புதன், 3 ஜூன், 2026

என்றும் நம் நினைவில் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்

 29-05-2026

துல்ஹஜ்- 11 بسم الله الرحمن الرحيم  

       என்றும் நம் நினைவில் 

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நினைவு கூராமல் தொழுகை முழுமையடைவதில்லை

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (بخاري) كتاب التفسير

 நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே தொழுகையில்  உங்கள் மீது எவ்வாறு ஸலாம் சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் மீது எவ்வாறு  ஸலவாத்  சொல்வது என்று கேட்டார்கள் அப்போது நபி ஸல் அவர்கள் மேற்காணும் தரூத் ஸலவாத்தைக் கற்றுத் தந்தார்கள்.                                                    

படிப்பினை- தொழுகையில் நபி ஸல் அவர்களை நாம் எவ்வாறு நினைவு கூருவோமோ அவ்வாறே  நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நாம் நினைவு கூருகிறோம்.

நபி (ஸல்) அவர்களும் அடிக்கடி நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நினைவு கூருவார்கள்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ ثُمَّ يَقُولُ كَانَ أَبُوكُمْ يُعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَقَ (ابوداود

தன் பேரப் பிள்ளைகளுக்கு நபி (ஸல்) மேற்காணும் வார்த்தைகளைக் கொண்டு நபி (ஸல்) ஓதிப் பார்ப்பார்கள். அப்போது பின்வருமாறு நினைவு கூருவார்கள்.   நபி இப்றாஹீம்  தன் பிள்ளைகளான  இஸ்ஹாக் (அலை), இஸ்மாயில்  அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கு இவ்வாறு தான் ஓதிப் பார்ப்பார்கள் என்றும் கூறுவார்கள்

அல்லாஹ்வின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு  80 வயதிலும் கத்னா செய்து கொண்ட இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالْقَدُّومِ (بُخاري) قدومவெட்டும் கருவி 

நடமாட்டமும் இல்லாத, தண்ணீரும் இல்லாத பாலைவனத்தில் இறை உத்தரவுப்படி தன் குடும்பத்தை விட்டுச் சென்ற தியாகம்

قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه أَوَّلَ مَا اتَّخَذَ النِّسَاءُ الْمِنْطَقَ مِنْ قِبَلِ أُمِّ إِسْمَاعِيلَ اتَّخَذَتْ مِنْطَقًا لَتُعَفِّيَ أَثَرَهَا عَلَى سَارَةَ ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيمُ وَبِابْنِهَا إِسْمَاعِيلَ وَهِيَ تُرْضِعُهُ حَتَّى وَضَعَهُمَا عِنْدَ الْبَيْتِ عِنْدَ دَوْحَةٍ فَوْقَ زَمْزَمَ فِي أَعْلَى الْمَسْجِدِ وَلَيْسَ بِمَكَّةَ يَوْمَئِذٍ أَحَدٌ وَلَيْسَ بِهَا مَاءٌ فَوَضَعَهُمَا هُنَالِكَ وَوَضَعَ عِنْدَهُمَا جِرَابًا فِيهِ تَمْرٌ وَسِقَاءً فِيهِ مَاءٌ ثُمَّ قَفَّى إِبْرَاهِيمُ مُنْطَلِقًا فَتَبِعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ فَقَالَتْ يَا إِبْرَاهِيمُ أَيْنَ تَذْهَبُ وَتَتْرُكُنَا بِهَذَا الْوَادِي الَّذِي لَيْسَ فِيهِ إِنْسٌ وَلَا شَيْءٌ فَقَالَتْ لَهُ ذَلِكَ مِرَارًا وَجَعَلَ لَا يَلْتَفِتُ إِلَيْهَا فَقَالَتْ لَهُ أَاللَّهُ الَّذِي أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَتْ إِذَنْ لَا يُضَيِّعُنَا ثُمَّ رَجَعَتْ فَانْطَلَقَ إِبْرَاهِيمُ حَتَّى إِذَا كَانَ عِنْدَ الثَّنِيَّةِ حَيْثُ لَا يَرَوْنَهُ اسْتَقْبَلَ بِوَجْهِهِ الْبَيْتَ ثُمَّ دَعَا بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ وَرَفَعَ يَدَيْهِ فَقَالَ رَبِّ {إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ....(بخاري)كتاب أحاديث الأنبياء

   பெண்களில் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது ஹாஜர் (அலை) அவர்கள் தான். தன்னால் சாரா அம்மையார் அவர்களின் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவ்வாறு அணிந்தார்கள் (அதாவது சாரா (அலை)  அவர்கள் தான் முதல் மனைவி. இந்த அன்னையுடன் இப்றாஹீம் அலை பயணம் ஒரு ஊரைக் கடந்த போது  அவ்வூர் அரசன் சாரா அன்னையை தவறுக்காக நெருங்க மூன்று தடவை முயன்று அவமானப்பட்டான். கடைசியில் அவன் சாரா அன்னையை பத்திரமாக அனுப்பி வைத்ததுடன், தனது பணிப் பெண்ணாகிய ஹாஜர் அன்னையை பரிசாக கொடுத்தான்.                        

 ஹாஜர் அன்னையை மணந்த பின்பே நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன. இதனால் சாரா அன்னைக்கு ஹாஜர் அன்னை மீது ஏற்பட்ட இயல்பான வருத்தம் நீங்குவதற்காக, தன்னை தாழ்த்திக் கொள்வதற்காக இடுப்புக் கச்சை அணிந்தார்கள்  புகாரீ3358) எனினும் அந்த மனஸ்தாபம் நீடிக்கக் கூடாது என்பதற்காகவும், ஹாஜர் அன்னை மூலம் மக்கா பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ் அந்த்த அன்னையையும், அவரின் மகனையும் ஃபலஸ்தீனில் இருந்து மக்காவில் கொண்டு விடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டான். அந்நேரம் மக்காவில் எவரும் இல்லை. ஒரு தோல் பையில் தண்ணீரும், மற்றொரு பையில் நீரும் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.                                            

 இந்நிலையில் அவ்விருவரையும் விட்டு விட்டு திரும்பிய தன் கணவரிடம் ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்தில் எஙகளை விட்டு விட்டு நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க, நபியவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. கணவனுக்குப் பின்னாலேயே ஓடிச் சென்று ஹாஜர் அன்னை இவ்வாறு பல முறை கேட்டும் நபியவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. இறுதியில் அல்லாஹ் உங்களை இவ்வாறு விட்டு விடச் சொல்லி உத்தரவிட்டானா... என்று கேட்க, ஆம் என்று மட்டுமே நபியவர்கள் பதிலளித்தார்கள். உடனை அந்த அன்னை அப்படியானால் அல்லாஹ் எங்களை கை விட்டு விட மாட்டான் நீங்கள் செல்லுங்கள் என்று கூறி தன் குழந்தையிடம் திரும்பினார்கள். அதன்பின் நபி இப்றாஹீம் (அலை) மக்காவில் எல்லைக்குச் சென்று தம் குடும்பத்தினருக்காகவும், மக்காவிற்காகவும் துஆ செய்தார்கள் – புகாரீ 3364                                                                                       

                                                                                    

இறைக் கட்டளையை விட குடும்பப் பாசம் பெரிதல்ல என்று தந்தையும், உயிர் பெரிதல்ல என்று மகனும் உணர்த்திய விதம்

فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103الصافات) أَيْ صَرَعَهُ عَلَى وَجْهه لِيَذْبَحهُ مِنْ قَفَاهُ وَلَا يُشَاهِد وَجْهه عِنْد ذَبْحه لِيَكُونَ أَهْوَن عَلَيْهِ – 

عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا قال... تَلَّهُ لِلْجَبِينِ وَعَلَى إِسْمَاعِيل عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام قَمِيص أَبْيَض فَقَالَ لَهُ  يَا أَبَتِ إِنَّهُ لَيْسَ لِي ثَوْب تُكَفِّنُنِي فِيهِ غَيْره فَاخْلَعْهُ حَتَّى تُكَفِّنَنِي فِيهِ فَعَالَجَهُ لِيَخْلَعَهُ فَنُودِيَ مِنْ خَلْفه " أَنْ يَا إِبْرَاهِيم قَدْ صَدَّقْت الرُّؤْيَا " فَالْتَفَتَ إِبْرَاهِيم عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام فَإِذَا بِكَبْشٍ أَبْيَض أَقْرَن أَعْيَن قَالَ اِبْن عَبَّاس لَقَدْ رَأَيْتنَا نَتَتَبَّع ذَلِكَ الضَّرْب مِنْ الْكِبَاش (تفسير ابن كثير)             

 மேற்காணும் ஆயத்தின் பொருள் மகனை முகம் குப்புற படுக்க வைத்தார்கள் என்பதாகும். ஏனெனில் முகம் பார்க்கும்படியாக இருந்தால் ஏதேனும் பாசம் ஏற்பட்டு இறைக்கட்டளையை நிறைவேற்ற முடியாமல் ஆகி விடுமோ என்று அஞ்சினார்கள். 

عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:"لَمَّا أُمِرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلامُ بِالْمَنَاسِكِ عَرَضَ لَهُ الشَّيْطَانُ، عَنِ الْمَسْعَى، فَسَابَقَهُ فَسَبَقَهُ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلامُ، ثُمَّ ذَهَبَ بِهِ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ إِلَى جَمْرَةِ الْعَقَبَةِ فَعَرَضَ لَهُ الشَّيْطَانُ، فَرَمَاهُ بِسِبْعِ حَصَيَاتٍ حَتَّى ذَهَبَ، ثُمَّ عَرَضَ لَهُ عِنْدَ الْجَمْرَةِ الْوُسْطَى، فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ (تفسير ابن ابي حاتم)                              

  தஃப்ஸீர் இப்னு அபீ ஹாதம் போன்ற சில தஃப்ஸீர்களில் சுருக்கமாகவும் வேறு அறிவிப்புகளில் விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற தன் மகனாரை அழைத்துச் சென்ற போது ஷைத்தான் குறுக்கிட்டான். முதலில் மகனாரிடம் உம் தந்தை உம்மை அறுப்பதற்காக அழைத்துச் செல்கிறார் என்று கூறிய போது, உடனே மகனார் அவர்கள் “எதற்காக என்னை என் தந்தை அறுக்கிறார்? என்று கேட்க, ஏதோ அல்லாஹ்வின் உத்தரவாம். என்ன இருந்தாலும் யாராவது மகனை பலியிட முன் வருவார்களா? என்று கூறி கெடுக்க முயற்சித்த போது மகனார் அவர்கள் “நான் அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவதாக இருந்தால் எனக்கு முழு சம்மதம் என்று கூற, ஷைத்தானுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. 

 அடுத்து ஹாஜரா அன்னையிடமும் சென்று அவ்வாறே கூறினான். அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு மீண்டும் மகனாரிடம் வந்தான். தற்போது முதலாவது ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அந்த பள்ளத்தாக்கையே அடைக்கும் விதமாக பெரிய உருவத்துடன் வந்து நின்றான். உடன் இருந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனை கல்லால் எறியுங்கள் என்றார்கள். அவ்வாறே நபியவர்கள் ஏழு கற்களால் அவனை எறிய அவன் சென்று விட்டான். திரும்பவும் வந்தான் இன்று இரண்டாம் ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அவ்வாறே பெரிய உருவத்துடன் வந்து நிற்க, அப்போதும் வானவர் நபியிடம் மீண்டும் அவனை எறியுங்கள் என்றவுடன் நபியவர்கள் ஏழு கற்களால் மீண்டும் அவனை எறிய அவன் சென்று விட்டு, திரும்பவும் இன்று மூன்றாம் ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அவ்வாறே நிற்க, அப்போதும் வானவர் எறியும்படி கூற, மீண்டும் கற்களால் அவனை எறிந்தார்கள். அவன் சென்று விட்டான்.அதன் பின்பே மகனாரை அந்த மலைக்கு அழைத்துச் சென்றார்கள்

விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்கள் நபி இப்ராஹீம் (அலை)

وكان ابراهيم عليه السلام لا يأكل بغير ضيف (مؤطا)-

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தனது நேசராக ஆக்கியதன் பிண்ணனியாக கூறப்படும் சம்பவம்

عن ابن عباس أصاب الناس سنة جهدوا فيها فحشروا إلى باب إبراهيم عليه السلام يطلبون الطعام(وكان له صديق بمصر يعطي الميرة) فبعث غلمانه بالإبل إلى خليله بمصر يسأله الميرة فقال خليله لو كان إبراهيم  يريده لنفسه احتملنا ذلك له ولكنه يريد للأضياف وقد دخل علينا ما دخل على الناس من الشدة فرجع رسل إبراهيم فمروا ببطحاء فقالوا لو أنا احتملنا من هذه البطحاء ليرى الناس أنا قد جئنا بميرة إنا لنستحي أن نمرّ بهم وإبلنا فارغة  فملؤا تلك الغرائر رملا ثم إنهم أتوا إبراهيم وسارة نائمة فأعلموه ذلك فاهتم إبراهيم لمكان الناس فغلبته عيناه فنام واستيقظت سارة فقامت إلى تلك الغرائر ففتحتها فإذا هي أجود حوّاري تكون فأمرت الخازين فخبزوا وأطعموا الناس واستيقظ إبراهيم فوجد ريح الطعام فقال ياسارة من أين هذا الطعام؟ فقالت من عند خليلك المصري فقال هذا من عند خليلي الله فيومئذٍ اتخذه الله خليلاً  (غرائب القران 

ஒரு முறை இப்றாஹீம் (அலை) அவர்களின் ஊரில் பஞ்சம் நிலவிய போது ஊர் மக்கள் இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டை நோக்கி நம்பிக்கையுடன் வந்து விட்டார்கள் ஆனால் அந்நேரத்தில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வீட்டிலும் பஞ்சமே நிலவியது எனினும் வீடு தேடி வந்த மக்களை பசியோடு திருப்பி அனுப்பக் கூடாது என்றெண்ணி தமக்கு நெருக்கமான சில இளைஞர்களை பட்டணத்தில் வசிக்கும் தனக்கு நெருக்கமான நண்பரிடம் அனுப்பி வைக்கிறார்கள் நான் சொன்னதாக கூறி தானிய மூட்டைகளை வாங்கி வாருங்கள் என்று கூற அந்த இளைஞர்கள் காலியான தானியப் பைகளை தம்முடன் எடுத்துக் கொண்டு ஒட்டகங்களில் புறப்படுகிறார்கள் விரைவாகச் சென்று அந்த நபரை சந்தித்த போது அந்த நண்பர்  உங்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் தான் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வேண்டுமானால் இப்றாஹீம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மட்டும் போதுமான தானியங்களை என்னால் தர முடியும் என்று கூறி விடுகிறார் ஏமாற்றத்துடன் அந்த இளைஞர்கள் திரும்புகிறார்கள்.  வரும் வழியில் ஊர் எல்லையை நெருங்கும்போது அந்த இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்  நாம் காலியான தானியப் பைகளுடன் ஊருக்குள் நுழைய வேண்டாம். அவ்வாறு நுழைந்தால் காத்திருக்கும் மக்கள் மிகவும் விரக்தி அடைந்து விடுவார்கள் ஆகவே இந்த மூட்டைகளுக்குள் மணலை நாம் நிரப்பி கொண்டு செல்வோம் அந்த மக்களுக்கு அது தானிய மூட்டைகளைப் போல் தெரியும். நாம் வீட்டுக்குள் கொண்டு சென்றவுடன் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி விடுவோம் அல்லாஹ் ஏதேனும் அற்புதத்தை ஏற்படுத்தக் கூடும் என்றெண்ணி அவ்வாறே செய்தார்கள் மணல் மூட்டைகளுடன் வீட்டுக்குள் நுழைந்த போது நபியவர்களின் மனைவி சாரா அம்மையார் பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில்  நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மட்டும் விஷயத்தைக் கூறி விட்டு வெளியில் வந்து விட்டார்கள்  நபியவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள் இந்த மக்களுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்ற கவலை மிகுதியால் அவர்களை அறியாமல் தூக்கம் ஆட்கொண்டு விட்டது அவர்கள் தூங்கிய சற்று நேரத்தில் மனைவி சாரா அம்மையார் விழித்து அந்த மூட்டைகளை பார்க்கிறார்கள் பட்டணத்து நண்பர் தான் தானியம் கொடுத்தனுப்பியிருக்கிறார் என்றெண்ணி அதைப் பிரித்த போது அல்லாஹ்வின் அருளால் அதில் உண்மையான தானியமே இருந்தது. உடனே சமைக்க ஆரம்பித்து விட்டார்கள் சமையல் வாசனையைக் கண்டு நபியவர்கள் விழித்து  என்ன சாரா இந்த உணவு தானியம் எப்படி வந்தது என்று கேட்க, உங்களுடைய பட்டணத்து நண்பர் தான் கொடுத்தனுப்பினார் உங்களுக்கே தெரியாதா என்று மனைவி கூறிய போது நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள் இல்லை அந்த நண்பர் கொடுத்தனுப்பவில்லை என்னுடைய உண்மை நேசனாகிய அல்லாஹ் இதை அனுப்பினான் என்றார்கள் அப்போது தான் அல்லாஹ் அவர்களை தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டான்.   

قَالَ السُّدِّيّ لَمَّا بَعَثَ اللَّه الْمَلَائِكَة لِقَوْمِ لُوط أَقْبَلَتْ تَمْشِي فِي صُوَر رِجَال شُبَّان حَتَّى نَزَلُوا عَلَى إِبْرَاهِيم فَتَضَيَّفُوهُ فَلَمَّا رَآهُمْ أَجَلَّهُمْ " فَرَاغَ إِلَى أَهْله فَجَاءَ بِعِجْلٍ سَمِين" فَذَبَحَهُ ثُمَّ شَوَاهُ فِي الرَّضْف وَأَتَاهُمْ بِهِ فَقَعَدَ مَعَهُمْ وَقَامَتْ سَارَة تَخْدُمهُمْ فَلَمَّا قَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ" قَالُوا يَا إِبْرَاهِيم إِنَّا لَا نَأْكُل طَعَامًا إِلَّا بِثَمَنٍ قَالَ فَإِنَّ لِهَذَا ثَمَنًا قَالُوا وَمَا ثَمَنه ؟ قَالَ تَذْكُرُونَ اِسْم اللَّه عَلَى أَوَّلِهِ وَتَحْمَدُونَهُ عَلَى آخِره فَنَظَرَ جِبْرِيلُ إِلَى مِيكَائِيلَ فَقَالَ حَقَّ لِهَذَا أَنْ يَتَّخِذَهُ رَبُّهُ خَلِيلًا"(فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمِ لُوطٍ)(تفسيرابن كثير)

மலக்குகள் விருந்தாளிகளைப் போன்று வருகை தந்த போது அவர்களை மலக்குகள் என்று அறியாத நிலையிலும் அவர்களை இப்றாஹீம் அலை மிகவும் கண்ணியப்படுத்தினார்கள் அவர்களுக்காக மாட்டை அறுத்து அதை பொறித்து முன்னால் கொண்டு வந்து வைத்து அவர்களுடன் தானும் அமர்ந்து சாப்பிடச் சொன்ன போது அந்த மலக்குகள் இப்றாஹீம் அலை அவர்களை பரிசோதிப்பதற்காக  நாங்கள் இந்த உணவை சாப்பிட வேண்டுமானால் இதற்குரிய விலையை கொடுக்காமல் சாப்பிட மாட்டோம் என்று கூறிய போது உடனே இப்றாஹீம் அலை அப்படியானால் இதற்கு ஒரு விலை இருக்கிறது என்று கூற, மலக்குகள் ஆச்சரியத்துடன் என்ன விலை என்று கேட்க, உடனே இப்றாஹீம் அலை அவர்கள் இதை சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும் சாப்பிட்டு முடித்த பின் அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வேண்டும் அதுதான் இதன் விலை என்று கூற அப்போது ஜிப்ரயீல் அலை அவர்களும், மீகாயீல் அலை அவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்  கொண்ட நிலையில் ஜிப்ரயீல் அலை 

இவரை அல்லாஹ் தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டது சரி தான் என்றார்கள் 

விருந்தோம்பல் எப்படி அமைய வேண்டும் என்ற விஷயத்தில் இப்றாஹீம் (அலை) பேணிய நான்கு ஒழுக்கங்கள்

هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ (24) إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ (25) فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ (26) فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ (27)فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ (28) (الذاريات)هذه الآيات انتظمت آداب الضيافة فإنه جاء بطعامه من حيث لا يشعرون بسرعة ولم يَمتن عليهم أولا فقال : نأتيكم بطعام؟ بل جاء به بسرعة وخفاء وأتى بأفضل ما وجد من ماله  وهو عدل سمين مشوى فقربه إليهم لم يضعه وقال : اقتربوا بل وضعه بين أيديهم ولم يأمرهم أمرا يشق على سامعه بصيغة الجزم بل قال{أَلاَ تَأْكُلُونَ}على سبيل العرض والتلطف كما يقول القائل اليوم:إن رأيت أن تتفضل وتحسن وتتصدق فافعل (تفسير ابن كثير

விருந்தோம்பலில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கடைபிடித்த அந்த உபசரிப்பு இன்று குறைந்து கொண்டே வருகிறது. எத்தனையோ விஷயங்களில் மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடம் தொற்றிக் கொண்டது போல் விருந்தோம்பல் விஷயத்திலும் பஃபே சிஷ்டம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடமும் பரவி விட்டது.  தட்டை ஏந்திக் கொண்டு கியூ வரிசையில் காத்திருக்க வேண்டும். உபசரிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.  மறு உணவு தேவை என்றாலும் நாமே தேடிப் போய் எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்.  இது விருந்தோம்பல் என்பதாக அறவே கூற முடியாது நபி இப்றாஹீம் அலை எத்தகைய ஒழுக்கத்தை கடை பிடித்தார்கள்  1,வந்த விருந்தாளிகளிடம் சாப்படுகிறீர்களா என்று கேட்காமலே விருந்து தயார் செய்தார்கள். 2, உணவுகளில் சிறந்த உணவை தயார் செய்தார்கள்  3, விருந்தாளிகளை அந்த அறைக்கு  வாருங்கள் அங்கு தான் உணவு வைக்கப்பட்டுள்ளது என்றோ, அல்லது அங்கு போய் கைகளை கழுவி விட்டு வாருங்கள் என்றோ சங்கடப்படுத்தாமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து உணவை வைத்தார்கள் 4, விருந்தாளிகளிடம்  சாப்பிடுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக நீங்கள் சாப்பிடக் கூடாதா என்று கணிவுடன்  கூறினார்கள் இந்த ஒழுக்கங்களில் பெரும்பகுதி பஃபே சிஷ்டத்தில் இருப்பதில்லை. 


ஏழைகளை விட்டு விட்டு செல்வந்தர்களை மட்டும் விருந்துக்கு  அழைப்பவர்களைப் பற்றி...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ (بخاري) كتاب النكاح

விருந்துகளில் மிக மோசமான விருந்தாகிறது எந்த விருந்துக்கு

 பணக்கார ர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப் படுவார்களோ அத்தகைய விருந்தாகும். 

இன்றைய காலகட்டத்தல் ஆடம்பரமாக இருப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் மதிப்பும் மரியாதையும் கொடுப்பதை பார்க்க முடிகிறது முல்லா நஸ்ருதீன் ஒரு விருந்துக்குப் போனார். எளிமையான தோற்றத்தில் சென்ற  அவரை உள்ளே விடாமல் விருந்து வீட்டினர் தடுத்து விட்டனர். திரும்பி வந்த முல்லா நஸ்ருதீன் ஆடம்பரமான ஆடைகளையும், கம்பீரமான தலைப்பாகையையும் அணிந்து  அங்கே வந்தார். வாருங்கள் வாருங்கள் என வரவேற்பு பலமாக இருந்தது. விருந்தில் அமர்ந்தவுடன் முல்லா நஸ்ருதீன் தன்னுடைய தலைப்பாகையைக் கழற்றி உணவுக்கு முன்னால் வைத்து நீ சாப்பிடு என்றார். அனைவரும் அவரை வியப்பாக பார்த்தனர். அப்போது அவர் “இந்த விருந்து எனக்கு கிடைத்த விருந்தல்ல. என் தலைப்பாகைக்கு கிடைத்த விருந்து”  என்றாராம்

عن صهيب رضي الله تعالى عنه: أن النبي صلى الله تعالى عليه وآله وسلم قال: (خيركم من أطعم الطعام ورد السلام رواه الحاكم

விருந்தாளிகளுக்காக நஃபிலான நோன்பை விடுவது

عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ قَالَ آخَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ قَالَ فَإِنِّي صَائِمٌ قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ قَالَ نَمْ فَنَامَ ثُم ذَهَبَ يَقُومُ فَقَالَ نَمْ فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمْ الْآنَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَ سَلْمَانُ  (بخاري) باب صُنْعِ الطَّعَامِ وَالتَّكَلُّفِ لِلضَّيْفِ –كتاب الأدب

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களையும் அபூதர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவைச் சந்திக்கச் சென்றபோது அவரின் மனைவி அழுக்கடைந்த ஆடை அணிந்து இருக்கக் கண்டார். சல்மான் (ரலி) அவர்கள் "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவரது மனைவி, ( أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا ) "உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்த தேவையுமில்லை" (அதாவது அவர் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை) என்று விடையளித்தார்.

சற்று நேரத்தில் அபூதர்தா (ரலி) வந்து சல்மானுக்கு உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, "நான் நோன்பு நோற்று இருக்கிறேன்" என்றார். சல்மான், "நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்" என்று கூறியதும் அபூதர்தா உண்டார். (அதாவது விருந்தாளிக்காக நஃபிலான நோன்பை விட்டார்கள்.) இரவு வந்ததும் அபூதர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார். அப்போது சல்மான் (ரலி) அவர்கள் உறங்குவீராக! என்று கூறியதும் அபூதர்தா உறங்கினார்கள். பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபூதர்தா எழுந்திருக்கப் போனார். அப்போதும் சல்மான் 'உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள் 'இப்போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.

பிறகு அபூதர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ( إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ) 

 "நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்யவேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு  நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்யவேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!" என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு அண்ணலார், ( صَدَقَ سَلْمَانُ ) "சல்மான் உண்மையையே கூறினார்" என்றார்கள்.      நூல் புகாரீ-1968

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியபோது சல்மான் (ரலி) அவர்கள் சொன்னது சரி தான் என்று ஆமோதித்தார்கள். ஆம்! இல்லற வாழ்க்கையில் ஈடுபடவும் வேண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடவும் வேண்டும் இவ்வாறு தான் இஸ்லாம் போதிக்கிறது.

துல்ஹஜ் பத்து நாட்கள்

 15-05-2026

துல் கஃதா - 27 بسم الله الرحمن الرحيم  

துல்ஹஜ்  முதல் பத்து நாட்கள்

மற்றும் குர்பானியின் சிறப்புகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு எதைக் கொண்டும் யாரைக் கொண்டும் சத்தியம் செய்வது கூடாது. அல்லாஹ் தன் படைப்பினங்களில் முக்கியமானவைகளைக் கொண்டு சத்தியம் செய்வான். அவ்வாறு அல்லாஹ் சத்தியம் செய்பவைகளில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் ஒன்றாகும். 

قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح  رواه الحاكم في المستدرك

روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان  يجب عليه العشر الأول من دي الحجة {زبدة الواعظين} 

அல்லாஹ் வருடத்தில் மூன்று பத்து நாட்களை சிறப்பானதாக ஆக்கி வைத்துள்ளான். 1.ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களை சிறப்பானதாக ஆக்கியுள்ளான். காரணம் லைலத்துல் கத்ரு என்ற சிறந்த இரவின் பரக்கத் உள்ளது என்பதற்காக. 2 .துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். காரணம் தர்வியா எனும் துல்ஹஜ்  8-ம் நாளும் அரஃபா நாளும் குர்பானியின் நாட்களும் அதில் உள்ளது என்பதற்காக. 3.முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். காரணம் ஆஷூரா எனும் சிறந்த நாள் அதில் உள்ளது என்பதற்காக.                                                        

ஃபுகஹாக்கள் கூறுவார்கள். ஒருவர் நான் இந்த வருடத்தில் ரமழானுக்கு அடுத்து சிறப்பான நாட்களில் நோன்பு வைப்பேன் என நேர்ச்சை செய்தால் அவர் துல்ஹஜ் பத்து நாட்களில் அந்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும்

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ (ترمذي)

 இந்த பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயலை விட வருடத்தின் வேறு எந்த நாளில் செய்யப்படும் நற்செயலும் அல்லாஹ்விடம் மிகப் பிரியமானதாக இல்லை என நபி ஸல் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே மற்ற நாட்களில் செய்யும் ஜிஹாதை விட இந்த நாட்களில் செய்யப்படும் சிறிய அமல் அல்லாஹ்விடம் மிக உயர்ந்ததா என்று கேட்க, ஆம் என்று நபி ஸல் பதில் கூறி விட்டு. யார் ஜிஹாதுக்கு தனது உயிர் மற்றும் உடைமையுடன்  சென்று அவற்றில் எதனுடனும் வீடு திரும்பவில்லையோ அவரைத்  தவிர என்று கூறினார்கள்.        

இந்த நாட்களில் தக்பீர் மற்றும் தஹ்மீத் தஹலீல் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும்.  பிறை  1  முதல் 9 வரை நோன்பு வைக்க  முயற்சி செய்ய வேண்டும். இதில் அரஃபா நாளின் நோன்பு மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்

குர்பானி தர விரும்புவர் பிறை ஆரம்பித்த நாளில் இருந்து நகம் முடி களையக் கூடாது.  

يستحب للمضحي أن لايأخد من شعره وأظفاره شيئا من أول دي الحجة الي أن يضحي  لقول النبي صلي الله عليه وسلم من أراد أن يضحي منكم  فلا يأخد من شعره وأظفاره شئا  

من لم ينو الأضحية في أول دي الحجة فأخد شعره وأظفاره ثم نوي الأضحية يجوز فلا يأخد شعره وأظفاره بعد النية

ஒருவரி துல்ஹஜ் ஆரம்பிக்கும்போது குர்பானியை நிய்யத் செய்யவில்லை. அதனால் அவர் பிறை ஆரம்பித்த பிறகு நகம், முடிகளை வெட்டினார். அதற்குப் பிறகு தான் அவருக்கு அந்த நிய்யத் ஏற்பட்டதென்றால் அவர் நிய்யத் செய்த நேரத்திலிருந்து நகம் முடி வெட்டாமல் இருந்து கொள்ள வேண்டும். 

குர்பானி கொடுக்கும் நாட்களில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு இல்லை.

عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا (ابن ماجة)

கருத்து-குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு எதுவும் இல்லை. ஒருவர் குர்பானிப் பதிலாக ஒரு கோடி ரூபாய் தர்மம் செய்தாலும் குர்பானிக்கு ஈடாகாது. குர்பானிப் பிராணி மறுமையில் அதே உருவத்தோடு வந்து நமக்காக சாட்சி சொல்லும். மேலும் அதன் இரத்தம் தரையைச் சென்றடைவதற்கு முன்பு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்று விடுகிறது. எனவே மன மகிழ்வுடன் குர்பானி கொடுங்கள். 

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ (ابن ماجة)

விளக்கம்- குர்பானி என்பது நபி இப்றாஹீம் அலை அவர்களின் வழிமுறை என நபி ஸல் கூறியபோது இதனால் என்ன நன்மை என நபித்தோழர்கள் கேட்க, அதன் ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மை உண்டு என நபி ஸல் கூறியவுடன் ஆச்சரியத்துடன் யாரஸூல ல்லாஹ் அப்படியானால் ஆட்டில் முடிகள் அதிகமாக இலட்சக் கணக்கில் இருக்குமே அதற்கும் நன்மை உண்டா என்று கேட்க ஆம் என நபி ஸல் பதில் கூறினார்கள்.                 

வறிய நிலையிலும் வருடம் தோறும் குர்பானி கொடுத்தவரின் சிறப்பு 

عن أحمد بن اسحق أنه قال كان لي أخ فقير وكان مع فقره يضحي كل سنة بشاة فلما توفي صليت ركعتين فقلت:اللهم أرني أخي في نومي فأسأله عن حاله فنمت علي الوضوء فرأيت في منامي كأن القيامة قد قامت وحشر الناس من قبورهم فادا أخي راكب علي فرس أشهب وبين يديه نجائب فقلت ياأخي ما فعل الله بك؟ فقال:غفر لي,فقلت بم؟ فقال بسبب درهم تصدقت به علي امرأة عجوز فقيرة في سبيل الله؟ فقلت ما هده النجائب؟قال ضحاياي في الدنيا والتي أركبها أول أضحيتي فقلت الي اين قصدت؟ قال الي الجنة فغاب عن بصري {سنانية}

அஹ்மத் இப்னு இஸ்ஹாக் ரஹ் அவர்கள் கூறினார்கள். எனக்கு ஏழ்மையான ஒரு சகோதரர் இருந்தார். தன்னுடைய வறிய நிலையிலும் வருடம் தோறும் ஆடு குர்பானி கொடுப்பார். ஒருநாள் அவர் வஃபாத்தாகி விட்டார். அவர் இறந்த பின்பு அவரைப் பற்றிய மறுமை வாழ்வின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் அல்லாஹ் அவரை என் கனவில் காட்டு. நான் அவரிடம் அவரது நிலையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என துஆச் செய்தேன். நான் உளூவுடன் தூங்கினேன். அப்போது என் கனவில் கியாமத் ஏற்பட்டு விட்டதைப் போன்றும் மக்கள் அனைவரும் தங்களுடைய கப்ருகளில் இருந்து எழுப்ப ப்படுவது போன்றும் கனவில் கண்டேன். அப்போது அந்த நண்பரையும் கண்டேன். அவர் ஒரு உயர்ந்த குதிரையின் மீது சவாரி செய்த படி இருந்தார். அவருக்கு முன்னால் கால்நடை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அவரிடம் நான் அல்லாஹ் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என விசாரித்தபோது அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். எதனால் என்று நான் கேட்க, ஒரு வயதான, ஏழ்மையான பெண்ணுக்கு ஒரு திர்ஹம் நான் தர்மம் செய்தேன். அதனால் அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். நான் அவரிடம் இந்த வாகனங்கள் ஏது என்று கேட்க, இதுவெல்லாம் நான் குர்பானி கொடுத்த வாகனங்கள். நான் ஏறிப் பயணம் செய்திருக்கும் இந்த வாகனம் தான் நான் முதலில் கொடுத்த குர்பானி என்று கூறி என் கன்னை விட்டும் மறைந்து விட்டார்.                    

விளக்கம்-ஆடாக இருந்தாலும் அதில் சவாரி செய்யும் வகையில் பெரிய உருவமாக அல்லாஹ் மறுமையில் மாற்றியமைக்க வாய்ப்புண்டு

வசதி இருந்தும் குர்பானி கொடுக்கா விட்டால்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا (ابن ماجة

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் குர்பானி கொடுக்கலாம்.  கர்ப்பிணிப் பெண்கள் குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கிறது

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا لَكِ أَنَفِسْتِ قَالَتْ نَعَمْ قَالَ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ (بخاري) الأضحية للمسافر والنساء-كِتَاب الْأَضَاحِيِّ

சுருக்கம்- ஆயிஷா ரழி அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்திருந்த நேரம் பார்த்து அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. என்னால் அந்த அமலும் செய்ய முடியாதே என்று அழ ஆரம்பித்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இந்த விஷயம் அல்லாஹ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுத்தியுள்ளதாகும். இதற்காக கவலை கூடாது. நீ எல்லா அமல்களையும் நிறைவேற்றலாம். அரஃபாவில் தங்கலாம். மினாவில் தங்கலாம். குர்பானி கொடுக்கலாம். முஜ்தலிஃபாவில் தங்கலாம். தவாஃப் மட்டும் செய்யக் கூடாது. அதை பிறகு நீ நிறைவேற்ற முடியும் என்றார்கள். 

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள் இதன் பின்பு நான் மினாவில் தங்கியிருக்கும்போது என்னிடம் கூட்டுக் குர்பானிக் கறி கொண்டு வந்து தரப்பட்டது. இது ஏது என்று கேட்டேன். நபி ஸல் அவர்கள் தம் மனைவிமார்கள் பெயரில் கொடுத்த மாட்டின் இறைச்சி என்று பதில் கூறப்பட்டது. 

குர்பானி விஷயத்தில் முக்கியமான விளக்கம். 

 ஒரு குடும்பத்தில் யார் சம்பாதிக்கிறாரோ மேலும் ஜகாத்துடைய நிஸாப் அளவுக்கு மிச்சமாக பணம் வைத்துள்ளாரோ அவர் மீது குர்பானி கடமை. ஜகாத் கடமையான சிலர் குர்பானி கடமையான பின்பும் தன் பெயரில் கொடுக்காமல் தன் தந்தை அல்லது தாயார் பெயரில் குர்பானி கொடுக்கிறார்கள். அவ்வாறு தருவதால் இவரின் கடமை நீங்காது.  தாம் கொடுத்தது போக மிச்சமிருந்தால் பெற்றோர் பெயரில் கொடுப்பது தவறில்லை. என் பெற்றோரை விட நான் முக்கியமானவனா என்ற எண்ணத்தில் பலர் இத்தகைய தவறைச் செய்கிறார்கள். தொழுகை இவர் மீது கடமை என்றால் என் பெற்றோர் தொழாமல் நான் தொழுவதா என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். அதுபோன்றுதான் குர்பானி. 

தனக்காக அகீகா கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் அந்த அகீகாவை முதலில்  தராம்ல குர்பானி தரக்கூடாது என்ற எண்ணமும் சிலரிடம் உள்ளது. அகீகா குழந்தைப் பருவத்தில் தான் சுன்னத். அதைத் தாண்டினால் ஜாயிஸ்.  ஆனால் குர்பானி என்பது  வாஜிப். 

وَنَقَلَ التِّرْمِذِيُّ عَنْ أَهْلِ الْعِلْمِ أَنَّهُمْ يَسْتَحِبُّونَ أَنْ تُذْبَحَ الْعَقِيقَةُ فِي السَّابِعِ فَإِنْ لَمْ يُمْكِنْ فَفِي الرَّابِعَ عَشَرَ فَإِنْ لَمْ يُمْكِنْ فَيَوْمِ أَحَدِ وَعِشْرِينَ . وَقَالَ الشَّافِعِيُّ : لَا تُؤَخَّرُ عَنْ السَّابِعِ اخْتِيَارًا فَإِنْ تَأَخَّرَتْ إلَى الْبُلُوغِ سَقَطَتْ عَمَّنْ كَانَ يُرِيدُ أَنْ يَعُقَّ عَنْهُ لَكِنْ إنْ أَرَادَ هُوَ أَنْ يَعُقَّ عَنْ نَفْسِهِ فَعَلَ . (فتح الباري – عمدة القاري

குர்பானி கொடுப்பதற்கு ஆடு தான் சிறந்தது

{ وفديناه بذبح عظيم}{37:107 } أي عظيم القدر ولم يرد عظيم الجثة وإنما عظم قدره لأنه فدى به الذبيح أو لأنه متقبل 

 உளத்தூய்மையுடன்  ஹாபீல் கொடுத்த  ஆட்டை பலஆயிரம் வருடங்கள் சுவனத்த்தில் அல்லாஹ் பாதுகாத்தான்

وقال ابن عباس : هو الكبش الذي تقرب به هابيل وكان في الجنة يرعى حتى فدىالله به إسماعيل-

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27)المائدة      -     عَنْ عَبْد اللَّه بْن عَمْرو قَالَ إِنَّ اِبْنَيْ آدَم اللَّذَيْنِ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدهمَا وَلَمْ يُتَقَبَّل مِنْ الْآخَر كَانَ أَحَدهمَا صَاحِب حَرْث وَالْآخَر صَاحِب غَنَم وَإِنَّهُمْ أُمِرَا أَنْ يُقَرِّبَا قُرْبَانًا وَإِنَّ صَاحِب الْغَنَم قَرَّبَ أَكْرَمَ غَنَمِهِ وَأَسْمَنَهَا وَأَحْسَنَهَا طَيِّبَةً بِهَا نَفْسُهُ وَإِنَّ صَاحِب الْحَرْث قَرَّبَ أَشَرَّ حَرْثِهِ الْكَوْدَن وَالزُّوَان غَيْرَ طَيِّبَةٍ بِهَا نَفْسُهُ وَأَنَّ اللَّه عَزَّ وَجَلَّ تَقَبَّلَ قُرْبَان صَاحِب الْغَنَم وَلَمْ يَتَقَبَّل قُرْبَان صَاحِب الْحَرْث(وفي رواية فَصَعِدَا الْجَبَل فَوَضَعَا قُرْبَانهمَا)فَقَبِلَ اللَّه الْكَبْش فَحَزَنَهُ فِي الْجَنَّة أَرْبَعِينَ خَرِيفًا3 وَهُوَ الْكَبْش الَّذِي ذَبَحَهُ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام(تفسير ابن كثير)

காபீல் ஹாபீல் இருவரும் குர்பானி கொடுத்தாலும் ஹாபீல் கொடுத்த ஆடு மட்டுமே அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் உளத்தூய்மை தான். ஹாபீல் தன்னிடம் இருந்த ஆடுகளில் தனக்கு மிகப் பிரியமான ஆட்டை குர்பானி கொடுத்தார். காபீல் விவசாயி என்பதால் தானியங்களை குர்பானியாக கொடுத்தார். அவரிடம் உளத்தூய்மை இருந்திருக்கவில்லை. அந்தக் கால வழக்கப்படி இருவரும் மலை மீது கொண்டு போய் தமது குர்பானிகளை வைத்தார்கள். வானில் இருந்து நெருப்பு வந்து ஹாபீலுடைய ஆட்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றது. அந்த ஆட்டை அல்லாஹ் சுவனத்தில் பாதுகாத்தான் பிற்காலத்தில் அதுதான் இப்றாஹீம் அலை அவர்களுக்காக சுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது அதைத்தான் அவர்கள் அறுத்தார்கள்.                                  

அக்காலத்தில் குர்பானிப் பிராணிகளையும் அதுபோல் ஙனீமத் பொருட்களையும் 

மலை மீது கொண்டு போய் வைத்து அதை நெருப்பு வந்து கரித்துச் செல்வது அக்கால நடைமுறை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري)باب قَوْلِ النَّبِىِّ صلى الله عليه وسلم  أُحِلَّتْ لَكُمُ الْغَنَائِمُ–كتاب فرض الخمس

   சுருக்கம்- ஒரு நபி போருக்குப் புறப்படும்போது சில நிபந்தனைகளை முன் வைத்து தன் உம்மத்தை அழைத்துச் சென்றார் தன் மனைவியுடன் இன்னும் சேராத புதிய மணமகன்கள், கட்டிடம் கட்டி விட்டு அதன் மேல்தளம் அமைக்காதவர்கள், கால்நடைகள் குட்டி போடும் நிலையில் அதை எதிர் பார்த்து காத்திருப்பவர் ஆகியோர்  எங்களோடு வரக்கூடாது.(இவர்களால் முழுமையாகப்போரில் கவனம் செலுத்த முடியாது.) என்று கூறி மற்றவர்களை அழைத்துச் சென்றார். அங்கு போய்ச் சேருவதற்குள் அசர் நெருங்கி விட்டது. சூரியன் மறைந்து விட்டால் போரிட முடியாது. ஆகவே அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இந்த சூரியனை எங்களுக்காக மறையாமல் தடுத்து வை என துஆ செய்தார். அதன்படி போர் முடியும் வரை சூரியன் மறையாமல் இருந்தது. அல்லாஹ் வெற்றியை கொடுத்தான். அக்காலத்தில் குர்பானி கொடுப்பவர்களும் சரி, ஙனீமத் பொருளை அடைந்தவர்களும் சரி அவர்கள் தியாக உள்ளத்தோடு அவற்றை பயன்படுத்தாமல் ஒரு மலை மீது கொண்டு போய் வைத்து விட வேண்டும். நெருப்பு வந்து அதை கரித்துச் சென்று விட்டால் அவர்களின் குர்பானி ஏற்கப்பட்டது என்று பொருள். அதன்படி இப்போரில் கிடைத்த ஙனீமத் பொருட்களை அவ்வாறே வைத்த போது நெருப்பு வந்ததுஆனால் கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி தன் உம்மத்தினரிடம் இங்கு வந்து சேர வேண்டிய தியாகப் பொருட்களில் சிலதை யாரோ எடுத்து வைத்துள்ளீர்கள். அதை நேரடியாகவும் சொல்ல மாட்டீர்கள் ஆகவே அதை கண்டு பிடிக்க உங்களில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்ற போது, வரிசையாக வந்து அவர்கள் கை கொடுத்தனர். அதில் ஒரு குடும்பத் தலைவரின் கை நபியின் கையுடன் ஒட்டிக் கொண்டது உடனே அந்த நபி உங்களின் குடும்பம் முழுவதும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்ற போது அவ்வாறே செய்தனர். அப்போது அவர்களில் இரண்டு அல்லது மூன்று நபர்களின் கைகள் நபியின் கையுடன் ஒட்டிய போது, உங்களிடம் தான் அப்பொருட்கள் உள்ளன. மரியாதையாக அதை கொண்டு வாருங்கள் என்ற போது ஒரு மாட்டின் தலை அளவுக்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கொண்டு வந்தனர். அதை மலை மீது வைத்த பின்பே நெருப்பு வந்து அதை கரித்துச் சென்றது அவர்களின் தியாகம் ஏற்கப்பட்டது. 

عن أبي هريرة ، رضي الله عنه قال : نزل جبريل عليه الصلاة والسلام إلى النبي صلى الله عليه وسلم ، فقال له النبي صلى الله عليه وسلم : يا جبريل كيف رأيت عيدنا ؟ » فقال : لقد تباهى به أهل السماء . اعلم يا محمد أن الجذع من الضأن خير من السيد من المعز ، وأن الجذع من الضأن خير من السيد من البقر ، وأن الجذع من الضأن خير من السيد من الإبل ، ولو علم الله ذبحا خيرا منه فدى به إبراهيم عليه الصلاة والسلام (كنز العمال)

குர்பானிப் பிராணியை முன்பாகவே வாங்கி வளர்த்து, கொழுக்க வைப்பதின் சிறப்பு

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)سورة الحج عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قال "تَعْظِيمهَا اِسْتِسْمَانهَا وَاسْتِحْسَانهَا

{تفسير القرطبي} وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ الْبُخَارِيّ

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள். மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்தினால் அது இறையச்சத்தின் அடையாளம் என்பதில்  கண்ணியப்படுத்துதல் என்பது அதை முன்னதாகவே வாங்கி தீனி போட்டு கொழுக்க வைப்பதாகும். ஸஹ்ல் ரழி கூறினார்கள் நாங்கள் குர்பானிப் பிராணிகளை முன்பாகவே வாங்கி கொழுக்க வைப்போம். முஸ்லிம்களும் அவ்வறே செய்தனர். 

நபி ஸல் அவர்கள் அறுத்த குர்பானிப் பிராணியைப் போன்றே தம்  குர்பானிப் பிராணியும் இருப்பதை விரும்பிய நபித்தோழர்கள்

عن يُونُس بْن مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ قَالَ خَرَجْتُ مَعَ أَبِي سَعِيدٍ الزُّرَقِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شِرَاءِ الضَّحَايَا قَالَ يُونُسُ فَأَشَارَ أَبُو سَعِيدٍ إِلَى كَبْشٍ أَدْغَمَ لَيْسَ بِالْمُرْتَفِعِ وَلَا الْمُتَّضِعِ فِي جِسْمِهِ فَقَالَ لِي اشْتَرِ لِي هَذَا كَأَنَّهُ شَبَّهَهُ بِكَبْشِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ابن ماجة) بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الْأَضَاحِيِّ

யூனுஸ் இப்னு மய்ஸரா ரஹ் கூறினார்கள் நான் நபித்தோழர் அபூஸயீத் ரழி அவர்களுடன் குர்பானி ஆடு வாங்கச் சென்றேன். அப்போது அபூஸயீத் ரழி அவர்கள் இலேசாக கறுப்பு நிறம் கலந்த, நடுத்தரமான அளவு கொண்ட ஒரு ஆட்டை சுட்டிக்காட்டி இதை எனக்கு வாங்குங்கள் காரணம் இது நபி ஸல் அவர்கள் கொடுத்த குர்பானி ஆட்டைப் போன்று உள்ளது என்றார்கள்.

لابد أن تكون الضحية بما يجزئ، فلا تجزئ الصغيرة التي لم تبلغ سناً ينتفع بها، وحدد ذلك في الإبل بخمس سنين، فإذا تمت السنة الخامسة فهي ناقة أو بعير يضحى به، وتجزئ البقر إذا بلغت السنتين، والمعز إذا بلغت سنة، والضأن إذا بلغت نصف سنة، هكذا حددت أسنانها (شرح عمدة الاحكام)

ஒரு வயது பூர்த்தியடையாத ஆட்டை குர்பானி கொடுப்பது கூடாது.  ஆறு மாத செம்மறியாடு பார்ப்பதற்கு ஒரு வருடம் பூர்த்தியானதைப் போன்று இருந்தால் அதை குர்பானி கொடுக்கலாம்.  மாட்டில் இரண்டு வயது பூர்த்தியடையாத மாட்டை குர்பானி கொடுப்பது கூடாது. ஒட்டகத்தில் ஐந்து  வயது பூர்த்தியடையாத ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது கூடாது.

குர்பானிப் பிராணியில் இருக்கக் கூடாத குறைகள்

குறிப்பு- நோய் தாக்கிய, ஒற்றைக்கண் உள்ள, நொண்டியான, முற்றிலும் கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது. வெண்மை நிறம் கொண்ட ஆடு சிறந்தது. காயடிக்கப்பட்ட ஆடு மிகவும் சிறந்தது. 

أَنَّ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ضَحَّى اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ ، سَمِينَيْنِ أَقْرَنَيْنِ ، أَمْلَحَيْنِ مَوْجُوئَيْنِ (أحمد

நபி ஸல் குர்பானி கொடுத்தால் பருமனான, கொம்பு உள்ள, காயடிக்கப்பட்ட ஆட்டைக் குர்பானி கொடுப்பார்கள்

وإن قطع من الذنب أو الأذن أو العين أو الإلية الثلث أو أقل أجزأه وإن كان أكثر لم يجزه لأن الثلث نتفذ فيه الوصية من غير رضا الورثة فاعتبر قليلا وفيما زاد لا تنفذ إلا برضاهم فاعتبر كثيرا (هداية

வால், காது ஆகியவை மூன்றில் ஒரு பகுதி அறுபட்டிருந்தாலோ அல்லது அதை விடக் குறைவாக அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கலாம்.  கொம்பும் இவ்வாறே மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாக உடைந்திருந்தால் குர்பானி கொடுக்கலாம். அதற்கு மேல் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கக் கூடாது. 

மூன்றில் ஒரு பங்கு குறை மன்னிக்கப்படும் என்பதற்கு இமாம்கள் கூறும் ஆதாரமாகிறது. வஸிய்யத் உடைய சட்டமாகும். ஒருவர் தன்னுடைய வாரிசுகளின் அனுமதி இல்லாமலேயே மூன்றில் ஒரு பகுதியை வாரிசு அல்லாதவருக்கு வஸிய்யத் செய்ய அனுமதி உண்டு. காரணம் அதுபோக மீதி இரண்டு பங்கு என்பது வாரிசுகளுக்கு மிச்சமிருப்பது என்பது முழுவதும் மிச்சமிருப்பதைப் போன்றே கருதப்படும். பிறருக்கு வஸிய்யத் செய்த மூன்றில் ஒரு பங்கு என்பது குறைந்த அளவு என்பதால் வாரிசுகளுக்குச் சேர வேண்டிய சொத்தில் குறைவு செய்ததாக கவனிக்கப்படாது. அதுபோல் குர்பானிப் பிராணியில் மூன்றில் ஒரு பங்கு குறை மன்னிக்கப்படும்.                                 

குர்பானிப் பிராணியின் கண்களில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது

عن حذيفة قال قال رسول الله صلى الله عليه و سلم استشرفوا العين والأذن أي اطلبوا سلامتهما (طبراني

குர்பானிப் பிராணியின் கண்களில் மூன்றில் ஒரு பங்கு குறை இருக்கிறதா அல்லது அதைவிடக் கூடுதலாக உள்ளதா என்பதை பரிசோதிக்க ஹிதாயா நூலில் கூறப்படும் விளக்கம் 

ثم معرفة المقدار في غير العين متيسر وفي العين قالوا تشد العين المعيبة بعد أن لا تعتلف الشاة يوما أو يومين ثم يقرب العلف إليها قليللا قليلا فإذا رأته من موضع أعلم على ذلك المكان ثم تشتد عينها الصحيحة وقرب إليها العلف قليلا قليلا حتى إذا رأته من مكان أعلم عليه ثم ينظر إلى تفاوت ما بينهما فإن كان ثلثا فالذاهب الثلث وإن كان نصفا فالنصف (هداية

மற்ற உறுப்புக்களில் குறை இருந்தால் வெளியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணில் குறை இருப்பதை வெளியில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. இதற்காக நாம் செய்ய வேண்டியது நீண்ட நேரம் ஆட்டுக்கு எந்த தீனியும் தராமல் இருந்த பிறகு அதற்கான தீனியை எடுத்துக் கொண்டு அந்த ஆட்டின் இரு கண்களில் குறையுள்ளதாக கருதப்படும் கண் மட்டும் திறந்திருக்கும் அமைப்பில் மற்றொரு கண்ணை அதாவது ஆரோக்கியமான கண்ணைக் கட்டி விட்டு தூரத்தில் இருந்து தீனியைக் கொண்டு செல்ல வேண்டும். எவ்வளவு தூரத்தில் ஆடு தன்னுடைய தீனியைப் பார்த்து அதை நோக்கி வர ஆரம்பிக்கிறது என அந்த இடத்தை அடையாளம் இட வேண்டும். பின்பு அடுத்த நாள் அதே மாதிரி மற்றொரு ஆரோக்கியமான கண் மட்டும் திறந்திருக்கும் அமைப்பில் மற்றொரு கண்ணை அதாவது குறையுள்ள கண்ணைக் கட்டி விட்டு தூரத்தில் இருந்து தீனியைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த முறை தூரத்தில் இருந்தே ஆடு தன்னுடைய தீனியை அடையாளம் கண்டு அதை நோக்கி வர ஆரம்பிக்கும். அந்த இடத்தை அடையாளம் இட வேண்டும். தற்போதைய அடையாளத்தை விட முதல் நாள் போட்ட அடையாளம் மூன்றில் ஒரு பகுதியை விட தூரம் குறைவாக இருந்தால் அல்லது மூன்றில் ஒரு பகுதி மட்டும் இருந்தால் அந்த ஆட்டை குர்பானி கொடுக்கலாம்.                   

அகீகாவில் ஆடுகளின் எடையை விட எண்ணிக்கை தான் முக்கியம். ஆனால் உழ்ஹியாவில் ஆடுகளின் எடை தான் முக்கியம்.

أَنَّ تَكْثِير الْعَدَد فِي الْعَقيقة مَقْصُود فَهُوَ الْأَفْضَل بِخِلَافِ الْأُضْحِيَّة .لأَنَّ الْمَقْصُود فِي الضَّحَايَا اللحم ولحم السمين،فَشَاة نَفِيسَة أَفْضَل مِنْ شَاتَيْنِ غَيْر سَمِينَتَيْنِ بِقِيمَتِهَا -قَالَ النَّوَوِيّ: فِيمَنْ أَرَادَ أَنْ يُعْتِقَ رَقَبَةً وَاحِدَةً ، أَمَّا لَوْ كَانَ مَعَ شَخْصٍ أَلْف دِرْهَم مَثَلًا فَأَرَادَ أَنْ يَشْتَرِيَ بِهَا رَقَبَة يُعْتِقُهَا فَوَجَدَ رَقَبَة نَفِيسَة أَوْ رَقَبَتَيْنِ مَفْضُولَتَيْنِ فَالرَّقَبَتَانِ أَفْضَل،قَالَ:وَهَذَا بِخِلَافِ الْأُضْحِيَّة فَإِنَّ الْوَاحِدَة السَّمِينَة فِيهَا أَفْضَل، لِأَنَّ الْمَطْلُوب هُنَا فَكّ الرَّقَبَة وَهُنَاكَ طِيب اللَّحْم (فتح الباري)وهكذا قال الشافعى رحمه الله عنه فى الاضحية استكثار القيمة مع استقلال العدد أحب إلى 

  விளக்கம்-நவவீ இமாம் கூறுகிறார்கள்- ஒரு மனிதனிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது இந்த ஆயிரத்திற்கு அடிமைகளை வாங்கி உரிமை  விட எண்ணுகிறார் அப்போது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையையும் காண்கிறார் அதேபோல 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளையும் காண்கிறார் இந்நிலையில் அவர்  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட  500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளை வாங்கி உரிமை விட்டு அவ்விருவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது தான் சிறந்த து ஏனெனில் இங்கே அடிமையின் மதிப்பை விட எண்ணிக்கை தான் முக்கியம். இதேபோல் தான் அகீகாவும். குர்பானீ அப்படியல்ல. குர்பானியில் ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை விட பத்தாயிரம் மதிப்புள்ள கொழுத்த ஆடு சிறந்தது         

குர்பானிப் பிராணியை வாங்கும்போது குறையற்றதாக வாங்கி பின்பு அவரிடம் வளரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்..

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَال ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ فَأَصَابَ الذِّئْبُ مِنْ أَلْيَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ رواه ابن ماجة - كتاب الأضاحى

அபூசயீத் ரழி கூறினார்கள் நாங்கள் ஒரு ஆட்டை வாங்கி வைத்திருந்தோம். அதன் பித்தட்டுப் பகுதியை (மற்றொரு அறிவிப்பில் அதன் காதை) ஒரு ஓநாய் கடித்து சேதப்படுத்தி விட்டது. அதைப் பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் அதையே குர்பானி கொடுக்க ஏவினார்கள். 

இறந்தவருக்காக குர்பானி கொடுக்கலாம்

عَنْ حَنَشٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْه(ابو داود

நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்குப் பிறகு அலீ ரழி அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள். காரணம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் தனக்காகவும் குர்பானி தரும்படி எனக்கு வஸிய்யத் செய்தார்கள் அதனால் அவர்களுக்கு சேர்த்து நான் தருகிறேன் என்றார்கள்.

திருமணத்தில் தவிர்க்க வேண்டியவை

 08-05-2026 بسم الله الرحمن الرحيم  

நபி வழித் திருமணம்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

கோடை விடுமுறையில் தொடர் திருமணங்கள் நடைபெறுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட தலைப்பு

திருமணத்தை பகிரங்கப்படுத்துவதும்,அதை மஸ்ஜிதில் நடத்துவதும் சுன்னத்

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَت قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ (ترمذي

A :பகிரங்கப்படுத்துதல் : ஹராமான முறையில் ஒரு பெண்ணை அடைபவன் யாருக்கும் தெரிவிக்க மாட்டான். அதுபோன்று திருமணம் ஆகி விடக்கூடாது என்ற கருத்தில் மேற்படி ஹதீஸ் கூறப்பட்டுள்ளது. எனவே பகிரங்கப்படுத்துதல் என்ற பெயரில் தேவைக்கு மீறிய ஆடம்பரம் வெறுக்கப்பட்டதாகும். பத்திரிக்கை அச்சடிப்பதிலும் எளிமையை கையாள வேண்டும்.                                 

 B   திருமணத்தை மஸ்ஜிதில் நடத்துவது : இதில் பல நன்மைகள் உண்டு 1.பகிரங்கப்படுத்துதல் 2.செலவை மிச்சப்படுத்துதல் 3.புனிதமான காரியத்தை புனிதமான இடத்தில் நடத்துதல் 4.பள்ளியில் அமரும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நன்மை உண்டு. 5. பல மண்டபங்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக கலந்து விடுவார்கள். மஸ்ஜிதில் அது சாத்தியமில்லை.                                                           

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً رواه احمد

எளிமையான திருமணத்தில் பரக்கத் உள்ளது என்ற நபிமொழிக்கு பல்வேறு விளக்கங்கள் கூறலாம். முதலில் பரக்கத் என்ற வார்த்தைக்கே பல்வேறு அர்த்தங்கள் உண்டு. பரக்கத் என்றால் நிம்மதி என்ற அர்த்தமும் உண்டு. பல இலட்சம் செலவு செய்து ஆடம்பரமாக நடைபெறும் திருமணங்களில் பரக்கத் இருப்பதில்லை. அதாவது அந்த தம்பதிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படுவதும் பரக்கத் இல்லாத நிலைக்கு உதாரணமாக கூறலாம்                                        

திருமணத்தில் குத்பா ஓதுவதும், அதில் ஷஹாதத் கலிமாவின் முக்கியத்துவமும்.....

قال النبي صلي الله عليه وسلم في خطبة حجة الوداع فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ (رواه مسلم) عن الربيع بن أنس فإن "كلمة الله" هي التشهد في الخطبة.(تفسير ابن كثير) كااليدالجذماءகுஷ்டரோகியின் கை

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ خُطْبَةٍ لَيْسَ فِيهَا تَشَهُّدٌ فَهِيَ كَالْيَدِ الْجَذْمَاءِ (ترمذي) 

எந்த் குத்பாவில் தஷஹ்ஹுத் இல்லையோ அது குஷ்டரோகியின் கை போன்று குறையுள்ளதாகும்

قال ابن أبي حاتم :كَانَ فِيمَا أُعْطِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ، قَالَ: "جَعَلْتُ أُمَّتَكَ لا تَجُوزُ لَهُمُ الْخِطْبَةُ حَتَّى يَشْهَدُوا أَنَّكَ عَبْدِي وَرَسُولِي" (تفسير ابن كثير) 

மிஃராஜ் பயணத்தில் நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவைகளில் பின்வரும் விஷயமும் அடங்கும். நபியே உங்களுடைய உம்மத்தில் நடைபெறும் திருமணப்பேச்சுக்கள் ஷஹாதத் கலிமா(வை உள்ளடக்கிய குத்பா) இல்லாமல் ஆகி விடக்கூடாது            

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ التَّشَهُّدُ فِي الْحَاجَةِ أَنْ الْحَمْدُ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ (رواه النسائ باب مَا يُسْتَحَبُّ مِنْ الْكَلَامِ عِنْدَ النِّكَاحِ)قَالَ عَبْثَرٌ فَفَسَّرَهُ لَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ{ اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ }{ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا{ اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا }رواه الترمذي

மஹர் கொடுப்பதின் அவசியம்

قال الله تعالي وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً (4) سورة النساء 

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ امْرَأَةً جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ لِأَهَبَ لَكَ نَفْسِي فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعَّدَ النَّظَرَ إِلَيْهَا وَصَوَّبَهُ ثُمَّ طَأْطَأَ رَأْسَهُ فَلَمَّا رَأَتْ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ أَيْ رَسُولَ اللَّهِ إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا فَقَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ قَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ اذْهَبْ إِلَى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا وَجَدْتُ شَيْئًا قَالَ انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَلَا خَاتَمًا مِنْ حَدِيدٍ وَلَكِنْ هَذَا إِزَارِي (قَالَ سَهْلٌ مَا لَهُ رِدَاءٌ) فَلَهَا نِصْفُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَيْءٌ فَجَلَسَ الرَّجُلُ حَتَّى طَالَ مَجْلِسُهُ ثُمَّ قَامَ فَرَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ فَلَمَّا جَاءَ قَالَ مَاذَا مَعَكَ مِنْ الْقُرْآنِ قَالَ مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا عَدَّدَهَا قَالَ أَتَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ قَالَ نَعَمْ قَالَ اذْهَبْ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري5149  عن ظهر قلبكமனப் பாடமாக

மேற்படி ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனின் சூராக்களைக் கற்றுத் தருவதை மஹராக வைத்து திருமணம் நடத்துவது நபி ஸல் அவர்களுக்குப் பின் வேறு யாருக்கும் அனுமதி இல்லை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்முடைய மனைவிமார்களுக்கு கொடுத்த மஹர் 500 திர்ஹங்கள்

عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ سَأَلْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمْ كَانَ صَدَاقُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ صَدَاقُهُ لِأَزْوَاجِهِ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا قَالَتْ أَتَدْرِي مَا النَّشُّ قَالَ قُلْتُ لَا قَالَتْ نِصْفُ أُوقِيَّةٍ فَتِلْكَ خَمْسُ مِائَةِ دِرْهَمٍ فَهَذَا صَدَاقُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَزْوَاجِهِ رواه مسلم 500 திர்ஹங்கள் என்பது 1 கிலோ, 531 கிராம் வெள்ளிக்குச் சமம்

மஹர் அளவுக்கு மீறி வாங்கப்பட்ட காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது பற்றி உமர் ரழி மிம்பரில் ஏறிப் பேசிய போது அதை எதிர்த்த பெண்

عن مسروق، قال: ركب عمر بن الخطاب منبر رسول الله ثم قال: أيها الناس، ما إكثاركم في صُدُق النساء وقد كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه وإنماالصدقات فيما بينهم أربعمائة درهم فما دون ذلك. ولو كان الإكثار في ذلك تقوى عند الله أو كرامة  لم تسبقوهم إليها. فَلا أعرفَنَّ ما زاد رجل في صداق امرأة على أربعمائة درهم قال : ثم نزل فاعترضته امرأة من قريش فقالت:  يا أمير المؤمنين، نَهَيْتَ الناس أن يزيدوا النساء صداقهم  على أربعمائة درهم؟ قال: نعم. فقالت: أما سمعت ما أنزل الله  في القرآن؟ قال: وأي ذلك؟ فقالت: أما سمعت الله يقول:  وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا   قال: فقال:اللهم غَفْرًا، كُلُّ الناس أفقه من عمر ثم  رجع فركب المنبر فقال: إني كنت نهيتكم أن تزيدوا النساء في صداقهن على أربعمائة درهم، فمن شاء أن يعطي من ماله ما أحب (تفسير ابن كثير)

வசதி உள்ளவர் எவ்வளவு மஹர் கொடுத்தாலும் கூடும்.ஆனால் கொடுத்த மஹரை நிர்பந்தித்து கேட்கக் கூடாது

وآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا  [النساء: 20]

கொடுத்த மஹரையே கட்டாயப் படுத்திக்  கேட்கக் கூடாது என்றால் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சனை  கேட்பது மாபெரும் பாவம்

முறையில்லாமல் கொடுப்பவரின் மன திருப்தி இல்லாம்ல் வாங்கும் பணத்தில் பரக்கத் இருப்பதில்லை

عَنْ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ لِي يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرٌ حُلْوٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى (وفي رواية فَالْيَدُ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَةُ وَالسُّفْلَى هِيَ السَّائِلَةُ)  قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ الْعَطَاءَ فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ فَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنْ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ رَحِمَهُ اللَّهُ رواه البخاري2750                                    

قال الله تعالى:الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ  [النساء:34]

வரதட்சனையால் சீர்குலையும் குடும்ப உறவுகள், வரதட்சனையால் பெருகிப்போன பெண் சிசுக் கொலைகள்

எத்தனையோ பெற்றோர்கள் வரதட்சனைக்கு பயந்து தன் மகளுக்கு முறையாக திருமணம் செய்து வைக்காமல் அவளே ஒருவரை விரும்பி அவருடன் செல்ல அனுமதித்து விடுகின்றனர். எத்தனையோ குடும்பங்களில் சிறு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் கணவன் வாங்கிய வரதட்சனையை சுட்டிக்காட்டி, மனைவி அவனை சிறுமைப்படுத்தி விடுகின்றாள். பாலினம் அறியும் நவீன கருவிகள் மூலம் குறைந்த செலவில் பெண் சிசுவைக் கொன்று விடுகிறார்கள். வரதட்சனையோடு ஒப்பிடும்போது இது பெரும் செலவே இல்லை என்று சாதாரணமாக கூறுகின்றனர்

வரதட்சனையால் பெருகிப்போன தங்க வினியோகம், தங்கம் எடுப்பதற்காக அழிக்கப்படும் இயற்கை வளங்கள்

பசுமைத்தாயகம் என்ற அமைப்பினர் “தங்கம் வாங்குவது பாவச்செயல்” என பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பேட்டி : இந்திய அளவில் அதிக தங்கம் விற்பனையாகும் பகுதி தென்னிந்தியாதான். அட்சய திருதியை நாளில் மட்டும் 70,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. ஏற்கெனவே இந்திய மக்களிடம் உள்ள தங்கத்தின் அளவு சுமார் 14 ஆயிரம் டன் ஆகும். தங்கத்தின் மீதான மோகம் தான் வரதட்சனைக் கொடுமை, பெண் சிசுக் கொலை ஆகியவற்றுக்குக் காரணம். 

மேலும் ஒரு மோதிரத்திற்காக 20 டன் மண் வெட்டப்படுகிறது. மலைகளும் காடுகளும் அழிகின்றன. மண்ணிலிருந்து தங்கத்தை பிரிக்கும் சயனைடு நஞ்சால் நீர் மாசுபடுகிறது. எனவே அவசியமின்றி தங்கம் வாங்காதீர் – தினகரன் 21-4-2007

  மாப்பிள்ளைக்கு மருதாணி இடுவது கூடாது மருதாணி என்பது பெண்களுக்கு மட்டும் உரித்தானது 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمُخَنَّثٍ قَدْ خَضَّبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَالُ هَذَا فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ يَتَشَبَّهُ بِالنِّسَاءِ فَأَمَرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلَا نَقْتُلُهُ فَقَالَ إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ قَالَ أَبُو أُسَامَةَ وَالنَّقِيعُ نَاحِيَةٌ عَنْ الْمَدِينَةِ وَلَيْسَ بِالْبَقِيعِ رواه ابوداود

பெண் போன்று வேடமிட்ட ஒருவரை நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அவருடைய கைகளிலும் கால்களிலும் மருதாணி  தடவியிருந்தார். அதைக் கண்டு வெறுத்த நபி ஸல் யார் இந்த ஆள்... என்று கேட்க, அல்லாஹ்வின் தூதரே இவர் தன்னை பெண் போன்று ஆக்கிக் கொண்டார் என்றார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அவருக்கு தண்டைனை கொடுப்பதற்காக நகீஃ என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது அல்லாஹ்வின் தூதரே இவரைக் கொன்று விட வேண்டாமா என்று நபியவர்களிடம் கேட்க, வேண்டாம் நிச்சயமாக நான் தொழுகையாளிகளை தண்டிப்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طِيبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ (ترمذي)

வெளியே செல்லும்போது ஆண்கள் தடவும் திரவியங்களில் வாசனை இருக்கலாம் ஆனால் நிறம் இருப்பது கூடாது அதற்கு நேர் மாற்றமாக ஒரு பெண் வெளியே செல்லும்போது அவள் தடவும் திரவியங்களில் நிறம் இருக்கலாம் ஆனால் வாசனை இருப்பது கூடாது

மணமகனுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது கூடுமா ?

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ رواه الترمذي

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلْقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهُ حَلْقَةً مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ سِوَارًا مِنْ ذَهَبٍ وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا ابوداود

எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் காப்பை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க மோதிரம் அணிவிக்கட்டும்

எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் மாலை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க  மாலை அணிவிக்கட்டும்

எவர் தனக்குப் பிரியமானவருக்கு நரகத்தின் வளையலை அணிவிக்க விரும்புவாரோ அவர் தங்க வளையல் அணிவிக்கட்டும்

திருமணத்தில் அனாச்சாரங்கள், வீண் விரயங்கள்

  திருமணம் என்ற ஒரு சுன்னத்தை நிறைவேற்ற 99 அனாச்சாரங்கள் கலக்கப் படுகின்றன. திருமணம் என்பது நமது மார்க்கத்தில் மிகவும் இலகுவாக்கப்பட்ட ஒரு விஷயமாகும். அதை நமது மக்கள் மிகவும் கடினமானதாக ஆக்கி விட்டார்கள். 1.மணமகன் 2.மணப்பெண் 3.இரு சாட்சிகள் 4.மஹர் தொகை 5. ஈஜாப், கபூல் உடைய வாசகம். அதாவது மணமகளின் பொறுப்புதாரி நான்  இன்ன பெண்ணை உனக்கு திருமணம் செய்து தந்தேன் என்று கூறுவதும் பதிலுக்கு மாப்பிள்ளை நான் அவளை திருமணம் செய்து கொண்டேன் என மொழிவதுமாகும். வேறு எந்த விஷயங்கள் இல்லாமலும் நிகாஹ் நடந்து விடலாம். ஆனால் இந்த ஐந்து விஷயங்கள் இல்லாமல் நிகாஹ் என்பது நடைபெறாது.  குத்பா ஓதுவதும் துஆ ஓதுவதும் சுன்னத்தான செயல்களாகும். விருந்து தருவதும் நல்ல விஷயம்  தான். ஆனால் வலீமா விருந்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

விருந்துகளில் முதன்மையானது வலீமா விருந்து. அதைக் கூட ஆடம்பரம் இல்லாமல் வசதிக்கு ஏற்ப செய்ய வேண்டும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ فَقَالَ مَا هَذَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ فَبَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ رواه البخاري5155

عَنْ أَنَسٍ قَالَ مَا أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ أَوْلَمَ بِشَاةٍ رواه البخاري5171

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثًا يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ فَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ أُمِرَ بِالْأَنْطَاعِ فَأَلْقَى فِيهَا مِنْ التَّمْرِ وَالْأَقِطِ وَالسَّمْنِ فَكَانَتْ وَلِيمَتَهُ رواه البخاري5085 اقطபாலாடைக்கட்டி

عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيُجِبْ رواه مسلم عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري5177

இன்றைய திருமண விருந்துகளில் பஃபே சிஷ்டம் என்ற மேற்கத்திய கலாச்சாரம் வேகமாக பரவி வருவதைப் பற்றி......

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ ؟ رواه البخاري3456 جحر ضبஉடும்பின் பொந்தில் நுழைந்தாலும் 

[திருமண மண்டபங்களில் வசதி படைத்தவர்களும் கூட தட்டை கையில் ஏந்திய படி வரிசையில் நின்று தேவையானதை வாங்கி வந்து அதை நின்று கொண்டே சாப்பிடும் அளவுக்கு மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடம் ஊடுருவி உள்ளது]

آداب الضيافة في الاسلام - قال الله تعالي هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ (24) إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ (25) فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ (26) فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ (27) سورة الذاريات وهذه الآية انتظمت آداب الضيافة؛ فإنه جاء بطعامه من حيث لا يشعرون بسرعة، ولم يمتن عليهم أولا فقال: "نأتيكم بطعام؟" بل جاء به بسرعة وخفاء، وأتى بأفضل ما وجد من ماله، وهو عجل فتي سمين مشوي، فقربه إليهم، لم يضعه، وقال: اقتربوا، بل وضعه بين أيديهم، ولم يأمرهم أمرا يشق على سامعه بصيغة الجزم، بل قال: { أَلا تَأْكُلُونَ } على سبيل العرض والتلطف، كما يقول القائل اليوم: إن رأيت أن تتفضل وتحسن وتتصدق،فافعل  ابن كثير) 

நிச்சயிக்கப்பட்ட, அல்லது  நிச்சயிக்கப்படவிருக்கும் பெண்ணை மணமகன் பார்ப்பது கூடுமா?

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ أَحَدُكُمْ الْمَرْأَةَ فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا فَلْيَفْعَلْ قَالَ فَخَطَبْتُ جَارِيَةً فَكُنْتُ أَتَخَبَّأُ لَهَا حَتَّى رَأَيْتُ مِنْهَا مَا دَعَانِي إِلَى نِكَاحِهَا وَتَزَوُّجِهَا فَتَزَوَّجْتُهَا رواه ابوداود 

ஒருவர் ஒரு பெண்ணை பெண் பேசினால் அவளைத் திருமணம் செய்வதின் பால் தூண்டும் வகையில் ஒருமுறை அவளைப் பார்த்துக் கொள்ளட்டும்  இதை அறிவிக்கும் ஜாபிர் ரழி கூறினார்கள் நான் ஒரு பெண்ணை  பெண் பேசியிருந்தேன். அவரை நான் மறைந்திருந்து பார்த்தேன். அது அவரைத் திருமணம் செய்யத் தூண்டும் வகையில் அமைந்து அவரைத் தான் நான் திருமணம் செய்து கொண்டேன்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لَا قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا رواه مسلم (بَاب نَدْبِ النَّظَرِ إِلَى وَجْهِ الْمَرْأَةِ وَكَفَّيْهَا لِمَنْ يُرِيدُ تَزَوُّجَهَا)மணப்பெண்ணை  

பார்க்காமலேயே திருமணம் செய்ததால் விவாகரத்து வரை சென்று விட்ட வழக்குகள் நிறைய உள்ளன.

عَنْ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ قَالَ خَطَبْتُ امْرَأَةً فَجَعَلْتُ أَتَخَبَّأُ لَهَا حَتَّى نَظَرْتُ إِلَيْهَا فِي نَخْلٍ لَهَا فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا وَأَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَلْقَى اللَّهُ فِي قَلْبِ امْرِئٍ خِطْبَةَ امْرَأَةٍ فَلَا بَأْسَ أَنْ يَنْظُرَ إِلَيْهَا ابن ماجة

முஹம்மது இப்னு மஸ்லமா ரழி ஒரு பெண்ணை  பெண் பேசியிருந்தார்கள்.  அந்தப் பெண்ணை அவர் மறைந்திருந்து பார்த்த போது நபித்தோழராக இருந்து கொண்டு இப்படிச் செய்யலாமா என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் நான் நபி ஸல் கூற கேட்டுள்ளேன். ஒரு பெண்ணை  பெண் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அல்லாஹ் உங்களின் மனதில் போட்டால் அவளை ஒருமுறை பார்ப்பது தவறில்லை 

عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ لَهُ امْرَأَةً أَخْطُبُهَا فَقَالَ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَأَتَيْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَخَطَبْتُهَا إِلَى أَبَوَيْهَا وَأَخْبَرْتُهُمَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَأَنَّهُمَا كَرِهَا ذَلِكَ قَالَ فَسَمِعَتْ ذَلِكَ الْمَرْأَةُ وَهِيَ فِي خِدْرِهَا فَقَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَكَ أَنْ تَنْظُرَ فَانْظُرْ وَإِلَّا فَأَنْشُدُكَ كَأَنَّهَا أَعْظَمَتْ ذَلِكَ قَالَ فَنَظَرْتُ إِلَيْهَا فَتَزَوَّجْتُهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا رواه ابن ماجة

ஆயிஷா நாயகியை திருமணத்திற்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்தார்களா?

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ إِذَا رَجُلٌ يَحْمِلُكِ فِي سَرَقَةِ حَرِيرٍ فَيَقُولُ هَذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُهَا فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُولُ إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ رواه البخاري5078   

ஆயிஷாவே உன்னை திருமணம் செய்யும் முன்பு கனவில் உன்னை எனக்கு காட்டப்பட்டது. ஒரு வானவர் பெரிய பட்டுத்துணியில் உன்னைச் சுமந்தவாறு வந்து இவர் தான் உங்களுடைய வருங்கால மனைவி என்று கூற, அதற்கு நான் இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளதாக இருந்தால் அது நடக்கட்டும் என்றேன்.                                                                      

முறைப்படி பெண் கேட்பதும், இன்னொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் விஷயத்தில் குறுக்கிடாமல் இருப்பதும்

عَنْ عُرْوَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ عَائِشَةَ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ إِنَّمَا أَنَا أَخُوكَ فَقَالَ أَنْتَ أَخِي فِي دِينِ اللَّهِ وَكِتَابِهِ وَهِيَ لِي حَلَالٌ رواه البخاري  عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْطُبْ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ رواه ابن ماجة

عَن بْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ وَكَانَ (أي زوجها) مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتُوُفِّيَ بِالْمَدِينَةِ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَتَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقَالَ سَأَنْظُرُ فِي أَمْرِي فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ لَقِيَنِي فَقَالَ قَدْ بَدَا لِي أَنْ لَا أَتَزَوَّجَ يَوْمِي هَذَا قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ فَقُلْتُ إِنْ شِئْتَ زَوَّجْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ فَصَمَتَ أَبُو بَكْرٍ فَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا وَكُنْتُ أَوْجَدَ عَلَيْهِ مِنِّي عَلَى عُثْمَانَ فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ خَطَبَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْكَحْتُهَا إِيَّاهُ فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَيَّ حِينَ عَرَضْتَ عَلَيَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ شَيْئًا قَالَ عُمَرُ قُلْتُ نَعَمْ قَالَ أَبُو بَكْرٍ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرْجِعَ إِلَيْكَ فِيمَا عَرَضْتَ عَلَيَّ إِلَّا أَنِّي كُنْتُ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ ذَكَرَهَا فَلَمْ أَكُنْ لِأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوْ تَرَكَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبِلْتُهَا رواه البخاري 5122  (تأيّمتவிதவையாகி விட்ட போது) 

இன்றைய திருமணங்களில் ஆடியோ வீடியோ இரண்டும் படுத்தும் பாடு

திருமண மண்டபங்களில் நடைபெறும் மார்க்க விரோத காரியங்களில் ஒன்றாக ஆண்களும், பெண்களும் ஒன்றாக கலந்து விடுவதை கூறலாம். சில இடங்களில் ஆண்கள், பெண்கள் என தனியாக இருந்தாலும் வீடியோ மூலம் பெண்களை படம் பிடித்து ஆண்களுக்கு காட்டுகின்றனர். ஆண்கள் தங்களுக்கு முன்னால் உள்ள T.V.மூலம் அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் உட்பட மற்ற பெண்களையும் பார்க்கும் நிலை உருவாகிறது. சபல புத்தி உள்ள சில ஆண்களுக்கு இது சவுகரியமாகி விடும்                            

 قال الله تعالي قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (30) سورة النور

عن أبي هريرة، رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "كل عين باكية  يوم القيامة إلا عينًا غَضّت عن محارم الله، وعينًا سهِرت في سبيل الله، وعينًا يخرج منها مثل رأس الذباب، من خشية الله، عز وجل" (تفسير ابن كثير)   

وعنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنْ الزِّنَا مُدْرِكٌ ذَلِكَ لَا مَحَالَةَ فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ رواه مسلم

இசை ஆடியோ- இது இல்லாமல் திருமணமே கூடாது என சிலர் கருதுகின்றனர். ரஹ்மத்துடைய மலக்குகளை வெளியே அனுப்பி விட்டு, கெட்ட ஷைத்தான்களை உள்ளே கொண்டு வருபவைகளாக இசை ஆடியோ கேசட்டுகள் பயன்படுகின்றன.

திருமணத்திற்கு சிறந்த மாதமும், மணமக்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த பிரார்த்தனையும்

عَنْ عَائِشَةَرض قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ يُبْنَى بِنِسَائِهَا فِي شَوَّالٍ (ترمذي)

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ رواه ابوداود

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ قَالَ تَزَوَّجَ عَقِيلُ بْنُ أَبِي طَالِبٍ فَخَرَجَ عَلَيْنَا فَقُلْنَا بِالرَّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ مَهْ لَا تَقُولُوا ذَلِكَ فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَانَا عَنْ ذَلِكَ وَقَالَ قُولُوا بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَبَارَكَ لَكَ فِيهَا (رواه احمد,والدارمي,وابن ابي شيبة,والطبراني,والحاكم)

திருமணத்தில் ஒழிக்கப்பட வேண்டிய இன்னும் சில அனாச்சாரங்கள்

திருமணத்திற்காக நாள், நட்சத்திரங்கள் பார்ப்பது, ஜோசியம், ஜாதகம், ஜோடிப் பார்ப்பது, நேரம், காலம் பார்ப்பது, வளர் பிறை, தேய்பிறை பார்ப்பது, மாவிலைத் தோரணங்கள் கட்டுவது  சடங்கு என்ற அடிப்படையில் வாழை மரங்கள் நடுவது மாப்பிள்ளை ஊர்வலம், மணமகன் தங்கம் அணிவது,, நிச்சயதார்த்தம் என்ற பெயரில் வீண் செலவுகள், இத்தனை பேருக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை நிர்பந்திப்பது, மொய் என்ற அன்பளிப்பை கட்டாயமாக்குவது

 குறிப்பு- மார்க்கத்திற்கு விரோதமான வகையில் பல இலட்சங்கள்   நம்முடைய திருமணங்களில் செலவழிக்கப்படுகிறது. பகட்டுக்காகவும், பெருமைக்காகவும் நடத்தப்படும் திருமணங்களில் இன்னும் நிறைய பணங்கள் வீணாக்கப்படுகிறது. இந்தப் பணத்தை மிச்சப்படுத்தி ஏழைக்குமர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நன்மையாவது மிஞ்சும்.

என்றும் நம் நினைவில் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்

 29-05-2026 துல்ஹஜ்- 11 بسم الله الرحمن الرحيم          என்றும் நம் நினைவில்  நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் https://chennaijamaathululam...