வியாழன், 11 ஜூன், 2026

ஹிஜ்ரத்

 12-06-2026

துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم  

       ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும் 

இஸ்லாமியப் புத்தாண்டு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

ஹிஜ்ரீ என்ற பெயர் வந்த காரணம் ஹிஜ்ரத் சம்பவத்தை இறுதி வரை மக்கள் மறக்கக் கூடாது என்றுதான் 

இஸ்லாம் பற்றி அறவே அறியாதவர்கள் பின்வருமாறு கேள்வி கேட்பார்கள். கி.பி 2025 என்பதால் கிறிஸ்தவ மதம் தானே முந்தியது. 

ஹிஜ்ரி  1446 என்பதால் உங்கள் மதம் பிந்தியது தானே என்று கேட்பார்கள் அவர்களுக்கான பதில்

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இஸ்லாமிய மாதங்கள் இருந்தன. மேலும் இதே பெயர்கள் தான் இருந்தன. 

வருடங்களுக்கான பெயர்கள் மட்டும் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களை வைத்து மாற்றப்பட்டன

قال الله تعالي إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ سورة التوبة:36 عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبٌ شَهْرُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ (بخاري) باب مَا جَاءَ فِى سَبْعِ أَرَضِينَ- كتاب بدء الخلق

قال الزُّهريُّ والشعبيُّ: أرَّخ بنو إسماعيل من نار إبراهيم عليه السلام إلى بنيان البيت حين بناه إبراهيم وإسماعيل عليهما السلام ثم أرَّخ بنو إسماعيل من بنيان البيت حتى تفرَّقت وكان كلما خرج قوم من تهامة أرَّخوا مخرجهم ومن بقي بتهامة من بني إسماعيل يؤرخون من خروج سعدٍ ونهدٍ وجهينة بن زيد من تهامة حتى مات كعب بن لؤي فأرَّخوا من موت كعب بن لؤي إلى الفيل فكان التاريخ من الفيل حتى أرَّخ عمر بن الخطاب رضي الله عنه من الهجرة وذلك سنة سبع عشرة أو ثمان عشر.تاريخ الطبري)

   நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குண்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதை வைத்து அவர்களின் சந்ததிகள் வருடங்களைக் கணக்கிட்டனர். அதன் பின்பு கஃபா கட்டப்பட்ட வருடத்தில் இருந்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகள் அவரவர் எங்கே குடியேறினார்களோ அதை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு அந்தப் பரம்பரையில் கஃப் என்பவர் முக்கிய நபராக கருதப்பட்டதால் அவர் மரணமடைந்த வருடத்தை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு யானைச் சம்பவம் பிரபலமாக இருந்த தால் அதை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். அதுவும் காலப்போக்கில் மறந்து மாதங்களை மட்டும் கூறும் வழக்கம் ஏற்பட்ட போது கடைசியாக உமர் ரழி அவர்களின் காலத்தில் ஹிஜ்ரத்தை வைத்து ஹிஜ்ரீ கணக்கு உருவானது. 

ஹிஜ்ரீ என்று பெயர் வைக்கப்பட்டதன் பின்னனி

ولم يكن التاريخ السنوي معمولا به في أول الإسلام حتى كانت خلافة عمر رض ففي السنة الثالثة أو الرابعة من خلافته كتب إليه أبو موسى الأشعري :إنه يأتينا منك كتب ليس لها تاريخ.فجمع عمر الصحابة فاستشارهم فيقال إن بعضهم قال:أرخوا كما تؤرخ الفرس بملوكها كلما هلك ملك أرخوا بولاية من بعده"فكره الصاحبة ذلك،فقال بعضهم:أرخوا بتاريخ الروم"فكرهوا ذلك أيضا،فقال بعضهم:أرخوا من مولد النبي وقال آخرون:من مبعثه" وقال آخرون:من مهاجره"فقال عمر الهجرة فرقت بين الحق والباطل فأرخوا بها فأرخوا من الهجرة"واتفقوا على ذلك (تاريخ الرسل والملوك) (تاريخ الطبري)   

عن محمد بن سيرين قال:قام رجل إلى عمر بن الخطاب فقال: أَرِّخُوْا فقال عمر :ما أرخوا ؟ قال:شيء تفعله الأعاجم يكتبون في شهر كذا من سنة كذا فقال عمر بن الخطاب:حسنٌ فأرخوا فقالوا: من أي السنين نبدأ ؟ قالوا: مِنْ مبعثه وقالوا: مِنْ وفاته؛ ثم أجمعوا على الهجرة ثم قالوا: فأي الشهور نبدأ ؟ فقالوا: رمضان ثم قالوا المحرم فهو منصرف الناس من حجهم؛ وهو شهرٌ حرام فأجمعوا على المحرم  (تاريخ الرسل والملوك)

காலப்போக்கில் வருடங்களை மறந்து மாதங்களை மட்டும் கூறும் வழக்கம் ஏற்பட்ட போது உமர் ரழி அவர்களின் ஆட்சிக்கலத்தில் அபூ மூஸா அஷ்அரீ ரழி அவர்கள் உமர் ரழி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்போது தாங்கள் அனுப்பும் கடிதங்களில் வெறும் மாதங்களை மட்டும் குறிப்பிடுகிறீர்கள் எந்த வருடம் என்று குறிப்பிடுவதில்லை என்று அபூ மூஸா அஷ்அரீ ரழி அவர்கள் எழுதினார்கள். அதன் பின்பு  உமர் ரழி அவர்கள் ஒரு மஷ்வராவுக்கு ஏற்பாடு செய்தார்கள். வருடங்களுக்குப் பெயர் சூட்டுவது பற்றி அதில் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினார்கள். பாரசீகர்கள் எவ்வாறு ஒரு அரசர் இறந்து அடுத்த அரசர் பதவிக்கு வரும்போது அவரது பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடுவார்கள். அதுபோன்று கணக்கிடலாம் என்று சிலர் கூறியபோது அதை சிலர் வெறுத்தனர். கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடுவது போல கணக்கிடலாம் என்று சிலர் கூறியபோது அதை சிலர் வெறுத்தனர். நபி ஸல் அவர்களின் பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடலாம் அதாவது நபி ஸல் அவர்கள் பிறந்த வருடத்தை முதல் வருடம் என்று கணக்கிடலாம் என்று சிலர் கூறினர். வேறு சிலர் நபி ஸல் நபியாக அனுப்பப்பட்டதை வைத்து வருடங்களைக் கணக்கிடலாம் என்று கூறியபோது அப்போது நாமெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்று கூறி அதையும் பலர் வெறுத்தனர். கடைசியாக ஹிஜ்ரத் நடந்த வருடத்தை முதல் வருடம் என்று கணக்கிடலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டபோது அதற்கு உமர் ரழி அவர்கள் ஆதரவு தெரிவித்து அந்த ஹிஜ்ரத் தான் சத்தியத்துக்கும் அசத்தியத்தும் இடையில் வேறு படுத்திக் காட்டியது எனவே அதையே வருடங்களுக்குப் பெயராக வைக்கலாம் என்று கூற, மற்றவர்களும் ஆதரித்தார்கள்.                                                        

எந்த மாதத்தை முதல் மாதமாக வைப்பது என்ற ஆலோசனையின் போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினார்கள். ரமழான் என்று சிலரும் முஹர்ரம் என்று வேறு சிலரும் கூறினார்கள். இறுதியில் முஹர்ரம் தான் முதல் மாதம் என முடிவானது. ஹஜ்ஜை முடித்து விட்டு ஹாஜிகள் திரும்பி தங்களின் தொழிலைத் துவங்கும் மாதத்தை முதல்மாதமாக வைத்தால் கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் அதுவே முடிவானது.                                

ஹாஜிகளின் வருகையை கவனித்து வருடத்தின் முதல் மாதத்தை முடிவு செய்யும் அளவுக்கு 

ஹாஜிகளின் வருகை அன்றிலிருந்தே கண்ணியமாக கருதப்பட்டு வந்தது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ (أحمد

ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பியவரைக் கண்டால் அவருக்கு சலாம் சொல்லி அவரிடம் முஸாஃபஹா செய்யுங்கள். உங்களுக்காக அவரை துஆச் செய்யச் சொல்லுங்கள். ஏனெனில் அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார்.

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

முஸ்லிம்கள் தம் எதிரிகளால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான பின்பு தான் ஹிஜ்ரத் செய்யும்படி உத்தரவு வந்தது

عن خَبَّابً  رض:أَتَيْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم وَهْوَ مُتَوَسِّدٌ بُرْدَةً وَهْوَ فِى ظِلِّ الْكَعْبَةِ وَقَدْ لَقِينَا مِنَ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ أَلاَ تَدْعُو اللَّهَ فَقَعَدَ وَهْوَ مُحْمَرٌّ وَجْهُهُ فَقَالَ لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ4 الْحَدِيدِ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَيُوضَعُ الْمِنْشَارُ5 عَلَى مَفْرِقِ رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَيْنِ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَلَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ مَا يَخَافُ إِلاَّ اللَّهَ وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ (بخاري)

நபி ஸல் அவர்கள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது ஹப்பாப் ரழி அவர்கள் வந்து நாம் இணை வைப்பாளர்கள் மூலமாக கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். தாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களுக்கு முனபு வாழ்ந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதற்காக இரும்புக் கத்தரிக்கோலால் அவரது எலும்புகளுக்கும் சதைகளுக்குமிடையே குத்தி வேதனை செய்யப்பட்டார். அப்போதும் அவர் ஈமானை இழக்கவில்லை. பொறுமை கொண்டார். மற்றொருவரின் நடு மண்டை ரம்பத்தால் பிளக்கப்பட்டு அவரது உடல் இரண்டு துண்டாக ஆனது. அப்போதும் அவர் ஈமானை இழக்கவில்லை. பொறுமை கொண்டார். நீங்களும் பொறுமை கொள்ளுங்கள், விரைவில் அல்லாஹ் இதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவான் என்றார்கள். 

முஸ்லிம்கள்  மிகுந்த சிரமத்திற்கு ஆளான பின்பு தான் ஹிஜ்ரத் செய்யும்படி உத்தரவு வந்தது. அதேபோல் உலகம் முழுக்க முஸ்லிம்களுக்கு தொல்லைகள் துன்பங்கள் அதிகமாகும்போது தான் இமாம் மஹ்தீ (அலை) வருவார்கள்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ ، فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا ، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ ، لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا ، وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ ، يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ [ مصنف عبد الرزاق ]

முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்படும் அநியாயத்தின் காரணமாக முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையில் தான் அல்லாஹ் என்னுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை அனுப்புவான். எந்த அளவுக்கு இந்த பூமி அநியாயத்தால் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தை அவர் நிலை நாட்டுவார். விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்களும் அவரைப் பொருந்திக் கொள்வார்கள். வானம் தன் பங்கை இந்த பூமியின் பொழியாமல் இருக்காது. பூமி தன் விளைச்சலை விளைவிக்காமல் இருக்காது. விவசாயம் பரக்கத்தாக இருக்கும். அப்போது உயிருடன் இருப்பவர்கள் இறந்த விட்ட தமது உறவினர்களை எண்ணி அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் இவருடைய ஆட்சியின் நலவை அனுபவித்திருப்பார்களே என்று ஏங்குவார்கள். இவ்வாறு இமாம் மஹ்தீ அலை அவர்கள் ஏழு வருடங்களோ அல்லது எட்டு வருடங்களோ அல்லது ஒன்பது வருடங்களோ ஆட்சி செய்வார்கள்.

தன் சொத்து, சுகங்களை துறந்து அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்

وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ (42)النحل

أَنَّ عُمَر بْن الْخَطَّاب رَضِيَ اللَّه عَنْهُ كَانَ إِذَا أَعْطَى الرَّجُل مِنْ الْمُهَاجِرِينَ عَطَاءَهُ يَقُول خُذْ بَارَكَ اللَّه لَك فِيهِ هَذَا مَا وَعَدَك اللَّه فِي الدُّنْيَا وَمَا اِدَّخَرَ لَك فِي الْآخِرَة أَفْضَل ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَة " لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَة وَلَأَجْر الْآخِرَة أَكْبَر لَوْ كَانُوا يَعْلَمُونَ(ابن كثير)

உமர் ரழி அவர்கள் கனீமத் பொருட்களைப் பங்கிடும்போது முஹாஜிர்களுக்கு அதிகம் தருவார்கள். மேலும் இது அல்லாஹ் உங்களுக்குத் தந்த கண்ணியம் என்று கூறுவார்கள்

{وَمِنَ النَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللَّه (البقرة207) }نزلت في علي رضي الله عنهبات على فراش رسول الله صلى الله عليه وسلّم ليلة خروجه إلى الغار ، ويروى أنه لما نام على فراشه قام جبريل عليه السلام عند رأسه ، وميكائيل عند رجليه ، وجبريل ينادي : بخ بخ مَنْ مِثْلُك يا ابن أبي طالب يباهي الله بك الملائكة ونزلت الآية.(تفسير الرازي)

நபி ஸல் அவர்களின் படுக்கையில் அலீ ரழி அவர்கள் தூங்கிய போது அவர்களுக்குப் பாதுகாப்பாக தலை மாட்டில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கால் மாட்டில் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பாதுகாப்புக்கு இருந்தார்கள். உங்களுக்கு நிகராக யார் இருக்க முடியும். உங்களைப் பற்றி மலக்குகள் அனைவரும் பாராட்டிப் பேசுகிறார்கள் என்றும் அவ்விருவர் கூறினார்கள். அன்று தான் அலீ ரழி அவர்கள் மிக நிம்மதியாக உறங்கினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது,  

  

மிகுந்த சிரமம், சித்ரவதைகளை தாங்கிய படி ஹிஜ்ரத் செய்தவர்களில் சிலரை அல்லாஹ் பாராட்டுவது பற்றி...

وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً...وقال أكثرُ المفسِّرين: نزلت في صُهَيب بن سِنان مَوْلى عبد اللَّهِ بنِ جُدْعانَ الرُّومِيِّ وفي عمَّارِ بن ياسِرٍ وفي سُمَيَّة أُمَّه وفي ياسِرٍ أَبيه وفي بلالٍ مَوْلَى أبي بَكرٍ, وفي خَبَّاب بن الأَرَتّ وفي عابس مَوْلَى حُوَيْطِب أخذَهُم المشرِكُون فَعَذَّبوهم ؛ فقال لهم صُهَيبٌ : إِنِّي شيخٌ كَبيرٌ لا يَضُرُّكُمْ أَمِنْكُمْ كُنْتُ أم مِن عَدوِّكم فهل لكم أَنْ تَأْخُذُوا مَالِي وتذَرُوني؟ ففعلوا  وكان شرط عليهم راحلةً ونَفَقَةً , فأقام بمكةَ ما شاء اللَّهُ ثم خرج إلى المدينَةِ فتَلَقَّاهُ أَبُو بكرٍ وعُمرُ في رجال فقال له أَبُو بَكْرٍ : رَبَحَ بَيْعُكَ يا أَبَا يَحيى فقال: وبيعُكَ فلا تخسر ما ذاك ؟ فقال: أنزل اللَّهُ فيك كذا وقرأ عليه الآية.وأما خباب بن الأرت وأبو ذر فقد فرا وأتيا المدينة وأما سُمَيَّة فرُبِطَتْ بين بعيرين ثم قُتِلَتْ وقُتل ياسر،وأما الباقون فأَعْطَوْا بسبب العذاب بعض ما أراد المشركون فتركوا (تفسيرالرازي)

எதிரிகள் மிக அருகில் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற ஆழமான நம்பிக்கை

إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا[التوبة:40] عَنْ أَنَس أَنَّ أَبَا بَكْرحَدَّثَهُ قَالَ:قُلْت لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الْغَار لَوْ أَنَّ أَحَدهمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ لَأَبْصَرَنَا تَحْت قَدَمَيْهِ فَقَالَ يَا أَبَا بَكْر مَا ظَنّك بِاثْنَيْنِ اللَّه ثَالِثهمَا(بخاري)فأعمى الله أبصار المشركين حتى لم يحن لأحد منهم التفاتة إلى ذلك الغار

கொல்ல வந்த எதிரிகளின் கண்களை விட்டும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மறைத்தான்

இதே நம்பிக்கை தான் அந்த குகைவாசிகளையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றியது. குகைக்குள் நுழைந்தவுடன் எதிரிகளின் கண்களை விட்டும் அல்லாஹ் அந்தக் குகையையும் குகைவாசிகளையும் அல்லாஹ் மாயமாக்கி விட்டான். 

இறைத் தூதரை கொல்ல வந்த சுராகா என்பவர் இறைத்தூதரின் பாதுகாவலராக மாறிய சம்பவம். 

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: اشْتَرَى أَبُو بَكْرٍ مِنْ عَازِبِ رَحْلا بِثَلاثَةَ عَشَرَ دِرْهَمًا، فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ: مُرْهُ لِي فَقَالَ لَهُ عَازِبٌ: لا حَتَّى تُخْبِرَنِي كَيْفَ صَنَعْتَ أَنْتَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجْتُمَا وَالْمُشْرِكُونَ يَطْلُبُونَكُمَا فَقَالَ: ارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا فَلَمْ يُدْرِكْنَا مِنْهُمْ غَيْرُ سُرَاقَةَ بْنِ جَشْعَمٍ عَلَى فَرَسٍ لَهُ، فَقُلْتُ لَهُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ:"لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا" فَلَمَّا أَنْ دَنَا كَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قِيدُ رُمْحٍ أَوْ ثُلُثَهُ فَقُلْتُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ وَبَكَيْتُ، فَقَالَ: مَا يُبْكِيكَ ؟ فَقُلْتُ:وَاللَّهِ مَا عَلَى نَفْسِي أَبْكِي وَلَكِنْ أَبْكِي عَلَيْكَ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اللَّهُمَّ اكْفِنَاهُ، فَسَاخَتْ بِهِ فَرَسُهُ إِلَى بَطْنِهَا فَوَثَبَ عَنْهَا، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ فَادْعُ اللَّهَ أَنْ يُنَجِّينِيَ مِمَّا أَنَا فِيهِ فَوَاللَّهِ لأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِي مِنَ الطَّلَبِ وَهَذِهِ كِنَانَتِي فَخُذْ سَهْمًا فَإِنَّكَ سَتَمُرُّ عَلَى إِبِلِي وَغَنَمِي بِمَكَانِ كَذَا فَخُذْ مِنْهَا حَاجَتَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا حَاجَةَ لَنَا فِي إِبِلِكَ، فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ رَاجِعًا إِلَى أَصْحَابِهِ وَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ".(تفسير ابن كثير)

அதேபோல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்பு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத்தின் உத்தரவு வரலாம். அது இரவு நேரத்திலே கூட வரலாம். அத்தகைய உத்தரவு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு உடனே வருவேன் என்று சொல்லி வைத்திருந்தார்கள். அதேபோல ஒருநாள் அல்லாஹ்வின் உத்தரவு வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்கு சென்ற போது வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. ஏன் கதவை மூடவில்லையா என்று கேட்க, அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் என்றைக்கு என்னிடம் எந்த நேரமும் ஹிஜ்ரத் பற்றிய உத்தரவு வரலாம் என்று கூறினீர்களோ அன்று முதல் நான் கதவை மூடுவதே இல்லை என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு பதில் அளித்தார்கள். இந்த நிலையில் மதினாவுக்குச் சென்ற பின் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்துவதற்காக பள்ளிவாசலைச் சுற்றி இருந்த சில வீட்டு வாசல்களை மூட வேண்டிய சூழ்நிலை வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு எந்த வாசல் வழியாக வருவாரோ அந்த வாசலை மட்டும் மூட வேண்டாம் என்றார்கள். அதற்கு காரணம் சொல்லும் போது அவர் எனக்காக கதவை திறந்து வைத்திருந்தார் இப்போது அவருடைய கதவு திறந்தே இருக்கட்டும் என்று பதில் கூறினார்கள்.

ஹிஜ்ரத்தின் போது நபியவர்களின் அழகிய திட்டமிடல்…

நீங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் போகலாம் என்ற இறை கட்டளை கனவின் மூலமாக வந்தவுடன் நபியவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உடனே மதீனாவிற்கு போகவில்லை மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்வதற்கான பல ஆயத்தங்களை முதலில் திட்டமிட்டு செய்கிறார்கள். தன்னோடு தோழர் அபூபக்கரை அழைத்துச் செல்வதற்கு முடிவு செய்து அவர்களுடன் பயணத்திற்கான முழு ஏற்ப்பாடுகள் சம்பந்தமாக ஆலாசனை செய்கிறார்கள். மக்காவிலிருந்து செல்வதற்கு வழிக்காட்டி ஒருவர் தேவை, ஏன் என்றால் நபியவர்களுக்கோ, அபூபக்கர் அவர்களுக்கோ, மதீனா செல்வதற்கு சரியாக பாதை (வழி) தெரியாது. மதீனாவிற்கு வழிக்காட்டியாக “பனு அப்த் பின் அதீ குலத்தில் பனு அத்தீல் எனும் கிளையை சேர்ந்த குறைஷி இறை மறுப்பாளர், “அப்துல்லாஹ் பின் உரைக்கித்தை தங்களின் பயணத் தோழராக தேர்வு செய்கிறார்கள். இவர் நம்பிக்கையானவர் ஆனால் அவர் முஸ்லிம் கிடையாது. தாங்கள் பயணம் செல்வதற்காக இரண்டு ஒட்டகங்களை நான்கு மாதங்களாக தயார் செய்து இறுதியில் “அப்துல்லாஹ் பின் உரைகிதிடம் கொடுத்து மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட இடத்திற்கு வரும் படி ஒட்டகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டார்கள். அபூபக்கர் அவர்கள் நபியவர்களுக்கு ஒரு ஒட்டகத்தை சும்மா தான் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு சும்மா வேண்டாம், கிரயத்தை கொடுத்தே நபியவர்கள் அபூபக்கரிடம் அதை விலைக்கு வாங்கினார்கள்.

அடுத்ததாக ஹிஜ்ரத் செல்லும் வழியில் தங்குவற்காக “ஸவ்ர்” குகையை தேர்வு செய்கிறார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்குவதற்கான பின்வரும் ஏற்பாடுகளையும் முன்னேற்பாடாக செய்கிறார்கள். குகையில் தங்கியிருக்கும் போது உணவை கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகளான அஸ்மா அவர்களை தெரிவு செய்கிறார்கள். அஸ்மா அவர்கள் உணவை கொண்டு வரும் போது அவரின் கால் பாத அச்சை (சுவட்டை) ஆடுகளை ஓட்டிச் சென்று அழிப்பதற்காகவும், ஆட்டிலிருந்து பாலை கரந்து குடிப்பதற்காகவும், அபூ பக்கர் அவர்களின் முன்னால் அடிமையான “ஆமிர் இப்னு புஹைரா அவர்களை தெரிவு செய்கிறார்கள். தங்களைப் பற்றி மக்கத்து காபிர்கள் (எதிரிகள்) என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற தகவலை இரவு நேரத்தில் கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகன் அப்துல்லாவை தெரிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அபீபக்கர் அவரகள் இரவு நேரத்தில் இவர்களுடன் குகையில் தங்கி ஸஹர் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் வந்து விடுவார்கள்.இப்படியே மூன்று இரவுகள் செய்தார்கள். நபியவர்கள் தனது வீட்டிலிருந்து செல்லும் போது வீட்டில் தங்க வைப்பதற்காக அலி (ரலி) அவர்களை தேர்வு செய்கிறார்கள். இப்படி பல திட்டங்களை செய்த பின் அபூபக்கர் அவர்களிடம் நீங்கள் தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் நான் உங்கள் வீட்டை நோக்கி வரலாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.

உண்மையில் திட்டமிடல் என்பது இஸ்லாமிய அடிப்படையில் ஈமானுக்கோ, தவக்குலுக்கோ முரணானது அல்ல என்பதை நபியவர்கள் ஹிஜ்ரத்தின்போது எடுத்துக் காண்பித்தார்கள். 

எனவே, இஸ்லாம் சொல்கின்ற தவக்குல் ஈமான்-யகீன்-திட்டமிடல் ஆகியவற்றுக்கிடையில் எத்தகைய முரண்பாடும் இல்லை என்பதை மிக அழகாக, தெளிவாகச் சொல்கின்ற ஒரு நிகழ்வாக ஹிஜ்ரத்தை குறிப்பிட முடியும். இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவல நிலைக்கான காரணங்களுள் மிக முக்கியமானது முஸ்லிம் சமூகத்தில் தனி மனித, குடும்ப, சமூக வாழ்க்கையில் திட்டமிடல் இல்லாமையே.

ஸவ்ர் குகையும், எதிரிகளும்…

மிகப்பெரிய ஸவ்ர் என்ற மலை உச்சியில் இருவரும் ஏறி அங்கிருந்த குகைக்குள் ஒழிந்து கொள்கிறார்கள். இருநூறு  சிவந்த ஒட்டகத்திற்கு ஆசைப்பட்டு மக்கத்து காபிர்கள் ஒரு இடம் விடாமல் தேடி அலைகிறார்கள். இறுதியில் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் வந்து விடுகிறார்கள். சற்று குனிந்துப் பார்த்தால் இருவரையும் கண்டு பிடித்து விடலாம். அந்த அளவிற்கு எதிரிகள் நெருங்கி விட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் அவர்களே! எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டார்கள் என்ற பயத்துடன் அபூ பக்கர் அவர்கள் சொன்னார்கள். பயப்படாதீர்கள் நாம் இருவரல்ல, நாம் மூவர் அதாவது அல்லாஹ்வுடைய துணை நமக்கு இருக்கிறது பயப்படாதீர்கள், என்று அபூபக்கரின் கவலையை நபியவர்கள் போக்கினார்கள். இறுதி வரை எதிரிகளின் கண்களுக்கு அல்லாஹ் அவர்களை காட்ட வில்லை, அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.

மதீனமா நகரும், மக்களும்…

நபியவர்களும், அபூபக்கர் அவர்களும், மக்காவை விட்டு,விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், என்ற செய்தி மதீனா மக்களுக்கு கிடைத்த உடன் நபியவர்களை வரவேற்ப்பதற்காக சந்தோசத்தில் ஒவ்வொரு நாளும் மதீனாவின் எல்லை பகுதியான “அல்ஹர்ரா” என்ற இடத்திற்கு தினமும் பகல் நேரம் வரை எதிர்ப்பார்த்திருந்து திரும்பி செல்வார்கள்.

ஒரு நாள் ஒரு யூதன் தனது வீட்டிற்கு மேல் ஏறி வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் மதீனாவை நெருங்கியதை கண்ட உடன் அவன் தன்னையறியாமல் சத்தம் போட்டு, அரபு மக்களே ! இதோ நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நபி வந்து விட்டார் என்று செய்தி மதீனா நகர் முழுவதும் பரவியவுடன், எல்லா மக்களும் ஆர்வத்தோடு ஓடி வந்து நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் வரவேற்றார்கள். ஆயுதங்களுடன் அந்த இடத்திற்கு வருகை தந்து, முழு ஆயுத பாதுகாப்போடு இருவரையும் மதீனாவிற்குள் உற்ச்சாகத்துடன் அழைத்து செல்கிறார்கள்.

ஹிஜ்ரத்திற்கு முன்பே மதீனாவில் இஸ்லாத்தைப் பரப்பிய முஸ்அப் இப்னு உமைர்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தூதுத் துவப் பணியை ஆரம்பித்த காலத்திலேயே முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்களை அழைப்புப்பணியை மேற் கொள்ள மதீனாவுக்கு அனுப்பி வைத் திருந்தார்கள். மதீனாவிற்கு முதலில் சென்ற முஹாஜிர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் தான். மக்காவில் தூதுத்துவப் பணிகள் எவ்வாறு நடைபெற்றனவோ அதே நேரத்தில் முஸ் அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் மூலம் மதீனாவிலும் அழைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. முஸ்அப்(ரலி) அவர்களை மதீனாவிற்கு அனுப்பும் போதே ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் சிலரை இஸ்லாத்திற்கு அழைத்து வர வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தார்கள்.

அந்த அடிப்படையில் முதல் முதலாக மதீனாவில் இருந்து வந்த போது 12 நபர்களை முஸ்அப்(ரலி) அழைத்து அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தி இஸ்லாத்தை ஏற்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து பலரும் முஸ்அப் (ரலி) மூலம் இஸ்லாத்தைத் தழுவினர்.

அடுத்த ஆண்டு முஸ்அப்(ரலி) மக்காவிற்கு வந்த போது 70 நபர்களைத் தன்னுடன் அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து இஸ்லாமியச் செய்திகளைப் பெற்று உடனடியாக இஸ்லாத் தைத் தழுவினர். அடுத்த ஆண்டு வரும்போது இன்னும் சிலருடன் வாருங்கள் என நபி(ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால் அடுத்த ஆண்டு முஸ்அப்(ரலி) யாரும் இல்லாமல் தனி நபராக மக்காவிற்கு வந்தார். அதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் மட்டும் தனியாக வந்துள்ளீர்கள்? உங்களுடன் யாரும் வரவில்லையா?' எனக் கேட்க, முஸ்அப்(ரலி) 'மதீனாவில் எல்லா வீடுகளிலும் இஸ்லாத்தைச் சொல்லி விட்டேன் அங்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அதனால் எல்லாரையும் இங்கு அழைத்து வர முடியவில்லை. ஆகவே நீங்கள் மதீனா வந்து விடுங்கள்' எனக் கூறினார்.

இந்த நிகழ்வையும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டிய கடுமையான நெருக்கடி காலத்தையும் கொஞ்சம் இணைத்துப் பாருங்கள்.

இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற உடனே நபிகளை வரவேற்பதற்கும் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் மதீனத்து மக்கள் முழு மகிழ்ச்சியுடனும் மனதுடனும் காத்துக் கொண்டிருந்தனர். அதற்கான முதல் காரணம் முஸ்அப் (ரலி) அவர்கள் தான்.

இன்னும் சொல்லப்போனால் மதீனா சென்றவுடனே நபி(ஸல்) அவர்கள் ஊர் மக்களை, குலங்களை ஒன்றிணைந்து பிற சமூகத் தலைவர்களிடம் ஒப்பந்தங்களைப் போட்டு முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புடன் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்பட்டு மதீனாவில் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்க முடிந்தது என்றால் அதற்கு மூலமாகச் செயல்பட்டவர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் தான்.

நாமும் ஹிஜ்ரத் செய்வோம்

 ﻭﻋﻦ ﻣﻌﺎﻭﻳﺔ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﻨﻘﻄﻊ اﻟﻬﺠﺮﺓ ﺣﺘﻰ ﻳﻨﻘﻄﻊ اﻟﺘﻮﺑﺔ ﻭﻻ ﺗﻨﻘﻄﻊ اﻟﺘﻮﺑﺔ ﺣﺘﻰ ﺗﻄﻠﻊ اﻟﺸﻤﺲ ﻣﻦ ﻣﻐﺮﺑﻬﺎ» . ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﻟﺪاﺭﻣﻲ

ஹிஜ்ரத்தின் அசல் அர்த்தமே வெறுப்பதும் விலகுவதுமாகும் அந்த வகையி்ல் நாம் செய்ய வேண்டிய ஹிஜ்ரத்தையும் நினைவில் கொல்வோம்.

பாவங்களை விட்டும் விலகுவதும் ஹிஜ்ரத்தாகும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو - رضى الله عنهما - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ  -بخاري

சுயபரிசோதனை

ஒவ்வொரு ஆண்டின்முடிவிலும் துவக்கத்திலும் கடந்த ஆண்டில் நாம் என்ன பணியாற்றியுள்ளோம்  இனி வரும் ஆண்டில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்னென்ன? என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு சுய பரிசோதனையையும்  திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டும்.

ஹிஜ்ரத்தின் வகைகள் பற்றி தஃப்ஸீருல் குர்துபியில் இடம் பெற்றுள்ள விஷயங்கள்

وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (سورة النساء100)

قال ابن العربي:قسم العلماء رضي الله عنهم الذهاب في الأرض قسمين: هربا وطلبا فالأول ينقسم إلى ستة أقسام: الأول: الهجرة وهي الخروج مندار الحرب إلى دار الإسلام وكانت فرضا في أيام النبي صلى الله عليه وسلموهذه الهجرة باقية مفروضة إلى يوم القيامة والتي انقطعت بالفتح هي القصد إلى النبي صلى الله عليه وسلم حيث كان فإن بقي في دار الحرب عصى ويختلف في حاله. الثاني:الخروج من أرض البدعة قال ابن القاسم:سمعت مالكا يقول لا يحل لأحد أن يقيم بأرض يُسب فيها السلف.قال ابن العربي:وهذا صحيح فإن المنكر إذا لم تقدر أن تغيره فزِلَّ عنه قال الله تعالىوَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْإلى قوله{الظَّالِمِينَ}(68الانعام) الثالث:الخروج من أرض غلب عليها الحرام: فإن طلب الحلال فرض على كل مسلم.الرابع: الفرار من الأذية في البدن وذلك فضل من الله أرخص فيه فإذا خشي على نفسه فقد أذن الله في الخروج عنه والفرار بنفسه ليخلصها من ذلك المحذور وأول من فعله إبراهيم عليه السلام فإنه لما خاف من قومه قال{إِنِّي مُهَاجِرٌ إِلَى رَبِّي} وقال{إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ}وقال مخبرا عن موسى{فَخَرَجَ مِنْهَا خَائِفاً يَتَرَقَّبُ} الخامس:خوف المرض في البلاد الوخمة والخروج منها إلى الأرض النزهةوقد أذن صلى الله عليه وسلم للرعاة حين استوخموا1 المدينة أن يخرجوا إلى المسرح فيكونوا فيه حتى يصحوا وقد استثنى من ذلك الخروج من الطاعون فمنع الله سبحانه منه بالحديث الصحيح عن نبيه صلى الله عليهوسلمالسادس: الفرار خوف الأذية في المال؛ فإن حرمة مال المسلم كحرمة دمه، والأهل مثله وأوكد.

وأما قسم الطلب فينقسم قسمين:طلب دين وطلب دنيا.فأما طلب الدين فيتعدد بتعدد أنواعه إلى تسعة أقسام:الأول:سفر العبرةقال الله تعالى {أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ} وهو كثير. ويقال: إن ذا القرنين إنما طاف الأرض ليرى عجائبها. وقيل: لينفذ الحق فيها. الثاني: سفر الحج والأول وإن كانندبا فهذا فرض. الثالث: سفر الجهاد وله أحكامه الرابع: سفر المعاش فقد يتعذر على الرجل معاشه مع الإقامة فيخرج في طلبه لا يزيد عليه. من صيد أو احتطاب2 أو احتشاش؛ فهو فرض عليه. الخامس: سفر التجارةوالكسب الزائد على القوت وذلك جائز بفضل اللهسبحانه وتعالىقال الله تعالى{لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ}يعني التجارة وهي نعمة من الله بها في سفر الحج، فكيف إذا انفردتالسادس: في طلب العلم وهو مشهور. السابع: قَصْدُ البقاع قال صلى الله عليه وسلم:لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد"الثامن: الثغور3 للرباط بها وتكثير سوادها للذب عنها. التاسع: زيارة الإخوان في الله تعالى: قال رسول الله صلى الله عليه وسلم: "زار رجل أخا له في قرية فأرصد الله له ملكا على مدرجته فقال أين تريد فقال أريد أخا لي في هذه القرية قال: هل لك من نعمة تربها عليه قال لا غير أني أحببته في الله عز وجل قال فإني رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته فيه (مسلم)(تفسير القرطبي

பொருள் - ஒரு ஊரை விட்டும் மற்றொரு ஊருக்கு இடம் பெயருதல் இரண்டு வகைப்படும் – ஒன்று ஒரு ஊரை வெறுத்து அவ்வூரை விட்டும் வெளியேறுதல் – இன்னொன்று அவசியமான, பயனுள்ள எதையேனும் தேடி ஊரை விட்டும் புறப்படுதல்இவ்விரண்டில் முந்தியது ஹிஜ்ரத் எனப்படும் இதில் ஆறு வகையான ஹிஜ்ரத் உண்டு. 1,எதிரிகளின் ஊரை விட்டும் வெளியேறி முஸ்லிம்களின் ஊருக்குப் புறப்படுதல். இது கியாமத் வரை நீடிக்கும். இனி ஹிஜ்ரத் கிடையாது என நபி ஸல் கூறியது நபி ஸல் அவர்கள் இருக்கும் ஊருக்கு அனைவரும் ஹிஜ்ரத் செய்தாக வேண்டும் என்ற கடமை மட்டுமே நபி ஸல் அவர்களுடன் முடிந்தது. ஆனால் பொதுவான ஹிஜ்ரத் முடியவில்லை. தஃப்ஸீர் குர்துபீ 

عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمُ الرَّايَاتِ السُّودَ قَدْ جَاءَتْ مِنْ قِبَلِ خُرَاسَانَ فَأْتُوهَا ؛ فَإِنَّ فِيهَا خَلِيفَةَ اللهِ الْمَهْدِيَّ (أحمد

2. தடுக்க முடியாத அளவுக்கு அனாச்சாரங்கள், பித்அத் வாதிகள் நிறைந்த ஊரை விட்டும் ஹிஜ்ரத் செய்வது. இமாம் இப்னுல் காசிம் அவர்கள் கூறும்போது முன்னோர்களை பழித்துப் பேசுபவர்கள் நிறைந்த ஊரை விட்டும் சென்று விட வேண்டும் அங்கு தங்கியிருக்கக்கூடாது என்றார்கள் 3.ஒரு ஊரில் ஹராம் பெருகி விட்ட நிலையில், அந்த ஊரில் இருந்தால் ஹராமை விட்டும் தப்பிக்க முடியாது என்ற நிலையில் அந்த ஊரை விட்டும் ஹிஜ்ரத் செய்வது ஏனெனில் ஹலாலைத் தேடுவது ஃபர்ளாகும். 4,உடல் ரீதியான கொடுமைகள் ஒருவருக்கு இழைக்கப்படும் போது அந்த ஊரை விட்டும் வெளியேறுவது. ஏனெனில் பல நபிமார்கள் இத்தகைய சூழ்நிலையில் வேறு வழியின்றி வெளியேறினார்கள் உ.ம். இப்றாஹீம் அலை, மூஸா அலை, நமது நபி ஸல் அவர்கள்5.ஒரு ஊரில் ஒருவர் குடியேறிய பின்பு அந்த ஊரின் தட்ப வெப்ப நிலைகள் அவருக்கு ஒத்து வராமல் நோய்கள் ஏற்பட்டால் அதற்காக வெளியேறுவது. நபி ஸல் அவர்கள் அவ்வாறு ஒரு கூட்டத்தினருக்கு அனுமதி தந்தார்கள் ஆனால் இது தொற்று நோய்க்கு பொருந்தாது. ஏனெனில் அதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது 6,ஒரு ஊரில் இருப்பதால் தன் குடும்பத்துக்கோ, அல்லது தம் சொத்துக்களுக்கோ எதிரிகளால் பெரும் பாதிப்பு வரும்  என்றிருந்தால் அதற்காக ஹிஜ்ரத் செய்வது

ஊரை விட்டும் வெளியேறுவதில் இரண்டாம் வகை -அவசியமானதைத் தேடி புறப்படுதல்

இதில் இரண்டு வகை உள்ளது ஒன்று மார்க்க விஷயமாக – மற்றொன்று ஆகுமான உலக விஷயமாக.

மார்க்க விஷயமாக புறப்படுதல் என்பதில் ஒன்பது வகை உள்ளது 

1,படிப்பினைக்கான பயணம். ஆதாரம் குர்ஆன்வசனம். துர்கர்னைன் மன்னர் உலகம் முழுவதையும் சுற்றியது இதற்குத் தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

2,ஹஜ்ஜுக்காக புறப்படுவது முதல் தடவை கடமையாகும். அடுத்த தடவை நஃபில். 3,போருக்காக புறப்படுதல்

4,உள்ளூரில் தேவையான அளவுக்குக் கூட சம்பாத்தியம் கிடைக்காத நிலையில் பிழைப்புக்காக வெளியூருக்கு புறப்படுதல்.இது ஃபர்ளாகும்.. 

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ رضي الله عنه  قَالَ وَأَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ مُوَفَّقٌ وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ وَعَفِيفٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ قَالَ وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوْ الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم) بَاب الصِّفَاتِ الَّتِي يُعْرَفُ بِهَا فِي الدُّنْيَا أَهْلُ الْجَنَّةِ وَأَهْلُ النَّارِ- كِتَاب الْجَنَّةِ وَصِفَةِ نَعِيمِهَا وَأَهْلِهَا

ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள்1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன்- முஸ்லிம்- 5498                                                                        


 5,தேவையான அளவுக்கு உள்ளூரில் கிடைத்தாலும் தன் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக புறப்படுவது இது அனுமதிக்கப்பட்டதாகும். 6.கல்வியைத் தேடி புறப்படுவது 7.புனிதமான மூன்று மஸ்ஜித்களை நோக்கி புறப்படுதல் 8.அணை உடையும் என்ற அபாயம், கடும் புயல் எச்சரிக்கை ஆகியவற்றால் உயிர், உடைமை பாதிக்கும் என்றிருப்பின் அதற்காக வெளியேறுவது 9.மார்க்க ரீதியான நண்பர்களை சந்திக்கப் புறப்படுவது                                 

மற்றொன்று ஆகுமான உலக விஷயமாக...

மேற்காணும் பயணங்கள் அல்லாத மற்ற ஆகுமான பயணங்கள் இந்த வகையில் சேரும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஹிஜ்ரத்

 12-06-2026 துல்ஹஜ்- 25 بسم الله الرحمن الرحيم          ஹிஜ்ரத்தை நினைவு படுத்தும்  இஸ்லாமியப் புத்தாண்டு https://chennaijamaathulula...