24-வது தராவீஹ்
ஒரு பெண் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமான இருபெண்களையும் ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமான இருபெண்களையும் உவமானமாக அல்லாஹ் கூறுகிறான்.
எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமான இருபெண்கள்
ضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ كَفَرُوا
امْرَأَةَ نُوحٍ وَامْرَأَةَ لُوطٍ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا
صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا
وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ (10) التحريم
وأما ضرب المثل بامرأة
نوح المسماة بواعلة ، وامرأة لوط المسماة بواهلة ، فمشتمل على فوائد متعددة لا
يعرفها بتمامها إلا الله تعالى ، منها التنبيه للرجال والنساء على الثواب العظيم ،
والعذاب الأليم ، ومنها العلم بأن صلاح الغير لا ينفع المفسد ، وفساد الغير لا يضر
المصلح ، ومنها أن الرجل وإن كان في غاية الصلاح فلا يأمن المرأة ، ولا يأمن نفسه ،
كالصادر من امرأتي نوح ولوط ، ومنها العلم بأن إحصان المرأة وعفتها مفيدة غاية
الإفادة ، كما أفاد مريم بنت عمران ، كما أخبر الله تعالى ، فقال : { إِنَّ الله
اصطفاك وَطَهَّرَكِ واصطفاك } [ آل عمران : 42 ] ومنها التنبيه على أن التضرع
بالصدق في حضرة الله تعالى وسيلة إلى الخلاص من العقاب ، وإلى الثواب بغير حساب ،
وأن الرجوع إلى الحضرة الأزلية لازم في كل باب (الرازي
மிகச் சிறந்த இரு நல்லடியார்களுக்கு மனைவிமார்களாக
அந்த நல்லடியார்களின் சிந்தனைக்கு மாற்றமானவர்கள் மனைவிகளாக அமைந்ததை அல்லாஹ்
உதாரணம் காட்டியதில் பல படிப்பினைகள்
1.கணவனின் பொதுச் சேவைகளுக்கு எந்த வகையிலும்
ஓத்துழைப்புத் தராமல் இடையூறு செய்யும் இத்தகைய மனைவி அமைந்து விட்டாலும் அதைப்
பொறுத்துக் கொள்ளும் கணவன்மார்களுக்கு மறுமையில் சிறந்த நற்கூலி உண்டு
2.நல்ல கணவனுக்கு மனைவியாக அமைவதால் ஒரு கெட்ட மனைவி
தன்னைத் திருத்திக் கொள்வாள் என்று உறுதியாகச் சொல்லி விட முடியாது. எத்தகைய
நற்பாக்கியம் அவர்களுக்கு அமைந்தாலும் அவர்களின் வழிகேடு மாறுதல் அடையாது. அதேபோல
கெட்ட கணவனுக்கு மனைவியாக அமைவதால் ஒரு நல்ல மனைவியும் சேர்ந்து வழிகேட்டுக்கு
மாறி விடுவாள் என உறுதியாகச் சொல்லிவிட
முடியாது.எத்தகைய கொடியவனுக்கு மனைவியாக அமைந்தாலும் அவர்களின் நேர்வழி மாறாது
3.கணவன் மார்க்கப் பற்றில் முழுமையானவராக இருப்பதால்
அதுவே அவருடைய மனைவியின் தீங்கிலிருந்து பாதுகாக்கும் அதாவது அந்த மனைவி செய்யும்
எந்த தீங்கும் இவர்களைச் சென்றடையாது என்றும் சொல்லிவிட முடியாது. கணவரின் சேவையை
அவர்களால் எந்த இடையூறும் ஏற்படுத்த முடியவில்லை என்பதே அந்த ஆயத்தின் கருத்து. காரணம்
இந்த இரு நபிமார்களும் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் தான். ஆனால் மனைவியர்களால்
தொந்தரவுகளும் இருந்தன.
இரு மனைவிகளும் துரோகம் செய்தார்கள் என்பதை
மாற்றி விளங்க க்கூடாது
ما كانت خيانتهما ؟ نقول : نفاقهما
وإخفاؤهما الكفر ، وتظاهرهما على الرسولين ، فامرأة نوح قالت لقومه إنه لمجنون
وامرأة لوط كانت تدل على نزول ضيف إبراهيم ، ولا يجوز أن تكون خيانتهما بالفجور ،
وعن ابن عباس ما بغت امرأة نبي قط ، وقيل : خيانتهما في الدين. (تفسير الرازي
ஹழ்ரத்
இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் எந்த நபியின் மனைவியையும் கற்பு
விஷயத்தில் துரோகம் செய்பவராக ஆக்கி வைக்கவில்லை. அத்தகைய அமைவது நுபுவ்வத்தின்
அந்தஸ்துக்கு நல்லதல்ல. எனவே இரு மனைவிகளும் துரோகம் செய்தார்கள் என்பதன்
விளக்கமாகிறது அவ்விருவரும் குஃபரை மறைத்து வைத்துக் கொண்ட முனாஃபிக்கீன்களாக
இருந்தார்கள். நபி நூஹ் அலை அவர்களின் மனைவி தன் கணவனை பைத்தியம் என்றும்
மக்களிடம் சொல்பவராகவும் நபி லூத் அலை அவர்களின் மனைவி தன் கணவனை சந்திக்க வரும்
இளைஞர்களைப் பற்றி அந்த மக்களுக்கு தகவல் கொடுப்பவளாகவும் இருந்தாள்
நல்ல பெண்களுக்கு முன்னுதாரணம் இரண்டு பெண்கள்.
1.ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அம்மையார்.
2.மர்யம் அலை
وَضَرَبَ
اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ
ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ
وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (11) وَمَرْيَمَ ابْنَةَ عِمْرَانَ الَّتِي
أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ
رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ (12) التحريم
ஹதீஸ்களில்
மூன்றாவதாக கதீஜா ரழி அவர்களின் பெயரும்
நான்காவதாக
பாத்திமா ரழி அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது
عَنْ أَنَسٍ رَضِيَ
اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
حَسْبُكَ مِنْ نِسَاءِ الْعَالَمِينَ مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ وَخَدِيجَةُ
بِنْتُ خُوَيْلِدٍ وَفَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ
(ترمذي
ஆசியா
அம்மையாரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பு அவர்களின் ஈமானுக்குக் காரணமாக
இருந்த மாஷிதா என்ற பெண்ணைப் பற்றி
அறிவோம்
عَنْ اِبْن عَبَّاس قَالَ : قَالَ رَسُول اللَّه
صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " لَمَّا أُسْرِيَ بِي مَرَّتْ بِي
رَائِحَة طَيِّبَة فَقُلْت مَا هَذِهِ الرَّائِحَة ؟ قَالَ مَاشِطَة بِنْت فِرْعَوْن(وفي رواية خادمة لبنات فرعون)
وَأَوْلَادهَا سَقَطَ الْمُشْط مِنْ يَدهَا فَقَالَتْ بِسْمِ اللَّه فَقَالَتْ
بِنْت فِرْعَوْن أَبِي قَالَتْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك قَالَتْ أَوَلَك رَبّ
غَيْر أَبِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك اللَّه . قَالَ
فَدَعَاهَا فَقَالَ أَلَك رَبّ غَيْرِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك اللَّه
عَزَّ وَجَلَّ .قَالَ فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاس فَأُحْمِيَتْ ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى
فِيهَا قَالَتْ إِنَّ لِي إِلَيْك حَاجَة قَالَ مَا هِيَ ؟ قَالَ تَجْمَع عِظَامِي
وَعِظَام وَلَدِي فِي مَوْضِع قَالَ ذَاكَ لَك لِمَا لَك عَلَيْنَا مِنْ الْحَقّ
قَالَ فَأَمَرَ بِهِمْ فَأُلْقُوا وَاحِدًا وَاحِدًا حَتَّى بَلَغَ رَضِيعًا
فِيهِمْ فَقَالَ يَا أُمَّهْ قَعِي وَلَا تَقَاعَسِي فَإِنَّك عَلَى الْحَقّ
" قَالَ وَتَكَلَّمَ أَرْبَعَة فِي الْمَهْد وَهُمْ صِغَار هَذَا وَشَاهِد
يُوسُف وَصَاحِب جُرَيْج وَعِيسَى اِبْن مَرْيَم عَلَيْهِ السَّلَام (تفسير ابن
كثير)
மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கிச்
செல்லும் வழியில் அருமையான வாசனையை நபி ஸல் அவர்கள் உணர்ந்து இது என்ன வாசனை என்று
ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்க, இதுதான் ஃபிர்அவ்னின் பெண் பிள்ளைகளுக்குப்
பணிவிடை செய்து கொண்டிருந்த மாஷிதா மற்றும் அவரது சிறு குழந்தைகளின் கப்ருகளாகும்.
இந்தப் பெண்ணும் கணவரும் குழந்தைகளும் ஆசியா அம்மையாருக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றனர்.
ஒருநாள் வழக்கம்போல் ஃபிர்அவ்னின் மகள் ஒருத்திக்கு இவர் தலைவாரிக்
கொண்டிருந்தார். (ஆசியா அம்மையார் மூலமாக பிறந்த பிள்ளை அல்ல. ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்னால்
நெருங்கவே முடியவில்லை. அவனின் நுத்ஃபாவை அந்த அம்மையாருக்கு அல்லாஹ் ஹராமாக்கி
விட்டான். விபரம் பின்பு கூறப்படும்.) அவ்வாறு தலைவாரியபோது
சீப்பு கீழே விழுந்து விட, தன்னை மறந்து இதுநாள் வரை ஈமானை மறைத்து வைத்திருந்த
சிந்தனை இன்றி பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அந்த சீப்பை எடுக்க, அது கேட்ட
ஃபிர்அவ்னின் மகள் யார் அந்த அல்லாஹ் என் தந்தை தானே என்றாள். இல்லை. உண்மையான
இறைவன். உன் தந்தைக்கும் நமக்கும் எல்லோருக்கும் அவன் தான் ரப்பு என்று உண்மையைக்
கூறி விட, அவள் உடனே சென்று தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். அவன்
உடனடியாக மாஷிதா அம்மையாரை அழைத்து வரச் சொன்னான். என்னையன்றி வேறு கடவுள் உனக்கு
உண்டா என்று கேட்க, அந்த அம்மையாரின் பதில் உறுதியாக இருந்த து. ஆத்திரம் அடைந்த
அவன் ஒரு ராட்சதச் சட்டியில் மாட்டின் தலை அளவுக்கு உள்ள ஈயத்தை உருக்கி அந்த
அம்மையாரையும் அவரின் சின்னஞ்சிறு பிள்ளைகளையும் அதில் போட்டான். அதற்கு முன்பு
அந்த அம்மையாரிடம் உனது கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது உடலும் என் பிள்ளைகளின்
உடலும் கருகிய பின் எங்கள் அனைவரின் எலும்புக்கூடுகளை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு ஃபிர்அவ்ன் என்னுடைய விசுவாசமான
வேலைக்காரி என்பதால் அவ்வாறே செய்கிறேன் என்றான். அதற்குப் பின் ஒவ்வொருவராக
கொதிக்கும் அந்தச் சட்டியில் தூக்கிப் போடப்பட்டது. முதலில் மூத்த குழந்தை பிறகு
அடுத்த குழந்தை என அந்த அம்மையாரின் கண்ணெதிரே போடப்பட்டது. இறுதியாக அந்தப்
பெண்ணையும் பிறந்து சில நாட்களே ஆன அவருடைய ஆண் குழந்தையையும் ஒன்றாக கொதிக்கும்
அந்தச் சட்டியில் போடும்போது அந்த அம்மையார் தன் பிஞ்சுக் குழந்தையை நினைத்து
தயங்கியபோது அந்தக்குழந்தை வாய் திறந்து அம்மா.... நீங்கள் சத்தியத்தின் மீது
இருக்கிறீர்கள். கலங்காதீர்கள். பின் வாங்காதீர்கள். என்று பேசியது. இறுதியில்
அவ்விருவரும் போடப்பட்ட பின் உடல் கருகி இறந்தனர். தொட்டில் குழந்தையாக இருந்து பேசிய
குழந்தைகளில் இதுவும் ஒன்று.
சுமார்
பத்து குழந்தைகள் இவ்வாறு பேசியதாக சில தஃப்ஸீர்களில் உள்ளது.
இன்னும் சில அறிவிப்புகளில் கீழ்காணும் விபரங்கள் உள்ளன
فقال لها : ويحك اكفري بإلهك وقري أني إلهك قالت لا
أفعل فمدها بين أربعة أوتاد ثم أرسل عليها الحيات والعقارب وقال لها : اكفري بالله
وإلا عذبتك بهذا العذاب شهرين فقالت لو عذبتني سبعين شهراً ما كفرت بالله وكان لها
ابنتان فجاء فابنتها الكبرى فذبحها على قلبها ثم قال اكفري بالله وإلا ذبحت الصغرى
على فيك وكانت رضيعاً فقالت لو ذبحت من في الأرض على فيّ ما كفرت بالله عزّ وجلّ
فأتى بابنتها فلما اضطجعت على صدرها وأراد ذبحها جزعت المرأة فأطلق الله لسان
ابنتها فتكلمت وهي من الأربعة الذين تكلموا في المهد صغاراً أطفالاً وقالت يا أماه
لا تجزعي فإن الله قد بنى لك بيتاً في الجنة فاصبري فإنك تفضين إلى رحمة الله
وكرامته فذبحت فلم تلبث الأم أن ماتت فأسكنها الله الجنة قال : وبعث في طلب زوجها
حزقيل فلم يقدروا عليه فقيل لفرعون إنه قد رؤي في موضع كذا في جبل كذا فبعث رجلين
في طلبه فانتهى إليه الرجلان , وهو يصلي وثلاثة صفوف من الوحش خلفه يصلون فلما
رأوا ذلك انصرفوا فقال , حزقيل : اللّهم إنك تعلم أني كتمت إيماني مائة سنة ولم
يظهر عليّ أحد فأيما هذين الرجلين كتم عليّ فاهده إلى دينك وأعطه من الدنيا سؤاله
وأيما هذين الرجلين أظهر عليّ فعجل عقوبته في الدنيا واجعل مصيره في الآخرة إلى
النار فانصرف الرجلان إلى فرعون فأما أحدهما فاعتبر وآمن وأما الآخر فأخبر فرعون
بالقصة على رؤوس الملأ فقال له فرعون وهل معك غيرك قال نعم فلان فدعا به فقال أحق ما يقول هذا قال ما رأيت مما يقول
شيئاً فأعطاه فرعون وأجزل وأما الآخر فقتله ثم صلبه (تفسير خازن
சில அறிவிப்புகளில் அப்பெண்ணை கட்டி வைத்து தேள்களையும்
அவர் மீது சாட்டியதாகவும் அதன் பின்பு அந்த அம்மையாரிடம் இப்போதாவது என்னை இறைவன்
என ஏற்கிறாயா இல்லை இன்னும் இரண்டு மாதங்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறாயா என்று
கேட்க நீ இவ்வாறு எழுபது மாதங்கள் என்னை வேதனை செய்தாலும் நான் மாற மாட்டேன்
என்றார். அதற்குப் பின்பு தான் கொதிக்கும் ஈயத்தில் போடப்பட்டது. மேலும் இவர்களைக்
கொன்ற பின் அந்த அம்மையாரின் கணவரைத் தேடும்படி ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். அவர்
ஒரு மலைப்பகுதியில் இருக்கிறார் என்று தெரிந்து அவரைக் கொண்டு வர இருவரை
ஃபிர்அவ்ன் அனுப்பினான். அவ்விருவர் அந்த மலைப்பகுதிக்குச் சென்று அவருக்கு
அருகில் நெருங்க முயற்சித்த போது திடுக்கிட்டனர், காரணம் அவர் தொழுது
கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் அணி வகுத்து வன விலங்குகள் பாதுகாப்புக்கு
நின்றன. உடனே அவ்விருவரும் திரும்பி விட்டனர். ஆனால் அவர் இவ்விருவரையும் கவனித்து
விட்டார். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் நூறு வருடமாக என் ஈமானை மறைத்து
வைத்திருந்தேன். எப்படியோ இவ்விருவரும் என்னைப் பார்த்து விட்டனர். யாஅல்லாஹ்
இவ்விருவரில் யார் இந்த இரகசியத்தை ஃபிர்அவ்னிடம் சொல்லாமல் மறைக்கிறாரோ அவருக்கு
ஹிதாயத்தை தா.. சுவனத்தைத் தா.. யார் இதை ஃபிர்அவ்னிடம் சென்று சொல்வாரோ அவரை
இங்கேயே தண்டித்து விடு.. அவருக்கு நரகத்தைத் தா.. என துஆச் செய்தார். அவ்வாறே
அவர்களில் ஒருவர் ஈமான் கொண்டு முஸ்லிமாகி விட்டார். பார்த்த செய்தியை
ஃபிர்அவ்னிடம் மறைத்து விட்டார். இன்னொருவன் ஃபிர்அவ்னிடம் சென்று தான் கண்ட
காட்சியை அப்படியே சொல்ல ஃபிர்அவ்ன் அதை நம்பாமல் உன்னோடு இருந்தவர் எங்கே என்று
கேட்டு அவரை வரவழைத்து அவரிடம் விபரம் கேட்க, நாங்கள் அவரை எங்கு தேடியும்
கிடைக்கவில்லை. இவர் கூறுவது போல் எந்தக் காட்சியையும் நான் பார்க்கவில்லை
என்றார். அவருக்கு வெகுமதியைக் கொடுத்த ஃபிர்அவ்ன் உண்மையைச் சொன்ன இன்னொருவனைக்
கொன்று சிலுவையில் அறைய உத்தரவிட்டான்- தஃப்ஸீர் காஜின்
படிப்பினை- அல்லாஹ் முஃமினைக்
காப்பாற்றவும் செய்வான். ஷஹீதாக்கி அந்தஸ்தை உயர்த்தவும் செய்வான்
ஆசியா அம்மையாரை
ஃபிர்அவ்ன் திருமணம் செய்தது பற்றிய
விபரம்
ஆசியா அம்மையார் இஸ்லாத்திற்கு வரும் முன்பே
நல்ல பெண்ணாக இருந்தார்கள். அழகாக இருந்ததால் அவரது பெற்றோரிடம் ஃபிர்அவ்ன் பெண்
கேட்ட போது இந்த அம்மையாருக்கோ பெற்றோருக்கோ துளியளவும் விருப்பம் இல்லை.
ஃபிர்அவ்னின் அடக்கு முறைக்கு பயந்து திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும்
ஃபிர்அவ்ன் அந்த அம்மையாரை நெருங்கும்போதெல்லாம் அவனின் ஆணுறுப்பு சுருங்கி
ஆண்மையற்றவனாக ஆகி விடுவான். இறுதி வரை அந்த அம்மையாரை அவனால் நெருங்க முடியவில்லை
என சில தஃப்ஸீர்களில் கூறப்பட்டுள்ளது.
மாஷிதா அம்மையாரின் நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்த ஆசியா அம்மையார் இஸ்லாத்தை
ஏற்றார்கள்
وذلك كله بعين امرأة فرعون
وسمعت كلام روح ابنها الأكبر ، ثم الأصغر ، فآمنت امرأة فرعون ، وقبض روح امرأة
خازن فرعون ، وكشف الغطاء عن ثوابها ومنزلتها وكرامتها في الجنة لامرأة فرعون حتى
رأته فازدادت إيمانا ويقينا وتصديقا ، واطلع فرعون على إيمانها ، فخرج إلى الملأ ،
فقال لهم : ما تعلمون من آسية بنت مزاحم ؟ فأثنوا عليها ، فقال لهم : وإنها تعبد
ربا غيري ، فقالوا له : اقتلها ، فأوتد لها أوتادا ، وشد يديها ورجليها فدعت آسية
ربها فقالت : ( رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم
الظالمين (11) ) فكشف لها الغطاء فنظرت إلى بيتها في الجنة ووافق ذلك أن حضرها
فرعون وضحكت حين رأت بيتها في الجنة ، فقال فرعون : ألا تعجبون من جنونها ، إنا
نعذبها وهي تضحك فقبض روحها ، (تفسير مجاهد)
மாஷிதா
அம்மையாருக்கு ஃபிர்அவ்ன் கொடுமைகளை ஆசியா அம்மையார் பார்த்து வேதனைப்பட்டார்கள். மாஷிதா
அம்மையாரின் ஒவ்வொரு குழந்தைகளாக ஃபிர்அவ்ன் கொல்லும் நேரத்தில் அவர்களின் ஆன்மா
மேலேறிச் செல்லும்போது தனது தாய்க்கு சுபச்செய்தி சொல்லும் காட்சியை ஆசியா
அம்மையார் பார்த்தார்கள். இறுதியாக மாஷிதா அவர்களையும் ஃபிர்அவ்ன் கொன்றபோது அல்லாஹ் வானத்தின்
திரைகளை விலக்கி ஆசியா அம்மையாரின் கண்களுக்கு இறந்த மாஷிதா அவர்களின்
அந்தஸ்தையும் சிறப்பையும் அறிய வைத்தான். இது அவர்களின் ஈமானை இன்னும்
அதிகமாக்கியது. இறுதியில் தன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்ற விபரம் ஃபிர்அவ்னுக்குத்
தெரிய வந்த போது ஃபிர்அவ்ன் தனது சபையினரைக் கூட்டி, என் மனைவி ஆசியாவைப் பற்றி
என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான். அவர்கள் ஆரம்பத்தில் புகழ்ந்து பேசினார்கள்.
பின்பு ஃபிர்அவ்ன் கூறினான் அவள் என் அல்லாத வேறு கடவுளை வணங்குகிறாள் என்றவுடன்
அனைவரும் அப்படியே அந்தர் பல்டி அடித்து அவளை உடனே கொல்ல வேண்டும் என்று
கொக்கரித்தனர். இறுதியில் தன் மனைவியையே கொல்லும்படு ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான்.
கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போடவிருக்கும்
நிலையில் அந்த அம்மையார் மேற்படி துஆவைச் செய்தார்கள். அல்லாஹ் அதை அப்படியே
ஏற்றான். அவர்கள் கல்லை தூக்கிப் போடுவதற்கு சில நொடிகள் முன்பே உயிர்
கைப்பற்றப்பட்டது. கடைசி நேரத்தில் சுவனத்தைப் பார்த்தவர்களாக சிரித்தபடி இருக்க
வெறும் உடம்பின் மீது கல்லைப் போட்டார்கள். அங்கு வந்த ஃபிர்அவ்ன் பைத்தியக்காரி
இவளை நான் கொல்லுகிறேன். இவளோ சிரிக்கிறாள்
என்றானாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக