27-03-2026
ஷவ்வால்- 7
بسم الله الرحمن الرحيم
குர்ஆனுடைய கல்வியின் முக்கியத்துவம்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
குர்ஆன் என்பது நம்முடைய வாழ்வின் முக்கியமான அங்கமாகும். குர்ஆனைக் கற்றுக் கொள்வதும் அதன்படி நடப்பதும் அவசியமாகும். ஒவ்வொரு மஹல்லா தோறும் குர்ஆன் மதரஸாக்களை வலுப்படுத்த வேண்டும். மஹல்லாவில் உள்ள ஒவ்வொருவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் அந்தந்த மக்தப் மதரஸாவின் மாணவர்களாக மாற வேண்டும். குறிப்பாக மஸ்ஜிதின் நிர்வாகிகள் மாணவர்களாக மக்தப் மதரஸாவில் இணைய வேண்டும். குர்ஆனைக் கற்றுக் கொள்பவர்களாக மாற வேண்டும். ஆனால் இன்று குர்ஆனைக் கற்றுக் கொண்டவர்கள் சிலர் மட்டும் தான். அதிலும் முறையாக உச்சரிப்புடன் ஓதக் கற்றுக் கொண்டவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். ஒரு மஹல்லாவில் 100 பேர் இருந்தால் அதில் முறையாக உச்சரிப்புடன் ஓதக் கற்றுக் கொண்டவர்கள் 10 பேர் மட்டுமே இருப்பார்கள். அந்த அளவுக்கு குர்ஆனுடைய முக்கியத்துவம் மக்களிடம் குறைந்து விட்டது. நம்மில் பலர் சிறு வயதில் குர்ஆனை ஓதக் கற்றுக் கொண்டு பிறகு தொடர்பு இல்லாமல் குர்ஆனை மறந்திருப்பார்கள். இது பெரும் பாவமாகும்.
குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்.
عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري)
குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)
குர்ஆனை விட்டும், தீனுடைய சூழ்நிலையை விட்டும் குடும்பங்கள் நீங்கி விட்டால் குடும்பங்கள் வீணாகி விடும்
எந்த பூமியில் மழை இல்லையோ அந்த பூமியில் பயிர்கள் வீணாகி விடும். எந்த வீட்டில் தீன் இல்லையோ அந்த வீட்டில் சந்ததிகள் வீணாகி விடும் - உர்தூ கவிதை
குர்ஆன்ஓதத்தெரியாமல்இருப்பதுமாபெரும்துர்பாக்கியம். யாருடைய மனதில் அறவே குர்ஆன் இல்லையோ அவரது உள்ளம் பாழடைந்த இல்லம்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنْ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ (ترمذي)عَنْ عُثْمَانَرضي الله عنهقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ(ابن ماجة)
நம்மில் எத்தனை பேர் குர்ஆன் ஒத தெரியாதவர்கள், மார்க்க சட்டதிட்டங்கள் தெரியாதவர்கள் நம்மில் பலருக்கு ஒளு செய்யும் முறையே தெரியவில்லை ஒளுவின் முறித்தல்கள் தெரியவில்லை, பர்ளான குளிப்பு ஒன்று இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களுக்கும் குளிப்பின் பர்ளுகள் என்ன என்று தெரிவதில்லை இது தான் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை....அதிகாலை எழுந்து தானும் பஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் பஜர் தொழ வைத்து பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அன்று இருந்தனர் ஆனால் இன்றோ தானும் எட்டு மணிக்கு எழுவதுடன் பிள்ளைகளை அதன் பின் எழுப்பி ஸ்கூலுக்கு அரக்க பறக்க அனுப்புவதே பெரும்பாடாக உள்ளது இதற்கிடையில் மக்தபை பற்றி சிந்திக்கவே முடிவதில்லை .மாலையில் பிள்ளைகள் வீடுதிரும்பியதும் டியூஸன் என்ற பெயரில் இரவுவரை கழித்து விட்டு வீடு வந்ததும் சாப்பிட்டு படுக்கவே நேரம் உள்ளது
கண்ணியப் படுத்த வேண்டியவைகளை அலட்சியப் படுத்தும்போது பல்வேறு அழிவுகள் பூமிக்கு ஏற்படும்
நான்கு உதாரணங்கள் 1.கஃபா 2.குர்ஆன் 3.ஆலிம்கள் 4.மார்க்கக் கல்வி
கடைசி காலத்தில் கஃபா நீக்ரோக்களால் இடிக்கப்படும். அதன் பின் உலகமே அழிந்து விடும்
عنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنْ الْحَبَشَةِ.(بخاري)
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا . (بخاري)
”அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் கொண்ட மனிதர்கள் கஃபாவை இடித்துப் பாழ் படுத்துவார்கள்” என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) ”(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களுடைய கருப்பு நிறத்தவர்கள் கஃபாவின் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஃபாவை உடைப்பதை நான் பார்ப்பது போல் உள்ளது” என நபி (ஸல்) அவர்கள் கவலையுடன் கூறினார்கள். (புகாரி)
அதற்கு முன்பு மற்றொரு கூட்டம் கஃபாவை இடிக்க வரும் வழியிலேயே பூகம்பத்தால் அழிக்கப்படுவார்கள்
عن عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري
ஒரு கூட்டத்தினர் கஃபாவை இடிக்க வரும் வழியிலேயே பூகம்பத்தால் அழிக்கப்படுவார்கள் அவர்களுடன் சேர்ந்து அங்கு வசிப்பவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்று நபி ஸல் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே, தீயவர்கள் அழிக்கப்படுவது நியாயம். ஆனால் அழிக்கப்படும் இடத்தில் உள்ள நல்லவர்களும் அங்கு கடை வைத்திருப்பவர்களும் சேர்ந்து ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அது அப்படித்தான். ஆனால் அல்லாஹ் அவர்களை மீண்டும் எழுப்பும்போது அதற்கான சிறந்த நற்கூலியைத் தருவான் என்றார்கள்
படிப்பினை-முதல்தடவை கஃபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என கூறிய நபி ஸல் பின்பு கஃபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடைய நீக்ரோக்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறினார்கள் ஒரு காலகட்டம் வரை கஃபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் கஃபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம்.அப்போது கஃபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை அல்லாஹ் தடுக்க மாட்டான். இது இறுதி நாளுக்கு மிக நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம் ”யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இந்த புனிதமான கஃபா ஆலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தின் வருகைக்குப்பிறகும் கஃபா ஆலயம் இருக்கும் என்பது நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « حُجُّوا قَبْلَ أَنْ لاَ تَحُجُّوا ». قِيلَ مَا شَأْنُ الْحَجِّ قَالَ « تَقْعُدُ أَعْرَابُهَا عَلَى أَذْنَابِ أَوْدِيَتِهَا فَلاَ يَصِلُ إِلَى الْحَجِّ أَحَدٌ ».(دار قطني) شرح ( على أذناب أوديتها ) أي المواضع التي تنتهي اليها مسايل الماء فيحولون بين الناس وبين البيت ( فلا يصل إلى الحج أحد ) وذلك بعد رفع القرآن وموت عيسى (التيسير بشرح الجامع الصغير)
ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம் வரும் முன்பு ஹஜ்ஜு செய்து கொள்ளுங்கள் என நபி ஸல் கூறியபோது ஏன் ஹஜ்ஜு செய்ய முடியாமல் போகும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்அவர்கள் கூறினார்கள் அங்குள்ள காட்டரபிகள் பள்ளத்தாக்குகளின் எல்லையில் இருந்து கொண்டு யாரையும் ஹஜ்ஜுச் செய்ய விடாமல் தடுப்பார்கள். அதனால் யாரும் ஹஜ்ஜுச் செய்ய முடியாது என்றார்கள்.
قَالَ اِبْن عَبَّاس رضي الله عنه : لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض (تفسير ابن كثير)
இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள்- ஏதாவது ஒரு வருடத்தில் யாருமே ஹஜ்ஜு செய்யா விட்டால் அல்லாஹ் வானத்தை அப்படியே பூமியின் மீது இறக்கி அழித்து விடுவான்
2.கடைசி காலத்தில் குர்ஆனுக்கு கண்ணியம் இல்லாதபோது குர்ஆனை அல்லாஹ் உள்ளங்களில் இருந்தும் அனைவரின் இல்லங்களில் இருந்தும் அல்லாஹ் பறித்து விடுவான். வெறும் காகிதம் மட்டும் இருக்கும்.
عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ : لَيُسْرَيَنَّ عَلَى الْقُرْآنِ ذَاتَ لَيْلَةٍ فَلاَ يُتْرَكُ آيَةٌ فِى مُصْحَفٍ وَلاَ فِى قَلْبِ أَحَدٍ إِلاَّ رُفِعَتْ. (دارمي
இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் ஒரே ஒரு இரவு கடப்பதற்குள் அல்லாஹ் குர்ஆனை உள்ளங்களில் இருந்தும் அவரவர் இல்லங்களில் வைத்திருக்கும் குர்ஆன் பிரதிகளில் இருந்தும் நீக்கி விடுவான். ஒரு வசனம் கூட யாருடைய உள்ளத்திலும் ஞாபகம் இருக்காது. பிரதிகளிலும் இருக்காது.- தாரமீ
عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ : أَكْثِرُوا تِلاَوَةَ الْقُرْآنِ قَبْلَ أَنْ يُرْفَعَ. قَالُوا : هَذِهِ الْمَصَاحِفُ تُرْفَعُ فَكَيْفَ بِمَا فِى صُدُورِ الرِّجَالِ؟ قَالَ : يُسْرَى عَلَيْهِ لَيْلاً فَيُصْبِحُونَ مِنْهُ فُقَرَاءَ وَيَنْسَوْنُ قَوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيَقَعُونَ فِى قَوْلِ الْجَاهِلِيَّةِ وَأَشْعَارِهِمْ ، (دارمي
وقال عبد الله بن مسعود رضي الله عنه في تفسير هذه الاية "وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82)النمل: وقع القول يكون بموت العلماء وذهاب العلم ورفع القرآن (قرطبي
குர்ஆன் உயர்த்தப்படும் முன்பே குர்ஆனை அதிகம் ஓதிக் கொள்ளுங்கள் என இப்னு மஸ்ஊத் ரழி கூறியபோது பிரதிகளில் இருந்து உயர்த்தப் படலாம். ஆனால் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்களின் உள்ளங்களில் இருந்து எவ்வாறு நீக்கப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் ஒரு இரவு கடந்து காலை நேரம் வருவதற்குள் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்கள் அனைவரும் குர்ஆனை இழந்த ஏழைகளாக ஆகி விடுவார்கள். கலிமாவைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இருக்காது. குர்ஆனுக்கு பதிலாக அறியாமைக் காலத்தின் சொற்களிலும். கவிதைகளிலும் மக்கள் மூழ்கி விடுவார்கள். இது கடைசி நேரமாக இருக்கும். அதாவது குர்ஆன் உயர்த்தப்படும், சிறந்த உலமாக்களின் தொடர் மரணம், கல்வி உயர்த்தப் படும் என்ற அல்லாஹ்வின் சொல் உறுதியாகி விட்ட பிறகு இதுவெல்லாம் நடைபெறும். இதைத் தொடர்ந்துதான் அல்லாஹ் மக்காவுக்கும் மினாவுக்கும் இடையில் ஒரு அதிசயப் பிராணியை எழுப்பி இவர் காஃபிர் இவர் முஃமின் என அடையாளமிட வைப்பான்.
3.உலமாக்கள் இல்லாமல் போவதாலும் இந்த பூமிக்கு பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.
عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه و سلم إِنَّ اللَّهَ لاَ يَنْتَزِعُ الْعِلْمَ مِنَ النَّاسِ انْتِزَاعًا وَلَكِنْ يَقْبِضُ الْعُلَمَاءَ وَيُبْقِى فِى النَّاسِ رُءُوسًا جُهَّالاً يُفْتُونَهُمْ بِغَيْرِ عِلْمٍ فَيَضِلُّونَ وَيُضِلُّونَ ».(مسلم
அல்லாஹ் மக்களிடம் இருந்து ஒரேயடியாக இல்மை அப்புறப் படுத்த மாட்டான். மாறாக மார்க்க அறிஞர்களைக் கைப்பற்றுவதைக் கொண்டு இல்மை அப்புறப்படுத்துவான். பிறகு மார்க்கம் அறியாதவர்கள் தான் மீதமிருப்பர். மார்க்க அறிவின்றி ஃபத்வா வழங்குவார்கள். அவர்களும் வழி கெட்டு மற்றவர்களையும் வழி கெடுப்பர்.
4.மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதாலும் பூமிக்கு பல்வேறு பாதிப்புகள்..
عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ ». (ابوداود
கடைசி காலத்தில் தொழ வைப்பதற்கு இமாம் கிடைக்காமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை ஏற்படுவது அழிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்
(إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام. (مرعاة
கருத்து- இமாமத், அதான் என்ற இந்த சிறந்த பணிகளை விட்டும் பலர் தூரமாகி விடுவார்கள். கடைசியில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழ வருபவர்களில் ஒருவர் தான் இமாமத் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள். காரணம் ஒவ்வொருவரும் எனக்கு இமாமத் செய்யத் தெரியாது என்று கூறி ஒதுங்குவார்கள். கடைசியில் ஜமாஅத் நடைபெறாமல் தனித்தனியே மக்கள் தொழுது விட்டுச் செல்வார்கள்.
ولذا أجاز المتأخرون من أصحابنا أخذ الأجرة على الإمامة والآذان ونحوهما من تعليم القرآن بخلاف المتقدمين فإنهم كانوا يحرمون الأجرة على العبادة (مرقاة
மார்க்கக் கல்வியை மக்கள் அறவே வெறுப்பதன் மூலம் மஸ்ஜித்களுக்கு இமாம் இல்லாமல் ஆகி விடக் கூடாது என்ற கவலையின் அடிப்படையில் தான் பிற்கால உலமாக்கள் இமாமத்திற்கும் அதானுக்கும் சம்பளம் வாங்குவது கூடும் என அனுமதித்தார்கள். ஆனால் முற்காலத்தில் அவ்வாறு இல்லை.
படிப்பினை- மேற்காணும் அறிவிப்புகள் மூலம் குர்ஆனைக் கற்றுக் கொள்வதுடன் மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிய முடிகிறது. அப்படிப்பட்ட அடிப்படைக் கல்விகளை போதிக்கும் இடங்கள் தான் மக்தப் மதரஸாக்கள். இந்த மக்தப் மதரஸாக்கள் சிறுவர் சிறுமிக்கு மட்டும் தான் என்பது இல்லை. அனைத்து வயதினரும் இங்கு வந்து குர்ஆனையும் அடிப்படைக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
கல்விக்கு வயதில்லை. முதிய வயதிலும் அடிப்படைக் கல்வியைக் கற்கலாம்.
عَنْ قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي يَا قَبِيصَةُ مَا جَاءَ بِكَ قُلْتُ كَبِرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي فَأَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مَا يَنْفَعُنِي اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ قَالَ يَا قَبِيصَةُ مَا مَرَرْتَ بِحَجَرٍ وَلَا شَجَرٍ وَلَا مَدَرٍ إِلَّا اسْتَغْفَرَ لَكَ يَا قَبِيصَةُ إِذَا صَلَّيْتَ الْفَجْرَ فَقُلْ ثَلَاثًا سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ تُعَافَى مِنْ الْعَمَى وَالْجُذَامِ وَالْفَلِجِ يَا قَبِيصَةُ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ وَأَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ وَانْشُرْ عَلَيَّ رَحْمَتَكَ وَأَنْزِلْ عَلَيَّ مِنْ بَرَكَاتِكَ رواه احمد فلجபக்க வாதம் جذامகுஷ்டம்
முதியவரான கபீஸா ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களிடம் வந்தேன் அப்போது நபி ஸல் அவர்கள் கபீஸா அவர்களே உங்களை இங்கு வரவழைத்தது எது என நபி ஸல் அவர்கள் கேட்டாரகள். அதற்கு நான் என்னுடைய எலும்புகள் தேய்ந்து விட்டன. வயதாகி விட்டது. எனவே உங்களிடம் வந்து ஏதேனும் பயனுள்ள விஷயத்தைக் கற்றுக் கொள்ள வந்தேன் என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் (இதற்குத் தான் வந்துள்ளீர்கள் என்றால்) நீங்கள் நடந்து வரும் பாதையில் உள்ள ஒவ்வொரு கல்லும் மரமும் மடுவும் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடும் என்று கூறி விட்டு, நீங்கள் ஃபஜ்ருத் தொழுது விட்டு சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ என்ற தஸ்பீஹை மூன்று முறை தினமும் ஓதி வந்தால் குஷ்டம், பக்கவாதம் போன்ற நோய்களை விட்டும் நீங்கள் பாதுகாக்கப் படுவீர்கள் என்று கூறி விட்டு மற்றொரு துஆவையும் அவருக்குக் கற்றுத் தந்தார்கள். நூல் முஸ்னத் அஹ்மத்
மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்வதில் சஹாபாப் பெருமக்களுக்கு இருந்த ஆர்வம்.
عَنْ عُمَرَ رض قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنْ الْأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ وَهِيَ مِنْ عَوَالِي الْمَدِينَةِ وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنْ الْوَحْيِ وَغَيْرِهِ وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ .....(بخاري89 )
ஹழ்ரத் உமர் ரழி அவர்களின் வீடு மதீனாவின் உயரமான பகுதியில் இருந்த போது அவர்களால் அடிக்கடி மஸ்ஜிதுன் நபவிக்கு வர முடியாது. உமர் ரழி கூறினார்கள் நானும், என் அண்டை வீட்டு நண்பரும் நபி ஸல் அவர்கள் கூறும் விஷயங்கள் எதுவும் எங்களுக்கு தவறி விடக்கூடாது என்பதற்காக முறை வைத்துக் கொண்டு கல்வியை கற்றோம். அவர் ஒருநாள் கீழே இறங்கி மஸ்ஜிதுக்கு வருவார். நான் ஒருநாள் கீழே இறங்கி மஸ்ஜிதுக்கு வருவேன். நான் வரும்போது நான் கேட்ட அன்றைய செய்திகளை, இறங்கிய வஹீயை அவரிடம் சொல்வேன். அவர் வரும்போது அவர் கேட்ட அன்றைய செய்திகளை, இறங்கிய வஹீயை என்னிடம் சொல்வார்.
மார்க்கக் கல்வியை முறையாக கற்காத பாமரரின் தவறான தீர்ப்பு பாவம் செய்தவரை திருத்தாமல் மீண்டும் பாவியாக்கியது
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَسَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَاهِبٍ فَأَتَاهُ فَقَالَ إِنَّهُ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ لَا فَقَتَلَهُ فَكَمَّلَ بِهِ مِائَةً ثُمَّ سَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَجُلٍ عَالِمٍ فَقَالَ إِنَّهُ قَتَلَ مِائَةَ نَفْسٍ فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ فَقَالَ نَعَمْ وَمَنْ يَحُولُ بَيْنَهُ وَبَيْنَ التَّوْبَةِ انْطَلِقْ إِلَى أَرْضِ كَذَا وَكَذَا فَإِنَّ بِهَا أُنَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدْ اللَّهَ مَعَهُمْ وَلَا تَرْجِعْ إِلَى أَرْضِكَ فَإِنَّهَا أَرْضُ سَوْءٍ فَانْطَلَقَ حَتَّى إِذَا نَصَفَ الطَّرِيقَ أَتَاهُ الْمَوْتُ فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَقَالَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ جَاءَ تَائِبًا مُقْبِلًا بِقَلْبِهِ إِلَى اللَّهِ وَقَالَتْ مَلَائِكَةُ الْعَذَابِ إِنَّهُ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ فَأَتَاهُمْ مَلَكٌ فِي صُورَةِ آدَمِيٍّ فَجَعَلُوهُ بَيْنَهُمْ فَقَالَ قِيسُوا مَا بَيْنَ الْأَرْضَيْنِ فَإِلَى أَيَّتِهِمَا كَانَ أَدْنَى فَهُوَ لَهُ فَقَاسُوهُ فَوَجَدُوهُ أَدْنَى إِلَى الْأَرْضِ الَّتِي أَرَادَ فَقَبَضَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ قَالَ قَتَادَةُ فَقَالَ الْحَسَنُ ذُكِرَ لَنَا أَنَّهُ لَمَّا أَتَاهُ الْمَوْتُ نَأَى بِصَدْرِهِ (مسلم باب قَبُولِ تَوْبَةِ الْقَاتِلِ وَإِنْ كَثُرَ قَتْلُهُ.-كتاب التوبة
சுருக்கம்- 99 கொலைகள் செய்தவர் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தில் அது பற்றிய யாரிடம் விளக்கம் கேட்பது என விசாரித்தபோது ஒரு வணக்கசாலியை காட்டப்பட்டது. மார்க்கம் தெரியாத அவரிடம் வந்து தனக்கு தவ்பா உள்ளதா என்று கேட்டபோது உனக்கெல்லாம் தவ்பா இல்லை என்று அவர் பதில் கூற,ஆத்திரத்தில் அவரையும் அந்த மனிதர் கொன்று தன் கணக்கை 100 ஆக பூர்த்தியாக்கினார். பின்பு சில காலங்கள் கழித்து மீண்டும் அவருக்கு திருந்தும் எண்ணம் வந்தது. மார்க்கம் அறிந்த ஒருவரைப் பற்றி அவர் விசாரித்தார். அப்போது ஒரு சிறந்த ஆலிமை காட்டப்பட்டது. அவரிடம் விஷயத்தைக் கூற அவர் உமக்கு தவ்பா நிச்சயம் உண்டு என்று கூறியதுடன் உன்னுடைய தவறுகளுக்குக் காரணம் உமது ஊர் சரியில்லை. நல்லவர்கள் வாழும் ஒரு ஊரை நான் காட்டுகிறேன். நல்லவர்களின் தொடர்பில் நீ இருந்தால் பாவம் செய்யும் எண்ணம் உமக்கு வராது என்று அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே அவருக்கு மவ்த் வந்து விட்டது. அப்போது நல்ல உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அங்கு வந்தனர். கெட்ட உயிரைக் கைப்பற்றும் மலக்குகளும் அங்கு வந்தனர். இவரின் உயிரை யார் கைப்பற்றுவது என்பதில் சர்ச்சை ஏற்பட்டது இறுதியாக மூன்றாவதாக ஒரு மலக்கு அங்கு வந்து இவர் போக வேண்டிய தூரத்தையும் கடந்து வந்த தூரத்தையும் கணக்கிட்டு முடிவு செய்யுங்கள் என்று கூற அவ்வாறே கணக்கிட்ட போது அவர் போக வேண்டியதூரம் மிகச்சிறிய அளவில் மட்டுமே நெருக்கமாக இருந்தது. இறுதியில் நல்ல உயிரைக் கைப்பற்றும் மலக்குகள் அவரது உயிரைக் கைப்பற்றினர்
மார்க்கத்தை முறையாக கற்றவர் ஷைத்தானின் பிடியில் இருந்து தன்னையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டிருப்பார்.
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ (ابن ماجة
நிச்சயமாக ஒரு ஆலிம் ஆயிரம் வணக்கசாலிகளை விட ஷைத்தானுக்கு மிகவும் கடினமானவர் ஆவார். அவ்வளவு எளிதாக அவரை வழி கெடுக்க அவனால் முடியாது.
مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمهالله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيماِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.) موسوعة الرد على الصوفية
அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் தியானத்தில் இருந்தபோது ஷைத்தான் அல்லாஹ்வைப் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு அப்துல் காதிரே மற்றவர்களுக்கு ஹராமாக்கிய அனைத்தையும் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூற உடனே சுதாரித்துக் கொண்ட ஷைகு அவர்கள் தஅவ்வுத் ஓதி, ஷைத்தானே இங்கிருந்து இழிவடைந்தவனாக சென்று விடு என்றார்கள். மீண்டும் அவன் பரவாயில்லையே உங்களுடைய திறமையால் தப்பி விட்டீர்கள் என்று கூற, அதற்கு ஷைகு அவர்கள் நான் என் திறமையால் தப்பிக்கவில்லை.அல்லாஹ்வின் அருளால் தப்பித்தேன் என்றார்கள். பின்பு ஷைத்தான் நான் இதுபோன்று எத்தனையோ பேரை வழி கெடுத்துள்ளேன் நீங்கள் எவ்வாறு தப்பித்தீர்கள் என்று கேட்க, நீ எப்போது மற்றவர்களுக்கு ஹராமாக்கிய அனைத்தையும் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறினாயோ அப்போது நான் சுதாரித்துக் கொண்டேன் என ஷைகு அவர்கள் பதில் கூறினார்கள். திறமையான ஆலிம்கள் மட்டுமே இவ்வாறு ஷைத்தானின் சூழ்ச்சியை அறிந்து கொள்வார்கள்.
9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே! இழிவடைந்து விடு
عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ أَتَيْتُكَ مِنْ الْمَدِينَةِ مَدِينَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُ بِهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَمَا جَاءَ بِكَ تِجَارَةٌ قَالَ لَا قَالَ وَلَا جَاءَ بِكَ غَيْرُهُ قَالَ لَا قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ إِنَّ الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الْأَنْبِيَاءِ إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ ( ابن ماجة
கஸீர் இப்னுகைஸ் ரழி அவர்கள் கூறினார்கள் சிரியா நாட்டின் திமிஷ்க் நகரில் நான் அபுத்தர்தா ரழி அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் வந்து அபுத்தர்தா அவர்களே நான் மதீனாவில் இருந்து ஒரு ஹதீஸைத் தேடி உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறியவுடன் அவரிடம் அபுத்தர்தா ரழி அவர்கள் வேறு ஏதேனும் வியாபார நோக்கத்திற்காகவும் வந்தீர்களா என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். திரும்பவும் அபுத்தர்தா ரழி அவர்கள் இங்கு வந்த தற்கு வேறு ஏதாவது நோக்கமும் உள்ளதா என்று கேட்க, அதற்கும் அவர் இல்லை. ஒரு ஹதீஸை கற்றுக் கொள்ள மட்டுமே நான் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தேன் என்று கூற, அப்போது அபுத்தர்தா ரழி அவர்கள் கூறினார்கள்.நபி ஸல்அவர்கள் கூற நான் கேள்விப்பட்டுள்ளேன். எவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் சென்றால் அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை அல்லாஹ் இலகுவாக்குவான். கல்வியைத் தேடிச் செல்பவருக்காக மலக்குகள் தம் இறக்கைகளைத் தாழ்த்துகின்றனர். கல்வியைத் தேடிச் செல்பவருக்காக தண்ணீரில் உள்ள மீன்கள் உட்பட வானம் பூமியில் உள்ள அனைத்தும் துஆச் செய்கின்றன. வணக்கசாலியின் சிறப்பை விட ஆலிமின் சிறப்பாகிறது நட்சத்திரங்களின் சிறப்பை விட சந்திரனின் சிறப்பைப் போன்றதாகும்....
عن أبي أمامة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إن لقمان قال لابنه: يا بني عليك بمجالسة العلماء،واسمع كلام الحكماء،فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر". (مجمع الزوائد
லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்கு உபதேசம் செய்தார்கள். மகனே உலமாக்களுடன் அமர்ந்து உபதேசம் செய்வதை அவசியமாக்கிக் கொள். மார்க்க மாமேதைகளில் தத்துவமாக மார்க்கத்தைப் பேசுபவர்களின் பேச்சைக் கவனித்துக் கேள். ஏனெனில் இதுபோன்றவர்களின் பேச்சைக் கொண்டு அல்லாஹ் உள்ளங்களை உயிராக்குவான். மழை மூலம் பயிர்களை செழிப்பாக்குவது போல..
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ، فَارْتَعُوا، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا رِيَاضُ الْجَنَّةِ؟ قَالَ:مَجَالِسُ الْعِلْمِ. (طبراني
சுவனப் பூங்காங்களை நீங்கள் கடந்து சென்றால் நன்றாக மேயந்து கொள்ளுங்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி ஸல் சுவனப் பூங்காங்கள் என்றால் எது என்று கேட்க, உலமாக்களின் இல்முடைய மஜ்லிஸ் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக