வியாழன், 29 பிப்ரவரி, 2024

ரமழானுக்காகவும் தேர்வுக்காகவும் நேரங்களை திட்டமிடுதல்

ஒரு புறம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகளும் தொடங்குகிறது. அதற்கடுத்து ரமழானும் சில நாட்களில் துவங்கவுள்ளது.இந்த சூழ்நிலையில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களும் சரி ரமழானுக்குத் தயாராகும் முஃமின்களும் நம்முடைய நேரங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தலைப்பு எடுக்கப் பட்டுள்ளது.

وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِير[فاطر: 36، 37].

கருத்து- நேரங்களை வீணாக்கியவர்கள் நரகத்திற்குச் சென்ற பின்பு எங்களை சில காலங்கள் மீண்டும் உலகுக்கு அனுப்பினால் எங்களின் நேரங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வோமே என்று கெஞ்சுவார்கள்.  

நேரங்கள் விலை மதிக்க முடியாதவை என்பது பற்றி இமாம்களின் கூற்று

عن الحسن البصري قوله: "ابن آدم، أنت أيام كلما ذهب يوم ذهب بعضك"[1]. تاريخ الإسلام للذهبي- وجاء عن ابن عباس قوله: "ما من يوم طلعت شمسه إلا يقول: من استطاع أن يعمل فيَّ خيرًا فليعمله، فإني غير مكرر عليكم أبدًا"[2].أورده السيوطي في جمع الجوامع

ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் கூறினார்கள். உன்னுடைய நாட்கள் கழிந்து கொண்டே செல்வது உன்னுடைய இளமை குறைந்து கொண்டே வருவதற்குச் சமம். வாலிபத் துடிப்பு இருக்கும்போதே சில செயல்களைச் செய்து முடித்து விட வேண்டும் என்று நீ நினைப்பது போல நேரங்களையும் அவ்வாறு கருத வேண்டும்.

ஒவ்வொரு பகலும் அது தொடங்கும்போது மனிதனை நோக்கி மனிதா நான் போனால் திரும்ப வர மாட்டேன் எனவே என்னை நீ நன்றாகப் பயன்படுத்திக் கொள் என்று கூறும்.

قال عمر بن الخطاب رضي الله عنه: "من القوة ألاَّ تؤخر عمل اليوم إلى الغد"[7].سوانح وتأملات في قيمة الزمن لخلدون الأحدب

இன்றைக்கான வேலையை நாளைக்கு தள்ளிப் போடாமல் இன்றே செய்வது மனிதனின் தனிப்பட்ட திறமையாக கருதப்படும்.

குறிப்பாக மாணவர்கள் தங்களின் நேரங்களை தேர்வுக்கு முதல் நாள் படித்துக் கொள்ளலாம் என்று கருதாமல் அதற்கு பல நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும்.அதுபோல் ரமழானில் செய்ய வேண்டிய சில வேலைகளை இப்போதே செய்து வைக்க முடியும் என்றிருந்தால் அவ்வாறு செய்து முடித்து வைத்து ரமழானில் அந்த நேரங்களை நல்ல அமலுக்குப் பயன்படுத்த வேண்டும்

நேரமில்லாத சூழ்நிலை வரும் முன்பே இருக்கும் நேரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது

قال  رسول الله صلي الله عليه وسلم  اغتنم  خمسا قبل  خمس...  شبابك  قبل هرمك   وصحتك قبل سقمك  وغناك  قبل فقرك  وفراغك  .قبل  شغلك وحياتك  قبل  موتك

அல்லாஹ் ஆகு என்றால் உடனே அனைத்தும் ஆகி விடும். எனினும் திட்டமிட்டு, முன்கூட்டியே நேரங்களை பங்கு வைத்து செயலாற்றுவதை கற்றுத் தருவதற்காக அல்லாஹ் வானம் பூமியை 6 நாட்களில் படைத்தான்.

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ (3)يونس

நிச்சயமாக உங்களின் இறைவன் அல்லாஹ். அவன் எப்படிப்பட்டவன் என்றால் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான்.-அல்குர்ஆன் சூரா யூனுஸ் வசனம் 3

عن سعيد بن جبير رضي الله عنهما . إنما خلقها في ستة أيام وهو يقدر على أن يخلقها في لحظة ، تعليماً لخلقه الرفق والتثبت (تفسير الرازي

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ وَفِى آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ ».(مسلم)

இந்த வசனத்தின் விளக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அல்லாஹ் தஆலா பூமியை சனிக்கிழமையில் படைத்தான். மலைகளை ஞாயிற்றுக்கிழமையில் படைத்தான். மரங்களை திங்கட் கிழமையில் படைத்தான் மக்ரூஹானவைகளை செவ்வாய்க்கிழமையில் படைத்தான். ஒளியை புதன் கிழமையிலும் பூமியில் மற்ற உயிரினங்களை வியாழக்கிழமையிலும் இறுதியாக மனிதனை வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ் படைத்தான்.  இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அல்லாஹ் ஆகு என்றாலே உடனே எல்லாம் ஆகிவிடும் அவ்வாறு இருக்க எதற்காக அல்லாஹ் ஆறு நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டான் என்றால் நாம் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது முன்கூட்டியே  திட்டமிட்டு செயலாற்றுவதை நமக்குக் கற்றுத் தருவதற்காக அல்லாஹ் அப்படி நடந்து கொண்டதாக விளக்கங்கள் உள்ளன.

எறும்புகளின் முன்னேற்பாடு -  மாணவர்களின் கவனத்திற்கு....

திட்டமிட்டு செயலாற்றுவதில் மனிதர்களுக்கு உதாரணமாக எறும்புகள் உள்ளன. எறும்புகள் கோடை காலத்திலேயே மழைக்காலத்திற்குத் தேவையான தானியங்களை தன்னுடைய புற்று எனும் மாளிகைக்குள் புகுத்தி சேமித்து வைக்கின்றன. அவை முளைவிட்டு வளரும் போது கிளை விட்டு வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவற்றின் அடிவேர்களை அறுத்து விடுகின்றன. அவ்வாறு அறுக்காமல் விட்டு விட்டால் அது அழுகிப்போகும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கின்றன. தானியங்கள் மாறி காலத்தில் ஈரமாக மாறிவிடும் போது அவற்றை வாரி வெளியே கொண்டு வந்து சூரிய ஒளியில் காயவைத்து அவை காய்ந்தவுடன் மீண்டும் புற்றுக்கே கொண்டு செல்கின்றன.

  முயற்சி வெற்றியைத் தரும்

   நஜ்மு சூராவின்40 வது வசனத்தில் அல்லாஹ் கூறும்போது நிச்சயமாக மனிதனின் முயற்சி அவனுக்கு காண்பிக்கப்படும். அதாவது முயற்சியின் பலன் அவனுக்கு காண்பிக்கப்படும். இதன் அடிப்படையில் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்காக திட்டம் தீட்டி முன்னேற்பாடுகள் செய்து அந்த வேலையைச் செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டும்

[ கல்வி முன்னேற்றம் என்பதுவெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான்பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூகபாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும் ]கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும்பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்டசமுகங்களை விட முஸ்லிம் சமுதாயம் பின் தங்கி உள்ளது.தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லிம்சமுதாயம் பின்தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் கல்வியை பற்றிய போதியவிழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமுகம் கடைசி நிலையில் உள்ளது                                

இந்தியாவைப்பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும், கையெழுத்திடவும்தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்தகுறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களானஉத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகியமாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது.

2006-ஆம்ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலைதெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது.முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%,- +2 வரை படித்தவர்கள் 7.8%,

டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, --பட்டப்படிப்பு படித்தவர்கள் 1.7% பேர்மட்டுமே,- 38.4% பேர் வறுமையில்வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படைவசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள். தமிழக உள்துறையில்உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.

மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர்.சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கர்ப்பிணி பெண்களுக்கு தவறான மருந்தைகொடுத்து எதிர்கால முஸ்லிம்சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும்.மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளைகொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனப்படுத்த வேண்டும் என்று ஒரு இரகசியசுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது . இது சில இடங்களில் நடந்து கொண்டும்இருக்கின்றது. ஆகவே அதிகமான முஸ்லிம்மருத்துவர்களை உருவாக்குவது மிகவும்அவசியமானது.

கல்வியில் கிறிஸ்தவர்கள் காட்டும் அக்கறை

உலகம் முழுவதும்  வாழும் சிறுபான்மை இனத்தவரின் நிலையை ஆய்வு செய்த திருமதி ஸ்மித் என்ற சமூகவியல் விஞ்ஞானியை கொச்சியில் பத்திரிக்கை நிருபர் பேட்டி கண்ட போது இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரைப்பற்றி கூறியுள்ளார். கிறிஸ்தவர்களைப் பற்றி கூறும்போது கல்வி , பொருளாதார ரீதியாக அசைக்க முடியாத ஒரு அடித்தளத்தை அமைத்து சக்தி வாய்ந்த குழுக்களாக வளர்ந்து வரும் சமூகம். என்றும் முஸ்லிகளைப் பற்றி கூறும்போது பாரம்பரியமாக நிலை நின்று வந்த செல்வாக்கு, கலாச்சாரச் சுவடுகள் என அனைத்தையும் இழந்து அவைகளின் நஷ்டக் கணக்குகளை மட்டும் கைவசம் வைத்திருக்கும் பலவீனமான மக்கள். சமுதாய அக்கறை இல்லாத தலைமை தான் இதற்குக் காரணம் என்று கூறினார்

 

ரமழானுக்காக நம்முடைய நேரங்களை திட்டமிடுதல்

வருகிற ரமழானை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த ஒரு மாதத்தின் ஒவ்வொரு வினாடிகளும் நமக்குப் பொன்னானவை என விளங்கி ஒவ்வொரு அமலுக்கும் ஒரு நேரத்தை சரியான முறையில் ஒதுக்கி அமல்களில் ஈடுபட்டால் ரமழானின் பலன்களை நிறைய அடையலாம். உதாரணமாக ரமழான் என்பது துஆக்கள் அதிகம் ஏற்கப்படும் மாதம் என்பதால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் தஹஜ்ஜுதுக்குப் பிறகும் பத்து நிமிடமேனும் துஆ செய்ய வேண்டும் என்று நேரம் நிர்ணயித்தால் ரமழான் முழுக்க முப்பது மணி நேரம் துஆ செய்தவர்களாக நாம் ஆகி விடுவோம். இது மாதிரி ஒவ்வொரு அமலுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயேஆக்கப்படும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)أي اشتغالا من غير منفعة ولم أسد فقرك أي لا من شغلك ولا من غيره وحاصله أنك تتعب نفسك بكثرة التردد في طلب المال ولا تنال إلا ما قدرت لك من المال في الأزل وتحرم عن غنى القلب لترك عبادة الرب(مرقاة)

அல்லாஹ் கூறுகிறான்- ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நேரத்தை (நிர்ணயம் செய்து)ஒதுக்கு! அவ்வாறு செய்தால் உனக்குள் (பணக்காரத்தனத்தை உருவாக்குவேன்) பிறரிடம் தேவையாகாத நிலையை ஏற்படுத்துவேன். உன் வறுமையைப் போக்குவேன். அவ்வாறு நீ நேரம் ஒதுக்கா விட்டால் அல்லாஹ்வை வணங்க நேரமில்லை என்று கூறி விட்டால் உன் கைகள் நிறைய வேலைப் பழுவை ஏற்படுத்தி நேரமில்லாமல் ஆக்கி விடுவேன். உன் வறுமையையும் போக்க மாட்டேன்.

விளக்கம்- இப்படிப்பட்டவரின் நேரங்கள் தேவையில்லாமல் வீணாகும். குறுகிய நேரத்தில் முடிய வேண்டிய வேலையை அல்லாஹ்வே நீளமாக்கி விடுவான். இறைவனை வணங்க நேரம் ஒதுக்கி இலகுவான முறையில் அடைய வேண்டிய வருமானத்தை இவன் மிகவும் சிரமப்பட்டு அடைவான். நிறைய சம்பாதித்தாலும் மனதளவில்  ஏழையாகவே இருப்பான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ (ابن ماجة

பொருள் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. மன நிறைவு உள்ளவனே பணக்காரன்.

நேரங்களையும் திட்டமிட வேண்டும். வேலைகளையும் திட்டமிட வேண்டும்

தர்மம் செய்வதிலும் திட்டமிட்டு, பங்கு வைத்து செயலாற்றிய நல்ல மனிதருக்காக மழை பெய்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنْ الْأَرْضِ فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدْ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ الْمَاءَ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلَانٌ لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ تَسْأَلُنِي عَنْ اسْمِي فَقَالَ إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ لِاسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا قَالَ أَمَّا إِذْ قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ (مسلم

கருத்து-ஒரு மனிதர் வனாந்தரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேகத்துக்கு யாரோ இன்ன உத்தரவிடுவது போன்ற சப்தத்தைக் கேட்டார். இன்ன நபரின் தோட்டத்திற்குச் சென்று நீ மழையைப் பொழிவாயாக என அம்மேகத்திற்கு உத்தரவிடப்பட்டவுடன் அந்த மேகம் நகரந்து செல்ல ஆரம்பித்தது. இவர் ஆச்சரியப்பட்டு அந்த மேகத்தைப் பின் தொடர்ந்தார். குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அந்த மேகம் ஒரு பாறை மீது மழை பொழிந்தது. அங்குள்ள ஒரு நீர்த்தேக்கம் அதை தேக்கி வைத்துக் கொள்ள அங்கு ஒரு முதியவர் அந்த தண்ணீரை தன் தோட்டத்திற்கு பல பாத்திகளாகப் பிரித்து நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் அருகில் இவர் சென்று உங்களின் பெயர் என்ன என்று கேட்க, அவர் தன் பெயரைக் கூறியவுடன் இவருக்கு ஆச்சரியம். இந்தப் பெயரைச் சொல்லித் தான் மேகத்த்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த முதியவர் எதற்காக என் பெயரை விசாரிக்கிறீர்கள் என்றவுடன் இவர் விபரத்தைக் கூறியதுடன் உங்களுக்கென்று தனியாக அல்லாஹ் மழையை இறக்கம் அளவுக்கு நீங்கள் என்ன நல்ல அமல் செய்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் நான் எனது விளைச்சலை மூன்றாக பங்கு வைத்து ஒன்றை தர்ம ம் செய்வேன். மற்றொன்றின் மூலம் நானும் எனது குடும்பமும் உண்ணுவோம். மற்றொரு பங்கை அறுவடை செய்யாமல் வயலிலேயே விட்டு வைத்து விடுவேன் என அவர் கூறினார்.

 

وربط الإسلام بين نتائج العبادات والأعمال الصالحات وبين الأوقات، حيث يقول النبي صلى الله عليه وسلم: "لا تزول قدما عبد يوم القيامة حتى يُسأل عن عمره فيما أفناه..."[6]. ودعا الإسلام إلى استغلال المتاح منه الآن قبل فواته إيذانًا بأهميته وقيمته، يقول النبي صلى الله عليه وسلم: "اغتنم خمسًا قبل خمس: شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل مماتك".

நேரங்களை வீணாக்கியதைப் பற்றிக் கேட்கப்படாமல் மனிதனின் கால்கள் எங்கும் நகராது

والعمر محدود، ونهايته لا يعلمها إلا الله عز وجل، إذ هو هذه المساحة الزمنية التي تبدأ بمولد الإنسان وتنتهي بوفاته، ولا يعلم هذه النهاية إلا الله عز وجل، قال تعالى: {إِنَّ السَّاعَةَ آَتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى[طه: 15].

நேரங்கள் விலை மதிக்க முடியாதவை என்பதால் தான் அல்லாஹ் குர்ஆனில் நேரங்களின் மீது சத்தியம் செய்கிறான்

وللوقت في الإسلام منزلة رفيعة، ومكانة سامية تتلخص في إقسام الله عز وجل بالزمن في مختلف أطواره في كتابه العزيز؛ إشعارًا بقيمة الزمن، وتنبيهًا إلى أهميته؛ إذ أقسم -سبحانه- بالليل، والنهار، والفجر، والصبح، والشفق، والضحى، والعصر، فقال: {وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى[الليل:1، 2]، وقال أيضًا: {وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ * وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ[المدثر: 33، 34]، وقال أيضًا: {وَالْفَجْرِ * وَلَيَالٍ عَشْرٍ[الفجر: 1، 2].

وبيَّن النبي صلى الله عليه وسلم أن المستفيدين من الزمن قلة، وأن الكثير مفرط مغبون، فقال: "نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة، والفراغ"[4]. يقول الحافظ أبو الفرج بن الجوزي (ت 597هـ): "قد يكون الإنسان صحيحًا، ولا يكون متفرغًا يشغله بالمعاش، وقد يكون مستفنيًا ولا يكون صحيحًا، فإذا اجتمعا فغلب عليه الكسل عن الطاعة فهو المغبون، وتمام ذلك أن الدنيا مزرعة الآخرة، وفيها التجارة التي يظهر ربحها في الآخرة، فمن استعمل فراغه وصحته في طاعة الله فهو المغبوط، ومن استعملها في معصية الله فهو المغبون؛ لأن الفراغ يعقبه الشغل، والصحة يعقبها السقم، ولو لم يكن إلا الهرم لكفى"[5].

குர்ஆனுக்காக ரமழானில் அதிக நேரங்களை ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து ஜுஸ்வு என்று கணக்கு வைத்தாலும் ஐந்து தடவை குர்ஆனை முடிக்கலாம்.

 

உலகக் கல்வியும் வேண்டும்

வாழ்க்கைக்கு அவசியமான எல்லாக் கல்வியும் கற்க வேண்டியது தான். கடலில் பயணம் செய்பவனுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்

عن أبي رافعرضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقُّ الوَلَدِ على الوَالِدِ أنْ يَعَلِّمَهُ الكِتابَةَ والسِّباحَةَ والرِّمايَةَ وأنْ لا يَرْزُقَهُ إلاَّ طَيباً-عن ابن عمررض عن النبيصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَعَلِّمُوا أَبنَاءَكُمُ السِّبَاحَةَ1 والرَّمْيَوالمَرْأَةَ الْمِغْزَلَ2-عن بكر بن عبد الله بن الربيع الأنصاري عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَوَنِعْمَ لَهْوُ المُؤْمِنَةِ فِي بَيْتِهَا الْمِغْزَلُ وَأَذَا دَعَاكَ أَبوكَ فَأَجِبْ -عن سهل بن سعد عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَوَعَمَلُ الأَبْرَارِ مِنَ النِّسَاءِ الْمِغْزَلُ(الفتح الكبير)

ஒரு படகில் மூன்று அறிஞர்களும் பயணம் செய்த போது, படகோட்டியிடம் தங்கள் அறிவுத் திறனைக் காட்ட, ஏம்ப்பா உனக்கு கணிதம் தெரியுமா? என்று ஒரு அறிஞர் கேட்க, அதெல்லாம் தெரியாதுங்க என்றான் படகோட்டி. அச்சச்சோ, வாழ்நாளின் கால்வாசியை வீணாக்கி விட்டாயே ! என்றார் அந்த அறிஞர். அடுத்து இரண்டாமவர் ஏம்ப்பா உனக்கு வான சாஸ்திரம் தெரியுமா? எனக் கேட்க அதெல்லாம் தெரியாதுங்க என்றதும் அச்சச்சோ,உன் வாழ்வில் பாதி வீணாகி விட்டதே என வருந்தினார். அடுத்து மூன்றாமவர் ஏம்ப்பா உனக்கு அறிவியலாவது தெரியுமா? எனக்கேட்க அதெல்லாம் தெரியாதுங்க என்று சொன்னவுடன் அச்சச்சோ உன் வாழ்நாளில் முக்கால் வாசியை வீணாக்கி விட்டாயே! என்று சலித்துக் கொண்டார். திடீரென அவன் கேட்டான். ஏங்க உங்களில் யாருக்காவது நீச்சல் தெரியுமா என்று.   தெரியாதே என அம்மூவரும் அலட்சியமாக சொன்னதும் அச்சச்சோ.. உங்க எல்லோரின் முழு வாழ்க்கையும் வீணாகிப் போச்சே நாம் சுழலில் மாட்டிக் கொண்டோம் என்று சொல்லி தண்ணீரில் குதித்து காணாமல் போனான்

விலங்கியல் ()உயிரியலைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் குர்ஆன்

أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ (الغاشية17)وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ (5) وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ (6) وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ (7) وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ (8النحل)

குறிப்பு- அப்போதிருந்த வாகனங்களைப் பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும் பேசும் அல்லாஹ் இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் படைப்பேன் என்று கூறியிருப்பது  இப்போதுள்ள வாகனங்களையும், அதை பயன்படுத்தும் விதத்தை தேவைப்பட்டால் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஒரு வேளை அப்போதே அல்லாஹ் இன்னும் நான் விமானத்தை படைப்பேன். பேருந்தைப் படைப்பேன் என்று கூறியிருந்தால் அப்போதுள்ள மக்களால் அதை புரிந்திருக்க முடியாது.

விஞ்ஞானம் தெரிந்தால் குர்ஆனுடைய சில வசனங்களையும், சில ஹதீஸ்களையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ وَحَتَّى تُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَتُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ مِنْ بَعْدِهِ (ترمذي) بَاب مَا جَاءَ فِي كَلَامِ السِّبَاعِ- كِتَاب الْفِتَنِ

விளக்கம்- இந்த ஹதீஸில் கடைசி காலத்தில் மனிதனிடம் சாட்டையின் நுனி பேசும், செருப்பின் வார் பேசும் என்று கூறப்பட்டுள்ளது. சாட்டையின் நுனி போன்று மிக நுண்ணியதாக  இருக்கக் கூடிய மைக்ரோ கேமராவை ஒரு அறையில் பொருத்தி விட்டால் அங்கே நடக்கும் விஷயங்களை படம் பிடித்துக் காட்டுகிறது. செருப்பின் வார் என்பது பிளாஸ்டிக்கை குறிக்கும்.  பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் ஆடியோ, வீடியோ கேசட்டுகள் நம்மிடம் பேசுகின்றன. ஆக விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்வதால் மேற்படி ஹதீஸ்களை முழுமையாக விளங்க முடிகிறது

புவியியலைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டும் அல்-குர்ஆன்- புவியியல் பாடம் நடத்திய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ -وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ -وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ-وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ (20الغاشية

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَبَيْنَمَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ وَأَصْحَابُهُ إِذْ أَتَى عَلَيْهِمْ سَحَابٌ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَدْرُونَ مَا هَذَا فَقَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ هَذَا الْعَنَانُ هَذِهِ رَوَايَا الْأَرْضِ يَسُوقُهُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى إِلَى قَوْمٍ لَا يَشْكُرُونَهُ وَلَا يَدْعُونَهُ قَالَ هَلْ تَدْرُونَ مَا فَوْقَكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهَا الرَّقِيعُ سَقْفٌ مَحْفُوظٌ وَمَوْجٌ مَكْفُوفٌ ثُمَّ قَالَ هَلْ تَدْرُونَ كَمْ بَيْنَكُمْ وَبَيْنَهَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ بَيْنَكُمْ وَبَيْنَهَا مَسِيرَةُ خَمْسِ مِائَةِ سَنَةٍ ثُمَّ قَالَ هَلْ تَدْرُونَ مَا فَوْقَ ذَلِكَ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّ فَوْقَ ذَلِكَ سَمَاءَيْنِ مَا بَيْنَهُمَا مَسِيرَةُ خَمْسِ مِائَةِ سَنَةٍ حَتَّى عَدَّ سَبْعَ سَمَاوَاتٍ مَا بَيْنَ كُلِّ سَمَاءَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ ثُمَّ قَالَ هَلْ تَدْرُونَ مَا فَوْقَ ذَلِكَ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّ فَوْقَ ذَلِكَ الْعَرْشَ وَبَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ بُعْدُ مَا بَيْنَ السَّمَاءَيْنِ ثُمَّ قَالَ هَلْ تَدْرُونَ مَا الَّذِي تَحْتَكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهَا الْأَرْضُ ثُمَّ قَالَ هَلْ تَدْرُونَ مَا الَّذِي تَحْتَ ذَلِكَ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّ تَحْتَهَا أَرْضًا أُخْرَى بَيْنَهُمَا مَسِيرَةُ خَمْسِ مِائَةِ سَنَةٍ حَتَّى عَدَّ سَبْعَ أَرَضِينَ بَيْنَ كُلِّ أَرْضَيْنِ مَسِيرَةُ خَمْسِ مِائَةِ سَنَةٍ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ رَجُلًا بِحَبْلٍ إِلَى الْأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ3 ثُمَّ قَرَأَ{ هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ}(ترمذي- بَاب وَمِنْ سُورَةِ الْحَدِيدِ- كِتَاب تَفْسِيرِ الْقُرْآنِ

இவ்வாறு அனைத்து கல்விகளைப் பற்றியும் குர்ஆனில் உள்ளது. யாருக்கு எதில் ஆர்வம் உண்டோ அதைப் படித்து முன்னேறலாம்

விருப்பமில்லாத துறையில் பிள்ளைகளை கட்டாயப்படுத்தக்கூடாது

ஒரு பல்கழைக்கழக துணை வேந்தர் கூறியது. உங்கள் பையனுக்குள்ளே ஒரு டாக்டரோ, ஒரு எஞ்சினியரோ, ஒரு ஆசிரியரோ, ஒரு மெக்கானிக்கோ, ஒரு வக்கீலோ, ஒரு வியாபாரியோ ஒளிந்திருக்கிறார்கள். அவர்களை அவர்களாக உருவாக்குவதற்கு பதிலாக நீங்கள் வேறுவிதமாக திசை திருப்புகிறீர்கள்.தோற்றுப்போகிறீர்கள். மெக்கானிக்காக வர வேண்டியவனை நீங்கள் டாக்டராக உருவாக்க உங்கள் சக்தியை வீணடிக்கிறீர்கள்.அவன் இரண்டு பேராகவும் (டாக்டர், மெக்கானிக்) வர முடியாமல் ஆகி விடுகிறான். ஆகவே அவனை ஆராயுங்கள். அவன் விருப்பத்தில் கவனம் வையுங்கள். அவனுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள். உமர் ரழி அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன் இஸ்லாமியர்களை வதைப்பதில் இன்பம் கண்டவர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் அந்த முரட்டுத்தனத்தை விடச்சொல்லி நபி ஸல் வலியுறுத்தவில்லை. மாறாக அந்த முரட்டுத்தனத்தை இஸ்லாமிய நெறிகளை பாதுகாப்பதிலும், இஸ்லாமிய எதிரிகளை வீழ்த்துவதிலும் திருப்பினார்கள்

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...