வியாழன், 23 பிப்ரவரி, 2023

ஹஜ்ஜுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்

 


24-02-2023

ஷஃபான்- 3

 

بسم الله الرحمن الرحيم 

 ஹஜ்ஜுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்

 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

 



 ஹஜ்ஜுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்


வரும் ஆண்டில் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பப்படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 10 ம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இப்போதிருந்தே அதற்காக மக்களைத் தூண்ட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.  

ஹஜ் கடமையான பிறகும் அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துபவர்களைப் பற்றி...

عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "تَعَجَّلُوا إلى الحَجِّ -يعني الفريضة-فإنَّ أحَدَكُمْ لا يَدْرِي مَا يَعْرضُ لَهُ رواه احمد

ஹஜ்ஜை விரைந்து நிறைவேற்றுங்கள். ஏனெனில் யாருக்கு எப்போது  என்ன நிகழும் என்று தெரியாது.

عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ{ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا }رواه الترمذي

விளக்கம்- எவர் ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பும் வரை தனக்கும் தன் குடும்பத்திற்கும் செலவுக்கான பணத்தை சொந்தமாக்கிக் கொண்டதுடன் வாகனச் செலவுகளையும் சொந்தமாக்கிக் கொண்டாரோ அதற்குப் பின்பும் அவர் ஹஜ்ஜுக்குச் செல்லா விட்டால் அவர் யூதராகவோ கிறிஸ்தவராகவோ எப்படியோ இறந்து போகட்டும்         

عن أبي أمامة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : من لم يمنعه من الحج حاجة ظاهرة ، أو سلطان جائر ، أو مرض حابس ، ثم مات ولم يحج ، فليمت إن شاء يهوديا ، وإن شاء نصرانيا (أخبار مكة للفاكهي)

விளக்கம்- ஒருவர் ஹஜ்ஜுக்குச் செல்வதற்குத் வெளிப்படையான நிர்பந்தமோ அல்லது அரசாங்கத்தின் தடையோ அல்லது வியாதியோ இல்லாத நிலையில்  அவர் ஹஜ்ஜுக்குச் செல்லாமல் இறந்து விட்டால் அவர் யூதராகவோ கிறிஸ்தவராகவோ எப்படியோ இறந்து போகட்டும்.                                                 

عن الحسن البصري قال: قال عمر بن الخطاب: لقد هممت أن أبعث رجالا إلى هذه الأمصار فينظروا كل من كان له جَدةٌ فلم  يحج، فيضربوا عليهم الجِزْية، ما هم بمسلمين. ما هم بمسلمين . (تفسير القرطبي)

உமர் ரழி கூறினார்கள். நான் சில நபர்களை சில ஊர்களுக்கு அனுப்பி யாரெல்லாம் வசதி இருந்தும் ஹஜ் செய்யாமல் இருக்கிறார்களோ அவர்கள் விஷயத்தில் திம்மிகள் மீது விதிக்கப்படும் ஜிஸ்யா வரியை விதிக்க நாடுகிறேன். ஏனெனில் வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல.            

ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம் வருவதற்கு முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள்

عن الحارث بن سويد ، قال : سمعت عليا ، رضي الله عنه ، يقول :  حجوا قبل أن لا تحجوا، فكأني أنظر إلى حبشي أصمع أفدع بيده  مِعْوَل يهدمها حجرا حجرا ، فقلت له شيء تقوله برأيك أو سمعته من رسول الله صلى الله عليه وسلم قال :  لا والذي فلق الحبة ، وبرأ  النسمة ، ولكني سمعته من نبيكم صلى الله عليه وسلم  رواه الحاكم في المستدرك (معولகோடாலி  أفدعமெலிந்த கால்கள் கொண்ட)

கருத்து- ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம் வருவதற்கு முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள். அதாவது ஹஜ் செய்வதற்கு கஃபாவே இல்லாத காலம் வரும் முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் கடைசி காலத்தில் மெலிந்த கால்கள் கொண்ட நீக்ரோ மனிதர்கள் கையில் கடப்பாரையுடன் கஃபாவின் ஒவ்வொரு கற்களையும் பெயர்த்து எடுப்பதை என் கண்ணால் பார்ப்பது போன்று உள்ளது

عن ابن عمر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  استمتعوا من هذا البيت ، فإنه قد هُدِم مرتين ، ويُرفع في الثالثة رواه ابن حبان

قال في الكشاف أول من بناه إبراهيم ثم بناه قوم من العرب من جرهم ثم هدم فبنته العمالقة ثم هدم فبنته قريش  (فيض القدير

கஃபா இருக்கும்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.ஏனெனில் கஃபா இரண்டு தடவை இடிக்கப்பட்டு மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. கடைசியாக இடிக்கப்படும்போது அல்லாஹ் கஃபாவை வானத்திற்கு உயர்த்தி விடுவான். விளக்கம்- கடைசியாக நீக்ரோ மனிதர்களால் கஃபா இடிக்கப்படும்போது அல்லாஹ் தஆலா கஃபாவை வானத்திற்கு உயர்த்தி விடுவான். அதன் பின்பு ஹஜ் செய்ய கஃபாவே இருக்காது.

இளமையும் ஆரோக்கியமும் இருக்கும்போதே செய்ய வேண்டிய கடமைகளில் ஹஜ் முக்கியமானது

عن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم لرجل و هو يعظه  اغتنم خَمْساً قَبْلَ خَمْسٍ : شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتِكَ قَبْلَ سَقَمِكَ ، وَفَرَاغَكَ قَبْلَ شُغُلِكَ ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ (حاكم

வயதான  பின்பே ஹஜ்ஜுக்குப் போக வேண்டும் என்ற மூட நம்பிக்கையும் சிலரிடம் உண்டு.

உலகம் அழியாமல் பாதுகாக்கப் படுவதற்கு வருடம் தோறும் நடைபெறும் ஹஜ்ஜும் ஒரு காரணம்.

قَالَ اِبْن عَبَّاس : لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض (تفسير ابن كثير

ஏதேனும் ஒரு வருடத்தில் மக்கள் யாரும் ஹஜ்ஜுக்கு வராமல் ஹஜ் என்ற அமல் நடைபெறாமல் போனால் அல்லாஹ் உடனே உலகத்தை அழித்து விடுவான். படிப்பினை- கண்ணியப்படுத்த வேண்டியவைகளை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கும்வரை இந்த உலகம் நீடித்திருக்கும்.        

 

இன்னும் பல்வேறு காரணங்களை வைத்து அல்லாஹ் இந்த பூமியை விட்டு வைத்துள்ளான்.

عن ابْنَ عُبَيْدٍ ، قَالَ : ذُكِرَ أَهْلُ الشَّامِ عِنْدَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، وَهُوَ بِالْعِرَاقِ ، فَقَالُوا : الْعَنْهُمْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ . قَالَ : لاَ ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : الأَبْدَالُ يَكُونُونَ بِالشَّامِ ، وَهُمْ أَرْبَعُونَ رَجُلاً ، كُلَّمَا مَاتَ رَجُلٌ أَبْدَلَ اللَّهُ مَكَانَهُ رَجُلاً ، يُسْقَى بِهِمُ الْغَيْثُ ، وَيُنْتَصَرُ بِهِمْ عَلَى الأَعْدَاءِ ، وَيُصْرَفُ عَنْ أَهْلِ الشَّامِ بِهِمِ الْعَذَابُ. (مسند أحمد

ஷாம் தேசத்தில் அப்தால்கள் எனப்படும் இறைநேசர்கள் இருப்பார்கள். அவர்கள் நாற்பது பேர். அவர்களில் ஒருவர் இறந்து அந்த இடம் காலியாகும்போது அல்லாஹ் அடுத்த அந்தஸ்தில் உள்ள ஒருவரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவான். அவர்களின் பரக்கத்தால் பூமியில் மழை பெய்யும். அவர்களின் பரக்கத்தால் எதிரிகள் வெற்றி கொள்ளப்படுவார்கள். அவர்களின் பரக்கத்தால் ஷாம் தேச மக்களை விட்டும் வேதனைகள் நீக்கப்படும்.

மேற்படி ஹதீஸுக்கு மிர்காத் நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம்

عن عبد الله بن مسعود مرفوعا إن الله تعالى خلق ثلثمائة نفس قلوبهم على قلب آدم وله أربعون قلوبهم على قلب موسى وله سبعة قلوبهم على قلب إبراهيم وله خمسة قلوبهم على قلب جبريل وله ثلاثة قلوبهم على قلب ميكائيل وله واحد قلبه على قلب إسرافيل كلما مات الواحد أبدل الله مكانه من الثلاثة وكلما مات واحد من الثلاثة أبدل الله مكانه من الخمسة وكلما مات من الخمسة واحد أبدل الله مكانه من السبعة وكلما مات واحد من السبعة أبدل الله مكانه من الأربعين وكلما مات واحد من الأربعين أبدل الله مكانه من الثلثمائة وكلما مات واحد من الثلمائة أبدل الله مكانه من العامة بهم يدفع البلاء عن هذه الأمة  (مرقاة

கருத்து கீழிருந்து மேலாக - அல்லாஹ்வுக்கு இந்த பூமியில் குறிப்பிட எண்ணிக்கையில் இறைநேசர்கள் எப்போதும் இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களிள் பல படித்தரங்கள் உள்ளன. அனைவரையும் விட மேலான படித்தரத்தில் ஒருவர் இருப்பார். அவருக்கு அடுத்த அந்தஸ்தில் மூன்று பேர் இருப்பார்கள். அடுத்த அந்தஸ்தில் ஐந்து பேர் இருப்பார்கள். அடுத்த அந்தஸ்தில் ஏழு பேர் இருப்பார்கள். அடுத்த அந்தஸ்தில் நாற்பது பேர் இருப்பார்கள். அடுத்த அந்தஸ்தில் 300 பேர் இருப்பார்கள். இவர்களில் மேலான அந்தஸ்தில் உள்ளவர் வஃபாத்தாகி விடும்போது அடுத்த அந்தஸ்தில் உள்ளவரைக் கொண்டு அந்த இடம் நிரப்பப்படும். இப்படியாக ஒவ்வொரு அந்தஸ்திலும் உள்ளவர்கள் குறையும் போது அடுத்த அந்தஸ்தில் உள்ளவரைக் கொண்டு அந்த இடம் நிரப்பப்படும். கடைசியாக 300 பேரில் ஒருவர் குறையும்போது சாதாரண மக்களில் உள்ள நல்ல மனிதரைக் கொண்டு அந்த இடம் நிரப்பப்படும். ஆக இந்த நல்லவர்களால் இந்த உலகம் அழிவை விட்டும் பாதுகாக்கப்படும்.                       

ஹஜ் என்பது நீண்ட காலங்களுக்கு முன்பே இருந்த பூர்வீகமான வணக்கம்.

عن أَنَس بْن مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« كَانَ مَوْضِعُ الْبَيْتِ فِى زَمَنِ آدَمَ شِبْرًا أَوْ أَكْثَرَ عَلَمًا فَكَانَتِ الْمَلاَئِكَةُ تَحُجُّهُ قَبْلَ آدَمَ ثُمَّ حَجَّ آدَمُ فَاسْتَقْبَلَتْهُ الْمَلاَئِكَةُ فَقَالُوا : يَا آدَمُ مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ : حَجَجْتُ الْبَيْتَ فَقَالُوا : قَدْ حَجَّتْهُ الْمَلاَئِكَةُ قَبْلَكَ. (سنن الكبرى للبيهقي

கருத்து- நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் கஃபா சிறிய மண் மேடாக இருந்த போது அவர்கள் ஹஜ் செய்தார்கள்.  ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஹஜ் செய்வதற்கு முன்பே மலக்குகள் ஹஜ் செய்தார்கள்.

عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِىِّ أَوْ غَيْرِهِ قَالَ : حَجَّ آدَمُ عَلَيْهِ السَّلاَمُ فَلَقِيَتْهُ الْمَلاَئِكَةُ فَقَالُوا : بُرَّ نُسُكُكَ آدَمُ لَقَدْ حَجَجْنَا قَبْلَكَ بِأَلْفَىْ عَامٍ.

கருத்து- நபி ஆதம் அலை அவர்களிடம் மலக்குகள் கூறும்போது நாங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ஹஜ் செய்துள்ளோம் என்றார்கள்.

கஃபா ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்தது என்பதற்கான தெளிவான ஆதாரம்.

 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلُ قَالَ الْمَسْجِدُ الْحَرَامُ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ الْمَسْجِدُ الْأَقْصَى قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ سَنَةً (مسلم)     وجه الحديث أن هذين المسجدين بنيا قديما ثم خربا ثم بنيا   (مرقاة

முதன்முதலில் கட்டப்பட்டது எந்த மஸ்ஜித் என்று கேட்கப்பட்டபோது மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி ஸல் கூறினார்கள். இரண்டாவதாக கட்டப்பட்டது எந்த மஸ்ஜித் என்று கேட்கப்பட்டபோது மஸ்ஜிதுல் அக்ஸா என்று நபி ஸல் கூறினார்கள். இரண்டுக்கும் எத்தனை வருட இடைவெளி என்று கேட்கப்பட்டபோது 40 வருடங்கள் என்று நபி ஸல் கூறினார்கள்.                                                

விளக்கம்- மஸ்ஜிதுல் ஹராம் இப்றாஹீம் அலை அவர்களால் கட்டப்பட்டது. பைத்துல் முகத்தஸ் நபி சுலைமான் அலை அவர்களால் கட்டப்பட்டது. இந்த இரண்டு நபிமார்களுக்கு மத்தியில் நீண்ட கால இடைவெளி உள்ளது. அப்படியானால் நாற்பது வருட இடைவெளி என்பது இந்த இரண்டு மஸ்ஜித்களும் மலக்குகளால் முதன் முதலில் கட்டப்பட்ட போது நாற்பது வருட இடைவெளி என்று பொருளாகும்.   

ஆதம் அலை எத்தனை ஹஜ் செய்தார்கள் என்பதில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. எனினும் ஒவ்வொரு தடவையும் இந்தியாவில் இருந்து நடந்தே வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

روي أن آدم عليه السلام حج أربعين سنة من الهند ماشياً (تفسير الالوسي -  روح المعاني )

عن أبي هريرة قال : حج آدم عليه السلام فقضى المناسك ، فلما حج قال : يا رب إن لكل عامل أجراً قال الله تعالى : أما أنت يا آدم فقد غفرت لك ، وأما ذريتك فمن جاء منهم هذا البيت فباء بذنبه غفرت له (الدر المنثور

நபி ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க ஹஜ்ஜை நிறைவேற்றிய போது அல்லாஹ்விடம் ரப்பே ஒவ்வொரு நற்செயலுக்கும் கூலி உண்டு. இதற்கு என்ன நற்கூலி என்று கேட்க, அதற்கு அல்லாஹ் நான் உம்மை முற்றிலுமாக மன்னித்து விட்டேன். அது மட்டுமல்ல உம் சந்த தியில் யாரெல்லாம் இங்கு வருவார்களோ அவர்களையும் மன்னித்து விட்டேன் என்று கூறினான். மற்றொரு அறிவிப்பில் நான் உம்மை மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறியதும் சந்த திகளுக்கும் அந்த மன்னிப்பை ஆதம் அலைஹிஸ்ஸலாம் வேண்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.                 

நபி ஆதம் அலை ஹஜ்ஜுக்கு வந்த நேரத்தில் தான் ஹாபீலை காபீல் கொலை செய்தார்.

عَنْ اِبْن مَسْعُود  رضأَنَّهُ كَانَ لَا يُولَد لِآدَم مَوْلُود إِلَّا وَمَعَهُ جَارِيَة فَكَانَ يُزَوِّج غُلَام هَذَا الْبَطْن جَارِيَة هَذَا الْبَطْن الْآخَر وَيُزَوِّج جَارِيَة هَذَا الْبَطْن غُلَام هَذَا الْبَطْن الْآخَر حَتَّى وُلِدَ لَهُ اِبْنَانِ يُقَال لَهُمَا هَابِيل وَقَابِيل وَكَانَ قَابِيل صَاحِب زَرْع وَكَانَ هَابِيل صَاحِب ضَرْع وَكَانَ قَابِيل أَكْبَرَهُمَا وَكَانَ لَهُ أُخْت أَحْسَنُ مِنْ أُخْت هَابِيل وَإِنَّ هَابِيل طَلَبَ أَنْ يَنْكِح أُخْت قَابِيل فَأَبَى عَلَيْهِ قَالَ هِيَ أُخْتِي وُلِدَتْ مَعِي وَهِيَ أَحْسَنُ مِنْ أُخْتك وَأَنَا أَحَقّ أَنْ أَتَزَوَّج بِهَا فَأَمَرَهُ أَبُوهُ أَنْ يُزَوِّجهَا هَابِيل فَأَبَى وَأَنَّهُمَا قَرَّبَا قُرْبَانًا إِلَى اللَّه عَزَّ وَجَلَّ أَيّهمَا أَحَقّ بِالْجَارِيَةِ وَكَانَ آدَم عَلَيْهِ السَّلَام قَدْ غَابَ عَنْهُمَا أَتَى مَكَّة يَنْظُر إِلَيْهَا قَالَ اللَّه عَزَّ وَجَلَّ هَلْ تَعْلَم أَنَّ لِي بَيْتًا فِي الْأَرْض قَالَ اللَّهُمَّ لَا قَالَ إِنَّ لِي بَيْتًا فِي مَكَّة فَآتِهِ فَقَالَ آدَمُ لِلسَّمَاءِ اِحْفَظِي وَلَدِي بِالْأَمَانَةِ فَأَبَتْ وَقَالَ لِلْأَرْضِ فَأَبَتْ وَقَالَ لِلْجِبَالِ فَأَبَتْ فَقَالَ لِقَابِيل فَقَالَ نَعَمْ تَذْهَب وَتَرْجِع وَتَجِد أَهْلك كَمَا يَسُرّك فَلَمَّا اِنْطَلَقَ آدَم قَرَّبَا قُرْبَانًا وَكَانَ قَابِيل يَفْخَر عَلَيْهِ فَقَالَ أَنَا أَحَقُّ بِهَا مِنْك هِيَ أُخْتِي وَأَنَا أَكْبَرُ مِنْك وَأَنَا وَصِيّ وَالِدِي فَلَمَّا قَرَّبَا قَرَّبَ هَابِيلُ جَذَعَةً سَمِينَةً وَقَرَّبَ قَابِيلُ حُزْمَةَ سُنْبُل فَوَجَدَ فِيهَا سُنْبُلَة عَظِيمَة فَفَرَكَهَا وَأَكَلَهَا فَنَزَلَتْ النَّار فَأَكَلَتْ قُرْبَان هَابِيل وَتَرَكَتْ قُرْبَان قَابِيل فَغَضِبَ وَقَالَ لَأَقْتُلَنَّكَ حَتَّى لَا تَنْكِح أُخْتِي فَقَالَ هَابِيل إِنَّمَا يَتَقَبَّل اللَّه مِنْ الْمُتَّقِينَ . (تفسير ابن كثير

எல்லா நபிமார்களும் ஹஜ் செய்துள்ளார்கள்.

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ قَالَ : مَا مِنْ نَبِىٍّ إِلاَّ وَقَدْ حَجَّ الْبَيْتَ إِلاَّ مَا كَانَ مِنْ هُودٍ وَصَالِحٍ وَلَقَدْ حَجَّهُ نُوحٌ فَلَمَّا كَانَ مِنَ الأَرْضِ مَا كَانَ مِنَ الْغَرَقِ أَصَابَ الْبَيْتَ مَا أَصَابَ الأَرْضَ وَكَانَ الْبَيْتُ رَبْوَةً حَمْرَاءَ فَبَعَثَ اللَّهُ هُودًا عَلَيْهِ السَّلاَمُ فَتَشَاغَلَ بِأَمْرِ قَوْمِهِ حَتَّى قَبَضَهُ اللَّهُ إِلَيْهِ فَلَمْ يَحُجَّهُ حَتَّى مَاتَ فَلَمَّا بَوَّأَهُ اللَّهُ لإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ حَجَّهُ ثُمَّ لَمْ يَبْقَ نَبِىٌّ بَعْدَهُ إِلاَّ حَجَّهُ.

எல்லா நபிமார்களும் ஹஜ் செய்துள்ளார்கள். நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம், சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரைத் தவிர. நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தில் கஃபாவும் பாதிப்புக்கு உள்ளானது. ஆனாலும் அதற்கு முன்பே நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டார்கள்.   வெள்ளப்பிரளயத்திற்குப் பின் கஃபா சிவப்பு மண் மேடாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. அதன்பின் நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நபியாக அனுப்பினான் அவர்களுடைய சமூக மக்களிடம் பிரச்சினைகளை சமாளிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்த காரணத்தால் அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை. அதன்பின் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கஃபாவின் இடத்தைக் காட்டித் தந்தான். அவர்கள் அதைப் புதுப்பொலிவுடன் கட்டினார்கள். அதன் பின் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹஜ் செய்தார்கள். அதன் பின்பு வந்த எந்த நபியும் ஹஜ் செய்யாமல் இருந்ததில்லை.                                      

கடைசி காலத்தில் ஈஸா அலை அவர்களும் ஹஜ் செய்வார்கள்.

عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا  (مسلم) صحيح ابن حبان باب ذكر الإخبار بأن عيسى ابن مريم يحج البيت العتيق بعد قتله الدجال

கஃபாவுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

عَنِ السُّدِّيِّ، قَالَ: "إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَ إِبْرَاهِيمَ أَنْ يَبْنِيَ الْبَيْتَ هُوَ وَإِسْمَاعِيلُ  " ابْنِيَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ " ، فَانْطَلَقَ إِبْرَاهِيمُ حَتَّى أَتَى مَكَّةَ فَقَامَ هُوَ وَإِسْمَاعِيلُ وَأَخَذَا الْمَعَاوِلَ لا يَدْرِيَانِ أَيْنَ الْبَيْتُ ؟ فَبَعَثَ اللَّهُ تَعَالَى رِيحًا يُقَالُ لَهَا رِيحُ الْخُجُوجِ، لَهَا جَنَاحَانِ وَرَأْسٌ فِي صُورَةِ حَيَّةٍ، فَكَنَسَتْ لَهُمَا مَا حَوْلَ الْكَعْبَةِ مِنْ أَسَاسِ الْبَيْتِ الأَوَّلِ، وَاتَّبَعَاهَا بِالْمَعَاوِلِ يَحْفِرَانِ، حَتَّى وَضَعَا الأَسَاسَ، فَذَلِكَ حِينَ يَقُولُ:  " وَإِذْ بَوَّأْنَا لإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ "  فَلَمَّا بَنَيَا الْقَوَاعِدَ فَبَلَغَا مَكَانَ الرُّكْنِ، قَالَ إِبْرَاهِيمُ لإِسْمَاعِيلَ: يَا بُنَيَّ، اطْلُبْ لِي حَجَرًا حَسَنًا أَضَعُهُ هَاهُنَا، قَالَ: يَا أَبَتِ إِنِّي كَسْلانُ لَغِبٌ، قَالَ: عَلَيَّ ذَلِكَ، فَانْطَلَقَ يَطْلُبُ لَهُ حَجَرًا وَجَاءَهُ جِبْرِيلُ بِالْحَجَرِ الأَسْوَدِ مِنَ الْهِنْدِ،  (تفسير ابن كثير)

சுருக்கம்- அல்லாஹ் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களின் மகனாரையும் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டும்படி ஏவியபோது அவ்விருவரும் அங்கு வந்தார்கள். மண்வெட்டியை எடுத்தார்கள். ஆனால் கஃபாவின் அஸ்திவாரம் எங்கே உள்ளது எங்கே உள்ளது என்று தெரியாத போது அல்லாஹ் ஒரு புயல்காற்றை அனுப்பினான்.அது கஃபாவின் சுற்றளவை மட்டும் சுழற்றி அடித்தது. அதை வைத்து கஃபாவைக் கட்டினார்கள். கடைசியில் ஒரு கல் வைக்கும் இடம் மட்டும் மிச்சமிருக்கும்போது மகனே ஒரு நல்ல கல்லாகப் பார்த்து எடுத்து வா என்று தந்தை கூற, அதற்கு மகனார் மிகவும் களைப்பாக உள்ளது என்றார்கள். இருப்பினும் தந்தையின் கட்டளைப்படி கல்லை எடுக்கச் சென்று திரும்பி வருவதற்குள் அங்கே இன்னும் சிறப்பான கல் அதாவது ஹஜருல் அஸ்வத் பொருத்தப் பட்டிருப்பதைக் கண்டு இதை யார் கொண்டு வந்தார்கள் என்று கேட்க, இந்தியாவில் இருந்து ஜிப்ரயீல் அலை கொண்டு வந்தார்கள் என தந்தை பதில் கூறினார்கள்.                                     

நபி ஆதம் சுவனத்தில் இருந்து இறங்கும்போது கொண்டு வந்திருக்கலாம் என விளக்கம் கூறப்பட்டுள்ளது

ஹஜ் என்பது ஒரு புனிதமான வணக்கம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَجَّةُ الْمَبْرُورَةُ لَيْسَ لَهَا جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ وَالْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا رواه النسائ  عن خالد بن معدان ، قال : « تحُْشَرُ الكعبة إلى بيت المقدس متعلقا بأستارها كل من حج واعتمر (أخبار مكة للفاكهي)

ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்வது கடமையா ?

عن ابن عباس رضي الله عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال: "يَأيُّهَا النَّاسُ، إنَّ اللهَ كَتَبَ عَلَيْكُم الحَجَّ". فقام الأقرع بن حابس فقال: يا رسول الله، أفي كل عام؟ قال: "لَوْ قُلْتُهَا، لَوَجَبَتْ، ولَوْ وَجَبَتْ لَمْ تَعْمَلُوا بِهَا، وَلَمْ تَسْتَطِيعُوا أنْ تَعْمَلُوا بِهَا؛ الحَجُّ مَرَّةً، فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ".رواه أحمد، وأبو داود، والنسائي، وابن ماجة،

கடமையான ஹஜ்ஜை முடித்தவர் நான்கு அல்லது

 ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது ஹஜ் செய்வது நல்லது

عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: " يقول الرب عزوجل إن عبدا أوسعتُ عليه في الرزق فلم يَعُد إليّ في كل أربعة أعوام لَمَحْرُوم)  هذا الحديث مشهور من حديث العلاء بن المسيب بن رافع الكاهلي الكوفي من أولاد المحدثين، روى عنه غير واحد، منهم من قال: في كل خمسة أعوام، (تفسير القرطبي)

ஹஜ் செய்யும் ஆர்வம் இருந்தும் வசதி குறைவாக உள்ளவருக்கு உதவி செய்து ஹஜ் செய்ய வைப்பதின் நன்மை

عن زيد بن خالد الجهني رضي الله عنه، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  من فطر صائما ، أو أحَجَّ رجلا ، أو جهز غازيا أو خلفه في أهله فله مثل أجره  رواه البيهقي في شعب الايمان

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم :حجة لمن لم يحج خير من عشر غزوات (أخبار مكة للفاكهي)

பத்லீ ஹஜ்ஜைப் பற்றி...

கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள், முடியாதவர்களான தன் பெற்றோருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றலாம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري

என்னுடைய தந்தை மிகவும் வயதானவராக இருக்கிறார். அவரால் வாகனத்தில் ஏறவே முடியாது. அவருக்கு பதிலாக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா என்று ஒரு பெண் கேட்டபோது ஆம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.                                                               

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي مَاتَ وَلَمْ يَحُجَّ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَى أَبِيكَ دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَدَيْنُ اللَّهِ أَحَقُّ رواه النسائ  عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ قَالَ مَنْ شُبْرُمَةُ قَالَ أَخٌ لِي أَوْ قَرِيبٌ لِي قَالَ حَجَجْتَ عَنْ نَفْسِكَ قَالَ لَا قَالَ حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ رواه ابوداود

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் என்னுடைய தந்தை ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். அவருக்கு பதிலாக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா என்று கேட்டபோது நபி ஸல் அவர்கள் உன் தந்தைக்கு ஏதேனும் கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவீர்கள் அல்லவா என்று  கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூற, அப்படியானால் அல்லாஹ்வின் கடமையாகிய ஹஜ் அதை விட மேலானது என்று பதில் கூறினார்கள்.                                                           

 தன் சகோதரரான ஷுப்ருமா என்பவருக்காக பத்லீ ஹஜ் செய்ய வந்திருந்த ஒருவரிடம் நபி ஸல் அவர்கள் முதலில் நீங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டீர்களா என்று கேட்க, அவர் இல்லை என்றார். உடனே நபி ஸல் அவர்கள் முதலில் நீங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள். பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்யுங்கள் என்று கூறினார்கள்.                                                      

வசதி உள்ளவர்கள் தன் குடும்பத்தினரையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வது நல்லது.

عن طلحة يعني ابن مصرف ، قال :  مِنْ أخلاق الصالحين أن يحجوا بأهليهم وأولادهم  رواه البيهقي في شعب الايمان

ஹராமான பணத்தில் ஹஜ் செய்பவர்களின் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படுமா?

عن أنس عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من حج من مال حلال ، أو من تجارة ، أو من ميراث لم يخرج عن عرفة حتى تغفر ذنوبه ، وإذا حج من مال حرام فلَبّى ، قال الرب : لا لبيك ولا سعديك ثم يلف ويضرب بها وجهه.(الديلمي ,كنز العمال)

அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து ஹஜ்ஜூக்கு விண்ணப்பிப்பதும், முடிவு எதுவாயினும் பொருந்திக் கொள்வதும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ رواه الترمذي

உலகமே ஒன்று சேர்ந்து ஒரு பிரயோஜனத்தை உனக்குப் பெற்றுத் தர நினைத்தாலும் அல்லாஹ் அதை உனக்கு விதித்தாலே தவிர அது உனக்குக் கிடைக்காது. உலகமே ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு தீமையை விளைவிக்க நினைத்தாலும் அல்லாஹ் அதை உனக்கு விதித்தாலே தவிர அது உனக்கு வராது.     

 விளக்கம்- எத்தனையோ பேர் ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்து அதற்கான ஏற்பாடுகளெல்லாம் செய்த பிறகு ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல் ஆகி விட்ட சம்பவங்கள் உண்டு. விமானத்தில் ஏறிய பின்பும் கூட ஏதோ காரணத்தால் தடங்கலாகி, கீழே இறக்கி விடப்பட்டு, அதன்பிறகு அறவே ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல் ஆகி விட்ட சம்பவங்களும் உண்டு. எனவே ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்தவர் அல்லாஹ்விடம் அந்த பாக்கியத்தைப் பெற்றுத் தர அதிகமாக துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக வருகிற ரமழானில் அதிகம் இதற்காக துஆச் செய்ய வேண்டும்.                              

இலஞ்சம் கொடுத்து ஹஜ்ஜுக்கான அனுமதியைப் பெற நினைக்கலாமா?

أَكَّالُونَ لِلسُّحْتِ (سورة المائدة)42 عَنْ عَبْدِ اللَّهِ ابن مسعود قَالَ:"السُّحْتُ الرِّشْوَةُ فِي الدِّينِ". رواه الطبراني في المعجم الكبير

عن عبد الله بن مسعودرض قال: من شفع لرجل ليدفع عنه مظلمة أو يرد عليه حقا  فأهدى له هدية فقبلها فذلك السحت

(تفسير ابن ابي حاتم)

عن ثوبان ، رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : لعن الله الراشي والمرتشي والرائش الذي يمشي بينهما رواه الحاكم في المستدرك

மிகவும் சொகுசாகவும், மிகவும் ஆடம்பரமாகவும் ஹஜ்ஜை நிறைவேற்ற நினைப்பது நபிவழி அல்ல.

عن أنس رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يأتي على الناس زمان يَحُجُّ أغنياء الناس لِلنَّزَاهَة ، وأوساطهم للتجارة وقُرَّاؤُهم للرياء والسمعة وفقراؤهم للمسألة (كنز العمال) للنزاهةசுற்றுலாவுக்கு   

கடைசியில் ஒரு காலம் வரும். வசதியுள்ளவர்கள் சுற்றுலாவுக்குச் செல்வது போன்று ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். நடுத்தர வர்க்கத்தினர வியாபார நோக்கத்திற்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். மார்க்கத்தைக் கற்றவர்கள் பெருமைக்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். ஏழைகள் யாசகம் கேட்பதற்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள்.                                                                      

عن عمر بن عبد العزيز رحمة الله عليه قال "إن الله تعالى جعل هذا السفر نسكا ، وسيجعله الظالمون نكالا "(ابن عساكر)

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் இந்தப் பிரயாணத்தை சிறந்த வணக்கமாக ஆக்கியுள்ளான். ஆனால் அநியாயக்காரர்களில் சிலர் அதை தன் மீதான தண்டனைக்கான பிரயாணமாக ஆக்கி விடுகிறார்கள்.                                                   

عن ابن مسعود رض أن النبي صلى الله عليه وسلم قال لا تزول قَدَمَا ابنِ آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيم أفناه وعن شبابه فيم أبلاه وعن ماله من أين اكتسبه وفيم أنفقه وماذا عمل فيما علم (الترمذي)

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ الزَّادُ وَالرَّاحِلَةُ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْحَاجُّ قَالَ الشَّعِثُ التَّفِلُ... رواه ابن ماجة

 

வியாழன், 16 பிப்ரவரி, 2023

மிஃராஜ் படிப்பினைகள்

 


17-02-2023

 

بسم الله الرحمن الرحيم 

 மிஃராஜ் படிப்பினைகள்

 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

 



 மிஃராஜ் படிப்பினைகள்


அறிவு ஏற்கா விட்டாலும் நம்ப வேண்டிய எத்தனையோ விஷயங்கள் மார்க்கத்தில் உள்ளன. அதில் ஒன்று மிஃராஜ்

ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ- الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5)البقرة

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنْ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ (بخاري)- باب فَضْلِ ذِكْرِ اللَّهِ – كتاب الدعوات  

 

அல்லாஹ்வுக்கு சில மலக்குகள் உள்ளனர். அவர்கள் இந்த பூமியின் வழியெங்கும் சுற்றித் திரிந்து அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருக்கும் கூட்டத்தினரைத் தேடி அலைவார்கள். அவ்வாறு ஒரு கூட்டத்தைப் பெற்றுக் கொண்டால் மற்ற மலக்குகளை அங்கு அழைப்பார்ரகள் வாருங்கள் நீங்கள் தேடிய விஷயம் இங்கே உள்ளது என்று கூறி தங்களுடைய இறக்கைகளால் சூழ்ந்து கொண்டு வாழ்த்துவார்கள். மலக்குகளின் அக்கூட்டம் அல்லாஹ்விடம் செல்லும்போது அல்லாஹ் அறிந்து கொண்டே அந்த மலக்குகளிடம் என்னுடைய அடியார்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்பான். உன்னைத் துதித்துக் கொண்டிருந்தார்கள் என்று மலக்குகள் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் என்னைத் துதிக்கிறார்களே என்னைப் பார்த்திருக்கிறார்களா என்று கேட்பான். அதற்கு மலக்குகள் உன்னை அவர்கள் பார்க்கவில்லை என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் மலக்குகளிடம் என்னைப் பார்க்காமலேயே இந்த அளவுக்குத் துதிப்பவர்கள் என்னைப் பார்த்தால் எந்த அளவுக்குத் துதிப்பார்கள் என்று கேட்க அதற்கு மலக்குகள் உன்னைப்பார்த்திருந்தால் இன்னும் அதிகமாகத் துதிப்பார்கள் என்று கூறுவார்கள்.

 

அடுத்து அல்லாஹ் மலக்குகளிடம்  என்னுடைய அடியார்கள் எதை என்னிடம் வேண்டுகிறார்கள் என்று கேட்பான். சுவனத்தை வேண்டுகிறார்கள் என்று மலக்குகள் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் அந்த சுவனத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று கேட்பான். அதற்கு மலக்குகள் பார்க்கவில்லை என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் மலக்குகளிடம் சுவனத்தைப் பார்க்காமலேயே இந்த அளவுக்குக் கேட்பவர்கள் அதைப் பார்த்தால் எந்த அளவுக்கு வேண்டுவார்கள் என்று கேட்பான். அதற்கு மலக்குகள் சுவனத்தை அந்த அடியார்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னிடம் அதை வேண்டுவார்கள் என்று கூறுவார்கள்.                                     

 

அடுத்து அல்லாஹ் மலக்குகளிடம் எனது அடியார்கள் எதை விட்டும் என்னிடம் பாதுகாப்புக் கேட்கிறார்கள் என்று கேட்பான். நரகத்தை விட்டும் பாதுகாப்பை வேண்டுகிறார்கள் என்று மலக்குகள் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் அந்த நரகத்தையேனும் அவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று கேட்பான். அதற்கு மலக்குகள் பார்க்கவில்லை என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் மலக்குகளிடம் நரகத்தை பார்க்காமலேயே இந்த அளவுக்கு பாதுகாப்புக் கேட்பவர்கள் அதைப் பார்த்தால் எந்த அளவுக்கு பாதுகாப்புக் கேட்பார்கள் என்று கேட்பான். அதற்கு மலக்குகள் நரகத்தை அந்த அடியார்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதை விட்டும் பாதுகாப்புக் கேட்பார்கள் என்று கூறுவார்கள். இறுதியாக அல்லாஹ் மலக்குகளிடம் நான் உங்களைச்  சாட்சியாக வைத்து அவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டேன் என்று கூறும்போது யாஅல்லாஹ் இந்த திக்ரு சபையில் ஒருவர் உன்னைத் துதிப்பவர்களில் கட்டுப்படாதவராக உள்ளார். அதாவது அவர் வேறு நோக்கத்திற்காக அங்கு வந்து அமர்ந்துள்ளார். அவரையும் மன்னிக்கிறாயா என்று கேட்க, அதற்கு அல்லாஹ் ஆம். அவரையும் மன்னிக்கிறேன். என்னைத் துதிப்பவர்களில் கூட்டத்தில் இணைந்திருந்ததால் அவர் நிராசையாக மாட்டார் என்று கூறுவான்.                           

நபி(ஸல்) முழு உடலுடன்தான் விண்ணுலகப் பயணம் சென்றார்கள் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று

அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்கும் முன் ஹிர்கல் மன்னரிடம் நபி ஸல் அவர்களைப் பற்றி தவறாக எடுத்துக் கூற முயன்ற போது நடந்த உரையாடல்

قال ابو سفيان..قُلْت أَيّهَا الْمَلِك أَلَا أُخْبِرك خَبَرًا تَعْرِف أَنَّهُ قَدْ كَذَبَ ؟ قَالَ وَمَا هُوَ قَالَ قُلْت إِنَّهُ يَزْعُم لَنَا أَنَّهُ خَرَجَ مِنْ أَرْضنَا أَرْض الْحَرَم فِي لَيْلَة فَجَاءَ مَسْجِدكُمْ هَذَا مَسْجِد إِيلِيَاء وَرَجَعَ إِلَيْنَا تِلْكَ اللَّيْلَة قَبْل الصَّبَاح .قَالَ وَبِطْرِيقِ إِيلِيَاء عِنْد رَأْس قَيْصَر فَقَالَ بِطْرِيق إِيلِيَاء قَدْ عَلِمْت تِلْكَ اللَّيْلَة قَالَ فَنَظَرَ إِلَيْهِ قَيْصَر وَقَالَ وَمَا عِلْمك بِهَذَا ؟ قَالَ إِنِّي كُنْت لَا أَنَام لَيْلَة حَتَّى أُغْلِق أَبْوَاب الْمَسْجِد فَلَمَّا كَانَ تِلْكَ اللَّيْلَة أَغْلَقْت الْأَبْوَاب كُلّهَا غَيْر بَاب وَاحِد غَلَبَنِي فَاسْتَعَنْت عَلَيْهِ بِعُمَّالِي وَمَنْ يَحْضُرنِي كُلّهمْ مُعَالَجَة فَغَلَبَنَا فَلَمْ نَسْتَطِعْ أَنْ نُحَرِّكهُ كَأَنَّمَا نُزَاوِل بِهِ جَبَلًا فَدَعَوْت إِلَيْهِ النَّجَاجِرَة فَنَظَرُوا إِلَيْهِ فَقَالُوا إِنَّ هَذَا الْبَاب سَقَطَ عَلَيْهِ النِّجَاف وَالْبُنْيَان وَلَا نَسْتَطِيع أَنْ نُحَرِّكهُ حَتَّى نُصْبِح فَنَنْظُر مِنْ أَيْنَ أَتَى .قَالَ فَرَجَعْت وَتَرَكْت الْبَابَيْنِ مَفْتُوحَيْنِ .فَلَمَّا أَصْبَحْت غَدَوْت عَلَيْهِمَا فَإِذَا الْحَجَر الَّذِي فِي زَاوِيَة الْمَسْجِد مَثْقُوب وَإِذَا فِيهِ أَثَر مِرْبَط الدَّابَّة قَالَ فَقُلْت لِأَصْحَابِي مَا حُبِسَ هَذَا الْبَاب اللَّيْلَة إِلَّا عَلَى نَبِيّ وَقَدْ صَلَّى اللَّيْلَة فِي مَسْجِدنَا (تفسير ابن كثير)

 விளக்கம்- ஹிர்கல் மன்னரிடம்  அபூ சுஃப்யான்  நபி ஸல் அவர்களை பொய்ப்படுத்துதற்காக பின் வருமாறு கூறினார்- அந்த முஹம்மத் ஒரே இரவில் எங்களுடைய ஊரில் இருந்து புறப்பட்டு உங்களுடைய இந்த மஸ்ஜிதுக்கு வந்து விட்டு அதே இரவில் மீண்டும் எங்களுடைய ஊருக்கு திரும்பியதாக பொய் சொல்கிறார். அதை நம்புகிறீர்களா என்று கேட்க. உடனே அருகில் இருந்த காவலாளி அந்த இரவைப் பற்றி எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியும் என்று கூற உடனே ஹிர்கல் மன்னர் அந்த காவலாளியிடம் உனக்கு என்ன தெரியும். சொல். என்றார். அப்போது அந்த காவலாளி நான் எப்போதும் நம் மஸ்ஜிதுடைய பிரதான வாசலை மூடாமல் தூங்க மாட்டேன். ஆனால் குறிப்பிட்ட அந்த இரவில் வழக்கம் போல மற்ற எல்லாக் கதவுகளையும் மூடி விட்டு பிரதான கதவை மூட முயன்றேன். என்னால்  முடியவில்லை. என்னுடைய உதவியாளர்களை அழைத்தேன். அவர்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சித்தும் அவர்களால் நகர்த்தவே முடியவில்லை. பெரிய மலை போன்று கனமாக இருந்தது.  பின்பு நான் ஆசாரிகளை அழைத்து அவர்களும் முயற்சித்தும் பலனில்லை. பின்பு அவர்கள் என்னிடம் இந்த மரத்தின் ஒரு பகுதி வீங்கி துருத்திக் கொண்டிருக்கிறது. காலை வரை போராடினாலும் எங்களால் முடியாது என்று கூறிச் சென்று விட்டார்கள். நானும் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டேன்.  காலையில் வந்து பார்த்த போது தான் மஸ்ஜிதின் ஓரத்தில் வாகனத்தை கட்டி வைக்கும் பெரிய கல்லும், அதில் வாகனத்தை கட்டி வைத்த அடையாளத்தையும் பார்த்தேன். அப்போது நான் என் நண்பர்களிடம் நிச்சயமாக நேற்று இரவு ஒரு நபியின் வருகைக்காகத் தான் இந்தக் கதவை மூட முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த நபி நம்முடைய இந்த மஸ்ஜிதில் வந்து தொழுது விட்டுச் சென்றுள்ளார் என்று அப்போதே நான் கூறினேன் என்றார்.               

உலகில் வாழும்போது விண்ணுலகப் பயணம் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமில்லை.

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ (33)سورة الرحمن

அருகில் இருக்கும் சந்திரனில் காலடி வைக்க, கடும் சிரமத்திற்குப் பிறகே மனிதனால் முடிந்தது

1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அப்பல்லோ திட்டம் மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யும் நிலைஏற்பட்டது. இறுதியில்அப்பல்லோ விண்கலம், 1969  ஜூலை 16ம் தேதி 39Aஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு நீல் ஆம்ஸ்ட்ரோங் எட்வின் ஆல்ட்ரின்,மைக்கேல் கொலின்ஸ் ஆகிய 3 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் பயணத்தைத் தொடங்கியது.                    

விண்ணை நோக்கி பயணம் செய்வதே பெரும் சிரமம் என்று கூறும் அல்குர்ஆன்

فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ..(125)الانعام (وأصل الصعود المشقة، ومنه قوله تعالى(سأرهقه صعودا(المدثر17) معالم التنزيل عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه " كَأَنَّمَا يَصَّعَّد فِي السَّمَاء " يَقُول فَكَمَا لَا يَسْتَطِيع اِبْن آدَم أَنْ يَبْلُغ السَّمَاء فَكَذَلِكَ لَا يَسْتَطِيع أَنْ يُدْخِل التَّوْحِيد وَالْإِيمَان قَلْبه حَتَّى يُدْخِلهُ اللَّه فِي قَلْبه (تفسير ابن كثير)

மிஃராஜ் சம்பவம் நடைபெறக் காரணம்

அபூதாலிப், கதீஜா ரழி ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்கள் மூலம் மிகவும் கவலையடைந்த  நபி [ஸல்] அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக இந்த நிகழ்வை அல்லாஹ் நடத்தினான்.

وبعد وفاة أبي طالب بنحو شهرين أو بثلاثة أيام ـ على اختلاف القولين ـ توفيت أم المؤمنين خديجة الكبرى رضي الله عنها وكانت وفاتها في شهر رمضان في السنة العاشرة من النبوة، ولها خمس وستون سنة على أشهر الأقوال، ورسول الله صلى الله عليه وسلم إذ ذاك في الخمسين من عمره .]الرحيق المختوم[  عن ابن إسحاق قال : « ثم إن خديجة بنت خويلد ، وأبا طالب ماتا في عام واحد ، فتتابعت على رسول الله صلى الله عليه وسلم المصائب بهلاك خديجة ، وأبي طالب ، وكانت خديجة وزيرة صدق على الإسلام ، كان يسكن إليها » قلت : وبلغني أن موت خديجة كان بعد موت أبي طالب بثلاثة أيام ، والله أعلم . (دلائل النبوة ـ للبيهقى

அபூதாலிப்அவர்களின் மரணத்திற்குப் பின்பு மூன்று நாட்கள் இடைவெளியில் அல்லது 2 மாத  இடைவெளியில் கதீஜா ரழி வஃபாத்தானார்கள். நுபுவ்வத்திற்குப் பின் 10-ம் ஆண்டு ரமழான் என்றும் கூறப்படுகிறது. அப்போது அன்னை கதீஜா ரழி அவர்களின் வயது 65 என்றும் நபி ஸல் அவர்களின் வயது 50 என்றும் கூறப்பட்டுள்ளது.   

முக்கியமான பயணத்திற்கு நபி ஸல் அவர்களை தயார் படுத்த நடத்தப்பட்ட ஆன்மீக ஆபரேஷன்

عن أَنَس بْن مَالِكٍ كَانَ أَبُو ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْه  يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُرِجَ سَقْفِي وَأَنَا بِمَكَّةَ فَنَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ إِلَى السَّمَاء (بخاري 1636

 நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள்.          

படிப்பினை- உலகில் எத்தனையோ ஆபரேஷன் நடைபெறும். மயக்க மருந்து செலுத்திய பின் உணவர்வற்ற நிலை இருக்கும்போது நடைபெறும். ஆனால் நபி ஸல் அவர்களுக்கு நடைபெற்ற ஆபரேஷன் முற்றிலும் உணர்வுடன் இருந்த நிலையில் நடைபெற்றது. மலக்குகள் செய்வதை நபி ஸல் அவர்கள் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.   

عَنْ أَنَس يَقُولُ لَيْلَةَ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الْكَعْبَةِ أَنَّهُ جَاءَهُ ثَلَاثَةُ نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ وَهُوَ نَائِمٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَقَالَ أَوَّلُهُمْ أَيُّهُمْ هُوَ فَقَالَ أَوْسَطُهُمْ هُوَ خَيْرُهُمْ فَقَالَ آخِرُهُمْ خُذُوا خَيْرَهُمْ فَكَانَتْ تِلْكَ اللَّيْلَةَ فَلَمْ يَرَهُمْ حَتَّى أَتَوْهُ لَيْلَةً أُخْرَى فِيمَا يَرَى قَلْبُهُ وَتَنَامُ عَيْنُهُ وَلَا يَنَامُ قَلْبُهُ وَكَذَلِكَ الْأَنْبِيَاءُ تَنَامُ أَعْيُنُهُمْ وَلَا تَنَامُ قُلُوبُهُمْ فَلَمْ يُكَلِّمُوهُ حَتَّى احْتَمَلُوهُ فَوَضَعُوهُ عِنْدَ بِئْرِ زَمْزَمَ فَتَوَلَّاهُ مِنْهُمْ جِبْرِيلُ فَشَقَّ جِبْرِيلُ مَا بَيْنَ نَحْرِهِ إِلَى لَبَّتِهِ حَتَّى فَرَغَ مِنْ صَدْرِهِ وَجَوْفِهِ فَغَسَلَهُ مِنْ مَاءِ زَمْزَمَ بِيَدِهِ حَتَّى أَنْقَى جَوْفَهُ ثُمَّ أُتِيَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ فِيهِ تَوْرٌ مِنْ ذَهَبٍ مَحْشُوًّا إِيمَانًا وَحِكْمَةً فَحَشَا بِهِ صَدْرَهُ وَلَغَادِيدَهُ يَعْنِي عُرُوقَ حَلْقِهِ ثُمَّ أَطْبَقَهُ (بخاري) باب قَوْلِهِ ( وَكَلَّمَ اللَّهُ مُوسَى  ) كتاب التوحيد

நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் மொத்தம் மூன்று தடவைகள் இந்த நிகழ்வு நடந்துள்ளது

நபியாக ஆக்கப் படும் போதும் நடந்ததாத அபூநயீம் ரஹ் அவர்கள் தமது தலாஇல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

أن جبريل وميكائيل عليهما السلام شقا صدره وغسلاه ثم قال اقرأ باسم ربك  (تفسير  روح المعاني

சிறு வயதில் ஹலீமா ரழி அவர்களிடம் வளரும்போது இந்த நிகழ்வு நடந்தது

عَنْ أَنَسِ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ يَعْنِي ظِئْرَهُ فَقَالُوا إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقِعُ اللَّوْنِ قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرْئِي أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ (مسلم

 கருத்து-அனஸ் ரழி அவர்கள் கூறினார்கள்.சிறுவயதில் நபிஸல் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ஜிப்ரயீல் அலை அங்கு வந்து நபி ஸல் அவர்களைப் பிடித்து நெஞ்சைப் பிளந்து இருதயத்தை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சதைத் துண்டை வெளியே எடுத்தார்கள். பின்பு இது ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கும் ஷைத்தானின் பங்காகும் என்று கூறி அதை நீக்கி விட்டு ஒரு தங்கத் தட்டில் இருதயத்தை வைத்து, ஜம்ஜம் நீரால் கழுவி பின்பு இருதயத்தை இருந்தவாறே வைத்து விட்டார்கள். நபி ஸல் அவர்களின் கண் பார்க்கவே இச்சம்பவம் நடந்தது. வலி எதுவுமே இல்லா விட்டாலும் ஒருவித பயம் நபி ஸல் அவர்களை ஆட்கொண்டது. இச்சம்பவம் நடைபெற ஆரம்பிக்கும்போதே அன்னை ஹலீமா ரழி அவர்களின் குழந்தைகள் ஓடிச் சென்று தன் தாயாரிடம் முஹம்மதை யாரோ கொன்று விட்டார்கள் என்று சொல்லி அவர்களை அழைத்து வந்தார்கள். அழுது கொண்டே அவர்கள் வந்து பார்த்த போது நபி ஸல் அவர்கள் நல்ல படியாக ஆபரேஷன் முடிந்து பயந்த படி நின்று கொண்டிருந்தார்கள். இச்சம்பவத்திற்குப் பிறகு தான் இனி நம்மிடம் இந்தக் குழந்தை இருந்தால் ஏதேனும் இதுபோல் நடைபெறலாம் என்று பயந்து நபி ஸல் அவர்களின் நான்காம் வயதில் தாயிடமே கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.                                                             

புராக் விமானம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்து சென்றதோ அந்த நாடுகள் அடைந்த செழிப்பு...

 அமெரிக்கா மற்றும் ஜெர்மன்  மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் வற்றாத பெட்ரோல் வளம் கொண்ட நாடுகள் எவை என மண்ணியல் வரைபடமாக தயாரித்தனர். அதில் வளைகுடா நாடுகளே அதிகம் இடம்பெற்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் நபி(ஸல்) அவர்களைச் சுமந்து சென்ற புராக் வாகனம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்ததோ அந்த நாடுகள் இன்று பெட்ரோல் வளம் கொண்ட நாடுகளாக உள்ளன.                        

பைத்துல் முகத்தஸ் செல்லும் வழியில் நபி ஸல் பார்த்த காட்சிகளும் படிப்பினைகளும்

عَنْ اِبْن عَبَّاس قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " لَمَّا أُسْرِيَ بِي مَرَّتْ بِي رَائِحَة طَيِّبَة فَقُلْت مَا هَذِهِ الرَّائِحَة ؟ قَالَ مَاشِطَة بِنْت فِرْعَوْن(وفي رواية خادمة لبنات فرعون) وَأَوْلَادهَا سَقَطَ الْمُشْط مِنْ يَدهَا فَقَالَتْ بِسْمِ اللَّه فَقَالَتْ بِنْت فِرْعَوْن أَبِي قَالَتْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك قَالَتْ أَوَلَك رَبّ غَيْر أَبِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك اللَّه . قَالَ فَدَعَاهَا فَقَالَ أَلَك رَبّ غَيْرِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك اللَّه عَزَّ وَجَلَّ .قَالَ فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاس فَأُحْمِيَتْ ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى فِيهَا قَالَتْ إِنَّ لِي إِلَيْك حَاجَة قَالَ مَا هِيَ ؟ قَالَ تَجْمَع عِظَامِي وَعِظَام وَلَدِي فِي مَوْضِع قَالَ ذَاكَ لَك لِمَا لَك عَلَيْنَا مِنْ الْحَقّ قَالَ فَأَمَرَ بِهِمْ فَأُلْقُوا وَاحِدًا وَاحِدًا حَتَّى بَلَغَ رَضِيعًا فِيهِمْ فَقَالَ يَا أُمَّهْ قَعِي وَلَا تَقَاعَسِي فَإِنَّك عَلَى الْحَقّ " قَالَ وَتَكَلَّمَ أَرْبَعَة فِي الْمَهْد وَهُمْ صِغَار هَذَا وَشَاهِد يُوسُف وَصَاحِب جُرَيْج وَعِيسَى اِبْن مَرْيَم عَلَيْهِ السَّلَام (تفسير ابن كثير)

 மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கிச் செல்லும் வழியில் அருமையான வாசனையை நபி ஸல் அவர்கள் உணர்ந்து இது என்ன வாசனை என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்க, இதுதான் ஃபிர்அவ்னின் பெண் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த மாஷிதா மற்றும் அவரது சிறு குழந்தைகளின் கப்ருகளாகும். இந்தப் பெண்ணும் கணவரும் குழந்தைகளும் ஆசியா அம்மையாருக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றனர். ஒருநாள் வழக்கம்போல் ஃபிர்அவ்னின் மகள் ஒருத்திக்கு இவர் தலைவாரிக் கொண்டிருந்தார். (ஆசியா அம்மையார் மூலமாக பிறந்த பிள்ளை அல்ல. ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்னால் நெருங்கவே முடியவில்லை. அவனின் நுத்ஃபாவை அந்த அம்மையாருக்கு அல்லாஹ் ஹராமாக்கி விட்டான். விபரம் பின்பு கூறப்படும்.) அவ்வாறு தலைவாரியபோது சீப்பு கீழே விழுந்து விட, தன்னை மறந்து இதுநாள் வரை ஈமானை மறைத்து வைத்திருந்த சிந்தனை இன்றி பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அந்த சீப்பை எடுக்க, அது கேட்ட ஃபிர்அவ்னின் மகள் யார் அந்த அல்லாஹ் என் தந்தை தானே என்றாள். இல்லை. உண்மையான இறைவன். உன் தந்தைக்கும் நமக்கும் எல்லோருக்கும் அவன் தான் ரப்பு என்று உண்மையைக் கூறி விட, அவள் உடனே சென்று தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். அவன் உடனடியாக மாஷிதா அம்மையாரை அழைத்து வரச் சொன்னான். என்னையன்றி வேறு கடவுள் உனக்கு உண்டா என்று கேட்க, அந்த அம்மையாரின் பதில் உறுதியாக இருந்த து. ஆத்திரம் அடைந்த அவன் ஒரு ராட்சதச் சட்டியில் மாட்டின் தலை அளவுக்கு உள்ள ஈயத்தை உருக்கி அந்த அம்மையாரையும் அவரின் சின்னஞ்சிறு பிள்ளைகளையும் அதில் போட்டான். அதற்கு முன்பு அந்த அம்மையாரிடம் உனது கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது உடலும் என் பிள்ளைகளின் உடலும் கருகிய பின் எங்கள் அனைவரின் எலும்புக்கூடுகளை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு ஃபிர்அவ்ன் என்னுடைய விசுவாசமான வேலைக்காரி என்பதால் அவ்வாறே செய்கிறேன் என்றான். அதற்குப் பின் ஒவ்வொருவராக கொதிக்கும் அந்தச் சட்டியில் தூக்கிப் போடப்பட்டது. முதலில் மூத்த குழந்தை பிறகு அடுத்த குழந்தை என அந்த அம்மையாரின் கண்ணெதிரே போடப்பட்டது. இறுதியாக அந்தப் பெண்ணையும் பிறந்து சில நாட்களே ஆன அவருடைய ஆண் குழந்தையையும் ஒன்றாக கொதிக்கும் அந்தச் சட்டியில் போடும்போது அந்த அம்மையார் தன் பிஞ்சுக் குழந்தையை நினைத்து தயங்கியபோது அந்தக்குழந்தை வாய் திறந்து அம்மா.... நீங்கள் சத்தியத்தின் மீது இருக்கிறீர்கள். கலங்காதீர்கள். பின் வாங்காதீர்கள். என்று பேசியது. இறுதியில் அவ்விருவரும் போடப்பட்ட பின் உடல் கருகி இறந்தனர். தொட்டில் குழந்தையாக இருந்து பேசிய குழந்தைகளில் இதுவும் ஒன்று. சுமார் பத்து குழந்தைகள் இவ்வாறு பேசியதாக சில தஃப்ஸீர்களில் உள்ளது.

இன்னும் சில அறிவிப்புகளில் கீழ்காணும் விபரங்கள் உள்ளன

فقال لها : ويحك اكفري بإلهك وقري أني إلهك قالت لا أفعل فمدها بين أربعة أوتاد ثم أرسل عليها الحيات والعقارب وقال لها : اكفري بالله وإلا عذبتك بهذا العذاب شهرين فقالت لو عذبتني سبعين شهراً ما كفرت بالله وكان لها ابنتان فجاء فابنتها الكبرى فذبحها على قلبها ثم قال اكفري بالله وإلا ذبحت الصغرى على فيك وكانت رضيعاً فقالت لو ذبحت من في الأرض على فيّ ما كفرت بالله عزّ وجلّ فأتى بابنتها فلما اضطجعت على صدرها وأراد ذبحها جزعت المرأة فأطلق الله لسان ابنتها فتكلمت وهي من الأربعة الذين تكلموا في المهد صغاراً أطفالاً وقالت يا أماه لا تجزعي فإن الله قد بنى لك بيتاً في الجنة فاصبري فإنك تفضين إلى رحمة الله وكرامته فذبحت فلم تلبث الأم أن ماتت فأسكنها الله الجنة قال : وبعث في طلب زوجها حزقيل فلم يقدروا عليه فقيل لفرعون إنه قد رؤي في موضع كذا في جبل كذا فبعث رجلين في طلبه فانتهى إليه الرجلان , وهو يصلي وثلاثة صفوف من الوحش خلفه يصلون فلما رأوا ذلك انصرفوا فقال , حزقيل : اللّهم إنك تعلم أني كتمت إيماني مائة سنة ولم يظهر عليّ أحد فأيما هذين الرجلين كتم عليّ فاهده إلى دينك وأعطه من الدنيا سؤاله وأيما هذين الرجلين أظهر عليّ فعجل عقوبته في الدنيا واجعل مصيره في الآخرة إلى النار فانصرف الرجلان إلى فرعون فأما أحدهما فاعتبر وآمن وأما الآخر فأخبر فرعون بالقصة على رؤوس الملأ فقال له فرعون وهل معك غيرك قال نعم فلان فدعا به فقال أحق ما يقول هذا قال ما رأيت مما يقول شيئاً فأعطاه فرعون وأجزل وأما الآخر فقتله ثم صلبه (تفسير خازن

சில அறிவிப்புகளில் அப்பெண்ணை கட்டி வைத்து தேள்களையும் அவர் மீது சாட்டியதாகவும் அதன் பின்பு அந்த அம்மையாரிடம் இப்போதாவது என்னை இறைவன் என ஏற்கிறாயா இல்லை இன்னும் இரண்டு மாதங்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறாயா என்று கேட்க நீ இவ்வாறு எழுபது மாதங்கள் என்னை வேதனை செய்தாலும் நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப் பின்பு தான் கொதிக்கும் ஈயத்தில் போடப்பட்டது. மேலும் இவர்களைக் கொன்ற பின் அந்த அம்மையாரின் கணவரைத் தேடும்படி ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். அவர் ஒரு மலைப்பகுதியில் இருக்கிறார் என்று தெரிந்து அவரைக் கொண்டு வர இருவரை ஃபிர்அவ்ன் அனுப்பினான். அவ்விருவர் அந்த மலைப்பகுதிக்குச் சென்று அவருக்கு அருகில் நெருங்க முயற்சித்த போது திடுக்கிட்டனர், காரணம் அவர் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் அணி வகுத்து வன விலங்குகள் பாதுகாப்புக்கு நின்றன. உடனே அவ்விருவரும் திரும்பி விட்டனர். ஆனால் அவர் இவ்விருவரையும் கவனித்து விட்டார். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நான் நூறு வருடமாக என் ஈமானை மறைத்து வைத்திருந்தேன். எப்படியோ இவ்விருவரும் என்னைப் பார்த்து விட்டனர். யாஅல்லாஹ் இவ்விருவரில் யார் இந்த இரகசியத்தை ஃபிர்அவ்னிடம் சொல்லாமல் மறைக்கிறாரோ அவருக்கு ஹிதாயத்தை தா.. சுவனத்தைத் தா.. யார் இதை ஃபிர்அவ்னிடம் சென்று சொல்வாரோ அவரை இங்கேயே தண்டித்து விடு.. அவருக்கு நரகத்தைத் தா.. என துஆச் செய்தார். அவ்வாறே அவர்களில் ஒருவர் ஈமான் கொண்டு முஸ்லிமாகி விட்டார். பார்த்த செய்தியை ஃபிர்அவ்னிடம் மறைத்து விட்டார். இன்னொருவன் ஃபிர்அவ்னிடம் சென்று தான் கண்ட காட்சியை அப்படியே சொல்ல ஃபிர்அவ்ன் அதை நம்பாமல் உன்னோடு இருந்தவர் எங்கே என்று கேட்டு அவரை வரவழைத்து அவரிடம் விபரம் கேட்க, நாங்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இவர் கூறுவது போல் எந்தக் காட்சியையும் நான் பார்க்கவில்லை என்றார். அவருக்கு வெகுமதியைக் கொடுத்த ஃபிர்அவ்ன் உண்மையைச் சொன்ன இன்னொருவனைக் கொன்று சிலுவையில் அறைய உத்தரவிட்டான்- தஃப்ஸீர் காஜின்               

படிப்பினை- அல்லாஹ் முஃமினைக் காப்பாற்றவும் செய்வான். ஷஹீதாக்கி அந்தஸ்தை உயர்த்தவும் செய்வான்

மூதாதையர்களின் நல்வாழ்த்தைப் பெற்ற பிறகே விண்ணுலகப் பயணம் நடந்தேறியது

 முக்கியமான பயணம்  புறப்படும்போது நல்லோர்களின் ஆசியைப் பெறவேண்டும் என்பதை பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களையும் சந்தித்த நிகழ்வு உணர்த்துகிறது                                            

நாம் பார்க்கும் கண்ணாக அல்லாஹ் ஆகி விடும்போது எவ்வளவு தூரத்தில் உள்ளதையும் இங்கிருந்த படியே பார்க்க முடியும்.

காஃபிர்கள் மிஃராஜை பொய்ப்படுத்தும் விதமாக பைத்துல்முகத்தஸை நேரில் பார்த்தபடி வர்ணிக்கச் சொன்னார்கள் அப்போது நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ்பைத்துல் முகத்தஸைக் காட்டிக் கொடுத்தான். அதைப் பார்த்த படியே வர்ணித்தார்கள். 

عن جَابِر رَضِيَ اللَّه عَنْهُ يُحَدِّث أَنَّهُ سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " لَمَّا كَذَّبَتْنِي قُرَيْش حِين أُسْرِيَ بِي إِلَى بَيْت الْمَقْدِس قُمْت فِي الْحِجْر فَجَلَّى اللَّه لِي بَيْت الْمَقْدِس فَطَفِقْت أُخْبِرهُمْ عَنْ آيَاته وَأَنَا أَنْظُر إِلَيْهِ (بخاري) بَاب حَدِيثِ الْإِسْرَاءِ –كتاب مناقب الأنصار 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ (بخاري) باب التَّوَاضُعِ - كتاب الرقاق

அல்லாஹ் பேசுகிறான். என்னுடைய அடியான் ஃபர்ளுகளைக் கொண்டு மட்டும் என்னை நெருங்கி விட முடியாது. உபரியான வணக்கங்கள் மூலமாக அடியான் என்னை நெருங்கும்போது நான் அவனை நேசிக்க ஆரம்பித்து விடுகிறேன். எப்போது என் அடியானை நான் நேசிக்க ஆரம்பித்து விடுவேனோ அவன் கேட்கும் காதாக நான் ஆகி விடுவேன். அவன் பார்க்கும் கண்ணாக நான் ஆகி விடுவேன். அவன் பிடிக்கும் கரங்களாக, நடக்கும் கால்களாக நான்ஆகி விடுவேன்.விளக்கம்-அடியானின் காரியங்கள் அனைத்தையும் நலவுகளாக மாற்றி விடுவேன்.

அபூபக்கர் ரழி அவர்களுக்கு சித்தீக் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்த மிஃராஜ் பயணம்

قَالَ أَبُو سَلَمَة فَتَجَهَّزَ نَاس مِنْ قُرَيْش إِلَى أَبِي بَكْر فَقَالُوا هَلْ لَك فِي صَاحِبك يَزْعُم أَنَّهُ جَاءَ إِلَى بَيْت الْمَقْدِس ثُمَّ رَجَعَ إِلَى مَكَّة فِي لَيْلَة وَاحِدَة فَقَالَ أَبُو بَكْر أَوَقَالَ ذَلِكَ ؟ قَالُوا نَعَمْ قَالَ فَأَنَا أَشْهَد لَئِنْ كَانَ قَالَ ذَلِكَ لَقَدْ صَدَقَ قَالُوا فَتُصَدِّقهُ فِي أَنْ يَأْتِي الشَّام فِي لَيْلَة وَاحِدَة ثُمَّ يَرْجِع إِلَى مَكَّة قَبْل أَنْ يُصْبِح؟ قَالَ نَعَمْ أَنَا أُصَدِّقهُ بِأَبْعَد مِنْ ذَلِكَ أُصَدِّقهُ بِخَبَرِ السَّمَاء قَالَ أَبُو سَلَمَة فَبِهَا سُمِّيَ أَبُو بَكْر الصِّدِّيق (دلائل النبوة)

 

மிராஜ் இரவு பயான்

عَنْ أَنَسِ   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُتِيتُ بِالْبُرَاقِ وَهُوَ دَابَّةٌ أَبْيَضُ طَوِيلٌ فَوْقَ الْحِمَارِ وَدُونَ الْبَغْلِ يَضَعُ حَافِرَهُ عِنْدَ مُنْتَهَى طَرْفِهِ قَالَ فَرَكِبْتُهُ حَتَّى أَتَيْتُ بَيْتَ الْمَقْدِسِ قَالَ فَرَبَطْتُهُ بِالْحَلْقَةِ الَّتِي يَرْبِطُ بِهِ الْأَنْبِيَاءُ قَالَ ثُمَّ دَخَلْتُ الْمَسْجِدَ فَصَلَّيْتُ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجْتُ فَجَاءَنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام بِإِنَاءٍ مِنْ خَمْرٍ وَإِنَاءٍ مِنْ لَبَنٍ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقَالَ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَرْتَ الْفِطْرَةَ (وفي رواية للبخاري أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ)..ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِآدَمَ فَرَحَّبَ بِي وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِابْنَيْ الْخَالَةِ عِيسَى ابْنِ مَرْيَمَ وَيَحْيَى بْنِ زَكَرِيَّاءَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمَا فَرَحَّبَا وَدَعَوَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِيُوسُفَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا هُوَ قَدْ أُعْطِيَ شَطْرَ الْحُسْنِ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الرَّابِعَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قَالَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِدْرِيسَ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ{ وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا }ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الْخَامِسَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِهَارُونَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِمُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِبْرَاهِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْبَيْتِ الْمَعْمُورِ وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ إِلَيْهِ ثُمَّ ذَهَبَ بِي إِلَى السِّدْرَةِ الْمُنْتَهَى وَإِذَا وَرَقُهَا كَآذَانِ الْفِيَلَةِ وَإِذَا ثَمَرُهَا كَالْقِلَالِ قَالَ فَلَمَّا غَشِيَهَا مِنْ أَمْرِ اللَّهِ مَا غَشِيَ تَغَيَّرَتْ فَمَا أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ يَسْتَطِيعُ أَنْ يَنْعَتَهَا مِنْ حُسْنِهَا فَأَوْحَى اللَّهُ إِلَيَّ مَا أَوْحَى فَفَرَضَ عَلَيَّ خَمْسِينَ صَلَاةً فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَنَزَلْتُ إِلَى مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ خَمْسِينَ صَلَاةً قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَإِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ فَإِنِّي قَدْ بَلَوْتُ بَنِي إِسْرَائِيلَ وَخَبَرْتُهُمْ قَالَ فَرَجَعْتُ إِلَى رَبِّي فَقُلْتُ يَا رَبِّ خَفِّفْ عَلَى أُمَّتِي فَحَطَّ عَنِّي خَمْسًا فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقُلْتُ حَطَّ عَنِّي خَمْسًا قَالَ إِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ قَالَ فَلَمْ أَزَلْ أَرْجِعُ بَيْنَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى وَبَيْنَ مُوسَى عَلَيْهِ السَّلَام حَتَّى قَالَ يَا مُحَمَّدُ إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ لِكُلِّ صَلَاةٍ عَشْرٌ فَذَلِكَ خَمْسُونَ صَلَاةً وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ شَيْئًا فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ سَيِّئَةً وَاحِدَةً قَالَ فَنَزَلْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ قَدْ رَجَعْتُ إِلَى رَبِّي حَتَّى اسْتَحْيَيْتُ مِنْهُ (مسلم) بَاب الْإِسْرَاءِ- كِتَاب الْإِيمَانِ

கருத்து- முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் திற என்றார்கள். அவ்வானவர், யார் அவர்? என்று வினவினார். அதற்கு நான் தான் ஜிப்ரீல் என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், உம்முடன் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மது இருக்கிறார்கள், என்ற கூறினார்கள். அதற்கு வானவர் அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா? என்று கேட்டார், ஜிப்ரீல் ஆம் என்றார்கள். (இந்தக் கேள்விகளுக்குப் பின்னர்) வானவர், முதல் வானத்தைத் திறந்து கொடுத்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறிச் சென்றோம். அப்போது அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரின் வலது பக்கம் சில மனிதர்களும் இடது பக்கம் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தமது வலது பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தமது இடதுப் பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். இந்நிலையிலுள்ள அம்மனிதர் நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் ஆதம். அவருடைய வலது பக்கமும் இடது பக்கமும் உள்ளவர்கள் அவருடைய சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலது பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள், இடது பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள்ஆவர். அவர் தமது வலது பக்கம் பார்த்துச் சிரிக்கிறார், தமது இடது பக்கம் பார்த்து அழுகிறார் என்று கூறினார்கள்.                

பின்னர் ஜிப்ரீல்(அலை)என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தின் காவலரிடம் திற எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்வியைப் போலவே இவரும் கேட்டு விட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) கூறுகிறார்கள்: வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம் (அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். ஆனால் முதல் வானத்தில் ஆதம் (அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை- ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு இத்ரீஸ் (அலை) பக்கமாகச் சென்ற போது நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! என இத்ரீஸ் (அலை) கூறினார்கள். அப்போது இம்மனிதர் யார்? என நான் கேட்டேன். இவர் இத்ரீஸ் (அலை) என ஜிப்ரீல் (அலை) பதில் கூறினார்கள். பின்னர் மூஸா (அலை) பக்கமாகச் சென்றபோது நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் மூஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின்னர் ஈஸா (அலை) பக்கமாகச் சென்றபோது நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் ஈஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின் இப்ராஹீம் (அலை) பக்கமாக நான் சென்றேன். அப்போது நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக! என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல் (அலை) இடம் கேட்டேன். இவர் இப்ராஹீம் (அலை) என்று கூறினார்கள்.

 ஒரு அறிவிப்பில் பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச்சென்ற போது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. அல்லாஹ் உனது உம்மத்தின் மீது ஜம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் (அதை ஏற்றுத்) திரும்பி நான் வந்து கொண்டிருந்தபோது, மூஸா (அலை) பக்கமாகச் சென்றேன். அப்போது உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்? என்று கேட்டார்கள். ஜம்பது நேரத் தொழுகையை கடமையாக்கினான் என்றேன். நீங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் அதற்கு சக்தி பெற மாட்டார்கள். என மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். நான் திரும்பச் சென்றேன். அப்போது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதைப் பெற்றுக் கொண்டு) நான் மூஸா (அலை) இடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். நீங்கள் உங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் அதற்குச் சக்தி பெற மாட்டார்கள் என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். (கொஞ்சம் குறைத்தான் என்றேன்) நீங்கள்உங்கள் இறைவனிடம் திரும்பச்செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் இதற்கு சக்திபெற மாட்டார்கள். என்றார்கள். நான் திரும்பச் சென்றேன் அப்போது ஜந்து நேரத் தொழுகையை கடமையாக்குகிறேன். அது ஜம்பதிற்குச் சமம். எனது சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். அப்போது உங்கள் இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள் என்றார்கள். இனிமேல் எனது இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) நான் வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.

பின்னர் ஜிப்ரீல் (அலை) என்னை ஸித்ரதுல் முன்தஹா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழ்ந்திருந்தன.அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் நான் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகை கடமையாக்கப்பட்ட நினைவு நாளில் தொழுகையை தவறாமல் கடைபிடிப்பதாக உறுதி கொள்வோம்

(وفي حدبث ليلة الاسراء) فَلَمْ أَزَلْ أَرْجِع بَيْن رَبِّي وَبَيْن مُوسَى وَيَحُطّ عَنِّي خَمْسًا خَمْسًا حَتَّى قَالَ : يَا مُحَمَّد هُنَّ خَمْس صَلَوَات فِي كُلّ يَوْم وَلَيْلَة بِكُلِّ صَلَاة عَشْر فَتِلْكَ خَمْسُونَ صَلَاة وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلهَا كُتِبَتْ لَهُ حَسَنَة فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ عَشْرًا (تفسير ابن كثير)عَنِ ابْنِ عُمَرَ رض قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا إِيمَانَ لِمَنْ لا أَمَانَةَ لَهُ  وَلا صَلاةَ لِمَنْ لا طُهُورَ لَهُ وَلا دِينَ لِمَنْ لا صَلاةَ لَهُ  إِنَّمَا مَوْضِعُ الصَّلاةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ (طبراني)عنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ حَيْثُ يُنَادَى بِهِنّ (رواه البيهقى فى شعب الإيمان) (كنز العمال) عن أبي سعيد رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إن الله تعالى لم يفترض شيئا أفضل من التوحيد والصلاة ولو كان شيء أفضل منهما لافترضه الله على ملائكته منهم راكع ومنهم ساجد(كنز العمال)

عن أنس رضي الله عنه عن النَبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال إنّ لله تعالى مَلَكاً يُنادِي عندَ كلِّ صلاةٍ يا بَني آدَمَ قُومُوا إلى نِيرَانِكُمْ التي أوْقَدْتُمُوها على أنْفُسِكُمْ فَأَطْفِئُوها بالصَّلاةِ (رواه الطبرانى) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: إِنِّي لَأَهُمُّ بِأَهْلِ الْأَرْضِ عَذَابًا فَإِذَا نَظَرْتُ إِلَى عُمَّارِ بُيُوتِي والْمُتَحَابِّينَ فِيَّ والْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ صَرَفْتُ عَنْهُمْ (البيهقى فى شعب الإيمان)

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறுவது அவருடைய ஒட்டு மொத்த சொத்து சுகங்களும் பறிபோனதற்குச் சமம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ (بخاري)

நபி ஸல் அவர்கள் மிஃராஜ் பயணத்தில் பாலை தேர்ந்தெடுத்த காரணம்

ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ (مسلم)  ومعناه والله أعلم اخترتَ علامة الاسلام والاستقامة وجعل اللبنَ علامة لكونه سهلا طيبا طاهرا سائغا للشاربين سليم العاقبة وأما الخمر فانها أم الخبائث وجالبة لأنواع من الشر فى الحال والمآل والله أعلم- قال الله تعالي وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ (66النحل)

பால் என்பது தூய்மையான பானம். என்பதால் தான் இஸ்லாம் மார்க்கத்தை பாலுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. மாட்டிலிருந்து கறக்கப்படும்போது சுத்தமான பாலாக இருக்கிறது. பிறகு தான் அது பல வடிவங்களில் தயிர், மோர், வெண்ணெய், நெய், டீ, காஃபி, கேக், பால்கோவா என பல வடிவங்களில் மாறுகிறது அதேபோல் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கிறது அதன் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றுகிறார்கள் என்பதும் பாலின் பரிசுத்தத் தன்மையை மனிதர்கள் பல வடிவங்களில் மாற்றுகிறார்கள் என்பது போன்றாகும்.  மிஃராஜ் இரவில் பாலை தேர்ந்தெடுத்ததை பரிசுத்த இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததற்குச் சமமாக கூறப்பட்டுள்ளது.

பாலை கனவில் காண்பது கூட நல்ல விஷயங்களுக்கான அறிகுறியாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது

عن ابْن عُمَرَ قَالَ قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَطْرَافِي وفي رواية مِنْ أَظْفَارِي فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ مَنْ حَوْلَهُ فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ (بخاري) باب اللَّبَنِ-كتاب التعبير

மிஃராஜ் இரவில் இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மூன்று அற்புதமான பாக்கியங்கள்

فَأُعْطِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ وَغُفِرَ لِمَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ مِنْ أُمَّتِهِ شَيْئًا الْمُقْحِمَاتُ (مسلم) بَاب فِي ذِكْرِ سِدْرَةِ الْمُنْتَهَى-كِتَاب الْإِيمَانِ

சித்ரதுல் முன்தஹா என்று பெயர் வரக் காரணம்

سدرة المنتهي وهي شجرة في أقصى الجنة ينتهي إليها علم الأولين والآخرين ولا يتعداها أو أعمال العباد أو نفوس السائحين في الملأ الأعلى فيجتمعون فيه اجتماع الناس في أنديتهم ولا يطلع على ما وراءها غير الله (مرقاة)عَنْ عَبْدِ اللَّهِ قَالَ لَمَّا أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتُهِيَ بِهِ إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى وَهِيَ فِي السَّمَاءِ السَّادِسَةِ إِلَيْهَا يَنْتَهِي مَا يُعْرَجُ بِهِ مِنْ الْأَرْضِ فَيُقْبَضُ مِنْهَا وَإِلَيْهَا يَنْتَهِي مَا يُهْبَطُ بِهِ مِنْ فَوْقِهَا فَيُقْبَضُ مِنْهَا (مسلم)

சித்ரத் என்றால் இலந்தை மரம். முன்தஹா என்றால் முடிவு, எல்லை என்பதாகும். அதாவது இந்த இடத்தை தாண்டி எத்தகைய படைப்புகளின் அறிவும் செல்லாது, மனிதர்களின் அமல்களை அல்லாஹ்விடம் மலக்குகள் கொண்டு சென்றாலும் அதற்குரிய எல்லை இது தான். இதற்கு அப்பால் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிவான்

மற்ற மரங்களை விட இலந்தை மரத்துக்கு இவ்வளவு சிறப்பு வரக் காரணம்

قال ابن دحية : اختيرت السدرة دون غيرها لأن فيها ثلاثة أوصاف : ظل ممدود ، وطعام لذيذ ، ورائحة زكية فكانت بمنزلة الإيمان الذي يجمع القول والعمل والنية ، والظل بمنزلة العمل ، والطعم بمنزلة النية ، والرائحة بمنزلة القول .(فتح الباري)

இலந்தை மர இலையைக் கொண்டு தன் மகளின் ஜனாஸாவை நபி ஸல் அவர்கள் குளிப்பாட்டச் சொன்னார்கள்

عَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ اغْسِلْنَهَا بِالسِّدْرِ وِتْرًا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَضَفَرْنَا شَعَرَهَا ثَلَاثَةَ قُرُونٍ وَأَلْقَيْنَاهَا خَلْفَهَا .(بخاري) - باب يُلْقَى شَعَرُ الْمَرْأَةِ خَلْفَهَا- كتاب الجنائز

 

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...