வியாழன், 20 ஆகஸ்ட், 2026

நபிகளாரின் பிறப்பு

 21-09-2026

ரபீஉல் அவ்வல் - 7


بسم الله الرحمن الرحيم  

    நபி (ஸல்) அவர்களுடைய பிறப்பின் அதிசயங்கள்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


நபி(ஸல்) பிறந்த மாதம் பற்றி பல கருத்துக்கள் இருப்பினும் ரபீஉல் அவ்வல் என்பது பெரும்பாலானோரின் கூற்று.

عن جابر وابن عباس  رضي الله عنهما  أنهما قالا: ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول وفيه بعث وفيه عرج به إلى السماء وفيه هاجر وفيه مات وهذا هو المشهور عند الجمهور والله أعلم(السيرة النبوية - لابن كثير رح)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பு  தீய சக்திகளுக்கு பெரும் பேரிடியாக இருந்த து

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான்

وفي تفسير بْنِ مَخْلَدٍ أَنّ إبْلِيسَ رَنّ أَرْبَعَ رَنّاتٍ رَنّةً حِينَ لُعِنَ وَرَنّةً حِينَ أُهْبِطَ وَرَنّةً حِينَ وُلِدَ رَسُولُ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَرَنّةً حِينَ أُنْزِلَتْ فَاتِحَةُ الْكِتَابِ قَالَ وَالرّنِينُ وَالنّخَارُ مِنْ عَمَلِ الشّيْطَانِ (السيرة النبوية  لابن كثير) وكان إبليس يخرق السموات السبعَ فلما وُلد عيسى  عليه  السلام حُجب من ثلاث سموات وكان يصل إلى أَربَعٍ فلما وُلدَ محمد صلى الله عليه وسلم حُجب من السبع ورُميت الشياطين بالشُّهب الثواقب (السيرة الحلبية)

நான்கு தடவைகள் ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான். 1.அவன் சபிக்கப்பட்ட போது 2. அவன் இறக்கப்பட்ட போது 3. நபி ஸல் அவர்கள் பிறந்த போது 4. அல்ஹம்து சூரா இறக்கப்பட்ட போது மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறப்பதற்கு முன்பு ஏழு வானங்கள் வரை சென்று வருவதற்கு சக்தி தரப் பட்டிருந்த ஷைத்தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்த பின்பு மூன்றாவது வானத்தைக் கடந்து நான்காவது வானம் வரை மட்டுமே செல்ல அவனால் முடிந்தது. பிறகு நபி ஸல் என்றைக்கு பிறந்தார்களோ அன்று முதல் வானத்திற்கு மேல் செல்ல அவனால் முடியவில்லை. முதல் வானத்தை நெருங்கினாலே தீப்பந்தங்கள் மூலம் எரியப்படும்

நபி(ஸல்) பிறந்தது திங்கள்கிழமை என்பதால் அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத்

عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ (مسلم)

திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் எனக்கு இறைச் செய்தி அருளப்பட்டது என்று விடையளித்தார்கள்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ وُلِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ وَاسْتُنْبِئَ يَوْمَ الِاثْنَيْنِ وَتُوُفِّيَ يَوْمَ الِاثْنَيْنِ وَخَرَجَ مُهَاجِرًا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ يَوْمَ الِاثْنَيْنِ وَقَدِمَ الْمَدِينَةَ يَوْمَ الِاثْنَيْنِ وَرَفَعَ الْحَجَرَ الْأَسْوَدَ يَوْمَ الِاثْنَيْنِ-

இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். திங்கட்கிழமையில் நபி ஸல் பிறந்தார்கள். திங்கட்கிழமையில் நபியாக ஆக்கப்பட்டார்கள். திங்கட்கிழமையில் தான் வஃபாத்தானார்கள். திங்கட்கிழமையில் மக்காவில் இருந்து ஹிஜ்ரத் புறப்பட்டார்கள். திங்கட்கிழமையில் மதீனா வந்தடைந்தார்கள். நபிகளாரின் 35 வது வயதில் குரைஷிகள் கஃபாவை புதுப்பித்துக் கட்டிய போது அனைவரும் திருப்தியடையும் விதமாக தீர்ப்பு வழங்கி ஹஜருல் அஸ்வதை எடுத்து கஃபாவில் பொருத்தியதும் திங்கட்கிழமையில் தான்.      

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ (احمد)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (ترمذي

ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (திர்மிதீ                                                    

பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை அவர்களின் தாய் அனுபவிக்கவில்லை

عن ابن عباس رضي الله عنه  أن آمنة بنت وهب قالت:لقد علقت به (أي رسول الله صلى الله عليه وسلم) فما وجدت له مشقة حتى وضعته فلما فصل منى خرج معه نور أضاء له ما بين المشرق والمغرب ثم وقع إلى الارض معتمدا على يديه ثم أخذ قبضة من التراب فقبضها ورفع رأسه إلى السماء (السيرة النبوية)  عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ عَنْ أُمّهِ أُمّ عُثْمَانَ الثّقَفِيّةِ قَالَتْ"حَضَرْتُ وِلَادَةَ رَسُولِ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  فَرَأَيْت الْبَيْتَ حِينَ وُضِعَ قَدْ امْتَلَأَ نُورًا وَرَأَيْت النّجُومَ تَدْنُو حَتّى ظَنَنْت أَنّهَا سَتَقَعُ5 عَلَيّ"- (السيرة النبوية - لابن كثير)

ஆமினா அம்மையார் கூறினார்கள்.  பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை நான்  அனுபவிக்கவில்லை. மேலும் என் வயிற்றிலிருந்து குழந்தை வெளியான போது  அத்துடன் ஒரு பிரகாசம் தோன்றியது. அதனால் பூமி முழுவதும் பிரகாசம் அடைந் த து. மேலும் என் குழந்தை தரையின் மீது இரு கைகளையில் ஊன்றிய நிலையில் அதாவது சஜ்தா செய்த நிலையில் பிறந்தார். மேலும் அப்போதே பூமியின் ஒரு பிடி மண்ணை எடுத்து விண்ணை நோக்கி தலையை உயர்த்தினார். 


நபி ஸல் அவர்கள் பிறக்கும்போதே பல சோதனைகளை சந்தித்தார்கள்

தாயின் வயிற்றில் இருக்கும் போதே  தந்தையை இழந்தார்கள்

عن أيوب بن عبد الرحمن قال: خرج عبد الله بن عبد المطلب إلى الشام إلى غزة في عير من عيران قريش يحملونه تجارات ففرغوا من تجاراتهم ثم انصرفوا فمروا بالمدينة وعبد الله بن عبد المطلب يومئذ مريض فقال أتخلف عند أخوالى بنى عدى بن النجار.فأقام عندهم مريضا شهرا ومضى أصحابه فقدموا مكة فسألهم عبد المطلب عن ابنه عبد الله فقالوا:خلفناه عند أخواله بنى عدى بن النجار وهو مريض فبعث إليه عبد المطلب أكبر ولده الحارث فوجده قد توفى ودفن في دار النابغة فرجع إلى أبيه فأخبره فوجد عليه عبد المطلب وإخوته وأخواته وجدا شديداورسول الله صلى الله عليه وسلم يومئذ حمل ولعبد الله بن عبد المطلب يوم توفى خمس وعشرون سنة(السيرة النبوية - لابن كثير

 வியாபார விஷயமாக மற்றவர்களுடன் அப்துல்லாஹ் அவர்கள் ஷாம் சென்ற போது வரும் வழியில் மதீனாவைக் கடந்து வர வேண்டியிருந்தது. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டதால் நான் மதீனாவில் என் மாமன்மார்களின் வீட்டில் ஒரு மாதம் தங்கி விட்டு வருகிறேன் என்றார் மற்றவர்கள் மக்கா திரும்பினர். அப்துல் முத்த்தலிப் மகனைப் பற்றி விசாரித்த போது அவர்கள் கூறிய காரணத்தை கேட்டு அப்துல் முத்தலிப் கவலைப்பட்டு தன் மூத்த மகன் ஹாரிஸை மதீனாவிற்கு அனுப்பினார். அங்கு வந்த பின்பு தான் அப்துல்லாஹ் இறந்த விபரமும் அவரை தாருன் னாபிஙா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்தது அவ்விஷயத்தை கேட்டு அப்துல் முத்தலிப் அவர்களும் மற்றவர்களும் மிகவும் கவலைப்பட்டனர். அந்நேரத்தில் அவரின் வயது 25 மட்டுமே. மேலும் அந்நேரத்தில் நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் கருவாக இருந்தார்கள்.

படிப்பினை- இன்றைக்கும் பலர் சின்னச் சின்ன சோதனைகள் வந்தாலும் பொறுமையிழந்து ஈமானுக்கு மாற்றமான வார்த்தைகளைக் கூற ஆரமபித்து விடுகின்றனர் அத்தகையவர்கள் நபி ஸல் அவர்களின் வாழக்கையை சிந்திக்க வேண்டும். பிறக்கும் முன் தந்தையை இழந்து, பிறந்த பின் ஆறு வயதில் தாயை இழந்து, அதன் பின் தனக்கு ஆதரவாக இருந்த பாட்டனாரையும் எட்டு வயதில் இழந்தார்கள்

பின்பு நபி ஸல் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது அதில் மூன்று குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்தனர். மற்ற நான்கு பெண் மக்களில் மூன்று பேர் நபி ஸல் அவர்களின் ஜீவிய காலத்திலேயே இறப்பெய்தினர். ஆக இவ்வளவு சோதனைகள்ஏற்பட்ட்டன. இத்தனைக்கும் அவர்கள் தான் படைப்பினங்களிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள்

இன்று இரவு ஒரு நபி பிறப்பார் என தவ்ராத் வேதத்தைக் கற்ற யூதர் சொன்ன சுபச்செய்தி

عن عائشةَ رضي الله عنها قالت :كان يهوديٌّ قد سَكَنَ مكةَ يتَّجِرُ بها فلما كانتْ الليلةُ التي وُلِدَ فيها رسولُ الله صلى الله عليه وسلم قال في مجلسٍ من قريش يا معشرَ قُريشٍ هل وُلِدَ فيكم الليلةَ مولودٌ ؟ فقال القوم والله ما نعلمُه قال: الله أكبرقال:ا إذ أخطَأَكم فلا بأسَ انظروا واحفَظوا ما أقولُ لكم وُلِدَ فيكم هذه الليلة نبيُّ هذه الأمةِ الأخيرةِ بين كَتِفَيْهِ علامةٌ فيها شعراتٌ متواتراتٌ كأنهنَّ عرفُ فَرَسٍ1 لا يرضَعُ ليلتينِ ..

فتصدَّعَ 2 القومُ من مجلِسهم وهم يتعجَّبونَ من قولِه فلما صاروا إلى منازِلهم أخبَرَ كلُّ إنسانٍ منهم أهلَه فقالوا : لقد وُلِدَ لعبدِ الله بنِ عبدِ المطلب غلامٌ سَمَّوه محمداً فالتقى القومُ فقالوا هل سمعتُم حديثَ هذا اليهوديِّ ؟ بلَغَكُم مولدُ هذا الغلامِ ؟ فانطلقوا حتى جاءوا اليهوديَّ فأخبروه الخبر قال: فاذهبوا معي حتى أنظرَ إليه فخرجوا به حتى أدْخَلُوه على آمنةَ فقال أَخرِجي إلينا ابنَكِ فأخْرَجَتْه وكشَفوا له عن ظهرِه فرأى تلك الشامةَ 3 فوقعَ اليهوديُّ مغْشِياً عليه فلما أفاقَ قالوا:ويلَكَ مالَكَ ؟ قال:ذهبتْ واللهِ النبوةُ من بني إسرائيلَ أَفَرِحْتُمْ به يا معشرَ قريش ؟ أما والله ليَسْطُوَنَّ4 بكم سطوةً يخرج خبرُها من المشرقِ والمغربِ (السيرة النبوية - لابن كثير)

ஹஸ்ரத் ஆயிஷா (ரழி) அவர்கள், “மக்காவில் ஒரு யூதர் இருந்தார், பிறந்த இரவில் அவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்து, “உங்களில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறதா?” என்று குரைஷிக் குடும்பத்தைக் கேட்டார் மக்கள் இல்லை என்றார்கள்.  அவன் சொன்னான்“நான் சொல்வதைக் கவனமாகக் கேள்! இன்று இந்த உம்மத்தின் கடைசி தீர்க்கதரிசி பிறந்து விட்டார். நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.ஓ குரேஷ் பழங்குடியினரே! அவர் உங்களிடமிருந்து வந்தவர்" அவரது தோள்களில் தீர்க்கதரிசன முத்திரை உள்ளது. இந்த விஷயங்கள் பழைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் வீடுகளுக்குச் சென்று கேளுங்கள்” குரேஷி மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்,விரைவில் அவர்கள் அனைவரும் அப்துல் முத்தலிபுக்கு ஒரு பேரப்பிள்ளையை வழங்கியுள்ளார் என்பதை அறிந்து கொண்டனர். மேலும் அவரது பிறப்பில் பல இயற்கைக்கு மாறான விஷயங்கள் மற்றும் அதிசயங்கள் நடக்கின்றன என்றும் அறிந்து கொண்டு, அவர்கள் மிக விரைவில் அவரிடம் திரும்பி வந்து,“நீங்கள் சொல்வது சரிதான்.  அப்துல்முத்தலிபுக்கு ஒரு பேரன் இருக்கிறார்”. என் சொந்தக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவர் அங்கு சென்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பார்த்தார் அப்போது அக்குழந்தையின் முதுகை நீக்கி காட்டப்பட்ட போது அவர்களின் முத்திரையைச் பார்த்து மயங்கி விழுந்து விட்டார். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் காரணம் கேட்க, வருத்தத்துடன் கூறினார்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக!  நபித்துவம் பனீ இஸ்ரவேலிலிருந்து போய்விட்டது” ஓ குரேஷ் பழங்குடியினரே!  நிச்சயமாக பிற்காலத்தில் இவரின் புகழ் இந்த பூமியின் கிழக்கில் இருந்து மேற்கு வரை பரவும்.

என்றுமே தோன்றாத ஒரு நட்சத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பிறந்த தினத்தில் தோன்றிய போது இன்று ஒரு நபி பிறந்துள்ளார் என ஜுபைர் என்ற மாபெரும் யூத அறிஞர் சொன்னார்

قال الزبير بن باطا:قد طلع الكوكب الاحمر الذى لم يطلع إلا لخروج نبى أو ظهوره ولم يبق أحد إلا أحمد وهذا مهاجره.قال أبو سعيد فلما قدم النبي صلى الله عليه وسلم أخبره أبى هذا الخبر فقال رسول الله صلى الله عليه وسلم لو أسلم الزبير لاسلم ذووه من رؤساء اليهود إنما هم له تَبَعٌ (السيرة النبوية - لابن كثير) عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ تَابَعَنِي عَشَرَةٌ مِنْ الْيَهُودِ لَمْ يَبْقَ عَلَى ظَهْرِهَا يَهُودِيٌّ إِلَّا أَسْلَمَ (مسلم)

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு, அந்த ஆண்டு அரேபியர்கள் மழையின்றி பசி மற்றும் தாகத்தால் கடும் நெருக்கடியில் இருந்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பிறப்புடன் எல்லாமே மாறியது. மழை பெய்தது. நிலம் பசுமையாகி பயிர்கள் ஆரோக்கியமாக இருந்தன. "அதனால்தான் அந்த ஆண்டு "வெற்றி மற்றும் மகிழ்ச்சியின் ஆண்டு" என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அதற்கு முன்பு பானோ குரேஷ் நெருக்கடியில் இருந்தார். அப்போது நிலம் பசுமையாக இருந்தது. மரங்கள் பசுமையாக இருந்தன, எங்கும் திருப்தியும் செல்வமும் இருந்தது” (சீரத் ஹல்பியா, 1:47)

நபி (ஸல்) அவர்களை கருவில் சுமக்கும்போதே ஆமினா அம்மையார் அவர்களுக்கு சொல்லப்பட்ட சுபச்செய்திகள்

قال محمد بن إسحاق:أَنّ آمِنَةَ ابْنَةَ وَهْبٍ أُمّ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  كَانَتْ تُحَدّثُ أَنّهَا أُتِيَتْ حِينَ حَمَلَتْ بِرَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقِيلَ لَهَا إنّك قَدْ حَمَلْت بِسَيّدِ هَذِهِ الْأُمّةِ فَإِذَا وَقَعَ إلَى الْأَرْضِ فَقُولِي: أُعِيذُهُ بِالْوَاحِدِ مِنْ شَرّ كُلّ حَاسِدٍ ثُمّ سَمّيهِ مُحَمّدًا فإن اسمه في التوراة أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في الانجيل أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في القرآن محمد وَرَأَتْ حِينَ حَمَلَتْ بِهِ أَنّهُ خَرَجَ مِنْهَا نُورٌ رَأَتْ بِهِ قُصُورَ بُصْرَى مِنْ أَرْضِ الشّامِ ثم لما وضعته رأتْ عيانا تأويل ذلك كما رأته قبل ذلك (السيرة النبوية لابن كثير)

மூட நம்பிக்கையை ஆரம்பத்திலேயே உடைத்தெறிந்த நபிகளார் ஸல் அவர்கள்  

عن أبى الحكم التنوخى.قال: كان المولود إذا ولد في قريش دفعوه إلى نسوة من قريش إلى الصبح يكفأن عليه برمة،1 فلما ولد رسول الله صلى الله عليه وسلم دفعه عبد المطلب إلى نسوة فكفأن عليه برمة، فلما أصبحن أتين فوجدن البرمة قد انفلقت عنه باثنتين ووجدنه مفتوح العينين شاخصا ببصره إلى السماء.فأتاهن عبد المطلب فقلن له: ما رأينا مولودا مثله، وجدناه قد انفلقت عنه البرمة، ووجدناه مفتوحا عينيه شاخصا ببصره إلى السماء.فقال: احفظنه فإنى أرجو أن يكون له شأن، أو أن يصيب خيرا. (السيرة النبوية - لابن كثير

 குரைஷிகள் ஒருவருக்கு இரவில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை குரைஷிப் பெண்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் அக்குழந்தயின் மீது ஒரு பானையை அதில் காற்றுப் புகும் வகையில் ஓட்டை போட்டு அக்குழந்தை மீது கவிழ்த்து வைத்து விடுவார்கள் காலையில் தான் அதை எடுப்பார்கள். குழந்தை வானம் பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் இது போன்று செய்வார்கள்  அதேபோன்றே நபி ஸல் பிறந்த போதும் அப்துல் முத்தலிப் அந்தப் பெண்களிடம் குழ்ந்தையை கொடுத்தார் அப்பண்கள் வழமை போலவே செய்தனர் ஆனால் காலையில் வந்து பார்த்த போது அந்தப் பானை இரண்டாக உடைந்து கிடந்ததுடன் அக்குழந்தை வானத்தின் பக்கம் கண்களை செலுத்திக் கொண்டிருந்த காட்சியைக் கண்டவுடன் ஆச்சரியமடைந்தனர் இதை அப்துல் முத்தலிபிடம் கூறிய போது அவர் மகிழ்ந்து இந்தக் குழந்தைக்கு சிறந்த எதிர் காலம் உண்டு எனவே இக்குழந்தையை பத்திரமாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.                                  

فلما كان اليوم السابع ذبح عنه ودعا له قريشا، فلما أكلوا قالوا: يا عبد المطلب، أرأيت ابنك هذا الذى أكرمتنا على وجهه، ما سميته ؟ قال: سميته محمدا.قالوا: فما رغبتَ به عن أسماء أهل بيته ؟ قال: أردتُ أن يحمده الله في السماء وخَلْقُه في الارض.(السيرة النبوية لابن كثير)

பின்பு குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆடு அறுத்து குறைஷிகளுக்கு விருந்து கொடுத்தார் அப்போது அவர்கள் அப்துல் முத்தலிபிடம் இந்தக் குழந்தையின் மீதான பிரியத்தால் எங்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்களே இந்தக் குழந்தைக்கு நீங்கள் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க முஹம்மத் என அப்துல் முத்தலிப் கூற, இதுவரை இப்பெயரை நம் பரம்பரையில் யாரும் வைக்கவில்லையே என்று கேட்டனர் அதற்கு அவர் இக்குழந்தை அல்லாஹ்வின் மூலமாகவும் உலக மக்கள் அனைவராலும் புகழப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.                      

பெயர் சூட்டுதல் மற்றும் அகீகா பற்றிய சட்டங்களும் சுன்னத்துகளும்

குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது அழகிய பொருள் பொதிந்த பெயரைச் சூட்டவேண்டும்.

عن أبي الدرداء عن النبي صلى الله عليه و سلم قال : ( إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فحسنوا أسمائكم )

(رواه أحمد، أبوداودو،مشكوة ص 408)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்தா (ரழி) அறிவித்துள்ளார்கள். மறுமை நாளில் உங்களின் தந்தையர் பெயருடன் சேர்த்து நீங்கள் அழைக்கப்படுவீர்கள். எனவே உங்கள் பெயர்களை அழகானதாக சூட்டுங்கள். (அஹ்மத்,அபூதாவூத்,மிஷ்காத், பக். 408)

عنْ سَمُرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ غُلَامٍ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى (ابن ماجة)

ஒவ்வொரு குழந்தையும் அதன் அகீகாவைக கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தை பிறந்ததும் ஏழாவது நாள் அகீகா செலுத்தப்பட வேண்டும். குழந்தையின் தலை முடி களையப்பட வேண்டும். பெயர் சூட்டப்பட வேண்டும். நூல்: திர்மிதி. குழந்தை பிறந்து இறந்து விட்டாலும், அகீகா கொடுப்பதும் அதற்குப் பெயர் வைப்பதும், விழுகட்டிகளுக்கும் கூட பெயர் வைப்பதும் சுன்னத்தாகும்.

அகீகா:

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا بِكَبْشَيْنِ كَبْشَيْنِ

விளக்கம்- பிறந்த குழந்தை அதற்குரிய அகீகாவைக் கொண்டு ஈடுவைக்கப்பட்டிருக்கிறது' என்றால் அகீகாவை செலுத்தும் வரை மறுமை நாளில் பெற்றோருக்காக பிள்ளைகள் மன்றாட மாட்டார்கள் (ஷபாஃஅத் செய்யமாட்டார்கள்) என்பது பொருளாகும்' என்று அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் விளக்கம் தருகிறார்கள். ஆகவே பிள்ளைகளுக்காக அகீகா கொடுப்பது பெற்றோர்களுக்கு சுன்னத்தாகும். பிள்ளை பிறந்து பருவ வயதை அடையும் வரை இந்த அகீகாவை செலுத்துவது பெற்றோர் மீது சுன்னத்தாகும். 

குழந்தை பிறந்ததும் அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் நிஃமத்தை எடுத்தும் காட்டும் வகையில் ஆடோ, மாடோ, ஒட்டகமோ அறுத்துப்பலியிடுவதற்கு அகீகா என்று பெயர். 'ஆண்குழந்தை பிறந்ததற்காக (குர்பானிக்கு) தரமான இரண்டு ஆடுகளையும், பெண்குழந்தை பிறந்ததற்காக ஓர்ஆட்டையும் அறுத்து கொடுக்கவேண்டும்' என அண்ணலார் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி.

நபித்துவத்திற்குப்பின் “அகீகா” தொடர்ந்து நடைமுறையில் இன்று வரை உள்ளது. அதன் இரத்தத்தை குழந்தையின்  தலையில் தடவும் சம்பிரதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அகற்றி இஸ்லாமிய நடைமுறையை மட்டும் அறிமுகப்படுத்தினார்கள். மகிழ்ச்சியை இப்படி வெளிப்படுத்துவது தவறல்ல! ஆனால் சடங்கு, சம்பிரதாயங்கள், வீண் செலவுகள் செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பிறந்த குழந்தைக்கு பாங்கு சொல்வதன் நோக்கம்                

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தனது பேரர் ஹஸன் (ரழி) பிறந்த போது அவர்களுடைய காதில் பாங்கு சொன்னதைப் பார்த்ததாக அபூராஃபிஃ (ரழி) கூறுகின்றார்கள். (திர்மிதி, அபூதாவூத்) 

பைஹகீ என்னும் நூலில் உள்ள அறிவிப்பில் “குழந்தை பிறந்தவுடன் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்லப்பட்டால்  ஷைத்தானிடமிருந்து குழந்தைக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மனிதனுடைய வாழ்வு பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் உள்ள இடைவெளி அளவுதான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், ஷைத்தானுடைய தீங்குகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்தான் குழந்தை பிறந்தவுடனேயே அதன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்லப்படவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. பாங்கும் இகாமத்தும் உரத்தகுரலில் சொல்லப்படவேண்டும் என்பதல்ல. மாறாக மெதுவாகவும் சொல்லலாம்.

மேலும், இமாம் (தொழுகை நடத்துபவர்)தான் பாங்கு சொல்ல வேண்டும் என்பது கிடையாது. மாறாக, குழந்தை பிறக்கும் போது அருகில் உள்ள முஃமின்கள் யாராக இருப்பினும் கூறலாம். முஃமினான ஆண்கள் யாருமே இல்லையென்றால் சுத்தமாக உள்ள பெண்கள் கூறினாலும் போதுமாகி விடும். இந்த பாங்கிற்காக காதுகளில் விரல்களை வைத்துத் தான் பாங்கு சொல்ல வேண்டும் என்றோ, கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்றோ நிபந்தனைகள் எதுவும் இல்லை. பாங்கின் வாசகத்தில் ஏகத்துவம், நபியின் நுபுவ்வத், தூதுத்துவம் ஆகியவை இருக்கிறது.  இதன் கருத்துக்கள் குழந்தையின் மூளையின் பதிந்து அதன் பிரதிபலிப்பு வாழ்வில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகவேதான், குழந்தை பிறந்தவுடன் உலகப்பேச்சுகளைக் கேட்பதற்கு முன்னால் ஏகத்துவம், தூதுத்துவம் பற்றிக் கேட்க வைக்கப்படுகிறது.

முடிந்த வரை 7-ஆம் நாளில் பெயர் சூட்டுதல்.தலைமுடி களைவது. “அகீகா”கொடுப்பது. தலைமுடி எடை அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை தர்மம் செய்வது.கத்னா (சுன்னத்) செய்வது. ஆகியவற்றைச் செய்யவேண்டும்

7-ஆம் நாள் செய்ய முடியா விட்டால்?

“அகீகா”வை 7-ஆம் நாள் கொடுக்கவேண்டும்.அதற்கு முடியா விட்டால் 14-ஆம் நாள் கொடுக்கலாம். அதற்கும் இயலாவிட்டால் 21- ஆம் நாள் கொடுக்கவேண்டும். (நூல் -பைஹகீ, தப்ரானி) அதற்கும் இயலாவிட்டால் எப்போது வசதி ஏற்படுகிறதோ, அப்போது குழந்தை பிறந்த கிழமையிலிருந்து ஏழாவது நாளைக் கணக்கிட்டு கொடுக்க வேண்டும். அல்லது அக்குழந்தை பருவ வயதை அடையும் வரை கொடுக்கலாம் என்றும் சில உலமாக்கள் கூறியுள்ளனர். ஆனால், எவ்விதக் காரணமும் இன்றி பிற்படுத்துவது கூடாது என ஃபத்ஹுல் பாரி என்ற கிதாபில் எழுதப்பட்டுள்ளது.

ஆடு கொடுக்க இயலாவிட்டால்

“அகீகா”கொடுக்கும் நிய்யத் வைத்து குர்பானியின் காலத்தில் குர்பானிப் பிராணியில் தனக்குத் தேவையான பங்கில் கூட்டு சேர்ந்து கொள்வதும் கூடும்.

முன் வேதங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்புகள்

   நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்ராத் வேதத்தில் முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது.  இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம்  29- ல் கூறப்பட்டுள்ளது.  இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது.                 

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف6 

மர்யமின் குமாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.”இஸ்ராயீல் மக்களே!  எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப் பவனாகவும்;  எனக்குப் பின் வரவிருக்கும் ”அஹ்மத் ” என்னும் பெயருடைய தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறியதை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக!

1. நபி ஸல் அவர்களின் பிறப்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த  துஆவின் பலன் 

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آَيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ(129البقرة)

    நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகன்களாக குர்ஆனில் கூறப்பட்டவர்கள் இரண்டு மகன்கள். 1. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் இவர்கள்  அன்னை ஸாரா அம்மையார் அவர்களின் மகனாவார்கள். 2. இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் இவர்கள்  அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களின் மகனாவார்கள். இந்த இருவரில் இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் தான் நிறைய நபிமார்கள் வந்தார்கள். இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் வந்த ஒரே நபி நம்முடைய நபி ஸல் அவர்கள் மட்டும் தான்.

சுதந்திர தினம்

 14-08-2026

ஸஃபர் – 30


بسم الله الرحمن الرحيم  

இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமான பூர்வீக தொடர்பு

இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு.........



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


     இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதைப் பற்றி பேசுவதற்கு முன்பு இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமான பூர்வீகமான தொடர்பைப் பற்றிப் பேச வேண்டும். சில அறிவற்றவர்கள் கூறுவது போன்று இந்திய முஸ்லிம்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல என்பதை அடிக்கடி பதிய வைக்க வேண்டும். மேலும் இந்தியாவில் முஸ்லிம்களாகிய நமக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்பதைப் புரிய வைக்க வேண்டும். சொந்த நாட்டை நேசிப்பதில் நாம் தான் முன்மாதிரி....

தான் பிறந்த சொந்த ஊரை சொந்த நாட்டை நேசிப்பது சுன்னத்

وأخرج الأزرقي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لما خرج من مكة « أما والله اني لأخرج وإني لأعلم أنك أحب البلاد إلى الله وأكرمها على الله ، ولولا أن أهلك أخرجوني منك ما خرجت » .وأخرج الترمذي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمكة « ما أطيبك من بلدة وأحبك إليّ ، ولولا أن قومك أخرجوني ما سكنت غيرك (در المنثور

நபி ஸல் அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது மக்காவை நோக்கிப் பேசுவது போல பின்வரும் வார்த்தையைச் சொன்னார்கள். ஊர்களிலேயே எனக்குப் பிரியமான ஊராகிய மக்கா என்ற உன்னை விட்டும் நான் வெளியேறுகிறேன். நிச்சயமாக உன்னிடம் வசிப்பவர்கள் என்னை வெளியேற்றியிருக்கா விட்டால் நான் ஒருபோதும் வெளியேறியிருக்க மாட்டேன். -  திர்மிதீ    

ஆங்கிலேயரிடம் ஆட்சியை இழந்தவர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்கள்.எனவே அதை இழந்தவர்களுக்குத் தான் தெரியும் இழப்பின் வலி! தவிரவும், உடைமையை இழந்து விட்டு வாளாதிருப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. பறிக்கப்பட்ட உரிமையைப் போராடிப் பெற வேண்டும் என்றே மார்க்கம் கட்டளையிடுகிறது. அதற்காகப் போரிடவும் தயங்கக் கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

உரிமைகளை மீட்பதற்காகப் போராடுவதை இஸ்லாம் ஆர்வப் படுத்துகிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي قَالَ فَلَا تُعْطِهِ مَالَكَ قَالَ أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي قَالَ قَاتِلْهُ قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي قَالَ فَأَنْتَ شَهِيدٌ قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ قَالَ هُوَ فِي النَّارِ (مسلم

   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “என் பொருளைப் பறிக்கும் எண்ணத்தில் ஒருவன் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்)?” என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது பொருளை அவனுக்கு (விட்டு)க் கொடுத்து விடாதீர்” என்றார்கள். அம்மனிதர், “அவன் என்னோடு சண்டைக்கு வந்தால்..?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “அவனுடன் நீரும் சண்டையிடுவீராக!” என்றார்கள். அவர் மீண்டும், “(இச்சண்டையில்) அவன் என்னைக் கொன்று விட்டால்..?” என வினவினார். அதற்கு, “நீர் வீரத் தியாகி ஆவீர்” என்றார்கள். திரும்பவும் அவர், “(சண்டையில்) அவனை நான் கொன்றுவிட்டால்..?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “அவன் நரகம் செல்வான்” எனத் தெரிவித்தார்கள். (முஸ்லிம் -225)

இதன் மூலம் படிப்பினை என்னவென்றால் நம்முடைய உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. நாம் இந்தியர் என்பது நமது உரிமை என்பது மட்டுமல்ல. இந்திய சுதந்திரத்திற்காக அதிகம் பாடுபட்டவர்கள் நாம் தான். 1975 டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். “இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்த து என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்திய மண்ணில் அனைத்து உரிமைகளோடும் வாழ மிகவும் தகுயுள்ளவர்களாக நாம் இருக்கிறோம்.

இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமான பூர்வீகமான தொடர்பு     

.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن كثير

 ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும் இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின. நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்... நீண்ட காலம் இந்தியாவில் இருந்த ஹஜருல்அஸ்வத் பிறகு நபிஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஃபாவை புதுப்பித்துக் கட்டும்போது இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தஃப்ஸீர் இப்னு கஸீரில் உள்ளது

விளக்கம்- அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த இலங்கையில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கினார்கள் என்றால் இன்று அது இந்தியாவில் இல்லையே பிறகு எப்படி நாம் அதைப் பற்றிப் பெருமையாகப் பேச முடியும் என்று சிலர் கேட்கலாம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியது வேண்டுமானால் இலங்கையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பல அடையாளச் சின்னங்கள் இன்றும் இந்தியாவில் தான் உள்ளன. உதாரணமாக இராமேஸ்வரத்தில் உள்ள  ராமர் பாலம்  என்பது இன்று வரை ஆதம் பாலம் என்றே இந்திய வரை படங்களில் உள்ளது. சேது சமுத்திரத் திட்டம், சேதுபதி மன்னர்கள் என்றெல்லாம் கூறும்போது அந்த சேது என்பது நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஷீத் அலைஹிஸ்ஸலாம் என்பதிலிருந்து மருவி வந்ததாகும். ஹாபீல், காபீல் உடைய அடக்கஸ்தலம்  இராமேஸ்வரத்தில் உள்ளது என்பதையும் நாம் அறிவோம். 

عن ابن عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام ( وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريحا الهند هبط بها آدم عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)

 அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலை அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. 

  عن علي  رضي الله عنهما قال: خير واديين في الناس وادي بكة وواد بالهند الذي هبط به آدم ومنه يؤتى بالطيب الذي تطيبون به (كنز العمال

இரண்டு இடங்கள் சிறந்ததாகும். 1.மக்காவின் பள்ளத்தாக்கு 2.இந்தியாவில் ஆதம் அலை இறங்கிய பள்ளத்தாக்கு. அங்கிருந்து தான் நீங்கள் தடவிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள் கொண்டு வரப்படுகின்றன.  

ஆதம் (அலை) இறங்கிய இடம் பற்றி வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடும் செய்தி

இந்த உலகின் முதல் மனிதரும், முதல் முஸ்லிமுமான நபி ஆதம் அலை இந்த பூமியில் அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தை ஒட்டியுள்ள இலங்கையின் ஸரந்தீப் எனும் மலையில் தான் இறக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடுகிறார். இவர் ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் பயணி ஆவார். இவர் மொராக்கோவைச் சேர்ந்தவர் இங்கிருந்து புறப்பட்டு சுமார் 24 வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து            

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (69)النمل -  قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ (20)العنكبوت

என்ற வசனங்களுக்கேற்ப இந்த பூமியின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து தனது அனுபவத்தை ரஹீலா என்ற பெயரில் நூலாக எழுதினார். அதில் அவர் குறிப்பிடும்போது நாங்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியதாக கூறப்படும் ஸரந்தீப் எனும் மலையை பார்த்தோம். அது கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமாக இருந்தது. அதை கடலில் இருந்து நாங்கள் பார்த்த போது எங்களுக்கும் அதற்கும் இடையில் 9 நாட்கள் தொலை தூரம் இருந்த து. எப்படியோ அதில் நாங்கள் ஏறிய போது எங்களுக்கும் தாழ்வாக ஒரு மேகம் இருந்தது. அம்மலையில் சில மரங்கள் இருந்தன. அதன் இலைகளோ பூக்களோ உதிர்வதில்லை. அங்கு ஃபஸீஹ் என்றொரு இடம் உள்ளது.அங்குள்ள ஒரு உயரமான கரும்பாறையில் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புனிதப் பாதங்கள் சுவடுகள் காணப்பட்டன. அந்த இடம் மட்டும் சிறிது பள்ளமாக காட்சியளித்தது              

நூல் – துஹ்ஃதுன் னளாயிர், புன்யானுல் மர்சூஸ் பக்கம் 57

நபி ஆதம் அலை அவர்களுக்குப் பின்னால் பல நபிமார்கள் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கலாம்

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الَعَزِيزُ الْحَكِيمُ (4)ابراهيم –

 وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا (36)النحل – 

  என்ற வசனங்களின் படி ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் நபிமார்களை அனுப்பாமல் இருக்கவில்லை என்று அல்லாஹ் கூறியுள்ளான். தமிழ் மிகவும் பழமையான மொழியாகும். நிச்சயமாக தமிழ் மொழியிலும் பல நபிமார்கள் வந்திருக்கலாம் என்பதை மேற்படி வசனங்கள் உணர்த்துகிறது.                                                  

இந்தோனோஷியாவுக்கு அடுத்து உலகில் அதிகமான மஸ்ஜித்கள் இந்தியாவில் தான் உள்ளன

உலக நாடுகளில் முதலிடத்தில் இந்தோனோஷியாவில் சுமார் 7,40,000 ஏழு இலட்சத்து நாற்பதாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன. அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் ஆறு இலட்சம் மஸ்ஜித்கள் உள்ளன. மூன்றாவதாக பாகிஸ்தானில் சுமார் மூன்று இலட்சம் மஸ்ஜித்கள் உள்ளன. நான்காவதாக பங்களாதேஷில் சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன. ஐந்தாவதாக எகிப்தில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன.  இப்படியாக பட்டியல் உள்ளது. சவூதியில் 94,000 மஸ்ஜித்கள் மட்டுமே உள்ளன.   

                                             

கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்து வழியாக இஸ்லாத்தின் வருகை

தென்னிந்தியாவில் இருந்து சில அனாதைச் சிறுவர்களும் சில விதவைப் பெண்களும் ஒரு பாய் மரக் கப்பலில் அரபு தேசத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த கப்பல் சிந்து மாகாணத்தை ஒட்டிய கடல் பகுதி வழியாகத்தான் அரபு தேசத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது சிந்துவைச் சேர்ந்த சில கொள்ளைக்காரர்கள் அதனைத் தாக்கி முஸ்லிம் பெண்களையும் சிறுவர்களையும் கடத்திச் சென்று விட்டார்கள். அரபு தேசத்தை நோக்கி வந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு இப்படியொரு கொடுமை நடந்த விபரம் அப்போதைய அரபு தேசத்தின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸபுக்கு தெரிந்தவுடன் அவர்களை விடுவிக்கும்படி சிந்து ராஜாவுக்கு கடிதம் எழுதினார். கடல் கொள்ளையர்கள் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று ராஜா பதில் எழுதி விட்டார். இந்த பதிலுக்குப் பின் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் நிர்பந்தமாக சிந்துவை நோக்கி படையை அனுப்ப நேர்ந்தது முதல் இரண்டு படையெடுப்பிலும் முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர். மூன்றாம் படையெடுப்பில் முஸ்லிம் ராணுவத்திற்கு பதினேழு வயது நிறைந்த முஹம்மது இப்னு காசிம் தளபதியாக இருந்தார். அவரின் வீரத்தாலும், யுக்தியாலும் முஸ்லிம்  ராணுவத்திற்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான். முஸ்லிம்கள் சிந்து முழுவதையும் கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு சிந்து மக்கள் அவர்களின் அரசர்கள் மூலமாக பல்வேறு அநீதிகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் முஸ்லிம்கள் ஆட்சி செய்த விதம் அவர்களுக்கு மாபெரும் ஆறுதலாக இருந்தது. முஸ்லிம்களின் இந்த அனுகுமுறையைக் கண்டு இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். மதவிஷயத்தில்யாரையும் நாங்கள் கட்டாயம் செய்யவில்லைவிரும்பியவர் மட்டும் இஸ்லாமை ஏற்கலாம் என முஹம்மது இப்னு காசிம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். இதற்குப் பின்பு இஸ்லாம் இன்னும் வேகமாக வட மாநிலங்களில் பரவியது. இதில் அதிகம் பயனடைந்தவர்கள் ஜாட் வகுப்பைச் சார்ந்தவர்கள் தான்.  இவ்வாறு சிந்து பஞ்சாப் மற்ற மாநிலங்களிலும் இஸ்லாம் பரவியது        

நபி ஸல் அவர்களின் காலத்திற்கு அடுத்த காலத்தில் இந்தியாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து வரலாறு

இந்த நாட்டில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டு வந்ததில் அரபு முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் அரபிக்கடல் வழியேவணிகர்களாக  தென்னிந்தியாவுக்கு கேரளாவுக்கு முஸ்லிம்கள் வந்த போது அவர்களின் நேர்மை நாணயம் இதையெல்லாம் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றனர். அதற்கு முன்பே அதாவது நபி ஸல் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்கலூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.                                                            

 என்ற வார்த்தை தான் மருவி கேரளா என்று மாறியதாக கூறுவர் ஏனெனில் அப்போதே அந்த பூமி செழிப்பானخير الله 

பூமியாக இருந்ததால் வளம் நிறைந்த அல்லாஹ்வின் பூமி என்று கூறிஅதுவே கேரளா என மாறியதாம். 

இன்றைக்கும் கேரளாவை GOD’S OWN COUNTRY என்பர். அது அந்த அரபு வார்த்தையின் பொருளாகும்

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் இவ்வளவு நெருங்கிய இருந்ததால் தான் இந்திய மண்ணை அந்நியர்களிடம் விட்டுக் கொடுக்க முஸ்லிம்கள் இடம் கொடுக்கவில்லை

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த நேரத்தில் மூத்த ஆலிம்களுக்குள் உரையாடல் நடைபெற்றது நாமும் பாகிஸ்தானுக்குச் சென்று விடுவோம். இனிமேல் அது தான் நமக்குப் பாதுகாப்பான ஒரு நகரம் என்று சில ஆலிம்கள் முடிவெடுத்த நேரத்தில் ஹுசைன் அஹ்மது மதனீ ரஹ் மற்றும் அவர்களுடன் இருந்த நம்முடைய முன்னோடிகளான ஆலிம்கள் அதை மறுத்து நாம் எதற்காக இந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டும். இது நாம் பிறந்த மண். நாம் பிறந்த நாடு. கடைசி வரை இங்கே இருந்து நாம் போராட வேண்டும் என்று அறிவுரை கூறி அந்தச் செய்தியை மக்களிடம் பரப்பினார்கள். அதாவது நம்மை யாரும் நிர்பந்தமாக வெளியேற்றாமல் நாம் இங்கிருந்து வெளியேறக் கூடாது என்ற கொள்கையை மக்களிடம் பரப்பினார்கள்.    

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள்

 ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்கள் தன் கையை தொட்டு விட்டால் அந்தக் கையைக் கழுவாமல் எந்தப் பொருளையும் தொட மாட்டார்கள் எனவே தான் ஒரு ஆங்கிலேயன் கூறுவான் மஹ்மூதுல் ஹஸன் அவர்ளை மால்டா சிறையில் எந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்தார்கள் என்பதை அவர்கள் வஃபாத்தான பின் குளிப்பாட்டும்போது தான் உணர முடிந்தது.  அதாவது அவர்களை குளிப்பாட்டும்போது இடுப்பில் சதையே இல்லை அது பற்றி அவருடன் சிறையில் இருந்த ஹுஸைன்அஹ்மத் மதனீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவரது இடுப்பில் சூடு வைப்பார்கள் அதனால் தான் அவரது இடுப்பில் சதையே இல்லை என்றார்கள்  

காந்தியை பிரபலப்படுத்தியது மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் 

காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தது மெளலானா அப்துல் பாரீ ரஹ் அவர்கள்

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் ஏழு மாதம் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களையும், அவர்களுடன் இருந்த நால்வரையும் 1920 ஜூன் 20- ம் தேதி ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் மால்டா விலிருந்து மும்பை துறைமுகத்திற்கு அழைத்து  வரப்பட்டனர். அப்போது  ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்களை வரவேற்பதற்காக பல்வேறு ஆலிம்கள், முக்கியத்தலைவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். அவ்வாறு வருகை புரிந்த தலைவர்களில் காந்திஜியும் ஒருவர்.பிறகு மும்பையில் ஒரு அறையில் காங்கிரஸ் தலைவர்களும், மற்றும் உலமாக்களும் இந்தியாவின் நிலை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இனிமேல் அகிம்சை வழியில் போராட வேண்டும் என்பது ஆலோசனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அகிம்சைப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஷைகுல் ஹிந்த் அவர்கள் பகலில் தன்னை வரவேற்க வந்தவர்களில் இளம் ஃபாரிஸ்டர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கே ?  என்று கேட்டு அவரையே அதாவது காந்தியையே தலைவராக நியமிக்கச் சொன்னார்கள்.  அதன் பின்பு  காந்தியை தலைவராக அறிமுகப் படுத்தவும் மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கவும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒருகூட்டத்தில் மெளலானா அப்துல் பாரீ ஃபரங்கீ மஹல்லீ ரஹ் அவர்கள்தான் முதலில் காந்தியை மாகாத்மா என பட்டம் சூட்டி அழைத்தார்கள் அன்று முதல் அப்பெயர் பிரபலமடைந்தது. 

சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி உதவி செய்ததில் முஸ்லிம் பிரமுகர்களின் மாபெரும் பங்களிப்பு. 

 போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்த போது  ஆச்சரியத்தால் விரிந்தது.காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது  பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக் காசோலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார்.  ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் 

மருத நாயகம் என்னும் கான் சாகிபு

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர். இவரது உடலும் தலையும் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்டது. அவரது தலை அடக்கம் செய்யப்பட்ட இடம் மதுரை அருகே சம்மட்டி புரத்தில் உள்ளது.

இந்தியாவின் முதல் தேசிய கீதம்    கவிஞர் அல்லாமா இக்பால்  அவர்கள் பாடியதாகும்

   நாடு விடுதலையான நேரத்தில் 1947  ஆகஸ்டு 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக 12 மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் தற்போதுள்ள ‘ஜனகனமண’ அல்ல: தேசிய கீதமாக ஒலித்தது அல்லாமா இக்பாலின் ’ஸாரே ஜஹான்ஸே அச்சா   ஹிந்துஸ்தான் ஹமாரா ‘எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை இயற்றியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அந்தப் பாடல் ஓரம் கட்டப்பட்டது

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திப்பு இருந்தார். இந்திய அரசர்களும், மன்னர்களும் திப்புவுக்கு நேசக்கரம் நீட்டியிருந்தால் ஆங்கிலேய ஆட்சி சுமார் 100 வருடம் முன்பே முடிவுக்கு வந்திருக்கும்.  ஆனால் நம் நாட்டு குறுநில மன்னர்கள் வெள்ளையர்களின் வரவேற்பாளர்களாக இருந்தார்கள் திப்புவின் சுதந்திர உணர்வுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சதியில் சிக்கி இருந்தார்கள். ஆங்கிலேயர்களையும், ஆங்கில மொழியையும், அவர்களின் அரசில் பணிபுரிவதையும் அதிகம் வெறுத்து ஒதுக்கியவர்கள் முஸ்லிம்கள் தான். அந்த ஆங்கிலேய வெறுப்பு சுதந்திரத்திற்குப் பின்பும் தொடர்ந்ததால் தான் படிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். எந்த ஆலயங்களிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரம் நடைபெறவில்லை. ஆனால் ஒவ்வொரு மஸ்ஜிதிலும்  ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடைபெற்றன. ஆலிம்கள் ஜும்ஆ மேடைகளில் மார்க்கத்தை மட்டும் பேசாமல் சுதந்திரத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினர். அதனால் தான் ஆங்கிலேயர்கள் பெருமளவில் ஆலிம்களைக் கொன்றனர். மூவாயிரம் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன. மஸ்ஜிதில் தொழுகை நடைபெறும்போதே ஆங்கிலேயர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மஸ்ஜிதின் சுவர்களையும் துளைத்துக் கொண்டு உள்ளே இருந்தவர்களை குண்டுகள் பதம் பார்த்த வரலாறும் உண்டு  இப்படிப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்களை பின்வரும் சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பாசிச சக்திகளும், பாசிச ஊடகங்களும் மறைத்து வருகின்றன. வெள்ளையர்களுக்கு ஏவலாளிகளாக இருந்தவர்கள் இன்று தேசியவாதிகளாக வேடமிடுகிறார்கள்.ஆங்கிலேயர்களுக்கு அன்று அடிபணிந்து போகாமல் சுதந்திர உணர்வுக்கு முன்னோடிகளாக இருந்த முஸ்லிம்கள் இன்று சுதந்திரத்திற்குப் பிறகு நிமிர்ந்து நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.                                                          

சுதந்திரப் போராட்டத்திற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்திய காயிதே மில்லத் ரஹ்

தாயகம் மீது படையெடுத்து  வருபவர்கள் முஸ்லிம்களாயினும் துரத்தும் பரம்பரை நாங்கள் என முழங்கி காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் காயிதே மில்லத் அவர்கள். 

சுதந்திரப் போராட்டம் என்பது  200 வருடப் போராட்டம். அதில் முதல் 150 வருடங்கள் முஸ்லிம்கள் மட்டுமே போராடினார்கள்.

கிழக்கிந்திய கம்பெனி 1803இல் செங்கோட்டையில் வெள்ளையர்கள் கொடியை ஏற்றியவுடனேயே மெளலானா, ஷாஹ் அப்துல் அஸீஸ் தஹ்லவீ (ரஹ்) அவர்கள் துணிச்சலான மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) ஒன்றை வெளியிட்டார்கள்.

  “இந்தியா போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நாடாக (தாருல் ஹர்ப்) ஆகிவிட்டது. “வெள்ளையனேவெளியேறு” எனும் அறப்போரைத் தொடங்க வேண்டும்.வெள்ளையரின் ஆட்சி, அதிகாரம், மொழி, கலாச்சாரம், தயாரிப்புகள் என அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்”என்ற அவர்களின் ஃபத்வா வெளியானதுதான் தாமதம்!நாடு முழுக்க ஜும்ஆ மேடைகளில் அது ஒலிக்கத் தொடங்கியது.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் முஸ்லிம்களின் பங்கு

  இந்திய விடுதலையின்போது, இந்தியர்களுக்கெனச் சொந்தமான அரசியல் சட்டம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பிரிட்டன் கேபினட் தூதுக்குழு பரிந்துரைபேரில் 389 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இராஜேந்திர பிரசாத் தலைமையில் உருவாக்கப்பட்ட இச்சபையில் ஜவஹர்லால் நேரு, இராஜாஜி போன்ற தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். இச்சபையில் 80-க்கும் அதிகமான முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்தனர்.  ஏறத்தாழ மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்து அரசியலமைப்புச்சட்டத்தை இச்சபை உருவாக்கியது. பின்னர் அதற்கு இறுதிவடிவம் கொடுக்க சட்டமேதை Dr.அம்பேத்கர் தலைமையில் வரைவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. 26.11.1949இல் இக்குழு இறுதி வடிவம் கொடுத்து முடித்தது. இதில் 22 பகுதிகள், 315 பிரிவுகள், 12 அட்டவணைகள் இருந்தன.இதை உருவாக்கும் பணியில் மெளலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபீக் அஹ்மத் கித்வாய், K.M. முன்ஷி, சஅதுல்லாஹ் போன்ற முஸ்லிம் பெருமக்கள் 7 பேரும் பங்கு வகித்தனர்

நிர்பந்தம்

 07-08-2026

ஸஃபர் -22


بسم الله الرحمن الرحيم  

        நிர்பந்தங்களுக்கும் வரையறை உண்டு



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


வணக்கம் என்பதை வார்த்தையால் கூட  அல்லாஹ் அல்லாத  இன்னொருவருக்கு  நாங்கள் கூற மாட்டோம் என்ற உயர்ந்த கொள்கை உடையவர்கள் நாம். ஆனால் தாய் மண்ணை வணங்குகிறோம் என்ற பொருளைக் கொண்ட வந்தே மாதரம் என்ற  வார்த்தையுடன் துவங்கும் பாடல் வரிகளை  நிர்பந்தம் என்பதைக் காரணம் காட்டி அதைப் பாடலாமா? மேலும்  ஃபர்ளான தொழுகையை சக்திக்கு இயன்ற வரை நின்று தான் தொழ வேண்டும். நின்று தொழ முடியா விட்டால் சேரில் அமர்ந்து தொழுவதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை ஷரீஅத் நிர்ணயித்துள்ளது. அவ்வாறிருக்க சாதாரணமான காரணங்களை வைத்துக் கொண்டு சேரில் அமர்ந்து தொழலாமா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை தான் இன்றைய ஜும்ஆ தலைப்பாகும்.                                                    

நிர்பந்தம் காரணமாக அனுமதிக்கப்பட்ட எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவற்றை முதலில் காண்போம்

عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ (ابن ماجة) كِتَاب الطَّلَاقِ

தங்கம், பட்டாடை ஆண்கள் அணியக்கூடாது என்று தடுத்த போதிலும் நிர்பந்தம் காரணமாக அனுமதித்தார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي إِحْدَى يَدَيْهِ ثَوْبٌ مِنْ حَرِيرٍ وَفِي الْأُخْرَى ذَهَبٌ فَقَالَ إِنَّ هَذَيْنِ مُحَرَّمٌ عَلَى ذُكُورِ أُمَّتِي حِلٌّ لِإِنَاثِهِمْ (ابن ماجة) بَاب لُبْسِ الْحَرِيرِ وَالذَّهَبِ لِلنِّسَاءِ- كِتَاب اللِّبَاسِ 

நபி ஸல்அவர்கள் ஒருநாள் எங்களிடம் வந்தார்கள் அவர்களின் ஒரு கையில் பட்டாடையும் மற்றொரு கையில் தங்கமும் இருந்த நிலையில் இந்த இரண்டும் என் உம்மத்தைச் சார்ந்த ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது என..

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ أَنَّ جَدَّهُ عَرْفَجَةَ بْنَ أَسْعَدَ قُطِعَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَ أَنْفًا مِنْ ذَهَبٍ (ابوداود) بَاب مَا جَاءَ فِي رَبْطِ الْأَسْنَانِ بِالذَّهَبِ-كِتَاب الْخَاتَمِ عَنْ أَنَس بْنَ مَالِكٍ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَلِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي قَمِيصَيْنِ مِنْ حَرِيرٍ مِنْ وَجَعٍ كَانَ بِهِمَا حِكَّةٍ-(ابن ماجة)  بَاب مَنْ رُخِّصَ لَهُ فِي لُبْسِ الْحَرِيرِ- كِتَاب اللِّبَاسِ

அர்ஃபஜா என்ற சஹாபியின் மூக்கு ஒரு போரில் துண்டிக்கப்பட்டது. அவர் வெள்ளியினால் மூக்கு செய்து அணிந்தார். நாளடைவில் அது அழுகியது. அவரிடம் நபி ஸல் தங்கத்தால் மூக்கு செய்து அணிய ஏவினார்கள்.. குறிப்பு - அந்தக் காலத்தில் தங்கத்தால் மூக்கு செய்தால் மட்டுமே நீடிக்கும் என்ற நிர்பந்தம் இருந்தது

உணர்ச்சி மேலீட்டால் தன் நிலை மறந்து ஒருவர் குஃப்ருடைய வார்த்தையை உபயோகித்து விட்டால் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்

عن أنس رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَأَيِسَ مِنْهَا فَأَتَى شَجَرَةً فَاضْطَجَعَ فِي ظِلِّهَا قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا قَائِمَةً عِنْدَهُ فَأَخَذَ بِخِطَامِهَا ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ اللَّهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ (مسلم -كِتَاب التَّوْبَة

அல்லாஹ் ஒருவரின் தவ்பாவை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்பதை கீழ்காணும்  உதாரணத்தைக் கூறி நபி (ஸல்) விபரிக்கிறார்கள். உங்களில் ஒருவர் ஒரு வனாந்தரத்தில் வாகனத்தில் பயணித்த நிலையில் திடீரென அவரது வாகனம் காணாமல் ஆகி விட்டது. அதில் தான் அவரது உணவு தண்ணீர் என அனைத்தும் இருக்கும் நிலையில் அவர் அதைத் தேடி மிகவும் அலைந்து கடைசியில் நிராசையாகி ஒரு மரத்திற்குக் கீழே படுத்தார். திடீரென அவரது வாகனம் அனைத்துப் பொருட்களுடன் அவருக்கு முன்னால் வந்து நின்றது அவர் அதைக் கண்டவுடன் சந்தோஷ மிகுதியால் யாஅல்லாஹ் நீ எனது அடியான் நான் உனது ரப்பு என்று கூறி விட்டார். அவருக்கு எந்த அளவுக்கு சந்தோஷம் இருந்திருந்தால் மனதில் ஈமான் உள்ள நிலையிலும் வார்த்தை தடுமாற்றத்தால் இந்த வார்த்தையைக் கூறியிருப்பாரோ அவரைவிட அல்லாஹ் தன்அடியான் திருந்தி தவ்பா செய்யும்போது மகிழ்கிறான்.                                        

எதிரிகளிடம் சிக்கிய முஃமின் நிர்பந்தம் காரணமாக உயிருக்கு பயந்து குஃப்ரு வார்த்தை கூறினால்

مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (106النحل) عَنْ أَبِي عُبَيْدَة مُحَمَّد بْن عَمَّار بْن يَاسِر قَالَ أَخَذَ الْمُشْرِكُونَ عَمَّار بْن يَاسِر فَعَذَّبُوهُ حَتَّى قَارَبَهُمْ فِي بَعْض مَا أَرَادُوا فَشَكَا ذَلِكَ إِلَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " كَيْف تَجِد قَلْبك؟" قَالَ مُطْمَئِنًّا بِالْإِيمَانِ قَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " إِنْ عَادُوا فَعُدْ "(وَلِهَذَا اِتَّفَقَ الْعُلَمَاء عَلَى أَنَّ الْمُكْرَه عَلَى الْكُفْر يَجُوز لَهُ هذا وَيَجُوز لَهُ أَنْ يَأْبَى كَمَا كَانَ بِلَال رَضِيَ اللَّه عَنْهُ يَأْبَى عَلَيْهِمْ ذَلِكَ)(تفسير ابن كثير)

அம்மார் ரழி அவர்களை எதிரிகள் சிறைப் பிடித்த போது அவரைக் கடுமையாக வேதனை செய்தார்கள். அவர் வேறு வழியின்றி அவர்கள் நாடிய (நிர்பந்தித்த) சில வார்த்தைகளைக் கூறும் நிலைக்கு நெருங்கி விட்டார். இது விஷயமாக அந்த சஹாபி நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் உனது உள்ளத்தை அப்போது நீ எப்படி பெற்றுக் கொண்டாய் என்று கேட்டார்கள். அதற்கு அந்த சஹாபீ என் உள்ளம் ஈமானால் நிம்மதி பெற்றிருந்தது என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் மீண்டும் உனக்கு அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டு மற்றொரு முறையும் நீ அந்த வார்த்தையை கூறினாலும் தவறில்லை என்று கூறினார்கள். இதை வைத்து இமாம்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மனதால் முஃமினாக இருக்கும் ஒருவர் குஃப்ருடைய வார்த்தையைக் கூறி ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் தவறில்லை என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் பிலால் ரழி அவர்களைப் போன்று உயிரே போனாலும் நான் அந்த வார்த்தையைக் கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருப்பது அவரது அந்தஸ்தை அதிகப்படுத்தும். -  

போட்டோ உருவப்படம் தான் ஷிர்க் உடைய அஸ்திவாரம் என்பதால் அதை அடியோடு ஒழிப்பதற்காக 

இஸ்லாம் போட்டோவை தடை செய்கிறது நிர்பந்தம் இருந்தாலே தவிர...

عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَا رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَاهُنَا فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ (مسلم) 

  நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் அலை குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதாக வாக்களித்திருந்தார்கள் ஆனால் அந்த நேரம் வந்த பிறகும் ஜிப்ரயீல் அலை வரவில்லை. (அதற்கான காரணம் தெரியாமல் மிகவும் கவலையில் இருந்த) நபி ஸல் அவர்கள் தன் கையில் இருந்த குச்சியைக் கீழே போட்ட படி அல்லாஹ்வோ அவனது தூதர்களோ (மலக்குகளோ) ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள் (ஆனால் இன்று என்ன ஆகி விட்டது என்று தெரியவில்லையே) என்று கூறினார்கள். இந்நிலையில் நாய்க்குட்டி கட்டிலுக்குக் கீழே இருந்த து. உடனே ஆயிஷா ரழி அவர்களிடம் இது எப்போது வந்த து என்று கேட்க எனக்குத் தெரியாது என அவர்கள் பதில் கூறினார்கள். உடனே நபி ஸ்ல அதை வெளியேற்ற உத்தரவிட்டார்கள். அதன் பின்பு ஜிப்ரயீல் அலை வந்தார்கள்.  அப்போது நபி ஸல் அவர்கள் நீங்கள் என்னிடம் வருகை தருவதாக வாக்களித்திருந்தீர்கள் உங்களுக்காக நான் காத்திருந்தேன் நீங்கள் வரவில்லையே என்று கூற, அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள் என்னை அந்த நாய் தடுத்து விட்டது. உருவப்படமும் நாயும் இருக்கும் வீட்டில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று கூறினார்கள்.                                                               

பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களிலும், குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் அரசுத் துறைகளிலும், மற்றும் இதுபோன்றவைகளில் போட்டோ தவிர்க்க முடியாததாகும். எனினும் இன்று சோப்பு முதல் சீப்பு வரை எந்தப்பொருள் வாங்கினாலும் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆகவே நாம் அந்தப் பொருட்களை வாங்கிய பின்பு அதன் மேல் உறைகளை உடனே அப்புறப்படுத்தி குப்பைக்கூடையில் போடலாம். உருவப்படங்கள் குப்பையில் அல்லது காலில் மிதிபடும் வகையில் இருந்தால் தவறில்லை.                           

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவோ பணம் கொடுத்தால் அது இலஞ்சம் அல்ல

الرِّشْوَة مَا يُعْطَى لِإِبْطَالِ حَقّ أَوْ لِإِحْقَاقِ بَاطِل أَمَّا إِذَا أُعْطِيَ لِيُتَوَصَّل بِهِ إِلَى حَقّ أَوْ لِيَدْفَع بِهِ عَنْ نَفْسه ظُلْمًا فَلَا بَأْس بِهِ -رُوِيَ أَنَّ اِبْن مَسْعُود رضي الله عنه أُخِذَ بِأَرْضِ الْحَبَشَة فِي شَيْء فَأَعْطَى دِينَارَيْنِ حَتَّى خُلِّيَ سَبِيلُهُ (بيهقي) وَرُوِيَ عَنْ جَمَاعَة مِنْ أَئِمَّة التَّابِعِينَ قَالُوا: لَا بَأْس أَنْ يُصَانِع عَنْ نَفْسه وَمَاله إِذَا خَافَ الظُّلْم (كنز العمال) (عون المعبود) (تحفة الاحوذي) (شرح السنة) (تفسير سنن أبي داود) )شرح ابن ماجة للسيوطي

இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் அபீசீனியாவில் அநியாயமாக சிறை பிடிக்கப்பட்டார்கள். அப்போது இரண்டு தீனார்கள் கொடுத்தார்கள் அதனால் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். தாபிஈன்களின் பலரின் கருத்துப்படி தனது உயிருக்கோ உடைமைக்கோ வேண்டுமென்றே அநியாயம் ஏற்படுவதை பயந்தால் அப்போது நிர்பந்தம் காரணமாக இலஞ்சம் தருவது கூடும் என்று கூறியுள்ளனர். நூல்- ஷரஹ் இப்னுமாஜா

ஆனால் நிர்பந்தம் இன்றி தன் காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக கொடுத்தால் அது இலஞ்சம். அது பாவம். உதாரணமாக அரசிடம் இருந்து பெற வேண்டிய ஒரு ID எப்படியும் வந்து விடும் ஆனால் சற்று தாமதம் ஆகும் என்பதற்காக இலஞ்சம் கொடுத்து அதை சீக்கிரமாக அடைய முயற்சிப்பது போன்ற செயல்கள் பாவமானதாகும்.

 சிகிச்சைக்காக ஆண் டாக்டரிடம் செல்லவேண்டிய நிர்பந்தம் பெண்களுக்கு ஏற்பட்டால்..

المشروع للمرأة أن تعالج عند طبيبة مسلمة فإن لم توجد فعند امرأة غير مسلمة فإن لم توجد طبيبة فتعالج عند طبيب مسلم عند الضرورة وإن لم يمكن فطبيب غير مسلم فيجوز لها أن تذهب بشروط الأول أن يكون معها محرم لها لقوله عليه السلام:لا يخلون رجل بامرأة إلا مع ذي محرم -الثاني: أن لا يرى منها إلا بقدر الحاجة فإذا احتاجت إلى الكشف على عين أو سِنّ فتُبدي ما يحتاج إلى كشف (فتاوي العامة) النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُبْرِزْ فَخِذَكَ وَلَا تَنْظُرَنَّ إِلَى فَخِذِ حَيٍّ وَلَا مَيِّتٍ(ابوداود

ஒரு பெண் முடிந்த வரை முஸ்லிமான பெண் டாக்டரிடம் சிகிச்சை செய்வது நல்லது. அது முடியா விட்டால் முஸ்லிம் அல்லாத பெண் டாக்டரிடம் சிகிச்சை செய்யலாம். அதுவும் முடியாத நிர்பந்த நிலையில் முஸ்லிமான ஆண் டாக்டரிடம் செல்லலாம். அதுவும் முடியாத நிர்பந்த சூழ்நிலையில் முஸ்லிம் அல்லாத ஆண் டாக்டரிடம் செல்ல நேரிட்டால் மஹ்ரமுடன் செல்ல வேண்டும். காட்ட வேண்டிய உறுப்பை மட்டும் காட்ட வேண்டும். மற்ற உறுப்புகளை மூடிக் கொள்ள வேண்டும்.                                          

வங்கியுடன் தொடர்பு ஒரு நிர்பந்தம்-

لا يجوز للمسلم أن يودع أمواله في البنوك الربوية، وكذا تحويل راتبه عليها، لما في ذلك من إعانتها على الاستمرار في العمل وإقرار ما هي عليه من حرب الله، إلا إذا اضطر المرء لذلك، فإن الضرورة تبيح المحظور، ومثال الاضطرار: الخوف على المال من الضياع، أو الإلزام من جهة العمل بتحويل الراتب على هذا البنك ونحو ذلك، وينبه إلى أنه في حالة الاضطرار يوضع المال ويُحول الراتب على الحساب الجاري، (فتاوي الشبكة الاسلامية)

வீட்டில் இருந்தால் பணத்துக்கு பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலையில் வங்கியில் சேமிப்பது கூடும். எனினும் அதன் மூலம் வருகிற வட்டியை நன்மையை நாடாமல் யாருக்கேனும் தந்து விட வேண்டும். வண்டி இன்ஸூரன்ஸ் என்பதும் ஒரு நிர்பந்தம் எனினும் அல்லாஹ்வின் விதிப்படி ஏதேனும் விபத்து ஏற்பட்டு  நமக்கு அதிகப்படியான பணம் வந்தால் நாம் கட்டிய தொகை அளவுக்கு மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை நன்மையை நாடாமல் யாருக்கேனும் தந்துவிட வேண்டும். அதுபோல் P.F பணத்தில் அதாவது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அரசாங்கமே பிடித்தம் செய்து ஓய்வு பெறும்போது திருப்பித்தரும் பணத்தில் நமக்குரிய தொகை எவ்வளவோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை யாருக்கேனும் தந்து விட வேண்டும். Fixed deposit, L.I.C போன்றவையும் கூடாது. ஒருவர் கடந்தகாலத்தில் மார்க்க அறிவின்மையால் அதில் இணைந்திருந்தால் அதிலிருந்து நீங்குவதுடன் வரக்கூடிய பணத்தில் அவர் செலுத்திய தொகை போக மீதியை யாருக்கேனும் நன்மையை நாடாமல் தந்து விட வேண்டும்.                                                                   

 தொழில் தொடங்க  அல்லது வீடு கட்ட நினைக்கும் சிலர் லோன் வாங்கினால் தானே என்னால் வீடு கட்ட முடியும் தொழில் தொடங்க  முடியும் இல்லை யென்றால் என்னால் எப்படி வீடு கட்ட முடியும். தொழில் தொடங்க  முடியும்  என்று கூறுவர். முடிந்த வரை வட்டியை விட்டும் விலகி இருக்க நினைத்தால் அல்லாஹ் வழியை ஏற்படுத்துவான் 

ومن ترك شيئا لله عوضه الله خيرا منه، قال الله سبحانه: [ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجاً وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لا يَحْتَسِبُ ] (الطلاق: 3)

திருமணம் செய்ய வசதி இல்லை என்று சிலர் கூறிய போது நோன்பு வைக்க நபி ஸல் ஏவினார்கள். தவறு செய்ய அனுமதிக்கவில்லை

قَالَ  رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ (بخاري)

முடியாத நிலையில் அமர்ந்து தொழுவது பற்றி... 

ஃபர்ளான தொழுகைகளை முடிந்த வரை நின்று தான் தொழ வேண்டும்

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238)البقرة عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلَاةِ فَقَالَ صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ (بخاري) بَوَاسِيرُமூலநோய்

இம்ரானுப்னு ஹுஸைன் ரழிஅவர்கள் கூறினார்கள் எனக்கு மூலநோய் இருந்தது. அதற்காக நபி ஸல் அவர்களிடம் (அமர்ந்து) தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் முடிந்த வரை நின்று தொழு. முடியா விட்டால் உட்கார்ந்து தொழு. அதுவும் முடியா விட்டால் படுத்துத் தொழு என்று கூறினார்கள்.

நிற்க முடியாது ஆனால் அமர்ந்து சைக்கினை செய்து ருகூவு, சுஜூது செய்ய  முடியும் என்றிருந்தால் சேரில் அமருவதை விட அவ்வாறு அமர்ந்து சைக்கினை செய்து ருகூவு, சுஜூது செய்வது சிறப்பாகும். அவ்வாறு அமர்ந்த பிறகும் ருகூவு, சுஜூது இயல்பாக செய்ய முடியா விட்டால்  தரையை நோக்கி எவ்வளவு தூரம் குனிய முடியுமோ அவ்வளவு தூரம் தரைக்கு நெருக்கமாக குனிவது சிறப்பாகும்.  இருக்கும் நிலை தான் சிறப்பாகும். காரணம் எப்போது  கியாம் என்பது முடியாமல் ஆகுமோ அப்போது  சஜ்தாவுக்கு நெருக்கமான நிலை தான் சிறப்பானது. 

وَإِنْ عَجَزَ عن الْقِيَامِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ وَقَدَرَ على الْقُعُودِ يُصَلِّي قَاعِدًا بِإِيمَاءٍ وَيَجْعَلُ السُّجُودَ أَخْفَضَ من الرُّكُوعِ كَذَا في فَتَاوَى قَاضِي خَانْ حتى لو سَوَّى لم يَصِحَّ كَذَا في الْبَحْرِ الرَّائِقِ -وَإِنْ كان بِجَبْهَتِهِ جُرْحٌ لَا يَسْتَطِيعُ السُّجُودَ عليه لم يُجْزِئْهُ الْإِيمَاءُ وَعَلَيْهِ أَنْ يَسْجُدَ على أَنْفِهِ وَإِنْ لم يَسْجُدْ على أَنْفِهِ وَأَوْمَأَ لم تَجُزْ صَلَاتُهُ (فتاوي الهندية) -  وإن قدر على القيام وعجز عن الركوع والسجود يومئ قاعدا وهو قاعدا أفضل من الإيماء قائما لكون رأسه فيه أقرب إلى الأرض (فتح القدير)

நபி ஸல் அவர்கள் நஃபிலான தொழுகைகளைக் கூட தங்களின் வயதான காலத்தில் தான் உட்கார்ந்து  தொழுதார்கள். அப்போதும் ருகூவு செய்யும் நேரம் நெருங்கியவுடன் எழுந்து நின்று சுமார் 30, அல்லது 40 ஆயத்துகள் ஓதி விட்டு பிறகு ருகூவு செய்வார்கள்

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي جَالِسًا (وفي رواية قالت لَمْ تَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ اللَّيْلِ قَاعِدًا قَطُّ حَتَّى أَسَنَّ) فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ نَحْوٌ مِنْ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَهَا وَهُوَ قَائِمٌ ثُمَّ يَرْكَعُ ثُمَّ سَجَدَ يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ فَإِذَا قَضَى صَلَاتَهُ نَظَرَ فَإِنْ كُنْتُ يَقْظَى تَحَدَّثَ مَعِي وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ(بخاري) بَاب إِذَا صَلَّى قَاعِدًا ثُمَّ صَحَّ أَوْ وَجَدَ خِفَّةً تَمَّمَ مَا بَقِيَ -  وَقَالَ الْحَسَنُ :إِنْ شَاءَ الْمَرِيضُ صَلَّى رَكْعَتَيْنِ قَائِمًا وَرَكْعَتَيْنِ قَاعِدًا. بخاري

குறிப்பு- உட்கார்ந்து தொழுது கொண்டிருக்கும்போதே சிரமம் குறைந்தால் அப்படியே எழுந்து தொழலாம் என்பதற்கு இது ஆதாரம்

கருத்து-- வயதான காலத்தில் மட்டும் நபி ஸல் அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். அப்போதும் கூட ருகூவுக்கு நெருக்கமான நேரம் ஆகி விட்டால் அதாவது ருகூவுக்கு இன்னும் 30 அல்லது 40 ஆயத்துகள் மிச்சமிருக்கும்போது எழுந்து நின்று அந்த ஆயத்துகளை நின்ற படி ஓதி பிறகு ருகூவு செய்வார்கள். 2-வது ரக்அத்திலும் இதே மாதிரி செய்வார்கள். தொழுகை முடிந்தவுடன் என்னைப் பார்ப்பார்கள் நான் விழித்திருந்தால் மட்டுமே என்னிடம் பேச்சுக் கொடுப்பார்கள். நான் தூங்கி விட்டால் என்னை எழுப்ப மாட்டார்கள்.

சுன்னத்தான தொழுகைகளை நிற்க முடிந்த ஒருவர் உட்கார்ந்து தொழுதால் நன்மை குறையும்

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ الرَّجُلِ وَهُوَ قَاعِدٌ فَقَالَ مَنْ صَلَّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ . .(بخاري) 

உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரில் பாதி நன்மை. படுத்துத் தொழுதால் இன்னும் பாதியாகக் குறையும். இது யாருக்கு என்றால் எவர் நிற்க முடிந்தும் நஃபிலான தொழுகைக்கு உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு என்று கருதி உட்கார்ந்து தொழுவாரோ அவருக்குத் தான். முடியாத நிலையில் அமர்ந்து தொழுபவருக்கு நின்று தொழுத நன்மை உண்டு. 

 وقال سفيان الثوري في هذا الحديث من صلى جالسا فله نصف أجر القائم قال هذا للصحيح ولمن ليس له عذر فأما من كان له عذر من مرض أو غيره فصلى جالسا فله مثل أجر القائم وقال النووي إذا صلى قاعدا صلاة النفل مع القدرة على القيام فهذا له نصف ثواب القائم وأما إذا صلى النفل قاعدا لعجزه عن القيام فلا ينقص ثوابه بل يكون ثوابه كثوابه قائما (عمدة القاري)

ஃபர்ளான தொழுகைகளை நின்று தொழ இயலாத நிலை என்பதற்கு விளக்கம்

إذَا عَجَزَ الْمَرِيضُ عن الْقِيَامِ صلى قَاعِدًا يَرْكَعُ وَيَسْجُدُ هَكَذَا في الْهِدَايَةِ وَأَصَحُّ الْأَقَاوِيلِ في تَفْسِيرِ الْعَجْزِ أَنْ يَلْحَقَهُ بِالْقِيَامِ ضَرَرٌ وَعَلَيْهِ الْفَتْوَى كَذَا في مِعْرَاجِ الدِّرَايَةِ وَكَذَلِكَ إذَا خَافَ زِيَادَةَ الْمَرَضِ أو إبْطَاءَ الْبُرْءِ بِالْقِيَامِ أو دَوَرَانِ الرَّأْسِ كَذَا في التَّبْيِينِ (فتاوي الهندية)

நின்று தொழ முடியவில்லை என்பதன் அளவுகோல். நின்று தொழுதால் நோய் அதிகமாகி விடும் அல்லது நோய் நீங்குவது தாமதமாகி விடும் அல்லது தலை சுற்ற ஆரம்பித்து என்பது போன்ற காரணங்கள் தான்.                          

இலேசான சிரமம் ஏற்படும் என்பதற்காக ஃபர்ளான தொழுகையில் நிற்பதை விட்டு விடக் கூடாது

فَإِنْ لَحِقَهُ نَوْعُ مَشَقَّةٍ لم يَجُزْ تَرْكُ ذلك الْقِيَامِ كَذَا في الْكَافِي وَلَوْ كان قَادِرًا على بَعْضِ الْقِيَامِ دُونَ تَمَامِهِ يُؤْمَرُ بِأَنْ يَقُومَ قَدْرَ ما يَقْدِرُ حتى إذَا كان قَادِرًا على أَنْ يُكَبِّرَ قَائِمًا وَلَا يَقْدِرُ على الْقِيَامِ لِلْقِرَاءَةِ أو كان قَادِرًا على الْقِيَامِ لِبَعْضِ الْقِرَاءَةِ دُونَ تَمَامِهَا يُؤْمَرُ بِأَنْ يُكَبِّرَ قَائِمًا وَيَقْرَأَ قَدْرَ ما يَقْدِرُ عليه قَائِمًا ثُمَّ يَقْعُدَ إذَا عَجَزَ قال شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى هو الْمَذْهَبُ الصَّحِيحُ وَلَوْ تَرَكَ هذا خِفْتُ أَنْ لَا تَجُوزَ صَلَاتُهُ كَذَا في الْخُلَاصَةِ وَلَوْ قَدَرَ على الْقِيَامِ مُتَّكِئًا الصَّحِيحُ أَنَّهُ يُصَلِّي قَائِمًا مُتَّكِئًا وَلَا يُجْزِيهِ غَيْرُ ذلك (فتاوي الهندية) 

சற்று நேரம் தான் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நிற்க வேண்டும். ஒருவரால் தக்பீர் தஹ்ரீமா கட்டிய பின் சிறிது நேரம் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நின்று தொழ வேண்டும். அல்லது தக்பீர் தஹ்ரீமா அளவுக்கு மட்டும் தான் நிற்க முடியும் என்றால் அந்த அளவேனும் நிற்க வேண்டும். இந்த அளவுக்கு முடிந்தும் ஒருவர் உட்கார்ந்து தொழுதால் அவரது தொழுகை கூடாது என்று இமாம்கள் கூறுவர் 

قَالَ شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ : وَإِنْ قَدَرَ عَلَى الْقِيَامِ مُتَّكِئًا ، الصَّحِيحُ أَنَّهُ يُصَلِّي قَائِمًا مُتَّكِئًا ، وَلَا يُجْزِيهِ غَيْرُ ذَلِكَ ، وَكَذَلِكَ إذَا قَدَرَ أَنْ يَعْتَمِدَ عَلَى عَصًا أَوْ كَانَ لَهُ خَادِمٌ لَوْ اتَّكَأَ عَلَيْهِ قَدَرَ عَلَى الْقِيَامِ . (العناية

ஏதேனும் ஒன்றின் மீது சாய்ந்து நிற்க முடியும் என்றிருந்தால் அல்லது பணியாளர் ஒருவர் இவரைத் தாங்கிப் பிடித்த நிலையில் நிற்க முடியும் என்றிருந்தால் அப்படியேனும் நின்று தொழ வேண்டும்.

ஃபர்ளான தொழுகையை நின்று தொழ முடிந்தாலும் உட்கார்ந்து தொழலாம் என வாதிடுபவரின் ஈமான் பறிபோய் விடும்

قال النووي رحمه الله وَأَمَّا الْفَرْض فَإِنَّ الصَّلَاة قَاعِدًا مَعَ قُدْرَته عَلَى الْقِيَام لَمْ يَصِحّ فَلَا يَكُون فِيهِ ثَوَاب بَلْ يَأْثَم قَالَ أَصْحَابنَا وَإِنْ اِسْتَحَلَّهُ كَفَرَ وَجَرَتْ عَلَيْهِ أَحْكَام الْمُرْتَدِّينَ كَمَا لَوْ اِسْتَحَلَّ الرِّبَا وَالزِّنَا أَوْ غَيْره مِنْ الْمُحَرَّمَات الشَّائِعَة التَّحْرِيم (شرح النووي على صحيح مسلم) (عمدة القاري)

வீட்டில் தொழுதால் நின்று தொழ முடியும். வெளியில் தொழுதால் நின்று தொழ முடியாது என்றால் வீட்டில் தொழுவதே சிறப்பு

الْمَرِيضُ إذَا صلى في بَيْتِهِ يَسْتَطِيعُ الْقِيَامَ وإذا خَرَجَ لَا يَسْتَطِيعُ اخْتَلَفَ الْمَشَايِخُ رَحِمَهُمْ اللَّهُ تَعَالَى فيه الْمُخْتَارُ أَنَّهُ يُصَلِّي في بَيْتِهِ قَائِمًا وَبِهِ يُفْتَى هَكَذَا في الْمُضْمَرَاتِ (فتاوي الهندية)   

அதாவது வீட்டில் தொழுதால் ஒருவரால் நின்று தொழ முடியும். ஆனால் பள்ளிக்கு வருகிறேன் என விரும்பி அவர் வந்தால் அதற்காக அவர் நடந்தால் அவர் பலவீனமாகி விடுவார். அதனால் அவர் பள்ளிவாசலில் நிற்க முடியாது என்றிருந்தால் வீட்டில் நின்று தொழுவது நல்லது. 

தமிழகத்தின் தலை சிறந்த ஆலிமான அமானீ ஹழ்ரத் கூறியது

சிறிது சிரமம் இருந்தாலும் நின்று தொழ முயற்சி செய்பவருக்கு மிக விரைவில் சிரமமின்றியே நின்று தொழுவதற்கு அல்லாஹ் அருள் புரிகிறான். ஆனால் சிறிய சிரமத்தை காரணம் காட்டி உட்கார்ந்து தொழுவதற்கு முற்பட்டு விடுபவர்களை கடைசி வரை உட்கார்ந்தே தொழும் நிலைக்கு அல்லாஹ் ஆக்கி விடுகிறான். அமானீ ஹழ்ரத் தனது பெரிய ஹழ்ரத் சரித்திரம் என்ற நூலில் அண்ணல் அஃலா ஹழ்ரத் பற்றி எழுதும் போது அண்ணார் அவர்கள் தனது 93 வயதிலும் கூன் விழுந்த நிலையில் நின்றே தொழுதார்கள் எனக் குறிப்படுகிறார்கள். ஆரணிபாவா கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் தன் 80 வயதுவரை நின்றே தொழுதிருக்கிறார்கள். சேரில் அமர்ந்து தொழும் கலாச்சாரம் வந்த பின்பு உட்கார்ந்து அதில் உட்கார்ந்து தொழுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முற்காலத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களால் நின்று தொழ முடியவில்லையே என்று வருந்தியவர்களாக அமர்ந்து தொழுவார்கள். பிற தொழுகையாளிகளும் இவர்களைக் காணும் போது “பாவம்” நம்மைப் போல இவர்களால் நின்று தொழ முடியவில்லையே என்று பரிதாப ப் படுவார்கள். ஆனால் காலில் சிறிய வலி வந்து விட்டால் போதும் தாங்களும் சிம்மாசனத் தொழுகைக்குத் தகுதி பெற்றவர்கள் என கருதி விடுகின்றனர்.  

சேரில் அமர்ந்து தொழுவதைப் பற்றிய ஃபத்வாக்களில் ஒன்று..

 جواب:والسائل يقرر أنه لا يستطيع الجلوس إلا على كرسى وأنه لا يستطيع الركوع، وفى هذه الحالة يصلى وهو جالس على الكرسى ويومىء للركوع برأسه ويسجد فعلا إن كان يستطيع السجود فإن لم يستطعه أيضا أومأ له برأسه كالركوع وجعل إيxxماءه للسجود أخفض من الركوع وصلاته صحيحة مادام العذر قائما فإن زال عنه المرض وجب عليه أن يصلى وهو قائم بركوع وسجود لعدم وجود العذر حينئذ(فتاوي الازهر

வயதான காலத்திலும் இயல்பாக ருகூவு சுஜூது செய்து தொழுபவர்கள் இருக்கும் வரை அல்லாஹ் இவ்வுலகை அழிக்க மாட்டான்.

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا (سنن الكبري للبيهقي)

இறையச்சமுள்ள இளைஞர்களும் மேய்ந்து திரியும் கால்நடைகளும் வயதான காலத்திலும் இயல்பாக ருகூவு செய்து தொழுபவர்களும் பால் குடிப்பருவத்திலுள்ள குழந்தைகள் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்

சேரில் அமர்ந்து தொழுபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்

சேரில் அமர்ந்து சைக்கினை செய்து தொழும்போது தலையை சிறிது கீழே கொண்டு செல்வது ருகூவு. இன்னும் சற்று கீழே கொண்டு செல்வது சுஜூது. இது அல்லாமல் எந்த அசைவும் தேவையில்லை. சிலர் கைகளை முன் புறமாக கொண்டு செல்வார்கள். அது தவறாகும்.  ருகூவு சுஜூதுக்காக குனியும் போது கைகள் தொடைகளின் மீது தான் இருக்க வேண்டும்.  

வந்தே மாதரம் பாடல் வரிகளைப் பற்றி.....

 அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது, என்று கூறும் குர்ஆன் அதற்கு அடுத்தபடியாக பெற்றோர்களிடம் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டுமென்று கூறி பெற்றோர்களின் முக்கியத்துவத்தை முதன்மைப் படுத்தியிருக்கிறது, எனினும், அந்த பெற்றோர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யுமாறு இணை வைக்குமாறு உத்தரவிட்டால் அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம், என்றும் குர்ஆன் கூறுகிறது. பெற்ற தாயை வணங்கக் கூடாது, என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அப்படியிருக்கும் போது தாய் நாட்டை வணங்கி வழிபட வேண்டுமென்பதை எப்படி இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும்.  வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம் என்பதாகும். அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவதற்குச் சமம். உயிரினும் மேலாக முஸ்லிம்கள் மதிக்கும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கூட கடவுளாகப் போற்றிவிடக்கூடாது, என்று இஸ்லாம் போதிக்கிறது. சூரியன், சந்திரன், பூமி அனைத்தும் மனிதனுடைய பயன்பாட்டுக்காக அல்லாஹ்வால் படைக்கப் பட்ட படைப்புகளே தவிர வணங்குவதற்குத் தகுதியானவை அல்ல, என்பதை இஸ்லாமிய இறைவேதம் திருக்குர்ஆன் அழுத்தமாகக் கூறுகிறது. இந்நிலையில் இந்து மதத் தெய்வங்களை ஒப்பிட்டு பாடப்பட்ட வாந்தே மாதரம் என்ற பாடலை அனைத்து மதத்தினரும் பாட வேண்டுமென்று சொல்வது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட மத சுதந்திரத்திற்கு முரணாக அமைந்துள்ளது.  வந்தே மாதரம் பாடுவதை காட்டயமாக்க வேண்டுமென்பது குறித்து ஓர் எழுத்தாளர் தெரிவிக்கையில் வந்தே மாதரம் எழுதப்பட்டிருக்கும் மொழி வங்காளம். வங்காள மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட மேற்குவங்கமாநிலத்திலேயேஇப்படிஒருநடைமுறைகிடையாது. அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் அங்கேயே இருக்கிறது.  அது இந்து மதசார்பான பாடல் என்கிற விமர்சனம் மற்ற மதத்தினர் மட்டுமின்றி மத அடையாளங்களைத் துறந்தவர்கள், முற்போக்காளர்கள் மத்தியிலும் உள்ளது, என்று கூறியுள்ளார். கவிஞர் இக்பால் அவர்கள் ஸாரேஜஹான்சேஅச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற கீதத்தை இயற்றினார். இந்தப் பாடலின் பொருள் அகில உலகிலும் சிறந்தநாடு எங்கள் இந்தியா என்பதாகும். முஸ்லிம் கவிஞர் பாடிய பாடலில் தேசத்தின் சிறப்பை மட்டுமே பார்க்கிறார். இஸ்லாத்தின் கொள்கை எதையுமே திணிக்கவில்லை, 


என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

நபிகளாரின் பிறப்பு

 21-09-2026 ரபீஉல் அவ்வல் - 7 بسم الله الرحمن الرحيم       நபி (ஸல்) அவர்களுடைய பிறப்பின் அதிசயங்கள் https://chennaijamaathululama.blogspot....