வியாழன், 25 ஜூன், 2026

அஹ்லே பைத்

 19-06-2026

முஹர்ரம் - 3 بسم الله الرحمن الرحيم  

ஆஷூரா நோன்புகளின் சிறப்பும்

அஹ்லெ பைத்துகளின் சிறப்பும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஆஷூரா நாளாக இருப்பதால் அன்றைய தினம் ஆஷூரா நாளில்  நடைபெற்ற அற்புத சம்பவங்களைப் பற்றிப் பேசப்படும். அதற்கு முன்பு இந்த ஜும்ஆவில் முஹர்ரம் மாதம் முழுவதுமே நஃபில் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்பதைப் பற்றியும் குறிப்பாக ஆஷூரா நோன்புகளின் சிறப்பைப் பற்றியும் அஹ்லெ பைத்துகளின் சிறப்பைப் பற்றியும் குறிப்பாக ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பைப் பற்றியும் அவர்களின் பெயரால் ஷியாக்கள் செய்யும் அனாச்சாரங்களைப் பற்றியும் காண்போம்.

ரமழானுக்கு அடுத்து நோன்பு வைப்பதற்குரிய ஏற்றமான  மாதங்களில் முஹர்ரம் மாதம்  சிறப்பான மாதமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (رواه  مسلم    -باب فَضْلِ صَوْمِ الْمُحَرَّمِ  - عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلَهُ رَجُلٌ فَقَالَ أَيُّ شَهْرٍ تَأْمُرُنِي أَنْ أَصُومَ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ لَهُ مَا سَمِعْتُ أَحَدًا يَسْأَلُ عَنْ هَذَا إِلَّا رَجُلًا سَمِعْتُهُ يَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا قَاعِدٌ عِنْدَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ شَهْرٍ تَأْمُرُنِي أَنْ أَصُومَ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ إِنْ كُنْتَ صَائِمًا بَعْدَ شَهْرِ رَمَضَانَ فَصُمْ الْمُحَرَّمَ فَإِنَّهُ شَهْرُ اللَّهِ فِيهِ يَوْمٌ تَابَ فِيهِ عَلَى قَوْمٍ وَيَتُوبُ فِيهِ عَلَى قَوْمٍ آخَرِينَ (ترمذي - بَاب مَا جَاءَ فِي صَوْمِ الْمُحَرَّمِ

 ஒரு மனிதர் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ரமழானுக்குப் பிறகு நான் உபரியான நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம்  எது என்று கேட்ட போது, அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடம் இதே கேள்வியை நபி ஸல் அவர்களிடம் ஒரே ஒரு மனிதர் மட்டும் தான் கேட்டார். அப்போது நான் அருகில் இருந்தேன். அவர் கேட்ட கேள்விக்கு நபி ஸல் அவர்கள் ரமழானுக்குப் பிறகு நீ உபரியான நோன்பு வைப்பதாக இருந்தால் முஹர்ரம் மாத த்தில் நோன்பு வைப்பீராக ஏனெனில் அது அல்லாஹ்வின் மாதமாகும். அந்த மாத த்தில் ஒரு நாள் உண்டு. அந்நாளில் அல்லாஹ்  ஒரு சமூகத்தாருக்கு மன்னிப்பு வழங்கினான். மற்றும் சில சமுதாயத்திற்கும் மன்னிப்பு வழங்கினான்.- திர்மிதீ  

ரமழானுக்கு அடுத்து ஷஃபான் மாதத்தில் அதிகமாக நபி (ஸல்) நோன்பு வைத்துள்ளார்கள் என்ற ஹதீஸுக்கும் ரமழானுக்கு அடுத்து முஹர்ரம் மாதம் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்ற ஹதீஸுக்கும் இடையே உள்ள முரண்பாடும் அதற்கான விளக்கமும்

அதேபோல ஃபர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்தில்  முஅக்கதாவான  முன்பின் சுன்னத்துகள் இருக்க, நபி (ஸல்) அவர்கள் ஃபர்ளான தொழுகைக்கு அடுத்து இரவுத் தொழுகை சிறந்தது  என்று கூறியதற்கான விளக்கம் 

فإن قيل كيف كان رسول الله صلى الله عليه و سلم يخص شعبان بصيام التطوع فيه مع أنه قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم فالجواب أن جماعة أجابوا عن ذلك بأجوبة .......والأظهر كما قال بعض الشافعية والحنابلة وغيرهم أن أفضل الصيام بعد شهر رمضان شعبان لمحافظته صلى الله عليه و سلم على صومه أو صوم أكثره فيكون قوله أفضل الصيام بعد رمضان المحرم محمولا على التطوع المطلق (عون المعبود وكذا أفضل الصلاة بعد المكتوبة قيام الليل إنما أريد به تفضيل قيام الليل على التطوع المطلق دون السنن والرواتب التي قبل الفرض وبعده (عون المعبود

சுருக்கம்- பொதுவாகவே நபி (ஸல்)  அவர்கள் வழமையாக செய்தார்கள் என்பதை வைத்து ரமழானுக்கு அடுத்து ஷஃபான் மாத நோன்புகள் சுன்னத் என்று விளங்குவோம். அதே நேரத்தில்  ரமழானுக்கு அடுத்து முஹர்ரம் மாதம் நோன்பு வைப்பதற்கு சிறந்த மாதம் என்ற ஹதீஸுக்கு விளக்கமாகிறது பொதுவாக நஃபில் நோன்புகளில் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத த்தின் நோன்புகள்  என்பதாகும்.  அதேபோல நபி (ஸல்)  அவர்கள் வழமையாக தொழுதார்கள் என்பதை வைத்து ஃபர்ளுக்கு அடுத்து முஅக்கதாவான முன்பின் சுன்னத்துகள்  உள்ளன அதே நேரத்தில்  சுன்னத் முஅக்கதா அல்லாத  நஃபிலான தொழுகைகளில்  சிறந்த தொழுகை  இரவுத் தொழுகை என்று விளங்க வேண்டும்.      

மற்ற மாதங்களை விட முஹர்ரம் மாதத்தை மட்டும் அல்லாஹ்வின் மாதம் என நபி (ஸல்)  கூறியதற்கு 

இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்கள் கூறும்  விளக்கம்   

أقول سئلت لم خص المحرم بقولهم شهر الله دون سائر الشهور مع أن فيها ما يساويه في الفضل أو يزيد عليه كرمضان ووجدت ما يجاب به أن هذا الاسم إسلامي دون سائر الشهور فإن أسماءها كلها على ما كانت عليه في الجاهلية وكان اسم المحرم في الجاهلية صفر الأول والذي بعده صفر الثاني فلما جاء الإسلام سماه الله المحرم فأضيف إلى الله بهذا الاعتبار [ شرح السيوطي على مسلم ]

அந்தஸ்தில் எல்லா மாதங்களும் சமம் என்றிருக்க முஹர்ரம் மாதம் மட்டும் அல்லாஹ்வின் மாதம் என்று கூறியதற்கான காரணம் அல்லாஹ் பெயர் சூட்டிய மாதம் என்றும் விளக்கம் கூறலாம். அதாவது ஆரம்ப காலத்தில் இருந்தே மற்ற மாதங்கள் அதற்குரிய பெயரில் அழைக்கப் பட்டு வந்தாலும் அரபிகள் முஹர்ரம் மாதத்தை மட்டும் தம் சுய விருப்பப்படி பெயரை மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருந்தார்கள்.இஸ்லாம் வந்த பிறகு அல்லாஹ்வே இம்மாதத்திற்கு முஹர்ரம்  என பெயர் சூட்டியதால் அல்லாஹ்வுடன் இணைத்து இம்மாதத்தின் பெயர் அழைக்கப்படுகிறது. மற்ற மாதங்களை விட முஹர்ரம் மாதத்தை மட்டும் அல்லாஹ்வின் மாதம் என நபி (ஸல்)  கூறியதற்கு

இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறும்  விளக்கம்

قال القرطبي إنما كان صوم المحرم أفضل الصيام من أجل أنه أول السنة المستأنفة فكان استفتاحها بالصوم الذي هو أفضل الأعمال [ شرح السيوطي على مسلم ]

நோன்பு என்பது எனக்குரியது. அதற்கு நானே நன்மை தருகிறேன் என்ற அடிப்படையில் நோன்பு அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான வணக்கம்.  நஃபிலான நோன்புகளில் சிறந்த நோன்புகளான முஹர்ரம் மாத நோன்புகள் மேலும் சுன்னத்தான ஆஷூரா (இரு) நோன்புகள் என அல்லாஹ்வுக்கு பிடித்தமான வணக்கங்களை அதிகம் உள்ளடக்கியதாக  இந்த மாதம் துவங்குவதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்.    

ஆஷூரா நோன்புகளின் சிறப்புகள்

பல்வேறு நபிமார்களும் ஈடேற்றம் அடைந்த இந்த நாளில் அதற்கு நன்றிக் கடனாக நோன்பு சுன்னத்தாக்கப்பட்டுள்ளது

பனீ இஸ்ராயீல் சந்ததியினருக்கு பெருநாளாக விளங்கிய ஆஷூரா தினம்

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تُعَظِّمُهُ الْيَهُودُ وَتَتَّخِذُهُ عِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوهُ أَنْتُمْ (مسلم) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ – كتاب الصوم 

அறியாமைக் காலத்தில் குறைஷிகளாலும் கண்ணியப்படுத்தப்பட்ட ஆஷூரா தினம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ لَا يَصُومُهُ بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ – 

அறியாமைக் காலத்திலும் குறைஷிகள் ஆஷூரா தினத்தை கண்ணியப்படுத்தி நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபி ஸல் அவர்களும் நோன்பு வைத்தார்கள். மதீனாவுக்கு வந்த பிறகும் அது தொடர்ந்தது. அதற்குப் பிறகு எப்போது ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான வசனம் இறங்கியதோ அதற்குப் பிறகு ரமழான் கடமையான நோன்பாக மாறியது. ஆஷூரா நோன்பு சுன்னத்தான நோன்பாக மாறியது    

كتاب الصوم-   عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى(جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ -كتاب الحج

மேற்படி ஹதீஸில் கஃபாவின் திரை மாற்றப்படும் நாளாக ஆஷூரா நாள் இருந்தது என்பதன் விளக்கம்

فَإِنَّهُ يُفِيد أَنَّ الْجَاهِلِيَّة كَانُوا يُعَظِّمُونَ الْكَعْبَة قَدِيمًا بِالسُّتُورِ وَيَقُومُونَ بِهَا ,وَيُسْتَفَاد مِنْ الْحَدِيث أَيْضًا مَعْرِفَة الْوَقْت الَّذِي كَانَتْ الْكَعْبَة تُكْسَى فِيهِ مِنْ كُلّ سَنَة وَهُوَ يَوْم عَاشُورَاء وَكَذَا ذَكَرَ الْوَاقِدِيُّ بِإِسْنَادِهِ عَنْ أَبِي جَعْفَر الْبَاقِر أَنَّ الْأَمْر اِسْتَمَرَّ عَلَى ذَلِكَ فِي زَمَانهمْ، وَقَدْ تَغَيَّرَ ذَلِكَ بَعْدُ فَصَارَتْ تُكْسَى فِي يَوْم النَّحْر(فتح الباري)  

ரமளான் நோன்பு கடமையாக்கப் பட்ட பின் அதற்கு அடுத்த அந்தஸ்தில் ஆஷூரா நோன்பு..

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ"(بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ .-كتاب الصوم

ஆஷூரா நோன்பு -முடிந்த வரை முஹர்ரம் 9, 10 ல் நோன்பு வைக்க வேண்டும். முடியா விட்டால் பிறை 10, 11-ல் வைக்கலாம் 

عن بْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قال حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) كِتَاب الصِّيَامِ -عَنْ اِبْن عَبَّاس رض مَرْفُوعًا صُومُوا يَوْم عَاشُورَاء وَخَالِفُوا الْيَهُود، صُومُوا يَوْمًا قَبْلَهُ أَوْ يَوْمًا بَعْدَهُ (فتح الباري

ஆஷூரா தினத்தில் செய்யக் கூடாதவைகள்:ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதால் முஹர்ரம் பத்தாம் நாளை துக்க தினமாக கொண்டாடுவதும், அந்த நாளில் நெஞ்சில் அடித்துக் கொள்வதும், தீ மிதிப்பதும் இஸ்லாமிய நடைமுறை அல்ல. 

عَنْ عَبْدِ اللَّهِ  رضى الله عنه  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم قَالَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ ، وَشَقَّ الْجُيُوبَ ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ (بخاري)  باب لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ -كتاب الجنائز- 

"கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை" ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.

عن أَبي بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِهِ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّا بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِئَ مِنْ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ (مسلم) باب تَحْرِيمِ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ-كتاب الايمان – وهكذا رواه البخاري في كتاب الجنائز -الحالقة:التى تحلق رأسها عند المصيبة-الشاقة: التى تشق ثوبها- الصالقة:التى ترفع صوتها عند المصيبة

அபூ மூஸா ரழி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். இலேசாக மயக்கமுற்றிருந்தார்கள். அவர்களின் தலை அவரது மனைவியின் மடியில் இருந்த து. அப்போது  அவர்களின் குடும்பத்தில் ஒருவர் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்த போது அதை தடுக்க அந்த நேரத்தில் சக்தி இருந்திருக்கவில்லை. மயக்கம் தெளிந்த பிறகு அவர்கள் தம் குடும்பத்தாரிடம் இறைத்தூதர் ஸல் அவர்கள் யாரை விட்டும் முற்றிலும் நீங்கி விட்டார்களோ அப்படிப்பட்டவர்களை விட்டும் நானும் நீங்கி விட்டேன்.  இறைத்தூதர் ஸல் அவர்கள் ஒப்பாரி வைப்பவர்களை விட்டும் துக்கம் காரணமாகமொட்டையடித்துக் கொள்பவர்களை விட்டும் துக்கம் காரணமாக சட்டையைக் கிழித்துக் கொள்பவர்களை விட்டும் ஒதுங்கியிருந்தார்கள். 

ஷியாக்களின் அனாச்சாரங்கள் நடைபெறும் இடத்திற்கு போகவும் கூடாது

قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ (مسلم) بَاب بَيَانِ كَوْنِ النَّهْيِ عَنْ الْمُنْكَرِ مِنْ الْإِيمَانِ- كِتَاب الْإِيمَانِ

இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது கூட நமது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது

وعن ابن عباس قال : ماتت زينب بنت رسول الله صلى الله عليه وسلم فبكت النساء فجعل عمر يضربهن بسوطه فأخره رسول الله صلى الله عليه وسلم بيده وقال : " مهلا يا عمر " ثم قال : " إياكن ونعيق الشيطان " ثم قال : " إنه مهما كان من العين ومن القلب فمن الله عز وجل ومن الرحمة وما كان من اليد ومن اللسان فمن الشيطان " . رواه أحمد 

 நபி ஸல் அவர்களின் மகளார் ஜைனப் ரழி இறந்த போது சில பெண்கள் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர். அப்போது உமர் ரழி அவர்கள் அப்பெண்களை சாட்டையால் அடிக்கவும் துணிந்தார்கள். அப்போது நபி ஸல் உமர் ரழி அவர்களைத் தடுத்து அந்தப் பெண்களுக்கு பின்வருமாறு புத்தி மதி கூறினார்கள். ஷைத்தானைப் போன்று ஒப்பாரி வைப்பதை விட்டும் உங்களை நான் தடுக்கிறேன். "உள்ளத்தினாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும் நாவினாலும் சோகத்தைக் காட்டுவது ஷைத்தானின் வேலையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: அஹ்மத்

عن عَائِشَةَ رضي الله عنها قالت لَمَّا جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ قَالَتْ وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ فَأَتَاهُ فَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَتْ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اذْهَبْ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ مِنْ التُّرَابِ.. (بخاري)كتاب الجنائز

  மூத்தா போரில் ஷஹீதாக்கப்பட்ட  மூன்று தளபதிகளான நபித்தோழர்களின் ஷஹாத த் செய்தி கிடைத்தபோது  நபி ஸல் அவர்கள் சோகமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது நபிகளாரிடம் ஒருவர் வந்து ஜஃபர் ரழி அவர்களின் குடும்பத்துப் பெண்கள் சப்தமிட்டு அழுது கொண்டிருக்கிற செய்தியைச் சொன்ன போது அவ்வாறு அழக்கூடாது என அவர்களைத் தடுக்கும்படி சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அவர் வந்து அந்தப் பெண்கள் தம் சொல்லுக்கு கட்டுப்பட்ட மறுக்கின்றனர் என்று கூற, இரண்டாவது முறையும் அந்தப் பெண்களை அவ்வாறு செய்வதை விட்டும் தடுங்கள் என்று கூறினார்கள். மீண்டும் அவர் வந்து அந்தப் பெண்கள் தம் சொல்லுக்கு கட்டுப்பட்ட மறுக்கின்றனர் என்று கூற, அப்போது நபி ஸல் அவர்கள் கோபமாக அந்தப் பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறினார்கள். 

 ஹுஸைன் ரழி அவர்களின் பெயரால் அவர்கள் கொல்லப் பட்டதைக் காரணம் காட்டி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற அனாச்சாரங்கள் அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத விஷயமாகும். மேலும் இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதைக் காரணம் காட்டி அதற்காக துக்கம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் கணவனும் மனைவியும் முஹர்ரம் 1 முதல் 10 வரை ஒன்று சேரக்கூடாது என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் இந்த பத்து நாட்களில் துக்கம் காரணமாக அசைவ உணவுகளை அறவே உண்ணக் கூடாது என்றும் கருதுகின்றனர். அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை ஹராம் என்று கருதி தடுத்துக் கொள்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும். ஒருவருக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவதற்கு பிடிக்காது. ஆனால் அதை அவர் கொள்கையாக வைத்திருக்கவில்லை என்றால் அது குற்றமில்லை.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (87) المائدة

நாமாக நம் உடலை வதைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு மற்றொரு சம்பவம்

عن جَابِرٍ رض..فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ (مسلم) بَاب الدَّلِيلِ عَلَى أَنَّ قَاتِلَ نَفْسَهُ لَا يَكْفُرُ - كِتَاب الْإِيمَانِ

நபி ஸல் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது துஃபைல் என்பவரும் ஹிஜ்ரத் சென்றார். அவருடன் அவரது சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதரும் ஹிஜ்ரத் சென்றார்.(அவர்கள் மதீனாவிற்கு சென்றபோது) மதீனாவின் தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்து வரவில்லை அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்து தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். பின்பு ஒரு நாள் துஃபைல் அவரை கனவில் கண்டார். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால் அவருடைய இரு கைகளும் போர்த்து மூடப்பட்டிருப்பதைக் கண்ட துஃபைல் அவர்கள் அந்த மனிதரிடம் உம் இறைவன் உம்மிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்று கேட்டார். அதற்கு அவர் நான் ஹிஜ்ரத் செய்ததால் அல்லாஹ் என்னை மன்னித்து விட்டான் என்றார். மீண்டும் துஃபைல் அவர்கள் “ உமது கைகள் மட்டும் போர்த்து மூடப்பட்டுள்ளதே ஏன்? என்று கேட்க, அதற்கு அவர்  “நீ வீணாக்கிய கையை நாம் சீராக்க மாட்டோம்” என என்னிடம் கூறப்பட்டது.”  என்றார். இந்தக் கனவை துஃபைல் அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கூறியபோது “யாஅல்லாஹ் அவரது இரு கைகளையும் மன்னிப்பாயாக” என்று நபி ஸல் துஆ செய்தார்கள்  - முஸ்லிம் – 184

யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடாது. கணவனை இழந்த மனைவியைத் தவிர

عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِى سَلَمَةَ قَالَتْ لَمَّا جَاءَ نَعْىُ أَبِى سُفْيَانَ مِنَ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ  رضى الله عنها بِصُفْرَةٍ فِى الْيَوْمِ الثَّالِثِ ، فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّى كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً ، لَوْلاَ أَنِّى سَمِعْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم  يَقُولُ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ ، إِلاَّ عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا (بخاري) كتاب الجنائز

மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடும் என்றிருந்தால் நாம் முதலில் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது நபி ஸல் அவர்களுக்காகத் தான். ஆனால் அப்படி எதுவும்  ஷரீஅத்தில் இல்லை. குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போதே கொடூரமாக கொலை செய்யப் பட்ட உஸ்மான் ரழி, மிஹ்ராபில் வைத்தே வெட்டப் பட்ட உமர் ரழி ஆகியோர் ஹுஸைன் அவர்களை விட மேலானவர்களாக இருப்பினும் அவர்களுக்காக யாரும் இவ்வாறு அனுஷ்டிப்பதில்லை. ஆகவே ஷியாக்கள் இன்று செய்யும் செயல்கள் ஷைத்தானால் உருவாக்கப் பட்டவையாகும்

والظاهر أنه من سخف الشيعة وقد وقع ما هو أعظم من قتل الحسين رضي الله عنه ولم يقع شيء مما ذكروه فإنه قد قتل أبوه علي بن أبي طالب رضي الله عنه وهو أفضل منه بالإجماع ولم يقع شيء من ذلك وعثمان بن عفان رضي الله عنه قتل محصورا مظلوما ولم يكن شيء من ذلك وعمر بن الخطاب رضي الله عنه قتل في المحراب في صلاة الصبح وكأن المسلمين لم تطرقهم مصيبة قبل ذلك ولم يكن شيء من ذلك وهذا رسول الله صلى الله عليه وسلم وهو سيد البشر في الدنيا والآخرة يوم مات لم يكن شيء مما ذكروه ويوم مات إبراهيم بن النبي صلى الله عليه وسلم خسفت الشمس فقال الناس خسفت لموت إبراهيم فصلى بهم رسول الله صلى الله عليه وسلم صلاة الكسوف وخطبهم وبين لهم أن الشمس والقمر لا ينخسفان لموت أحد ولا لحياته. (من مكتبة الشاملة)

எத்தனையோ நபிமார்கள் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார்கள். அதற்காக யாரும் இவ்வாறு துக்கம் கொண்டாடியதில்லை

وقتل الحسين ليس هو بأعظم من قتل الأنبياء وقد قُدّم رأس يحيى عليه السلام مهراً لبغي وقتل زكريا عليه السلام وكثير من الأنبياء قتلوا كما قال تعالى : قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِنْ قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (183) آل عمران 183 

ஹுஸைன் ரழி அவர்கள் எப்போது கொள்ளப்படுவார்கள் என்பது நபி ஸல் அவர்களுக்கு முன்பே தெரியும். அப்படியிருந்தும் அதை துக்கமான நாளாக கடை பிடிக்கும் படி கூறியதில்லை

عن أم  الفضل بنت الحارث أنها دخلتُ على رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله إني رأيت حلما منكرا الليلة قال:وما هو؟ قالت: إنه شديد قال وما هو ؟قالت : رأيت كأن قطعة من جسدك قطعت ووضعت في حجري. فقال رسول الله صلى الله عليه وسلم: رأيتُ خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في حجرك".فولدتْ فاطمة الحسين فكان في حجري كما قال رسول الله صلى الله عليه وسلم فدخلتُ يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم كانت مني التفاتة فإذا عينا رسول الله صلى الله عليه وسلم تهريقان الدموع قالت: فقلت : يا نبي الله بأبي أنت وأمي مالك ؟ قال :أتاني جبريل عليه السلام فأخبرني أن أمتي ستقتل ابني هذا فقلت : هذا ؟ قال : نعم وأتاني بتربة من تربته حمراء (دلائل النبوة للبهقي) مشكاة – باب مناقب أهل بيت النبي صلى الله عليه وسلم - كتاب المناقب

 உம்முல் ஃபழ்ல் ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம்  வருகை தந்து அல்லாஹ்வின் தூதரே நான் இன்று நான் விரும்பத் தகாத கனவை கண்டேன் என்று கூற, அது என்ன கனவு என நபி ஸல் கேட்டார்கள். அப்போது நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய உடம்பின் ஒரு சதைத் துண்டு  வெட்டப்பட்டு அது என் மடியில் கிடப்பதாக  கண்டேன் என்று கூறினேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நீர் நல்ல கனவைத் தான் கண்டிருக்கிறீர். அதற்கான விளக்கம் என்னவென்றால் என்னுடைய சதைத் துண்டான என் மகள் ஃபாத்திமா இன்ஷா அல்லாஹ் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அக் குழந்தை உமது மடியில் இருக்கும் என நபி ஸல் விளக்கம் கூறினார்கள்.

அவ்வாறே ஃபாத்திமா ரழி  அவர்கள் ஹுஸைனைப் பெற்றெடுத்தார்கள். நபி ஸல் கூறியது போலவே அக்குழந்தை அதிகமாக என்னுடைய மடியில் இருக்கும். ஒருமுறை ஹுஸைனை (ரழி) நான் சுமந்து சென்று நபி  (ஸல்) அவர்களின் மடியில் வைத்தேன். பேரப் பிள்ளையை மடியில் வாங்கி வைத்திருந்த நபி (ஸல்) அவர்கள் சற்று நேரத்தில் அழ ஆரம்பித்தார்கள். நான் அதற்கான காரணம் கேட்டபோது நபி (ஸல்) கூறினார்கள். சற்று முன்பு  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து சோகமான செய்தியைக் கூறி விட்டுச் சென்றார்கள். அதாவது என்னுடைய இந்தப் பேரப் பிள்ளையை பிற்காலத்தில் என்னுடைய உம்மத்தைச் சார்ந்த சிலர் கொலை செய்வார்கள் என்று கூறி விட்டுச் சென்றார்கள் என்ற செய்தியை நபி (ஸல்) அழுது கொண்டே கூறினார்கள். அப்போது நான் இந்தக் குழந்தையையா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) ஆம் என்று கூறியதுடன்  ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் அதற்கான முன்னறிவிப்பாக இரத்தக் கறை படிந்த சிவப்பு நிற மண்ணையும் காட்டி விட்டுச் சென்றார்கள் என்றும் கூறினார்கள்.                                                

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرَى النَّائِمُ بِنِصْفِ النَّهَارِ وَهُوَ قَائِمٌ أَشْعَثَ أَغْبَرَ بِيَدِهِ قَارُورَةٌ فِيهَا دَمٌ فَقُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا قَالَ هَذَا دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَلْتَقِطُهُ مُنْذُ الْيَوْمِ فَأَحْصَيْنَا ذَلِكَ الْيَوْمَ فَوَجَدُوهُ قُتِلَ فِي ذَلِكَ الْيَوْمِ (مسند أحمد) باب مسند عبد الله بن العباس  مشكاة – باب مناقب أهل بيت النبي صلى الله عليه وسلم - كتاب المناقب

முஹர்ரம் மாத த்தில் அஹ்லே பைத்துகளின் சிறப்பை அறிந்து கொள்வது முக்கியமானதாகும்.

அஹ்லே பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி

قل لا اسئلكم عليه اجرا الا المودة في القربي [ ٤٢=٢٣

;அல்லாஹூ தஅலா குர்ஆனில் கூறுகிறான் முஃமின்களே ! உங்களுக்கு மத்தியில்  நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதை எடுத்துச் சொன்னதற்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை என்றாலும் எனது சுற்றத்தார்களான அஹ்லு பைத்துகளிடம் அன்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்  [  ஷூரா =23 ]

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي (ترمذي

நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் மீது சலவாத் சொல்லாமல் தொழுகை பரிபூரணம் அடைவதில்லை

عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد (بخاري

நபியின் குடும்பத்தை நேசிப்பது, அவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வது நிஃபாக்கிலிருந்து காப்பாற்றும் என தஹாவி இமாம் கூற்று,

ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق).

وعن المسور بن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال : " فاطمة بضعة مني فمن أغضبها أغضبني "

وعن البراء قال : رأيت النبي صلى الله عليه وسلم والحسن بن علي على عاتقه يقول : " اللهم إني أحبه فأحبه " متفق عليه

அஹ்லுல் பைத் என்றால் யார்?

عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ - ترمذي 3719

நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனான உமர் பின் அபீசலமா கூறுகிறார்;““நபியின் குடும்பத்தினரான் உங்களை சுத்தப்படுத்தவே அல்லாஹ் நினைக்கிறான்” என்ற திருக்குர் ஆனின் வசனம் நபியவர்கள் உம்முசலமாவின் வீட்டிலிருந்த போது அருளப்பட்ட்து. உடனே நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமா, பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன்(ரலி), ஆகியோரை அழைத்து தான் அணிந்திருந்த போர்வைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். பின்னால் நின்று கொண்டிருந்த அலி(ரல்) அவர்களையும் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு “ இறைவா!இவர்களே என் குடும்பத்தினர் இவர்களைவிட்டு அசுத்த்த்தை நீக்குவாயாக! இவர்களை முழுமையாக பரிசுத்தப் படுத்துவாயாக! என்று பிரார்த்திதார்கள்.  அப்போது உம்மு சலமா அவர்கள் நானும் அவர்களுடன் சேர்ந்தவள் தானே என்று கேட்டார். நீ  னது அந்தஸ்தான இடத்தில் இருக்கிறாய். என்று பதிலளித்தார்கள். திர்மிதி 3719இந்நபிமொழி உம்மு சல்மா அம்மையாரை பெருமானார் தம்முடன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறதுமருமகன் அலி (ரலி) யை அணைத்துக் கொண்டிருந்த்தால் அந்த இடத்தில் உம்முசலமாவை பெருமானார் (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை என்று விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள். 

அதனால் பெருமானாரின் மனைவியரும் பெருமானாரின் குடும்பத்தினர்களே என்பது தான் அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஆவின் கருத்தாகும்.

நபியின் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால் அதை பெரிய விஷயமாக நபித்தோழர்கள் கருதினார்கள்

؛ فقد قيل لابن عباس -رضي الله عنهما-بعد صلاة الصبح: ماتت فلانة، لبعض أزواج النبي فسجد، قيل له: أتسجد في هذه الساعة ؟ فقال: أليس قال رسول الله:(إذا رأيتم آية فاسجدوا)، فأي آية أعظم من ذهاب أزواج النبي-صلى الله عليه وسلم-

இப்னு அப்பாஸ் ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் வஃபாத்தான செய்தி சொல்லப்பட்ட போது உடனே (மிகப்பெரும் சோதனைகளைக் கண்டால் சஜ்தா செய்வது போன்று) சஜ்தா செய்தார்கள். அப்போது அவர்களிடம் இந்த நேரத்தில் இந்த செய்திக்காக எதற்கு சஜ்தா செய்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். அல்லாஹ்வின் (பெரும் சோதனையான) அத்தாட்சியைக் கண்டால் சஜ்தா செய்யுங்கள் என நபி ஸல் கூறியுள்ளார்கள். நபி ஸல் அவர்களின் மனைவிமார்களில் ஒருவரின் மரணத்தை  விட சோகமான செய்தி என்ன இருக்கப் போகிறது என்று பதில் கூறினார்கள்.                                             

பாரசீகரான சல்மான் ஃபார்ஸீ ரழி அவர்கள் அஹ்லே பைத்துகளில் ஒருவராக ஆக்கப்பட்டதன் விளக்கம்

عَنْ كَثِيرِ بن عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَّ الْخَنْدَقَ مِنْ أَحْمَرَ الْبَسْخَتَيْنِ طَرَفِ بني حَارِثَةَ عَامَ حِزْبِ الأَحْزَابِ، حَتَّى بَلَغَ الْمَذَابِحَ، فَقَطَعَ لِكُلِّ عَشَرَةٍ أَرْبَعِينَ ذِرَاعًا، فَاحْتَجَّ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ فِي سَلْمَانَ الْفَارِسِيِّ رَحِمَهُ اللَّهُ، وَكَانَ رَجُلا قَوِيًّا، فَقَالَ الْمُهَاجِرُونَ: سَلْمَانُ مِنَّا، وَقَالَتِ الأَنْصَارُ: سَلْمَانُ مِنَّا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"سَلْمَانُ مِنَّا أَهْلَ الْبَيْتِ" .(طبراني

சல்மான் (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல. பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்) அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்த்த்தின் போது மதினாவின் வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர்.  அகழி தோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை தாயகமாக கொண்ட அன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப்பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் தனியாக நின்றார்.  மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித்தோழர்களும் “இவர் எங்களவர் என்று அவரைச் சொந்தம் கொண்டாட போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு “சல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்”சல்மான் எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர்” என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوْا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي إبن ماجة

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்கள்:நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்த்தும் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் “என்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும். அல்லாஹ்விற்காகவும் என்னிடமிக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும்” என்றார்கள் (இப்னுமாஜா)

ஸய்யித் வம்சம் என்று யாருக்குக் கூறப்படும்

السيد عند المسلمين من كان من السلالة النبوية و السيدان الحسن و الحسين ابنا علي [ المنجد ]

ஸய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்குக்  கூறப்படும் .

நபிகளாரின் குடும்பத்தினரான அஹ்லே பைத்துகள் பெரும் வசதி வாயப்புடன் இருந்திருக்கவில்லை 

عن جابر رضي الله عنه  أن رسول الله صلى الله عليه وسلم أقام أيامًا لم يَطْعَمْ طعاما، حتى شَقّ ذلك عليه، فطاف في منازل أزواجه فلم يجد عند واحدة منهن شيئًا، فأتى فاطمة فقال: "يا بُنَيَّة، هَلْ عِنْدَكِ شَيْء آكُلُهُ، فَإِنَّي جَائِع؟" فقالت: لا والله بأبي أنتَ وأمّي. فلما خَرَج من عندها بعثت إليها جارة لها برغيفين وقطعة لحم، فأخذته منها فوضعته في جَفْنَةٍ لها، وقالت: والله لأوثرن بهذا رسول الله [صلى الله عليه وسلم]  على نفسي ومن عندي. وكانوا جميعًا محتاجين إلى شبعة طعام، فبعثت حَسَنا أو حُسَينا إلى رسول الله [صلى الله عليه وسلم]  فرجع إليها فقالت له: بأبي وأمي  قد أتى الله بشيء فخَبَّأتُه لك. قال: "هَلُمِّي يا بُنيَّة" قالت: فأتيته بالجفنة. فكشفت عن الجفنة فإذا هي مملوءة خبزًا ولحمًا، فلما نظرَتْ إليها بُهِتتْ وعرفَتْ أنها بركة من الله، فحمدَت الله وصلَّت على نَبِيِّهِ، وقدّمَتْه إلى رسولِ الله صلى الله عليه وسلم. فلما رآه حمد الله وقال: "مِنْ أيْنَ لَكِ هَذَا يَا بُنَية؟" فقالت  يا أبت، 

{ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ } فحمد الله وقال: "الحَمْدُ للهِ الَّذي جَعَلَكِ -يا بُنَيّة-شَبيهَةِ بسيدةِ  نِساء بَنيِ إسْرَائيلَ، فَإنَّها كَانَتْ إذَا رَزَقَهَا اللهُ شَيْئًا فَسُئِلَتْ عَنْهُ قَالَتْ: { هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ } فبعث رسول الله صلى الله عليه وسلم إلى عَلِي  ثم أكل رسولُ الله صلى الله عليه وسلم وأكل علي، وفاطمة، وحسن، وحسين، وجميع أزواج النبيّ صلى الله عليه وسلم وأهل بيته جميعًا حتى شبعوا. قالت: وبقيت الجفنة كما هي، فأوسعت ببقيتها  على جميع الجيران، وجعل الله فيها بركة وخيرا كثيرا  .(تفسير ابن كثير) الجفنةதட்டு

விளக்கம்- நபி ஸல் அவர்கள் எப்போதும்  தனக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க மாட்டார்கள். அடுத்த நேரம் அல்லாஹ் எப்படியும் தருவான் என்ற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். அவ்வாறு  ஒருமுறை  நபி ஸல் அவர்களின் குடும்பத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எந்த மனைவிமார்களின் வீட்டிலும் எதுவும் இல்லை.  கடைசியாக பாத்திமா ரழி அவர்களின் வீட்டுக்கும் நபி ஸல் அவர்கள் சென்றார்கள். அங்கும் எதுவும் இல்லை. பசியுடன் நபி ஸல் அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். சற்று நேரத்தில் அண்டை வீட்டுப் பெண்  இரண்டு ரொட்டித் துண்டுகளையும்  சிறிதளவு இறைச்சியையும் கொடுத்தனுப்ப, உடனே பாத்திமா ரழி அவர்கள் நிச்சயமாக நாம் பசியோடு இருந்தாலும் கூட, இதை நபி ஸல் அவர்களுக்காக எடுத்து வைப்பேன் என்று எண்ணி அதை தனியாக எடுத்து வைத்து விட்டு நபி ஸல் அவர்களை அழைத்து வருவதற்காக ஹஸன், ஹுஸைன் ரழி இருவரையும் அனுப்ப, நபி ஸல் அவர்கள் அங்கு வருகை தந்தார்கள். அப்போது பாத்திமா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம்  உங்களுக்காக  ஒரு உணவை எடுத்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதை எடுத்து வா என்று நபி ஸல் அவர்கள் கூற, அதை எடுக்கச் சென்ற பாத்திமா ரழி அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் அதை வைக்கும்போது இருந்த தை விட மிக அதிகமாகவே இருந்தது. இதை முஃஜிஸா என்று கூறலாம். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் இது எப்படி உமக்குக் கிடைத்த து என்று மகளிடம் கேட்க,  அன்னை மர்யம் அலை அவர்கள் பதில் கூறியதைப் போன்று பாத்திமா ரழி அவர்கள் 

{ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ }

இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த து என பதிலளித்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அன்னை மர்யம் அலை பதில் கூறியது போன்று உன்னை பதில் கூற வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறி விட்டு, தனக்காக எடுத்து வைத்த உணவை தான் மட்டும் உண்ணாமல் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரச்சொன்னார்கள். காரணம் அப்போது அத்தனை பேரும் பசியோடு தான் இருந்தனர் அனைவரும் வந்த பிறகு  முதலில் நபி ஸல் அவர்களும்  பின்பு அலீ ரழி அவர்களும் பின்பு வரிசையாக அனைவரும் உண்டனர். அத்தனை பேரும் உண்ட பிறகும் உணவு  தட்டு நிறைய முன்பு இருந்தது  போன்றே மிச்சம் இருந்தது.  பிறகு அனைத்து அண்டை வீட்டாருக்கும் அது கொடுத்து அனுப்பப் பட்டது.  

عن زَيْدِ بْنِ أَرْقَمَ رضي الله عنه ..قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ أَلَا أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي فَقَالَ لَهُ حُصَيْنٌ وَمَنْ أَهْلُ بَيْتِهِ يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ قَالَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ قَالَ وَمَنْ هُمْ قَالَ هُمْ آلُ عَلِيٍّ وَآلُ عَقِيلٍ وَآلُ جَعْفَرٍ وَآلُ عَبَّاسٍ قَالَ كُلُّ هَؤُلَاءِ حُرِمَ الصَّدَقَةَ قَالَ نَعَمْ (مسلم) بَاب مِنْ فَضَائِلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - كِتَاب فَضَائِلِ الصَّحَابَةِ 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُوقٍ مِنْ أَسْوَاقِ الْمَدِينَةِ فَانْصَرَفَ فَانْصَرَفْتُ فَقَالَ أَيْنَ لُكَعُ ثَلَاثًا ادْعُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ فَقَامَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يَمْشِي وَفِي عُنُقِهِ السِّخَابُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ هَكَذَا فَقَالَ الْحَسَنُ بِيَدِهِ هَكَذَا فَالْتَزَمَهُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ بَعْدَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ (بخاري) باب السِّخَابِ لِلصِّبْيَانِ-كتاب اللباس  (السخاب : قلادة ليس فيها من اللؤلؤ والجوهر شىء)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஹ்லே பைத்

 19-06-2026 முஹர்ரம் - 3 بسم الله الرحمن الرحيم   ஆஷூரா நோன்புகளின் சிறப்பும் அஹ்லெ பைத்துகளின் சிறப்பும் https://chennaijamaathulula...