வியாழன், 25 ஜூன், 2026

ஆஷூரா

 26-06-2026

MUHARRAM-  10


بسم الله الرحمن الرحيم  

        ஆஷூரா நாளில் நடந்த சம்பவங்களும் 

அதன் படிப்பினைகளும்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


     ஆஷூரா தினத்தில் பல நபிமார்கள் விஷயத்தில் படிப்பினைக்குரிய பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக சில நபிமார்கள் விஷயத்தில் அந்த நபிமார்களுக்கு எதிராக  அநியாயம் செய்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் பாடம் புகட்டிய தினமாக அந்த தினம் அமைந்துள்ளது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விஷயத்தில் மட்டும் இரண்டு சம்பவங்கள் இந்த நாளில் நடைபெற்றுள்ளன. 1. கைத்தடி பாம்பாக மாறி சூனியக்காரர்களின் சூழ்ச்சியை முறியடித்த சம்பவம். 2. கடல் பிளந்த சம்பவம். மேலும் மற்ற நபிமார்கள் விஷயத்திலும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்பா ஆஷூரா நாளில் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தம் பிள்ளைகளுக்காக ஆஷூரா நாளில் தான் பாவ மன்னிப்பு கேட்டார்கள். யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தினர் மீது ஏற்படவிருந்த வேதனை கடைசி நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டதும் ஆஷூரா நாளில் தான். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் ஆஷூரா நாளில் தான் கரை சேர்ந்தது.  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் யூதர்களிடமிருந்து காப்பாற்றி விண்ணுக்கு உயர்த்தியதும் ஆஷூரா நாளில் தான். அந்த வகையில் சில நபிமார்களுக்கு இது பாவமன்னிப்பு தினமாகவும் வேறு சில நபிமார்களுக்கு எதிராக  அநியாயம் செய்தவர்கள் அழிக்கப்பட்ட தினமாகவும் அநியாக்காரர்களுக்கு அல்லாஹ் பாடம் புகட்டிய தினமாகவும் இந்த தினம் உள்ளது.

  எனவே அப்படிப்பட்ட ஒவ்வொரு வரலாற்றுச் சம்பவங்களையும் அதன் படிப்பினைகளையும் நாம் காண்போம்.            

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம்

فَتَلَقَّى آَدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ.. (37البقرة ) وكان ذلك في يوم عاشوراء في يوم جمعة (قرطبي) قِيلَ إِنَّ هَذِهِ الْكَلِمَات: مفسرة بقوله تعالي قَالَا رَبّنَا ظَلَمْنَا أَنْفُسنَا وَإِنْ لَمْ تَغْفِر لَنَا وَتَرْحَمنَا لَنَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ (الاعراف23" وسئل بعض السلف عما ينبغي أن يقوله المذنب فقال: يقول ما قاله أبواه :{ ربنا ظلمنا أنفسنا } الآية وقال موسى عليه السلام{رب إني ظلمت نفسي فاغفر لي} وقال يونس عليه السلام :{ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين (تفسير قرطبي)                                                

பாவ மன்னிப்புக் கேட்பதற்கு சிறந்த வாசகம் எது என முன்னோர்களில் ஒருவரிடம் கேட்ட போது ஆதம் அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம்,யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் கேட்ட தவ்பாவின் வாசகங்களை தேர்ந்தெடுத்து தவ்பா கேட்க அறிவுறுத்தினார்கள்

பாவ மன்னிப்பு சம்பந்தமாக இன்னும் இரு நபிமார்களின் விஷயத்தில் நடைபெற்ற சம்பவங்கள்

நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் பிள்ளைகளுக்கு  தவ்பா செய்வதற்காக தேர்ந்தெடுத்த நாள்

قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97) قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (98سورة يوسف)قال ابن عباس : أخَّر دعاءه إلى السحر وقال المثنى بن الصباح عن طاوس قال : سحر ليلة الجمعة ووافق ذلك ليلة عاشوراء (قرطبي)

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்துக்கு வேதனை அருகில் வந்த பின் 

அவர்கள் திருந்தி தவ்பா கேட்டு வேதனை விளக்கிக் கொள்ளப்பட்ட தினம்

 عَنْ عَلِيٍّ، قَالَ:"تِيبَ عَلَى قَوْمِ يُونُسَ يَوْمَ عَاشُورَاءَ(تفسير ابن ابي حاتم)روي عن ابن مسعود وغيره: أنّ قوم يونس كانوا بأرض نِيْنَوى من أرض الموصل ، فأرسل الله تعالى إليهم يونس عليه السلام ،يدعوهم إلى الإيمان فدعاهم فأبوا فقيل له :إنّ العذاب مصبحهم إلى ثلاثة أيام فأخبرهم بذلك فقالوا: إنا لم نجرب عليك كذباً ،فانظروا فإن بات فيكم تلك الليلة فليس بشيء،وإن لم يبت فاعلموا أنّ العذاب مصبحكم فلما كان في جوف تلك الليلة خرج يونس عليه السلام من بين أظهرهم ، فلما أصبحوا تغشاهم العذاب فكان فوق رؤوسهم قدر ميل. وقال وهب : غامت السماء غيماً عظيماً ، أسود هائلاً يدخن دخاناً عظيماً فهبط حتى غشى مدينتهم واسودّت سطوحهم ، فلمارأوا ذلك أيقنوا بالهلاك ، فطلبوا يونس بينهم فلم يجدوه وقذف الله تعالى في قلوبهم التوبة، فخرجوا إلى الصعيد بأنفسهم ونسائهم وأولادهم ودوابهم ولبسوا المسوح  وأظهرواالإيمان والتوبة  وأخلصوا النية ، وفرّقوا بين كل والدة وولدها من النساء والدواب فحنّ بعضها إلى بعض وعلت أصواتها واختلطت بأصواتهم ، وعجوا وتضرّعوا إلى الله تعالى وقالوا آمنا بما جاء به يونس عليه السلام  فرحمهم الله تعالى  واستجاب دعاءهم  وكشف عنهم العذاب بعد ما أظلهم. وكل ذلك يوم عاشوراء يوم الجمعة ،وقيل :خرجوا إلى شيخ من بقية علمائهم فقالوا :قد نزل بنا العذاب فما ترى ؟فقال لهم : قولوا يا حيّ حين لا حيّ ، ويا حيّ محيي الموتى ، ويا حيّ لا إله إلا أنت. فقالوها ، فكشف عنهم. (تفسير السراج المنير)

யூனுஸ் அலை அவர்கள் இராக்கில் உள்ள நீனவா என்ற ஊருக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்காத போது அல்லாஹ்வின் கட்டளைப்படி உங்களுக்கு மூன்றே நாளில் வேதனை வரும் என்று கூறினார்கள். இதன் பின்பு அவர்களின் உள்ளத்தில் பயம் வந்து விட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் யூனுஸ் அலை சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். நாம் அந்த நாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். அந்த நாளில் அவர் நம்மோடு இருந்தால் நாம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவர் நம்மோடு இல்லாமல் வெளியேறி விட்டால் அவர் சொல்வதை நம்புவோம் என்று முடிவு செய்தனர். யூனுஸ் அலை அந்த நாளுக்கு முந்தைய இரவில் வெளியேறி னார்கள். அடுத்த நாள் காலையில் வானில் கருமேகம் போன்று வேதனை ஒரு மைல் தூரத்தில் இறங்கி வந்து கொண்டே இருந்தது. எல்லாம் இருட்டாகி விட்டது. அப்போது அம்மக்கள் திருந்தி தவ்பா செய்தவர்களாக யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தேடினார்கள். பின்பு மைதானத்தில் அவர்களும் அவர்களின் குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கந்தலான ஆடைகளுடன் ஒன்று கூடி அழுதார்கள். அல்லாஹ் கடைசி நேரத்தில் அவர்களின் மீது வர வேண்டிய வேதனையை விலக்கிக் கொண்டான். இது ஆஷூரா நாளில் நடைபெற்றது. 

         فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ (98) يونس

படிப்பினை - கடைசி நேரத்தில் தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்டது இவர்கள் விஷயத்தில் மட்டும் தான். மற்ற மனிதர்கள் விஷயத்தில் கடைசி நேர தவ்பா ஏற்கப்படாது. 

தவ்பாவைப் பற்றி இன்னும் சில செய்திகள்

தவ்பாவுக்கு இரண்டு விதமான எல்லைகள் உண்டு என்று சொல்லப்படும் 1. தனி மனிதனைக் கவனித்து அதாவது உயிர் பிரியும் கடைசி நேரம் வந்து விட்டால் தவ்பா ஏற்கப்பட்டாது. இது ஒவ்வொரு தனி மனிதனைப் பொறுத்ததாகும். 

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الآنَ وَلا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَاباً أَلِيماً (النساء18قال الله في قصة فرعون)حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لا إِلِهَ إِلاَّ الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَاْ مِنَ الْمُسْلِمِينَ-آلآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ(الانفال

2. ஒட்டு மொத்த மக்களைக் கவனித்து தவ்பாவின் எல்லை.  இது தான் சூரியன் மேற்கில் உதயமாகுவதாகும். 

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا فَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ ». (ابن ماجة

 ‘சூரியன் மேற்கில் உதிக்கும் வரை மறுமை நாள் தோன்ற மாட்டாது. அவ்வாறு அது உதித்து மக்கள் அதனைக் கண்டால் அவர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் அப்போது ஈமான் கொள்ளல் எந்த ஆண்மாவுக்கும் (அது ஏற்கனவே ஈமான் கொண்டு இல்லாவிட்டால்) பயன் கொடுக்க மாட்டாது. அல்லது தன் ஈமானில் அது எந்த நன்மையை சம்பாதிக்கவும் மாட்டாது.’

சூரியன் மேற்கில் உதயமாகி விட்டால் தவ்பாவின் வாசல் அடைக்கப்படும் என்பதால் அதற்கு அடுத்து தாப்பதுல் அர்ழ் என்ற அதிசய மிருகம் வந்து ஒவ்வொருவரின் நெற்றியிலும் இவர் முஃமின் இவர் காஃபிர் என அடையாளமிடும்.

وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82) النمل

 عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلاَمُ فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَ تَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتَمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ ».(ابن ماجة) معانى بعض الكلمات : تجلو : تنوِّر -    الحواء : البيوت المجتمعة من الناس على ماء  -  تخطم : تسم

 ‘தாப்பதுல் அர்ள் என்ற அதிசய மிருகம் தோன்றும்போது அதனிடம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய மோதிரமும் மூஸா அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய கைத்தடியும் இருக்கும். அது முஃமினின் நெற்றியில் இவர் முஃமின் என கைத்தடி மூலமாக அடையாளமிட்டு நெற்றியைப் பிரகாசிக்கச் செய்யும் . காஃபிரின் நெற்றியில் இவர் காஃபிர் என மோதிரம் மூலமாக அடையாளமிடும்.  எந்த அளவுக்கென்றால் ஒரு தண்ணீர் பிடிக்கும் இடத்தில் அவரவர் நெற்றியில் உள்ள அடையாளத்தைப் பார்த்து ஓ காஃபிரே! ஓ முஃமினே! என ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வர். அல்லாஹ் பற்றிய, மறுமை நாள் பற்றிய உண்மைகள் குர்ஆன் மூலமாகவும்  பல்வேறு ஆதாரங்கள் சொல்லி விளக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களில் பலர் அதனை ஏற்கவில்லை. அறிவைப் பயன்படுத்தி சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாத மனிதனுக்கு மறுமை நாள் நெருங்கும்போது இப்படியொரு மிருகத்தை அனுப்பி முஃமினுக்கும் காஃபிருக்கும் மத்தியில் அல்லாஹ் பிரித்து விடுவான். இவர் நரகவாதி இவர் சுவன வாதி என நெற்றியிலே  எழுதி ஒட்டியது போன்று அது இருக்கும். சாதாரணமாக மக்களின் பேச்சு வழக்கில் நான் அப்படிப் பட்டவன் என என் நெற்றியிலா எழுதி ஒட்டப் பட்டுள்ளது என்று கேட்கும் வழமை உண்டு. 

தாப்பதுல் அர்ழ் எங்கிருந்து வெளியாகும்

عن عَبْد اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ذَهَبَ بِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى مَوْضِعٍ بِالْبَادِيَةِ قَرِيبٍ مِنْ مَكَّةَ فَإِذَا أَرْضٌ يَابِسَةٌ حَوْلَهَا رَمْلٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « تَخْرُجُ الدَّابَّةُ مِنْ هَذَا الْمَوْضِعِ ». فَإِذَا فِتْرٌ فِى شِبْرٍ. قَالَ ابْنُ بُرَيْدَةَ فَحَجَجْتُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَأَرَانَا عَصًا لَهُ فَإِذَا هُوَ بِعَصَاىَ هَذِهِ كَذَا وَكَذَا.  (ابن ماجة 

ஆஷூரா நாளில் நடைபெற்ற இன்னும் சில சம்பவங்கள்

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடி  ராட்சத பாம்பாக மாறி, சூனியக்காரர்கள் உருவாக்கிய பாம்புகள் அனைத்தையும் விழுங்கியதும், அந்த சூனியக்காரர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றதும் இதே நாள் 

قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى(57)فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى (58) قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحًى (59) فَتَوَلَّى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَى (60....قَالُوا يَا مُوسَى إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ أَوَّلَ مَنْ أَلْقَى (65) قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى (66) فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى- قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى (68) وَأَلْقِ مَا فِي يَمِينِكَتَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى (69) فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (طه) عَنِ ابْنِ عَبَّاسٍرضأَنَّ يَوْم الزِّينَة الْيَوْم الَّذِي أَظْهَرَ اللَّه فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْن وَالسَّحَرَة يَوْم عَاشُورَاء(تفسير ابن كثير

மேற்காணும் சம்பவத்தில் படிப்பினைகள்

இஸ்லாத்தை அழிக்க எந்த அளவுக்கு எதிரிகள் முயற்சி  செய்வார்களோ  அந்த அளவுக்கு அல்லாஹ் இஸ்லாத்தை வளரச் செய்வான். மூஸா அலை அவர்களையும், அவர்களின் சத்தியக் கொள்கையையும் ஒழித்துக் கட்ட அத்தனை சூனியக்காரர்களையும் ஃபிர்அவ்ன் அழைத்தான். ஆனால் அனைவரும் முஃமின்களாக மாறினர். 

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (الصف8)

சூரத்துல் புரூஜ் கூறும் சம்பவமும் இதே போன்றது தான்

  ஒரு அரசனிடம் சூனியக்காரனாக மாற வேண்டியதிருந்த இளைஞரின் பாதையை அல்லாஹ் மாற்றி நேர்வழியில் செலுத்திய சம்பவம் சுருக்கமாக-  இறுதியில் அந்த இளைஞரைக் கொல்வதற்கு அரசன் பல தடவை முயன்றும் தோற்றுப்போய் விட, கடைசியாக அந்த இளைஞரே அரசனிடம் நான் சொல்லும் விதத்தில் செயல்பட்டால் தான் என்னைக் கொல்ல முடியும் என்று கூறி ஊர் மக்களையெல்லாம் திரட்டச் சொல்லுவார் ஊர் ஒன்று கூடியிருக்க, தன்னையே கடவுள் என்று பிதற்றிய அந்த அரசன் தனக்குப் பிடிக்காத அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அம்பை எறியும் போது தான் அந்த இளைஞர் கொல்லப்படுவார் அதைக் கண்டு அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் முஸ்லிமாகி விடுவர். அந்த அரசன் தன் மனதில் உயிருடன் இருந்த ஒரேயொரு முஸ்லிமையும் நாம் கொன்று விட்டோம் இனி முஸ்லிமே இந்த ஊருக்குள் இருக்க மாட்டார்கள் என்று பெருமிதம் கொள்ளும் நேரத்திற்குள் அங்கே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உருவாகி விடுவார்கள்  இச்சம்பவத்தை விரிவாக முஸ்லிம் ஷரீஃபில் 5735 காணலாம் சூரத்துல் புரூஜ் உடைய ஆரம்ப வசனங்கள் 4 முதல் 9 வரை இச்சம்பவத்தின் சுருக்கமாகும்.

எப்போதெல்லாம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் எதிரிகள் அழிக்க நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் இஸ்லாம் இஸ்லாத்தின் மிக வேகமான வளர்ச்சியைத் தான் காண முடிந்தது 

இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்காதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.  எங்கு  இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும் அளவுக்கு அதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீ போல் பரவும் என்பதுதான் வரலாறு.. 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரங்களின் விளைவாக ஒரு மாபெரும் சிந்தனைப்புரட்சி அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டது. அதற்குப்பிறகுதான் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு தான் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத்தீர்ந்தன. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளி வாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. 2000-ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது.இத்தகவலை Association of Statisticians of American Religious Bodies (ASARB) உறுப்பினர் டெய்ல் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸ்ஜித்களாக மாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ள்னர் என்பதற்கு சான்றாக உள்ளது.அமெரிக்காவில் இஸ்லாத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றால் அங்குள்ள வாஷ் வேகாஸ் என்ற பகுதியை சூதாட்ட நகரம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அங்கு ஷைத்தானிய செயல்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த நகரத்திலும் கூட இஸ்லாம் வேரூன்றியதன் விளைவாக அங்கும் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது மேலும், பள்ளிவாசல்களில் தொழுகையின் போது மக்கள் வெள்ளம் நிரம்பி வழிவதால் சாலைகளிலும் முஸ்லிம்கள் தொழும் காட்சிகளை சர்வசாதாரணமாக அங்கு காணலாம்

ஃபிரான்ஸ் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சி

பல வருடங்களுக்கு முன் ஃபிரான்ஸ்  தலைநகர்  பாரிஸில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo)  என்ற கேலிப் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நபி ஸல் அவர்களின் உருவப்படம் அடங்கிய கேலிச் சித்திரம் இடம்பெற்றது. இதனையடுத்து நடந்த   ஆர்ப்பாட்டத்தில்  வன்முறை ஏற்பட்டு சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதோடு, நகரின் ஆறு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  மேலும் பத்திரிகை ஆசிரியர் ஊடகவியலாளர்கள் ஐவர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் தான் என  ஃபிரான்ஸ் மக்கள் கருதும் அளவுக்கு நாடகம் அரங்கேறியது. ஆனால் இந்த வன்முறையை மறைமுகமாக  நிகழ்த்தியது யூதர்கள் தான் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து, அது மூடி மறைக்கப்பட்டுள்ளது  எனினும் இந்த சம்பவத்தால்  ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தலைகீழாக மாறியது. முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று அப்போது ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டது. ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், போகோ ஹராம் என்று பல தீவிரவாதக் குழுக்களை இஸ்லாமிய எதிரிகள் ஏற்படுத்தி இஸ்லாத்தை களங்கப்படுத்த நினைத்தனர். ஆனால் மக்களின் நிலையோ வேறு விதமாக மாறியது நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் அன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிச் சென்றனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு மிக அதிக அளவில் விற்றுத் தீர்ந்தன.

சில வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில்  மஸ்ஜிதுக்குள் நுழைந்த ஒரு தீவிரவாதி கண்மூடித்தனமாக சுட்டதில் ஐம்பது பேர் உயிரிழந்தனர். உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்குப் பின்பு அங்கு இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது சுமார் 350 பேர் அந்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவம் நடந்து  சில தினங்களுக்குப் பின் நியூஸிலாந்து பாராளுமன்றம் துவங்கும் போது ஒரு ஆலிமை வரவழைத்து குர்ஆனின் சில ஆயத்துகளை ஓதி, அதனை ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்த சம்பவங்களைப் பார்க்கும்போது கூடிய விரைவில் நியூசிலாந்தில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி ஏற்படலாம் என்று தெரிகிறது

ஆஷூரா நாளில் நடைபெற்ற  சம்பவங்கள் தொடர்ச்சி...

நபி மூஸா அலை அவர்களும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்பட்டு 

ஃபிர்அவ்னும் அவனது படையும் அழிக்கப்பட்ட நாள்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري)

ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட விதம் பற்றி விரிவாக...

إِنَّ بَنِي إِسْرَائِيل لَمَّا خَرَجُوا مِنْ مِصْر فِي صُحْبَة مُوسَى عَلَيْهِ السَّلَاموَهُمْ فِيمَا قِيلَ سِتّمِائَةِ أَلْف مُقَاتِل سِوَى الذُّرِّيَّة وَقَدْ كَانُوا اِسْتَعَارُوا مِنْ الْقِبْط حُلِيًّا كَثِيرًا فَخَرَجُوا بِهِ مَعَهُمْ فَاشْتَدَّ حَنَق فِرْعَوْن عَلَيْهِمْ فَأَرْسَلَ فِي الْمَدَائِن حَاشِرِينَ يَجْمَعُونَ لَهُ جُنُوده مِنْ أَقَالِيمه فَرَكِبَ وَرَاءَهُمْ فِي أُبَّهَة عَظِيمَة وَجُيُوش هَائِلَة لِمَا يُرِيدهُ اللَّه بِهِمْ وَلَمْ يَتَخَلَّف عَنْهُ أَحَد مِمَّنْ لَهُ دَوْلَة وَسُلْطَان فِي سَائِر مَمْلَكَته فَلَحِقُوهُمْ وَقْت شُرُوق الشَّمْس"فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَاب مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ" أَنَّهُمْ لَمَّا اِنْتَهَوْا إِلَى سَاحِل الْبَحْر وَفِرْعَوْن وَرَاءَهُمْ وَلَمْ يَبْقَ إِلَّا أَنْ يُقَاتِل الْجَمْعَانِ وَأَلَحَّ أَصْحَاب مُوسَى عَلَيْهِ السَّلَام عَلَيْهِ فِي السُّؤَال كَيْف الْمَخْلَص مِمَّا نَحْنُ فِيهِ؟ فَيَقُول إِنِّي أُمِرْت أَنْ أَسْلُك هَهُنَا" كَلَّا إِنَّ مَعِيَ رَبِّيسَيَهْدِينِي" فَعِنْدَ مَا ضَاقَ الْأَمْر اِتَّسَعَ فَأَمَرَهُ اللَّه تَعَالَى أَنْ يَضْرِب الْبَحْر بِعَصَاهُ فَضَرَبَهُ فَانْفَلَقَ الْبَحْر فَكَانَ كُلّ فِرْق كَالطَّوْدِ الْعَظِيم أَيْ كَالْجَبَلِ الْعَظِيم وَصَارَ اِثْنَيْ عَشَر طَرِيقًا لِكُلِّ سِبْط وَاحِد وَأَمَرَ اللَّه الرِّيح فَنَشَّفَتْ أَرْضه " فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْر يَبَسًا لَا تَخَاف دَرْكًا وَلَا تَخْشَى" وَتَخَرَّقَ الْمَاء بَيْن الطُّرُق كَهَيْئَةِ الشَّبَابِيك لِيَرَى كُلّ قَوْم الْآخَرِينَ لِئَلَّا يَظُنُّوا أَنَّهُمْ هَلَكُوا وَجَاوَزَتْ بَنُو إِسْرَائِيل الْبَحْر فَلَمَّا خَرَجَ آخِرهمْ مِنْهُ اِنْتَهَى فِرْعَوْن وَجُنُوده إِلَى حَافَّته مِنْ النَّاحِيَة الْأُخْرَى وَهُوَ فِي مِائَة أَلْف أَدْهَم فَلَمَّا رَأَى ذَلِكَ هَالَهُ وَأَحْجَمَ وَهَابَ وَهَمَّ بِالرُّجُوعِ وَهَيْهَاتَ نَفَذَ الْقَدَر وَاسْتُجِيبَتْ الدَّعْوَة وَجَاءَ جِبْرِيل عَلَيْهِ السَّلَام عَلَى فَرَس وَدِيق حَائِل فَمَرَّ إِلَى جَانِب حِصَان فِرْعَوْن فَحَمْحَمَ إِلَيْهَا وَاقْتَحَمَ جِبْرِيل الْبَحْر فَاقْتَحَمَ الْحِصَان وَرَاءَهُ وَلَمْ يَبْقَ فِرْعَوْن يَمْلِك مِنْ نَفْسه شَيْئًا فَتَجَلَّدَ لِأُمَرَائِهِ وَقَالَ لَهُمْ لَيْسَ بَنُو إِسْرَائِيل بِأَحَقّ بِالْبَحْرِ مِنَّا فَاقْتَحَمُوا كُلّهمْ عَنْ آخِرهمْ وَمِيكَائِيل فِي سَاقَتهمْ لَا يَتْرُك مِنْهُمْ أَحَدًا إِلَّا أَلْحَقَهُ بِهِمْ فَلَمَّا اسْتَوْسَقُوا فِيهِ وَتَكَامَلُوا وَهَمَّ أَوَّلهمْ بِالْخُرُوجِ مِنْهُ أَمَرَ اللَّه الْقَدِير الْبَحْرَ أَنْ يَرْتَطِم عَلَيْهِمْ فَارْتَطَمَ عَلَيْهِمْ فَلَمْ يَنْجُ مِنْهُمْ أَحَد وَجَعَلَتْ الْأَمْوَاج تَرْفَعهُمْ وَتَخْفِضهُمْ وَتَرَاكَمَتْ الْأَمْوَاج فَوْق فِرْعَوْن وَغَشِيَتْهُ سَكَرَات الْمَوْت فَقَالَ وَهُوَ كَذَلِكَآمَنْت أَنَّهُ لَا إِلَه إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيل وَأَنَا مِنْالْمُسْلِمِينَ" فَآمَنَ حَيْثُ لَا يَنْفَعهُ الْإِيمَان (تفسير ابن كثير)

  சுருக்கம்- ஃபிர்அவ்னிடம் அடிமைப் பட்டுக் கிடந்த பனீ இஸ்ராயீல் சமூகத்தை மீட்பதற்காக அல்லாஹ் நபி மூஸா அலை அவர்களை அனுப்பினான். நபி மூஸா அலை அவர்களோடு எகிப்தை விட்டும் வெளியேறிய பனீ இஸ்ராயீல் சமூகத்தினர் குழந்தைகள் அல்லாமல் சுமார் ஆறு இலட்சம் பேர். இவர்கள் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நிறைய நகைகளை இரவலாக வாங்கியிருந்தார்கள். அந்த நகைகளுடன் தான் அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். எனவே அவர்களை விரட்டிப் பிடிக்க ஃபிர்அவ்னின் படைகள் துரத்திக் கொண்டு வந்தனர். இஷ்ராக் நேரத்தில் பனூ இஸ்ராயீல் சமூக மக்கள் கடற்கரையை அடைந்தனர். கடல் குறுக்கே வந்தவுடன் இனிமேல் நாங்கள் எப்படி ஃபிர்அவ்னிடமிருந்து தப்பிக்க முடியும் என மூஸா அலை அவர்களிடம் கேட்டபோது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தன்னிடம் உள்ள கைத்தடியை கடல் நீரில் அடித்தார்கள். கடல் பிளந்து கடலுக்குள் 12 பாதைகள் உருவாயின. இரு புறமும் மலை போன்று கடல் நீர் விலகி அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க அப்படியே நின்றது. கீழே இறங்கி நடந்து செல்லும் 12 பாதைகளிலும் சகதிகள் ஒட்டாத அளவுக்கு உடனடியாக அதைக் காய வைத்து வேகமாக நடப்பதற்குத் தோதுவாக அல்லாஹ் ஆக்கி வைத்தான்.  ஒவ்வொரு பாதையிலும் பயணம் செய்பவர்கள் மறு பாதையில் பயணம் செய்பவர்களை அவர்கள் நிம்மதியாக கடற்கரையை அடைகிறார்களா என்று பார்க்கும் அளவுக்கு ஒரு பாதைக்கும் மற்றொரு பாதைக்குமிடையே ஜன்னல்களையும் அல்லாஹ் உருவாக்கினான்.                                 

 அவர்கள் இறங்கி நடந்து மற்றொரு கடற்கரையை அடைந்து அவர்களில் கடைசி நபரும் கரையை அடையும் நேரம் ஃபிர்அவ்னும் அவனது பட்டாளமும் அங்கு வந்தனர். அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அங்கிருந்து திரும்பிச் செல்ல நினைத்தாலும் அவனை அழிக்கும்படி மூஸா அலை கேட்ட துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஃபிர்அவ்ன் விதியை நோக்கி இழுக்கப்பட்டான். ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் பெண் குதிரையில் வருகை தந்தார்கள். ஃபிர்அவ்ன் பயணம் செய்த து ஆண் குதிரை. எனவே ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் பெண் குதிரையை முன்னே ஓட்டிச் செல்ல அதைத் தொடர்ந்து ஃபிர்அவ்ன் பயணம் செய்த ஆண் குதிரையும் அதை விரட்டிச் சென்றது. ஃபிர்அவ்னால் அந்தக் குதிரையை கட்டுப் படுத்த முடியவில்லை. பிளந்து கிடந்த பாதை வழியாக ஃபிர்அவ்ன் பயணம் செய்த ஆண் குதிரை சென்றதைக் கண்டவுடன் அவனது பட்டாளத்தினர் பயணம் செய்த அத்தனை குதிரைகளும் அவற்றில் பயணம் செய்தவர்கள் அந்தப் பாதையில் உள்ளே புகுந்தனர். ஜிப்ரயீல் அலை தனது பெண் குதிரையை படையின் முன்னே செலுத்தியது போன்று மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படையின் பின்னால் இருந்து அவர்களில் யாரும் தப்பி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். இறுதியாக படை நடுப் பகுதியை அடைந்தவுடன் பிளந்த கடல் மூடிக் கொண்டது. ஃபிர்அவ்ன் கடைசி நேரத்தில் தவ்பா செய்தான். ஆனால் அவனது தவ்பா ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  

ஃபிர்அவ்னின் உடல் இன்று வரை பாதுகாப்பாக இருப்பது உலக மக்களுக்கு மாபெரும் படிப்பினை

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (يونس92)

உனது உடலை நாம் பாதுகாப்போம் என்ற இறை வசனத்திற்கேற்ப ஃபிர்அவ்னின் உடல் கி.பி. 1889 இல் கண்டு பிடிக்கப்பட்டு எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு கொண்டு வரப்பட்டு 1907 முதல் அரச சடலங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1975 –ல் இது பரிசோதிக்கப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஃபிர்அவ்னின் உடல் தான் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற அரச சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது ஃபிர்அவ்னின் சடலம் மட்டும் உருக்குலையாமல் கண்டெடுக்கப்பட்டது குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்துவதாகும்

950 வருடங்கள் பிரச்சாரம் செய்தும் திருந்தாத மனிதர்கள் வெள்ளப் பிரளயம் மூலமாக அழிக்கப்பட்டு முடித்த தினம்

وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِى مَعْزِلٍ ياَبُنَىَّ ارْكَبَ مَّعَنَا وَلاَ تَكُن مَّعَ الْكَافِرِينَ قَالَ سَآوِىإِلَى جَبَلٍ يَعْصِمُنِى مِنَ الْمَآءِ قَالَ لاَ عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلاَّ مَن رَّحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ وَقِيلَ ياَأَرْضُ ابْلَعِى مَآءَكِ وَياَسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ الْمَآءُ وَقُضِىَ الاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِىِّ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (سورة هود) عن عبد العزيز بن عبد الغفور عن أبيه قال رسول الله صلى الله عليه وسلمفي أول يوم من رجب ركب نوح السفينة فصام هو وجميع من معه،وجرت بهم السفينة ستةَ أشهر، فانتهى ذلك إلى المحرم، فأرست السفينة على الجوديّ يوم عاشوراء، فصام نوح ، وأمر جميع من معه من الوحش والدوابّ فصامُوا شكرًا لله -عن ابن جريج قال: كانت السفينة أعلاها للطير، ووسطها للناس وفي أسفلها السباع وكان طولها في السماء ثلاثين ذراعًا، ودفعت من عَين وردة يوم الجمعة لعشر ليالٍ مضين من رجب، وأرست على الجوديّ يوم عاشوراء،(زاد المسير)

ரஜப் ஆரம்பத்தில் கப்பல் பயணத்தை துவங்கியது.அன்றைய தினம்  நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் நோன்பு வைத்தார்கள். ஆறு மாதங்கள் ஓடிய பின் ஜூதி மலை மீது தரை தட்டியது. அப்போதும் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் நோன்பு வைத்தார்கள். படிப்பினை- துவங்கும் காரியம் அல்லது பயணம் சிறப்பாக அமைவதற்காக நோன்பு வைக்கும் வழமை அன்றே இருந்துள்ளது.இன்றும் முஸ்லிம்களிடம் நிகாஹ் போன்ற வைபவங்கள் நடைபெறும்முன் இந்த வழமை உள்ளது

கப்பலின் மேற்பகுதியில் பறவைகளும் நடுப்பகுதியில் மனிதர்களும் கீழ் பகுதியில் விலங்குகளும் இருந்த நிலையில் கப்பல் புறப்பட்ட பின் பறவைகள் விலங்குகள் உட்பட அனைவரும் நோன்பை கடைபிடித்தனர். 

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டதும் இந்த தினத்தில்...

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى بْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (النساء158) وقال الضحاك : رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء .(بحر العلوم)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஹ்லே பைத்

 19-06-2026 முஹர்ரம் - 3 بسم الله الرحمن الرحيم   ஆஷூரா நோன்புகளின் சிறப்பும் அஹ்லெ பைத்துகளின் சிறப்பும் https://chennaijamaathulula...