27-01-2023 |
|
بسم
الله الرحمن الرحيم
|
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
|
உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பெற்றெடுத்த பிள்ளை, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் பரக்கத் வேண்டி அல்லாஹ்விடம் கேட்கிறோம். காரணம் எல்லாவற்றிலும் பரக்கத் மிக மிக அவசியம். பரக்கத் என்பதற்கு அந்தந்த இடத்திற்கு தகுந்த மாதிரி வளர்ச்சி, முன்னேற்றம், வெற்றி, நிம்மதி என பல அர்த்தங்கள் உண்டு.
ஒருவரின் அழகு நம்மை
ஆச்சரியப்படுத்தினால் பாரகல்லாஹு என்று
கூறுவதால் கண்திருஷ்டி ஏற்படாது
عَنْ
أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ
يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخَبَّأَةٍ فَمَا لَبِثَ
أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلًا صَرِيعًا قَالَ مَنْ تَتَّهِمُونَ بِهِ قَالُوا
عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى
أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ثُمَّ
دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلْ وَجْهَهُ وَيَدَيْهِ
إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ
يَصُبَّ عَلَيْهِ (ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - قَالَ سُفْيَانُ
قَالَ مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الْإِنَاءَ مِنْ
خَلْفِهِ-(ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَيْنُ
حَقٌّ (بخاري) باب الْعَيْنُ حَقٌّ -كتاب الطب
ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழி அவர்கள் குளித்துக்
கொண்டிருந்த போது ஆமிர் ரழி அவர்கள் அந்த வழியாகச் சென்றார். ஸஹ்ல் ரழி அவர்களின்
கட்டுமஸ்தான உடலைப் பார்த்தவுடன் இது மாதிரி அழகிய உடம்பை வேறு எங்கும் கண்டதில்லை
என கண் வைத்து விட்டார். அது அவரை உடனே பாதித்தது. படுத்த படுக்கையாக ஆகி விட்ட
அவரை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது இவர் விஷயத்தில் யாரையும்
சந்தேகிக்கிறீர்களா என்று நபி ஸல் கேட்க, ஆமிரை ரழி நாங்கள் சந்தேகிக்கிறோம் என
தோழர்கள் பதில் கூறினார்கள். உடனே ஆமிர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி ஸல்
அவர்கள் எதற்காக உங்களின் உடன் பிறவா சகோத ர ரை இப்படி கண்திருஷ்டியை ஏற்படுத்தி
ஏன் கொலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் ஆச்சரியத்தை
ஏற்படுத்தினால் பாரகல்லாஹ் என்று கூறலாமே என்றார்கள். பிறகு ஆமிர் ரழி அவர்களிடம்
தண்ணீரை எடுத்து வரச் சொல்லி ஆமிர் ரழி உடைய உடல் முழுவதையும் கழுவச் சொல்லி அந்த
நீரை ஸஹ்ல் ரழி அவர்களின் மீது ஊற்றச் சொன்னார்கள். (அவ்வாறு ஊற்றப்பட்டது. அவர் குணமடைந்தார்.)
மணமக்களை
வாழ்த்தும்போது பரக்கத்துக்காக துஆ
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله
عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ (ابن
ماجة) بَاب مَا يُقَالُ لِلْمُتَزَوِّجِ- كِتَاب النِّكَاحِ- عَنْ عَقِيلِ بْنِ
أَبِي طَالِبٍ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي جُشَمَ فَقَالُوا
بِالرَّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ لَا تَقُولُوا هَكَذَا وَلَكِنْ قُولُوا كَمَا
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ
بَارِكْ لَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ (ابن ماجة) بَاب
تَهْنِئَةِ النِّكَاحِ- كِتَاب النِّكَاحِ
- (بارك الله لك)أي في زوجك (وبارك عليك) أي
أدخل عليك البركة في مؤنتها ويُسِرَّها لك (فيض القدير) ودَلَّ صنيع المؤلف على أن
الدعاء للمتزوج بالبركة هو المشروع (فتح
الباري)- بِالرِّفَاءِ وَالْبَنِينَ كَلِمَة تَقُولهَا أَهْل الْجَاهِلِيَّة فَوَرَدَ النَّهْي
عَنْهَا -وَاخْتُلِفَ فِي عِلَّة النَّهْي عَنْ ذَلِكَ قِيلَ لِمَا فِيهِ مِنْ
الْإِشَارَة إِلَى بُغْض الْبَنَات لِتَخْصِيصِ الْبَنِينَ بِالذِّكْرِ وقال بن
المنير الذي يظهر أنه صلى الله عليه
وسلم كره اللفظ لما فيه من موافقة الجاهلية (مرقاة)
பிர்ரிஃபாஇ
வல்-பனீன் என்று துஆ கேட்கக் கூடாது என அகீல் ரழி அவர்கள் கூறியதற்கு பல
காரணங்கள் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை ஒதுக்கித் தள்ளுதல் என்பதும் இதில்
இருக்கிறது. மேலும் மணமக்களை இவ்வாறு வாழ்த்துவது அறியாமைக்காலத்தின் பழக்கம்.
அதனால் நபி ஸல் அவர்கள் மணமக்களுக்கு பரக்கத்தை வேண்டி துஆச் செய்யக் கற்றுக்
கொடுத்தார்கள்.
உண்ணும் உணவில்
பரக்கத் இருந்தால் குறைந்த உணவும் வயிறை நிரப்பும்
قَالَ
النَّوَوِيّ :وَالْمُرَاد بِالْبَرَكَةِ مَا تَحْصُل بِهِ التَّغْذِيَة وَتَسْلَم
عَاقِبَتُهُ مِنْ الْأَذَى وَيُقَوِّي عَلَى الطَّاعَة وَالْعِلْم عِنْد اللَّه(فتح
الباري
நவவீ ரஹ் அவர்கள் உணவு
விஷயத்தில் பரக்கத் என்பதற்கு விளக்கம் கூறும்போது எந்த உணவின் மூலம் வயிறும்
நிரம்புவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்குமோ, வணக்க வழிபாடுகளுக்கு
உதவியாகவும் இருக்குமோ, தீனுடைய கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகுவதற்குக் காரணமாக
இருக்குமோ அது தான் உணவில் பரக்கத் என்று கூறினார்கள்.
சிறந்த
முஃமினின் உணவில் பரக்கத் செய்யப்படும் என்பதால் குறைந்த உணவே அவருக்குப்போதும்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ
الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ (بخاري) بَاب طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ- كتاب الأطعمة-
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ
وَهُوَ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ
أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ
فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ
يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي
سَبْعَةِ أَمْعَاءٍ (مسلم)بَاب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ
وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ-كِتَاب الْأَشْرِبَةِ-
நபி ஸல் அவர்களிடம் ஒரு மாற்று மதத்தவர்
விருந்தாளியாக வந்தார். முதல்நாள் அவருக்கு ஆட்டுப்பால் குடிக்கத் தரும்படி நபி
ஸல் உத்தரவிட்டார்கள். அவர் குடித்தார். மீண்டும் தரப்ப்பட்டது. குடித்தார்.
இவ்வாறே ஏழு கோப்பைகளை காலி செய்தார். பிறகு அவர் முஸ்லிமாக விட்டார். அதன்பின்பு
அவரிடம் ஆட்டுப்பால் குடிக்கத் தந்த போது ஒரு கோப்பைக்கு மேல் அவரால் குடிக்க
முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு முஃமின் ஒரு இரைப்பையை நிரப்பிக்
கொள்ளும் அளவுக்கு மட்டுமே அருந்துவார். ஆனால் ஒரு காஃபிர் ஏழு இரைப்பைகளை
நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு அருந்துவார்
என்றார்கள்.
قال القرطبي:المؤمن يأكل للضرورة والكافر يأكل للشهوة أو المؤمن يقل حرصه
وشرهه على الطعام ويبارك له في مأكله ومشربه فيشبع من قليل والكافر شديد الحرص لا
يطمح بصره إلا للمطاعم والمشارب كالأنعام فمثل ما بينهما من التفاوت كما بين من
يأكل في وعاء ومن يأكل في سبعة (فيض القدير)
நபி ஸல் அவர்களின்
விரல்களில் சுரந்த நீரை நபித்தோழர்கள் அருந்திய சம்பவத்தை கூறும்போது நீரை
அருந்துவது என்று கூறாமல் பரக்கத்தை அருந்துவது என்ற தலைப்பில் புஹாரீ இமாம்
கொண்டு வந்துள்ளார்கள்
عَنْ
جَابِرِ قَالَ قَدْ رَأَيْتُنِي
مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ حَضَرَتْ
الْعَصْرُ وَلَيْسَ مَعَنَا مَاءٌ غَيْرَ فَضْلَةٍ فَجُعِلَ فِي إِنَاءٍ فَأُتِيَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ بِهِ فَأَدْخَلَ
يَدَهُ فِيهِ وَفَرَّجَ أَصَابِعَهُ ثُمَّ قَالَ حَيَّ عَلَى أَهْلِ الْوُضُوءِ الْبَرَكَةُ مِنْ اللَّهِ
فَلَقَدْ رَأَيْتُ الْمَاءَ يَتَفَجَّرُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ
النَّاسُ وَشَرِبُوا فَجَعَلْتُ لَا
آلُوا مَا جَعَلْتُ فِي بَطْنِي مِنْهُ فَعَلِمْتُ أَنَّهُ بَرَكَةٌ قُلْتُ لِجَابِرٍ
كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ (بخاري)بَاب شُرْبِ الْبَرَكَةِ
وَالْمَاءِ الْمُبَارَكِ
தட்டை வழித்துச்
சாப்பிடுவதிலும், கைகளை சூப்பி சாப்பிடுவதிலும் பரக்கத்
عَنْ
جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ
الْأَصَابِعِ وَالصَّحْفَةِ وَقَالَ إِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّهِ
الْبَرَكَةُ (مسلم)وعنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ
كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ فَإِذَا سَقَطَتْ
مِنْ أَحَدِكُمْ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ثُمَّ
لِيَأْكُلْهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ
أَصَابِعَهُ فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ تَكُونُ الْبَرَكَةُ (مسلم)
-كتاب الاشربة
சேர்ந்து
சாப்பிடுவதிலும் பரக்கத்
عن وَحْشِي بْن حَرْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ أَصْحَابَ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ
إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ
قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ
يُبَارَكْ لَكُمْ فِيهِ (ابوداود) بَاب فِي الِاجْتِمَاعِ عَلَى الطَّعَامِ- كِتَاب
الْأَطْعِمَةِ
நபி ஸல் அவர்களிடம் சில
தோழர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உண்ணுகிறோம். ஆனால் வயிறு
நிரம்புவதில்லை என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் நீங்கள் தனித்தனியாக
சாப்பிடுகிறீர்களா என்று கேட்க, ஆம் என்று அவர்கள் பதில் கூறியவுடன் இனிமேல் நீங்கள்
சேர்ந்து உண்ணுங்கள் பிஸ்மி சொல்லி உண்ணுங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்
செய்வான் என்று கூறினார்கள்.
பெற்றோரை
மதிப்பதாலும், உறவினர்களை அனுசரிப்பதாலும் பரக்கத் பெருகும் என்பதன் விளக்கம்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ
أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ
رَحِمَهُ (بخاري) بَاب مَنْ أَحَبَّ الْبَسْطَ فِي الرِّزْقِ-كتاب البيوع قَالَ الْعُلَمَاءُ
: مَعْنَى الْبَسْطِ فِي الرِّزْق الْبَرَكَة فِيهِ ، وَفِي الْعُمُر حُصُولُ
الْقُوَّةِ فِي الْجَسَدِ ، لِأَنَّ صِلَةَ أَقَارِبِهِ صَدَقَةٌ وَالصَّدَقَةُ
تُرَبِّي الْمَالَ وَتَزِيدُ فِيهِ فَيَنْمُو بِهَا وَيَزْكُو (فتح الباري)
நேரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வது
பற்றி..
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خُفِّفَ عَلَى دَاوُدَ الْقِرَاءَةُ فَكَانَ
يَأْمُرُ بِدَابَّتِهِ لِتُسْرَجَ فَكَانَ يَقْرَأُ قَبْلَ أَنْ يَفْرُغَ يَعْنِي
الْقُرْآنَ اي الزبور (بخاري) باب قَوْلِهِ ( وَآتَيْنَا دَاوُدَ زَبُورًا )
كتاب التفسيبر- وَفِي الْحَدِيث أَنَّ
الْبَرَكَة قَدْ تَقَع فِي الزَّمَن الْيَسِير حَتَّى يَقَع فِيهِ الْعَمَل
الْكَثِير . قَالَ النَّوَوِيّ : أَكْثَر مَا بَلَغَنَا مِنْ ذَلِكَ مِنْ كَانَ
يَقْرَأ أَرْبَع خَتَمَات بِاللَّيْلِ وَأَرْبَعًا بِالنَّهَارِ ، وَقَدْ بَالَغَ
بَعْض الصُّوفِيَّة فِي ذَلِكَ فَادَّعَى شَيْئًا مُفْرِطًا وَالْعِلْم عِنْد
اللَّه (فتح الباري) وفيه أن الله تعالى يطوي الزمان لمن شاء من عباده كما يطوي
المكان(عمدة القاري)
பொருள்-வாகனத்தை
கயிற்றால் கட்டி வைக்கும் நேரத்திற்குள் தாவூத் அலை ஜபூரை ஓதி முடிப்பார்கள்.
அதாவது பொறுமையாகவே ஓதுவார்கள். ஆனால் குறுகிய நேரத்தில் முடிப்பார்கள்.
நபிகளாரின் மிஃராஜ் பயணம் போல்..
ரஜப் மாதத்தில் பரக்கத் செய்வாயாக என்ற துஆவின்
தாத்பரியம்
عن أنس رضي الله عنه أن رسول الله
صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ رَجَبٌ قالَ : اللَّهُمَّ بَارِكْ لَنَا
فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
وَكَانَ إِذَا كَانَتْ لَيْلَةُ الجُمُعَةِ قالَ هذِهِ لَيْلَةٌ غَرَّاءُ
وَيَوْمٌ أَزْهَرُ (بزار,كنز العمال)(مشكاة, باب الجمعة) عن أنس بن مالك رضي الله عنه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأعنا على الصيام والقيام وغض
البصر وحفظ اللسان ولا تجعل حظنا منه الجوع والسهر (مسند الفردوس)
(اللهم بارك
لنا) أي في طاعتنا وعبادتنا (في رجب وشعبان) يعني وفقنا للإكثار من الأعمال
الصالحة فيهما(مرعاة شرح مشكاة)
ரஜப் மாத த்திலும்
ஷஃபான் மாத த்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்பதன் தாத்பரியம் இந்த இரண்டு
மாதங்களிலும் அதிகம் அமல் செய்யும் பாக்கியத்தை தருவாயாக என்பதாகும். இந்த இரண்டு
மாதங்களிலும் அமல் செய்வதன் மூலமாக ரமழானில் இன்னும் அதிகமாக அமல் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
وبلغنا رمضان : قال ابن رجب:فيه أن
دليل ندب الدعاء بالبقاء إلى الأزمان الفاضلة لإدراك الأعمال الصالحة فيها فإن
المؤمن لا يزيده عمره إلا خيرا (فيض القدير) قال الطيبي:الأزهر الأبيض ومنه أكثروا
الصلاة عليّ في الليلة الغراء، واليوم الأزهر أي ليلة الجمعة ويومها والنورانية
فيهما معنوية لذاتهما،
ரமழானை எங்களுக்கு
அடையச் செய்வாயாக என்று கேட்பதன் நோக்கம் அதுவரை அல்லாஹ் நம்மை ஹயாத்தாக வைத்திருக்க
வேண்டும் என்பதாகும்.
عَن
أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا
مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا
وَأُخِّرَ الْآخَرُ سَنَةً قَالَ عُبَيْدِ اللَّهِ فَأُرِيتُ الْجَنَّةَ
فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ فَعَجِبْتُ
لِذَلِكَ فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ
قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ أَوْ كَذَا
وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ (احمد
இரு
சகோதரர்கள் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றனர். அவ்விருவரில் ஒருவர் ஒரு போரில்
ஷஹீதாக்கப்பட்டார். மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கையாக மவ்த்தானார்.தல்ஹா
ரழி கூறினார்கள். சுவனத்தை நான் காட்டப்பட்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக
இறந்தாரோ அவர்தான் ஷஹீதை விட சுவனத்தில் முந்திச் செல்வதாக நான் கண்டேன். எனக்கு
ஆச்சரியம் ஏற்பட்டது. இதை நபி ஸல் அவர்களிம் நான் தெரிவித்தபோது நபி ஸல் அவர்கள்
இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவர் முந்தியவருக்குக் கிடைக்காத ஒரு ரமழான்
முழுமையாக கிடைத்துள்ளது.மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார்
என்றார்கள்.
தமக்கு
அநீதம் செய்தவர்களுக்கு எதிராக சங்கையான மாதத்தில் துஆ செய்ததால் அந்த துஆ ஏற்றுக்
கொள்ளப்பட்ட விதம்
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه
قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي يَوْمٍ
يَعْرِضُ فِيهِ الدِّيوَانَ إِذْ مَرَّ بِهِ رَجُلٌ أَعْمَى أَعْرَجُ قَدْ عَنَّى
قَائِدَهُ فَقَالَ عُمَرُ حِينَ رَآهُ وَأَعْجَبَهُ شَأْنُهُ:" مَنْ يَعْرِفُ
هَذَا؟"، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: هَذَا مِنْ بَنِي صَنْعَاءَ
بَهْلَةَ بَرِيقٍ قَالَ:" وَمَا بَرِيقٌ؟"، قَالَ: رَجُلٌ مِنَ
الْيَمَنِ: قُلْتُ زَادَ غَيْرُهُ فِيهِ اسْمُهُ عِيَاضٌ، قَالَ:"
أَشَاهِدٌ؟"، قَالَ: نَعَمْ، فَأُتِيَ بِهِ عُمَرَ فَقَالَ:" مَا شَأْنُكَ
وَشَأَنُ بَنِي صَنْعَا؟" فَقَالَ: إِنَّ بَنِي صَنْعَا كَانُوا اثْنَيْ
عَشَرَ رَجُلًا، وَإِنَّهُمْ جَاوَرُونِي فِي الْجَاهِلِيَّةِ فَجَعَلُوا
يَأْكُلُونَ مَالِي، وَيَشْتُمُونَ عِرْضِي اسْتَنْهَيْتُهُمْ فَنَاشَدْتُهُمُ
اللهَ وَالرَّحِمَ فَأَبَوْا فَأَمْهَلْتُهُمْ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ
الْحَرَامُ دَعَوْتُ اللهَ عَلَيْهِمْ...فَلَمْ يَحُلِ الْحَوْلُ حَتَّى هَلَكُوا
غَيْرَ وَاحِدٍ وَهُوَ هَذَا كَمَا تَرَى قَدْ عَنَّى قَائِدَهُ فَقَالَ عُمَرُ:
سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذَا لَعِبْرَةً وَعَجَبًا"،
فَقَالَ رَجُلٌ آخَرُ مِنَ الْقَوْمِ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلَا
أُحَدِّثُكَ مِثْلَ هَذَا وَأَعْجَبَ مِنْهُ؟ قَالَ:" بَلَى" قَالَ:
فَإِنَّ نَفَرًا مِنْ خُزَاعَةَ جَاوَرُوا رَجُلًا مِنْهُمْ فَقَطَعُوا رَحِمَهُ،
وَأَسَاءُوا مُجَاوَرَتَهُ، وَإِنَّهُ نَاشَدَهُمُ اللهَ وَالرَّحِمَ إِلَّا أَعْفَوْهُ مِمَّا يَكْرَهُ فَأَبَوْا عَلَيْهِ
فَأَمْهَلَهُمْ حَتَّى إِذَا جَاءَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِمْ قَالَ:
فَبَيْنَمَا هُمْ عِنْدَ قَلِيبٍ يَنْزِفُونَهُ فَمِنْهُمْ مَنْ هُوَ فِيهِ،
وَمِنْهُمْ مَنْ هُوَ فَوْقَهُ تَهَوَّرَ الْقَلِيبُ بِمَنْ كَانَ عَلَيْهِ
وَعَلَى مَنْ كَانَ فِيهِ فَصَارَ قُبُورَهُمْ حَتَّى السَّاعَةِ، فَقَالَ
عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ فِي هَذِهِ لَعِبْرَةً وَعَجَبًا"،
فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ آخَرُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَلَا
أُخْبِرُكَ بِمِثْلِ هَذَا وَأَعْجَبَ مِنْهُ؟، قَالَ: بَلَى، قَالَ: إِنَّ
رَجُلًا مِنْ هُذَيْلٍ وَرِثَ فَخْذَهُ الَّذِي هُوَ فِيهَا حَتَّى لَمْ يَبْقَ
مِنْهُمْ أَحَدٌ غَيْرُهُ فَجَمَعَ مَالًا كَثِيرًا، فَعَمِدَ إِلَى رَهْطٍ مِنْ
قَوْمِهِ يُقَالُ لَهُمْ بَنُو الْمُؤَمَّلِ، فَجَاوَرَهُمْ لِيَمْنَعُوهُ
وَلْيَرُدُّوا عَلَيْهِ مَاشِيَتَهُ، وَإِنَّهُمْ حَسَدُوهُ عَلَى مَالِهِ،
وَنَفَسُوهُ مَالَهُ، فَجَعَلُوا يَأْكُلُونَ مِنْ مَالِهِ وَيَشْتُمُونَ
عِرْضَهُ، وَإِنَّهُ نَاشَدَهُمُ اللهَ وَالرَّحِمَ إِلَّا عَدَلُوا عَنْهُ مَا
يَكْرَهُ، فَأَبَوْا عَلَيْهِ فَجَعَلَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ رَبَاحٌ
يُكَلِّمُهُمْ فِيهِ، وَيَقُولُ: يَا بَنِي الْمُؤَمَّلِ ابْنُ عَمِّكُمُ اخْتَارَ
مُجَاوَرَتَكُمْ عَلَى مَنْ سِوَاكُمْ فَأَحْسِنُوا مُجَاوَرَتَهُ، فَأَبَوْا
عَلَيْهِ فَأَمْهَلَهُمْ حَتَّى إِذَا كَانَ الشَّهْرُ الْحَرَامُ دَعَا
عَلَيْهِمْ قَالَ: فَبَيْنَمَا هُمْ ذَاتَ يَوْمٍ نُزُولٌ إِلَى أَصْلِ جَبَلٍ
انْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ لَا تَمُرُّ بِشَيْءٍ إِلَّا طَحَنَتْهُ حِينَ
مَرَّتْ بَأَبْيَاتِهِمْ فَطَحَنَتْها طَحْنَةً وَاحِدَةً إِلَّا رَبَاحًا الَّذِي
اسْتَثْنَاهُ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ اللهِ إِنَّ هَذَا لَعِبَرًا
وَعَجَبًا"،
فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَلَا أُخْبِرُكَ يَا أَمِيرَ
الْمُؤْمِنِينَ مِثْلَهُ وَأَعْجَبَ مِنْهُ؟، قَالَ:" بَلَى"، قَالَ: فَإِنَّ
رَجُلًا مِنْ جُهَيْنَةَ جَاوَرَ قَوْمًا مِنْ بَنِي ضَمْرَةَ فِي
الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ رَجُلٌ مِنْ بَنِي ضَمْرَةَ يُقَالُ لَهُ رِيشَةُ
يَعْدُو عَلَيْهِ، فَلَا يَزَالُ يَنْحَرُ بَعِيرًا مِنْ إِبِلِهِ، وَإِنَّهُ
كَلَّمَ قَوْمَهُ فِيهِ، فَقَالُوا: إِنَّا قَدْ خَلَفْناهُ فَانْظُرْ أَنْ
تَقْتُلَهُ، فَلَمَّا رَآهُ لَا يَنْتَهِي أَمْهَلَهُ حَتَّى إِذَا كَانَ
الشَّهْرُ الْحَرَامُ دَعَا عَلَيْهِ، فَسَلَّطَ اللهُ عَلَيْهِ أُكْلَةً
فَأَكَلَتْهُ حَتَّى مَاتَ قَبْلَ الْحَوْلِ، فَقَالَ عُمَرُ:" سُبْحَانَ
اللهِ إِنَّ فِي هَذَا لَعِبْرَةً وَعَجَبًا، وَإِنْ كَانَ اللهُ لَيَصْنَعُ هَذَا
بِالنَّاسِ فِي جَاهِلِيَّتِهِمْ لِيَنْزِعَ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ فَلَمَّا
أَتَى اللهُ بِالْإِسْلَامِ أَخَّرَ الْعُقُوبَةَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ،
وَذَلِكَ أَنَّ اللهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: { إِنَّ يَوْمَ الْفَصْلِ
مِيقَاتُهُمْ أَجْمَعِينَ } [الدخان: 40]، وَإِنَّ مَوْعِدَهُمُ السَّاعَةُ، {
وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ } [القمر: 46]، وَقَالَ: { وَلَوْ يُؤَاخِذُ اللهُ
النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ
يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى } [فاطر: 45](بيهقي في شعب الايمان)
உமர் ரழி அவர்களின் சபையை ஒருவர் கடந்து
சென்றார். குருடராகவும் நொண்டியாகவும் அவர் இருந்தார். மற்றவரின் தயவு இல்லாமல்
அவரால் எங்கும் செல்ல முடியாதவராக இருந்தார். அவரைப் பற்றி உமர் விசாரித்த போது
இவர் பனீ ஸன்ஆ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு சாபத்தின் காரணமாக அந்தக் குடும்பமே
இப்படி ஆகி விட்டது என்று கூறப்பட்டது. அது கேட்டு ஆச்சரியமடைந்த உமர் ரழி இதற்கு
சாட்சி உண்டா என்று கேட்க, யார் சபித்தாரோ அந்த
நபரையே அழைத்து வரப்பட்டது. அவரிடம் உமர் ரழி அவர்கள் நடந்ததை
விசாரித்தார்கள். அப்போது அவர் கூறினார்.
பனீ ஸன்ஆ குடும்பத்தாருக்கு அருகில் வசிப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் 12
பேர். அவர்கள் எனக்கு நிறைய அநீதம் செய்தனர். என் சொத்துகளை அனுபவித்தனர். என்
குடும்பம் பற்றி அவதூறாகப் பேசினர். நான் எவ்வளவோ தூரம் பொறுமை கொண்டேன். ஒரு கட்டத்தில்
நான் பொறுமை இழந்தேன்.குறிப்பிட்ட சிறந்த கண்ணியமான மாதம் வருவதை எதிர்பார்த்து அந்தமாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக
அல்லாஹ்விடம் துஆ செய்தேன். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன் விளைவாக அக்குடும்பத்தில்
ஒருவன் பின் ஒருவராக இறந்தனர். கடைசியில் நீங்கள் பார்த்த இவர் மட்டும் தான்
மிச்சமிருக்கிறார். அவரும் இந்நிலையில் இருக்கிறார் என்று கூறினார். அதைக் கேட்ட
உமர் ரழி அவர்கள் சுப்ஹானல்லாஹ் இது
மிகவும் படிப்பினையான சம்பவம் என்றார்கள்.
இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த
மற்றொருவர் கூறினார் இதுபோன்று எனக்கும் ஒரு சம்பவம் தெரியும். குஜாஆ கோத்திரத்தைச்
சேர்ந்தவர்கள் அதே குடும்பத்தைச் சார்ந்த, அண்டை வீட்டாரான மற்றொருவருக்கு நிறைய அநீதம் செய்தனர். அவரும் முடிந்த வரை
பொறுமை கொண்டார். இறுதியில் பொறுமை தாங்காமல் கண்ணியமான மாதம் வருவதை எதிர்
பார்த்து அந்த மாதம் வந்தவுடன்
அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை அல்லாஹ் ஏற்றதன்
விளைவாக அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக ஒரு பள்ளம் தோண்டும் வேலையில்
ஈடுபட்டிருந்தனர். பள்ளத்திற்குள் சிலரும் பள்ளத்திற்கு மேலே சிலரும் நின்று
கொண்டிருந்தனர். அப்போது அந்த பள்ளம் இருந்த பகுதி அப்படியே குலுங்க ஆரம்பித்தது.
இதில் பள்ளத்திற்கு மேல் இருந்தவர்களுடன்
பள்ளத்திற்குள் இருந்தவர்களும் சேர்ந்து அனைவரும் புதையுண்டு போயினர். அதுவே
அவர்களின் கப்ராக மாறி விட்டது. என்று கூறியவுடன் அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள்
சுப்ஹானல்லாஹ் இதுவும் மிகவும்
படிப்பினையான சம்பவம் என்றார்கள்.
இதைக் கேட்டவுடன் அந்த சபையில் இருந்த
மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம் எனக்கும் தெரியும் என்றார். ஹுதைல் கோத்திரத்தைச்
சார்ந்த ஒருவருக்கு வாரிசுரிமை என்ற அடிப்படையில் நிறைய சொத்துக்கள் கிடைத்த து.
அந்தக் குடும்பத்த்துக்கு அவர் மட்டும் தான் வாரிசு என்பதால் கால்நடைகள் உட்பட
நிறைய சொத்துக்களை அவர் பெற்றார்.
அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய கோத்திரத்தின் ஒரு
பிரிவான பனூ முஅம்மல் குடும்பம் வசிக்கும் இடத்தில் தன்னுடைய வசிப்பிடத்தை
அமைத்துக் கொண்டார். அவர்கள் தனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நல்ல
எண்ணத்தில் அவ்வாறு குடி பெயர்ந்தார். ஆனால் அவர்கள் அதற்கு நேர் மாற்றமாக இவர்
மீது பொறாமை கொண்டனர். இவரது சொத்துக்களை அநியாயமாக இவரிடமிருந்து
பிடுங்கினர். எனக்கு துரோகம்
செய்யாதீர்கள் என்று எவ்வளவோ தூரம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் அதை காதில்
வாங்கவில்லை. ஆனால் அவர்களிலும் ஒரு நல்லவர் இருந்தார். அவர் பெயர் ரபாஹ். அவர்
அந்தக் குடும்பத்தாரிடம் நம்மை நம்பி வந்தவருக்கும் துரோகம் செய்யாதீர்கள் அவரிடம்
நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறி பரிந்து பேசினார். ஆனால் அதையும்
அவர்கள் காதில் வாங்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட அந்த நபர் பொறுமை தாங்காமல் கண்ணியமான
மாதம் வருவதை எதிர் பார்த்து அந்த
மாதம் வந்தவுடன் அவர்களுக்கு எதிராக இறைவனிடம் கேயேந்தி விட்டார். அந்த துஆவை
அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். ஒருநேரத்தில்
அனைவரும் மலையடிவாரத்தில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்கியிருந்த போது மலை
உச்சியில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து வழியில் உள்ள அனைத்தையும்
நிர்மூலமாக்கியது. அந்தப் பாறை இவர்களின் மீது விழுந்து அவர்களை நசுக்கி
சாகடித்தது. இதில் ரபாஹ் மட்டும் தப்பித்தார். அவருக்கு மட்டும் எதுவும்
ஆகிவில்லை. என்று கூறியவுடன் உமர் ரழி அவர்கள்
சுப்ஹானல்லாஹ் இதுவும் மிகவும்
படிப்பினையான சம்பவம் என்றார்கள்.
இதைக்
கேட்டவுடன் அந்த சபையில் இருந்த மற்றொருவர் இதை விட ஆச்சரியமான ஒரு சம்பவம்
எனக்கும் தெரியும் என்றார். ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் பனீ ழம்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவருக்கு
அருகில் வசித்தார். ரீஷா என்பது அவரின் பெயர். ரீஷா இவருக்கு மிகவும் அநீதம்
செய்தார். இவரின் ஒட்டகங்களை அவ்வப்போது பிடித்து அறுத்து உணவாக்கி விடுவார். இறுதியில் அந்த ரீஷாவின்
உறவினர்களிடம் சென்று இவர் முறையிட்ட போது அவர்கள் கூறினார்கள். நாங்கள்
தடுத்தாலும் அவன் கேட்க மாட்டான்.
எங்களுடைய பங்காளிகளில் ஒருவன்
என்பதால் அவன் விஷயத்தில் நாங்கள் தலையிட
மாட்டோம். நீ வேண்டுமானால் அவனைக் கொன்று விடு. என்று கூறினார்கள். ஆனால் இவர் குறிப்பிட்ட
மாதம் வருவதை எதிர் பார்த்து அல்லாஹ்விடம் கையேந்தினார். அந்த துஆவை அல்லாஹ்
ஏற்றுக்கொண்டான். அதன் விளைவாக அல்லாஹ் வைரஸ் கிருமியை ரீஷா என்பவன் மீது
சாட்டினான். அது கொஞ்சம் கொஞ்சமாக அவனை அழித்து துஆ கேட்ட ஒரு வருடத்திற்குள் அவனை
சாகடித்தது. என்றவுடன் இதையெல்லாம கேட்ட உமர் ரழி அவர்கள் அல்லாஹ் தஆலா முந்தைய
காலங்களில் பிறருக்கு அநியாயம் செய்பவர்களை இப்படியெல்லாம் உடனுக்குடன்
தண்டித்துள்ளான். ஆனால் இஸ்லாம் வந்த பின்பு, நபியின் துஆ காரணமாக அநியாயம்
செய்பவர்களுக்கு அல்லாஹ் அவகாசம் வழங்கியுள்ளான் என்றுகூறி சில வசனங்களை
ஓதிக்காட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக