வியாழன், 29 ஜூன், 2023

பொதுச் சிவில் சட்டம் அனைவருக்கும் எதிரானது

 


30-06-2023

துல்ஹஜ்

 

بسم الله الرحمن الرحيم 

    

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 


எத்தனை மதங்கள் உலகில் தோன்றினாலும் இஸ்லாம்தான் மிகச் சிறந்த  மார்க்கம். அதுபோல் உலகில்  ஒவ்வொரு  மதங்களும் ஒவ்வொரு நாடுகளும் தனக்கென சில சட்ட விதிகளை உருவாக்கி வைத்த போதிலும் இஸ்லாம் வகுத்துக் கொடுத்த சட்டங்கள் தான் அறிவுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் நீதம் நிறைந்ததாக இருக்கும். இருந்தாலும் நாம் வாழுகிற இந்திய நாட்டில் பல மதத்தவர்களும் கலந்து இருப்பதால் பல்வேறு விஷயங்களில் இந்திய சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழுகிறோம். கொலை, திருட்டு, விபச்சாரம் போன்ற விஷயங்களில் இஸ்லாமிய சட்டங்களை செயல் படுத்த இங்கே நமக்கு அனுமதி இல்லை. ஆனால் நிகாஹ், குலா, வாரிசுரிமை போன்ற சில விஷயங்களில் மட்டும் நம்முடைய சட்டத்தை செயல் படுத்துவதற்கு நமக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தான் முஸ்லிம் தனியார் சட்டம் என்று கூறுவார்கள். இச் சலுகை நமக்கு மட்டுமல்ல. இந்த நாட்டில் வாழும் அனைத்து மதத்தவருக்கும் அந்த உரிமை உண்டு. உதாரணம்- நிர்வாணமாக ஒருவர் தெருவில் நடந்தால் அது இந்திய சட்டத்தின் அடிப்படையில் அது குற்றம் தான். ஆனால் சாமியார்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. காரணம் அது அவர்களின் மத உரிமை.அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வந்தால் எந்த சாமியாரும் தெருவில் நிர்வாணமாக நடக்க முடியாது.                                                        

          அக்கா மகளைத் திருமணம் செய்யலாம் என இந்து தனியார் சட்டம் சொல்லும். ஆனால் இது முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. அதேபோல சித்தியின் மகளை திருமணம் செய்யக் கூடாது என்பதாக இந்து தனியார் சட்டம் சொல்லும். ஆனால் இந்த சட்டமும் முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. இப்படியாக மேற்காணும் இரண்டு விஷயங்களில் மட்டும் ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருக்கலாம். இப்படி இருக்கும்போது பொதுச் சிவில் சட்டம் கொண்டு வந்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாம் பல்வேறு மதத்தவரும் பாதிக்கப்படுவார்கள்

நமது முன்னோர்களான இஸ்லாமிய ஆட்சியாளர்கள் யாரும் தனது கட்டுப்பாட்டில் இருந்த சிறுபான்மை மக்கள் மீது பொது சிவில் சட்டத்தை அதாவது இஸ்லாமிய சட்டத்தைத்  திணிக்கவில்லை.

  இந்துக்கள் மாபெரும் தலைவராக கருதும் மராட்டிய மன்னன் (சத்ரபதி) சிவாஜியை அவுரங்கசீப் சிறையில் அடைத்ததாகவும், மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்று நூல்களில் திரித்து எழுதுவார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் சிவாஜி சிறை பிடிக்கப்பட்டாரே தவிர, மற்றபடி சிறையில் அவர் இருக்கும்போது கவுரமாக நடத்தப்பட்டார். மேலும் அவுரங்கசீப் ரஹ் அவர்கள் சிவாஜியின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு முறை சிவாஜி மதுராவில் இருக்கும் கோவிலுக்கு தாம் இரண்டு குதிரைகளை தானமாக வழங்க எண்ணியிருப்பதாகவும் அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று அவுரங்கசீப் அவர்களிடம் கோரிக்கை வைத்த போது அவுரங்கசீப் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்ற வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.                          

படிப்பினை- சிவாஜியின் நேர்ச்சை விஷயத்தில் அவுரங்கசீப் அவர்களுக்கு அறவே உடன்பாடு இல்லா விட்டாலும் தன்னுடைய கொள்கையை மற்றொருவர் மீது திணிக்கவில்லை.

ஜெரூசலம் வெற்றி கொள்ளபட்ட போதும் அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கும், அவர்களின் ஆலயங்களும் முழுமையான பாதுகாப்பு உண்டு. என்று எழுதிக் கொடுத்த உமர் ரழி.. அவர்கள்

لَمَّا دَخَلَ عمرُ رض الجَابِية جاء رؤساء بيت المقدس الي عمررض فوقع الصلح بينه وبينهم علي جزية معلومة وكتب باالصلح وثيقتين وثيقة ظلت عند العرب ووثيقة ظَلَّتْ عند الروم خلاصةُ هذه الوثيقة اطلاقُ حُرِّية الدين للمسيحيين واِبْقاؤهم علي ما كانوا عليه من امر دينهم وطُقٌوْسِهِمْ وكَنَا ئِسِهم وفي رواية لا تُسَكَّن كنائسُهم ولا تُهْدَمُ ولا يُنقَضُ منها ولا من صلبانهم ولا شيء من أموالهم ولا يُكْرَهون على دينهم ولا يُضَارّ أحد منهم(دروس التاريخ

மத்திய அரசு நம்முடைய ஷரீஅத்தைப் பின்பற்ற விடாமல் தடுக்கிறது என்று புலம்பும் நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த அளவுக்கு ஷரீஅத் சட்டங்களை மதிக்கிறோம்?

 புது வீடு கட்டும்போது மாற்றார்களின் பூஜையை அனுமதிக்கக்கூடாது என நம்முடைய ஷரீஅத் சொல்லும் இதை எத்தனை பேர் கடை பிடிக்கிறார்கள்.?இதேபோல வாஸ்து பார்ப்பது, முகூர்த்த நாள் பார்ப்பது, இந்துக்களைப்போல் பாலை பொங்க விடுவது, திருஷ்டி பொம்மை வைப்பது 5, பிராணியை அறுத்து அதன் இரத்தத்தை தெளிப்பது, அதை முச்சந்தியில் வைத்து இரவோடு இரவாக எரிப்பது, திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது, பழங்காலத்தைப் போல் நடு வீட்டுக்குள் விறகு அடுப்பு எரிப்பதை சடங்காக கருதுவது, குத்து விளக்கு ஏற்றுவது இதுவெல்லாம் கூடாது என நம்முடைய ஷரீஅத் சொல்லும் இதை எத்தனை பேர் கடை பிடிக்கிறார்கள்.? நம்முடைய ஷரீஅத் சட்டங்கள் மீதும் அதைச் செயல்படுத்துவதின் மீதும் முதலில் நமக்கு நல்ல பிடிமானம் இருந்தால் தான் நமது ஷரீஅத்தில் மற்றவர்கள் கை வைக்காமல் இருப்பார்கள்.

பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் சொல்லி அறுக்கப்படாத இறைச்சியை உண்ணக் கூடாது என ஷரீஅத் சொல்லும். இன்று எத்தனை பேர் முறையாக அறுக்கப்படாத KFG சிக்கனுக்கு அடிமையாக இருக்கிறார்கள்

மற்றவர்களை மட்டுமே குறை கூறுவதை விட்டு விட்டு நம்மிடம் என்ன  தவறு என சிந்திப்பது நல்லது

قال ابن عبد البر في بهجة المجالسوقد وفد على عمر بن الخطاب بفتح، فقال: متى لقيتم عدوكم؟ قالوا: أول النهار. قال: فمتى انهزموا؟ قالوا: آخر النهار. فقال: إناّ لله! وأقام الشرك للإيمان من أول النهار إلى آخره!! والله إن كان هذا إلاّ عن ذنب بعدي، أو أحدثته بعدكم، (بهجة المجالس)

ஷாம் தேசத்திற்கு உமர் ரழி அவர்கள் அனுப்பியிருந்த படைப் பிரிவுகளில் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் உமர் ரழ் அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன்  அவர்களே நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்று விட்டது. அல்லாஹ் நமது படைப் பிரிவுக்கு வெற்றியை நல்கினான் என்று கூறியபோது உமர் ரழி அவர்கள் எப்போது நமது படை வீர ர்கள் எதிரிப்ப்படையுடன் போரிட ஆரம்பித்தார்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர் லுஹா நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். மீண்டும் உமர் ரழி அவர்கள் எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்த து என்று கேட்டார்கள். அதற்கு அவர் மஃரிப் நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டதும் உமர் ரழி அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். அழுகையின் உச்ச கட்டமாக தாடி முழுவதும் நனைய தேம்பித் தேம்பி அழுதார்கள். சபையில் இருந்தவர்கள் உமர் ரழி அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். எனினும் உமர் ரழி அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை. அப்போது சபையில் இருந்தவர்கள் அமீருல் முஃமினீன்  அவர்களே அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகிறீர்கள் அவர் நல்ல செய்தியைத்தானே சொல்லியுள்ளார். நமது படை வெற்றி பெற்ற செய்தி மகிழ்ச்சியான செய்தி தானே என்று கேட்டனர். அதற்கு உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அசத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு வநேரம் வரை தாமதம்ஆகாது.அப்படியானால் நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும். என்று பதில் கூறினார்கள்.

ஷரீஅத் சட்டங்களின் மீது சஹாபாக்களின் பிடிமானம்

عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلَا أَخْبَرْتِنِي فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ وَقَدْ قِيلَ فَفَارَقَهَا عُقْبَةُ وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ (بخاري

   உக்பா ரழி அவர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்தார்கள். (அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும்போது) ஒரு பெண் வந்து நான் உக்பாவுக்கும் அவரது மனைவிக்கும் (இருவரும் குழந்தையாக இருக்கும்போது) பால் கொடுத்துள்ளேன் என்றார். (பால்குடி உறவின் மூலமாக இருவரும் சகோதர சகோதரி என்று தெரிந்தால் திருமண உறவு முறியும்.) அப்போது உக்பா ரழி அவர்கள் அப்பெண்ணிடம் நீங்கள் கூறுவது போன்று எங்கள் இருவருக்கும் நீங்கள் பால் கொடுத்ததாக இதுவரை நான் அறியவில்லை. யாரும் என்னிடம் சொல்லவுமில்லை என்றார். (மற்றொரு அறிவிப்பில் அவர் தன் சொந்த பந்தங்களிடம் விசாரித்த போது யாரும் அதை உறுதிப் படுத்தவில்லை.) பிறகு உக்பா ரழி நபி ஸல் அவர்களைத் தேடி மதீனா வந்து இதைப் பற்றி சட்டம் கேட்க, நபி ஸல் அவர்கள் உக்பா ரழி அவர்களிடம் இப்படி ஒரு சொல் சொல்லப்பட்ட பிறகு (நீங்கள் இருவரும்) எவ்வாறு? (இனிமேல் சேர்ந்து வாழ முடியும்) என்று கேட்டார்கள். வேறு வழியில்லாமல் அன்பான) மனைவியை (ஷரீஅத் சட்டத்தை மதித்து) அவர் பிரிந்தார்.                                            

பால்குடி உறவை நிரூபிக்க ஒரு பெண் சாட்சி சொன்னாலும் போதும் என்ற ஷரீஅத் சட்டத்தை நிரூபிக்க இந்த ஹதீஸை இமாம்கள் ஆதாரமாக கூறுவார்கள். எவ்வளவு தான் அன்பான மனைவியாக இருந்தும் கூட ஷரீஅத் பிரியும்படி சொன்னவுடன் அதைச் செயல்படுத்தியவர்கள் சஹாபாக்கள். மற்ற மதங்களில் இத்தகைய கொள்கைப் பிடிப்பைக் காண முடியாது.                                                                    

பல வருடங்களுக்கு முன்னால் பத்திரிக்கையில் வந்த உண்மைச்செய்தி. (தேதி, பெயர் நினைவில் இல்லை)

  ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும்போது அவரவர் குடும்பத்தைப் பற்றி பேச்சு வந்த போது இருவருமே சிறு வயதில் குடும்பத்தைப் பிரிந்து வந்த விபரம் தெரிய வந்தது. கணவன் சொன்னான். நான் சிறு வயதில் பிரிந்த என் அப்பாவை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறேன். அதேபோல மனைவி சொன்னான் நானும் சிறு வயதில் பிரிந்த என் அப்பாவை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறேன். இருவரில் யாருடைய தந்தை முதலில் கிடைப்பார்கள் என்று பார்க்கலாம் என இருவரும் தீவிரமாக தங்களுடைய தந்தையைத் தேடுவதில் ஈடுபட்டனர். ஒரு நேரத்தில் கணவரின் தந்தை கிடைத்து விட்டார். அவரை வீட்டுக்கு அழைத்து வந்த போது தான் மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அந்த மனைவிக்கும் தந்தை என்பது அப்போது தெரிய வந்தது. இருவரிடமும் பத்திரிக்கை நிருபர்கள் நீங்கள் எப்படி இனிமேல் வாழ்க்கை நடத்தப்போகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அவர்கள் கூறிய பதில் இனிமேல் நாங்கள் என்ன செய்ய முடியும். தொடர்ந்து நாங்கள் கணவன் மனைவியாகவே நீடிப்போம் என்று கூறியுள்ளார்கள். வெளி நாட்டில் நடந்த இச்செய்தி தினத்தந்தி பத்திரிக்கையில் பாக்ஸ் செய்தியாக வெளியிடப்பட்டது.               

முஸ்லிம்களுக்கும் மாற்றார்களுக்கும் இதுதான் வித்தியாசம். நாம் நம்முடைய ஷரீஅத்தில் பிடிமானமாக இருப்பது போன்று மற்றவர்களிடம் அதை எதிர் பார்க்க முடியாது. நம்முடைய ஷரீஅத் நமக்கு உயிர் போன்றது.   

அல்லாஹ்வுடைய ரஸூல் சொன்ன ஷரீஅத்  தீர்ப்பை ஏற்க மனமில்லாத

முனாஃபிக்கை வெட்டி வீழ்த்திய உமர் ரழி

عن ابن عباس قال: كان بين رجل من المنافقين يقال له بشر وبين يهودي خصومة؛ فقال اليهودي: انطلق بنا إلى محمد، وقال المنافق: بل إلى كعب بن الأشرف وهو الذي سماه الله "الطاغوت" أي ذو الطغيان فأبى اليهودي أن يخاصمه إلا إلى رسول الله صلى الله عليه وسلم؛ فلما رأى ذلك المنافق أتى معه إلى رسول الله صلى الله عليه وسلم فقضى لليهودي. فلما خرجا قال المنافق: لا أرضى، انطلق بنا إلى أبي بكر؛ فحكم لليهودي فلم يرض ذكره الزجاج وقال: انطلق بنا إلى عمر فأقبلا على عمر فقال اليهودي: إنا صرنا إلى رسول الله صلى الله عليه وسلم ثم إلى أبي بكر فلم يرض؛ فقال عمر للمنافق: أكذلك هو ؟ قال: نعم. قال: رويدكما حتى أخرج إليكما. فدخل وأخذ السيف ثم ضرب به المنافق حتى برد، وقال: هكذا أقضي على من لم يرض بقضاء الله وقضاء رسوله؛ وهرب اليهودي، ونزلت الآية، وقال رسول الله صلى الله عليه وسلم: "أنت الفاروق " . ونزل جبريل وقال: إن عمر فرق بين الحق والباطل؛ فسمي الفاروق. وفي ذلك نزلت الآيات كلها إلى قوله: {وَيُسَلِّمُوا تَسْلِيماً}   (قرطبي

 ஒரு யூதருக்கும் (ஒரு பெயர் தாங்கி முஸ்லிமுக்கும்) அதாவது முனாஃபிக்கிற்குமிடையில் வழக்கு இருந்தது. யூதர்களின் தலைவனாக கஃப் இப்னு அஷ்ரஃப் இருந்தும் கூட அந்த யூதன் இந்த வழக்கை நாம் நபி ஸல் அவர்களிடம் எடுத்துச் செல்வோம் என்று கூறினான். ஆனால் அந்த பெயர் தாங்கி முஸ்லிம் வேண்டாம் இந்த வழக்கை கஃப் இப்னு அஷ்ரஃபிடம் கொண்டு செல்வோம் என்றான். இறுதியில் அந்த யூதரின் பிடிவாதத்தால் இந்த வழக்கு நபி ஸல் அவர்களிடமே வந்தது. நபி ஸல் அவர்கள் யூதரின் பக்கம் நியாயம் இருந்ததால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள். அதை அந்த முனாபிக் ஏற்கவில்லை. அவன் அபூபக்கர் ரழி அவர்களிடம் அழைத்து வந்தான். ரஸூலின் தீர்ப்புக்கு மறு தீர்ப்பு கிடையாது என்று தனக்கே உரிய சாதுவான முறையில் அபூபக்கர் ரழி அவர்கள் திருப்பி அனுப்பி விட்டார்கள். அடுத்து அந்த முனாபிக் நேராக உமர் ரழி அவர்களிடம் யூதனை அழைத்து வந்தான். உமர் ரழி அவர்களிடம் அந்த யூதன் விஷயத்தைக் கூறி ரஸூலின் தீர்ப்பை இவர் பொருந்திக் கொள்ளவில்லை. என்று கூற, உடனே அது கேட்ட உமர் ரழி அவர்கள் அப்படியா இருங்கள் வருகிறேன். என்று உள்ளே சென்றார்கள். அந்த முனாபிக் தனக்கு சாதகமாக உமர் ரழி தீர்ப்பை மாற்றிச் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்பில் இருக்க, உள்ளே சென்ற உமர் ரழி அவர்கள் தனக்கே உரிய பாணியில் உருவிய வாளுடன் வெளியே வந்து வந்து அவனை ஒரே வெட்டாக வெட்டி இறைவன் மற்றும் அவனின் தூதரின் தீர்ப்பை ஏற்காதவனுக்கு இது தாண்டா தீர்ப்பு என்ற ரீதியில் கொன்றொழித்தார்கள். அதைக் கண்ட அந்த யூதர் பயந்து அங்கிருந்து ஓடி விட்டார். அப்போது உமர் ரழி அவர்களை ஆதரித்து மேற்படி வசனம் இறங்கியது. ஜிப்ரயீல் அலை அவர்களும் இறங்கி வந்து  ஃபாரூக் என்ற பட்டத்தை உமர் ரழி அவர்களுக்கு வழங்கினார்கள்.அன்று முதல் உமரே ஃபாரூக் என்றழைக்கப்பட்டார்கள். படிப்பினை- அந்த முனாஃபிக்கை உமர் ரழி அவர்கள் கொன்றது அரசுக்கு எதிரான துரோகச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு எல்லா நாடுகளிலும் கொடுக்கப்படும் மரண தண்டனை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பவர்களுக்கே கடும் தண்டனை வழங்கப்படுவது நாட்டின் வழமை.        

படிப்பினை- ஷரீஅத் சட்டங்களின் மீது உமர் ரழி அவர்களுக்கு எவ்வளவு பிடிமானம் இருந்தது என்பதற்காக இதைக் கூறலாம்.

பொது சிவில் சட்டம் பற்றி இந்திய அரசியல் சாசன சட்டம் கூறுவது என்ன?

 இந்திய அரசியல்  சாசன சட்டத்தின் 25-ம் பிரிவில் நாட்டின் எல்லா குடிமக்களும் அவரவர் மனசாட்சியின் படி அவரவர் மதத்தில் சுதந்திரமாக வாழ சமமான  உரிமை பெற்றவர்கள். தனக்கு விருப்பமான மதத்தில் நம்பிக்கை கொண்டு, அதனை ஏற்றுக் கொண்டு செயல்படவும், அதனைப் பிரச்சாரம் செய்யவும் எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை உண்டுஎன்று கூறப்பட்டுள்ளது.  இந்த விதியின் படி  எந்த ஒரு மதத்தினர் மீதும் யாரும் அவர்களுடைய மதச்சட்டங்களையோ, அவர்களின் நடைமுறைகளையோ கைவிடும்படி எந்த விதத்திலும் வற்புறுத்த முடியாது. இந்த உண்மையை சங்பரிவார் அமைப்பின் தலைமையே ஒப்புக் கொண்டுள்ளது. MOTHER LAND என்ற பத்திரிக்கையில் 21-08-1972 அன்று வெளியான ஒரு செய்தியில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான குருகோல்வால்கர் 1972 ஆகஸ்ட் 20 ல் தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சிக் கழகத்தை துவக்கி வைத்து பேசிய போது பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்க பொதுசிவில் சட்டம் தான் கருவியாகும் என்று சிலர் சொல்வது தவறாகும். இயற்கைக்கு விரோதமானதாகும். விபரீத விளைவுகளை உண்டாக்கக் கூடியதாகும் என்று பேசியுள்ளார். ஆனால் தலைமையின் பேச்சையே புறக்கணித்து விட்டு இன்றைய சங்பரிவார் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

தற்போதைய மத்திய அரசின் நோக்கம் இந்தியாவில் இந்துத்துவாவை அதாவது மனுசாஸ்திரக் கொள்கையை நிலைநாட்டுவதேயாகும்.  மனு சாஸ்திரக் கொள்கை என்பது மனிதர்களுக்கிடையில் பிறப்பால் உயர்வும் தாழ்வும் உண்டு. என்பதை நிலைநாட்டி பல ஜாதிகளாக மக்களைப் பிரிப்பதாகும். இந்த மனு தர்மக் கொள்கையால் பாதிப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. பிராமணர்கள் அல்லாத மாற்று மத சகோதர, சகோதரிகள் அனைவரும் பாதிக்கப் படுவார்கள். அவர்களையும் பாதுகாப்பது தேசப்பற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். பல மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து பச்சை, வெள்ளை, சிகப்பு என்ற பல வண்ணங்களின் கலவையான தேசியக் கொடிக்கு அவமானத்தை தேடித் தரும் காவி மயமாக்கலை நாம் அனைவரும் சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும்.  (தேசியக்கொடியின் பச்சை நிறம் முஸ்லிம்களையும், காவி நிறம் இந்துக்களையும், வெள்ளை நிறம் என்பது மற்றவர்களையும் குறிப்பதாகும்) இந்தியாவில் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 1930 ல் தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டு 1947  சுதந்திரத்திற்குப் பின்  நம் நாட்டுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

நமது உடன் பிறவா சகோதரர்களான மாற்று மத நண்பர்களுக்கு நாம் கூறுவது என்னவென்றால் தற்போதைய இந்த ஆட்சி நீடித்தால் ஆபத்து எங்களுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் தான்.  இந்நாட்டில் பல மதங்கள் உண்டு. அதில் பல பிரிவுகளும், பல ஜாதிகளும் உண்டு. ஒவ்வொரு ஜாதியினருக்கும், ஒவ்வொரு பிரிவுகளுக்கும் சில தனியார் சட்டங்கள் உண்டு.  அந்த சட்டங்கள் அவரவருக்கு உயிரை விட மேலானவை. உண்ண உணவு இல்லா விட்டாலும் சகிப்போம். ஆனால் சட்டங்களில் அடுத்தவர் கை வைக்க அனுமதிக்க மாட்டோம். வீதியில் செல்லும்போது ஒருவர் நம் ஆடையை உருவினால் எவ்வளவு  கோபம் வருமோ அதை விட பல மடங்கு அதிகமாகவே அடுத்தவர் நமது  மத விவகாரங்களில் தலையிடும்போது நமக்கு கோபம் வரும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரவர்  தனியார் சட்டங்கள் அந்த அளவுக்கு முக்கியமானவை. ஆனால்  தற்போதைய மத்திய அரசு மக்களின் எத்தகைய உணர்வுகளையும் மதிக்காமல் தமது இந்துத்துவா கொள்கையை நிலைநாட்டுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்நிலை நீடித்தால் இந்தியாவில் எந்த ஒரு மதத்தவரும் அவரவர் தனியார் சட்டங்களை பின்பற்ற முடியாமல் போய் விடும்.எனவே இந்துத்துவாவுக்கு எதிராக அனைத்து மக்களும் இணைந்து போராடுவது கடமையாகும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை தங்களை மட்டுமல்லாமல் தங்களுடன் நட்புறவோடு பழகும் பிற சமய சகோதரர்களின் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவர்கள். ஆகவே அனைத்து மக்களையும் ஆதிக்க சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் ஆகவே நாம் நமக்கு மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் ஒன்று திரள வேண்டும்–

பொது சிவில் சட்டம் உட்பட இன்று இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடைபெறுகிறதோ அதுவெல்லாம் அன்று ஸ்பெயினில் நடைபெற்றது

கி.பி.712-இல் இருந்து கி.பி.1492 வரை சுமார் 780 ஆண்டுகள் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி நீடித்திருந்தது. எப்படி நம் இந்தியாவில் மொகலாயர்களின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்களோ அதுபோல் ஸ்பெயினில் முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அதன் பின்பு முஸ்லிம்களை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வகுத்த திட்டம் ஓரு ஆண்டுத் திட்டமோ,ஐந்தாண்டுத் திட்டமோ அல்ல. மாறாக 120 ஆண்டுத் திட்டம். இறுதியில் 1612-ல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். முதலில் முஸ்லிம்களின் கடைசி பகுதியான கிரனடா விழுந்தவுடன் முஸ்லிம்களில் ஒரு பலர் மொராக்கோ போன்ற அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்து போய் விட்டனர். அவ்வாறு குடி பெயர்ந்து போனவர்கள் அனைவரும் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்கு போய் சேர்ந்து விடவில்லை. அதில் சிலர் போகும் வழியிலேயே கொலை செய்யப்பட்டனர்.ஸ்பெயினிலேயே தங்கி விட்ட முஸ்லிம்களை வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்கள்,ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள் என குற்றஞ்சாட்டி பாமர மக்களின்கோபத்தை அந்த முஸ்லிம்களின் மீது பாய்ச்சினார்கள். அப்படியிருந்தும் அந்த முஸ்லிம்கள் நம் தாய் நாட்டிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற முடிவில் இருந்தனர். இந்நிலையில் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த மன்னன்  கிறிஸ்தவ மன்னன் பெர்டினன்ட் ஒருஅறிக்கை வெளியிட்டார். எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமை உண்டு. பாதுகாப்பு உண்டு என்பதே அந்த அறிவிப்பாகும். இந்த உறுதிமொழியை பல முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால் அந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே ஆங்காங்கே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்கள் முஸ்லிம்களின் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன. ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்று முஸ்லிம்களை அழித்தது.

மேலும் ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஆங்காங்கே கொலை செய்யப்பட்ட அங்குள்ள அரசு முஸ்லிம்களை அரசுப்பணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. மேலும் முஸ்லிம்களின் மொழியான அரபுமொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றிலும்அகற்றப் பட்டது. அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாறு திரிக்கப்பட்டு அவர்கள் கொடுமையாளர்கள் எள்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் இருண்ட காலம் என்று இட்டுக்கட்டப்பட்டது. முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினரால் சூறையாடப்பட்டன. இதற்கு அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று காரணம் கூறப்பட்டன. இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை நம்பிய பாமர மக்கள் முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கு வந்தனர். கிறிஸ்தவ மதத்திலிருந்து முஸ்லிமாக மாறியவர்கள் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு வந்து விடும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என முதல் சட்டம் வந்தது. பின்பு இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணம் செல்லாது அறிவிக்கப்பட்டது. இதனால் முஸ்லிம்கள் தங்கள் திருமணங்களை இரகசியமாக வீட்டுக்குள் செய்து கொள்வார்கள். காலப்போக்கில் இதை அறிந்த அதிகாரிகள் அந்த திருமணங்களை கண்டு பிடித்து அதை செய்தவர்களை தண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து அண்டை நாடுகளில் குடியேறினர். இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டு கி.பி.1612 (தகவல்: தலித் வாய்ஸ் ஆசிரியர்Dr. ராஜசேகர் எழுதிய நூல்)

(அல்லாஹ்வின் கிருபையால் இன்று ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது ஆறுதலான விஷயம்)

நம்முடைய சோதனைகள் நீங்குவதற்கு நோன்பும் ஒரு கேடயம். நமது குடும்பப் பெண்களையும் நாட்டின் சூழ்நிலையை விளக்கிச் சொல்லி வாரம் ஒருமுறையேனும் திங்கட்கிழமை நோன்பு வைக்கச் சொல்ல வேண்டும்.

தனக்கு ஒரு வேதம் வேண்டும் என்று மூஸா அலை கேட்ட போது நோன்பு வைக்கும்படி அல்லாஹ் ஏவினான். அந்த வேதத்தை வாங்கிக் கொண்டு வந்தபோது மக்கள் இணை வைப்பதைக் கண்டு, கடும் கோபத்தில் தவ்ராத்தை வீசினார்கள். பல துண்டுகளாக வேதம் சிதறியது. எத்தனை துண்டுகளாகச் சிதறியதோ அத்தனைக்கும் பகரமாக அல்லாஹ் நோன்பு வைக்கச் சொன்னான்.

ஒவ்வொரு நோன்பு முடியும் போது ஒவ்வொரு துண்டுகளும் ஒட்டின. இறுதியில் எல்லாம் ஒன்று சேர்ந்தன.

وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142)........   وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ (150) الاعراف

قال ابن القاسم: سمعت مالكا يقول: كان موسى عليه السلام إذا غضب طلع الدخان من قلنسوته، ورفع شعر بدنه جبته. – قرطبي

قال ابن عباس : لما ألقى موسى عليه السلام الألواح تكسرت فصام أربعين يوماً ، فأعاد الله تعالى الألواح (قرطبي – تفسير الرازي)

புதன், 28 ஜூன், 2023

ஈதுல் அழ்ஹா பயான்

 


29-06-2023

துல்ஹஜ்

 

بسم الله الرحمن الرحيم 

 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 



لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) الحج

அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நாம் சொல்லும் தக்பீரின் தாத்பரியம்

ذكر في الكشاف أن الخليل لما أراد الذبح ونزل جبريل بالفداء خاف عليه العجلة فنادى من الهواء الله أكبر الله أكبر الله أكبر فسمعه الذبيح فقال لا إله إلا الله والله أكبر فقال الخليل الله أكبر ولله الحمد (حاشية الطحاوي

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கு மகனாரை அறுத்துப் பலியிட தயாரான போது  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் மகனாருக்குப் பகரமாக ஆட்டைக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். தான் வருவதற்கு முன்னால் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவசரப் பட்டு விடக் கூடாதே என்பதற்காக ஆகாயத்தில் இருந்தே அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டே வர, அதைக்கேட்ட மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று சொல்ல, இருவரின் சப்தத்தைக் கேட்ட நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து என்று கூறினார்கள். இவ்வாசகங்கள்தான் தக்பீருத் தஷ்ரீக் என இன்று வரை உள்ளது

உலகிலுள்ள முஸ்லிம்களின் நாவில் அதிகமாக உச்சரிக்கப்படும் திக்ர் அல்லாஹு அக்பர்

நாள்தோறும் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கில் சர்வதேச அளவில் சுமார் 45 லட்சம் பள்ளிவாசல்களில் 13 கோடியே 50 லட்சம் முறை “அல்லாஹு அக்பர்” எனும் வார்த்தை ஒலிக்கிறது. (ஒரு பாங்கில் 6 முறை, ஒரு நாளில் சொல்லப்படும் ஐந்து முறை பாங்குகளிலும் சேர்த்து 30 முறை)அதே போன்று தொழுகையை நிறைவேற்ற சொல்லப்படும் இகாமத்தில் (ஹனஃபி மத்ஹபின் படி)13 கோடியே 50 லட்சம் முறையும், இதர 3

 மத்ஹப்களின் படி 9 கோடியே 40 லட்சம் முறையும் “அல்லாஹு அக்பர் எனும்  வார்த்தை ஒலிக்திறது.

ஜும்ஆ தினமான வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 6 பாங்குகள் சொல்லப்படுகின்றது. அதன்படி சுமார் 45 லட்சம் பள்ளிவாசல்களில் 16 கோடியே 20 லட்சம் முறை அல்லாஹு அக்பர் எனும் வார்த்தை ஒலிக்கிறது.

நாள்தோறும் தவறாமல் ஐந்து நேரம் தொழும் பாக்கியம் பெற்ற முஸ்லிம் ஒருவர் தனது ஐந்து நேரத் தொழுகையிலும் 94 முறை “அல்லாஹு அக்பர்” என  முழங்குகின்றார். ஸுப்ஹ் தொழுகையில் 11 தடவையும், ளுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளில் முறையே 22 தடவையும் (66) மக்ரிப் தொழுகையில் 17 தடவையும் அல்லாஹு அக்பர் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு பாங்கிற்கு பதில் சொல்கிற பழக்கம் இருக்கின்ற ஒரு முஸ்லிம் நாள்தோறும் அல்லாஹு அக்பர் எனும் தக்பீரை 30 முறை கூறுகின்றார்.தொழுகையும் பாங்கிற்கு பதில் சொல்கிற பேணுதலும் உள்ள ஒரு முஸ்லிம் நாள்தோறும் 124 முறை அல்லாஹு அக்பர் எனும் சங்க நாதத்தை கேட்கவும், உச்சரிக்கவும் செய்கின்றார்.

உலகில் அதிக முறை உச்சரிக்கப்படும் சிறப்பை அல்லாஹ்  இந்த “தக்பீரைத்” தவிர வேறெந்த வார்த்தைக்கும் வழங்கவில்லை.

அல்லாஹு அக்பர் எனும் தக்பீரின் தாத்பரியம்

அல்லாஹு அக்பர் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போது அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் வேறு யாரும் எனக்குப் பெரிதல்ல என்ற சிந்தனை நமக்கு வர வேண்டும். ஹனஃபி மத்ஹபின் படி தக்பீர் தஹ்ரீமாவின் போதும் ஷாஃபி மத்ஹபின் படி ஒவ்வொரு முறை ருகூவு செய்யும்போதும் ருகூவில் இருந்து நிமிரும்போதும் இந்த தக்பீரை சொல்லும்போது கைகளைத் தூக்குவதின் தாத்பரியம் அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்தையும் என் முதுகுக்குப் பின்னால் நான் ஆக்கி விட்டேன். அல்லாஹ்வை மட்டுமே எனக்கு முன்னால் ஆக்கிக் கொண்டேன் என்பதாகும்.  

 கடைசி காலத்தில் அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் மூலம் கிடைக்கும் மாபெரும் வெற்றி

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بَنِي إِسْحَقَ فَإِذَا جَاءُوهَا نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أَحَدُ جَانِبَيْهَا قَالَ ثَوْرٌ لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ الَّذِي فِي الْبَحْرِ ثُمَّ يَقُولُوا الثَّانِيَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُوا الثَّالِثَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُمْ فَيَدْخُلُوهَا فَيَغْنَمُوا فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمْ الصَّرِيخُ فَقَالَ إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ وَيَرْجِعُونَ (مسلم)

ஒருமுறைநபி(ஸல்)அவர்கள்,"ஒரு  பகுதி  கரையிலும்  மற்றொரு  பகுதி  கடலிலும்  அமைந்துள்ள  ஒரு நகரத்தைப்  பற்றி  நீங்கள்  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''என்று  கேட்டார்கள். மக்கள்,"ஆம் என்று பதில் அளித்தார்கள்.  நபி(ஸல்) அவர்கள், "இஸ்ஹாக்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின்  மீது  போர்  தொடுக்காதவரை  யுக முடிவு நாள் இறுதிநாள்  வராது.  அவர்கள்  வந்து (அந்நகரத்தில்இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக்  கொண்டும் சண்டையிடமாட்டார்கள்; அம்பெய்யமாட்டார்கள்  அவர்கள்"லாயிலாஹ  இல்லல்லாஹு  வல்லாஹு அக்பர்' (அல்லாஹ்வைத் தவிர  வேறு  இறைவனில்லை; அல்லாஹ்  மிகப்  பெரியவன்)என்றேகூறுவார்கள். உடன் அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீழ்ந்துவிடும். பிறகு அவர்கள் இரண்டாவது முறை தக்பீர் கூறுவார்கள். அதன்  மறுபகுதி  வீழ்ந்து விடும் பிறகு அவர்கள் மூன்றாவது முறைதக்பீர்  கூறுவார்கள்.உடனே அவர்களுக்குவழி  திறக்கும். அதில்  நுழைந்து போர்ச்செல்வங்களைத்  திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்களைப்  பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது  ஒருவர்  வந்து  உரத்த  குரலில்"தஜ்ஜால் புறப்பட்டு விட்டான் என்று கூறுவார் உடனே  அவர்கள்  எல்லாவற்றையும்  விட்டுவிட்டு(தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள்.

மற்றொரு அறிவிப்பில் இச்சம்பவம் பின்வருமாறு விரிவாக கூறப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ (مسلم 5157

 கருத்து- கியாமத் நெருக்கத்தில் ஷாம் பகுதியில் உள்ள அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய ஊர்களை ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) சுற்றி வளைப்பார்கள்.அப்போது மதீனாவில் இருந்து (இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தலைமையில் ஒரு படை அவர்களை எதிர் கொள்ளும். அந்தப்படையினர் அப்போதைய மக்களில் சிறந்தவர்களாக இருப்பர் அந்தப்படையினர் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) அந்தப்படையை நோக்கி எங்களுடைய மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மட்டும் எங்களிடம் விட்டு விடுங்கள் என்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் கூறுவார்கள். அவர்கள் எங்களின் சகோதரர்கள். அவர்களை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறுவர். அதன் பின்பு சண்டை நடைபெறும்.ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்குத் தோல்வியே மிஞ்சும். முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்படுவார்கள். மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் விரண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் நம்பிக்கை இழந்து விடாமல் தொடர்ந்து போர் செய்வார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தருவான். ரோமர்களின் தலை நகரத்தை வெற்றி கொள்வார்கள். அவர்கள் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஷைத்தான் அங்கு வந்து உங்களின் வீடுகளுக்கு தஜ்ஜால் வந்து விட்டான் என ஒரு பீதியைப் பரப்புவான். அச்செய்தி உண்மையாக இருக்காது. ஏனெனில் அப்போது தான் தஜ்ஜால் அவனது தீவில் இருந்து கிளம்புவான். அதன் பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள். தஜ்ஜாலைக் கொல்லுவார்கள். 

இந்தஹதீஸில் இடம் பெற்றிருக்கும் நகரம் என்பது குஸ்ததீனியா  கான்ஸ்டாண்டி நோபிள் என்றழைக்கப்பட்டு வந்த இஸ்தான்பூல்

(துருக்கியின் தலை நகரம்) நகரத்தையே குறிக்கும் என ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

ஆகுமாக்கப்பட்ட பிராணிகளில் சாப்பிட தடுக்கப்பட்ட ஏழு பொருட்கள். அவற்றில் இரத்தம் ஹராம். மற்றவை மக்ரூஹ்

1. இரத்தம், 2. பித்தப்பை, 3. ஆண்குறி, 4. பெண்குறி, 5. இரு விதைகள், 6. மூத்திரப்பைகள், 7. கழலை

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الْمَرَارَةَ ، وَالْمَثَانَةَ ، وَالْمحيَاةَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْغُدَّةَ ، وَالدَّمَ (طبراني

குர்பானி கறியை பங்கிடுவது தொடர்பாக குர்துபீ விரிவுரையில் கூறப்பட்டுள்ள சில விளக்கங்கள்

فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28)  فيه ثلاث وعشرون مسألة :

الرابعة عشرة: ذهب أكثر العلماء إلى أنه يستحب أن يتصدق بالثلث ويطعم الثلث ويأكل هو وأهله الثلث.

குர்பானி இறைச்சியை மூன்று பங்காக வைத்து ஒரு பங்கை தனக்கும் மற்றொரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்பது நல்லது

الثامنة : { فكلوا منها } أمر معناه الندب عند الجمهور ويستحب للرجل أن يأكل من هديه وأضحيته وأن يتصدق بالأكثر   مع تجويزهم الصدقة بالكل وأكل الكل   : { فكلوا منها وأطعموا } يدل على أنه لا يجوز بيع جميعه ولا التصدق بجميعه

தான் அறுத்த பிராணியில் கொஞ்சமேனும் சாப்பிட்டு பெரும்பகுதியை தர்மம் செய்வது நல்லது. குடும்பம் பெரிதாக இருந்தால் பெரும்பகுதியை தனக்கே உபயோகப்படுத்துவதும் கூடும். எக்காரணத்தைக் கொண்டும் குர்பானிக் கறியை விற்பது கூடாது. முற்றிலுமாக தர்மம் செய்வதும் குர்ஆன் ஆயத் அடிப்படையில் நல்லதல்ல.        

 

நேர்ச்சையாக இருந்தால் முற்றிலுமாக தர்மம் செய்து விட வேண்டும். உறவினர்களுக்கு தர  முடியாது

 العاشرة (وليوفوا نذورهم) ويدل ذلك على أن النذر لا يجوز أن يأكل منه وفاء بالنذر وكذلك جزاء الصيد وفدية الأذى لأن المطلوب أن يأتي به كاملا من غير نقص لحم ولا غيره فإن أكل من ذلك كان عليه هدي كامل والله أعلم

நேர்ச்சை இரண்டு வகை

ومن نذر نذرا مطلقا فعليه الوفاء به وإن علق نذره بشرط فوجد الشرط فعليه الوفاء بنفس النذر (هداية

  எனக்கு இந்தக் காரியம் நடந்தால் நான் இன்ன தர்ம ம் செய்வேன் என நேர்ச்சை செய்வது. இது இரண்டாவது வகை. இந்த நேர்ச்சையைப் பொறுத்த வரை இவர் நினைத்த காரியம் நிறைவேறினால் மட்டுமே நேர்ச்சை கடமையாகும்.  மற்றொன்று எதையும் நிபந்தனையிடாமல் மனதில் ஒரு காரியம் நல்ல படியாக நடைபெற வேண்டும் என்பதற்காக நான் இன்ன தர்ம ம் செய்வேன் என நேர்ச்சை செய்வது. இந்த நேர்ச்சைக்கு அந்தக் காரியம் நடைபெற்று முடிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது முன்பே அவர் நினைத்த நாளில் நிறைவேற்ற வேண்டும்.                                    

எந்தக் காரியத்தையும் மனதில் நினைக்காமல் நேர்ச்சை செய்வதும் உண்டு.

عن ثَابِت بْن الضَّحَّاكِ قَالَ نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ قَالُوا لَا قَالَ هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ قَالُوا لَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْفِ بِنَذْرِكَ (ابوداود

 ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்து நான் புவானா எனும் இடத்தில் ஒரு ஒட்டகத்தை அறுத்து ஏழைகளுக்குப் பங்கிடுவதாக நேர்ச்சை செய்திருந்தேன் அதை அதே இடத்தில் நிறைவேற்றவா என்று கேட்க, அந்த இடத்தில் அறியாமைக் காலத்தின் சிலைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் கூறினார். மீண்டும் அவரிடம் அந்த இடத்தில் ஏதேனும் மாற்றாரின் திருவிழாக்கள் நடைபெறுகிறதா என்று கேட்க இல்லை என்று அவர் கூறினார்.  அப்போது நபி ஸல் அவர்கள் அப்படியானால் அந்த  நேர்ச்சையை அந்த இடத்தில் நிறைவேற்றுங்கள் என்றார்கள்.                                                          

எனினும் எனது நோய் நீங்கினால் என்று நேர்ச்சை செய்வதை நபி ஸல் விரும்பவில்லை

நோய் நீங்குவதை நிபந்தனையாக வைத்து அல்லது ஒரு காரியம் நிறைவேறுவதை நிபந்தனையாக வைத்து நேர்ச்சை செய்வதை நபி ஸல் விரும்பவில்லை. அது மக்ரூஹ். இந்தக் காரியம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று நேர்ச்சை செய்து அக் காரியம் நிறைவேறும் முன்பு தர்மம் செய்வது மக்ரூஹ் அல்ல.                

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَنْذِرُوا فَإِنَّ النَّذْرَ لَا يُغْنِي مِنْ الْقَدَرِ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنْ الْبَخِيلِ (مسلم

 (ஒரு காரியம் நிறைவேறுவதை நிபந்தனையாக வைத்து) நேர்ச்சை செய்யாதீர்கள். அது அல்லாஹ்வின் விதியில் நின்றும் எதையும் தேவையற்று வைக்காது. இந்த வகை நேர்ச்சை கஞ்சனிடம் இருந்து வெளிப்படுவதாகும்.

وجزم القرطبي في المفهم بحمل ما ورد في الأحاديث من النهي على نذر المجازاة فقال هذا النهي محله ان يقول مثلا ان شفى الله مريضي فعلي صدقة كذا ووجه الكراهة أنه لما وقف فعل القربة المذكور على حصول الغرض المذكور ظهر انه لم يتمحض له نية التقرب إلى الله تعالى لما صدر منه بل سلك فيها مسلك المعارضة ويوضحه انه لو لم يشف مريضه لم يتصدق بما علقه على شفائه وهذه حالة البخيل فإنه لا يخرج من ماله شيئا الا بعوض عاجل يزيد على ما اخرج غالبا وهذا المعنى هو المشار إليه في الحديث لقوله وانما يستخرج به من البخيل (فتح الباري

சுருக்கம்- இன்ன காரியம் நடந்தால் தான் என்று நேர்ச்சை செய்யும் ஒருவர் அது நடைபெறா விட்டால் நேர்ச்சையை நிறைவேற்ற மாட்டார். தான் செய்யும் தர்மத்திற்கு இவர் தன் காரியத்தைப் பகரமாக ஆக்குவதால் இவர் ஒரு வியாபாரியைப் போல ஆகி விடுகிறார் என்பதால் நபி ஸல் அவர்கள் இதை வெறுத்தார்கள்.        

அறியாமைக் காலத்தில் குர்பானி தருபவர் அதன் இறைச்சியை உண்பது ஹராம் என்றே கருதினர்

 { فكلوا منها } قال بعض العلماء : قوله تعالى : { فكلوا منها } ناسخ لفعلهم لأنهم كانوا يحرمون لحوم الضحايا على أنفسهم ولا يأكلون منها - كما قلناه في الهدايا - فنسخ الله ذلك بقوله : { فكلوا منها } وبقول النبي صلى الله عليه و سلم :  [ من ضحى فليأكل من أضحيته ] ولأنه عليه السلام أكل من أضحيته وهديه  (قرطبي)    وقال الزهري : من السنة أن تأكل أولا من الكبد

இமாம் zuharee ரஹ் அவர்கள் கூறும்போது நாம் எடுத்து வைத்துக் கொள்ளும் பிராணியின் பாகங்களில் ஈரல் இருந்தால் நல்லது என்றும் அதை முதலாவதாக உண்பது நல்லது என்றும் கூறியுள்ளார்கள்.                                               

 

ஆரம்பத்தில் குர்பானிக் கறியை சேமிப்பது தடை செய்யப்பட்டிருந்தது பின்பு அனுமதிக்கப்பட்டது.

عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَدْ نَهَى عَنْ لُحُومِ الأَضَاحِىِّ بَعْدَ ثَلاَثٍ ، فَلَمَّا كَانَ الْعَامُ الْقَابِلُ وَضَحَّى النَّاسُ قُلْتُ :  يَا نَبِىَّ اللَّهِ إِنْ كَانَتْ هَذِهِ الأَضَاحِىُّ لَتَرْفُقُ بِالنَّاسِ كَانُوا يَدَّخِرُونَ مِنْ لُحُومِهَا وَوَدَكِهَا. قَالَ :« فَمَا يَمْنَعُهُمْ مِنْ ذَلِكَ الْيَوْمَ؟ ». قُلْتُ : يَا نَبِىَّ اللَّهِ أَوَلَمْ تَنْهَهُمْ عَامَ أَوَّلَ عَنْ أَنْ يَأْكُلُوا لُحُومَهَا فَوْقَ ثَلاَثٍ؟ فَقَالَ :« إِنَّمَا نَهَيْتُ عَنْ ذَلِكَ لِلْحَاضِرَةِ الَّتِى حَضَرَتْهُمْ مِنْ أَهْلِ الْبَادِيَةِ لِيَبُثُّوا لُحُومَهَا فِيهِمْ ، فَأَمَّا الآنَ فَلْيَأْكُلُوا وَلْيَدَّخِرُوا ». تحفة 17901  رواه النسائ 

 ஆயிஷா ரழி கூறினார்கள்.  நிச்சயமாக நபி ஸல் அவர்கள் குர்பானி கொடுத்தவர் அதன் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்று தடுத்தார்கள். (அப்போது குர்பானி கொடுப்பவர்கள் குறைவு என்பதால் குர்பானி கொடுப்பவர்கள் தேடிச்சென்று அனைத்து ஏழைகளுக்கும் தந்துவிட வேண்டும் என்பதால் அவ்வாறு கூறினார்கள்.) அடுத்த வருடம் நிறைய மக்கள் குர்பானி கொடுத்த போது அல்லாஹ்வின் தூதரே  நீங்கள் அனுமதி கொடுத்தால் மீதமாகும்  குர்பானிக் கறியை அவரவர் சேமித்து வைத்துக் கொள்வார்கள் என்று நான் கூறினேன். அப்போது நபி ஸல் அவர்கள் அதில் என்ன தடை உள்ளது என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் கடந்த வருடம் நீங்கள்அதை தடுக்கவில்லையா என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் கடந்த வருடத்தில் நான் தடுத்த காரணம் குர்பானி கொடுக்க முடியாத வெளியூர் வாசிகளுக்கு பரவலாக குர்பானிக் கறி சென்றடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினேன். இந்த வருடம் நீங்கள் கொடுத்தது போக சேமியுங்கள் 

عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَلْتَزِدْكُمْ زِيَارَتُهَا خَيْرًا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثٍ فَكُلُوا مِنْهَا وَأَمْسِكُوا مَا شِئْتُمْ وَنَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي الْأَوْعِيَةِ فَاشْرَبُوا فِي أَيِّ وِعَاءٍ شِئْتُمْ وَلَا تَشْرَبُوا مُسْكِرًا  رواه ابن ماجة 

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நான் மூன்று விஷயங்களை விட்டும் உங்களைத் தடுத்திருந்தேன். கப்ருகளை ஜியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன் (ஏனெனில் ஆரம்ப காலத்தில் காஃபிர்களின் கப்ருகள் தான் நிறைய இருந்தது.) இப்போது நீங்கள் ஜியாரத் செய்யுங்கள். அது உங்களுக்கு பல நலவுகளை அதிகப்படுத்தும். 

குர்பானி கொடுத்தவர் அதன் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்று தடுத்திருந்தேன். இப்போது நீங்கள் அதை உண்ணுங்கள். மீதியை (காய வைத்து) சேமித்து வையுங்கள். (முற்காலத்தில் மதுவுக்காகப் பயன்படுத்திய) சில பாத்திரங்களை (மக்களுக்கு மதுவின் நினைவு வரக் கூடாது என்பதற்காக) அதை பயன்படுத்த தடை விதித்திருந்தேன். இப்போது நீங்கள் அதைப் பயன்படுத்துங்கள். மதுவை அறவே அருந்தாதீர்கள்.    

 

 

முடிந்த வரை மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைப்பதை விட காய வைத்துப் பயன்படுத்துவது சுன்னத். அய்யாமுத் தஷ்ரீக் என்பதன் பொருள் காய வைக்கும் நாட்கள் என்பதாகும்.

ايام التشريق – من شَرَّقَ   يُشَرِّقُ       )شَرَّقَ  (காய வைத்தான்

- عَنْ ثَوْبَانَ رض مَوْلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَنَحْنُ بِمِنًى :« أَصْلِحْ لَنَا مِنْ هَذَا اللَّحْمِ ». فَأَصْلَحْتُ لَهُ مِنْهُ ، فَلَمْ يَزَلْ يَأْكُلُ مِنْهُ حَتَّى بَلَغْنَا الْمَدِينَةَ. رواه النسائ

ஸவ்பான் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் மினாவில் இருக்கும்போது என்னிடம் கூறினார்கள் இந்த குர்பானி இறைச்சியை பதப்படுத்தி வை என்றார்கள் நான் அதைக் காய வைத்து பதப்படுத்தினேன். நாங்கள் அங்கிருந்து மதீனா வந்து சேரும் வரை எங்களின் உணவாக அது இருந்தது

மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைத்து உண்பதால் பாக்டீரியாக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் சாப்பிடுவதால் இரைப்பையில் நோய் ஏற்படும் அதனால் ஈரல், சிறுநீரகம், மூளை பாதிப்புகள் வரலாம்.

வாரக் கணக்கில் மீதமான இறைச்சியை பிரிட்ஜில் வைத்து எடுத்து சமைப்பதால் அதில் இயற்கையாக உள்ள புரதச் சத்துகள் அழிந்து அதன் தூய்மையும் பாதிக்கப்படும். சில சமயங்களில் அது விஷமாகவும் மாறி விடும் வாய்ப்பு உண்டு.

 

குர்பானித் தோலை விற்பது கூடாது. அறுப்பவருக்குக் கூலியாகவும் தரக்கூடாது. ஏழைகளுக்கு தரலாம். மஸ்ஜித் மதரஸாக்களில் அதை வாங்கினாலும் அதை ஏழை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.

  ما ذا يفعل بجلدها؟  قال صاحب الهداية:ويتصدق بجلدها أو يعمل منه آلة تستعمل في البيت لقوله عليه السلام لعلي رض "تصدق بجلودها وخطامها ولا تعط أجر الجزار منها شيئا" ولقوله عليه السلام "من باع جلد أضحيته فلا أضحية له" لأن الاعطاء بجلدها او بجزء منهاأجرة في معني البيع

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...