புதன், 15 ஜூலை, 2026

பெரும் பாவங்கள்

03-07-2026

முஹர்ரம் - 17 بسم الله الرحمن الرحيم  

      சிறு பாவங்களும் பெரும் பாவங்களும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا (31) النساء

பாவம் செய்வது மனிதனின் இயல்பு. ஆனால் அதை விட்டும் மன்னிப்புக் கேட்டு திருந்த வேண்டும். சில பாவங்கள் நாம் செய்யும் நற்செயல்கள் மூலமாகவே மன்னிக்கப்படும். அத்தகைய நற்செயல்களில் சிலவற்றைப் பற்றி காண்போம். பெரும்பாவங்களைப் பொறுத்த வரை நாம் அழுது முறைப்படி தவ்பா செய்தால் மன்னிக்கப்படும். ஆனால் மூன்று விதமான நற்செயல்கள் மூலம் நாம் மன்னிப்புக் கேட்கா விட்டாலும் இந்த உலகிலேயே நமது பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும். இதற்கு ஆதாரம் பின்வரும் ஹதீஸில் உள்ளது 1. இஸ்லாம். ஒருவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றால் அவருடைய பழைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் படும். 2. ஹிஜ்ரத் மூலம் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும்.3.ஹஜ்ஜே மக்பூல் பெரும்பாவங்களுக்கான மன்னிப்பாக அமையும்.  

மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத் மூலமாக பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும்.

மேற்கூறப்பட்ட ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் விரிவாக காண்போம்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்

عَنِ ابْنِ شَمَاسَةَ الْمَهْرِىِّ قَالَ حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ وَهُوَ فِى سِيَاقَةِ الْمَوْتِ. فَبَكَى طَوِيلاً وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ. فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ إِنِّى قَدْ كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلاَثٍ لَقَدْ رَأَيْتُنِى وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم مِنِّى وَلاَ أَحَبَّ إِلَىَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللَّهُ الإِسْلاَمَ فِى قَلْبِى أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلأُبَايِعْكَ. فَبَسَطَ يَمِينَهُ - قَالَ - فَقَبَضْتُ يَدِى. قَالَ «مَا لَكَ يَا عَمْرُو ».قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ  قَالَ « تَشْتَرِطُ بِمَاذَا ». قُلْتُ أَنْ يُغْفَرَ لِى. قَالَ « أَمَا عَلِمْتَ أَنَّ الإِسْلاَمَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ ». وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَىَّ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَلاَ أَجَلَّ فِى عَيْنِى مِنْهُ وَمَا كُنْتُ أُطِيقُ أَنْ أَمْلأَ عَيْنَىَّ مِنْهُ إِجْلاَلاً لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لأَنِّى لَمْ أَكُنْ أَمْلأُ عَيْنَىَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِى مَا حَالِى فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلاَ تَصْحَبْنِى نَائِحَةٌ وَلاَ نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِى فَشُنُّوا عَلَىَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِى قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّى (مسلم)

சுருக்கம்- இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இன்னின்ன நற்செய்திகள் கூறவில்லையா என [ஆறுதல் சொல்லும் வகையில்] கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி] அவர்கள் [தம் புதல்வரை நோக்கி] திருப்பி [பின்வருமாறு] கூறினார்கள்; அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத்[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். நான்[என் வாழ்நாளில்] மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன். [முதலாவதுகட்டத்தில்] அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.                                                    

 [இரண்டாவது கால கட்டத்தில்] அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபியவர்களிடம் சென்று உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் [பைஅத்] அளிக்கிறேன் என்றேன். நபி[ஸல்] அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி[ஸல்] அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி[ஸல்] அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள். என் [முந்தைய] பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். [பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன். [ நூல்;முஸ்லிம் 

முஸ்லிமான பின் உடனே மவ்த் ஏற்பட்டதால் ஒரு அமல் கூட செய்யாமல் சுவனம் நுழைந்த பாக்கியசாலி சஹாபீ

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنّ عَمْرَو بْنَ أُقَيْشٍ كَانَ لَهُ رِبًا فِي الْجَاهِلِيَّةِ فَكَرِهَ أَنْ يُسْلِمَ حَتَّى يَأْخُذَهُ فَجَاءَ يَوْمُ أُحُدٍ فَقَالَ أَيْنَ بَنُو عَمِّي قَالُوا بِأُحُدٍ قَالَ أَيْنَ فُلَانٌ قَالُوا بِأُحُدٍ قَالَ فَأَيْنَ فُلَانٌ قَالُوا بِأُحُدٍ فَلَبِسَ لَأْمَتَهُ وَرَكِبَ فَرَسَهُ ثُمَّ تَوَجَّهَ قِبَلَهُمْ فَلَمَّا رَآهُ الْمُسْلِمُونَ قَالُوا إِلَيْكَ عَنَّا يَا عَمْرُو قَالَ إِنِّي قَدْ آمَنْتُ فَقَاتَلَ حَتَّى جُرِحَ فَحُمِلَ إِلَى أَهْلِهِ جَرِيحًا فَجَاءَهُ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ لِأُخْتِهِ سَلِيهِ حَمِيَّةً لِقَوْمِكَ أَوْ غَضَبًا لَهُمْ أَمْ غَضَبًا لِلَّهِ فَقَالَ بَلْ غَضَبًا لِلَّهِ وَلِرَسُولِهِ فَمَاتَ فَدَخَلَ الْجَنَّةَ وَمَا صَلَّى لِلَّهِ صَلَاةً  (ابوداود) بَاب فِيمَنْ يُسْلِمُ وَيُقْتَلُ مَكَانَهُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ- كتاب الجهاد

உஹதுப் போரின் போது நடந்த இவரின் வரலாற்று நிகழ்வு சுருக்கம்: இவர் இஸ்லாத்தின் மீது ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பைக் கொண்டிருந்தார். உஹதுப் போர் நெருங்கும் வேளையில், இவருக்குள் இஸ்லாத்தின் உண்மை நிலை புரிய வந்தது. உடனே தனது வாளை எடுத்துக்கொண்டு போர்க்களத்திற்கு விரைந்தார். அங்கு அவரைப் பார்த்த முஸ்லிம்கள் அவரை காஃபிர் என்று கருதி அவரைக் கொல்வதற்கு முனைந்த போது நான் முஸ்லிமாகி விட்டேன் என்று கூறினார். அதன் பிறகு முஸ்லிம்களுடன் இணைந்து போரிட்டார். கடுமையாக காயமுற்றார். குற்றுயிராக அவரை வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஷஹீதானார். அவரது சகோதரியிடம் ஸஃதுப்னு முஆத் ரழி அவர்கள் விளக்கம் கேட்டார்கள். இவர் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் போரிட்டாரா அல்லது தனிப்பட்ட  மக்கா வாசிகளுடன் தனிப்பட்ட பகையா என்று கேட்ட போது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் போரிட்டார் என அவரது சகோதரி கூறினார். ஆகவே அந்த சஹாபி "அவர் ஒரு தொழுகை கூட நிறைவேற்றவில்லை, ஆனால் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.                                                  

والناس بالنسبة للبدايات والنهايات ينقسمون إلى أقسام أربعة: منهم من ولد على خير ونشأ على خير ومات على خير، فالبداية حسنة والنهاية حسنة، ومنهم من ولد ونشأ على شر ومات على شر، والثالث البداية حسنة ونشأ على حال حسنة ثم أدركه الخذلان في آخر أمره فارتد ومات كافراً، فالبداية حسنة والنهاية سيئة، وعكسه مثل هذا الذي معنا في هذه القصة، وهو الذي عاش كافراً على شر ثم أسلم في نهاية أمره ومات على خير، فبدايته على شر ونهايته على خير. ويدل على ذلك حديث ابن مسعود : (والذي نفسي بيده! إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع، فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها، وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع، فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها، وإنما الأعمال بالخواتيم). (شرح ابي داود)

ஹிஜ்ரத் பெரும்பாவங்களுக்கான மன்னிப்பாக அமையும் என்பதற்கு தோதுவான சம்பவம் 

ففي  صحيح  مسلم   في  حديث  طويل .....   وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا  (مسلم)

عن جَابِرٍ رض..فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ (مسلم) بَاب الدَّلِيلِ عَلَى أَنَّ قَاتِلَ نَفْسَهُ لَا يَكْفُرُ - كِتَاب الْإِيمَانِ

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது துஃபைல் என்பவரும் ஹிஜ்ரத் சென்றார். அவருடன் அவரது சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதரும் ஹிஜ்ரத் சென்றார்.(அவர்கள் மதீனாவிற்கு சென்றபோது) மதீனாவின் தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்து வரவில்லை அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்து தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். பின்பு ஒரு நாள் துஃபைல் அவரை கனவில் கண்டார். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால் அவருடைய இரு கைகளும் போர்த்து மூடப்பட்டிருப்பதைக் கண்ட துஃபைல் அவர்கள் அந்த மனிதரிடம் உம் இறைவன் உம்மிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்று கேட்டார். அதற்கு அவர் நான் ஹிஜ்ரத் செய்ததால் அல்லாஹ் என்னை மன்னித்து விட்டான் என்றார். மீண்டும் துஃபைல் அவர்கள் “ உமது கைகள் மட்டும் போர்த்து மூடப்பட்டுள்ளதே ஏன்? என்று கேட்க, அதற்கு அவர்  “நீ வீணாக்கிய கையை நாம் சீராக்க மாட்டோம்” என என்னிடம் கூறப்பட்டது.”  என்றார். இந்தக் கனவை துஃபைல் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியபோது “யாஅல்லாஹ் அவரது இரு கைகளையும் மன்னிப்பாயாக” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்தார்கள்.  - முஸ்லிம் 

மக்பூலான  ஹஜ்ஜும் பெரும்பாவங்களுக்கான  மன்னிப்பாக அமையும். எனவே பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நிலையில் திரும்பும் ஹாஜி அடுத்து தமது வாழ்க்கையை சீராக ஆக்கிக் கொள்ள வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ (بخاري

ஹஜ்ஜுக்கு பின் இறையச்ச ,ஈமானிய வாழ்க்கை தொடர பின்வரும் 10 விஷயங்களை கடைபிடித்தால் அவர் நிச்சயமாக சுவனவாசி ஆவார்

1. பின்வரும் துஆவை அதிகம் செய்ய வேண்டும். 

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً  ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏3:8. “

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்           

.2. கடமையான ஃபர்ளான தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது. முன் பின் சுன்னத்துகளையும் முடிந்த வரை நிறைவேற்றுவது. 

3. ஃபஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் தவறாமல் நிறைவேற்றுவது. 

4. தினமும் அரை மணி நேரம் குர் ஆன் ஓதுவது. 

. 5. தினமும் காலை மாலை திக்ரு செய்வது. 

. 6. தினமும் காலை மாலை இஸ்திஃபார் செய்வது. 

. 7. தினமும் காலை மாலை ஸலவாத் ஓதவேண்டும். 

. 8. மாதம் ஒரு முறையாவது நஃபிலான நோன்பு வைப்பது. நாட்கள் செல்லச் செல்ல அது அதிகமாக வேண்டும். 

. 9. தஹஜ்ஜத் தொழுகை தொழுவது   

. 10. தினமும் காலையில் முடிந்த அளவுக்கு  சதகா செய்வது 

. 11. ஏதாவது ஒரு சமூக சேவையில் ஈடுபடுவது. 

. 12. ஈமானை , இறையச்சத்தை அதிகரிக்க கூடிய பயான் நசீஹத்தில் முடிந்த வரை கலந்து கொள்வது . 


மேற்கூறியவை குறைந்த பட்ச அளவுகள் தான். ஆரம்பத்தில் இதைச் செய்து பழகினால் நாளுக்கு நாள் அமல்கள் அதிகரிக்கும். 

பெரும் பாவங்கள் எது என்பதற்கு விளக்கமாக அகாயிதுன் நஸஃபீ என்ற நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது

وقد اختلفت الروايات في الكبيرة  فروي عن ابن عمر  رضي الله عنه  انها  تسعة  الشرك  بالله وقتل النفس بغير حق وقذف المحصنة والزنا والفرار  عن الزحف والسحر واكل مال اليتيم وعقوق الوالدين المسلمين والالحاد في الحرم وزاد ابو هريرة رضي الله عنه أكل الربوا وزاد على رضي الله عنه السرقة وشرب الخمر -  وقيل "كل ما كان مفسد ته مثل مفسدة شئ ما ذكر  او  اكثر منه –

قيل كل ما تو عّد عليه الشارع بخصوص - وقيل كل معصبية اصر علي العبد فهي كبير و كلها استغفر عنها فهي صغيرة 

பெரும்பாவங்கள் விஷயத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்

பெரும்பாவங்கள் ஒன்பதாகும். 1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. இதே நிலையில் ஒருவர் மரணித்தால் அவருக்கு மன்னிப்பு கிடையாது 

 2. ஒரு உயிரை அநியாயமாக கொள்வது 3. பத்தினிப் பெண்ணை அவதூறு சொல்வது 4. விபச்சாரம் செய்வது 5. போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடுவது 6. சூனியம் செய்வது 7. அனாதையின் சொத்துக்களை அநியாயமாக உண்பது 8. பெற்றோரை துண்டித்து வாழ்வது 9. ஹரம் ஷரீஃபில்  வரம்பு மீறுவது

   அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வட்டியையும் பெரும் பாவத்தில் சேர்த்துள்ளார்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருட்டையும் மது அருந்துவதையும் பெரும் பாவத்தில் சேர்த்துள்ளார்கள். இன்னும் சில அறிவிப்புகளில் எந்தப் பாவங்களால் ஏற்படும் தாக்கங்கள் மேற்கூறப்பட்ட பெரும் பாவங்களுடைய தாக்கங்களைப் போல இருக்குமோ அல்லது அதை அவற்றை விட அதிகமாக இருக்குமோ அதுவெல்லாம் பெரும் பாவங்களில் பட்டியலில் கட்டுப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது 

இன்னும் சில அறிவிப்புகளில் அல்லாஹ்வும் அவனது தூதரும் எதைக் கடுமையாக எச்சரித்து உள்ளார்களோ அதுவெல்லாம் பெரும் பாவம் என்றும் கூறப்பட்டுள்ளது. (இவ்வாறாக பல்வேறு அறிவிப்புகளின் மூலம் கூறப்பட்டுள்ள பெரும்பாவங்களின் எண்ணிக்கையை கவனித்தால் அது  70 க்கு சமீபமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளன

இன்னும் சில அறிவிப்புகளில் சிறு பாவமாக இருந்தாலும் ஒரு அடியான் அதை தொடர்ந்தும் துணிச்சலாகவும் செய்தால் அவனை பொறுத்த வரையிலே அது பெரும் பாவம் என்றும் அதே நேரத்திலே சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரும் பாவம் செய்தாலும் உடனடியாக அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்தினால் அது அல்லாஹ்வின் பார்வையில் சிறிய பாவமாகவே கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

சிறு பாவங்கள் நமது நற்செயல்கள் மூலமாக மன்னிக்கப்படலாம். ஆனாலும் அதற்காகவும் தவ்பா செய்வது நல்லது

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ مِنْ امْرَأَةٍ كُلَّ شَيْءٍ إِلَّا أَنِّي لَمْ أُجَامِعْهَا قَالَ فَأَنْزَلَ اللَّهُ{ أَقِمْ الصَّلَاةَ طَرَفَيْ النَّهَارِ وَزُلَفًا مِنْ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ }  (نسائ)

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நான் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன் ஆனால் உடலுறவு கொள்ள வில்லை எனக்கு பரிகாரம் உண்டா என்று கேட்டபோது அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கினான் நிச்சயமாக நற்செயல்கள் தீமைகளை அழித்துவிடும்

சிறந்த முஃமின்கள் சிறிய பாவம் செய்தாலும் பெரிய அளவில் கவலைப் படுவார்கள்

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا (65) الفرقان

عَنْ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ حَدِيثَيْنِ أَحَدُهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ عَنْ نَفْسِهِ قَالَ إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ (بخاري) 6308

சிறந்த முஃமின் ஒரு பாவத்தைச் செய்து விட்டால் தனது தலைக்கு மேலே பெரிய மலை இருப்பது போலவும் அதற்குக் கீழே அமர்ந்திருப்பது போலவும் அது தன் மீது விழுந்து விடுவது போலவும் கவலைப்படுவார். ஆனால் பாவியான மனிதன் பெரும்பாவத்தைச் செய்தாலும் தன் மூக்கைக் கடந்து செல்லும் ஈயை எப்படி ஒருவர் பொருட்படுத்த மாட்டாரோ  அதுபோல் அவரது பாவத்தைப் பொருட்படுத்த மாட்டார்.           

                       

والحكمة في التمثيل بالجبل إن غيره من المهلكات قد يحصل النسبب إلى النجاة منه بخلاف الجبل إذا سقط على الشخص لا ينجو منه عادة (مرعاة

மலையை உதாரணமாகக் கூறிய காரணம். மற்ற ஆபத்துகளில் இருந்து கூட தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்திலிருந்து தப்புவது கடினம்.

فعلامة المؤمن أن توجعه المعصية حتى يسهر ليله فيما حل بقلبه من وجع الذنب ...فالمؤمن الكامل إذا أذنب يحل به أكثر من المصاب لحجبه عن ربه ومن أشفق من ذنوبه فكان على غاية الحذر منها لا يرجو لغفرها سوى ربه فهو يقبل على الله وهو الذي أراده الله من عباده ليتوب عليهم ويجزل ثوابهم  ولهذا قال بعض العارفين : ذنب يوصل العباد إلى الله تعالى خير من عبادة تصرفه عنه وخطيئة تفقره إلى الله خير من طاعة تغنيه عن الله. (فيض القدير

சிறந்த முஃமின் ஒரு சிறு பாவம் செய்தாலும்  அந்தக் கவலையால் அவருக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. அதற்காக மிகவும் வருந்துவார். அதுவே அவரது அந்தஸ்து உயர காரணமாக ஆகி விடும். இதனால்தான் சில ஆரிஃபீன்கள் “ஒரு அடியானிடம் ஏற்படும் பாவம் கூட சில நேரங்களில் அல்லாஹ்விடம் நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு அடியானிடம் ஏற்படும் நல்ல அமல் (அதை பிறரிடம் சொல்லிக் காட்டுவது போன்ற காரணங்களால்) அல்லாஹ்வை விட்டும் அவனைத் திருப்பி விடுகிறது. என்பார்கள்.           

عَنِ ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا عَدَلَهُ  وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا عَدَلَهُ (مصنف ابن ابي شيبة

உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி தாவூத் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. நபி தாவூத் அலை அவர்களின் அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி ஆதம் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.

நிச்சயமாக சில பாவங்கள் வேறு சில பாவங்களைப் பயிரிடும் என்ற இமாம் இப்னுல் கையிம் ரஹ் அவர்களின் கூற்று

قال الإمام ابن القيم رحمه الله: "المعاصي تزرع أمثالها، وتولد بعضها بعضًا، حتى يَعِزَّ على العبد مفارقتها والخروج منها، كما قال بعض السلف: إن مِن عقوبة السيئةِ السيئةَ بعدها، وإن من ثواب الحسنةِ الحسنةَ بعدها؛ فالعبد إذا عمل حسنةً قالت أخرى إلى جنبها: اعملني أيضًا، فإذا عملها، قالت الثالثة كذلك، فتضاعف الربح، وتزايدت الحسنات، وكذلك كانت السيئات أيضًا، حتى تصير الطاعات والمعاصي هيئاتٍ راسخةً، وصفاتٍ لازمةً، وملَكاتٍ ثابتةً، فلو عطَّل المحسن الطاعة لضاقت عليه نفسه، وضاقت عليه الأرض بما رحبت، وأحسَّ من نفسه بأنه كالحوت إذا فارق الماء، حتى يعاودها، فتسكُنَ نفسُه، وتقَرَّ عينه، ولو عطَّل المجرم المعصية وأقبل على الطاعة، لضاقت عليه نفسه، وضاق صدره، وأعيت عليه مذاهبه، حتى يعاودها، حتى إن كثيرًا من الفسَّاق ليواقع المعصية من غير لذةٍ يجدها، ولا داعيةٍ إليها، إلا بما يجد من الألم بمفارقتها"؛ (الجواب الكافي - لابن القيم - ص- 81).

 இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப் பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப் பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான் முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார்.  

 

(எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் நாடகங்களில் வரும் தொடர்களைப் போன்றாகும்.)  ஒரு நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய் என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம் செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல  இடையூறுகள் செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். (சாராயம் குடித்தே நான் செத்தாலும் சரி... நான் குடிப்பேன் என்பது போல.) ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.                               


குரோதம் கொள்வதும் பெரும்பாவங்களில் கட்டுப்படும்

 عَنْ أَنَسِ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَبَاغَضُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ (بخاري)

குரோதம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அடுத்தவரின் குறையை துருவி ஆராயாதீர்கள் அல்லாஹ்வின் அடியார்களான சகோதர ர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்க க் கூடாது

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدْ اشْتَرَكَا فِي الْأَجْرِ وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ باءَ بِالْإِثْمِ زَادَ أَحْمَدُ وَخَرَجَ الْمُسَلِّمُ مِنْ الْهِجْرَةِ (ابوداود) 

ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்க க் கூடாது. மூன்று நாட்கள் கடந்து விட்டால் அவரை வலியச் சென்று சந்தித்து சலாம் சொல்லட்டும். அவர் பதில் ஸலாம் சொன்னால் நன்மையில் இருவரும் சம மாகி விடுவர். அவ்வாறு அவர் பதில் ஸலாம் சொல்லா விட்டால் அவர் மீது மட்டும் தான் பாவம் நிகழும். இவர் பாவத்தை விட்டும் நீங்கி விடுவார்.                  

وفي رواية بن أبي شيبة وإن هو سلم فلم يرد عليه ولم يقبل سلامه رد عليه الملك ورد على ذلك الشيطان (مصنف بن أبي شيبة) 

மற்றொரு அறிவிப்பில் பதில் ஸலாம் சொல்லா விட்டால் ஸலாம் சொன்னவருக்கு மலக்கு  பதில் கூறுகிறார் என்று உள்ளது.  

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا تَرْتَفِعُ صَلَاتُهُمْ فَوْقَ رُءُوسِهِمْ شِبْرًا رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَأَخَوَانِ مُتَصَارِمَانِ (ابن ماجة)

மூன்று பேரின் தொழுகைகள் அவர்களின் தலைக்கு மேல் ஒரு ஜான் கூட  மேலே ஏறாது 1. மக்கள் வெறுக்கும் நிலையில் இமாமத் செய்பவர். 2.. கணவன் வெறுக்கும் நிலையில் இரவு முழுவதும் யாருக்கு கழிந்த தோ அத்தகைய பெண்.  3. பகைமை உள்ள இரு  சகோதரர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சஃபரில் நடந்த சுப காரியங்கள்

 17-08-2026 Safar  2 بسم الله الرحمن الرحيم ,(சஃபரில் நடந்த சுப காரியங்கள்)  அலீ (ரழி)  ,  பாத்திமா (ரழி) ஆகியோரின் மண வாழ்க்கையும் படிப்...