வியாழன், 26 மே, 2022

ஹஜ் என்பது ஒரு புனிதமான வணக்கம்

 


27-05-2022

Shawwal- 25

 

بسم الله الرحمن الرحيم      

ஹாஜிகளின் கவனத்திற்கு...

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 



ஹஜ் என்பது ஒரு புனிதமான வணக்கம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَجَّةُ الْمَبْرُورَةُ لَيْسَ لَهَا جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ وَالْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا رواه النسائ

ஹஜ் கடமையான பிறகும் அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துபவர்களைப் பற்றி எச்சரிக்கை

عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "تَعَجَّلُوا إلى الحَجِّ -يعني الفريضة-فإنَّ أحَدَكُمْ لا يَدْرِي مَا يَعْرضُ لَهُ رواه احمد

عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ{ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا }رواه الترمذي

عن الحسن البصري قال: قال عمر بن الخطاب: لقد هممت أن أبعث رجالا إلى هذه الأمصار فينظروا كل من كان له جَدةٌ فلم  يحج، فيضربوا عليهم الجِزْية، ما هم بمسلمين. ما هم بمسلمين . (تفسير القرطبي)

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது நான் அனைத்து ஊர்களுக்கும் ஆட்களை அனுப்பி யாரெல்லாம் வசதியிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இருக்கிறார்களோ அவர்களின் மீது ஜிஸ்யா விதிக்கலாம் என என் மனம் நாடுகிறது.ஏனெனில் அவர்கள் உண்மை முஸ்லிம்கள் கிடையாது. (எனவே இஸ்லாமிய நாட்டில் வாழும் திம்மிகளின் மீது விதிக்கப்படும் ஜிஸ்யாவுக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் தான்) என்றார்கள்.                                

ثُمَّ هُوَ (أي الحج ) وَاجِبٌ عَلَى الْفَوْرِ عِنْدَ أَبِي يُوسُفَ رَحِمَهُ اللَّهُ .وَعَنْ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ مَا يَدُلُّ عَلَيْهِ . (هداية

( ثُمَّ هُوَ  (أي الحج ) وَاجِبٌ عَلَى الْفَوْرِ عِنْدَ أَبِي يُوسُفَ ) حَتَّى إنْ أَخَّرَ بَعْدَ اسْتِجْمَاعِ الشَّرَائِطِ أَثِمَ ، رَوَاهُ عَنْهُ بِشْرٌ وَالْمُعَلَّى ( وَعَنْ أَبِي حَنِيفَةَ مَا يَدُلُّ عَلَيْهِ ) أَيْ عَلَى الْفَوْرِ وَهُوَ مَا ذَكَرَهُ ابْنُ شُجَاعٍ عَنْهُ أَنَّهُ سُئِلَ عَمَّنْ لَهُ مَالٌ أَيَحُجُّ بِهِ أَمْ يَتَزَوَّجُ ؟ فَقَالَ : بَلْ يَحُجُّ بِهِ ، وَذَلِكَ دَلِيلٌ عَلَى أَنَّ الْوُجُوبَ عِنْدَهُ عَلَى الْفَوْرِ .  . (شرح الهداية

இமாமுல்அஃழம் அவர்களின் கருத்துப்படி  ஹஜ்ஜுக்கான வசதி வந்தவுடன் அந்த வருடமே ஹஜ் செய்வது வாஜிபாகும். அரபு நாடுகளில் ஒரு ஆண் திருமணம் செய்ய வேண்டுமானால் ஹஜ்ஜுக்கு ஆகும் செலவு அளவுக்கு அவருக்கு செலவு உண்டு.அதை மனதில் வைத்து ஒருவர் இப்னு ஷுஜாஃ ரஹ் அவர்களிடம் வசதி வந்தவுடன் திருமணம் முதலில் கடமையா ஹஜ் முதலில் கடமையா என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஹஜ் செய்வது முதல் கடமை என்றார்கள்

ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம் வருவதற்கு முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள். ஒரு காலம் வரும். அப்போது மக்கள் ஹஜ் செய்ய விரும்பினாலும்  ஹஜ் செய்ய கஃபா இருக்காது

عن الحارث بن سويد ، قال : سمعت عليا ، رضي الله عنه ، يقول :  حجوا قبل أن لا تحجوا، فكأني أنظر إلى حبشي أصمع أفدع بيده  مِعْوَل يهدمها حجرا حجرا ، فقلت له شيء تقوله برأيك أو سمعته من رسول الله صلى الله عليه وسلم قال :  لا والذي فلق الحبة ، وبرأ  النسمة ، ولكني سمعته من نبيكم صلى الله عليه وسلم  رواه الحاكم في المستدرك (معولகோடாலி  أفدعமெலிந்த கால்கள் கொண்ட)

عن ابن عمر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  استمتعوا من هذا البيت ، فإنه قد هُدِم مرتين ، ويُرفع في الثالثة رواه ابن حبان

கருத்து- ஹஜ் செய்ய முடியாமல் போகும் வரும் முன்பு ஹஜ் செய்யுங்கள். ஏனெனில் கால்கள் சிறுத்த நீக்ரோ மனிதர்கள் கோடாரியால் கஃபாவின் கற்களை பெயர்த்து எடுப்பதை என் கண்ணால் பார்ப்பது போன்று உள்ளது என கவலையுடன் கூறினார்கள். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது கஃபா இருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இரண்டு முறை இடிக்கப்படும். மூன்றாவது முறை அது உயர்த்தப்பட்டு விடும் என்றார்கள்

கஃபா உயர்த்தப்பட்டு எப்போது ஹஜ் செய்ய முடியாத நிலை உருவாகுமோ

அப்போது உலகமும் அழிக்கப்பட்டு விடும்.

جَعَلَ اللَّه الْكَعْبَة الْبَيْت الْحَرَام قِيَامًا لِلنَّاسِ" أَيْ يَدْفَع عَنْهُمْ بِسَبَبِ تَعْظِيمهَا السُّوء كَمَا قَالَ اِبْن عَبَّاس : لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض  (تفسير ابن كثير

கண்ணியப்படுத்த வேண்டியவைகளை கண்ணியப்படுத்திக் கொண்டிருப்பது இந்த பூமிக்கு பாதுகாப்பாகும். கஃபாவை மக்கள் கண்ணியப்படுத்துவதால் பல்வேறு சோதனைகளை விட்டும் பாதுகாக்கப்படுகின்றனர். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள். ஒருவர் கூட ஹஜ் செய்யாத சூழ்நிலை ஏற்படும்போது அல்லாஹ் உலகத்தை அழித்து விடுவான்.

கஃபா இடிக்கப்பட்டு ஹஜ் செய்ய முடியாத நிலை ஏற்படும் முன்பே அநியாயக்கார அரசர்களால் ஹஜ் செய்வதற்கு தடை ஏற்படும் என்ற முன்னறிவிப்பு

عن أبي أمامة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : من لم يمنعه من الحج حاجة ظاهرة ، أو سلطان جائر ، أو مرض حابس ، ثم مات ولم يحج ، فليمت إن شاء يهوديا ، وإن شاء نصرانيا (أخبار مكة للفاكهي)

ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்வது கடமையா ?

عن ابن عباس رضي الله عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال: "يَأيُّهَا النَّاسُ، إنَّ اللهَ كَتَبَ عَلَيْكُم الحَجَّ". فقام الأقرع بن حابس فقال: يا رسول الله، أفي كل عام؟ قال: "لَوْ قُلْتُهَا، لَوَجَبَتْ، ولَوْ وَجَبَتْ لَمْ تَعْمَلُوا بِهَا، وَلَمْ تَسْتَطِيعُوا أنْ تَعْمَلُوا بِهَا؛ الحَجُّ مَرَّةً، فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ".رواه أحمد، وأبو داود، والنسائي، وابن ماجة،

இந்த வருடம் ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக்கு இரண்டு பெரும் பாக்கியம் கிடைக்கலாம். காரணம் ஜும்ஆ நாளில் அரஃபா நாள் அமைய வாய்ப்புள்ளது.

ஜும்ஆ நாளில் அரஃபா நாளும் அமைவது மூன்று வி த த்தில் சிறப்பு என ஹதீஸ் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். 1. . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த ஹஜ்ஜுக்கு ஒப்பாக அமைகிறது. . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹஜ்ஜின் போது ஜும்ஆ நாள் அரஃபா நாளாக அமைந்த து. 2. ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உள்ளது அந்நேரத்தில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் என்ற ஹதீஸ் உள்ளது. அதுவே அரஃபா நாளாகும் அமைந்தால் அது துஆ ஒப்புக் கொள்ளப்படுவதில் இன்னும் சிறப்பு கிடைக்கும். 3. ஹாஜிகளுக்கு அரஃபா நாள் ஈத். ஜும்ஆவும் ஈத். எனவே இரண்டு ஈத் ஒன்று சேருகிறது.                                                 

ஹஜ்ஜுப் பயணத்தில் உளத்தூய்மை மிக மிக அவசியம். 

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ (97)ال عمران

ஹஜ் செய்வது கடமை என்பதைப் பற்றி அல்லாஹ் கூறும் முன்பு   -லில்லாஹி-   என்ற வார்த்தையைத் தான் முதலில் கூறியுள்ளான்.

عن عمر بن عبد العزيز رحمة الله عليه قال "إن الله تعالى جعل هذا السفر نسكا ، وسيجعله الظالمون نكالا "(ابن عساكر)

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் இந்த ஹஜ்ஜை வணக்கமாக ஆக்கியுள்ளான். ஆனால் அநியாயக்காரர்கள் அதனை தண்டனைக்குரியதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

عن أنس رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يأتي على الناس زمان يَحُجُّ أغنياء الناس لِلنَّزَاهَة ، وأوساطهم للتجارة وقُرَّاؤُهم للرياء والسمعة وفقراؤهم للمسألة (كنز العمال) للنزاهةசுற்றுலாவுக்கு  

கடைசியில் ஒரு காலம் வரும். பணக்காரர்கள் சுற்றுலாவுக்குச் செல்வது போன்று ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். நடுத்தர மக்கள் வியாபார நோக்கத்தோடு ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். காரிகள் அதாவது ஆலிம்கள் விளம்பரம் மற்றும் பெருமைக்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். ஏழைகள் யாசிப்பதற்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள்.

பெருமைக்காகவும் மிகவும் சொகுசாகவும், மிகவும் ஆடம்பரமாகவும் ஹஜ் செய்வது நபிவழி அல்ல.

عن ابن مسعود رض أن النبي صلى الله عليه وسلم قال لا تزول قَدَمَا ابنِ آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيم أفناه وعن شبابه فيم أبلاه وعن ماله من أين اكتسبه وفيم أنفقه وماذا عمل فيما علم (الترمذي)  عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ الزَّادُ وَالرَّاحِلَةُ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْحَاجُّ قَالَ الشَّعِثُ التَّفِلُ... رواه ابن ماجة

எதனால் ஹஜ்ஜுக் கடமை ஏற்படும் என நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டபோது வாகனமும் உணவு ஏற்பாடும் என்றார்கள். ஹாஜி என்றால் யார் என்று புழுதி கலந்த உடையுடன் தலை விரி கோலமாக இருப்பவர் என்றார்கள். அரஃபாவில் பல ஹாஜிகளின் நிலை அவ்வாறு தான் இருக்கும்.

ஒரு குழுவாக ஹஜ் செய்பவர்கள் திரும்பி வரும் வரை ஒற்றுமையுடன்

ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்

ஒரு குழுவாக ஹஜ்ஜுக்குச் செல்பவர்களில் சிலருக்கு மத்தியில் ஷைத்தான் பல்வேறு மனஸ்தாபங்களை உண்டாக்கி பிரித்து விடுகிறான். இது ஹஜ்ஜின் நன்மையை பாதிக்கும். எனவே ஹஜ்ஜுப் பயணத்தில் பொறுமை மிக முக்கியம். நம்மோடு இருக்கும் சக பயணிகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். வயதானவர்கள் இருந்தால் அவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது மிக முக்கியமானது. நாம் விரைவாகச் செய்ய நினைக்கும் வணக்கங்களை அவர்கள் பொறுமையாகச் செய்வார்கள். அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டும்.

ஒருவரின் உண்மை சுயரூபம் வெளிப்படுவது அவரோடு சேர்ந்து பிரயாணம் செய்யும்போது தான்.

لما شهد عند عمر بن الخاطب رجل فزكاه آخر، قال: هل أنت جاره الأدنى تعرف مساءه وصباحه؟ قال: لا، قال: هل عاملته في الدرهم والدينار اللذين تمتحن بهما أمانات الناس؟ قال: لا، قال: هل رافقته في السفر الذي تنكشف فيه أخلاق الناس؟ قال: لا، قال: فلست تعرفه. وروي أنه قال: لعلك رأيته يركع ركعات في المسجد!، وذلك أن المنافق قد يظهر الصلاة، (الجواب الصحيح

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு மனிதனை சாட்சி சொல்ல அழைத்திருந்தார்கள்.அவரை சாட்சியாளராக அழைக்கும்போது அவரைப் பற்றி மற்றொரு நபரிடம் விசாரித்த போது அவர் அந்த சாட்சியாளரைப் பற்றி நல்ல விதமாகப் புகழந்து பேசினார். அப்போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எதை வைத்து அவரை நல்லவர் என நீங்கள் கூறுகிறீர்கள் என்று கூறி விட்டு மூன்று கேள்விகளை அவரிடம் கேட்டார்கள். அவருடைய அண்டை வீட்டாராக நீங்கள் இருந்தீர்களா என்று கேட்க,அவர் இல்லை என்று பதில் கூறினார்.  அவருடன் கொடுக்கல் வாங்கல் ஏதேனும் வைத்திருந்தீர்களா என்று கேட்க, அவர் இல்லை என்று பதில் கூறினார்.  அவருடன் ஏதேனும் பிரயாணம் செய்திருந்தால் அவரின் உண்மை சுயரூபம் வெளிப்படுமோ அப்படி ஏதும் பிரயாணம் செய்திருக்கிறீர்களா என்று கேட்க,அவர் இல்லை என்று பதில் கூறினார்.. அப்போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இம்மூன்றும் நடைபெறாத நிலையில் அவரை நல்லவரா கெட்டவரா நீங்கள் அறிய முடியாது. அவர் மஸ்ஜிதில் தொழுவதைப் பார்த்திருப்பீர்கள் அதை வைத்து அவரை நல்லவர் என விளங்கியிருப்பீர்கள். முனாஃபிக் கூட தொழுகிறார் என்றார்கள்.

உறவினர்களிடம் பகை இருந்தால் அதை நீக்கி சமரசம் ஆன பின் ஹஜ்ஜுக்குப் புறப்பட வேண்டும்.  உறவினர்களிடம் பகைத்துக் கொண்டவர் செய்யும் எந்த நல்ல அமல்களும் அல்லாஹ்விடம் ஏற்கப்படாது. அவற்றில் ஹஜ் பிரத்தியேகமானது. பெற்றெடுத்த தாயின் மனதை நோகடித்தவரின் ஹஜ்ஜும் ஏற்கப்படாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ  رضي الله عنه قَالَ سَمِعْتُ رَسُولَ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ كُلَّ خَمِيسٍ لَيْلَةَ الجُمُعَةِ فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ (أحمد)   وأوصى أحد السلف ابنه يا بني لا تصحب قاطع رحم فإني رأيت لعنه في كتاب الله قال الله وَالَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ لَهُمُ اللَّعْنَةُ (25)الرعد -فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ  أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ..[محمد{22 

ஹராமான பணத்தில் ஹஜ் செய்பவர்களின் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படுமா?

عن أنس عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من حج من مال حلال ، أو من تجارة ، أو من ميراث لم يخرج عن عرفة حتى تغفر ذنوبه ، وإذا حج من مال حرام فلَبّى ، قال الرب : لا لبيك ولا سعديك ثم يلف ويضرب بها وجهه.(الديلمي ,كنز العمال)

கடமையான ஹஜ்ஜை முடித்தவர் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது ஹஜ் செய்வது நல்லது

عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: " يقول الرب عزوجل إن عبدا أوسعتُ عليه في الرزق فلم يَعُد إليّ في كل أربعة أعوام لَمَحْرُوم)  هذا الحديث مشهور من حديث العلاء بن المسيب بن رافع الكاهلي الكوفي من أولاد المحدثين، روى عنه غير واحد، منهم من قال: في كل خمسة أعوام، (تفسير القرطبي)

கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள், தள்ளாத வயதுடைய தன் பெற்றோருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றலாம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري

ஃபழ்ல் ரழி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து பயணித்த போது ஒரு பெண் வந்தார். அப்பெண்ணை ஃபழ்ல் ரழி அவர்கள் பார்த்த போது அந்தப் பெண்ணும்  ஃபழ்ல் ரழி அவர்களைப் பார்க்க ஆரம்பித்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபழ்ல் ரழி அவர்களின் முகத்தை வேறு பக்கமாக திருப்பி விட்டு அந்தப் பெண்ணும் அவரைப் பார்க்க முடியாதவாறு செய்து விட்டார்கள். அதற்குப் பின்பு அந்தப் பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே வசதியுள்ளவர்களின் மீது அல்லாஹ் ஹஜ்ஜை கடமையாக்கி உள்ளான். என்னுடைய தந்தை மீது ஹஜ் கடமை உள்ளது. ஆனால் அவரை மிகவும் முதியவராக, வாகனத்தில் ஏற முடியாதவராக நான் காண்கிறேன். அவருக்காக நான் ஹஜ்ஜுச் செய்யலாமா என்று கேட்டபோது ஆம் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي مَاتَ وَلَمْ يَحُجَّ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَى أَبِيكَ دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَدَيْنُ اللَّهِ أَحَقُّ رواه النسائ  عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ قَالَ مَنْ شُبْرُمَةُ قَالَ أَخٌ لِي أَوْ قَرِيبٌ لِي قَالَ حَجَجْتَ عَنْ نَفْسِكَ قَالَ لَا قَالَ حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ رواه ابوداود

வசதி உள்ளவர்கள் தன் குடும்பத்தினரையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வது நல்லது.

عن طلحة يعني ابن مصرف ، قال :  مِنْ أخلاق الصالحين أن يحجوا بأهليهم وأولادهم  رواه البيهقي في شعب الايمان

வருடம் தவறாமல் ஹஜ்ஜூக்குச் செல்பவர்களால் புதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பது நல்லது.

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم :حجة لمن لم يحج خير من عشر غزوات (أخبار مكة للفاكهي)

ஹஜ் செய்யும் ஆர்வம் இருந்தும் வசதி குறைவாக உள்ளவருக்கு உதவி செய்து ஹஜ் செய்ய வைப்பதின் நன்மை

عن زيد بن خالد الجهني رضي الله عنه، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  من فطر صائما ، أو أحَجَّ رجلا ، أو جهز غازيا أو خلفه في أهله فله مثل أجره  رواه البيهقي في شعب الايمان

ஹஜ்ஜுடைய நன்மைக்கு ஈடான மற்ற நற்காரியங்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير

யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். மேலும் அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.         

عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال :  من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان

ஹஸன் ரழி தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழி அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள். அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழி அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழி அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.                                            

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ (ترمذي

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَا ابْنَ آدَمَ اكْفِنِي أَوَّلَ النَّهَارِ بِأَرْبَعِ رَكَعَاتٍ أَكْفِكَ بِهِنَّ آخِرَ يَوْمِكَ (أحمد

ஆதமின் மகனே முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்தைக் கொண்டு எனக்கு நீ போதுமாக்கி வை.

 அன்று பகல் முடியும் வரை உன்னை நான் பாதுகாத்துக் கொள்வேன்.

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْفَجْرَ قَعَدَ فِي مُصَلَّاهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ  (ترمذي

எவர் அதிகாலை ஃபஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் முடித்து விட்டு அதே இடத்தில் அமர்ந்து இஷ்ராக் வரை திக்ரில் ஈடுபட்டு, பிறகு இரண்டு ரக்அத் தொழுவாரோ அவருக்கு பரிபூரணமான ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும்.

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْثًا قِبَلَ نَجْدٍ فَغَنِمُوا غَنَائِمَ كَثِيرَةً وَأَسْرَعُوا الرَّجْعَةَ فَقَالَ رَجَلٌ مِمَّنْ لَمْ يَخْرُجْ مَا رَأَيْنَا بَعْثًا أَسْرَعَ رَجْعَةً وَلَا أَفْضَلَ غَنِيمَةً مِنْ هَذَا الْبَعْثِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أَدُلُّكُمْ عَلَى قَوْمٍ أَفْضَلُ غَنِيمَةً وَأَسْرَعُ رَجْعَةً قَوْمٌ شَهِدُوا صَلَاةَ الصُّبْحِ ثُمَّ جَلَسُوا يَذْكُرُونَ اللَّهَ حَتَّى طَلَعَتْ عَلَيْهِمْ الشَّمْسُ أُولَئِكَ أَسْرَعُ رَجْعَةً وَأَفْضَلُ غَنِيمَةً  (ترمذي

கருத்து- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்துக்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை வெற்றியுடன் சீக்கிரமாக நிறைய ஙனீமத் பொருட்களுடன் திரும்பியது. அப்போது அப்போரில் கலக்காத ஒருவர் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டவர்களாக இதுபோன்று  சீக்கிரமாக நிறைய ஙனீமத் பொருட்களுடன் திரும்பிய வேறு படையை நாங்கள் கண்டதில்லை என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தப் படை இவ்வளவு சீக்கிரமாகவும் நிறைய வெகுமதிகளுடன் திரும்பியதால் எவ்வளவு இலாபங்களை அடைவார்களோ அதை விட அதிக இலாபத்தை அடையும்  ஒரு கூட்டத்தை அதாவது குறைந்த நேரத்தில் அதிக வெகுமதிகளை அடையும் ஒரு கூட்டத்தைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று கேட்டு விட்டு எவர் அதிகாலை ஃபஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் முடித்து விட்டு அதே இடத்தில் அமர்ந்து இஷ்ராக் வரை திக்ரில் ஈடுபடுவாரோ அவர் தான் அந்த வெகுமதிக்க்கு உரியவர் என்றார்கள்.                                                                 

ஹஜ், உம்ராவுக்குச் செல்பவர்களிடம் துஆச் செய்யும்படி சொல்வது சுன்னத். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே உம்ராவுக்கு புறப்பட்ட உமர் ரழி அவர்களிடம் அவ்வாறு கோரிக்கை வைத்தார்கள்.

عَنْ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ أَنَّهُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعُمْرَةِ فَقَالَ أَيْ أُخَيَّ أَشْرِكْنَا فِي دُعَائِكَ وَلَا تَنْسَنَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

வியாழன், 19 மே, 2022

திருமணங்களில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

 


20-05-2022

Shawwal-17

 

بسم الله الرحمن الرحيم 

திருமணங்களில்

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

 



ஷவ்வால் மாதத்தில் அதிகம் திருமணங்கள் நடப்பதை முன்னிட்டும் ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்வது நபி ஸல் அவர்களின் சுன்னத்தாக இருப்பதை வைத்தும் இந்தத் தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي قَالَ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ (مسلم

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறினார்கள் -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷவ்வால் மாதத்தில் என்னைத் திருமணம் செய்தார்கள். சில வருடங்களுக்குப் பின்பு ஷவ்வால் மாதத்தில் தான் தாம்பத்ய உறவை ஆரம்பித்தார்கள். ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்ததால் நான் எந்த விதத்திலும் மற்ற மனைவிகளை விட குறைந்து விடவில்லை. என்னை விட யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உவப்பாக இருந்துள்ளார்கள். என்று ஆயிஷா நாயகி கூறினார்கள். மேலும் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தான் சார்பில் திருமணம் செய்து வைக்கும் பெண்களை கணவனிடம் அனுப்பி வைக்கும் வைபவத்தை ஷவ்வாலில் நடத்துவதையே விரும்புவார்கள்.    

 

فيه استحباب التزويج والتزوج والدخول في شوال وقد نص أصحابنا على استحبابه واستدلوا بهذا الحديث وقصدت عائشة بهذا الكلام رد ما كانت الجاهلية عليه وما يتخيله بعض العوام اليوم من كراهة التزوج والتزويج والدخول في شوال وهذا باطل لا أصل له وهو من آثار الجاهلية كانوا يتطيرون بذلك لما في اسم شوال من الاشالة والرفع [ شرح النووي على صحيح مسلم ]

ஷவ்வால் என்ற பெயரில் ஊனம் என்ற பொருளும் இருப்பதால் அந்த வார்த்தையை பீடையாக கருதிய அறியாமைக்கால மக்கள் அம்மாதத்தில் திருமணம் செய்வதை பீடையாக கருதினார்கள். அந்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்தார்கள்.                             

 

இன்றைய காலத்திலும் சிலர் குறிப்பிட்ட சில மாதங்களில் அல்லது குறிப்பிட்ட சில கிழமைகளில் திருமணம் செய்வதை பீடையாக கருதுகின்றனர். இதுவும் அறியாமைக் காலத்தின் மூட நம்பிக்கையாகும்.                              

 

திருமணங்களை எளிமையாக நடத்துவது சுன்னத்தாகும்.

عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً (أحمد

அதற்காக யாருக்கும் தெரியாமல் நடத்துவது சுன்னத்துக்கு மாற்றமாகும்

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ (ترمذي

عَنْ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ الْجُمَحِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصْلُ مَا بَيْنَ الْحَرَامِ وَالْحَلَالِ الدُّفُّ وَالصَّوْتُ (ترمذي

ஹராமான முறையில் ஒரு பெண்ணை அடைவதற்கும் ஹலாலான முறையில் ஒரு பெண்ணை அடைவதற்கும் வித்தியாசம் தஃப் சப்தமாகும். விளக்கம்- ஹராமான முறையில் ஒரு பெண்ணை அடைபவன் அதை விளம்பரப் படுத்த மாட்டான். அது போன்றதாக திருமணம் அமைந்து விடக்கூடாது. அதே நேரத்தில் ஊரையே அழைத்து விருந்து வைக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

المراد الترغيب إلى إعلان أمر النكاح بحيث لا يخفى على الأباعد فالسنة إعلان النكاح بضرب الدف وأصوات الحاضرين بالتهنئة أوالنعمة في إنشاد الشعر المباح (مرقاة

திருமண வைபவங்களில் சலங்கை இல்லாத தஃப் அடிப்பது அக்காலத்தில் வழமையாக  இருந்துள்ளது. அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்தார்கள். மஸ்ஜிதில் வைக்கச் சொன்னதின் நோக்கங்கள் பல. 1. சுன்னத்தான நிகழ்வு மஸ்ஜிதில் நடத்துவது நல்லது. 2. மஸஜிதில் நடத்தினால் அனாச்சாரங்களும் ஆடம்பரங்களும் குறையும். 3. இன்ன ஆணுக்கும் இன்ன பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது என்று தெரிந்தால் தான் அந்தப் பெண்ணைப் பெண் பார்க்க யாரும் முயற்சிக்க மாட்டார்கள்

நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலீமா விருந்துக்கு அதிக முக்கியத்தும் தந்துள்ளார்கள்

عَنْ أَنَسٍ قَالَ مَا أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ أَوْلَمَ بِشَاةٍ (بخاري

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِهِ أَثَرُ صُفْرَةٍ فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ قَالَ كَمْ سُقْتَ إِلَيْهَا قَالَ زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ (بخاري

இக்காலத்தில் பல மாப்பிள்ளை வீட்டினர்கள் திருமண நாளின் செலவுகளை முற்றிலுமாக பெண் வீட்டாரின் தலையில் கட்டி விட்டு தாங்கள் செய்ய வேண்டிய வலீமாவை மிக மிக சுருக்கமாக நடத்தி விடுகின்றனர். நியாயப் படி திருமண நாளில் இரு வீட்டாரும் கலந்து கொள்வதால் அதை இருவரும் சேர்ந்து செலவு செய்வதே நியாயம். பெண் வீட்டார் வசதிக் குறைவாக இருந்தால் அதை முழுவதுமே மாப்பிள்ளை வீட்டார் பொறுப்பேற்றுக் கொள்வது சிறப்பு. திருமண நாளிலேயே வலீமாவையும் வைத்து இரு வீட்டார் இணைந்து செலவு செய்யும் பழக்கம் இன்று உள்ளது. அதில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சில நிபந்தனைகளுடன் அதுவும் கூடும் என்பது பல மூத்த ஆலிம்களின் ஃபத்வா.

விருந்துகளில் மிகக் கெட்ட விருந்து செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா. 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري

வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்வது சுன்னத்தாகும்

وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا  (بخاري

وعن جابر : قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا دعي أحدكم إلى طعام فليجب وإن شاء طعم وإن شاء ترك " .( مسلم

அங்கு சென்று விட வேண்டும். ஆனால் சாப்பிடுவதும் சாப்பிட முடியாத நிலையை விருந்தளிப்பவரிடம் கூறுவதும் அவர் விருப்பம்

عن ابن مسعود رضي الله تعالى عنه: أن النبي صلى الله عليه وسلم قال: (أجيبوا الداعي، ولا تردوا الهدية، ولا تضربوا المسلمين (بخاري).

عن ابن مسعود رضي الله تعالى عنهم: أن النبي صلى الله تعالى عليه وآله وسلم قال: (إذا دعي أحدكم إلى طعام فليجب، فإن كان مفطر

ا فليأكل، وإن كان صائما فليدع بالبركة) (الطبراني)   وفي أخرى للطبراني: (إذا دخل أحدكم على أخيه المسلم فأراد أن يفطر فليفطر إلا أن يكون صومه رمضان أو قضاء رمضان أو نذرا).

அழைக்கப்பட்ட விருந்துக்காக நஃபிலான நோன்பை விடுவது தவறல்ல

அழைக்கப்படாத விருந்துக்குச் செல்வது பாவமாகும்

عَنْ نَافِعٍ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دُعِيَ فَلَمْ يُجِبْ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ وَمَنْ دَخَلَ عَلَى غَيْرِ دَعْوَةٍ دَخَلَ سَارِقًا وَخَرَجَ مُغِيرًا  (أبوداود

அழைக்கப்படாத ஒருவர் விருந்துக்கு வந்து அதை பிறகு  விருந்து கொடுப்பவர் அனுமதித்தால் கூடும்.

عَنْ أَبِي مَسْعُودٍ عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ يُكَنَّى أَبَا شُعَيْبٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْجُوعَ فَأَتَيْتُ غُلَامًا لِي قَصَّابًا فَأَمَرْتُهُ أَنْ يَجْعَلَ لَنَا طَعَامًا لِخَمْسَةِ رِجَالٍ قَالَ ثُمَّ دَعَوْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَامِسَ خَمْسَةٍ وَتَبِعَهُمْ رَجُلٌ فَلَمَّا بَلَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَابَ قَالَ هَذَا قَدْ تَبِعَنَا إِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ وَإِلَّا رَجَعَ فَأَذِنَ لَهُ  (مسند احمد

அபூ ஷுஐப் ரழி அவர்கள் நபி ஸல் அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியை உணரந்து தன்னுடைய பணியாளரிடம் விருந்து தயார் செய்யச் சொல்லி குறிப்பிட்ட ஐந்து நபர்களை விருந்துக்கு அழைத்தார். அவர்களில் நபி ஸல் அவர்களும் ஒருவர். அவ்வாறு அவரது அழைப்பின் பேரில் நபி ஸல் அவர்கள் வந்த போது அழையா விருந்தாளியாக மற்றொருவர் நபிகளாரின் பின்னால் வந்தார். நபி ஸல் அவர்கள் வீட்டுக்கு அருகே வந்தவுடன் அபூ ஷுஐப் ரழி அவர்களிடம் இவர் எங்களைப் பின் தொடர்ந்து வந்தார். நீங்கள் விரும்பினால் இவரை அனுமதிக்கிறோம் என்ற போது அந்த சஹாபீ  அந்த மனிதருக்கும் சேர்ந்து அனுமதி தந்தார்.

சில நேரங்களில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் நாங்கள் இத்தனை பேர் வருவோம் என கட்டாயப்படுத்தி அதற்கான  பரிபூரண சம்மதம் இல்லாமல் பெண் வீட்டார் நிர்பந்த த்தின் அடிப்படையில் செலவு செய்தால் அந்த விருந்தில் பெண் வீட்டாரின் அழைப்பின்றி கலந்து கொள்வது நல்லதல்ல.

 

ஒரே நேரத்தில் இரண்டு பேர் விருந்துக்கு அழைத்தால் ஏதேனும் ஒன்றில் மட்டுமே நம்மால் கலந்து கொள்ள முடியும் என்றிருந்தால் அதில் யார் நெருங்கிய அண்டை வீட்டாராக இருப்பாரோ அவரது விருந்தில் கலந்து கொள்வது நல்லது

இருவரில் ஒருவர் முதலில் அழைத்திருந்தால் யார் முதலில் அழைத்தாரோ அவரது விருந்தில் கலந்து கொள்ளலாம்.

عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اجْتَمَعَ الدَّاعِيَانِ فَأَجِبْ أَقْرَبَهُمَا بَابًا فَإِنَّ أَقْرَبَهُمَا بَابًا أَقْرَبَهُمَا جِوَارًا وَإِنْ سَبَقَ أَحَدُهُمَا فَأَجِبْ الَّذِي سَبَقَ (أبو داود

 

வலீமா விருந்தில் அனாச்சாரங்கள் நடந்தால் கலந்து கொள்வது கூடுமா

وفي الهداية  قال ومن دعى إلي وليمه أو طعام فوجد ثمة لعبا أو غناء فلا بأس بأن يقعد ويأكل قال أبو حنيفة رحمه الله ابتليت بهذا مرة فصبرت وهذا لأن أجابة الدعوة سنة قال عليه الصلاة والسلام من لم يجب الدعوة فقد عصى أبا القاسم فلايتركها لما اقترنت به من البدعة من غيره كصلاة الجنازة واجبة الإقامة وإن حضرتها نياحة فإن قدر على المنع منعهم وإن لم يقدر يصبر وهذا إذا لم يكن مقتدى به فإن كان مقتدى ولم يقدر على منعهم يخرج ولا يقعد لأن في ذلك شين الدين وفتح باب المعصية على المسلمين والمحكى عن أبي حنيفة رحمه الله في الكتاب كان قبل أن يصير مقتدى به ولو كان ذلك على المائدة لا ينبغي أن يقعد وإن لم يكن مقتدى لقوله تعالى { فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين } وهذا كله بعد الحضور ولو علم قبل الحضور لا يحضر لأنه لم يلزمه حق الدعوة بخلاف ما إذا هجم عليه لأنه قد لزمه  (هداية

சுருக்கம்- ஒரு விருந்தில் அனாச்சாரங்கள் நடப்பது தெரியாத நிலையில் அங்கு ஒருவர் சென்று விட்டால் வேறு வழியின்றி அங்கு சாப்பிடுவது சாதாரண மனிதருக்கு அதாவது அவாம்களுக்கு அது தவறல்ல. ஆனால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நபராக இருந்தால் அவர் அதைப் புறக்கணிக்க வேண்டும். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் ஒரு நேரத்தில் இது போன்று சோதிக்கப்பட்டார்கள். வேறு வழியின்றி அங்கு சாப்பிட்டார்கள். இது அவர்கள் பிரபலமாக ஆகுவதற்கு முன்பு நடந்த சம்பவமாகும். மக்களிடம் பிரபலம் அடைந்து முன்னுதாரணமான நபராக ஆன பின்பு அவர்கள் இது போன்ற விருந்துகளில் கலந்து கொள்ள்ளவில்லை. அங்கு செல்லும் முன்பே அனாச்சாரங்கள் நடப்பது தெரிந்தால் அந்த விருந்தில் கலந்து கொள்வது கட்டாயமில்லை. அனாச்சாரங்கள் நடப்பது தெரியாத நிலையில் அங்கு ஒருவர் சென்று விட்டால் வேறு வழியின்றி அங்கு சாப்பிடுவது சாதாரண மனிதருக்கு அதாவது அவாம்களுக்கு அது தவறல்ல. அதுவும் கூட அனாச்சாரங்கள் நடப்பது வேறு சபையில் இவர் சாப்பிடுவது இன்னொரு பகுதியில் என்றிந்தால் தான். இவர் உணவு உண்ணும் இடத்திலேயே நடந்தால் அதில் கலந்து கொள்ளக்கூடாது.

தன் மகள் விருந்துக்கு அழைத்த போது மகள் வீட்டில் உருவப்படமுள்ள ஸ்கிரீனைப் பார்த்து திரும்பி விட்டார்கள்

إِجَابَةِ الدَّعْوَةِ إِذَا حَضَرَهَا مَكْرُوهٌ عَنْ سَفِينَةَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ رض أَنَّ رَجُلًا أَضَافَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَتْ فَاطِمَةُ لَوْ دَعَوْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَ مَعَنَا فَدَعُوهُ فَجَاءَ فَوَضَعَ يَدَهُ عَلَى عِضَادَتَيْ الْبَابِ فَرَأَى الْقِرَامَ(5) قَدْ ضُرِبَ بِهِ فِي نَاحِيَةِ الْبَيْتِ فَرَجَعَ فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ الْحَقْهُ فَانْظُرْ مَا رَجَعَهُ فَتَبِعْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا رَدَّكَ فَقَالَ إِنَّهُ لَيْسَ لِي أَوْ لِنَبِيٍّ أَنْ يَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا(6) ابوداود3263

ஹராமான தொழில் செய்பவர்களின் விருந்தில் கலந்து கொள்வது கூடுமா

عَنْ عِمْرَانَ بن حُصَيْنٍ، قَالَ:"نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ إِجَابَةِ طَعَامِ الْفَاسِقِينَ". (طبراني

ஒரு திருமணத்திற்கே இரண்டுக்கும் மேற்பட்ட விருந்துகள் வைக்கலாமா

عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « طَعَامُ أَوَّلِ يَوْمٍ حَقٌّ وَطَعَامُ يَوْمِ الثَّانِى سُنَّةٌ وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ».(ترمذي

      முதல் நாள் விருந்து தேவையானது. இரண்டாம் நாள் விருந்து சுன்னத். மூன்றாம் நாள் விருந்து பெருமைக்காக செய்யப்படுவதாகும். பெருமையடிப்பவரை அல்லாஹ் மறுமையில் கேவலப்படுத்துவான்.

أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ دُعِيَ أَوَّلَ يَوْمٍ فَأَجَابَ وَدُعِيَ الْيَوْمَ الثَّانِيَ فَأَجَابَ وَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ فَلَمْ يُجِبْ وَقَالَ أَهْلُ سُمْعَةٍ وَرِيَاءٍ  ابوداود

 

விருந்து முடிந்தவுடன் விருந்தாளியின் வீட்டில் நீண்ட நேரம் இருந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பது கூடாது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنْكُمْ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ (53)

ஒன்று சேர்ந்து சாப்பிடுவது நல்லது.

الاجتماع الي الطعام   حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ حَدَّثَنِي وَحْشِيُّ بْنُ حَرْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رض أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبارك لكم فيه أبو داود 3272      قَالَ أَبُودَاوُد إِذَا كُنْتَ فِي وَلِيمَةٍ فَوُضِعَ الْعَشَاءُ فَلَا تَأْكُلْ حَتَّى يَأْذَنَ لَكَ صَاحِبُ الدَّارِ 3272

உணவைக் குறை கூறக்கூடாது.

ذم الطعام  عَنْ أَبِي هُرَيْرَةَرض قَالَ مَا عَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ إِنْ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِنْ كَرِهَهُ تَرَكَه ابوداود 3271

 

மஸ்ஜித்கள் தோறும் மணமக்களுக்கு கவுன்சிலிங் தருவது காலத்தின் கட்டாயம்

எதற்கெல்லாமோ இன்றைக்கு கவுன்சிலிங் பயிற்சிகள் தரப்படுகிறது ஆனால் கணவன் மனைவி இருவரும் இஸ்லாமிய அடிப்படையில் எப்படி அனுசரித்து வாழ வேண்டும் என்ற பயிற்சி இல்லாத தால் பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. எனவே மஸ்ஜித்கள் தோறும் மணமக்களுக்கு கவுன்சிலிங் தருவது காலத்தின் கட்டாயம்

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...