வியாழன், 26 ஜனவரி, 2023

எல்லாவற்றிலும் பரக்கத்தை வேண்டுவது ஏன்?

 


27-01-2023

 

بسم الله الرحمن الرحيم 
 اللهم بارك لنا في رجب وشعبان
 

 
 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

     





உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பெற்றெடுத்த பிள்ளை, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் பரக்கத் வேண்டி அல்லாஹ்விடம் கேட்கிறோம். காரணம் எல்லாவற்றிலும் பரக்கத் மிக மிக அவசியம். பரக்கத் என்பதற்கு அந்தந்த இடத்திற்கு தகுந்த மாதிரி வளர்ச்சி, முன்னேற்றம், வெற்றி, நிம்மதி என பல அர்த்தங்கள் உண்டு.              

ஒருவரின் அழகு நம்மை ஆச்சரியப்படுத்தினால் பாரகல்லாஹு  என்று கூறுவதால் கண்திருஷ்டி ஏற்படாது

عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخَبَّأَةٍ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلًا صَرِيعًا قَالَ مَنْ تَتَّهِمُونَ بِهِ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلْ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ (ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الْإِنَاءَ مِنْ خَلْفِهِ-(ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَيْنُ حَقٌّ (بخاري) باب الْعَيْنُ حَقٌّ -كتاب الطب

 ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழி அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ஆமிர் ரழி அவர்கள் அந்த வழியாகச் சென்றார். ஸஹ்ல் ரழி அவர்களின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்தவுடன் இது மாதிரி அழகிய உடம்பை வேறு எங்கும் கண்டதில்லை என கண் வைத்து விட்டார். அது அவரை உடனே பாதித்தது. படுத்த படுக்கையாக ஆகி விட்ட அவரை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது இவர் விஷயத்தில் யாரையும் சந்தேகிக்கிறீர்களா என்று நபி ஸல் கேட்க, ஆமிரை ரழி நாங்கள் சந்தேகிக்கிறோம் என தோழர்கள் பதில் கூறினார்கள். உடனே ஆமிர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் எதற்காக உங்களின் உடன் பிறவா சகோத ர ரை இப்படி கண்திருஷ்டியை ஏற்படுத்தி ஏன் கொலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் பாரகல்லாஹ் என்று கூறலாமே என்றார்கள். பிறகு ஆமிர் ரழி அவர்களிடம் தண்ணீரை எடுத்து வரச் சொல்லி ஆமிர் ரழி உடைய உடல் முழுவதையும் கழுவச் சொல்லி அந்த நீரை ஸஹ்ல் ரழி அவர்களின் மீது ஊற்றச் சொன்னார்கள். (அவ்வாறு ஊற்றப்பட்டது. அவர் குணமடைந்தார்.)   

மணமக்களை வாழ்த்தும்போது பரக்கத்துக்காக துஆ   

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ (ابن ماجة) بَاب مَا يُقَالُ لِلْمُتَزَوِّجِ- كِتَاب النِّكَاحِ- عَنْ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي جُشَمَ فَقَالُوا بِالرَّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ لَا تَقُولُوا هَكَذَا وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ (ابن ماجة) بَاب تَهْنِئَةِ النِّكَاحِ- كِتَاب النِّكَاحِ  - (بارك الله لك)أي في زوجك (وبارك عليك) أي أدخل عليك البركة في مؤنتها ويُسِرَّها لك (فيض القدير) ودَلَّ صنيع المؤلف على أن الدعاء للمتزوج بالبركة هو المشروع (فتح الباري)- بِالرِّفَاءِ وَالْبَنِينَ كَلِمَة تَقُولهَا أَهْل الْجَاهِلِيَّة فَوَرَدَ النَّهْي عَنْهَا -وَاخْتُلِفَ فِي عِلَّة النَّهْي عَنْ ذَلِكَ قِيلَ لِمَا فِيهِ مِنْ الْإِشَارَة إِلَى بُغْض الْبَنَات لِتَخْصِيصِ الْبَنِينَ بِالذِّكْرِ وقال بن المنير الذي يظهر أنه صلى الله عليه وسلم كره اللفظ لما فيه من موافقة الجاهلية (مرقاة)

 பிர்ரிஃபாஇ  வல்-பனீன் என்று துஆ கேட்கக் கூடாது என அகீல் ரழி அவர்கள் கூறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை ஒதுக்கித் தள்ளுதல் என்பதும் இதில் இருக்கிறது. மேலும் மணமக்களை இவ்வாறு வாழ்த்துவது அறியாமைக்காலத்தின் பழக்கம். அதனால் நபி ஸல் அவர்கள் மணமக்களுக்கு பரக்கத்தை வேண்டி துஆச் செய்யக் கற்றுக் கொடுத்தார்கள்.                                                   

உண்ணும் உணவில் பரக்கத் இருந்தால் குறைந்த உணவும் வயிறை நிரப்பும்

قَالَ النَّوَوِيّ :وَالْمُرَاد بِالْبَرَكَةِ مَا تَحْصُل بِهِ التَّغْذِيَة وَتَسْلَم عَاقِبَتُهُ مِنْ الْأَذَى وَيُقَوِّي عَلَى الطَّاعَة وَالْعِلْم عِنْد اللَّه(فتح الباري

 நவவீ ரஹ் அவர்கள் உணவு விஷயத்தில் பரக்கத் என்பதற்கு விளக்கம் கூறும்போது எந்த உணவின் மூலம் வயிறும் நிரம்புவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்குமோ, வணக்க வழிபாடுகளுக்கு உதவியாகவும் இருக்குமோ, தீனுடைய கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமோ அது தான் உணவில் பரக்கத் என்று கூறினார்கள்.

சிறந்த முஃமினின் உணவில் பரக்கத் செய்யப்படும் என்பதால் குறைந்த உணவே அவருக்குப்போதும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ (بخاري) بَاب طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ- كتاب الأطعمة-

عَنْ أَبِي هُرَيْرَةَ   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ وَهُوَ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (مسلم)بَاب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ-كِتَاب الْأَشْرِبَةِ-

  நபி ஸல் அவர்களிடம் ஒரு மாற்று மதத்தவர் விருந்தாளியாக வந்தார். முதல்நாள் அவருக்கு ஆட்டுப்பால் குடிக்கத் தரும்படி நபி ஸல் உத்தரவிட்டார்கள். அவர் குடித்தார். மீண்டும் தரப்ப்பட்டது. குடித்தார். இவ்வாறே ஏழு கோப்பைகளை காலி செய்தார். பிறகு அவர் முஸ்லிமாக விட்டார். அதன்பின்பு அவரிடம் ஆட்டுப்பால் குடிக்கத் தந்த போது ஒரு கோப்பைக்கு மேல் அவரால் குடிக்க முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு முஃமின் ஒரு இரைப்பையை நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே அருந்துவார். ஆனால் ஒரு காஃபிர் ஏழு இரைப்பைகளை நிரப்பிக் கொள்ளும்  அளவுக்கு அருந்துவார் என்றார்கள்.                                

قال القرطبي:المؤمن يأكل للضرورة والكافر يأكل للشهوة أو المؤمن يقل حرصه وشرهه على الطعام ويبارك له في مأكله ومشربه فيشبع من قليل والكافر شديد الحرص لا يطمح بصره إلا للمطاعم والمشارب كالأنعام فمثل ما بينهما من التفاوت كما بين من يأكل في وعاء ومن يأكل في سبعة (فيض القدير)

நபி ஸல் அவர்களின் விரல்களில் சுரந்த நீரை நபித்தோழர்கள் அருந்திய சம்பவத்தை கூறும்போது நீரை அருந்துவது என்று கூறாமல் பரக்கத்தை அருந்துவது என்ற தலைப்பில் புஹாரீ இமாம் கொண்டு வந்துள்ளார்கள்

عَنْ جَابِرِ قَالَ قَدْ رَأَيْتُنِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ حَضَرَتْ الْعَصْرُ وَلَيْسَ مَعَنَا مَاءٌ غَيْرَ فَضْلَةٍ فَجُعِلَ فِي إِنَاءٍ فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ فَأَدْخَلَ يَدَهُ فِيهِ وَفَرَّجَ أَصَابِعَهُ ثُمَّ قَالَ حَيَّ عَلَى أَهْلِ الْوُضُوءِ الْبَرَكَةُ مِنْ اللَّهِ فَلَقَدْ رَأَيْتُ الْمَاءَ يَتَفَجَّرُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ النَّاسُ وَشَرِبُوا فَجَعَلْتُ لَا آلُوا مَا جَعَلْتُ فِي بَطْنِي مِنْهُ فَعَلِمْتُ أَنَّهُ بَرَكَةٌ قُلْتُ لِجَابِرٍ كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ (بخاري)بَاب شُرْبِ الْبَرَكَةِ وَالْمَاءِ الْمُبَارَكِ

தட்டை வழித்துச் சாப்பிடுவதிலும், கைகளை சூப்பி சாப்பிடுவதிலும்  பரக்கத்

عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ الْأَصَابِعِ وَالصَّحْفَةِ وَقَالَ إِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ (مسلم)وعنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمْ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ثُمَّ لِيَأْكُلْهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ تَكُونُ الْبَرَكَةُ (مسلم) -كتاب الاشربة

சேர்ந்து சாப்பிடுவதிலும் பரக்கத்

عن وَحْشِي بْن حَرْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ (ابوداود) بَاب فِي الِاجْتِمَاعِ عَلَى الطَّعَامِ- كِتَاب الْأَطْعِمَةِ

நபி ஸல் அவர்களிடம் சில தோழர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உண்ணுகிறோம். ஆனால் வயிறு நிரம்புவதில்லை என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகிறீர்களா என்று கேட்க, ஆம் என்று அவர்கள் பதில் கூறியவுடன் இனிமேல் நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள் பிஸ்மி சொல்லி உண்ணுங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான் என்று கூறினார்கள்.                             

பெற்றோரை மதிப்பதாலும், உறவினர்களை அனுசரிப்பதாலும் பரக்கத் பெருகும் என்பதன் விளக்கம்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ (بخاري) بَاب مَنْ أَحَبَّ الْبَسْطَ فِي الرِّزْقِ-كتاب  البيوع قَالَ الْعُلَمَاءُ : مَعْنَى الْبَسْطِ فِي الرِّزْق الْبَرَكَة فِيهِ ، وَفِي الْعُمُر حُصُولُ الْقُوَّةِ فِي الْجَسَدِ ، لِأَنَّ صِلَةَ أَقَارِبِهِ صَدَقَةٌ وَالصَّدَقَةُ تُرَبِّي الْمَالَ وَتَزِيدُ فِيهِ فَيَنْمُو بِهَا وَيَزْكُو (فتح الباري)

நேரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வது பற்றி..

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خُفِّفَ عَلَى دَاوُدَ الْقِرَاءَةُ فَكَانَ يَأْمُرُ بِدَابَّتِهِ لِتُسْرَجَ فَكَانَ يَقْرَأُ قَبْلَ أَنْ يَفْرُغَ يَعْنِي الْقُرْآنَ اي الزبور (بخاري) باب قَوْلِهِ ( وَآتَيْنَا دَاوُدَ زَبُورًا ) كتاب التفسيبر- وَفِي الْحَدِيث أَنَّ الْبَرَكَة قَدْ تَقَع فِي الزَّمَن الْيَسِير حَتَّى يَقَع فِيهِ الْعَمَل الْكَثِير . قَالَ النَّوَوِيّ : أَكْثَر مَا بَلَغَنَا مِنْ ذَلِكَ مِنْ كَانَ يَقْرَأ أَرْبَع خَتَمَات بِاللَّيْلِ وَأَرْبَعًا بِالنَّهَارِ ، وَقَدْ بَالَغَ بَعْض الصُّوفِيَّة فِي ذَلِكَ فَادَّعَى شَيْئًا مُفْرِطًا وَالْعِلْم عِنْد اللَّه (فتح الباري) وفيه أن الله تعالى يطوي الزمان لمن شاء من عباده كما يطوي المكان(عمدة القاري)

பொருள்-வாகனத்தை கயிற்றால் கட்டி வைக்கும் நேரத்திற்குள் தாவூத் அலை ஜபூரை ஓதி முடிப்பார்கள். அதாவது பொறுமையாகவே ஓதுவார்கள். ஆனால் குறுகிய நேரத்தில் முடிப்பார்கள். நபிகளாரின் மிஃராஜ் பயணம் போல்..

ரஜப் மாதத்தில் பரக்கத் செய்வாயாக என்ற துஆவின் தாத்பரியம்

 عن أنس رضي الله عنه  أن رسول الله صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ رَجَبٌ قالَ : اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ  وَكَانَ إِذَا كَانَتْ لَيْلَةُ الجُمُعَةِ قالَ هذِهِ لَيْلَةٌ غَرَّاءُ وَيَوْمٌ أَزْهَرُ (بزار,كنز العمال)(مشكاة, باب الجمعة) عن أنس بن مالك رضي الله عنه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأعنا على الصيام والقيام وغض البصر وحفظ اللسان ولا تجعل حظنا منه الجوع والسهر (مسند الفردوس)

(اللهم بارك لنا) أي في طاعتنا وعبادتنا (في رجب وشعبان) يعني وفقنا للإكثار من الأعمال الصالحة فيهما(مرعاة شرح مشكاة)

ரஜப் மாத த்திலும் ஷஃபான் மாத த்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்பதன் தாத்பரியம் இந்த இரண்டு மாதங்களிலும் அதிகம் அமல் செய்யும் பாக்கியத்தை தருவாயாக என்பதாகும். இந்த இரண்டு மாதங்களிலும் அமல் செய்வதன் மூலமாக ரமழானில் இன்னும் அதிகமாக அமல் செய்யும் பாக்கியம்  கிடைக்கும்.            

وبلغنا رمضان : قال ابن رجب:فيه أن دليل ندب الدعاء بالبقاء إلى الأزمان الفاضلة لإدراك الأعمال الصالحة فيها فإن المؤمن لا يزيده عمره إلا خيرا (فيض القدير) قال الطيبي:الأزهر الأبيض ومنه أكثروا الصلاة عليّ في الليلة الغراء، واليوم الأزهر أي ليلة الجمعة ويومها والنورانية فيهما معنوية لذاتهما،

ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக என்று கேட்பதன் நோக்கம் அதுவரை அல்லாஹ் நம்மை ஹயாத்தாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.

عَن أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد

 இரு சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில் ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார்.தல்ஹா ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப்பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள் இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான் முழுமையாக கிடைத்துள்ளது.மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார் என்றார்கள்.

 

தமக்கு அநீதம் செய்தவர்களுக்கு எதிராக சங்கையான மாதத்தில் துஆ செய்ததால் அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்பட்ட விதம்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه  قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي يَوْمٍ يَعْرِضُ فِيهِ الدِّيوَانَ إِذْ مَرَّ بِهِ رَجُلٌ أَعْمَى أَعْرَجُ قَدْ عَنَّى قَائِدَهُ فَقَالَ عُمَرُ حِينَ رَآهُ وَأَعْجَبَهُ شَأْنُهُ:" مَنْ يَعْرِفُ هَذَا؟"، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: هَذَا مِنْ بَنِي صَنْعَاءَ بَهْلَةَ بَرِيقٍ قَالَ:" وَمَا بَرِيقٌ؟"، قَالَ: رَجُلٌ مِنَ الْيَمَنِ: قُلْتُ زَادَ غَيْرُهُ فِيهِ اسْمُهُ عِيَاضٌ، قَالَ:" أَشَاهِدٌ؟"، قَالَ: نَعَمْ، فَأُتِيَ بِهِ عُمَرَ فَقَالَ:" مَا شَأْنُكَ وَشَأَنُ بَنِي صَنْعَا؟" فَقَالَ: إِنَّ بَنِي صَنْعَا كَانُوا اثْنَيْ عَشَرَ رَجُلًا، وَإِنَّهُمْ جَاوَرُونِي فِي الْجَاهِلِيَّةِ فَجَعَلُوا يَأْكُلُونَ مَالِي، وَيَشْتُمُونَ عِرْضِي اسْتَنْهَيْتُهُمْ فَنَاشَدْتُهُمُ اللهَ وَالرَّحِمَ فَأَبَوْا فَأَمْهَلْتُهُمْ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَوْتُ اللهَ عَلَيْهِمْ...فَلَمْ يَحُلِ الْحَوْلُ حَتَّى هَلَكُوا غَيْرَ وَاحِدٍ وَهُوَ هَذَا كَمَا تَرَى قَدْ عَنَّى قَائِدَهُ فَقَالَ عُمَرُ: سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذَا لَعِبْرَةً وَعَجَبًا"،

فَقَالَ رَجُلٌ آخَرُ مِنَ الْقَوْمِ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلَا أُحَدِّثُكَ مِثْلَ هَذَا وَأَعْجَبَ مِنْهُ؟ قَالَ:" بَلَى" قَالَ: فَإِنَّ نَفَرًا مِنْ خُزَاعَةَ جَاوَرُوا رَجُلًا مِنْهُمْ فَقَطَعُوا رَحِمَهُ، وَأَسَاءُوا مُجَاوَرَتَهُ، وَإِنَّهُ نَاشَدَهُمُ اللهَ وَالرَّحِمَ إِلَّا  أَعْفَوْهُ مِمَّا يَكْرَهُ فَأَبَوْا عَلَيْهِ فَأَمْهَلَهُمْ حَتَّى إِذَا جَاءَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِمْ قَالَ: فَبَيْنَمَا هُمْ عِنْدَ قَلِيبٍ يَنْزِفُونَهُ فَمِنْهُمْ مَنْ هُوَ فِيهِ، وَمِنْهُمْ مَنْ هُوَ فَوْقَهُ تَهَوَّرَ الْقَلِيبُ بِمَنْ كَانَ عَلَيْهِ وَعَلَى مَنْ كَانَ فِيهِ فَصَارَ قُبُورَهُمْ حَتَّى السَّاعَةِ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذِهِ لَعِبْرَةً وَعَجَبًا"،

 

فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ آخَرُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلَا أُخْبِرُكَ بِمِثْلِ هَذَا وَأَعْجَبَ مِنْهُ؟، قَالَ: بَلَى، قَالَ: إِنَّ رَجُلًا مِنْ هُذَيْلٍ وَرِثَ فَخْذَهُ الَّذِي هُوَ فِيهَا حَتَّى لَمْ يَبْقَ مِنْهُمْ أَحَدٌ غَيْرُهُ فَجَمَعَ مَالًا كَثِيرًا، فَعَمِدَ إِلَى رَهْطٍ مِنْ قَوْمِهِ يُقَالُ لَهُمْ بَنُو الْمُؤَمَّلِ، فَجَاوَرَهُمْ لِيَمْنَعُوهُ وَلْيَرُدُّوا عَلَيْهِ مَاشِيَتَهُ، وَإِنَّهُمْ حَسَدُوهُ عَلَى مَالِهِ، وَنَفَسُوهُ مَالَهُ، فَجَعَلُوا يَأْكُلُونَ مِنْ مَالِهِ وَيَشْتُمُونَ عِرْضَهُ، وَإِنَّهُ نَاشَدَهُمُ اللهَ وَالرَّحِمَ إِلَّا عَدَلُوا عَنْهُ مَا يَكْرَهُ، فَأَبَوْا عَلَيْهِ فَجَعَلَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ رَبَاحٌ يُكَلِّمُهُمْ فِيهِ، وَيَقُولُ: يَا بَنِي الْمُؤَمَّلِ ابْنُ عَمِّكُمُ اخْتَارَ مُجَاوَرَتَكُمْ عَلَى مَنْ سِوَاكُمْ فَأَحْسِنُوا مُجَاوَرَتَهُ، فَأَبَوْا عَلَيْهِ فَأَمْهَلَهُمْ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِمْ قَالَ: فَبَيْنَمَا هُمْ ذَاتَ يَوْمٍ نُزُولٌ إِلَى أَصْلِ جَبَلٍ انْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ لَا  تَمُرُّ بِشَيْءٍ إِلَّا طَحَنَتْهُ حِينَ مَرَّتْ بَأَبْيَاتِهِمْ فَطَحَنَتْها طَحْنَةً وَاحِدَةً إِلَّا رَبَاحًا الَّذِي اسْتَثْنَاهُ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ هَذَا لَعِبَرًا وَعَجَبًا"،

فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَلَا أُخْبِرُكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مِثْلَهُ وَأَعْجَبَ مِنْهُ؟، قَالَ:" بَلَى"، قَالَ: فَإِنَّ رَجُلًا مِنْ جُهَيْنَةَ جَاوَرَ قَوْمًا مِنْ بَنِي ضَمْرَةَ فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ رَجُلٌ مِنْ بَنِي ضَمْرَةَ يُقَالُ لَهُ رِيشَةُ يَعْدُو عَلَيْهِ، فَلَا يَزَالُ يَنْحَرُ بَعِيرًا مِنْ إِبِلِهِ، وَإِنَّهُ كَلَّمَ قَوْمَهُ فِيهِ، فَقَالُوا: إِنَّا قَدْ خَلَفْناهُ فَانْظُرْ أَنْ تَقْتُلَهُ، فَلَمَّا رَآهُ لَا يَنْتَهِي أَمْهَلَهُ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِ، فَسَلَّطَ اللهُ عَلَيْهِ أُكْلَةً فَأَكَلَتْهُ حَتَّى مَاتَ قَبْلَ الْحَوْلِ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذَا لَعِبْرَةً وَعَجَبًا، وَإِنْ كَانَ اللهُ لَيَصْنَعُ هَذَا بِالنَّاسِ فِي جَاهِلِيَّتِهِمْ لِيَنْزِعَ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ فَلَمَّا أَتَى اللهُ بِالْإِسْلَامِ أَخَّرَ الْعُقُوبَةَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَذَلِكَ أَنَّ اللهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: { إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ } [الدخان: 40]، وَإِنَّ مَوْعِدَهُمُ السَّاعَةُ، { وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ } [القمر: 46]، وَقَالَ: { وَلَوْ يُؤَاخِذُ اللهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى } [فاطر: 45](بيهقي في شعب الايمان)

 

 உமர் ரழி அவர்களின் சபையை ஒருவர் கடந்து சென்றார். குருடராகவும் நொண்டியாகவும் அவர் இருந்தார். மற்றவரின் தயவு இல்லாமல் அவரால் எங்கும் செல்ல முடியாதவராக இருந்தார். அவரைப் பற்றி உமர் விசாரித்த போது இவர் பனீ ஸன்ஆ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு சாபத்தின் காரணமாக அந்தக் குடும்பமே இப்படி ஆகி விட்டது என்று கூறப்பட்டது. அது கேட்டு ஆச்சரியமடைந்த உமர் ரழி இதற்கு சாட்சி உண்டா என்று கேட்க, யார் சபித்தாரோ அந்த  நபரையே அழைத்து வரப்பட்டது. அவரிடம் உமர் ரழி அவர்கள் நடந்ததை விசாரித்தார்கள். அப்போது அவர் கூறினார்.  பனீ ஸன்ஆ குடும்பத்தாருக்கு அருகில் வசிப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் 12 பேர். அவர்கள் எனக்கு நிறைய அநீதம் செய்தனர். என் சொத்துகளை அனுபவித்தனர். என் குடும்பம் பற்றி அவதூறாகப் பேசினர். நான் எவ்வளவோ தூரம் பொறுமை கொண்டேன். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்தேன்.குறிப்பிட்ட சிறந்த கண்ணியமான மாதம் வருவதை எதிர்பார்த்து  அந்தமாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்தேன். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அக்குடும்பத்தில் ஒருவன் பின் ஒருவராக இறந்தனர். கடைசியில் நீங்கள் பார்த்த இவர் மட்டும் தான் மிச்சமிருக்கிறார். அவரும் இந்நிலையில் இருக்கிறார் என்று கூறினார். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இது  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                                                           

  இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் கூறினார் இதுபோன்று எனக்கும் ஒரு சம்பவம் தெரியும். குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அதே குடும்பத்தைச் சார்ந்த, அண்டை வீட்டாரான மற்றொருவருக்கு  நிறைய அநீதம் செய்தனர். அவரும் முடிந்த வரை பொறுமை கொண்டார். இறுதியில் பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக ஒரு பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பள்ளத்திற்குள் சிலரும் பள்ளத்திற்கு மேலே சிலரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பள்ளம் இருந்த பகுதி அப்படியே குலுங்க ஆரம்பித்தது. இதில் பள்ளத்திற்கு மேல்  இருந்தவர்களுடன் பள்ளத்திற்குள் இருந்தவர்களும் சேர்ந்து அனைவரும் புதையுண்டு போயினர். அதுவே அவர்களின் கப்ராக மாறி விட்டது. என்று கூறியவுடன் அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இதுவும்  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                           

                                                                                              

 இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஹுதைல் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு வாரிசுரிமை என்ற அடிப்படையில் நிறைய சொத்துக்கள் கிடைத்த து. அந்தக் குடும்பத்த்துக்கு அவர் மட்டும் தான் வாரிசு என்பதால் கால்நடைகள் உட்பட நிறைய சொத்துக்களை அவர் பெற்றார்.  அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய கோத்திரத்தின் ஒரு பிரிவான பனூ முஅம்மல் குடும்பம் வசிக்கும் இடத்தில் தன்னுடைய வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டார். அவர்கள் தனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு குடி பெயர்ந்தார். ஆனால் அவர்கள் அதற்கு நேர் மாற்றமாக இவர் மீது பொறாமை கொண்டனர். இவரது சொத்துக்களை அநியாயமாக இவரிடமிருந்து பிடுங்கினர்.  எனக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று எவ்வளவோ தூரம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லை. ஆனால் அவர்களிலும் ஒரு நல்லவர் இருந்தார். அவர் பெயர் ரபாஹ். அவர் அந்தக் குடும்பத்தாரிடம் நம்மை நம்பி வந்தவருக்கும் துரோகம் செய்யாதீர்கள் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறி பரிந்து பேசினார். ஆனால் அதையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட அந்த நபர் பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர் பார்த்து  அந்த மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். ஒருநேரத்தில்  அனைவரும் மலையடிவாரத்தில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்கியிருந்த போது மலை உச்சியில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து வழியில் உள்ள அனைத்தையும் நிர்மூலமாக்கியது. அந்தப் பாறை இவர்களின் மீது விழுந்து அவர்களை நசுக்கி சாகடித்தது. இதில் ரபாஹ் மட்டும் தப்பித்தார். அவருக்கு மட்டும் எதுவும் ஆகிவில்லை. என்று கூறியவுடன் உமர் ரழி அவர்கள்  சுப்ஹானல்லாஹ் இதுவும்  மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.                                

                                                                                                       

 இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர்  பனீ ழம்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு அருகில் வசித்தார். ரீஷா என்பது அவரின் பெயர். ரீஷா இவருக்கு மிகவும் அநீதம் செய்தார். இவரின் ஒட்டகங்களை அவ்வப்போது பிடித்து அறுத்து  உணவாக்கி விடுவார். இறுதியில் அந்த ரீஷாவின் உறவினர்களிடம் சென்று இவர் முறையிட்ட போது அவர்கள் கூறினார்கள். நாங்கள் தடுத்தாலும் அவன் கேட்க மாட்டான்.  எங்களுடைய  பங்காளிகளில் ஒருவன் என்பதால் அவன் விஷயத்தில்  நாங்கள் தலையிட மாட்டோம். நீ  வேண்டுமானால் அவனைக்  கொன்று விடு. என்று கூறினார்கள். ஆனால் இவர் குறிப்பிட்ட மாதம் வருவதை எதிர் பார்த்து அல்லாஹ்விடம் கையேந்தினார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அதன் விளைவாக அல்லாஹ் வைரஸ் கிருமியை ரீஷா என்பவன் மீது சாட்டினான். அது கொஞ்சம் கொஞ்சமாக அவனை அழித்து துஆ கேட்ட ஒரு வருடத்திற்குள் அவனை சாகடித்தது. என்றவுடன் இதையெல்லாம கேட்ட உமர் ரழி அவர்கள் அல்லாஹ் தஆலா முந்தைய காலங்களில் பிறருக்கு அநியாயம் செய்பவர்களை இப்படியெல்லாம் உடனுக்குடன் தண்டித்துள்ளான். ஆனால் இஸ்லாம் வந்த பின்பு, நபியின் துஆ காரணமாக அநியாயம் செய்பவர்களுக்கு அல்லாஹ் அவகாசம் வழங்கியுள்ளான் என்றுகூறி சில வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.                    

வியாழன், 19 ஜனவரி, 2023

பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோரின் கவனத்திற்கு..

20-01-2023 

 

بسم الله الرحمن الرحيم  

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

     




பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோரின் கவனத்திற்கு..  

 கடந்த சில தினங்களாக வலைத் தளங்களில் உலாவும் ஒரு வீடியோ பெண் பிள்ளைகளின் பெற்றோர் மனதிலும் பொதுவாக முஸ்லிம்களின் உள்ளத்திலும் மாபெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஃபர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் புகைப் பிடிப்பது போன்ற காட்சி  இக்காலத்தில் கல்லூரிக்கும் பள்ளிக்கூடத்திற்தும் பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது.                     

பெண் பிள்ளைகளை மேற்படிப்பு  படிக்க வைப்பதில் கவனம் செலுத்தும் அளவுக்கு அவர்களின் ஒழுக்கம் விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  

عن أَيُّوب بْن مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ (ترمذي)

பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருபவர் நரக நெருப்பை விட்டும் காப்பாற்றுகிறார் என்பதால் தான் ஒழுக்கம் கற்பிப்பதை விட ஒரு தந்தை தன் பிள்ளைக்கு பெரிய அன்பளிப்பை தந்து விட முடியாது என்றார்கள்.       

قال عبد الله بن مبارك رحمه الله  كاد الأدب أن يكون ثُلُثي الدِّين

ஒழுக்கம் தீனுல் இஸ்லாமின் மூன்றில் இரண்டு பங்காக விளங்கும் அளவிற்கு ஆகிவிட்டது

சில பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை அவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக எண்ணுகிறார்கள். அதனால் கண்டிக்காமல் வளர்க்கிறார்கள்.

 வளர்கின்ற மரம், செடி கொடிகளை அப்படியே பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவை காடாகவும், முட் புதராகவும் மாறும் அல்லது நீரின்றி வாடி கருகிவிடும். அவற்றை ஒழுங்கு படுத்தினால் அவை தோப்பாகவும், தோட்டமாகவும், எழில்கொஞ்சும் சோலையாகவும் மாறும். எந்த ஒரு பொருளும் (இரும்பு உட்பட) கெட்டுப் போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. அதனை அப்படியே விட்டுவிட்டால் போதும். அது தானாக கெட்டுவிடும். எனவே, ஒரு பொருளை உருவாக்கி பாதுகாப்பதற்குத் தான் முயற்சிகள் தேவை. அது அழிந்து போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. பட்டத்தை வானில் பறக்கவிட்டு பார்த்திருப்போம். பட்டம் பறப்பதற்கு நூல் தான் ஆதாரம். நூல் இல்லையேல், பட்டம் வானில் உயர பறப்பதற்கு முடியாது. ஆனால், நூல் உங்கள் கைப்பிடியில் இருக்கிறது. பட்டம் தான் விரும்பியவாறு சுதந்திரமாக விண்ணில் பறப்பதற்கு தனக்கு நூல் ஒரு தடையாக இருக்கின்றது  என்று எண்ணி, கட்டுப்பாட்டை விரும்பாமல்  நூலை அறுத்துக் கொண்டால் என்ன நேரும்? விண்ணில் உயர பறந்த பட்டம், நூல் அறுந்தால்  மண்ணில், முட்புதரில் வீழ்ந்து தாறுமாறாக கிழிந்து அழியும். அதுபோல் தான், நம் பிள்ளைகளான மாணவ, மாணவிகள் ஒழுக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமெல்லாம் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள்.  

ஒழுக்கம் கற்பிக்காமல் படிப்பை மட்டும் போதிக்க நினைப்பது

கழுதையின் முதுகில் சுமத்தும் பொதி போன்றது

مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا (الجمعة5)أَيْ كَمَثَلِ الْحِمَار إِذَا حَمَلَ كُتُبًا لَا يَدْرِي مَا فِيهَا فَهُوَ يَحْمِلهَا حَمْلًا حِسِّيًّا وَلَا يَدْرِي مَا عَلَيْهِ وَكَذَلِكَ هَؤُلَاءِ فِي حَمْلِهِمْ الْكِتَاب الَّذِي أُوتُوهُ حَفِظُوهُ لَفْظًا وَلَمْ يَتَفَهَّمُوهُ (تفسير ابن كثير)

    ஒழுக்கம் தவறிய மாணவ, மாணவிகளைப் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்

 பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்ட கஞ்சா, பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள பெட்டிக்கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சாக்லெட், பிஸ்கட்டுகளோடு சேர்த்து வைத்தே விற்பனை செய்கிறார்கள். அந்தக் கடைகளில் வழக்கமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். புதிதாக யாரும் சென்றால் கொடுக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்... பேருந்து நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களிடம்கூட மிகச் சுலபமாகப் போதை மருந்துகள் கிடைக்கின்றன. பல இடங்களில் காவல்துறைக்கும் தெரிந்தே இத்தகைய போதை விற்பனை நடைபெறுகிறது.                               

சென்னையில் கல்லூரி மாணவ மாணவிகளில் 60 சதவீதம் பேர் பீடி அல்லது சிகரெட்டுக்கு அடிமையாகி உள்ளனர். அதில் 40 பேரிடம் கூடவே மது அருந்தும் பழக்கமும் உண்டு. இவ்வாறு மாணவ மாணவிகளிடம் தீய பழக்கங்கள் உருவாக சினிமாவும் முக்கிய காரணமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் பிரபல மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் சிறுவர்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிய ஒரு சோதனை நடத்தினார்கள். சுமார் 26 பள்ளிகளைச் சேர்ந்த 2,200 மாணவர்களிடம் ஆய்வு நடத்தினார்கள். முதல் கட்டமாக இவர்களிடம் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் வெளியான புகழ் பெற்ற 50 திரைப்படங்களின் பட்டியல் தரப்பட்டது. இந்த சினிமாக்களில் கதா நாயகர்கள் புகை பிடிக்கும் காட்சிகள் அதிகம். அதன் பின் ஒரு ஆண்டு கழித்து அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அவர்களில் 10 சதவீதம் பேர் புகை பிடிக்கத் தொடங்கி  இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது நிறைய பேர் சினிமா பார்த்து புகை பிடிக்க கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.                                                           

ஒழுக்கம் கற்பிக்காமல் மகனை வளர்த்த தந்தைக்கு ஏற்பட்ட கதி..

يُروَى أن أحد العلماء جاءه رجل، فقال له: ابني ضربني، قال: تعال بابنك، فأتى به فإذا هذا الابن كبير سمين بدين كأكبر ما يكون من الرجال، فقال له: أضربتَ أباك؟ قال: نعم.ضربتُه، قال: لِمَ ضربتَه؟ قال: وهل يحرم أن يضرب الابن أباه؟ أي: هل في الشريعة أنه لا يجوز ضرب الابن لأبيه؟ قال العالم للأب: أعلَّمتَ ابنك شيئاً من القرآن؟ قال: لا والله.قال: أعلمتَه شيئاً من السنة؟ قال: لا والله.قال: أعلمتَه شيئاً من آداب السلف ؟ قال: لا.قال: فماذا صنعت معه في حياته؟ قال: أطعمتُه وسقيتهُ وآويتُه حتى كَبُر، قال: تستحق أن يضربك؛ لأنه ظن أنك. بقرة؛ فضربك فاحمدِ الله حيث لم يكسر رأسك (دروس للشيخ

ஒரு மார்க்க அறிஞரிடம் ஒருவர் வந்து தன் மகன் தன்னை அடிப்பதாக புகார் கூறினார். உன் மகனை அழைத்து வா என்று அந்த அறிஞர் கூற, அந்த மகன் அழைத்து வரப்பட்டார். அவன் தடித்த உருவம் கொண்டவனாக இருந்தான். அவனிடம் எதற்காக உன் தந்தையை நீ அடித்தாய் என்று கேட்க, அவன் பதிலுக்கு தந்தையை அடிப்பது தவறா என்று திருப்பிக் கேட்டான். அவனுக்கு மார்க்கம் அறவே தெரியவில்லை என்பதை அறிந்த அந்த அறிஞர் தந்தையிடம் நீ உன் மகனுக்கு குர்ஆனைக் கற்றுத் தந்தாயா என்று கேட்க, அவர் இல்லை என்றார் உன் மகனுக்கு ஹதீஸைக் கற்றுத் தந்தாயா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை என்றார். முன்னோர்களின் ஒழுக்கத்தைக் கற்றுத் தந்தாயா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை என்றார். வேறு என்ன தான் கற்றுத் தந்தாய் என்று கேட்க, அவன் கேட்கும் உணவுகளையும் குடிபானங்களையும் நிறைய வாங்கித் தந்தேன் என்று தந்தை கூறியவுடன் அந்த மார்க்க அறிஞர் கூறினார். அவன் உன் மண்டையை உடைக்காமல் விட்டு விட்டானே அதுவரை சந்தோஷப்படு.. என்றார்.                                                             

பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பள்ளி மாணவன் (முஸ்லிம்) தனக்கு பாடம் போதித்த டீச்சரையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு அந்த மாணவனைப் பற்றி வந்த செய்திகள் சிந்திக்க வேண்டியவை. அவனுக்குஅவனுடைய பெற்றோர் மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்துள்ளனர். பாக்கெட் மணியாக தினமும் 100 ரூபாய் தருவார்களாம். அவன் ஆசைப் பட்டதையெல்லாம் அவனது தந்தை அவனுக்கு வாங்கித் தருவார். விலை உயர்ந்த செல்ஃபோன், கேமரா, போன்ற ஆடம்பரமான பொருட்களை பள்ளிக்குக் கொண்டு வந்து சக மாணவர்களிடம் பெருமையடித்துக் கொள்ளும் அவனுக்கு படிப்பு துளியும் ஏறவில்லை. சம்பந்தப் பட்ட அவனது டீச்சர்  இவனுடைய ஆடம்பரமான போக்கைப் பற்றி இது தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. கடைசியில் அவனுடைய பெற்றோர்களிடம் பலமுறை அந்த இதை அந்த டீச்சர் சொல்ல அவர்கள் சற்று சுதாரித்து அவனை கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். அவனுடைய ஆடம்பரப்பொருட்களையும் பிடுங்கி வைத்துக் கொள்ள அவனுடையை கோபம் டீச்சர் மீது திரும்பியுள்ளது. இது மட்டுமன்றி இவனுடைய கதை போன்றே ஆசிரியரை கொலை செய்யும் கதையம்சம் கொண்ட இந்தி சினிமா படத்தை 15 தடவை பார்த்துள்ளான். அது இவனுடைய உள்ளத்தில் மேலும் கொலைவெறியை தூண்டியுள்ளது. அதனால் கொலை செய்தான். அதனால் படிக்க வேண்டிய வயதில் சிறைக்குச் சென்றான்.                   

தன் மகன் தவறு செய்வதைப் பார்த்தும் கண்டிக்கத் தவறிய தந்தைக்கு ஏற்பட்ட கதி..

وقال مالك بن دينار كان حبر من أحبار بني إسرائيل يغشى الرجال والنساء منزله يعظهم ويذكرهم بأيام الله عز و جل فرأى بعض بنيه يوما وقد غمز بعض النساء فقال مهلا يا بني مهلا وسقط من سريره فانقطع نخاعة وأسقطت امرأته وقتل بنوه في الجيش فأوحى الله تعالى إلى نبي زمانه أن أخبر فلانا الخبر أني لا أخرج من صلبك صديقا أبدا أما كان من غضبك لي إلا أن قلت مهلا يا بني مهلا  (احياء علوم الدين

ஊருக்கே அறிவுரை சொன்ன யூத அறிஞர் தன் மகன் ஒரு பெண்ணைக் கட்டிப் பிடிப்பதைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாத இதை விட்டு விடு மகனே என்று இலகுவாக கண்டித்தார். இதனால் அல்லாஹ் சோதித்தான். திடீரென கட்டிலில் இருந்து விழுந்தார். அவரின் உடம்பில் இருந்து எச்சில் மாதிரி ஒன்று வெளியேறியது. அடுத்த நடந்த ஒரு போரில் அவரின் ஆண் மக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அதனால் அந்த நபிக்கு அல்லாஹ் அறிவித்து அவரிடம் சொல்லச் சொன்னான். உனது பரம்பரையில்  இனி நல்லோர்கள் பிறக்கவே மாட்டார்கள். அதற்குக் காரணம் அவர் தன் மகனை வன்மையாகக்  கண்டிக்காமல் இலகுவாக கண்டித்ததே ஆகும்.         

கற்பொழுக்கம் பற்றியும் வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு அதிகம் போதிக்க வேண்டும்.

 என் பிள்ளை மிக நல்லவள் என்று இருந்து விடக்கூடாது. ஒரு ஆலிம் அடிக்கடி பயானில் சொல்வார். உன் மகளும் நல்லவள். அவளோடு நட்பு என்ற வகையில் பழகும் ஆணும் நல்லவன். ஆனால் இருவருடனும் மூன்றாவதாக ஒருவன் இருக்கிறானே அந்த ஷைத்தான் மிகவும் கெட்டவன்.       

فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا.. (25)القصص -  فروي أن موسى عليه السلام لما جاءته بالرسالة قام يتبعها وكان بين موسى وبين أبيها ثلاثة أميال فهبت ريح فضمت قميصها فوصفت عجيزتها، فتحرج موسى من النظر إليها فقال:أرجعي خلفي وأرشديني إلى الطريق بصوتك (قرطبي)  قال أبو حازم سلمة بن دينار : لما سمع موسى هذا أراد أن لا يذهب ولكن كان جائعا ، فلم يجد بدا من الذهاب ، فمشت المرأة ومشى موسى خلفها....... ، فلما وصل موسى إلى دار شعيب ، فإذا العشاء تهيأ ، فقال : يا شاب ، اجلس ، فكل ، فقال : معاذ الله ، إنا أهل بيت لا نطلب على عمل من أعمال الآخرة عوضا من الدنيا ، فقال له شعيب : إن هذا عاداتي وعادات آبائي ، نقري الضيف ونطعم الطعام ، فجلس وأكل .(تفسير السمعاني)

 மூஸா அலை அவர்களை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் முன்னால் நடந்து சென்ற போது காற்றில் ஆடை சற்று விலகியது உடனே நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அப்பெண்ணிடம் இனிமேல் உனக்குப் பின்னால் நான் நடக்க மாட்டேன். நீ எனக்குப் பின்னால் நடந்து வா.. திரும்ப வேண்டிய இடத்தில் சிறு கல்லை எடுத்து செல்ல வேண்டிய திசையில் வீசினால் போதும் நான் திரும்பி விடுவேன் என்றார்கள்.                              

பிள்ளைகளின் மனதில் சிறிதளவும் கெட்ட எண்ணம் வந்து விடக் கூடாது என்பதற்காக தொலை நோக்கு சிந்தனையுடன் நபி (ஸல்) சொல்லித் தந்த அறிவுரை

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ -بَاب مَتَى يُؤْمَرُ الْغُلَامُ بِالصَّلَاةِ-كتاب الصلاة يعني أنهم لا يضطجع بعضهم مع بعض؛ حتى لا يحصل شيء من دواعي الشر أو شيء من الشيطان بحيث يحرك بعضهم على بعض فلا يكون هناك اضطجاع من بعضهم مع بعضهم، وإنما يكون هناك تفريق، سواء أكانوا ذكوراً وإناثاً أم ذكرواً فقط أم إناثاً فقط؛ لأنه عندما يحصل التقارب يحصل بسببه شيء من تحريك الشهوة أو الفتنة أو ما إلى ذلك، فجاءت السنة بأن يمرنوا على ذلك، وأن يعودوا على ذلك وهم صغار، بحيث يبتعد بعضهم عن بعض، ولا يكون هناك تلاصق وتقارب بحيث يحصل معه شيء (شرح ابي داود

பத்து வயதாகி விட்டாலே சகோதர, சகோதரிகளாக இருந்தாலும் படுக்கையில் பிரித்து வையுங்கள்.

விளக்கம் - பத்து வயதாகி விட்டாலே ஆண், பெண்ணை வித்தியாசப்படுத்தும் உறுப்புகள் வளர ஆரம்பித்து விடுகின்றன. சில ஹார்மோன்களும் சுரக்க ஆரம்பித்து விடுகின்றன. இந்த நிலையில் அருகருகே உறங்கும்போது திரும்பிப் படுக்கும் சூழ்நிலை வரலாம். இதைப் பயன்படுத்தி ஷைத்தான் பல்வேறு தவறான சிந்தனைகளை உருவாக்கி விடக்கூடும் என்பதாலேயே நபி ஸல் இவ்வாறு கூறினார்கள்.                                 

Co-education  கூடாது என்பதற்கு மார்க்க ரீதியான ஆதாரங்கள்

ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் படிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பக்கூடாது. பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரிகளுக்கு அனுப்பலாம். அதை விட சிறந்தது. தற்போது படிப்புடன் கூடிய எத்தனையோ நிஸ்வான் மதரஸாக்கள் வந்து விட்டன. நிஸ்வான் மதரஸாக்களில் சேர்த்தால் மார்க்கமும் தெரிந்து விடும்

பொது இடங்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக கலந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் ஹதீஸ்கள்

பெண்கள் பொது வணக்கஸ்தலங்களுக்கு வருவதால் ஆண்களுடன் சந்திக்க நேரிடும் என்பதாலேயே பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்றார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي حُجْرَتِهَا وَصَلَاتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي بَيْتِهَا (ابوداود)عن عَائِشَةَ رضي الله عنها لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِي إِسْرَائِيلَ مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ (مسلم) بَاب خُرُوجِ النِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ- كِتَاب الصَّلَاةِ

பெண்கள் பள்ளிக்கு வருவது அனுமதி வருவது அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் (நல்லோர்கள் நிறைந்த காலத்தில்)

பல நிபந்தனைகளுடன் தான் அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது

عَنْ أَبِي هُرَيْرَة رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ وَلَكِنْ لِيَخْرُجْنَ وَهُنَّ تَفِلَاتٌ (ابوداود) عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا (مسلم)-عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ (مسلم) بَاب خُرُوجِ النِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ- كِتَاب الصَّلَاةِ

பெண்கள் பள்ளிக்கு வருவது அனுமதி வருவது அனுமதிக்கப்பட்ட அக்காலத்தில் அவர்கள் நுழையும் பாதை தனியாக இருந்தது

عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ : لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ قَالَ نَافِعٌ : فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ حَتَّى مَاتَ (طبراني) ورواه ابوداود مختصرا

பெண்கள் பள்ளிக்கு வருவது அனுமதி இருந்த காலத்தில் கடைசி வரிசையில் தான் பெண்கள் நிற்க வேண்டும் என அறிவுரை

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا (مسلم) باب تَسْوِيَةِ الصُّفُوفِ-  قَالَ النَّوَوِيّ: وَإِنَّمَا فَضَّلَ آخِر صُفُوف النِّسَاء الْحَاضِرَات مَعَ الرِّجَال لِبُعْدِهِنَّ مِنْ مُخَالَطَة الرِّجَال وَرُؤْيَتهمْ وَتَعَلُّق الْقَلْب بِهِمْ عِنْد رُؤْيَة حَرَكَاتهمْ وَسَمَاع كَلَامهمْ وَنَحْو ذَلِكَ ، وَذَمَّ أَوَّل صُفُوفهنَّ بِعَكْسِ ذَلِكَ وَاَللَّه أَعْلَم (شرح النووي علي مسلم)

ஆண்களுடன் பெண்கள் கலந்து விடக்கூடாது என்பதற்காகவே பெண்களை பாதை ஓரத்தில் நடந்து செல்லும்படி கூறினார்கள்

عَنْ أَبِي أُسَيْدٍ الْأَنْصَارِيِّ  رضي الله عنه أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنْ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرِّجَالُ مَعَ النِّسَاءِ فِي الطَّرِيقِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنِّسَاءِ اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تَحْقُقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَّاتِ الطَّرِيقِ فَكَانَتْ الْمَرْأَةُ تَلْتَصِقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ مِنْ لُصُوقِهَا بِهِ (ابوداود-بَاب فِي مَشْيِ النِّسَاءِ مَعَ الرِّجَالِ فِي الطَّرِيقِ-كتاب الادب

தவாஃபில் கூட ஆண்களுடன் பெண்கள் கலந்து விடாமல் தவாஃப் செய்ய அறிவுரை

عن عَطَاءٌ إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ مَعَ الرِّجَالِ قَالَ كَيْفَ يَمْنَعُهُنَّ وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الرِّجَالِ قُلْتُ أَبَعْدَ الْحِجَابِ أَوْ قَبْلُ قَالَ إِي لَعَمْرِي لَقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الْحِجَابِ قُلْتُ كَيْفَ يُخَالِطْنَ الرِّجَالَ قَالَ لَمْ يَكُنَّ يُخَالِطْنَ كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَطُوفُ حَجْرَةً مِنْ الرِّجَالِ لَا تُخَالِطُهُمْ فَقَالَتْ امْرَأَةٌ انْطَلِقِي نَسْتَلِمْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ قَالَتْ انْطَلِقِي عَنْكِ وَأَبَتْ.. يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِاللَّيْلِ فَيَطُفْنَ مَعَ الرِّجَالِ وَلَكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلْنَ الْبَيْتَ قُمْنَ حَتَّى يَدْخُلْنَ وَأُخْرِجَ الرِّجَال (بخاري) بَاب طَوَافِ النِّسَاءِ مَعَ الرِّجَالِ-كتاب الحج

ஆயிஷா ரழி அவர்களிடம் அவர்களின் பணிப்பெண் வந்து அன்னையே! நான் என்னுடைய தவாஃபின் ஏழு சுற்றில் இரண்டு மூன்று தடவை ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டேன் என்று பெருமையுடன் வந்து கூறினார். உடனே ஆயிஷா ரழி அவர்கள் கோபத்துடன் ஆண்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவர்களை இடித்துக் கொண்டு நீ இவ்வாறு செய்தாயல்லவா?  அல்லாஹ் உனக்கு நற்கூலி தராமல் போகட்டுமாக! கூட்ட நெரிசலாக இருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கி தக்பீர் மட்டும் சொல்லி அந்த இடத்தை விட்டும் நீ கடந்து போயிருக்க வேண்டாமா? என்றார்கள் நூல் பைஹகீ                        

கப்ரில் கூட ஆண் ஜனாஸாவையும், பெண் ஜனாஸாவையும் ஒன்றாக அடக்குவது மக்ரூஹ்

لا يدفن في قبر واحد ميتان ما أمكن وإن اجتمع موتى في قحط وموتان جعلنا الرجلين والثلاثة في قبر واحد وقدمنا الأفضل إلى جدار اللحد فيقدم الأب على الابن والابن على الأم لمكان الذكورة ولأنه الأحسن في هيئة الوضع ولا يجمع بين الرجال والنساء فإن ظهرت الضرورة جعلنا بينهما حاجزا من التراب(شرح روض الطالب-شافي)-وَيُكْرَهُ في الدَّفْن اخْتِلَاطُ الرِّجَالِ بِالنِّسَاءِ من غَيْرِ حَاجِزٍ (البحر الرائق-حنفي)

பெண்கள் படித்து வேலைக்குச் செல்வதாக இருந்தால் சில நிபந்தனைகள் உண்டு

فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ (سورة النساء34) أي تحفظ زوجها في غيبته في نفسها وماله.(تفسير ابن كثير)

நிர்பந்தம் இருந்தால் மட்டும் செல்ல வேண்டும். ஃபர்தாவுடன் செல்ல வேண்டும். ஆண்களுடன் ஒன்றாகப் பணி புரிதல் கூடாது போன்ற பல நிபந்தனைகள் உண்டு.

வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்து இந்திய வர்த்தக நிறுவனமான அசோசெம் சமீபத்தில் ஆய்வுநடத்தியது. அதில் தெரியவந்த முடிவுகளின் விபரம்- வேலைக்குச் செல்லும் பெண்களில் 17 சதவீதம்பேர் மட்டுமே நடுத்தர  நிலையை அடைகின்றனர். 3.3 சதவீதம் பேர் மட்டுமே உயர் நிலையை அடைகின்றனர். 78.9 சதவீதம் பெண்கள்  கீழ் நிலையிலேயே இருந்து விடுகின்றனர். குடும்ப பொறுப்புகளால் தான், வேலையில் தங்களால் முழு திறமையை காட்ட முடியவில்லை என்று 73 சதவீத பெண்கள் கூறுகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையே மிகப்பெரிய முட்டுக் கட்டையாக உள்ளது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். [தினகரன்-12-1-2009]  

சென்னை அசோக் நகரில் சமீபத்தில் பாலாஜிகுமார் என்ற மாணவர் தன் தாயையே கொலை செய்தார். சிவபெருமான் தன் முன்னால் தோன்றி உன் தாய் அரக்கி..அவளைக் கொன்று விடு என்று கூறியதாகவும், அதனால் தன் தாயைக்  கொன்று விட்டதாகவும் பேட்டி கொடுத்தார்.அது பற்றி விசாரித்த போலீசார் அதிகாரி கூறும்போது பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களில் பலர் குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளிடம் பாசம் காட்டுவதில்லை. இந்த பாலாஜி குமார் விஷயத்தில் சிறுவயதில் இருந்தே அவருடைய தாயார் வெறுப்பை காட்டியது அடிமனதில் ஆழமாக பதிந்து வந்துள்ளது. தந்தையும் மனைவிக்கு பயந்து இவரை ஒதுக்கியுள்ளார். அந்த வெறுப்பு தான் அவர் மனதில் கொலை வெறியாக மாறியுள்ளது.  என்றார். - தினகரன்-                                                       

                                                  

 தற்போதைய சூழ்நிலையில் வேலைக்குச் செல்லும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். தன்னுடன் பணிபுரியும் ஆண் ஊழியர்கள், சக அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மூலம் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுவது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. குறைந்த பட்சம் ஆபாச கேலி,கிண்டலை விட்டும் பல பெண்கள் தப்ப முடியாது. [அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் பெண்களில் 10-ல் 4 பேர் இராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப் படுகிறார்கள் என்பது அங்குள்ள ஒரு எம்.பி.யின் பேட்டியாகும் தினகரன்-3-8-2009]                 

இந்தியாவிலும் இது போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன.                                        

அல்லாஹ்வின் படைப்பில் இயற்கையாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள்

படைப்பின் அமைப்பிலேயே ஆணுக்கும், பெண்ணுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆண்களுக்கு மூளையின் எடை 1350 கிராமிலிருந்து 1450 கிராம் வரை இருக்கும். பெண்களுக்கு மூளையின் எடை 1250 கிராமிலிருந்து 1350 கிராம் வரை இருக்கும். மூளையின் எடை கூடுவதால் சிந்தனைத்திறன் அதிகமாகும். [எனினும் பல ஆண்கள் தங்களின் மூளையை பயன்படுத்தாமல் பின்னுக்குத் தள்ளப்படுவதும் சில பெண்கள் அதை பயன்படுத்தி முன்னுக்கு வருவதும் விதிவிலக்காகும்] மேலும் ஆணுக்கு வலப்பக்க மூளையின் ஆற்றல் அதிகம். அப்பகுதி சிந்திக்கும் திறன் அதிகம் உள்ளது. பெண்ணுக்கு இடப்பக்க மூளையின் ஆற்றல் அதிகம். அப்பகுதி பேசும் திறன் அதிகம் உள்ளது. ஆண் அதிகம் சிந்திப்பான். பெண் அதிகம் பேசுவாள். எனவே ஆளுமை, அதிகாரத்திற்கு உரியவன் சிந்தனை திறன் மிக்க ஆண் தான். அதிகம் பேசும் பெண்ணல்ல. மேலும் ஆண்களுக்கு இதயத்தின் எடை சுமார் 300 கிராம். பெண்களுக்கு 275 கிராம். ஆண்கள் சகித்துக் கொள்ளும் அளவுக்குள்ள கடினமான விஷயங்களை இதயத்தின்  வலிமை குறைவான பெண்களால் சகித்துக்கொள்ள முடியாது. மேலும் பெண்களின் உடலமைப்பு மென்மையானது.ஆண்களின் உடலமைப்பு தின்மையானது.ஆண்கள் செய்யக்கூடிய பல வேலைகளை பெண்கள் செய்ய முடியாது. சிலர் செய்கிறார்கள் என்பதற்காக எல்லாப் பெண்களையும் கணக்கிட முடியாது.      

 வீட்டில் இருக்கும் போது கணவனுக்கு முன்னால் தன்னை அழகு படுத்திக் கொள்ளாத பல பெண்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் சாதாரண நேரங்களில் பர்தா அணியும் பெண்கள் அழகான புடவை அணிந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது  அழகு மறைந்து விடும் என்பதற்காக ஃபர்தாவை தவிர்க்கும் கொடுமையை பல இடங்களில் பார்க்க முடிகிறது.                                                                               

 

 

 

காதல் என்ற பெயரில் ஒரு ஆணும், பெண்ணும் ஊர் சுற்றுவதை உலகின் எந்த மதமும் விரும்புவதில்லை

 

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ (بخاري كتاب الاستئذان)

தனக்கென நிச்சயிக்கப்பட்டவளாக இருந்தாலும் திருமணம் நடைபெறும் வரை தனிமையில் சந்திப்பதும், ஊர் சுற்றுவதும் கூடாது

رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ (ترمذي)  عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم يعني عن ربه عز و جل "النظرة سهم مسموم من سهام إبليس من تركها من مخافتي أبدلته إيمانا يجد حلاوته في قلبه (الترغيب)عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم كُلُّ عَيْنٍ بَاكِيَةٌ يَوْمَ الْقَيَامَةِ إِلا عَيْناً غَضَّتْ عَنْ مَحَارِمِ الله تَعَالى وَعَيْناً سَهِرَتْ فِي سَبِيلِ الله تَعَالى وَعَيْناً خَرَجَ مِنْهَا مِثْلُ رَأْسِ الذُّبَابِ مِنْ خَشْيَةِ الله تَعَالى(الترغيب)

عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:إِيَّاكُمْ وَالْخَلْوَةَ بِالنِّسَاءِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا خَلا رَجُلٌ وَامْرَأَةٌ إِلا دَخَلَ الشَّيْطَانُ بَيْنَهُمَا، وَلَيَزْحَمُ رَجُلٌ خِنْزِيرًا مُتَلَطِّخًا بِطِينٍ أَوْ حَمْأَةٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَزْحَمَ مَنْكِبِهِ مَنْكِبَ امْرَأَةٍ لا تَحِلُّ لَهُ -عن مَعْقِلُ بن يَسَارٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لأَنْ يُطْعَنَ فِي رَأْسِ رَجُلٍ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لا تَحِلُّ لَهُ (رواهما الطبراني في المعجم الكبير

 


மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...