வியாழன், 12 அக்டோபர், 2023

மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்கும் போராட்டம்

 


மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்கும் போராட்டம்

முதலில் பைத்துல் முகத்தஸைக் கட்டியது ஆதம் (அலை) அல்லது மலக்குகள் என இரு அறிவிப்புகள் உள்ளன.

أن أول من أسس المسجد الأقصى آدم عليه السلام وقيل الملائكة وقيل سام بن نوح عليه السلام وقيل يعقوب عليه السلام فعلى الأولين يكون ما وقع ممن بعدهما تجديدا كما وقع في الكعبة وعلى الأخيرين يكون الواقع من إبراهيم أو يعقوب أصلا وتأسيسا ومن داود تجديدا لذلك وابتداء بناء فلم يكمل على يده حتى أكمله سليمان عليه السلام (فتح الباري

ذكر بن هشام في كتاب التيجان أن آدم لما بني الكعبة أمره الله بالسير إلى بيت المقدس وأن يبنيه فبناه ونسك فيه وبناء آدم للبيت مشهور

عن أَبي ذَرٍّ - رضى الله عنه - قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ، أَىُّ مَسْجِدٍ وُضِعَ فِى الأَرْضِ أَوَّلُ قَالَ « الْمَسْجِدُ الْحَرَامُ » . قَالَ قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ « الْمَسْجِدُ الأَقْصَى » . قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ « أَرْبَعُونَ سَنَةً (بخاري

 40 வருட இடைவெளி என்ற இந்த ஹதீஸ் ஆதம் (அலை) கட்டியதைக் குறிக்கும்.அல்லது மலக்குகள் கட்டியதைக் குறிக்கும்

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரலாறு

 பிர்அவ்னின் துன்பத்திலிருந்து யூதர்களை மீட்டு நபி மூஸா (அலை) அவர்கள் இங்கு குடியேறினார்கள். அங்கே மூஸா (அலை)அவர்கள் இறைவனின் கட்டளைப்படி பழைய அஸ்திவாரத்தின்(பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நபியினால் கட்டப்பட்ட பள்ளியின்) மீது ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். மூஸா (அலை) அவர்களுக்குப் பின் ஹாரூன் (அலை) அவர்கள் இப்பள்ளிவாசலைப் பொறுப்பேற்றுப் பாதுகாத்து வந்தார்கள். ஹாரூன் (அலை) அவர்களுக்குப் பின் யூதர்கள் பள்ளிவாசலைப் பாழடைய வைத்து விட்டனர். சில காலங்களுக்குப் பின் தாவூத் (அலை) இந்த நகரை யூத சாம்ராஜ்ஜியத்தின் தலை நகராகப் பிரகடனம் செய்தார்கள். நபி தாவூத் (அலை) அவர்களைத் தொடர்ந்து அவர்களின் மகன் ஸுலைமான் (அலை) இந்தப் பிரதேசத்தின் ஆட்சியாளராக இருந்து பைத்துல் முகத்தஸை புதுப்பித்தார்கள். ஸுலைமான் (அலை) மரணித்த பின்பு இஸ்ரவேலர்களின் ஆட்சி சுமார் நான்கு நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது. அதன்பின்பு 'புக்து நஸர்' என்ற அரசன் அழிவை ஏற்படுத்தினான். புக்துநஸர் பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி தீக்கிரையாக்கினான். தவ்ராத் வேதமும், பத்துக் கட்டளைகளும், தாபூத் என்ற பெட்டியும், மூஸா (அலை) அவர்களின் அற்புதக் கைத்தடியும் நெருப்புக்கு இரையாகின. பள்ளிவாசலை இடித்துத் தரை மட்டமாக்கினர்.                                                                

புக்துநஸர் கையில் அகப்படாமல் யூதர்கள் தப்பியோடினார்கள். இப்படி ஓடியவர்களில் சிலர் யத்ரிப் (இப்போதைய மதீனா) பிலும், சிரியாவிலும் குடியேறினார்கள். இவ்வாறாக நாற்பது ஆண்டுகள் வெறும் காடாகவே பைத்துல் முகத்தஸ் இருந்தது. யூதர்கள் இப்படி அழிவுற்றதால் தவ்ராத் வேதம் ஓரிரு வருடங்களில் ஒரு எழுத்தேனும் இல்லாமல் அழிந்து போயிற்று. அல்லாஹ் உஸைர்(அலை)அவர்களுக்கு தவ்ராத் வேதத்தைக் கற்றுத்தந்து அவர்களை பைத்துல் முகத்தஸ் சென்று  அங்கே மக்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படி நபியாக அனுப்பி வைத்தான். உஸைர் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸ் வந்தபோது அங்கு யாரும் காணப்படவில்லை. குட்டிச் சுவர்களும், மணல் மேடுகளையுமே அங்கு காணக்கூடியதாக இருந்தது.இவ்வாறு அழிந்துபோன நகரம் எவ்வாறு உயிர் பெறும்? யார் இதைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவார்கள்? என எண்ணினார்கள். இறைவன் அவர்களுக்குத் தூக்கத்தைக் கொடுத்தான். (ஒரு மரத்தடியில் நூறு வருடம் தூங்கினார்கள்  அல்குர்ஆன் (02:259)

இந்த நிகழ்வு இடம்பெற்று சுமார் 50 ஆண்டுகளின் பின்னர் கி.மு. 538ல்  பாரசீக மன்னர் ஒருவர் பலஸ்தீனைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். கி.மு. 515ல் எரிந்து சாம்பலாகிய ஆலயத்தை சீரமைத்தார்.

கி.மு. 332ல் ஜெரூஸலம் பாரசீகரிடமிருந்து கிரேக்கர் வசமாகியது. கிரேக்கர் இங்கிருந்த ஆலயத்தில் சிலைகளை வைத்து வணங்க ஆரம்பித்தனர். கி.மு.164ல் கிரேக்கரிடமிருந்து மீண்டும் யூதர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அப்போதிருந்து 150 ஆண்டுகள் யூதர்களின் ஆட்சி நிலவியது. பிறகு நபி ஈஸா(அலை) அவர்களின் பிறப்பைத் தொடர்ந்து ரோமர்கள்  இந்நகரைக் கைப்பற்றினர். கிறிஸ்தவர்களான இவர்களின் ஆட்சி உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை நீடித்தது. இதற்கிடையில் சில ஆட்சி மாற்றங்கள் நடந்தன. ஆனாலும் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் கிறிஸ்தவர்கள் தான்.

கி.பி. 33ல் நபி ஈஸா (அலை) அவர்கள் இங்கிருந்து விண்ணுக்கு உயர்த்தப்பட்டார்கள்.

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு பைத்துல் முகத்தஸை வெற்றி கொள்ளுதல்:*

கி.பி. 636 உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியிலிருந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப்பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலீபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். ஆனால் ரோமப் பேரரசும், ஐரோப்பிய உலகமும் அப்போதிருந்தே வெறி பிடித்துக் கதறியது, பழிவாங்க காத்திருந்தனர். ஒன்றல்லஇரண்டல்ல…. சுமார் 450 ஆண்டுகள் கடந்தன.

மீண்டும் இஸ்லாமியர்கள் பைத்துல் முகத்தஸை இழந்தனர்:*

11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதமும், குரோதமும் தலைக்கேரியதன் காரணமாக சக முஸ்லிமை அழிக்க ஐரோப்பிய திருச்சபைக்கு சிலர் அழைப்பு விடுத்து மாபெரும் பிழையை செய்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய அவர்கள் தங்களி 450 வருட பழியை தீர்த்து ஜெருசலத்தை மீட்க களத்தில் இறங்கினர். சிலுவைப் போர் என்ற பெயரில் அழைப்பு விடுத்து ஜெருசலத்தை நோக்கி வந்தனர். வரும் வழியில் கண்ணில் கிடைக்கும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் அழித்தனர். இதனால் 1095 ஆம் ஆண்டு நம் (முஸ்லிம்களின்) முதல் கிப்லா அவர்களின் கையில் சென்றது.

பைத்துல் முகத்தஸை மீட்டெடுக்க புறப்பட்டு வந்த மாவீரர் சலாஹுத்தீன் அய்யூபி

 முதல் கிப்லாவை இழந்த உலக முஸ்லிம் சமூகம் தனது நிலையை எண்ணி வருந்தியது, இழந்த நிலத்தையும், இறையில்லத்தையும் மீட்டிட 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கி.பி. 1187ம் ஆண்டு மாவீரர் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் ஜெருஸலம் மீண்டும் முஸ்லிம்கள் கையில் வந்தது.  

 

  கி.பி. 621ல் அல்குர் ஆனின் 17வது அத்தியாயமான அல்-இஸ்ரா குறிப்பிடும், நபியவர்களது வாழ்வில் இடம்பெற்ற அதிசய நிகழ்வான விண்ணுலக யாத்திரையும் இங்கிருந்துதான் துவங்கியது. இப்பயணத்தின் போது  தொழுகை கடமையாக்கப்பட்டது. அதன்பின் சுமார் பதினேழு மாதங்கள் வரை  இந்த பைத்துல் முகத்தஸே முஸ்லிம்களின் கிப்லாவாக இருந்து வந்தது.

 1219ல் மீண்டும் கிறிஸ்தவர்களின் வசம் சென்றது. கி.பி.1239ல் முஸ்லிம்கள் இதனை மீண்டும் கைப்பற்றினர். கி.பி.1243ல் மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானபோதும் 1244ல் முஸ்லிம்கள் இதனை மீண்டும் வெற்றி கொண்டனர்.

1917ல் ஆங்கிலேயர்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்தனர். 1922ல் யூதர்களுக்கான ஒரு தனி நாடு பலஸ்தீன மண்ணில் அமைய வேண்டுமென ஒரு கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களின்  ஒத்துழைப்புடன் யூதர்கள் பலநாடுகளிலுமிருந்தும் வந்து இங்கு குடியேறலாயினர். முஸ்லிம்களை  பலஸ்தீனிலிருந்து விரட்டுவதும் அவர்களது நிலங்களை அபகரிப்பதுமே இதன் அடிப்படை நோக்கமாக அமைந்திருந்தது.

ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَمَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِنَ اللَّهِ وَحَبْلٍ مِنَ النَّاسِ (112)البقرة

அல்லாஹ்வின் உதவியோ அல்லது பிற மக்களின் உதவியோ இல்லா விட்டால் அந்த யூதர்களுக்கு என்றென்றும் இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ் நிச்சயமாக இவர்களுக்கு உதவ மாட்டான். பிற நாடுகளின்ஒத்துழைப்பில் இவர்கள் ஆட்டம் போடுகின்றனர். மக்கள் தொகையில் இந்த யூதர்கள் வெறும் ஒன்றரை சதவீதம் மட்டுமே.

யூதர்கள் முன்பு இருந்த நாடுகளில் அந்த நாட்டுக்கு எதிராகவே வேலை செய்து வந்தனர். ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்கள் ஹிட்லரின் இராணுவ இரகசியங்களை அறிந்து பிரிட்டனுக்கு உளவு சொன்னதால் முதலாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெயிக்க முடியவில்லை. இதை அறிந்த ஹிட்லர் இரண்டாம் உலகப் போரில் யூதர்களைத் தேடித் தேடிக் கொன்றார். சுமார் 60 இலட்சம் யூதர்களைக் கொன்ற ஹிட்லர் நான் மீதம் சில யூதர்களை விட்டு வைப்பதற்குக் காரணம் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என பின்னால் வரும் சமூகம் புரிந்து கொள்வதற்காகத் தான் என்றார்.

ஆங்கிலேயர்களுக்கு உளவு வேலை பார்த்த நன்றிக்காக ஆங்கிலேயர்கள் இந்த யூதர்களுக்கென தனிநாடு அமைய ஒத்துழைப்புக் கொடுத்தனர். உண்மையில் இந்த இரு சாராரும் ஆதி காலத்து பகைவர்கள். காரணம் கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதும் இயேசுவை யூதர்கள் தான் கொன்றார்கள் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். 

1948ல் பலஸ்தீனில் இஸ்ரேல் என்ற ஒரு புது நாடு உருவாக்கப்பட்டது. இந்த அக்கிரமத்தை அன்று 56 நாடுகளின் நலன்களைக் காப்பதற்கு உருவாக்கப்பட்ட ஐ.நா. சபை அங்கீகரித்தது. 1949ல் ஐ.நா. சபையின் அங்கீகாரத்துக்கும் மேலதிகமாக இஸ்ரேல் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது. 1967ல் அயலிலுள்ள அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஆறு நாட்கள் மட்டுமே நீடித்த இந்த யுத்தத்தில் சினாய்ப் பாலைவனத்தையும் ஜெரூஸலம் பழைய நகரையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. 1967ம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேல் யுத்தத்தைத் தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் இஸ்ரேலிய யூதர்களின் பிடிக்குள் சென்றுவிட்டது. முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல்-அக்ஸா ஆக்கிரமிக்கப்பட்டு 56 ஆண்டுகளாகி விட்டன. பைத்துல் கைப்பற்றிய யூதர்கள் அதன் புனிதத்துவத்தைக் கெடுக்கும் வகையில் பல நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல நபிமார்களின் கப்ருகள் அங்கு உள்ளன.

பல நபிமார்கள் அங்கு அடக்கம் செய்யப்படுவதை விரும்பினார்கள்.

قال أبو بردة بن أبي موسى الأشعري عن أبيه قال : نزل رسول الله صلى الله عليه و سلم بأعرابي فأكرمه فقال له رسول الله صلى الله عليه و سلم : تعهدنا ائتنا فأتاه الأعرابي فقال له رسول الله صلى الله عليه و سلم : ما حاجتك ؟ فقال : ناقة برحلها و بحر لبنها أهلي فقال رسول الله صلى الله عليه و سلم : عجز هذا أن يكون كعجوز بني إسرائيل فقال له أصحابه : ما عجوز بني إسرائيل يا رسول الله ؟ فقال : إن موسى حين أراد أن يسير ببني إسرائيل ضل عنه الطريق فقال لبني إسرائيل ما هذا ؟ قال فقال له علماء بني إسرائيل : إن يوسف عليه السلام حين حضره الموت أخذ علينا موثقا من الله أن لا نخرج من مصر حتى تنقل عظامه معنا فقال موسى : أيكم يدري أين قبر يوسف ؟ فقال علماء بني إسرائيل ما يعلم أحد مكان قبره إلا عجوز لبني إسرائيل فأرسل إليها موسى فقال : دلينا على قبر يوسف قالت : لا و الله حتى تعطيني حكمي فقال لها : ما حكمك ؟ قالت : حكمي أن أكون معك في الجنة فكأنه كره ذلك قال فقيل له : اعطها حكمها فأعطاها حكمها فانطلقت بهم إلى بحيرة مستنقعة ماء فقالت لهم : انضبوا هذا الماء فلما انضبوا قالت لهم : احفروا فحفروا فاستخرجوا عظام يوسف فلما أن أقلوه من الأرض إذ الطريق مثل ضوء النهار  (حاكم

 

  கருத்து- நபி ஸல் அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு கிழவி ஆசைப்பட்டது போன்று நீங்கள் ஆசைப்படுங்கள் என்று கூறினார்கள் உடனே தோழர்கள் அப்படி அவர் என்ன ஆசைப்பட்டார் என்று கேட்க, நபி மூஸா அலை எகிப்தில் இருந்து தன் உம்மத்தை அழைத்துக் கொண்டு பாலஸ்தீனம் நோக்கி புறப்பட்ட போது  மூஸா நபியிடம் சிலர்கள்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்  இந்த எகிப்தில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் ஆனால் அவர்கள் ஒரு வஸிய்யத் செய்துள்ளார்கள் நீங்கள் என்றாவது ஒருநாள் ஷாமுக்கு குடியேறுவீர்கள்  அன்று என்னுடைய உடலையும் அங்கு கொண்டு சென்று விடுங்கள்  என்று  வஸிய்யத் செய்துள்ளார்கள் என்று கூறிய போது அதை மூஸா அலை ஏற்றுக் கொண்ட பின் உங்களில் யாருக்கேனும் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் உடைய  கப்ரு தெரியுமா என்று கேட்க, எங்களில் யாருக்கும் தெரியாது ஆனால் ஒரே ஒரு மூதாட்டிக்கு மட்டும் தெரியும் என்றார்கள் உடனே  அந்த மூதாட்டியை சந்திப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் விரைந்தார்கள் அவரின் இருப்பிடத்தை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் கேட்ட போது அந்தப் பெண்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  கப்ரை காட்டுவதற்கு ஒரு மாபெரும் கோரிக்கையை முன்வைத்தார்.  மூஸா நபியே நான் உங்களோடு சுவனத்தில் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சிபாரிசு செய்தால் நான் கப்ரை காட்டுகிறேன் என்றார். மூஸா அலை அவர்கள்  யோசித்தார்கள். கப்ரை காட்டுவதற்கு இவ்வளவு பெரிய நிபந்தனை விதிக்கிறாரே என யோசித்தபோது அல்லாஹ் நபிக்கு வஹீ அறிவித்தான் மூஸாவே அப்பெண்ணின் நிபந்தனையை ஏற்று நீங்கள் துஆ செய்யுங்கள் நான் அதை நிறைவேற்றுவேன். ஏனெனில் அந்தப் பெண் தனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து தினமும் என்னிடம் யாஅல்லாஹ் நபிமார்களோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தைத் தா! என துஆ செய்து வந்தார் ஆகவே அவரை நிச்சயம் நான் சுவனத்தில் புகுத்துவேன் என்றான் அதன் பின் நபி மூஸா அலை துஆ செய்தார்கள் அப்பெண் கப்ரை காட்டினார் நபி  யூசுஃப் அலை அவர்களின்  கப்ரு தோண்டப்பட்டு பின்பு ஜெரூஸலம் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.                 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِمَا السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ (بخاري) باب مَنْ أَحَبَّ الدَّفْنَ فِى الأَرْضِ الْمُقَدَّسَةِ أَوْ نَحْوِهَا- كتاب الجنائز

மூஸா (அலை) அவர்களிடம் மலக்குல் மவ்த் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து போது உயிரைக் கைப்பற்ற அனுமதி கேட்க, மூஸா (அலை) அவர்கள் அவரது கண்ணில் அறைந்து விட்டார்கள். அந்த மலக் அதே உருவத்துடன் அல்லாஹ்விடம் வந்து மவ்த்தை விரும்பாத ஒருவரிடம் என்னை அனுப்பி விட்டாயே என்று முறையிட அல்லாஹ் அவரது கண்ணை சரியாக மீண்டும் பொருத்தி மீண்டும் மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். ஒரு மாட்டின் முதுகு மீது அவர் கை வைக்கட்டும். அதில் எத்தனை முடிகள் அடங்குமோ ஒரு முடிக்கு ஒரு வருடம் வீதம் அவ்வளவு காலம் வாழ்ந்து கொள்ளட்டும் என்று கூற, அவ்வாறே மலக் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து கூற, மூஸா அலை அவர்கள் அதறகுப் பிறகு என் நிலை என்ன என்று கேட்டார்கள். அதற்குப் பிறகு மவ்த் தான் என்று கூற, உடனே மூஸா அலை அவர்கள் அப்படியானால் இப்போதே என் உயிரைக் கைப்பற்றிக் கொள்ளும் என்றார்கள். ஆனால் அல்லாஹ்விடம் தன்னுடைய உடலை பைத்துல் முகத்தஸில் இருந்து கல் எறியும் தூரம் அளவுக்கு நெருக்கமாக்கி வைக்கும்படி துஆச் செய்தார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொண்டான்.                                                          

கடைசி காலத்திலும் முஸ்லிம்கள் தஞ்சமடையும் இடமாக ஷாம் தேசம் இருக்கும்.

عن عبد الله بن حوالة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إنكم ستجندون أجنادا جندا بالشام، وجندا بالعراق، وجندا باليمن"، قال: قلت: يا رسول الله خِرْ لي؟ قال: "عليك بالشام فمن أبي فليلحق بيمنه وليسق من غدره، فان الله تكفل لي بالشام وأهله" (صحيح ابن حبان

 

அப்துல்லாஹ் இப்னு ஹவாலா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: சிரியா படை, ஈராக் படை,  யமன் படை என நீங்கள் பல ராணுவப்படைகளை பார்ப்பீர்கள் என  நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! நான் பங்கு பெற்று போர் செய்வதற்கு இம்மூன்றில் எந்தப் படையை தேர்வு செய்ய வேண்டும்? என கேட்டேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! ஏனெனில், அது அல்லாஹ் அவன் படைத்த பூமியில் தேர்வு செய்த பூமியாகும்! அல்லாஹ் சிரியாவையும், அங்கு வாழும் மக்களையும் எனக்காக பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளான்! கூறினார்கள்.             

عن سالم بن عبد الله عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم : ( سنخرج عليكم نار في آخر الزمان من حضر موت تحشر الناس ) قال : قلنا : بما تأمرنا يا رسول الله ؟ قال : ( عليكم بالشام ) (ابن حبان

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கியாமத் நாளின் சமீபத்தில் ஹழ்ரமவ்த் என்ற ஊரிலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும் என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, அப்போது எங்கு அடைக்கலம் தேட வேண்டும்? என நாங்கள் கேட்டோம். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் நீங்கள் சிரியாவில் தங்குங்கள்! என்று பதில் கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « سَتَكُونُ هِجْرَةٌ بَعْدَ هِجْرَةٍ فَخِيَارُ أَهْلِ الأَرْضِ أَلْزَمُهُمْ مُهَاجَرَ إِبْرَاهِيمَ وَيَبْقَى فِى الأَرْضِ شِرَارُ أَهْلِهَا تَلْفِظُهُمْ أَرَضُوهُمْ تَقْذَرُهُمْ نَفْسُ اللَّهِ وَتَحْشُرُهُمُ النَّارُ مَعَ الْقِرَدَةِ وَالْخَنَازِيرِ ».ابوداود

ஹிஜ்ரத்துக்கு பின் ஹிஜ்ரத் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் நல்லவர்கள் யாவரும் இப்ராஹீம் {அலை} அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமியான சிரியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அடைக்கலமாகி விடுவார்கள். பூமியில் கெட்டவர்கள் மட்டும் வசிப்பர். அவர்களை நெருப்பு துரத்தும் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

தஜ்ஜால் வெளியாகுவதும் அவன் அழிவதும் அங்கு தான்.

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « يَأْتِى الْمَسِيحُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ هِمَّتُهُ الْمَدِينَةُ حَتَّى يَنْزِلَ دُبُرَ أُحُدٍ ثُمَّ تَصْرِفُ الْمَلاَئِكَةُ وَجْهَهُ قِبَلَ الشَّامِ وَهُنَالِكَ يَهْلِكُ ». (مسلم)  ففي الشام يقتل الدجال وهو الذي يسفك فيه دمه

கிழக்கு பக்கத்திலிருந்து தஜ்ஜால் வருவான்.அவன் மதீனாவை நாடி வரும்போது மலக்குகள் அவனை தடுத்து நிறுத்தி சிரியாவின் பக்கம் அனுப்பி வைப்பார்கள்.அந்த பூமியில் தான் அவன் அழிந்து நாசமாகுவான்

முஆவியா ரழி போன்ற  இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தலைமைப் பீடமாக இருந்தது அன்றைய ஷாம் தான்

கியாமத் நாள் நெருக்கத்தில் ஏற்படும் பல அடையாளங்கள் இங்கு தான் துவங்கும். .

அனைத்து மனிதர்களும் எழுப்பி விசாரிக்கப்படும் மஹ்ஷர் மைதானமாக ஷாம் இருக்கலாம்

عَنْ حُذَيْفَةَ  رضي الله عنه اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ قَالَ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَأَجُوجَ وَمَأْجُوجَ وَثَلَاثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنْ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ (مسلم)5558 كِتَاب الْفِتَنِ (تطرد الناس (إلى المحشر) وهو الشام (فيض القدير)

விளக்கம்- அகில உலகையும் அல்லாஹ் அழிக்கும்போது அப்போதிருக்கும் அனைத்து மக்களும் ஷாமில் ஒன்று திரட்டப் படுவார்கள். பின்பு அனைத்தும் அழிக்கப்படும். பின்பு அனைத்தையும் அல்லாஹ் மீண்டும் உண்டாக்கும்போது மக்கள் அழிக்கப்படும்போது இருந்த அந்த ஷாம் பகுதி தான் மஹ்ஷர் மைதானமாக மீண்டும் உருவாக்கப்படும்.

பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட இன்றைய 16 நாடுகள் இணைந்தது தான் அன்றைய ஷாம்

وعن أبي ذر قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((الشام أرض المحشر والمنشر))؛: حديث صحيح  (رواه البزار

சிரியா மஹ்ஷர் நடைபெரும் பூமி ஆகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

ஷாமுக்காக துஆச் செய்த நபி ஸல் அவர்கள்

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رضقَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُؤَلِّفُ الْقُرْآنَ مِنْ الرِّقَاعِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طُوبَى لِلشَّامِ فَقُلْنَا لِأَيٍّ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّ مَلَائِكَةَ الرَّحْمَنِ بَاسِطَةٌ أَجْنِحَتَهَا عَلَيْهَا (ترمذي) بَاب فِي فَضْلِ الشَّامِ وَالْيَمَنِ- كِتَاب الْمَنَاقِبِ( باسطة أجنحتها عليها) أي على بقعة الشام وأهلها بالمحافظة عن الكفر وقال المناوي بَاسِطَةٌ أَجْنِحَتَهَا أي تحفها وتحولها بإنزال البركة ودفع المهالك والمؤذيات

அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி {ஸல்} அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். பின்பு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை முன்னோக்கி, யா அல்லாஹ்! எங்கள் மதீனாவில் பரக்கத் செய்வாயாக! எங்களுடைய முத்து மற்றும் ஸாஃவு விலும் பரக்கத் செய்வாயாக! யாஅல்லாஹ்! எங்கள் ஹரமிலும் பரக்கத் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களின் ஷாம் (சிரியா) பூமியிலும் பரக்கத் செய்வாயாக என நபி {ஸல்} அவர்கள் துஆ செய்தார்கள்

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சத்தியத்தை நிலை நாட்டக் கூடிய ஒரு சாரார்  ஷாமில் இருப்பார்கள்

عن مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ (بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ )كتاب التوحيد

முஸ்லிம்களுக்கு ஆபத்துகள் அதிகரிக்கும்போது தொழுகைக்கு உள்ளேயும் துஆ செய்யலாம்.

அது குனூத்தே நாஜிலா எனப்படும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَقُولُ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ (بخاري) باب دُعَاءِ النَّبِىِّ صلى الله عليه وسلم اِجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِى يُوسُفَ- كتاب الاستسقاء - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ وَذَكْوَانُ وَعُصَيَّةُ وَبَنُو لَحْيَانَ فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ فَأَمَدَّهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنْ الْأَنْصَارِ قَالَ أَنَسٌ كُنَّا نُسَمِّيهِمْ الْقُرَّاءَ يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ فَانْطَلَقُوا بِهِمْ حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ (بخاري) بَاب الْعَوْنِ بِالْمَدَدِ-كتاب الجهاد

 சுருக்கம்- மேற்கூறப்பட்ட நான்கு பிரிவினர் இஸ்லாத்தை ஏற்றது போல நடித்து தங்களுக்கு மார்க்கத்தை சொல்லித் தர நபித் தோழர்களை தங்கள் ஊருக்கு அனுப்புமாறு கூறினர். அதன்படி நபி ஸல் எழுபது  ஹாஃபிழ்களை அனுப்பி வைத்த போது அவர்களை திட்டமிட்டு கொன்றனர். இதனால் பெரும் கவலை அடைந்த நபி ஸல் கொலை செய்தவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் சுமார் ஒரு மாதம் ஃபஜ்ரில் இரண்டாவது ரக்அத்தின் ருகூவிலிருந்து எழுந்து துஆ செய்தார்கள். சில அறிவிப்புகளில் ஐந்து நேரத் தொழுகையிலும் இவ்வாறு செய்தார்கள் என உள்ளது. அதேபோல் முந்திய ஹதீஸில் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வர விடாமல் தடுக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காக அவர்களை விடுதலை செய்யப்படும் வரை இவ்வாறு துஆ செய்தார்கள் 

சுருக்கமான குனூத்து நாஜிலா

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم الطف بأهل فلسطين. اللهم احفظهم بحفظك واكلأهم برعايتك اللهم انصر المسلمين في أرض فلسطين وحكم فيهم شرعك واكفهم شر كل طاغية جبار ربِ انصر إخواننا وأهلنا في فلسطين و لا تنصر عليهم، ربِ ثبت أقدامهم وارحمهم.. ربِ رد كيد كل من أراد بهم السوء يا عزيز يا جبار.. اللهم تول أهل فلسطين برعايتك..اللهم احقن دمائهم ...اللهم ول عليهم خيارهم اللهم احقن دماءهم واحفظ أعراضهم و ذراريهم و أموالهم

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்ட இமாம் மஹ்தீ அவர்கள் வருவார்கள். முஸ்லிம்களுக்கு எங்கு திரும்பினாலும் சோதனை என்ற நிலையில் இமாம் அவர்களின் வருகை இருக்கும்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ  فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا  وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ  يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ(شرح السنة

 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...