17-02-2023 |
|
بسم
الله الرحمن الرحيم மிஃராஜ் படிப்பினைகள் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
மிஃராஜ் படிப்பினைகள்
அறிவு ஏற்கா விட்டாலும் நம்ப
வேண்டிய எத்தனையோ விஷயங்கள் மார்க்கத்தில் உள்ளன. அதில் ஒன்று மிஃராஜ்
ذَلِكَ الْكِتَابُ
لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ- الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3)
أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5)البقرة
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ
مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا
وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ
قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ
فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا
يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ
قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ
قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا
أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ
تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ
قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا
رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ
أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا
وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنْ
النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا
رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ
رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ
فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ
الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ
هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ (بخاري)-
باب فَضْلِ ذِكْرِ اللَّهِ – كتاب الدعوات
அல்லாஹ்வுக்கு சில
மலக்குகள் உள்ளனர். அவர்கள் இந்த பூமியின் வழியெங்கும் சுற்றித் திரிந்து
அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருக்கும் கூட்டத்தினரைத் தேடி அலைவார்கள். அவ்வாறு
ஒரு கூட்டத்தைப் பெற்றுக் கொண்டால் மற்ற மலக்குகளை அங்கு அழைப்பார்ரகள் வாருங்கள்
நீங்கள் தேடிய விஷயம் இங்கே உள்ளது என்று கூறி தங்களுடைய இறக்கைகளால் சூழ்ந்து
கொண்டு வாழ்த்துவார்கள். மலக்குகளின் அக்கூட்டம் அல்லாஹ்விடம் செல்லும்போது
அல்லாஹ் அறிந்து கொண்டே அந்த மலக்குகளிடம் என்னுடைய அடியார்கள் என்ன செய்து
கொண்டிருந்தார்கள் என்று கேட்பான். உன்னைத் துதித்துக் கொண்டிருந்தார்கள் என்று
மலக்குகள் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் என்னைத் துதிக்கிறார்களே என்னைப்
பார்த்திருக்கிறார்களா என்று கேட்பான். அதற்கு மலக்குகள் உன்னை அவர்கள்
பார்க்கவில்லை என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் மலக்குகளிடம் என்னைப்
பார்க்காமலேயே இந்த அளவுக்குத் துதிப்பவர்கள் என்னைப் பார்த்தால் எந்த அளவுக்குத்
துதிப்பார்கள் என்று கேட்க அதற்கு மலக்குகள் உன்னைப்பார்த்திருந்தால் இன்னும்
அதிகமாகத் துதிப்பார்கள் என்று கூறுவார்கள்.
அடுத்து அல்லாஹ்
மலக்குகளிடம் என்னுடைய அடியார்கள் எதை
என்னிடம் வேண்டுகிறார்கள் என்று கேட்பான். சுவனத்தை வேண்டுகிறார்கள் என்று
மலக்குகள் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் அந்த சுவனத்தை அவர்கள்
பார்த்திருக்கிறார்களா என்று கேட்பான். அதற்கு மலக்குகள் பார்க்கவில்லை என்று
கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் மலக்குகளிடம் சுவனத்தைப் பார்க்காமலேயே இந்த
அளவுக்குக் கேட்பவர்கள் அதைப் பார்த்தால் எந்த அளவுக்கு வேண்டுவார்கள் என்று
கேட்பான். அதற்கு மலக்குகள் சுவனத்தை அந்த அடியார்கள் பார்த்திருந்தால் இன்னும்
அதிகமாக உன்னிடம் அதை வேண்டுவார்கள் என்று கூறுவார்கள்.
அடுத்து அல்லாஹ்
மலக்குகளிடம் எனது அடியார்கள் எதை விட்டும் என்னிடம் பாதுகாப்புக் கேட்கிறார்கள்
என்று கேட்பான். நரகத்தை விட்டும் பாதுகாப்பை வேண்டுகிறார்கள் என்று மலக்குகள்
கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் அந்த நரகத்தையேனும் அவர்கள் பார்த்திருக்கிறார்களா
என்று கேட்பான். அதற்கு மலக்குகள் பார்க்கவில்லை என்று கூறுவார்கள். அதற்கு
அல்லாஹ் மலக்குகளிடம் நரகத்தை பார்க்காமலேயே இந்த அளவுக்கு பாதுகாப்புக்
கேட்பவர்கள் அதைப் பார்த்தால் எந்த அளவுக்கு பாதுகாப்புக் கேட்பார்கள் என்று
கேட்பான். அதற்கு மலக்குகள் நரகத்தை அந்த அடியார்கள் பார்த்திருந்தால் இன்னும்
அதிகமாக அதை விட்டும் பாதுகாப்புக் கேட்பார்கள் என்று கூறுவார்கள். இறுதியாக
அல்லாஹ் மலக்குகளிடம் நான் உங்களைச்
சாட்சியாக வைத்து அவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டேன் என்று கூறும்போது
யாஅல்லாஹ் இந்த திக்ரு சபையில் ஒருவர் உன்னைத் துதிப்பவர்களில் கட்டுப்படாதவராக
உள்ளார். அதாவது அவர் வேறு நோக்கத்திற்காக அங்கு வந்து அமர்ந்துள்ளார். அவரையும்
மன்னிக்கிறாயா என்று கேட்க, அதற்கு அல்லாஹ் ஆம். அவரையும் மன்னிக்கிறேன். என்னைத்
துதிப்பவர்களில் கூட்டத்தில் இணைந்திருந்ததால் அவர் நிராசையாக மாட்டார் என்று
கூறுவான்.
நபி(ஸல்) முழு உடலுடன்தான் விண்ணுலகப் பயணம் சென்றார்கள் என்பதற்கான ஆதாரங்களில்
ஒன்று
அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்கும் முன்
ஹிர்கல் மன்னரிடம் நபி ஸல் அவர்களைப் பற்றி தவறாக எடுத்துக் கூற முயன்ற போது நடந்த
உரையாடல்
قال ابو
سفيان..قُلْت أَيّهَا الْمَلِك أَلَا أُخْبِرك خَبَرًا تَعْرِف أَنَّهُ قَدْ
كَذَبَ ؟ قَالَ وَمَا هُوَ قَالَ قُلْت إِنَّهُ يَزْعُم لَنَا أَنَّهُ خَرَجَ مِنْ
أَرْضنَا أَرْض الْحَرَم فِي لَيْلَة فَجَاءَ مَسْجِدكُمْ هَذَا مَسْجِد إِيلِيَاء
وَرَجَعَ إِلَيْنَا تِلْكَ اللَّيْلَة قَبْل الصَّبَاح .قَالَ وَبِطْرِيقِ
إِيلِيَاء عِنْد رَأْس قَيْصَر فَقَالَ بِطْرِيق إِيلِيَاء قَدْ عَلِمْت تِلْكَ
اللَّيْلَة قَالَ فَنَظَرَ إِلَيْهِ قَيْصَر وَقَالَ وَمَا عِلْمك بِهَذَا ؟ قَالَ
إِنِّي كُنْت لَا أَنَام لَيْلَة حَتَّى أُغْلِق أَبْوَاب الْمَسْجِد فَلَمَّا
كَانَ تِلْكَ اللَّيْلَة أَغْلَقْت الْأَبْوَاب كُلّهَا غَيْر بَاب وَاحِد
غَلَبَنِي فَاسْتَعَنْت عَلَيْهِ بِعُمَّالِي وَمَنْ يَحْضُرنِي كُلّهمْ
مُعَالَجَة فَغَلَبَنَا فَلَمْ نَسْتَطِعْ أَنْ نُحَرِّكهُ كَأَنَّمَا نُزَاوِل
بِهِ جَبَلًا فَدَعَوْت إِلَيْهِ النَّجَاجِرَة فَنَظَرُوا إِلَيْهِ فَقَالُوا
إِنَّ هَذَا الْبَاب سَقَطَ عَلَيْهِ النِّجَاف وَالْبُنْيَان وَلَا نَسْتَطِيع
أَنْ نُحَرِّكهُ حَتَّى نُصْبِح فَنَنْظُر مِنْ أَيْنَ أَتَى .قَالَ فَرَجَعْت
وَتَرَكْت الْبَابَيْنِ مَفْتُوحَيْنِ .فَلَمَّا أَصْبَحْت غَدَوْت عَلَيْهِمَا
فَإِذَا الْحَجَر الَّذِي فِي زَاوِيَة الْمَسْجِد مَثْقُوب وَإِذَا فِيهِ أَثَر مِرْبَط
الدَّابَّة قَالَ فَقُلْت لِأَصْحَابِي مَا حُبِسَ هَذَا الْبَاب اللَّيْلَة
إِلَّا عَلَى نَبِيّ وَقَدْ صَلَّى اللَّيْلَة فِي مَسْجِدنَا (تفسير ابن كثير)
விளக்கம்- ஹிர்கல் மன்னரிடம் அபூ சுஃப்யான்
நபி ஸல் அவர்களை பொய்ப்படுத்துதற்காக பின் வருமாறு கூறினார்- அந்த முஹம்மத்
ஒரே இரவில் எங்களுடைய ஊரில் இருந்து புறப்பட்டு உங்களுடைய இந்த மஸ்ஜிதுக்கு வந்து
விட்டு அதே இரவில் மீண்டும் எங்களுடைய ஊருக்கு திரும்பியதாக பொய் சொல்கிறார். அதை
நம்புகிறீர்களா என்று கேட்க. உடனே அருகில் இருந்த காவலாளி அந்த இரவைப் பற்றி
எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியும் என்று கூற உடனே ஹிர்கல் மன்னர் அந்த
காவலாளியிடம் உனக்கு என்ன தெரியும். சொல். என்றார். அப்போது அந்த காவலாளி “நான்
எப்போதும் நம் மஸ்ஜிதுடைய பிரதான வாசலை மூடாமல் தூங்க மாட்டேன். ஆனால் குறிப்பிட்ட
அந்த இரவில் வழக்கம் போல மற்ற எல்லாக் கதவுகளையும் மூடி விட்டு பிரதான கதவை மூட
முயன்றேன். என்னால் முடியவில்லை. என்னுடைய
உதவியாளர்களை அழைத்தேன். அவர்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சித்தும் அவர்களால்
நகர்த்தவே முடியவில்லை. பெரிய மலை போன்று கனமாக இருந்தது. பின்பு நான் ஆசாரிகளை அழைத்து அவர்களும்
முயற்சித்தும் பலனில்லை. பின்பு அவர்கள் என்னிடம் இந்த மரத்தின் ஒரு பகுதி வீங்கி
துருத்திக் கொண்டிருக்கிறது. காலை வரை போராடினாலும் எங்களால் முடியாது என்று
கூறிச் சென்று விட்டார்கள். நானும் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டேன். காலையில் வந்து பார்த்த போது தான் மஸ்ஜிதின்
ஓரத்தில் வாகனத்தை கட்டி வைக்கும் பெரிய கல்லும், அதில் வாகனத்தை கட்டி வைத்த
அடையாளத்தையும் பார்த்தேன். அப்போது நான் என் நண்பர்களிடம் நிச்சயமாக நேற்று இரவு
ஒரு நபியின் வருகைக்காகத் தான் இந்தக் கதவை மூட முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த
நபி நம்முடைய இந்த மஸ்ஜிதில் வந்து தொழுது விட்டுச் சென்றுள்ளார் என்று அப்போதே
நான் கூறினேன் என்றார்.
உலகில் வாழும்போது விண்ணுலகப் பயணம் நபி (ஸல்) அவர்களைத் தவிர
வேறு யாருக்கும் சாத்தியமில்லை.
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا
مِنْ أَقْطَارِ السَّمَوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا
بِسُلْطَانٍ (33)سورة الرحمن
அருகில் இருக்கும்
சந்திரனில் காலடி வைக்க, கடும் சிரமத்திற்குப் பிறகே மனிதனால் முடிந்தது
1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அப்பல்லோ
திட்டம் மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக்
கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம்
குறித்து மறு பரிசீலனை
செய்யும் நிலைஏற்பட்டது. இறுதியில்அப்பல்லோ விண்கலம், 1969 ஜூலை 16ம் தேதி 39Aஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு நீல் ஆம்ஸ்ட்ரோங் எட்வின் ஆல்ட்ரின்,மைக்கேல் கொலின்ஸ் ஆகிய 3 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன்
பயணத்தைத் தொடங்கியது.
விண்ணை நோக்கி பயணம் செய்வதே பெரும்
சிரமம் என்று கூறும் அல்குர்ஆன்
فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ
وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا
يَصَّعَّدُ فِي السَّمَاءِ..(125)الانعام (وأصل الصعود المشقة، ومنه قوله تعالى(سأرهقه
صعودا(المدثر17) معالم التنزيل عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه "
كَأَنَّمَا يَصَّعَّد فِي السَّمَاء " يَقُول فَكَمَا لَا يَسْتَطِيع اِبْن
آدَم أَنْ يَبْلُغ السَّمَاء فَكَذَلِكَ لَا يَسْتَطِيع أَنْ يُدْخِل التَّوْحِيد
وَالْإِيمَان قَلْبه حَتَّى يُدْخِلهُ اللَّه فِي قَلْبه (تفسير ابن كثير)
மிஃராஜ் சம்பவம் நடைபெறக் காரணம்
அபூதாலிப், கதீஜா ரழி ஆகியோரின்
அடுத்தடுத்த மரணங்கள் மூலம் மிகவும் கவலையடைந்த
நபி [ஸல்]
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக இந்த நிகழ்வை அல்லாஹ்
நடத்தினான்.
وبعد وفاة أبي طالب بنحو شهرين أو بثلاثة أيام
ـ على اختلاف القولين ـ توفيت أم المؤمنين خديجة الكبرى رضي الله عنها وكانت
وفاتها في شهر رمضان في السنة العاشرة من النبوة، ولها خمس وستون سنة على أشهر
الأقوال، ورسول الله صلى الله عليه وسلم إذ ذاك في الخمسين من عمره .]الرحيق المختوم[ عن ابن إسحاق قال : « ثم إن خديجة بنت خويلد ، وأبا طالب
ماتا في عام واحد ، فتتابعت على رسول الله صلى الله عليه وسلم المصائب بهلاك خديجة
، وأبي طالب ، وكانت خديجة وزيرة صدق على الإسلام ، كان يسكن إليها » قلت : وبلغني
أن موت خديجة كان بعد موت أبي طالب بثلاثة أيام ، والله أعلم . (دلائل النبوة ـ
للبيهقى
அபூதாலிப்அவர்களின் மரணத்திற்குப் பின்பு மூன்று நாட்கள்
இடைவெளியில் அல்லது 2 மாத இடைவெளியில்
கதீஜா ரழி வஃபாத்தானார்கள். நுபுவ்வத்திற்குப் பின் 10-ம் ஆண்டு ரமழான் என்றும்
கூறப்படுகிறது. அப்போது அன்னை கதீஜா ரழி அவர்களின் வயது 65 என்றும் நபி ஸல்
அவர்களின் வயது 50 என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கியமான பயணத்திற்கு நபி ஸல் அவர்களை தயார் படுத்த
நடத்தப்பட்ட ஆன்மீக ஆபரேஷன்
عن أَنَس بْن مَالِكٍ كَانَ أَبُو ذَرٍّ رَضِيَ اللَّهُ
عَنْه يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُرِجَ سَقْفِي وَأَنَا بِمَكَّةَ
فَنَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ بِمَاءِ
زَمْزَمَ ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا
فَأَفْرَغَهَا فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ إِلَى
السَّمَاء (بخاري 1636
நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு
திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப்
பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும்
ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில்
கொட்டி விட்டு, அதை
மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை
ஏற்றிச் சென்றார்கள்.
படிப்பினை-
உலகில் எத்தனையோ ஆபரேஷன் நடைபெறும். மயக்க மருந்து செலுத்திய பின் உணவர்வற்ற நிலை
இருக்கும்போது நடைபெறும். ஆனால் நபி ஸல் அவர்களுக்கு நடைபெற்ற ஆபரேஷன் முற்றிலும்
உணர்வுடன் இருந்த நிலையில் நடைபெற்றது. மலக்குகள் செய்வதை நபி ஸல் அவர்கள் பார்த்த
வண்ணம் இருந்தார்கள்.
عَنْ أَنَس يَقُولُ لَيْلَةَ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الْكَعْبَةِ أَنَّهُ جَاءَهُ ثَلَاثَةُ
نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ وَهُوَ نَائِمٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ
فَقَالَ أَوَّلُهُمْ أَيُّهُمْ هُوَ فَقَالَ أَوْسَطُهُمْ هُوَ خَيْرُهُمْ فَقَالَ
آخِرُهُمْ خُذُوا خَيْرَهُمْ فَكَانَتْ تِلْكَ اللَّيْلَةَ فَلَمْ يَرَهُمْ حَتَّى
أَتَوْهُ لَيْلَةً أُخْرَى فِيمَا يَرَى قَلْبُهُ وَتَنَامُ عَيْنُهُ وَلَا
يَنَامُ قَلْبُهُ وَكَذَلِكَ الْأَنْبِيَاءُ تَنَامُ أَعْيُنُهُمْ وَلَا تَنَامُ
قُلُوبُهُمْ فَلَمْ يُكَلِّمُوهُ حَتَّى احْتَمَلُوهُ فَوَضَعُوهُ عِنْدَ بِئْرِ
زَمْزَمَ فَتَوَلَّاهُ مِنْهُمْ جِبْرِيلُ فَشَقَّ جِبْرِيلُ مَا بَيْنَ نَحْرِهِ
إِلَى لَبَّتِهِ حَتَّى فَرَغَ مِنْ صَدْرِهِ وَجَوْفِهِ فَغَسَلَهُ مِنْ مَاءِ
زَمْزَمَ بِيَدِهِ حَتَّى أَنْقَى جَوْفَهُ ثُمَّ أُتِيَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ
فِيهِ تَوْرٌ مِنْ ذَهَبٍ مَحْشُوًّا إِيمَانًا وَحِكْمَةً فَحَشَا بِهِ
صَدْرَهُ وَلَغَادِيدَهُ يَعْنِي عُرُوقَ حَلْقِهِ ثُمَّ أَطْبَقَهُ (بخاري)
باب قَوْلِهِ ( وَكَلَّمَ اللَّهُ مُوسَى ) كتاب التوحيد
நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் மொத்தம் மூன்று
தடவைகள் இந்த நிகழ்வு நடந்துள்ளது
நபியாக ஆக்கப் படும் போதும் நடந்ததாத அபூநயீம்
ரஹ் அவர்கள் தமது தலாஇல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
أن جبريل
وميكائيل عليهما السلام شقا صدره وغسلاه ثم قال اقرأ باسم ربك (تفسير
روح المعاني
சிறு வயதில் ஹலீமா ரழி அவர்களிடம் வளரும்போது இந்த
நிகழ்வு
நடந்தது
عَنْ أَنَسِ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ
فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظُّ
الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ
ثُمَّ لَأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ
إِلَى أُمِّهِ يَعْنِي ظِئْرَهُ فَقَالُوا إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ
فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقِعُ اللَّوْنِ قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرْئِي
أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ (مسلم
கருத்து-அனஸ்
ரழி அவர்கள் கூறினார்கள்.சிறுவயதில் நபிஸல் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த
போது ஜிப்ரயீல் அலை அங்கு வந்து நபி ஸல் அவர்களைப் பிடித்து நெஞ்சைப் பிளந்து
இருதயத்தை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சதைத் துண்டை வெளியே எடுத்தார்கள்.
பின்பு இது ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கும் ஷைத்தானின் பங்காகும் என்று
கூறி அதை நீக்கி விட்டு ஒரு தங்கத் தட்டில் இருதயத்தை வைத்து, ஜம்ஜம் நீரால் கழுவி
பின்பு இருதயத்தை இருந்தவாறே வைத்து விட்டார்கள். நபி ஸல் அவர்களின் கண் பார்க்கவே
இச்சம்பவம் நடந்தது. வலி எதுவுமே இல்லா விட்டாலும் ஒருவித பயம் நபி ஸல் அவர்களை
ஆட்கொண்டது. இச்சம்பவம் நடைபெற ஆரம்பிக்கும்போதே அன்னை ஹலீமா ரழி அவர்களின் குழந்தைகள்
ஓடிச் சென்று தன் தாயாரிடம் முஹம்மதை யாரோ கொன்று விட்டார்கள் என்று சொல்லி
அவர்களை அழைத்து வந்தார்கள். அழுது கொண்டே அவர்கள் வந்து பார்த்த போது நபி ஸல்
அவர்கள் நல்ல படியாக ஆபரேஷன் முடிந்து பயந்த படி நின்று கொண்டிருந்தார்கள்.
இச்சம்பவத்திற்குப் பிறகு தான் இனி நம்மிடம் இந்தக் குழந்தை இருந்தால் ஏதேனும்
இதுபோல் நடைபெறலாம் என்று பயந்து நபி ஸல் அவர்களின் நான்காம் வயதில் தாயிடமே
கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.
புராக் விமானம்
எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்து சென்றதோ அந்த நாடுகள் அடைந்த செழிப்பு...
அமெரிக்கா மற்றும் ஜெர்மன் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் வற்றாத பெட்ரோல்
வளம் கொண்ட நாடுகள் எவை என மண்ணியல் வரைபடமாக தயாரித்தனர். அதில் வளைகுடா நாடுகளே
அதிகம் இடம்பெற்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் நபி(ஸல்) அவர்களைச் சுமந்து சென்ற புராக் வாகனம் எந்தெந்த நாடுகளின் வழியாக
பறந்ததோ அந்த நாடுகள் இன்று பெட்ரோல் வளம் கொண்ட நாடுகளாக உள்ளன.
பைத்துல் முகத்தஸ் செல்லும்
வழியில் நபி ஸல் பார்த்த காட்சிகளும் படிப்பினைகளும்
عَنْ اِبْن عَبَّاس قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ " لَمَّا أُسْرِيَ بِي مَرَّتْ بِي رَائِحَة طَيِّبَة فَقُلْت مَا
هَذِهِ الرَّائِحَة ؟ قَالَ مَاشِطَة بِنْت فِرْعَوْن(وفي رواية خادمة لبنات
فرعون) وَأَوْلَادهَا سَقَطَ الْمُشْط مِنْ يَدهَا فَقَالَتْ بِسْمِ اللَّه
فَقَالَتْ بِنْت فِرْعَوْن أَبِي قَالَتْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك قَالَتْ
أَوَلَك رَبّ غَيْر أَبِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك وَرَبّ أَبِيك اللَّه .
قَالَ فَدَعَاهَا فَقَالَ أَلَك رَبّ غَيْرِي ؟ قَالَتْ نَعَمْ رَبِّي وَرَبّك
اللَّه عَزَّ وَجَلَّ .قَالَ فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاس فَأُحْمِيَتْ
ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى فِيهَا قَالَتْ إِنَّ لِي إِلَيْك حَاجَة قَالَ
مَا هِيَ ؟ قَالَ تَجْمَع عِظَامِي وَعِظَام وَلَدِي فِي مَوْضِع قَالَ ذَاكَ لَك
لِمَا لَك عَلَيْنَا مِنْ الْحَقّ قَالَ فَأَمَرَ بِهِمْ فَأُلْقُوا وَاحِدًا
وَاحِدًا حَتَّى بَلَغَ رَضِيعًا فِيهِمْ فَقَالَ يَا أُمَّهْ قَعِي وَلَا
تَقَاعَسِي فَإِنَّك عَلَى الْحَقّ " قَالَ وَتَكَلَّمَ أَرْبَعَة فِي
الْمَهْد وَهُمْ صِغَار هَذَا وَشَاهِد يُوسُف وَصَاحِب جُرَيْج وَعِيسَى اِبْن
مَرْيَم عَلَيْهِ السَّلَام (تفسير ابن كثير)
மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கிச்
செல்லும் வழியில் அருமையான வாசனையை நபி ஸல் அவர்கள் உணர்ந்து இது என்ன வாசனை என்று
ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்க, இதுதான் ஃபிர்அவ்னின் பெண் பிள்ளைகளுக்குப்
பணிவிடை செய்து கொண்டிருந்த மாஷிதா மற்றும் அவரது சிறு குழந்தைகளின் கப்ருகளாகும்.
இந்தப் பெண்ணும் கணவரும் குழந்தைகளும் ஆசியா அம்மையாருக்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றனர்.
ஒருநாள் வழக்கம்போல் ஃபிர்அவ்னின் மகள் ஒருத்திக்கு இவர் தலைவாரிக்
கொண்டிருந்தார். (ஆசியா அம்மையார் மூலமாக பிறந்த பிள்ளை அல்ல. ஆசியா அம்மையாரை ஃபிர்அவ்னால்
நெருங்கவே முடியவில்லை. அவனின் நுத்ஃபாவை அந்த அம்மையாருக்கு அல்லாஹ் ஹராமாக்கி
விட்டான். விபரம் பின்பு கூறப்படும்.) அவ்வாறு தலைவாரியபோது
சீப்பு கீழே விழுந்து விட, தன்னை மறந்து இதுநாள் வரை ஈமானை மறைத்து வைத்திருந்த
சிந்தனை இன்றி பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அந்த சீப்பை எடுக்க, அது கேட்ட
ஃபிர்அவ்னின் மகள் யார் அந்த அல்லாஹ் என் தந்தை தானே என்றாள். இல்லை. உண்மையான
இறைவன். உன் தந்தைக்கும் நமக்கும் எல்லோருக்கும் அவன் தான் ரப்பு என்று உண்மையைக்
கூறி விட, அவள் உடனே சென்று தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். அவன்
உடனடியாக மாஷிதா அம்மையாரை அழைத்து வரச் சொன்னான். என்னையன்றி வேறு கடவுள் உனக்கு
உண்டா என்று கேட்க, அந்த அம்மையாரின் பதில் உறுதியாக இருந்த து. ஆத்திரம் அடைந்த
அவன் ஒரு ராட்சதச் சட்டியில் மாட்டின் தலை அளவுக்கு உள்ள ஈயத்தை உருக்கி அந்த
அம்மையாரையும் அவரின் சின்னஞ்சிறு பிள்ளைகளையும் அதில் போட்டான். அதற்கு முன்பு
அந்த அம்மையாரிடம் உனது கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது உடலும் என் பிள்ளைகளின்
உடலும் கருகிய பின் எங்கள் அனைவரின் எலும்புக்கூடுகளை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு ஃபிர்அவ்ன் என்னுடைய விசுவாசமான
வேலைக்காரி என்பதால் அவ்வாறே செய்கிறேன் என்றான். அதற்குப் பின் ஒவ்வொருவராக
கொதிக்கும் அந்தச் சட்டியில் தூக்கிப் போடப்பட்டது. முதலில் மூத்த குழந்தை பிறகு
அடுத்த குழந்தை என அந்த அம்மையாரின் கண்ணெதிரே போடப்பட்டது. இறுதியாக அந்தப்
பெண்ணையும் பிறந்து சில நாட்களே ஆன அவருடைய ஆண் குழந்தையையும் ஒன்றாக கொதிக்கும்
அந்தச் சட்டியில் போடும்போது அந்த அம்மையார் தன் பிஞ்சுக் குழந்தையை நினைத்து
தயங்கியபோது அந்தக்குழந்தை வாய் திறந்து அம்மா.... நீங்கள் சத்தியத்தின் மீது
இருக்கிறீர்கள். கலங்காதீர்கள். பின் வாங்காதீர்கள். என்று பேசியது. இறுதியில்
அவ்விருவரும் போடப்பட்ட பின் உடல் கருகி இறந்தனர். தொட்டில் குழந்தையாக இருந்து
பேசிய குழந்தைகளில் இதுவும் ஒன்று. சுமார் பத்து குழந்தைகள் இவ்வாறு பேசியதாக சில
தஃப்ஸீர்களில் உள்ளது.
இன்னும் சில அறிவிப்புகளில் கீழ்காணும் விபரங்கள் உள்ளன
فقال لها :
ويحك اكفري بإلهك وقري أني إلهك قالت لا أفعل فمدها بين أربعة أوتاد ثم أرسل عليها
الحيات والعقارب وقال لها : اكفري بالله وإلا عذبتك بهذا العذاب شهرين فقالت لو
عذبتني سبعين شهراً ما كفرت بالله وكان لها ابنتان فجاء فابنتها الكبرى فذبحها على
قلبها ثم قال اكفري بالله وإلا ذبحت الصغرى على فيك وكانت رضيعاً فقالت لو ذبحت من
في الأرض على فيّ ما كفرت بالله عزّ وجلّ فأتى بابنتها فلما اضطجعت على صدرها
وأراد ذبحها جزعت المرأة فأطلق الله لسان ابنتها فتكلمت وهي من الأربعة الذين
تكلموا في المهد صغاراً أطفالاً وقالت يا أماه لا تجزعي فإن الله قد بنى لك بيتاً
في الجنة فاصبري فإنك تفضين إلى رحمة الله وكرامته فذبحت فلم تلبث الأم أن ماتت
فأسكنها الله الجنة قال : وبعث في طلب زوجها حزقيل فلم يقدروا عليه فقيل لفرعون
إنه قد رؤي في موضع كذا في جبل كذا فبعث رجلين في طلبه فانتهى إليه الرجلان , وهو
يصلي وثلاثة صفوف من الوحش خلفه يصلون فلما رأوا ذلك انصرفوا فقال , حزقيل :
اللّهم إنك تعلم أني كتمت إيماني مائة سنة ولم يظهر عليّ أحد فأيما هذين الرجلين
كتم عليّ فاهده إلى دينك وأعطه من الدنيا سؤاله وأيما هذين الرجلين أظهر عليّ فعجل
عقوبته في الدنيا واجعل مصيره في الآخرة إلى النار فانصرف الرجلان إلى فرعون فأما
أحدهما فاعتبر وآمن وأما الآخر فأخبر فرعون بالقصة على رؤوس الملأ فقال له فرعون
وهل معك غيرك قال نعم فلان فدعا به فقال أحق ما يقول هذا قال ما رأيت مما يقول
شيئاً فأعطاه فرعون وأجزل وأما الآخر فقتله ثم صلبه (تفسير خازن
சில அறிவிப்புகளில்
அப்பெண்ணை கட்டி வைத்து தேள்களையும் அவர் மீது சாட்டியதாகவும் அதன் பின்பு அந்த
அம்மையாரிடம் இப்போதாவது என்னை இறைவன் என ஏற்கிறாயா இல்லை இன்னும் இரண்டு மாதங்கள்
இந்த வேதனையை அனுபவிக்கிறாயா என்று கேட்க நீ இவ்வாறு எழுபது மாதங்கள் என்னை வேதனை
செய்தாலும் நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப் பின்பு தான் கொதிக்கும் ஈயத்தில்
போடப்பட்டது. மேலும் இவர்களைக் கொன்ற பின் அந்த அம்மையாரின் கணவரைத் தேடும்படி
ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான். அவர் ஒரு மலைப்பகுதியில் இருக்கிறார் என்று தெரிந்து
அவரைக் கொண்டு வர இருவரை ஃபிர்அவ்ன் அனுப்பினான். அவ்விருவர் அந்த
மலைப்பகுதிக்குச் சென்று அவருக்கு அருகில் நெருங்க முயற்சித்த போது
திடுக்கிட்டனர், காரணம் அவர் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் அணி
வகுத்து வன விலங்குகள் பாதுகாப்புக்கு நின்றன. உடனே அவ்விருவரும் திரும்பி
விட்டனர். ஆனால் அவர் இவ்விருவரையும் கவனித்து விட்டார். அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்
நான் நூறு வருடமாக என் ஈமானை மறைத்து வைத்திருந்தேன். எப்படியோ இவ்விருவரும்
என்னைப் பார்த்து விட்டனர். யாஅல்லாஹ் இவ்விருவரில் யார் இந்த இரகசியத்தை
ஃபிர்அவ்னிடம் சொல்லாமல் மறைக்கிறாரோ அவருக்கு ஹிதாயத்தை தா.. சுவனத்தைத் தா..
யார் இதை ஃபிர்அவ்னிடம் சென்று சொல்வாரோ அவரை இங்கேயே தண்டித்து விடு.. அவருக்கு
நரகத்தைத் தா.. என துஆச் செய்தார். அவ்வாறே அவர்களில் ஒருவர் ஈமான் கொண்டு
முஸ்லிமாகி விட்டார். பார்த்த செய்தியை ஃபிர்அவ்னிடம் மறைத்து விட்டார்.
இன்னொருவன் ஃபிர்அவ்னிடம் சென்று தான் கண்ட காட்சியை அப்படியே சொல்ல ஃபிர்அவ்ன்
அதை நம்பாமல் உன்னோடு இருந்தவர் எங்கே என்று கேட்டு அவரை வரவழைத்து அவரிடம் விபரம்
கேட்க, நாங்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இவர் கூறுவது போல் எந்தக்
காட்சியையும் நான் பார்க்கவில்லை என்றார். அவருக்கு வெகுமதியைக் கொடுத்த
ஃபிர்அவ்ன் உண்மையைச் சொன்ன இன்னொருவனைக் கொன்று சிலுவையில் அறைய உத்தரவிட்டான்-
தஃப்ஸீர் காஜின்
படிப்பினை- அல்லாஹ் முஃமினைக்
காப்பாற்றவும் செய்வான். ஷஹீதாக்கி அந்தஸ்தை உயர்த்தவும் செய்வான்
மூதாதையர்களின்
நல்வாழ்த்தைப் பெற்ற பிறகே விண்ணுலகப் பயணம் நடந்தேறியது
முக்கியமான
பயணம் புறப்படும்போது நல்லோர்களின் ஆசியைப் பெறவேண்டும்
என்பதை பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களையும் சந்தித்த நிகழ்வு உணர்த்துகிறது
நாம் பார்க்கும் கண்ணாக
அல்லாஹ் ஆகி விடும்போது எவ்வளவு தூரத்தில் உள்ளதையும் இங்கிருந்த படியே பார்க்க
முடியும்.
காஃபிர்கள் மிஃராஜை பொய்ப்படுத்தும் விதமாக பைத்துல்முகத்தஸை
நேரில் பார்த்தபடி வர்ணிக்கச் சொன்னார்கள் அப்போது நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ்பைத்துல்
முகத்தஸைக் காட்டிக் கொடுத்தான். அதைப் பார்த்த படியே வர்ணித்தார்கள்.
عن جَابِر رَضِيَ اللَّه
عَنْهُ يُحَدِّث أَنَّهُ سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " لَمَّا كَذَّبَتْنِي قُرَيْش حِين أُسْرِيَ
بِي إِلَى بَيْت الْمَقْدِس قُمْت فِي الْحِجْر فَجَلَّى اللَّه لِي بَيْت
الْمَقْدِس فَطَفِقْت أُخْبِرهُمْ عَنْ آيَاته وَأَنَا أَنْظُر إِلَيْهِ (بخاري)
بَاب حَدِيثِ الْإِسْرَاءِ –كتاب مناقب الأنصار
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّه عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ
آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ
مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ
بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي
يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا
وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ
اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ
تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ
مَسَاءَتَهُ (بخاري) باب التَّوَاضُعِ - كتاب الرقاق
அல்லாஹ்
பேசுகிறான். என்னுடைய அடியான் ஃபர்ளுகளைக் கொண்டு மட்டும் என்னை நெருங்கி விட
முடியாது. உபரியான வணக்கங்கள் மூலமாக அடியான் என்னை நெருங்கும்போது நான் அவனை
நேசிக்க ஆரம்பித்து விடுகிறேன். எப்போது என் அடியானை நான் நேசிக்க ஆரம்பித்து
விடுவேனோ அவன் கேட்கும் காதாக நான் ஆகி விடுவேன். அவன் பார்க்கும் கண்ணாக நான் ஆகி
விடுவேன். அவன் பிடிக்கும் கரங்களாக, நடக்கும் கால்களாக நான்ஆகி விடுவேன்.விளக்கம்-அடியானின்
காரியங்கள் அனைத்தையும் நலவுகளாக மாற்றி விடுவேன்.
அபூபக்கர் ரழி
அவர்களுக்கு சித்தீக் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்த மிஃராஜ் பயணம்
قَالَ
أَبُو سَلَمَة فَتَجَهَّزَ نَاس
مِنْ قُرَيْش إِلَى أَبِي بَكْر فَقَالُوا هَلْ لَك فِي صَاحِبك يَزْعُم أَنَّهُ
جَاءَ إِلَى بَيْت الْمَقْدِس ثُمَّ رَجَعَ إِلَى مَكَّة فِي لَيْلَة وَاحِدَة
فَقَالَ أَبُو بَكْر أَوَقَالَ ذَلِكَ ؟ قَالُوا نَعَمْ قَالَ فَأَنَا أَشْهَد
لَئِنْ كَانَ قَالَ ذَلِكَ لَقَدْ صَدَقَ قَالُوا فَتُصَدِّقهُ فِي أَنْ يَأْتِي
الشَّام فِي لَيْلَة وَاحِدَة ثُمَّ يَرْجِع إِلَى مَكَّة قَبْل أَنْ يُصْبِح؟ قَالَ
نَعَمْ أَنَا أُصَدِّقهُ بِأَبْعَد مِنْ ذَلِكَ
أُصَدِّقهُ بِخَبَرِ السَّمَاء قَالَ أَبُو سَلَمَة فَبِهَا سُمِّيَ أَبُو
بَكْر الصِّدِّيق (دلائل
النبوة)
மிராஜ் இரவு பயான்
عَنْ أَنَسِ أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
أُتِيتُ بِالْبُرَاقِ وَهُوَ دَابَّةٌ أَبْيَضُ طَوِيلٌ فَوْقَ الْحِمَارِ وَدُونَ
الْبَغْلِ يَضَعُ حَافِرَهُ عِنْدَ مُنْتَهَى طَرْفِهِ قَالَ فَرَكِبْتُهُ حَتَّى
أَتَيْتُ بَيْتَ الْمَقْدِسِ قَالَ فَرَبَطْتُهُ بِالْحَلْقَةِ الَّتِي يَرْبِطُ
بِهِ الْأَنْبِيَاءُ قَالَ ثُمَّ دَخَلْتُ الْمَسْجِدَ فَصَلَّيْتُ فِيهِ
رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجْتُ فَجَاءَنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام بِإِنَاءٍ
مِنْ خَمْرٍ وَإِنَاءٍ مِنْ لَبَنٍ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقَالَ جِبْرِيلُ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَرْتَ الْفِطْرَةَ (وفي رواية للبخاري
أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ)..ثُمَّ عَرَجَ بِنَا
إِلَى السَّمَاءِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ
قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ
بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِآدَمَ فَرَحَّبَ بِي وَدَعَا لِي
بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَاسْتَفْتَحَ
جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ
مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ
فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِابْنَيْ الْخَالَةِ عِيسَى ابْنِ مَرْيَمَ
وَيَحْيَى بْنِ زَكَرِيَّاءَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمَا فَرَحَّبَا وَدَعَوَا
لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ فَاسْتَفْتَحَ
جِبْرِيلُ فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ
مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ
قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِيُوسُفَ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا هُوَ قَدْ أُعْطِيَ شَطْرَ
الْحُسْنِ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ
الرَّابِعَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام قِيلَ مَنْ هَذَا قَالَ
جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قَالَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ
قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِدْرِيسَ فَرَحَّبَ
وَدَعَا لِي بِخَيْرٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ{ وَرَفَعْنَاهُ مَكَانًا
عَلِيًّا }ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الْخَامِسَةِ فَاسْتَفْتَحَ
جِبْرِيلُ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ
قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا
أَنَا بِهَارُونَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ
فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ
قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ
بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِمُوسَى صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ
عَرَجَ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ هَذَا
قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ
لَنَا فَإِذَا أَنَا بِإِبْرَاهِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْبَيْتِ الْمَعْمُورِ
وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ
إِلَيْهِ ثُمَّ ذَهَبَ بِي إِلَى السِّدْرَةِ الْمُنْتَهَى وَإِذَا وَرَقُهَا
كَآذَانِ الْفِيَلَةِ وَإِذَا ثَمَرُهَا كَالْقِلَالِ قَالَ فَلَمَّا غَشِيَهَا
مِنْ أَمْرِ اللَّهِ مَا غَشِيَ تَغَيَّرَتْ فَمَا أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ
يَسْتَطِيعُ أَنْ يَنْعَتَهَا مِنْ حُسْنِهَا فَأَوْحَى اللَّهُ إِلَيَّ مَا أَوْحَى
فَفَرَضَ عَلَيَّ خَمْسِينَ صَلَاةً فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَنَزَلْتُ إِلَى
مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا
فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ خَمْسِينَ صَلَاةً قَالَ ارْجِعْ إِلَى
رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَإِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ
فَإِنِّي قَدْ بَلَوْتُ بَنِي إِسْرَائِيلَ وَخَبَرْتُهُمْ قَالَ فَرَجَعْتُ إِلَى
رَبِّي فَقُلْتُ يَا رَبِّ خَفِّفْ عَلَى أُمَّتِي فَحَطَّ عَنِّي خَمْسًا
فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقُلْتُ حَطَّ عَنِّي خَمْسًا قَالَ إِنَّ أُمَّتَكَ لَا
يُطِيقُونَ ذَلِكَ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ قَالَ فَلَمْ
أَزَلْ أَرْجِعُ بَيْنَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى وَبَيْنَ مُوسَى عَلَيْهِ
السَّلَام حَتَّى قَالَ يَا مُحَمَّدُ إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ
وَلَيْلَةٍ لِكُلِّ صَلَاةٍ عَشْرٌ فَذَلِكَ خَمْسُونَ صَلَاةً وَمَنْ هَمَّ
بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ
لَهُ عَشْرًا وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ شَيْئًا
فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ سَيِّئَةً وَاحِدَةً قَالَ فَنَزَلْتُ حَتَّى
انْتَهَيْتُ إِلَى مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَأَخْبَرْتُهُ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقُلْتُ قَدْ رَجَعْتُ إِلَى رَبِّي حَتَّى اسْتَحْيَيْتُ مِنْهُ (مسلم) بَاب الْإِسْرَاءِ- كِتَاب الْإِيمَانِ
கருத்து- முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின்
காவலரிடம் திற என்றார்கள். அவ்வானவர், யார் அவர்? என்று வினவினார். அதற்கு நான் தான் ஜிப்ரீல் என்று பதில்
கூறினார். அதற்கு அவ்வானவர், உம்முடன் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன்
முஹம்மது இருக்கிறார்கள், என்ற கூறினார்கள். அதற்கு வானவர் அவர்
அழைக்கப்பட்டிருக்கிறாரா? என்று கேட்டார், ஜிப்ரீல் ஆம் என்றார்கள். (இந்தக் கேள்விகளுக்குப் பின்னர்)
வானவர், முதல்
வானத்தைத் திறந்து கொடுத்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறிச் சென்றோம். அப்போது
அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரின் வலது பக்கம் சில மனிதர்களும் இடது
பக்கம் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தமது வலது பக்கமுள்ள மனிதர்களைப்
பார்த்தால் சிரிக்கிறார். தமது இடதுப் பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அம்மனிதர் நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார்.
அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் ஆதம்.
அவருடைய வலது பக்கமும் இடது பக்கமும் உள்ளவர்கள் அவருடைய சந்ததிகளிலுள்ள
மனிதர்கள். வலது பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள், இடது பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள்ஆவர்.
அவர் தமது வலது பக்கம் பார்த்துச் சிரிக்கிறார், தமது இடது பக்கம் பார்த்து அழுகிறார்
என்று கூறினார்கள்.
பின்னர் ஜிப்ரீல்(அலை)என்னை
இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தின் காவலரிடம் திற எனக்
கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்வியைப் போலவே இவரும் கேட்டு விட்டுத்
திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) கூறுகிறார்கள்: வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்
(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். ஆனால் முதல்
வானத்தில் ஆதம் (அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களையும்
கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை-
ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு இத்ரீஸ் (அலை) பக்கமாகச் சென்ற போது நல்ல
நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! என இத்ரீஸ் (அலை) கூறினார்கள். அப்போது இம்மனிதர்
யார்? என நான் கேட்டேன். இவர் இத்ரீஸ்
(அலை) என ஜிப்ரீல் (அலை) பதில் கூறினார்கள். பின்னர் மூஸா (அலை) பக்கமாகச்
சென்றபோது நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான்
மூஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின்னர் ஈஸா (அலை) பக்கமாகச் சென்றபோது
நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் ஈஸா (அலை)
என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின் இப்ராஹீம் (அலை) பக்கமாக நான் சென்றேன்.
அப்போது நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக! என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல் (அலை) இடம்
கேட்டேன். இவர் இப்ராஹீம் (அலை) என்று கூறினார்கள்.
ஒரு அறிவிப்பில் பின்னர் நான் மேலே கொண்டு
செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச்சென்ற போது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை
செவியுற்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. அல்லாஹ் உனது உம்மத்தின் மீது
ஜம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் (அதை ஏற்றுத்) திரும்பி நான் வந்து
கொண்டிருந்தபோது, மூஸா (அலை) பக்கமாகச் சென்றேன்.
அப்போது உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்? என்று கேட்டார்கள். ஜம்பது
நேரத் தொழுகையை கடமையாக்கினான் என்றேன். நீங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள்.
உங்கள் உம்மத்தினர் அதற்கு சக்தி பெற மாட்டார்கள். என மூஸா (அலை) அவர்கள்
கூறினார்கள். நான் திரும்பச் சென்றேன். அப்போது அதில் கொஞ்சத்தை அல்லாஹ்
குறைத்தான். (அதைப் பெற்றுக் கொண்டு) நான் மூஸா (அலை) இடம் வந்து கொஞ்சம்
குறைத்துள்ளான் என்றேன். நீங்கள் உங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள்
உம்மத்தினர் அதற்குச் சக்தி பெற மாட்டார்கள் என்றார்கள். நான் திரும்பிச்
சென்றேன். அதில் கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். (கொஞ்சம்
குறைத்தான் என்றேன்) நீங்கள்உங்கள் இறைவனிடம் திரும்பச்செல்லுங்கள். உங்கள்
உம்மத்தினர் இதற்கு சக்திபெற மாட்டார்கள். என்றார்கள். நான் திரும்பச் சென்றேன்
அப்போது ஜந்து நேரத் தொழுகையை கடமையாக்குகிறேன். அது ஜம்பதிற்குச் சமம். எனது
சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா (அலை)
இடம் வந்தேன். அப்போது உங்கள் இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்
என்றார்கள். இனிமேல் எனது இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) நான்
வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.
பின்னர் ஜிப்ரீல் (அலை) என்னை
ஸித்ரதுல் முன்தஹா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள்
சூழ்ந்திருந்தன.அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில்
நான் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன்.
சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொழுகை கடமையாக்கப்பட்ட நினைவு நாளில்
தொழுகையை தவறாமல் கடைபிடிப்பதாக உறுதி கொள்வோம்
(وفي حدبث ليلة الاسراء) فَلَمْ
أَزَلْ أَرْجِع بَيْن رَبِّي وَبَيْن مُوسَى وَيَحُطّ عَنِّي خَمْسًا خَمْسًا
حَتَّى قَالَ : يَا مُحَمَّد هُنَّ خَمْس صَلَوَات فِي كُلّ يَوْم وَلَيْلَة
بِكُلِّ صَلَاة عَشْر فَتِلْكَ خَمْسُونَ صَلَاة وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ
يَعْمَلهَا كُتِبَتْ لَهُ حَسَنَة فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ عَشْرًا (تفسير ابن
كثير)عَنِ ابْنِ عُمَرَ رض قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا
إِيمَانَ لِمَنْ لا أَمَانَةَ لَهُ وَلا
صَلاةَ لِمَنْ لا طُهُورَ لَهُ وَلا دِينَ لِمَنْ لا صَلاةَ لَهُ إِنَّمَا مَوْضِعُ الصَّلاةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ
(طبراني)عنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي
الله عنه قَالَ:
مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ
الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ حَيْثُ يُنَادَى بِهِنّ (رواه البيهقى فى شعب
الإيمان) (كنز العمال) عن أبي سعيد رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إن الله تعالى لم يفترض شيئا أفضل من التوحيد والصلاة ولو كان شيء
أفضل منهما لافترضه الله على ملائكته منهم راكع ومنهم ساجد(كنز العمال)
عن
أنس رضي الله عنه عن النَبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قال إنّ لله تعالى مَلَكاً يُنادِي عندَ كلِّ صلاةٍ يا بَني آدَمَ قُومُوا إلى نِيرَانِكُمْ
التي أوْقَدْتُمُوها على أنْفُسِكُمْ فَأَطْفِئُوها بالصَّلاةِ (رواه الطبرانى) عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يَقُولُ اللهُ
عَزَّ وَجَلَّ: إِنِّي لَأَهُمُّ بِأَهْلِ
الْأَرْضِ عَذَابًا فَإِذَا نَظَرْتُ إِلَى عُمَّارِ بُيُوتِي والْمُتَحَابِّينَ
فِيَّ والْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ صَرَفْتُ عَنْهُمْ (البيهقى فى شعب الإيمان)
ஒருவருக்கு ஒரு தொழுகை தவறுவது அவருடைய
ஒட்டு மொத்த சொத்து சுகங்களும் பறிபோனதற்குச் சமம்
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ
أَهْلَهُ وَمَالَهُ (بخاري)
நபி ஸல் அவர்கள் மிஃராஜ் பயணத்தில் பாலை
தேர்ந்தெடுத்த காரணம்
ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا
خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ
أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ (مسلم) ومعناه والله أعلم اخترتَ علامة الاسلام
والاستقامة وجعل اللبنَ علامة لكونه سهلا طيبا طاهرا سائغا للشاربين سليم العاقبة
وأما الخمر فانها أم الخبائث وجالبة لأنواع من الشر فى الحال والمآل والله أعلم- قال الله تعالي وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ
لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا
سَائِغًا لِلشَّارِبِينَ (66النحل)
பால் என்பது தூய்மையான பானம். என்பதால் தான் இஸ்லாம் மார்க்கத்தை பாலுடன்
ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. மாட்டிலிருந்து கறக்கப்படும்போது சுத்தமான பாலாக
இருக்கிறது. பிறகு தான் அது பல வடிவங்களில் தயிர், மோர், வெண்ணெய், நெய், டீ,
காஃபி, கேக், பால்கோவா என பல வடிவங்களில் மாறுகிறது அதேபோல் ஒவ்வொரு குழந்தையும்
பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கிறது அதன் பெற்றோர்கள் தான் அவர்களை
மாற்றுகிறார்கள் என்பதும் பாலின் பரிசுத்தத் தன்மையை மனிதர்கள் பல வடிவங்களில்
மாற்றுகிறார்கள் என்பது போன்றாகும். மிஃராஜ் இரவில் பாலை தேர்ந்தெடுத்ததை பரிசுத்த
இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததற்குச் சமமாக கூறப்பட்டுள்ளது.
பாலை கனவில் காண்பது கூட நல்ல விஷயங்களுக்கான
அறிகுறியாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது
عن ابْن
عُمَرَ قَالَ قال رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا أَنَا نَائِمٌ
أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ
يَخْرُجُ مِنْ أَطْرَافِي وفي رواية مِنْ
أَظْفَارِي فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ
الْخَطَّابِ فَقَالَ مَنْ حَوْلَهُ فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ
قَالَ الْعِلْمَ (بخاري) باب اللَّبَنِ-كتاب
التعبير
மிஃராஜ் இரவில் இந்த உம்மத்துக்கு
வழங்கப்பட்ட மூன்று அற்புதமான பாக்கியங்கள்
فَأُعْطِيَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أُعْطِيَ
الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ وَغُفِرَ
لِمَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ مِنْ أُمَّتِهِ شَيْئًا الْمُقْحِمَاتُ (مسلم)
بَاب فِي ذِكْرِ سِدْرَةِ الْمُنْتَهَى-كِتَاب الْإِيمَانِ
சித்ரதுல் முன்தஹா என்று பெயர் வரக்
காரணம்
سدرة المنتهي وهي
شجرة في أقصى الجنة ينتهي إليها علم الأولين والآخرين ولا يتعداها أو أعمال العباد
أو نفوس السائحين في الملأ الأعلى فيجتمعون فيه اجتماع الناس في أنديتهم ولا يطلع
على ما وراءها غير الله (مرقاة)عَنْ عَبْدِ اللَّهِ
قَالَ لَمَّا أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
انْتُهِيَ بِهِ إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى وَهِيَ فِي السَّمَاءِ السَّادِسَةِ
إِلَيْهَا يَنْتَهِي مَا يُعْرَجُ بِهِ مِنْ الْأَرْضِ فَيُقْبَضُ مِنْهَا
وَإِلَيْهَا يَنْتَهِي مَا يُهْبَطُ بِهِ مِنْ فَوْقِهَا فَيُقْبَضُ مِنْهَا
(مسلم)
சித்ரத் என்றால் இலந்தை மரம். முன்தஹா
என்றால் முடிவு, எல்லை என்பதாகும். அதாவது இந்த இடத்தை தாண்டி எத்தகைய
படைப்புகளின் அறிவும் செல்லாது, மனிதர்களின் அமல்களை அல்லாஹ்விடம் மலக்குகள்
கொண்டு சென்றாலும் அதற்குரிய எல்லை இது தான். இதற்கு அப்பால் உள்ளதை அல்லாஹ்
மட்டுமே அறிவான்
மற்ற மரங்களை விட இலந்தை மரத்துக்கு
இவ்வளவு சிறப்பு வரக் காரணம்
قال
ابن دحية : اختيرت السدرة دون غيرها لأن فيها ثلاثة أوصاف : ظل ممدود ، وطعام لذيذ
، ورائحة زكية فكانت بمنزلة الإيمان الذي يجمع القول والعمل والنية ، والظل بمنزلة
العمل ، والطعم بمنزلة النية ، والرائحة بمنزلة القول .(فتح الباري)
இலந்தை மர இலையைக் கொண்டு தன் மகளின்
ஜனாஸாவை நபி ஸல் அவர்கள் குளிப்பாட்டச் சொன்னார்கள்
عَنْ
أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ
اغْسِلْنَهَا بِالسِّدْرِ
وِتْرًا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ
وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا
فَرَغْتُنَّ فَآذِنَّنِي فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَلْقَى إِلَيْنَا
حِقْوَهُ فَضَفَرْنَا شَعَرَهَا ثَلَاثَةَ قُرُونٍ وَأَلْقَيْنَاهَا خَلْفَهَا .(بخاري) - باب يُلْقَى شَعَرُ
الْمَرْأَةِ خَلْفَهَا- كتاب الجنائز
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக