வியாழன், 30 டிசம்பர், 2021

புத்தாண்டுக் கொண்டாட்டமும் போதை இளைஞர்களும்

 

31-12-2021

26-05-1443

 

بسم الله الرحمن الرحيم                     

போதை இளைஞர்களும்,

புத்தாண்டுக் கொண்டாட்டமும்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

புத்தாண்டு என்றாலே  மதுவை ஞாபகப்படுத்தும் அளவுக்கு வருடத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மது விற்பனை அதிகம் நடைபெறும் நாள் ஜனவரி 1 ம் தேதி  ஆகும்.  மேலும் இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில் அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிமான போதை இளைஞர்கள் தான்.  எனவே இதைப் பற்றி ஜும்ஆவில் பேசுவது மட்டுமே நிறைவான பலனைத் தராது. சம்பந்தப்பட்ட வாலிபர்களில் எவரும் ஜும்ஆ பயானுக்கு வரப்போவதில்லை. எனவே ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கென தனியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஏற்படுத்தியோ அல்லது பள்ளி வாசலில் உடற்பயிற்சி,  கராத்தே, ட்யூஷன் போன்ற பொதுவானவற்றை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை மஸ்ஜிதின் பக்கம் எப்படியேனும் வரவழைத்து அதன் வழியாக அவர்களைத் திருத்த முயற்சிப்பது ஒவ்வொரு முஸல்லிகள் மீதும் கடமையாகும்.                 

உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.                                                             

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்ட கஞ்சா, பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள பெட்டிக்கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சாக்லெட், பிஸ்கட்டுகளோடு சேர்த்து வைத்தே விற்பனை செய்கிறார்கள். அந்தக் கடைகளில் வழக்கமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். புதிதாக யாரும் சென்றால் கொடுக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்... பேருந்து நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களிடம்கூட மிகச் சுலபமாகப் போதை மருந்துகள் கிடைக்கின்றன. பல இடங்களில் காவல்துறைக்கும் தெரிந்தே இத்தகைய போதை விற்பனை நடைபெறுகிறது.                                                                                              

மக்களிடம் பகைமையை உண்டாக்கி, இறைவனின் நினைவைத் தடுக்க ஷைத்தான் அறிமுகப்படுத்தியது மதுவும், சூதாட்டமும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91)المائدة

மதுவைத் தடை செய்த பின் அதன் ஞாபகமும் வரக்கூடாது என மது ஊற்றப் பயன்படும் பாத்திரத்தை நபி ஸல் தடை செய்தார்கள்

عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا (مسلم)

வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் பச்சையாக சாப்பிட்டு அதனால் ஏற்படும் வாடையைக் கூட மார்க்கம் விரும்புவதில்லை

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ... مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ (مسلم

யார் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வேக வைக்காத நிலையில் சாப்பிட்டாரோ அவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம்.

பீடி, சிகரெட் மார்க்கத்தில் வெறுக்கப்பட்டவை என்பதற்கு இதுவும் ஆதாரம்

அபூக்கர் ரழி அவர்கள் அறியாமைக் காலத்திலும் மதுவைத் தொட்டதில்லை. அதற்கான காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது

عن أبي العالية الرياحي قال : قيل لأبي بكر الصديق في مجمع من أصحاب رسول الله صلى الله عليه و سلم : هل شربت الخمر في الجاهلية ؟ فقال : أعوذ بالله فقيل : و لم ؟ قال : كنت أصون عرضي و أحفظ مروءتي فإن من شرب الخمر كان مضيعا في عرضه و مروءته قال : فبلغ ذلك رسول الله صلى الله عليه و سلم فقال : صدق أبو بكر صدق أبو بكر مرتين ( تاريخ الخلفاء

அபூபக்கர் ரழி கூறினார்கள்- நான் என் மனித த்தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மதுவை அருந்துபவர் மனித த்தன்மையை இழந்து விடுகிறான் என்றார்கள்.  ஹழ்ரத் அபூபக்கர் ரழி கூறியதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். வக்கிர புத்தியும் வன்முறை குணமும் குடிகாரனுக்கு ஏற்பட்டு விடுகிறது. மஹ்ரமான பெண்களிடம் கூட தவறாக நடந்து கொள்வார்கள்.

அபூக்கர் ரழி அவர்கள் அறியாமைக் காலத்திலும் மதுவைத் தொட்டதில்லை. அதற்கான காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة) 

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.  இதைக் கண்ட     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம்     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது

பாவங்களுக்கெல்லாம் தாய் என போதை வஸ்துக்களை உஸ்மான் ரழி அவர்கள் வர்ணித்தார்கள்

عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ اجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ إِنَّهُ كَانَ رَجُلٌ مِمَّنْ خَلَا قَبْلَكُمْ تَعَبَّدَ فَعَلِقَتْهُ امْرَأَةٌ غَوِيَّةٌ فَأَرْسَلَتْ إِلَيْهِ جَارِيَتَهَا فَقَالَتْ لَهُ إِنَّا نَدْعُوكَ لِلشَّهَادَةِ فَانْطَلَقَ مَعَ جَارِيَتِهَا فَطَفِقَتْ كُلَّمَا دَخَلَ بَابًا أَغْلَقَتْهُ دُونَهُ حَتَّى أَفْضَى إِلَى امْرَأَةٍ وَضِيئَةٍ عِنْدَهَا غُلَامٌ وَبَاطِيَةُ خَمْرٍ فَقَالَتْ إِنِّي وَاللَّهِ مَا دَعَوْتُكَ لِلشَّهَادَةِ وَلَكِنْ دَعَوْتُكَ لِتَقَعَ عَلَيَّ أَوْ تَشْرَبَ مِنْ هَذِهِ الْخَمْرَةِ كَأْسًا أَوْ تَقْتُلَ هَذَا الْغُلَامَ قَالَ فَاسْقِينِي مِنْ هَذَا الْخَمْرِ كَأْسًا فَسَقَتْهُ كَأْسًا قَالَ زِيدُونِي فَلَمْ يَرِمْ حَتَّى وَقَعَ عَلَيْهَا وَقَتَلَ النَّفْسَ فَاجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا وَاللَّهِ لَا يَجْتَمِعُ الْإِيمَانُ وَإِدْمَانُ الْخَمْرِ إِلَّا لَيُوشِكُ أَنْ يُخْرِجَ أَحَدُهُمَا صَاحِبَهُ  (نسائ

உஸ்மான் ரழி அவர்கள் கூறினார்கள் பாவங்களுக்கெல்லாம் தாயான மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் முற்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். அவருக்கு ஒரு  நடத்தை  கெட்ட பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது.  ஒருநாள் அவள்  தன் பணிப் பெண்ணை அனுப்பி  ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டதால் தனக்காக சாட்சி சொல்ல வரும்படி சொல்லியனுப்பினாள். அவரும் அவளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அங்கு வந்தார்.  ஆனால் அவர் வந்தவுடன் அப்பெண் கதவைத் தாழிட்டார். அங்கு அழகிய தோற்றத்தில் அவள் இருக்க அருகில் ஒரு குழந்தை இருந்தது. மதுவும் அருகில் இருந்தது.   அப்போது அப்பெண்  அவரிடம் சாட்சி சொல்ல உம்மை அழைக்கவில்லை. மாறாக நீ  என்னிடம் உறவு கொள்ள வேண்டும். அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும். அல்லது இக்குழந்தையைக் கொல்ல வேண்டும். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்த நகர முடியாது என்று கூற, அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஆகி விட்டது. அப்போது அவர்  மதுவை அருந்தினால் அந்தப் பாவம் நம்மோடு நின்று விடும். மற்ற இரண்டை விட்டும் தப்பித்து விடலாம் என்றெண்ணி மதுவை ஊற்றித் தரக்கூறினார். சற்று நேரத்தில் போதை  ஏறியவுடன்  அவளிடம் உறவும் கொண்டு விட்டார். போதையில் அக்குழந்தையையும் கொன்று விட்டார்.  எனவே மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக  ஈமானும்  மதுப்பழக்கத்தில் மூழ்குவதும்  ஒரு மனிதனிடம் ஒருபோதும் ஒன்று சேராது என உஸ்மான் ரழி கூறினார்கள்.           

மதுவுக்கு அடிமையானவன் சிலை வணக்கம் செய்தவனைப் போன்று அல்லாஹ்வை சந்திப்பான்

عَنْ أَبِي الدَّرْدَاءِ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدْمِنُ الْخَمْرِ كَعَابِدِ وَثَنٍ (ابن ماجة-  عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "من لقي الله مدمن خمر, لقيه كعابد وثن" (صحيح ابن حبان.

மது அருந்திய நிலையில் இருப்பவனிடம் ஈமான் இருக்காது. அதே நிலையில் இறந்து விட்டால்...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ (بخاري

மதுவில் சில நிவாரணங்கள் இருக்கிறதே என்று பலமுறை கேள்வி எழுப்பியவர்களிடம் நபி ஸல் கூறிய ஒரே பதில் அது நோயை உண்டாக்குமே தவிர நோயை குணப்படுத்தாது என்பதாகும். இன்றும் மது அருந்துவர்கள் பல காரணங்கள் சொல்லி நியாயப்படுத்துவார்கள்.

عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ ذَكَرَ طَارِقُ بْنُ سُوَيْدٍ أَوْ سُوَيْدُ بْنُ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَمْرِ فَنَهَاهُ ثُمَّ سَأَلَهُ فَنَهَاهُ فَقَالَ لَهُ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهَا دَوَاءٌ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا وَلَكِنَّهَا دَاءٌ (ترمذي

போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக்கியவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை’ (புகாரி)

இந்திய அளவில் அதிகம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என புள்ளி விபரம் கூறுகிறது. முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் இடங்களைத் தேர்ந்தெடுத்து  சம்பந்தப்பட்ட ஏஜென்ட்டுகள்  மற்றவர்களுக்குத் தருவதை விட குறைந்த விலைக்கு  கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை விற்று முஸ்லிம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி விடுகின்றனர் என ஆதாரப் பூர்வமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன                         

புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது அறிவுக்கு ஏற்புடைய விஷயமா ?

புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பம் என்பது அதாவது காலங்கள் கடந்து கொண்டிருப்பது கவலையான விஷயமே தவிர மகிழ்ச்சியான விஷயம் அல்ல. காரணம் வாழ்க்கை எனும் பயணம் உண்மையில் மரணத்தை நோக்கிய பயணமாகும். ஒருவருடைய 80 வருட வாழ்க்கையில்  20 வயது முடிந்து 21 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 60 வருடம் தான். அதேபோல் 30 வயது முடிந்து 31 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 50 வருடம் தான். அதேபோல் 70 வயது முடிந்து 71 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 10 வருடம் தான். ஆகவே ஒருவரின் ஆயுள் குறைந்து கொண்டேயிருப்பதை ஆஹா என் ஆயுள் குறைந்து விட்டது என இனிப்பு வழங்கி கொண்டாடுவதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. இது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும். அதே நேரத்தில் இஸ்லாமியப் புத்தாண்டு போன்ற தினங்களில் ஒரு முஸ்லிம் இத்தனை வருடங்களை கடந்து விட்டோம். இனி மீதமுள்ள என் வாழ்நாளில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக வாழ வேண்டும் என்று எண்ணுவதிலும், அதை செயல்படுத்தத் துவங்குவதிலும் தவறில்லை 

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்பது மூட நம்பிக்கையாகும்

முஸ்லிம்களின் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். பல பள்ளிவாசல்களில் ஆங்கிலப் புத்தாண்டு அன்று சுப்ஹு தொழுகையில் கூட்டம் நிரம்பி வழியும். ஜனவரி 1-ம் தேதி மட்டும் தொழுதால் வருடம் முழுவதும் தொழுததாக ஆகி விடும் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். இதுவும் ஒரு வகையில் மாற்று மத பண்டிகைகளை நாம் கொண்டாடுவது போலாகும்          

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு

அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளை நாம் கொண்டாடுவது பற்றி உலகின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களின் ஃபத்வா

قال ابن القيم رحمه الله  وأما التهنئة بشعائر الكفر المختصة به فحرام بالاتفاق  مثل أن يهنئهم بأعيادهم وصومهم  فيقول  عيد مبارك عليك ، أو تهنأ بهذا العيد ونحوه ، فهذا إن سلم قائله من الكفر فهو من المحرمات ، وهو بِمَنْزِلة أن يُهَنِّئه بسجوده للصليب ، بل ذلك أعظم إثماً عند الله ، وأشد مقتاً من التهنئة بشرب الخمر ، وقتل النفس ، وارتكاب الفَرْج الحرام ونحوه  وكثير ممَن لا قَدْر للدِّين عنده يقع في ذلك ولا يدري قبح ما فعل ، فمن هنأ عبداً بمعصية أو بدعة أو كُفر فقد تَعَرَّض لِمَقْت اللّه وسَخَطه (احكام اهل الذمة)

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது 'அஹ்காமு அஹ்லித்திம்மா' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் 'குப்ர்' அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக வாழ்த்துகிறாரோ (உதாரணமாக, மது அருந்தியதற்காக, அல்லது கொலை செய்ததற்காக, அல்லது விபச்சாரத்திற்காக ,) அல்லது பித்அத்திற்காக அல்லது குஃப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்' வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!        

மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை. அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும் ஹராமாகும்.

மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளை நாம் கொண்டாடுவது பற்றி சஹாபாக்களின் எச்சரிக்கை

عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ قَالَ قَالَ عُمَرُ رَضِىَ اللَّهُ عَنْهُ  لاَ تَعَلَّمُوا رَطَانَةَ الأَعَاجِمِ وَلاَ تَدْخُلُوا عَلَى الْمُشْرِكِينَ فِى كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ فَإِنَّ السُّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ. (رَطَانَةَ :هي كلام لا يفهم) عن عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ اجْتَنِبُوا أَعْدَاءَ اللَّهِ فِى عِيدِهِمْ (سنن الكبري للبيهقي) عَنْ عن عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ  مَنْ بَنَى بِبِلاَدِ الأَعَاجِمِ وَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ (سنن الكبري)

வாழ்க்கை என்பது மவ்த்தை நோக்கிய ஒரு பயணம் இந்தப் பயணத்தில் பலரும் தன் வாகனத்தில் ஏற நம்மை அழைப்பார்கள். ஷைத்தான்,  நஃப்ஸ், நண்பன் இப்படியாக பலரும் நம்மை அழைக்கும்போது கண்ட கண்ட வாகனத்தில் ஏறினால் நாம் போய்ச் சேருமிடம் நரகமாகி விடலாம். மற்றொரு புறம் குர்ஆனும் நம்மை அழைக்கும். அதன் வழியில் சென்றால் சுவனம்.

ஒரு பேருந்து நிலையத்தில் நிற்கும்போது தமது பஸ்ஸில் ஏறும்படி பலரும் கூவிக்கூவி நம்மை அழைத்தாலும் நாம் நிதானமாக யோசித்து எந்தப் பேருந்து பாதுகாப்பாகவும், விரைவாகவும் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என தேர்ந்தெடுக்கிறோம். வாழ்க்கைப் பயணம் என்பது அதை விட மிக முக்கியமானது

عن إبراهيم بن أدهم أنه كان يسير إلى بيت الله ، فإذا أعرابي على ناقة له فقال : يا شيخ إلى أين ؟فقال إبراهيم إلى بيت الله ، قال كأنك مجنون لا أرى لك مركباً ؛ ولا زاداً ، والسفر طويل ، فقال إبراهيم : إن لي مراكب كثيرة ولكنك لا تراها ، قال : وما هي ؟قال : إذا نزلت على بلية ركبت مركب الصبر ، وإذا نزل على نعمة ركبت مركب الشكر وإذا نزل بي القضاء ركبت مركب الرضا ، وإذا دعتني النفس إلى شيء علمت أن ما بقي من العمر أقل مما مضى فقال الأعرابي : سر بإذن الله فأنت الراكب وأنا الراجل.( تفسير الرازي

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் ஒருமுறை நடந்தே ஹஜ்ஜுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் வாகனத்தில் இவரைக் கடந்து சென்ற  ஒருவர் இப்றாஹீமே எங்கு செல்கிறீர்?  எனக்கேட்க, நான் கஃபாவை நோக்கிச் செல்கிறேன் என்று கூறிய போது உடனே அவர் உங்களிடம் எந்த வாகனமும், உணவும் இல்லாத நிலையில் நீண்ட தொலைவில் உள்ள கஃபாவுக்குச் செல்வதாக கூறுகிறீர் உமக்கென்ன பைத்தியமா?  என்றார். அதற்கு  இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் உம்மால் பார்க்க இயலாத எத்தனையோ வாகனங்கள் என்னிடம் உள்ளன. அதில் நான் பயணம் செய்கிறேன். எனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் பொறுமை எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். எனக்கு ஏதேனும் அல்லாஹ்வின் உபகாரம் கிடைத்தால் நன்றி செலுத்துதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன்.  நான் துஆ கேட்ட பின்பும் அல்லாஹ்வின் விதியின் படி நான் விரும்பாதது நடைபெற்றால் விதியைப் பொருந்திக் கொள்ளுதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என்னுடைய நஃப்ஸு ஏதேனும் தீமையை எனக்குத் தூண்டினால் நான் வாழ்ந்த காலங்களை விட நான் வாழப்போகும் காலங்கள் குறைவு என்று எண்ணும்அந்த வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என சொல்லிக் கொண்டேயிருக்க உடனே அந்த மனிதர் பதில் சொல்ல முடியாமல் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நீங்கள் தான் உண்மையிலேயே வாகனத்தில் செல்பவர் நான் நடந்து செல்பவன் என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்று விட்டார் 

 

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...