24-07-2026
ஸஃபர் - 9
بسم الله الرحمن الرحيم
உறவினர்களிடமும் அண்டை வீட்டாரிடமும்
நட்பு நீடிப்பதற்கான வழிமுறைகள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
இன்று பெரும்பாலும் மனிதர்களுக்கிடையே பகைமை பெருகிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். மஸ்ஜிதில் ஒரு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு மத்தியில் கூட உள்ளங்கள் ஒன்று படாமல் ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை போன்ற தீய எண்ணங்கள் பெருகி வருகின்றன. இரண்டு அண்டை வீட்டாரிடையே பெரும்பாலும் ஒற்றுமை இருப்பதில்லை. ஒற்றுமையின்மையால் நிம்மதியிழக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. விட்டுக் கொடுக்கும் தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை ஆகிய நற்குணங்கள் பெரும்பாலும் தொலைந்து விட்டன. வஞ்சகம் செய்வது, சூழ்ச்சி செய்வது ஆகியவற்றைக் கற்றுத் தரும் தொலைக்காட்சி நாடகங்களும் இதற்கு முக்கியக்காரணம். சொத்துத் தகராறும் பல குடும்பங்களில் அமைதியின்மைக்கு முக்கியக் காரணம்.
உறவினர்களுடன் நட்பு நீடிப்பதற்கான வழிமுறைகள்
1.பிரிந்த உறவுகளை வலியச் சென்று இணைத்துக் கொள்வதால் உறவினர்களுடன் நட்பு நீடிக்கும்
أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) أي المجازي غيره بمثل فعله
அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப் போன உறவுகளையும் வலியச் சென்று சேர்த்துக் கொள்பவரே உண்மையில் உறவைப் பேணுபவர்.
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَقُولُ مَنْ وَصَلَنِى وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَنِى قَطَعَهُ اللَّهُ ».(مسلم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ حَتَّى إِذَا فَرَغَ مِنْهُمْ قَامَتْ الرَّحِمُ فَقَالَتْ هَذَا مَقَامُ الْعَائِذِ مِنْ الْقَطِيعَةِ قَالَ نَعَمْ أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ قَالَتْ بَلَى قَالَ فَذَاكِ لَكِ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ{ فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمْ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا }
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (بخاري) وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ (ابوداود)
கருத்து- மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் பேசாமல் இருப்பது கூடாது. குறைந்த பட்சம் ஸலாம் கூறுவதாலும் அந்தப் பாவம் நீங்கும். இருவரில் யார் முதலில் சலாம் கூறுகிறாரோ அவரே சிறந்தவராவார்.
எவர் ஒரு வருடம் தன் சகோதரரிடம் பேசாமல் இருக்கிறாரோ அது அவரைக் கொன்று அவருடைய இரத்த த்தை ஓட்டுவதைப் போன்றாகும்.
மார்க்க விஷயங்களுக்காக ஒருவரிடம் பேசாமல் இருக்கலாமா ?
والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر بهجرهم –
உலக விஷயங்களுக்காக, சொந்த விஷயங்களுக்காக ஒருவரிடம் பேசாமல் இருப்பது கூடாது. ஆனால் மார்க்க விஷயங்களில் தவறிழைத்த தற்காக சிலரிடம் நபி ஸல் பல நாட்கள் பேசாமல் இருந்துள்ளார்கள்.
2. தீங்கிழைத்தவருக்கே நன்மை செய்வதால் உறவினர்களுடன் நட்பு நீடிக்கும்
عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي
மக்கள் எனக்கு நல்லது செய்தால் நாங்களும் நல்லது செய்வோம். மக்கள் எனக்கு கெடுதி செய்தால் நாங்களும் கெடுதி செய்வோம் என்று கூறும் சுயநலவாதிகளாக இருக்காதீர்கள் மாறாக உங்களின் மனதை இப்படி பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் எங்களுக்கு நல்லது செய்தாலும் நாங்கள் நல்லது செய்வோம். மக்கள் எங்களுக்கு தீங்கு செய்தாலும் நாங்கள் அவர்களுக்கு நல்லதே செய்வோம் என்று உங்கள் மனதை இப்படி பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் தனக்குத் தீங்கு செய்தவரையும் மன்னிக்கும் குணம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்.
தாங்க முடியாத கொடுமைகளை செய்த மக்கா காபிர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றியின் போது மன்னித்தார்கள். தாயிஃப் நகரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடுமையாக எதிரிகள் தாக்கிய போதும் அவர்களுக்கு எதிராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்யவில்லை. அதற்கு மாறாக இறைவா எனது சமூகத்தாரை மன்னிப்பாயாக. அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று துஆ செய்தார்கள்.
உஹதுப் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையை அநியாயமாக கொலை செய்த வஹ்ஷீ என்ற நீக்ரோ அடிமையையும் அவ்வாறு கொலை செய்ய ஏவிய ஹிந்தாவையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன்னித்தார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ (بخاري
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் தோழர்களுடன் நின்று கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி அங்கிருந்து வேகமாக வந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழுத்தில் ஒரு போர்வையை அணிந்திருந்தார்கள். அந்தப் போர்வையின் ஓரங்கள் கரடு முரடாக இருந்தன. அவர்களைச் சுற்றி சில சஹாபாக்கள் நின்றிருந்தார்கள். அந்த கிராமவாசி வேகமாக வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போர்வையைப் பிடித்து இழுத்து முஹம்மதே எனக்கு தர்மம் செய்யுங்கள் என்று கேட்டார்.
அவர் அவ்வாறு இழுத்ததால் போர்வையின் ஓரங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கழுத்தைக் காயப்படுத்தியது மேலும் அருகில் இருந்த சஹாபியின் மீது விழும் அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிலை ஆகி விட்டது. இப்படி நடந்து கொண்ட அந்த நபர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முஹம்மதே எனக்கு ஏதேனும் தர்மம் கொடுங்கள் என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நபர்மீது கோபப்படாமல் சிரித்துக் கொண்டே அவருக்கு ஏதேனும் தர்மம் தந்து அனுப்புங்கள் என்று கூறினார்கள்.
இதுதான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறந்த குணமாகும்.
பொதுவாகவே தனக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கும் குணம் வேண்டும். குறிப்பாக உறவினர்கள் விஷயத்தில் இன்னும் அதிகமாக இந்த விஷயம் வலியுறுத்தப்பட்டுள்ளது
தனக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் என்று எண்ணி பழி வாங்கும் நடவடிக்கையிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈடுபடவில்லை. இத்தகைய நல்ல குணம் நம்மிடமும் வர வேண்டும். நம்முடைய உறவினர்களில் யாரேனும் ஒருவர் நமக்கு ஏதேனும் தீங்கு செய்திருந்தால் அதை மறந்து மன்னிக்கக் கூடிய பெருந்தன்மை நம்மிடம் வரவேண்டும். பல குடும்பங்களில் பல வருடங்களாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது இந்த பெருந்தன்மை இல்லாத காரணத்தினால் தான்.
நம்மை யாராவது ஏதேனும் பேசி இருந்தால் அதை நாம் மறக்க வேண்டும் என்பதற்காக வேண்டியே அல்லாஹு தஆலா மறதி என்ற தன்மையை நமக்குத் தந்துள்ளான். மன்னிக்கும் மனப்பக்குவம் நம்மிடத்திலே வர வேண்டும்.
قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحِ بْنِ أُثَاثَةَ لِقَرَابَتِهِ مِنْهُ وَفَقْرِهِ وَاللَّهِ لَا أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ مَا قَالَ فَأَنْزَلَ اللَّهُ {وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ إِلَى قَوْلِهِ غَفُورٌ رَحِيمٌ} قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ بَلَى وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي فَرَجَعَ إِلَى مِسْطَحٍ النَّفَقَةَ الَّتِي كَانَ يُنْفِقُ عَلَيْهِ وَقَالَ وَاللَّهِ لَا أَنْزِعُهَا مِنْهُ أَبَدًا (بخاري
விளக்கம் - அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உறவினர் மிஸ்தஹ் என்பவருக்கு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மாதம் மாதம் உதவித் தொகை கொடுப்பார்கள். அந்த மிஸ்தஹ் ஒரு நேரத்தில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உடைய மகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவியுமான ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அவதூறு விஷயத்திலே இவரும் ஈடுபட்டு விட்டார். பின்னால் அவர் தவ்பாச் செய்து திருந்தினாலும் கூட ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அவர்களுடைய மனதில் அவர் மீது வருத்தம் ஏற்பட்ட காரணத்தினால் இவருக்கு இனிமேல் உதவி செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். அல்லாஹுத்தஆலா வசனத்தை இறக்கி நீங்கள் ஒரு தவறு செய்தால் அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் அல்லவா அதுபோல அவர் செய்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள் அவருக்கு தொடர்ந்து உதவி செய்யுங்கள் என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான். அதன் பிறகு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொடர்ந்து அவருக்கு உதவி செய்யக் கூடியவர்களாக ஆகி விட்டார்கள்.
3. உறவினர்களுக்கு மத்தியிலும் அண்டை வீட்டாருக்கு மத்தியிலும் விரிசல் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணம் சொத்துத் தகராறு தான். அடுத்தவருடைய சொத்தின் மீது ஒரு போதும் ஆசைப் படுவது கூடாது
இன்று பெரும்பாலும் மனிதர்களுக்கிடையே பகைமை ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக சொத்துப் பிரச்சினைகளும் இருக்கின்றன. ஒருவரின் சொத்தை மற்றவர் முறையின்றி அடைய நினைப்பது, மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பது ஆகியவற்றால் பெரும்பாலும் பகைமை ஏற்படுவது மட்டுமன்றி அதனால் கொலைகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக உறவினர்களுக்கு மத்தியிலும் அண்டை வீட்டாருக்கு மத்தியிலும் விரிசல் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணம் சொத்துத் தகராறு தான்.
அனைத்து ஃபிக்ஹ் நூல்களிலும் ஷுஃப்ஆ என்ற தனி பாடம் இடம் பெற்றிருக்கும். அதன் சுருக்கம்
அதாவது இரு அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் ஒருவர் தன் வீட்டை விற்பதாக இருந்தால் முதலாவதாக தன் அண்டை வீட்டாரிடம் தான் நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டு அவருக்கு விருப்பமில்லை என்றால்தான் அவர் இன்னொருவருக்கு விற்க முடியும் ஒரு வேளை அண்டை வீட்டாரை கேட்காமல் அந்த வீட்டை விற்று விட்டால் அண்டை வீட்டார் காஜி இடம் சென்று முறையிட்டு அந்த வீட்டை நான் வாங்கும் தகுதி இருந்தும் என்னை கேட்காமல் அவர் இன்னொருவருக்கு விற்று விட்டார் என்று புகார் கொடுத்தால் காஜி அதை விசாரித்து யாருக்கு விற்கப்பட்டதோ அவரிடமிருந்து அந்த வீட்டை இவருக்கு மீண்டும் மீட்டுக் கொடுப்பார் இந்த அளவுக்கு அண்டை வீட்டார் உடைய உரிமைகள் நம்முடைய மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பனீ இஸ்ராயீல் சமூகத்தில் சொத்துக்காக நடந்த கொலையும் பகரா சம்பவமும்
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ (67)البقرة
عن ابن عباس رضي الله عنه أن رجلاً من بني إسرائيل قتل قريباً لكي يرثه ثم رماه في مجمع الطريق ثم شكا ذلك إلى موسى عليه السلام فاجتهد موسى في تعرف القاتل ، فلما لم يظهر قالوا له : سل لنا ربك حتى يبينه ، فسأله فأوحى الله إليه : {إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً } فتعجبوا من ذلك ثم شددوا على أنفسهم بالاستفهام حالاً بعد حال واستقصوا في طلب الوصف فلما تعينت لم يجدوها بذلك النعت إلا عند إنسان معين ولم يبعها إلا بأضعاف ثمنها ، فاشتروها وذبحوها وأمرهم موسى أن يأخذوا عضواً منها فيضربوا به القتيل ، ففعلوا فصار المقتول حياً وسمي لهم قاتله (الرازي
பகரா என்றால் பசுமாடு என்று பொருள். பனீ இஸ்ராயீல் சமூகத்தில் இரு பிரிவினரிடையே பகை இருந்தது. இந்த நிலையில் அவர்களில் ஒரு பிரிவைச் சார்ந்த ஒரு வாலிபன் சொத்துக்காக தன் சித்தப்பாவைக் கொன்றுவிட்டான். அதை மறைப்பதற்காக அவரது பிரேதத்தை எதிர் கோஷ்டியினர் வசிக்கும் பகுதியில் யாருக்கும் தெரியாமல் போட்டு விட, அடுத்த நாளே இரு பிரிவினரிடையே பிரச்சினை வெடித்து, பெரும் கலவராமாக மாறியது. இறந்தவரை அடக்கம் செய்த பிறகும் பிரச்சினை நீடித்தது. அப்போது சில நல்லவர்கள் கூறினார்கள். நமக்கு மத்தியில் ஒரு நபி இருக்கும்போது நாம் ஏன் சண்டை போட வேண்டும். அந்த நபியிடம் நாம் பிரச்சினையைக் கொண்டு செல்வோம் என்றுகூற அவ்வாறே நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இதைக் கூறிய போது அவர்கள் அல்லாஹ்விடம் துஆச்செய்தார்கள்.
உடன் அல்லாஹ் வஹீ அறிவித்தான். ஒரு மாட்டை அறுத்து அதன் வாலை இறந்தவரின் கப்ரு மீது அடித்தால் அவர் எழுந்து உண்மையைச் சொல்லி விட்டு கப்ருக்குள் சென்று விடுவார் என்று அல்லாஹ் வஹீ அறிவித்தான். ஏதோ ஒரு மாட்டை அறுத்து அவ்வாறு செய்திருந்தால் அவர்களின் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் அந்த சமூகம் தேவை இல்லாமல் அது எத்தகைய மாடு? இளம் கன்றா? அல்லது வயதான மாடா? என்ன நிறம்? ஏர் உழுத மாடா? அல்லது ஏர் உழாத மாடா? என்றெல்லாம் மூஸா (அலை) அவர்களிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அவர்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அல்லாஹ்வும் அந்தக் கூட்டத்தை சோதிக்க எண்ணி அவர்கள் கேட்கக் கேட்க, நிபந்தனைகளை அதிகப் படுத்திக் கொண்டே இருந்தான். இறுதியாக அல்லாஹ்கூறிய நிபந்தனைகளுடன் கூடிய மாடு எங்குமே கிடைக்காமல் இறுதியாக ஒரே ஒரு நபரிடம் அது இருந்தது. ஆனால் அதற்கு அவர் கடுமையான விலையைக் கூறினார். அதாவது அந்த மாட்டின் தோல் நிறையும் அளவு தங்கம் தந்தால் தான் மாட்டைத் தருவேன் என்றார். அதே போன்று கொடுத்து அம்மாட்டை விலைக்கு வாங்கி, அதை அறுத்து இறந்தவர் கப்ரின்மீது அடித்தபோது அவர் எழுந்து உண்மையைச் சொல்லி விட்டு கப்ருக்குள் சென்று விட்டார்.
சிறந்த முஃமின் எப்போதும் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا (بخاري 3473
(பனூ இஸ்ராயீல்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் ''என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் ''நிலத்தை அதிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், ''உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ''எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், ''எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ''அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (3472)
அடுத்தவரின் இடத்தில் அவரின் அனுமதியைப் பெறாமல்
மஸ்ஜித் கட்டியபோது அதை அல்லாஹ் கண்டித்தான்
عن زيد بن أسلم رض قال :كان للعباس بن عبد المطلب رض دار الي جنب مسجد المدينة فقال له عمر رض بِعنِيها 7 : فأراد عمر رض ان يزيدها في المسجد، فأبي العباس رض ان يبيعها إياه فقال عمر رض فهَبْها لي فأبي فقال فوَسّعْها انت في المسجد، فأبي فقال عمر رض لابد لك من احداهن فأبي عليه فقال خذ بيني وبينك رجلا، فأخذ أبيَّ بن كعب رض فاختصما اليه فقال أبيّ رض لعمر رض :ما أري أن يُخرجه من داره حتي ترضيه .فقال له عمر رض: أرأيت قضائك هذا في كتاب الله وجدته أم سنة من رسول الله صلي الله عليه وسلم؟ فقال أبيّ: بل سنة من رسول الله صلي الله عليه وسلم فقال عمر رض وما ذاك؟ فقال اني سمعت رسول الله صلي الله عليه وسلم يقول:إن سليمان بن داود عليهما الصلاة والسلام-لما بني بيت المقدس جعل كلما بني حائطا أصبح مُنهدما، فأوحي الله اليه أن لاتبني في حق رجل حتي ترضيه)) فتركه عمر رض فوسَّعها 8 ) (العباس رض بعد ذلك في المسجد (حياة الصحابة)
அப்பாஸ் ரழி அவர்களுக்குச் சொந்தமான ஒரு வீடு மஸ்ஜிதுக்கு அருகில் இருந்த து. மஸ்ஜிதின் விரிவாக்கத்திற்காக அந்த இடம் தேவைப் பட்டபோது கலீஃபா உமர் ரழி அவர்கள் அந்த இடத்தை மஸ்ஜிதுக்காக விற்று விடும்படி அப்பாஸ் ரழி அவர்களிடம் கேட்க, அதற்கு அப்பாஸ் ரழி அவர்கள் மறுத்து விட்டார்கள். அதை நீங்களே அன்பளிப்பாகத் தந்து விடுங்கள் என்று கேட்க, அதற்கும் அப்பாஸ் ரழி அவர்கள் மறுத்து விட்டார்கள். மஸ்ஜிதுக்காக நீங்களே விரிவு படுத்திக் கொடுங்கள் என்று கேட்க, அதற்கும் அப்பாஸ் ரழி அவர்கள் மறுத்து விட்டார்கள். அவர்கள் மறுத்ததற்கு ஏதேனும் உள்ரங்கமான காரணம் இருந்திருக்கலாம். அதைக் குறையாக நாம் பேசக்கூடாது. எப்படியும் மஸ்ஜிதை விரிவு படுத்த அந்த இடம் தேவை என்ற சூழ்நிலையில் உமர் ரழி அவர்கள் அப்பாஸ் ரழி அவர்களிடம் இது விஷயமாக நமக்கு மத்தியில் உபய் இப்னு கஃப் ரழி அவர்களை நடுவராக நாம் ஏற்படுத்திக் கொள்வோம். அவர் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வோம் என்று பேசி அவரிடம் பிரச்சினையைக் கூற, உபய் இப்னு கஃப் ரழி அவர்கள் நன்கு யோசித்து விட்டு உமர் ரழி அவர்களிடம் நீங்கள் அப்பாஸ் ரழி அவர்களின் சம்மதம் இல்லாமல் அவர்களின் வீட்டை மஸ்ஜிதுக்காக வாங்க முடியாது என்று கூறி விட்டார்கள். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் இதை நீங்களாகச் சொல்கிறீர்களா அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் சொல்கிறீர்களா என்று கேட்டபோது ஆதாரங்களின் அடிப்படையில் தான் கூறுகிறேன் என்று கூறி விட்டு பின்வரும் ஹதீஸைச் சுட்டிக்காட்டினார்கள். நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பைத்துல் முகத்தஸின் ஒரு பகுதியைக் கட்டிய போது அது எத்தனை தடவை எடுத்துக் கட்டினாலும் இடிந்து விழுந்து கொண்டே இருந்த து. இறுதியில் அல்லாஹ் அவர்களுக்கு வஹீ அறிவித்தான். இந்த இடம் ஒருவருக்குச் சொந்தமாக இருப்பதால் அவரின் சம்மதம் இல்லாமல் நீங்கள் இதைக் கட்டி முடிக்க முடியாது என்று அறிவித்தான்.பின்பு நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் சம்பந்தப்பட்ட அந்த மனிதரிடம் சம்மதம் வாங்கிய பின் அதைக் கட்ட முடிந்தது என்ற இந்த ஹதீஸை உபய் இப்னு கஃப் ரழி அவர்கள் சொன்னதும் உமர் ரழி அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டு அமைதியாகி விட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு அப்பாஸ் ரழி அவர்களே அந்த இடத்தை மஸ்ஜிதுக்காக விட்டுக் கொடுத்து விட்டார்கள்.
அடிக்கடி அன்பளிப்பு கொடுத்துப் பழகுவதால் உறவினர்கள், அண்டை வீட்டாருக்கு மத்தியில் நட்புகள் தொடரும்..
அன்பளிப்புகள் தருவதும் அன்பளிப்புகளைப் பெறுவதும் முஃமினின் சிறந்த பண்பாகும்
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ وَلَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ (ترمذي
عَنْ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ عَبْدِ اللَّهِ الْخُرَاسَانِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَافَحُوا يَذْهَبْ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبْ الشَّحْنَاءُ (مؤطا)
அன்பளிப்புக் கொடுத்துப் பழகுங்கள். அதனால் குரோதம் நீங்கும். எந்த அண்டை வீட்டாரும் தன் அண்டை வீட்டார் தரும் ஆட்டின் கால் போன்ற சிறிய அன்பளிப்பையும் அற்பமாக கருத வேண்டாம்
முற்காலத்தில் இரண்டு அண்டை வீட்டார் இருந்துள்ளார்கள் அவர்களில் ஒருவர் ஆடுகளை நிறைய வைத்திருந்தார் மற்றொருவர் வேட்டைக்காக நாய் வளர்த்திருந்தார் இந்த வேட்டைக்காரருடைய தாய் அடிக்கடி பக்கத்து வீட்டு காரின் ஆட்டுக்குட்டிகளை அவ்வப்போது கடித்து காயப்படுத்தி விடும் அப்போதெல்லாம் ஆட்டு மந்தை வைத்திருப்பவர் வேட்டைக்காரரிடம் வந்து உன்னுடைய நாயை நீ கட்டிப்போடு என்று கூறுவார் அதற்கு அந்த வேட்டைக்காரன் நாய் என்றால் கடிக்கத் தான் செய்யும் நீதான் உன்னுடைய ஆடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விடுவார் ஒருநாள் வேட்டைக்காரன் நாய் இவருடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை பெரிய அளவில் சேதப்படுத்திய போது நேராக இவரைப் பற்றி புகார் கொடுப்பதற்காக ஊர் தலைவரிடம் சென்றார் ஊர் தலைவருக்கும் இவருக்கும் நல்ல நட்பு இருந்தது அதன் அடிப்படையில் ஊர் தலைவர் விஷயத்தை கேட்டு விட்டு நான் அந்த வேட்டைக்காரன் மீது நடவடிக்கை எடுக்கலாம். இருந்தாலும் அவரும் நீங்களும் தினமும் ஒருவருக்கொருவர் பார்க்காமல் இருக்க முடியாது நான் அவர் மீது எடுக்கும் நடவடிக்கையே உங்கள் மீது தீராத பகையை ஏற்படுத்தி விடும் எனவே பகையும் இல்லாமல் உம்முடைய ஆட்டுக்குட்டிகளுக்கும் இனிமேல் பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆலோசனையை நான் கூறுகிறேன் என்று சொல்லி ஒரு ஆலோசனை கூறினார் அந்த ஆலோசனை இவருக்கு நல்லதாகப்பட்டது அந்த ஆலோசனையின் அடிப்படையில் விரைவில் இந்த வேட்டைக்காரனின் சிறிய வயது மகனுக்கு பிறந்தநாள் வந்தது அதைப் பெரிய அளவிலே கொண்டாடினார் அதற்கான அழைப்பு இவருக்கும் வந்தது அந்த குறிப்பிட்ட நாளில் பிறந்தநாள் பரிசாக பலரும் பல பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் ஊர் தலைவர் சொன்ன ஆலோசனை அடிப்படையிலே அவருடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை அந்த சிறுவனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார் அப்போது அந்த வேட்டைக்காரருக்கு மிகப்பெரிய சந்தோஷம் நான் பல தடவை உங்கள் மனதை புண்படுத்தி இருந்தாலும் நீங்கள் என் மகனுக்கு சிறந்த அன்பளிப்பை தந்து விட்டீர்கள் என்று மகிழ்ந்தார் ஆனால் இதற்குப் பிறகு இவருடைய ஆட்டு மந்தைகளுக்கு வேட்டைக்காரர் உடைய நாயின் மூலமாக இந்த தொந்தரவுகளும் ஏற்படுவதில்லை என்ன காரணம் என்றால் எப்போது ஆடுகள் அடுத்த வீட்டில் இருந்ததோ அப்போது நாயை கட்டி போடாத அந்த வேட்டைக்காரன் இப்போது அந்த ஆடுகளில் ஒன்று தன்னுடைய வீட்டுக்கே தன் மகனுக்கு பரிசாக வந்துவிட்டபோது அந்த ஆட்டை பாதுகாப்பதற்காக தன்னுடைய நாயை கட்டி போட ஆரம்பித்தார் இதுதான் ஊர் தலைவர் சொல்லிக் கொடுத்த சிறந்த ஆலோசனையாகும் ஊர் மக்களுக்கு தீர்ப்பு சொல்லும் தலைவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கும் இதில் நமக்கு படிப்பினை உள்ளது அத்துடன் இரண்டு அண்டை வீட்டார் தங்களுக்கு இடையில் அடிக்கடி அன்பளிப்புகள் கொடுத்து பழகுவதால் அவர்களுக்கு இடையே பகைமை நீங்கும் என்ற படிப்பினையும் இதில் உள்ளது
பிற சமயத்தைச் சார்ந்தவர்களிடம் நட்புறவு
மாற்றார்களின் பண்டிகை நாட்களில் அவர்களின் அன்பளிப்புகளை வாங்கிய அலீ ரழி
أما قبول الهدية منهم يوم عيدهم فلا حرج فيه؛ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ : أُتِىَ عَلِىٌّ رَضِىَ اللَّهُ عَنْهُ بِهَدِيَّةِ النَّيْرُوزِ فَقَالَ : مَا هَذِهِ؟ قَالُوا : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَذَا يَوْمُ النَّيْرَوزِ. قَالَ : فَاصْنَعُوا كُلَّ يَوْمٍ فَيْرُوزَ. (رواه البيهقي في سنن الكبرى
மாற்றார்களின் பண்டிகை அன்று அலீ ரழி அவர்களிடம் அன்பளிப்பு கொண்டு வரப்பட்டது. இது என்ன என்று அலீ ரழி அவர்கள் கேட்க, இன்று எங்களுக்கு பண்டிகை நாள் என்று வந்தவர்கள் கூறியவுடன் அதை ஏற்றார்கள்.
عَنْ قَابُوسَ ، عَنْ أَبِيهِ ؛ أَنَّ امْرَأَةً سَأَلَتْ عَائِشَةَ قَالَتْ : إِنَّ لَنَا أَظْآرًا مِنَ الْمَجُوسِ ، وَإِنَّهُ يَكُونُ لَهُمَ الْعِيدُ فَيُهْدُونَ لَنَا ؟ فَقَالَتْ : أَمَّا مَا ذُبِحَ لِذَلِكَ الْيَوْمِ فَلاَ تَأْكُلُوا ، وَلَكِنْ كُلُوا مِنْ أَشْجَارِهِمْ. (مصنف ابن ابي ٍشيبة)عَنْ أَبِي بَرْزَةَ ؛ أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ ، فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ وَالْمِهْرَجَانِ ، فَكَانَ يَقُولُ لأَهْلِهِ : مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَكُلُوهُ ، وَمَا كَانَ مِنْ غَيْرِ ذَلِكَ فَرُدُّوهُ. (مصنف ابن ابي ٍشيبة)
ஆயிஷா ரழி அவர்களிடம் ஒரு பெண் வந்து எனக்கு மஜூஸியான பால்குடி உறவினர்கள் உள்ளனர். அவர்களின் பண்டிகை நாளில் அவர்கள் எனக்கு அன்பளிப்புத் தந்தால் வாங்கலாமா என்று கேட்க, அதற்கு ஆயிஷா ரழி அவர்கள் அந்த நாளுக்காக வேண்டி அவர்களே சமைத்திருந்தால் உண்ண வேண்டாம். அவர்களின் மரங்களில் இருந்து பறித்த பழங்களைத் தந்தால் உண்ணுங்கள் என்றார்கள். அபூ பர்ஜா ரழி அவர்களின் வீட்டில் மஜூஸி அண்டை வீட்டார் குடியிருந்தார்கள். அவர்களின் பண்டிகை நாட்களில் அன்பளிப்புகள் தருவார்கள். அப்போது அந்த சஹாபீ தன் வீட்டாரிடம் ஆயிஷா ரழி கூறியது போன்றே கூறினார்கள். (மாற்று மத சகோதரர்கள் அவர்களின் பண்டிகை நாளில் கடைகளில் இருந்து வாங்கி நமக்குத் தந்தால் அது பூஜை செய்யப் படாததாக இருக்கும் என்றால் சாப்பிடலாம் என்பதற்கு இது ஆதாரம்) عَنِ الْحَسَنِ ، قَالَ : كَانَ يَكْرَهُ أَنْ يَأْكُلَ مِمَّا طَبَخَ الْمَجُوسُ فِي قُدُورِهِمْ ، وَلَمْ يَكُنْ يَرَى بَأْسًا أَنْ يَأْكُلَ مِنْ طَعَامِهِمْ مِمَّا سِوَى ذَلِكَ
அவர்கள் இறைச்சி சமைக்கும் சட்டியில் சமைக்கப்பட்ட உணவுதான் மக்ரூஹ். வேறு உணவுகள் மக்ரூஹ் அல்ல.
؛(مصنف ابن ابي ٍشيبة) عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَرْضَ الْمُشْرِكِينَ ، فَلاَ تمتنع ان تاكل في انيتهم وتشرب في اسقيتهم (مصنف ابن ابي شيبة)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக