25-03-2022 SHABAN - 21 |
|
بسم
الله الرحمن الرحيم والعاقبة للمتقين அச்சம் தவிர்ப்போம் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
K
عن أبي موسى، عن رسول الله صلى الله عليه وسلم أنه قال:
"إن الله ليُمْلي للظالم حتى إذا أخذه لم يُفْلِتْه، ثم قرأ: { وَكَذَلِكَ
أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ
شَدِيدٌ } [ هود: 102 ] متفق عليه
இஸ்லாத்திற்கு எதிரான தீய
சக்திகளின் கரங்கள் எவ்வளவு தான் வளர்ந்து கொண்டே இறுதி வெற்றி நமக்கே சாதகமாக
அமையும். நம்மைச் சுற்றி நடைபெறும் எந்த அநியாயங்களும் நம் மனதை சோர்வடையச் செய்து
விடக்கூடாது.
குறிப்பாக முஸ்லிம்கள் மீது
வெறுப்பை அதிகப்படுத்துவதற்காகவே சமீபத்தில்
எடுக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிய
முந்தைய படங்களை விட மிஞ்சி விட்டது. இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி பாசிச
சக்திகள் அதிக அளவில் தூண்டி விடுகிறார்கள். சில மாநிலங்களில் இதைப் பார்ப்பதற்காக
அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களை
எந்த வகையிலும் வெல்ல முடியாது என்பதைப் புரிந்த காவிகள் முஸ்லிம்களிடம் அச்சத்தை
உண்டாக்கும் சதித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். பாசிச அரசியல் வாதிகள்
அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள் இந்த வகையில் உள்ளது தான். இதை அறியாமல் நம்
சமூகம் அவர்களின் வெறித்தனமான பேச்சுக்களை, வீடியோக்களை பரப்பி முஸ்லிம்களிடம்
நாமே அச்சுறுத்தலை உண்டாக்கி விடுகிறோம்.
الَّذِينَ قَالَ لَهُمُ
النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا
اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173)ال عمران
أَيْ الَّذِينَ
تَوَعَّدَهُمْ النَّاس بِالْجُمُوعِ وَخَوَّفُوهُمْ بِكَثْرَةِ الْأَعْدَاء فَمَا
اِكْتَرَثُوا لِذَلِكَ بَلْ تَوَكَّلُوا عَلَى اللَّه وَاسْتَعَانُوا بِهِ "(تفسير
ابن كثير
قال السدي: لما تجهز النبّي
صلى الله عليه وسلم وأصحابه للمسير إلى بدر الصغرى لميعاد أبي سفيان أتاهم
المنافقون وقالوا: نحن أصحابكم الذين نهيناكم
عن الخروج إليهم وعصيتمونا، وقد قاتلوكم في دياركم وظفروا؛ فإن أتيتموهم في ديارهم
فلا يرجع منكم أحد. فقالوا: "حسبنا الله ونعم الوكيل". (تفسير القرطبي
உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு
தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்களை பயத்திலேயே வைத்திருக்க வேண்டும்
என்பதற்காக அபூ சுஃப்யான் மீண்டும் முஸ்லிம்களை தாக்குவதற்கு பத்ரில் சந்திப்போம்
என்று கூறினார். ஆனால் அதற்காக பயப்படாத நபி ஸல் அபூ சுஃப்யான் சொன்ன அந்த
இடத்தில் மறுபடியும் காஃபிர்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது சில
முனாஃபிக்குகள் அங்கு வந்து நாங்கள் உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நாங்கள்
உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நீங்கள் அவர்களுடன் மோத வேண்டாம். உங்களுடைய
இடத்திற்கே வந்து அவர்கள் வெற்றியடைந்து விட்டுச் சென்று விட்டார்கள். இப்போது
நீங்கள் அவர்களுடைய இடத்திற்குச் சென்றால் உங்களில் யாரும் உயிரோடு திரும்ப
முடியாது என்று பயமுறுத்தினார்கள். அப்போது நபி ஸல் அவர்களும் முஸ்லிம்களும்
சற்றும் பயப்படாமல் ஹஸ்புனல்லாஹ்... என மொழிந்தார்கள். பயம் அதிகமாகும் என்று
கருதி பயம் காட்டிய முனாஃபிக்குகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக முஸ்லிம்களின் ஈமான் மேலும்
வலுவடைந்தது.
கடைசி நிமிடம் வரை
பயப்படாமல் இறைவனின் உதவி எப்படியும் வரும் என்று நம்பிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்.
عَنْ ابْنِ عَبَّاسٍ {حَسْبُنَا اللَّهُ
وَنِعْمَ الْوَكِيلُ} قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام حِينَ
أُلْقِيَ فِي النَّارِ وَقَالَهَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حِينَ قَالُوا {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ
إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} (بخاري) 4563
وَذَكَرَ
بَعْض السَّلَف أَنَّهُ عَرَضَ لَهُ جِبْرِيل وَهُوَ فِي الْهَوَاء فَقَالَ أَلَكَ
حَاجَة فَقَالَ أَمَّا إِلَيْك فَلَا وَأَمَّا مِنْ اللَّه فَبَلَى - وَيُرْوَى
عَنْ اِبْن عَبَّاس أَيْضًا قَالَ لَمَّا أُلْقِيَ إِبْرَاهِيم جَعَلَ خَازِن
الْمَطَر يَقُول مَتَى أُؤْمَر بِالْمَطَرِ فَأُرْسِلهُ قَالَ فَكَانَ أَمْر
اللَّه أَسْرَع مِنْ أَمْره (ففي القرطبي فضجت السموات والأرض ومن فيهن من
الملائكة وجميع الخلق إلا الثقلين ضجة واحدة:) قَالَ اللَّه "يَا نَار كُونِي
بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيم" قَالَ لَمْ يَبْقَ نَار فِي الْأَرْض
إِلَّا طَفِئَتْ وَقَالَ كَعْب الْأَحْبَار لَمْ يَنْتَفِع أَحَد يَوْمئِذٍ
بِنَارٍ وَلَمْ تُحْرِق النَّار مِنْ إِبْرَاهِيم سِوَى وَثَاقه وَقَالَ اِبْن
عَبَّاس رضي الله عنه لَوْلَا أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ قَالَ"
وَسَلَامًا " لَآذَى إِبْرَاهِيم بَرْدهَا (تفسير ابن كثير)
ஆரம்பத்தில் ஏற்பட்ட தோல்வியைக்
கண்டு துவண்டு விட்டவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தராமல் கடைசி வரை நம்பிக்கையுடன் போராடும்
முஸ்லிம்களுக்குத் தான் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ
أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ
أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا
بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ
الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا
فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا
وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ
الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ
فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ
بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ
فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ
فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ
الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي
الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ
بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ
(مسلم) بَاب
فِي فَتْحِ قُسْطَنْطِينِيَّةَ وَخُرُوجِ الدَّجَّالِ
நபி ஸல்
கூறினார்கள்-ரோம, பைஸாந்தியர்கள் சிரியாவில் உள்ள அஃமாக், தாபிக் ஆகிய இடங்களில்
நிலை கொள்ளாத வரை கியாமத் வராது. அவர்களை நோக்கி மதீனாவில் இருந்து (இந்த
மதீனா என்பதற்கு சிரியாவின் முக்கிய நகரம் எனவும் பொருள் உண்டு) ஒரு படை புறப்படும். அன்றைய
நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாக இருப்பர். அவர்கள் அணி வகுத்து
நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்)எங்களுக்கும், எங்களில் சிறைக் கைதிகளாக பிடிக்கப்பட்டோருக்குமிடையில்
போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள் என்பார்கள். (அதாவது
முஸ்லிம்களாகிய உங்களுடன் போர் புரிய வரவில்லை. மாறாக எங்கள் மதத்தில் இருந்து
விட்டு உங்களால் சிறை பிடிக்கப்பட்டு மதம் மாறி உங்களுடன் சேர்ந்து கொண்டு
எங்களைத் தாக்குவதற்கும் துணிந்து விட்ட எங்களுடைய பழைய பங்காளிகளுடனேயே போர்
புரிய வந்துள்ளோம் என்பர். இவ்வாறு பேசி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்வர்.
அந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் அதிக அளவில் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்ற கருத்தும்
இதில் உள்ளது)
அப்போது முஸ்லிம்கள்
அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் சகோதரர்களின் மீது போர் தொடுக்க அனுமதிக்க
மாட்டோம் என்பர். ஆகவே ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது
முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோற்று விரண்டோடுவர். அவர்களை அல்லாஹ் ஒரு
போதும் மன்னிக்க மாட்டான். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள்.
மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் ரோமர்களை வெற்றி கொள்வார்கள். அவர்கள் அதன்பின்
ஒரு போதும் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.அவர்கள் தம் வாட்களை ஆலிவ்
மரங்களில் தொங்க விட்டு போர் செல்வங்களை பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது
அவர்களிடம் ஷைத்தான் வந்து நீங்கள் இங்கு வந்த பின் உங்கள் குடும்பத்தினரிடம்
தஜ்ஜால் வந்து விட்டான் என்பான்.உடனே அவர்கள் தம்குடும்பத்தாரிடம்
புறப்படுவார்கள். அது பொய்யான செய்தியாக இருக்கும். அவர்கள் சிரியாவுக்கு
வரும்போது தான் தஜ்ஜால் கிளம்புவான். பின்பு அவர்கள் போருக்கு ஆயத்தமாகி அணிகளை சீர்செய்து
கொண்டிருக்கும்போது தொழுகைக்கு இகாமத் கூறப்படும்.அப்போது தான் ஈஸா அலை வானில்
இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு
தலைமையேற்பார்கள். அவர்களை தஜ்ஜால் காணும்போது தண்ணீரில் உப்பு கரைவது
போன்று கரைந்து போவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டால் கூட தானாக கரைந்து அழிந்து விடுவான். ஆயினும் ஈஸா அலை அவர்களின்
கரத்தால் அல்லாஹ் அவனை அழிப்பான். ஈஸா அலை தன் ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது
இரத்தத்தை மக்களுக்கு காட்டுவார்கள். முஸ்லிம் 5553
படிப்பினை-
இச்சம்பவத்திலும் முஸ்லிம்களுக்கு ஒரு வித பயத்தை உண்டாக்கவே ஷைத்தான் மாறு
வேடத்தில் வந்து தஜ்ஜால் வந்து விட்டதாக கூறுகிறான். அதே வேலையைத் தான் ஷைத்தானின்
ஏவலாளிகளான சங்கிகள் செய்கிறார்கள்.
இறுதி வரை நம்பிக்கை இழக்காத இறை
நம்பிக்கையாளர்களுக்கே வெற்றி என்பதற்கு மற்றொரு சம்பவம்.
பனீ
இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டம் போருக்குப் புறப்பட்டார்கள். புறப்பட்டவர்கள் 80,000 ஆனால் போரில் கலந்து கொண்டு வெற்றிக் கனியைப் பறித்தவர்கள்
313 பேர் தான். காரணம் அவ நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் ஆரம்பத்திலேயே கழித்து
விட்டான்.
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ
إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي
وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ
فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ
آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ
الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ
غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
(249)البقرة وَكَانَ جَيْشه
يَوْمَئِذٍ فِيمَا ذَكَرَهُ السُّدِّيّ ثَمَانِينَ أَلْفًا- عَنْ الْبَرَاءِ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا نَتَحَدَّثُ أَنَّ
أَصْحَابَ بَدْرٍ ثَلَاثُ مِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ بِعِدَّةِ أَصْحَابِ طَالُوتَ
الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ وَمَا جَاوَزَ مَعَهُ إِلَّا مُؤْمِنٌ
(بخاري
பர்ராஉ ரழி கூறினார்கள். பத்ரு வாசிகள் 313
பேர் என்பது போல தாலூத் அரசருடன் கடைசி வரை நிலைத்து நின்று போர் செய்து
ஜெயித்தவர்களும் 313 பேர் தான் என நாங்கள் பேசிக் கொள்வோம்.
قال قتادة: النهر الذي ابتلاهم الله به هو نهر بين الأردن وفلسطين.
ومعنى هذا الابتلاء أنه اختبار لهم، فمن ظهرت طاعته في ترك الماء علم أنه مطيع
فيما عدا ذلك، ومن غلبته شهوته في الماء وعصى الأمر فهو في العصيان في الشدائد
أحرى، (قرطبي
பல்லாயிரக்கணக்கான
தாலூத் அரசர் போருக்குப்புறப்பட்டாலும் அவர்களின் ஈமானை சோதிக்க அல்லாஹ்வின்
உத்தரவுப்படி ஒரு சோதனை வைக்கப்பட்டது. அதாவது செல்லும் வழியில் ஒரு ஆறு
இருக்கும். அதன் நீர் மிக சுவையாகவும் இருக்கும். ஆனால் அதிலிருந்து யாரும் நீர்
அருந்தக் கூடாது. அவ்வாறு குடிப்பதாக இருந்தாலும் ஒரு சிரங்கை மட்டும் அனுமதி என்ற
நிபந்தனையுடன் ஆற்றைக் கடந்த போது அவர்களில் பலரின் மனதில் நாம் போருக்குப்
போகிறோம் தண்ணீர் நிறைய குடித்தால் தானே தெம்பு ஏற்படும் என்று நிறைய
குடித்தார்கள். ஆனால் அவ்வாறு குடித்தவர்கள் அத்தனை பேரும் அங்கேயே களைத்து
சோர்ந்து விழுந்து விட்டார்கள். இறைவன் மீது நம்பிக்கை வைக்காமல் மற்றொன்றின் மீது
நம்பிக்கை வைத்தார்கள். எவர்கள் நம்பிக்கை இழக்காமல் அரசரின் உத்தரவுப்படி ஒரு
சிரங்கை மட்டும் நீர் அருந்தினார்களோ அவர்கள் உற்சாகம் அதிகமாகி போர் செய்தார்கள்.
படிப்பினை- எதிரிகள்
மீதான பயம் யாருக்கு அதிகமானதோ அப்படிப்பட்டவர்களை அல்லாஹ் கழித்து பின்தங்க விட்டான்.
இறுதி வரை இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவர்களை அல்லாஹ் வெற்றியைத்
தந்தான்.
இதேபோன்று தான் பாசிச
வாதிகளால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் நம்மை எதுவும் செய்து விடாது. என்ன
நடந்தாலும் இறுதி வெற்ற நமக்குத்தான் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்க
வேண்டும்.
ஜஸாக்கல்லாஹு கைரா
பதிலளிநீக்கு