02-10-2026
ரபீஉல் ஆகிர் – 19
اَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَة
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
அல்லாஹ்விடம் அனுதினமும் நிறைய துஆச் செய்கிறோம். நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப் படுகிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய பல துஆக்கள் கபூல் ஆகாமல் போவதற்கான காரணங்கள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். ஹராமான வருமானங்களை விட்டும் ஹராமான உணவுகளை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளா விட்டால் நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
என்ற வசனம் ஒருபோதும் பொய்யாகி விடாது. அப்படியானால் துஆ கேட்கக்கூடிய நம்மிடம் தான் ஏதோ சில குறைபாடுகள் உள்ளன. அந்த குறைபாடுகள் என்ன என்பதைக் காண்போம். .
கேட்டவுடன் துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் காலம் முன்பு இருந்தது
عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال كان رجل من أصحاب رسول الله صلى الله عليه و سلم من الأنصار يُكنى : أبا معلق وكان تاجرا يتجر بمال له ولغيره يضرب به في الآفاق5 وكان ناسكا ورعا6فخرج مَرَّة فلقيه لُصٌّ7 مقنع في السلاح فقال له : ضَعْ ما معك فإني قاتلك قال : ما تريد إلى دمي ؟ شأنك بالمال قال: أما المال فلي ولست أريد إلا دمك قال: أما إذا أبيتَ فذَرْني أُصلي أربع ركعات قال : صَلِّي ما بدا لك فتوضأ ثم صلى أربع ركعات فكان من دعائه في آخر سجدة أن قال:يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد أسألك بِعِزِّك الذي لا يرام وملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك أن تكفيني شر هذا اللص يا مغيث أغثني يا مغيث أغثني ثلاث مرات قال : دَعَى بها ثلاث مرات فإذا هو بفارس قد أقبل بيده حِرْبة8 واضعها بين أذني فرسه فلما بصر به اللص أقبل نحوه فطعنه فقتله ثم أقبل إليه فقال:قُمْ قال:من أنت بأبي أنت وأمي؟ فقد أغاثني الله بك اليوم قال: أنا ملك من أهل السماء الرابعة دعوتَ بدعائك الأول فسمعتُ لأبواب السماء قعقعة9 ثم دعوت بدعائك الثاني فسمعت لأهل السماء ضجة ثم دعوت بدعائك الثالث فقيل لي :دعاء مكروب فسألتُ الله تعالى أن يوليني قتله قال أنس:فاعلم أنه من توضأ وصلى أربع ركعات ودعا بهذا الدعاء استجيب له مكروبا كان أو غير مكروب(مجابو الدعوة لإبن أبي الدنيا)
பல வெளிநாடுகளுக்கும் வியாபாரச் சரக்குகளை கொண்டு செல்லும் இவரை ஒரு கொள்ளையன் வழி மறித்தான். பணம் தானே உனக்கு வேண்டும் எடுத்துக் கொள். என்று இவர் கூறியும் அவன் பணமும் வேண்டும். உன் உயிரும் வேண்டும் என்றான். இறுதியில் இவர் நான்கு ரக்அத் தொழ என்னை விட்டு விடு. என்று கேட்க அவன் சம்மதித்தான். இவர் தொழுது விட்டு அந்த கொள்ளையனிடமிருந்து காப்பாற்றும்படி மூன்று முறை துஆ செய்த போது குதிரையில் ஒருவர் வேகமாக ஈட்டியுடன் வந்து திருடனை குத்திக் கொன்றார். அவரிடம் நீங்கள் யார் என்று இவர் கேட்க “ நான் நான்காவது வானத்தில் உள்ள மலக்குகளில் ஒருவர். நீர் ஒவ்வொரு முறையும் துஆ செய்த போது விண்ணில் உள்ளவர்களிடையே பெரும் சப்தம் கொந்தளிப்பு உருவானது. இறுதியில் நான் அல்லாஹ்விடம் அந்தக் கொள்ளையனை கொன்று விட்டு வரும் பொறுப்பை என்னிடம் தரும்படி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான். நான் அவனை கொன்றேன். அனஸ் ரழி கூறும் போது எவர் இத்தகைய சூழ்நிலையில் இந்த துஆவை ஓதினால் ஈடேற்றம் கிடைக்கும்.
தைத்துக் கொண்டிருந்த ஊசி கடலில் விழுந்த போது அதற்காக துஆ செய்து அதைப் பெற்ற நல்லடியார்
عن فروة الأعمى مولى سعد بن أبي أمية المقرئ قال : ركب أبو ريحانة البحر فكان يخيط فيه بإبرة معه فسقطتْ إِبْرَتُه في البحر فقال : (عزمتُ عليك يا رب إلا رددت عليَّ إِبْرَتي ) فظهرتْ حتى أخذها (مجابو الدعوة من كتب إبن أبي الدنيا)
கடும் குளிரை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியதால் அருகில் இருந்த மரமே கதகதப்பாக மாறியது
عن أبي المثنى المليكي:أن سرية خرجتْ في سبيل الله فأصابهم بَرْدٌ شديد كادوا أن يهلكوا فدعوا الله وإلى جانبهم شجرة عظيمة فإذا هي تلتهب فقاموا إليها فما زالوا عندها حتى جففوا ثيابهم ودفئوا10 وطلعت عليهم الشمس ثم انصرفوا وردَّ الله عزوجل الشجرة على هيئتها
மன்னர் வரும்போது ஒதுங்க முடியாத மூதாட்டியை காவலன் அடித்த போது சபித்து துஆச் செய்த நல்லடியார்
عن الحسن بن أبي جعفر قال:مرَّ الأمير يوما فصاحوا: "الطريق"ففرج الناس وبقيت عجوز كبيرة لا تقدر أن تمشي فجاء بعض الجلاوذة فضربها بسوط ضربة فقال حبيب أبو محمد ( اللهم اقطع يده ) فما لبث إلا ثلاثا حتى مرَّ بالرجل قد أُخذ في سرقة فقُطِعت يدُه
மன்னர் வரும்போது ஒதுங்க முடியாத மூதாட்டியை காவலன் அடிக்க, யாஅல்லாஹ் அவன் கையை துண்டாக்கி விடு என இறை நேசர் ஒருவர் துஆ செய்தார். உடனடியாக அவரது சாப துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்று நாட்களுக்குள்ளாக அவன் ஒரு திருட்டு வழக்கில் மாட்டி அதனால் அவனது கை வெட்டப்பட்டது.
ஸயீத் இப்னு முஸய்யப் ரழி ஒருமுறை அபுல் ஹசன் என்பவரிடம் நீர் உம்முடைய நபரை அனுப்பி நான் சொல்லும் ஒரு மனிதனைப் போய் பார்க்கச் சொல்லுங்கள் என்றார். அவ்வாறே அவர் போய் பார்த்த போது அம்மனிதனின் உடல் முழுவதும் வெண்மையாகவும், முகம் மட்டும் மிகவும் கறுப்பாகவும் இருந்தது. அதிர்ச்சியுடன் அவர் திரும்பிய போது ஸயீத் ரழி கூறினார்கள். நான் ஒருமுறை இவனை சந்தித்த போது இவன் சஹாபாக்களை திட்டினான். நான் தடுத்தும் அவன் கேட்கவில்லை. அப்போது நான் யாஅல்லாஹ் இவன் பொய்யனாக இருந்தால் இவன் முகத்தை கறுப்பாக்கி விடு என்றேன். அவ்வாறே நடந்து விட்டது.
மழை வேண்டும் என அல்லாஹ்விடம் ஒருவர் துஆ செய்ய மற்றவர் ஆமீன் சொல்ல உடனே மழை பெய்தது
عن الأعمش قال جيئ بحبيب بن أبي ثابت و سعيد بن حبيب و طلق بن حبيب قال: فأصابهم عطش وخوف فقال سعيد لحبيب: ادعو الله فقال له حبيب:إني أراك أوجه مني قال: فدعا سعيد وأمَّنَ صاحبه فرفعت سحابة فمطروا فتشربوا وسقوا وإستسقوا (مجابو الدعوة لإبن أبي الدنيا
யஜீத் உடைய காலத்தில் வறட்சி ஏற்பட்ட போது மக்கள் சார்பில் மழைக்காக துஆ செய்தவர்
عن أبي زرعة الشيباني قال : قُحِطَ المطر في زمن يزيد بن معاوية فخرجوا يستسقوا فلم يصيبهم سحاب ولا مطر فقال يزيد للضحاك بن الأسود : قُمْ فاستسقِ لنا فقام وكشف عن ذراعيه وألقى برأسه وقال : ( اللهم أن هؤلاء يستشفعون بي إليك فإسقهما
தற்காலத்தில் துஆக்கள் ஏற்கப்படாத காரணங்களில் மிக முக்கியமானது ஹராமான உணவுகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ{ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنْ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} وَقَالَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ } ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ (مسلم
ஹலால் ஹராமுடைய பேணுதல் இருந்தால் நிச்சயம் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்
عَنْ اِبْن عَبَّاس قَالَ : تُلِيَتْ هَذِهِ الْآيَة عِنْد النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْض حَلَالًا طَيِّبًا " فَقَامَ سَعْد بْن أَبِي وَقَّاص فَقَالَ يَا رَسُول اللَّه اُدْعُ اللَّهَ أَنْ يَجْعَلنِي مُسْتَجَاب الدَّعْوَة فَقَالَ " يَا سَعْد أَطِبْ مَطْعَمك تَكُنْ مُسْتَجَاب الدَّعْوَة وَاَلَّذِي نَفْس مُحَمَّد بِيَدِهِ إِنَّ الرَّجُل لِيَقْذِف اللُّقْمَة الْحَرَام فِي جَوْفه مَا يُتَقَبَّل مِنْهُ أَرْبَعِينَ يَوْمًا وَأَيّمَا عَبْد نَبَتَ لَحْمه مِنْ السُّحْت وَالرِّبَا فَالنَّار أَوْلَى بِهِ " (تفسير ابن كثير
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ஒரு கொடுங்கோலர் என்பதை நாம் அறிவோம். அவர் கொல்லப்பட்ட நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தார்கள். காரணம் அவருடைய கப்ரு எங்கே என்று தெரிந்தால் மக்கள் தோண்டி எடுத்து அந்த உடலை சித்ரவதை செய்வார்கள் என்னும் அளவுக்கு அவருடைய ஆட்சியில் கொடுமைகள் அதிகம் இருந்தன. அவர் ஆட்சிக்கு வந்த புதிதில் ஒரு சிலர் ஹஜ்ஜாஜிடம் உங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கையேந்தி துஆ செய்தால் உங்களுடைய ஆட்சி உடனே அகற்றப்பட்டு விடும் என்றனர். உடனே ஹஜ்ஜாஜ் ஒருவேளை செய்தார். ஒரு மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். முக்கியமாக எவர்களுடைய துஆக்கள் உடனே ஏற்கப்படும் என்று கூறப்பட்டதோ அவர்களும் அழைக்கப்பட்டனர். அனைவரும் விருந்து உண்டனர். விருந்து முடிந்தவுடன் ஹஜ்ஜாஜ் மக்களை நோக்கி இனிமேல் உங்களில் யாருடைய துஆவைப் பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில் நான் கொடுத்த உணவு ஹராமான உணவாகும். அது உங்களின் வயிற்றுக்குள் சென்று விட்டது எனவே எனக்கு எதிராக யார் துஆ செய்தாலும் அது ஏற்கப்படாது என்றார். தங்களை அறியாமல் வயிற்றுக்குள் சென்று விட்ட ஹராமான உணவுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிப்பான் என்பது ஒருபுறம் இருந்தாலும் இங்கே ஹஜ்ஜாஜ் சொன்ன வார்த்தை கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
அன்று ஹஜ்ஜாஜ் செய்த வேலையை இன்றைய முஸ்லிம் உலகிற்கு எதிராக யூத பயங்கரவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரும்பிச் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்கள் பலவற்றில் பன்றியின் உதிரி பாகங்களை கலந்து விற்கப்படுகின்றன. இது போதாதா? நமது துஆக்களின் பவர் குறைவதற்கு...?
பன்றியை எவ்வளவு தான் ஆரோக்கியமான சூழலில் வளர்த்தினாலும் பன்றி பன்றி தான். அதன் இயற்கை குணம் மாறப் போவதில்லை. இன்று பெரும்பாலும் மக்களிடம் வெட்கம் எடுபட்டுப் போனதற்கு பன்றி இறைச்சியின் உலக மயமாக்கலும் ஒரு காரணம். ஹராமை ஹராம் என்று தெரியாமல் உண்ணும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.
சிரமமான நிலையிலும் ஹலாலைப் பேணிய குகைவாசிகள்
وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا (19)الكهف
{فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَاماً} قال ابن عباس: أحل ذبيحة؛ لأن أهل بلدهم كانوا يذبحون على اسم الصنم، وكان فيهم قوم يخفون إيمانهم. ابن عباس: كان عامتهم مجوسا.(قرطبي
300 வருடங்கள் தூங்கி எழுந்தவுடன் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது தங்களில் ஒருவரை உணவு வாங்க அனுப்பும்போது ஹலாலான உணவாகப் பார்த்து வாங்கி வா என்று கூறி அனுப்பினார்கள். காரணம் அந்த ஊரில் நிறைய பேர் மஜூஸிகள். சிலர் மட்டும் மறைவாக ஈமான் கொண்டிருந்தனர். அத்தகைய ஈமான் தாரிகள் அறுத்த உணவையே வாங்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்கள்
தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆட்டிறைச்சி அதன் உரிமையாளரின் முறையான அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى (ابوداود) باب فِى اجْتِنَابِ الشُّبُهَاتِ.
பொருள்- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு தோண்டுபவரிடம் மய்யித்தின் தலை வைக்கும் பகுதியையும், கால் வைக்கும் பகுதியையும் பெரிதாக தோண்டுங்கள் என அறிவரை கூறக் கண்டேன். அங்கிருந்து திரும்பியவுடன் ஒரு பெண்ணின் சார்பாக விருந்துக்கு அழைக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள். பின்பு உணவு கொண்டு வரப்பட்டது. அதில் கை வைத்து அவர்கள் சாப்பிட ஆரம்பித்தவுடன் மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாயில் ஒரு கவளத்தை மட்டுமே விழுங்கியதை எங்களின் தந்தைமார்கள் கண்டார்கள். பின்பு எங்களிடம் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியாக இதை நான் காண்கிறேன் என்றார்கள். பின்பு விருந்து கொடுத்த பெண்ணிடம் விளக்கம் கேட்டு அனுப்ப அப்பெண் யாரஸூலல்லாஹ் எனக்கு ஒரு ஆடு வேண்டும் என பகீஉக்கு ஆள் அனுப்பினேன். அங்கு கிடைக்கவில்லை. பிறகு என் அண்டை வீட்டாரிடம் சென்று எனக்காக ஆடு வாங்கி வரும்படி ஆள் அனுப்பினேன். அவரும் இல்லை. பின்பு என் அவருடைய மனைவியிடம் கேட்டு அனுப்ப அவர் இந்த ஆட்டைக் கொடுத்தனுப்பினார் என்று கூற பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இறைச்சியை தான் சாப்பிடாமல் காஃபிர்களான கைதிகளுக்கு இதை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.
ஒரு முஃமின் தனது வாழ்க்கையில் சக்திக்கு இயன்ற வரை ஹலால் ஹராம் விஷயத்தில் பேணுதலுடன் வாழ வேண்டும். ஆனால் நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர... அந்த நிர்பந்தம் என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்வதல்ல. மாறாக ஷரீஅத் அனுமதிக்கும் வரையறைக்கு உட்பட்டதாகும். நிர்பந்தம் இல்லா விட்டால் சந்தேகமானவற்றையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ (بخاري)2051
விளக்கம்- மார்க்கத்தின் சட்டங்களை நாம் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. தெளிவாக ஹலால் என்று கூறப்பட்டவை 2. ஹராம் தெளிவாக ஹராம் என்று கூறப்பட்டவை 3. மேற்கூறப்பட்ட இரண்டுக்கும் மத்தியில் உள்ளவை.
இவற்றில் மூன்றாவதாக கூறப்பட்ட விஷயங்கள் தான் இன்று நம்முடைய ஈமானுக்கு சோதனையாக விஷயங்களாகும். அவை கூடுமா கூடாதா என்பது சந்தேகத்திற்கு இடமுள்ளதாக இருக்கும். அதன் உண்மை நிலையை பலர் அறிய மாட்டார்கள். யார் பேணுதல் அடிப்படையில் அவற்றையும் விட்டு விடுகிறார்களோ அவர் தனது மார்க்கத்தையும் மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமானவற்றில் விழுந்து விடுவாரோ அவருக்கு உதாரணம் வேலியைச் சுற்றி ஆடுகளை மேய விடும் ஆட்டு இடையனைப் போன்றாகும். தனக்கு அனுமதிக்கப்படாத வேலிக்கு அருகாமையில் தனது ஆடுகளை அவர் மேய விடும்போது அந்த ஆடுகள் வேலிக்குள்ளேயும் மேய்வதற்கு நீண்ட நேரம் ஆகாது. அதுபோல சந்தேகமானவற்றில் இவர் ஈடுபடும் போது அதற்கு நெருக்கமாக உள்ள ஹராமிலும் அவர் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டு விடலாம்.
உதாரணமாக ஒருவருக்கு ஹலாலான வருமானமும் உண்டு. ஹராமான வருமானமும் உண்டு. அவர் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கினார். அது அவருடைய ஹலாலான வருமானத்திலிருந்து வந்ததா அல்லது ஹராமான வருமானத்திலிருந்து வந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பமான நிலையில் அந்த அன்பளிப்பை தவிர்ப்பதே நல்லது. அது ஹராமான இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் அதை பயன்படுத்தத் துணிந்து விட்டால் நாளை ஹராமையே துணிவோடு செய்கின்ற நிலை ஏற்படலாம்.
عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ جَاءَتْ فَزَعَمَتْ أَنَّهَا أَرْضَعَتْهُمَا فَذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْرَضَ عَنْهُ وَتَبَسَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَيْفَ وَقَدْ قِيلَ وَقَدْ كَانَتْ تَحْتَهُ ابْنَةُ أَبِي إِهَابٍ التَّمِيمِيِّ (بخاري)2052 بَاب تَفْسِيرِ الْمُشَبَّهَاتِ
விளக்கம்-நபித் தோழர் உக்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், அவரின் மனைவி உம்மு யஹ்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் அவ்விருவரும் குழந்தைகளாக இருந்த போது தாய்ப்பால் ஊட்டியதாக ஒரு பெண் வந்து கூறுகிறார். இது உண்மையானால் பால்குடி சகோதரத்துவ அடிப்படையில் இருவரும் கணவன், மனைவியாக நீடிக்க முடியாது.அப்பெண்ணின் வாக்கு மூலத்தை உக்பா ரழி நம்பவில்லை. அதை உறுதி செய்வதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. இந்நிலையில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நபித்தோழரிடம் “இவ்வாறு கூறப்பட்ட பின் எப்படி அவளுடன் நீர் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி அந்த மனைவியை விட்டு விலகி விடுமாறு அறிவுறுத்தினார்கள். படிப்பினை- ஒரு சிறந்த முஃமினால் மட்டுமே இதுபோன்ற சூழ்நிலைகளில் அல்லாஹ்வை அஞ்சி அன்பான மனைவியை விட்டும் பிரிய முடியும்.
ஹராமை விட்டும் விலக நினைத்தாலும் விலக முடியாத காலம் வரும் என்பதைப் பற்றி...
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَأْكُلُونَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ غُبَارِهِ (نسائ) بَاب اجْتِنَابِ الشُّبُهَاتِ فِي الْكَسْبِ-كِتَاب الْبُيُوعِ
ஷரீஅத்தை பேணி வாழ முடியாத காலத்திலும் தன்னால் முடிந்த வரை பேணுதலாக வாழ்பவரின் சிறப்பு
عَنْ الْمُعَلَّى بْنِ زِيَادٍ رَدَّهُ إِلَى مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ رَدَّهُ إِلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ رَدَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ (مسلم) بَاب فَضْلِ الْعِبَادَةِ فِي الْهَرْجِ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ السَّاعَةِ- المراد بالهرج هنا الفتنة واختلاط أمور الناس وسبب كثرة فضل العبادة فيه أن الناس يغفلون عنها ويشتغلون عنها (شرح النووي علي مسلم)
عَنِ النَّبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: يَأْتي علَى النَّاسِ زَمانٌ لا يُبالِي المَرْءُ ما أخَذَ منه؛ أمِنَ الحَلالِ أمْ مِنَ الحَرامِ.
الراوي : أبو هريرة | : البخاري | : صحيح البخاري
ஹலாலான சம்பாத்தியம் அமைந்தால் அல்லாஹ் நிச்சயமாக நமது துஆக்களை ஏற்றுக் கொள்வான். அது உடனே நடைபெறலாம். அல்லது தாமதமாக நடைபெறலாம். எனவே அவசரப்படக்கூடாது.
துஆ ஏற்றுக் கொள்ளப்படுவது மூன்று வகை. சில நேரங்களில் நமது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கலாம். அதை நாம் அறியாதவர்களாக இருப்போம்
عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنْ السُّوءِ مِثْلَهَا قَالُوا إِذًا نُكْثِرُ قَالَ اللَّهُ أَكْثَرُ (احمد)
ஒரு முஃமினின் துஆ மூன்று வகையில் ஏதேனும் ஒரு வகையில் ஏற்கப்படும். 1.அவர் கேட்டதை அல்லாஹ் உடனே தந்து விடுவான். 2. அவர் கேட்டதை இப்போது அதற்குப் பகரமாக மறுமையில் மிகவும் சிறப்பாக தருவான். 3. அவர் கேட்டதைத் தராமல் அதற்குப் பகரமாக அவருக்கு ஏற்படவிருந்த சோதனையை விட்டும் அவரைப் பாதுகாப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய போது அப்படியானால் நாங்கள் அளவுக்கு அதிகமாகவே அல்லாஹ்விடம் கேட்கலாமா என தோழர்கள் கேட்க, நபி ஸல் அவர்கள் அல்லாஹ் கொடுப்பதில் மிகப் பெரியவன் என்றார்கள்.
عن جَابِرِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:يَدْعُو اللهُ بِالْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُوقِفَهُ بَيْنَ يَدَيْهِ فَيَقُولُ: عَبْدِي إِنِّي أَمَرْتُكَ أَنْ تَدْعُوَنِي؟وَوَعَدْتُكَ أَنْ أَسْتَجِيبَ لَكَ، فَهَلْ كُنْتَ تَدْعُونِي؟ فَيَقُولُ:نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: أَمَا إِنَّكَ لَمْ تَدْعُنِي بِدَعْوَةٍ إِلَّا اسْتَجَبْتُ لَكَ أَلَيْسَ دَعَوْتَنِي فِي يَوْمِ كَذَا وَكَذَا لِغَمٍّ نَزَلَ بِكَ أَنْ أُفَرِّجَهُ عَنْكَ فَفَرَّجْتُهُ عَنْكَ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: إِنِّي عَجَّلْتُهَا لَكَ فِي الدُّنْيَا، وَدَعَوْتَنِي يَوْمَ كَذَا وَكَذَا لِغَمٍّ نَزَلَ بِكَ أَنْ أُفَرِّجَ عَنْكَ فَلَمْ تَرَ فَرَجًا ؟قَالَ:نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: إِنِّي ادَّخَرْتُ لَكَ بِهَا فِي الْجَنَّةِ كَذَا وَكَذَا وَدَعَوْتَنِي فِي حَاجَةٍ أَقْضِيهَا لَكَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فَقَضَيْتُهَا ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ، فَيَقُولُ: فَإِنِّي عَجَّلْتُهَا لَكَ فِي الدُّنْيَا، وَدَعَوْتَنِي فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي حَاجَةٍ أَقْضِيهَا فَلَمْ تَرَ قَضَاءَهَا ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ، فَيَقُولُ: إِنِّي ادَّخَرْتُهَا لَكَ فِي الْجَنَّةِ كَذَا وَكَذَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:فَلَا يَدَعُ اللهُ دَعْوَةً دَعَا بِهَا عَبْدُهُ الْمُؤْمِنُ إِلَّا بَيَّنَ لَهُ إِمَّا أَنْ يَكُونَ عَجَّلَ لَهُ فِي الدُّنْيَا، وَإِمَّا أَنْ يَكُونَ ادَّخَرَ لَهُ فِي الْآخِرَةِ " قَالَ: " فَيَقُولُ الْمُؤْمِنُ فِي ذَلِكَ الْمَقَامِ: يَا لَيْتَهُ لَمْ يَكُنْ عُجِّلَ لَهُ شَيْءٌ مِنْ دُعَائِه (حاكم) (الترغيب) كتاب الذكر والدعاء
அல்லாஹ் ஒரு முஃமினை மறுமை நாளில் அழைத்து தனக்கு முன்னால் நிற்க வைத்துஎன் அடியானே என்னிடம் துஆச் செய்யும்படி ஏவியிருந்தேனே இன்னும் உனது துஆவுக்கு பதில் தருவதாகவும் கூறியிருந்தேனே துஆச் செய்தாயா என்று கேட்கும்போது ஆம் ரப்பே என்று அந்த அடியான் கூறுவான்.அதற்குஅல்லாஹ் நிச்சயமாக உன் துஆக்கள் அனைத்துக்கும் நான் பதிலளித்தேன். என்று கூறி விட்டு அடியானே இன்ன நாளில் நீ உனது சிரமத்தை நீக்கச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த சிரமத்தை நான் நீக்கினேன் அல்லவா என்று கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே அந்த துஆவின் பலனை உடனே பெற்றேன் என்பான். மறுபடியும் அல்லாஹ் அடியானிடம் இன்ன நாளில் நீ உனது சிரமத்தை நீக்கச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த சிரமம் உனக்கு நீங்கியிருக்காதே என்று அல்லாஹ் கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே என்பான். அதற்கு அல்லாஹ் உன்னுடைய நீக்கப்படாத அந்த சிரமத்திற்காக சுவனத்தில் இத்தகைய பாக்கியங்களை வைத்துள்ளேன் என்பான். மறுபடியும் அல்லாஹ் அடியானிடம் இன்ன நாளில் நீ உனது உன் தேவையை நிறைவேற்றச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த தேவை உனக்கு நிறைவேறியிருக்காதே என்று அல்லாஹ் கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே என்பான். அதற்கு அல்லாஹ் உன்னுடைய நிறைவறாத அந்த தேவைக்கு பதிலாக சுவனத்தில் இத்தகைய பாக்கியங்களை வைத்துள்ளேன் என்பான். இந்த அடியானைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய போது அந்த அடியான் கேட்ட எல்லா துஆக்களும் இவ்வாறாக ஏற்கப்பட்டிருக்கும். சில துஆக்களுக்கு உடனே உலகத்திலும் சில துஆக்கள் ஏற்கப்பட்டதற்கு பகரமாக மறுமை நாளிலும் அது தரப்படக்கூடியதாகவும் அமைந்திருக்கும். இறுதியாக அந்த அடியான் கூறுவான். நான் கேட்டும் உலகில் தரப்படாத துஆக்களுக்கு பதிலாக அல்லாஹ் இவ்வளவு இன்பங்கள் வைத்திருப்பது தெரியாமல் போய் விட்டதே நான் கேட்ட எந்த துஆவுக்கும் பதில் உலகில் தரப்படாமல் மறுமையில் தரப்பட்டிருக்க வேண்டுமே என்பான்.
கருத்து- துஆவில் தான் கேட்ட கோரிக்கைகளுக்குப் பகரமாக அல்லாஹ் மறுமையில் வைத்துள்ள இன்பங்களைக் கண்டு தான் கேட்ட அனைத்து துஆக்களுக்கும் பிரதிபலன் உலகில் தரப்படாமல் மறுமையிலேயே கிடைத்திருக்க வேண்டுமே எனக் கருதுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக