வியாழன், 30 ஏப்ரல், 2026

May 1 வியாபார ஒழுக்கங்கள்

 01-05-2026

துல் கஃதா - 13 بسم الله الرحمن الرحيم  

      மே 1  உழைப்பாளர்  தினம்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

மே 1 உழைப்பாளர் தினத்தையும் அடுத்து வரப் போகிற மே 5 வணிகர் தினத்தையும் உள்ளடக்கி எடுக்கப்பட்ட தலைப்பு

ஒவ்வொன்றுக்கும் ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் வணிகர் தினத்தையொட்டி இஸ்லாம் கூறும் வியாபார ஒழுக்கங்களை நாம் அறிந்து அதன் படி செயல்பட்டு அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய வேண்டும்.

இம்மை, மறுமை வெற்றிக்கு பொருளாதாரமும் அவசியம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ عَنْ عَمِّهِ قَالَ لَا بَأْسَ بِالْغِنَى لِمَنْ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنْ اتَّقَى خَيْرٌ مِنْ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنْ النَّعِيمِ- ابن ماجة

கருத்து- இறையச்சம் இருப்பதுடன்  வசதி வாய்ப்பையும் ஒருவர் பெற்றிருப்பது தவறல்ல.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"لَمَّا عَافَى اللَّهُ أَيُّوبَ أَمْطَرَ عَلَيْهِ جَرَادًا مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَأْخُذُهُ بِيَدِهِ وَيَجْعَلُهُ فِي ثَوْبِهِ، فَقِيلَ لَهُ: يَا أَيُّوبُ، أَمَا تَشْبَعُ؟ فَقَالَ: وَمَنْ يَشْبَعُ مِنْ رَحْمَتِكَ" (رواه الحاكم في المستدرك)

நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோயை அல்லாஹ் குணப்படுத்திய பிறகு அவர்கள் மீது தங்க வெட்டுக் கிளிகளை அல்லாஹ் மழை போன்று இறக்கினான். அதை கையால் பிடித்து தன் ஆடையில் நிரப்பிக் கொண்டார்கள். அவர்களிடம் இது போதுமா என்று அல்லாஹ்வின் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. அப்போது அய்யூப் அலை அவர்கள் யாஅல்லாஹ் உனது ரஹ்மத்தில் இருந்து யார் நிராசையடைவார்கள் என்று கூறினார்கள்

நீ தந்தால் நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்பது இதன் கருத்தாகும்.                                    

عن محمد بن المنكدر قال : نعم العون على الدين الغنى-  (رواه  ابن ابي الدنيا في اِصلاح المال )(

ஒருவருடைய தீன் பற்றுக்குத் துணையாக இருக்கக்கூடிய விஷயங்களில் பொருளாதாரம் நல்லதாகி விட்டது 

 عن سفيان الثوري قال : المال في هذا الزمان سلاح المؤمن)- قال المقدام بن معدي كرب : يأتي على الناس زمان لا ينفع فيه إلا الدينار والدرهم -عن سعيد بن المسيب أنه ترك دنانير كثيرة  فلما حضرته الوفاة ، قال : اللهم إنك تعلم أني لم أجمعها إلا لأصون بها ديني ، وأصل بها رحمي وأكف بها وجهي وأقضي بها دَيْني لا خير فيمن لا يجمع المال ليكف به وجهه  ويصل به رحمه ، ويقضي به دينه ، ويصون به دينه,   عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :  ليس خيركم من ترك دنياه لآخرته ، ولا من ترك آخرته لدنياه ، حتى ينال منها، فإن كل واحدة منهما مبلغة إلى الأخرى، ولا تكون كَلَّا  على الناس (رواها  ابن ابي الدنيا في اِصلاح المال )(كَلَّا பிறருக்கு சுமையாக 

பொருளாதாரத்தை தேடுவதற்காக  முடிந்த வரை  உழைப்பது ஒவ்வொரு மனிதனின் மீதும் கடமையாகும்

( فَإِذَا قُضِيَتِ الصَّلاةُ فَانْتَشِرُوا فِي الأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ ) [ سورة الجمعة: 10 ]

பொருளாதாரத்தை தேடும் வழிகளில் வியாபாரம் முக்கியமானது

இன்றைக்கு எப்படியெல்லாமோ தந்திரங்கள் செய்து வியாபாரத்தைப் பெருக்குகிறார்கள். ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு முதியவர் ஒரு ஆப்பிள் 30 ரூபாய் என்று கூறி ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி, இறங்கி வியாபாரம் செய்தார். அவரிடம் மக்கள் ஐந்து ரூபாய் குறைத்து ஒரு ஆப்பிள் 25 ரூபாய்க்கு தரச் சொல்லி  பலர் கேட்டும் அவர் குறைக்கவில்லை. அதனால் அவரிடம் யாரும் ஆப்பிள் வாங்கவில்லை. கொண்டு சென்ற ஆப்பிள் கூடையுடன் அப்படியே திரும்பினார். சற்று நேரம் கழித்து ஒரு இளைஞன் அதே பஸ்களில் ஏறி ஒரு ஆப்பிள் 30 ரூபாய் என்று கூறி விற்பனையை ஆரம்பிக்க, அவனிடமும் ஒரு ஆப்பிள் 25 ரூபாய்க்கு தரச் சொல்லி  மக்கள் கேட்க, சரி என்று அவனும் அவர்கள் கேட்ட 25 ருபாய்க்கு விற்றான். அத்தனையும் விற்றுத் தீர்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலாவதாக விற்பனை செய்த முதியவரிடம் அந்த இளைஞன் எவ்வளவு திறமையாக விற்பனை செய்கிறான் நீயும் ஐந்து ருபாய் குறைத்திருந்தால் உனக்கும் வியாபாரம் நடந்திருக்குமே என்று கேட்க, அதற்கு அந்த முதியவர் சொன்னாராம். அவன் வேறு யாருமல்ல. என்னுடைய மகன் தான்.  நான் முதலில் பஸ்ஸில் ஏறி விலையை அதிகமாக கூறுவேன். மக்கள் வாங்க மாட்டார்கள். பிறகு அதே பஸ்ஸிஸ் அதே கூடையுடன் என் மகன் ஏறி சற்று குறைத்து விற்பனை செய்வான். அத்தனையும் விற்று விடும். இரண்டு ஆப்பிள் கூடையும் ஒன்று தான் என்று சொன்னாராம்.                               

இப்படியெல்லாம் உலகத்தில் நடெபறும் சூழ்நிலையில் இஸ்லாமிய வியாபாரம் சம்பந்தமாக இங்கு காண்போம்


நேர்மையாக வியாபாரம் செய்பவருக்கான சுபச் செய்திகள்

நேர்மையான வியாபாரி நபிமார்கள், நல்லோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

عَنْ أَبِي سَعِيدٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ (ترمذي

 நேர்மையாக வியாபாரம் செய்வதும் ஒரு வகை வணக்கம் என்ற படிப்பினை இதில் உள்ளது.  

வியாபாரம் செய்வது நபிமார்களின் நடைமுறையாகும். 

وكان نوح عليه السلام كان نجارا  بدليل صنع الفلك بوحي الله  عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال : « كان زكريا نجاراً » (ابن ماجة)  عن أنس قال : قال رسول الله صلى الله عليه و سلم : هبط آدم وحواء عريانين جميعا عليهم ورق الجنة قعد يبكي ويقول لها : يا حواء قد آذاني الحر فجاءه جبريل بقطن وأمرها أن تغزل وعلمها وأمر آدم بالحياكة وعلمه (البداية والنهاية [ الدر المنثور - السيوطي ] عن أنس مرفوعا [ أول من حاك آدم عليه السلام ] (فتح القدير  وروي أنه إدريس عليه السلام كان خياطا وكان يسبح الله تعالى عند إدخال الإبرة ويحمده عند إخراجها : المحرر الوجيز  وكان ابراهيم عليه السلام كان بناء وقد بني الكعبة  

சுருக்கம்- நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் ஆசாரியாக  இருந்தார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வின் உத்தரவுப்படி அவர்களே கப்பல் கட்டியதால் அவர்களும் ஆசாரியாக  இருந்தார்கள்.  நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு இறக்கப்பட்டபோது ஆடையின்றி சுவனத்து இலைகளுடன் இறக்கப்பட்டார்கள். இந்த பூமிக்கு வந்த பின்பு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து பருத்தியில் இருந்து ஆடை நெய்யும் விதத்தைக் கற்றுத் தந்தார்கள். எனவே முதன் முதலில் நெசவுத் தொழில் செய்தவர்கள் நபி ஆதம் அலை அவர்கள் தான்.               

நபி இத்ரீஸ் அலை அவர்கள் டைலராக இருந்தார்கள். ஊசியை துணியில் உள்ளே செலுத்தி வெளியே எடுக்கும் ஒவ்வொரு தடவையிலும் தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தார்கள். நபி இப்றாஹீம் அலை அவர்களை கட்டிடக் கலை நிபுணர் என்று கூறலாம். காரணம் அவர்கள் கஃபாவைக் கட்டினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நமது நபி ஸல் அவர்கள் கதீஜா ரழி அவர்களுக்காக வியாபாரம் செய்த சம்பவங்கள் பிரபலமானதாகும்.                

தாவூத் அலை இரும்புக் கவச உடை தயாரித்து விற்பனை செய்தது பற்றி குர்ஆன் கூறுகிறது.

وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ (10 (سبأ) وسبب ذلك أن داود عليه السلام، لما ملك بني إسرائيل لقي ملكا وداود يظنه إنسانا، وداود متنكر خرج يسأل عن نفسه وسيرته في بني إسرائيل في خفاء، فقال داود لذلك الشخص الذي تمثل له: (ما قولك في هذا الملك داود) ؟ فقال له الملك(نعم العبد لولا خلة فيه) قال داود: (وما هي) ؟ قال: (يرتزق من بيت المال ولو أكل من عمل يده لتمت فضائله).فرجع فدعا الله في أن يعلمه صنعة ويسهلها عليه، فعلمه صنعة لبوس كما قال عزوجل في سورة الانبياء (2)، فألان له الحديد فصنع الدروع، فكان يصنع الدرع فيما بين يومه وليلته يساوي ألف درهم، حتى ادخر منها كثيرا وتوسعت معيشة منزله، ويتصدق على الفقراء والمساكين، وكان ينفق ثلث المال في مصالح المسلمين، وهو أول من اتخذ الدروع وصنعها  (قرطبي

  வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது நபி தாவூத் அலை அவர்கள் தமது ஆட்சியின் போது தம்மை இனம் காட்டிக் கொள்ளாமல் மாறுவேடத்தில் வெளியே வந்து தம்மைப் பற்றியும் தமது நடத்தை பற்றியும் பயணிகளிடம் விசாரிப்பது வழக்கம். அவ்வாறு அவர்கள் யாரிடம் விசாரித்தாலும் அந்த நபர் நபி தாவூது அலை அவர்களின் வழிபாடு நடத்தை, நீதி ஆகியவை தொடர்பாக பாராட்டாமல் இருந்ததில்லை. இந்நிலையில் ஒரு நாள் அல்லாஹ் வானவர் ஒருவரை மனித உருவில் அனுப்பி வைத்தான். அந்த வானவரை தாவூத் அலை அவர்களை சந்தித்தார்கள் மற்றவர்களிடம் விசாரிப்பது போன்ற அவரிடமும் தாவூது (அலை) விசாரித்தார்கள். அதற்கு அவர் தாவூத் அலை அவர்கள் மக்களிலேயே தமக்கும் தம் சமுதாயத்தாருக்கும் நல்லவர்கள் தான். இருந்தாலும் அவரிடம் ஒரே ஒரு பழக்கம் உள்ளது அது மட்டும் அவரிடம் இல்லை என்றால் அவர் முழுமை பெற்றவராகி விடுவார் என பதிலளித்தார்கள். தாவூது அலை அவர்கள் அது என்ன பழக்கம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த வானவர் தமக்கும் தம் குடும்பத்தாருக்குமான உணவு ஆதாரத்தை பொது நிதியிலிருந்தே அவர் பெறுகிறார் என்று பதிலளித்தார். அப்போது நபி தாவூத் அலை அவர்கள் இறைவனிடம் துஆவில் ஈடுபட்டு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தன்னிறைவை தரும்படியான கைத்தொழில் ஒன்றை நமக்கு கற்றுத் தருமாறு துஆ கேட்டார்கள்.  அதனடிப்படையில் ஒரு தொழிலை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். நபி தாவூது (அலை) அவர்களுக்கு இரும்பை இலகுவாக்கி வைத்தான். கவச ஆடைகள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கற்றுத் தந்தான். கவச ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முதல் நபர் இவர்கள் தான். ஆயிரம் திர்ஹம் மதிப்புள்ள கவசஉடைகளை தினமும் தயாரிப்பார்கள் (தஃப்சீர் இப்னு கஸீர்)

வியாபாரத்தின் ஒழுங்கு முறைகள்

ஃபிக்ஹ் நூல்களில் வியாபாரம் பற்றியும் கொடுக்கல் வாங்கல் பற்றியும் கூறப்பட்ட விஷயங்கள் தான் அதிகம். குர்ஆனில் நீளமான வசனம் கடன் பற்றிய விபரங்களைப் பேசும் வசனம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் சிறந்த முஃமின் என்பதற்கான அடையாளமே அவர் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான் என உமர் ரழி அவர்களின் கூற்று இருக்கிறது.                                                                               

உண்மை சொல்லி விற்றால் பரக்கத் இருக்கும். பொய் சொல்லி விற்பது பரக்கத்தை நீக்கும்

عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا (بخاري

விற்பவரும், வாங்குபவரும் அந்த இடத்தை விட்டும் பிரியாத வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை உண்டு

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ وَرُبَّمَا قَالَ أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ رواه البخاري (اِخترْ உறுதிப்படுத்துவதோ, முறிப்பதோ உமது விருப்பம் என்று கூறியிருந்தாலே தவிர

ஏதேனும் பொய் சொல்லி ஒரு பொருளை விற்க நினைப்பதும், தேவையில்லாமல் சத்தியம் செய்வதும்  கூடாது

عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الَّذِي لَا يُعْطِي شَيْئًا إِلَّا مَنَّهُ وَالْمُسْبِلُ إِزَارَهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْكَذِبِ رواه النسائ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَقَامَ سِلْعَةً وَهُوَ فِي السُّوقِ فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطِ لِيُوقِعَ فِيهَا رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ فَنَزَلَتْ{ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِاللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا }[سورة آل عمران: 77]الْآيَةَ رواه البخاري2088

மூன்று சாராரை அல்லாஹ் மறுமையில் கருணை கொண்டு பார்க்க மாட்டான். அவர்களை பாவத்தை விட்டும் பரிசுத்தப்படுத்த மாட்டான். 1.எதை தர்மம் செய்தாலும் சொல்லிக் காட்டுபவர் 2.கரண்டைக் கீழ் ஆடை உடுத்துபவர் பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பவர். ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனை செய்யும்போது சத்தியமாக வேறு யாரும் கொடுக்காத விலைக்கு நான் தருகிறேன் என சத்தியம் செய்தார். அப்போது அற்பமான காசுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்பவர்களைக் கண்டித்து அல்லாஹ் வசனத்தை இறக்கினான்.  படிப்பினை- பொய்ச் சத்தியமாக இல்லா விட்டாலும் அற்பமான விஷயங்களுக்காக சத்தியம் செய்யக்கூடாது

ஒருவர் விலை பேசும்போது அது கேன்சல் ஆகாத நிலையில் இன்னொருவர் குறுக்கிட்டு விலை கேட்பது கூடாது 

عَنْ أَبِي هُرَيْرَةَ  قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ وَلَا تَنَاجَشُوا وَلَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا تَسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا رواه البخاري2140 (حاضرஉள்ளூர் வாசி வெளியூர் வாசிக்கு விற்றுத் தருவது

1.உள்ளூரின் விலை நிலவரம் தெரியாமல் வெளியூரில் இருந்து சரக்குகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிக்காக உள்ளூர் வியாபாரி விற்றுத் தரக்கூடாது காரணம் அதில் வெளியூர்வாசி ஏமாந்து விட வாய்ப்புண்டு. அவர் வந்து விலையை விசாரித்து அதற்குப்பின் சுயமாக ஒரு இலாபத்தை வைத்து விற்பார்.அது அவர் விருப்பம். ஆனால் அவர் வரும் வழியிலேயே உள்ளூர்வாசி வழி மறித்து இன்ன விலை தான் மார்க்கெட்டில் உள்ளது அந்த விலைக்குத் தந்து விடுங்கள் என்று என்று பொய் சொல்லி குறைந்த விலைக்கு வாங்க வாய்ப்புண்டு அதனால் வெளியூர் வியாபாரி ஏமாந்து விட வாய்ப்புண்டு. ஆனால் வெளியூர் வாசிக்கு இங்குள்ள விலை நிலவரம் தெரிந்தே அவர் தருகிறார் என்றால் தவறில்லை. 2.வாங்கும் நோக்கம் இல்லாமல் விலையை ஏற்றி விடுவது கூடாது. 3.ஒரு பொருளை ஒருவர் விலை பேசும்போது அது கேன்சல் ஆகாத நிலையில் மற்றவர் குறுக்கிட்டு விலை கேட்பது கூடாது. 4.ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்யப் பேச்சு வார்த்தை நடத்தி அது நிலுவையில் இருக்கும்போது அது கேன்சல் ஆகாமல் மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது கூடாது.  5.தன் தகோதரியின் மண வாழ்க்கையை மற்றொரு சகோதரி கெடுத்து விடக்கூடாது. அதாவது தனது சகோதரியின் கணவன் அவளை தலாக் சொல்லி விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கவும் கூடாது. அதற்கான தந்திரங்களிலும் ஈடுபடக் கூடாது.                                                                     

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَال كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِ فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ (البخاري)2167

வெளியூர் வியாபாரி பொருளைக் கொண்டு வரும்போது கடைவீதி துவங்கும் இடத்திலேயே வாங்கி அதை விற்பார்கள். அவ்வாறு செய்வதை நபி ஸல் தடுத்தார்கள்.சந்தைக்கு வந்து அங்குள்ள நிலவரம் தெரிந்து விற்கட்டும்

வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக ஒரு பொருளின் விலையை அதிகமாக கேட்பது கூடாது

عَنْ ابْنِ عُمَرَ رَضِ قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّجْشِ رواه البخاري2142عن معقل بن يسار قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول "من دخل في شيء من أسعار المسلمين ليغلي عليهم كان حقا على الله أن يقذفه في معظم جهنم رأسه أسفله رواه الحاكم 

வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக ஒரு பொருளின் விலையை அதிகமாக கேட்பதை விட்டும் நபி ஸல் தடுத்தார்கள். விலையை ஏற்றி விடும் காரியத்தில் யார் ஈடுபட்டாரோ அவரை நரகத்தில் நுழைத்து தலை கீழாகவும் கால் மேலாகவும் இருக்க வைதனை செய்வது அல்லாஹ்வின் ஹக்காகி விட்டது.  

விற்க நினைத்த விலையை விட அதிகமாக சொல்லி பின்பு குறைக்கலாமா?

عَنْ قَيْلَةَ أُمِّ بَنِي أَنْمَارٍ قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ عُمَرِهِ عِنْدَ الْمَرْوَةِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَبِيعُ وَأَشْتَرِي فَإِذَا أَرَدْتُ أَنْ أَبْتَاعَ الشَّيْءَ سُمْتُ بِهِ أَقَلَّ مِمَّا أُرِيدُ ثُمَّ زِدْتُ ثُمَّ زِدْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ وَإِذَا أَرَدْتُ أَنْ أَبِيعَ الشَّيْءَ سُمْتُ بِهِ أَكْثَرَ مِنْ الَّذِي أُرِيدُ ثُمَّ وَضَعْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَفْعَلِي يَا قَيْلَةُ إِذَا أَرَدْتِ أَنْ تَبْتَاعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أُعْطِيتِ أَوْ مُنِعْتِ وَإِذَا أَرَدْتِ أَنْ تَبِيعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أَعْطَيْتِ أَوْ مَنَعْتِ رواه ابن ماجة

   கைலா ரழி என்ற பெண்மணி நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் விற்பதும் வாங்குவதிலும் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றுகிறேன் அதாவது நான் ஒரு பொருளை வாங்க நினைத்தால் என்ன விலைக்கு வாங்க நினைக்கிறேனோ அதை விட மிகவும் குறைந்த விலைக்குக் கேட்பேன். வியாபாரி தர மறுப்பார். நான் இன்னும் சற்று அதிகப் படுத்திக் கேட்பேன். அப்போதும் மறுப்பார் கடைசியில் நான் மனதில் நினைத்த விலையை கடைசியாக கேட்பேன்.அவர் தந்தால் வாங்குவேன் அதேபோல் அதாவது நான் ஒரு பொருளை விற்க நினைத்தால் என்ன விலைக்கு விற்க நினைக்கிறேனோ அதை விட மிகவும் அதிக விலையைச் சொல்லுவேன். வாங்குபவர் அந்த விலைக்கு வாங்க மறுப்பார். பிறகு நான் இன்னும் சற்று குறைப்பேன் அப்போதும் மறுப்பார் கடைசியில் நான் மனதில் நினைத்த விலையைக் கூறுவேன் அந்த விலைக்கே அவருக்கு விற்பேன் இவ்வாறு செய்வது கூடுமா என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஒரு பொருளை வாங்க நினைத்தால் என்ன விலைக்கு நீ வாங்க நினைக்கிறாயோ அதையே முதலாவதாக கேள். அது உனக்கு அந்த விலைக்கு கிடைத்தாலும் சரி. கிடைக்கா விட்டாலும் சரி. அதேபோல ஒரு பொருளை விற்க நினைத்தால் என்ன விலைக்கு நீ விற்க நினைக்கிறாயோ அதையே முதலில் கூறு. வாங்குபவர் அதை வாங்கினாலும்  சரி. வாங்கா விட்டாலும் சரி.                           

தடுக்கப்பட்ட வியாபாரங்களில் சில...

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخْرَجَانِي إِلَى أَرْضٍ مُقَدَّسَةٍ فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى نَهَرٍ مِنْ دَمٍ فِيهِ رَجُلٌ قَائِمٌ وَعَلَى وَسَطِ النَّهَرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةٌ فَأَقْبَلَ الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ فَإِذَا أَرَادَ الرَّجُلُ أَنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بِحَجَرٍ فِي فِيهِ فَرَدَّهُ حَيْثُ كَانَ فَجَعَلَ كُلَّمَا جَاءَ لِيَخْرُجَ رَمَى فِي فِيهِ بِحَجَرٍ فَيَرْجِعُ كَمَا كَانَ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ الَّذِي رَأَيْتَهُ فِي النَّهَرِ آكِلُ الرِّبَا رواه البخاري2085   

வியாபார ஒப்பந்தம் முடிந்தாலும் பொருள் கைக்கு வரும் முன் அதை அடுத்தவருக்கு விற்பது கூடாது

 عن ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ (بخاري2133) 

உருவப்படங்களை வரையும் தொழிலும், சிலைகளை விற்பதும், மதுவை விற்பதும், இசைக்கருவிகளை விற்பதும் கூடாது 

இறந்த பிராணிகளை விற்பது கூடாது

பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படும்போதே குறைந்த ஆயுளுடன் தான் வளர்க்கப்படுகின்றன. கறிக்கடைகளுக்கு லாரியில் வந்து இறங்கும் முன்பே அவற்றில்  சில கோழிகள் இறந்து விடுகின்றன. ஆனால் அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி அதையும் விற்பதாக கேள்விப்படுகிறோம். அதை விற்பதும் கூடாது. வாங்குவதும் கூடாது.

மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பது கூடாது

عَنْ عُمَرَرضي الله عنه قَال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامًا ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ (ابن ماجة)

மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பவரை அல்லாஹ் வறுமையைக் கொண்டும் வெண் குஷ்டத்தைக் கொண்டும் சோதிப்பான்.

عَنْ فَرُّوخَ مَوْلَى عُثْمَانَ أَنَّ عُمَرَ رَضِ وَهُوَ يَوْمَئِذٍ أَمِيرُ الْمُؤْمِنِينَ خَرَجَ إِلَى الْمَسْجِدِ فَرَأَى طَعَامًا مَنْثُورًا فَقَالَ مَا هَذَا الطَّعَامُ فَقَالُوا طَعَامٌ جُلِبَ إِلَيْنَا قَالَ بَارَكَ اللَّهُ فِيهِ وَفِيمَنْ جَلَبَهُ قِيلَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَإِنَّهُ قَدْ احْتُكِرَ قَالَ وَمَنْ احْتَكَرَهُ قَالُوا فَرُّوخُ مَوْلَى عُثْمَانَ وَفُلَانٌ مَوْلَى عُمَرَ فَأَرْسَلَ إِلَيْهِمَا فَدَعَاهُمَا فَقَالَ مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ قَالَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ فَقَالَ عُمَرُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْإِفْلَاسِ أَوْ بِجُذَامٍ فَقَالَ فَرُّوخُ عِنْدَ ذَلِكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُعَاهِدُ اللَّهَ وَأُعَاهِدُكَ أَنْ لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا وَأَمَّا مَوْلَى عُمَرَ فَقَالَ إِنَّمَا نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ قَالَ أَبُو يَحْيَى فَلَقَدْ رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا (مسند أحمد

உமர் ரழி கலீஃபாவாக இருக்கும்போது ஒருநாள் பள்ளிக்கு முன்பு நிறைய தானிய மூட்டைகள் இருப்பதைக் கண்டு இது என்ன என்று கேட்டார்கள் அப்போது இதுவெல்லாம் இத்தனை நாட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பின் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்று பதில் கூறப்பட்டது. அப்போது உமர் ரழி அவர்கள் இந்த தானியங்களில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக இதை நம்மிடம் கொண்டு வர யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக என்று கூறினார்கள். அதற்கடுத்து அதைப் பதுக்கி வைத்த இருவரைப் பற்றி தகவல் கூறப்பட்டுள்ளது. அவ்விருவரும் அடிமைகள். ஒருவர் உமர் ரழி அவர்களின் அடிமை. மற்றொருவர் உஸ்மான் ரழி அவர்களின் அடிமை. (அடிமைகள் சுயமாக வியாபாரம் செய்ய முதலாளி அனுமதி தந்தால் கூடும்.)

அவ்விருவரையும் உமர் ரழி அவர்கள் அழைத்து ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவ்விருவரும் எங்களின் பணத்தைக் கொடுத்து நாங்கள் பொருளை கொள்முதல் செய்கிறோம். அதை நாங்கள் விரும்பும்போது விற்போம். இதிலென்ன தவறு என்றனர். அவ்விருவருக்கும் உமர் ரழி அவர்கள் மேற்படி ஹதீஸைக்கூறி புத்திமதி கூற, அவ்விருவரில் உஸ்மான் ரழி அவர்களின் அடிமையான ஃபர்ரூஹ் திருந்தி நீங்கள் இவ்வாறு கூறியபின்பு இனிமேல் நான் ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன் என்றார். தன்னுடைய வியாபார இடத்தையே மாற்றி விட்டார். ஆனால் மற்றொருவர் தாம் கூறிய அதே வாதத்தையே முன் வைத்தார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஹ்யா ரஹ் கூறும்போது நான் பிற்காலத்தில் வீண் வாதம் பேசிய அந்த அடிமையை குஷ்டரோகியாக நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.   

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ  (ابن ماجة)  الجالب الذي يجلب السلعة بربح يسير

மக்களின் நலன் கருதி குறைந்த  இலாபத்திற்கு விற்பனை செய்யும் வியாபாரி அல்லாஹ்வின் மூலம் மறைமுகமாக ரிஜ்க் வழங்கப்படுவார். யார் பதுக்கி வைக்கிறாரோ அவர் சபிக்கப்பட்டவர்.     


வியாழன், 23 ஏப்ரல், 2026

ஹஜ்ஜின் நினைவிடங்கள்

 24-04-2026

துல் கஃதா - 6 بسم الله الرحمن الرحيم  

      ஹஜ்ஜின் நினைவிடங்களும் படிப்பினைகளும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புறப்படவிருக்கும் ஹாஜிகள் செய்ய வேண்டிய முன் தயாரிப்புகள் பற்றியும் உளத்தூய்மை என்னும் இக்லாஸுடன் அந்த ஹஜ் அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்கா மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் நாம் எதையெல்லாம் காண்கிறோமோ அந்த நினைவுச் சின்னங்களின் வரலாற்றுப் பிண்ணனிகளையும் நாம் அறிய வேண்டும்.  இது இந்த வருடம் ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு மட்டுமன்றி  ஏற்கெனவே  ஹஜ் உம்ரா செய்தவர்கள் தமது பழைய நினைவுகளை மீண்டும் மனக்கண்ணில் கொண்டு வந்து  மீண்டும் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்  புறப்பட வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப் படுத்தும்.  இந்த வருட ஹாஜிகளுக்கு  நாம் எப்போது  அந்த இடங்களை சந்திப்போம் என்ற ஆர்வத்தையும் இதுவரை ஹஜ் செய்யாதவர்களுக்கு அடுத்த வருடமேனும் எப்படியும் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை இது அதிகப்படுத்தும்.

ஹஜ்ஜுக்கான முன் தயாரிப்புகளில் இறையச்சம் மிக முக்கியமானது. சிறு  சிறு பாவங்கள் செய்பவர்கள் கூட ஹஜ்ஜுக்கு ப் புறப்படுவதற்கு பல நாட்கள் முன்பே அந்தப் பாவங்களை விட்டும் நீங்கி அதிகம் தவ்பா செய்ய வேண்டும் 

وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ (197)القرة

ஹஜ்ஜுக்கான முன் தயாரிப்புகளில் நடை பயிற்சியும் முக்கியமானது. இப்போதிருந்தே நடை பயிற்சி செய்ய வேண்டும்

உடம்பில் ஆரோக்கியம் இருக்கும்போதே ஹஜ் செய்வது நல்லது. வயதானவர்கள் மட்டுமன்றி அதிகம் நடந்து பழகாதவர்கள் தவாஃப், ஸயீ உட்பட பல வணக்கங்களை திருப்தியாக நிறைவேற்ற முடிவதில்லை. சில ஹாஜிகள் முஸ்தலிஃபா வரை நடக்க முடியாமல் முஸ்தலிஃபாவுக்கு வர முடியாத நிலை கூட ஏற்பட்டுள்ளது. முக்கியமான ஜியாரத்திற்குரிய இடங்களைப் பார்க்கச் செல்லும்போது பலர் வாகனங்களிலேயே அமர்ந்து கொள்கின்றனர். அவ்வளவு தூரம் பயணம் செய்து, பணம் செலவழித்து சென்றும் கூட அல்லாஹ்வின் நினைவுச் சின்னங்களை அருகில் சென்று பார்க்க முடியாமல் தூரத்தில் இருந்த படி பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். சில வயதானவர்கள் இளைஞர்களை விடவும் சுறுசுறுப்பாக இருக்கலாம். பெரும்பாலும் அவர்கள் ஊரில் இருக்கும்போது நடந்து பழகியவர்களாக இருக்கலாம்.                 

ஹஜ்ஜில் பொறுமையும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் பிறருக்காக விட்டுக் கொடுத்துப் போகும் தன்மையும் அனுசரித்துப் போகும் தன்மையும் மிக அவசியம். 

   காரணம் வயதானவர்களால் வேகமாக நடக்கவும் முடியாது.அடிக்கடி சிறுநீர் உபாதைகள் ஏற்படும். இதனால் அவர்களுடன் குரூப்பாக செல்பவர்களில் பலருக்கும் சிரமம் ஏற்படும். இவர்களுக்காக அனைவரும் காத்திருக்க வேண்டியிருக்கும். அவர்களை அனுசரித்து அவர்களும் தங்களுடைய கடமைகள் நிறேவேற்ற நாம் காரணமாக இருந்தோம் என்றால் அவர்களுடைய ஹஜ்ஜின் நன்மையில் நாமும் பங்கெடுத்தவர்களாக ஆகுவோம். உதாரணமாக ஒரு ஹாஜி தன்னோடு ஹஜ்ஜுக்கு வந்த உடல் ஊனமுற்ற ஹாஜி ஒருவருக்குப் பொறுப்பாக ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கூடவே  இருந்து தானும் ஹஜ்ஜை நிறைவேற்றி அந்த ஊனமுற்றவரையும் ஹஜ் செய்ய வைத்து விட்டால் இவருக்கு இரண்டு ஹஜ்ஜின் நன்மை கிடைக்கிறது.                              

ஹஜ் என்பது நீண்ட காலங்களுக்கு முன்பே இருந்த பூர்வீகமான வணக்கம்.

عن أَنَس أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« كَانَ مَوْضِعُ الْبَيْتِ فِى زَمَنِ آدَمَ شِبْرًا أَوْ أَكْثَرَ عَلَمًا فَكَانَتِ الْمَلاَئِكَةُ تَحُجُّهُ قَبْلَ آدَمَ ثُمَّ حَجَّ آدَمُ فَاسْتَقْبَلَتْهُ الْمَلاَئِكَةُ فَقَالُوا : يَا آدَمُ مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ : حَجَجْتُ الْبَيْتَ فَقَالُوا : قَدْ حَجَّتْهُ الْمَلاَئِكَةُ قَبْلَكَ(سنن الكبرى للبيهقي

கருத்து- நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் கஃபா சிறிய மண் மேடாக இருந்த போது அவர்கள் ஹஜ் செய்தார்கள்.  ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஹஜ் செய்வதற்கு முன்பே மலக்குகள் ஹஜ் செய்தார்கள். 

عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِىِّ أَوْ غَيْرِهِ قَالَ : حَجَّ آدَمُ عَلَيْهِ السَّلاَمُ فَلَقِيَتْهُ الْمَلاَئِكَةُ فَقَالُوا : بُرَّ نُسُكُكَ آدَمُ لَقَدْ حَجَجْنَا قَبْلَكَ بِأَلْفَىْ عَامٍ.

கருத்து- ஆதம் (அலை) அவர்களிடம் மலக்குகள் நாங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ஹஜ் செய்துள்ளோம் என்றார்கள்.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழைப்பை ஏற்றவர்களுக்கு மட்டுமே ஹஜ்ஜின் பாக்கியம்

கியாமத் நாள் வரை ஹஜ் என்ற அமல் நடைபெறுவதற்காக  கஃபாவை புதுப்பித்துக் கட்டிய இப்றாஹீம் (அலை) அவர்கள் அதன் பின்பு மக்காவுக்காக துஆவும் செய்தார்கள். அனைத்து விதமான கனி வர்க்கங்களும் அங்கு கிடைக்க வேண்டும் என்று துஆச் செய்தார்கள். அந்த  துஆவிற்கு இணங்க பாலஸ்தீனத்தில் இருந்து தாயிஃப் நகரம் அடியோடு பெயர்த்துக் கொண்டு வரப்பட்டது. தாயிஃபில் இருந்து அனைத்து விதமான  பழங்களும் மக்காவுக்குக் கிடைக்கின்றன.                           

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ (126)البقرة 

وَقَدْ أَجَابَ اللَّه دُعَاءَهُ فَجَعَلَهُ حَرَمًا ....وَقَدْ فَعَلَ بِنَقْلِ الطَّائِف مِنْ الشَّام إلَيْهِ  (تفسير الجلالين

  இன்றைக்கு உலகெங்கிலும் விளையும் கனிவர்கங்கள் எந்த பற்றாக்குறையுமில்லாமல் ஹாஜிகளுக்கு கிடைக்கின்றது எல்லா நாடுகளில் தயாராகும் பொருட்களும் கிடைக்கின்றது. மேற்படி வசனத்திற்கு  விளக்கமாக தப்ஸீர் ஜலாலைனில் ஒரு நிகழ்வு காணக்கிடைக்கின்றது. இப்ராஹீம் நபியின் துஆவை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு கட்டளையிட்டான். பாலஸ்தீனி்ல் உள்ள நல்ல கனிவர்கங்கள் விழையக்கூடிய குழுமையான ஓர் ஊரை அடியோடு பெயர்த்து வந்து மக்காவிற்கு அருகில் வைக்கும்படி உத்திரவிட்டான் அவ்வாறே ஜிப்ரயீல் ( அலை) அந்த ஊரை எடுத்து வந்து மக்காவிற்கு அருகில் உள்ள தாயிஃபில் வைத்து விட்டார்கள். இன்னும் சில அறிவிப்புகளில் அந்த ஊரை வைத்துக்கொண்டே ஜிப்ரயீல் ( அலை) அவர்கள் தவாப் செய்ததால் அந்த ஊருக்கு தாயிப் என்பதாக பெயர் இன்றும் அவ்வூர் அழகிய குழுமையான ஊராக காட்சியளிக்கின்றது இது இப்ராஹீம் நபியின் துஆவின் பலனாகும்.


கஃபா ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்தது என்பதற்கான தெளிவான ஆதாரம்.

 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلُ قَالَ الْمَسْجِدُ الْحَرَامُ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ الْمَسْجِدُ الْأَقْصَى قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ سَنَةً (مسلم)     وجه الحديث أن هذين المسجدين بنيا قديما ثم خربا ثم بنيا   (مرقاة

முதன்முதலில் கட்டப்பட்டது எந்த மஸ்ஜித் என்று கேட்கப்பட்டபோது மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி (ஸல்) கூறினார்கள். இரண்டாவதாக கட்டப்பட்டது எந்த மஸ்ஜித் என்று கேட்கப்பட்டபோது மஸ்ஜிதுல் அக்ஸா என்று நபி (ஸல்) கூறினார்கள். இரண்டுக்கும் எத்தனை வருட இடைவெளி என்று கேட்கப்பட்டபோது 40 வருடங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.            

விளக்கம்- மஸ்ஜிதுல் ஹராம் இப்றாஹீம் அலை அவர்களால் கட்டப்பட்டது. பைத்துல் முகத்தஸ் நபி சுலைமான் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. இந்த இரண்டு நபிமார்களுக்கு மத்தியில் நீண்ட கால இடைவெளி உள்ளது. அப்படியானால் நாற்பது வருட இடைவெளி என்பது இந்த இரண்டு மஸ்ஜித்களும் மலக்குகளால் முதன் முதலில் கட்டப்பட்ட போது நாற்பது வருட இடைவெளி என்று பொருளாகும்.               

  ஆதம் (அலை) எத்தனை ஹஜ் செய்தார்கள் என்பதில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. எனினும் ஒவ்வொரு தடவையும் இந்தியாவில் இருந்து நடந்தே வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.                                                                             

روي أن آدم عليه السلام حج أربعين سنة من الهند ماشياً (تفسير الالوسي -  روح المعاني )

عن أبي هريرة قال : حج آدم عليه السلام فقضى المناسك ، فلما حج قال : يا رب إن لكل عامل أجراً قال الله تعالى : أما أنت يا آدم فقد غفرت لك ، وأما ذريتك فمن جاء منهم هذا البيت فباء بذنبه غفرت له (الدر المنثور

நபி ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க ஹஜ்ஜை நிறைவேற்றிய போது அல்லாஹ்விடம் ரப்பே ஒவ்வொரு நற்செயலுக்கும் கூலி உண்டு. இதற்கு என்ன நற்கூலி என்று கேட்க, அதற்கு அல்லாஹ் நான் உம்மை முற்றிலுமாக மன்னித்து விட்டேன். அது மட்டுமல்ல உம் சந்த தியில் யாரெல்லாம் இங்கு வருவார்களோ அவர்களையும் மன்னித்து விட்டேன் என்று கூறினான். மற்றொரு அறிவிப்பில் நான் உம்மை மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறியதும் சந்த திகளுக்கும் அந்த மன்னிப்பை ஆதம் அலைஹிஸ்ஸலாம் வேண்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.                            

எல்லா நபிமார்களும் ஹஜ் செய்துள்ளார்கள்.

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ قَالَ : مَا مِنْ نَبِىٍّ إِلاَّ وَقَدْ حَجَّ الْبَيْتَ إِلاَّ مَا كَانَ مِنْ هُودٍ وَصَالِحٍ وَلَقَدْ حَجَّهُ نُوحٌ فَلَمَّا كَانَ مِنَ الأَرْضِ مَا كَانَ مِنَ الْغَرَقِ أَصَابَ الْبَيْتَ مَا أَصَابَ الأَرْضَ وَكَانَ الْبَيْتُ رَبْوَةً حَمْرَاءَ فَبَعَثَ اللَّهُ هُودًا عَلَيْهِ السَّلاَمُ فَتَشَاغَلَ بِأَمْرِ قَوْمِهِ حَتَّى قَبَضَهُ اللَّهُ إِلَيْهِ فَلَمْ يَحُجَّهُ حَتَّى مَاتَ فَلَمَّا بَوَّأَهُ اللَّهُ لإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ حَجَّهُ ثُمَّ لَمْ يَبْقَ نَبِىٌّ بَعْدَهُ إِلاَّ حَجَّهُ.

எல்லா நபிமார்களும் ஹஜ் செய்துள்ளார்கள். நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம், சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரைத் தவிர. நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தில் கஃபாவும் பாதிப்புக்கு உள்ளானது. ஆனாலும் அதற்கு முன்பே நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டார்கள்.   வெள்ளப்பிரளயத்திற்குப் பின் கஃபா சிவப்பு மண் மேடாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. அதன்பின் நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நபியாக அனுப்பினான் அவர்களுடைய சமூக மக்களிடம் பிரச்சினைகளை சமாளிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்த காரணத்தால் அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை. அதன்பின் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கஃபாவின் இடத்தைக் காட்டித் தந்தான். அவர்கள் அதைப் புதுப்பொலிவுடன் கட்டினார்கள். அதன் பின் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹஜ் செய்தார்கள். அதன் பின்பு வந்த எந்த நபியும் ஹஜ் செய்யாமல் இருந்ததில்லை. 

கடைசி காலத்தில் ஈஸா (அலை) அவர்களும் ஹஜ் செய்வார்கள்.

عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا  (مسلم) صحيح ابن حبان باب ذكر الإخبار بأن عيسى ابن مريم يحج البيت العتيق بعد قتله الدجال

ஹஜ்ஜின் நினைவிடங்கள்

மக்கா மதீனாவில் ஹாஜிகள் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களும் பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதை அறிந்து கொண்டு ஹாஜிகளை அந்த இடங்களை சந்திக்கும்போது அது உணர்வுப் பூர்வமானதாக அமையும்.

   மூன்று பொருட்களை மனிதன் எத்தனை முறை  பயன்படுத்தினாலும் அவனது உள்ளத்தின் ஆசை தீராது என உலமாக்கள் கூறுகிறார்கள். முதலாவது:வானம்- அதன் நிறம்,அதில் தோன்றும் சூரியன் சந்திரன் நட்சத்திரம் போன்றவைகளை எத்தனை தடவை பார்த்தாலும் ஆசை தீராது. மேலும் ஒவ்வொரு தடவை காணும்போதும் புதிய தோற்றம் தரும்.2.தண்ணீர்.  ஆயுள் பூராவும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம் ஆனாலும் கடும் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்கும் போது அதன் சுகமே தனிதான். மூன்றாவது:கஃபதுல்லாஹ்வை பார்ப்பது-எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.மேலும் ஒவ்வொரு தடவையும் ஒரு புது தோற்றம் தரும். அல்லாஹ் மனிதனுக்கு பார்வையை வழங்கியதின் பயன் அந்த இல்லத்தை பார்க்கும் போதே பூர்த்தியாகிறது என ஒரு கவிஞர் கூறுகிறார். இப்பூமியின் மையத்தில் புள்ளி வைக்க வேண்டுமானால் அது கஃபாவின் மீது வைக்கவேண்டும் என்று காரி தய்யிப் ரஹ் கூறுகிறார்கள்.

அறியாமைக் காலத்தில்  குரைஷிகளிடமும் ஹலால் பேணுதல் இருந்ததன் அடையாளம்  ஹதீம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ " سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ نَعَمْ قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ؟ قَالَ: إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمْ النَّفَقَةُ قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ: فَعَلَ ذَلِكَ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ" (بخاري

  சுருக்கம்- ஹதீமைப் பற்றி அன்னை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது அதுவும் கஃபா தான் என்று கூறினார்கள் ஏன் அதை கஃபாவில் இணைக்கவில்லை என ஆயிஷா(ரழி) அவர்கள் கேட்ட போது அதற்கு நபி (ஸல்) உன்னுடைய சமூகத்தினர் அதாவது குறைஷிகள் கஃபாவைக் கட்டியபோது பணப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது என்று கூறினார்கள். ஏன் அதன் வாசல் இவ்வளவு உயரமாக இருக்கிறது என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்க, அனைவரும் எளிதாக அதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் விரும்பும் முக்கியமானவர்கள் மட்டுமே உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காகவும் குறைஷிகள் அவ்வாறு கட்டினார்கள். குறைஷிகள் இஸ்லாத்திற்கு புதிய நபர்களாக இருந்திருக்கா விட்டால் அதாவது நான் புதிதாக எதை எதையோ செய்கிறேன் என்று எண்ணைப் பற்றி அவர்கள் தவறான எண்ணம் கொள்ள மாட்டார்கள் என்றிருந்தால் நான் ஹதீமை கஃபாவுடன் இணைத்துக் கட்டியிருப்பேன். வாசலை தரைக்கு நெருக்கமாகவும் ஆக்கியிருப்பேன் என்று கூறினார்கள் 

عَنْ أَبِي وَهْبٍ الْمَخْزُومِيِّ أَنَّهُ قَالَ لِقُرَيْشٍ : لَا تُدْخِلُوا فِيهِ مِنْ كَسْبِكُمْ إلَّا طَيِّبًا وَلَا تُدْخِلُوا فِيهِ مَهْرَ بَغِيٍّ وَلَا بَيْعَ رِبًا وَلَا مَظْلَمَةٌ أَحَدٍ مِنْ النَّاسِ

குறைஷிகளுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற விளக்கம் ஃபத்ஹுல் பாரி நூலில் பின்வருமாறு உள்ளது   அபூ வஹ்ப் என்பவர் எழுந்து குறைஷிகளிடம் பேசினார் மக்களே நிச்சயமாக கஃபா ஆலயத்தின் கட்டிடப் பணியில் முறையான சம்பாத்தியத்தைத் தவிர  பயன்படுத்த வேண்டாம். வட்டிப் பணத்தைப் பயன்படுத்த வேண்டாம். யாரிடமிருந்தும் அநியாயமாகப் பெறப்பட்ட பணத்தையும் பயன்படுத்த வேண்டாம்.

أن أبا وهب بن عايذ بن عمران بن مخزوم قال لقريش لا تدخلوا من كسبكم إلا طيبا ولا تدخلوا فيه مهر بغي ولا بيع ربا ولا مظلمة أحد من الناس وعند موسى بن عقبة أن الوليد بن المغيرة قال لا تجعلوا فيها مالا أخذ غصبا ولا قطعت فيه رحم ولا انتهكت فيه حرمة  وفي  رواية لا تدخلوا في بيت ربكم إلا طيب أموالكم وتجنبوا الخبيث فإن الله طيب لا يقبل إلا طيبا فلعلهما جميعا قالا ذلك (شرح الزرقاني

படிப்பினை- அறியாமைக் காலத்திலும் குறைஷிகளிடம் இத்தகைய பேணுதல் இருந்துள்ளது என்றால் இன்று நம்முடைய நிலை ஹலால் ஹராமைப் பேணுகின்ற விஷயத்தில்  எவ்வாறு உள்ளது என்று சிந்திக்க வேண்டும். 

கஃபா கட்டப்பட்ட வரலாறு

   கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது. 1.ஆதம் அலை அவர்கள் படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்களின் கரத்தால் கட்டவைத்தான். 2. ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள்.  3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாயீல் அலை அவர்கள் கட்டினார்கள்.இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. 4.நபி ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள்.  இந்த நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள். நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித கஃபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: கஃபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஃபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. கஃபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கத் தயாராகினர். ”குறைஷிகளே! கஃபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்களிடமிருந்து அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது என்று சொல்லிக்கொண்டு,  ஒவ்வொரு குறைஷிக் குலத்தாரும் தங்களுக்கிடையே அப் பணியைப் பிரித்துக் கொண்டு அப்பணியை செய்து முடித்தனர். ஆனால் குரைஷிகள் ஹலாலான பணப்பற்றாக்குறையின் காரணத்தினால் இன்றைக்கு உள்ள ஹதீமை கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர். 

قال مجاهد : خلق الله موضع هذا البيت قبل أن يخلق شيئا من الأرض بألفي سنة وأن قواعده لفي الأرض السابعة السفلى (قرطبي

5. யஜீத் ஆட்சிக்காலத்தில் அப்துல்லாஹிப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் மக்காவின் ஆளுநராக இருந்த போது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பிய படி கஃபாவை சீரமைத்தார்கள். 6.அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் கட்டினார். அப்துல்லாஹிப்னு ஜுபைர்  ரழிஅவர்களை கொலை செய்ததும் ஹஜ்ஜாஜ் தான். அவர் தன் காலத்தில் மீண்டும் பழையபடியே ஹதீமை கஃபாவுடன் சேர்க்காமல் தனியாக விட்டு கட்டினார்.  இப்னு ஜுபைர் ரழி அவர்கள் கட்டியதை ஹஜ்ஜாஜ் இடித்தது யாருக்கும் பிடிக்கவில்லை மீண்டும் அதை மாற்ற ஆலோசனை நடந்த போது கஃபா மன்னர்களின் விளையாட்டு மைதானமாக ஆகி விடக்கூடாது எனக்கூறி இமாம் மாலிக் (ரஹ்) அதை தடுத்து விட்டார்கள்

فَدَلَّ هَذَا عَلَى صَوَاب مَا فَعَلَهُ ابْن الزُّبَيْر فَلَوْ تُرِكَ لَكَانَ جَيِّدًا وَلَكِنْ بَعْد مَا رَجَعَ الْأَمْر إِلَى هَذَا الْحَال فَقَدْ كَرِهَ بَعْض الْعُلَمَاء أَنْ يُغَيَّر عَنْ حَاله كَمَا ذُكِرَ عَنْ أَمِير الْمُؤْمِنِينَ هَارُون الرَّشِيد أَوْ أَبِيهِ الْمَهْدِيّ أَنَّهُ سَأَلَ الْإِمَام مَالِكًا عَنْ هَدْم الْكَعْبَة وَرَدّهَا إِلَى مَا فَعَلَهُ ابْنُ الزُّبَيْر فَقَالَ لَهُ مَالِك يَا أَمِير الْمُؤْمِنِينَ لَا تَجْعَل كَعْبَة اللَّه مَلْعَبَة لِلْمُلُوكِ لَا يَشَاء أَحَد أَنْ يَهْدِمهَا إِلَّا هَدَمَهَا فَتَرَكَ ذَلِكَ الرَّشِيد (تفسير ابن كثير     

அதற்குப்பின்னர் வாழ்ந்த புகஹாக்கள் இனி எந்த ஆட்சியாளரும் இந்த அமைப்பை மாற்றக்கூடாது என பத்வா வழங்கிவிட்டார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அதே அமைப்பே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மகாமே இப்றாஹீம் வரலாறு

عَنْ أَنَسٍ قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّي فِي ثَلَاثٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ{وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى}وَآيَةُ الْحِجَابِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ{عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ}فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ (بخاري 

   ஹழ்ரத் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மூன்று தருணங்களில் என் கருத்துக்குத் தோதுவாக ஆயத்தை இறக்கினான். 1.அல்லாஹ்வின் தூதரே மகாமே இப்றாஹீம் அருகே தொழ வேண்டும் என்று கூறினேன் அல்லாஹ் நான் கூறிய அதை வார்த்தையை ஆயத்தாக இறக்கினான்.  அல்லாஹ்வின் தூதரே உங்கள் வீட்டுக்கு நல்லவரும் வருகிறார் கெட்டவரும் வருகிறார். எனவே உங்கள் மனைவியரை ஹிஜாப் அணியச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று கூறினேன் அல்லாஹ் அதையும் ஆயத்தாக இறக்கினான். 3. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மீது மனைவிமார்கள் ஆட்சேபனை  தெரிவித்தார்கள். (அதாவது செலவுக்குக் கொடுக்கும் விஷயத்தில் ஆட்சேபனை  தெரிவித்தார்கள்.) அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இவர்களை தலாக் சொன்னாலும் அல்லாஹ் இவர்களுக்கு பதிலாக சிறந்த மனைவிமார்களை அல்லாஹ் ஏற்படுத்தித் தருவான் என்றேன். அல்லாஹ் அதையும் ஆயத்தாக இறக்கினான்.                                                                                      


ஸஃபா மர்வா இடையே ஓடுவதன் தாத்பரியம்

  ஸஃபா மர்வா இடையே ஸயீ செய்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஹாஜரா அம்மையார் அவர்களின் நினைவாக நாம் ஓடுகிறோம். அந்த அன்னையின் உள்ளத்தில் எத்தகைய பயபக்தி இருந்ததோ  எப்படியேனும் அல்லாஹ் நமக்கு நமக்கு  உதவி செய்தான் என்று எப்படி உறுதியாக நம்பினார்களோ அதே போன்று நாமும் அல்லாஹ்வின் அருளை நாடி ஓட வேண்டும் என்பது இதன் கருத்தாக இருக்கிறது. 

 இப்போது நமக்கு ஒரு கேள்வி எழலாம். சஃபா, மர்வா இடையே ஆண்கள் மட்டும் ஓட வேண்டும் என்றும் பெண்கள் நடந்து சென்றால் போதும் என்று சட்டம் உள்ளது ஆனால் உண்மையில் அன்றைக்கு ஓடியது ஒரு பெண்தானே அதன்படி இன்றைக்கும் பெண்கள் தானே ஓத வேண்டும் என்ற கேள்வி வருமானால் அதற்கு ஒரு பதில் கூறப் படுகிறது அதாவது ஒட்டு மொத்த பெண்களுக்கும் சேர்த்து அன்றைக்கு அன்னை ஹாஜரா அம்மையார் அவர்கள் ஓடி விட்டார்கள். எனவே இன்று பெண்கள் ஓட வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது.

நினைவுச் சின்னங்கள் எதுவும் மாற்றப்படாமல், அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது

பழைய தூண்கள் அப்படியே இருக்க அதற்கு மேலே தான் தற்போதைய தூண்கள் கட்டப்பட்டுள்ளன. நபி ஸல் அவர்களின் மிம்பரைக்கூட நல்லெண்ணத்தில் அடிப்படையில் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்ற நினைத்த போது அல்லாஹ் அதை விரும்பாததால் பல்வேறு எச்சரிக்கைகளை ஏற்படுத்தி எச்சரித்து அம்முயற்சியை தடுத்தான்

عن أبن الزناد أن النبي صلى الله عليه وسلم كان يجلس على المجلس ويضع رجليه على الدرجة الثانية فلما ولى أبو بكر رضي الله عنه قام على الدرجة الثانية ووضع رجليه على الدرجة السفلى فلما ولى عمر رضي الله عنه قام على الدرجة السفلى ووضع رجليه على الأرض إذا قعد فلما ولى عثمان رضي الله عنه فعل ذلك ست سنين من خلافته ثم علا إلى موضع النبيّ صلى الله عليه وسلم قالوا فلما أستخلف معاوية زاد في المنبر فجعل له ست درجات وكان عثمان أوّل من كسا المنبر قبطية قالوا فلما قدم معاوية عام حج حرك المنبر وأراد أن يخرجه إلى الشام فكسفت الشمس يومئذ حتى رؤيت النجوم فاعتذر معاوية رضي الله عنه إلى الناس وقال أردت أنظر إلى ما تحته وخشيت عليه من الأرضة وفي رواية له إن معاوية كتب إلى مروان بذلك فقلعه فأصابتهم ريح مظلمة بدت فيها النجوم نهارا فقال مروان إنما كتب إلى أن أرفعه من الأرض فدعا النجاجرة فعمل هذه الدرجات ورفعوه عليها وهي يعني الدرجات التي زادها ست درجات ولم يزد فيه أحد قبله ولا بعده- الكتاب:خلاصة الوفا بأخبار دار المصطفى                             

  சுருக்கம்- நபி ஸல் அவர்கள் மிம்பரில் மூன்றாம் படியில் அமர்ந்து 2-வது படியில் கால் வைப்பார்கள். அபூபக்கர் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் மரியாதை காரணமாக  இரண்டாவது படியில் அமர்ந்து முதலாவது படியில் கால் வைத்தார்கள். உமர்  ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன்  முதலாவது படியில் அமர்ந்து தரையில் கால் வைத்தார்கள். உஸ்மான் ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன்  வேறு வழியில்லாமல் உமர் ரழி அவர்களைப்போல் முதலாவது படியில்  அமர்ந்து தரையில் கால் வைத்தார்கள். இவ்வாறு ஆறு மாதங்கள் செய்தார்கள். அதற்குப் பிறகு மஷ்வரா அடிப்படையில் நபி ஸல் அவர்கள் அமர்ந்த படிக்கட்டின்மீதே அமர்ந்தார்கள். முஆவியா ரழி அவர்கள் பொறுப்பேற்றவுடன்  மிம்பரில் ஆறு படிக்கட்டுகளை அமைத்தார்கள். அதற்குப் பிறகு அதை விட யாரும் அதை அதிகப் படுத்தவில்லை. முஆவியா ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது ஆட்சி மையம் ஷாம் பகுதியாக இருந்த தால் நபி ஸல் அவர்களின் மிம்பரை அப்படியே இடம் பெயர்த்து ஷாமுக்குக் கொண்டு செல்ல எண்ணி அதற்கு உத்தரவிட்டார்கள். ஆனால் அந்த முயற்சியில் ஈடுபட்டபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது மற்றொரு அறிவிப்பில் பட்டப் பகல் நேரத்திலேயே கடும் இருள் ஏற்பட்டு நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்தன. உடனே அந்த முயற்சி கை விடப்பட்டது. அப்போது தான் ஆறு படிக்கட்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதாவது நபி ஸல் அமர்ந்த படிக்கட்டு மேலே இருக்கும். அதில் யாரும் அமர வேண்டாம் என்ற மரியாதைக்காக அவ்வாறு செய்யப்பட்டது. 

ஹஜ்ஜில் இக்லாஸ் உளத்தூய்மை மிகவும் முக்கியமானது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:قَالَ اللهُ عَزَّ وَجَلَّ:فَمَنْ عَمِلَ فِيَّ عَمَلًا أَشْرَكَ فِيهِ غَيْرِي فَأَنَا مِنْهُ بَرِيءٌ هُوَ لِلَّذِي أَشْرَكَ-(رواه البيهقي شعب الايمان)

யார் ஒரு அமலைச் செய்து அதில் அல்லாஹ்வுடன் மற்றொருவரைக் கூட்டாக்கிக் கொள்வாரோ அவரை விட்டும் நான் நீங்கி விட்டேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ قَالَ:وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ:الرِّيَاءُ إِنَّ اللهَ يَقُولُ يَوْمَ يُجَازِي الْعِبَادَ بِأَعْمَالِهِمِ:اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً أَوْ خَيْرًا(بيهقي شعب الايمان-  

நான் சிறிய ஷிர்கை உங்களிடம் மிகவும் அஞ்சுகிறேன் என நபி ஸல் கூறிய போது சிறிய ஷிர்க் என்றால் என்ன என்று கேட்டதற்கு முகஸ்துதி என நபி ஸல் கூறி விட்டு யார் முகஸ்துதிக்காக அமல் செய்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் நீங்கள் யாருக்காக இந்த நற்காரியம் செய்தீர்களோ அவர்களிடம் சென்று நற்கூலியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என்றார்கள். 

عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه خَرَجَ إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ بِمُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه عِنْدَ قَبْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي،فَقَالَ: مَا يُبْكِيكَ يَا مُعَاذُ ؟ قَالَ: يُبْكِينِي مَا سَمِعْتُ مِنْ صَاحِبِ هَذَا الْقَبْرِ . قَالَ: مَا هُوَ ؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: " إِنَّ يَسِيرًا مِنَ الرِّيَاءِ شِرْكٌ، وَإِنَّ مَنْ عَادَى أَوْلِيَاءَ اللهِ فَقَدْ بَارَزَ اللهَ بِالْمُحَارَبَةِ، وَإِنَّ اللهَ يُحِبُّ الْأَبْرَارَالْأَخْفِيَاءَ الْأَتْقِيَاءَ الَّذِينَ إِنْ غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الدُّجَى يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ (رواه البيهقي شعب الايمان)

முஆத் ரழி அவர்கள் நபி ஸல் அவர்களின் கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள் எதற்காக அழுகிறீர்கள் என்று கேட்ட போது இந்த கப்ரு உடையவர் கூறிய  “சிறிதளவு முகஸ்துதியும் கூட ஒரு வகையில் ஷிர்க்” என்ற வார்த்தைகள் என்னை அழ வைத்து விட்டது என்றார்கள். முடிவுரை- எனவே ஹாஜிகளின் உள்ளத்தில் சிறிதளவும் பெருமை இருப்பது கூடாது. பகைமையும் இருப்பது கூடாது. சிறிதளவு பகைமை இருந்தாலும் அதை நீக்கி விட்டுத்தான் ஹஜ்ஜுக்குப் புறப்பட வேண்டும்.                                    


வியாழன், 9 ஏப்ரல், 2026

ஒற்றுமையே பலம்

 10-04-2026

SHAWWAL-  21 بسم الله الرحمن الرحيم  

       ஒற்றுமையே பலம்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

  ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேச வேண்டிய நேரம் இதுவாகும். சர்வதேச அளவிலும் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. உலகின் 195 நாடுகளில் சுமார் 56 நாடுகள் முஸ்லிம் நாடுகள் தான். ஆனாலும் ஒற்றுமை இல்லாத காரணத்தால் பல முஸ்லிம் நாட்டு மன்னர்களிடம் இறையச்சம் இல்லாத காரணத்தால் அமெரிக்காவுக்கு அடங்கிப் போய்க் கிடக்கும் சூழ்நிலை உள்ளது.இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே வார்டில் ஆறு முஸ்லிம்கள் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டனர். 1.ஹயாத் கான். இவர் வாங்கிய ஓட்டுகள் 32.   2. ரசூல் கான் இவர் வாங்கிய ஓட்டுகள் 75.   3.முஸ்ரஃப் அலி. இவர் வாங்கிய ஓட்டுகள்  184.   4. அக்பர் காஜி இவர் வாங்கிய ஓட்டுகள் 239.  5.மன்ஷீகான் இவர் வாங்கிய ஓட்டுகள் 378.   6.காஜி அமீன் இவர் வாங்கிய ஓட்டுகள் 528.  இவர்கள் எல்லோருடைய ஓட்டுகளையும் இணைத்தால் மொத்தம் 1406.  ஆனால் ஜெயித்தது யார் தெரியுமா? பிற சமுதாயத்தின் ஒற்றுமை வேட்பாளர் தர்மேந்திரா 589 வாக்குகள் பெற்று ஜெயித்தார். இது ஒரு உதாரணம்தான். இதுதான் நாடெங்கும் முஸ்லிம் வேட்பாளர்களின் நிலை. முஸ்லிம்கள் சிதறிக் கிடப்பதன் காரணமாக நாடெங்கும் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளனர். நாட்டில் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதில் சில முஸ்லிம்கள் இணையாமல் இருப்பதில்லை.                     

                                                       

ஒற்றுமை சிதைந்தால் உங்களின் பலம் குன்றி விடும்

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (46) الانفال

وإنما يراد به في هذا الموضع: وتذهب قوتكم وبأسكم، فتضعفوا ويدخلكم الوهن والخلل. (الكتاب : جامع البيان في تأويل القرآن)

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (ஒற்றுமையில்லாமல்) சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறு சண்டையிட்டால் நீங்கள் கோழைகளாக ஆகி விடுவீர்கள். உங்களின் காற்றும் சென்று விடும். (அதாவது உங்களின் பலம் குன்றி விடும்.) காற்றுப் போன பலூன் என்று உதாரணம் சொல்வது போன்று....

ஒற்றுமை இல்லாததால் எத்தனையோ தோல்வி அனுபவங்கள் கிடைத்த போதும் நம் சமுதாயம் திருந்தவில்லை

وَقَالَ مُعَاوِيَةُ لاَ حَكِيمَ إِلاَّ ذُو تَجْرِبَةٍ (بخاري)

அனுபவம் என்ற மருத்துவரை விட மிகப் பெரும் மருத்துவர் இல்லை. 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ (بخاري) 

விஷ ஜந்துக்களின் ஒரே பொந்துக்குள் இரண்டு தடவை கை விட்டு முஃமின் கடி வாங்க மாட்டான்.

   விளக்கம்- ஒரு தடவை ஒரு பொந்துக்கள் கையை விட்டு அங்கிருக்கும் பூச்சி கடித்த பின் மற்றொரு முறையும் முஃமின் அங்கேயே திரும்பவும் கையை விட்டு கடி வாங்க மாட்டான். சுதாரித்துக் கொள்வான் என்பது இதன் மேலோட்டமாக விளக்கமாகும். ஆனால் பல்வேறு விஷயங்களுக்குப் பொருந்தும். ஒரு தடவை ஏமாந்தவன் இன்னொரு முறையும் ஏமாற மாட்டான். ஒரு தொழிலில் ஒரு தடவை ஈடுபட்டு நஷ்டத்தை சந்தித்தவன் ஒரு இன்னொரு தடவையும் அதே முறையில் அத்தொழிலை செய்து ஏமாற மாட்டான். ஒருவனிடம் காசு கொடுத்து ஏமாற்றப்பட்ட பின்பு மீண்டும் அவனிடமே காசு கொடுத்து ஏமாற மாட்டான். என்பது போன்ற பல்வேறு விளக்கங்கள் இதற்கு உண்டு.                                                                

الْمُرَاد الْخِدَاع فِي أُمُور الْآخِرَة دُون الدُّنْيَا . قَالَ : وَسَبَب الْحَدِيث مَعْرُوف ، وَهُوَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَسَرَ أَبَا عَزَّة الشَّاعِر يَوْم بَدْر ، فَمَنَّ عَلَيْهِ ، وَعَاهَدَهُ أَلَّا يُحَرِّض عَلَيْهِ وَلَا يَهْجُوهُ ، وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ ، ثُمَّ رَجَعَ إِلَى التَّحْرِيض وَالْهِجَاء ، ثُمَّ أَسَرَهُ يَوْم أُحُد ، فَسَأَلَهُ الْمَنّ ، فَقَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " الْمُؤْمِن لَا يُلْدَغ مِنْ جُحْر مَرَّتَيْنِ "  (شرح النووي علي مسلم)

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو عَزَّةَ يَوْمَ بَدْرٍ : يَا رَسُولَ اللَّهِ أَنْتَ أَعْرَفُ النَّاسِ بِفَاقَتِى وَعِيَالِى وَإِنِّى ذُو بَنَاتٍ قَالَ فَرَّقَ لَهُ وَمَنَّ عَلَيْهِ وَعَفَا عَنْهُ وَخَرَجَ إِلَى مَكَّةَ بِلاَ فِدَاءٍ فَلَمَّا أَتَى مَكَّةَ هَجَا النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَحَرَّضَ الْمُشْرِكِينَ عَلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأُسِرَ يَوْمَ أُحُدٍ أُتِىَ بِهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ : وَكَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ :« لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ ».  (السنن الكبرى للبيهقي)

ABOO  IZZAA   என்ற கவிஞன் நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்து கவிதை பாடுபவன். அவனை பத்ருப்போரில் நபி ஸல் அவர்கள் சிறை பிடித்தார்கள். அப்போது அவன் என்னை மன்னித்து விடுங்கள். நான் வறியவன். பெண் குழந்தைகளை வைத்திருப்பவன் என்றெல்லாம் கெஞ்சிய போது அவன் மீது இரக்கப் பட்டு அவனிடம் ஃபித்யாவும் வாங்காமல் விட்டு விட்டார்கள். அவன் மக்காவுக்கு வந்த பின் மீண்டும் இணை வைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்து கவிதை பாடினான். மீண்டும் அவன் உஹதில் பிடிபட்டான். அப்போதும் அவன் முன்பு போல கெஞ்சிய போது நபி ஸல் அவர்கள் அப்போது ஒரு முஃமின் இரண்டு தடவை ஏமாற மாட்டான் என்ற வார்த்தையைச் சொன்னார்கள்.

 இந்த ஹதீஸுக்கு ஏற்றவாறு இன்று முஸ்லிம் சமூகம் செய்த தவறையே மீண்டும் செய்து தனக்குத் தானே தோல்வியை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. 

   இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளில் கூட சங்பரிவார் கட்சி ஜெயிப்பதற்குக் காரணம்-அங்கு முஸ்லிம் வேட்பாளர் மூன்று நான்கு கட்சிகளில் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள் அது எதிரிகளுக்கே சாதகமாக அமைகிறது. சங்பரிவார் வேட்பாளர் பெறும் வாக்குளை விட அம்மூன்று முஸ்லிம்களும் சேர்ந்து பெறும் வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் பல மடங்கு அதிகம். எனினும் வாக்குகள் சிதறுவதால் எந்த முஸ்லிமும் வெற்றி பெற முடிவதில்லை. உபி.யில் முஸ்லிம்கள் நிறைந்த தேவ்பந்த் பகுதியிலும், கேரளாவில் பல இடங்களிலும் இதே தான் நடந்தது. சங்பரிவார் கட்சியைச் சார்ந்த முக்கியப்புள்ளியிடம் இந்த தேர்தலில் நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது முஸ்லிம் அமைப்புகளை ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்வோம் அதுவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு என்று கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறக்காரணம்முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்ற நிலை இந்தியாவில் பெரும்பாலும் உள்ளது.அந்த நிலை உருவாக விடக்கூடாது என்பதற்காக இத்தகைய சூழ்ச்சி நடைபெறுகிறது. அல்லாஹ் சூழ்ச்சிகளை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக                                                     

ஒன்றிணைந்து துஆ செய்தால் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுமோ 

அவ்வாறே ஓரணியில் இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி நிச்சயம்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَمَّنَ الْإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ آمِينَ (بخاري)

(அல்ஹம்து சூரா ஓதி முடித்த பிறகு,) இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் அவருடன் சேர்ந்து ஆமீன் கூறுங்கள். ஏனென்றால் யாருடைய ஆமீன் மலக்குமார்களின் ஆமீனுடன் ஒன்றிணையுமோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். 

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا 89)يونس -   قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة (تفسير ابن كثير)قَالَ أَبُو الْعَالِيَة وَأَبُو صَالِح وَعِكْرِمَة وَمُحَمَّد بْن كَعْب الْقُرَظِيّ وَالرَّبِيع بْن أَنَس دَعَا مُوسَى وَأَمَّنَ هَارُون أَيْ قَدْ أَجَبْنَاكُمَا فِيمَا سَأَلْتُمَا مِنْ تَدْمِير آلِ فِرْعَوْن .وَقَدْ يَحْتَجّ بِهَذِهِ الْآيَة مَنْ يَقُول إِنَّ تَأْمِين الْمَأْمُوم عَلَى قِرَاءَة الْفَاتِحَة يُنَزَّل مَنْزِلَة قِرَاءَتهَا لِأَنَّ مُوسَى دَعَا وَهَارُون أَمَّنَ وَقَالَ تَعَالَى " قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا " (تفسير ابن كثير)

ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் சொன்னால் ஆமீன் சொன்னவரும் அதே துஆவை ஓதியதாக கருதப்படுவார். எனவே தான் மேற்படி வசனத்தில் மூஸா அலா மட்டும் தான் துஆ செய்தார்கள். ஹாரூன் அலை ஆமீன் மட்டுமே கூறினார்கள். இருப்பினும் அல்லாஹ் உங்கள் இருவரின் துஆவும் ஏற்கப்பட்டது என்று கூறினான்.                                 

أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ قَالَ أَبُو دَاوُد إِذَا كُنْتَ فِي وَلِيمَةٍ فَوُضِعَ الْعَشَاءُ فَلَا تَأْكُلْ حَتَّى يَأْذَنَ لَكَ صَاحِبُ الدَّارِ-ابوداود

சில நபித்தோழர்கள் நபி ஸல் அவர்களிடம் நாங்கள் உண்ணுகிறோம் ஆனால் வயிறு நிரம்புவதில்லை என்று கூறிய போது நீங்கள் தனித்தனியாக உணவு உண்ணுகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள் அதற்கு நபி ஸல் அவர்கள் இனிமேல் சேர்ந்து உண்ணுங்கள். பிஸ்மில்லாஹ் கூறி உண்ணுங்கள் உங்களுக்கு பரக்கத் செய்யப்படும் என்றார்கள்.                            


ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ஞாபகப்படுத்த வேண்டிய நபிமொழி

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க “நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்.

உலக அளவில் கிறிஸ்தவர்கள் 215 கோடி. முஸ்லிம்கள் 170 கோடி.

இந்துக்கள் 85 கோடி. சீக்கியர்கள் 2 கோடி, யூதர்கள் 1 ½  கோடி 


ஒரு விடுமுறை நாளில் முல்லா நஸ்ருத்தீன் இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக் கிலோ ஆட்டுக்கறி வாங்கினார். அருகிலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து “ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி”  என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக்கொண்டு ஓடியது தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரும் பதறினார்கள். நாயைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். முல்லா மட்டும் பதறவுமில்லை. ஓடவுமில்லை. குறுக்கே வந்த ஒருவர் ஏன்ம்பா.. “நாய் உன் இறைச்சிப் பையை தூக்கிக் கொண்டு போகிறது. நீ பதறாமல் நிற்கிறாயே..? என்று கேட்டார். முல்லா சொன்னாராம். “நாய் கறியைக் கொண்டு போனாலும் செய்முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது.”                                               

இதுபோல் இன்று முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்களின் அவல நிலையை, குறிப்பாக அரசியலில் உரிய பங்களிப்பு இல்லாததை மேடை தோறும் பேசுகிறார்களே தவிர அதை சீர்படுத்த ஒரே அணியில் ஒன்றாக இணைவது தான் ஒரே வழி என்பதை சிந்திப்பதில்ல. முடிந்த வரை முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டாலே தீய சக்திகள் நெருங்க மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் பிரிந்து கிடப்பது போல் நடிக்கிறார்கள்.  உள்ளுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்கிறோம். ஆனால் உள்ளுக்குள் பிரிந்து கிடக்கிறோம்.                                          

ஒற்றுமை இல்லாததால் இதுவரை இந்த சமுதாயம் சந்தித்த கடந்த கால இழப்புகள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ 1مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ(أَبُو دَاوُد)قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ (أَبُو دَاوُد) كتاب الخاتم

عَنْ أَنَسٍ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ وَفِي يَدِ أَبِي بَكْرٍ بَعْدَهُ وَفِي يَدِ عُمَرَ بَعْدَ أَبِي بَكْرٍ فَلَمَّا كَانَ عُثْمَانُ جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسَ قَالَ فَأَخْرَجَ الْخَاتَمَ فَجَعَلَ يَعْبَثُ بِهِ فَسَقَطَ قَالَ فَاخْتَلَفْنَا ثَلَاثَةَ أَيَّامٍ مَعَ عُثْمَانَ فَنَزَحَ الْبِئْرَ فَلَمْ يَجِدْهُ (بخاري

قوله فاختلفنا ثلاثة أيام أي في الصدور والورود والمجيء والذهاب والتفتيش (عمدة القاري)

நபி ஸல் அவர்கள் அணிந்திருந்த மோதிரம் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று முத்திரை பதிக்கப்பட்டிருந்த து.  ஆரம்பத்தில் தங்கத்தால் அது இருந்த து. அதைப் பார்த்து மக்களும் தங்க மேதிரம் அணிய ஆரம்பித்த போது  நபி ஸல் அவர்கள் தங்க மோதிரத்தை வீசி எறிந்து இனிமேல் நான் தங்கம் அணிய மாட்டேன் என்று கூறினார்கள். பின்பு அதே மாதிரி வெள்ளி மோதிரம் செய்து அணிந்து கொண்டார்கள். அது அரசாங்க முத்திரையாகவும் பயன்பட்டதால் நபி ஸல் அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர் ரழி, உமர் ரழி, உஸ்மான் ரழி ஆகியோர் பொறுப்பில் இருக்கும் போது அணிந்தனர். ஆனால் எப்போது உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தோர்களோ அதற்குப் பின்பு உஸ்மான் ரழி அவர்கள் அரீஸ் என்ற கிணற்றின் விளிம்பின் மீது அமர்ந்தவர்களாக கவலையில், ஆழ்ந்த சிந்தனையில் மோதிரத்தை கழற்றுவதும் போடுவதுமாக இருந்தார்கள். பிறகு அந்த மோதிரம் கிணற்றில் விழுந்து விட்டது. அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் மூன்று நாட்கள் அதை தேடுவதும் வருவதும் போவதுமாக அலைந்தோம். கிணறு முழுவதும் இறைத்துப் பார்த்தும் மோதிரம் கிடைக்கவில்லை. அபூதாவூத் ரஹ் கூறினார்கள். ஒற்றுமையை கை விட்டு உஸ்மான் ரஹ் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புரட்சி செய்தார்கள். அதனால் காலமெல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டிய மோதிரம் தொலைந்து விட்டது.                               

                                                            

ஒற்றுமை இல்லா விட்டால் அது சமுதாயத்தையும் பாதிக்கும். தனி மனிதனையும் பாதிக்கும். அபூ ஹுரைரா (ரழி) காலம் காலமாக பாதுகாத்து வைத்த அற்புதப் பை உதுமான் (ரழி) கொல்லப்பட்ட நாளில் தொலைந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ2 ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ3 هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي4 حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي)

  விளக்கம்- மேற்படி சம்பவம் சில ஹதீஸ் கிதாபுகளில் சுருக்கமாகவும் சிலவற்றில் விரிவாகவும் உள்ளது. (அபூஹுரைரா ரழி கூறினார்கள் உஸ்மான் ரழி அவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் எல்லோருக்கும் ஒரு சோகம் என்றால் எனக்கு 2 சோகம். 1. உஸ்மான் ரழி அவர்கள் கொலை.  2. ஒரு பை தொலைந்து போன சோகம்.  ஒரு பிரயாணத்தில் அனைவரிடமும் உணவு தீர்ந்து போன போது என்னிடம் மட்டும் கொஞ்சம் பேரீத்தம்பழங்கள் இருந்தன. அதில் பரக்கத்துக்காக துஆச் செய்யும்படி நபி ஸல் அவர்களிடம் நான் கேட்க, அவர்கள் அந்தப் பழங்களை ஒன்று சேர்த்து வைத்து பரக்கத்துக்காக துஆ செய்தார்கள். பிறகு அதிலிருந்து ஆயிரக்கணக்கான பேரும் சாப்பிட்டோம். அத்தனை பேர் சாப்பிட்டும் தீரவில்லை. பிறகு என்னிடம்  இந்தப் பையை வாங்கிக் கொள்.  இதை உன் இடுப்புக் கச்சையின் சுருக்குப் பையில் வைத்துக் கொள். இதிலிருந்து கையை விட்டு எடுத்துச் சாப்பிடு. ஒருபோதும் கொட்டக் கூடாது என்று கூறினார்கள். போருக்காக செல்லும் நேரங்களில் அதிலிருந்து நாங்கள் அனைவரும் சாப்பிடுவோம். ஆனால் என்றைக்கு  உதுமான் (ரழி) அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களில் சிலர் செய்த புரட்சியின் விளைவாக உதுமான்(ரழி) கொல்லப்பட்டார்களோ அன்றே என்னுடைய பரக்கத்தான பையும் தொலைந்து விட்டது.                

படிப்பினை- ஒற்றுமையின்மை சமூகத்தையும் பாதிக்கும். சமூகம் பெற வேண்டிய பரக்கத்தையும் நீக்கி விடும்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வாக்குரிமை

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை பொறுத்த வரையில் ஓட்டுப்போடுவது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையாகும்.  அதிலும் குறிப்பாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் ஓட்டுப் போடா விட்டால் இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக ஆகி விடும். மற்றொரு புறம் ராம ராஜ்ஜியம் என்ற எதிரிகளின் சூழ்ச்சிக்கு நாம் மறைமுகமாக ஒத்துழைப்பது போன்றாகி விடும்.          

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2)المائدة - عَنْ خَالِدٍ  سَمِعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ بِعِقَابٍ و قَالَ عَمْرٌو عَنْ هُشَيْمٍ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ (ابن ماجة)

அநியாயத்தை தடுக்கும் சக்தி நம்மிடம் இருந்தும் அதை தடுக்காமல் இருந்தால் அதனால் அல்லாஹ் ஏற்படுத்தும் சோதனைகளுக்கு அத்தனை பேரும் பலியாவார்கள் என்பது மேற்படி ஹதீஸின் கருத்தாகும். இதன்படி அநியாயக்கார பாசிச அரசின் அநியாயத்தை நம் கைகளாலோ, நாவினாலோ தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை. நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம். வல்ல ரஹ்மானிடம் துஆ செய்வதற்கு அடுத்த படியாக ஓட்டு என்ற சட்ட ரீதியான ஆயுதம் மட்டுமே. இதையும் நாம் பயன்படுத்தாமல் ஒரு ஓட்டு குறைவதால் என்ன வந்து விடப்போகிறது என்றெண்ணி நாம் இருந்து விட்டால் பாசிச ஆட்சிக்கு துணை போன குற்றத்திற்காக கண்டிப்பாக அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவோம். இங்கேயும் அதற்கான விளைவை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.  ஒரு ஓட்டு தானே என நாம் நினைப்பது போல நூறு பேர் நினைத்தால் அந்த நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் இஸ்லாமிய எதிரி ஜெயித்து விட்டால் அவனை ஜெயிக்க வைத்த குற்றத்திற்காக அந்த நூறு பேரும் அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள்.                                                       

 இந்தக் காலத்தில் யார் தான் யோக்கியம். எல்லா வேட்பாளர்களும் நமக்கு எதிராகத் தானே இருக்கிறார்கள். என்று சிலர் கேட்பதும் சரி தான். ஆனால் விரோதி, மிகவும் விரோதி, மிக மிக மோசமான விரோதி என்று பல்வேறு ரகம் இருக்கிறது. இதில் மூன்றாவது நபர் வர விடாமல் தடுக்க வேறு வழியின்றி கொஞ்சம் சுமாரான எதிரிக்கு ஓட்டுப் போட வேண்டியுள்ளது.                 

ஓட்டுப்போடுவது என்பது காஃபிர்களை வெற்றியடைச் செய்வது என்ற தவறான கருத்து சிலரிடம் உள்ளது

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் நிறைய உள்ளன.


 உதாரணமாக, பாரசீகத்துக்கு எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள்.காரணம் ரோமர்கள் வேதம் தரப்பட்டவர்கள் நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே மகிழ்ச்சிக்கு காரணம். அதை ஆதரித்து அல்லாஹ்வும் வசனங்களை இறக்கி வைத்தான். ரூம் சூராவின் ஆரம்ப  வசனங்கள் அதை சுட்டுக் காட்டுகின்றன.


وسار رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا من مكة مكث بحِرَاء، وبعث رجلًا من خزاعة إلى الأخنس بن شَرِيق ليجيره، فقال : أنا حليف، والحليف لا يجير ، فبعث إلى سهيل بن عمرو، فقال سهيل : إن بني عامر لا تجير على بني كعب، فبعث إلى المطعم بن عدى، فقال المطعم : نعم ، ثم تسلح ودعا بنيه وقومه ، فقال : البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرت محمدًا، ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم : أن ادخل، فدخل رسول الله صلى الله عليه وسلم ومعه زيد بن حارثة حتى انتهي إلى المسجد الحرام، فقام المطعم بن عدى على راحلته فنادى : يا معشر قريش، إني قد أجرت محمدًا فلا يهجه أحد منكم، وانتهي رسول الله صلى الله عليه وسلم إلى الركن فاستلمه، وطاف بالبيت، وصلى ركعتين، وانصرف إلى بيته، ومطعم بن عدى وولده محدقون به بالسلاح حتى دخل بيته . وقيل : إن أبا جهل سأل مطعمًا : أمجير أنت أم متابع ـ مسلم ؟ . قال : بل مجير . قال : قد أجرنا من أجرت . وقد حفظ رسول الله صلى الله عليه وسلم للمطعم هذا الصنيع، فقال في أسارى بدر : ( لو كان المطعم بن عدى حيًا ثم كلمنى في هؤلاء النتنى لتركتهم له ) .(الرحيق المختوم)

 நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவர்கள் போன்ற பலதோழர்கள் மக்காவில் இருக்கும்போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு  வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூது அனுப்பினார்கள். அதற்கு முத்இம்  சம்மதம் தெரிவித்தார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாள்களுடன் கஃபாவிற்குள் நுழைந்தனர். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலே வந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியானால் உன்னுடைய பொறுப்பில் உள்ள  உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அபூ ஜஹ்ல் அங்கீகரித்தான்.

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் இதுபோல் நிறைய உள்ளன நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அதுபோன்ற சமூக சேவைக்காக இன்று அழைக்கப்பட்டாலும் நிச்சயமாக பதில் அளிப்பேன் என்றார்கள். இவ்வாறு உலக விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் தேச நலன் கருதி அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார்கள். 



உஷ்ஹிய்யா சிறப்புகள்

22-05-2026 துல் ஹஜ் - 4 بسم الله الرحمن الرحيم   உழ்ஹியாவை அறுத்தல் & பங்கிடுதல்  அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரின் மகத்துவம் https://c...