புதன், 15 ஜூலை, 2026

குர்ஆனை கற்க வயது தடை இல்லை

 10-07-2026

முஹர்ரம் - 24


بسم الله الرحمن الرحيم  

      குர்ஆனை கற்பதற்கு வயது தடையல்ல



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


ஒவ்வொரு மஸ்ஜிதிலும் சிறுவர் சிறுமிகளுக்கான மக்தப் நடைபெறுவது போன்று பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மஹல்லாவில் உள்ள ஒவ்வொருவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் அந்தந்த மக்தப் மதரஸாவின் மாணவர்களாக மாற வேண்டும். குறிப்பாக மஸ்ஜிதின் நிர்வாகிகள் மாணவர்களாக மக்தப் மதரஸாவில் இணைய வேண்டும். குர்ஆனைக் கற்றுக் கொள்பவர்களாக மாற வேண்டும்.

 ஆண்களைப் பொறுத்த வரை குர்ஆனுடைய விஷயத்தில் நான்கு வகையான உள்ளனர். 1. குர்ஆனை அறவே ஓத  தெரியாதவர்கள் 2.சிறுவயதில் குர்ஆனைக் கற்று பிறகு பல்வேறு அலுவல் காரணமாக அதனுடனான தொடர்பை துண்டித்தவர்கள் 3. குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள். இப்போதும் ஓதிக் கொண்டிருப்பவர்கள் ஆனால் தப்பும் தவறுமாக ஓதுபவர்கள். 4.குர்ஆனை தவறில்லாமல் ஓதுவார்கள். ஆனால் வருடத்திற்கு சில சூராக்களையேனும் மனப்பாடம் செய்யலாமே என்ற சிந்தனை அவர்களிடம் இருக்காது. ஆக, இப்படிப்பட்ட நான்கு  சாராரைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு குர்ஆனுடைய தொடர்பை விட்டும் நம் சமூகம் விலகியதால் எப்பேற்பட்ட இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

குர்ஆனுடைய தொடர்பை துண்டித்தது தான் பல்வேறு சோதனைகளுக்கும் காரணம் 

ஒரு காலம் இருந்தது. குர்ஆனுடன் இந்த சமூகத்தின்  தொடர்புகள் அதிகம் இருந்தன. மஃரிப் நேரம் குர்ஆன் ஓதும் சப்தம் அதிகமாக முஸ்லிம்களின் வீடுகளில் இருக்கும். ஆனால் காலம் மாறி விட்டது. சீரியல்களின் சப்தம் தான் இன்று நிறைந்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் அதிகம் போராடிய போது அதை சமாளிக்க முடியாத ஆங்கிலேயர்கள் இவர்களின் வீரியத்திற்கு என்ன காரணம் என்பதை அலசி ஆராய்ந்து குர்ஆனின் போதனை தான் காரணம் என்பதை உணர்ந்து முஸ்லிம்களை நாம் குர்ஆனை விட்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். அதை செயல் படுத்தினார்கள் பொழுது போக்கு அம்சங்களை அறிமுகத்தினார்கள். அதன் பலன் இன்று அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.         

وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى (124)طه

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இரண்டு காரணங்களால் இந்திய முஸ்லிம்களுக்கு சோதனைகள் வருகிறது 1. குர்ஆனுடன் தொடர்பை குறைத்தது 2. ஒற்றுமையின்மை

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது.அந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதற்குப் பின் 120 வருடங்களில்  அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்கு திட்டம் தீட்டி அதில் வெற்றியும் கண்டார்கள். அதன் துவக்கமாக ஒரு சம்பவம் கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த ஆங்கிலேயர்கள் ஒரு ஒற்றனை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்கு அனுப்பினார்கள். அவன் அங்கு வந்தபோது சுமார் 15 வயதுள்ள இளைஞன் அழுது கொண்டிருந்தான் அவனிடம் காரணம் கேட்ட போது நான் குர்ஆனில் இருபத்தைந்து ஜுஸ்வு மனப்பாடம் செய்து விட்டேன். எனினும் ஆங்கிலேயர்களுடன் போர் புரிய நினைக்கிறேன் ஆனால் எனது தாயார் சம்மதிக்கவில்லை நீ முழு குரஆனையும் முடித்து விட்டு போருக்குப் போ என்கிறார்கள் அதனால் அழுகிறேன் என்று அவன் கூற இதை அப்படியே சென்று தலைமையிடம் கூறிய போது அவர்கள் நாம் இப்போது சென்றால் நமக்குத் தோல்வி தான் மிஞ்சும் எதுவரை முஸ்லிம்கள் அவர்தகளின் வேத த்துடன் தொடர்பில் இருக்கிறார்களோ அதுவரை நாம் ஒன்றும் செய்ய முடியாது என முடிவு செய்தார்கள். அதற்குப் பின்பு இருபது வருடங்கள் கழித்து ஒரு ஒற்றனை முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்கு அனுப்பினார்கள். அவன் அங்கு வந்தபோது ஒரு இளைஞன் அழுது கொண்டிருந்தான் அவனிடம் காரணம் கேட்ட போது நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் அவளை திருமணம் செய்ய நினைக்கிறேன் ஆனால் என் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை அதனால் அழுகிறேன் என்றான். இதை அப்படியே சென்று தலைமையிடம் கூறிய போது அவர்கள் நாம் இப்போது சென்றால் நமக்கு வெற்றி கிடைக்கும் முஸ்லிம்கள் அவர்களின் வேதத்துடன் தொடர்பை குறைத்துக் கொண்டது நல்ல சந்தர்ப்பம் என்று முடிவு செய்து போருக்கு வந்தார்கள். வென்றார்கள். அவர்கள் நினைத்தது போன்று ஸ்பெயினில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்கு துடைத்தெறிந்தார்கள்.                                                         

1.குர்ஆன் ஓத தெரியாதவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொள்வது மிக அவசியமானதாகும்

ஒரு காலம் வரும். நாம் குர்ஆனை கற்க நினைத்தாலும் குர்ஆன் இருக்காது. அல்லாஹ் அதை உயர்த்தி விடுவான்

2.கடைசி காலத்தில் குர்ஆனுக்கு கண்ணியம் இல்லாதபோது குர்ஆனை அல்லாஹ் உள்ளங்களில் இருந்தும் அனைவரின் இல்லங்களில் இருந்தும் அல்லாஹ் பறித்து விடுவான். வெறும் காகிதம் மட்டும் இருக்கும். 

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ : لَيُسْرَيَنَّ عَلَى الْقُرْآنِ ذَاتَ لَيْلَةٍ فَلاَ يُتْرَكُ آيَةٌ فِى مُصْحَفٍ وَلاَ فِى قَلْبِ أَحَدٍ إِلاَّ رُفِعَتْ. (دارمي

இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள் ஒரே ஒரு இரவு கடப்பதற்குள் அல்லாஹ் குர்ஆனை உள்ளங்களில் இருந்தும் அவரவர் இல்லங்களில் வைத்திருக்கும் குர்ஆன் பிரதிகளில் இருந்தும் நீக்கி விடுவான். ஒரு வசனம் கூட யாருடைய உள்ளத்திலும் ஞாபகம் இருக்காது. பிரதிகளிலும் இருக்காது.- தாரமீ

 عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ : أَكْثِرُوا تِلاَوَةَ الْقُرْآنِ قَبْلَ أَنْ يُرْفَعَ. قَالُوا : هَذِهِ الْمَصَاحِفُ تُرْفَعُ فَكَيْفَ بِمَا فِى صُدُورِ الرِّجَالِ؟ قَالَ : يُسْرَى عَلَيْهِ لَيْلاً فَيُصْبِحُونَ مِنْهُ فُقَرَاءَ وَيَنْسَوْنُ قَوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيَقَعُونَ فِى قَوْلِ الْجَاهِلِيَّةِ وَأَشْعَارِهِمْ ، (دارمي

 குர்ஆன் உயர்த்தப்படும் முன்பே குர்ஆனை அதிகம் ஓதிக் கொள்ளுங்கள் என இப்னு மஸ்ஊத் ரழி கூறியபோது பிரதிகளில் இருந்து உயர்த்தப் படலாம். ஆனால் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்களின் உள்ளங்களில் இருந்து எவ்வாறு நீக்கப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி கூறினார்கள்  ஒரு இரவு கடந்து காலை நேரம் வருவதற்குள் மனப்பாடம் செய்து வைத்துள்ளவர்கள் அனைவரும் குர்ஆனை இழந்த ஏழைகளாக ஆகி விடுவார்கள். கலிமாவைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இருக்காது. குர்ஆனுக்கு பதிலாக அறியாமைக் காலத்தின் சொற்களிலும். கவிதைகளிலும் மக்கள் மூழ்கி விடுவார்கள். 

குர்ஆனைக் கற்பதற்கு வயதில்லை. முதிய வயதிலும் கற்கலாம்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ اقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ الر فَقَالَ كَبُرَتْ سِنِّي وَاشْتَدَّ قَلْبِي وَغَلُظَ لِسَانِي قَالَ فَاقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ حاميم فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ فَقَالَ اقْرَأْ ثَلَاثًا مِنْ الْمُسَبِّحَاتِ فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ أَقْرِئْنِي سُورَةً جَامِعَةً فَأَقْرَأَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا زُلْزِلَتْ الْأَرْضُ حَتَّى فَرَغَ مِنْهَا فَقَالَ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَزِيدُ عَلَيْهَا أَبَدًا ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ الرُّوَيْجِلُ مَرَّتَيْنِ (ابوداود)

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு ஏதேனும் சூராக்களைக் கற்றுக் கொடுங்கள் என்றார். அவரிடம் நபி ஸல் அவர்கள் அலிஃப் லாம் மீம் என்று ஆரம்பிக்கும் மூன்று சூராக்களைக் கற்றுத் தர நாடிய போது அவர் நபி ஸல் அவர்களிடம் எனக்கு வயதாகி விட்டது. என் உள்ளம் மனப்பாடம் செய்வதை விட்டும் கடினமாகி விட்டது. எனக்கு நாவு உச்சரிப்புகளை விட்டும் சிரமமாகி விட்டது என்றார்.  அவரிடம் நபி ஸல் அவர்கள் ஹாமீம் என்று ஆரம்பிக்கும் மூன்று சூராக்களை ஓதும்படி கூறிய போது முன்பு கூறிய அதே பதிலை மீண்டும் கூறினார். அவரிடம் நபி ஸல் அவரேகள் ஸப்பஹ என்று ஆரம்பிக்கும் மூன்று சூராக்களை ஓதும்படி கூறியபோது முன்பு கூறிய அதே பதிலை மீண்டும் கூறினார். பிறகு அல்லாஹ்வின் தூதரே எனக்கு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறிய சூராவை ஓதிக் காட்டுங்கள் என்று கூறிய போது நபி ஸல் ஜில்ஜால் சூராவை கற்றுத் தந்தார்கள்.அவர் திரும்பிச் செல்லும்போது இதை விட நான் அதிகப் படுத்த மாட்டேன் என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அப்போது நபி ஸல் அவர்கள் அவர் வெற்றி பெற்று விட்டார் என இரண்டு முறை கூறினார்கள்.                          

வயதான காலத்திலும் குர்ஆனை மட்டுமன்றி பல்வேறு மார்க்க விஷயங்களை  கற்பதில் சஹாபாக்கள் ஆர்வமுடன் இருந்தனர்

عَنْ قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي يَا قَبِيصَةُ مَا جَاءَ بِكَ قُلْتُ كَبِرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي فَأَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مَا يَنْفَعُنِي اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ قَالَ يَا قَبِيصَةُ مَا مَرَرْتَ بِحَجَرٍ وَلَا شَجَرٍ وَلَا مَدَرٍ إِلَّا اسْتَغْفَرَ لَكَ يَا قَبِيصَةُ إِذَا صَلَّيْتَ الْفَجْرَ فَقُلْ ثَلَاثًا سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ تُعَافَى مِنْ الْعَمَى وَالْجُذَامِ وَالْفَلِجِ يَا قَبِيصَةُ قُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ وَأَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ وَانْشُرْ عَلَيَّ رَحْمَتَكَ وَأَنْزِلْ عَلَيَّ مِنْ بَرَكَاتِكَ رواه احمد    فلجபக்க வாதம்     جذامகுஷ்டம்

முதியவரான கபீஸா ரழி கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களிடம் வந்தேன் அப்போது நபி ஸல் அவர்கள் கபீஸா அவர்களே  உங்களை இங்கு வரவழைத்தது எது என நபி ஸல் அவர்கள் கேட்டாரகள். அதற்கு நான் என்னுடைய எலும்புகள் தேய்ந்து விட்டன. வயதாகி விட்டது. எனவே உங்களிடம் வந்து ஏதேனும் பயனுள்ள விஷயத்தைக் கற்றுக் கொள்ள வந்தேன் என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் (இதற்குத் தான் வந்துள்ளீர்கள் என்றால்) நீங்கள் நடந்து வரும் பாதையில் உள்ள ஒவ்வொரு கல்லும் மரமும் மடுவும் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடும் என்று கூறி விட்டு, நீங்கள் ஃபஜ்ருத் தொழுது விட்டு சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ என்ற தஸ்பீஹை மூன்று முறை தினமும் ஓதி வந்தால் குஷ்டம், பக்கவாதம் போன்ற நோய்களை விட்டும் நீங்கள் பாதுகாக்கப் படுவீர்கள் என்று கூறி விட்டு மற்றொரு துஆவையும் அவருக்குக் கற்றுத் தந்தார்கள். நூல் முஸ்னத் அஹ்மத்

 தமிழ் நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவர்  பேசியது. ஒரு ஆலிமா பட்டமளிப்பு விழாவில் ஒரு பெண்ணுக்கான ஆலிமா ஸனது அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது. அதை வாங்கும்போது அவர் தேம்பித் தேம்பி அழுதார். அவரிடம் காரணம் கேட்ட போது என் மகள் ஆலிமா பட்டம் பெறுகிறார். ஆனால் எனக்கு குர்ஆன் கூட அறவே ஓதத் தெரியாதே அதை நினைத்து அழுகிறேன் என்றார். அடுத்த வருடம் அவருடைய இரண்டாவது மகளுக்கான ஆலிமா ஸனது அவரிடம் வழங்கப்பட்டது. அப்போதும் அவர் அவ்வாறே அழுதார்.   அவரிடம் காரணம் கேட்ட போது என் மூத்த மகள் ஆலிமா பட்டம் பெறும்போது எனக்கு குர்ஆன் அறவே ஓத த் தெரியாது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் நான் குர்ஆன் ஓதக் கற்றுக் கொண்டேன். அதை நினைத்து சந்தோஷத்தால் அழுகிறேன் என்றார். ஆர்வம் இருக்கும் அளவுக்கு சீக்கிரமாக குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும்.அல்ஹம்து லில்லாஹ் இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் பெரியவர்களுக்காக 40 நாட்களில் குர்ஆனைக் கற்றுக் கொள்ளும் திட்டம் துவங்கப்பட்டு  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்ப பெரியவர்களுக்கு என்ன தான் ஆர்வம் இருந்தாலும் ஒரு சில அரபு எழுத்துக்களின் உச்சரிப்புகள் வயதான காலத்தில் கற்பது சிரமம்என்றாலும் ஓரளவுக்கு குர்ஆனை பிழையின்றி ஓதும் வாய்ப்பு இதனால் கிடைக்கிறது. இதை பரவலாக்க வேண்டும். 

குர்ஆனுடைய மொழியான அரபு மொழி மற்ற மொழிகளை விட எளிதானது

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22)القمر

அரபியில் SMALL  லட்டர் BIG  லட்டர் இடையே வடிவங்கள் மாறுவதில்லை. 29 அரபி எழுத்துக்களைக் கற்று அவை எவ்வாறு இணைகிறது என்று மட்டும் தெரிந்தால் போதும். அது மட்டுமல்ல அந்த 29 எழுத்துக்களில் பல எழுத்துக்கள் ஒரே வடிவம் கொண்டவை. புள்ளிகள் மட்டுமே மாறும். உதாரணமாக

ب ت ث                     - س ش -                       ج  ح خ -                    د ذ  -                   ر ز                      -  ع غ   -     ض ص-           ط ظ

எழுத்துக்கள் வெவ்வாறாக இருந்தாலும் வடிவங்கள் ஒன்று ஆனால் ஆனால் ஆங்கிலம் அப்படியல்ல. A என்ற எழுத்து SMALL ஆக எழுதும்போது வடிவமே மாறுகிறது. எழுத்துக்கள் ஒன்று. வடிவங்கள் வெவ்வேறு. காரணம் ஆங்கிலத்தில் SMALL  லட்டர்  BIG  லட்டர் என இரு வகை உண்டு. இரண்டும் வேறு வேறு எழுத்துக்கள். இரண்டும் சேர்த்து 54 எழுத்துக்கள்.  அதன் வடிவங்களும் மாறும்.  54 எழுத்துக்களையும் கற்க வேண்டும். ஆனால் அரபி அப்படியல்ல. ஐந்து அல்லது வடிவங்களை மட்டுமே அறிந்து புள்ளிகளையும், ஹரகத்துகளையும் அறிந்தால் போதும்.

மனப்பாடம் செய்வதற்கும் குர்ஆன் எளிதானது

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22)القمر أي سهلناه للحفظ   وأعنا عليه من أراد حفظه فهل من طالب لحفظه فيعان عليه (قرطبي

குர்ஆனை மனனம் செய்யப் படுவது போன்று  வேறு எந்த வேதமும் மனனம் செய்யப்படவில்லை.

திருக்குறளை மனனம் செய்தவர்களை எண்ணி விடலாம். ஆனால் திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை எண்ணுவது எளிதல்ல. 

தவ்ராத் வேதத்தை முழுமையாக மனனம் செய்தவர்கள் நான்கு பேர் மட்டும் தான்

وقال سعيد بن جبير: ليس من كتب الله كتاب يقرأ كله ظاهرا إلا القران؛ وقال غيره: ولم يكن هذا لبني إسرائيل، ولم يكونوا يقرؤون التوراة إلا نظرا، غير موسى وهارون ويوشع بن نون وعزير صلوات الله عليهم، (تفسير القرطبي)

குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள் எத்தனை சிரமமான பாடங்களையும் படித்து விடுவார்கள். அவர்களிடம் மனதில் உள்ள குர்ஆன் கடினமான பாடங்களையும் அவர்களுக்கு இலகுவாக்கி விடும். எனவே தான் வட மாநிலங்களில் மேற்படிப்புக்கான சில கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்யும்போது ஹாஃபிழ்களுக்கு முன்னுரிமை தருவதுடன் அவர்களுக்கான கட்டணங்களிலும் சலுகை வழங்குகிறார்கள். காரணம் முழுக் குர்ஆனையும் மனப்பாடம் செய்த இவர் கல்லூரியின் பாடங்களையும் நன்றாகப் படித்து நமது கல்லூரிக்கு நற்பெயர் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை தான் இந்த முன்னுரிமைக்குக் காரணம். இதற்கு உதாரணமாக கர்நாடகாவில் உள்ள ஷாஹின் கல்லூரியைக் கூறலாம். இங்கு ஹாஃபிழ்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.                   

தவ்ராத்தை யூதர்களின் உள்ளங்களில் இருந்து  அல்லாஹ் முழுமையாக மறக்கடித்து உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உள்ளத்தில் மட்டும் அற்புதமாக அதை பதிய வைத்ததால் தான் அவரை கடவுள் என்று யூதர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்

وفي تفسير القرطبي في قوله تعالي "وقالت اليهود عزير ابن الله"أن سبب ذلك القول أن اليهود قتلوا الانبياء بعد موسى عليه السلام فرفع الله عنهم التوراة ومحاها من قلوبهم، فخرج عزير يسيح في الارض، فأتاه جبريل فقال: (أين تذهب) ؟ قال: أطلب العلم، فعلمه التوراة كلها فجاء عزير بالتوراة إلى بني إسرائيل فعلمهم.وقيل: بل حفظها الله عزيرا كرامة منه له، فقال لبني إسرائيل: إن الله قد حفظني التوراة، فجعلوا يدرسونها من عنده.وكانت التوراة مدفونة، كان دفنها علماؤهم حين أصابهم من الفتن والجلاء والمرض ما أصاب وقتل بختنصر إياهم.ثم إن التوراة المدفونة وجدت فإذا هي متساوية لما كان عزير يدرس فضلوا عند ذلك وقالوا: إن هذا لم يتهيأ لعزير إلا وهو ابن الله (تفسير القرطبي

பனீ இஸ்ராயீல் சமூகம் பல நபிமார்களைக் கொன்றதால் அல்லாஹ் அவர்கள் அனைவரின் உள்ளங்களில் இருந்தும் தவ்ராத் வேதத்தை எடுத்து விட்டான். அப்போது உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தஸ்பீஹ் செய்தவர்களாகபுறப்படுவதைக் கண்டு எங்கே செல்கிறீர்கள் என ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கேட்க, நான் கல்வியைத் தேடிப் புறப்படுகிறேன். என்று கூறியவுடன் அவர்களுக்கு மட்டும் தவ்ராத்தை வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கற்றுத் தந்தார்கள்.பின்பு தன் சமூகத்திடம் வந்த உஜைர் அலைஹிஸ்ஸலாம் அதை பிறருக்கு கற்றுத்தர ஆரம்பித்தார்கள். தவ்ராத்தின் ஏடுகள் பாதுகாப்பிற்காக சில நல்லவர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு புதைக்கப்பட்ட ஏடுகளின் வரிகளும் உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைகளும் ஒன்றாக இருந்தன. யாருக்கும் தெரியாத தவ்ராத்தை உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் இதை மாபெரும் அற்புதம் என மக்கள் கருதியதால் ஒரு கட்டத்தில் மக்கள் இந்த அற்புதம் இறைவனின் மகனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என தவறாக விளங்கி உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேவகுமாரன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  

குர்ஆனை மனனம் செய்யப்பட்டது போன்று வேறு எந்த வேதங்களும் மனனம் செய்யப்பட்டதில்லை

எனவே நபி ஸல் அவர்களின் காலத்தில் இருந்து இன்று வரை குர்ஆனின் ஒரு புள்ளியைக் கூட யாராலும் மாற்ற முடியாது. கவனக் குறைவால் அவ்வாறு நிகழ்ந்தால் அதைத் திருத்த உலகம் முழுவதும் நிறைய ஹாஃபிழ்கள் இருக்கிறார்கள்.

قال الامام الرازي في تفسير هذه الاية" فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا(77الكهف) رأيتُ في كتب الحكايات أن أهل تلك القرية لما سمعوا نزول هذه الآية استحيوا وجاؤوا إلى رسول الله صلى الله عليه وسلم بحمل من الذهب وقالوا: يا رسول الله نشتري بهذا الذهب أن تجعل الباء تاءاً حتى تصير القراءة هكذا: فأتوا أن يضيفوهما أي أتوا لأن يضيفوهما أي كان إتيان أهل تلك القرية إليهما لأجل الضيافة وقالوا : غرضنا منه أن يندفع عنا هذا اللؤم فامتنع رسول الله صلى الله عليه وسلم وقال:إن تغيير هذه النقطة يوجب دخول الكذب في كلام الله  وذلك يوجب القدح في الإلهية . » فعلمنا أن تغيير النقطة الواحدة من القرآن يوجب بطلان الربوبية والعبودية  (تفسير الرازي) 

  நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் கிழ்ர் அலைஹிஸ்ஸலாம் பற்றி குர்ஆன் கூறும் சம்பவத்தில் அன்தாகியா என்ற ஊருக்குச் சென்றார்கள். வெளியூர்வாசிகளை விருந்தாளிகளாக ஏற்க வேண்டும் என்பது அக்காலத்தில் கடமை போன்றே இருந்த து. ஆனால் அவ்வூர் வாசிகள் இவர்களை விருந்தாளிகளாக ஏற்கவில்லை. இதை அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இச்சம்பவம் நடந்து நீண்ட காலங்களுக்குப்பின் அவ்வூர்வாசிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தங்கத்தால் பெரும் குவியலைக் கொண்டு அல்லாஹிவின் தூதரே இதை ஏற்றுக் கொண்டு அந்த வசனத்தில் உள்ள பா என்ற எழுத்தின் புள்ளியை மட்டும் மேலே மாற்றியமைத்து தா வாக  ஆக்கி விடுங்கள். அதாவது உணவு தர மறுத்தார்கள் என்பதற்கு பதிலாக உணவு தர முன் வந்தார்கள் என மாற்றியமைத்தால் எங்களின் ஊருக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம் நீங்கி விடும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை மறுத்து இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் வேதத்தில் பொய்யை புகுத்தியதாக ஆகி விடும். அல்லாஹ்வின் வேதத்தில் பொய்யை புகுத்துவது அல்லாஹ்வை பொய்ப் படுத்தியதாக ஆகி விடும் என்றார்கள்.                                   

2. குர்ஆனை  ஓதி பிறகு மறந்தவர்களின் கவனத்திற்கு.....

குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும்.

عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ- كتاب فضائل القرآنشَبَّهَ دَرْسَ الْقُرْآن وَاسْتِمْرَار تِلَاوَته بِرَبْطِ الْبَعِير الَّذِي يُخْشَى مِنْهُ الشِّرَاد ، فَمَا زَالَ التَّعَاهُد مَوْجُودًا فَالْحِفْظ مَوْجُود ، كَمَا أَنَّ الْبَعِير مَا دَامَ مَشْدُودًا بِالْعِقَالِ فَهُوَ مَحْفُوظ . وَخَصَّ الْإِبِل بِالذِّكْرِ لِأَنَّهَا أَشَدّ الْحَيَوَان الْإِنْسِيّ نُفُورًا ، وَفِي تَحْصِيلهَا بَعْد اِسْتِمْكَان نُفُورهَا صُعُوبَة .(فتح الباري)

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

الأجذم قيل هو مقطوع اليد ، وقيل هو الذي به جذام.வெண்குஷ்டம்

குர்ஆனை  ஓதி பிறகு மறப்பது பெரும்பாவமாகும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தினரின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்த த்தை அப்புறப் படுத்துவதாகும். அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும். 

காலித் இப்னு வலீத் ரழி பெரும்பாலும் மார்க்கப்போரில் நேரத்தை கழித்தவர்கள். பல போர்களில் தளபதி அவர்கள் தான். அதனால் குர்ஆனை அதிகமாக ஓத முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அவர்களின் ரடைசி நேரத்தில் குர்ஆனை கொண்டு வரச் சொல்லி அதை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்கள். அதிகமான மார்க்கப்போரின் காரணமாக உன்னை அதிகம் வாசிக்க என்னால் முடியவில்லை. என்று அழுத நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது.                

குர்ஆனைக் கற்று அதன் அதை மறந்தவர் அவராக மறக்கவில்லை. அல்லாஹ் மறக்கடித்து விட்டான்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ  (بخاري) مَعْنَاهُ أَنَّهُ عُوقِبَ بِوُقُوعِ النِّسْيَان عَلَيْهِ لِتَفْرِيطِهِ فِي مُعَاهَدَته وَاسْتِذْكَاره (فتح الباري)

குர்ஆனைக் கற்று பிறகு அதை மறப்பது முஸீபத்தாகும்

عن الضحاك قال ما تعلم رجل القرآن ثم نسيه إلا بذنب ثم قرأ الضحاك وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ثم قال الضحاك وأي مصيبة أعظم من نسيان القرآن 

குர்ஆனைக் கற்று மறந்தவர்கள் நாளுக்கு நாள்  பெருகினால் அதன் விளைவு என்னவாகும்

கடைசி தொழ வைக்க இமாம்களும் கிடைக்க மாட்டார்கள். இருக்கிற தொழுகையாளிகளுக்கும் தொழ வைக்கத் தெரியாது

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ ». (ابوداود

கடைசி காலத்தில் தொழ வைப்பதற்கு இமாம் கிடைக்காமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை ஏற்படுவது அழிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்

 (إن من أشراط الساعة)، أي من علاماتها الصغرى الدالة على قربها. واحدها شرط بالتحريك. (أن يتدافع أهل المسجد) أي في الإمامة فيدرأ كل من أهل المسجد الإمامة عن نفسه إلى غيره، ويقول لست أهلاً لها لما ترك تعلم ما تصح به الإمامة، ولجهلهم بما يجوز ولا يجوز. (لا يجدون إماماً) أي قابلاً الإمامة. (يصلي بهم) على وجه الصحة بأداء أركانها. وواجباتها وسننها ومندوباتها. وقيلك المعنى يدفع كل من أهل المسجد الإمامة عن غيره إلى نفسه، فيحصل بذلك النزاع، فيؤدي ذلك إلى عدم الامام.  (مرعاة

கருத்து-  இமாமத், அதான் என்ற இந்த சிறந்த பணிகளை விட்டும் பலர் தூரமாகி விடுவார்கள். கடைசியில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழ வருபவர்களில் ஒருவர் தான் இமாமத் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள். காரணம் ஒவ்வொருவரும் எனக்கு இமாமத் செய்யத் தெரியாது என்று கூறி ஒதுங்குவார்கள். கடைசியில் ஜமாஅத் நடைபெறாமல் தனித்தனியே மக்கள் தொழுது விட்டுச் செல்வார்கள்.                                         

ولذا أجاز المتأخرون من أصحابنا أخذ الأجرة على الإمامة والآذان ونحوهما من تعليم القرآن بخلاف المتقدمين فإنهم كانوا يحرمون الأجرة على العبادة (مرقاة

மார்க்கக் கல்வியை மக்கள் அறவே வெறுப்பதன் மூலம் மஸ்ஜித்களுக்கு இமாம் இல்லாமல் ஆகி விடக் கூடாது என்ற கவலையின் அடிப்படையில் தான் பிற்கால உலமாக்கள் இமாமத்திற்கும் அதானுக்கும் சம்பளம் வாங்குவது கூடும் என அனுமதித்தார்கள். ஆனால் முற்காலத்தில் அவ்வாறு இல்லை. படிப்பினை- மேற்காணும் அறிவிப்புகள் மூலம் குர்ஆனைக் கற்றுக் கொள்வதுடன் மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிய முடிகிறது. அப்படிப்பட்ட அடிப்படைக் கல்விகளை போதிக்கும் இடங்கள் தான் மக்தப் மதரஸாக்கள். இந்த மக்தப் மதரஸாக்கள் சிறுவர் சிறுமிக்கு மட்டும் தான் என்பது இல்லை. அனைத்து வயதினரும் இங்கு வந்து குர்ஆனையும் அடிப்படைக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.                                          

3. குர்ஆனை முறையாக ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும்

இன்றைய தொழுகையாளிகளில் பத்து சதவீதம் பேருக்குக் கூட குர்ஆனை ஒழுங்காக ஓதத் தெரியாது

قال الله تعالي وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (4) إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا (5)المزمل   ترتيل القراءة : التأني فيها والتمهل وتبيين الحروف

படிப்பினை- குர்ஆனை தர்தீலாக ஓதும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். தர்தீல் என்பது நிறுத்தி நிறுத்தி எழுத்துக்கள் நன்கு புரியும்படி ஓதுவதாகும். உலகில் இவ்வாறு ஓதியவர்களைத் தான் மறுமையிலும் ஓதிக் காட்டும்படி அல்லாஹ் கூறுவான்.

உலகின் எந்த ஒரு அமலையும் இங்கே செய்ததை வமறுமையிலும் தனக்கு முன்பாக செய்து காட்டும்படி அல்லாஹ் பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் குர்ஆனை தர்தீலாக, பிழையின்றி, அழகாக ஓதியவரை அங்கேயும் ஓதிக் காட்டும்படி அல்லாஹ் கூறி கண்ணியப்படுத்துவான். அவர் அவ்வாறு ஓத ஓத அவருடைய அந்தஸ்து உயரும்

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍورض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ (يوم القيمة) اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا (ترمذي) عَنْ أُمّ سَلَمَةرَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَة رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كَانَ يُقَطِّع قِرَاءَته آيَة آيَة " بِسْمِ اللَّه الرَّحْمَن الرَّحِيم الْحَمْد لِلَّهِ رَبّ الْعَالَمِينَ الرَّحْمَن الرَّحِيم مَالِك يَوْم الدِّين(أَحْمَد) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً (ترمذي) 

குர்ஆனாகிறது மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்ய வரும். ரப்பே அவருக்கு சுவனத்து நகைகளை அணிவிப்பாயாக என்று கூறும் அவ்வாறே அணிவிக்கப்படும். இன்னும் அதிகமாக அணிவிக்கும்படி கூறும் மீண்டும் அணிவிக்கப்படும். பின்பு ரப்பே அவரை நீ பொருந்திக்கொள்ள வேண்டும் என மன்றாடும் அவ்வாறே அல்லாஹ்வின் பொருத்தம் அவருக்குக் கிடைத்த பின் அவரிடம் நீங்கள் குர்ஆனை ஓதுவீராக என்று கூறப்படும் அவர் ஓதுவார். அவ்வாறு ஓதும்போது ஒவ்வொரு ஆயத்துக்கும் பகரமாக அவருடைய சுவன அந்தஸ்து உயரும். 

شرح( يا رب حله ) والمعنى يا رب زَيِّنْهُ ( إقرأ ) ( وارق ) أي اِصْعَد ْأي يقال لصاحب القرآن اقرأ القرآن واصعد على درجات الجنة

மஸ்ஜிதுக்கு வந்து குர்ஆனைக் கற்று தினமும் சுமார் ஒரு பக்கம் அளவுக்கு குர்ஆனை ஓதிச் சென்றால் அவர் லட்சாதிபதி. 

 பல பக்கங்களை ஓதினால் அவர் கோடீஸ்வரர்   

عن عَبْد اللَّهِ بْن مَسْعُودٍ رضي الله عنه يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ (ترمذي

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சஃபரில் நடந்த சுப காரியங்கள்

 17-08-2026 Safar  2 بسم الله الرحمن الرحيم ,(சஃபரில் நடந்த சுப காரியங்கள்)  அலீ (ரழி)  ,  பாத்திமா (ரழி) ஆகியோரின் மண வாழ்க்கையும் படிப்...