالَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ جَاءَ تَائِبًا مُقْبِلًا بِقَلْبِهِ إِلَى اللَّهِ وَقَالَتْ مَلَائِكَةُ الْعَذَابِ إِنَّهُ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ فَأَتَاهُمْ مَلَكٌ فِي صُورَةِ آدَمِيٍّ فَجَعَلُوهُ بَيْنَهُمْ فَقَالَ قِيسُوا مَا بَيْنَ الْأَرْضَيْنِ فَإِلَى أَيَّتِهِمَا كَانَ أَدْنَى فَهُوَ لَهُ فَقَاسُوهُ فَوَجَدُوهُ أَدْنَى إِلَى الْأَرْضِ الَّتِي أَرَادَ فَقَبَضَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ قَالَ قَتَادَةُ فَقَالَ الْحَسَنُ ذُكِرَ لَنَا أَنَّهُ لَمَّا أَتَاهُ الْمَوْتُ نَأَى بِصَدْرِهِ (مسلم باب قَبُولِ تَوْبَةِ الْقَاتِلِ وَإِنْ كَثُرَ قَتْلُهُ.-كتاب التوبة

சுருக்கம்- 99 கொலைகள் செய்தவர் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தில்  அது பற்றிய யாரிடம் விளக்கம் கேட்பது என விசாரித்தபோது ஒரு வணக்கசாலியை காட்டப்பட்டது. மார்க்கம் தெரியாத அவரிடம் வந்து  தனக்கு தவ்பா உள்ளதா என்று கேட்டபோது உனக்கெல்லாம் தவ்பா இல்லை என்று அவர் பதில் கூற, ஆத்திரத்தில் அவரையும் அந்த மனிதர் கொன்று தன் கணக்கை 100 ஆக பூர்த்தியாக்கினார். பின்பு சில காலங்கள் கழித்து மீண்டும் அவருக்கு திருந்தும் எண்ணம் வந்தது. மார்க்கம் அறிந்த ஒருவரைப் பற்றி அவர் விசாரித்தார்.  அப்போது ஒரு சிறந்த ஆலிமை காட்டப்பட்டது. அவரிடம் விஷயத்தைக் கூற அவர் உமக்கு தவ்பா நிச்சயம் உண்டு என்று கூறியதுடன் உன்னுடைய தவறுகளுக்குக் காரணம் உமது ஊர் சரியில்லை. நல்லவர்கள் வாழும் ஒரு ஊரை நான் காட்டுகிறேன். நல்லவர்களின் தொடர்பில் நீ இருந்தால் பாவம் செய்யும் எண்ணம் உமக்கு வராது என்று அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே அவருக்கு மவ்த் வந்து விட்டது.  அப்போது நல்ல உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அங்கு வந்தனர். கெட்ட உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அங்கு வந்தனர். இவரின் உயிரை யார் கைப்பற்றுவது என்பதில் சர்ச்சை ஏற்பட்டது இறுதியாக மூன்றாவதாக ஒரு மலக்கு அங்கு வந்து  இவர் போக வேண்டிய தூரத்தையும் இவர் கடந்து வந்த தூரத்தையும் கணக்கிட்டு முடிவு செய்யுங்கள் என்று கூற அவ்வாறே கணக்கிட்ட போது  அவர் போக வேண்டிய தூரம் மிகச் சிறிய அளவில் மட்டுமே நெருக்கமாக இருந்த து. இறுதியில் நல்ல உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அவரது உயிரைக் கைப்பற்றினர்.

மார்க்கத்தை முறையாக கற்றவர் ஷைத்தானின் பிடியில் இருந்து தன்னையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டிருப்பார். 

 

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ (ابن ماجة

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمهالله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيماِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.) موسوعة الرد على الصوفية

அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் தியானத்தில் இருந்தபோது ஷைத்தான்  அல்லாஹ்வைப் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு அப்துல் காதிரே மற்றவர்களுக்கு ஹராமாக்கிய அனைத்தையும் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூற உடனே சுதாரித்துக் கொண்ட ஷைகு அவர்கள்  தஅவ்வுத் ஓதி, ஷைத்தானே இங்கிருந்து இழிவடைந்தவனாக சென்று விடு என்றார்கள். மீண்டும் அவன் பரவாயில்லையே உங்களுடைய திறமையால் தப்பி விட்டீர்கள் என்று கூற, அதற்கு ஷைகு அவர்கள் நான் என் திறமையால் தப்பிக்கவில்லை.அல்லாஹ்வின் அருளால் தப்பித்தேன் என்றார்கள்.  பின்பு ஷைத்தான் நான் இதுபோன்று எத்தனையோ பேரை வழி கெடுத்துள்ளேன் நீங்கள் எவ்வாறு தப்பித்தீர்கள் என்று கேட்க, நீ எப்போது மற்றவர்களுக்கு ஹராமாக்கிய அனைத்தையும் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறினாயோ அப்போது  நான் சுதாரித்துக் கொண்டேன் என  ஷைகு அவர்கள் பதில் கூறினார்கள். திறமையான ஆலிம்கள்  மட்டுமே இவ்வாறு ஷைத்தானின் சூழ்ச்சியை அறிந்து கொள்வார்கள்.                                                                                                                       

9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...