بسم الله الرحمن الرحيم
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். ஆனால் அத்தகைய குடியரசுத் தத்துவத்திற்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தம் இல்லை. உண்மையான குடியாட்சியை அதாவது மக்கள் விரும்பும் ஆட்சியைத் தந்தவர்கள் நம் முன்னோர்கள் தான்.
மக்கள் பிரதிநிதிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையைக் கடைபிடிக்க அறிவுரை கூறிய உமர் ரழியல்லாஹு அன்ஹு
عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِرضي الله عنه كَانَ إِذَا بَعَثَ عُمَّالًا اشْتَرَطَ عَلَيْهِمْ: أَلَا تَرْكَبُوا بِرْذَوْنَا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا
تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ (بيهقي في شعب الايمان)
அதிகாரிகளை அனுப்பும்போது அவர்களுக்கு பின்வருமாறு கட்டளையிடுவார்கள். நீங்கள் உயர்தரமான வாகனங்களில் பயணிக்க க்கூடாது. உயர்தரமான உணவுகளை உண்ணக்கூடாது. உயர்தரமான ஆடைகளை உடுத்தக் கூடாது. மக்கள் தமது கோரிக்கைகளை முன் வைக்க வரும்போது உங்கள் கதவுகள் மூடப்பட்டிருக்க க் கூடாது. இக்கட்டளைகளை மீறினால் உங்களை இந்த அரசு தண்டிக்கும். என்று எச்சரித்து அதிகாரிகளை அனுப்பி வைப்பார்கள்.
وروي لما استقر عمر بن العاص رض في مصر تعدي ابنه علي احد الاقباط من اهالي مصر وضربه فذهب القبطي المضروب الي الخليفة عمر بن الخطاب رضي الله عنه في المدينة واستعاذ به فبعث الخليفة الي عمرو بن العاص رض فاستقدمه وابنه فلما جاء أعطي الخليفة الي القبطي سوطا وامره أن يضرب ابن عمرو فضربه وأراد أن يضرب اباه عمرو فقال عمرو رض انما ابني الذي ضربك؟ فقال له الخليفة "ياعمرو متي استعبدتم الناس)2وقد ولدتهم أمهاتهم أحرارا؟ (دروس التاريخ الاسلامي)
உமர் ரழி அவர்களின் ஆட்சியில் எகிப்தின் ஆளுனராக இருந்த அம்ருப்னுல் ஆஸ் அவர்களின் மகன் எகிப்தைச் சார்ந்த மாற்று மத த்தவரை அடித்து விட்டார். அடி வாங்கிய அவர் நேராக அம்ருப்னுல் ஆஸ் அவர்களிடம் கூற சொல்லாமல் உமர் ரழி அவர்களிடம் வந்து புகார் கூறினார். உடனே உமர் ரழி அந்த மகனையும் அழைத்துக் கொண்டு ஆளுனரையும் உடன் வரச் சொன்னார்கள். வந்தவுடன் உமர் ரழி அவர்கள் அடி வாங்கிய எகிப்தியரிடம் சாட்டையைக் கொடுத்து நீ திருப்பி அடி என்று கூறியவுடன் அவர் அடித்தார். பிறகு ஆளுனரைக் காட்டி அவரையும் அடி என்று உமர் ரழி அவர்கள் கூறிய போது ஆளுனரையும் அடிக்க அவர் முனைந்த போது ஆளுனர் அவர்கள் என் மகன் தானே உன்னை அடித்தான் நான் அடிக்கவில்லையே என்று கூற, அவர் சாட்டையைக் கீழே போட்டார். ஆளுனரை அடிக்கவில்லை. பிறகு உமர் ரழி அவர்கள் ஆளுனரையும் அவரது மகனையும் நோக்கி இவர்களின் தாய்மார்கள் இவர்களை சுதந்திரமானவர்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்படி இவர்களை அடிமை போல் அடிக்கலாம் என்று கூறி எச்சரித்தார்கள்.
பாதிக்கப்பட்ட மாற்று மதத்தவருக்கு நீதி வழங்குவதில் உமர் ரலி அவர்கள் காட்டிய அவசரம்
لما قارب الخليفة عمر رضي الله عنه بيت المقدس أتاه رجل نصراني(ذمي) وله بستان عنب :وقال له "كرمي هذا تعرضوا لهوانا رجل ذمة ,فما كان من عمر الا أن طلب برذونا وركب مسرعا, فرأي أبا هريرة يحمل عنبا فقال له وأنت أيضا يا ابا هريرة فقال ياامير المؤمنين أصابتنا مخمصة شديدة فكان أحق من اكلنا من ماله من حاربنافتركه ثم جاء البستان فوجد الناس فيه فطلب عمر الذمي وقال له "بكم كنت تستغله؟ قال بكذا قال فخل سبيله ودفع له الثمن كما قال وأباحه للعسكر(دروس التاريخ)
உமர் ரழி அவர்களின் படை பைத்துல் முகத்தஸை நெருங்கிய நேரத்தில் ஒரு திம்மீ கிறிஸ்தவரின் தோட்டத்தில் சில முஸ்லிம்கள் பசியின் காரணமாக உள்ளே புகுந்து திராட்சைகளைச் சாப்பிட்டனர். இதுபற்றி அவர் உமர் ரழி அவர்களிடம் புகார் கொடுத்த போது உடனே உமர் ரழி வேகமாக வர, அபூஹுரைரா ரழி அவர்கள் ஒரு திராட்சைக்குலையை கையில் வைத்திருப்பதைக் கண்டார்கள். கடும் பசியினால் நாங்கள் இப்படிச் செய்தோம் என்று அவர்கள் காரணம் கூற, உடனே உமர் ரழி அந்த திம்மீயிடம் உன் தோட்டத்தில் இவர்கள் பறித்தவற்றின் விலை என்ன என்று கேட்டு அதைக் தந்தார்கள்.
மராட்டிய மன்னன் சிவாஜியின் மத உணர்வுகளை மதித்த அவுரங்கசீப் ரஹ்
இந்துக்கள் மாபெரும் தலைவராக கருதும் மராட்டிய மன்னன் (சத்ரபதி) சிவாஜியை அவுரங்கசீப் சிறையில் அடைத்ததாகவும், அவரை மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்று நூல்களில் திரித்து எழுதுவார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் சிவாஜி சிறை பிடிக்கப்பட்டாரே தவிர, மற்றபடி சிறையில் அவர் இருக்கும்போது கவுரமாக நடத்தப்பட்டார். மேலும் அவுரங்கசீப் ரஹ் அவர்கள் சிவாஜியின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு முறை சிவாஜி மதுராவில் இருக்கும் கோவிலுக்கு தாம் இரண்டு குதிரைகளை தானமாக வழங்க எண்ணியிருப்பதாகவும் அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று அவுரங்கசீப் அவர்களிடம் கோரிக்கை வைத்த போது அவுரங்கசீப் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்ற வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்
உண்மையான குடியரசு ஆட்சியை நடத்தியவர்கள் சிறந்த முஃமினாகவும் இருந்து விட்டால் அவர் கேட்கும் துஆக்களை அல்லாஹ் உடனே ஒப்புக் கொள்வான்
عن شداد بن أوس عن كعب قال : كان في بني إسرائيل ملك إذا ذكرناه ذكرنا عمر و إذا ذكرنا عمر ذكرناه و كان إلى جنبه نبي يوحي إليه فأوحى الله إلى النبي أن يقول له : اعهد عهدك و اكتب إلي وصيتك فإنك ميت إلى ثلاثة أيام فأخبره النبي بذلك فلما كان اليوم الثالث وقع بين الجدار و السرير ثم جاء إلى ربه فقال : اللهم إن كنت تعلم أني كنت أعدل في الحكم و إذا اختلفت الأمور اتبعت هداك و كنت و كنت فزد في عمري حتى يكبر طفلي و تربو أمتي فأوحى الله إلى النبي أنه قال قال كذا و كذا ـ و قد صدق ـ و قد زدته في عمره خمس عشرة سنة ففي ذلك ما يكبر طفله و تربو أمته فلما طعن عمر قال كعب : لئن سأل عمر ربه ليبقينه الله فأخبر بذلك عمر فقال : اللهم اقبضني إليك غير عاجز و لا ملوم (تاريخ الخلفاء
பனீ இஸ்ராயீலில் ஒரு நல்ல அரசர் இருந்தார். அவரை நினைவு கூறும்போதெல்லாம் நாங்கள் உமர் ரழி அவர்களை நினைவு கூறுவோம். உமர் ரழி அவர்களை நினைவு கூறும்போதெல்லாம் அவரை நினைவு கூறுவோம். அவருக்கு நெருக்கமானவராக ஒரு நபி இருந்தார். இந்நிலையில் அவருக்கு மரணம் நெருங்கிய போது அல்லாஹ் அந்த நபியிடம் சொல்லி அதை உணர்த்தும்படி கூறினான். தனக்கு மவத் வருவதை முன்பே அறிந்த அவர் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் எவ்வளவு நீதமாக இருந்தேன் என்று நீ அறிவாய். எவ்வளவு சோதனைகள் வந்த போதும் உனது நேர்வழியை நான் பின்பற்றினேன். எனவே என் பிள்ளைகள் பெரிதாகும் வரை, என் நாட்டு மக்களுக்கு இன்னும் நல்ல முன்னேற்றம் வரும் வரை என் ஆயுளை அதிகமாக்கு என துஆச் செய்தார். அவரது துஆவை அல்லாஹ் ஏற்று அந்த நபியிடம் அவர் கூறுவது உண்மை தான் எனவே அவரது ஆயுளை பதினைந்து வருடங்கள் அதிகமாக்கி விட்டேன் என வஹீ அறிவித்தான். இச்செய்தியை கஃப் ரழி அவர்கள் உமர் ரழி அவர்களின் மரணப் போராட்டத்தின் போது நினைவு படுத்தி, அந்த அரசர் கேட்டதைப் போன்று உமர் ரழி அவர்களும் துஆ கேட்டால் அல்லாஹ் ஆயுளை அதிகப்படுத்துவான் என்று கூறினார்கள்.
இதைக் கேள்விப்பட்ட உமர் ரழி அவர்கள் யாஅல்லாஹ் என்னை உன்னிடமே கைப்பற்றிக் கொள் என்றார்கள்.
குடியாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஆட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்களும் முஸ்லிம்களின் பொறுமையும்
சிலுவை யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம்களில் பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது அந்த சிறைவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் அவர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலும் அவர்களுக்கு மத்தியில் ஒரு ஆலிம் பேசினார். அப்போது அந்த வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணி அவரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார். அவரிடம் விசாரணை நடந்தது. ஆலிமிடம் இராணி கூறினார். இறைவன் எங்கள் பக்கம் தான் இருக்கிறார். அதற்கு அந்த ஆலிம் இல்லை இறைவன் எங்கள் பக்கம் தான் என்றார். உடனே அந்த இராணி இறைவன் எங்கள் பக்கம் இருப்பதால் தான் உங்களைத் தோற்கடித்து எங்களை ஜெயிக்க வைத்துள்ளார். என்று கூற அதற்கு அந்த ஆலிம் கூறினார். காரணம அதுவல்ல. ஆடுகளை மேய்ப்பதற்கு சில நேரங்களில் நாய்களைப் பயன்படுத்துவார்கள். நாய்களுக்கப் பயிற்சி கொடுத்திருப்பார்கள். ஆடுகள் பாதை மாறும்போதும் அந்த நாய் குரைக்கும்.
அப்போது அந்த ஆடுகள் சீராகச் செல்லும்.
அதுபோலத்தான் நாங்கள் பாதை மாறிச் செல்லும்போது எங்களை எச்சரிப்பதற்குத் தான் உங்களைப் போன்றவர்களை இறைவன் எங்கள் மீது சாட்டியுள்ளான். நாங்கள் சீராக இருந்தால் உங்களுக்கு வேலை இல்லை. என்றார். அதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை.
பண்டைய தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சிக்கு ஒரு உதாரணம்
சேதுபதி மன்னர்களைப் பற்றி வரலாற்றில் நாம் அறிந்திருப்போம். இராமநாதபுரம் சேதுபதிமன்னர்களில் ஒருவர் விஜயரகுநாத சேதுபதி. இவர் 1713 TO 1725 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கீழக்கரையும் இடம் பெற்றிருந்தது.சேதுபதி மன்னர் தனக்கு மிகவும் நெருக்கமான கீழக்கரை சதக்கத்துல்லா அப்பாவை மந்திரி சபையில் இடம்பெற அழைத்தபோது அவர் “எனக்கு அதில் அறவே விருப்பம் இல்லை.
வேண்டுமானால் உங்களுக்கு நல்ல ஒரு நபரை நான் தருகிறேன்” என்று கூறி வள்ளல் சீதக்காதி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதன்படி வள்ளல் சீதக்காதி சேதுபதி மன்னரின் மந்திரி சபையில் இடம்பெற்றார்.
அப்போது இராமேஸ்வரம் பகுதியில் பெரிய இந்து ஆலயம் எழுப்ப வேண்டும் என்று மன்னர் ஆசைப்பட்டபோது அதற்கான பொறுப்பை சீதக்காதியிடமே ஒப்படைத்தார். எந்தப் பகுதியில் இருந்து கற்களைச் சேகரித்துக் கட்டினால் கட்டிடம் நிலைத்திருக்கும் என்றெல்லாம் நன்கு ஆய்வு செய்து வள்ளல் சீதக்காதி அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தார். வாலி நோக்கம் பகுதியில் இருந்து சுமார் 100 யானைகளில் ஆலயம் கட்டத் தேவையான தூண்கள் இராமேஸ்வரத்திற்கு சுமந்து வரப்பட்டன. ஆலயம் கட்டி முடித்த பின் மிச்சத் தூண்கள் இருந்தன. அப்போது வள்ளல் சீதக்காதி அவர்கள் மன்னரிடம் “கீழக்கரையில் முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் உள்ளது.ஆனால் இந்துக்களுக்கு எந்த ஆலயமும் இல்லை. எனவே மீதித் தூண்களை வைத்து கீழக்கரையில் இந்துக்களுக்கு ஒரு ஆலயம் எழுப்பலாமா? என்று கேட்டபோது“வேண்டாம். கீழக்கரை முஸ்லிம்கள் நிறைந்த இடம். அங்கு கோவில் கட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. வேண்டுமானால் ஒரு மஸ்ஜித் கட்டுங்கள்” என்று மன்னர் கூறினார்.
===============
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக