வியாழன், 15 ஆகஸ்ட், 2024

வக்ஃப் திருத்தச் சட்டம்

وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ (161) ال عمران 

 உலகில் பாவங்கள் பெருகினால் அல்லாஹ்வின் சோதனைகள் பல்வேறு வடிவங்களில் வரும். அதிலும் குறிப்பாக கீழ்காணும் 15 விதமான பாவங்கள் பெருகும்போது இந்த பூமி பல விதமான ஆபத்துகளை சந்திக்கும் என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவற்றில் முதலாவதாக நபி ஸல் கூறியது பொதுச் சொத்துகள் முறைகேடாகப் பயன்படுத்தப் படுவதைப் பற்றித்தான். இன்றைய பாசிச அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய திருத்த மசோதா வக்ஃப் சொத்துக்கள் அதற்குரிய நோக்கமன்றி முறைகேடாகப் பயன்படுத்தப் படுவதற்கு வழி வகுக்கும் சட்டமாகும்.  

عن  أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذَا اتُّخِذَ الْفَيْءُ دُوَلًا ، وَالأمَانَةُ مَغْنَمًا ، وَالزَّكَاةُ مَغْرَمًا ، وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ ، وَعَقَّ أُمَّهُ ، وَأَدْنَى صَدِيقَهُ ، وَأَقْصَى أَبَاهُ ، وَظَهَرَتْ الأصْوَاتُ فِي الْمَسَاجِدِ ، وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ ، وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ ، وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ ، وَظَهَرَتْ الْقِيَانُ وَالْمَعَازِفُ ، وَشُرِبَتْ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأمَّةِ أَوَّلَهَا ، فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ بَعْضُهُ بَعْضًا » . رَوَاهُ التِّرْمِذِيُّ

சுருக்கம்-  1.பொதுச்சொத்துக்களில் முறைகேடு செய்வது 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 

4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5. மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது  8.மஸ்ஜித்களில் வீண் சப்தம்  9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது  11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை   13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது  14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது.           

மேற்காணும் பாவங்கள் பூமியில் பெருகினால் அந்த நேரத்தில் கீழ்காணும் ஆபத்துகள் வருவதை எதிர் பாருங்கள். சிவப்பு நிற அனல் காற்று வீசுதல். பூகம்பம், பூமி பிளக்குதல், எரி கற்கள் எரியப்படுதல், உருமாற்றப்படுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படும் எந்த அளவுக்கென்றால் பாசிமாலை அறுந்தால் அதிலுள்ள பாசி மணிகள் எவ்வாறு  தொடர்ச்சியாக கீழே விழுமோ அவ்வாறு தொடர்ச்சியான ஆபத்துகளை இந்த உலகம் சந்திக்கும்.  நூல்- திர்மிதீ                                            

15 விதமான பாவங்களில் சிலவற்றைப் பற்றி விரிவாக காண்போம்

1. பொதுச்சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகுதல்   

இதற்கு உதாரணமாக சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச்சட்டத்தைக் கூறலாம்

வக்ஃப் சொத்துக்களை முறையின்றிப்  பயன்படுத்த வழி வகுக்கும் வக்ஃப் திருத்தச்சட்டம்

நமது இந்திய நாட்டில் நம்முடைய முன்னோர்களான முஸ்லிம் மன்னர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் தங்களுடைய சொத்துக்களில் ஒரு பகுதியை மஸ்ஜித், மதரஸா போன்ற பொதுச் சேவைகளுக்காக வக்ஃப் செய்து விட்டுச் சென்றனர். அவற்றில் சில சொத்துக்கள் மட்டும் தான் இன்று மஸ்ஜித் மற்றும் மதரஸாக்களாக தர்காக்களாக செயல் பட்டு வருகின்றன. நிறைய வக்ஃப் சொத்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

 இந்திய இராணுவம் மற்றும் ரயில்வேவிற்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் வக்ஃபு சொத்துக்களாக உள்ளது. இந்த மொத்த சொத்துக்களின் பரப்பளவு 9.4 இலட்சம் ஏக்கர். உலகில் 54 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. எந்த நாட்டிலும் இந்தியாவில் இருக்கும்  அளவிற்கு வக்ஃபு சொத்துக்கள் இல்லை. இந்தியாவில் இருக்கும் அளவிற்கு தர்காக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மதராசக்களின் எண்ணிக்கை உலகில் எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லை. இதனால் தான் அரசாங்கத்தின் பார்வை இந்த வக்ஃபு சொத்துக்கள் மீது ஏற்பட்டுள்ளது. நம்முடைய முன்னோர்கள் எந்த நோக்கத்திற்காக வக்ஃப் செய்தார்களோ அந்த நோகத்தை சிதைக்கும் வகையில் இந்த வக்ஃப் திருத்த மசோதா  வடிவமைக்கப்பட்டுள்ளது.                          

வக்ஃப் திருத்த சட்டத்தின் ஆபத்துகளைப் பற்றிமஹாராஷ்டிர மாநில வக்ஃப் வாரியத்தின் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் அப்துல் ரவுஃப் கூறியது:

   வக்ஃப் தொடர்பான புதிய சட்டத்திருத்தத்தில். வக்ஃப் வாரியத்தின் மொத்தமுள்ள  22 உறுப்பினர்களில்  10 முஸ்லிம்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும்... அந்த 10 முஸ்லிம்களில் 2 முஸ்லிம் பெண்களும் இருக்க வேண்டும் என்றும். மீதமுள்ள 12 பேர்...அரசு நியமனம் என்பதால்... அவர்கள் முஸ்லிம்களாகவோ அல்லது முஸ்லிம்கள் ல்லாதவர்களாகவோ இருக்கலாம் எனவும்... ஆக... முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்த பட்சம் 2 பேர் முதல் அதிகபட்சம் 12 ஆக இருக்கலாம் எனவும்... இதனால்... சென்ட்ரல் வக்ஃப் கவுன்சிலில் மொத்தம் உள்ள 22 பேரில் 12 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் மெஜாரிட்டி ஆக இருக்க முடியும் 

 “ மாநில வக்ஃப் வாரியங்கள் இப்போதைய புதிய சட்டத்திருத்தப்படி, முஸ்லிம் அல்லாத ஒருவரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வைத்திருக்க முடியும். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும், வாரியத்தின் தலைவர், 2 எம்பி மற்றும் 2 எம்எல்ஏ இனிமேல் முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை;  பொதுப்பிரிவிலிருந்து இப்படியாக... முஸ்லிம்களின் மத விவகாரங்களை தலைமை தாங்கி நிர்வாகம் செய்வோரில்.... பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களை கொண்டு வாரியம் நிரப்பப் பட முடியும்,”           

வக்ஃப் சொத்துக்களை பின்வரும் அடிப்படையில் முறையாக  பயன்படுத்தப்பட வேண்டும். 

தமிழகம் முழுவதும் நம் இஸ்லாமிய சமூகத்தில் வறுமையில் வாடும் விதவைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அவர்கள் கண்ணியமாக வாழ தேவையான பராமரிப்பு தொகையை பெற்று கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும் . பள்ளிவாசல்களில் பிச்சை கேட்டு நிற்பவர்களின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்க முடியும். உலமாக்களுக்கு மாதம் மாதம் பென்ஷன் வழங்க பென்ஷன் திட்டம் 1981 உருவாக்கப்பட்டு உள்ளது அதன்படி குறைந்த  உலமாக்கள் மட்டுமே பயன்பெற்று வருகிறார்கள். அதை அதிகரிக்க வேண்டும். உலமா ஓய்வூதியம் குறைந்த பட்சம் 5000 வழங்க வேண்டும்.   வக்ஃப் சொத்துக்கள் மூலம் இவ்வளவு சேவைகள் செய்ய முடியும். ஆனால் இந்த அனைத்தும் இச்சட்டத்தின் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது.  

பொதுச் சொத்துக்களில் முறைகேடு செய்பவர்களை அக்காலத்தில் உடனுக்குடன் அல்லாஹ் அடையாளம் காட்டினான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري) كتاب فرض الخمس 

  விளக்கம்- நபிமார்களில் ஒருவர் போருக்குப் புறப்படும்போது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தன் உம்முத்தினரை போருக்கு அழைத்துச் சென்றார்கள். 1. புதிதாத திருமணம் நடந்து இன்னும் மனைவியுடன் சேராத எந்த ஆணும் என்னுடன் வர வேண்டாம்.. அதாவது புது மாப்பிள்ளை என்னுடன் வர வேண்டாம்.. 2. வீடு கட்டி அதன் மேல்தளம் அமைக்காத  நபர் என்னுடன் வர வேண்டாம்.. அதாவது வீடு கட்டிக் கொண்டிருப்பவர் என்னுடன் வர வேண்டாம்.. 3.  தனது ஆடு குட்டி போடுவதை எதிர் பார்த்துக் காத்திருப்பவரும் என்னுடன் வர வேண்டாம். என்றார்கள். காரணம் இவர்களெல்லாம்  முழு ஈடுபாட்டோடு போர் செய்ய மாட்டார்கள் என்று கருதி அவ்வாறு கூறினார்.                                                  

 அந்த நபி  போர் செய்யும் இடைத்தை அடைய அசர்  ஆகி விட்டது.  அப்போது சூரியனை நோக்கி  பேசானார்கள்.  சூரியனே நீயும் குறிப்பிட்ட நேரத்தில் மறைய வேண்டும் என கட்டளையிடப் பட்டுள்ளாய். நானும்  மஃரிபுக்குள் போரை  முடிக்க வேண்டும் என கட்டளையிடப் பட்டுள்ளேன். என்று கூறி விட்டு பிறகு அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்.  அல்லாஹ்ஹ்வே போர் முடியும் வரை சூரியனை மறைய விடாமல் தடுத்து நிறுத்து என துஆச் செய்ய, அவ்வாறே சூரியன் மறையாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. போரில் அல்லாஹ் அவருக்கு அதாவது முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்தான். பின்பு கனீமத்  பொருட்கள்  சேகரிக்கப்பட்டது. 

 அக்காலத்தின் வழமைப்படி  கனீமத்  பொருட்கள்  ஒரு மலை மீது வைக்கப்படும் அப்போது நெருப்பு வந்து  அதைக் கரித்துகி கொண்டு சென்று விடும். அது தான் அந்த கனீமத்  பொருட்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடையாளமாகும். அவ்வாறே அந்த கனீமத்  பொருட்கள் வைக்கப்பட்டன. ஆனால் நெருப்பு வந்த து. அதைக் கரிக்கவில்லை  அப்போது அந்த நபி கூறினார்கள். இங்கு வந்து சேர வேண்டியதில் ஏதோ ஊழல் நடந்துள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே கை கொடுத்த போது அவர்களில் ஒருவரின் கை  அந்த நபியின்  கையுடன்  ஒட்டிக் கொண்டது, அப்போது அந்த நபி கூறினார்கள். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் என்னிடம் கை கொடுக்க வேண்டும். அவ்வாறே கை கொடுத்த போது அவர்களில் இருவரின் கைகள்  அந்த நபியின்  கையுடன்  ஒட்டிக் கொண்டது, உடன் அந்த நபி கூறினார்கள். நீங்கள் தான் ஏதோ ஒளித்து வைத்துள்ளீர்கள். அதை எடுத்து வாருங்கள். என்று கூற, அவ்விருவரும் தங்கத்தால் செய்யப்பட்ட மாட்டின் தலையைப் போன்ற ஒரு தலையைக் கொண்டு வந்தார்கள். அதையும் சேர்த்து மலை மீது வைத்த பின்பு நெருப்பு வந்து அதை கரித்துக் கொண்டு சென்றது.  இதைக் கூறிய பின்பு நபி ஸல் கூறினார்கள். இந்த உம்மத்துக்கு அல்லாஹ்  கனீமத் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளான் ஆனால் முந்திய உம்மத்துக்கு  அனுமதிக்கப்படவில்லை.


வக்ஃப் சொத்துக்களில் ஏற்கெனவே  பல நிலங்கள் அரசியல் வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வக்ப் சட்டத் திருத்த மசோதா மூலம் அரசின்  துணையோடு  முறையில்லாத வகையில் பயன்படுத்தப்படும் அபாயம் உண்டு.             

2. நம்பகத்தன்மை  குறைந்து விடும்

இறுதி நாள் நெருக்கத்தில் நம்பகத்தன்மை தான் முதலில் மக்களிடமிருந்து எடுக்கப்படும்

عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما تفقدون من دينكم الأمانة ثم الصلاة  (الأحاديث المختارة للضياء

عن عبد الله بن مسعود قال : أول ما تفقدون من دينكم الأمانة وآخر ما تفقدون الصلاة وسيصلي أقوام لا دين لهم (بيهقي

தீனைக் கடைபிடிக்கும் மக்களிடமிருந்து முதலில் அமானிதம் இல்லாமல் போகும். அதன் பின்பு தொழுகையும் இல்லாமல் போகும். சிலர் தொழுகையை சரியாக நிறைவேற்றுவார்கள் ஆனால் அவர்களிடம் தீனின் மற்றொரு பங்கு (அமானிதத்தை முறையாக நிறைவேற்றுதல்) என்பது இருக்காது

அமானிதம் என்பதற்கு நம்மிடம் ஒப்படைத்ததை அப்படியே திருப்பித் தருவது என்ற பொருளும் உண்டு

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا (75)ال عمران   بِقِنْطَارٍ" أَيْ بِمَالٍ كَثِير "يُؤَدِّهِ إلَيْك" لِأَمَانَتِهِ كَعَبْدِ اللَّه بْن سَلَام أَوْدَعَهُ رَجُل أَلْفًا وَمِائَتَيْ أُوقِيَّة ذَهَبًا فَأَدَّاهَا إلَيْهِ "وَمِنْهُمْ مَنْ إنْ تَأْمَنهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إلَيْك" لِخِيَانَتِهِ "إلَّا مَا دُمْت عَلَيْهِ قَائِمًا" لَا تُفَارِقهُ فَمَتَى فَارَقْته أَنْكَرَهُ كَكَعْبِ بْن الْأَشْرَف اسْتَوْدَعَهُ قُرَشِيّ دِينَارًا فَجَحَدَهُ (تفسير الجلالين

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழி அவர்களிடம் ஒருவர் ஆயிரத்து இருநூறு ஊகியா தங்கத்தைக் கொடுத்து வைத்தார். அதை அவர் கேட்கும்போது  அப்படியே திருப்பித் தந்தார்கள். ஒரு ஊகியா என்பது 38 கிராம். ஆனால் கஃப் இப்னு அஷ்ரஃபிடம் ஒரு தீனாரை ஒருவர் கொடுத்து வைத்து திரும்பக் கேட்டபோது அவன் நீ தரவில்லை என மறுத்து விட்டான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ (بخاري

ஹிஜ்ரத் புறப்படும்போது நபி ஸல் அவர்கள் ஆபத்தான சூழ்நிலையிலும் அலீ ரழி அவர்களை மக்காவில் விட்டுச் சென்ற காரணம் அமானிதங்களை அவரவரிடம் ஒப்படைப்பதற்குத்தான். 

وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ (82) كهف -  قال ابن عباس حفظا بصلاح أبيهما ولم يذكر منهما صلاحا وقال جعفر بن محمد  كان بينهما وبين ذلك الأب الصالح سبعة آباء وقال مقاتل كان أبوهما ذا أمانة (تفسير زاد المسير

இந்த சிறுவர்களின் ஏழாவது தலைமுறையில் வாழ்ந்த தந்தை அமானிதத்தைப் பேணிப்பாதுகாப்பதில் மக்களிடம் சிறந்து விளங்கினார். அவரை நம்பி மக்கள் அவரிடம் எதையும் ஒப்படைப்பார்கள். அவர் சிறந்த நல்லடியாராக இருந்ததால் அவரது சந்ததியில் வந்த இந்த அநாதைச் சிறுவர்களின் சொத்தை கிழ்ர் அலை மூலம் அல்லாஹ் பாதுகாத்தான்.

إن عمر لما طلب تزكية أحد الشهود فزكاه رجل ، قال له عمر: هل جاورته؟ قال : لا ، قال : هل تعاملت معه في بيع وشراء؟ قال : لا ، قال: هل سافرت معه؟ قال: لا، قال: فأنت لا تعرفه (شرح بلوغ المرام

  ஒரு மனிதரை சாட்சிக்காக உமர் ரழி அவர்கள் அழைப்பதாக இருந்தார்கள். அதற்கு முன்பு அவரைப் பற்றி மற்றொருவரிடம் விசாரித்தார்கள். அப்போது அவர் அந்த மனிதரைப் பற்றி நல்ல விதமாக கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் எதை வைத்து நல்லவர் என்று அவரைக் கூறுகிறீர்கள் அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அவரோடு கொடுக்கல் வாங்கல் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார் அவரோடு பிரயாணம் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது உமர் ரழி கூறினார்கள். அப்படியானால் அவரைப் பற்றி  உனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள் மற்றொரு அறிவிப்பில் உமர் ரழி அவர்கள்  அந்த மனிதர் மஸ்ஜிதில் தொழுவதைப் பார்த்து விட்டு வந்து அவரைப் பற்றி நல்லவர் என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியதாக வந்துள்ளது.                                                 

பொறுப்புகளும் அமானிதம்

 நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம் செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப் பாழ்படுத்திய குற்றத்தைச் செய்தவராகி விடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ مَا قَالَ فَكَرِهَ مَا قَالَ وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ أَيْنَ أُرَاهُ السَّائِلُ عَنْ السَّاعَةِ قَالَ هَا أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِذَا ضُيِّعَتْ الْأَمَانَةُ فَانْتَظِرْ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرْ السَّاعَة  (بخاري)

ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். ''மறுமை நாள் எப்போது?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், ''நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை'' என்றனர். வேறு சிலர், ''அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை'' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, ''மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?'' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) ''அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்'' என்றார். அப்போது ''அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கவர், ''அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' எனக் கேட்டார். அதற்கு, ''எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி) நூல்: புகாரி (59)

2. ஜகாத் கொடுக்காதவர்களுக்கு உலகில் தண்டனைகள் பல வகை

அ. ஒரு பொருளின் ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் அப்பொருளின் தீங்கை விட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லா விட்டால் சேர்த்து வைத்த அந்தப் பொருளே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும்.

قال رسول الله صلى الله عليه وسلم ما تلف مال في بر ولا بحر إلا بحبس الزكاة (طبراني) عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما خالطت الصدقة أو قال:الزكاة مالا إلا أفسدته رواه البزار والبيهقي-وهذا الحديث يحتمل معنيين:أحدهما أن الصدقة ما تركت في مال ولم تخرج منه إلا أهلكته، ويشهد لهذا حديث عمر المتقدم:ما تلف مال في بر ولا بحر إلا بحبس الزكاة والثاني: أن الرجل يأخذ الزكاة وهو غني عنها فيضعها مع ماله فتهلكه، وبهذا فسره الإمام أحمد-

ஜகாத் எந்தப் பொருளுடன் கலந்து விட்டதோ அந்தப் பொருளை அது அழிக்காமல் விடாது என்பதற்கு இரு விளக்கம் 1.ஜகாத் தர வேண்டியவர் தரா விட்டால் அவருடைய மீதமுள்ள சொத்துக்களை அழித்து விடும். 2. ஜகாத் வாங்கத் தகுதியில்லாத ஒருவர் அதை வாங்கி தன்னுடைய சொத்துக்களுடன் அதை இணைத்தால் அந்த சொத்துக்களையும் அந்த ஜகாத் பணம் அழித்து விடும்

ஆ. ஒரு ஊரில் யாரும் ஜகாத் தரா விட்டால் அங்கு மழை பெய்யாது.மற்ற ஜீவராசிகளுக்காக பெய்தாலே தவிர

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ (ابن ماجة)

எந்த சமுதாயத்தில் ஆபாசம் மிகைத்து விடுமோ அந்த சமுதாயத்தில் இதுவரை கேள்விப்படாத வித விதமான நோய் வராமல் இருக்காது. 2. எந்த சமுதாயத்தில் எடை மோசடி அதிகரித்து  விடுமோ அந்த சமுதாயத்தில் பொருளாதார தட்டுப்பாடு, அநீத அரசர்களின் கொடுமைகள் வராமல் இருக்காது. 3. எந்த சமுதாயத்தில் ஜகாத் தரப்படாமல் விட்டு விடப்படுமோ அந்த சமுதாயத்தில் மழை பெய்யாது.மற்ற ஜீவராசிகளுக்காக பெய்தாலே தவிர 4.அல்லாஹ்வின் கட்டளையை மீறும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது எதிரிகளை அல்லாஹ் ஏவி விடுவான்.  அவர்கள் இவர்களின் சொத்துக்களை சூரையாடுவர் 5. சமுதாயத் தலைவர்கள் குர்ஆன் சட்டங்களை விட்டு விட்டு மனம்போன போக்கில்  மக்களை வழி நடத்தும்போது அல்லாஹ் அவர்களுக்கிடையே ஒற்றுமையில்லாத நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்

குடும்பத்தில் மனைவியின் ஆதிக்கம் முழுக்க முழுக்க   அதிகரித்து விடுவது  நல்லதல்ல.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلمإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلاَءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي

இளைஞர்களிடம் பொழுது போக்கு அம்சங்களின் மீது மோகம் அதிகரித்து விடும் 

நபி வழியை பின்பற்ற வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் நடிகர்களின் வழியை பின்பற்றி தங்களுடைய ஹேர் ஸ்டைலை வித விதமாக அமைத்துக் கொள்கிறார்கள். கரடிகளைப் போன்றும் நரிகளைப் போன்றும் தலைமுடிகளை அமைத்துக் கொண்டு அதையே ஸ்டைல் என்ற நினைக்கிறார்கள். மாற்றார்களின் கலாச்சாரம் நிறைய நமது இளைஞர்களிடம் ஊடுருவி உள்ளது

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயினை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் நிலைமையை கண்காணிக்க ஒரு ஒற்றனை அனுப்பினார்கள். அவன் முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்குச் சென்றான். அங்கு ஒரு இளைஞன் அழுது கொண்டிருந்தான். ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது நான் குர்ஆனை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன். 25 ஜுஸ்வுகள் முடிந்து இன்னும் 5 மீதி உள்ளது. இந்நிலையில் நான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் செய்ய விரும்புகிறேன். ஆனால் என் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை. நீ குர்ஆனை முடித்து விட்டு எங்கு வேண்டுமானாலும் போ என்கிறார்கள் அதனால் அழுகிறேன் என்றான். இதை அப்படியே அந்த ஒற்றன் தன் தலைமையிடம் வந்து சொன்ன போது  குர்ஆனுடன் தொடர்பில் முஸ்லிம்கள் இருக்கும் இந்த  நிலையில் நாம் சென்றால் ஜெயிக்க முடியாது இன்னும் சில காலம் செல்லட்டும்.  என்றனர். இருபது வருடம் கழித்து அதே ஒற்றன் முஸ்லிம்களின் பகுதிக்கு வந்த போது முன்பு போலவே ஒரு இளைஞன் அழுது கொண்டிருந்தான். ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் ஆனால் என் தாய் அவளை எனக்கு திருமணம் செய்து தர மறுக்கிறார்கள் என்றான் இதை அப்படியே அந்த ஒற்றன் தனது தலைமையிடம் சென்று சொன்னபோது இதுதான் தக்க தருணம் என்றைக்கு இளைஞர்கள் அவர்களுடைய வேதத்தின் சிந்தனையை விட்டும் மாறி காதல் சிந்தனைக்கு மாறி விட்டார்களோ இப்போது சென்றால் நாம் வென்று விடலாம் என்று வந்தார்கள். வென்றார்கள்.    

மதுப் பழக்கம் அதிகரித்து விடும் என்பதில் இருந்து படிப்பினை

இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில் அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிமான போதை இளைஞர்கள் தான்.  எனவே இதைப் பற்றி ஜும்ஆவில் பேசுவது மட்டுமே நிறைவான பலனைத் தராது. சம்பந்தப்பட்ட வாலிபர்களில் எவரும் ஜும்ஆ பயானுக்கு வரப்போவதில்லை. எனவே ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கென தனியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஏற்படுத்தியோ அல்லது பள்ளி வாசலில் உடற்பயிற்சி,  கராத்தே, ட்யூஷன் போன்ற பொதுவானவற்றை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை மஸ்ஜிதின் பக்கம் எப்படியேனும் வரவழைத்து அதன் வழியாக அவர்களைத் திருத்த முயற்சிப்பது ஒவ்வொரு முஸல்லிகள் மீதும் கடமையாகும்.                  

உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.                                                             

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்ட கஞ்சா, பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள பெட்டிக்கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சாக்லெட், பிஸ்கட்டுகளோடு சேர்த்து வைத்தே விற்பனை செய்கிறார்கள். அந்தக் கடைகளில் வழக்கமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். புதிதாக யாரும் சென்றால் கொடுக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்... பேருந்து நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களிடம்கூட மிகச் சுலபமாகப் போதை மருந்துகள் கிடைக்கின்றன. பல இடங்களில் காவல்துறைக்கும் தெரிந்தே இத்தகைய போதை விற்பனை நடைபெறுகிறது.                                                                                               

மக்களிடம் பகைமையை உண்டாக்கி, இறைவனின் நினைவைத் தடுக்க ஷைத்தான் அறிமுகப்படுத்தியது மதுவும், சூதாட்டமும் 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91)المائدة

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.  இதைக் கண்ட     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம்     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது


இந்திய அளவில் அதிகம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என புள்ளி விபரம் கூறுகிறது. முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் இடங்களைத் தேர்ந்தெடுத்து  சம்பந்தப்பட்ட ஏஜென்ட்டுகள்  மற்றவர்களுக்குத் தருவதை விட குறைந்த விலைக்கு  கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை விற்று முஸ்லிம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி விடுகின்றனர் என ஆதாரப் பூர்வமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் ஊடகங்கள்

 08-11-2024   بسم الله الرحمن الرحيم   இஸ்லாமிய வெறுப்பை  விதைக்கும் ஊடகங்கள்      https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...