வியாழன், 26 அக்டோபர், 2023

அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் உபதேங்கள் & படிப்பினைகள்

 


الوصايا من كتاب الغنية  للشيخ عبد القادر  جيلاني رحمه الله

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا (63) الفرقان

பணிவை மேற்கொண்டால் தான் ஸாலிஹீன்களின் அந்தஸ்துக்கு உயர முடியும்
-"التواضع ، وبه تعلو المنزلة"  فهو خصلة أصل الاخلاق كلها ، وبه يدرك العبد منازل الصالحين الراضين عن الله في السراء والضراء  وهو كمال التقوى

பொருள்- பணிவைக் கொண்டு தான் முஃமினின் அந்தஸ்து உயரும். அதைக் கொண்டு தான் இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்வின் விதியைப் பொருந்திக் கொண்ட நல்லடியார்களின் அந்தஸ்தை அடைய முடியும்.

 

பணிவுக்கு உதாரணமாக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வாழ்வில் இருந்தே  ஒரு சம்பவம்

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10  فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيم  اِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.)  موسوعة الرد على الصوفية

 முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் வாழ்வில் நடைபெற்ற பிரபலமான சம்பவங்களில் ஒன்றை அவர்களே சொல்லிக் காட்டினார்கள். நான் என்னுடைய பயணங்களில் ஒரு பயணத்தில்  குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன். அதே நிலையில் கடற்கரையில் நான் இறை தியானத்தில் இருந்த போது எனக்கு முன்னால் மழை மேகம் போன்ற ஒரு காட்சி தோன்றியது. அதிலிருந்து இதமான காற்றை உணர்ந்தேன். பின்பு ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு பெரும் ஒளியை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரு உருவம் தோன்றி அப்துல் காதிரே! நான்தான் உன்னுடைய ரப்பு. மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களையெல்லாம் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறியது. உடனே நான் இது ஷைத்தானின் வேலை என்று எண்ணி சுதாரித்துக் கொண்டு அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு! என்றேன். ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு இருந்த அந்த ஒளி உடனே மறைந்து இருளாகி விட்டது. அந்த உருவமும் புகையாக மாறி விட்டது. பின்பு அவன் என்னை நோக்கி அப்துல் காதிரே! உம்முடைய கல்வி ஞானத்தாலும்  உம்முடைய உயர்வான பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்டும் என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டீர். நான் இது போன்ற யுக்தியை பயன்படுத்தி எழுபது தரீகத் வாதிகளை நான் கெடுத்துள்ளேன். (ஆனால் நீர் உன்னுடைய திறமையால் தப்பித்துக் கொண்டீர்)என்று பெருமையை உண்டாக்கும் வகையில் அடுத்த சூழ்ச்சியை ஆரம்பித்தான். அப்போதும் நான் சுதாரித்துக் கொண்டு (என்னிடம் எவ்வித பெருமையும் இல்லை. எவ்வித திறமையும் இல்லை) என்னுடைய ரப்புக்கே அனைத்துப் பெருமையும் உண்டு. என்று கூறினேன்.                              

 இவ்வாறு அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் கூறிய போது அவர்களிடம் நீங்கள் எப்படி அவனை ஷைத்தான் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். எப்போது அவன் மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களை உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன் என்று கூறினானோ உடனே நான் சுதாரித்துக் கொண்டேன் என்றார்கள். (இப்படி ஒரு விஷயம் அல்லாஹ்விடமிருந்து ஏற்படுவதாக இருந்தால் முதலில் நபி ஸல் அவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்பட்டிருக்கும் என்பது ஆலிம்களுக்கு மட்டுமே தெரியும்.)      

படிப்பினை- மார்க்கத்தில் ஹராம் என்று கூறப்பட்டதை இன்றைக்கு யாரும் ஹலாலாக்க முடியாது என்றிருக்க சிலர் ஹராமை ஹலால் என்று ஃபத்வா கொடுக்கின்றனர். அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.  

 மற்றொரு படிப்பினை- மார்க்க ஞானம் உள்ளவராகவும் அதேநேரத்தில் பணிவை மேற்கொள்பவராகவும் இருக்கும் மார்க்க அறிஞரை ஷைத்தான் அவ்வளவு சீக்கிரத்தில் வழி கெடுக்க முடியாது. எழுபது பேரை அவன் வழி கெடுத்ததாக அவனே கூறினான் என்றால் ஒன்று அவர்களிடம் பணிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது மார்க்க ஞானம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.                                                 

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه  قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ (سنن ابن ماجة

قال عمر بن الخطاب على المنبر أيها الناس تواضعوا فإني سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من تواضع لله رفعه وقال انتعش نعشك الله فهو في أعين الناس عظيما وفي نفسه صغيرا ومن تكبر قصمه الله وقال اخسأ فهو في أعين الناس صغيرا (المعجم الاوسط

 

 

உமர் ரழி அவர்கள் மிம்பரில் நின்று கூறினார்கள். மக்களே பணிவை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் நபி ஸல் அவர்கள் கூற நான் கேள்விப் பட்டுள்ளேன். யார் பணிவை மேற்கொண்டாரோ அவரை அல்லாஹ் உயர்த்துவான். நீ பணிவாக இரு. அல்லாஹ் உன்னை உயர்த்துவான். பணிவை மேற்கொள்பவர் தன்னை சாதாரண மனிதனாகவே கருதுவார். ஆனால் மக்களிடம் அவர் உயர்ந்தவராக இருப்பார். இதற்கு மாற்றமாக யார் பெருமை கொண்டாரோ அவர் தன்னை பெரிய மனிதனாக கருதுவார். ஆனால் மக்கள் மனதில் அவர் அற்பமானவராக இருப்பார்.

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பணிவு

قال السدي: كانت تسير به في اليوم مسيرة شهرين. وروى سعيد بن جبير عن ابن عباس قال: كان سليمان إذا جلس نصبت حواليه أربعمائة ألف كرسي، ثم جلس رؤساء الانس مما يليه، وجلس سفلة الانس مما يليهم، وجلس رؤساء الجن مما يلي سفلة الانس، وجلس سفلة الجن مما يليهم، وموكل بكل كرسي طائر لعمل قد عرفه، ثم تقلهم الريح، والطير تظلهم من الشمس، فيغدو من بيت المقدس إلى إصطخر، فيبيت ببيت المقدس، ثم قرأ ابن عباس: غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ (12)سورة سبا-  (قرطبي

நபி சுலைமான் அலை அவர்களுக்கு அல்லாஹ் காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். சுலைமான் அலை அவர்களும் அவர்களின் பட்டாளமும் ராட்சத விரிப்பின் மீது அமர்ந்தால் காற்று அவர்களை நினைத்த இடத்திற்கு மிக விரைவாகக் கொண்டு செல்லும். அந்த விரிப்பின் முன் இருக்கையில் சுலைமான் அலை இருப்பார்கள். அவர்களைச் சுற்றி நான்கு இலட்சம் இருக்கைகள் இருக்கும். முதல் வரிசையில் மனித இனத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இருப்பார்கள். அடுத்த வரிசையில் மனித இனத்தைச் சேர்ந்த சேவகர்கள் இருப்பார்கள். அடுத்த வரிசையில் ஜின் இனத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இருப்பார்கள்.  அடுத்த வரிசையில் ஜின் இனத்தைச் சேர்ந்த சேவகர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே ஒரு பெரிய பறவை இறக்கைகளை விரித்தபடி நிழல் தந்து கொண்டிருக்கும். இத்தகைய பிரமாண்டத்துடன் ஆகாயத்தில் பறப்பார்கள். பைத்துல் முகத்தஸில் இருந்து ஒரு மாதம் தொலை தூரமுள்ள ஊருக்கு  ஒரு காலை நேரம் முடிவதற்குள் சென்றடைவார்கள். அங்குள்ள மக்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் வழங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டு அன்று மாலைக்குள் மறுபடியும் பைத்துல் முகத்தஸுக்கு வந்து விடுவார்கள்.                                                         

இவ்வளவு அருட்கொடைகள் வழங்கப்பட்டிருந்தாலும் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அந்தப் பயணத்தின் போது தலையைக் கீழே தாழ்த்தியவர்களாக அல்லாஹ்வை திக்ர் செய்தபடி பணிவை வெளிப்படுத்தியவர்களாக அமர்ந்திருப்பார்கள்.

كان سليمان عليه السلام دائم التواضع حتى قيل: إنه كان يمشي منكسر الرأس خشوعاً لله وأثناء استعراضه لجنوده من الجن والإنس

நபி சுலைமான் அலை அவர்களுக்கு இவ்வளவு நிஃமத் கிடைக்கக் காரணம்

وقال الحسن : شغلت سليمان الخيل حتى فاتته صلاة العصر ، فعقر الخيل فأبدله الله خيرا منها وأسرع ، أبدله الريح تجري بأمره حيث شاء ، (قرطبي

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் தனது பறக்கும் குதிரைகளைக் கண்டு ரசித்தபோது ஒரு தொழுகையின் நேரம் தவறி விட்டது. அதற்காக வருந்தி தனது தொழுகை தவறுவதற்குக் காரணமான அந்தக் குதிரைகளை அறுத்து விட்டார்கள். அதற்கு நற்கூலியாக அல்லாஹ் காற்றையே வசப்படுத்தித் தந்தான்.              

மனோ இச்சையை அடக்கி உள்ளத்தைப் பக்குவப் படுத்தியவர்கள் தான் இறைநல்லடியார்கள்.

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9)

உள்ளம் என்பது ஒரு கண்ணாடி என்பார்கள் அந்தக் கண்ணாடி எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அந்த அளவுக்கு எதிரில் உள்ள உருவம் மங்கலாகவே தெரியும். அதேபோல் ஒருவரின் உள்ளம் மாசு பட்டிருந்தால் அவர் தன்னைப் போலவே மற்றவர்களையும் பார்ப்பார். எவர் மீதும் நல்லெண்ணம் கொள்ள மாட்டார். ஆகவே கல்பு என்ற கண்ணாடியை சிறுவயதில் இருந்தே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு கண்ணாடியை சுமார் 10 வருடங்களாக துடைக்காமல் இருந்து அதன் பின்பு அதை எடுத்து ஒரே நாளில் எப்படியாவது துடைத்து சுத்தமாக்கி விட வேண்டும் என்று நினைத்து, என்ன தான் கஷ்டப்பட்டு துடைத்தாலும் அந்த மங்கலான நிறம் மாறுவது கடினம். அதேபோல் இன்றைக்கு சிலர் குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்பு முழு இபாதத்தில் ஈடுபடலாம் என்று எண்ணுவர்.  அது பலர்களுக்கு முழுமையான பலனை தருவதில்லை 

ஒரு மனிதர் நான் இறைவனை தியானம் செய்யப் போகிறேன். அதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்று சொல்லி ஓரிடத்தில் தனிமையில் அமர்ந்து தியானம்  செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஒரு அழகிய பெண் நடந்து வரும் சப்தம் கேட்டது. அந்தப் பெண்ணைப் பார்த்தார். அன்றைக்கு அவருடைய தியானம் கலைந்தது. அடுத்த நாளும் அவர் முயற்சியை கை விடாமல் என் கண்கள் திறந்திருந்தால் தானே யாரையும் பார்க்க முடியும். என்று கூறி தன் கண்களை துணியால் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போதும் அதே பெண் நடந்து வர, அவளின் கொலுசு சப்தம் கேட்டது. உடனே அவருடயை தியானம் கலைந்தது. அடுத்த நாள் அவர் என் காதுகளையும் மூடிக் கொண்டால் எந்த சப்தமும் இடையூறு செய்யாது  என்று கூறி தன் காதுகளையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார் அப்போதும் அதே பெண் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வர, அந்த நறுமணம் இவருடைய தவத்தை கலைத்து விட்டது. அடுத்த நாள் அவர் தன் மூக்கையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார். இப்போது அந்தப் பெண்ணும் வரவேயில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்த நேரம் வந்தவுடன் இவர் மனதில் நேற்று இதே நேரம் அந்தப் பெண் வந்தாள். என்ற சிந்தனை ஏற்பட்டது. உடனே அவருடயை தவம் கலைந்தது.- படிப்பினை- மனதை பக்குவப்படுத்தாமல் எத்தனை வேறு எதை மூடினாலும் பலனில்லை.      

பணிவை மேற்கொண்ட நல்லடியாரகள்

ذات يوم جاء رسولاً من بلاد الفرس يحمل رسالة من كسري ملك الفرس الي امير المؤمنين عمر بن الخطاب، دخل هذا الرجل الي المدينة وأخذ يبحث عن قصر امير المؤمنين فأخبره الناس أنه ليس لديه قصر، فتعجب الرجل كثيراً من هذا الامر، وخرج معه بعض من المسلمين حتي يرشده الي مكان الخليفة عمر بن الخطاب رضي الله عنه، وبينما هما يبحثان عنه في ضواحي المدينة وجدا رجلاً نائماً تحت شجرة، فأشار المسلم الي الرجل قائلاً لرسول كسري : إن هذا هو عمر بن الخطاب خليفة المسلمين، فازداد تعجب الخليفة واندهاشه من حال هذا الخليفة الذي خضعت له ملوك الفرس والروم، ثم قال الرجل مقولته الشهيرة عن عمر بن الخطاب رضي الله عنه : حكمتَ فعدلتَ فأمنتَ فنمتَ يا عمر.

وقد كان الصديق ابو بكر رضي الله عنه معتاداً ان يذهب الي سيدة عجوز فقيرة يساعدها علي اعمال بيتها فينظف لها البيت ويقضي حاجتها ويطعمها الطعام، وذات يوم خرج رضي الله عنه يودع جيش المسلمين الذي سيحارب الروم بقيادة أسامة بن زيد رضي الله عنه، وقد كان اسامة راكباً وابو بكر الصديق خليفة المسلمين يسير علي قدميه، فقال له اسامة وقد شعر بالخجل من الموقف : يا خليفة رسول الله، لَتَرْكَبَنَّ أو لأنزلنَّ، فرد عليه ابو بكر قائلاً : والله لا أركبن ولا تنزلن، وما على أن أُغَبِّرَ قدمي ساعة في سبيل الله.

وَالتَّوَاضُعُ مِنْ أَبْرَزِ أَخْلاَقِ الرَّسُولِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - عِنْدَمَا فَتَحَ النَّبِيُّ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَكَّةَ، دَخَلَهَا خَافِضًا رَأْسَهُ تَوَاضُعًا للهِ رَبِّ الْعَالَمِينَ، حَتَّى أَنَّ رَأْسَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَادَتْ أَنْ تَمَسَّ ظَهْرَ نَاقَتِهِ

كَانَ الأمرَاءُ وَالخلفَاءُ فِى صِدرِ الإسلامِ مُتواضِعينَ للهِ تَعَالى ذَاتَ يَوْمٍ، أَرْسَلَ الْخَلِيفَةُ الْعَبَّاسِيُّ هَارُونُ الرَّشِيدُ إِلَى الْعَالِمِ الْجَلِيلِ أَبِي مُعَاوِيَةِ الضَّرِيرِ، يَدْعُوهُ إِلَى الطَّعَامِ، وَكَانَ أَبُو مُعَاوِيَة كَفِيفَ الْبَصَرِ فَذَهَبَ أَبُو مُعَاوِيَة، وَتَنَاوَلَ الطَّعَامَ، ثُمَّ قَامَ لِيَغْسِلَ يَدَيْهِ، فَصَبَّ رَجُلٌ الْمَاءَ لَهُ فَلَمَا اِنْتَهَى مِنْ غَسْلِ يَدَيْهِ قَالَ الْخَلِيفَةُ: يَا أَبَا مُعَاوِيَة، أَتَدْرِي مَنْ صَبَّ الْمَاءَ عَلَى يَدَيْكَ؟ فَقَالَ أَبُو مُعَاوِيَة: لاَ، يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَقَالَ هَارُونُ الرَّشِيدُ: أَنَا فَقَالَ أَبُو مُعَاوِية: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَنْتَ تَفْعَلُ هَذَا إِجْلاَلاً لِلْعِلْمِ؟ قَالَ: نَعَمْ.

كَانَ سَلْمَانُ الْفَارِسِيُّ رَضِيَ اللهُ عَنْهُ أَمِيرًا عَلَى الْمَدَائِنِ، وَذَاتَ يَوْمٍ، جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الشَّامِ إِلَى الْمَدَائِنِ، وَمَعَهُ حِمْلُ تِبْنٍ، فَبَحَثَ عَنْ شَخْصٍ يَحْمِلُ هذَا التِّبْنَ، فَلَمْ يُشَاهِدْ سِوَى سَلْمَانَ، فَظَنَّ أَنَّهُ حَمَّالٌ، فَنَادَى عَلَيْهِ، وَقَالَ لَهُ: اِحْمِلْ فَحَمَلَ سَلْمَانُ - رَضِيَ اللهُ عَنْهُ - التِّبْنَ، وَسَارَ بِهِ إِلَى مَنْزِلِ الرَّجُلِ وَفِي الطَّرِيقِ، شَاهَدَ النَّاسُ سَلْمَانَ - رَضِيَ اللهُ عَنْهُ - يَحْمِلُ التِّبْنَ لِهَذَا الرَّجُلِ، فَقَالُوا لَهُ: هَذَا الأَمِيرُ فَقَالَ الرَّجُلُ مُعْتَذِرًا لِسَلْمَانَ - رَضِيَ اللهُ عَنْهُ -: لَمْ أَعْرِفْكَ، وَأَرَادَ أَنْ يَحْمِلَ هُوَ التِّبْنَ فَقَالَ سَلْمَانُ: لاَ، حَتَّى أَبْلُغَ مَنْزِلَكَ.

.أن سليمان عليه السلام مر على واد النمل، وفي نظرة التواضع إلى الأرض أبصر نملة، فأشخص النظر صوابها، وأصاخ السمع إليها، وبما علم من منطق الطير والحيوان حاول تفهم أمرها. لقد علم أنها تتخوف من بطش أقدام الجنود في ركب سليمان، لقد سمعها وفهم قولها :”قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَايَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ” (النمل: 18) . نعم إنها كائن صغير في مملكة ضخمة عظيمة، تسعى كأخواتها للرزق وتنصح لهم أن يفسحوا الطريق أمام ركب الملك العادل، حتى لا تقع مظلمة غير مقصودة من أحد منهم، قال القرطبي ـ رحمه الله ـ : التفاتة مؤمن : أي من عدل سليمان وفضله وفضل جنده لا يحطمون نملة، فما فوقها إلا بألا يشعروا

யாரையும் எதையும் சபிக்கக் கூடாது.

-٥"أن يجتنب لعن أي شيء من الخلق" ، وإيذاء ذرة فما فوقها ؛ فذلك من أخلاق الأبرار والصديقين ، لأن ثمرة ذلك حفظه من مصارع الهلاك ، والسلامة ، ويورث رحمة العباد ، مع ما يهبه الله من رفيع الدرجات .

-6-  أن يجتنب الدعاء على أحد" ، وإن ظلمه فلا يقطعه بلسانه ، ولا يقابله بقول أو فعل ؛ فإن فعل ذلك وجعله من جملة آدابه ارتفع في عين الله ، ونال محبة الخلق جميعا .

யாரையும் சபிக்கக்கூடாது என்ற உபதேசத்தில் இருந்து ஒரு படிப்பினையான சம்பவம்

அல்லாமா துல்பிகார் சாஹிப் ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் ஒரு சம்பவத்தை எழுதுகிறார்கள், முற்காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை  இருந்தது அப்பெண் அக்குழந்தையை தூங்க வைக்க மிகவும் கஷ்டப்படுவாள் அவ்வளவு எளிதாக அவன் தூங்க மாட்டான் ஒரு தடவை அவளுக்கு அடுப்பில் அதிகமான வேலை இருந்த து. ஆனால் மகன் எந்த வேலையையும் செய்ய விடாமல் இடுப்பிலயே தூக்கி வைக்கும்படி அடம் பிடித்தான். அந்தப் பெண் எப்படியோ பிள்ளைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம் என்று வயிறு நிறையும் அளவுக்குப் பால் தந்தாள், அவனும் தூங்கும் நிலைக்கு வந்தவுடன் அவனைப் படுக்க வைத்து விட்டு மறுபடியும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும்போது மறுபடியும் அவன் விழித்துக் கொண்டான். அப்போது அப்பெண் சங்கடப்பட்டு ஒரு வார்த்தையைச் சொன்னாள் நீ தூங்கினாயே ஒரேயடியாக தூங்கி இருக்க வேண்டாமா அதாவது இறந்திருக்க வேண்டாமா என்று கருத்தில் அவ்வாறு  கூறி விட்டாள். அல்லாஹ் அதை அப்படியே அங்கீகரித்தான். ஆனால் உடனே எதுவும் நடைபெறவில்லை. அவள் தன் மகனை நன்கு வளர்த்தாள். படிக்க வைத்தாள். அவனும் எல்லா படிப்புகளையும் படித்து நன்கு முன்னேறி பல பட்டங்களைப் பெற்றான். சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கினான். மற்றவர்கள் எல்லோரும்  இப்படித்தான் பிள்ளையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஊரே மெச்சும் அளவுக்கு அவன் உயர்ந்தான். கடைசியில் ஒரு பெரிய இடத்தில் அவனுக்குப் பெண் பேசி திருமணமும் நிச்சயமானது.  அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது அவன் வீட்டில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக ஒரு  ஸ்டூலில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழ, சற்று நேரத்தில் அவன் மூச்சும் அடங்கியது. வாழைப்பழத்தை அது காயாக இருக்கும்போது அறுக்காமல் அது கனிந்த பின்பு அறுப்பது போல அல்லாஹ் இதை நிகழ்த்தினான். இச்சம்பவத்தால் அவனின் தாய் பைத்தியமாகி விட்டாள். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊரின் இறைநேசர் ஒருவரின் கனவில் அந்த த் தாய்  தன் பிள்ளையை திட்டிய காட்சி கனவாக காட்டப்பட்டு இதனால் தான் அவன் இறந்தான் என்பதும் கூறப்பட்டது. தாயின் சாபம் என்பது பிள்ளை விஷயத்தில் உடனே பலிக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

.விளையாட்டாகக் கூட பொய் பேச வேண்டாம்
٢-"أن يجتنب المتعلم الكذب هازلا أو جادا" ؛ فإذا اعتاد ذلك شرح الله صدره ، وصفا علمه ، وصار حاله كله صدق و ظهر أثر ذلك عليه .

(عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ (بخاري)

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى صَلَاةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ مَنْ رَأَى مِنْكُمْ اللَّيْلَةَ رُؤْيَا قَالَ فَإِنْ رَأَى أَحَدٌ قَصَّهَا فَيَقُولُ مَا شَاءَ اللَّهُ فَسَأَلَنَا يَوْمًا فَقَالَ هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ رُؤْيَا قُلْنَا لَا قَالَ لَكِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخَذَا بِيَدِي فَأَخْرَجَانِي إِلَى الْأَرْضِ الْمُقَدَّسَةِ فَإِذَا رَجُلٌ جَالِسٌ وَرَجُلٌ قَائِمٌ بِيَدِهِ كَلُّوبٌ مِنْ حَدِيدٍ قَالَ بَعْضُ أَصْحَابِنَا عَنْ مُوسَى إِنَّهُ يُدْخِلُ ذَلِكَ الْكَلُّوبَ فِي شِدْقِهِ حَتَّى يَبْلُغَ قَفَاهُ ثُمَّ يَفْعَلُ بِشِدْقِهِ الْآخَرِ مِثْلَ ذَلِكَ وَيَلْتَئِمُ شِدْقُهُ هَذَا فَيَعُودُ فَيَصْنَعُ مِثْلَهُ قُلْتُ مَا هَذَا.... أَمَّا الَّذِي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ فَكَذَّابٌ يُحَدِّثُ بِالْكَذْبَةِ فَتُحْمَلُ عَنْهُ حَتَّى تَبْلُغَ الْآفَاقَ فَيُصْنَعُ بِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ (بخاري

 

 நபி ஸல் அவர்கள் சில சமயங்களில் தொழுது முடித்தவுடன் எங்களை நோக்கி அமர்ந்து உங்களில் யாரேனும் கனவு கண்டீர்களா என்று கேட்டு விட்டு, யாரேனும் தாங்கள் கண்டதாக கூறினால் அதற்கு விளக்கம் கூறுவார்கள். ஒருநாள் வழக்கம் போல் அவ்வாறு கேட்டபோது யாரும் எதுவும் கூறவில்லை. பிறகு நபி ஸல் அவர்கள் நான் கனவு கண்டேன். என்னை இருவர் என் கையைப் பிடித்துக் கொண்டு பரிசுத்தமாக்கப்பட்ட பூமிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். மற்றொருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் இரும்பாலான கூர்மையான ஒரு கொக்கி இருந்தது. அதைக் கொண்டு அங்கு உட்கார்ந்திருப்பவரின் வாயில் சொருக, அது அவருடைய வாயின் ஒரு பகுதி வழியாகச் சென்று வெளியே வருகிறது. (வாயெல்லாம் இரத்தமாக ஆகி விடுகிறது.) பிறகு வாயின் மற்றொரு பகுதி வழியாக கொக்கியை சொருகி எடுக்கிறார். இதற்குள் முன்பு சொருகி எடுத்த அந்த இடம் சரியாகி விடுகிறது. மீண்டும் அந்த இடத்திலேயே மறுபடியும் அவ்வாறு செய்யப்படுகிறது. இவர் யார் ஏன் இவருக்கு இந்த வேதனை என்று நான் கேட்க, இவர் உலகில் இருக்கும்போது ஒரு பொய்யான செய்தியைப் பரப்புவார். அது உலகம் முழுக்கப் பரவும். அதற்குத் தான் இந்த தண்டனை என்று கூறப்பட்டது.

இன்று வலைதளங்கள் மூலமாக பொய்யான செய்திகளைப் பரப்புவோர் மற்றும் முஸ்லிம்களைப் பொய்யான வரலாறுகளை எழுதுவோர் ஆகியோருக்கு இது பொருந்தும்

3.வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.

٣-"أن يفي بما يعد ، وأن يعمل على ترك الوعد أصلا "؛ لأن ذلك أضمن له من الوقوع في الحلف والكذب ؛ فإذا فعل ذلك ، فتح له باب السخاء ، ودرجة الحياء ، وأعطي مودة في الصادقين .
முடிந்த வரை யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாக்குறுதி தராமலும் அந்தக் காரியத்தை நிறைவேற்றலாம். ஏனென்றால் ஒரு வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை வரும்போது தான் அது பொய் சொல்லும் சத்தியம் செய்தல் ஆகியவை ஏற்படும். இதில் பேணுதலைக் கடை பிடித்தால் தாராள மனமும், வெட்க உணர்வும், நல்லோர்களின் சகவாசமும் ஏற்படும்.

வாக்குறுதியை சரியாக நிறைவேற்றுபவர் வாக்குறுதி தந்தால் தவறில்லை

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا (54 مريم

أَنَّ إِسْمَاعِيل النَّبِيّ عَلَيْهِ السَّلَام وَعَدَ رَجُلًا مَكَانًا أَنْ يَأْتِيه فِيهِ فَجَاءَ وَنَسِيَ الرَّجُل فَظَلَّ بِهِ إِسْمَاعِيل وَبَاتَ حَتَّى جَاءَ الرَّجُل مِنْ الْغَد فَقَالَ مَا بَرِحْت مِنْ هَاهُنَا ؟ قَالَ لَا قَالَ إِنِّي نَسِيت قَالَ لَمْ أَكُنْ لِأَبْرَح حَتَّى تَأْتِينِي فَلِذَلِكَ " كَانَ صَادِق الْوَعْد " (تفسير ابن كثير

நபி இஸ்மாயீல் அலை ஒருவரை ஓரிடத்தில் சந்திப்பதற்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். அவரும் அந்த இடத்திற்கு வருவதாக வாக்குறுதி அளித்தார். நபி இஸ்மாயீல் அலை சரியாக அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். ஆனால் அவர் மறந்து விட்டார். நபி இஸ்மாயீல் அலை வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அடுத்த நாள் வரை அங்கேயே இருந்தார்கள். தற்காலிக கூடாரம் அமைத்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அடுத்த நாள் அவர் எதார்த்தமாக அங்கு வந்தார். நபி இஸ்மாயீல் அலை அங்கு இருப்பதைப் பார்த்த பின் தான் சொன்னது ஞாபகம் வந்தது. நீங்கள் இங்கேயே இருந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.                    

 கடனில் சிக்கியவர் வாக்குறுதிக்கு மாறு செய்யும் சூழ்நிலை அதிகம் ஏற்படும்.

عَنْ عَائِشَةَ رض ... فَقَالَ لَهُ  قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ فَقَالَ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ  وَوَعَدَ فَأَخْلَفَ(بخاري832

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" புஹாரி,எண் 2397 

     4.எந்த முஸ்லிமையும் காஃபிர் என்று சொல்லக்கூடாது
أن لا يشهد على أحد من أهل القبلة بشرك" ، أو كفر ، أو نفاق ، فذلك أقرب للرحمة ، وأقرب لأخلاق السنة ، وأبعد من ادعاء العلم ، وأقرب إلى رضا الله ، وهو باب شريف يورث العبد رحمة الخلق أجمعين .

ஷிர்க் செய்யாத ஒருவரை முஷ்ரிக் என்று கூறுவது அவரைக் கொல்வதற்கு நிகரான பாவத்தை உண்டாக்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا (بخاري) عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ (بخاري) 

ஒரு முஸ்லிமை முனாஃபிக் என்று சொன்னதையே நபி ஸல் அவர்கள் இது குழப்பவாதியின் செயல் என்றார்கள்

عن مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ الصَّلَاةَ فَقَرَأَ بِهِمْ الْبَقَرَةَ قَالَ فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلَاةً خَفِيفَةً فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا وَنَسْقِي بِنَوَاضِحِنَا وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا الْبَارِحَةَ فَقَرَأَ الْبَقَرَةَ فَتَجَوَّزْتُ فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ثَلَاثًا اقْرَأْ وَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَنَحْوَهَا (بخاري) باب مَنْ كَفَّرَ أَخَاهُ بِغَيْرِ تَأْوِيلٍ فَهْوَ كَمَا قَالَ-الأدب

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு - நபி (ஸல்) அவர்களுடன் தொழுத- அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) அல்பகரா' எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது(விட்டுத் தமது பணியைக் கவனிக்கச் சென்று) விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்) என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) அல்பகரா'வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள்......   புஹாரி 6106

உன் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று ஒரு முஸ்லிமை நோக்கி கூறியவரின் கதி....

عَنْ أَبي هُرَيْرَةَ رضي الله عنه سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَانَ رَجُلَانِ فِي بَنِي إِسْرَائِيلَ مُتَوَاخِيَيْنِ فَكَانَ أَحَدُهُمَا يُذْنِبُ وَالْآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ فَكَانَ لَا يَزَالُ الْمُجْتَهِدُ يَرَى الْآخَرَ عَلَى الذَّنْبِ فَيَقُولُ أَقْصِرْ فَوَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ فَقَالَ لَهُ أَقْصِرْ فَقَالَ خَلِّنِي وَرَبِّي أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا فَقَالَ وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ فَقَبَضَ أَرْوَاحَهُمَا فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِينَ فَقَالَ لِهَذَا الْمُجْتَهِدِ أَكُنْتَ بِي عَالِمًا أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا وَقَالَ لِلْمُذْنِبِ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ بِرَحْمَتِي وَقَالَ لِلْآخَرِ اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ قَالَ أَبُو هُرَيْرَةَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ (ابوداود) بَاب فِي النَّهْيِ عَنْ الْبَغْيِ-كِتَاب الْأَدَبِ

பனீ இஸ்ராயீல் சமூகத்தில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். ஒருவர் வணக்கசாலி. மற்றொருவர் பாவி. அவரை பாவம் செய்யும் நிலையில் இந்த வணக்கசாலி பார்க்கும்போதல்லாம் உன்பாவத்தைக் குறைத்துக் கொள் என புத்திமதி கூறுவார். ஒருமுறை ஒரு பாவத்தைச் செய்பவராக அவரைக்கண்டு மனம் பொறுக்க முடியாமல் உன்னை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான் என சொல்லிவிட்டார். இதன்பின்பு அவ்விருவரும் இறந்த பின்பு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். இந்த வணக்கசாலியிடம் அல்லாஹ் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று நீ எப்படி கூற முடியும் என எச்சரித்த பின்பு அந்தப் பாவியிடம் உன்னை நான் மன்னித்து விட்டேன். என் அருளால் நீ சுவனம் செல் என்பான். ஆனால் அந்த வணக்கசாலி அல்லாஹ்வின் சிறப்புத் தன்மையாகிய மன்னித்தல் என்ற சிஃபத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நரகத்திற்குக் கொண்டு செல்லும்படி மலக்குகளிடம் கூறுவான். இதை அறிவிக்கும் அபூஹுரைரா ரழி அவர்கள் கூறும்போது இவரின் ஒரு வார்த்தை அவருடைய இம்மை மறுமை அனைத்தயும் வீணாக்கி விட்டது என்றார்கள். நூல் அபூதாவூத்  

.

 

 

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...