24-02-2023 ஷஃபான்- 3 |
|
بسم
الله الرحمن الرحيم ஹஜ்ஜுக்கு விண்ணப்பம் செய்யுங்கள் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
ஹஜ்ஜுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்
வரும் ஆண்டில் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பப்படிவம்
தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 10 ம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பைத்
தொடர்ந்து இப்போதிருந்தே அதற்காக மக்களைத் தூண்ட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த
தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.
ஹஜ் கடமையான பிறகும்
அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துபவர்களைப் பற்றி...
عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "تَعَجَّلُوا إلى
الحَجِّ -يعني الفريضة-فإنَّ أحَدَكُمْ لا يَدْرِي مَا يَعْرضُ لَهُ رواه احمد
ஹஜ்ஜை விரைந்து
நிறைவேற்றுங்கள். ஏனெனில் யாருக்கு எப்போது
என்ன நிகழும் என்று தெரியாது.
عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ
وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا
وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ{ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ
الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا }رواه الترمذي
விளக்கம்-
எவர் ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பும் வரை தனக்கும் தன் குடும்பத்திற்கும்
செலவுக்கான பணத்தை சொந்தமாக்கிக் கொண்டதுடன் வாகனச் செலவுகளையும் சொந்தமாக்கிக்
கொண்டாரோ அதற்குப் பின்பும் அவர் ஹஜ்ஜுக்குச் செல்லா விட்டால் அவர் யூதராகவோ
கிறிஸ்தவராகவோ எப்படியோ இறந்து போகட்டும்
عن أبي أمامة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : من لم
يمنعه من الحج حاجة ظاهرة ، أو سلطان جائر ، أو مرض حابس ، ثم مات ولم يحج ، فليمت
إن شاء يهوديا ، وإن شاء نصرانيا (أخبار مكة للفاكهي)
விளக்கம்-
ஒருவர் ஹஜ்ஜுக்குச் செல்வதற்குத் வெளிப்படையான நிர்பந்தமோ அல்லது அரசாங்கத்தின்
தடையோ அல்லது வியாதியோ இல்லாத நிலையில் அவர்
ஹஜ்ஜுக்குச் செல்லாமல் இறந்து விட்டால் அவர் யூதராகவோ கிறிஸ்தவராகவோ எப்படியோ
இறந்து போகட்டும்.
عن الحسن البصري قال: قال عمر بن الخطاب: لقد هممت أن أبعث رجالا إلى هذه
الأمصار فينظروا كل من كان له جَدةٌ فلم
يحج، فيضربوا عليهم الجِزْية، ما هم بمسلمين. ما هم بمسلمين . (تفسير
القرطبي)
உமர்
ரழி கூறினார்கள். நான் சில நபர்களை சில ஊர்களுக்கு அனுப்பி யாரெல்லாம் வசதி
இருந்தும் ஹஜ் செய்யாமல் இருக்கிறார்களோ அவர்கள் விஷயத்தில் திம்மிகள் மீது
விதிக்கப்படும் ஜிஸ்யா வரியை விதிக்க நாடுகிறேன். ஏனெனில் வசதி இருந்தும் ஹஜ்
செய்யாதவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல.
ஹஜ் செய்ய முடியாமல்
போகும் காலம் வருவதற்கு முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள்
عن الحارث بن سويد ، قال : سمعت عليا ، رضي الله عنه ، يقول : حجوا قبل أن لا تحجوا، فكأني أنظر إلى حبشي
أصمع أفدع بيده مِعْوَل يهدمها حجرا حجرا
، فقلت له شيء تقوله برأيك أو سمعته من رسول الله صلى الله عليه وسلم قال : لا والذي فلق الحبة ، وبرأ النسمة ، ولكني سمعته من نبيكم صلى الله عليه
وسلم رواه الحاكم في المستدرك (معولகோடாலி أفدعமெலிந்த கால்கள் கொண்ட)
கருத்து- ஹஜ் செய்ய முடியாமல் போகும் காலம்
வருவதற்கு முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள். அதாவது ஹஜ் செய்வதற்கு கஃபாவே இல்லாத
காலம் வரும் முன்பு ஹஜ் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் கடைசி காலத்தில் மெலிந்த
கால்கள் கொண்ட நீக்ரோ மனிதர்கள் கையில் கடப்பாரையுடன் கஃபாவின் ஒவ்வொரு கற்களையும்
பெயர்த்து எடுப்பதை என் கண்ணால் பார்ப்பது போன்று உள்ளது
عن ابن عمر ،
قال : قال رسول الله صلى الله عليه وسلم : استمتعوا من هذا البيت ، فإنه قد هُدِم مرتين ،
ويُرفع في الثالثة رواه ابن حبان
قال في الكشاف أول من بناه إبراهيم ثم بناه قوم من العرب
من جرهم ثم هدم فبنته العمالقة ثم هدم فبنته قريش (فيض القدير
கஃபா இருக்கும்போதே
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.ஏனெனில் கஃபா இரண்டு தடவை இடிக்கப்பட்டு மீண்டும்
புதுப்பித்துக் கட்டப்பட்டது. கடைசியாக இடிக்கப்படும்போது அல்லாஹ் கஃபாவை வானத்திற்கு
உயர்த்தி விடுவான். விளக்கம்- கடைசியாக நீக்ரோ மனிதர்களால் கஃபா இடிக்கப்படும்போது
அல்லாஹ் தஆலா கஃபாவை வானத்திற்கு உயர்த்தி விடுவான். அதன் பின்பு ஹஜ் செய்ய கஃபாவே
இருக்காது.
இளமையும் ஆரோக்கியமும்
இருக்கும்போதே செய்ய வேண்டிய கடமைகளில் ஹஜ் முக்கியமானது
عن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى
الله عليه و سلم لرجل و هو يعظه اغتنم
خَمْساً قَبْلَ خَمْسٍ : شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتِكَ قَبْلَ سَقَمِكَ ،
وَفَرَاغَكَ قَبْلَ شُغُلِكَ ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ ، وَغِنَاكَ قَبْلَ
فَقْرِكَ (حاكم
வயதான பின்பே ஹஜ்ஜுக்குப் போக
வேண்டும் என்ற மூட நம்பிக்கையும் சிலரிடம் உண்டு.
உலகம் அழியாமல்
பாதுகாக்கப் படுவதற்கு வருடம் தோறும் நடைபெறும் ஹஜ்ஜும் ஒரு காரணம்.
قَالَ اِبْن عَبَّاس : لَوْ لَمْ يَحُجّ النَّاس هَذَا
الْبَيْت لَأَطْبَقَ اللَّه السَّمَاء عَلَى الْأَرْض (تفسير ابن كثير
ஏதேனும் ஒரு வருடத்தில் மக்கள் யாரும் ஹஜ்ஜுக்கு வராமல் ஹஜ் என்ற அமல் நடைபெறாமல்
போனால் அல்லாஹ் உடனே உலகத்தை அழித்து விடுவான். படிப்பினை- கண்ணியப்படுத்த
வேண்டியவைகளை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கும்வரை இந்த உலகம்
நீடித்திருக்கும்.
இன்னும் பல்வேறு
காரணங்களை வைத்து அல்லாஹ் இந்த பூமியை விட்டு வைத்துள்ளான்.
عن ابْنَ عُبَيْدٍ ، قَالَ : ذُكِرَ أَهْلُ الشَّامِ
عِنْدَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، وَهُوَ بِالْعِرَاقِ ، فَقَالُوا :
الْعَنْهُمْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ . قَالَ : لاَ ، إِنِّي سَمِعْتُ رَسُولَ
اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : الأَبْدَالُ يَكُونُونَ
بِالشَّامِ ، وَهُمْ أَرْبَعُونَ رَجُلاً ، كُلَّمَا مَاتَ رَجُلٌ أَبْدَلَ
اللَّهُ مَكَانَهُ رَجُلاً ، يُسْقَى بِهِمُ الْغَيْثُ ، وَيُنْتَصَرُ بِهِمْ
عَلَى الأَعْدَاءِ ، وَيُصْرَفُ عَنْ أَهْلِ الشَّامِ بِهِمِ الْعَذَابُ. (مسند
أحمد
ஷாம் தேசத்தில் அப்தால்கள் எனப்படும் இறைநேசர்கள் இருப்பார்கள். அவர்கள்
நாற்பது பேர். அவர்களில் ஒருவர் இறந்து அந்த இடம் காலியாகும்போது அல்லாஹ் அடுத்த
அந்தஸ்தில் உள்ள ஒருவரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவான். அவர்களின் பரக்கத்தால்
பூமியில் மழை பெய்யும். அவர்களின் பரக்கத்தால் எதிரிகள் வெற்றி கொள்ளப்படுவார்கள்.
அவர்களின் பரக்கத்தால் ஷாம் தேச மக்களை விட்டும் வேதனைகள் நீக்கப்படும்.
மேற்படி ஹதீஸுக்கு
மிர்காத் நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம்
عن
عبد الله بن مسعود مرفوعا إن الله تعالى خلق ثلثمائة نفس قلوبهم على قلب آدم وله أربعون
قلوبهم على قلب موسى وله سبعة قلوبهم على قلب إبراهيم وله خمسة قلوبهم على قلب
جبريل وله ثلاثة قلوبهم على قلب ميكائيل وله واحد قلبه على قلب إسرافيل كلما مات
الواحد أبدل الله مكانه من الثلاثة وكلما مات واحد من الثلاثة أبدل الله مكانه من
الخمسة وكلما مات من الخمسة واحد أبدل الله مكانه من السبعة وكلما مات واحد من
السبعة أبدل الله مكانه من الأربعين وكلما مات واحد من الأربعين أبدل الله مكانه
من الثلثمائة وكلما مات واحد من الثلمائة أبدل الله مكانه من العامة بهم يدفع
البلاء عن هذه الأمة (مرقاة
கருத்து கீழிருந்து
மேலாக - அல்லாஹ்வுக்கு இந்த பூமியில் குறிப்பிட எண்ணிக்கையில் இறைநேசர்கள்
எப்போதும் இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களிள் பல படித்தரங்கள் உள்ளன.
அனைவரையும் விட மேலான படித்தரத்தில் ஒருவர் இருப்பார். அவருக்கு அடுத்த அந்தஸ்தில்
மூன்று பேர் இருப்பார்கள். அடுத்த அந்தஸ்தில் ஐந்து பேர் இருப்பார்கள். அடுத்த
அந்தஸ்தில் ஏழு பேர் இருப்பார்கள். அடுத்த அந்தஸ்தில் நாற்பது பேர் இருப்பார்கள்.
அடுத்த அந்தஸ்தில் 300 பேர் இருப்பார்கள். இவர்களில் மேலான அந்தஸ்தில் உள்ளவர்
வஃபாத்தாகி விடும்போது அடுத்த அந்தஸ்தில் உள்ளவரைக் கொண்டு அந்த இடம்
நிரப்பப்படும். இப்படியாக ஒவ்வொரு அந்தஸ்திலும் உள்ளவர்கள் குறையும் போது அடுத்த
அந்தஸ்தில் உள்ளவரைக் கொண்டு அந்த இடம் நிரப்பப்படும். கடைசியாக 300 பேரில் ஒருவர்
குறையும்போது சாதாரண மக்களில் உள்ள நல்ல மனிதரைக் கொண்டு அந்த இடம் நிரப்பப்படும்.
ஆக இந்த நல்லவர்களால் இந்த உலகம் அழிவை விட்டும் பாதுகாக்கப்படும்.
ஹஜ் என்பது நீண்ட
காலங்களுக்கு முன்பே இருந்த பூர்வீகமான வணக்கம்.
عن
أَنَس بْن مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« كَانَ
مَوْضِعُ الْبَيْتِ فِى زَمَنِ آدَمَ شِبْرًا أَوْ أَكْثَرَ عَلَمًا فَكَانَتِ
الْمَلاَئِكَةُ تَحُجُّهُ قَبْلَ آدَمَ ثُمَّ حَجَّ آدَمُ فَاسْتَقْبَلَتْهُ
الْمَلاَئِكَةُ فَقَالُوا : يَا آدَمُ مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ : حَجَجْتُ
الْبَيْتَ فَقَالُوا : قَدْ حَجَّتْهُ الْمَلاَئِكَةُ قَبْلَكَ. (سنن الكبرى
للبيهقي
கருத்து- நபி ஆதம்
அலைஹிஸ்ஸலாம் காலத்தில் கஃபா சிறிய மண் மேடாக இருந்த போது அவர்கள் ஹஜ்
செய்தார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஹஜ்
செய்வதற்கு முன்பே மலக்குகள் ஹஜ் செய்தார்கள்.
عَنْ
مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِىِّ أَوْ غَيْرِهِ قَالَ : حَجَّ آدَمُ عَلَيْهِ
السَّلاَمُ فَلَقِيَتْهُ الْمَلاَئِكَةُ فَقَالُوا : بُرَّ نُسُكُكَ آدَمُ لَقَدْ
حَجَجْنَا قَبْلَكَ بِأَلْفَىْ عَامٍ.
கருத்து- நபி ஆதம் அலை
அவர்களிடம் மலக்குகள் கூறும்போது நாங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ஹஜ்
செய்துள்ளோம் என்றார்கள்.
கஃபா ஆரம்ப காலத்தில்
இருந்தே இருந்தது என்பதற்கான தெளிவான ஆதாரம்.
عَنْ
أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي
الْأَرْضِ أَوَّلُ قَالَ الْمَسْجِدُ الْحَرَامُ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ
الْمَسْجِدُ الْأَقْصَى قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ سَنَةً (مسلم) وجه الحديث أن هذين المسجدين بنيا قديما ثم
خربا ثم بنيا (مرقاة
முதன்முதலில் கட்டப்பட்டது எந்த மஸ்ஜித் என்று கேட்கப்பட்டபோது மஸ்ஜிதுல்
ஹராம் என்று நபி ஸல் கூறினார்கள். இரண்டாவதாக கட்டப்பட்டது எந்த மஸ்ஜித் என்று
கேட்கப்பட்டபோது மஸ்ஜிதுல் அக்ஸா என்று நபி ஸல் கூறினார்கள். இரண்டுக்கும் எத்தனை
வருட இடைவெளி என்று கேட்கப்பட்டபோது 40 வருடங்கள் என்று நபி ஸல் கூறினார்கள்.
விளக்கம்- மஸ்ஜிதுல்
ஹராம் இப்றாஹீம் அலை அவர்களால் கட்டப்பட்டது. பைத்துல் முகத்தஸ் நபி சுலைமான் அலை
அவர்களால் கட்டப்பட்டது. இந்த இரண்டு நபிமார்களுக்கு மத்தியில் நீண்ட கால இடைவெளி
உள்ளது. அப்படியானால் நாற்பது வருட இடைவெளி என்பது இந்த இரண்டு மஸ்ஜித்களும்
மலக்குகளால் முதன் முதலில் கட்டப்பட்ட போது நாற்பது வருட இடைவெளி என்று
பொருளாகும்.
ஆதம் அலை எத்தனை ஹஜ்
செய்தார்கள் என்பதில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. எனினும் ஒவ்வொரு தடவையும்
இந்தியாவில் இருந்து நடந்தே வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
روي أن آدم عليه السلام حج أربعين سنة من الهند ماشياً (تفسير الالوسي
- روح المعاني )
عن أبي هريرة قال : حج آدم عليه السلام فقضى المناسك ،
فلما حج قال : يا رب إن لكل عامل أجراً قال الله تعالى : أما أنت يا آدم فقد غفرت
لك ، وأما ذريتك فمن جاء منهم هذا البيت فباء بذنبه غفرت له (الدر المنثور
நபி ஆதம் அலை அவர்கள்
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க ஹஜ்ஜை நிறைவேற்றிய போது அல்லாஹ்விடம் ரப்பே ஒவ்வொரு
நற்செயலுக்கும் கூலி உண்டு. இதற்கு என்ன நற்கூலி என்று கேட்க, அதற்கு அல்லாஹ் நான்
உம்மை முற்றிலுமாக மன்னித்து விட்டேன். அது மட்டுமல்ல உம் சந்த தியில் யாரெல்லாம்
இங்கு வருவார்களோ அவர்களையும் மன்னித்து விட்டேன் என்று கூறினான். மற்றொரு
அறிவிப்பில் நான் உம்மை மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறியதும் சந்த
திகளுக்கும் அந்த மன்னிப்பை ஆதம் அலைஹிஸ்ஸலாம் வேண்டினார்கள் என்று
கூறப்பட்டுள்ளது.
நபி ஆதம் அலை
ஹஜ்ஜுக்கு வந்த நேரத்தில் தான் ஹாபீலை காபீல் கொலை செய்தார்.
عَنْ اِبْن مَسْعُود رضأَنَّهُ
كَانَ لَا يُولَد لِآدَم مَوْلُود إِلَّا وَمَعَهُ جَارِيَة فَكَانَ يُزَوِّج
غُلَام هَذَا الْبَطْن جَارِيَة هَذَا الْبَطْن الْآخَر وَيُزَوِّج جَارِيَة هَذَا
الْبَطْن غُلَام هَذَا الْبَطْن الْآخَر حَتَّى وُلِدَ لَهُ اِبْنَانِ يُقَال
لَهُمَا هَابِيل وَقَابِيل وَكَانَ قَابِيل صَاحِب زَرْع وَكَانَ هَابِيل صَاحِب
ضَرْع وَكَانَ قَابِيل أَكْبَرَهُمَا وَكَانَ لَهُ أُخْت أَحْسَنُ مِنْ أُخْت
هَابِيل وَإِنَّ هَابِيل طَلَبَ أَنْ يَنْكِح أُخْت قَابِيل فَأَبَى عَلَيْهِ
قَالَ هِيَ أُخْتِي وُلِدَتْ مَعِي وَهِيَ أَحْسَنُ مِنْ أُخْتك وَأَنَا أَحَقّ
أَنْ أَتَزَوَّج بِهَا فَأَمَرَهُ أَبُوهُ أَنْ يُزَوِّجهَا هَابِيل فَأَبَى
وَأَنَّهُمَا قَرَّبَا قُرْبَانًا إِلَى اللَّه عَزَّ وَجَلَّ أَيّهمَا أَحَقّ بِالْجَارِيَةِ
وَكَانَ آدَم عَلَيْهِ السَّلَام قَدْ غَابَ عَنْهُمَا أَتَى مَكَّة يَنْظُر
إِلَيْهَا قَالَ اللَّه عَزَّ وَجَلَّ هَلْ تَعْلَم أَنَّ لِي بَيْتًا فِي
الْأَرْض قَالَ اللَّهُمَّ لَا قَالَ إِنَّ لِي بَيْتًا فِي مَكَّة فَآتِهِ
فَقَالَ آدَمُ لِلسَّمَاءِ اِحْفَظِي وَلَدِي بِالْأَمَانَةِ فَأَبَتْ وَقَالَ
لِلْأَرْضِ فَأَبَتْ وَقَالَ لِلْجِبَالِ فَأَبَتْ فَقَالَ لِقَابِيل فَقَالَ
نَعَمْ تَذْهَب وَتَرْجِع وَتَجِد أَهْلك كَمَا يَسُرّك فَلَمَّا اِنْطَلَقَ آدَم
قَرَّبَا قُرْبَانًا وَكَانَ قَابِيل يَفْخَر عَلَيْهِ فَقَالَ أَنَا أَحَقُّ
بِهَا مِنْك هِيَ أُخْتِي وَأَنَا أَكْبَرُ مِنْك وَأَنَا وَصِيّ وَالِدِي
فَلَمَّا قَرَّبَا قَرَّبَ هَابِيلُ جَذَعَةً سَمِينَةً وَقَرَّبَ قَابِيلُ
حُزْمَةَ سُنْبُل فَوَجَدَ فِيهَا سُنْبُلَة عَظِيمَة فَفَرَكَهَا وَأَكَلَهَا
فَنَزَلَتْ النَّار فَأَكَلَتْ قُرْبَان هَابِيل وَتَرَكَتْ قُرْبَان قَابِيل
فَغَضِبَ وَقَالَ لَأَقْتُلَنَّكَ حَتَّى لَا تَنْكِح أُخْتِي فَقَالَ هَابِيل
إِنَّمَا يَتَقَبَّل اللَّه مِنْ الْمُتَّقِينَ . (تفسير ابن كثير
எல்லா நபிமார்களும்
ஹஜ் செய்துள்ளார்கள்.
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ قَالَ : مَا
مِنْ نَبِىٍّ إِلاَّ وَقَدْ حَجَّ الْبَيْتَ إِلاَّ مَا كَانَ مِنْ هُودٍ
وَصَالِحٍ وَلَقَدْ حَجَّهُ نُوحٌ فَلَمَّا كَانَ مِنَ الأَرْضِ مَا كَانَ مِنَ
الْغَرَقِ أَصَابَ الْبَيْتَ مَا أَصَابَ الأَرْضَ وَكَانَ الْبَيْتُ رَبْوَةً
حَمْرَاءَ فَبَعَثَ اللَّهُ هُودًا عَلَيْهِ السَّلاَمُ فَتَشَاغَلَ بِأَمْرِ
قَوْمِهِ حَتَّى قَبَضَهُ اللَّهُ إِلَيْهِ فَلَمْ يَحُجَّهُ حَتَّى مَاتَ
فَلَمَّا بَوَّأَهُ اللَّهُ لإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ حَجَّهُ ثُمَّ لَمْ
يَبْقَ نَبِىٌّ بَعْدَهُ إِلاَّ حَجَّهُ.
எல்லா நபிமார்களும்
ஹஜ் செய்துள்ளார்கள். நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம், சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரைத் தவிர.
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தில் கஃபாவும்
பாதிப்புக்கு உள்ளானது. ஆனாலும் அதற்கு முன்பே நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டார்கள்.
வெள்ளப்பிரளயத்திற்குப் பின் கஃபா சிவப்பு மண் மேடாக காட்சியளித்துக்
கொண்டிருந்தது. அதன்பின் நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நபியாக
அனுப்பினான் அவர்களுடைய சமூக மக்களிடம் பிரச்சினைகளை சமாளிக்கவே அவர்களுக்கு நேரம்
சரியாக இருந்த காரணத்தால் அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை. அதன்பின் நபி இப்றாஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கஃபாவின் இடத்தைக் காட்டித் தந்தான். அவர்கள்
அதைப் புதுப்பொலிவுடன் கட்டினார்கள். அதன் பின் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்
ஹஜ் செய்தார்கள். அதன் பின்பு வந்த எந்த நபியும் ஹஜ் செய்யாமல் இருந்ததில்லை.
கடைசி காலத்தில் ஈஸா
அலை அவர்களும் ஹஜ் செய்வார்கள்.
عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ
مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا (مسلم) صحيح ابن حبان باب ذكر
الإخبار بأن عيسى ابن مريم يحج البيت العتيق بعد قتله الدجال
கஃபாவுக்கும்
இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
عَنِ السُّدِّيِّ، قَالَ: "إِنَّ اللَّهَ عَزَّ
وَجَلَّ أَمَرَ إِبْرَاهِيمَ أَنْ يَبْنِيَ الْبَيْتَ هُوَ وَإِسْمَاعِيلُ " ابْنِيَا بَيْتِيَ لِلطَّائِفِينَ
وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ " ، فَانْطَلَقَ إِبْرَاهِيمُ
حَتَّى أَتَى مَكَّةَ فَقَامَ هُوَ وَإِسْمَاعِيلُ وَأَخَذَا الْمَعَاوِلَ لا
يَدْرِيَانِ أَيْنَ الْبَيْتُ ؟ فَبَعَثَ اللَّهُ تَعَالَى رِيحًا يُقَالُ لَهَا
رِيحُ الْخُجُوجِ، لَهَا جَنَاحَانِ وَرَأْسٌ فِي صُورَةِ حَيَّةٍ، فَكَنَسَتْ
لَهُمَا مَا حَوْلَ الْكَعْبَةِ مِنْ أَسَاسِ الْبَيْتِ الأَوَّلِ، وَاتَّبَعَاهَا
بِالْمَعَاوِلِ يَحْفِرَانِ، حَتَّى وَضَعَا الأَسَاسَ، فَذَلِكَ حِينَ
يَقُولُ: " وَإِذْ بَوَّأْنَا
لإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ "
فَلَمَّا بَنَيَا الْقَوَاعِدَ فَبَلَغَا مَكَانَ الرُّكْنِ، قَالَ
إِبْرَاهِيمُ لإِسْمَاعِيلَ: يَا بُنَيَّ، اطْلُبْ لِي حَجَرًا حَسَنًا أَضَعُهُ
هَاهُنَا، قَالَ: يَا أَبَتِ إِنِّي كَسْلانُ لَغِبٌ، قَالَ: عَلَيَّ ذَلِكَ،
فَانْطَلَقَ يَطْلُبُ لَهُ حَجَرًا وَجَاءَهُ جِبْرِيلُ بِالْحَجَرِ الأَسْوَدِ
مِنَ الْهِنْدِ، (تفسير ابن كثير)
சுருக்கம்- அல்லாஹ் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களின்
மகனாரையும் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டும்படி ஏவியபோது அவ்விருவரும் அங்கு
வந்தார்கள். மண்வெட்டியை எடுத்தார்கள். ஆனால் கஃபாவின் அஸ்திவாரம் எங்கே உள்ளது
எங்கே உள்ளது என்று தெரியாத போது அல்லாஹ் ஒரு புயல்காற்றை அனுப்பினான்.அது
கஃபாவின் சுற்றளவை மட்டும் சுழற்றி அடித்தது. அதை வைத்து கஃபாவைக் கட்டினார்கள்.
கடைசியில் ஒரு கல் வைக்கும் இடம் மட்டும் மிச்சமிருக்கும்போது மகனே ஒரு நல்ல
கல்லாகப் பார்த்து எடுத்து வா என்று தந்தை கூற, அதற்கு மகனார் மிகவும் களைப்பாக
உள்ளது என்றார்கள். இருப்பினும் தந்தையின் கட்டளைப்படி கல்லை எடுக்கச் சென்று
திரும்பி வருவதற்குள் அங்கே இன்னும் சிறப்பான கல் அதாவது ஹஜருல் அஸ்வத் பொருத்தப்
பட்டிருப்பதைக் கண்டு இதை யார் கொண்டு வந்தார்கள் என்று கேட்க, இந்தியாவில்
இருந்து ஜிப்ரயீல் அலை கொண்டு வந்தார்கள் என தந்தை பதில் கூறினார்கள்.
நபி ஆதம் சுவனத்தில்
இருந்து இறங்கும்போது கொண்டு வந்திருக்கலாம் என விளக்கம் கூறப்பட்டுள்ளது
ஹஜ் என்பது ஒரு
புனிதமான வணக்கம்
عَنْ أَبِي
هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْحَجَّةُ الْمَبْرُورَةُ لَيْسَ لَهَا جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ
وَالْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا رواه النسائ عن
خالد بن معدان ، قال : « تحُْشَرُ الكعبة إلى بيت المقدس متعلقا بأستارها كل من حج
واعتمر (أخبار مكة للفاكهي)
ஒவ்வொரு வருடமும் ஹஜ்
செய்வது கடமையா
?
عن ابن عباس رضي الله عنه قال: خطبنا رسول الله صلى
الله عليه وسلم فقال: "يَأيُّهَا النَّاسُ، إنَّ اللهَ كَتَبَ عَلَيْكُم الحَجَّ".
فقام الأقرع بن حابس فقال: يا رسول الله، أفي كل عام؟ قال: "لَوْ قُلْتُهَا، لَوَجَبَتْ،
ولَوْ وَجَبَتْ لَمْ تَعْمَلُوا بِهَا، وَلَمْ تَسْتَطِيعُوا أنْ تَعْمَلُوا بِهَا؛
الحَجُّ مَرَّةً، فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ".رواه أحمد، وأبو داود، والنسائي،
وابن ماجة،
கடமையான ஹஜ்ஜை முடித்தவர் நான்கு அல்லது
ஐந்து
வருடங்களுக்கு ஒரு முறையாவது ஹஜ் செய்வது நல்லது
عن أبي سعيد
الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: " يقول الرب عزوجل إن
عبدا أوسعتُ عليه في الرزق فلم يَعُد إليّ في كل أربعة أعوام لَمَحْرُوم) هذا الحديث
مشهور من حديث العلاء بن المسيب بن رافع الكاهلي الكوفي من أولاد المحدثين، روى
عنه غير واحد، منهم من قال: في كل خمسة أعوام، (تفسير القرطبي)
ஹஜ் செய்யும் ஆர்வம்
இருந்தும் வசதி குறைவாக உள்ளவருக்கு உதவி செய்து ஹஜ் செய்ய வைப்பதின் நன்மை
عن زيد بن
خالد الجهني رضي الله عنه، قال : قال رسول الله صلى الله عليه وسلم : من فطر صائما ، أو أحَجَّ رجلا ، أو جهز غازيا
أو خلفه في أهله فله مثل أجره رواه
البيهقي في شعب الايمان
عن عبد الله بن عمرو بن العاص رضي
الله عنهما قال : قال رسول الله صلى
الله عليه وسلم :حجة لمن لم يحج خير من عشر غزوات
(أخبار مكة للفاكهي)
பத்லீ ஹஜ்ஜைப் பற்றி...
கடமையான ஹஜ்ஜை
நிறைவேற்றியவர்கள், முடியாதவர்களான தன் பெற்றோருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றலாம்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا
وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ
وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ
اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ
أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري
என்னுடைய தந்தை மிகவும் வயதானவராக இருக்கிறார்.
அவரால் வாகனத்தில் ஏறவே முடியாது. அவருக்கு பதிலாக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா என்று
ஒரு பெண் கேட்டபோது ஆம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
عَنْ ابْنِ
عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي مَاتَ
وَلَمْ يَحُجَّ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَى أَبِيكَ
دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَدَيْنُ اللَّهِ أَحَقُّ رواه
النسائ عَنْ ابْنِ
عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ
رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ قَالَ مَنْ شُبْرُمَةُ قَالَ أَخٌ لِي
أَوْ قَرِيبٌ لِي قَالَ حَجَجْتَ عَنْ نَفْسِكَ قَالَ لَا قَالَ حُجَّ عَنْ
نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ رواه ابوداود
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் என்னுடைய தந்தை
ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். அவருக்கு பதிலாக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா
என்று கேட்டபோது நபி ஸல் அவர்கள் உன் தந்தைக்கு ஏதேனும் கடன் இருந்தால் அதை
நிறைவேற்றுவீர்கள் அல்லவா என்று
கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூற, அப்படியானால் அல்லாஹ்வின்
கடமையாகிய ஹஜ் அதை விட மேலானது என்று பதில் கூறினார்கள்.
தன்
சகோதரரான ஷுப்ருமா என்பவருக்காக பத்லீ ஹஜ் செய்ய வந்திருந்த ஒருவரிடம் நபி ஸல்
அவர்கள் முதலில் நீங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டீர்களா என்று கேட்க, அவர் இல்லை
என்றார். உடனே நபி ஸல் அவர்கள் முதலில் நீங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள். பிறகு
ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
வசதி உள்ளவர்கள் தன்
குடும்பத்தினரையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வது நல்லது.
عن طلحة يعني
ابن مصرف ، قال : مِنْ أخلاق الصالحين أن
يحجوا بأهليهم وأولادهم رواه البيهقي في
شعب الايمان
ஹராமான பணத்தில் ஹஜ்
செய்பவர்களின் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படுமா?
عن أنس عن
النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من
حج من مال حلال ، أو من تجارة ، أو من ميراث لم يخرج عن عرفة حتى تغفر ذنوبه ،
وإذا حج من مال حرام فلَبّى ، قال الرب : لا لبيك ولا سعديك ثم يلف ويضرب بها
وجهه.(الديلمي ,كنز العمال)
அல்லாஹ் மீது நம்பிக்கை
வைத்து ஹஜ்ஜூக்கு விண்ணப்பிப்பதும், முடிவு எதுவாயினும் பொருந்திக் கொள்வதும்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ يَا غُلَامُ إِنِّي
أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ
تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ
بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ
بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ
اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ
كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ رواه
الترمذي
உலகமே ஒன்று சேர்ந்து ஒரு
பிரயோஜனத்தை உனக்குப் பெற்றுத் தர நினைத்தாலும் அல்லாஹ் அதை உனக்கு விதித்தாலே
தவிர அது உனக்குக் கிடைக்காது. உலகமே ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு தீமையை விளைவிக்க
நினைத்தாலும் அல்லாஹ் அதை உனக்கு விதித்தாலே தவிர அது உனக்கு வராது.
விளக்கம்- எத்தனையோ பேர் ஹஜ்ஜுக்காக
விண்ணப்பித்து அதற்கான ஏற்பாடுகளெல்லாம் செய்த பிறகு ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல்
ஆகி விட்ட சம்பவங்கள் உண்டு. விமானத்தில் ஏறிய பின்பும் கூட ஏதோ காரணத்தால்
தடங்கலாகி, கீழே இறக்கி விடப்பட்டு, அதன்பிறகு அறவே ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல்
ஆகி விட்ட சம்பவங்களும் உண்டு. எனவே ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்தவர் அல்லாஹ்விடம் அந்த
பாக்கியத்தைப் பெற்றுத் தர அதிகமாக துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக
வருகிற ரமழானில் அதிகம் இதற்காக துஆச் செய்ய வேண்டும்.
இலஞ்சம் கொடுத்து
ஹஜ்ஜுக்கான அனுமதியைப் பெற நினைக்கலாமா?
أَكَّالُونَ لِلسُّحْتِ (سورة المائدة)42
عَنْ عَبْدِ اللَّهِ ابن مسعود قَالَ:"السُّحْتُ الرِّشْوَةُ فِي
الدِّينِ". رواه الطبراني في المعجم الكبير
عن عبد الله بن مسعودرض قال: من شفع لرجل ليدفع عنه مظلمة أو يرد عليه
حقا فأهدى له هدية فقبلها فذلك السحت
(تفسير
ابن ابي حاتم)
عن ثوبان ، رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : لعن الله
الراشي والمرتشي والرائش الذي يمشي بينهما رواه الحاكم في المستدرك
மிகவும் சொகுசாகவும்,
மிகவும் ஆடம்பரமாகவும் ஹஜ்ஜை நிறைவேற்ற நினைப்பது நபிவழி அல்ல.
عن أنس رضي
الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يأتي على الناس زمان يَحُجُّ
أغنياء الناس لِلنَّزَاهَة ، وأوساطهم للتجارة وقُرَّاؤُهم للرياء والسمعة
وفقراؤهم للمسألة (كنز
العمال) للنزاهةசுற்றுலாவுக்கு
கடைசியில் ஒரு காலம் வரும். வசதியுள்ளவர்கள்
சுற்றுலாவுக்குச் செல்வது போன்று ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். நடுத்தர வர்க்கத்தினர
வியாபார நோக்கத்திற்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். மார்க்கத்தைக் கற்றவர்கள்
பெருமைக்காக ஹஜ்ஜுக்குச் செல்வார்கள். ஏழைகள் யாசகம் கேட்பதற்காக ஹஜ்ஜுக்குச்
செல்வார்கள்.
عن عمر بن عبد العزيز رحمة الله عليه قال "إن الله تعالى جعل هذا
السفر نسكا ، وسيجعله الظالمون نكالا "(ابن عساكر)
உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள்
கூறினார்கள் அல்லாஹ் இந்தப் பிரயாணத்தை சிறந்த வணக்கமாக ஆக்கியுள்ளான். ஆனால் அநியாயக்காரர்களில்
சிலர் அதை தன் மீதான தண்டனைக்கான பிரயாணமாக ஆக்கி விடுகிறார்கள்.
عن ابن مسعود
رض أن النبي صلى الله عليه وسلم قال لا تزول قَدَمَا ابنِ آدم يوم القيامة حتى
يسأل عن خمس عن عمره فيم أفناه وعن شبابه فيم أبلاه وعن ماله من أين اكتسبه وفيم
أنفقه وماذا عمل فيما علم (الترمذي)
عَنْ ابْنِ
عُمَرَ قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ الزَّادُ وَالرَّاحِلَةُ
قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْحَاجُّ قَالَ الشَّعِثُ التَّفِلُ... رواه ابن
ماجة
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக