25-வது தராவீஹ்
وكل شيء استتر عنك فقد جن عنك وبه سميت الجن وكان أهل الجاهلية يسمون الملائكة جنا لاستتارهم عن العيون (اكام المرجان
ஜின்என்ற
அரபு பதத்திற்கு மறைவானது என்று
பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிற்கு அந்தப்
பெயர் வந்தது. சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம்
அறிவோம். அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப் பெற்றதாகும்.மனிதன் படைக்கப்படுவதற்கு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டுள்ளனர்.
قال
ابن عقيل إنما سمي الجن جنا لاستجنانهم واستتارهم عن العيون منه سمي الجنين جنينا
والجنة للحرب جنة لسترها (اكام المرجان
இப்னு அகீல் பின்வருமாறு கூறுகின்றார். “ஜின்கள் மனிதனின் கண்ணில் படாமலும் மறைந்து
வாழ்வதாலுமே இவர்களை ஜின் என்று கூறப்படுகின்றது. தாயின் வயிற்றில் வளரும்
குழந்தைக்கு “ஜனீன்“ என்று
கூறப்படுவதற்கு அக்குழந்தை பிறர் கண்ணில் படாமல் இருப்பதே காரணமாகும்.
ஆதாரம் : உகாமுல் மர்ஜான் பக்கம் – 07
ஜின்கள் படைக்கப்பட்ட விதம்
وَلَقَدْ خَلَقْنَا
الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ. وَالْجَانَّ خَلَقْنَاهُ مِن
قَبْلُ مِن نَّارِ السَّمُومِ
ஓசை தரக்கூடிய கருப்பான
களிமண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின்
மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். அல்குர்ஆன்(15 : 26,27)
وقال إسحاق حدثني جويبر وعثمان بإسنادهما أن
الله تعالى خلق الجن وأمرهم بعمارة الارض فكانوا يعبدون الله جل ثناؤه حتى طال بهم
الأمد فعصوا الله عز وجل وسفكوا الدماء وكان فيهم ملك يقال له يوسف فقتلوه فأرسل
الله تعالى عليهم جندا من الملائكة كانوا في السماء الدنيا كان يقال لذلك الجند
الجن فيهم إبليس وهو على أربعة آلاف فهبطوا فأفنوا بني الجان من الأرض وأجلوهم
عنها وألحقوهم بجزائر البحر (اكام
المرجان
عن ابن عباس رضي الله عنهما قال كان الله
تعالى بعث اليهم رسولا فأمرهم بطاعته وأن لا يشركوا به شيئا وأن لا يقتل بعضهم
بعضا فلما تركوا طاعة الله تعالى وقتلوا (اُهلكت)
ولهذا قالت الملائكة ) أتجعل فيها ( الآية (اكام المرجان
சுருக்கம்- மனிதன்
படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டனர். இந்த
பூமியின் நிர்வாகம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நம்மைப் போலவே
அவர்களுக்கும் தூதர்களும் அனுப்பப் பட்டனர். காலங்கள் செல்லச் செல்ல அவர்கள்
பாவங்கள் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஒரு தலைவர் இருந்தார் அவர் பெயர்
யூசுஃப். அவரையே கொன்றார்கள் இறுதியில் அல்லாஹ் இவர்களை அழிக்க 4,000 மலக்குகளை
அனுப்பினான். அந்த மலக்குகளில் இப்லீஸும் இருந்தான் அவர்கள் ஜின்களை
தண்டித்தார்கள். இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் செய்தனர்.
ஜின்கள் உருமாறும் ஆற்றல் உள்ளவர்கள். குறிப்பாக
பாம்பு வடிவத்தில்
عَنْ نَافِعٍ أَنَّ
أَبَا لُبَابَةَ كَلَّمَ ابْنَ عُمَرَ لِيَفْتَحَ لَهُ بَابًا فِي دَارِهِ
يَسْتَقْرِبُ بِهِ إِلَى الْمَسْجِدِ فَوَجَدَ الْغِلْمَةُ جِلْدَ جَانٍّ فَقَالَ
عَبْدُ اللَّهِ الْتَمِسُوهُ فَاقْتُلُوهُ فَقَالَ أَبُو لُبَابَةَ لَا
تَقْتُلُوهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى
عَنْ قَتْلِ الْجِنَّانِ الَّتِي فِي الْبُيُوتِ . (مسلم
أَنَّ أَبَا لُبَابَةَ
بْنَ عَبْدِ الْمُنْذِرِ الأَنْصَارِىَّ - وَكَانَ مَسْكَنُهُ بِقُبَاءٍ
فَانْتَقَلَ إِلَى الْمَدِينَةِ - فَبَيْنَمَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ
جَالِسًا مَعَهُ يَفْتَحُ خَوْخَةً لَهُ إِذَا هُمْ بِحَيَّةٍ مِنْ عَوَامِرِ
الْبُيُوتِ فَأَرَادُوا قَتْلَهَا فَقَالَ أَبُو لُبَابَةَ إِنَّهُ قَدْ نُهِىَ
عَنْهُنَّ - يُرِيدُ عَوَامِرَ الْبُيُوتِ - وَأُمِرَ بِقَتْلِ الأَبْتَرِ وَذِى
الطُّفْيَتَيْنِ وَقِيلَ هُمَا اللَّذَانِ يَلْتَمِعَانِ الْبَصَرَ وَيَطْرَحَانِ
أَوْلاَدَ النِّسَاءِ. (مسلم
அப்துல்லாஹ் பின் உமர்
(ரலியல்லாஹுஅன்ஹு) கூறினார்கள். நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக
விரட்டிச் சென்று கொண்டிருந்த போது அபூ லுபாபா ரலியல்லாஹு
அன்ஹுஅவர்கள் என்னைக் கூப்பிட்டு, “அதைக் கொல்லாதீர்கள்” என்று
சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று
சொன்னேன். அதற்கு அவர்கள், “(ஆம் உண்மைதான்.)ஆனால், அதன்பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்தவுடன்) கொல்ல வேண்டாம்
என்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று
பதிலளித்தார்கள். நூல் : புகாரி
عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ
سَمِعْتُهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ
بِالْمَدِينَةِ نَفَرًا مِنَ الْجِنِّ قَدْ أَسْلَمُوا فَمَنْ رَأَى شَيْئًا مِنْ
هَذِهِ الْعَوَامِرِ فَلْيُؤْذِنْهُ ثَلاَثًا فَإِنْ بَدَا لَهُ بَعْدُ
فَلْيَقْتُلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ ».(مسلم
கருத்து- அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மதீனாவில் சில முஸ்லிமான ஜின்கள்
உள்ளன. அவை பாம்புகளின் வடிவத்தில் இருக்கும். யாருக்கும் தொந்தரவு கொடுக்காது.
எனவே வீட்டில் வசிக்கும் பாம்புகளை நீங்கள் கண்டால் மூன்று முறை அங்கிருந்து
சென்று விடும்படி அறிவிப்புச் செய்யுங்கள். அப்படியும் செல்லா விட்டால் அவற்றைக்
கொல்லுங்கள். ஏனெனில் மூன்று முறை அறிவிப்புச் செய்த பிறகும் செல்லா விட்டால் அவை
ஷைத்தான்களாகும்.
خلق الله عز وجل الجن
ثلاثة أصناف صنف حيات وعقارب وخشاش الإرض وصنف كالريح في الهواء وصنف عليهم الحساب
والعقاب وخلق الله الإنس ثلاثة أصناف صنف كالبهائم قال الله عز وجل ( لهم قلوب لا يفقهون بها ) الآية وصنف أجسادهم
أجساد بني آدم وأرواحهم أرواح الشياطين وصنف في ظل الله عز وجل يوم لا ظل إلا ظله
(حاكم
عن أبي ثعلبة الخشني
رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : الجن ثلاثة أصناف : صنف
لهم أجنحة يطيرون في الهواء و صنف حيات و كلاب و صنف يحلون و يظعنون (حاكم
ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்கூறியுள்ளார்கள்.
1) பாம்பு,
நாய் போன்ற மிருகங்களின் வடிவில் உள்ளவைகள். 2) (கண்ணுக்கு
புலப்படாமல் பூமியில் வாழ்பவை.) சில நேரங்களில் அவர்கள் தங்குவாரகள். சில
நேரங்களில் பயணம் செய்வார்கள் 3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா ரலியல்லாஹு அன்ஹு, ஹாக்கிம்)
மனிதர்களைப் போன்றே ஜின்களும் பூமியில்தான்
வாழுகின்றனர். மனிதர்களைப் போன்றே ஜின்களும் சாப்பிடுகின்றனர், குடிக்கி்ன்றனர், திருமணம் முடிக்கின்றனர், சந்ததிகளை உற்பத்தி
செய்கின்றனர். மனிதர்களிடம் இருக்கும் சமூக கட்டமைப்பைப் போன்ற ஒன்று அவர்களிடமும்
உள்ளது. சமய, சமூக பிரிவினைகள் கூட
மனிதர்களைப் போன்று அவர்களிடமும் உள்ளது. ஆனால் அவர்களின் உணவு இருப்பிடம்
போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன இவர்களி்ன் வாழ்க்கை முறை
மாற்றமானதாகும். அனேகமாக ஜி்ன்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக்
கொள்கின்றனர்.
ஜின்களின் இருப்பிடங்கள்:
இருட்டான இடங்கள், பாழடைந்த இடங்கள், கட்டிடங்கள், பராமரிப்பில்லாத மைதானங்கள், பாலை வனங்கள், அடர்ந்த காடுகள், மலைகள், ஓடைகள், மையவாடிகள், பாழடைந்த பள்ளிவாசல்கள், கிணறுகள், சமுத்திரங்கள், வயல் வெளிகள், சுரங்கங்கள், பொந்துகள், வீட்டின் முகடுகள், மரங்கள், குகைகள், ஒட்டகை போன்ற விலங்குகள்
அடைக்கப்படும் இடங்கள், அசுத்தமான
(நஜீஸ்) இடங்கள், குறிப்பாக குளியலறை, மலசல கூடங்கள் உள்ளிட்ட
இடங்களில் இவை தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இவ்வாறு வஹ்ஹாபிகளின்
குருவானஇப்னு தைமிய்யா கூறுகின்றார். ஆதாரம் :மஜ்முஉல் பதாவா பாகம் 19, பக்கம் 40 – 41
ஜின்களின் உணவுகள்
عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ مَسْعُودٍ قَالَ قَدِمَ وَفْدُ الْجِنِّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا مُحَمَّدُ انْهَ أُمَّتَكَ أَنْ
يَسْتَنْجُوا بِعَظْمٍ أَوْ رَوْثَةٍ أَوْ حُمَمَةٍ فَإِنَّ اللَّهَ تَعَالَى
جَعَلَ لَنَا فِيهَا رِزْقًا قَالَ فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ (ابوداود
وفي حديث ابن مسعود
رض....... وَسَأَلُوهُ الزَّادَ فَقَالَ لَكُمْ كُلُّ عَظْمٍ ذُكِرَ اسْمُ اللَّهِ
عَلَيْهِ يَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا يَكُونُ لَحْمًا وَكُلُّ بَعْرَةٍ
عَلَفٌ لِدَوَابِّكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَلَا تَسْتَنْجُوا بِهِمَا فَإِنَّهُمَا طَعَامُ إِخْوَانِكُمْ (مسلم
ஜின்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம்
(தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வின்
பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு
அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச்
சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்” என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் (தம் தோழர்களிடம்), “எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச்
சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும்
உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்”என்று
கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி)
நூல் :
முஸ்லிம் (767
நபி ஸல் ஜின்களை சந்தித்த இரவு
وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ
فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا (8) وَأَنَّا كُنَّا نَقْعُدُ
مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا
رَصَدًا (9) وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ
أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا (10) سورة الجن
وكان سبب ذلك أن الجن
كانوا يسترقون السمع فلما حرست السماء ورموا بالشهب قال إبليس : إن هذا الذي حدت
في السماء لشيء حدث في الأرض فبعث سراياه ليعرف قال إبليس إن هذا الذي حدث في
السماء لشيء حدث في الأرض فبعث سراياه ليعرف الخبر أولهم ركب نصيبين وهم أشراف
الجن إلى تهامة فلما بلغوا بطن نخلة سمعوا النبي صلى الله عليه و سلم يصلي صلاة
الغداة ببطن نخلة ويتلو القرآ فاستمعوا له وقالوا : أنصتوا وقالت طائفة : بل أمر
النبي صلى الله عليه و سلم أن ينذر الجن ويدعوهم إلى الله تعالى ويقرأ عليهم
القرآن فصرف الله عز و جل إليه نفرا من الجن من نينوى وجمعهم له فقال النبي صلى
الله عليه و سلم : إني أريد أن أقرأ القرآن على الجن الليلة فأيكم يتبعني ؟
فأطرقوا ثم قال الثانية فأطرقوا ثم قال الثالثة فأطرقوا فقال ابن مسعود أنا يا
رسول الله قال ابن مسعود : ولم يحضر معه أحد غيري فانطلقنا حتى إذا كنا بأعلى مكة
دخل النبي صلى الله عليه و سلم شعبا يقال له شعب الحجون وخط لي خطا وأمرني أن أجلس
فيه وقال : لا تخر منه حتى أعود إليك ثم انطلق حتى قام فافتتح القرآن فجعلت أرى
أمثال النسور تهوي وتمشي في رفرفها وسمعت لغطا وغمغمة حتى خفت على النبي صلى الله
عليه و سلم وغشيته أسودة كثيرة حالت بيني وبينه حتى ما أسمع صوته ثم طفقوا يتقطعون
مثل قطع السحاب ذاهبين ففرغ النبي صلى الله عليه و سلم مع الفجر فقال : أنمت ؟ قلت
: لا والله ولقد هممت مرارا أن أستغيث بالناس حتى سمعتك تقرعهم بعصاك تقول اجلسوا
فقال : لو خرجت لم آمن عليك أن يخطفك بعضهم ثم قال : هل رأيت شيئا ؟ قلت : نعم يا
رسول الله رأيت رجالا سودا مستثفري ثيابا بيضا فقال : أولئك جن نصيبين سألوني
المتاع والزاد فمتعتهم بكل عظم حائل وروثة وبعرة فقالوا : يا رسول الله يقذرها
الناس علينا فنهى رسول الله صلى الله عليه و سلم أن يستنجى بالعظم والروث (الرازي
கருத்து- இன்றைக்கும்
மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் மஸ்ஜிதுல் ஜின் என்ற மஸ்ஜித் உள்ளது. அது
ஜின்களுடனான நபி ஸல் அவர்களின் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் அதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது
இதன் விபரமாகிறது நபி ஸல் அவர்களின் காலத்துக்கு முன்பு
ஜின்கள் முதல் வானத்தையும் கடந்து சென்று அங்கு மலக்குகள் பேசிக் கொள்ளும்
விஷயங்களை ஓட்டுக் கேட்பார்கள் ஆனால் நபி ஸல் அவர்களின் வருகைக்குப் பின்பு அது
தடுக்கப்பட்டு முதல் வானத்தை நெருங்கும்போதே தீப்பந்தங்களால் விரட்டப்படுவதைக்
கண்டு இதற்கு என்ன காரணம் என அறிய முற்பட்டபோது இப்லீஸ் தான் சொன்னான். உலகில் ஏதோ
மாற்றம் நடந்துள்ளது. யாரோ முக்கிய மனிதர் பிறந்திருக்கலாம் நீங்கள் அதை
ஆராயுங்கள் என்றான். ஜின்கள் அதற்கான முயற்சியில் பல காலங்கள் ஈடுபட்டு, கடைசியில்
மக்காவில் தான் அந்த மாற்றம் நடந்த தைக் கண்டு பிடித்தனர். ஆனால் அவர்களின் மனம்
மாறி நாமும் அந்த குர்ஆனைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்னு மஸ்ஊத்
ரழி கூறினார்கள். நபி ஸல் அவர்கள் எங்களிடம் நான் ஜின்களுக்கு குர்ஆனை
ஓதிக்காட்டும்படி ஏவப்பட்டுள்ளேன் என்னோடு யார் வருகிறீர்கள் என்றார்கள். அனைவரும்
அமைதியாக இருக்க இரண்டாவது தடவையும்
என்னோடு யார் வருகிறீர்கள் என்று கேட்டார்கள் அப்போதும் அனைவரும் அமைதியாக
இருக்க, உடனே நான் எழுந்து உங்களுடன் நான் வருகிறேன் என்றேன். நபி ஸல்
புறப்பட்டார்கள். ஹஜூன் என்ற இடம் வந்த போது ஒரு இடத்தில் என்னை அமர வைத்து விட்டு
என்னைச் சுற்றி ஒரு கோடு போட்டு, நான் திரும்பி வரும் வரை இந்தக் கோட்டை தாண்டி
நீர் வரக்கூடாது அப்படி வந்தால் உமக்கு ஆபத்து என்று சொல்லி என்னை அமர வைத்து
விட்டு நபி ஸல் அவர்களும் மட்டும் சென்றார்கள். அப்போது விதவிதமான சப்தங்களை நான்
கேட்டேன். நபி ஸல் அவர்களை அந்த ஜின்கள் சூழ்ந்து கொண்டது போல நான் உணர்ந்தேன்
அவர்களுக்கு மத்தியில் நபி ஸல் அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள் நான் நபி ஸல்
அவர்களுக்கு ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயத்தில் அந்த இடத்தை விட்டும் எழ
முயற்சித்த போது நபி ஸல் அவர்கள் சைகை காட்டி அங்கேயே அமரும்படி சைக்கினை
செய்தார்கள். குர்ஆனை ஓத ஓத அதைக் கேட்ட அந்த ஜின்களின் அழுகுரல் அதிகமானது.
அவர்களின் குரலை மட்டுமே நான் கேட்டேன். அவர்களை நான் பார்க்க முடியவில்லை. நீண்ட
நேரம் கழித்து நபி ஸல் அவர்கள் திரும்பி வந்தார்கள்.
படிப்பினை- இந்த உலகில் அவர்களை நாம் பார்க்க முடியாது.
ஆனால் அவர்கள் நம்மைப் பார்க்க முடியும்.
மற்றொரு அறிவிப்பில்
நபி ஸல் திரும்பி வந்தவுடன் என்னிடம் நீர் அந்தக் கோட்டைத் தாண்டி வந்திருந்தால்
உங்களை அந்த ஜின்கள் ஏதேனும் செய்திருக்கலாம் என்றும் நபி ஸல் கூறியதாக உள்ளது
சுலைமான் அலை
அவர்களின் பணியாளர்களாக ஜின்களும் இருந்தனர்
وَلِسُلَيْمَانَ
الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ
الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَنْ يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَنْ
يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ (12)
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِنْ مَحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوابِ
وَقُدُورٍ رَاسِيَاتٍ اعْمَلُوا آلَ دَاوُدَ شُكْرًا وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ
الشَّكُورُ (13) فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى
مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْسَأَتَهُ فَلَمَّا خَرَّ
تَبَيَّنَتِ الْجِنُّ أَنْ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي
الْعَذَابِ الْمُهِينِ (14) سبأ
ஸுலைமான் அலை அவர்களுக்கு காற்றை வசப்படுத்தினோம்.
அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு
ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும்
இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை
அவருக்குச் சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. "தாவூதின் குடும்பத்தாரே!
நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' (என்று கூறினோம்.) திருக்குர்ஆன்
: 34:12
ஜின்களை கட்டுப் படுத்தும் ஆற்றலை தனக்கு மட்டுமே வழங்கிட சுலைமான்
அலை அல்லாஹ்விடம் கேட்டார்கள்
عَنْ
أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « إِنَّ عِفْرِيتًا
مِنَ الْجِنِّ تَفَلَّتَ عَلَىَّ الْبَارِحَةَ - أَوْ كَلِمَةً نَحْوَهَا -
لِيَقْطَعَ عَلَىَّ الصَّلاَةَ ، فَأَمْكَنَنِى اللَّهُ مِنْهُ ، فَأَرَدْتُ أَنْ
أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِى الْمَسْجِدِ ، حَتَّى تُصْبِحُوا
وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ ، فَذَكَرْتُ قَوْلَ أَخِى سُلَيْمَانَ رَبِّ
هَبْ لِى مُلْكًا لاَ يَنْبَغِى لأَحَدٍ مِنْ بَعْدِى »(بخاري
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக
திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது
இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை
வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்தப்
பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா!
எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு
வந்தது என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ 461
பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள்
ஜின்கள் என்பவர்கள்
ஆடுமாடுகளைப் போன்று பகுத்தறிவற்ற உயிரினமில்லை. மாறாக மனிதர்களைப் போலவே
பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம் நரகத்தை
அடையக்கூடியவர்கள். சிந்தித்து நல்வழியை தேர்வு செய்யுமாறு
வலியுறுத்தப்பட்டவர்கள்.
ஜின்களில் முஃமினான ஜின்களும்
உள்ள. காஃபிரான ஜின்களும் உள்ளன. காஃபிரான ஜின்கள் தான் சூனியம் செய்பவர்களுக்கும்
சிலை வணக்கம் செய்பவர்களுக்கும் சாதகமாக செயல் படுகின்றன.
وَأَنَّهُ
كَانَ رِجَالٌ مِنَ الْإِنْسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِنَ الْجِنِّ فَزَادُوهُمْ
رَهَقًا (6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக