வியாழன், 9 ஏப்ரல், 2026

ஒற்றுமையே பலம்

 10-04-2026

SHAWWAL-  21 بسم الله الرحمن الرحيم  

       ஒற்றுமையே பலம்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

  ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேச வேண்டிய நேரம் இதுவாகும். சர்வதேச அளவிலும் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. உலகின் 195 நாடுகளில் சுமார் 56 நாடுகள் முஸ்லிம் நாடுகள் தான். ஆனாலும் ஒற்றுமை இல்லாத காரணத்தால் பல முஸ்லிம் நாட்டு மன்னர்களிடம் இறையச்சம் இல்லாத காரணத்தால் அமெரிக்காவுக்கு அடங்கிப் போய்க் கிடக்கும் சூழ்நிலை உள்ளது.இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே வார்டில் ஆறு முஸ்லிம்கள் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டனர். 1.ஹயாத் கான். இவர் வாங்கிய ஓட்டுகள் 32.   2. ரசூல் கான் இவர் வாங்கிய ஓட்டுகள் 75.   3.முஸ்ரஃப் அலி. இவர் வாங்கிய ஓட்டுகள்  184.   4. அக்பர் காஜி இவர் வாங்கிய ஓட்டுகள் 239.  5.மன்ஷீகான் இவர் வாங்கிய ஓட்டுகள் 378.   6.காஜி அமீன் இவர் வாங்கிய ஓட்டுகள் 528.  இவர்கள் எல்லோருடைய ஓட்டுகளையும் இணைத்தால் மொத்தம் 1406.  ஆனால் ஜெயித்தது யார் தெரியுமா? பிற சமுதாயத்தின் ஒற்றுமை வேட்பாளர் தர்மேந்திரா 589 வாக்குகள் பெற்று ஜெயித்தார். இது ஒரு உதாரணம்தான். இதுதான் நாடெங்கும் முஸ்லிம் வேட்பாளர்களின் நிலை. முஸ்லிம்கள் சிதறிக் கிடப்பதன் காரணமாக நாடெங்கும் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளனர். நாட்டில் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதில் சில முஸ்லிம்கள் இணையாமல் இருப்பதில்லை.                     

                                                       

ஒற்றுமை சிதைந்தால் உங்களின் பலம் குன்றி விடும்

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (46) الانفال

وإنما يراد به في هذا الموضع: وتذهب قوتكم وبأسكم، فتضعفوا ويدخلكم الوهن والخلل. (الكتاب : جامع البيان في تأويل القرآن)

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (ஒற்றுமையில்லாமல்) சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறு சண்டையிட்டால் நீங்கள் கோழைகளாக ஆகி விடுவீர்கள். உங்களின் காற்றும் சென்று விடும். (அதாவது உங்களின் பலம் குன்றி விடும்.) காற்றுப் போன பலூன் என்று உதாரணம் சொல்வது போன்று....

ஒற்றுமை இல்லாததால் எத்தனையோ தோல்வி அனுபவங்கள் கிடைத்த போதும் நம் சமுதாயம் திருந்தவில்லை

وَقَالَ مُعَاوِيَةُ لاَ حَكِيمَ إِلاَّ ذُو تَجْرِبَةٍ (بخاري)

அனுபவம் என்ற மருத்துவரை விட மிகப் பெரும் மருத்துவர் இல்லை. 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ (بخاري) 

விஷ ஜந்துக்களின் ஒரே பொந்துக்குள் இரண்டு தடவை கை விட்டு முஃமின் கடி வாங்க மாட்டான்.

   விளக்கம்- ஒரு தடவை ஒரு பொந்துக்கள் கையை விட்டு அங்கிருக்கும் பூச்சி கடித்த பின் மற்றொரு முறையும் முஃமின் அங்கேயே திரும்பவும் கையை விட்டு கடி வாங்க மாட்டான். சுதாரித்துக் கொள்வான் என்பது இதன் மேலோட்டமாக விளக்கமாகும். ஆனால் பல்வேறு விஷயங்களுக்குப் பொருந்தும். ஒரு தடவை ஏமாந்தவன் இன்னொரு முறையும் ஏமாற மாட்டான். ஒரு தொழிலில் ஒரு தடவை ஈடுபட்டு நஷ்டத்தை சந்தித்தவன் ஒரு இன்னொரு தடவையும் அதே முறையில் அத்தொழிலை செய்து ஏமாற மாட்டான். ஒருவனிடம் காசு கொடுத்து ஏமாற்றப்பட்ட பின்பு மீண்டும் அவனிடமே காசு கொடுத்து ஏமாற மாட்டான். என்பது போன்ற பல்வேறு விளக்கங்கள் இதற்கு உண்டு.                                                                

الْمُرَاد الْخِدَاع فِي أُمُور الْآخِرَة دُون الدُّنْيَا . قَالَ : وَسَبَب الْحَدِيث مَعْرُوف ، وَهُوَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَسَرَ أَبَا عَزَّة الشَّاعِر يَوْم بَدْر ، فَمَنَّ عَلَيْهِ ، وَعَاهَدَهُ أَلَّا يُحَرِّض عَلَيْهِ وَلَا يَهْجُوهُ ، وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ ، ثُمَّ رَجَعَ إِلَى التَّحْرِيض وَالْهِجَاء ، ثُمَّ أَسَرَهُ يَوْم أُحُد ، فَسَأَلَهُ الْمَنّ ، فَقَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " الْمُؤْمِن لَا يُلْدَغ مِنْ جُحْر مَرَّتَيْنِ "  (شرح النووي علي مسلم)

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو عَزَّةَ يَوْمَ بَدْرٍ : يَا رَسُولَ اللَّهِ أَنْتَ أَعْرَفُ النَّاسِ بِفَاقَتِى وَعِيَالِى وَإِنِّى ذُو بَنَاتٍ قَالَ فَرَّقَ لَهُ وَمَنَّ عَلَيْهِ وَعَفَا عَنْهُ وَخَرَجَ إِلَى مَكَّةَ بِلاَ فِدَاءٍ فَلَمَّا أَتَى مَكَّةَ هَجَا النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَحَرَّضَ الْمُشْرِكِينَ عَلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأُسِرَ يَوْمَ أُحُدٍ أُتِىَ بِهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ : وَكَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ :« لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ ».  (السنن الكبرى للبيهقي)

ABOO  IZZAA   என்ற கவிஞன் நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்து கவிதை பாடுபவன். அவனை பத்ருப்போரில் நபி ஸல் அவர்கள் சிறை பிடித்தார்கள். அப்போது அவன் என்னை மன்னித்து விடுங்கள். நான் வறியவன். பெண் குழந்தைகளை வைத்திருப்பவன் என்றெல்லாம் கெஞ்சிய போது அவன் மீது இரக்கப் பட்டு அவனிடம் ஃபித்யாவும் வாங்காமல் விட்டு விட்டார்கள். அவன் மக்காவுக்கு வந்த பின் மீண்டும் இணை வைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்து கவிதை பாடினான். மீண்டும் அவன் உஹதில் பிடிபட்டான். அப்போதும் அவன் முன்பு போல கெஞ்சிய போது நபி ஸல் அவர்கள் அப்போது ஒரு முஃமின் இரண்டு தடவை ஏமாற மாட்டான் என்ற வார்த்தையைச் சொன்னார்கள்.

 இந்த ஹதீஸுக்கு ஏற்றவாறு இன்று முஸ்லிம் சமூகம் செய்த தவறையே மீண்டும் செய்து தனக்குத் தானே தோல்வியை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. 

   இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளில் கூட சங்பரிவார் கட்சி ஜெயிப்பதற்குக் காரணம்-அங்கு முஸ்லிம் வேட்பாளர் மூன்று நான்கு கட்சிகளில் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள் அது எதிரிகளுக்கே சாதகமாக அமைகிறது. சங்பரிவார் வேட்பாளர் பெறும் வாக்குளை விட அம்மூன்று முஸ்லிம்களும் சேர்ந்து பெறும் வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் பல மடங்கு அதிகம். எனினும் வாக்குகள் சிதறுவதால் எந்த முஸ்லிமும் வெற்றி பெற முடிவதில்லை. உபி.யில் முஸ்லிம்கள் நிறைந்த தேவ்பந்த் பகுதியிலும், கேரளாவில் பல இடங்களிலும் இதே தான் நடந்தது. சங்பரிவார் கட்சியைச் சார்ந்த முக்கியப்புள்ளியிடம் இந்த தேர்தலில் நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது முஸ்லிம் அமைப்புகளை ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்வோம் அதுவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு என்று கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறக்காரணம்முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்ற நிலை இந்தியாவில் பெரும்பாலும் உள்ளது.அந்த நிலை உருவாக விடக்கூடாது என்பதற்காக இத்தகைய சூழ்ச்சி நடைபெறுகிறது. அல்லாஹ் சூழ்ச்சிகளை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக                                                     

ஒன்றிணைந்து துஆ செய்தால் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுமோ 

அவ்வாறே ஓரணியில் இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி நிச்சயம்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَمَّنَ الْإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ آمِينَ (بخاري)

(அல்ஹம்து சூரா ஓதி முடித்த பிறகு,) இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் அவருடன் சேர்ந்து ஆமீன் கூறுங்கள். ஏனென்றால் யாருடைய ஆமீன் மலக்குமார்களின் ஆமீனுடன் ஒன்றிணையுமோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். 

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا 89)يونس -   قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة (تفسير ابن كثير)قَالَ أَبُو الْعَالِيَة وَأَبُو صَالِح وَعِكْرِمَة وَمُحَمَّد بْن كَعْب الْقُرَظِيّ وَالرَّبِيع بْن أَنَس دَعَا مُوسَى وَأَمَّنَ هَارُون أَيْ قَدْ أَجَبْنَاكُمَا فِيمَا سَأَلْتُمَا مِنْ تَدْمِير آلِ فِرْعَوْن .وَقَدْ يَحْتَجّ بِهَذِهِ الْآيَة مَنْ يَقُول إِنَّ تَأْمِين الْمَأْمُوم عَلَى قِرَاءَة الْفَاتِحَة يُنَزَّل مَنْزِلَة قِرَاءَتهَا لِأَنَّ مُوسَى دَعَا وَهَارُون أَمَّنَ وَقَالَ تَعَالَى " قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا " (تفسير ابن كثير)

ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் சொன்னால் ஆமீன் சொன்னவரும் அதே துஆவை ஓதியதாக கருதப்படுவார். எனவே தான் மேற்படி வசனத்தில் மூஸா அலா மட்டும் தான் துஆ செய்தார்கள். ஹாரூன் அலை ஆமீன் மட்டுமே கூறினார்கள். இருப்பினும் அல்லாஹ் உங்கள் இருவரின் துஆவும் ஏற்கப்பட்டது என்று கூறினான்.                                 

أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلَا نَشْبَعُ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالُوا نَعَمْ قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ قَالَ أَبُو دَاوُد إِذَا كُنْتَ فِي وَلِيمَةٍ فَوُضِعَ الْعَشَاءُ فَلَا تَأْكُلْ حَتَّى يَأْذَنَ لَكَ صَاحِبُ الدَّارِ-ابوداود

சில நபித்தோழர்கள் நபி ஸல் அவர்களிடம் நாங்கள் உண்ணுகிறோம் ஆனால் வயிறு நிரம்புவதில்லை என்று கூறிய போது நீங்கள் தனித்தனியாக உணவு உண்ணுகிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள் அதற்கு நபி ஸல் அவர்கள் இனிமேல் சேர்ந்து உண்ணுங்கள். பிஸ்மில்லாஹ் கூறி உண்ணுங்கள் உங்களுக்கு பரக்கத் செய்யப்படும் என்றார்கள்.                            


ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ஞாபகப்படுத்த வேண்டிய நபிமொழி

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க “நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ்  பலவீனம் என்றால் என்ன  என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்.

உலக அளவில் கிறிஸ்தவர்கள் 215 கோடி. முஸ்லிம்கள் 170 கோடி.

இந்துக்கள் 85 கோடி. சீக்கியர்கள் 2 கோடி, யூதர்கள் 1 ½  கோடி 


ஒரு விடுமுறை நாளில் முல்லா நஸ்ருத்தீன் இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக் கிலோ ஆட்டுக்கறி வாங்கினார். அருகிலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து “ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி”  என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக்கொண்டு ஓடியது தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரும் பதறினார்கள். நாயைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். முல்லா மட்டும் பதறவுமில்லை. ஓடவுமில்லை. குறுக்கே வந்த ஒருவர் ஏன்ம்பா.. “நாய் உன் இறைச்சிப் பையை தூக்கிக் கொண்டு போகிறது. நீ பதறாமல் நிற்கிறாயே..? என்று கேட்டார். முல்லா சொன்னாராம். “நாய் கறியைக் கொண்டு போனாலும் செய்முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது.”                                               

இதுபோல் இன்று முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்களின் அவல நிலையை, குறிப்பாக அரசியலில் உரிய பங்களிப்பு இல்லாததை மேடை தோறும் பேசுகிறார்களே தவிர அதை சீர்படுத்த ஒரே அணியில் ஒன்றாக இணைவது தான் ஒரே வழி என்பதை சிந்திப்பதில்ல. முடிந்த வரை முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டாலே தீய சக்திகள் நெருங்க மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் பிரிந்து கிடப்பது போல் நடிக்கிறார்கள்.  உள்ளுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்கிறோம். ஆனால் உள்ளுக்குள் பிரிந்து கிடக்கிறோம்.                                          

ஒற்றுமை இல்லாததால் இதுவரை இந்த சமுதாயம் சந்தித்த கடந்த கால இழப்புகள்

عَنْ ابْنِ عُمَرَ رضي الله قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ 1مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ(أَبُو دَاوُد)قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ (أَبُو دَاوُد) كتاب الخاتم

عَنْ أَنَسٍ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ وَفِي يَدِ أَبِي بَكْرٍ بَعْدَهُ وَفِي يَدِ عُمَرَ بَعْدَ أَبِي بَكْرٍ فَلَمَّا كَانَ عُثْمَانُ جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسَ قَالَ فَأَخْرَجَ الْخَاتَمَ فَجَعَلَ يَعْبَثُ بِهِ فَسَقَطَ قَالَ فَاخْتَلَفْنَا ثَلَاثَةَ أَيَّامٍ مَعَ عُثْمَانَ فَنَزَحَ الْبِئْرَ فَلَمْ يَجِدْهُ (بخاري

قوله فاختلفنا ثلاثة أيام أي في الصدور والورود والمجيء والذهاب والتفتيش (عمدة القاري)

நபி ஸல் அவர்கள் அணிந்திருந்த மோதிரம் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று முத்திரை பதிக்கப்பட்டிருந்த து.  ஆரம்பத்தில் தங்கத்தால் அது இருந்த து. அதைப் பார்த்து மக்களும் தங்க மேதிரம் அணிய ஆரம்பித்த போது  நபி ஸல் அவர்கள் தங்க மோதிரத்தை வீசி எறிந்து இனிமேல் நான் தங்கம் அணிய மாட்டேன் என்று கூறினார்கள். பின்பு அதே மாதிரி வெள்ளி மோதிரம் செய்து அணிந்து கொண்டார்கள். அது அரசாங்க முத்திரையாகவும் பயன்பட்டதால் நபி ஸல் அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர் ரழி, உமர் ரழி, உஸ்மான் ரழி ஆகியோர் பொறுப்பில் இருக்கும் போது அணிந்தனர். ஆனால் எப்போது உஸ்மான் ரழி அவர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தோர்களோ அதற்குப் பின்பு உஸ்மான் ரழி அவர்கள் அரீஸ் என்ற கிணற்றின் விளிம்பின் மீது அமர்ந்தவர்களாக கவலையில், ஆழ்ந்த சிந்தனையில் மோதிரத்தை கழற்றுவதும் போடுவதுமாக இருந்தார்கள். பிறகு அந்த மோதிரம் கிணற்றில் விழுந்து விட்டது. அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் மூன்று நாட்கள் அதை தேடுவதும் வருவதும் போவதுமாக அலைந்தோம். கிணறு முழுவதும் இறைத்துப் பார்த்தும் மோதிரம் கிடைக்கவில்லை. அபூதாவூத் ரஹ் கூறினார்கள். ஒற்றுமையை கை விட்டு உஸ்மான் ரஹ் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புரட்சி செய்தார்கள். அதனால் காலமெல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டிய மோதிரம் தொலைந்து விட்டது.                               

                                                            

ஒற்றுமை இல்லா விட்டால் அது சமுதாயத்தையும் பாதிக்கும். தனி மனிதனையும் பாதிக்கும். அபூ ஹுரைரா (ரழி) காலம் காலமாக பாதுகாத்து வைத்த அற்புதப் பை உதுமான் (ரழி) கொல்லப்பட்ட நாளில் தொலைந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ2 ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ3 هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي4 حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي)

  விளக்கம்- மேற்படி சம்பவம் சில ஹதீஸ் கிதாபுகளில் சுருக்கமாகவும் சிலவற்றில் விரிவாகவும் உள்ளது. (அபூஹுரைரா ரழி கூறினார்கள் உஸ்மான் ரழி அவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் எல்லோருக்கும் ஒரு சோகம் என்றால் எனக்கு 2 சோகம். 1. உஸ்மான் ரழி அவர்கள் கொலை.  2. ஒரு பை தொலைந்து போன சோகம்.  ஒரு பிரயாணத்தில் அனைவரிடமும் உணவு தீர்ந்து போன போது என்னிடம் மட்டும் கொஞ்சம் பேரீத்தம்பழங்கள் இருந்தன. அதில் பரக்கத்துக்காக துஆச் செய்யும்படி நபி ஸல் அவர்களிடம் நான் கேட்க, அவர்கள் அந்தப் பழங்களை ஒன்று சேர்த்து வைத்து பரக்கத்துக்காக துஆ செய்தார்கள். பிறகு அதிலிருந்து ஆயிரக்கணக்கான பேரும் சாப்பிட்டோம். அத்தனை பேர் சாப்பிட்டும் தீரவில்லை. பிறகு என்னிடம்  இந்தப் பையை வாங்கிக் கொள்.  இதை உன் இடுப்புக் கச்சையின் சுருக்குப் பையில் வைத்துக் கொள். இதிலிருந்து கையை விட்டு எடுத்துச் சாப்பிடு. ஒருபோதும் கொட்டக் கூடாது என்று கூறினார்கள். போருக்காக செல்லும் நேரங்களில் அதிலிருந்து நாங்கள் அனைவரும் சாப்பிடுவோம். ஆனால் என்றைக்கு  உதுமான் (ரழி) அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களில் சிலர் செய்த புரட்சியின் விளைவாக உதுமான்(ரழி) கொல்லப்பட்டார்களோ அன்றே என்னுடைய பரக்கத்தான பையும் தொலைந்து விட்டது.                

படிப்பினை- ஒற்றுமையின்மை சமூகத்தையும் பாதிக்கும். சமூகம் பெற வேண்டிய பரக்கத்தையும் நீக்கி விடும்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வாக்குரிமை

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை பொறுத்த வரையில் ஓட்டுப்போடுவது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையாகும்.  அதிலும் குறிப்பாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் ஓட்டுப் போடா விட்டால் இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக ஆகி விடும். மற்றொரு புறம் ராம ராஜ்ஜியம் என்ற எதிரிகளின் சூழ்ச்சிக்கு நாம் மறைமுகமாக ஒத்துழைப்பது போன்றாகி விடும்.          

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2)المائدة - عَنْ خَالِدٍ  سَمِعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ بِعِقَابٍ و قَالَ عَمْرٌو عَنْ هُشَيْمٍ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ (ابن ماجة)

அநியாயத்தை தடுக்கும் சக்தி நம்மிடம் இருந்தும் அதை தடுக்காமல் இருந்தால் அதனால் அல்லாஹ் ஏற்படுத்தும் சோதனைகளுக்கு அத்தனை பேரும் பலியாவார்கள் என்பது மேற்படி ஹதீஸின் கருத்தாகும். இதன்படி அநியாயக்கார பாசிச அரசின் அநியாயத்தை நம் கைகளாலோ, நாவினாலோ தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை. நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம். வல்ல ரஹ்மானிடம் துஆ செய்வதற்கு அடுத்த படியாக ஓட்டு என்ற சட்ட ரீதியான ஆயுதம் மட்டுமே. இதையும் நாம் பயன்படுத்தாமல் ஒரு ஓட்டு குறைவதால் என்ன வந்து விடப்போகிறது என்றெண்ணி நாம் இருந்து விட்டால் பாசிச ஆட்சிக்கு துணை போன குற்றத்திற்காக கண்டிப்பாக அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவோம். இங்கேயும் அதற்கான விளைவை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.  ஒரு ஓட்டு தானே என நாம் நினைப்பது போல நூறு பேர் நினைத்தால் அந்த நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் இஸ்லாமிய எதிரி ஜெயித்து விட்டால் அவனை ஜெயிக்க வைத்த குற்றத்திற்காக அந்த நூறு பேரும் அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள்.                                                       

 இந்தக் காலத்தில் யார் தான் யோக்கியம். எல்லா வேட்பாளர்களும் நமக்கு எதிராகத் தானே இருக்கிறார்கள். என்று சிலர் கேட்பதும் சரி தான். ஆனால் விரோதி, மிகவும் விரோதி, மிக மிக மோசமான விரோதி என்று பல்வேறு ரகம் இருக்கிறது. இதில் மூன்றாவது நபர் வர விடாமல் தடுக்க வேறு வழியின்றி கொஞ்சம் சுமாரான எதிரிக்கு ஓட்டுப் போட வேண்டியுள்ளது.                 

ஓட்டுப்போடுவது என்பது காஃபிர்களை வெற்றியடைச் செய்வது என்ற தவறான கருத்து சிலரிடம் உள்ளது

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் நிறைய உள்ளன.


 உதாரணமாக, பாரசீகத்துக்கு எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள்.காரணம் ரோமர்கள் வேதம் தரப்பட்டவர்கள் நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே மகிழ்ச்சிக்கு காரணம். அதை ஆதரித்து அல்லாஹ்வும் வசனங்களை இறக்கி வைத்தான். ரூம் சூராவின் ஆரம்ப  வசனங்கள் அதை சுட்டுக் காட்டுகின்றன.


وسار رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا من مكة مكث بحِرَاء، وبعث رجلًا من خزاعة إلى الأخنس بن شَرِيق ليجيره، فقال : أنا حليف، والحليف لا يجير ، فبعث إلى سهيل بن عمرو، فقال سهيل : إن بني عامر لا تجير على بني كعب، فبعث إلى المطعم بن عدى، فقال المطعم : نعم ، ثم تسلح ودعا بنيه وقومه ، فقال : البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرت محمدًا، ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم : أن ادخل، فدخل رسول الله صلى الله عليه وسلم ومعه زيد بن حارثة حتى انتهي إلى المسجد الحرام، فقام المطعم بن عدى على راحلته فنادى : يا معشر قريش، إني قد أجرت محمدًا فلا يهجه أحد منكم، وانتهي رسول الله صلى الله عليه وسلم إلى الركن فاستلمه، وطاف بالبيت، وصلى ركعتين، وانصرف إلى بيته، ومطعم بن عدى وولده محدقون به بالسلاح حتى دخل بيته . وقيل : إن أبا جهل سأل مطعمًا : أمجير أنت أم متابع ـ مسلم ؟ . قال : بل مجير . قال : قد أجرنا من أجرت . وقد حفظ رسول الله صلى الله عليه وسلم للمطعم هذا الصنيع، فقال في أسارى بدر : ( لو كان المطعم بن عدى حيًا ثم كلمنى في هؤلاء النتنى لتركتهم له ) .(الرحيق المختوم)

 நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவர்கள் போன்ற பலதோழர்கள் மக்காவில் இருக்கும்போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு  வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூது அனுப்பினார்கள். அதற்கு முத்இம்  சம்மதம் தெரிவித்தார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாள்களுடன் கஃபாவிற்குள் நுழைந்தனர். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலே வந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியானால் உன்னுடைய பொறுப்பில் உள்ள  உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அபூ ஜஹ்ல் அங்கீகரித்தான்.

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் இதுபோல் நிறைய உள்ளன நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அதுபோன்ற சமூக சேவைக்காக இன்று அழைக்கப்பட்டாலும் நிச்சயமாக பதில் அளிப்பேன் என்றார்கள். இவ்வாறு உலக விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் தேச நலன் கருதி அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார்கள். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒற்றுமையே பலம்

 10-04-2026 SHAWWAL-  21 بسم الله الرحمن الرحيم          ஒற்றுமையே பலம் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  B...