வியாழன், 31 மார்ச், 2022

கோடையில் ரமழான்- பெரும் பாக்கியம்

 


01-04-2022

ஷஃபான்- 28

 

بسم الله الرحمن الرحيم  

கோடையில் ரமழான்- பெரும் பாக்கியம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்







ரமழானுக்காக நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வதில் பல விதம் உண்டு.

1. இந்த முறை கடும் வெயில் காலத்தில் ரமழான் வருகிறது. நம்முடைய முன்னோர்களில் பலர் கடும் வெயில் காலத்தில் நோன்பு வைப்பதை மிகவும் விரும்பியுள்ளார்கள். காரணம் சிரமப்பட்டு செய்யும் எந்த ஒரு அமலுக்கும் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த நற்கூலி உண்டு

புதிதாக குர்ஆனை கற்றுக் கொண்டு சிரமப்பட்டு எழுத்துக்கூட்டி ஓதுபவரின் நன்மை.

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ  (مسلم

குர்ஆனை அழகாக ஓதுபவர் அந்தஸ்தில் மலக்குகளுடன் ஒப்பாகிறார். அல்லது மலக்குகள் போல் காரியம் இலகுவாக்கப் படுகிறார். புதிதாக குர்ஆனை கற்றுக் கொண்டு சிரமப்பட்டு எழுத்துக்கூட்டி ஓதுபவருக்கு இரு மடங்கு நன்மை.

கடும் குளிரிலும் சிரமப்பட்டு அதிகாலை எழுந்து  உளூச் செய்து தொழுபவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (مسلم) باب فَضْلِ إِسْبَاغِ الْوُضُوءِ-كتاب الطهارة

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் அமல் கடும் சிரமமான நேரத்திலும் உளூவைப் பரிபூரணமாகச் செய்வது.

மஸ்ஜிதின் பக்கம் அதிகம் எடுத்து வைக்கும் எட்டுகள். ஒரு தொழுகை முடிந்து மற்றொரு தொழுகைக்காக காத்திருப்பது

إسباغ الوضوء على المكاره أي تثنية الوضوء وتثليثه في زمان البرد الشديد ، وذلك أن الإنسان يكره ويجد المشقة والعناء بصب الماء على الجسد فإذا كرر الصب في الوضوء فقد أسبغ ووفي وأكمل ولذلك مُدح ووُعد بهذا الأجر والثواب (شرح الترمذي)

கடும் குளிர் நேரத்தில் உடம்பில் தண்ணீர் படுவது சிரம மாகவே இருக்கும். ஆனாலும் அதை பரிபூரணமாக நிறைவேற்றுபவர் அதிக நன்மை வழங்கப்படுவார். காரணம் அதை அல்லாஹ்விற்காக செய்கிறார்.                 

إسباغ الوضوء على المكاره يعني: في السبرات في البرد يُسبغ الإنسان الوضوء مع أنه يكره إيذاءه بهذا الماء البارد ن لكنه يفعله ابتغاء وجه الله هذا من أسباب دخول الجنة كذلك الإنسان عندما يسافر للحج او للجهاد  هذا مكروهاً عنده ، لكنه كما قال تعالى:{وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ (216البقرة (شرح كتاب الرقاق) قيل: ومنها الجد في طلب الماء مع إعوازه وشراءه بالثمن الغالي(مرعاة شرح مشكاة)

ஆசையுடன் வளர்த்த ஆட்டை குர்பானி தருவது சிரமம். அதை ஹாபீல் செய்ததால் சிறந்த நற்கூலி தரப்பட்டது

عَنْ عَبْد اللَّه بْن عَمْرو قَالَ إِنَّ اِبْنَيْ آدَم اللَّذَيْنِ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدهمَا وَلَمْ يُتَقَبَّل مِنْ الْآخَر كَانَ أَحَدهمَا صَاحِب حَرْث وَالْآخَر صَاحِب غَنَم وَإِنَّهُمْ أُمِرَا أَنْ يُقَرِّبَا قُرْبَانًا وَإِنَّ صَاحِب الْغَنَم قَرَّبَ أَكْرَمَ غَنَمِهِ وَأَسْمَنَهَا وَأَحْسَنَهَا طَيِّبَةً بِهَا نَفْسُهُ وَإِنَّ صَاحِب الْحَرْث قَرَّبَ أَشَرَّ حَرْثِهِ الْكَوْدَن وَالزُّوَان غَيْرَ طَيِّبَةٍ بِهَا نَفْسُهُ وَأَنَّ اللَّه عَزَّ وَجَلَّ تَقَبَّلَ قُرْبَان صَاحِب الْغَنَم وَلَمْ يَتَقَبَّل قُرْبَان صَاحِب الْحَرْث(وفي رواية فَصَعِدَا الْجَبَل فَوَضَعَا قُرْبَانهمَا)فَقَبِلَ اللَّه الْكَبْش فَحَزَنَهُ فِي الْجَنَّة أَرْبَعِينَ خَرِيفًا3 وَهُوَ الْكَبْش الَّذِي ذَبَحَهُ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام(تفسير ابن كثير)

சிரமத்துடன் செய்தால் தான் தியாகம் வெளிப்படும் என்பதால் குர்பானிப் பிராணியை முன்பே வாங்கி வளர்ப்பது சுன்னத்

 وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)سورة الحج عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قال "تَعْظِيمهَا اِسْتِسْمَانهَا وَاسْتِحْسَانهَا

{تفسير القرطبي} وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ الْبُخَارِيّ

ஏனெனில் நாம் தரப்போகும் குர்பானிப் பிராணியை முன்பே வாங்கி வளர்த்தும்போது அது நம்மிடம் பழகி விடும். நம் மனதை ஈர்த்து விடும். இத்தகைய சூழ்நிலையில் அதை நாம் குர்பானி கொடுக்கும்போது அங்கு தான் தியாகம் அதிகம் வெளிப்படும். எனக்குப் பிரியமான எதுவாக இருப்பினும் அதை அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வேன் என்ற மனோநிலை வரும். அன்று ஹாபீல் கொடுத்த குர்பானியும் அவ்வாறு தான். தனக்குப் பிரியமான ஆட்டையே அவர் தியாகம் செய்தார்

வயதையும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் 80 வயதிலும் கத்னா செய்து கொண்ட இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

عَنْ أَبِي هُرَيْرَةَرَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالْقَدُّومِ(بُخاري)قدومவெட்டும் கருவி

சிரமங்களைத் தாண்டியே சுவனம் உண்டு. அந்த சிரமங்கள் என்பது கூட பொதுமக்களைக் கவனித்துத் தான். நல்லடியார்களுக்கு அதுவே சுகமானதாக இருக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُجِبَتْ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ (بخاري)كتاب الرقاق ولأن عمل الخير مكروه للنفوس الأمارة بالسوء فتجد كثيراً من الناس عند عمل الخير يُرغم نفسه ويُكرهها على ذلك ولكن هذا يوصله إلى الجنة ومع هذا إذا تجاوز الإنسان هذه المكاره صارت بالنسبة إليه محابّ وصار لا يأنس إلا بهذه الأعمال كما قال النبي عليه الصلاة والسلام:( جُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ(نسائ) وقال بعض السلف: لو يعلم الملوك وأبناء الملوك ما نحن فيه لجالدونا عليه بالسيوف فالإنسان إذا اعتاد فعل الطاعة مع الإخلاص والمتابعة صارت الطاعة أحب شيء إليه ذَلِكَ (شرح كتاب الرقاق)

அல்லாஹ்வின் பொருத்தம் கிடைப்பதால் நல்லடியார்களுக்கு அந்த சிரமங்களே சுகமான சந்தோஷமாக மாறி விடும். முன்னோர்களில் ஒருவரின் கூறியது. முஜாஹதா மூலம் சிரமப்பட்டு நாங்கள் செய்யும் அமல்களால் எங்களுக்குக் கிடைக்கும் சந்தோஷங்களைப் பற்றி மிகப் பெரும் மன்னர்களும் அவர்களின் வாரிசுகளும் அந்த இன்பங்களைப் பெறுவதற்காக எங்களிடம் யுத்தம் செய்யத் தயாராகி விடுவார்கள்.                      

அக்காலத்தில் எந்த நாட்டு அரசாங்கம் அதிக வளங்களை வைத்துள்ளதோ அந்த நாட்டுடன் மற்ற நாடுகள் போர் தொடுப்பது வழமை. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததும் அந்த வகையில் தான்.          

வெயில் காலத்தில் நோன்பு வைப்பது  பற்றி...

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ قال لِي عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: " عَلَيْكَ بِخِصَالِ الْإِيمَانِ: الصَّوْمُ فِي الصَّيْفِ، وَضَرْبُ الْأَعْدَاءِ بِالسَّيْفِ، وَتَعْجِيلُ الصَّلَاةِ فِي يَوْمِ الْغَيْمِ، وَإِبْلَاغُ الْوُضُوءِ فِي الْيَوْمِ الشَّاتِ، وَالصَّبْرُ عَلَى الْمُصِيبَاتِ، وَتَرَكُ رَدْغَةِ الْخَبَالِ "، قَالَ: وَمَا رَدْغَةِ الْخَبَالِ قَالَ: " شُرْبُ الْخَمْرِ " (شعب الإيمان

ஹழ்ரத் உமர் ரழி அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்தார்கள். ஈமானுடைய நற்குணங்களை நீ அவசியமாக்கிக் கொள். 1.வெயில் காலத்தில் நோன்பு வைத்துப் பழகு.. 2.எதிரிகளிடம் போரில் ஈடுபடு. 3.மேக மூட்டத்தின் போது தொழுகையை பிற்படுத்தாமல் தொழு. 4.குளிர் காலத்திலும் உளூவைப் பரிபூரணமாக நிறைவேற்று. 5.துன்பங்களின் போது பொறுமையாக இரு. 6.மதுவை  அறவே விட்டு விடு

عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سِتُّ خِصَالٍ مِنَ الْخَيْرِ: جِهَادُ أَعْدَاءِ اللهِ بِالسَّيْفِ، وَالصَّوْمُ فِي يَوْمِ الصَّيْفِ، وَحُسْنُ الصَّبْرِ عِنْدَ الْمُصِيبَةِ، وَتَرْكُ الْمِرَاءِ وَأَنْتَ مُحِقٌ، وَتَبْكِيرُ الصَّلَاةِ فِي يَوْمِ الْغَيْمِ، وَحُسْنُ الْوُضُوءِ فِي أَيَّامِ الشِّتَاءِ (شعب الإيمان

பெருமை கொள்ளத் தகுதி இருந்தும் பெருமை கொள்ளாமல் இருப்பது என்ற வாசகம் மட்டும் கூடுதலாக உள்ளது

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " ثَلَاثٌ مِنَ الْإِيمَانِ: أَنْ يَحْتَلِمَ الرَّجُلُ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ فَيَقُومُ فَيَغْتَسِلُ، لَا يَرَاهُ إِلَّا اللهُ، وَالصَّوْمُ فِي الْيَوْمِ الْحَارِّ، وَصَلَاةُ الرَّجُلِ فِي الْأَرْضِ الْفَلَاةِ " (شعب الإيمان

ஹழ்ரத் அபூஹுரைரா ரழி கூறினார்கள். மூன்று விஷயங்கள் ஈமானின் நிறைவை அடையாளப்படுத்தும். 1.குளிர் காலத்திலும் குளிப்புக் கடமையாகி அதிகாலையில் குளித்து விட்டுத் தொழுவது. 2.வெயில் காலத்தில் நோன்பு வைப்பது 3.ஆளில்லாத வனாந்தரத்தில் ஒருவர் தொழுகையில் ஈடுபடுவது. அதாவது யாரும் பார்க்காத நிலையிலும் தொழுவது

كان أبو الدرداء رضي الله عنه يقول: صلُّو في ظلمة الليل ركعتين لظلمة القبور، صوموا يومًا شديدًا حرَّهُ لحرِّ يوم النشور، تصدقوا بصدقة السرِّ لهول يوم عسير. -  عن سفيان الثوري قال قام أبو ذر الغفاري عند الكعبة فقال يا أيها الناس أنا جندب الغفاري هلموا إلى الأخ الناصح الشفيق فاكتنفه الناس فقال أرأيتم لو أن أحدكم أراد سفرا أليس يتخذ من الزاد ما يصلحه ويبلغه قالوا بلى قال فسفر 1 طريق القيامة أبعد ما تريدون فخذوا منه ما يصلحكم قالوا ما يصلحنا قال حجوا حجة لعظام الأمور صوموا يوما شديدا حره لطول النشور صلوا ركعتين في سواد الليل لوحشة القبور كلمة خير تقولها أو كلمة سوء تسكت عنها لوقوف يوم عظيم تصدق بمالك لعلك تنجو من عسيرها اجعل الدنيا مجلسين مجلسا في طلب الآخرة ومجلسا في طلب الحلال والثالث يضرك ولا ينفعك لا تريده اجعل المال درهمين درهما تنفقه على عيالك من حله ودرهما تقدمه لآخرتك والثالث يضرك ولا ينفعك لا تريده ثم نادى بأعلى صوته يا أيها الناس قد قتلكم حرص لا تدركونه أبدا  (حلية الاولياء

வெயில் காலத்தில் நோன்பு வைக்க முடியவில்லையே என்று கவலைப்பட்ட சஹாபிகள்

عن سعيد بن جبير قال لما أصيب ابن عمر قال : ما تركت خلفي شيئا من الدنيا آسي عليه غير ظما الهواجر وغير مشي إلى الصلاة.

சகராத் நேரத்தில் இரண்டு விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார்கள். 1.வெயில் காலத்தில் நோன்பு வைக்கும் பாக்கியம் இனி கிடைக்காதே என்றும் தொழுகைக்காக நடந்து செல்லும் பாக்கியம் இனி கிடைக்காதே

عَنْ قَتَادَةَ، أَنَّ عَامِرَ بْنَ عَبْدِ قَيْسٍ، لَمَّا حَضَرَهُ الْمَوْتُ جَعَلَ يَبْكِي، فَقِيلَ لَهُ: مَا يُبْكِيكَ ؟، قَالَ: " مَا أَبْكِي جَزَعًا مِنَ الْمَوْتِ وَلَا حِرْصًا عَلَى الدُّنْيَا، وَلَكِنْ أَبْكِي عَلَى ظَمَأِ الْهَوَاجِرِ عَلَى قِيَامِ اللَّيْلِ فِي الشِّتَاءِ " ((شعب الإيمان

முஆத் ரழி அவர்கள் மரண நேரத்தில் அழுத போது அதற்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மவ்த்தை நினைத்து வருந்தவில்லை. மாறாக வெயில் காலத்தில் நோன்பு வைக்கும் பாக்கியம் இனி கிடைக்காதே என்றும் கடும் குளிரில் தொழுகைக்காக நடந்து செல்லும் பாக்கியம் இனி கிடைக்காதே என்று நினைத்து அழுகிறேன் என்றார்கள்.   

கடும் வெயில் காலத்தில் நரகத்தின் உஷ்ணம் நம் சிந்தனைக்கு வர வேண்டும்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَتْ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الزَّمْهَرِيرِ(بخاري) باب صِفَةِ النَّارِ وَأَنَّهَا مَخْلُوقَةٌ – كتاب بدء الخلق وفي رواية للبيهقي) فَأَشَدَّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ فَمِنْ حَرِّهَا وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْبَرْدِ فَمِنْ زَمْهَرِيرِهَا- (الزَّمْهَرِير : شِدَّة الْبَرْد)

கருத்து-வருடத்திற்கு ஒரு முறை நரகம் தன்னுடைய வைப்பத்தை தானே தாங்க முடியாமல் மூச்சு விடும். (அல்லாஹ்வின் அனுமதி பெற்று தன்னுடைய சிறு பகுதியை வெளியிடும்.) அதன் தாக்கத்தையே கோடை காலத்தில் நாம் அனுபவிக்கிறோம். அதேபோல வருடத்தில் மற்றொரு முறை நரகம் தன்னுடைய குளிரை தானே தாங்க முடியாமல் மூச்சு விடும். (அல்லாஹ்வின் அனுமதி பெற்று தன்னுடைய சிறு பகுதியை வெளியிடும்.) அதன் தாக்கத்தையே குளிர் காலத்தில் நாம் அனுபவிக்கிறோம்.                         

படிப்பினை -புஹாரீ இமாம் அவர்கள் நரகம் ஏற்கெனவே படைக்கப்பட்டு விட்டது என்ற பாடத்தில் இதற்கு முந்தைய ஹதீஸை கொண்டு வருகிறார்கள். அதன் படி எங்கோ இருக்கும் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி வெப்பமும், குளிரும் பூமி வரை பரவி நம்மை வாட்டி வதைக்கிறது என்றால் நரகத்தின் வெப்பம், அல்லது குளிர் எப்படி இருக்கும் என்ற சிந்தனையை மக்களுடைய உள்ளத்தில் உண்டாக்க வேண்டியது நம் கடமையாகும். இந்த வெயிலை தாங்க முடியாமல் வாகனங்களிலும் வீடுகளிலும் மஸ்ஜித்களிலும் எப்போதும் A.C. உடன் அமர்ந்திருக்கிறோம் என்றால்  அந்த நரகத்தின் கடும் வெயிலை விட்டும் நம்மை பாதுகாக்க எதை நாம் தயாரித்து வைத்திருக்கிறோம்.

நரகத்தின் பனியில் ஒருநாள் வேதனைப்படுவது நரகத்தின் நெருப்பில் ஆயிரம் வருடம் வேதனைப்படுவதை விட பயங்கரமானது

الزمهرير:البرد القاطع وقال مقاتل بن حيان: هو شيء مثل رؤوس الإبر ينزل من السماء في غاية البرد وقال ابن مسعود : هو لون من العذاب وهو البرد الشديد حتى ان أهل النار إذا ألقوا فيه سألوا الله أن يعذبهم بالنارألف سنة أهون عليهم من عذاب الزمهرير يوما واحدا (قرطبي)

2.ரமழானுக்காக தயாராகுவதில் உளத்தூய்மை மிக முக்கியம்.

உளத்தூய்மையுடன் ஒரு நாள் நோன்பு வைத்தாலும் அவருக்கு கிடைக்கும் சிறப்பு

عَنْ أَبِي هُرَيْرَةَ  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ تَعَالَى بَعَّدَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ جَهَنَّمَ كَبُعْدِ غُرَابٍ طَارَ وَهُوَ فَرْخٌ حَتَّى مَاتَ هَرِمًا (احمد)

விளக்கம்- குஞ்சாக இருக்கும்போது பறக்க ஆரம்பித்த காகம் சாகும் வரை பறந்து கொண்டேயிருந்தால் எவ்வளவு தூரம் பறக்குமோ அவ்வளவு தூரம் அல்லாஹ் நரகத்தை அவரை விட்டும் தூரமாக்குவான்

3. ரமழானுக்காக செயல் ரீதியாக நாம் தயாராகுவது பற்றி..

ரமழானில் நிறைய அமல் செய்வதற்காக நம்முடைய சில காரியங்களை தள்ளிப்போட வேண்டும். துன்யாவுடைய எத்தனையோ காரியங்களில் நம்மிடம் அட்ஜஸ்மென்ட் இருக்கிறது ஒரே குடும்பத்தில் பல திருமணம் என்று வரும்போது ஒருவருக்கொருவர் அனுசரித்து தேதியை மாற்றி வைத்துக் கொள்கிறோம் பிள்ளைகளின் லீவுக்கு தகுந்த மாதிரி நம்முடைய வைபவங்களை நாம் மாற்றி அமைத்துக் கொள்கிறோம் இப்படி துன்யாவின் சில நன்மைகளுக்காக சில விஷயங்களை நாம் அனுசரித்துப் போகிறோம் அதேபோல் மறுமையின் நீடித்த நலனுக்காக துன்யாவுடைய சில விஷயங்களை மாற்றி அமைக்க வேண்டும் உதாரணமாக சாதாரண நாட்களில் 10 மணிக்கு மூட வேண்டிய கடையை ரமழானில் 8 மணிக்கே மூட வேண்டும். ஆனால் இன்றைக்கு பலர் முதல் தராவீஹ் 17-ம் தராவீஹ், 27-ம் தராவீஹ் இவ்வாறு மூன்று இரவுகளில் மட்டும் சீக்கிரம் கடையை மூடி விட்டு வந்து தொழுதால் மாதம் முழுவதும் தராவீஹ் தொழுததாக கற்பனை செய்து கொள்கிறார்கள். ரமழானுக்காக மற்ற நாட்களிலும் வியாபார நேரத்தைக் குறைப்பதற்கு அவர்களுக்கு மனம் வருவதில்லை

 பலருக்கு ஜும்ஆ பாங்கு சொன்ன பிறகும் வியாபாரத்தை விட மனம் வருவதில்லை. கண்ணியப்படுத்த வேண்டிய ஒரு நாளை அலட்சியப்படுத்தியதால் (அதாவது சனிக்கிழமையை பெருநாளாக கடைபிடிப்பதற்கும், அன்று முழுவதும் வியாபாரத்தை விட்டு விடுவதற்கும் ஏவப்பட்ட யூதர்களில் ஒரு சாரார் அதை மீறியதால்) குரங்குகளாக உருமாற்றப்பட்டனர்

وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ (163) وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ (164) فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ (165) فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (166الاعراف)

சனிக்கிழமை பெருநாள் என்பதால் அன்று முழுவதும் மீன் பிடிக்கக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டான் ஆனால் சனிக்கிழமை தான் மீன்கள் அதிகமாக கிடைக்கும். மற்ற நாட்களில் மீன்களின் வருகை குறைவாகவே இருக்கும். எனினும் அவர்கள் ஆரம்பத்தில் அந்தக் கட்டளையை முறையாக கடைபிடித்தார்கள். பின்பு அவர்களில் ஒரு நபர் சனிக்கிழமையில் ஒரு பெரிய மீனைப் பிடித்து அதை கயிற்றால் கட்டி, அந்தக் கயிற்றின் மறுமுனையை கரையில் ஒரு கொம்பில் கட்டி வைத்து விட்டு மீனை தண்ணீருக்குள்ளேயே மிதக்க விட்டு விட்டு அடுத்த நாள் வந்து அதை பிடித்தார். கேட்டால் நான் நேற்று கட்டி வைத்தாலும் இன்றைக்குத் தானே அதை பிடிக்கிறேன் என்று கூறினார். காலப்போக்கில் இதை பலரும் கடை பிடித்தனர். இதுவரை செய்த தந்திரத்தால் அல்லாஹ்விடமிருந்து எந்த வேதனையும் வரவில்லை என்று தைரியமடைந்த அவர்கள் சனிக்கிழமையிலேயே மீன் பிடிக்க ஆரம்பித்தனர் இதை நல்லவர்கள் கண்டித்தும் கேட்கவில்லை. அந்த நல்லவர்கள் உங்களுடன் சேர்ந்து வசித்தால் எங்களுக்கும் வேதனை வந்து விடும் என்று தம் வீடுகளை மாற்றியமைத்துக் கொண்டனர். ஆனால் வியாபாரம் செய்யும் இடம் ஒன்றாகவே இருந்தது ஒருநாள் வழக்கம் போல் மீன் மார்க்கெட் கூடியது ஆனால் சனிக்கிழமையில் வரம்பு மீறியவர்கள் யாரும் அன்று மாலை வரை வரவில்லை. உடனே மற்றவர்கள் அவர்களுக்கு வசிப்பிடங்களுக்குச் சென்று பார்த்த போது அனைத்துக் கதவுகளும் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை இறுதியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தால் அவர்கள் அனைவரும் குரங்குகளாக மாற்றப்பட்டிருந்தனர் அவர்களுடைய கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. படிப்பினை- கண்ணியப்படுத்த வேண்டிய ரமழானை நாம் கண்ணியப்படுத்தா விட்டால் நமக்கும்...

ஒரு சிலருக்கு நைட்,ஷிஃப்ட், டே ஷிஃப்ட் என்பது போன்று அமல்களின் ஈடுபடுவதற்கு இடையூறாக அவருடைய வேலை இருந்தால் ரமழானுக்காக அதை மாற்றிக் கேட்க வேண்டும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடாமலேயே அது முடியாது என்று ஒரே வார்த்தையில் கூறி விடுவர். எந்த ஒரு மறுமை சார்ந்த விஷயமும் நிய்யத்தும், ஆர்வமும் இருந்தால் அல்லாஹ் அதற்கான வழியை திறப்பான். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ وَلَا أَعْلَمُهُ إِلَّا قَدْ رَفَعَهُ قَالَ يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِنْ لَمْ تَفْعَلْ مَلَأْتُ صَدْرَكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ابن ماجة) بَاب الزُّهْدِ فِي الدُّنْيَا-كتاب الزهد-عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَتْ الْآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ وَمَنْ كَانَتْ الدُّنْيَا هَمَّهُ جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهُ وَلَمْ يَأْتِهِ مِنْ الدُّنْيَا إِلَّا مَا قُدِّرَ لَهُ (ترمذي)

1, ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நீ நேரம் ஒதுக்கு. நான் உன்னுடைய வறுமையைப் போக்கி, போதும் என்ற மனநிறைவைக் கொண்டு,  பணக்காரத்தனத்தைக் கொண்டு, உன் உள்ளத்தை நிரப்புவேன் அவ்வாறு நீ நேரம் ஓதுக்கா விட்டால் உன் வறுமையை நீக்க மாட்டேன் (அதாவது உன் தேவைகளும் முழுமையாக நிறைவாறாது.) உன் வேலைப் பழுவையும் அதிகமாக்கி மன உளைச்சல், நேரமின்மை ஆகிவற்றைக் கொண்டு உன் உள்ளத்தை நிரப்புவேன்

2, எவர் மறுமையை அசலாக கருதுவாரோ அவருடைய உள்ளத்தில் போதும் என்ற பணக்காரத்தனத்தை அல்லாஹ் உருவாக்குவான். அவருடைய காரியங்கள் கைகூடும்.( அவைகளை அல்லாஹ். எளிதாக்குவான்.) துன்யாவை அவர் வெறுத்தாலும் அது அவரைத் தேடி வரும். எவர் துன்யாவை அசலாக கருதுவாரோ அவருடைய கண்களுக்குள் ஏழ்மையின் பயத்தை அல்லாஹ் உருவாக்குவான் (நாம் ஏழையாகி விடுவோமோ என்ற பயம் அதிகமாகும்.) மேலும் அவருடைய காரியங்கள் (பெரும்பாலும்) கைகூடாத படி அல்லாஹ் பிரித்து விடுவான் (துன்யாவுக்காக அவருடைய உழைப்பை அல்லாஹ் அதிகமாக்கி விடுவான்) அப்படி உழைத்தாலும் அல்லாஹ் விதித்ததை விட அதிகமாக அவர் துன்யாவில் எதையும் பெற முடியாது

காரியம் கைகூடாது என்பதற்கான விளக்கம்

உதாரணமாக ஒருவர் ஒரே தடவையில் இரண்டு மூன்று காரியங்களை முடித்து விடும் எண்ணத்தில் தொழுகையைக் கூட பிறகு தொழுது கொள்ளலாம் என்று கிளம்புவார். ஆனால் நாடிச் சென்ற காரியங்களில் சில நடைபெறாமல் ஆகி விடும். ஆனால் மற்றொருவருக்கு அல்லாஹ் அவருடைய காரியத்தில் நேரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வான் அவர் தொழுது விட்டு தாமதமாக சென்றாலும் தாம் நாடிய காரியங்கள் அனைத்தும் குறைந்த நேரத்தில் நிறைவேறியதாக காண்பார்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خُفِّفَ عَلَى دَاوُدَ الْقِرَاءَةُ فَكَانَ يَأْمُرُ بِدَابَّتِهِ لِتُسْرَجَ فَكَانَ يَقْرَأُ قَبْلَ أَنْ يَفْرُغَ يَعْنِي الْقُرْآنَ اي الزبور (بخاري) كتاب التفسيبر- أَنَّ الْبَرَكَة قَدْ تَقَع فِي الزَّمَن الْيَسِير حَتَّى يَقَع فِيهِ الْعَمَل الْكَثِير . وفيه أن الله تعالى يطوي الزمان لمن شاء من عباده كما يطوي المكان (عمدة القاري)

பொருள்- வாகனத்தை கயிற்றால் கட்டி வைக்கும் நேரத்திற்குள் தாவூத் அலை ஜபூரை ஓதி முடிப்பார்கள். அதாவது பொறுமையாகவே ஓதுவார்கள். ஆனால் குறுகிய நேரத்தில் முடிப்பார்கள். நபி ஸல் அவர்களின் மிஃராஜ் பயணம் போல்..

ஆகவே ரமழான் வணக்கத்திற்காக நம் அலுவல்களில் சிலவற்றை நாம் மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும்

5. ரமழானுக்காக தயாராகுவதில் அடுத்த விஷயம்

ரமழானின் ஒவ்வொரு நிமிடங்களும் பாக்கியமானவை. குறிப்பாக கடைசி பத்து நாட்கள்இவ்வாறிருக்க சிலர் அந்த பரக்கத்தான நாட்களை துணிக்கடைகளில் துணிகளை வாங்குவதில் கழிக்கின்றனர். அதுவும் பெரும்பாலும் மாலை நேரத்தில் தான் இது அதிகம். குடும்பம் பெரிதாக இருந்தால் இரண்டு, மூன்று தடவைகள் புனிதமான இரவுகளை வீணாக்கிய நிலையில் துணிக்கடைகளில் நேரத்தை கழிக்கின்றனர். பரக்கத்தான நேரங்கள் இவ்வாறு கழிவது பெரும் கைசேதமாகும். ஆகவே ரமழானில் செய்ய வேண்டிய வேலைகளை முன்பே முடித்து விட முடியும் என்பது சாத்தியமாக இருந்தால் அதை ரமழான் தொடங்குவதற்கு முன்பே செய்து முடித்து ரமழானில் முடிந்த வரை வணக்கத்தில் ஈடுபட வேண்டும்

ரமழான் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த எதிர்பார்ப்பும் நன்மையாக அமையும். தொழுகையை எதிர்பார்த்து காத்திருப்பவரைப் போல்.

عن عَائِشَةَ رَضِ  كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَا لَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ (أبوداود)أي يتكلف في عدِّ أيام شعبان لمحافظة صوم رمضان

நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாத கடைசியில் ரமழானை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக் கொண்டே இருப்பார்கள் - அபூதாவூத்

 இன்றைக்கு பலருக்கு ரமழானை துவங்குவதில் உள்ள ஆர்வத்தை விட ரமழானை முடித்து வைப்பதில் தான் ஆர்வம் அதிகம். பெருநாளுக்கு முதல் நாள் ஒவ்வொரு இமாம்களுக்கும் பிறை தெரிந்து விட்டதா என்று கேட்டு ஃபோன்கள் வரிசையாக வரும் ஆனால் ரமழான் துவக்கத்தில் அவ்வளவாக இருப்பதில்லை. ஆனால் நல்லோர்கள் நோன்பு ஆரம்பிப்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். நோன்பு முடியும் தருவாயில் கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு சென்று விடுவார்கள்

 

 


வியாழன், 24 மார்ச், 2022

அச்சம் தவிர்ப்போம்

 


25-03-2022

SHABAN - 21

 

بسم الله الرحمن الرحيم 

والعاقبة  للمتقين

அச்சம் தவிர்ப்போம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

K



عن أبي موسى، عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: "إن الله ليُمْلي للظالم حتى إذا أخذه لم يُفْلِتْه، ثم قرأ: { وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ } [ هود: 102 ] متفق عليه

இஸ்லாத்திற்கு எதிரான தீய சக்திகளின் கரங்கள் எவ்வளவு தான் வளர்ந்து கொண்டே இறுதி வெற்றி நமக்கே சாதகமாக அமையும். நம்மைச் சுற்றி நடைபெறும் எந்த அநியாயங்களும் நம் மனதை சோர்வடையச் செய்து விடக்கூடாது.     

குறிப்பாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை  அதிகப்படுத்துவதற்காகவே சமீபத்தில் எடுக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிய முந்தைய படங்களை விட மிஞ்சி விட்டது. இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி பாசிச சக்திகள் அதிக அளவில் தூண்டி விடுகிறார்கள். சில மாநிலங்களில் இதைப் பார்ப்பதற்காக அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.                                                              

முஸ்லிம்களை எந்த வகையிலும் வெல்ல முடியாது என்பதைப் புரிந்த காவிகள் முஸ்லிம்களிடம் அச்சத்தை உண்டாக்கும் சதித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். பாசிச அரசியல் வாதிகள் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள் இந்த வகையில் உள்ளது தான். இதை அறியாமல் நம் சமூகம் அவர்களின் வெறித்தனமான பேச்சுக்களை, வீடியோக்களை பரப்பி முஸ்லிம்களிடம் நாமே அச்சுறுத்தலை உண்டாக்கி  விடுகிறோம்.                                       

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173)ال عمران

أَيْ الَّذِينَ تَوَعَّدَهُمْ النَّاس بِالْجُمُوعِ وَخَوَّفُوهُمْ بِكَثْرَةِ الْأَعْدَاء فَمَا اِكْتَرَثُوا لِذَلِكَ بَلْ تَوَكَّلُوا عَلَى اللَّه وَاسْتَعَانُوا بِهِ "(تفسير ابن كثير

قال السدي: لما تجهز النبّي صلى الله عليه وسلم وأصحابه للمسير إلى بدر الصغرى لميعاد أبي سفيان أتاهم المنافقون وقالوا: نحن أصحابكم الذين نهيناكم عن الخروج إليهم وعصيتمونا، وقد قاتلوكم في دياركم وظفروا؛ فإن أتيتموهم في ديارهم فلا يرجع منكم أحد. فقالوا: "حسبنا الله ونعم الوكيل".  (تفسير القرطبي

 உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்களை பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அபூ சுஃப்யான் மீண்டும் முஸ்லிம்களை தாக்குவதற்கு பத்ரில் சந்திப்போம் என்று கூறினார். ஆனால் அதற்காக பயப்படாத நபி ஸல் அபூ சுஃப்யான் சொன்ன அந்த இடத்தில் மறுபடியும் காஃபிர்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது சில முனாஃபிக்குகள் அங்கு வந்து நாங்கள் உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நாங்கள் உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நீங்கள் அவர்களுடன் மோத வேண்டாம். உங்களுடைய இடத்திற்கே வந்து அவர்கள் வெற்றியடைந்து விட்டுச் சென்று விட்டார்கள். இப்போது நீங்கள் அவர்களுடைய இடத்திற்குச் சென்றால் உங்களில் யாரும் உயிரோடு திரும்ப முடியாது என்று பயமுறுத்தினார்கள். அப்போது நபி ஸல் அவர்களும் முஸ்லிம்களும் சற்றும் பயப்படாமல் ஹஸ்புனல்லாஹ்... என மொழிந்தார்கள். பயம் அதிகமாகும் என்று கருதி பயம் காட்டிய முனாஃபிக்குகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  மாறாக முஸ்லிம்களின் ஈமான் மேலும் வலுவடைந்தது. 

கடைசி நிமிடம் வரை பயப்படாமல் இறைவனின் உதவி எப்படியும் வரும் என்று நம்பிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்.

عَنْ ابْنِ عَبَّاسٍ {حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام حِينَ أُلْقِيَ فِي النَّارِ وَقَالَهَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالُوا {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} (بخاري) 4563

وَذَكَرَ بَعْض السَّلَف أَنَّهُ عَرَضَ لَهُ جِبْرِيل وَهُوَ فِي الْهَوَاء فَقَالَ أَلَكَ حَاجَة فَقَالَ أَمَّا إِلَيْك فَلَا وَأَمَّا مِنْ اللَّه فَبَلَى - وَيُرْوَى عَنْ اِبْن عَبَّاس أَيْضًا قَالَ لَمَّا أُلْقِيَ إِبْرَاهِيم جَعَلَ خَازِن الْمَطَر يَقُول مَتَى أُؤْمَر بِالْمَطَرِ فَأُرْسِلهُ قَالَ فَكَانَ أَمْر اللَّه أَسْرَع مِنْ أَمْره (ففي القرطبي فضجت السموات والأرض ومن فيهن من الملائكة وجميع الخلق إلا الثقلين ضجة واحدة:) قَالَ اللَّه "يَا نَار كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيم" قَالَ لَمْ يَبْقَ نَار فِي الْأَرْض إِلَّا طَفِئَتْ وَقَالَ كَعْب الْأَحْبَار لَمْ يَنْتَفِع أَحَد يَوْمئِذٍ بِنَارٍ وَلَمْ تُحْرِق النَّار مِنْ إِبْرَاهِيم سِوَى وَثَاقه وَقَالَ اِبْن عَبَّاس رضي الله عنه لَوْلَا أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ قَالَ" وَسَلَامًا " لَآذَى إِبْرَاهِيم بَرْدهَا (تفسير ابن كثير)

ஆரம்பத்தில் ஏற்பட்ட தோல்வியைக் கண்டு துவண்டு விட்டவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தராமல்  கடைசி வரை நம்பிக்கையுடன் போராடும் முஸ்லிம்களுக்குத் தான் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ  (مسلم) بَاب فِي فَتْحِ قُسْطَنْطِينِيَّةَ وَخُرُوجِ الدَّجَّالِ

நபி ஸல் கூறினார்கள்-ரோம, பைஸாந்தியர்கள் சிரியாவில் உள்ள அஃமாக், தாபிக் ஆகிய இடங்களில் நிலை கொள்ளாத வரை கியாமத் வராது. அவர்களை நோக்கி மதீனாவில் இருந்து (இந்த மதீனா என்பதற்கு சிரியாவின் முக்கிய நகரம் எனவும் பொருள் உண்டு)  ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாக இருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்)எங்களுக்கும், எங்களில் சிறைக் கைதிகளாக பிடிக்கப்பட்டோருக்குமிடையில் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள் என்பார்கள். (அதாவது முஸ்லிம்களாகிய உங்களுடன் போர் புரிய வரவில்லை. மாறாக எங்கள் மதத்தில் இருந்து விட்டு உங்களால் சிறை பிடிக்கப்பட்டு மதம் மாறி உங்களுடன் சேர்ந்து கொண்டு எங்களைத் தாக்குவதற்கும் துணிந்து விட்ட எங்களுடைய பழைய பங்காளிகளுடனேயே போர் புரிய வந்துள்ளோம் என்பர். இவ்வாறு பேசி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்வர். அந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் அதிக அளவில் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்ற கருத்தும் இதில் உள்ளது)

அப்போது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் சகோதரர்களின் மீது போர் தொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பர். ஆகவே ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோற்று விரண்டோடுவர். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் ரோமர்களை வெற்றி கொள்வார்கள். அவர்கள் அதன்பின் ஒரு போதும் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்க விட்டு போர் செல்வங்களை பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் ஷைத்தான் வந்து நீங்கள் இங்கு வந்த பின் உங்கள் குடும்பத்தினரிடம் தஜ்ஜால் வந்து விட்டான் என்பான்.உடனே அவர்கள் தம்குடும்பத்தாரிடம் புறப்படுவார்கள். அது பொய்யான செய்தியாக இருக்கும். அவர்கள் சிரியாவுக்கு வரும்போது தான் தஜ்ஜால் கிளம்புவான். பின்பு அவர்கள்  போருக்கு ஆயத்தமாகி அணிகளை சீர்செய்து கொண்டிருக்கும்போது தொழுகைக்கு இகாமத் கூறப்படும்.அப்போது தான் ஈஸா அலை வானில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு  தலைமையேற்பார்கள். அவர்களை தஜ்ஜால் காணும்போது தண்ணீரில் உப்பு கரைவது போன்று கரைந்து போவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டால் கூட தானாக கரைந்து  அழிந்து விடுவான். ஆயினும் ஈஸா அலை அவர்களின் கரத்தால் அல்லாஹ் அவனை அழிப்பான். ஈஸா அலை தன் ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்கு காட்டுவார்கள். முஸ்லிம் 5553         

படிப்பினை- இச்சம்பவத்திலும் முஸ்லிம்களுக்கு ஒரு வித பயத்தை உண்டாக்கவே ஷைத்தான் மாறு வேடத்தில் வந்து தஜ்ஜால் வந்து விட்டதாக கூறுகிறான். அதே வேலையைத் தான் ஷைத்தானின் ஏவலாளிகளான சங்கிகள் செய்கிறார்கள்.

இறுதி வரை நம்பிக்கை இழக்காத இறை நம்பிக்கையாளர்களுக்கே வெற்றி என்பதற்கு மற்றொரு சம்பவம்.

பனீ இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டம் போருக்குப் புறப்பட்டார்கள். புறப்பட்டவர்கள் 80,000  ஆனால் போரில் கலந்து கொண்டு வெற்றிக் கனியைப் பறித்தவர்கள் 313 பேர் தான். காரணம் அவ நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் ஆரம்பத்திலேயே கழித்து விட்டான்.  

فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (249)البقرة  وَكَانَ جَيْشه يَوْمَئِذٍ فِيمَا ذَكَرَهُ السُّدِّيّ ثَمَانِينَ أَلْفًا-   عَنْ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا نَتَحَدَّثُ أَنَّ أَصْحَابَ بَدْرٍ ثَلَاثُ مِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ بِعِدَّةِ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ وَمَا جَاوَزَ مَعَهُ إِلَّا مُؤْمِنٌ (بخاري 

பர்ராஉ ரழி கூறினார்கள். பத்ரு வாசிகள் 313 பேர் என்பது போல தாலூத் அரசருடன் கடைசி வரை நிலைத்து நின்று போர் செய்து ஜெயித்தவர்களும் 313 பேர் தான் என நாங்கள் பேசிக் கொள்வோம்.                  

قال قتادة: النهر الذي ابتلاهم الله به هو نهر بين الأردن وفلسطين. ومعنى هذا الابتلاء أنه اختبار لهم، فمن ظهرت طاعته في ترك الماء علم أنه مطيع فيما عدا ذلك، ومن غلبته شهوته في الماء وعصى الأمر فهو في العصيان في الشدائد أحرى،  (قرطبي

பல்லாயிரக்கணக்கான தாலூத் அரசர் போருக்குப்புறப்பட்டாலும் அவர்களின் ஈமானை சோதிக்க அல்லாஹ்வின் உத்தரவுப்படி ஒரு சோதனை வைக்கப்பட்டது. அதாவது செல்லும் வழியில் ஒரு ஆறு இருக்கும். அதன் நீர் மிக சுவையாகவும் இருக்கும். ஆனால் அதிலிருந்து யாரும் நீர் அருந்தக் கூடாது. அவ்வாறு குடிப்பதாக இருந்தாலும் ஒரு சிரங்கை மட்டும் அனுமதி என்ற நிபந்தனையுடன் ஆற்றைக் கடந்த போது அவர்களில் பலரின் மனதில் நாம் போருக்குப் போகிறோம் தண்ணீர் நிறைய குடித்தால் தானே தெம்பு ஏற்படும் என்று நிறைய குடித்தார்கள். ஆனால் அவ்வாறு குடித்தவர்கள் அத்தனை பேரும் அங்கேயே களைத்து சோர்ந்து விழுந்து விட்டார்கள். இறைவன் மீது நம்பிக்கை வைக்காமல் மற்றொன்றின் மீது நம்பிக்கை வைத்தார்கள். எவர்கள் நம்பிக்கை இழக்காமல் அரசரின் உத்தரவுப்படி ஒரு சிரங்கை மட்டும் நீர் அருந்தினார்களோ அவர்கள் உற்சாகம் அதிகமாகி போர் செய்தார்கள்.                        

படிப்பினை- எதிரிகள் மீதான பயம் யாருக்கு அதிகமானதோ அப்படிப்பட்டவர்களை அல்லாஹ் கழித்து பின்தங்க விட்டான். இறுதி வரை இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவர்களை அல்லாஹ் வெற்றியைத் தந்தான்.       

இதேபோன்று தான் பாசிச வாதிகளால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் நம்மை எதுவும் செய்து விடாது. என்ன நடந்தாலும் இறுதி வெற்ற நமக்குத்தான் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும்.                                  

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...