வியாழன், 9 மே, 2024

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

  

பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்களும்  வெளியாகி உள்ளன. இந்நிலையில் மாணவர்களில் இரண்டு விதமான நிலைகள் இன்று இருக்கலாம். ஒரு புறம் அதிக  மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் இருப்பார்கள் அவர்களுக்கு வழி காட்டுவது அந்தந்த மஹல்லா ஜமாஅத்தின் மீதுள்ள பொறுப்பாகும்.

 அதேபோல மாணவர்களின்  மற்றொரு சாரார் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து விட்டோம் என்ற கவலையில் மனம் துவண்டு விடுவதும் உண்டு. சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குச் சென்று விடுவதும் உண்டு. எனவே அவர்களுக்கும் வழி காட்டுவது இந்நேரத்தில் அவசியமானதாக ஆகி விட்டது.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடைய பெற்றோரின் கவனத்திற்கு......

பெற்றோர்களின் சிந்தனையில்  உயர்ந்த இலட்சியம் இருக்கலாம். ஆனால் நிர்பந்திக்கக் கூடாது

இன்றைய அநேக பெற்றோர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கும் இயந்திரக் கருவிகளாக தங்களின் பிள்ளைகளைப் பார்க்கின்றார்கள்.வளரும் போதே, படிக்கும் போதே நீ டாக்டராக வேண்டும், இன்ஜீனியராக வேண்டும், நீ கலெக்டராக வேண்டும் என்று கூறுகின்றார்கள்.விருப்பமில்லாத துறையில் பிள்ளைகளை கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு பல்கழைக்கழக துணை வேந்தர் கூறியது. உங்கள் பையனுக்குள்ளே ஒரு டாக்டரோ, ஒரு எஞ்சினியரோ, ஒரு ஆசிரியரோ, ஒரு மெக்கானிக்கோ, ஒரு வக்கீலோ, ஒரு வியாபாரியோ ஒளிந்திருக்கிறார்கள். அவர்களை அவர்களாக உருவாக்குவதற்கு பதிலாக நீங்கள் வேறுவிதமாக திசை திருப்புகிறீர்கள்.தோற்றுப்போகிறீர்கள். மெக்கானிக்காக வர வேண்டியவனை நீங்கள் டாக்டராக உருவாக்க உங்கள் சக்தியை வீணடிக்கிறீர்கள். அவன் இரண்டு பேராகவும் (டாக்டர், மெக்கானிக்) வர முடியாமல் ஆகி விடுகிறான். ஆகவே அவனை ஆராயுங்கள். அவன் விருப்பத்தில் கவனம் வையுங்கள். அவனுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள். உமர் ரழி அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன் இஸ்லாமியர்களை வதைப்பதில் இன்பம் கண்டவர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் அந்த முரட்டுத்தனத்தை விடச்சொல்லி நபி ஸல் வலியுறுத்தவில்லை. மாறாக அந்த முரட்டுத்தனத்தை இஸ்லாமிய நெறிகளை பாதுகாப்பதிலும், இஸ்லாமிய எதிரிகளை வீழ்த்துவதிலும் திருப்பினார்கள்

எல்லா வகையான ஆற்றல் கொண்ட மனிதர்களின் தேவை இருக்க ஒரு குறிப்பிட்ட வகை கொண்ட ஆற்றல் கொண்டவர்களாக தம்  பிள்ளைகள் உருவாக வேண்டுமென பெற்றோர் நினைக்கிறார்கள்.

ولما ولدت النّعمان بن بشير حملَتْهُ إلى رسول الله صَلَّى الله عليه وسلم، فدعا بتمرة فمضغها، ثم ألقاها في فيه فحنّكه بها،فقالت: يا رسول الله، ادْع الله أن يكثر ماله وولده، فقالأما ترضين أن يعيش كما عاش خاله حميدًا، وقُتل شهيدًا، ودخل الجنّة(الخصائص الكبرى)

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் சகோதரி அம்ரா (ரலி) அவர்கள் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கின்றார்கள். அம்ராவின் கணவர் பஷீர் (ரலி) அவர்கள் நுஃமான் என அந்தக் குழந்தைக்கு பெயரிட்டு அண்ணலாரிடம் ஆசி பெற்று வருமாறு தம் மனைவி அம்ராவை நபி {ஸல்} அவர்களிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கையில் நுஃமானைக் கொடுத்த அம்ரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் பிள்ளை நுஃமானுக்கு பொருளாதார வளத்திற்கும், அதிக பிள்ளைச் செல்வத்திற்கும் துஆச் செய்யுங்கள்என்று கூறினார்கள்.அப்போது நபி {ஸல்} அவர்கள் ஒரு பேரீத்தம் பழத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதை வாயில் போட்டு மென்று நுஃமானுக்கு கொடுத்து அர்வா! என்ன உன்னுடைய ஆசை இப்படி இருக்கிறது? உன் சகோதரர், அதாவது நுஃமானின் மாமா அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் போல உன் மகன் புகழோடு வாழ வேண்டும்என்ற ஆசை உமக்கு இல்லையா? பெரும் போராளியாக இருந்து மார்க்கத்திற்காக உயிர் நீத்து, சுவனத்து வாழ்வைப் பெற்ற அந்த உன்னத நிலையை உம் மகன் அடைய வேண்டும் என்ற ஆசை உமக்கில்லையா?” என்றார்கள் .

 

எல்லோரையும் போல காசு, பணத்திற்கு ஆசைப்படாமல் உயர்ந்த ஆசைகளைக் கொண்டு தங்களின் மழலைகளை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அர்வா (ரலி) அவர்களின் ஆழ்மனதினில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விதைத்தார்கள்.அர்வா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் எண்ணப்படி நுஃமான் (ரலி) அவர்களை வளர்த்தார்கள். அதனால் அல்லாஹ் அர்வா (ரலி) அவர்கள் தன் மகனுக்காக நபி {ஸல்} அவர்களிடம் எந்த பொருளாதார வளத்தையும், பிள்ளைச் செல்வங்களையும் வேண்டினாரோ அதையும் வழங்கினான். பிற்காலத்தில் நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் மாபெரும் மார்க்கப் போராளியாக, மனித நேய மாண்பாளராக, வாரி வழங்கும் வள்ளலாக முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கூஃபா மற்றும் ஹிம்ஸ் பகுதிகளின் மாட்சிமை மிக்க கவர்னராக விளங்கினார்கள்.  ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா )

2. சிறுவர்கள் தானே என்று அவர்களிடம் ஆலோசனை கேட்காமல் ஒதுக்கி விடக் கூடாது.

   நபி {ஸல்} அவர்களின் சபை நபித்தோழர்களால் நிரம்பி இருந்தது.எப்போதும் அண்ணலாரின் அருகே, வலப்பக்கத்தில் இருக்க வேண்டிய அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்போது இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.ஒரு கோப்பையில் பால் கொண்டு வரப்படுகின்றது. அண்ணலார் அதைப் பருகி விட்டு வலது பக்கத்தைப் பார்க்கின்றார்கள் அங்கே ஃபள்ல் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அமர்ந்திருக்கின்றார்கள். வயதில் மிகவும் சிறியவரான ஃபள்ல் (ரலி) அவர்களிடம் இப்போது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் ஃபள்லே! எப்போதும் என் அருகே என் தோழர் அபூபக்ர் (ரலி) தான் அமர்ந்திருப்பார், அவருக்கு தான் நான் கொடுப்பேன். இப்போது நீ அமர்ந்திருக்கின்றாய்? நான் அபூபக்ர் அவர்களுக்கு கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். இல்லை! அல்லாஹ்வின் தூதரே! நான் எனக்கான வாய்ப்பை விட்டுத் தர முடியாது! என்று சொல்லி விட்டார். ஃபள்ல் (ரலி) அவர்கள்.பின்னர் அந்தக் கோப்பை அனைவரிடமும் சுற்றி வந்து இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து சேர்ந்தது. கடைசியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் பாலைப் பருகினார்கள். 

   இங்கே, சிறுவன் என்பதற்காக நபி {ஸல்} அவர்கள் தாங்கள் விரும்பியவாறு நடக்க வில்லை. ஃபள்ல் இடம் கேட்கிறார்கள். அவருக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பதை நபி {ஸல்} அவர்கள் உணர்த்துகின்றார்கள்.

ஆனால், இன்றைய பெற்றோர்கள் தங்களின் மகனிடமோ, மகளிடமோ நீ என்னவாக ஆக விரும்புகின்றாய் என்று கேட்பதும் இல்லை. அவர்களின் விருப்பத்திற்கு இசைவு தருவதும் இல்லை

நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்  முக்கியமான அரசுத் துறைகளில் பங்கெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%,-  +2 வரை படித்தவர்கள் 7.8%,    டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, --பட்டப்படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே,- 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள். தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.

கல்வியில் கிறிஸ்தவர்கள் காட்டும் அக்கறை

உலகம் முழுவதும்  வாழும் சிறுபான்மை இனத்தவரின் நிலையை ஆய்வு செய்த திருமதி ஸ்மித் என்ற சமூகவியல் விஞ்ஞானியை கொச்சியில் பத்திரிக்கை நிருபர் பேட்டி கண்ட போது இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரைப்பற்றி கூறியுள்ளார். கிறிஸ்தவர்களைப் பற்றி கூறும்போது கல்வி , பொருளாதார ரீதியாக அசைக்க முடியாத ஒரு அடித்தளத்தை அமைத்து சக்தி வாய்ந்த குழுக்களாக வளர்ந்து வரும் சமூகம். என்றும் முஸ்லிகளைப் பற்றி கூறும்போது பாரம்பரியமாக நிலை நின்று வந்த செல்வாக்கு, கலாச்சாரச் சுவடுகள் என அனைத்தையும் இழந்து அவைகளின் நஷ்டக் கணக்குகளை மட்டும் கைவசம் வைத்திருக்கும் பலவீனமான மக்கள். சமுதாய அக்கறை இல்லாத தலைமை தான் இதற்குக் காரணம் என்று கூறினார்

குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு...

குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சோர்ந்து விடக்கூடாது. முன்னேறுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன

  இன்றைய பெற்றோர்களும்,ஆசிரியர்களும் தேர்வுகளில் பெறப்படும் அதிக மதிப்பெண்கள் தான் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக ஓர் தவறான பார்வையை மாணவச் சமூகத்தின் மீது திணித்து விடுகிறார்கள்.இதனால் மாணவச்சமூகம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டநாள் முதல் ரிசல்ட் வரும் நாள்வரை பதட்டத்தோடும்அச்சத்தோடும்மனச் சோர்வோடும் காணப்படுகின்றனர்.இந்திய மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும், 70 சதவீத மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வருவதாகத் தெரிவித்துள்ளது.எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத போது மிகுந்த ஏமாற்றமும், விரக்தியும் ஏற்பட்டு பெற்றோர்களை தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தும் முடிவை (தற்கொலை செய்து கொள்வது) மாணவச் சமூகம் கையில் எடுப்பது சமீப காலமாக பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன என்பதை மாணவர் களுக்கு உணர்த்த வேண்டும்.

 

 

 

 

எந்த ஒரு துறையிலும் தோல்வி ஏற்பட்டு விட்டது என்பதற்காக சோர்ந்து போய் விடக்கூடாது

 குழந்தை நடக்க முயற்சி செய்யும்பொழுது பலமுறை விழுந்து எழுந்துதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. எந்தக்குழந்தையும் நான் நடக்க முயற்சிக்கும் பொழுது 50 முறை விழுந்து விட்டேன். எனவே நடப்பது எனக்கு ஒத்துவராது எனமுடிவெடுத்திருக்கிறதா  ’50 முறை என்ன, 500 முறை விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன்என்ற உற்சாகம் Motivation enthusiasm இருப்பதால் குழந்தை புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது.தன்னுடைய 5 வயதிற்குள் குழந்தை கிட்டத்தட்ட 93 திறமைகளை வளர்த்துக் கொள்கிறது. நாம் சைக்கிளோ, ஸ்கூட்டரோ,காரோ ஓட்ட கற்றுக்கொண்ட போது ஒரே முயற்சியில் கற்றுக்கொள்ளவில்லை. பலமுறை விழுந்து அடிபட்டும் கற்றுக்கொண்டோம். இப்படி எந்தத் திறமையையும் ஒரே முயற்சியில் நாம் பெற்றதில்லை. ஒரு ஊருக்கு காரில் போனால் மேடு, பள்ளம், மழை, புயல் டயர்பஞ்சர், கூட்ட நெரிசல் என பல தடைகள் வரும் இவைகளைக் கடந்துதான் நாம் அந்த ஊருக்குச் சென்று சேருகிறோம். அதற்காக நாம் பயணத்தை ரத்து செய்து விடுவதில்லை. திரும்பி வந்துவிடுவது இல்லை. தடைகளைக் கடந்து அந்த இடத்தை அடைகிறோம். வெற்றியின் அளவு பெரியதாக இருக்க இருக்கப் போராட்டங்களும் பெரியது தான். கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் அதிகம். அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுதும், அதனுள்ளே சுவர் எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதும் வெளி உலகுக்குத் தெரியாது. நீங்கள் முயற்சி செய்தும் இதுவரை சாதிக்காமல் இருந்தால், தோல்வியடைந்து கொண்டிருந்தால் அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்என்று அர்த்தம். அதற்காக கவலைப்பட வேண்டாம். இப் பொழுது நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களால் நிச்சயமாக உயர்ந்த கட்டிடம் கட்டமுடியும்.

ஒரு விவசாயி நெல் விதைத்தால் 3 மாதத்தில் அறுவடை செய்யலாம். ஆனால் மாமரம், தென்னைமரம் வைத்தால் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பலன் பல வருடங்கள் தொடர்ந்து கிடைக்கும். அம்மை ஊசி போடும்போது அம்மை நோயை உண்டாக்கும் கிருமிகளைச் சிறிதளவு உடலில் செலுத்துகிறார்கள். அந்தக் கிருமிகள் உள்ளே போனால் நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அதனை எதிர்த்துப் போராடுகின்றன. நோய்க் கிருமிகள் குறைவாக இருப்பதால், வெள்ளை அணுக்கள் அதிகமாக இருப்பதால் நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. அதன் பிறகு வெள்ளை அணுக்கள் விழிப்புற்றுத் தயார் நிலையில் இருக்கின்றன. உண்மையான நோய்க் கிருமிகள் வந்தாலும் போரிட்டு வென்று விடுகின்றன.அம்மை ஊசி போடும்போது வலிதான். வேதனைதான். சிலசமயம் காய்ச்சல் வரும் ஆனால், அவற்றால் அதன்பிறகு பெரிய நன்மை ஏற்படுகிறது. அதுபோல் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங்களும்,தோல்விகளும் வலியை, வேதனையைக் கொடுத்தாலும் பின்னர் விழிப்புணர்வை ஊட்டி நமக்கு வெற்றி பெறத் துணைபுரிகிறது வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் சுகம். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். இப்படித் தோல்வியடைந்துசங்கடமடைந்து வெற்றிபெற்றால் அதனுடைய சந்தோஷமே தனிதான். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க 999 முறை தோல்வியுற்றார். லேட்டக்ஸ்என்ற கெமிக்கலைக் கண்டு பிடிக்க 16999 முறை தோல்வியுற்று 17000வது முறைதான் கண்டுபிடித்தார். (இணைய தளத்தில் கிடைத்தது

எந்த ஒரு சூழ்நிலையிலும் தற்கொலை என்ற முடிவுக்குச் சென்று விடக்கூடாது

அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் அவனுடைய அடிமைகள். நம்முடைய உயிரும், உடலும் அவனுக்கே சொந்தம். அந்த உயிருக்கு நாமே ஒரு சேதத்தை ஏற்படுத்திக் கொள்ள நமக்கு உரிமை இல்லை. ஆனால் இன்று பலர் தேர்தல் தோல்வி, காதல் தோல்வி, கடன் தொல்லை ஆகிய பல்வேறு காரணங்களுக்காக அல்லாஹ் வழங்கிய உயிரை இவர்களாக மாய்த்துக் கொள்கின்றனர். அல்லாஹ்வின் உரிமையின் தலையிடுவதால் அல்லாஹ் அதற்கு கடும் தண்டனை கொடுக்கிறான்.                                                                                                                  

மனித உயிரின் மதிப்பு

وَلا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيماً * وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَاناً وَظُلْماً فَسَوْفَ نُصْلِيهِ نَاراً وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيراً [النساء: 30]

عَنْ الْحَسَنِ حَدَّثَنَا جُنْدَبُ بْنُ عَبْدِ اللَّهِ فِي هَذَا الْمَسْجِدِ وَمَا نَسِينَا مُنْذُ حَدَّثَنَا وَمَا نَخْشَى أَنْ يَكُونَ جُنْدُبٌ كَذَبَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ فَجَزِعَ فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ قَالَ اللَّهُ تَعَالَى بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ (بخاري) باب مَا ذُكِرَ عَنْ بَنِى إِسْرَائِيلَ – كتاب أحاديث الأنبياء

عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ.. وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ (بخاري)عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَخْنُقُ1 نَفْسَهُ يَخْنُقُهَا فِي النَّارِ وَالَّذِي يَطْعُنُهَا2 يَطْعُنُهَا فِي النَّارِ (بخاري -باب مَا جَاءَ فِى قَاتِلِ النَّفْسِ-كتاب الجنائز{وفي كنز العمال..وَاَلَّذِي يَقْتَحِمُ يَقْتَحِمُ فِي النَّارِ}

துன்பம் தீரும் என்று எண்ணி தற்கொலை செய்பவன் நரகில் நிரந்தரமான துன்பத்திற்கு ஆளாகி விடுவான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا3 فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا (بَاب شُرْبِ السُّمِّ وَالدَّوَاءِ بِهِ وَبِمَا يُخَافُ مِنْهُ وَالْخَبِيثِ)كتاب الطب

وقوله فيه(خالدًا مُخلَدًا) لمن فعَلَ ذلك مستحلا أو خلود طول إقامة لا خلود دوامٍ وتأبيد (إكمال المعلم شرح صحيح مسلم - للقاضي عياض)

 

வீரமாகப் போராடி இஸ்லாமிய எதிரிகளை வென்றவர் கடைசியில் தற்கொலை செய்து கொண்டதால் நரகவாதி ஆனார்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِرَجُلٍ مِمَّنْ يَدَّعِي الْإِسْلَامَ هَذَا مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا حَضَرَ الْقِتَالُ قَاتَلَ الرَّجُلُ قِتَالًا شَدِيدًا فَأَصَابَتْهُ جِرَاحَةٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ الَّذِي قُلْتَ لَهُ إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَإِنَّهُ قَدْ قَاتَلَ الْيَوْمَ قِتَالًا شَدِيدًا وَقَدْ مَاتَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّارِ قَالَ فَكَادَ بَعْضُ النَّاسِ أَنْ يَرْتَابَ فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ قِيلَ إِنَّهُ لَمْ يَمُتْ وَلَكِنَّ بِهِ جِرَاحًا شَدِيدًا فَلَمَّا كَانَ مِنْ اللَّيْلِ لَمْ يَصْبِرْ عَلَى الْجِرَاحِ فَقَتَلَ نَفْسَهُ فَأُخْبِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ فَقَالَ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ثُمَّ أَمَرَ بِلَالًا فَنَادَى بِالنَّاسِ إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ(بخاري) باب إن الله يؤيد الدين بالرجل الفاجر-كتاب الجهاد

தனக்கு ஏற்பட்டு விட்ட துன்பத்திற்காக  அல்லாஹ்விடம் எனக்கு மரணத்தைக் கொடு என்று கேட்பதும் தவறாகும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلًا فَلْيَقُلْ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي (بخاري) باب تَمَنِّى الْمَرِيضِ الْمَوْتَ-كتاب المرضى

ஆசிரியர்களின் கவனத்திற்கு

   ஆசிரியர்கள் அதிக மதிப்பெண்கள்  எடுக்கிற மாணவர்களை மட்டுமேஊக்கப்படுத்தி அவர்களிடம் மட்டுமே அதிக அக்கறையை காட்டுகின்றார்கள்கல்வி நிறுவனங்களும் அவர்களை மட்டுமே முன்னிறுத்தி,முக்கியத்துவம் அளிக்கிறது.கல்வித்தரம் குறைந்த மாணவர்களை மேம்படுத்தும் முயற்சிகளில் ஆசிரியர்களும்,நிறுவனங்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.இதுவும் மாணவச் சமூகம் மனச் சுமைகளோடும்,அச்சத்தோடும் இருப்பதற்கு ஓர் காரணமாகும்.

عن بن عباس قال: إن عمارة بنت حمزة بن عبد المطلب وأمها سلمى بنت عميس كانت بمكة، فلما قدم رسول الله كلم علي النبي، فقال: علام  تترك ابنة عمنا يتيمة بين ظهري المشركين ، فلم ينهه النبي عن إخراجها فخرج بها ، فتكلم زيد بن حارثة وكان وصي حمزة وكان النبي آخى بينهما حين آخى بين المهاجرين، فقال: أنا أحق بها، ابنة أخي. فلما سمع بذلك جعفر بن أبي طالب قال: الخالة والدة، وأنا أحق بها لمكان خالتها عندي أسماء بنت عميس. فقال علي: ألا أراكم تختصمون في ابنة عمي وأنا أخرجتها من بين أظهر المشركين وليس لكم إليها نسب دوني وأنا أحق بها منكم. فقال رسول الله: " أنا أحكم بينكم، أما أنت يا زيد فمولى الله ورسوله، وأما أنت يا علي فأخي وصاحبي، وأما أنت يا جعفر فشبيه خلقي وخلقي، وأنت يا جعفر أولى بها تحتك خالتها ولا تنكح المرأة على خالتها ولا على عمتها"، فقضى بها لجعفر                    .

ஹம்ஜா (ரலிஅவர்கள் உஹதில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள்அவர்களின் மனைவி ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி)அவர்களும், ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரே மகளான அமாரா (ரலி) அவர்களும் மக்காவில் வாழ்ந்து வந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் ஹம்ஜா(ரலிஅவர்களின் ஒரேயொரு மகள் இப்போது அநாதையாகி மக்கத்து இணைவைப்பாளர்கள் மண்ணில் நிற்கிறாள். நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அனுமதி தரவே அலீ (ரலி) அவர்கள் மக்கா சென்று அமாராவை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள். அமாராவை யார் பொறுப்பேற்பது? என்று மூன்று நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் தாம் தான் எடுப்பேன் என சண்டையிட்டுக் கொண்டார்கள்.இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தனர் அந்த மூவரும்.அலீ (ரலி) அவர்கள், ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள், ஜஅஃபர் இப்னு அபூதாலிப் அவர்கள் இம்மூவரும் தான் சண்டையிட்டுக்கொண்டவர்கள்.நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.அல்லாஹ்வின் தூதரே! அமாரா என் தந்தையின் சகோதரரின் மகள் ஆகவே அதிகத் தகுதியுடையவன் நான்என்று அலீ (ரலி) பதில் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா அவர்களும் நானும் ஒரே தாயிடத்தில் பால் குடித்திருக்கின்றோம். மேலும், எனக்கும் அவருக்கும் இடையே நீங்கள் தான் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள். ஆகவே, இரு தகுதிகள் இருப்பதால் நானே அதிகத்தகுதியுடையவன்என்று ஜைத் (ரலி) பதில் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் ஆவார், மேலும், ஹம்ஜா (ரலி) மணம் முடித்திருக்கின்ற ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களை நான் மணம் முடித்திருக்கின்றேன். அமாராவுக்கு என் மனைவி சின்னம்மா ஆவாள். ஆகவே நானே அதிகத் தகுதியுடையவன்என்று ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

மூவரின் உரிமை கோரலையும் செவிமடுத்து விட்டு பெருமானர் {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து அலீயே! நீர் என் சகோதரரும், என் சுவனத்து தோழரும் ஆவீர்! ஜைத் (ரலி) அவர்களை அழைத்து ஜைதே! நீர் அல்லாஹ், ரசூலின் அடிமையாவீர்!, ஜஅஃபர் (ரலி) அவர்களை அழைத்து ஜஅஃபரே! நீர் என்னைப் போன்றே குணத்திலும், தோற்றத்திலும் ஒத்து இருக்கின்றீர்!என்று கூறி விட்டு, அமாராவின் சின்னம்மாவை நீர் மணம் முடித்திருப்பதால் நீரே அமாராவை வளர்ப்பதற்கு தகுதியாவீர்! நீர் அமாராவை உம் பொறுப்பில் எடுத்து வளர்த்துக் கொள்வீராக!என்று தீர்ப்பளித்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )

இந்த சம்பவத்தில் பல உண்மைகளும் படிப்பினைகளும் பொதிந்திருக்கின்றன. அமாரா (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களுக்கும் பெரிய தந்தையின் மகள் தான். நபி {ஸல்} அவர்கள் நினைத்திருந்தால் மூவரையும் திருப்பி அனுப்பி விட்டு தாங்களே வளர்க்கும் உரிமையை எடுத்திருக்கலாம். ஏனென்றால் குடும்ப உறவு நபிகளாருக்கு இருக்கின்றது. அல்லது ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) அவர்களில் இருவரில் ஒருவருக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். குடும்ப உறுப்பினர் என்கிற முறையில். அல்லது மூவரில் எவரிடமாவது வளர்க்கும் உரிமையை கொடுத்திருக்கலாம் அல்லாஹ்வின் தூதர் என்கிற அடிப்படையில். இந்த மூன்றில் நபி {ஸல்} அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் யாரும் மறுப்பேதும் சொல்லப்போவதில்லை. மாறாக, மூவரையும் அழைத்து நேர்காணல் நடத்தி ஒவ்வொருவருக்கும் இடையே இருக்கும் உறவு முறைகளை அறிந்து வைத்துக் கொண்டே அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பின்னர் தீர்ப்பளிக்கின்றார்கள். அதுவும் உரிமை கோரி நின்ற மற்ற இருவருக்கும் தகுந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் வழங்குகின்றார்கள். இங்கே, நபி {ஸல்} ஒரு நபியாக, ஒரு குடும்ப உறவாக செயல்படாமல் தங்கள் பாசறையிலே பயின்று வரும் மூன்று மாணாக்கர்களின் மிக உயர்ந்த பண்பாட்டை அங்கீகரித்து, ஒரு ஆசிரியராக தட்டிக் கொடுத்து, உற்சாகமூட்டி மனம் உடைந்து விடாதபடி நடக்கின்றார்கள். ஒரு வகுப்பறையிலே பல தரப்பட்ட தரம் கொண்ட மாணவர்கள் இருப்பார்கள், அவரவர்களின் தரத்திற்கேற்ப அவர்களை உற்சாகமூட்டி, தட்டிக் கொடுத்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் வழங்கி முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையை இந்த சம்பவம் உணர்த்துவதாக அமைந்துள்ளது

3. மாணவர்கள் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும்….

முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் நான்கு காரியங்களுக்காகவே செலவு செய்யப் படுகின்றது.1. நோய்களுக்கான சிகிச்சைக்காக, 2.திருமண விருந்துக்காக,3. இயக்கங்களின் மாநாடுகளுக்காக 4, கல்விக்காக. பெரும்பாலான பெற்றோர்கள் வீடு, வாசல், தோட்டம் துறவுகளை, நகைகளை விற்று, கடன் வாங்கி, லோன் வாங்கி, வட்டிக்கு பணம் வாங்கி படிக்க வைக்கின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் பள்ளிக் கூடத்திற்கு சரியாக செல்லாமல் வீண் விளையாட்டுக்களிலும், சினிமா கேளிக்கைகளிலும், ஊர் சுற்றுவதிலும் கழித்து விட்டு பரீட்சை நேரத்தில் சரியாக தேர்வெழுதாமல் தோற்றுப் போய் விடுகின்றார்கள். இதுபற்றி அல்லாஹ்விடம் மாணவச் சமூகம் தங்களின் பள்ளிக் காலம் குறித்து கேள்வி கேட்கப் படுவார்கள்.

விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும், மனவலிமையோடும் படிக்க வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ  رواه مسلمபலவீனமான இறைநம்பிக்கையாளனை விட, மனவலிமை உள்ள முஃமின் சிறந்தவனும், அல்லாஹ்விடம் உவப்பைப் பெற்றவனும் ஆவான்  ( நூல்: முஸ்லிம்)                                   

இயன்ற அளவு முயற்சி செய்து ஆர்வத்தோடும், ஆசையோடும் படிக்க வேண்டும்.

احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَاتَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَاتَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ  رواه مسلم

உனக்கு பயன் தருகிற அனைத்தின் மீதும் நீ ஆசைப்படு! பின்னர் அதற்காக கஷ்டப்படு! அல்லாஹ்விடம் உதவி கேள்! சோர்ந்து போய்விடாதே! நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்காமல் போய் விட்டால் நான் இப்படி, இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியது தான் நடந்தது என்று சொல்!என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.    ( நூல்: முஸ்லிம் )

என்னால் முடியும்என்னிடம் நல்ல மதிப்பெண் எடுக்கும்திறமை  இருக்கிறது நான்  சாதிப்பேன் என  பாஸிட்டிவ் ஆகபேசுவதைநினைப்பதைத் தான் அல்லாஹ்வும், அவனது ரஸூலும்  விரும்புகின்றனர்

قَالَ اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ (55)

    யூஸுஃப் {அலை} அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசரோடு உரையாடும் வாய்ப்பை பெற்ற போது…“நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்என்றார்.மேலும், இதன் பின்னர் நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்”. ( அல்குர்ஆன்: 12: 55, 56 )

ஸுலைமான் {அலை } அவர்கள் ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை உடனடியாக யாரால் கொண்டு வர முடியும் என்று கேட்ட போது….“அவர்களுள் கல்வியறிவைப் பெற்றிருந்த ஒருவர் நீங்கள் கண் மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்என்றார்  (அல்குர்ஆன்: 

வியாழன், 2 மே, 2024

வணிகர் தினம்

 

கடந்து சென்று விட்ட மே 1 உழைப்பாளர் தினத்தையும்

அடுத்து வரப் போகிற மே 5 வணிகர் தினத்தையும் உள்ளடக்கி எடுக்கப்பட்ட தலைப்பு

ஒவ்வொன்றுக்கும் ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் வணிகர் தினத்தையொட்டி இஸ்லாம் கூறும் வியாபார ஒழுக்கங்களை நாம் அறிந்து அதன் படி செயல்பட்டு அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய வேண்டும்.

இம்மை, மறுமை வெற்றிக்கு பொருளாதாரமும் அவசியம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ عَنْ عَمِّهِ قَالَ لَا بَأْسَ بِالْغِنَى لِمَنْ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنْ اتَّقَى خَيْرٌ مِنْ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنْ النَّعِيمِ- ابن ماجة

கருத்து- இறையச்சம் இருப்பதுடன்  வசதி வாய்ப்பையும் ஒருவர் பெற்றிருப்பது தவறல்ல.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"لَمَّا عَافَى اللَّهُ أَيُّوبَ أَمْطَرَ عَلَيْهِ جَرَادًا مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَأْخُذُهُ بِيَدِهِ وَيَجْعَلُهُ فِي ثَوْبِهِ، فَقِيلَ لَهُ: يَا أَيُّوبُ، أَمَا تَشْبَعُ؟ فَقَالَ: وَمَنْ يَشْبَعُ مِنْ رَحْمَتِكَ" (رواه الحاكم في المستدرك)

நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோயை அல்லாஹ் குணப்படுத்திய பிறகு அவர்கள் மீது தங்க வெட்டுக் கிளிகளை அல்லாஹ் மழை போன்று இறக்கினான். அதை கையால் பிடித்து தன் ஆடையில் நிரப்பிக் கொண்டார்கள். அவர்களிடம் இது போதுமா என்று அல்லாஹ்வின் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. அப்போது அய்யூப் அலை அவர்கள் யாஅல்லாஹ் உனது ரஹ்மத்தில் இருந்து யார் நிராசையடைவார்கள் என்று கூறினார்கள்

நீ தந்தால் நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்பது இதன் கருத்தாகும்.                                    

عن محمد بن المنكدر قال : نعم العون على الدين الغنى-  (رواه  ابن ابي الدنيا في اِصلاح المال )(

ஒருவருடைய தீன் பற்றுக்குத் துணையாக இருக்கக்கூடிய விஷயங்களில் பொருளாதாரம் நல்லதாகி விட்டது

 عن سفيان الثوري قال : المال في هذا الزمان سلاح المؤمن)- قال المقدام بن معدي كرب : يأتي على الناس زمان لا ينفع فيه إلا الدينار والدرهم -عن سعيد بن المسيب أنه ترك دنانير كثيرة  فلما حضرته الوفاة ، قال : اللهم إنك تعلم أني لم أجمعها إلا لأصون بها ديني ، وأصل بها رحمي وأكف بها وجهي وأقضي بها دَيْني لا خير فيمن لا يجمع المال ليكف به وجهه  ويصل به رحمه ، ويقضي به دينه ، ويصون به دينه,   عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :  ليس خيركم من ترك دنياه لآخرته ، ولا من ترك آخرته لدنياه ، حتى ينال منها، فإن كل واحدة منهما مبلغة إلى الأخرى، ولا تكون كَلَّا  على الناس (رواها  ابن ابي الدنيا في اِصلاح المال )(كَلَّا பிறருக்கு சுமையாக

பொருளாதாரத்தை தேடுவதற்காக  முடிந்த வரை  உழைப்பது ஒவ்வொரு மனிதனின் மீதும் கடமையாகும்

( فَإِذَا قُضِيَتِ الصَّلاةُ فَانْتَشِرُوا فِي الأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ ) [ سورة الجمعة: 10 ]

பொருளாதாரத்தை தேடும் வழிகளில் வியாபாரம் முக்கியமானது

இன்றைக்கு எப்படியெல்லாமோ தந்திரங்கள் செய்து வியாபாரத்தைப் பெருக்குகிறார்கள். ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு முதியவர் ஒரு ஆப்பிள் 30 ரூபாய் என்று கூறி ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி, இறங்கி வியாபாரம் செய்தார். அவரிடம் மக்கள் ஐந்து ரூபாய் குறைத்து ஒரு ஆப்பிள் 25 ரூபாய்க்கு தரச் சொல்லி  பலர் கேட்டும் அவர் குறைக்கவில்லை. அதனால் அவரிடம் யாரும் ஆப்பிள் வாங்கவில்லை. கொண்டு சென்ற ஆப்பிள் கூடையுடன் அப்படியே திரும்பினார். சற்று நேரம் கழித்து ஒரு இளைஞன் அதே பஸ்களில் ஏறி ஒரு ஆப்பிள் 30 ரூபாய் என்று கூறி விற்பனையை ஆரம்பிக்க, அவனிடமும் ஒரு ஆப்பிள் 25 ரூபாய்க்கு தரச் சொல்லி  மக்கள் கேட்க, சரி என்று அவனும் அவர்கள் கேட்ட 25 ருபாய்க்கு விற்றான். அத்தனையும் விற்றுத் தீர்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலாவதாக விற்பனை செய்த முதியவரிடம் அந்த இளைஞன் எவ்வளவு திறமையாக விற்பனை செய்கிறான் நீயும் ஐந்து ருபாய் குறைத்திருந்தால் உனக்கும் வியாபாரம் நடந்திருக்குமே என்று கேட்க, அதற்கு அந்த முதியவர் சொன்னாராம். அவன் வேறு யாருமல்ல. என்னுடைய மகன் தான்.  நான் முதலில் பஸ்ஸில் ஏறி விலையை அதிகமாக கூறுவேன். மக்கள் வாங்க மாட்டார்கள். பிறகு அதே பஸ்ஸிஸ் அதே கூடையுடன் என் மகன் ஏறி சற்று குறைத்து விற்பனை செய்வான். அத்தனையும் விற்று விடும். இரண்டு ஆப்பிள் கூடையும் ஒன்று தான் என்று சொன்னாராம்.                              

இப்படியெல்லாம் உலகத்தில் நடெபறும் சூழ்நிலையில் இஸ்லாமிய வியாபாரம் சம்பந்தமாக இங்கு காண்போம்

 

நேர்மையாக வியாபாரம் செய்பவருக்கான சுபச் செய்திகள்

நேர்மையான வியாபாரி நபிமார்கள், நல்லோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

عَنْ أَبِي سَعِيدٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ (ترمذي

 நேர்மையாக வியாபாரம் செய்வதும் ஒரு வகை வணக்கம் என்ற படிப்பினை இதில் உள்ளது.  

வியாபாரம் செய்வது நபிமார்களின் நடைமுறையாகும்.

وكان نوح عليه السلام كان نجارا  بدليل صنع الفلك بوحي الله  عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال : « كان زكريا نجاراً » (ابن ماجة)  عن أنس قال : قال رسول الله صلى الله عليه و سلم : هبط آدم وحواء عريانين جميعا عليهم ورق الجنة قعد يبكي ويقول لها : يا حواء قد آذاني الحر فجاءه جبريل بقطن وأمرها أن تغزل وعلمها وأمر آدم بالحياكة وعلمه (البداية والنهاية [ الدر المنثور - السيوطي ] عن أنس مرفوعا [ أول من حاك آدم عليه السلام ] (فتح القدير  وروي أنه إدريس عليه السلام كان خياطا وكان يسبح الله تعالى عند إدخال الإبرة ويحمده عند إخراجها : المحرر الوجيز  وكان ابراهيم عليه السلام كان بناء وقد بني الكعبة 

சுருக்கம்- நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் ஆசாரியாக  இருந்தார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வின் உத்தரவுப்படி அவர்களே கப்பல் கட்டியதால் அவர்களும் ஆசாரியாக  இருந்தார்கள்.  நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு இறக்கப்பட்டபோது ஆடையின்றி சுவனத்து இலைகளுடன் இறக்கப்பட்டார்கள். இந்த பூமிக்கு வந்த பின்பு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து பருத்தியில் இருந்து ஆடை நெய்யும் விதத்தைக் கற்றுத் தந்தார்கள். எனவே முதன் முதலில் நெசவுத் தொழில் செய்தவர்கள் நபி ஆதம் அலை அவர்கள் தான்.               

நபி இத்ரீஸ் அலை அவர்கள் டைலராக இருந்தார்கள். ஊசியை துணியில் உள்ளே செலுத்தி வெளியே எடுக்கும் ஒவ்வொரு தடவையிலும் தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தார்கள். நபி இப்றாஹீம் அலை அவர்களை கட்டிடக் கலை நிபுணர் என்று கூறலாம். காரணம் அவர்கள் கஃபாவைக் கட்டினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நமது நபி ஸல் அவர்கள் கதீஜா ரழி அவர்களுக்காக வியாபாரம் செய்த சம்பவங்கள் பிரபலமானதாகும்.               

தாவூத் அலை இரும்புக் கவச உடை தயாரித்து விற்பனை செய்தது பற்றி குர்ஆன் கூறுகிறது.

وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ (10 (سبأ) وسبب ذلك أن داود عليه السلام، لما ملك بني إسرائيل لقي ملكا وداود يظنه إنسانا، وداود متنكر خرج يسأل عن نفسه وسيرته في بني إسرائيل في خفاء، فقال داود لذلك الشخص الذي تمثل له: (ما قولك في هذا الملك داود) ؟ فقال له الملك(نعم العبد لولا خلة فيه) قال داود: (وما هي) ؟ قال: (يرتزق من بيت المال ولو أكل من عمل يده لتمت فضائله).فرجع فدعا الله في أن يعلمه صنعة ويسهلها عليه، فعلمه صنعة لبوس كما قال عزوجل في سورة الانبياء (2)، فألان له الحديد فصنع الدروع، فكان يصنع الدرع فيما بين يومه وليلته يساوي ألف درهم، حتى ادخر منها كثيرا وتوسعت معيشة منزله، ويتصدق على الفقراء والمساكين، وكان ينفق ثلث المال في مصالح المسلمين، وهو أول من اتخذ الدروع وصنعها  (قرطبي

  வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது நபி தாவூத் அலை அவர்கள் தமது ஆட்சியின் போது தம்மை இனம் காட்டிக் கொள்ளாமல் மாறுவேடத்தில் வெளியே வந்து தம்மைப் பற்றியும் தமது நடத்தை பற்றியும் பயணிகளிடம் விசாரிப்பது வழக்கம். அவ்வாறு அவர்கள் யாரிடம் விசாரித்தாலும் அந்த நபர் நபி தாவூது அலை அவர்களின் வழிபாடு நடத்தை, நீதி ஆகியவை தொடர்பாக பாராட்டாமல் இருந்ததில்லை. இந்நிலையில் ஒரு நாள் அல்லாஹ் வானவர் ஒருவரை மனித உருவில் அனுப்பி வைத்தான். அந்த வானவரை தாவூத் அலை அவர்களை சந்தித்தார்கள் மற்றவர்களிடம் விசாரிப்பது போன்ற அவரிடமும் தாவூது (அலை) விசாரித்தார்கள். அதற்கு அவர் தாவூத் அலை அவர்கள் மக்களிலேயே தமக்கும் தம் சமுதாயத்தாருக்கும் நல்லவர்கள் தான். இருந்தாலும் அவரிடம் ஒரே ஒரு பழக்கம் உள்ளது அது மட்டும் அவரிடம் இல்லை என்றால் அவர் முழுமை பெற்றவராகி விடுவார் என பதிலளித்தார்கள். தாவூது அலை அவர்கள் அது என்ன பழக்கம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த வானவர் தமக்கும் தம் குடும்பத்தாருக்குமான உணவு ஆதாரத்தை பொது நிதியிலிருந்தே அவர் பெறுகிறார் என்று பதிலளித்தார். அப்போது நபி தாவூத் அலை அவர்கள் இறைவனிடம் துஆவில் ஈடுபட்டு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தன்னிறைவை தரும்படியான கைத்தொழில் ஒன்றை நமக்கு கற்றுத் தருமாறு துஆ கேட்டார்கள்.  அதனடிப்படையில் ஒரு தொழிலை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். நபி தாவூது (அலை) அவர்களுக்கு இரும்பை இலகுவாக்கி வைத்தான். கவச ஆடைகள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கற்றுத் தந்தான். கவச ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முதல் நபர் இவர்கள் தான். ஆயிரம் திர்ஹம் மதிப்புள்ள கவசஉடைகளை தினமும் தயாரிப்பார்கள் (தஃப்சீர் இப்னு கஸீர்)

வியாபாரத்தின் ஒழுங்கு முறைகள்

ஃபிக்ஹ் நூல்களில் வியாபாரம் பற்றியும் கொடுக்கல் வாங்கல் பற்றியும் கூறப்பட்ட விஷயங்கள் தான் அதிகம். குர்ஆனில் நீளமான வசனம் கடன் பற்றிய விபரங்களைப் பேசும் வசனம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் சிறந்த முஃமின் என்பதற்கான அடையாளமே அவர் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான் என உமர் ரழி அவர்களின் கூற்று இருக்கிறது.                                                                               

உண்மை சொல்லி விற்றால் பரக்கத் இருக்கும். பொய் சொல்லி விற்பது பரக்கத்தை நீக்கும்

عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا (بخاري

விற்பவரும், வாங்குபவரும் அந்த இடத்தை விட்டும் பிரியாத வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை உண்டு

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ وَرُبَّمَا قَالَ أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ رواه البخاري (اِخترْ உறுதிப்படுத்துவதோ, முறிப்பதோ உமது விருப்பம் என்று கூறியிருந்தாலே தவிர

ஏதேனும் பொய் சொல்லி ஒரு பொருளை விற்க நினைப்பதும், தேவையில்லாமல் சத்தியம் செய்வதும்  கூடாது

عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الَّذِي لَا يُعْطِي شَيْئًا إِلَّا مَنَّهُ وَالْمُسْبِلُ إِزَارَهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْكَذِبِ رواه النسائ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَقَامَ سِلْعَةً وَهُوَ فِي السُّوقِ فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطِ لِيُوقِعَ فِيهَا رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ فَنَزَلَتْ{ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِاللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا }[سورة آل عمران: 77]الْآيَةَ رواه البخاري2088

மூன்று சாராரை அல்லாஹ் மறுமையில் கருணை கொண்டு பார்க்க மாட்டான். அவர்களை பாவத்தை விட்டும் பரிசுத்தப்படுத்த மாட்டான். 1.எதை தர்மம் செய்தாலும் சொல்லிக் காட்டுபவர் 2.கரண்டைக் கீழ் ஆடை உடுத்துபவர் பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பவர். ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனை செய்யும்போது சத்தியமாக வேறு யாரும் கொடுக்காத விலைக்கு நான் தருகிறேன் என சத்தியம் செய்தார். அப்போது அற்பமான காசுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்பவர்களைக் கண்டித்து அல்லாஹ் வசனத்தை இறக்கினான்.  படிப்பினை- பொய்ச் சத்தியமாக இல்லா விட்டாலும் அற்பமான விஷயங்களுக்காக சத்தியம் செய்யக்கூடாது

ஒருவர் விலை பேசும்போது அது கேன்சல் ஆகாத நிலையில் இன்னொருவர் குறுக்கிட்டு விலை கேட்பது கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ  قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ وَلَا تَنَاجَشُوا وَلَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا تَسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا رواه البخاري2140 (حاضرஉள்ளூர் வாசி வெளியூர் வாசிக்கு விற்றுத் தருவது

1.உள்ளூரின் விலை நிலவரம் தெரியாமல் வெளியூரில் இருந்து சரக்குகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிக்காக உள்ளூர் வியாபாரி விற்றுத் தரக்கூடாது காரணம் அதில் வெளியூர்வாசி ஏமாந்து விட வாய்ப்புண்டு. அவர் வந்து விலையை விசாரித்து அதற்குப்பின் சுயமாக ஒரு இலாபத்தை வைத்து விற்பார்.அது அவர் விருப்பம். ஆனால் அவர் வரும் வழியிலேயே உள்ளூர்வாசி வழி மறித்து இன்ன விலை தான் மார்க்கெட்டில் உள்ளது அந்த விலைக்குத் தந்து விடுங்கள் என்று என்று பொய் சொல்லி குறைந்த விலைக்கு வாங்க வாய்ப்புண்டு அதனால் வெளியூர் வியாபாரி ஏமாந்து விட வாய்ப்புண்டு. ஆனால் வெளியூர் வாசிக்கு இங்குள்ள விலை நிலவரம் தெரிந்தே அவர் தருகிறார் என்றால் தவறில்லை. 2.வாங்கும் நோக்கம் இல்லாமல் விலையை ஏற்றி விடுவது கூடாது. 3.ஒரு பொருளை ஒருவர் விலை பேசும்போது அது கேன்சல் ஆகாத நிலையில் மற்றவர் குறுக்கிட்டு விலை கேட்பது கூடாது. 4.ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்யப் பேச்சு வார்த்தை நடத்தி அது நிலுவையில் இருக்கும்போது அது கேன்சல் ஆகாமல் மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது கூடாது.  5.தன் தகோதரியின் மண வாழ்க்கையை மற்றொரு சகோதரி கெடுத்து விடக்கூடாது. அதாவது தனது சகோதரியின் கணவன் அவளை தலாக் சொல்லி விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கவும் கூடாது. அதற்கான தந்திரங்களிலும் ஈடுபடக் கூடாது.                                                                     

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَال كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِ فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ (البخاري)2167

வெளியூர் வியாபாரி பொருளைக் கொண்டு வரும்போது கடைவீதி துவங்கும் இடத்திலேயே வாங்கி அதை விற்பார்கள். அவ்வாறு செய்வதை நபி ஸல் தடுத்தார்கள்.சந்தைக்கு வந்து அங்குள்ள நிலவரம் தெரிந்து விற்கட்டும்

வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக ஒரு பொருளின் விலையை அதிகமாக கேட்பது கூடாது

عَنْ ابْنِ عُمَرَ رَضِ قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّجْشِ رواه البخاري2142عن معقل بن يسار قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول "من دخل في شيء من أسعار المسلمين ليغلي عليهم كان حقا على الله أن يقذفه في معظم جهنم رأسه أسفله رواه الحاكم

வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக ஒரு பொருளின் விலையை அதிகமாக கேட்பதை விட்டும் நபி ஸல் தடுத்தார்கள். விலையை ஏற்றி விடும் காரியத்தில் யார் ஈடுபட்டாரோ அவரை நரகத்தில் நுழைத்து தலை கீழாகவும் கால் மேலாகவும் இருக்க வைதனை செய்வது அல்லாஹ்வின் ஹக்காகி விட்டது. 

விற்க நினைத்த விலையை விட அதிகமாக சொல்லி பின்பு குறைக்கலாமா?

عَنْ قَيْلَةَ أُمِّ بَنِي أَنْمَارٍ قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ عُمَرِهِ عِنْدَ الْمَرْوَةِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَبِيعُ وَأَشْتَرِي فَإِذَا أَرَدْتُ أَنْ أَبْتَاعَ الشَّيْءَ سُمْتُ بِهِ أَقَلَّ مِمَّا أُرِيدُ ثُمَّ زِدْتُ ثُمَّ زِدْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ وَإِذَا أَرَدْتُ أَنْ أَبِيعَ الشَّيْءَ سُمْتُ بِهِ أَكْثَرَ مِنْ الَّذِي أُرِيدُ ثُمَّ وَضَعْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَفْعَلِي يَا قَيْلَةُ إِذَا أَرَدْتِ أَنْ تَبْتَاعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أُعْطِيتِ أَوْ مُنِعْتِ وَإِذَا أَرَدْتِ أَنْ تَبِيعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أَعْطَيْتِ أَوْ مَنَعْتِ رواه ابن ماجة

   கைலா ரழி என்ற பெண்மணி நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் விற்பதும் வாங்குவதிலும் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றுகிறேன் அதாவது நான் ஒரு பொருளை வாங்க நினைத்தால் என்ன விலைக்கு வாங்க நினைக்கிறேனோ அதை விட மிகவும் குறைந்த விலைக்குக் கேட்பேன். வியாபாரி தர மறுப்பார். நான் இன்னும் சற்று அதிகப் படுத்திக் கேட்பேன். அப்போதும் மறுப்பார் கடைசியில் நான் மனதில் நினைத்த விலையை கடைசியாக கேட்பேன்.அவர் தந்தால் வாங்குவேன் அதேபோல் அதாவது நான் ஒரு பொருளை விற்க நினைத்தால் என்ன விலைக்கு விற்க நினைக்கிறேனோ அதை விட மிகவும் அதிக விலையைச் சொல்லுவேன். வாங்குபவர் அந்த விலைக்கு வாங்க மறுப்பார். பிறகு நான் இன்னும் சற்று குறைப்பேன் அப்போதும் மறுப்பார் கடைசியில் நான் மனதில் நினைத்த விலையைக் கூறுவேன் அந்த விலைக்கே அவருக்கு விற்பேன் இவ்வாறு செய்வது கூடுமா என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஒரு பொருளை வாங்க நினைத்தால் என்ன விலைக்கு நீ வாங்க நினைக்கிறாயோ அதையே முதலாவதாக கேள். அது உனக்கு அந்த விலைக்கு கிடைத்தாலும் சரி. கிடைக்கா விட்டாலும் சரி. அதேபோல ஒரு பொருளை விற்க நினைத்தால் என்ன விலைக்கு நீ விற்க நினைக்கிறாயோ அதையே முதலில் கூறு. வாங்குபவர் அதை வாங்கினாலும்  சரி. வாங்கா விட்டாலும் சரி.                           

தடுக்கப்பட்ட வியாபாரங்களில் சில...

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخْرَجَانِي إِلَى أَرْضٍ مُقَدَّسَةٍ فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى نَهَرٍ مِنْ دَمٍ فِيهِ رَجُلٌ قَائِمٌ وَعَلَى وَسَطِ النَّهَرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةٌ فَأَقْبَلَ الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ فَإِذَا أَرَادَ الرَّجُلُ أَنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بِحَجَرٍ فِي فِيهِ فَرَدَّهُ حَيْثُ كَانَ فَجَعَلَ كُلَّمَا جَاءَ لِيَخْرُجَ رَمَى فِي فِيهِ بِحَجَرٍ فَيَرْجِعُ كَمَا كَانَ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ الَّذِي رَأَيْتَهُ فِي النَّهَرِ آكِلُ الرِّبَا رواه البخاري2085  

வியாபார ஒப்பந்தம் முடிந்தாலும் பொருள் கைக்கு வரும் முன் அதை அடுத்தவருக்கு விற்பது கூடாது

 عن ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ (بخاري2133)

உருவப்படங்களை வரையும் தொழிலும், சிலைகளை விற்பதும், மதுவை விற்பதும், இசைக்கருவிகளை விற்பதும் கூடாது

இறந்த பிராணிகளை விற்பது கூடாது

பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படும்போதே குறைந்த ஆயுளுடன் தான் வளர்க்கப்படுகின்றன. கறிக்கடைகளுக்கு லாரியில் வந்து இறங்கும் முன்பே அவற்றில்  சில கோழிகள் இறந்து விடுகின்றன. ஆனால் அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி அதையும் விற்பதாக கேள்விப்படுகிறோம். அதை விற்பதும் கூடாது. வாங்குவதும் கூடாது.

மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பது கூடாது

عَنْ عُمَرَرضي الله عنه قَال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامًا ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ (ابن ماجة)

மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பவரை அல்லாஹ் வறுமையைக் கொண்டும் வெண் குஷ்டத்தைக் கொண்டும் சோதிப்பான்.

عَنْ فَرُّوخَ مَوْلَى عُثْمَانَ أَنَّ عُمَرَ رَضِ وَهُوَ يَوْمَئِذٍ أَمِيرُ الْمُؤْمِنِينَ خَرَجَ إِلَى الْمَسْجِدِ فَرَأَى طَعَامًا مَنْثُورًا فَقَالَ مَا هَذَا الطَّعَامُ فَقَالُوا طَعَامٌ جُلِبَ إِلَيْنَا قَالَ بَارَكَ اللَّهُ فِيهِ وَفِيمَنْ جَلَبَهُ قِيلَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَإِنَّهُ قَدْ احْتُكِرَ قَالَ وَمَنْ احْتَكَرَهُ قَالُوا فَرُّوخُ مَوْلَى عُثْمَانَ وَفُلَانٌ مَوْلَى عُمَرَ فَأَرْسَلَ إِلَيْهِمَا فَدَعَاهُمَا فَقَالَ مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ قَالَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ فَقَالَ عُمَرُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْإِفْلَاسِ أَوْ بِجُذَامٍ فَقَالَ فَرُّوخُ عِنْدَ ذَلِكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُعَاهِدُ اللَّهَ وَأُعَاهِدُكَ أَنْ لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا وَأَمَّا مَوْلَى عُمَرَ فَقَالَ إِنَّمَا نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ قَالَ أَبُو يَحْيَى فَلَقَدْ رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا (مسند أحمد

உமர் ரழி கலீஃபாவாக இருக்கும்போது ஒருநாள் பள்ளிக்கு முன்பு நிறைய தானிய மூட்டைகள் இருப்பதைக் கண்டு இது என்ன என்று கேட்டார்கள் அப்போது இதுவெல்லாம் இத்தனை நாட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பின் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்று பதில் கூறப்பட்டது. அப்போது உமர் ரழி அவர்கள் இந்த தானியங்களில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக இதை நம்மிடம் கொண்டு வர யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக என்று கூறினார்கள். அதற்கடுத்து அதைப் பதுக்கி வைத்த இருவரைப் பற்றி தகவல் கூறப்பட்டுள்ளது. அவ்விருவரும் அடிமைகள். ஒருவர் உமர் ரழி அவர்களின் அடிமை. மற்றொருவர் உஸ்மான் ரழி அவர்களின் அடிமை. (அடிமைகள் சுயமாக வியாபாரம் செய்ய முதலாளி அனுமதி தந்தால் கூடும்.)

அவ்விருவரையும் உமர் ரழி அவர்கள் அழைத்து ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவ்விருவரும் எங்களின் பணத்தைக் கொடுத்து நாங்கள் பொருளை கொள்முதல் செய்கிறோம். அதை நாங்கள் விரும்பும்போது விற்போம். இதிலென்ன தவறு என்றனர். அவ்விருவருக்கும் உமர் ரழி அவர்கள் மேற்படி ஹதீஸைக்கூறி புத்திமதி கூற, அவ்விருவரில் உஸ்மான் ரழி அவர்களின் அடிமையான ஃபர்ரூஹ் திருந்தி நீங்கள் இவ்வாறு கூறியபின்பு இனிமேல் நான் ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன் என்றார். தன்னுடைய வியாபார இடத்தையே மாற்றி விட்டார். ஆனால் மற்றொருவர் தாம் கூறிய அதே வாதத்தையே முன் வைத்தார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஹ்யா ரஹ் கூறும்போது நான் பிற்காலத்தில் வீண் வாதம் பேசிய அந்த அடிமையை குஷ்டரோகியாக நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.  

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ  (ابن ماجة)  الجالب الذي يجلب السلعة بربح يسير

மக்களின் நலன் கருதி குறைந்த  இலாபத்திற்கு விற்பனை செய்யும் வியாபாரி அல்லாஹ்வின் மூலம் மறைமுகமாக ரிஜ்க் வழங்கப்படுவார். யார் பதுக்கி வைக்கிறாரோ அவர் சபிக்கப்பட்டவர்.    

 

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...