வியாழன், 26 மார்ச், 2026

குர்ஆன் & மக்தப் முக்கியத்துவம்

27-03-2026

ஷவ்வால்-  7


بسم الله الرحمن الرحيم  

       குர்ஆனுடைய கல்வியின் முக்கியத்துவம்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


குர்ஆன் என்பது நம்முடைய வாழ்வின் முக்கியமான அங்கமாகும். குர்ஆனைக் கற்றுக் கொள்வதும் அதன்படி  நடப்பதும் அவசியமாகும். ஒவ்வொரு மஹல்லா தோறும் குர்ஆன் மதரஸாக்களை வலுப்படுத்த வேண்டும். மஹல்லாவில் உள்ள ஒவ்வொருவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் அந்தந்த மக்தப் மதரஸாவின் மாணவர்களாக மாற வேண்டும். குறிப்பாக மஸ்ஜிதின் நிர்வாகிகள் மாணவர்களாக மக்தப் மதரஸாவில் இணைய வேண்டும். குர்ஆனைக் கற்றுக் கொள்பவர்களாக மாற வேண்டும். ஆனால் இன்று குர்ஆனைக் கற்றுக் கொண்டவர்கள் சிலர் மட்டும் தான். அதிலும் முறையாக உச்சரிப்புடன் ஓதக் கற்றுக் கொண்டவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். ஒரு மஹல்லாவில் 100 பேர் இருந்தால் அதில் முறையாக உச்சரிப்புடன் ஓதக் கற்றுக் கொண்டவர்கள் 10 பேர் மட்டுமே இருப்பார்கள். அந்த அளவுக்கு குர்ஆனுடைய  முக்கியத்துவம் மக்களிடம் குறைந்து விட்டது. நம்மில் பலர் சிறு வயதில் குர்ஆனை ஓதக் கற்றுக் கொண்டு பிறகு தொடர்பு இல்லாமல் குர்ஆனை மறந்திருப்பார்கள். இது பெரும் பாவமாகும்.                               

குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்.

عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) 

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

குர்ஆனை விட்டும், தீனுடைய சூழ்நிலையை விட்டும் குடும்பங்கள் நீங்கி விட்டால் குடும்பங்கள் வீணாகி விடும்


  எந்த பூமியில் மழை இல்லையோ அந்த பூமியில் பயிர்கள் வீணாகி விடும். எந்த வீட்டில் தீன் இல்லையோ அந்த வீட்டில் சந்ததிகள் வீணாகி விடும் -  உர்தூ கவிதை

குர்ஆன்ஓதத்தெரியாமல்இருப்பதுமாபெரும்துர்பாக்கியம். யாருடைய மனதில் அறவே குர்ஆன் இல்லையோ அவரது உள்ளம் பாழடைந்த இல்லம்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)عَنْ عُثْمَانَرضي الله عنهقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ(ابن ماجة)

  நம்மில் எத்தனை பேர் குர்ஆன் ஒத தெரியாதவர்கள், மார்க்க சட்டதிட்டங்கள் தெரியாதவர்கள் நம்மில் பலருக்கு ஒளு செய்யும் முறையே தெரியவில்லை ஒளுவின் முறித்தல்கள் தெரியவில்லை, பர்ளான குளிப்பு ஒன்று இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களுக்கும் குளிப்பின் பர்ளுகள் என்ன என்று தெரிவதில்லை இது தான் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை....அதிகாலை எழுந்து தானும் பஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் பஜர் தொழ வைத்து பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அன்று இருந்தனர் ஆனால் இன்றோ தானும் எட்டு மணிக்கு எழுவதுடன் பிள்ளைகளை அதன் பின் எழுப்பி ஸ்கூலுக்கு அரக்க பறக்க அனுப்புவதே பெரும்பாடாக உள்ளது இதற்கிடையில் மக்தபை பற்றி சிந்திக்கவே முடிவதில்லை .மாலையில் பிள்ளைகள் வீடுதிரும்பியதும் டியூஸன் என்ற பெயரில் இரவுவரை கழித்து விட்டு வீடு வந்ததும் சாப்பிட்டு படுக்கவே நேரம் உள்ளது 

கண்ணியப் படுத்த வேண்டியவைகளை அலட்சியப் படுத்தும்போது பல்வேறு அழிவுகள் பூமிக்கு ஏற்படும்

நான்கு உதாரணங்கள் 1.கஃபா 2.குர்ஆன் 3.ஆலிம்கள் 4.மார்க்கக் கல்வி

கடைசி காலத்தில் கஃபா நீக்ரோக்களால் இடிக்கப்படும். அதன் பின் உலகமே அழிந்து விடும்

عنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنْ الْحَبَشَةِ.(بخاري) 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا . (بخاري)

”அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் கொண்ட மனிதர்கள் கஃபாவை இடித்துப் பாழ் படுத்துவார்கள்” என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) ”(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களுடைய கருப்பு நிறத்தவர்கள் கஃபாவின் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஃபாவை உடைப்பதை நான் பார்ப்பது போல் உள்ளது” என நபி (ஸல்) அவர்கள் கவலையுடன் கூறினார்கள். (புகாரி) 

அதற்கு முன்பு மற்றொரு கூட்டம் கஃபாவை இடிக்க வரும் வழியிலேயே பூகம்பத்தால் அழிக்கப்படுவார்கள்

عن عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري

ஒரு கூட்டத்தினர் கஃபாவை இடிக்க வரும் வழியிலேயே பூகம்பத்தால் அழிக்கப்படுவார்கள் அவர்களுடன் சேர்ந்து அங்கு வசிப்பவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்று நபி ஸல் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே, தீயவர்கள் அழிக்கப்படுவது நியாயம். ஆனால் அழிக்கப்படும் இடத்தில் உள்ள நல்லவர்களும் அங்கு கடை வைத்திருப்பவர்களும் சேர்ந்து ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அது அப்படித்தான். ஆனால் அல்லாஹ் அவர்களை மீண்டும் எழுப்பும்போது அதற்கான சிறந்த நற்கூலியைத் தருவான் என்றார்கள் 

படிப்பினை-முதல்தடவை கஃபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என கூறிய நபி ஸல் பின்பு கஃபாவை வளைந்த,  மெலிந்த கால்களையுடைய நீக்ரோக்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறினார்கள் ஒரு காலகட்டம் வரை கஃபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் கஃபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம்.அப்போது கஃபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை அல்லாஹ் தடுக்க மாட்டான். இது இறுதி நாளுக்கு மிக  நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம் ”யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இந்த புனிதமான கஃபா ஆலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும்,  உம்ராவும் செய்யப்படும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தின் வருகைக்குப்பிறகும் கஃபா ஆலயம் இருக்கும் என்பது நபி(ஸல்) அவர்களின்  முன்னறிவிப்பு

عَنْ أَبِى هُرَيْرَةَ  رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « حُجُّوا قَبْلَ أَنْ لاَ تَحُجُّوا ». قِيلَ مَا شَأْنُ الْحَجِّ قَالَ « تَقْعُدُ أَعْرَابُهَا عَلَى أَذْنَابِ أَوْدِيَتِهَا فَلاَ يَصِلُ إِلَى الْحَجِّ أَحَدٌ ».(دار قطني)    شرح ( على أذناب أوديتها ) أي المواضع التي تنتهي اليها مسايل الماء فيحولون بين الناس وبين البيت ( فلا يصل إلى الحج أحد ) وذلك بعد رفع القرآن وموت عيسى (التيسير بشرح الجامع الصغير)

ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம் வரும் முன்பு ஹஜ்ஜு செய்து கொள்ளுங்கள் என நபி ஸல் கூறியபோது ஏன் ஹஜ்ஜு செய்ய முடியாமல் போகும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்அவர்கள் கூறினார்கள் அங்குள்ள காட்டரபிகள் பள்ளத்தாக்குகளின் எல்லையில் இருந்து கொண்டு யாரையும் ஹஜ்ஜுச் செய்ய விடாமல் தடுப்பார்கள். அதனால் யாரும் ஹஜ்ஜுச் செய்ய முடியாது என்றார்கள். 

قَالَ اِبْن عَبَّاس  رضي الله عنه : لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض (تفسير ابن كثير)

இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள்- ஏதாவது ஒரு வருடத்தில் யாருமே ஹஜ்ஜு செய்யா விட்டால் அல்லாஹ் வானத்தை அப்படியே பூமியின் மீது இறக்கி அழித்து விடுவான்

2.கடைசி காலத்தில் குர்ஆனுக்கு கண்ணியம் இல்லாதபோது குர்ஆனை அல்லாஹ் உள்ளங்களில் இருந்தும் அனைவரின் இல்லங்களில் இருந்தும் அல்லாஹ் பறித்து விடுவான். வெறும் காகிதம் மட்டும் இருக்கும். 

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ : لَيُسْرَيَنَّ عَلَى الْقُرْآنِ ذَاتَ لَيْلَةٍ فَلاَ يُتْرَكُ آيَةٌ فِى مُصْحَفٍ وَلاَ فِى قَلْبِ أَحَدٍ إِلاَّ رُفِعَتْ. (دارمي

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் ஒரே ஒரு இரவு கடப்பதற்குள் அல்லாஹ் குர்ஆனை உள்ளங்களில் இருந்தும் அவரவர் இல்லங்களில் வைத்திருக்கும் குர்ஆன் பிரதிகளில் இருந்தும் நீக்கி விடுவான். ஒரு வசனம் கூட யாருடைய உள்ளத்திலும் ஞாபகம் இருக்காது. பிரதிகளிலும் இருக்காது.- தாரமீ

 عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ : أَكْثِرُوا تِلاَوَةَ الْقُرْآنِ قَبْلَ أَنْ يُرْفَعَ. قَالُوا : هَذِهِ الْمَصَاحِفُ تُرْفَعُ فَكَيْفَ بِمَا فِى صُدُورِ الرِّجَالِ؟ قَالَ : يُسْرَى عَلَيْهِ لَيْلاً فَيُصْبِحُونَ مِنْهُ فُقَرَاءَ وَيَنْسَوْنُ قَوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيَقَعُونَ فِى قَوْلِ الْجَاهِلِيَّةِ وَأَشْعَارِهِمْ ، (دارمي

وقال عبد الله بن مسعود رضي الله عنه في تفسير هذه الاية "وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82)النمل: وقع القول يكون بموت العلماء وذهاب العلم ورفع القرآن (قرطبي

 குர்ஆன் உயர்த்தப்படும் முன்பே குர்ஆனை அதிகம் ஓதிக் கொள்ளுங்கள் என இப்னு மஸ்ஊத் ரழி கூறியபோது பிரதிகளில் இருந்து உயர்த்தப் படலாம். ஆனால் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்களின் உள்ளங்களில் இருந்து எவ்வாறு நீக்கப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்  ஒரு இரவு கடந்து காலை நேரம் வருவதற்குள் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்கள் அனைவரும் குர்ஆனை இழந்த ஏழைகளாக ஆகி விடுவார்கள். கலிமாவைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இருக்காது. குர்ஆனுக்கு பதிலாக அறியாமைக் காலத்தின் சொற்களிலும். கவிதைகளிலும் மக்கள் மூழ்கி விடுவார்கள். இது கடைசி நேரமாக இருக்கும். அதாவது குர்ஆன் உயர்த்தப்படும், சிறந்த உலமாக்களின் தொடர் மரணம், கல்வி உயர்த்தப் படும் என்ற அல்லாஹ்வின் சொல்  உறுதியாகி விட்ட பிறகு இதுவெல்லாம் நடைபெறும். இதைத் தொடர்ந்துதான் அல்லாஹ் மக்காவுக்கும் மினாவுக்கும் இடையில் ஒரு அதிசயப் பிராணியை எழுப்பி இவர் காஃபிர் இவர் முஃமின் என அடையாளமிட வைப்பான்.

3.உலமாக்கள் இல்லாமல் போவதாலும் இந்த பூமிக்கு பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه و سلم إِنَّ اللَّهَ لاَ يَنْتَزِعُ الْعِلْمَ مِنَ النَّاسِ انْتِزَاعًا وَلَكِنْ يَقْبِضُ الْعُلَمَاءَ وَيُبْقِى فِى النَّاسِ رُءُوسًا جُهَّالاً يُفْتُونَهُمْ بِغَيْرِ عِلْمٍ فَيَضِلُّونَ وَيُضِلُّونَ ».(مسلم

அல்லாஹ் மக்களிடம் இருந்து ஒரேயடியாக இல்மை அப்புறப் படுத்த மாட்டான். மாறாக மார்க்க அறிஞர்களைக் கைப்பற்றுவதைக் கொண்டு இல்மை அப்புறப்படுத்துவான். பிறகு மார்க்கம் அறியாதவர்கள் தான் மீதமிருப்பர். மார்க்க அறிவின்றி ஃபத்வா வழங்குவார்கள். அவர்களும் வழி கெட்டு மற்றவர்களையும் வழி கெடுப்பர்.

4.மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதாலும் பூமிக்கு பல்வேறு பாதிப்புகள்..

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ ». (ابوداود

கடைசி காலத்தில் தொழ வைப்பதற்கு இமாம் கிடைக்காமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை ஏற்படுவது அழிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்

 (إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام.  (مرعاة

கருத்து-  இமாமத், அதான் என்ற இந்த சிறந்த பணிகளை விட்டும் பலர் தூரமாகி விடுவார்கள். கடைசியில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழ வருபவர்களில் ஒருவர் தான் இமாமத் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள். காரணம் ஒவ்வொருவரும் எனக்கு இமாமத் செய்யத் தெரியாது என்று கூறி ஒதுங்குவார்கள். கடைசியில் ஜமாஅத் நடைபெறாமல் தனித்தனியே மக்கள் தொழுது விட்டுச் செல்வார்கள்.                                         

ولذا أجاز المتأخرون من أصحابنا أخذ الأجرة على الإمامة والآذان ونحوهما من تعليم القرآن بخلاف المتقدمين فإنهم كانوا يحرمون الأجرة على العبادة (مرقاة

மார்க்கக் கல்வியை மக்கள் அறவே வெறுப்பதன் மூலம் மஸ்ஜித்களுக்கு இமாம் இல்லாமல் ஆகி விடக் கூடாது என்ற கவலையின் அடிப்படையில் தான் பிற்கால உலமாக்கள் இமாமத்திற்கும் அதானுக்கும் சம்பளம் வாங்குவது கூடும் என அனுமதித்தார்கள். ஆனால் முற்காலத்தில் அவ்வாறு இல்லை.                                                      

படிப்பினை- மேற்காணும் அறிவிப்புகள் மூலம் குர்ஆனைக் கற்றுக் கொள்வதுடன் மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிய முடிகிறது. அப்படிப்பட்ட அடிப்படைக் கல்விகளை போதிக்கும் இடங்கள் தான் மக்தப் மதரஸாக்கள். இந்த மக்தப் மதரஸாக்கள் சிறுவர் சிறுமிக்கு மட்டும் தான் என்பது இல்லை. அனைத்து வயதினரும் இங்கு வந்து குர்ஆனையும் அடிப்படைக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.                                          

கல்விக்கு வயதில்லை. முதிய வயதிலும் அடிப்படைக் கல்வியைக் கற்கலாம்.

عَنْ قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي يَا قَبِيصَةُ مَا جَاءَ بِكَ قُلْتُ كَبِرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي فَأَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مَا يَنْفَعُنِي اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ قَالَ يَا قَبِيصَةُ مَا مَرَرْتَ بِحَجَرٍ وَلَا شَجَرٍ وَلَا مَدَرٍ إِلَّا اسْتَغْفَرَ لَكَ يَا قَبِيصَةُ إِذَا صَلَّيْتَ الْفَجْرَ فَقُلْ ثَلَاثًا سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ تُعَافَى مِنْ الْعَمَى وَالْجُذَامِ وَالْفَلِجِ يَا قَبِيصَةُ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ وَأَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ وَانْشُرْ عَلَيَّ رَحْمَتَكَ وَأَنْزِلْ عَلَيَّ مِنْ بَرَكَاتِكَ رواه احمد    فلجபக்க வாதம்     جذامகுஷ்டம்

முதியவரான கபீஸா ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களிடம் வந்தேன் அப்போது நபி ஸல் அவர்கள் கபீஸா அவர்களே  உங்களை இங்கு வரவழைத்தது எது என நபி ஸல் அவர்கள் கேட்டாரகள். அதற்கு நான் என்னுடைய எலும்புகள் தேய்ந்து விட்டன. வயதாகி விட்டது. எனவே உங்களிடம் வந்து ஏதேனும் பயனுள்ள விஷயத்தைக் கற்றுக் கொள்ள வந்தேன் என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் (இதற்குத் தான் வந்துள்ளீர்கள் என்றால்) நீங்கள் நடந்து வரும் பாதையில் உள்ள ஒவ்வொரு கல்லும் மரமும் மடுவும் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடும் என்று கூறி விட்டு, நீங்கள் ஃபஜ்ருத் தொழுது விட்டு சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ என்ற தஸ்பீஹை மூன்று முறை தினமும் ஓதி வந்தால் குஷ்டம், பக்கவாதம் போன்ற நோய்களை விட்டும் நீங்கள் பாதுகாக்கப் படுவீர்கள் என்று கூறி விட்டு மற்றொரு துஆவையும் அவருக்குக் கற்றுத் தந்தார்கள். நூல் முஸ்னத் அஹ்மத்  

மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்வதில் சஹாபாப் பெருமக்களுக்கு இருந்த ஆர்வம்.

عَنْ عُمَرَ رض قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنْ الْأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ وَهِيَ مِنْ عَوَالِي الْمَدِينَةِ وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنْ الْوَحْيِ وَغَيْرِهِ وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ .....(بخاري89 )  

 ஹழ்ரத் உமர் ரழி அவர்களின் வீடு மதீனாவின் உயரமான பகுதியில் இருந்த போது அவர்களால் அடிக்கடி மஸ்ஜிதுன் நபவிக்கு வர முடியாது. உமர் ரழி கூறினார்கள் நானும், என் அண்டை வீட்டு நண்பரும் நபி ஸல் அவர்கள் கூறும் விஷயங்கள் எதுவும் எங்களுக்கு தவறி விடக்கூடாது என்பதற்காக  முறை வைத்துக் கொண்டு கல்வியை கற்றோம். அவர் ஒருநாள் கீழே இறங்கி மஸ்ஜிதுக்கு வருவார். நான் ஒருநாள் கீழே இறங்கி மஸ்ஜிதுக்கு வருவேன். நான் வரும்போது நான் கேட்ட அன்றைய செய்திகளை, இறங்கிய வஹீயை அவரிடம் சொல்வேன். அவர் வரும்போது அவர் கேட்ட அன்றைய செய்திகளை, இறங்கிய வஹீயை என்னிடம் சொல்வார்.                           

மார்க்கக் கல்வியை முறையாக கற்காத பாமரரின்  தவறான தீர்ப்பு பாவம் செய்தவரை திருத்தாமல் மீண்டும் பாவியாக்கியது

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَسَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَاهِبٍ فَأَتَاهُ فَقَالَ إِنَّهُ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ لَا فَقَتَلَهُ فَكَمَّلَ بِهِ مِائَةً ثُمَّ سَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَجُلٍ عَالِمٍ فَقَالَ إِنَّهُ قَتَلَ مِائَةَ نَفْسٍ فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ نَعَمْ وَمَنْ يَحُولُ بَيْنَهُ وَبَيْنَ التَّوْبَةِ انْطَلِقْ إِلَى أَرْضِ كَذَا وَكَذَا فَإِنَّ بِهَا أُنَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدْ اللَّهَ مَعَهُمْ وَلَا تَرْجِعْ إِلَى أَرْضِكَ فَإِنَّهَا أَرْضُ سَوْءٍ فَانْطَلَقَ حَتَّى إِذَا نَصَفَ الطَّرِيقَ أَتَاهُ الْمَوْتُ فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَقَالَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ جَاءَ تَائِبًا مُقْبِلًا بِقَلْبِهِ إِلَى اللَّهِ وَقَالَتْ مَلَائِكَةُ الْعَذَابِ إِنَّهُ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ فَأَتَاهُمْ مَلَكٌ فِي صُورَةِ آدَمِيٍّ فَجَعَلُوهُ بَيْنَهُمْ فَقَالَ قِيسُوا مَا بَيْنَ الْأَرْضَيْنِ فَإِلَى أَيَّتِهِمَا كَانَ أَدْنَى فَهُوَ لَهُ فَقَاسُوهُ فَوَجَدُوهُ أَدْنَى إِلَى الْأَرْضِ الَّتِي أَرَادَ فَقَبَضَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ قَالَ قَتَادَةُ فَقَالَ الْحَسَنُ ذُكِرَ لَنَا أَنَّهُ لَمَّا أَتَاهُ الْمَوْتُ نَأَى بِصَدْرِهِ (مسلم باب قَبُولِ تَوْبَةِ الْقَاتِلِ وَإِنْ كَثُرَ قَتْلُهُ.-كتاب التوبة

சுருக்கம்- 99 கொலைகள் செய்தவர் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தில்  அது பற்றிய யாரிடம் விளக்கம் கேட்பது என விசாரித்தபோது ஒரு வணக்கசாலியை காட்டப்பட்டது. மார்க்கம் தெரியாத அவரிடம் வந்து  தனக்கு தவ்பா உள்ளதா என்று கேட்டபோது உனக்கெல்லாம் தவ்பா இல்லை என்று அவர் பதில் கூற,ஆத்திரத்தில் அவரையும் அந்த மனிதர் கொன்று தன் கணக்கை 100 ஆக பூர்த்தியாக்கினார். பின்பு சில காலங்கள் கழித்து மீண்டும் அவருக்கு திருந்தும் எண்ணம் வந்தது. மார்க்கம் அறிந்த ஒருவரைப் பற்றி அவர் விசாரித்தார்.  அப்போது ஒரு சிறந்த ஆலிமை காட்டப்பட்டது. அவரிடம் விஷயத்தைக் கூற அவர் உமக்கு தவ்பா நிச்சயம் உண்டு என்று கூறியதுடன் உன்னுடைய தவறுகளுக்குக் காரணம் உமது ஊர் சரியில்லை. நல்லவர்கள் வாழும் ஒரு ஊரை நான் காட்டுகிறேன். நல்லவர்களின் தொடர்பில் நீ இருந்தால் பாவம் செய்யும் எண்ணம் உமக்கு வராது என்று அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே அவருக்கு மவ்த் வந்து விட்டது. அப்போது நல்ல உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அங்கு வந்தனர். கெட்ட உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அங்கு வந்தனர். இவரின் உயிரை யார் கைப்பற்றுவது என்பதில் சர்ச்சை ஏற்பட்டது இறுதியாக மூன்றாவதாக ஒரு மலக்கு அங்கு வந்து  இவர் போக வேண்டிய தூரத்தையும் கடந்து வந்த தூரத்தையும் கணக்கிட்டு முடிவு செய்யுங்கள் என்று கூற அவ்வாறே கணக்கிட்ட போது  அவர் போக வேண்டியதூரம் மிகச்சிறிய அளவில் மட்டுமே நெருக்கமாக இருந்தது. இறுதியில் நல்ல உயிரைக் கைப்பற்றும் மலக்குகள் அவரது உயிரைக் கைப்பற்றினர் 

மார்க்கத்தை முறையாக கற்றவர் ஷைத்தானின் பிடியில் இருந்து தன்னையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டிருப்பார். 

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ (ابن ماجة

நிச்சயமாக ஒரு ஆலிம் ஆயிரம் வணக்கசாலிகளை விட ஷைத்தானுக்கு மிகவும் கடினமானவர் ஆவார். அவ்வளவு எளிதாக அவரை வழி கெடுக்க அவனால் முடியாது. 

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمهالله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيماِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.) موسوعة الرد على الصوفية

அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் தியானத்தில் இருந்தபோது ஷைத்தான்  அல்லாஹ்வைப் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு அப்துல் காதிரே மற்றவர்களுக்கு ஹராமாக்கிய அனைத்தையும் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூற உடனே சுதாரித்துக் கொண்ட ஷைகு அவர்கள்  தஅவ்வுத் ஓதி, ஷைத்தானே இங்கிருந்து இழிவடைந்தவனாக சென்று விடு என்றார்கள். மீண்டும் அவன் பரவாயில்லையே உங்களுடைய திறமையால் தப்பி விட்டீர்கள் என்று கூற, அதற்கு ஷைகு அவர்கள் நான் என் திறமையால் தப்பிக்கவில்லை.அல்லாஹ்வின் அருளால் தப்பித்தேன் என்றார்கள்.  பின்பு ஷைத்தான் நான் இதுபோன்று எத்தனையோ பேரை வழி கெடுத்துள்ளேன் நீங்கள் எவ்வாறு தப்பித்தீர்கள் என்று கேட்க, நீ எப்போது மற்றவர்களுக்கு ஹராமாக்கிய அனைத்தையும் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறினாயோ அப்போது  நான் சுதாரித்துக் கொண்டேன் என  ஷைகு அவர்கள் பதில் கூறினார்கள். திறமையான ஆலிம்கள்  மட்டுமே இவ்வாறு ஷைத்தானின் சூழ்ச்சியை அறிந்து கொள்வார்கள். 

9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ أَتَيْتُكَ مِنْ الْمَدِينَةِ مَدِينَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُ بِهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَمَا جَاءَ بِكَ تِجَارَةٌ قَالَ لَا قَالَ وَلَا جَاءَ بِكَ غَيْرُهُ قَالَ لَا قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ إِنَّ الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الْأَنْبِيَاءِ إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ ( ابن ماجة

 கஸீர் இப்னுகைஸ் ரழி அவர்கள் கூறினார்கள் சிரியா நாட்டின் திமிஷ்க் நகரில் நான் அபுத்தர்தா ரழி அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் வந்து அபுத்தர்தா அவர்களே நான் மதீனாவில் இருந்து ஒரு ஹதீஸைத் தேடி உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறியவுடன் அவரிடம் அபுத்தர்தா ரழி அவர்கள் வேறு ஏதேனும் வியாபார நோக்கத்திற்காகவும் வந்தீர்களா என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். திரும்பவும் அபுத்தர்தா ரழி அவர்கள் இங்கு வந்த தற்கு வேறு ஏதாவது நோக்கமும் உள்ளதா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை. ஒரு ஹதீஸை கற்றுக் கொள்ள மட்டுமே நான் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தேன் என்று கூற, அப்போது அபுத்தர்தா ரழி அவர்கள் கூறினார்கள்.நபி ஸல்அவர்கள் கூற நான் கேள்விப்பட்டுள்ளேன். எவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை அல்லாஹ் இலகுவாக்குவான். கல்வியைத் தேடிச் செல்பவருக்காக மலக்குகள் தம் இறக்கைகளைத் தாழ்த்துகின்றனர். கல்வியைத் தேடிச் செல்பவருக்காக தண்ணீரில் உள்ள மீன்கள் உட்பட வானம் பூமியில் உள்ள அனைத்தும் துஆச் செய்கின்றன. வணக்கசாலியின் சிறப்பை விட ஆலிமின் சிறப்பாகிறது நட்சத்திரங்களின் சிறப்பை விட சந்திரனின் சிறப்பைப் போன்றதாகும்....        

عن أبي أمامة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إن لقمان قال لابنه: يا بني عليك بمجالسة العلماء،واسمع كلام الحكماء،فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر". (مجمع الزوائد

லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்தார்கள். மகனே உலமாக்களுடன் அமர்ந்து உபதேசம் செய்வதை அவசியமாக்கிக் கொள்.  மார்க்க மாமேதைகளில் தத்துவமாக மார்க்கத்தைப் பேசுபவர்களின் பேச்சைக்  கவனித்துக் கேள். ஏனெனில் இதுபோன்றவர்களின் பேச்சைக்  கொண்டு அல்லாஹ் உள்ளங்களை உயிராக்குவான். மழை மூலம் பயிர்களை செழிப்பாக்குவது போல..

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ، فَارْتَعُوا، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا رِيَاضُ الْجَنَّةِ؟ قَالَ:مَجَالِسُ الْعِلْمِ. (طبراني

சுவனப் பூங்காங்களை நீங்கள் கடந்து சென்றால் நன்றாக மேயந்து கொள்ளுங்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி ஸல் சுவனப் பூங்காங்கள் என்றால் எது என்று கேட்க, உலமாக்களின் இல்முடைய மஜ்லிஸ் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் 

புதன், 18 மார்ச், 2026

இஸ்திகாமத் - ஜும்ஆ பயான்

 20-03-2026

RAMZAN-  30 بسم الله الرحمن الرحيم  

       ஜும்ஆ பயான்- இஸ்திகாமத்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 ரமழான் முடிந்தவுடன் மஸ்ஜித்களை மறந்து விடுபவர்களை எச்சரிக்கும் விதமாக இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)المؤمن

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)البقرة -   

சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து செய்வது தான் அல்லாஹ்வுக்குப் பிடிக்கும்

عَنْ عَائِشَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَدِّدُوا وَقَارِبُوا وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ عَمَلُهُ الْجَنَّةَ وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ (بخاري

قاربوا أي اطلبوا قربة الله وطاعته بقدر ما تطيقونه وقال السيد أي حافظوا القصد في الأمور بلا غلو ولا تقصير وقيل تقربوا الى الله بكثرة القربات وقال الكرماني وقيل أي لا تبلغوا النهاية باستيعاب الأوقات كلها بل اغتنموا أوقات نشاطكم (شرح ابن ماجة

وقوله سددوا أي اطلبوا بأعمالكم السداد أي الصواب بين الإفراط و التفريط وكأنه تأكيد لقاربو (شرح ابن ماجة

கருத்து- வணக்க வழிபாடுகளில் நடுநிலையை கடை பிடியுங்கள். அதாவது சக்திக்கு முடிந்த வரை அமல் செய்யுங்கள். மேலும் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள். உங்களுடைய அமல் மட்டுமே உங்களை சுவனத்தில் நுழைத்து விடாது. மேலும் அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதாகும்

அமல்கள் மட்டுமே நம்மை சுவனத்தில் நுழைத்து விடாது என்பதிலிருந்து படிப்பினையான சம்பவம் 

عن جابر بن عبد الله رضي الله عنهما قال : خرج علينا النبي صلى الله عليه و سلم فقال : خرج من عندي خليلي جبريل آنفا فقال : يا محمد و الذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه و طوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا و البحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية و أخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل و شجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء و أخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز و جل عند وقت الأجل أن يقبضه ساجدا و أن لا يجعل للأرض و لا لشيء يفسده عليه سبيلا حتى بعثه و هو ساجد قال : ففعل فنحن نمر عليه إذا هبطنا و إذا عرجنا فنجده له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز و جل فيقول له الرب : ادخلوا عبدي الجنة برحمتي فيقول : رب بل بعملي فيقول الرب : أدخلوا عبدي الجنة برحمتي فيقول : يا رب بل بعملي فيقول الرب : أدخلوا عبدي الجنة برحمتي فيقول : رب بل بعملي فيقول الله عز و جل للملائكة قايسوا عبدي بنعمتي عليه و بعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة و بقيت نعمة الجسد فضلا عليه فيقول : أدخلوا عبدي النار قال : فيجر إلى النار فينادي : ربي برحمتك أدخلني الجنة فيقول : ردوه فيوقف بين يديه فيقول : يا عبدي من خلقك و لم تك شيئا ؟ فيقول : أنت يا رب فيقول : كان ذلك من قبلك أو برحمتي ؟ فيقول : بل برحمتك فيقول : من قواك لعبادة خمس مائة عام ؟ فيقول : أنت يا رب فيقول : من أنزلك في جبل وسط اللجة و أخرج لك الماء العذب من الماء المالح و أخرج لك كل ليلة رمانة و إنما تخرج مرة في السنة و سألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك ؟ فيقول : أنت يا رب فقال الله عز و جل : فذلك برحمتي و برحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام : إنما الأشياء برحمة الله تعالى يا محمد (حاكم)   قال الحاكم  رحمه الله هذا حديث صحيح الإسناد

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். என்னிடம் என்னுடைய தோழர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சென்றார்கள் அப்போது கூறினார்கள் உங்களை சத்தியத்தின் மீது அனுப்பிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்வுடைய அடியார்களின் ஒரு அடியார் முற்காலத்தில் நடுக்கடலில் உள்ள ஒரு 30 அடி உயரம் உள்ள மலை உச்சியில் 500 வருடங்கள் அவர் வாழ்ந்தார். அந்த மலையின் உயரமும் 30 அடி. அதன் அகலமும் 30 அடி.                                                     

 எப்படி பார்த்தாலும் அவர் கரையை அடைவதாக இருந்தால் எந்த திசையை நோக்கினாலும் ஆயிரம் மைல்கள் தூரம் பயணம் செய்தால் தான் அவர் கரையை அடைய முடியும். அப்படிப்பட்ட நடு தீவிலே அவர் வாழ்ந்தார். அல்லாஹ் அவ்வளவு உப்பு நீருக்கு மத்தியிலே அந்த மலை உச்சியில் ஒரு விரல் அளவுக்கு சுவையான நீர் ஊற்றை  வரவழைத்துக் கொண்டிருந்தான். சுய தேவைகளை அவர் மலையின் கீழ் பகுதிக்கு வந்து பூர்த்தி செய்து கொள்வார். மேலும் வருடமெல்லாம் எல்லா சீசனிலும் பழம் தருகின்ற பரக்கத்தான மாதுளை மரத்தை அல்லாஹ் அந்த மலை உச்சியில் வளரச் செய்தான். அவர் அந்த மாதுளையை உண்டு அந்த தண்ணீரை குடிப்பார். உளூச் செய்வதாக இருந்தால் மலையில் இருந்து கீழே இறங்கிக் கொள்வார். இவ்வாறாக 500 வருடங்கள் வணக்கத்திலேயே தன்னுடைய வாழ்க்கையை கழித்தார். ஒரு நாள் அவருடைய மரண நேரம் நெருங்கிய பொழுது அதை அல்லாஹ் அவருக்கு அறிவித்துக் கொடுத்த போது அவர் அல்லாஹ்விடம் யா அல்லாஹ் ஸஜ்தா செய்த நிலையிலே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் மேலும் என்னுடைய உடல் மண்ணுக்கு இரையாக க் கூடாது. என்னுடைய உடல் கெட்டுவிடக்கூடாது என்று அல்லாஹ்விடம் வேண்டினார். அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். சஜ்தா செய்த நிலையிலே அவருடைய உயிர் பிரிந்தது.  ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறும் போது                            

 ஒவ்வொரு முறையும் நாங்கள் பூமிக்கு இறங்கும்போதும் பூமியிலிருந்து விண்ணை நோக்கி செல்லும் போதும் அந்த உடலை நாங்கள் கடந்து செல்வோம். அது அப்படியே பாதுகாப்பாக இருக்கும். அந்த நல்லடியாரைப் பற்றி கியாமத்து நாள் விசாரணையின் போது நடைபெறப் போகும் ஒரு செய்தியை எங்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஞானத்திலிருந்து நாங்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டோம். அந்த நல்லடியாரை மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது மலக்குகளிடம் அல்லாஹ் சொல்லுவான். என்னுடைய இந்த அடியாரை என்னுடைய அருளால் நீங்கள் சுவனத்தில் நுழைவியுங்கள் என்று கூறுவான் அதற்கு அந்த நல்லடியார் ரப்பே என்னுடைய நற்செயலால் நான் சுவனம் நுழைகிறேனே என்று கூறுவார்.                                    

(அதாவது நாம் 500 வருடம் நற்செயல்கள் செய்திருக்கிறோமே என்று அதை பெரிதாக கருதுவார்) அதை அல்லாஹ் கண்டுகொள்ளாமல் என்னுடைய அருளால் அவரை சுவனத்தின் நுழையுங்கள் என்று கூறுவான். இவ்வாறாக மூன்று தடவைகளும் அவர் அதையே கூறும்போது

இறுதியாக அல்லாஹ் சொல்வான். என்னுடைய அடியார் என்னுடைய அருளைத் தவிர்த்து அவருடைய அமலால் சொர்க்கம் செல்ல நினைக்கிறார். எனவே அவருடைய அமல் சொர்க்கம் செல்வதற்குப் போதுமானதா என்று கணக்கிடுங்கள் என்று கூறுவான். அப்போது மலக்குகள் கணக்கிடுவார்கள். கணக்கிட்டுப் பார்த்து யா அல்லாஹ் அவருடைய 500 வருட அமல் உலகில் அவருக்கு நீ வழங்கிய கண் பார்வைக்கு மட்டுமே போதுமானதாக ஆகிவிட்டது அவருக்கு நீ வழங்கிய மற்ற அருட்கொடைகளுக்கு கூட அவருடைய அமல்கள் போதாது.  

அவருக்கு நீ உடலைத் தந்தாயே இன்னும் பல நிஃமத்துகளைத் தந்தாயே அதற்கெல்லாம் அவருடைய அமல் போதாது என்று சொன்னவுடன் அப்படியானால் அவரை நரகத்திலே நுழைத்து விடுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அப்பொழுதுதான் அந்த அடியார் தவறை உணர்ந்து ரப்பே உன்னுடைய அருளாலேயே நான் சுவனம் அடைகிறேன் என்று மன்னிப்புக் கேட்பார்.                       

அப்போது அல்லாஹ் அவரை என் முன்னால் கொண்டு வாருங்கள் என்பான். அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார் அவரிடம் அல்லாஹ் என் அடியானே நீ ஒரு நேரத்தில் இல்லாமல் இருந்தாய் உன்னை படைத்தது யார் என்று கேட்க ரப்பே நீதான் என்று அவர் கூறுவார். அப்போது அல்லாஹ் அது என்னுடைய அருளால் தானே என்று கேட்பான் ஆம் உன்னுடைய அருளால் தான் என்று அந்த அடியார் கூறுவார் 500 வருடங்கள் வணங்குவதற்கு உனக்கு ஆரோக்கியத்தை தந்தது யார் என்று அல்லாஹ் கேட்பான் நீ தான் என்று அந்த அடியார் கூறுவார் மேலும் அல்லாஹ் கேட்பான் இந்த மலை உச்சியிலே அலைகளுக்கு நடுவே என்று அலையும் உம்மைத்  தாக்காமல் உன்னை தங்க வைத்து உனக்காக உப்புத் தண்ணீருக்கு மத்தியிலே சுவையான நீரைக் கொடுத்தது மட்டுமன்றி சீசனில் மட்டுமே விளையக்கூடிய மாதுளையை வருடமெல்லாம் தந்தது மட்டுமன்றி நீ கேட்டவாறு சஜ்தாவுடைய நிலையிலே உன்னுடைய உயிரைக் கைப்பற்றியது யார்  என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ரப்பே நீ தான் எல்லாம் என்று கூறுவார். இப்படியெல்லாம் அவருக்குப் புரிய வைத்து பிறகு அல்லாஹ் என்னுடைய அருளால் அவரை சுவனத்தில் நுழைய வையுங்கள் என்று கூறுவான் அவ்வாறு அவர் சுவனத்திலே நுழைய வைக்கப்படுவார் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறும்போது அனைத்து நிஃமத்துகளும் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு தானே தவிர அடியார்களின் அமலைக் கொண்டு கிடையாது என்று கூறினார்கள்.                                 

மேற்படி சம்பவத்தில் படிப்பினைகள்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் போது நான் உட்பட உலகத்தில் யாரும் அல்லாஹ்வுடைய அருள் இல்லாமல் சுவனம் அடைய முடியாது என்று கூறினார்கள்

படிப்பினை – 1   நீ கொடுத்ததற்கு நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம் என்ற நாகூர் அனிபாவின் பாடலைப் போல நாம் காலமெல்லாம் பல்லாயிரம் வருடங்கள் வணங்கினாலும் அல்லாஹ் கொடுத்த நன்கொடைகளுக்கு நன்றியாக .ஆக முடியாது

படிப்பினை – 2  கண்கள் என்பது அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது இந்த கண்களால் 6 ஆயிரம் நிறங்களை நாம் பகுத்துப் பார்க்க முடியும் ஆடு மாடுகளால் குறிப்பிட்ட நிறங்களை மட்டும் தான் பார்க்க முடியும்.


படிப்பினை – 3   இறந்ததற்குப் பிறகும் அழிந்து விடாமல் உடல்கள் பாதுகாக்கப்படுவது நபிமார்கள் விஷயத்தில் உறுதியான விஷயமாகும் அல்லாஹ் மற்ற நல்லடியார்களை அவன் நாடினால் அவ்வாறு பாதுகாப்பான் என்கிற படிப்பினையும் இதில் உண்டு


கடல் என்று சொன்னாலே அவ்வப்போது மாபெரும் அலைகள் தோன்றுவது இயல்பு

எத்தனையோ அலைகள் நூறடி உயரத்திற்கு மேலே கூட  உயரும்.  அவ்வாறு இருக்க முப்பதடி உயரமே இருந்த இந்த தீவில் 500 வருடங்கள் எந்த அலைகளும் அவரை தாக்கி விடாமல் அல்லாஹ்  பாதுகாத்திருக்கிறான்


தொடர்படியான அமல் நல்ல மவ்த் ஏற்பட காரணமாக அமையும். ஒரு அடியானை அல்லாஹ் விரும்பினால் தொடர்ந்து நற்செயலுக்கான வாய்ப்பை வழங்கி அந்நிலையில் அவரை மவ்த்தாக்குவான்

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ (ترمذي -   كِتَاب الْقَدَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ 

மிஃராஜில் சுவனத்தில் பிலால் ரழி அவர்களின் காலடித்தடத்தை நபி ஸல் அவர்கள் காதில் கேட்டதற்கு காரணம் உளூ என்ற நற்செயலை அவர்கள் தொடர்ந்து செய்தது தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الْإِسْلَامِ فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ (بخاري

நபி ஸல் அவர்கள் பிலால் ரழி அவர்களிடம் இஸ்லாத்திற்கு வந்த பிறகு நீங்கள் செய்த உயர்ந்த அமலை எனக்குக் கூறும். ஏனெனில் என்னுடைய மிஃராஜ் பயணத்தில் எனக்கு முன்பாக உமது காலடி சப் த த்தை க் கேட்டேன் என்று கூறினார்கள். அதற்கு பிலால் ரழி அவர்கள் நான் அப்படி ஒன்றும் உயர்ந்த அமலை செய்து விடவில்லை. எனினும் நான் எப்போதெல்லாம் உளூச் செய்வேனோ அது இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் உளூச் செய்யும் போதெல்லாம் அல்லாஹ் எனக்கு நாடிய தொழுகையை நான் தொழுவேன் என்றார்கள் 

மற்ற மாதங்களிலும் அமல்களை தொடர்ந்து செய்வதற்கான பயிற்சியாகத் தான் ரமழானின் அமல்கள் கடமையாக்கப்பட்டுள்ளது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183البقرة) ذَكَرَ كَعْب رضي الله عنه أَنَّهُ مَنْ صَامَ رَمَضَان وَهُوَ يُحَدِّث نَفْسه إِذَا أَفْطَرَ رَمَضَان أَنْ لَا يَعْصِي اللَّه دَخَلَ الْجَنَّة بِغَيْرِ مَسْأَلَة وَلَا حِسَاب (تفسير ابن كثير)

ரமழான் முடிந்தாலும் நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டேன் என்ற நல்ல மன உறுதியுடன் யார் ரமழானில் நோன்பு வைப்பாரோ அவர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார்.

ஷைத்தான்கள் சிறை பிடிக்கப்படும் மாதமான ரமழானில் அமல்கள் செய்வது வாகன நெரிசல் இல்லாத நேரங்களில் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது போல... இவ்வாறு வண்டி ஓட்டுபவனை டிரைவர் என்று கூற முடியாது.  வாகன நெரிசல் உள்ள நேரங்களிலும் வண்டி ஓட்டுபவன் தான் உண்மையான டிரைவர். அதுபோல் ஷைத்தான்கள் அவிழ்த்து விடப்படும் மற்ற மாதங்களிலும் அமல்கள் செய்பவர் தான் உண்மையான வணக்க சாலி ஆவார்.

முனாஃபிக்கின் அடையாளம் எந்த நற்செயலையும் தொடர்ந்து செய்ய மாட்டான் ஒருவரிடம் நிஃபாக் இல்லை என்பதற்கான அடையாளம் எல்லா நேரத்திலும் வணங்குவது தான்

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا (142)مُذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لَا إِلَى هَؤُلَاءِ وَلَا إِلَى هَؤُلَاءِ والمذبذب : المضطرب الذي لا يبقى على حالة مستقلة. عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)

 நிஃபாக் உள்ளவர்களுக்கு இஷாவும் ஃபஜ்ரும் மிகவும் சிரமமான தொழுகைகள். உண்மையில் அந்த இரண்டு தொழுகைகளிலும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என அவர்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் வந்து விடுவார்கள். நான் தொழ வைப்பதற்கு யாரையேனும் பொறுப்புச் சாட்டி விட்டு என்னோடு சில வாலிபர்களை அழைத்துக் கொண்டு யாரெல்லாம் தொழ வரவில்லையோ அவர்களின் வீடுகளை எரிக்க என் மனம் நாடுகிறது என்றார்கள்.                                        

விளக்கம்- அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மஃரிப் ஆகி விட்டாலே மனிதர்கள் வீடுகளை விட்டும் வெளியே வர மாட்டார்கள். உணவு உண்டு விட்டுத் தூங்கி விடுவார்கள்.  

எந்த ஒரு அமலிலும் இஸ்திகாமத் வேண்டும்

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)فصلت

சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து செய்தால் தான் பலனைத் தரும்

عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ مَنْ هَذِهِ قَالَتْ فُلَانَةُ تَذْكُرُ مِنْ صَلَاتِهَا قَالَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لَا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَاوَمَ عَلَيْهِ صَاحِبُهُ (بخاري)

பல்வேறு விஷயங்களில் சஹாபாக்களின் இஸ்திகாமத்

عَنْ اِبْن عَبَّاس قَالَ : تُلِيَتْ هَذِهِ الْآيَة عِنْد النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَيَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْض حَلَالًا طَيِّبًا فَقَامَ سَعْد بْن أَبِي وَقَّاص فَقَالَ يَا رَسُول اللَّه اُدْعُ اللَّهَ أَنْ يَجْعَلنِي مُسْتَجَاب الدَّعْوَة فَقَالَ " يَا سَعْد أَطِبْ مَطْعَمك تَكُنْ مُسْتَجَاب الدَّعْوَة وَاَلَّذِي نَفْس مُحَمَّد بِيَدِهِ إِنَّ الرَّجُل لِيَقْذِف اللُّقْمَة الْحَرَام فِي جَوْفه مَا يُتَقَبَّل مِنْهُ أَرْبَعِينَ يَوْمًا وَأَيّمَا عَبْد نَبَتَ لَحْمه مِنْ السُّحْت وَالرِّبَا فَالنَّار أَوْلَى بِهِ (ابن 

ஸஃதுப்னு அபீ வக்காஸ் ரழி  இந்த அறிவுரைக்குப் பின்னால் வாழ்நாள் முழுக்க ஹராமை சாப்பிட்டதே கிடையாது. அவர்கள் கூஃபாவில் இருந்த காலத்தில் அவர்களுடைய ஆடு  வெறு ஒருவருடைய தோட்டத்தில்  சென்று மேயந்து விட்டது என்பதற்காக அந்த ஆட்டில் இருந்து இனிமேல் பால் கூட நான் கறக்க மாட்டேன் என்று கூறும் அளவுக்கு இஸ்திகாமத்துடன் இருந்தார்கள்.

சின்னச் சின்ன  விஷயங்களிலும் இமாம்களின் இஸ்திகாமத்

இமாம் அபூஹனீஃபா ரஹ் வாழ்நாள் முழுக்க யாரைப்பற்றியும்புறம் பேசியது கிடையாது

இமாம் ஷாஃபிஈ ரஹ் வாழ்நாள் முழுக்க ஒரு   பொய் கூடபேசியதே கிடையாது

இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் பேசினால் கல்வியைத்தவிர வேறு எதுவும்  பேசியதில்லை

இன்றைக்கு எந்த விஷயத்திலும் நம்மிடம் இஸ்திகாமத் இருப்பதில்லை. சில இளைஞர்கள்  ஷரீஅத் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களின்  பெற்றோர் அல்லது அவர்களின் ஊர் நடைமுறை என்பது போன்று விஷயங்கள் குறுக்கே வரும்போது அவர்களின் இஸ்திகாமத் தளர்ந்து விடுகிறது.

வாழ்க்கையில் சிரமம் ஏற்படும்போது மட்டும் தொழும் சந்தர்ப்பவாதிகளைப் பற்றி....

சில முஸ்லிம்கள் இப்படியும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தேவை நிறைவறவிருந்தால் மட்டும் தொழுவார்கள் அந்த தேவை நிறைவேறி விட்டால் அல்லது அந்த துன்பம் நீங்கி விட்டால் தொழுகையை மறந்து விடுவார்கள்

ஆழ்கடல் இருளில் தன் சோதனையை நீக்கும்படி இருவர் துஆ செய்தனர். அதில் ஒருவரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஏனெனில் அவர் சிரமத்தின் போது மட்டும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர் அல்ல. எப்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர். அதனால் அவரது சிரமத்தை அல்லாஹ் நீக்கினான். அவர்தான் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்

وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87الانبياء)

நபி யூனுஸ் தன் உம்மத்தினருக்கு இஸ்லாமை எடுத்துக் கூறியும் கேட்காததால் அல்லாஹ்விடம் அவர்களின் மீது வேதனையை இறக்க துஆ செய்தார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டு இந்த நாளில் வேதனை வரும் என்று அறிவித்தான் அதை அப்படியே அந்த மக்களிடம் நபி யூனுஸ் அலை கூறினார்கள் அப்பொழுது அந்த மக்களுக்கு பயம் வந்தது அவர்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடி பெரியவர்கள், சிறியவர்கள், கால்நடைகள் என எல்லோரும் ஒன்று கூடி துஆ செய்ததால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த வேதனையை அல்லாஹ் ரத்து செய்தான் இதற்கிடையே வேதனை வரும் என்று அறிவித்த நபி யூனுஸ் அலை ஊரை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள் அல்லாஹ் அறிவித்தும் கூட இப்படி வேதனை வராமல் ஆகி விட்டதே என்ற அதிருப்தியுடன் அவர்கள் வெளியேறியதாலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி வெளியேறியதால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான்.

இன்னொருவன் ஃபிர்அவ்ன் -அவனும் செங்கடலில் மூழ்கடிக்கப்படும் இறுதி நேரத்தில் தான் அல்லாஹ்வை ஏற்று அல்லாஹ்விடம் தம்மை காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தான் ஆனால் அவனது ஈமானும் ஏற்கப்படவில்லை அவன் காப்பாற்றப்படவுமில்லை. ஏனெனில் அவன் தனக்குக் கஷ்டம் வரும்போது மட்டுமே அல்லாஹ்வை அழைத்தான். அதேபோல சில முஸ்லிம்கள் சிரமமான நேரங்களில் மட்டும் அல்லாஹ்வைத் தொழுது சந்தோஷமான நேரங்களில் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். இவர்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான்

وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ- آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91يونس)عَنِ ابْنِ عَبَّاسٍ رض إِنَّ جِبْرِيلَ كَانَ يَدُسُّ فِي فَمِ فِرْعَوْنَ الطِّينَ مَخَافَةَ أَنْ يَقُولَ : لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ.(مسند أحمد, تفسير ابن كثير)

கடைசி நேரத்தில் துன்பத்தின் போது ஃபிர்அவ்ன் கேட்கும் பிரார்த்தனை ஒருவேளை ஏற்கப்பட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக அவன் பிரார்த்தனையை முழுமையாக்க விடாமல் அவனுடைய வாயில் ஜிப்ரயீல் அலை மண்ணைப் போட்டு திணித்தார்கள்


ரமழான் முடிந்தவுடன் ஐவேளை தொழுகையை விட்டு விடுபவர்களுக்கு உதாரணங்கள்

உதாரணம் 1ஒரு பெண் காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி, பின்னல் போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு புது மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும் அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப்பற்றி என்ன நினைப்போம்

وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا (92)النحل

قَالَ عَبْد اللَّه بْن كَثِير السُّدِّيّ : هَذِهِ اِمْرَأَة خَرْقَاء كَانَتْ بِمَكَّة كُلَّمَا غَزَلَتْ شَيْئًا نَقَضَتْهُ بَعْد انْبِرَامِهِ  (تفسير ابن كثير

மக்காவில் முட்டாள் தனமான இப்படியொரு பெண் இருந்தாள். அழகாக நூல் நூற்று அதை ஒரு கோர்வையாக கஷ்டப்பட்டு ஆக்கிய பின் கடைசியில் அனைத்தையும் கலைத்துப் போட்டு விடுவாள். அதுபோல ரமழானில கஷ்டப்படு அமல் செய்து இறுதியில் அனைத்தையும் வீணாக்கி விடுகிறோம்


உதாரணம் 2  ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும் நேர்த்தியாக கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து, கதவு இங்கே அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை ஏவி,  இரவும், பகலும் விழித்திருந்து,  ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் 

உதாரணம்- 3-   ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து,  காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள் கழித்து மருத்துவர் இவரிடம் நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய வீட்டு மாடிப்படியில் முடிந்த வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி செய்யுங்கள் என்கிறார். இவரும் தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற முடிகிறது. பிறகு முடியவில்லை. எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ ஒரு நாளில் அனைத்து மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு மாடிக்குச் சென்றவர் பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை உடைத்துக் கொண்டார். எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

உதாரணம்- 4-  ஒருவர் நடந்து செல்லும் போது சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி. அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, “தம்பி... பார்த்துப் போ ! மறுபடியும் சேற்றில் விழுந்து விடாதே !  என்று எச்சரித்து அனுப்ப, அவனோ மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம் 

ஆக மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் அனைத்தும்  ரமழானில் தொழுகையாளிகளாக இருந்து பின்பு ரமழான் முடிந்த பின்பு மஸ்ஜிதை மறந்து விடுபவர்களுடைய நிலையைப் போன்று தான்.  

தொழுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு நேரமில்லாமலேயே ஆக்கப்படும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلَأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلَّا تَفْعَلْ مَلَأْتُ يَدَيْكَ شُغْلًا وَلَمْ أَسُدَّ فَقْرَكَ (ترمذي)أي اشتغالا من غير منفعة ولم أسد فقرك أي لا من شغلك ولا من غيره وحاصله أنك تتعب نفسك بكثرة التردد في طلب المال ولا تنال إلا ما قدرت لك من المال في الأزل وتحرم عن غنى القلب لترك عبادة الرب (مرقاة)

அல்லாஹ் கூறுகிறான்- ஆதமின் மகனே என்னை வணங்குவதற்கு நேரத்தை (நிர்ணயம் செய்து)ஒதுக்கு! அவ்வாறு செய்தால் உனக்குள் (பணக்காரத்தனத்தை உருவாக்குவேன்) பிறரிடம் தேவையாகாத நிலையை ஏற்படுத்துவேன். உன் வறுமையைப் போக்குவேன். அவ்வாறு நீ நேரம் ஒதுக்கா விட்டால் அல்லாஹ்வை வணங்க நேரமில்லை என்று கூறி விட்டால் உன் கைகள் நிறைய வேலைப் பழுவை ஏற்படுத்தி நேரமில்லாமல் ஆக்கி விடுவேன். உன் வறுமையையும் போக்க மாட்டேன்.

விளக்கம்- இப்படிப்பட்டவரின் நேரங்கள் தேவையில்லாமல் வீணாகும். குறுகிய நேரத்தில் முடிய வேண்டிய வேலையை அல்லாஹ்வே நீளமாக்கி விடுவான். இறைவனை வணங்க நேரம் ஒதுக்கி இலகுவான முறையில் அடைய வேண்டிய வருமானத்தை இவன் மிகவும் சிரமப்பட்டு அடைவான். நிறைய சம்பாதித்தாலும் மனதளவில்  ஏழையாகவே இருப்பான். 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ (ابن ماجة

பொருள் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. மன நிறைவு உள்ளவனே பணக்காரன்.


வியாழன், 5 மார்ச், 2026

இஃதிகாஃப்

 06-03-2026

RAMZAN- 16 بسم الله الرحمن الرحيم  

      இஃதிகாஃபின் சிறப்புகளும்  சட்டங்களும்

ஜும்ஆ பயான் 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

ரமழான் கடைசி பத்து நாட்களின் சிறப்பு

عن عَائِشَة رض كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِى غَيْرِهِ(مسلم) باب الاِجْتِهَادِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ – كتاب الاعتكاف 

மற்ற நாட்களை விட ரமழான் கடைசி பத்து நாட்களில் நபி ஸல் அவர்கள் அதிகம் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்

عَنْ عَائِشَةَ رَضِ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَه(بُخاري) باب الْعَمَلِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ-كتاب فضل ليلة القدر- قِيلَ لأَبِي بَكْرٍ مَا رَفْعُ الْمِئْزَرِ؟ قَالَ:اعْتِزَالُ النِّسَاءِ (مصنف ابن ابي شيبة) 

இஃதிகாஃப் என்பதன் பொருள்

وَالِاعْتِكَافُ فِي اللُّغَةِ مُشْتَقٌّ مِنْ الْعُكُوفِ وَهُوَ الْمُلَازَمَةُ وَالْحَبْسُ وَالْمَنْعُ وَمَحَاسِنُ الِاعْتِكَافِ ظَاهِرَةٌ فَإِنَّ فِيهِ تَسْلِيمَ الْمُعْتَكِفِ كُلِّيَّتَهُ إلَى طَاعَةِ اللَّهِ لِطَلَبِ الزُّلْفَى وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (جوهرة النيرة)

இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல், சிறை வைத்தல், ஒன்றைப் பற்றிக்கொண்டு அதிலேயே மனைதைக் கட்டுப்படுத்தி வைத்தல் ஆகிய சொற்பொருள்கள் உண்டு. இஸ்லாத்தில் ‘இஃதிகாஃப்’ என்பது, பள்ளிவாசலில் குறிப்பிட்ட முறையில் ஒருவர் தங்கியிருப்பதற்கு பெயராகும். அவசியத் தேவைகளுக்குத் தவிர வேறு எதற்காகவும் பள்ளிவாசலைவிட்டு வெளியே போகாமலும், அவசியமான பேச்சுகளைத் தவிர வேறு எந்தப் பேச்சுகளையும் பேசாமலும் பள்ளியில் தங்கியிருந்து தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆ போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவதே இஃதிகாஃப் ஆகும்.

இஃதிகாஃபின் நன்மைகள்

عن الحسين بن علي رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين. (شعب الايمان-لبيهقى-3680)

ஹுஸைன் பின் அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தவருக்கு  ஹஜ்ஜும் இரண்டு உம்ராவும் (செய்த நன்மை) கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷுஃபுல் ஈமான்-பைஹகீ-

عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين. (رواه الطبرانى, والحاكم, والبيهقى-3965)

இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒருநாள் இஃதிகாஃப் இருப்பவருக்கு, அவருக்கம் நரகத்திற்கும் இடையில், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியை விட மிக தூரமான மூன்று அகழிகளை ஏற்படுத்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ, ஹாகிம், பைஹகீ-

عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال : من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (رواه الديلمى- 21356)

ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: மன உறுதியோடும், நன்மையை எதிர்பர்த்தும் இஃதிகாஃப் இருப்பவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தைலமீ-21356)

இஃதிகாஃப் மூன்று வகை 1, வாஜிப் [நேர்ச்சையின் இஃதிகாஃப்]  2, சுன்னத் [ரமளான்  கடைசிப்பத்தின் இஃதிகாஃப்] 3,  நஃபில்

الاول-عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ رضي الله عنه سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ فَأَوْفِ بِنَذْرِكَ (بخاري)2043 بَاب الِاعْتِكَافِ لَيْلًا-كتاب الاعتكاف-

வாஜிபான இஃதிகாஃப் என்பது நேர்ச்சை இஃதிகாஃபைக் குறிக்கும் செய்யும் உமர் ரழி அவர்கள் நபி ஸல்அவர்களிடம் நான் மஸ்ஜிதுல் ஹராமில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்தேன் அதை இப்போது நிறைவேற்றவா என கேட்க, ஆம் நிறைவேற்றுங்கள் என்றார்கள்

الثاني عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ (بُخاري( باب الاِعْتِكَافِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ- 

சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃப். இதுதான் [ரமளான்  கடைசிப்பத்தின் இஃதிகாஃப்]   

நபி (ஸல்) அவர்கள் கடைசி காலம் வரை ரமளான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்துவந்தனர்.

-الثالث  فَالنَّفَلُ يَجُوزُ بِغَيْرِ صَوْمٍ هُوَ أَنْ يَدْخُلَ الْمَسْجِدَ بِنِيَّةِ الِاعْتِكَاف مِنْ غَيْرِ أَنْ يُوجِبَهُ عَلَى نَفْسِهِ فَيَكُونُ مُعْتَكِفًا بِقَدْرِ مَا أَقَامَ فَإِذَا خَرَجَ انْتَهَى اعْتِكَافُهُ (جوهرة النيرة)

மஸ்ஜிதில் நுழையும் போது இஃதிகாஃப் நிய்யத்தில் நுழைவது. சிறிது நேரமாக இருந்தாலும் சரி. இதற்கு காலம் நிர்ணயம் இல்லை. எப்போது அவர் வருவாரோ அத்தோடு அது நிய்யத் முடிந்து விடும்.

கடைசிப் பத்தில் மூன்று நாள், அல்லது ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பது சுன்னத் முஅக்கதாவாக ஆகாது 

قَالَ الزُّهْرِيُّ  يَا عَجَبًا لِلنَّاسِ تَرَكُوا الِاعْتِكَافَ وَمَا تَرَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ دَخَلَ الْمَدِينَةَ إلَى أَنْ تَوَفَّاهُ اللَّهُ وَهُوَ أَشْرَفُ الْأَعْمَالِ لِأَنَّهُ جَمَعَ بَيْنَ عِبَادَتَيْنِ الصَّوْمُ وَالْجُلُوسُ فِي الْمَسْجِدِ وَفِيهِ تَفْرِيغُ الْقَلْبِ وَتَسْلِيمُ النَّفْسِ إلَى بَارِئِهَا وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (الجوهرة

ஆச்சரியமாக இருக்கிறது. நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த பின்பு  ஒரு வருடம் கூட விடாத இந்த சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃபை மக்கள் எவ்வாறு விடுகிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது இந்த இஃதிகாஃப் நோன்பு என்ற வணக்கத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இரண்டு வணக்கமாக நிறைவேறுகிறது. உள்ளத்தை அல்லாஹ்விடம் ஒப்படைப்பது என்பதும் உலக சிந்தனைகளில் இருந்து தூரமாக இருப்பதும் இதில் இருக்கிறது 

இஃதிகாஃப் இருப்பவருக்கு நோன்பு கட்டாயமாக்கப்பட்டதின் தாத்பரியம். அல்லாஹ்வின் வீட்டில் இருப்பதை தனக்கு அவசியமாக்கிக் கொண்ட ஒருவர் அல்லாஹ்வின் விருந்தாளியாக ஆக வேண்டுமானால் நோன்பு அவசியம்

وَمِنْ مَحَاسِنِهِ أَيْضًا اشْتِرَاطُ الصَّوْمِ فِي حَقِّهِ وَالصَّائِمُ ضَيْفُ اللَّهِ فَالْأَلْيَقُ بِهِ أَنْ يَكُونَ فِي بَيْتِ اللَّهِ  (الجوهرة)

இஃதிகாஃப் ஆரம்பித்த பின் நிர்பந்தத்தால் விடுபட்டால் அதை இன்னொரு நாளில் களா செய்ய வேண்டுமா ?

عَنْ عَائِشَةَ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا وَسَأَلَتْ حَفْصَةُ عَائِشَةَ أَنْ تَسْتَأْذِنَ لَهَا فَفَعَلَتْ فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ أَمَرَتْ بِبِنَاءٍ فَبُنِيَ لَهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى انْصَرَفَ إِلَى بِنَائِهِ فَبَصُرَ بِالْأَبْنِيَةِ فَقَالَ مَا هَذَا قَالُوا بِنَاءُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَالْبِرَّ أَرَدْنَ بِهَذَا مَا أَنَا بِمُعْتَكِفٍ فَرَجَعَ فَلَمَّا أَفْطَرَ اعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ (بخاري) بَاب مَنْ أَرَادَ أَنْ يَعْتَكِفَ ثُمَّ بَدَا لَهُ أَنْ..

 ஆயிஷா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ரமழானில் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கப் போவதாக கூறினார்கள் அப்போது நானும் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருக்கிறேன் என்று கூற நபி ஸல் எனக்கு அனுமதி கொடுத்தார்கள் அங்கே ஒரு கூடாரத்தை  அமைத்துக் கொண்டேன் இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா ரழி அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார் அவ்வாறே செய்தேன் இதைக்கண்ட ஜைனப்  பின்து ஜஹ்ஷ் ரழி ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார் அவ்வாறே செய்யப்பட்டது  நபி ஸல் அவர்கள் தொழுகை முடிந்து தன் கூடாரத்திற்கு சென்ற போது அங்கே பல கூடாரங்களைக் கண்டு இவை என்ன  என்று கேட்டார்கள் அதற்கு நபித் தோழர்கள் இவை  ஆயிஷா , ஹஃப்ஸா, ஜைனப் ரழி ஆகியோரின் கூடாரங்கள் என்று கூற , இதன் மூலம் நன்மையைத் தான் இவர்கள் நாடுகிறார்களா என்று கேட்டு விட்டு இவற்றை நான் காணாதவாறு அப்புறப் படுத்துங்கள் என்றார்கள் உடனே அவைகள் அப்புறப்படுத்தப்பட்டன.  பின்பு நபி ஸல் அவர்கள் நான்  இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை என்று கூறி விட்டு ஷவ்வால் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் புஹாரீ – 2041, 

  

இந்த ஹதீஸை வைத்து இஃதிகாஃபை ஆரம்பித்து நடுவில் விட்டு விட்டால் பின்னர் வேறொரு நாளில் நிறைவேற்ற வேண்டுமென சில அறிஞர்கள் கூறுவர். ஆனால் வேறு சிலர் வேறொரு நாளில் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்று கூறி, அதற்கு ஆதாரமாக பின்வரும் விளக்கத்தை கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் ஷவ்வால் மாதம் இஃதிகாஃப் இருந்த போது தம் மனைவியரை இஃதிகாஃப் இருக்குமாறு கூறவில்லை. மேலும் நபி ஸல் அவர்கள் ரமழானில் கைவிட்ட இஃதிகாஃபை ஷவ்வால் மாதத்தில்  நிறைவேற்றுவது கூடும் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்களே தவிர கட்டாயம் என்பதற்காக அல்ல.. 

அந்த வருடம் மட்டும் ரமழானில் இஃதிகாஃபை விட்டதற்கு காரணம் என்ன ?

கூடாரங்கள் அதிகமானதால் பள்ளிவாசலில் தொழுகையாளிகளுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது மூன்று மனைவியரும் பள்ளிவாசலில் இருக்கும் நிலை ஏற்பட்டதால் வீட்டில் மனைவியருடன் இருப்பதைப் போன்றே சூழல் உருவாகி விடும். இஃதிகாஃபின் நோக்கமே சிதைந்து விடும் என்பதால் தம் மனைவியரையும் சங்கடப்படுத்தாத வகையில் ரமழானில் இஃதிகாஃபை கைவிட்டார்கள் ( ஃபத்ஹுல் பாரீ)                                                           

இந்த இஃதிகாஃபின் முக்கிய நோக்கம் லைலத்துல் கத்ரு இரவை அடைவதாகும்

ஒரு வருடத்தில் நபி ஸல் லைலத்துல் கத்ரு இரவைத் தேடி ரமழானின் மூன்று பத்து நாட்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். முதல் பத்து முடிந்த போது அதில் லைலத்துல் கத்ரு இல்லை என அறிவிக்கப்பட்டு இரண்டாம் பத்திலும் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்பு அதிலும் லைலத்துல் கத்ரு இல்லை என்று அறிவிக்கப்பட்டு கடைசிப் பத்தில் அந்த இரவு உண்டு என்பதை உறுதி செய்தார்கள் 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ..قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الْأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ1 فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ2 تَصْدِيقَ رُؤْيَاهُ وفي رواية فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاء وَالطِّين مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ (بخاري)(باب السُّجُودِ عَلَى الأَنْفِ وَالسُّجُودِ عَلَى الطِّينِ)كتاب الأذان

ஒரே ஒரு லைலத்துல் கத்ரு இரவை பத்து நாட்களிலும் தேட வேண்டுமா என்று சங்கடப்பட்டு 27-ம் இரவில் மட்டும் அமல் செய்தால் அந்த இரவு கிடைத்து விடும் என்று எண்ணுபவர்களுக்கு மேற்படி ஹதீஸ் பகதிலடியாக  அமைந்துள்ளது. நபி ஸல் அவர்களை மூன்று பத்து நாட்களிலும் அந்த இரவை அல்லாஹ் தேட வைத்துள்ளான்

இஃதிகாஃபின் ஒழுக்கங்கள்- 

عن ابن عباس والحسن رض قالا  لاَ اعْتِكافَ إِلاَّ فِى مَسْجِدٍ تُقَامُ فِيهِ الصَّلاَةُ (سنن الكبري للبيهقي)

ஐந்து வேளை தொழுகை நடைபெறும் மஸ்ஜிதில் மட்டுமே ஆண்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும்

عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتِ السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لاَ يَعُودَ مَرِيضًا وَلاَ يَشْهَدَ جَنَازَةً وَلاَ يَمَسَّ امْرَأَةً وَلاَ يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ إِلاَّ لِمَا لاَ بُدَّ مِنْهُ وَلاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ (ابوداود) بَاب الْمُعْتَكِفِ يَعُودُ الْمَرِيضَ-الصَّوْمِ- 

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை நலம் விசாரிக்க வெளியே செல்ல மாட்டார். ஜனாஸாவில் கலந்து கொள்ள வெளியே வர மாட்டார். மனைவியைத் தொடக் கூடாது. மனைவியைதக் கட்டித் தழுவக் கூடாது. அவசியமான தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். நோன்பு இல்லாமல் இந்த இஃதிகாஃப் கூடாது- ஆயிஷா ரழி 

المعتكف إذا أتى كبيرة فسد اعتكافه لأن الكبيرة ضد العبادة كما أن الحدث ضد الطهارة والصلاة وترك ما حرم اللّه أعلى منازل الاعتكافِ في العبادة  قاله ابن خويز منداد عن مالك (قرطبي)

குர்துபி யில் உள்ள வாசகம்.  இஃதிகாஃப் இருப்பவர் பெரும்பாவம் செய்து விட்டால் அவரின் இஃதிகாஃப் முறிந்து விடும். காரணம் பெரும்பாவம் என்பது இஃதிகாஃபின் நோக்கத்திற்கு நேர் மாற்றமான செயலாகும் எவ்வாறு காற்றுப் பிரிந்தால் சுத்தம் இல்லாமல் ஆகி விடுமோ அதுபோல. -  இமாம் மாலிக் ரஹ்

வியாபாரப்பொருட்களை பள்ளிக்குள் கொண்டு வராமல் வியாபாரத்தை பேசி முடிப்பது நிர்பந்தமான சூழ்நிலையில் மட்டும் கூடும் இது பற்றி எல்லா சட்ட நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.                                               

பள்ளிக்கு வெளியே நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிக்கலாம்

أَنْ لاَ يَعُودَ مَرِيضًا : عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ النَّبِىُّ صلى الله عليه وسلم يَمُرُّ بِالْمَرِيضِ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ وَلاَ يُعَرِّجُ4 يَسْأَلُ عَنْهُ (ابوداود) عَنْ عَمْرَةَ  أَنَّ عَائِشَةَ رضي الله عنها كَانَتْ إِذَا اعْتَكَفَتْ لاَ تَسْأَلُ عَنِ الْمَرِيضِ إِلاَّ وَهِىَ تَمْشِى لاَ تَقِفُ (مؤطا)

நபி ஸல் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது  நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிப்பார்கள் நின்று கொண்டு நலம் விசாரிக்க மாட்டார்கள்

மலம்,ஜலம் கழிக்கச் செல்பவர் யாரிடமும் தேவையின்றி பேசிக் கொண்டிருக்காமல் உடனே திரும்பி விடுவது நல்லது

وَلَا يَخْرُجُ مِنْ الْمَسْجِدِ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ وَهِيَ الْغَائِطِ وَالْبَوْلِ لِأَنَّهُ مَعْلُومٌ وُقُوعُهَا فَلَا بُدَّ مِنْ الْخُرُوجِ لِأَجْلِهَا وَلَا يَمْكُثُ بَعْدَ فَرَاغِهِ  مِنْ الطَّهُورِ (الهداية)

கழிவறையில் நெருக்கடி இருந்தால் வேறு நேரத்தில் செல்வது நல்லது. அல்லது இஃதிகாஃப் இருப்பவருக்காக பிறர் விட்டுக் கொடுப்பது நல்லது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் கழிவறையில் அதற்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருப்பது கூடாது

நபி[ஸல்] ரமளானில் இஃதிகாஃப் இருக்கும் போது அதுவரை இறங்கிய குர்ஆனை முழுவதும் வானவர் ஓதிக்காட்டுவார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا وَكَانَ يُعْرَضُ عَلَيْهِ الْقُرْآنُ فِي كُلِّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ (ابوداود- بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ- كِتَاب الصِّيَامِ

இஃதிகாஃப் இருக்கும்போது குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் என்ற படிப்பினையும் மேற்படி ஹதீஸில் உண்டு

மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தால் இஃதிகாஃபின் நன்மை கிடைக்காது

عَمْرُو بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ : { نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الْأَشْعَارُ ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الضَّالَّةُ ، وَعَنْ الْحِلَقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ (مسند أحمد)

மஸ்ஜிதில் நான்கு செயல்களை நபி ஸல் தடுத்தார்கள்.1.விற்பது வாங்குவது 2.(அல்லாஹ்வை நினைவு படுத்தாத) கவிகள் படிப்பது 3.காணாமல் போன பொருளை சப்தமிட்டுத் தேடுவது4. தொழுகைக்கு முன்னால் மஸ்ஜிதில் வட்டமாக அமர்ந்து வீண்பேச்சுக்கள் பேசிக் கொண்டிருப்பது

இஃதிகாஃப் இருப்பவர் யாரிடமும் பேசக் கூடாது என்று கருதுவதும் தவறாகும், முந்திய உம்மத்தினருக்கு அந்த அனுமதி இருந்தது

فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (مريم) 26فهذا النذر الذي نذرته مريم ألا تكلم اليوم إنسياً كان جائزاً في شريعتهم أما في الشريعة التي جاءنا بها نبينا صلى الله عليه وسلم فلا يجوز ذلك النذر ولا يجب الوفاء به.(اضواء البيان) 

عَنْ حَارِثَةَ قَالَ:كُنْتُ جَالِسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللَّهُ عَنْهُ فَجَاءَ رَجُلاَنِ فَسَلَّمَ أَحَدُهُمَا وَلَمْ يُسَلِّمِ الآخَرُ فَقُلْنَا أَوْ قَالَ مَا بَالُ صَاحِبِكَ لَمْ يُسَلِّمْ قَالَ : إِنَّهُ نَذَرَ صَوْمًا لاَ يُكَلِّمُ الْيَوْمَ إِنْسِيًّا. قَالَ عَبْدُ اللَّهِ بِئْسَمَا قُلْتَ إِنَّمَا كَانَتْ تِلْكَ امْرَأَةً قَالَتْ ذَلِكَ لِيَكُونَ لَهَا عُذْرا وَكَانُوا يُنْكِرُونَ أَنْ يَكُونَ وَلَدٌ مِنْ غَيْرِ زَوْجٍ إِلاَّ زِنًا - فَسَلِّمْ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ خَيْرٌ لَكَ(تفسير ابن كثير

ஹாரிஸா ரழி கூறினார்கள் நான் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் அமர்ந்திருந்தேன் அப்போது இரு நபர்கள் வந்தார்கள் அவர்களில் ஒருவர் மட்டும் ஸலாம் கூற, மற்றவர் ஸலாம் கூறவில்லை. அப்போது நாங்கள் அதுபற்றி எங்களுக்கு சலாம் சொன்ன நபரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறினார் அந்த நபர் நோன்பு வைத்துள்ளார் அதனால் யாரிடமும் பேச மாட்டார் என்று கூற, உடனே இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. மர்யம் அலைஹிஸ்ஸலாம் என்ற பெண்ணுக்கு மட்டும் அந்த அனுமதி இருந்த து. கணவன் இல்லாமல் குழந்தை பெற்றதால் அந்த சமூகம் அதைப் பழித்துப் பேசியதால் அல்லாஹ் அவ்வாறு உத்தரவிட்டான். இது நமக்குக் கிடையாது எனவே நீங்கள் பேசுங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையைத் தடுங்கள் நன்மை கிட்டும்.                                                               

عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ فَرَآهَا لَا تَكَلَّمُ فَقَالَ مَا لَهَا لَا تَكَلَّمُ قَالُوا حَجَّتْ مُصْمِتَةً5 قَالَ لَهَا تَكَلَّمِي فَإِنَّ هَذَا لَا يَحِلُّ هَذَا مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ فَتَكَلَّمَتْ (بخاري) باب أَيَّامِ الْجَاهِلِيَّةِ – كتاب مناقب الأنصار عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلَا يَقْعُدَ وَلَا يَسْتَظِلَّ6 وَلَا يَتَكَلَّمَ وَيَصُومَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ (بخاري)باب النَّذْرِ فِيمَا لاَ يَمْلِكُ وَفِى مَعْصِيَةٍ- كتاب الَأيمان والنذور

ஜைனப் என்ற பெண்ணிடம் அபூபக்கர் ரழி வருகை தந்தார்கள் அவர் யாரிடமும் பேசாமல் இருப்பதைக் கண்டு இவருக்கு என்ன ஆயிற்று என்று கேட்க, இவர் யாரிடமும் பேச மாட்டேன் என்று நிய்யத் செய்து ஹஜ்ஜுக்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டது. உடனே அபூபக்கர் ரழி அவர்கள் அதைக் கண்டித்து இது அறியாமைக் காலத்தின் செயல் என்றார்கள் அதன் பிறகு அவர் பேசினார்

இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியின் வாசலில் நின்று நபி ஸல் மனைவியிடம் பேசிய சம்பவம்

عن صَفِيَّةَ رضي الله عنها زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ مَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا (بُخاري)2038 باب هَلْ يَخْرُجُ الْمُعْتَكِفُ لِحَوَائِجِهِ إِلَى بَابِ الْمَسْجِدِ- كتاب الاعتكاف-شرح : (ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ )أَيْ تَرُدُّ إِلَى بَيْتِهَا(فَقَامَ مَعَهَا يَقْلِبُهَا )أَيْ يَرُدُّهَا إِلَى مَنْزِلِهَا (عَلَى رِسْلِكُمَا )أَيْ عَلَى هِينَتِكُمَا فِي الْمَشْي فَلَيْسَ هُنَا شَيْءٌ تَكْرَهَانِهِ (فتح الباري) وَالْمُحَصَّلُ مِنْ هَذِهِ الرِّوَايَات أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْسُبْهُمَا إِلَى أَنَّهُمَا يَظُنَّانِ بِهِ سُوءًا لِمَا تَقَرَّرَ عِنْده مِنْ صِدْقِ إِيمَانِهِمَا وَلَكِنْ خَشِيَ عَلَيْهِمَا أَنْ يُوَسْوِسَ لَهُمَا الشَّيْطَان ذَلِكَ لِأَنَّهُمَا غَيْرُ مَعْصُومَيْنِ فَقَدْ يُفْضِي بِهِمَا ذَلِكَ إِلَى الْهَلَاكِ فَبَادَرَ إِلَى إِعْلَامهمَا (فتح الباري)

  கருத்து- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் இஃதிகாப் இருந்த நேரத்தில் அவர்களுடைய மனைவி அங்கு வந்தார்கள் இரவு நேரமாக இருந்ததால் மனைவியை அனுப்புவதற்காக தெருமுனை வரை சென்றார்கள். அப்போது இரண்டு நபித் தோழர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். இருவரையும் அழைத்து இவர் என்னுடைய மனைவிதான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்த இருவரும் அல்லாஹ்வின் தூதரே தங்களை குறித்து எந்த சந்தேகமும் நாங்கள் கொள்ளவில்லை என்று கூறினார்கள் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதமின் மகனுடைய உடம்பில் ஷைத்தான் ரத்தம் ஓடும் இடமெல்லாம் ஓடுகிறான் என்றார்கள். அதாவது இப்போது உங்கள் மனதில் சந்தேகம் இல்லா விட்டாலும் பின்னால் உங்களின் மனதில் சந்தேகத்தை ஷைத்தான் ஏற்படுத்துவான். எனவே நான் முந்திக் கொண்டேன் என்றார்கள்.


படிப்பினை- நம் மீது தவறு இல்லா விட்டாலும் பிறர் தவறாக எண்ணும்படி நடந்து கொள்ளக்கூடாது என்ற பாடமும்  இதில் உண்டு இன்றைக்கு சந்தேகப்படும் நபர்களை விட சந்தேகப்படும்படி நடந்து கொள்பவர்கள்தான் அதிகம். ஏனெனில்அவர்களின் தினசரி வெளிப்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. அவர்களது சொல்லில், செயலில், கொடுக்கல் வாங்கலில், நடைமுறையில் என அனைத்திலும் மற்றவர்கள் சந்தேகப்படும் வகையில் நடந்து கொள்வதை காணலாம் சந்தேகக்கோடு அது வந்தாலே கேடு என்று சொல்வார்கள். எனவே இது நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். சில சமயங்களில் நாம் என்னதான் பரிசுத்தமானவர்களாக இருந்தாலும் கூட ஷைத்தான் நம்மைப்பற்றி மற்றவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பு உண்டு. எனவே அந்த சந்தேகம் ஏற்படும் முன்பே அதை நீக்குவது கட்டாயமாகும்.                            


பொருள்-1,எந்த இரவைத் தேடுகிறீர்களோ அந்த இரவு இனிமேல் தான் வரவிருக்கிறது, 2, மூக்கின் நுனி 3, சுருட்டி வைத்துக் கொள்ளக் கூடாது 4,நிற்க மாட்டார்கள் 5,மவுனமாகவே இருந்து ஹஜ் செய்வதாக, 6,நிழலில் ஒதுங்க மாட்டேன் 7,சிறைக்கைதிகள்


ஒற்றுமையே பலம்

 10-04-2026 SHAWWAL-  21 بسم الله الرحمن الرحيم          ஒற்றுமையே பலம் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  B...