வியாழன், 24 செப்டம்பர், 2026

மேற்கத்திய கலாச்சாரம்

 25-09-2026

ரபீஉல் ஆகிர்-  12


بسم الله الرحمن الرحيم  

      மேற்கத்திய கலாச்சாரம்

  



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


இன்றைய இளைஞர்களிடம் இளம் பெண்களிடமும் மேற்கத்திய கலாச்சாரம் பரவிக் கிடப்பதைப் பார்க்கிறோம். அண்ணல் நபி ஸல் அவர்களின் வழியைப் பின்பற்ற வேண்டிய முஸ்லிம்இளம் தலைமுறையினர் மேற்கத்திய கலாச்சாரத்தை அதிகம் பின்பற்றுகின்ற னர். உடுத்தும் உடை, கிழிந்த ஃபேண்ட், தலைமுடி ஸ்டைல், பர்த்டே கொண்டாட்டம், வெள்ளியால் கழுத்துச் செயின், வெள்ளியால் கை செயின் அணிதல், இசை போன்ற மேற்கத்திய கலாச்சாரம் அதிகம் பரவிக் கிடப்பதைப் பார்க்கிறோம். இதன்பாதிப்பை அவர்கள் உணருவதில்லை. (வெள்ளியால் மோதிரம் மட்டும் அணியலாம். அது சுன்னத்.)                                      

முஸ்லிம்களுக்கென்று இருந்த உலகளாவிய தலைமை வீழ்ந்த காரணமே மேற்கத்திய கலாச்சாரம் தான்.

  உமர் ரழி அவர்களின் காலத்தில் இந்த உலகில் பெரும் பகுதி முஸ்லிம்களின் ஆளுமைக்குக் கீழ் வந்து அதற்குப் பிறகு அப்படியே விரிவடைந்து சுமார் ஆயிரம் வருடங்கள் வரை முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் உலகில் நீடித்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளிலும் இஸ்லாமிய  இளம் தலைமுறையினரின் உள்ளத்தில்  மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி, அவர்களை குர்ஆனை விட்டும் தூரமாக்கி  இறுதியாக முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக முஸ்லிம்களையே தூண்டி விட்டு இஸ்லாமிய ஆட்சியை அப்புறப்படுத்தினார்கள்.                                                       

 பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது.அந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதற்குப் பின் 120 வருடங்களில்  அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்கு திட்டம் தீட்டி அதில் வெற்றியும் கண்டார்கள். அதன் துவக்கமாக ஒரு சம்பவம் கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த ஆங்கிலேயர்கள் ஒரு ஒற்றனை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்கு அனுப்பினார்கள். அவன் அங்கு வந்தபோது சுமார் 15 வயதுள்ள இளைஞன் அழுது கொண்டிருந்தான் அவனிடம் காரணம் கேட்ட போது நான் குர்ஆனில் இருபத்தைந்து ஜுஸ்வு மனப்பாடம் செய்து விட்டேன். எனினும் ஆங்கிலேயர்களுடன் போர் புரிய நினைக்கிறேன் ஆனால் எனது தாயார் சம்மதிக்கவில்லை நீ முழு குரஆனையும் முடித்து விட்டு போருக்குப் போ என்கிறார்கள் அதனால் அழுகிறேன் என்று அவன் கூற இதை அப்படியே சென்று தலைமையிடம் கூறிய போது அவர்கள் நாம் இப்போது சென்றால் நமக்குத் தோல்வி தான் மிஞ்சும் எதுவரை முஸ்லிம்கள் அவர்தகளின் வேதத்துடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதுவரை நாம் ஒன்றும் செய்ய முடியாது என முடிவு செய்தார்கள். அதற்குப் பின்பு இருபது வருடங்கள் கழித்து ஒரு ஒற்றனை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்கு அனுப்பினார்கள். அவன் அங்கு வந்தபோது ஒரு இளைஞன் அழுது கொண்டிருந்தான் அவனிடம் காரணம் கேட்ட போது நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் அவளை திருமணம் செய்ய நினைக்கிறேன் ஆனால் என் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை அதனால் அழுகிறேன் என்றான். இதை அப்படியே சென்று தலைமையிடம் கூறிய போது அவர்கள் நாம் இப்போது சென்றால் நமக்கு வெற்றி கிடைக்கும் முஸ்லிம்கள் அவர்களின் வேதத்துடன் தொடர்பை குறைத்துக் கொண்டது நல்ல சந்தர்ப்பம் என்று முடிவு செய்து போருக்கு வந்தார்கள். வென்றார்கள். அவர்கள் நினைத்தது போன்று ஸ்பெயினில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்கு துடைத்தெறிந்தார்கள்.        


மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எச்சரிக்கை...

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ  (ابوداود)

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ ؟   (بخاري)

   கருத்து- யூத, கிறிஸ்தவ (மேற்கத்தியர்களின்) கலாச்சாரத்தை ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக நீங்கள் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் புகுந்தாலும் நீங்களும் புகுந்து விடூவீர்கள் – புகாரீ

قال النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ..(بخاري

  என் உம்மத்தில் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் அல்லாஹ் ஹராமாக்கிய விபச்சாரத்தையும், பட்டாடையையும், மதுவையும், இசைக்கருவிகளையும் ஹலாலாக்கி விடுவார்கள்  - நூல் புகாரீ 

விளக்கம் – மேற்படி ஹதீஸ்களின் படி  இன்றைக்கு முஸ்லிம் நாடுகளிலேயே மேற்கத்திய கலாச்சாரங்கள் மலிந்து விட்டன. ஜித்தா  கடற்கரையில் ஆண்களும் பெண்களும்  அரைகுறை ஆடையுடன் ஒன்றாக குளிக்கிறார்கள். இன்னும் சொல்வதானால் இந்திய முஸ்லிம்களிடம் இருக்கும் பேணுதல் கூட சில முஸ்லிம் நாடுகளில் உள்ள பலரிடம் இல்லை. குறிப்பாக சவூதி மன்னர் சல்மான் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  சினிமா தியேட்டர்கள், மதுபான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றை எதிர்த்த பல உலமாக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  இப்படியாக மெல்ல மெல்ல ஷரீஅத் சட்டங்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. மேற்கத்திய கலாச்சாரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெறும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரில் கூட அமெரிக்காவுக்கு சாதகமாகவே சவூதி செயல்படுகிறது. 

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي (ترمذي)

எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை – அவர்களின் சிலைகளை வணங்காத  வரை மறுமை நாள் ஏற்படாது. நூல் : திர்மிதீ, அபூ தாவூத்.                                                

قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ (بخاري

 'தவ்ஸ்' இனப் பெண்களின் புட்டங்கள், 'துல்கலஸா கடவுள் சிலைகயைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் 'தவ்ஸ்' இன மக்கள் வழிபட்டு வந்த நிலையாகும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். 

விளக்கம் -அபூஹுரைரா(ரலி)அவர்கள் இந்த 'தவ்ஸ்' குலத்தைச் சேர்ந்தவர்களே. இக்குலத்தினர் கடைசி காலத்தில்  இஸ்லாத்தைக் கைவிட்டு இறைமறுப்புக்குத் திரும்பிவிடுவர். ஒழிக்கப்பட்ட 'துல்கலஸா' சிலை வழிபாடு மீண்டும் தலைதூக்கும். அக்குலப் பெண்கள் போட்டியிட்டுக் கொண்டு நெரிசலில் அந்தச் சிலையைச் சுற்றிச் சுற்றி வருவர். நிலைமை இவ்வளவு தூரம் மோசமாகும் அளவுக்கு மார்க்கம் ஆதரவற்றுப் போய்விடும். அதன் பின்னரே உலக அழிவுநாள் வரும். (ஃபத்ஹுல் பாரீ).

சில வருடங்கள் முன்பு அபுதாபியில் நமது இந்திய பிரதமர் ஒரு கோவிலை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.


இந்தியாவில் இளம் தலைமுறையினரிடம் மேற்கத்திய கலாச்சாரம்

ஆடை அணிவதில்  மேற்கத்திய கலாச்சாரம்

  இன்றைய நம்முடைய இஸ்லாமிய இளைஞர்களிடம் ஆடைக் கலாச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஒரு புறம் அரைக்கால் டவுசர் அணிந்து கொண்டு முழங்கால் தெரிய நிறைய பேர் வலம் வருகிறார்கள் என்றால் மறுபுறம் பள்ளிக்குத் தொழுகைக்கு வரும் இளைஞர்களில் சிலர் குட்டையான டி-ஷர்ட் மட்டுமே அணிந்து வந்து அத்துடன் தொழுகின்றனர். அவர்கள் ருகூவு செய்வதற்காக குனியும்போது கட்டாயம் மறைக்கவேண்டிய பின்பகுதி அப்படியே வெளியே தெரிகிறது.இதனால் அவர்களின் தொழுகை கூடாது என்பதைக் கூட அறிந்து கொள்வதில்லை எனவே ஆடை சம்பந்தமாக அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

فَقَالَ اللَّه تَعَالَى " خُذُوا زِينَتكُمْ عِنْد كُلّ مَسْجِد دلت الآية على وجوب ستر العورة كما تقدم. وذهب جمهور أهل العلم إلى أنها فرض من فروض الصلاة. وقال الأبهري هي فرض في الجملة، وعلى الإنسان أن يسترها عن أعين الناس في الصلاة وغيرها. وهو الصحيح؛ (قرطبي)

   மேற்படி ஆயத்தின் விளக்கமாக அவ்ரத்தை மறைப்பது தொழுகையில் மட்டுமா அல்லது மற்ற நேரத்திலுமா என்பதில்  இமாம்களிடம் கருத்து வேறுபாடு உண்டு. பல இமாம்கள் மற்ற நேரங்களிலும் கூட தொப்புள் முதல் முட்டுக்கால் வரையிலான அவ்ரத்தை மறைப்பது கட்டாயம் என்று கூறுகின்றனர்.

عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ أَقْبَلْتُ بِحَجَرٍ أَحْمِلُهُ ثَقِيلٍ وَعَلَيَّ إِزَارٌ خَفِيفٌ قَالَ فَانْحَلَّ إِزَارِي وَمَعِيَ الْحَجَرُ لَمْ أَسْتَطِعْ أَنْ أَضَعَهُ حَتَّى بَلَغْتُ بِهِ إِلَى مَوْضِعِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْجِعْ إِلَى ثَوْبِكَ فَخُذْهُ وَلَا تَمْشُوا عُرَاةً (مسلم)                       

மிஸ்வரா ரழி என்ற நபித்தோழர் கூறினார்கள். நான் ஒரு கனமான கல்லை சுமந்து வந்தேன். என் மீது இலேசான கீழாடை இருந்தது. என்னுடைய கீழாடை நழுவியது. நான் அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் வைக்கும் வரை கீழாடையை எடுத்து உடுத்த முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் என்னிடம் முதலில் உமது ஆடையை எடுத்து உடுத்துவீராக நிர்வாணமாக நடக்க வேண்டாம் என்று கூறினார்கள்.

عن جَرْهَد كَانَ مِنْ أَهْلِ الصُّفَّةِ قَالَ : جَلَسَ عِنْدَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَفَخِذِى مُنْكَشِفٌ فَقَالَ خَمِّرْ عَلَيْكَ أَمَا عَلِمْتَ أَنَّ الْفَخِذَ عَوْرَةٌ  (سنن الكبري للبيهقي

    ஜுர்ஹுத் ரழி அவர்கள் கூறினார்கள் எங்களுடன் நபி ஸல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது எனது தொடை திறந்திருந்த து. அப்போது நபி ஸல் அவர்கள் உமது தொடையை மூடுவீராக தொடை  கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி என்பது உமக்குத் தெரியாதா என்று கூறினார்கள்.                                                          

தலை முடி விஷயத்தில் மேற்கத்திய கலாச்சாரம்

  நபி வழியைப் பின்பற்ற வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் நடிகர்களின் வழியை பின்பற்றி தங்களுடைய ஹேர் ஸ்டைலை வித விதமாக அமைத்துக் கொள்கிறார்கள். கரடிகளைப் போன்றும் நரிகளைப் போன்றும் தலைமுடிகளை அமைத்துக் கொண்டு அதையே ஸ்டைல் என்ற நினைக்கிறார்கள்.                                                     

தலை முடியையும், தாடி முடியையும் அழகு படுத்த வேண்டும். ஆனால் அது நபி வழியில் இருக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ (ابوداود)

யாருக்கு முடி இருக்கிறதோ அதை அவர் சிறப்பாக வைத்துக் கொள்ளட்டும்

பரட்டைத் தலையுடன் இருப்பவரை ஷைத்தானுக்கு ஒப்பிட்டுக்கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

 عن عَطَاءَ بْنَ يَسَارٍرضقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ ثَائِرَ الرَّأْسِ وَاللِّحْيَةِ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ أَنْ اخْرُجْ كَأَنَّهُ يَعْنِي إِصْلَاحَ شَعَرِ رَأْسِهِ وَلِحْيَتِهِ فَفَعَلَ الرَّجُلُ ثُمَّ رَجَعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ هَذَا خَيْرًا مِنْ أَنْ يَأْتِيَ أَحَدُكُمْ ثَائِرَ الرَّأْسِ كَأَنَّهُ شَيْطَانٌ (مؤطا)

ஒரு மனிதர் தலைமுடியும் தாடி முடியும் கலைந்த நிலையில் வந்தார். அவரைக் கண்ட நபி ஸல் அவர்கள் கைகளால் சைக்கினை காட்டி வெளியே சென்று அவற்றை சீர்செய்து கொண்டு உள்ளே வருமாறு கட்டளையிட்டார்கள். அவர் அவ்வாறே தலைமுடியையும் தாடி முடியையும் சீர் செய்து விட்டு  திரும்பி வந்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போன்று பரட்டைத் தலையுடன் வருவதை விட  இது எவ்வளவு சிறப்பானதாக  இருக்கிறதல்லாவா என்றார்கள்.                       

                    

عَنْ يَحْيَى بْنِ سَعِيد أَنَّ أَبَا قَتَادَةَ الْأَنْصَارِيَّ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِي جُمَّةً أَفَأُرَجِّلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَكْرِمْهَا فَكَانَ أَبُو قَتَادَةَ رُبَّمَا دَهَنَهَا فِي الْيَوْمِ مَرَّتَيْنِ لِمَا قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَكْرِمْهَا(مؤطا)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூ கதாதா ரழி அவர்கள் எனக்கு தோள் புஜம் வரை முடி  (கிர்தா) இருக்கிறது. அதை நான் அழகு படுத்தி வாரிக் கொள்ளட்டுமா என்று கேட்க, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் அதை அழகு படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள்.அதனால் அபூகதாதா ரழி அவர்கள் ஒருநாளைக்கு இருமுறைஎண்ணெய் தேய்த்து அழகு படுத்துவார்கள்.

படிப்பினை- கிர்தா போன்ற முடி வைப்பதில் தவறில்லை என்பது மேற்படி ஹதீஸ் மூலமாக தெரிய வருகிறது. ஆனால் அதற்கு பெண்கள் போன்று கிளிப் போடுவது கூடாது. அப்படியே தொங்க விட வேண்டும். தொழும்போது  அந்த முடிகள் முன்னால் வந்து விழும் என்பதற்காக சிலர் கிளிப்  மாட்டுவார்கள். அது கூடாது.  பின்வரும் ஹதீஸில் அவ்வாறு  தடை வந்துள்ளது

عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ أُمِرْنَا أَلَّا نَكُفَّ شَعَرًا وَلَا ثَوْبًا  (ابن ماجة) 

عَنْ عَلِىٍّ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« يَا عَلِىُّ أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِى ، وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِى. لاَ تَقْرَأْ وَأَنْتَ رَاكِعٌ ، وَلاَ وَأَنْتَ سَاجِدٌ ، وَلاَ تُصَلِّ وَأَنْتَ عَاقِصٌ شَعْرَكَ فَإِنَّهُ كِفْلُ الشَّيْطَانِ ، (سنن الكبري للبيهقي )

ஆண்கள் பெண்களைப் போல் தலைவாருவதும், பெண்கள் ஆண்களைப் போல் தலைவாருவதும் கூடாது. பாப் கட்டிங் உட்பட

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَأَخْرَجَ عُمَرُ فلُانَةَ (بخاري) عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا(ترمذي)وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لَا يَرَوْنَ عَلَى الْمَرْأَةِ حَلْقًا وَيَرَوْنَ أَنَّ عَلَيْهَا التَّقْصِيرَ(ترمذي)

குறிப்பு-மேற்காணும் ஹதீஸின் படி ஆண்கள் நீளமாக முடி வளர்த்து பெண்களைப் போல் பின்னல் (ஜடை) போட்டுக் கொள்வதும், அதுபோல் பெண்கள் தங்களின் கூந்தலை வெட்டி பாப் கட்டிங் என்ற பெயரில் ஆண்களைப் போல் தலைவாரிக்கொள்வதும், அல்லது தங்கள் பெண்குழந்தைகளுக்கு (குளிக்க வைக்க சங்கடப்பட்டு) அவ்வாறு முடி வெட்டி விடுவதும் கூடாது.               

டோப்பா, அல்லது ஒட்டு முடி வைப்பதும் கூடாது

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ (مسلم)عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي زَوَّجْتُ ابْنَتِي فَتَمَرَّقَ شَعَرُ رَأْسِهَا وَزَوْجُهَا يَسْتَحْسِنُهَا أَفَأَصِلُ يَا رَسُولَ اللَّهِ فَنَهَاهَا(مسلم

عن جَابِر رضي الله عنه يَقُولُ زَجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَصِلَ الْمَرْأَةُ بِرَأْسِهَا شَيْئًا(مسلم) عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ(مسلم)

நரைத்த முடிக்கு கறுப்புச் சாயம் பூசுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மருதாணி இட்டு சிவப்பாக்குவது சுன்னத்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ (نسائ- عَنْ جَابِرٍ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ (نسائ

சில மக்கள் புறாவின் ஈரல் கறுப்புச் சாயத்தைக் கொண்டு பூசிக் கொள்வார்கள் அவர்கள் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்

டை அடிப்பதால் அதிலுள்ள இரசாயனப் பொருட்கள் தலையில் உள்ள தோலினுள் இறங்கி தலைமுடி கொட்ட ஆரம்பிக்கிறது. தலையில் சொரசொரப்பு ஏற்பட்டு தலையின் தோல் சிதில் சிதிலாக ஆக்கப்படுகிறது. அந்த இரசாயனத்தால் கண்பார்வை குறைகிறது. சிந்தனைத் திறனும் பாதிக்கப்படுகிறது என மருத்துவ மேதைகள் குறிப்பிடுகின்றனர்

وعن جابر قال : أتي بأبي قحافة يوم فتح مكة ورأسه ولحيته كالثغامة بياضا فقال النبي صلى الله عليه وسلم : " غيروا هذا بشيء واجتنبوا السواد " . رواه مسلم

அழகுக்காக புருவ முடிகளையும், மற்ற அங்க அவயங்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாமா?

وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا-وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ..(119)النساء

عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالنَّامِصَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ.. (مسلم)

அல்லாஹ்விடம் இப்லீஸ் கூறியது போல இன்று பிளாஸ்டிக் சர்ஜரி என்ற பெயரில் அழகுக்காக உடல் உறுப்புக்களில் சிறியதை பெரிதாக்குவதும், பெரியதை சிறிதாக்குவதும் எல்லாவற்றுக்கும் மேலாக ஆணையே பெண்ணாக மாற்றும் சாதனங்கள் பெருகி உள்ளன.


போலீஸ் கட்டிங் போன்று தலையில் பாதி முடியும், பாதி மொட்டையுமாக இருப்பது கூடாது

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقَزَعِ. قَالَ قُلْتُ لِنَافِعٍ وَمَا الْقَزَعُ قَالَ يُحْلَقُ بَعْضُ رَأْسِ الصَّبِىِّ وَيُتْرَكُ بَعْضٌ (مسلم)  عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى غُلامًا قَدْ حُلِقَ بَعْضُ رَأْسِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَاهُمْ عَنْ ذلِكَ قَالَ : إِمَّا أَنْ تَحْلِقُوا كُلَّهُ وَإِمَّا أَنْ تَتْرُكُوا كُلَّهُ (شرح السنة)وفي رواية قال فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ(شرح السنة)

தாடி வைப்பது சுன்னத். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதும் போது அவர்களின் தாடி அசையும்

عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ (بخاري)

عَنْ أَبِي مَعْمَرٍ قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ قُلْنَا بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ (بخاري)

கையால் பிடிக்கும் அளவுக்கு தாடி வைத்திருந்த ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்

قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي (94)سورة طه

முழுக்கைச் சட்டை அணிவது சுன்னத்

عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ(ابوداود)

நபி ஸல் அவர்களின் சட்டைக்கை மணிக்கட்டு வரை இருந்தது.


மெழுகுவர்த்தி ஏற்றி, பட்டாசு வெடித்து பர்த்டே கொண்டாடும் இளைஞர்களைப் பற்றி... 

 பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய வயது துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பம் என்பது அதாவது காலங்கள் கடந்து கொண்டிருப்பது கவலையான விஷயமே தவிர மகிழ்ச்சியான விஷயம் அல்ல. காரணம் வாழ்க்கை எனும் பயணம் உண்மையில் மரணத்தை நோக்கிய பயணமாகும்.  ஒருவரின் 80 வருட வாழ்க்கையில் 20 வயது முடிந்து 21 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 60 வருடம் தான். அதேபோல் 30 வயது முடிந்து 31 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 50 வருடம் தான். அதேபோல் 70 வயது முடிந்து 71 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 10 வருடம் தான். ஆகவே ஒருவரின் ஆயுள் குறைந்து கொண்டேயிருப்பதை என் ஆயுள் குறைந்து விட்டது என இனிப்பு வழங்கி கொண்டாடுவதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. அதே நேரத்தில் இதுபோன்ற பிறந்த நாள் தினங்களில் ஒரு முஸ்லிம் இத்தனை வருடங்களை கடந்து விட்டோம். இனி மீதமுள்ள என் வாழ்நாளில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக வாழ வேண்டும் என்று எண்ணி, நல்ல நடைமுறைகளைத் துவங்குவதற்கான கணக்காக இந்த நாட்களை ஆக்கிக் கொள்வதிலும், அதை செயல்படுத்தத் துவங்குவதிலும் தவறில்லை.                                                                 

மற்றவர்களின் கலாச்சாரத்தை நாம் முடிந்த வரை தடுக்க வேண்டும். 

அல்லது வெறுக்க வேண்டும். அவர்களுடன் ஐக்கியமாகி விடக்கூடாது.

عن ابن مسعودٍ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أول ما دخل النقص على بني إسرائيل أنه كان الرجل يلقى الرجل فيقول: يا هذا اِتّقِ الله ودَعْ ما تصنع فإنه لا يحل لك، ثم يلقاه من الغد وهو على حاله، فلا يمنعه ذلك أن يكون أكيله وشريبه وقعيده، فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعضٍ ثم قال: " لُعِنَ الَّذينَ كَفَرُوا مِنْ بَنِي إسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاودَ وعِيسَى ابْنِ مَرْيَمَ ذلكَ بِمَا عَصَوْا وكَانُوا يَعْتَدُونَ. كَانُوا لا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ. تَرَى كَثِيراً مِنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذينَ كَفَرُوا لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنْفُسُهُمْ " إلى قوله: " فَاسِقُونَ " المائدة: 78، 81 .......رواه أبو داود، 

   பனீ இஸ்ராயீல் சமூகத்துக்கு பிரச்சினை எங்கிருந்து துவங்கியது என்றால் அவர்களில் சில நல்லவர்கள் இருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களின் நிலையாகிறது அவர்கள் தவறு செய்பவர்களைக் கண்டால் இறைவனுக்கு பயந்து இதை விட்டு விடு என உபதேசம் செய்வார்கள். அடுத்த நாள் காணும்போது அவர் அதே தவறை செய்து கொண்டிருப்பதை இந்த நல்லவர் காண்பார். நாட்கள் செல்லச் செல்ல தவறு செய்பவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள். இன்னும் சில நாட்களில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவும் உண்ண ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் தவறு செய்யா விட்டாலும் தவறு செய்பவர்களைக் கண்டு எந்த வெறுப்பும் வராத நிலை ஏற்பட்டு விட்டதால் அல்லாஹ் இவர்களின் உள்ளங்களையும் தவறை செய்பவர்களின் உள்ளங்களைப் போன்று ஆக்கி அனைவரையும் சாபத்திற்கு உள்ளானவர்களாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.    

عن جابر رضي ا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ: فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ "(شعب الايمان

முற்காலத்தில் அல்லாஹ் பாவிகள் நிறைந்த ஒரு நகரத்தை தலைகீழாக புரட்டி அழிக்கும்படி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் உத்தரவிட்டான். அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ரப்பே இந்நகரில் ஒரு நல்ல மனிதர் இருக்கிறார். அவர் கண் சிமிட்டும் நேரம் கூட உனக்கு மாறு செய்ததில்லை என்று கூற,அதற்கு அல்லாஹ் அவரையும் சேர்த்தே அழித்து விடுங்கள். காரணம் அவர்கள் பாவங்கள் செய்ததை இவர் கண்டும் இவரின் முகத்தில் வெறுப்பின் அடையாளம் ஏற்படவில்லை என்று கூறினான்.                      

عنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:" إِذَا اسْتَحَلَّتْ أُمَّتِي خَمْسًا فَعَلَيْهِمُ الدَّمَارُ، إِذَا ظَهَرَ التَّلَاعُنُ، وَشَرِبُوا الْخُمُورَ، وَلَبِسُوا الْحَرِيرَ، وَاتَّخذُوا الْقِيَانَ ، وَاكْتَفَى الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ "  (بيهقي في شعب الايمان- الترغيب والترهيب

  என் சமூகத்தினர் ஐந்து காரியங்களை ஆகுமாக்கிக் கொண்டால் அவர்களை அழிவு சூழ்ந்து கொள்ளும். 1.ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டால் 2.மது அதிகரித்தால் 3.பட்டாடைகளை அணிந்தால் 4.இசைக் கருவிகளை பொழுது போக்காக ஆக்கிக் கொண்டால் 5.ஆண் ஆணோடும் பெண் பெண்ணோடும் ஜோடி சேர ஆரம்பித்தால்.                                                  

பட்டாடை அணியக் கூடாது என்று உலமாக்கள் தடுத்தும் கேட்காத மன்னர் ஷாஜஹான்

  மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம்  இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது.

இறை நேசர்கள்

 18-09-2026

ரபீஉல் ஆகிர் – 5


இறை நேசர்களின் அடையாளங்கள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


இறைநேசர்களான அல்லாஹ்வின் நல்லடியார்கள் எப்படி இருப்பார்கள் என அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் விபரித்துக் கூறியுள்ளான். நபிமொழியிலும் நிறைய  கூறப்பட்டுள்ளன.  அவற்றில் சிலதை இங்கு காண்போம். 

இறைநல்லடியார்கள் எந்த ஒரு விஷயத்திலும் பெருமை கொள்ள மாட்டார்கள்

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا (63) عن عَبْد الرَّحْمَنِ بْنَ زَيْدِ بْنِ أَسْلَمَ, فِي قَوْلِ اللَّهِ:" " يَمْشُونَ عَلَى الأَرْضِ هَوْنًا " , قَالَ: لا يَتَكَبَّرُونَ عَلَى النَّاسِ وَلا يَتَجَبَّرُونَ وَلا يُفْسِدُونَ فِي الأَرْضِ". (قرطبي

அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் மனதில் ஷைத்தான் பெருமையை உண்டாக்க முயற்சி செய்தான். அது முடியவில்லை

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10  فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيم  اِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.)  موسوعة الرد على الصوفية

9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் வாழ்வில் நடைபெற்ற பிரபலமான சம்பவங்களில் ஒன்றை அவர்களே சொல்லிக் காட்டினார்கள். நான் என்னுடைய பயணங்களில் ஒரு பயணத்தில்  குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன். அதே நிலையில் கடற்கரையில் நான் இறை தியானத்தில் இருந்த போது எனக்கு முன்னால் மழை மேகம் போன்ற ஒரு காட்சி தோன்றியது. அதிலிருந்து இதமான காற்றை உணர்ந்தேன். பின்பு ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு பெரும் ஒளியை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரு உருவம் தோன்றி அப்துல் காதிரே! நான்தான் உன்னுடைய ரப்பு. மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களையெல்லாம் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறியது. உடனே நான் இது ஷைத்தானின் வேலை என்று எண்ணி சுதாரித்துக் கொண்டு அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு! என்றேன். ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு இருந்த அந்த ஒளி உடனே மறைந்து இருளாகி விட்டது. அந்த உருவமும் புகையாக மாறி விட்டது. பின்பு அவன் என்னை நோக்கி அப்துல் காதிரே! உம்முடைய கல்வி ஞானத்தாலும்  உம்முடைய உயர்வான பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்டும் என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டீர். நான் இது போன்ற யுக்தியை பயன்படுத்தி எழுபது தரீகத் வாதிகளை நான் கெடுத்துள்ளேன். (ஆனால் நீர் உன்னுடைய திறமையால் தப்பித்துக் கொண்டீர்)என்று பெருமையை உண்டாக்கும் வகையில் அடுத்த சூழ்ச்சியை ஆரம்பித்தான். அப்போதும் நான் சுதாரித்துக் கொண்டு (என்னிடம் எவ்வித பெருமையும் இல்லை. எவ்வித திறமையும் இல்லை) என்னுடைய ரப்புக்கே அனைத்துப் பெருமையும் உண்டு. என்று கூறினேன்.   

 இவ்வாறு அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் கூறிய போது அவர்களிடம் நீங்கள் எப்படி அவனை ஷைத்தான் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். எப்போது அவன் மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களை உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன் என்று கூறினானோ உடனே நான் சுதாரித்துக் கொண்டேன் என்றார்கள். 

படிப்பினை 1- (இப்படி ஒரு விஷயம் அல்லாஹ்விடமிருந்து ஏற்படுவதாக இருந்தால் முதலில் நபி ஸல் அவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்பட்டிருக்கும் என்பது ஆலிம்களுக்கு மட்டுமே தெரியும்.)      

படிப்பினை-2  மார்க்கத்தில் ஹராம் என்று கூறப்பட்டதை இன்றைக்கு யாரும் ஹலாலாக்க முடியாது என்றிருக்க சிலர் ஹராமை ஹலால் என்று ஃபத்வா கொடுக்கின்றனர். அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.       

  படிப்பினை-3  மார்க்க ஞானம் உள்ளவராகவும் அதேநேரத்தில் பணிவை மேற்கொள்பவராகவும் இருக்கும் மார்க்க அறிஞரை ஷைத்தான் அவ்வளவு சீக்கிரத்தில் வழி கெடுக்க முடியாது. எழுபது பேரை அவன் வழி கெடுத்ததாக அவனே கூறினான் என்றால் ஒன்று அவர்களிடம் பணிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது மார்க்க ஞானம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.            

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه  قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ (سنن ابن ماجة

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பணிவு

قال السدي: كانت تسير به في اليوم مسيرة شهرين. وروى سعيد بن جبير عن ابن عباس قال: كان سليمان إذا جلس نصبت حواليه أربعمائة ألف كرسي، ثم جلس رؤساء الانس مما يليه، وجلس سفلة الانس مما يليهم، وجلس رؤساء الجن مما يلي سفلة الانس، وجلس سفلة الجن مما يليهم، وموكل بكل كرسي طائر لعمل قد عرفه، ثم تقلهم الريح، والطير تظلهم من الشمس، فيغدو من بيت المقدس إلى إصطخر، فيبيت ببيت المقدس، ثم قرأ ابن عباس: غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ (12)سورة سبا-  (قرطبي

  நபி சுலைமான் அலை அவர்களுக்கு அல்லாஹ் காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். சுலைமான் அலை அவர்களும் அவர்களின் பட்டாளமும் ராட்சத விரிப்பின் மீது அமர்ந்தால் காற்று அவர்களை நினைத்த இடத்திற்கு மிக விரைவாகக் கொண்டு செல்லும். அந்த விரிப்பின் முன் இருக்கையில் சுலைமான் அலை இருப்பார்கள். அவர்களைச் சுற்றி நான்கு இலட்சம் இருக்கைகள் இருக்கும். முதல் வரிசையில் மனித இனத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இருப்பார்கள். அடுத்த வரிசையில் மனித இனத்தைச் சேர்ந்த சேவகர்கள் இருப்பார்கள். அடுத்த வரிசையில் ஜின் இனத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இருப்பார்கள்.  அடுத்த வரிசையில் ஜின் இனத்தைச் சேர்ந்த சேவகர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே ஒரு பெரிய பறவை இறக்கைகளை விரித்தபடி நிழல் தந்து கொண்டிருக்கும். இத்தகைய பிரமாண்டத்துடன் ஆகாயத்தில் பறப்பார்கள். பைத்துல் முகத்தஸில் இருந்து ஒரு மாதம் தொலை தூரமுள்ள ஊருக்கு  ஒரு காலை நேரம் முடிவதற்குள் சென்றடைவார்கள். அங்குள்ள மக்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் வழங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டு அன்று மாலைக்குள் மறுபடியும் பைத்துல் முகத்தஸுக்கு வந்து விடுவார்கள்.                                                         

இவ்வளவு அருட்கொடைகள் வழங்கப்பட்டிருந்தாலும் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அந்தப் பயணத்தின் போது தலையைக் கீழே தாழ்த்தியவர்களாக அல்லாஹ்வை திக்ர் செய்தபடி பணிவை வெளிப்படுத்தியவர்களாக அமர்ந்திருப்பார்கள்.

كان سليمان عليه السلام دائم التواضع حتى قيل: إنه كان يمشي منكسر الرأس خشوعاً لله وأثناء استعراضه لجنوده من الجن والإنس

நபி சுலைமான் அலை அவர்களுக்கு இவ்வளவு நிஃமத் கிடைக்கக் காரணம்

وقال الحسن : شغلت سليمان الخيل حتى فاتته صلاة العصر ، فعقر الخيل فأبدله الله خيرا منها وأسرع ، أبدله الريح تجري بأمره حيث شاء ، (قرطبي

சுலைமான் அலை தனது பறக்கும் குதிரைகளைக் கண்டு ரசித்தபோது ஒரு தொழுகையின் நேரம் தவறி விட்டது. அதற்காக வருந்தி தனது தொழுகை தவறுவதற்குக் காரணமான குதிரைகளை அறுத்து விட்டார்கள். அதற்கு நற்கூலியாக அல்லாஹ் காற்றையே வசப்படுத்தித் தந்தான். 

  

இறைநேசர்கள் விஷயத்திலும் ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன் காலமெல்லாம் தொழுவதே  பெரிய கராமத் ஆகும்

 இறை நேசர் ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்களிடம் மாணவராக இருந்த   ஒருவர் சுமார் 12 வருடங்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டார் அப்போது அவர் ஷைகு அவர்களிடம் பயணம் கூறும்போது நான் இத்தனை வருடங்களாக என் மனதில் வைத்துள்ள ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இத்தனை வருடத்தில் நான் உங்களிடம் எந்த கராமத்தையும் நான் கண்டதில்லையே என்று கூற ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதாவது ஒரு நேரம் இமாம் ஜமாஅத்தை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள் இல்லை என்று இவர் பதில் கூறினார் மீண்டும் ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதேனும் ஒரு நேரம் தக்பீர் தஹ்ரீமாவை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்க இல்லை என்று இவர் பதில் கூறினார் அதற்கு ஷைகு அவர்கள் இதை விட என்ன அற்புதம் உமக்கு வேண்டும் என்றார்கள்... உடனே அந்த சீடர் ஷைகு அவர்களை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தியவராக  உங்களுடைய நிலையை நானும் அடைய வேண்டும் நான் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்ப உங்களிடம் எப்போது வரட்டும் என்று கேட்டார் அதற்கு ஷைகு அவர்கள் "நான்" இறந்த பிறகு வா என்றார்கள் உடனே அந்த சீடர் ஷைகு அவர்களே நீங்கள் இறந்த பின்பு வருவதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நான் இறந்த பிறகு என்று என்னுடைய மவ்த்தை நான் குறிப்பிடவில்லை மாறாக "நான்" என்ற அகம்பாவம் எப்போது உன் உள்ளத்தில் அழியுமோ, இறந்து விடுமோ அப்போது என்னிடம் வா என்ற பொருளில் தான் நான் கூறினேன் என்றார்கள். 

இறைநேசர்கள் யாரையும் சபிக்க மாட்டார்கள். யாரையும் சபிக்க க் கூடாது என்பது அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் எழுதிய நூலில் இடம் பெற்ற முக்கிய உபதேசமாகும்

-  أن يجتنب الدعاء على أحد" ، وإن ظلمه فلا يقطعه بلسانه ، ولا يقابله بقول أو فعل ؛ فإن فعل ذلك وجعله من جملة آدابه ارتفع في عين الله ، ونال محبة الخلق جميعا .

யாரையும் சபிக்கக்கூடாது என்ற உபதேசத்தில் இருந்து ஒரு படிப்பினையான சம்பவம்

அல்லாமா துல்பிகார் சாஹிப் ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் ஒரு சம்பவத்தை எழுதுகிறார்கள், முற்காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை  இருந்தது அப்பெண் அக்குழந்தையை தூங்க வைக்க மிகவும் கஷ்டப்படுவாள் அவ்வளவு எளிதாக அவன் தூங்க மாட்டான் ஒரு தடவை அவளுக்கு அடுப்பில் அதிகமான வேலை இருந்த து. ஆனால் மகன் எந்த வேலையையும் செய்ய விடாமல் இடுப்பிலயே தூக்கி வைக்கும்படி அடம் பிடித்தான். அந்தப் பெண் எப்படியோ பிள்ளைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம் என்று வயிறு நிறையும் அளவுக்குப் பால் தந்தாள், அவனும் தூங்கும் நிலைக்கு வந்தவுடன் அவனைப் படுக்க வைத்து விட்டு மறுபடியும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும்போது மறுபடியும் அவன் விழித்துக் கொண்டான். அப்போது அப்பெண் சங்கடப்பட்டு ஒரு வார்த்தையைச் சொன்னாள் நீ தூங்கினாயே ஒரேயடியாக தூங்கி இருக்க வேண்டாமா அதாவது இறந்திருக்க வேண்டாமா என்று கருத்தில் அவ்வாறு  கூறி விட்டாள். அல்லாஹ் அதை அப்படியே அங்கீகரித்தான். ஆனால் உடனே எதுவும் நடைபெறவில்லை. அவள் தன் மகனை நன்கு வளர்த்தாள். படிக்க வைத்தாள். அவனும் எல்லா படிப்புகளையும் படித்து நன்கு முன்னேறி பல பட்டங்களைப் பெற்றான். சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கினான். மற்றவர்கள் எல்லோரும்  இப்படித்தான் பிள்ளையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஊரே மெச்சும் அளவுக்கு அவன் உயர்ந்தான். கடைசியில் ஒரு பெரிய இடத்தில் அவனுக்குப் பெண் பேசி திருமணமும் நிச்சயமானது.  அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது அவன் வீட்டில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக ஒரு  ஸ்டூலில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழ, சற்று நேரத்தில் அவன் மூச்சும் அடங்கியது. வாழைப்பழத்தை அது காயாக இருக்கும்போது அறுக்காமல் அது கனிந்த பின்பு அறுப்பது போல அல்லாஹ் இதை நிகழ்த்தினான். இச்சம்பவத்தால் அவனின் தாய் பைத்தியமாகி விட்டாள். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊரின் இறைநேசர் ஒருவரின் கனவில் அந்த த் தாய்  தன் பிள்ளையை திட்டிய காட்சி கனவாக காட்டப்பட்டு இதனால் தான் அவன் இறந்தான் என்பதும் கூறப்பட்டது. தாயின் சாபம் என்பது பிள்ளை விஷயத்தில் உடனே பலிக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு..


இறைநேசர்கள் எந்த முஸ்லிமையும்   காஃபிர் என்று எளிதாக  கூறி  விட மாட்டார்கள். அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் எழுதிய நூலில் இதுவும் முக்கியமான உபதேசமாகும். 

أن لا يشهد على أحد من أهل القبلة بشرك" ، أو كفر ، أو نفاق ، فذلك أقرب للرحمة ، وأقرب لأخلاق السنة ، وأبعد من ادعاء العلم ، وأقرب إلى رضا الله ، وهو باب شريف يورث العبد رحمة الخلق أجمعين .

ஷிர்க் செய்யாத ஒருவரை முஷ்ரிக் என்று கூறுவது அவரைக் கொல்வதற்கு நிகரான பாவத்தை உண்டாக்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا (بخاري) عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ (بخاري)  

உன் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று ஒரு முஸ்லிமை நோக்கி கூறியவரின் கதி....

عَنْ أَبي هُرَيْرَةَ رضي الله عنه سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَانَ رَجُلَانِ فِي بَنِي إِسْرَائِيلَ مُتَوَاخِيَيْنِ فَكَانَ أَحَدُهُمَا يُذْنِبُ وَالْآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ فَكَانَ لَا يَزَالُ الْمُجْتَهِدُ يَرَى الْآخَرَ عَلَى الذَّنْبِ فَيَقُولُ أَقْصِرْ فَوَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ فَقَالَ لَهُ أَقْصِرْ فَقَالَ خَلِّنِي وَرَبِّي أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا فَقَالَ وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ فَقَبَضَ أَرْوَاحَهُمَا فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِينَ فَقَالَ لِهَذَا الْمُجْتَهِدِ أَكُنْتَ بِي عَالِمًا أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا وَقَالَ لِلْمُذْنِبِ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ بِرَحْمَتِي وَقَالَ لِلْآخَرِ اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ قَالَ أَبُو هُرَيْرَةَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ (ابوداود) بَاب فِي النَّهْيِ عَنْ الْبَغْيِ-كِتَاب الْأَدَبِ

பனீ இஸ்ராயீல் சமூகத்தில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். ஒருவர் வணக்கசாலி. மற்றொருவர் பாவி. அவரை பாவம் செய்யும் நிலையில் இந்த வணக்கசாலி பார்க்கும்போதல்லாம் உன்பாவத்தைக் குறைத்துக் கொள் என புத்திமதி கூறுவார். ஒருமுறை ஒரு பாவத்தைச் செய்பவராக அவரைக்கண்டு மனம் பொறுக்க முடியாமல் உன்னை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான் என சொல்லிவிட்டார். இதன்பின்பு அவ்விருவரும் இறந்த பின்பு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். இந்த வணக்கசாலியிடம் அல்லாஹ் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று நீ எப்படி கூற முடியும் என எச்சரித்த பின்பு அந்தப் பாவியிடம் உன்னை நான் மன்னித்து விட்டேன். என் அருளால் நீ சுவனம் செல் என்பான். ஆனால் அந்த வணக்கசாலி அல்லாஹ்வின் சிறப்புத் தன்மையாகிய மன்னித்தல் என்ற சிஃபத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நரகத்திற்குக் கொண்டு செல்லும்படி மலக்குகளிடம் கூறுவான். இதை அறிவிக்கும் அபூஹுரைரா ரழி அவர்கள் கூறும்போது இவரின் ஒரு வார்த்தை அவருடைய இம்மை மறுமை அனைத்தயும் வீணாக்கி விட்டது என்றார்கள். நூல் அபூதாவூத்

சிறிய பாவமாக இருந்தாலும் இறைநேசர்கள் பெரிய அளவில் கவலைப்படுவார்கள்.

عَنْ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ حَدِيثَيْنِ أَحَدُهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ عَنْ نَفْسِهِ قَالَ إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ (بخاري) 6308

சிறந்த முஃமின் ஒரு பாவத்தைச் செய்து விட்டால் தனது தலைக்கு மேலே பெரிய மலை இருப்பது போலவும் அதற்குக் கீழே அமர்ந்திருப்பது போலவும் அது தன் மீது விழுந்து விடுவது போலவும் கவலைப்படுவார். ஆனால் பாவியான மனிதன் பெரும்பாவத்தைச் செய்தாலும் தன் மூக்கைக் கடந்து செல்லும் ஈயை எப்படி ஒருவர் பொருட்படுத்த மாட்டாரோ  அதுபோல் அவரது பாவத்தைப் பொருட்படுத்த மாட்டார். மலையை உதாரணமாகக் கூறிய காரணம். மற்ற ஆபத்துகளில் இருந்து கூட தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்திலிருந்து தப்புவது கடினம்.                                

والحكمة في التمثيل بالجبل إن غيره من المهلكات قد يحصل النسبب إلى النجاة منه بخلاف الجبل إذا سقط على الشخص لا ينجو منه عادة (مرعاة )   فعلامة المؤمن أن توجعه المعصية حتى يسهر ليله فيما حل بقلبه من وجع الذنب ...فالمؤمن الكامل إذا أذنب يحل به أكثر من المصاب لحجبه عن ربه ومن أشفق من ذنوبه فكان على غاية الحذر منها لا يرجو لغفرها سوى ربه فهو يقبل على الله وهو الذي أراده الله من عباده ليتوب عليهم ويجزل ثوابهم  ولهذا قال بعض العارفين : ذنب يوصل العباد إلى الله تعالى خير من عبادة تصرفه عنه وخطيئة تفقره إلى الله خير من طاعة تغنيه عن الله. (فيض القدير

சிறந்த முஃமின் ஒரு சிறு பாவம் செய்தாலும்  அந்தக் கவலையால் அவருக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. அதற்காக மிகவும் வருந்துவார். அதுவே அவரது அந்தஸ்து உயர காரணமாக ஆகி விடும். இதனால்தான் சில ஆரிஃபீன்கள் “ஒரு அடியானிடம் ஏற்படும் பாவம் கூட சில நேரங்களில் அல்லாஹ்விடம் நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு அடியானிடம் ஏற்படும் நல்ல அமல் (அதை பிறரிடம் சொல்லிக் காட்டுவது போன்ற காரணங்களால்) அல்லாஹ்வை விட்டும் அவனைத் திருப்பி விடுகிறது. என்பார்கள்.                                              

عَنِ ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا عَدَلَهُ  وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا عَدَلَهُ (مصنف ابن ابي شيبة

உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி தாவூத் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. நபி தாவூத் அலை அவர்களின் அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி ஆதம் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.                                                                  

 

மனோ இச்சையை அடக்கி உள்ளத்தைப் பக்குவப் படுத்தியவர்கள் தான் இறைநல்லடியார்கள்.

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9)

உள்ளம் என்பது ஒரு கண்ணாடி என்பார்கள் அந்தக் கண்ணாடி எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அந்த அளவுக்கு எதிரில் உள்ள உருவம் மங்கலாகவே தெரியும். அதேபோல் ஒருவரின் உள்ளம் மாசு பட்டிருந்தால் அவர் தன்னைப் போலவே மற்றவர்களையும் பார்ப்பார். எவர் மீதும் நல்லெண்ணம் கொள்ள மாட்டார். ஆகவே கல்பு என்ற கண்ணாடியை சிறுவயதில் இருந்தே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு கண்ணாடியை சுமார் 10 வருடங்களாக துடைக்காமல் இருந்து அதன் பின்பு அதை எடுத்து ஒரே நாளில் எப்படியாவது துடைத்து சுத்தமாக்கி விட வேண்டும் என்று நினைத்து, என்ன தான் கஷ்டப்பட்டு துடைத்தாலும் அந்த மங்கலான நிறம் மாறுவது கடினம். அதேபோல் இன்றைக்கு சிலர் குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்பு முழு இபாதத்தில் ஈடுபடலாம் என்று எண்ணுவர்.  அது பலர்களுக்கு முழுமையான பலனை தருவதில்லை.                

   ஒரு மனிதர் நான் இறைவனை தியானம் செய்யப் போகிறேன். அதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்று சொல்லி ஓரிடத்தில் தனிமையில் அமர்ந்து தியானம்  செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஒரு அழகிய பெண் நடந்து வரும் சப்தம் கேட்டது. அந்தப் பெண்ணைப் பார்த்தார். அன்றைக்கு அவருடைய தியானம் கலைந்தது. அடுத்த நாளும் அவர் முயற்சியை கை விடாமல் என் கண்கள் திறந்திருந்தால் தானே யாரையும் பார்க்க முடியும். என்று கூறி தன் கண்களை துணியால் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போதும் அதே பெண் நடந்து வர, அவளின் கொலுசு சப்தம் கேட்டது. உடனே அவருடயை தியானம் கலைந்தது. அடுத்த நாள் அவர் என் காதுகளையும் மூடிக் கொண்டால் எந்த சப்தமும் இடையூறு செய்யாது  என்று கூறி தன் காதுகளையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார் அப்போதும் அதே பெண் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வர, அந்த நறுமணம் இவருடைய தவத்தை கலைத்து விட்டது. அடுத்த நாள் அவர் தன் மூக்கையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார். இப்போது அந்தப் பெண்ணும் வரவேயில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்த நேரம் வந்தவுடன் இவர் மனதில் நேற்று இதே நேரம் அந்தப் பெண் வந்தாள். என்ற சிந்தனை ஏற்பட்டது. உடனே அவருடயை தவம் கலைந்தது.- படிப்பினை- மனதை பக்குவப்படுத்தாமல் எத்தனை வேறு எதை மூடினாலும் பலனில்லை.                                        

இறை நல்லடியார்கள் அமானிதத்தைப் பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்

ஹிஜ்ரத் புறப்படும்போது நபி ஸல் அவர்கள் ஆபத்தான சூழ்நிலையிலும் அலீ ரழி அவர்களை மக்காவில் விட்டுச் சென்ற காரணம் அமானிதங்களை அவரவரிடம் ஒப்படைப்பதற்குத்தான். 

وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ (82) كهف -  قال ابن عباس حفظا بصلاح أبيهما ولم يذكر منهما صلاحا وقال جعفر بن محمد  كان بينهما وبين ذلك الأب الصالح سبعة آباء وقال مقاتل كان أبوهما ذا أمانة (تفسير زاد المسير

இந்த சிறுவர்களின் ஏழாவது தலைமுறையில் வாழ்ந்த தந்தை அமானிதத்தைப் பேணிப் பாதுகாப்பதில் மக்களிடம் சிறந்து விளங்கினார். அவரை நம்பி மக்கள் அவரிடம் எதையும் ஒப்படைப்பார்கள். அவர் சிறந்த நல்லடியாராக இருந்ததால் அவரது சந்ததியில் வந்த இந்த அநாதைச் சிறுவர்களின் சொத்தை கிழ்ர் அலை மூலம் அல்லாஹ் பாதுகாத்தான்.          

இறுதி நாள் நெருக்கத்தில் நம்பகத்தன்மை தான் முதலில் மக்களிடமிருந்து எடுக்கப்படும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ضُيِّعَتْ الْأَمَانَةُ فَانْتَظِرْ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا أُسْنِدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرْ السَّاعَةَ (بخاري

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا (75)ال عمران

بِقِنْطَارٍ" أَيْ بِمَالٍ كَثِير "يُؤَدِّهِ إلَيْك" لِأَمَانَتِهِ كَعَبْدِ اللَّه بْن سَلَام أَوْدَعَهُ رَجُل أَلْفًا وَمِائَتَيْ أُوقِيَّة ذَهَبًا فَأَدَّاهَا إلَيْهِ "وَمِنْهُمْ مَنْ إنْ تَأْمَنهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إلَيْك" لِخِيَانَتِهِ "إلَّا مَا دُمْت عَلَيْهِ قَائِمًا" لَا تُفَارِقهُ فَمَتَى فَارَقْته أَنْكَرَهُ كَكَعْبِ بْن الْأَشْرَف اسْتَوْدَعَهُ قُرَشِيّ دِينَارًا فَجَحَدَهُ (تفسير الجلالين

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழி அவர்களிடம் ஒருவர் ஆயிரத்து இருநூறு ஊகியா தங்கத்தைக் கொடுத்து வைத்தார். அதை அவர் கேட்கும்போது  அப்படியே திருப்பித் தந்தார்கள். ஒரு ஊகியா என்பது 38 கிராம். ஆனால் கஃப் இப்னு அஷ்ரஃபிடம் ஒரு தீனாரை ஒருவர் கொடுத்து வைத்து திரும்பக் கேட்டபோது அவன் நீ தரவில்லை என மறுத்து விட்டான்.           


குர்ஆன் எவ்வாறு இரவோடு இரவோடு உயர்த்தப்படுமோ அவ்வாறே நம்பகத்தன்மையும் இரவோடு இரவோடு அதாவது ஒரே இரவில் மக்களின் உள்ளத்தில் இருந்து எடுக்கப்படும். 

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَيْنِ قَدْ رَأَيْتُ أَحَدَهُمَا وَأَنَا أَنْتَظِرُ الْآخَرَ حَدَّثَنَا أَنَّ الْأَمَانَةَ نَزَلَتْ فِي جَذْرِ قُلُوبِ الرِّجَالِ ثُمَّ نَزَلَ الْقُرْآنُ فَعَلِمُوا مِنْ الْقُرْآنِ وَعَلِمُوا مِنْ السُّنَّةِ ثُمَّ حَدَّثَنَا عَنْ رَفْعِ الْأَمَانَةِ فَقَالَ يَنَامُ الرَّجُلُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ الْوَكْتِ ثُمَّ يَنَامُ نَوْمَةً فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ أَثَرِ الْمَجْلِ كَجَمْرٍ دَحْرَجْتَهُ عَلَى رِجْلِكَ فَنَفَطَتْ فَتَرَاهُ مُنْتَبِرًا وَلَيْسَ فِيهِ شَيْءٌ ثُمَّ أَخَذَ حَصَاةً فَدَحْرَجَهَا عَلَى رِجْلِهِ قَالَ فَيُصْبِحُ النَّاسُ يَتَبَايَعُونَ لَا يَكَادُ أَحَدُهُمْ يُؤَدِّي الْأَمَانَةَ حَتَّى يُقَالَ إِنَّ فِي بَنِي فُلَانٍ رَجُلًا أَمِينًا وَحَتَّى يُقَالَ لِلرَّجُلِ مَا أَجْلَدَهُ وَأَظْرَفَهُ وَأَعْقَلَهُ وَمَا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ قَالَ وَلَقَدْ أَتَى عَلَيَّ زَمَانٌ وَمَا أُبَالِي أَيُّكُمْ بَايَعْتُ فِيهِ لَئِنْ كَانَ مُسْلِمًا لَيَرُدَّنَّهُ عَلَيَّ دِينُهُ وَلَئِنْ كَانَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا لَيَرُدَّنَّهُ عَلَيَّ سَاعِيهِ فَأَمَّا الْيَوْمَ فَمَا كُنْتُ لِأُبَايِعَ مِنْكُمْ إِلَّا فُلَانًا وَفُلَانًا  (ترمذي)2334  باب مَا جَاءَ فِى رَفْعِ الأَمَانَةِ – كتاب الفتن

إن عمر لما طلب تزكية أحد الشهود فزكاه رجل ، قال له عمر: هل جاورته؟ قال : لا ، قال : هل تعاملت معه في بيع وشراء؟ قال : لا ، قال: هل سافرت معه؟ قال: لا، قال: فأنت لا تعرفه (شرح بلوغ المرام

ஒரு மனிதரை சாட்சிக்காக உமர் ரழி அவர்கள் அழைப்பதாக இருந்தார்கள். அதற்கு முன்பு அவரைப் பற்றி மற்றொருவரிடம் விசாரித்தார்கள். அப்போது அவர் அந்த மனிதரைப் பற்றி நல்ல விதமாக கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் எதை வைத்து நல்லவர் என்று அவரைக் கூறுகிறீர்கள் அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அவரோடு கொடுக்கல் வாங்கல் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார் அவரோடு பிரயாணம் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது உமர் ரழி கூறினார்கள். அப்படியானால் அவரைப் பற்றி  உனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள் மற்றொரு அறிவிப்பில் உமர் ரழி அவர்கள்  அந்த மனிதர் மஸ்ஜிதில் தொழுவதைப் பார்த்து விட்டு வந்து அவரைப் பற்றி நல்லவர் என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியதாக வந்துள்ளது.

இறுதி நபியின் இறுதி நாட்கள்

 09-09-2026

ரபீஉல் அவ்வல் – 28


இறுதி நபியின் இறுதி நாட்கள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


மவ்த்தாகும் விஷயத்தில் நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை. மற்ற மனிதர்களிடம் மலக்குல் மவ்த்  நான் வருவேன் என முன்னறிவிப்பு செய்ய மாட்டார். ஆனால் நபிமார்களுக்கு அவ்வாறல்ல.. மூஸா அலைஹிஸ்ஸலாம் மலக்குல் மவ்த் வருகை தந்த சம்பவம் இதற்கு உதாரணம். மலக்குல் மவ்த்தின் கன்னத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அறைந்த சம்பவம் .

தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அறுபது வயதை விட்டுக் கொடுத்த சம்பவத்தை கூறலாம்

மவ்த் விஷயத்தில்  மற்ற நபிமார்களை விட மேலாக நபி ஸல் அவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது

மூஸா (அலை) அவர்களிடம் உங்கள் கைக்குள் இந்த மாட்டின் முடிகள் எத்தனை அடங்குமோ அத்தனை ஆண்டுகள் நீங்கள் விரும்பினால் வாழலாம் என  சலுகை வழங்கப்பட்டது. ஆனால் நபி (ஸல்)  அவர்களுக்கு அவ்வாறு வரையறுக்கப்படவில்லை  

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ فَسَمِعْتُهُ يَقُولُ {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ}فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ  (بُخَارِي)  كتاب التفسير (بُحَّةٌ:وَهِيَ غِلَظٌ فِي الصَّوْت)

 ‘இம்மை-மறுமை (இரண்டுக்கும்) இடையில் (மறுமையைத்) தேர்ந்தெடுக்காத வரையில் எந்த நபியும் மரணிப்பதில்லை என்பதை நான் செவியுற்றிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், தான் மரணித்த அவர்களது அந்த நோயின் போது, ‘அல்லாஹ் அருள் புரிந்தவர்களுடன்…’ என்ற ஆயத்தை ஓதினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என நான் நினைத்தேன்’ என ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹ் புகாரி)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ إِنَّ عَبْدًا خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَهُ فَبَكَى أَبُو بَكْرٍ وَقَالَ فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا فَعَجِبْنَا لَهُ وَقَالَ النَّاسُ انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ يُخْبِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ وَهُوَ يَقُولُ فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْمُخَيَّرَ وَكَانَ أَبُو بَكْرٍ هُوَ أَعْلَمَنَا بِهِ (بُخَارِي)باب هِجْرَة النَّبِىِّ صلى الله عليه وسلم وَأَصْحَابِهِ إِلَى الْمَدِينَة كتاب مناقب الأنصار

நபியின் மரணத்தை சஹாபாக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அல்லாஹ் அதைப் பற்றி முன்னறிவிப்புச் செய்தான்

إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (30 الزمر) وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ ال عمران)144

தன்னுடைய வஃபாத்தைப் பற்றி நபி ஸல் அவர்கள் தன் தோழர்களிடம் கூறிய முன்னறிவிப்பு

عن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يقول حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) وفي رواية قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ(مسلم) - كِتَاب الصِّيَامِ   

சுருக்கம்- நபியவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் மட்டுமே நோன்பு நோற்று வந்தார்கள். இது விஷயத்தில் யூதர்களுக்கு மாறு செய்ய அவர்கள் விரும்பும் போது அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதையும் சேர்த்துப் பிடிப்பேன் என்றார்கள். இதன் மூலமாகவும் தன்னுடைய வஃபாத்தைப் பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِىَ اللَّهُ عَنْهُ : أَنَّهُ لَمَّا بَعَثَهُ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِلَى الْيَمَنِ خَرَجَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- مَعَهُ يُوصِيهِ بِوَصِيَّةٍ وَمُعَاذٌ رَاكِبٌ وَرَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَمْشِى تَحْتَ رَاحِلَتِهِ فَلَمَّا فَرَغَ قَالَ :« يَا مُعَاذُ أَنْتَ عَسَى أَنْ لاَ تَلْقَانِى بَعْدَ عَامِى هَذَا وَلَعَلَّكَ أَنْ تَمُرَّ بِمَسْجِدِى وَقَبْرِى ».  (سنن الكبري للبيهقي )                                   

   முஆத் ரழி அவர்களை யமனுக்கு நபி ஸல் அனுப்பிய போது முஆத் ரழி அவர்கள் வாகனத்தில் அமர்ந்த பிறகும்  அவருக்கு உபதேசம்  செய்தவர்களாகவே நபி ஸல் அவர்கள் அந்த வாகனத்துடன் நடந்தார்கள். இறுதியாக நபி ஸல் அவர்கள் முஆத் ரழி அவர்களிடம் முஆதே நீர் அடுத்த வருடம் திரும்பி வரும்போது என்னை சந்திக்க முடியாமல் போகலாம். என்னுடைய மஸ்ஜிதையும் கப்ரையும் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என முன்னறிவிப்புச் செய்தார்கள். 

தன் மரணத்தைப் பற்றி தன் குடும்பத்தவர்களுக்கு சொன்ன முன்னறிவிப்பு (இரண்டு விதமான ரிவாயத்)

عَنْ عَائِشَةَ  رضى الله عنها قَالَتْ أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِى، كَأَنَّ مِشْيَتَهَا مَشْىُ النَّبِىِّ  صلى الله عليه وسلم فَقَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم مَرْحَبًا بِابْنَتِى ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ  ثُمَّ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَبَكَتْ فَقُلْتُ لَهَا لِمَ تَبْكِينَ ثُمَّ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَضَحِكَتْ فَقُلْتُ مَا رَأَيْتُ كَالْيَوْمِ فَرَحًا أَقْرَبَ مِنْ حُزْنٍ  فَسَأَلْتُهَا عَمَّا قَالَ فَقَالَتْ مَا كُنْتُ لأُفْشِىَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم  حَتَّى قُبِضَ النَّبِىُّ  صلى الله عليه وسلم فَسَأَلْتُهَا فَقَالَتْ أَسَرَّ إِلَىَّ "إِنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُنِى الْقُرْآنَ كُلَّ سَنَةٍ مَرَّةً  وَإِنَّهُ عَارَضَنِى الْعَامَ مَرَّتَيْنِ وَلاَ أُرَاهُ إِلاَّ حَضَرَ أَجَلِى  وَإِنَّكِ أَوَّلُ أَهْلِ بَيْتِى لَحَاقًا بِى فَبَكَيْتُ فَقَالَ أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُونِى سَيِّدَةَ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ  أَوْ نِسَاءِ الْمُؤْمِنِينَ فَضَحِكْتُ لِذَلِك (بخاري) باب عَلاَمَاتِ النُّبُوَّةِ فِى الإِسْلاَمِ-كتاب المناقب - 

 சுருக்கம்- ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து. எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக கூறிய செய்தியை நான் அவர்கள் இருக்கும் வரை வெளியே சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்களிடம் நான் கேட்ட போது அவர்கள் நபி ஸல் கூறியதாக என்னிடம் கூறினார்கள். நபி ஸல் என்னிடம் எப்போதும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வருடத்தில் ஒருமுறை இதுவரை இறங்கிய குர்ஆன் முழுவதையும் ஓதிக் காட்டுவார்கள். ஆனால் இந்த முறை என்னிடம்  இதுவரை இறங்கிய குர்ஆன் முழுவதையும் ஓதிக் காட்டினார்கள். அதனால் என்னுடைய வஃபாத் நெருங்கி விட்டதாக நான் கருதுகிறேன். மேலும் அவர்களின் வீட்டாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது (ஃபாத்திமாவாகிய) நீ தான் என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு அவர்கள் என்னிடம் சுவனத்துப் பெண்களின் தலைவியாக நீ ஆகுவதை நீ பொருந்திக் கொள்ளவில்லையா என்று கூற, அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.

 மற்றொரு அறிவிப்பில் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, தன்னுடைய வஃபாத்தைப் பற்றித் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு  அழுதேன். பிறகு அவர்களின் வீட்டாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நீ தான் என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சகராத் நோயின் ஆரம்பம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ رَجَعَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ مِنْ جَنَازَةٍ بِالْبَقِيعِ وَأَنَا أَجِدُ صُدَاعًا6 فِي رَأْسِي وَأَنَا أَقُولُ وَا رَأْسَاهْ7 قَالَ بَلْ أَنَا وَا رَأْسَاهْ قَالَ مَا ضَرَّكِ لَوْ مِتِّ قَبْلِي فَغَسَّلْتُكِ وَكَفَّنْتُكِ ثُمَّ صَلَّيْتُ عَلَيْكِ وَدَفَنْتُكِ قُلْتُ لَكِنِّي أَوْ لَكَأَنِّي بِكَ وَاللَّهِ لَوْ فَعَلْتَ ذَلِكَ لَقَدْ رَجَعْتَ إِلَى بَيْتِي فَأَعْرَسْتَ فِيهِ بِبَعْضِ نِسَائِكَ قَالَتْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ بُدِئَ بِوَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ رواه أحمد (نسائ) بدء علة النبي صلى الله عليه وسلم كتاب الوفاة) (ابن ماجة- بَاب مَا جَاءَ فِي غَسْلِ الرَّجُلِ امْرَأَتَهُ- كِتَاب مَا جَاءَ فِي الْجَنَائِزِ

பொருள்- 6,தலைவலி 7,எனக்கு தலை வலிக்கிறதே 8,தொண்டை 9,கழுத்தின் உயிர் நரம்பு

சுருக்கம் –  நபி ஸல் அவர்கள் பகீஃ ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டு திரும்பினார்கள். அப்போது ஆயிஷா நாயகி ரழியல்லாஹுஅன்ஹா அவர்கள், ‘அந்தோ என் தலையே’ என்று தலைவலியால் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.உள்ளே நுழைந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் ‘ஆயிஷா! எனக்கும்தான் தலை வலிக்கிறது’ என்று கூறித் தங்களின் தலையைக் கையால் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் தங்கள் அருமை மனைவியாரின் அருகில் அமர்ந்து ‘ஆயிஷா! இந்தத் தலைவலியால் நீ இப்பொழுதே மரணமடைந்து நானே உன்னைக் குளிப்பாட்டி கஃபனிட்டுத் தொழுவித்து என் கரங்களாலேயே அடக்கம் செய்ய நேரிட்டால் எப்படி இருக்கும்?’ என்று வேடிக்கையாக கேட்டார்கள். இதைக் கேட்டு ஆயிஷா நாயகி அவர்கள், என்னை அடக்கம் செய்து விட்டு நீங்கள் வீடு திரும்பியவுடன் என்னுடைய இந்த வீட்டில் நீங்கள் இன்னொரு மனைவியோடு சந்தோஷமாக இருப்பீர்கள் என்று தமாஷாக கேட்டார்கள். அதைக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அப்போதிருந்து அவர்களின் சகராத் வேதனை தொடங்கியது.                                   

                                                               

நபி ஸல் அவர்களின் சகராத் வேதனையின் போது அவர்களுக்கு ஆயிஷா ரழி ஓதிப் பார்த்த சூராக்களும், அதன் சிறப்புகளும்

عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا (بخاري)  عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَ ( قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ) وَ ( قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ) ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ (بخاري){ باب فَضْلِ } الْمُعَوِّذَاتِ-كتاب فضائل القرآن

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றால் பாதுகாப்புக் கோரும் குல் சூராக்களை ஓதி தன் மீது ஊதுவார்கள். மற்றொரு அறிவிப்பில் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதி, தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவற்றை அவர்களின் கரங்களின் மீது ஓதி ஊதி அதை  தடவ வைத்தேன். காரணம் அவர்களுடைய கரங்களின் பரக்கத்  காரணமாக.... 

مواظبة النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ علي الصلاة في مرض موته:

عَنْ الْأَسْوَدِ قَالَ كُنَّا عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَذَكَرْنَا الْمُوَاظَبَةَ عَلَى الصَّلَاةِ وَالتَّعْظِيمَ لَهَا قَالَتْ لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ فَحَضَرَتْ الصَّلَاةُ فَأُذِّنَ فَقَالَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَقِيلَ لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ وَأَعَادَ فَأَعَادُوا لَهُ فَأَعَادَ الثَّالِثَةَ فَقَالَ إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَخَرَجَ أَبُو بَكْرٍ فَصَلَّى فَوَجَدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَفْسِهِ خِفَّةً فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ كَأَنِّي أَنْظُرُ رِجْلَيْهِ تَخُطَّانِ مِنْ الْوَجَعِ فَأَرَادَ أَبُو بَكْرٍ أَنْ يَتَأَخَّرَ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ مَكَانَكَ ثُمَّ أُتِيَ بِهِ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِهِ قِيلَ لِلْأَعْمَشِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلَاتِهِ وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ فَقَالَ بِرَأْسِهِ نَعَمْ (بخاري) باب حَدِّ الْمَرِيضِ أَنْ يَشْهَدَ الْجَمَاعَةَ- كتاب الأذان

நபியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது, "அபூபக்ரிடம் சொல்லுங்கள், அவர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும்" என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), தன் தந்தை மென்மையான இதயம் கொண்டவர் என்பதால், நபியவர்கள் நின்ற இடத்தில் நின்று அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, உமர் (ரலி) அவர்களைத் தொழுகை நடத்தச் சொல்லுமாறு இருமுறை நபியவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் நபியவர்கள் அதை ஏற்காமல், "நீங்கள் யூசுப் (அலை) அவர்களின் தோழியரைப் போல் பேசுகிறீர்கள்! அபூபக்ரையே தொழ வைக்கச் சொல்லுங்கள்" என்று உறுதியாகக் கூறினார்கள். அவ்வாறே அபூபக்கர் ரழி அவர்கள் தொழ வைக்க ஆரம்பித்தார்கள். பிறகு நபி ஸல் அவர்களின் உடலில் சிறிய முன்னேற்றம் உணரப் பட்ட போது இரு கால்கள் தரை கூட்ட  இரு நபித்தோழர்கள் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டார்கள். அதைக் கண்ட அபூபக்கர் ரழி அவர்கள் பின்னால் வர முயற்சி செய்ய போது வேண்டாம். அப்படியே நில்லுங்கள் என நபி ஸல் சைக்கினை செய்தார்கள். நபி ஸல் அவர்களை அபூபக்கர் ரழி அவர்களின் அருகில் அமர வைக்கப்பட்டது. நபி ஸல் அவர்களைப் பின்பற்றி அபூபக்கர் ரழி அவர்கள் தொழ, அபூபக்கர் ரழி அவர்களைப் பின்பற்றி மக்கள் தொழுதார்கள்.                    

ஹிஜ்ரீ 8 – ல் கைபர் போரில் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விஷம் தான் இந்த வேதனைக்கு காரணம்

عَنْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي9 مِنْ ذَلِكَ السُّمِّ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى (أَبْهَرِي:أي عرق يتعلق به القلب)

 விளக்கம்- அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு ஷஹீத் என்ற அந்தஸ்தையும் கொடுக்க நாடினான். கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உணர ஆரம்பித்தார்கள். 'ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)           

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلُ الصَّدَقَةَ فَأَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً سَمَّتْهَا فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا وَأَكَلَ الْقَوْمُ فَقَالَ ارْفَعُوا أَيْدِيَكُمْ فَإِنَّهَا أَخْبَرَتْنِي أَنَّهَا مَسْمُومَةٌ فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الْأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ قَالَتْ إِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ الَّذِي صَنَعْتُ وَإِنْ كُنْتَ مَلِكًا أَرَحْتُ النَّاسَ مِنْكَ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ (ابوداود) بَاب فِيمَنْ سَقَى رَجُلًا سَمًّا أَوْ أَطْعَمَهُ فَمَاتَ أَيُقَادُ مِنْهُ- كِتَاب الدِّيَاتِ

வேறு சில அறிவிப்புகளில் அந்தப்பெண்ணை மன்னித்ததாக வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அது ஸஹீஹானதாக  இல்லை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைசியாக தொழ வைத்த தொழுகை

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالْمُرْسَلَاتِ عُرْفًا ثُمَّ مَا صَلَّى لَنَا بَعْدَهَا حَتَّى قَبَضَهُ اللَّهُ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  وَوَفَاتِهِ – كتاب المغازى

நபி ஸல் அவர்களுடைய புன்னகை தவழும் முகத்தை கடைசியாக சஹாபாக்கள் பார்த்தது

عن أَنَس رضى الله عنه أَنَّ الْمُسْلِمِينَ بَيْنَا هُمْ فِى صَلاَةِ الْفَجْرِ مِنْ يَوْمِ الاِثْنَيْنِ وَأَبُو بَكْرٍ يُصَلِّى لَهُمْ لَمْ يَفْجَأْهُمْ إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ  فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ فِى صُفُوفِ الصَّلاَةِ. ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ  فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ  وَظَنَّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم  يُرِيدُ أَنْ يَخْرُجَ إِلَى الصَّلاَةِ فَقَالَ أَنَسٌ وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِى صَلاَتِهِمْ فَرَحًا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ إِلَيْهِمْ بِيَدِهِ رَسُولُ اللَّهِ  صلى الله عليه وسلم أَنْ أَتِمُّوا صَلاَتَكُمْ ثُمَّ دَخَلَ الْحُجْرَةَ وَأَرْخَى السِّتْرَ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ  صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى

அனஸ் (ரலி) கூறினார் (அபூ பக்கர் (ரலி) இமாமாக நிற்க முஸ்லிம்கள் ஃபஜ்ருத் தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) யின் அறையிலுள்ள திரையை விலக்கி மக்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்த்தார்கள். அது மக்களுக்குத் திடுக்கத்தை ஏற்படுத்தியது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புன்னகை  செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூ பக்கர் (ரலி) பின்னால் நகர்ந்து வரிசையில் சேர்ந்து கொள்ள முற்பட்டார்கள். தங்கள் தொழுகைகளே குழம்பிப் போகுமோ என்று முஸ்லிம்கள் எண்ணலானார்கள். உங்கள் தொழுகையைப் பூரணமாக்குங்கள்! என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சைகை செய்துவிட்டுத் திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.  (புகாரி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடைசி நிமிடங்களும், கடைசி வார்த்தைகளும்

عَنْ عَائِشَةَ  رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسْأَلُ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ يَقُول أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا يُرِيدُ يَوْمَ عَائِشَةَ فَأَذِنَ لَهُ أَزْوَاجُهُ يَكُونُ حَيْثُ شَاءَ  فَكَانَ فِى بَيْتِ عَائِشَةَ حَتَّى مَاتَ عِنْدَهَا (بُخَارِي)باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ–كتاب المغازى -  عن عائشة رَضي الله عنها قالت إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي وَفِي يَوْمِي وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُه1 فَأَمَرَّهُ2 وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ فِيهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ فِي الرَّفِيقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ (بُخَارِي) عن عَائِشَةَ رضي الله عنها أَنَّهَا سَمِعَتِ النَّبِىَّ صلى الله عليه وسلم وَأَصْغَتْ إِلَيْهِ قَبْلَ أَنْ يَمُوتَ وَهْوَ مُسْنِدٌ إِلَىَّ ظَهْرَهُ يَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَأَلْحِقْنِى بِالرَّفِيقِ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى

ஆயிஷா ரழி கூறினார்கள். “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.” இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். )“லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன”( என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி ஸல் அவர்களின் ரூஹ் பிரிந்த பின் அவர்களின் அவர்களை அபூபக்ர் அவர்கள் முத்தமிட்டு அதன் கூறிய வார்த்தை

عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ رضى الله عنهما أَنَّ أَبَا بَكْرٍ رضى الله عنه قَبَّلَ النَّبِىَّ صلى الله عليه وسلم بَعْدَ مَوْتِهِ (بُخَارِي) باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ – كتاب المغازى- عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ أَبَا بَكْرٍ قَبَّلَ بَيْنَ عَيْنَيْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَيِّتٌ (نسائ) باب تَقْبِيلُ الْمَيِّتِ- كِتَاب الْجَنَائِزِ-   عن عَائِشَةَ  رضى الله عنها أَنَّ أَبَا بَكْرٍ رضى الله عنه أَقْبَلَ عَلَى فَرَسٍ مِنْ مَسْكَنِهِ بِالسُّنْحِ4 حَتَّى نَزَلَ  فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمِ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ فَتَيَمَّمَ5 (اي قصد) رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُغَشًّى بِثَوْبِ حِبَرَةٍ  فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ وَبَكَى ثُمَّ قَالَ بِأَبِى أَنْتَ وَأُمِّى وَاللَّهِ لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَمَّا الْمَوْتَةُ الَّتِى كُتِبَتْ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا الْبُخَارِيّ باب مَرَضِ النَّبِىِّ صلى الله عليه وسلم وَوَفَاتِهِ –كتاب المغازى-  شرح:(بِالسُّنُحِ) مَوْضِع بِعَوَالِي الْمَدِينَة- لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ موتتين )لا تحيا بعد ذلك في الدنيا ثم تموت قاله ردا على من قال إنه لم يمت وَسَيُبْعَثُ- قال الداودي لم يجمع الله عليك شدة بعد الموت لأن الله تعالى قد عصمك من أهوال القيامة وقيل لا يجمع الله موت نفسك وموت شريعتك(عمدة)

நபி ஸல் அவர்களின் வஃபாத் செய்தியை தாங்க முடியாமல் தன் நிலை மறந்த உமர் ரழி அவர்கள்

عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ أَبَا بَكْرٍ خَرَجَ وَعُمَرُ بْنُ الخَطَّابِ يُكَلِّمُ النَّاسَ فَقَالَ: اجْلِسْ يَا عُمَرُ، فَأَبَى عُمَرُ أَنْ يَجْلِسَ، فَأَقْبَلَ النَّاسُ إِلَيْهِ، وَتَرَكُوا عُمَرَ، فَقَالَ أَبُو بَكْرٍ: " أَمَّا بَعْدُ : فَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لاَ يَمُوتُ، قَالَ اللَّهُ: {وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ} [آل عمران: 144]   (بخاري

  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை என்று கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் “உமரே! அமருங்கள்“ என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்தார்கள்.அப்போது மக்கள் உமர்(ரலி) அவர்களை விட்டுவிட்டு அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(மக்களே) அறிந்து கொள்ளுங்கள் உங்களில் யார் முஹம்மத்(ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் முஹம்மத்(ஸல்) நிச்சயம் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் “அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்“ என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ் கூறினான்; முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழை மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும செய்துவிட முடியாது; அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்“ (திருக்குர்ஆன் 3:144) என்றார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் அருளிய இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள். உமர் (ரலி) கூறினார்கள்:  அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி)அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூ பக்ர்(ரலி) ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.

நபி ஸல் அவர்களை குளிப்பாட்டிய போது நபித் தோழர்கள் காதில் கேட்ட அசரீரியான சப்தம்.  நபி ஸல் அவர்களின் கண்ணியம் கருதி மற்ற ஜனாஸாக்களைப்போல் ஆடையைக் கழற்றி குளிப்பாட்டப்படவில்லை.

عن عَائِشَةَ رض لَمَّا أَرَادُوا غَسْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا وَاللَّهِ مَا نَدْرِي أَنُجَرِّدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثِيَابِهِ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا أَمْ نَغْسِلُهُ وَعَلَيْهِ ثِيَابُهُ فَلَمَّا اخْتَلَفُوا أَلْقَى اللَّهُ عَلَيْهِمْ النَّوْمَ حَتَّى مَا مِنْهُمْ رَجُلٌ إِلَّا وَذَقْنُهُ فِي صَدْرِهِ ثُمَّ كَلَّمَهُمْ مُكَلِّمٌ مِنْ نَاحِيَةِ الْبَيْتِ لَا يَدْرُونَ مَنْ هُوَ أَنْ اغْسِلُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثِيَابُهُ فَقَامُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَسَلُوهُ وَعَلَيْهِ قَمِيصُهُ يَصُبُّونَ الْمَاءَ فَوْقَ الْقَمِيصِ وَيُدَلِّكُونَهُ بِالْقَمِيصِ دُونَ أَيْدِيهِمْ.(ابوداود) - كتاب الجنائز

நபி ஸல் அவர்களைக் குளிப்பாட்ட வேண்டும் என்று நாங்கள் எண்ணிய போது மற்ற ஜனாஸாக்களைப் போன்று அவர்களின் ஆடைகளைக் கழற்றிக் குளிப்பாடுவதா அல்லது ஆடையுடன் குளிப்பாட்டுவதா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த போது அல்லாஹ் அங்கு குழுமியிருந்த எங்கள் அனைவருக்கும் சிறு தூக்கத்தை ஏற்படுத்தினான். நாங்கள் அனைவரும் எங்களுடைய தாடையை நெஞ்சின் மீது கவிழ்த்தவர்களாக எங்களையும் அறியாமல் தூங்கினோம். நாங்கள் கண் விழித்த போது அந்த அறையின் ஒரு மூலையில் இருந்து சப்தம் வந்த து. நபி ஸல் அவர்களை ஆடையுடன் குளிப்பாட்டுங்கள் என்று சப்தம் மட்டும் வந்தது. அவ்வாறே குளிப்பாட்டினோம்.

நேபாள வெள்ளம்

 04-09-2026

ரபீஉல் அவ்வல் - 21



நேபாள வெள்ளப்பெருக்கும் அதன் படிப்பினைகளும்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) سبأ

  கடந்த2026 ஆகஸ்ட் 26 அன்று காலை, திபெத் எல்லைக்கு அருகில் உள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் இமயமலையின் பனிச்சிகரங்கள் உருகியதால் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பாதிப்புகளை நாம் அறிவோம். மழை, காற்று, இடி, மின்னல், வெள்ளம் ஆகியவை அல்லாஹ்வின் வலிமையான இராணுவம் என்பதை இதன் மூலம் நாம் அறிய வேண்டும். எவ்வளவு பெரிய கட்டிடங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றதை சிந்திக்கும்போது தண்ணீருக்கு அல்லாஹ் எந்த அளவுக்கு வலிமையை ஏற்படுத்தியுள்ளான் என்பதை நாம் உணர் வேண்டும். மேலும் 45 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ஒரு கோடீஸ்வரர் இந்த வெள்ள பாதிப்பால் அனைத்தையும் இழந்து அவர் உடுத்துவதற்கான சட்டையைக் கூட கடனாக பெற வேண்டிய நிலைக்கு ஆளானார் என்பதை எண்ணிப் பார்க்கும் போது உலகம் இவ்வளவு தான் என்பதை அறிந்து திருந்தி வாழ முயற்சி செய்ய வேண்டும். மேலும் நேபாளத்தின் திரிசூலி ஆற்றின் அழகும் அதனுடைய இரு புறங்களிலும் இருந்த அழகான கட்டிடங்களின் அழகும்  இன்று அலங்கோலமாக மாறி விட்டன. இதைப் பார்க்கும்போது குர்ஆனில சபா என்ற சூராவில் இடம் பெற்றுள்ள சம்பவத்தில் மஆரிப் என்ற அணைக்கட்டு உடைந்து அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அழகான ஊர் அலங்கோலமாகவும் சேறும் சகதியுமாக மாறியதைப் பற்றி அல்லாஹ் கூறுவது நினைவுக்கு வருகிறது. அதன் விபரம் பின்னால் கூறப்படும். மேலும் அத்தனை வீடுகளையும் வெள்ளம் சுருட்டிக் கொண்டு போன நிலையிலும் அதற்கு மத்தியில் குறிப்பிட்ட ஒரு வீடு மட்டும் தப்பியதைப் பற்றி அது கட்டிடக் கலையின் திறன் என்று பலர் பேசினாலும் முஃமினின் உள்ளத்தில்  அல்லாஹ் யாரைப் பாதுகாக்க நினைக்கிறானோ அவர்களை எப்படியும் பாதுகாப்பான் என்ற சிந்தனை தான் ஏற்பட வேண்டும். உயரமான மலைகளை விட மிக உயரத்தில் நூஹ் அலை அவர்களின் கப்பல் ஆறு மாதங்கள் ஓடிய போதும் அதிலுள்ள 80 பேரை அல்லாஹ் பாதுகாத்தான். காரணம் கப்பலின் கட்டுமானத் திறமை என்பதை விட அல்லாஹ்வின் வல்லமை என்பது தான் ஒரு முஃமினின் சிந்தனையாக இருக்க வேண்டும்.  

பனிப்பாறைகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்

இந்த பூமியில் 10 சதவீதம் அளவு பனிப்பாறைகள் உள்ளன. சுமார் 2 இலட்சம் பனிப்பாறைகள் உள்ளன. இவை குளிர் காலத்தில் தண்ணீரை தனக்குள்ளே தேக்கி வைத்து வெயில் காலத்தில் உருகுவதால் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியடைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படியிருந்தாலும் நன்மைக்குரியதே அழிவுக்குரியதாக மாற்றுவது அல்லாஹ்வின் வல்லமை..

இத்தகைய பனிப்பாறைகளால் நிறைய நன்மைகளும் உள்ளன. பனி மூடிய நிறைய மலைச் சிகரங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் நிறைய பொதிந்துள்ளன. யஃஜூஜ் மஃஜூஜ் இன்றும் இருக்கிறார்கள் என்றும் அவர்களைச் சுற்றி துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம் அமைத்த தடுப்புச்சுவர் இன்றும் இருக்கிறது என்றும் நாம் குர்ஆன் மூலமாக அறிகிறோம். ஆனால் அந்த தடுப்புச்சுவர் எங்கே இருக்கிறது என்று அறியப்படவில்லை. பனி மூடிய ஆர்மீனியா மலைத் தொடர்களுக்கு அப்பால் மனிதர்களால் செல்ல முடியாத இடத்தில் அல்லாஹ் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் 5000 வருடங்களைக் கடந்தும் ரஷ்யாவின் ஆர்மீனியாமலைத்தொடர்களில் பனிப்பாறைகளுக்கு நடுவே பாதுகாப்பாக உள்ளது என்பதை இன்று கண்டறியப்பட்டுள்ளது. காரணம் அதை அத்தாட்சியாக விட்டு வைப்போம் குர்ஆனில் ஸாஃப்பாத் சூராவில் 78 வது வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ளான்.

وتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ (78) سَلَامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ (79) الصافات

முதல் உலக யுத்தத்தின் போது விளாடி மீர் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆர்மீனியா மலைத் தொடரிலுள்ள ஜூதி என்ற மலை உச்சியில் பனிப்படலத்திற்கு அடியில் கப்பல் ஒன்று இருப்பதை கண்டு பிடித்துச் சொன்ன போது மாஸ்கோவிலிருந்து சில ஆராய்ச்சிக் குழுவினர் சென்று பனிப்பாறைகளை பிளந்து அந்த கப்பலை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் பல பெரிய அறைகளும் பல சிறிய அறைகளும் இருந்தன. ரஷ்ய புரட்சியின்காரணமாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரபலமடையவில்லை. பிறகு துருக்கி நாட்டிலிருந்து ஒரு குழுவினர் ஒரு ஐரோப்பிய நிபுணருடன் சென்று ஆராய்ந்து அந்த கப்பல் கோபர் என்ற ஒரு வகை சவுக்கு மரத்தினால் செய்யப்ப்பட்டது என்றும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் அந்த மரம்  தாக்குப்பிடிக்காது என்றாலும்  பனிப்படலங்கள் அந்த கப்பலை சுமார் 5000 வருடங்களாக காத்து வருகிறது என்றும் கண்டு பிடித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் “அராரத் மலைச் சிகரத்தில் கண்டு பிடிக்கப்ட்டது பைபிளில் கூறப்பட்ட நோவாவின் கப்பலா? என்ற தலைப்பில் தினத்தந்தியில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது. 

பூமியில் பனிப் பாறைகள் உள்ளதைப் போல விண்ணுலகில் மிகவும் பிரமாண்டமான பனி மலைகள் உள்ளன. அங்கிருந்தே  பூமிக்கு மழை பெய்வதாக குர்ஆன் கூறுகிறது

وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِنْ جِبَالٍ فِيهَا مِنْ بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ وَيَصْرِفُهُ عَمَّنْ يَشَاءُ(43النور)قَوْل بعض الْمُفَسِّرِينَ مَعْنَاهُ أَنَّ فِي السَّمَاء جِبَال بَرَد يُنَزِّل اللَّه مِنْهَا الْبَرَد (تفسير ابن كثير)فإن قلتَ :ما معنى) مِن جِبَالٍ فِيهَا مِن بَرَدٍ؟ قلتُ:فيه معنيان أحدهما:أن يخلق الله في السماء جبال برد كما خلق في الأرض جبال حجر-والثاني:أن يريد الكثرة بذكر الجبال كما يقال:فلان يملك جبالاً من ذهب كما خلق في الأرض جبال حجر(الكشاف)

இயற்கை அழகு எங்கே உள்ளதோ  அங்கு ஆபத்தும் இருக்கும்

அல்லாஹ்  நாடினால் எவ்வளவு அழகான ஊரையும் அலங்கோலமாக ஆக்க முடியும்

لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ (17) وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ (18) فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (19) سبا

{وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرىً ظَاهِرَةً } قال الحسن: يعني بين اليمن والشأم. والقرى التي بورك فيها: الشام والأردن1 وفلسطين. والبركة: قيل إنها كانت أربعة آلاف وسبعمائة قرية بورك فيها بالشجر والثمر والماء. فيقيلون3 في قرية ويروحون فيبيتون في قرية. وقيل: كان على كل ميل قرية بسوق، وهو سبب أمن الطريق. (تفسير القرطبي

விளக்கம்- இவர்கள் வாழ்ந்த யமனில் இருந்து சிரியா செல்லும் பாதை முழுவதும் ஒவ்வொரு மைல்களுக்கும் ஒரு ஊரை அல்லாஹ் அமைத்து அச்சமற்று பயணம் செய்யும் நிலையை உருவாக்கியும் அவர்கள் அதை மறுத்து எங்களுடைய பிரயாணத்தில் ஊர்கள் தூரமாக இருக்க வேண்டும் எனக் கூறினர். மற்றொரு அறிவிப்பில் அவர்களுக்குள் ஒரு தலைவன் இருந்தான். அவன் அதிகம் ஜோசியம் பார்ப்பவனாக இருந்தான். அவனுடைய ஒவ்வொரு ஜோசியத்தையும் அந்த மக்கள் நம்பினார்கள். பயணம் செய்யும் போது ஊர்கள் தூர தூரமாக இருக்க வேண்டும் என்பதும் அவன் கணித்த ஜோசியத்தின் அடிப்படையில் உள்ளது தான்.                              

இவர்களின் பல்வேறு தவறுகளால் செழிப்பாக இருந்த இவர்களின் ஊரை அல்லாஹ்  முற்றிலும் மாற்றி விட்டான்.

أَنَّ الْمَرْأَة كَانَتْ تَمْشِي تَحْت الْأَشْجَار وَعَلَى رَأْسهَا مِكْتَل أَوْ زِنْبِيل وَهُوَ الَّذِي تُخْتَرَف فِيهِ الثِّمَار فَيَتَسَاقَط مِنْ الْأَشْجَار فِي ذَلِكَ مَا يَمْلَؤُهُ مِنْ غَيْر أَنْ يَحْتَاج إِلَى كُلْفَة وَلَا قِطَاف لِكَثْرَتِهِ وَنُضْجه وَاسْتِوَائِهِ وَكَانَ هَذَا السَّدّ بِمَأْرِبِ بَلْدَة بَيْنهَا وَبَيْن صَنْعَاء ثَلَاث مَرَاحِل وَيُعْرَف بِسَدِّ مَأْرِب وَذَكَرَ آخَرُونَ أَنَّهُ لَمْ يَكُنْ بِبَلَدِهِمْ شَيْء مِنْ الذُّبَاب وَلَا الْبَعُوض وَلَا الْبَرَاغِيث وَلَا شَيْء مِنْ الْهَوَامّ (تفسير ابن كثير

ஒரு பெண் காலியான கூடையை தலையில் சுமந்த வண்ணமாக அந்த ஊரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வரை நடந்து சென்றாலே போதும் எந்த ஒரு மரத்தில் இருந்தும் எதையும் பறிக்காமல் அவளின் கூடை வித விதமான பழங்களால் நிரம்பி விடும். அந்த அளவுக்கு ஊர் முழுக்க மரங்களும் அதில் கனிகளும் நிறைந்திருக்கும். அந்த ஊர் முழுக்க ஒரு கொசுவையோ ஒரு ஈயையோ பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அந்த ஊரின் தட்ப வெப்ப நிலையை அல்லாஹ் சீராக வைத்திருந்தான். 

وَذَكَر غَيْر وَاحِد مِنْهُمْ اِبْن عَبَّاس وَوَهْب بْن مُنَبِّه وَقَتَادَة وَالضَّحَّاك أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ لَمَّا أَرَادَ عُقُوبَتهمْ بِإِرْسَالِ الْعَرِم عَلَيْهِمْ بَعَثَ عَلَى السَّدّ دَابَّة مِنْ الْأَرْض يُقَال لَهَا الْجُرَذ نَقَبَتْهُ قَالَ وَهْب بْن مُنَبِّه وَقَدْ كَانُوا يَجِدُونَ فِي كُتُبهمْ أَنَّ سَبَب خَرَاب هَذَا السَّدّ هُوَ الْجُرَذ فَكَانُوا يَرْصُدُونَ عِنْده السَّنَانِير بُرْهَة مِنْ الزَّمَان فَلَمَّا جَاءَ الْقَدَر غَلَبَتْ الْفَأْر السَّنَانِير وَوَلَجَتْ إِلَى السَّدّ فَنَقَبَتْهُ فَانْهَارَ عَلَيْهِمْ (تفسير ابن كثير)

அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் மறுத்து குஃப்ர் என்ற பாவச் செயலையும் செய்த  அந்த ஊர் மக்களை தண்டிக்க நாடிய போது சபா என்ற அணைக்கட்டை அழிக்க அல்லாஹ் எங்கிருந்தோ பல்லாயிரக்கணக்கான எலிகளை அல்லாஹ் சாட்டினான். அந்த எலிகளை ஒழிக்க அந்த மக்கள் எங்கிருந்தெல்லாமோ பூனைகளை வரவழைத்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் படைகளான எலிகளை பூனைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை இறுதியில் அணைக்கட்டு உடைந்து ஊர் அழிந்தது.

படிப்பினை – நேபாளத்தில் நடைபெற்ற பேரழிவுகளைப் பார்க்கும்போது  சபா வாசிகளின் நினைவு ஏற்படுகிறது. 

அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் அளவுக்கு வெள்ளம் மற்றும் காற்றின் வலிமை

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَعَادَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتْ الْمَلَائِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ قَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْجِبَالِ قَالَ نَعَمْ الْحَدِيدُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْحَدِيدِ قَالَ نَعَمْ النَّارُ فَقَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ النَّارِ قَالَ نَعَمْ الْمَاءُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْمَاءِ قَالَ نَعَمْ الرِّيحُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الرِّيحِ قَالَ نَعَمْ ابْنُ آدَمَ تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ (ترمذي

 அல்லாஹ் பூமியைப் படைத்த பொழுது அது அசைந்து நடுங்கியது. உறுதியாக நிலை நிறுத்தி அதன் மேல் அவன் மலைகளை வைத்தான். பிறகு வானவர்கள் இறைவனிடம், “இறைவா! உன் படைப்பில் இந்த மலைகளை விட வலிமையுள்ளது எது?” என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழியாக, “மலைகளை விட இரும்பு வலிமையுள்ளது. ஏனென்றால் அது அவற்றை உடைக்கிறது” என்றான். பின்னர் வானவர்கள், “இரும்பை விட வலிமையானது எதுவும் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், “ஆம், நெருப்பு இரும்பை விட பலமுள்ளது. ஏனெனில், அது இரும்பை உருக்கி விடுகின்றது” என்றான். மறுபடியும் வானவர்கள், “இறைவா, நெருப்பை விட வன்மை அதிகமுள்ளது வேறு ஏதும் உண்டா?” என்று வினவினார்கள். “ஆம் தண்ணீர் இருக்கிறது. ஏனென்றால், அது நெருப்பை அணைத்து விடுகிறது” என்றான் இறைவன். உடனே வானவர்கள், “தண்ணீரை விட வலிமையானது வேறு ஏதும் உள்ளதா?” என்றூ கேட்டார்கள். இறைவனும், “ஆம். காற்று இருக்கிறதே. அது தண்ணீரை வெற்றி கொண்டு அலையாடச் செய்து விடுகிறது” என்றான். அதன் பின்னர் வானவர்கள், “இறைவா, காற்றை விட வலிமையானது எதுவும் உன் படைப்பில் இருக்கின்றதா?” என்று கேட்டனர். கடைசியாக இறைவன், “ஆம், தானம் செய்யும் நல்ல மனிதன். இடது கையால் தானம் செய்து, அதை வலது கையிலிருந்து மறைப்பவன். அவன் எல்லாவற்றையும் வெற்றி கொள்வான்” என்றான்.  

படிப்பினை- இவ்வளவு பெரிய பூமியில் மலைகளை நங்கூரமாக ஆக்கியவுடன் உடனே அசைவதை நிறுத்திய போது தான் மலைகளின் வலிமையை மலக்குகள் உணர்ந்தார்கள்

பின்வரும் பாவச்செயல்கள் பூமியில் அதிகரித்து விட்டால் பூமிக்கு பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும்

عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً1 وَالأَمَانَةُ مَغْنَمًا2 وَالزَّكَاةُ مَغْرَمًا3 وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ4 وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ5 وَالْمَعَازِفُ6 وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ7 قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي) وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ أي يتعلمون العلم لطلب المال والجاه لا للدين(تحفة الاحوذي 

 கருத்து- 1.எப்போது பொதுச்சொத்துக்கள் தன் சொத்துக்களாக பாவிக்கப்படுமோ 2. எப்போது அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படுமோ 3.எப்போது ஜகாத் நிறைவேற்றப்படாத கடனாக ஆகி விடுமோ 4. எப்போது மார்க்கத்தை மார்க்கம் அல்லாத நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளப்படுமோ 5. எப்போது ஒரு ஆண் மனைவிக்குக் கட்டுப்படுபவனாக ஆகி விடுவானோ 6. எப்போது ஒரு ஆண் தன் தாயை வெறுத்து 7.நண்பனைப் பெரிதாகக் கருதி 8.தந்தையை ஒதுக்குவானோ 9. எப்போது மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள் பெருகி விடுமோ 10. எப்போது சமுதாயத்தில் கெட்டவன் தலைவனாக ஆக்கப் பட்டு 11. நல்லவர்கள் ஓரங்கட்டப் படுவார்களோ 12. எப்போது ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை செய்வார்களோ 13. எப்போது பாடகிகள் பெருகி, இசை அதிகரித்து விடுமோ 14. எப்போது மது அதிகரித்து விடுமோ  15. எப்போது இந்த உம்மத்தின் பிந்தியவர்கள் முந்தியவர்களைக் குறை கூற ஆரம்பித்து விடுவார்களோ அப்போது சிவப்பு நிற அனல் காற்று வீசுவதையும் பூகம்பம் அடிக்கடி ஏற்படுவதையும் பூமி பிளக்குதல் ஏற்படுவதையும் உருமாற்றம் ஏற்படுவதையும் எரி கற்கள் எறியப்படுதையும் எதிர் பாருங்கள். எந்த அளவுக்கெனில் பாசி மாலை அறுந்தால் தொடர்ச்சியாக பாசிகள் கீழே விழுவது போன்று தொடர்ச்சியாக இவைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.                            

மேற்படி தவறுகள் நிகழ்ந்தால் பூகம்பம் அடிக்கடி ஏற்படும் என்ற நபி ஸல் அவர்களின் சொல்லுக்கேற்ப, இன்றை. விஞ்ஞானிகள் கூறும்போது ஒரு வருடத்தில் சுமார் 10 இலட்சம் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. உலகில் ஒரு வினாடி கூட நில அதிர்வு ஏற்படாத நமிடமே இல்லை. ஒவ்வொரு வினாடியும் உலகின் எங்கேனும் ஒரு பகுதியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்கிறார்கள்              عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ (بخاري

கடைசி காலத்தில் முறையில்லாமல் பிறந்த குழந்தைகள் பெருகுவதாலும் அழிவுகள் அதிகரிக்கும்

عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا لَمْ يَفْشُ فِيهِمْ وَلَدُ الزِّنَا فَإِذَا فَشَا فِيهِمْ وَلَدُ الزِّنَا فَيُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ بِعِقَابٍ(احمد)

கருத்து- முறையில்லாமல் பிறந்த குழந்தைகள் அதிகரிக்காமல் இருக்கும் வரை என்னுடைய உம்மத் நலவோடு வாழுவார்கள். எப்போது முறையற்ற குழந்தைகள் பெருகி விடுமோ அப்போது சோதனைகளை அல்லாஹ் பொதுவாக்கி விடுவான். அப்போது ஏற்படும் சோதனைகளால் நல்லவர்களும் பாதிக்கப்படுவார்கள். நூல் அஹ்மத்    இக்காலத்தில் கலப்புத் திருமணங்கள் பெருகி விட்டன. முஸ்லிம் அல்லாதவரைத் திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தும் எத்தனையோ முஸ்லிம் பெண்கள் உள்ளனர் அவர்களையும் இது எடுத்துக் கொள்ளும். திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்துபவர்களையும் இது எடுத்துக் கொள்ளும்.      

தவறை உணர்ந்து பின்பு முறையாக திருமணம் செய்து கொண்டால் அது ஏற்றுக் கொள்ளப்படுமா?

عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ أَنَّ رَجُلاً أَتَى ابْنَ مَسْعُودٍ رَضِي الله عنها فَقَالَ:رَجُلٌ زَنَى بِامْرَأَةٍ ثُمَّ تَابَا وَأَصْلَحَا أَلَهُ أَنْ يَتَزَوَّجَهَا؟ فَتَلاَ هَذِهِ الآيَةَ (ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا السَّوْءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ)قَالَ فَرَدَّدَهَا عَلَيْهِ مِرَارًا حَتَّى ظَنَّ أَنَّهُ قَدْ رُخِّصَ فِيهَا(سنن الكبري)-عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ فِيمَنْ فَجَرَ بِامْرَأَةٍ ثُمَّ تَزَوَّجَهَا قَالَ:أَوَّلُهُ سِفَاحٌ وَآخِرُهُ نِكَاحٌ لاَ بَأْسَ بِهِ-

மழை, இடி, மின்னல், புயல் ஆகியவை அல்லாஹ்வின் படைகளாகும்

قال الله تعالي فَكُلا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الأرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (40)سورة العنكبوت

இந்தப் புயலால் கடந்த காலங்களில் சில உம்மத்துகள் அழிக்கப்பட்டுள்ளனர். காற்றின் மூலமாக ஆத் கூட்டத்தார்கள் அழிக்கப்பட்டார்கள். மேலும் அதே காற்றின் மூலமாக அகழ்ப்போரின் போது மக்கா காஃபிர்களை அல்லாஹ் விரட்டியடித்தான்

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ (بخاري) باب غَزْوَةُ الْخَنْدَقِ وَهْىَ الأَحْزَابُ -كتاب المغازي

  விளக்கம்- சுமார் பத்தாயிரம் பேர் மக்காவிலுருந்து திரண்டு வருவதைக் கேள்விப்பட்ட நபி ஸல் அவர்கள் மதீனாவுக்குள் அவர்களை வர விடாமல் தடுக்க அகழ் தோண்டினார்கள். காஃபிர்களின் படை அகழிக்கு அந்தப்பக்கம் இருந்து கொண்டு கற்களையும் அம்புகளையும் வீசி தாக்க்குதல் நடத்தினார்கள் பதிலுக்கு முஸ்லிம்களும் அதேபோல் தாக்கினார்கள் இந்தச் சண்டை சுமார் 15 நாட்கள் நீடித்தது. அதன் பின்பு அல்லாஹ் எதிரிகளின் பகுதியில் மட்டும் சூறாவளி காற்றை அல்லாஹ் அனுப்பினான் அது அவர்களின் கூடாரங்கள் நாசமாக்கியது அவர்கள் மூட்டியிருந்த அடுப்புகளையெல்லாம் அணைத்து விட்டது இறுதியில் அவர்கள் வேறு வழியில்லாமல் அங்கிருந்து விரண்டோடினார்கள்.                                          

தபூர் என்ற புயல் காற்றின் மூலம் ஆது கூட்டம் அழிக்கப்பட்ட விதம்

வானில் மேகங்கள் திரண்டபோது மழை வரப் போகிறது என ஆது கூட்டம் மகிழ்ந்தார்கள். ஆனால் கடும் புயலாக இருந்தது. 

عن ابن عباس رضي الله عنه في قوله تعالى : فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ(الاحقاف24  قالوا :غيم فيه مطر قال : بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم وأول ما عرفوا أنه عذاب رأوا ما كان خارجا من رجالهم ومواشيهم يطير من السماء إلى الأرض مثل الريش دخلوا بيوتهم ، وأغلقوا أبوابهم فجاءت الريح ففتحت أبوابهم ومالت عليهم بالرمل ، فكانوا تحت الرمل سبع ليال وثمانية أيام حسوما لهم أنين ثم أمر الريح فكشفت عنهم الرمل  وأمر بها فطرحتهم في البحر فهو قوله تعالى : فأصبحوا لا يرى إلا مساكنهم (رواه ابن ابي الدنيا)

ஆது கூட்டத்தினர் ஆகாயத்தில் பார்த்த போது ஏதோ மழை மேகம் என்று எண்ணி மகிழ்ந்தார்கள். ஆனால் கீழே இறங்க இறங்க அது கடும் புயலாக மாறியது.  அந்தப் புயலின் வேகத்தால் மனிதர்களும், கால்நடைகளும் வானத்தில் காகிதம் போல பறப்பதைப் பார்த்து மற்றவர்கள் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து கதவுகளைத் தாழிட்டனர். ஆனால் அந்தப் புயல் வீசிய வேகத்தில் கதவுகள் தானாக திறந்தவுடன் வெளியே உள்ள மண்ணையெல்லாம் கொண்டு வந்து உள்ளே போட்டது. வீடு முழுவதும் மண்ணால் நிரம்ப அதற்கடியில் அவர்கள் சிக்கிய படி முனகியபடி உயிருக்குப் போராடினார்கள். ஆனால் அவர்களின் உயிரையும் அல்லாஹ் போக்கவில்லை. எட்டு நாட்கள் கடந்து மீண்டும் புயல் வீட்டுக்குள் இருந்த மண்ணையெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு அவர்களையும் வெளியே கொண்டு வந்தது. வானத்தில் காகிதம் போல பறந்தார்கள். கடைசியில் தங்களை பலசாலிகள் என பெருமையடித்த அவர்கள் அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டார்கள்.        

நபிகளாரின் காலத்தில் ஒரே ஒரு கெட்ட மனிதனின் அழிவுக்காகவும் புயல் வீசியுள்ளது

عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مِنْ سَفَرٍ فَلَمَّا كَانَ قُرْبَ الْمَدِينَةِ هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ تَكَادُ أَنْ تَدْفِنَ الرَّاكِبَ فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُعِثَتْ هَذِهِ الرِّيحُ لِمَوْتِ مُنَافِقٍ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ فَإِذَا مُنَافِقٌ عَظِيمٌ مِنْ الْمُنَافِقِينَ قَدْ مَاتَ (مسلم) قيل هو رفاعة بن دريد والسفر غزوة تبوك

நபி ஸல் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்து திரும்பும்போது கடும் புயல் வீசியது. வாகன ஓட்டியைக் கீழே தள்ளும் அளவுக்க்கு அதன் கடுமை இருந்தது. அப்போது நபி ஸல் அவர்கள் இந்தப் புயல் ஒரு முனாஃபிக்குடைய மவ்த்திற்காக அவனது இறப்பின் அடையாளமாக அனுப்புப் பட்டுள்ளது என்றார்கள். அவ்வாறே மதீனாவை அடைந்த போது ரிஃபாஆ என்ற முனாஃபிக் இறந்திருந்தான்.

ஒரே ஒரு மனிதருக்காக மழையும் பெய்துள்ளது

عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنْ الْأَرْضِ فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدْ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ الْمَاءَ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلَانٌ لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ تَسْأَلُنِي عَنْ اسْمِي فَقَالَ إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ اسْقِ حَدِيقَةَ فُلَانٍ لِاسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا قَالَ أَمَّا إِذْ قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ (بخاري) باب الصَّدَقَةِ فِى الْمَسَاكِينِ- كتاب الزهد

பேரழிவுகளால் நல்லவர்கள், சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மறுமையில் நற்கூலி அவர்களுக்கு உண்டு

عن عَائِشَة رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري 

 கருத்து-நபி ஸல் கூறினார்கள் கடைசி காலத்தில் கஃபாவை இடிப்பதற்காக ஒரு கும்பல் படை திரண்டு வரும். அவர்கள் ஒரு பாலைவனத்தை கடந்து செல்லும்போதுஅங்கு வசிப்பவர்களுடன் இணைந்து இந்தப் படையினரும் முதலாவது நபர் முதல் கடைசி நபர் வரை  பூகம்பத்தால் விழுங்கப் படுவார்கள் என நபி ஸல் கூறியபோது  ஆயிஷா ரழி அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே எதற்காக முதலாவது நபர் முதல் கடைசி நபர் வரை பூகம்பத்தால் விழுங்கப் படுவார்கள்?அங்கு கடை வைத்திருக்கும் நல்லவர்களும் இன்னும் தவறு செய்யாதவர்களும் சேர்ந்து ஏன் பூகம்பத்தால் பாதிக்கப்பட வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் கூறினார்கள். முதலாவது நபர் முதல் கடைசி நபர்வரை அனைவரும் பூகம்பத்தால் விழுங்கப்படுவார்கள். அதாவது நல்லவர்களும் சேர்ந்து விழுங்கப்படுவர். பின்பு அவரவர் நிய்யத்துக்கு ஏற்ப மறுமையில் நல்ல நிலையில் எழுப்பப் படுவார்கள். 

பேரழிவுகள் ஏற்படும்போது அதிகமாக அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்

عن أبي الدرداء قال : كان رسول الله صلى الله عليه و سلم إذا كانت ليلة ريح شديدة كان مفزعه إلى المسجد حتى يسكن الريح وإذا حدث في السماء حدث من خسوف شمس أو قمر كان مفزعه إلى المصلى حتى ينجلي  (كنز العمال

عن صفية ، قالت : « زلزلت المدينة على عهد عمر رضي الله عنه فقال : أيها الناس ، ما هذا ؟ ما أسرع ما أحدثتم ، لئن عادت لا أساكنكم فيها » 

கருத்து- உமர் ரழி அவர்களின் காலத்தில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மக்களிடம் மக்களே உங்களிடம் அது என்ன பேசுகிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். மீண்டும் ஒரு முறை பூமி அதிர்ந்தால் நான் உங்களை விட்டும் தனிமையில் இருந்து அமல்களில் ஈடுபட்டு விடுவேன்.

وروي عن عمر بن عبد لعزيز - رحمه الله - أنه كان يكتب إلى أمرائه عند وجود الزلزلة أن يتصدعوا.  الزلزال.. عبرة وعظة

நபி ஸல் அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனே நின்ற நில நடுக்கம்

عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ   (بخاري

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

உம்மத்தின் மீது பேரன்பு

 28-09-2026

ரபீஉல் அவ்வல் - 14


بسم الله الرحمن الرحيم  

(اُمَّتِي.. اُمَّتِي )   உம்மத்தீ...   உம்மத்தீ...



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


 வாழ்க்கை முழுவதும் சுயநலவாதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் உத்தம நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்க்கை முழுவதும் இந்த உம்மத்திற்காகவே வாழ்ந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சிந்தித்துப் பார்த்தாலும் அதிலும் உம்மத்தின் நலன் மீது அக்கறை கொண்ட செயலாக அமைந்திருக்கும். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் பல மனைவி களை திருமணம் செய்தது ஏன் என்பதை சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு திருமணத்தையும் இந்த உம்மத்தின் நலன் கருதியே செய்தார்கள் என்பது தெரிய வரும்.   அபூசுஃப்யான் அவர்களின் மகளான உம்மு ஹபீபா ரழிஅவர்களைத் திருமணம் செய்ததால் அபூசுஃப்யான் மட்டுமன்றி பலரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள அது காரணமாக அமைந்தது. வயதில் மூத்தவரான கதீஜா ரழி அவர்களை நபி ஸல் திருமணம் செய்ததும் இந்த உம்மத்தின் மீது கொண்ட அக்கறை தான் காரணம்.  கதீஜா ரழி அவர்களின் இடத்தில் வேறு யார் இருந்தாலும் நபிகளாருக்கு பக்க பலமாக இருந்திருக்க முடியாது. 

ஆயிஷா ரழி அவர்கள் மூலம் நபி ஸல் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த தகுதி 

ஆயிஷா ரழி அவர்களிடம் இல்லை என்பதல்ல. மாறாக கல்விக்காக மட்டுமே அல்லாஹ் ஜோடி சேர்த்து வைத்தான்.

عن عائشة رض قالت : وددت أني كنت ثكلت عشرة مثل الحارث بن هشام و أني لم أسر مسيري مع ابن الزبير [ مستدرك الحاكم ] وفي رواية لو لم اسر مسيري ذلك لكان احب الي من ان يكون لي ستة عشر ذكرا من رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (كتاب : الحسن والحسين –لمحمد رضا)

அப்துர் ரஹ்மான் இப்னு ஹிஷாம் ரழி அவர்கள் சிறு வயதில் இருந்தே மதீனாவில் பிரபலமான ஃபகீஹ். சிறந்த பிள்ளைக்கு அவரை உதாரணம் காட்டுவார்கள். நபி ஸல் அவர்களின் வஃபாத்தின் போது அவருக்கு பத்து வயது. அவரைக் குறித்து ஆயிஷா ரழி அவர்கள் கூறும்போது நபி ஸல் அவர்களிடமிருந்து கல்வியை அதிகமாகப் பெறுவது என்ற என்னுடைய வழியில் மற்றும் இப்னு ஜுபைருடைய வழியில் நான் செல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நான் நபி ஸல் அவர்கள் மூலம் அப்துர் ரஹ்மான் இப்னு ஹிஷாமைப் போல 10 ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருப்பேன். ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல.  என்றார்கள்.  

இதுமாதிரி ஒவ்வொரு தனிப்பட்ட  செயலும் கூட உம்மத்தின் நலனுக்காக வேண்டியே அமைந்தது. 

நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்க்கையில் தனக்காக அழுததை விட தன் உம்மத்துக்காக அழுத தருணங்கள் அதிகம்.

பத்ருப் போரில் இரவெல்லாம் கண் விழித்து அழுது துஆச் செய்தார்கள். 

பத்ருப் போரில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகி பிரார்த்தனை செய்தார்கள். யாஹய்யு யா கய்யூம் என்பது அந்த நேரத்தில் அவர்களின் பிரதான திக்ராக இருந்த து.

وروى النسائي والحاكم من حديث علي قال: "قاتلت يوم بدر شيئا من قتال، ثم جئت فإذا رسول الله صلى الله عليه وسلم يقول في سجوده: يا حي يا قيوم ، فرجعت فقاتلت، ثم جئت فوجدته كذلك". (فتح الباري

وعن ابن عباس ( - رضي الله عنهما - ) أن النبي صلى الله عليه وسلم - قال وهو في قُبَّةٍ له يوم بدر : " أَنْشُدُكَ عَهْدَك ووَعْدَكَ , اللَّهمَّ إنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ اليَوْم أبداً ". فأخذ أبو بكر بيده وقال : حَسْبُك يا رسول الله قد أَلْحَحْتَ عَلَى رَبِّك وهو في الدِّرع فخرج وهو يقول : سَيُهْزَمُ الجَمْعُ وَيولُّونَ الدُّبُرَ بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ (تفسير ابن كثير

عن حارثة بن مضرب ، أن عليا رضي الله عنه قال : « لقد رأيتنا ليلة بدر وما منا أحد إلا وهو نائم إلا رسول الله صلى الله عليه وسلم فإنه يصلي إلى شجرة ويدعو حتى أصبح  (دلائل النبوة للبيهقي

சுருக்கம்- பத்ருப் போரில் நபி ஸல் அவர்கள் இரவெல்லாம் அழுது துஆச் செய்தார்கள். யாஅல்லாஹ் நாளை நடைபெறும் போரில் நீ எங்களுக்கு வெற்றியைத் தரா விட்டால் அதற்குப் பிறகு உன்னை வணங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று அழுது துஆ செய்தார்கள். அருகில் இருந்த அபூபக்கர் ரழி அவர்கள் நபிகளாரின் கரங்களைப் பிடித்தவர்களாக நீங்கள் அளவுக்கு அதிகமாகவே அல்லாஹ்விடம் கெஞ்சி விட்டீர்கள் போதும் யாரஸூல ல்லாஹ் என்று கூறும் அளவுக்கு நபி ஸல் அவர்களின் அழுகை இருந்தது. மற்றொரு மற்ற அனைவரும் தூங்கினாலும் நபி ஸல் அவர்கள் மட்டும் விடிய விடிய தூங்காமல் தொழுது அல்லாஹ்விடம் துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.                                           

இந்த உம்மத்தின் நிலையை நினைத்து நபி (ஸல்) அவர்கள் அழுத மற்றொரு தருணம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ عَلَيَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ نَعَمْ فَقَرَأْتُ سُورَةَ النِّسَاءِ حَتَّى أَتَيْتُ إِلَى هَذِهِ الْآيَةِ {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا} قَالَ حَسْبُكَ الْآنَ فَالْتَفَتُّ إِلَيْهِ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ  (بخاري)   أي تجري دموعهما رحمة لأمته فإن الشاهد لا يكتم شيئاً، فإذا كلف الشهادة عليهم وهو لا يحبّ لهم إلا الكمال، ومن لازم الشهادة أن يذكر ما فعلوه من النقائص خشي عليهم أن يحلّ بهم العذاب بسبب شهادته، فرق قلبه خوفاً وحزناً عليهم حتى جرت دموعه شفقة عليهم (دليل الفالحين لطرق رياض الصالحين


இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் என்னிடம் நபி ஸல் அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டும்படி கூறினார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே தங்கள் மீது தான் குர்ஆன் இறக்கப்படுகிறது. அவ்வாறிருக்க நான் தங்களுக்கு ஓதிக் காட்டுவதா என்று கூற,  ஆம் ஓதுங்கள் என்று கூற, நான் நிஸா சூராவை ஓத ஆரம்பித்தேன். மேற்படி வசனம் வந்தவுடன் போதும் என்றார்கள். நான் நிமிரிந்து நபி ஸல் அவர்களைப் பார்த்த போது அவர்களின் காண்கள் இரண்டும் அழுது கொண்டிருந்தன. 

விளக்கம்- மறுமை நாளில் ஒவ்வொரு நபிமார்களையும் அவர்களுடைய உம்மத்துமார்களில் மாறு செய்தவர்களுக்கு சாட்சி சொல்ல அழைக்கப்படும் போது இந்த உம்மத்துக்கு சாட்சியாக நான் அழைக்கப்பட்டு இந்த உம்மத்தில் மாறு செய்தவர்களின் விஷயத்தில் நான் சாட்சி சொல்ல வேண்டியதிருக்குமே என்று நினைத்து அழுதார்கள்.  

 இந்த உம்மத்தின் மீது நபி ஸல் அவர்களின் பாசத்திற்கு மற்றொரு உதாரணம்

  ஒருவனுக்கு நன்மை அதிகம் கிடைப்பதை விட மனிதனின் பாவச் சுமைகள் பல மடங்காக ஆகி விடக்கூடாது என்பதாக இருக்கலாம். உதாரணமாக நபி ஸல் ஒருமுறை மஸ்ஜிதில் நுழைந்த போது தொழுகை நேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு சற்று தூரத்தில் நின்ற அலீ ரழி அவர்களை அழைத்து இவரை எழுப்புங்கள் என்று கூற அவ்வாறே அவரை அலீ ரழி அவர்கள் எழுப்பினார்கள் எனினும் ஒரு சந்தேகம் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே நன்மையில் நீங்கள் முந்துபவர் ஆயிற்றே நீங்களே எழுப்பியிருக்கலாமே என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவேளை நான் எழுப்பி அவர் எழுந்திருக்கா விட்டால் அவர் மீது பாவம் பல மடங்காக ஆகி விடுமே அதனால் எழுப்பவில்லை என்றார்கள். மற்றொரு நேரத்தில் கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்த போது மற்றொருவரை அழைத்து அவரை அஊது பில்லாஹ் சொல்லச் சொல்லுங்கள் என்றார்கள். அவர் சென்று கூறிய போது கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்தவர் எனக்கென்ன பைத்தியமா என்று கூறி உதாசீனப்படுத்தி விட்டார். அங்கேயும் நேரடியாக நபி ஸல் அவர்கள் கூறவில்லை. காரணம் இந்த உம்மத்தின் மீதான கருணையாகும்.            

அல்லாஹ்வே ஆறுதல் கூறும் அளவுக்கு நபி ஸல் அவர்களின் உள்ளத்தில் உம்மத்தின் கவலை இருந்தது

தமக்குப் பின் தன் உம்மத் மதம் மாறி விடக்கூடாது. தம் அவர்களில் ஒருவர் கூட நரகம் செல்லக்கூடாது என்ற கவலை பிற நபிமார்களை விட நபி ஸல் அவர்களுக்கு அதிகம். அதனால் அல்லாஹ்வே அவர்களுக்கு பல தடவை ஆறுதல் கூறினான். 

تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ  لَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ (3) إِنْ نَشَأْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ آيَةً فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ (4الشعراء)

பொருள்-இவர்கள் ஈமான் கொள்ளவில்லை என்ற கவலையால் உங்களின் உயிரையே மாய்த்துக் கொள்வீர்கள் போலிருக்கிறதே !

எனக்குப் பின் நீங்கள் மதம் மாறி விடக்கூடாது என்று தம் இறுதிப் பேருரையில் கவலையுடன் உபதேசித்த நபி ஸல் அவர்கள்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ يَوْمَ النَّحْرِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا يَوْمٌ حَرَامٌ قَالَ فَأَيُّ بَلَدٍ هَذَا قَالُوا بَلَدٌ حَرَامٌ قَالَ فَأَيُّ شَهْرٍ هَذَا قَالُوا شَهْرٌ حَرَامٌ قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فَأَعَادَهَا مِرَارًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَوَصِيَّتُهُ إِلَى أُمَّتِهِ فَلْيُبْلِغْ الشَّاهِدُ الْغَائِبَ لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ (بخاري) باب الْخُطْبَةِ أَيَّامَ مِنًى -كتاب الحج

உமர் ரழி கூறியதையும் புறக்கணித்து முனாஃபிக்கின் தலைவனுக்கு நபி ஸல் அவர்கள் தொழ வைத்தது எப்படியேனும் இந்த உம்மத்தில் ஒருவரை நரகத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா ? என்ற கவலையினால் தான்

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ يُكَفِّنُ فِيهِ أَبَاهُ فَأَعْطَاهُ ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ عُمَرُ فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي عَلَيْهِ وَقَدْ نَهَاكَ رَبُّكَ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ فَقَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً (80التوبة) وَسَأَزِيدُهُ عَلَى السَّبْعِينَ قَالَ إِنَّهُ مُنَافِقٌ قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللَّهُ {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ(84التوبة)  (بخاري) باب قَوْلِهِ ( اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ-كتاب التفسير 

நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை” என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ‘அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்” என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.

இந்த உம்மத்தில் அதிகமானவர்கள் சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் நபி ஸல் அவர்களுக்கு எந்த அளவுக்கு இருந்தது

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ فِي قُبَّةٍ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَلِكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ (بخاري) باب كَيْفَ الْحَشْرُ – كتاب الرقاق

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருந்த போது எங்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனவாதிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இந்த உம்மத்தாகிய நீங்கள் இருப்பது உங்களுக்குப் பிரியமா? என்று கேட்டார்கள். ஆம் என்று நாங்கள் கூறிய போது மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனவாதிகளில் மூன்றில் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பது உங்களுக்குப் பிரியமா?  என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்றோம் பிறகு மீண்டும் சொர்க்கவாதிகளில் பாதிப் பேர் அளவுக்கு நீங்கள் இருப்பது உங்களுக்குப் பிரியமா?  என்று கூறிவிட்டு என் உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொர்க்கவாதிகளில் பாதி அளவுக்கு இந்த உம்மத்தினர் இருக்க வேண்டும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். மேலும் கூறினார்கள் ஒட்டுமொத்த உம்மத்தையும் கவனித்து இணைவைப்பவர்கள் அனைவரையும் கவனித்து நீங்கள் கருப்பு மாட்டின் உடம்பில் இருக்கக்கூடிய சிறிய வெண்மையைப் போலத்தான் அல்லது சிவப்பு மாட்டில் உடம்பில் இருக்கக்கூடிய கருப்பு முடியை அளவுக்கு தான்.        

மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒருவர் என்ற  சதவீத த்தில் பாவிகள் பிரிக்கப்படுவார்கள்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ تَعَالَى يَا آدَمُ فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ فَيَقُولُ أَخْرِجْ بَعْثَ النَّارِ قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ فَعِنْدَهُ يَشِيبُ الصَّغِيرُ {وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ} قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَأَيُّنَا ذَلِكَ الْوَاحِدُ قَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْكُمْ رَجُلًا وَمِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا  (بخاري

சுருக்கம்- மஹ்ஷர் நாளில் அல்லாஹ் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி  நரகம் செல்லும் கூட்டத்தை தனியாக பிரித்து நிற்க வையுங்கள் என்பான். அப்போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்த சதவீதம் அடிப்படையில் நான் பிரிக்கட்டும் என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் ஒருவர் மட்டும் சுவனம். மீதி 999 பேர் நரகம் என்று கூறுவான். இந்த ஹதீஸை நபி ஸல் அவர்கள் கூறியதும் நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஆயிரம் பேரில் ஒருவர் என்று கூறினீர்களே அப்படியானால் எங்களில் ஒருவர் மட்டும் தான் சுவனம் செல்வாரா என்று கவலையுடன் கேட்ட போது நபி ஸல் அவர்கள் கவலைப் படாதீர்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தையும் சேர்த்துத் தான் அந்தக் கணக்கு என்றார்கள்.               

அதாவது கடைசி காலத்தில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் இதுவரை வாழ்ந்த சாதாரண மனிதர்களின் எண்ணிக்கையை விட பெரும் எண்ணிக்கையில் வெளிப்படுவார்கள். அவர்கள் அத்தனை பேரும் நரகவாதிகள் தான். எனவே அவர்களையும் சேர்த்துத் தான் இந்தக் கணக்கு என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த உம்மத்தின் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரை எப்படியேனும் நரகத்தை விட்டும் காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடிய சம்பவம்

عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ نُرِيدُ الْمَدِينَةَ فَلَمَّا كُنَّا قَرِيبًا مِنْ عَزْوَرَا نَزَلَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلًا ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلًا ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا ذَكَرَهُ أَحْمَدُ ثَلَاثًا قَالَ إِنِّي سَأَلْتُ رَبِّي وَشَفَعْتُ لِأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا شُكْرًا لِرَبِّي ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لِأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي شُكْرًا ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لِأُمَّتِي فَأَعْطَانِي الثُّلُثَ الْآخِرَ فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي (أبوداود) بَاب فِي سُجُودِ الشُّكْرِ- كِتَاب الْجِهَادِ قَالَ التُّورْبَشْتِيُّ: أَيْ فَأَعْطَانِيهِمْ فَلَا يَجِب عَلَيْهِمْ الْخُلُود وَتَنَالهُمْ شَفَاعَتِي فَلَا يَكُونُونَ كَالْأُمَمِ السَّالِفَة (عون المعبود)

மக்காவிலிருந்து மதினாவுக்கு புறப்பட்டோம் நாங்கள் அஜ்வரா என்ற இடத்தை அடைந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறங்கி தொழுதார்கள். பிறகு அல்லாஹ்விடம் நீண்ட நேரம் துஆச் செய்தார்கள். பின்பு சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தார்கள் பிறகு மீண்டும் எழுந்து மீண்டும் துஆ செய்தார்கள் பிறகு மீண்டும் சஜ்தா செய்தார்கள் இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு எங்களிடம் கூறினார்கள் என்னுடைய ரப்பிடம் நான் கோரிக்கை வைத்தேன். 

என்னுடைய உம்மத்துமார்களை சொர்க்கம் அழைத்துச் செல்வதற்கு நான் கோரிக்கை வைத்தேன். அல்லாஹுத்தஆலா என்னுடைய முதல் சஜ்தா மூலம் என்னுடைய உம்மத்தில் மூன்றில் ஒரு பகுதியினரை சொர்க்கம் அழைத்துச் செல்ல அல்லாஹ் எனக்கு அனுமதி வழங்கினான் அதற்காக நான் நன்றி செலுத்துவதற்காக ஸஜ்தா செய்தேன் பிறகு மீண்டும் அல்லாஹ்விடம் இன்னும் அதிகமாக கோரிக்கை வைத்தேன். இன்னொரு மூன்றில் ஒரு பகுதியினரையும் சொர்க்கம் அழைத்துச் செல்ல அல்லாஹ் அனுமதி தந்தான். நன்றி செலுத்துவதற்காக நான் சஜ்தா செய்துவிட்டு மறுபடியும் அல்லாஹ்விடம் கேட்டேன் இறுதியாக மூன்றாவது பகுதியினரையும் சொர்க்கம் அழைத்துச் செல்ல அல்லாஹ் எனக்கு அனுமதி வழங்கினான் எனவே மூன்றாவது முறையும் நான் சஜ்தா செய்தேன் என்று கூறினார்கள்.                            

 விளக்கம்- வேறு சில நபி மொழிகள் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை மூலம் பெரும் கூட்டம் சொர்க்கம் சென்றாலும் அல்லா நாடிய சில பேர் நரகத்தில் இருப்பார்கள் என்று வந்துள்ளது இந்த ஹதீஸில் அனைத்து முஸ்லிம்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கம் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கான விளக்கம்- பரிந்துரை மூலமாக பெரும் கூட்டம் பெரும்பாலான கூட்டம் பெரும்பாலான முஸ்லிம்கள் சொர்க்கம் சென்றாலும் எல்லா நாடிய சிலர் நரகத்தில் சிலர் கொஞ்ச காலம் தங்கிய பிறகு சுவனத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் அதுவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பரிந்துரை மூலமாக அமையலாம்.                                

 عن ابي هريرة رض عن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (في حديثه الطويل) إِذَا أَرَادَ اللَّهُ رَحْمَةَ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ أَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ أَنْ يُخْرِجُوا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَيُخْرِجُونَهُمْ وَيَعْرِفُونَهُمْ بِآثَارِ السُّجُودِ  وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنْ النَّارِ فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إِلَّا أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنْ النَّارِ قَدْ امْتَحَشُوا6 فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ (بخاري)بَاب فَضْلِ السُّجُود

மறுமையில் நபிகளாரின் ஷஃபாஅத்தின் மூலம் பலர் சுவனம் சென்றாலும் அல்லாஹ் நாடிய சிலர் நரகத்தில் இருப்பர். அவர்களில் தொழுகையாளிகளும் அடங்குவர். அவர்களையும் வெளியேற்றும்படி அல்லாஹ் உத்தரவு பிறப்பித்த பின் மலக்குகள் அந்த மனிதர்களை வெளியேற்றுவார்கள். அவர்களின் நெற்றியில் உள்ள சஜ்தா அடையாளத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்வார்கள். அல்லாஹ் அந்த அடையாளத்தை மட்டும் நரக நெருப்புக்கு ஹராமாக்கியிருப்பான். மற்ற பகுதிகளையெல்லாம் நரக நெருப்பு தீண்டி கரிக்கட்டைகளைப் போல் இருக்கும் அவர்களை வேளியேற்றி அவர்களின் மீது சுவனத்தின் ஜீவநதி ஊற்றப்படும்.உடனே அவர்கள் சேற்று மண்ணில் விளையும் செடி போன்று புதிய மனிதர்களாக மாறுவார்கள். அவர்களை சுவனத்தில் நுழைக்கப்படும்

மறுமையில் இந்த உம்மத்துக்காக நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுவதைப் பற்றிய நீண்ட ஹதீஸ்

عَنْ أَنَسٍ  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ مَاجَ النَّاسُ بَعْضُهُمْ فِي بَعْضٍ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ بِإِبْرَاهِيمَ فَإِنَّهُ خَلِيلُ الرَّحْمَنِ فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ بِمُوسَى فَإِنَّهُ كَلِيمُ اللَّهِ فَيَأْتُونَ مُوسَى فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ بِعِيسَى فَإِنَّهُ رُوحُ اللَّهِ وَكَلِمَتُهُ فَيَأْتُونَ عِيسَى فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ بِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَأْتُونِي فَأَقُولُ أَنَا لَهَا فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي فَيُؤْذَنُ لِي وَيُلْهِمُنِي مَحَامِدَ أَحْمَدُهُ بِهَا لَا تَحْضُرُنِي الْآنَ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ وَأَخِرُّ لَهُ سَاجِدًا فَيَقُولُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيَقُولُ انْطَلِقْ فَأَخْرِجْ مِنْهَا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ شَعِيرَةٍ مِنْ إِيمَانٍ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَعُودُ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيَقُولُ انْطَلِقْ فَأَخْرِجْ مِنْهَا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ أَوْ خَرْدَلَةٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَعُودُ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيَقُولُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيَقُولُ انْطَلِقْ فَأَخْرِجْ مَنْ كَانَ فِي قَلْبِهِ أَدْنَى أَدْنَى أَدْنَى مِثْقَالِ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنْ النَّارِ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ..(بخاري) باب كَلاَمِ الرَّبِّ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ مَعَ الأَنْبِيَاءِ وَغَيْرِهِمْ -كتاب التوحيد

மற்ற நபிமார்களை விட நபி ஸல் அவர்களுக்கு இந்த உம்மத்தின் மீது அதிகமான கவலை

عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ نَبِيٍّ سَأَلَ سُؤْلًا أَوْ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فَاسْتُجِيبَ فَجَعَلْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ (بخاري) كتاب الدعوات-عَنْ أَبِي هُرَيْرَةَ رضقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا (مسلم) كِتَاب الْإِيمَانِ

விளக்கம்- அல்லாஹ் ஒவ்வொரு நபிமார்களுக்கும் பிரத்தியேகமாக வழங்கிய துஆவை வழங்கினான். அதைக் கொண்டு மிகப் பெரிய காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். அந்த துஆவை மற்ற நபிமார்கள் இந்த உலகிலேயே பயன்படுத்தினர். உதாரணமாக நூஹ் அலை 950 வருடங்கள் பிரச்சாரம் செய்து 80 பேர் தவிர பிறர் நிராகரித்த போது....  2, மூஸா அலை ஃபிர்அவ்னுக்கு எதிராக பயன்படுத்தினார்கள். நபி ஸல் மட்டும் அதை மறுமையில் இந்த உம்மத்தின் நரக விடுதலைக்காக அதை பத்திரப்படுத்தி வைத்தார்கள். தாயிஃபில் கல்லால் அடிக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தவில்லை. மக்காவின் 13 வருட சிரமத்திலும் பயன்படுத்தவில்லை. இவை அனைத்தும் இந்த உம்மத்தின் நலனுக்காக.. இந்த உம்மத்தின் நரக விடுதலைக்காக மட்டுமே மறுமையில் பயன்படுத்துவார்கள்.                      

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَجَعَلَ يَمُرُّ النَّبِيُّ مَعَهُ الرَّجُلُ وَالنَّبِيُّ مَعَهُ الرَّجُلَانِ وَالنَّبِيُّ مَعَهُ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَرَجَوْتُ أَنْ تَكُونَ أُمَّتِي فَقِيلَ هَذَا مُوسَى وَقَوْمُهُ ثُمَّ قِيلَ لِي انْظُرْ فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَقِيلَ لِي انْظُرْ هَكَذَا وَهَكَذَا فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَقِيلَ هَؤُلَاءِ أُمَّتُكَ وَمَعَ هَؤُلَاءِ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ فَتَفَرَّقَ النَّاسُ وَلَمْ يُبَيَّنْ لَهُمْ فَتَذَاكَرَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا أَمَّا نَحْنُ فَوُلِدْنَا فِي الشِّرْكِ وَلَكِنَّا آمَنَّا بِاللَّهِ وَرَسُولِهِ وَلَكِنْ هَؤُلَاءِ هُمْ أَبْنَاؤُنَا فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَتَطَيَّرُونَ وَلَا يَسْتَرْقُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ أَمِنْهُمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ نَعَمْ فَقَامَ آخَرُ فَقَالَ أَمِنْهُمْ أَنَا فَقَالَ سَبَقَكَ بِهَا عُكَاشَة (بخاري)

சுருக்கம்- அனைத்து உம்மத்துமார்களும் ஒவ்வொரு உம்மத்தாக அந்தந்த நபியுடன் எனக்கு எடுத்துக் காட்டப் பட்டார்கள். ஒரு நபி கடந்து சென்றார்கள். அந்த நபியுடன் அவரது உம்மத் என்ற வகையில் ஒருவர் மட்டும் இருந்தார். அதாவது அந்த நபி காலமெல்லாம் தஃவா செய்தும் ஒருவர் மட்டுமே இஸ்லாத்தை ஏற்றார். மற்றொரு நபி கடந்து சென்றார்கள். அந்த நபியுடன் அவரது உம்மத் என்ற வகையில் இருவர் மட்டும் இருந்தனர். மற்றொரு நபி கடந்து சென்றார்கள். அந்த நபியுடன் அவரது உம்மத் என்ற வகையில் சொற்ப நபர்கள் மட்டும் இருந்தனர். மற்றொரு நபி கடந்து சென்றார்கள். அந்த நபியுடன் அவரது உம்மத் என்ற வகையில் யாருமே இல்லை.  அதாவது அந்த நபி காலமெல்லாம் தஃவா செய்தும் யாருமே  இஸ்லாத்தை ஏற்கவில்லை. இதற்கிடையில் ஒரு பெரிய கூட்டத்தைக் கண்டேன். ஆகாயத்தை நிரப்பும் அளவு அக்கூட்டம் இருந்தது.அது என்னுடைய உம்மத்தை இருப்பதை நான் ஆதரவு வைத்தேன். பிறகு என்னிடம் இந்தக் கூட்டம் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களும் அவர்களின் உம்மத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு அதை விட பெரிய கூட்டத்தைப் பார்த்தேன் ஆகாயத்தின் நாலா புறமும் நிரம்பி வழிந்த அக்கூட்டதைப் பற்றி இவர்கள் தான் உங்களுடைய உம்மத் என என்னிடம் கூறப்பட்டதோடு உங்களுடைய உம்மத்தில் 70,000 நபர்கள் கேள்வி கணக்கின்றி சுவனத்தில் நுழைவார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது என்ற தகவலை நபி ஸல் அவர்கள் கூறி விட்டுச் சென்று விட்டார்கள். அந்த 70,000 நபர்கள் யாராக இருக்கும் என நபித் தோழர்களிடம் கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. இறுதியில் நபி ஸல் அவர்கள் திரும்பி வந்து கூறினார்கள். அந்த 70,000 நபர்கள் யாரென்றால் அவர்கள் எந்த காரியத்திலும் அல்லாஹ்வை நம்பி காரியத்தை துவங்குவார்கள். சகுணம் பார்க்க மாட்டார்கள். ஷிர்க்கான வகையில் ஓதிப் பார்க்க மாட்டார்கள். சூடு இட்டுக் கொள்ள மாட்டார்கள் அவர்கள் தான் அந்த நபர்கள் ஆவார்கள்.

மேற்கத்திய கலாச்சாரம்

 25-09-2026 ரபீஉல் ஆகிர்-  12 بسم الله الرحمن الرحيم         மேற்கத்திய கலாச்சாரம்    https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரி...