ஜுமு ஆ பயான்கள்

31 12 2021

31-12-2021

26-05-1443

 

بسم الله الرحمن الرحيم                     

போதை இளைஞர்களும்,

புத்தாண்டுக் கொண்டாட்டமும்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

புத்தாண்டு என்றாலே  மதுவை ஞாபகப்படுத்தும் அளவுக்கு வருடத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மது விற்பனை அதிகம் நடைபெறும் நாள் ஜனவரி 1 ம் தேதி  ஆகும்.  மேலும் இன்று அதிகமாக போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் முஸ்லிம் வாலிபர்கள் மற்றவர்களை விட முதலிடத்தில் இருக்கின்றனர். புத்தாண்டு அன்று நள்ளிரவில் பைக் ரேஸ் வழக்கில் அதிகம் பிடிபடுபவர்களும் முஸ்லிமான போதை இளைஞர்கள் தான்.  எனவே இதைப் பற்றி ஜும்ஆவில் பேசுவது மட்டுமே நிறைவான பலனைத் தராது. சம்பந்தப்பட்ட வாலிபர்களில் எவரும் ஜும்ஆ பயானுக்கு வரப்போவதில்லை. எனவே ஒவ்வொரு மஹல்லாவிலும் இதற்கென தனியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஏற்படுத்தியோ அல்லது பள்ளி வாசலில் உடற்பயிற்சி,  கராத்தே, ட்யூஷன் போன்ற பொதுவானவற்றை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை மஸ்ஜிதின் பக்கம் எப்படியேனும் வரவழைத்து அதன் வழியாக அவர்களைத் திருத்த முயற்சிப்பது ஒவ்வொரு முஸல்லிகள் மீதும் கடமையாகும்.                 

உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.                                                             

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்ட கஞ்சா, பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள பெட்டிக்கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சாக்லெட், பிஸ்கட்டுகளோடு சேர்த்து வைத்தே விற்பனை செய்கிறார்கள். அந்தக் கடைகளில் வழக்கமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். புதிதாக யாரும் சென்றால் கொடுக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்... பேருந்து நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களிடம்கூட மிகச் சுலபமாகப் போதை மருந்துகள் கிடைக்கின்றன. பல இடங்களில் காவல்துறைக்கும் தெரிந்தே இத்தகைய போதை விற்பனை நடைபெறுகிறது.                                                                                              

மக்களிடம் பகைமையை உண்டாக்கி, இறைவனின் நினைவைத் தடுக்க ஷைத்தான் அறிமுகப்படுத்தியது மதுவும், சூதாட்டமும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ (91)المائدة

மதுவைத் தடை செய்த பின் அதன் ஞாபகமும் வரக்கூடாது என மது ஊற்றப் பயன்படும் பாத்திரத்தை நபி ஸல் தடை செய்தார்கள்

عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا (مسلم)

வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் பச்சையாக சாப்பிட்டு அதனால் ஏற்படும் வாடையைக் கூட மார்க்கம் விரும்புவதில்லை

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ... مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ (مسلم

யார் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வேக வைக்காத நிலையில் சாப்பிட்டாரோ அவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம்.

பீடி, சிகரெட் மார்க்கத்தில் வெறுக்கப்பட்டவை என்பதற்கு இதுவும் ஆதாரம்

அபூக்கர் ரழி அவர்கள் அறியாமைக் காலத்திலும் மதுவைத் தொட்டதில்லை. அதற்கான காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது

عن أبي العالية الرياحي قال : قيل لأبي بكر الصديق في مجمع من أصحاب رسول الله صلى الله عليه و سلم : هل شربت الخمر في الجاهلية ؟ فقال : أعوذ بالله فقيل : و لم ؟ قال : كنت أصون عرضي و أحفظ مروءتي فإن من شرب الخمر كان مضيعا في عرضه و مروءته قال : فبلغ ذلك رسول الله صلى الله عليه و سلم فقال : صدق أبو بكر صدق أبو بكر مرتين ( تاريخ الخلفاء

அபூபக்கர் ரழி கூறினார்கள்- நான் என் மனித த்தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மதுவை அருந்துபவர் மனித த்தன்மையை இழந்து விடுகிறான் என்றார்கள்.  ஹழ்ரத் அபூபக்கர் ரழி கூறியதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். வக்கிர புத்தியும் வன்முறை குணமும் குடிகாரனுக்கு ஏற்பட்டு விடுகிறது. மஹ்ரமான பெண்களிடம் கூட தவறாக நடந்து கொள்வார்கள்.

அபூக்கர் ரழி அவர்கள் அறியாமைக் காலத்திலும் மதுவைத் தொட்டதில்லை. அதற்கான காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة) 

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார்.  இதைக் கண்ட     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம்     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது

பாவங்களுக்கெல்லாம் தாய் என போதை வஸ்துக்களை உஸ்மான் ரழி அவர்கள் வர்ணித்தார்கள்

عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ اجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ إِنَّهُ كَانَ رَجُلٌ مِمَّنْ خَلَا قَبْلَكُمْ تَعَبَّدَ فَعَلِقَتْهُ امْرَأَةٌ غَوِيَّةٌ فَأَرْسَلَتْ إِلَيْهِ جَارِيَتَهَا فَقَالَتْ لَهُ إِنَّا نَدْعُوكَ لِلشَّهَادَةِ فَانْطَلَقَ مَعَ جَارِيَتِهَا فَطَفِقَتْ كُلَّمَا دَخَلَ بَابًا أَغْلَقَتْهُ دُونَهُ حَتَّى أَفْضَى إِلَى امْرَأَةٍ وَضِيئَةٍ عِنْدَهَا غُلَامٌ وَبَاطِيَةُ خَمْرٍ فَقَالَتْ إِنِّي وَاللَّهِ مَا دَعَوْتُكَ لِلشَّهَادَةِ وَلَكِنْ دَعَوْتُكَ لِتَقَعَ عَلَيَّ أَوْ تَشْرَبَ مِنْ هَذِهِ الْخَمْرَةِ كَأْسًا أَوْ تَقْتُلَ هَذَا الْغُلَامَ قَالَ فَاسْقِينِي مِنْ هَذَا الْخَمْرِ كَأْسًا فَسَقَتْهُ كَأْسًا قَالَ زِيدُونِي فَلَمْ يَرِمْ حَتَّى وَقَعَ عَلَيْهَا وَقَتَلَ النَّفْسَ فَاجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا وَاللَّهِ لَا يَجْتَمِعُ الْإِيمَانُ وَإِدْمَانُ الْخَمْرِ إِلَّا لَيُوشِكُ أَنْ يُخْرِجَ أَحَدُهُمَا صَاحِبَهُ  (نسائ

உஸ்மான் ரழி அவர்கள் கூறினார்கள் பாவங்களுக்கெல்லாம் தாயான மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் முற்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். அவருக்கு ஒரு  நடத்தை  கெட்ட பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது.  ஒருநாள் அவள்  தன் பணிப் பெண்ணை அனுப்பி  ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டதால் தனக்காக சாட்சி சொல்ல வரும்படி சொல்லியனுப்பினாள். அவரும் அவளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அங்கு வந்தார்.  ஆனால் அவர் வந்தவுடன் அப்பெண் கதவைத் தாழிட்டார். அங்கு அழகிய தோற்றத்தில் அவள் இருக்க அருகில் ஒரு குழந்தை இருந்தது. மதுவும் அருகில் இருந்தது.   அப்போது அப்பெண்  அவரிடம் சாட்சி சொல்ல உம்மை அழைக்கவில்லை. மாறாக நீ  என்னிடம் உறவு கொள்ள வேண்டும். அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும். அல்லது இக்குழந்தையைக் கொல்ல வேண்டும். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்த நகர முடியாது என்று கூற, அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஆகி விட்டது. அப்போது அவர்  மதுவை அருந்தினால் அந்தப் பாவம் நம்மோடு நின்று விடும். மற்ற இரண்டை விட்டும் தப்பித்து விடலாம் என்றெண்ணி மதுவை ஊற்றித் தரக்கூறினார். சற்று நேரத்தில் போதை  ஏறியவுடன்  அவளிடம் உறவும் கொண்டு விட்டார். போதையில் அக்குழந்தையையும் கொன்று விட்டார்.  எனவே மதுவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக  ஈமானும்  மதுப்பழக்கத்தில் மூழ்குவதும்  ஒரு மனிதனிடம் ஒருபோதும் ஒன்று சேராது என உஸ்மான் ரழி கூறினார்கள்.           

மதுவுக்கு அடிமையானவன் சிலை வணக்கம் செய்தவனைப் போன்று அல்லாஹ்வை சந்திப்பான்

عَنْ أَبِي الدَّرْدَاءِ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدْمِنُ الْخَمْرِ كَعَابِدِ وَثَنٍ (ابن ماجة-  عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "من لقي الله مدمن خمر, لقيه كعابد وثن" (صحيح ابن حبان.

மது அருந்திய நிலையில் இருப்பவனிடம் ஈமான் இருக்காது. அதே நிலையில் இறந்து விட்டால்...

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ (بخاري

மதுவில் சில நிவாரணங்கள் இருக்கிறதே என்று பலமுறை கேள்வி எழுப்பியவர்களிடம் நபி ஸல் கூறிய ஒரே பதில் அது நோயை உண்டாக்குமே தவிர நோயை குணப்படுத்தாது என்பதாகும். இன்றும் மது அருந்துவர்கள் பல காரணங்கள் சொல்லி நியாயப்படுத்துவார்கள்.

عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ ذَكَرَ طَارِقُ بْنُ سُوَيْدٍ أَوْ سُوَيْدُ بْنُ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَمْرِ فَنَهَاهُ ثُمَّ سَأَلَهُ فَنَهَاهُ فَقَالَ لَهُ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهَا دَوَاءٌ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا وَلَكِنَّهَا دَاءٌ (ترمذي

போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக்கியவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை’ (புகாரி)

இந்திய அளவில் அதிகம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என புள்ளி விபரம் கூறுகிறது. முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் இடங்களைத் தேர்ந்தெடுத்து  சம்பந்தப்பட்ட ஏஜென்ட்டுகள்  மற்றவர்களுக்குத் தருவதை விட குறைந்த விலைக்கு  கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை விற்று முஸ்லிம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி விடுகின்றனர் என ஆதாரப் பூர்வமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன                         

புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது அறிவுக்கு ஏற்புடைய விஷயமா ?

புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பம் என்பது அதாவது காலங்கள் கடந்து கொண்டிருப்பது கவலையான விஷயமே தவிர மகிழ்ச்சியான விஷயம் அல்ல. காரணம் வாழ்க்கை எனும் பயணம் உண்மையில் மரணத்தை நோக்கிய பயணமாகும். ஒருவருடைய 80 வருட வாழ்க்கையில்  20 வயது முடிந்து 21 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 60 வருடம் தான். அதேபோல் 30 வயது முடிந்து 31 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 50 வருடம் தான். அதேபோல் 70 வயது முடிந்து 71 வயது துவங்குகிறது என்றால் இன்னும் அவரது வாழ்நாள் 10 வருடம் தான். ஆகவே ஒருவரின் ஆயுள் குறைந்து கொண்டேயிருப்பதை ஆஹா என் ஆயுள் குறைந்து விட்டது என இனிப்பு வழங்கி கொண்டாடுவதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. இது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் பொருந்தும். அதே நேரத்தில் இஸ்லாமியப் புத்தாண்டு போன்ற தினங்களில் ஒரு முஸ்லிம் இத்தனை வருடங்களை கடந்து விட்டோம். இனி மீதமுள்ள என் வாழ்நாளில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக வாழ வேண்டும் என்று எண்ணுவதிலும், அதை செயல்படுத்தத் துவங்குவதிலும் தவறில்லை 

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்பது மூட நம்பிக்கையாகும்

முஸ்லிம்களின் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். பல பள்ளிவாசல்களில் ஆங்கிலப் புத்தாண்டு அன்று சுப்ஹு தொழுகையில் கூட்டம் நிரம்பி வழியும். ஜனவரி 1-ம் தேதி மட்டும் தொழுதால் வருடம் முழுவதும் தொழுததாக ஆகி விடும் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். இதுவும் ஒரு வகையில் மாற்று மத பண்டிகைகளை நாம் கொண்டாடுவது போலாகும்          

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு

அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளை நாம் கொண்டாடுவது பற்றி உலகின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களின் ஃபத்வா

قال ابن القيم رحمه الله  وأما التهنئة بشعائر الكفر المختصة به فحرام بالاتفاق  مثل أن يهنئهم بأعيادهم وصومهم  فيقول  عيد مبارك عليك ، أو تهنأ بهذا العيد ونحوه ، فهذا إن سلم قائله من الكفر فهو من المحرمات ، وهو بِمَنْزِلة أن يُهَنِّئه بسجوده للصليب ، بل ذلك أعظم إثماً عند الله ، وأشد مقتاً من التهنئة بشرب الخمر ، وقتل النفس ، وارتكاب الفَرْج الحرام ونحوه  وكثير ممَن لا قَدْر للدِّين عنده يقع في ذلك ولا يدري قبح ما فعل ، فمن هنأ عبداً بمعصية أو بدعة أو كُفر فقد تَعَرَّض لِمَقْت اللّه وسَخَطه (احكام اهل الذمة)

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது 'அஹ்காமு அஹ்லித்திம்மா' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் 'குப்ர்' அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக வாழ்த்துகிறாரோ (உதாரணமாக, மது அருந்தியதற்காக, அல்லது கொலை செய்ததற்காக, அல்லது விபச்சாரத்திற்காக ,) அல்லது பித்அத்திற்காக அல்லது குஃப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்' வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!        

மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை. அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும் ஹராமாகும்.

மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளை நாம் கொண்டாடுவது பற்றி சஹாபாக்களின் எச்சரிக்கை

عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ قَالَ قَالَ عُمَرُ رَضِىَ اللَّهُ عَنْهُ  لاَ تَعَلَّمُوا رَطَانَةَ الأَعَاجِمِ وَلاَ تَدْخُلُوا عَلَى الْمُشْرِكِينَ فِى كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ فَإِنَّ السُّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ. (رَطَانَةَ :هي كلام لا يفهم) عن عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ اجْتَنِبُوا أَعْدَاءَ اللَّهِ فِى عِيدِهِمْ (سنن الكبري للبيهقي) عَنْ عن عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ  مَنْ بَنَى بِبِلاَدِ الأَعَاجِمِ وَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ (سنن الكبري)

வாழ்க்கை என்பது மவ்த்தை நோக்கிய ஒரு பயணம் இந்தப் பயணத்தில் பலரும் தன் வாகனத்தில் ஏற நம்மை அழைப்பார்கள். ஷைத்தான்,  நஃப்ஸ், நண்பன் இப்படியாக பலரும் நம்மை அழைக்கும்போது கண்ட கண்ட வாகனத்தில் ஏறினால் நாம் போய்ச் சேருமிடம் நரகமாகி விடலாம். மற்றொரு புறம் குர்ஆனும் நம்மை அழைக்கும். அதன் வழியில் சென்றால் சுவனம்.

ஒரு பேருந்து நிலையத்தில் நிற்கும்போது தமது பஸ்ஸில் ஏறும்படி பலரும் கூவிக்கூவி நம்மை அழைத்தாலும் நாம் நிதானமாக யோசித்து எந்தப் பேருந்து பாதுகாப்பாகவும், விரைவாகவும் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என தேர்ந்தெடுக்கிறோம். வாழ்க்கைப் பயணம் என்பது அதை விட மிக முக்கியமானது

عن إبراهيم بن أدهم أنه كان يسير إلى بيت الله ، فإذا أعرابي على ناقة له فقال : يا شيخ إلى أين ؟فقال إبراهيم إلى بيت الله ، قال كأنك مجنون لا أرى لك مركباً ؛ ولا زاداً ، والسفر طويل ، فقال إبراهيم : إن لي مراكب كثيرة ولكنك لا تراها ، قال : وما هي ؟قال : إذا نزلت على بلية ركبت مركب الصبر ، وإذا نزل على نعمة ركبت مركب الشكر وإذا نزل بي القضاء ركبت مركب الرضا ، وإذا دعتني النفس إلى شيء علمت أن ما بقي من العمر أقل مما مضى فقال الأعرابي : سر بإذن الله فأنت الراكب وأنا الراجل.( تفسير الرازي

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் ஒருமுறை நடந்தே ஹஜ்ஜுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் வாகனத்தில் இவரைக் கடந்து சென்ற  ஒருவர் இப்றாஹீமே எங்கு செல்கிறீர்?  எனக்கேட்க, நான் கஃபாவை நோக்கிச் செல்கிறேன் என்று கூறிய போது உடனே அவர் உங்களிடம் எந்த வாகனமும், உணவும் இல்லாத நிலையில் நீண்ட தொலைவில் உள்ள கஃபாவுக்குச் செல்வதாக கூறுகிறீர் உமக்கென்ன பைத்தியமா?  என்றார். அதற்கு  இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் உம்மால் பார்க்க இயலாத எத்தனையோ வாகனங்கள் என்னிடம் உள்ளன. அதில் நான் பயணம் செய்கிறேன். எனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் பொறுமை எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். எனக்கு ஏதேனும் அல்லாஹ்வின் உபகாரம் கிடைத்தால் நன்றி செலுத்துதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன்.  நான் துஆ கேட்ட பின்பும் அல்லாஹ்வின் விதியின் படி நான் விரும்பாதது நடைபெற்றால் விதியைப் பொருந்திக் கொள்ளுதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என்னுடைய நஃப்ஸு ஏதேனும் தீமையை எனக்குத் தூண்டினால் நான் வாழ்ந்த காலங்களை விட நான் வாழப்போகும் காலங்கள் குறைவு என்று எண்ணும்அந்த வாகனத்தில் நான் பயணம் செய்வேன். என சொல்லிக் கொண்டேயிருக்க உடனே அந்த மனிதர் பதில் சொல்ல முடியாமல் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நீங்கள் தான் உண்மையிலேயே வாகனத்தில் செல்பவர் நான் நடந்து செல்பவன் என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்று விட்டார் 

 -----------------------------------





24 12 2021


24-12-2021

ஜமாதுல் அவ்வல்-19

 

بسم الله الرحمن الرحيم

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் பற்றிய

இஸ்லாமியக் கண்ணோட்டம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

முன்னுரை- ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் என்ற பெயரில் அம்மதத்தவர்கள் கொண்டாடும் வேளையில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பற்றிய உண்மை தகவல் முஸ்லிம்களில் பலருக்கு தெரிவதில்லை. அதனால் கிறிஸ்தவர்களிடம் இது பற்றி தஃவா செய்ய பலருக்கு துணிவு இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு இத்தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.            

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த விதம் பற்றி குர்ஆன் கூறுவது

وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا (16) فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا (17) قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا (18) قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا (19) قَالَتْ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌوَلَمْ أَكُ بَغِيًّا (20) قَالَ كَذَلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا (21) فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا (22) فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِقَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا (23) فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (24) وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (26) فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا (27) يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا (28) فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا (29) قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا (30) وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَمَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (32سورة مريم)

மேற்காணும் வசனத்தின் படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புவது உண்மையல்ல

வயிற்றில் இருக்கும்போதே தவ்ராத்தை கற்றுக் கொண்ட அதிசயம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நிகழ்ந்தது

عن أنس رض قال: كان عيسى بن مريم قد درس التوارة وأحكمها وهو في بطن أمه, فذلك قوله: {إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيّاً}  قال عكرمة: {آتَانِيَ الْكِتَابَ }أي: قضى أنه  يؤتيني الكتاب فيما قضى (تفسير ابن كثبر ) فقيل هذا الوحي نزل عليه وهو في بطن أمه وقيل لما انفصل من الأم آتاه الله الكتاب والنبوة وأنه تكلم مع أمه وأخبرها بحاله وأخبرها بأنه يكلمهم بما يدل على براءة حالها فلهذا أشارت إليه بالكلام. (تفسير الرازي)

வயிற்றில் இருக்கும்போதே வஹீ இறங்கியது என்று ஒரு அறிவிப்பிலும் மற்றொரு அறிவிப்பில் பிறந்த பின்பு வஹீ இறங்கியது அதைக் கொண்டு தான் அவர்கள் பேசினார்கள் தாயின் பத்தினித்தனத்தை நிரூபித்துக் காட்டினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.  

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியது ஈஸா அலைஹிஸ்ஸலாம் பேசியது அவர்களுக்கு அல்லாஹ் தந்த முஃஜிஸா

மேற்படி வசனத்தில் தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் அடிமை என ஈஸா நபியை அல்லாஹ் பேச வைத்த காரணம் பிற்காலத்தில் அவரை கடவுளாக்கி விடுவார்கள் என்பதால்..

عَنْ أَبِي هُرَيْرَةَ رضعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلَّا ثَلَاثَةٌ عِيسَى وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ كَانَ يُصَلِّي جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ فَقَالَ أُجِيبُهَا أَوْ أُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ لَا تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلَامًا فَقَالَتْ مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلَامَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلَامُ قَالَ الرَّاعِي قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍقَالَ لَا إِلَّا مِنْ طِينٍ وَكَانَتْ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتْ اللَّهُمَّ اجْعَلْ ابْنِي مِثْلَهُ فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ فَقَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْنِي مِثْلَهُ ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ قَالَ أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَصُّ إِصْبَعَهُ ثُمَّمُرَّ بِأَمَةٍ فَقَالَتْ اللَّهُمَّ لَا تَجْعَلْ ابْنِي مِثْلَ هَذِهِ فَتَرَكَ ثَدْيَهَا فَقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا فَقَالَتْ لِمَ ذَاكَ فَقَالَ الرَّاكِبُ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ وَهَذِهِ الْأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ وَلَمْ تَفْعَلْ (بخاري)باب (وَاذْكُرْ فِى الْكِتَابِ مَرْيَمَ)كتاب أحاديث الأنبياء

ஈஸா அலைஹிஸ்ஸலாம் செய்து காட்டிய அற்புதங்களில் இன்னும் சில.....

وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ (ال عمران

قال وهب: كان يطير ما دام الناس ينظرون إليه فإذا غاب عن أعينهم سقط ميتا ليتميز فعل الخلق من فعل الله تعالى. وقيل: لم يخلق غير الخفاش لأنه أكمل الطير خلقا ليكون أبلغ في القدرة لأن لها ثديا وأسنانا وأذنا، وهي تحيض وتطهر وتلد. ويقال: إنما طلبوا خلق خفاش لأنه أعجب من سائر الخلق؛ ومن عجائبه أنه لحم ودم يطير بغير ريش ويلد كما يلد الحيوان ولا يبيض كما يبيض سائر الطيور، فيكون له الضرع يخرج منه اللبن، ولا يبصر في ضوء النهار ولا في ظلمة الليل، وإنما يرى في ساعتين: بعد غروب الشمس ساعة وبعد طلوع الفجر ساعة قبل أن يُسفر جدا، ويضحك كما يضحك الإنسان، ويحيض كما تحيض المرأة. (قرطبي

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் களிமண்ணால் பறவை உருவம் செய்து அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர் பெறு என்பார்கள் அதற்கு உயிர் வந்து பறந்து செல்லும். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மட்டுமே பறந்து செல்லும். பிறகு கீழே விழுந்து மீண்டும் களி மண்ணாக மாறி விடும். மனிதர் மூலமாக அல்லாஹ் உருவாக்கும் அமைப்புக்கும் அல்லாஹ் நேரடியாக உருவாக்கும் படைப்புக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக..                                                                                                       

மேலும் நபி ஈஸா உருவாக்கிய பறவை என்பது வவ்வால் என்று கூறப்பட்டுள்ளது. ஏன் அதை தேர்வு செய்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. மக்கள் அதைத்தான் உருவாக்கும்படி ஈஸா அலை அவர்களிடம் கேட்டார்கள். காரணம் வவ்வால் ஒரு ஆச்சரியமான படைப்பு. மனிதனைப் போன்று அதற்கு ஒப்புவமை நிறைய உண்டு. பாலூட்டி இனமாக இருப்பதுடன் பற்கள், மார்பு ஆகியவை உண்டு. மனிதனைப் போன்ற சிரிக்கும். மனிதப் பிறவியைப் போன்று மாத விடாய் அதற்கு ஏற்படும்.                      

இறந்தவர்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர்ப்பித்துக் காட்டுவார்கள்.

{وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس: العاذر: وكان صديقا له، وابن العجوز وابنة العاشر وسام بن نوح؛ فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم: دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛ فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي)

நான்கு பேரை நபி ஈஸா அலை உயிர்ப்பித்துள்ளார்கள். 1. நபி ஈஸா அலஅவர்களின் நண்பரான ஆதிர். இவர் இறந்து சில கழிந்த நிலையில் அவரை உயிராக்கினார்கள். அவர் சில காலம் வாழ்ந்தார்.அவருக்கு குழந்தையும் பிறந்தது.  2. ஒரு மூதாட்டியின் மகன் அவரை பிணமாக ஒரு பலகை மீது வைத்துக் கொண்டு செல்லப்பட்டு அடக்கப்பட்டது. அடக்கியவர்கள் திரும்பி வந்த பின் அல்லாஹ்விடம் ஈஸா அலை துஆ செய்தபோது அவர் கப்ரில் இருந்து எழுந்து தனது ஆடையை அணிந்து கொண்டு அந்த பலகையையும் அவரே தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இவரும் சில காலம் இருந்தார்  3. ஒரு பெண். இவரையும் நபி ஈஸா அலை உயிராக்கினார்கள் இவருக்கு குழந்தையும் பிறந்தது 4. நபி நூஹ் அலை அவர்களின் மகன் ஸாம். மக்கள் அனைவரும் நபி ஈஸா அலை அவர்களிடம் நீங்கள் சமீபத்தில் இறந்தவர்களை மட்டும்தான் உயிராக்குகிறீர்கள் உங்களால் நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களை உயிராக்க முடியுமா..  குறிப்பாக நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நபி நூஹ் அலை அவர்களின் மகன் ஸாமை  உயிராக்க முடியுமா என்று கேட்க,அவரது கபரை காட்டுங்கள் என்றார்கள் அவ்வாறே அவரது கப்ரு காட்டப்பட்டது.  அனைவரும் உடன் இருக்க நபி    ஈஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்து ஸாமை உயிராக்கினார்கள். அவர் கபரில் இருந்து எழுந்தார். அவர இறக்கும்போது அவர் காலத்தில்  நரை இல்லை. ஆனால் இப்போது எழுப்பும்போது அவருக்கு நரை இருந்த து. அவரிடம் அது  பற்றி  ஈஸா அலை அவர்கள் காரணம் கேட்க, கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் நரைத்து விட்டது என்றார். அவரிடம் ஈஸா அலை அவர்கள் அவர் இறக்கும்போது அவரது சகராத் வேதனை எவ்வாறு இருந்த து என்று கேட்டார்கள் அதற்கு அவர் இன்னும் என் கழுத்தை விட்டும் அதன் தாக்கம் நீங்கவில்லை என்றார். வேறு சில அறிவிப்புகளில் அவர் ஈஸா அலை அவர்களிடம் நான் ஏற்கெனவே சகராதை அனுபவித்து விட்டதால் என்னை மீண்டும் மவ்த்தாக்கும்போது இன்னொரு சகராத் வேதனை எனக்கு வரக்கூடாது என்று வேண்டினார். அவ்வாறே நபி ஈஸா அலை மீண்டும் அவரை கப்ருக்குள் செல்ல வைத்தார்கள். இவர் மட்டும் உலகில் மீண்டும் வாழவில்லை

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஒரு போதும் தன்னை கடவுள் என்று கூறவில்லை

وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى بْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (117المائدة)

உங்களைப் போல் சாப்பிடுபவர், சுய தேவைகளை நிறைவேற்றுபவர் எப்படி கடவுளாக முடியும் என்று அறிவுரை கூறும் குர்ஆன்

لقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ بْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ (72) لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَذِينَ كَفَرُوا مِنْهُمْعَذَابٌ أَلِيمٌ (73) أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (74) مَا الْمَسِيحُ بْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ وَأُمُّهُ صِدِّيقَةٌ كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ انْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْآيَاتِ ثُمَّ انْظُرْ أَنَّى يُؤْفَكُونَ (75المائدة)

ஈஸா அலைஹிஸ்ஸலாம் எவ்வாறு கடவுளாக ஆக்கப்பட்டார்கள் என்ற பின்னணி

பைபிளின் பல வசனங்களில் இறை நல்லடியார்களை குறிப்பாக நபிமார்களை இறை மகன்கள் என்று கூறப்பட்டுள்ளது. விரிவாக கூற நேரமில்லை இஸ்ராயீல் (அதாவது யஃகூப் அலைஹிஸ்ஸலாம்)தாவீது (தாவூது அலைஹிஸ்ஸலாம்),சாலமன் (சுலைமான் அலைஹிஸ்ஸலாம்), ஆகியோரை கர்த்தரின் பிள்ளைகள் என்று கூறும் பல வசனங்கள் பைபிளில் இடம் பெற்றுள்ளன. மக்கள் அனைவரையும் கூட இவ்வாறு கூறும் வசனங்கள் பைபிளில் உள்ளன. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள் (உபாகமம் 14:1)அதனால் அனைவரும் கடவுளின் வாரிசுகளாகி விட முடியாது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் விஷயத்தில் அன்றியும்வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று உரைத்தது.(மத்தேயு 3:17) பைபிளில் உள்ள இது போன்ற பல வசனங்கள் அனைத்தும் இறை நேசர் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளதே தவிர இறை மகன் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை. இதை தவறாக புரிந்து தான் கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுள் என்கிறார்கள்

தான் கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க ஈஸா அலை பூமிக்கு வருவார்கள். அச்சமயம் வேதக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்பர்

وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا (159النساء) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا} (بخاري) باب نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ عليهما السلام-كتاب أحاديث الأنبياء

கிறிஸ்தவர்கள் கருதுவதைப் போன்று ஈஸா அலை சிலுவையில் அறையப்படவில்லை. அல்லாஹ் அவர்களை விண்ணுக்கு உயர்த்தி விட்டான். அப்படியானால் சிலுவையில் அறையப்பட்டது யார் என்பதில் இப்னு அப்பாஸ் ரழி கூற்று

وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا-بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ..(158النساء)عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قَالَ لَمَّا أَرَادَ اللَّه أَنْ يَرْفَع عِيسَى إِلَى السَّمَاء خَرَجَ عَلَى أَصْحَابه وَفِي الْبَيْت اِثْنَا عَشَر رَجُلًا مِنْ الْحَوَارِيِّينَ يَعْنِي فَخَرَجَ عَلَيْهِمْ مِنْ عَيْن فِي الْبَيْت وَرَأْسه يَقْطُر مَاء فَقَالَ : إِنَّ مِنْكُمْ مَنْ يَكْفُر بِي اِثْنَيْ عَشْر مَرَّة بَعْد أَنْ آمَنَ بِي قَالَ : ثُمَّ قَالَ أَيّكُمْ يُلْقَى عَلَيْهِ شَبَهِي فَيُقْتَل مَكَانِي وَيَكُون مَعِي فِي دَرَجَتِي فَقَامَ شَابّ مِنْ أَحْدَثهمْ سِنًّا فَقَالَ لَهُ: اِجْلِسْ ثُمَّ أَعَادَ عَلَيْهِمْ فَقَامَ ذَلِكَ الشَّابّ فَقَالَ: اِجْلِسْثُمَّ أَعَادَ عَلَيْهِمْ فَقَامَ الشَّابّ فَقَالَ : أَنَا فَقَالَ : هُوَ أَنْتَ ذَاكَ فَأُلْقِيَ عَلَيْهِ شَبَه عِيسَى -(وفي رواية قَالَ عيسي عليه السلام لِأَصْحَابِهِ أَيّكُمْ يُلْقَى عَلَيْهِ شَبَهِي وَهُوَ رَفِيقِي فِي الْجَنَّة ؟ فَانْتُدِبَ لِذَلِكَ شَابّ مِنْهُمْ فَكَأَنَّهُ اِسْتَصْغَرَهُ عَنْ ذَلِكَ فَأَعَادَهَا ثَانِيَة وَثَالِثَة وَكُلّ ذَلِكَ لَا يُنْتَدَب إِلَّا ذَلِكَ الشَّابّ فَقَالَ : أَنْتَ هُوَ وَأَلْقَى اللَّه عَلَيْهِ شَبَه عِيسَى)-وَرُفِعَ عِيسَى مِنْ رَوْزَنَة فِي الْبَيْت إِلَى السَّمَاء قَالَ : وَجَاءَ الطَّلَب مِنْ الْيَهُود فَأَخَذُوا الشَّبَه فَقَتَلُوهُ ثُمَّ صَلَبُوهُ (تفسير ابن كثير) (نسائ)

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் எப்போது தமது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்தார்களோ ஏப்போது தன் தோழர்களை அழைத்து அல்லாஹ் என்னை விண்ணுக்கு உயர்த்தப் போகிறான். ஆனால் அது என்னைக் கொல்ல நினைக்கும் எதிரிகளுக்கு தெரியக்கூடாது எனவே உங்களில் ஒருவருக்கு அல்லாஹ் எனது உருவத்தை அல்லாஹ் தந்து விடுவான் அவர் கொல்லப்படுவார் ஆனால் நாளை மறுமையில் அவருக்கு நிச்சயம் சுவனம் உண்டு எனக்கூறிய பின், இதற்கு உங்களில் யார் தயார் என்று கேட்க, ஒரு இளைஞர் எழுந்து நான் தயார் என்றார் அவர் இளைஞராக இருக்கிறாரே என்று தயங்கி மீண்டும் ஒருமுறை நபி ஈஸா அலைஹிஸல்லாம் அறிவிப்புச் செய்த போது மீண்டும் அவரே எழுந்தார். மூன்றாவது தடவையும் நபியவர்கள் அறிவித்த போது அவரே முன் வந்தார். அல்லாஹ்வின் தூதருக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்த அவரை எண்ணி நபியவர்கள் வியந்தார்கள். அதை அங்கீகரித்தார்கள். இறுதியில் அவர் தான் ஈஸா நபிக்கு பகரமாக கொல்லப்பட்டார் இது ஒரு அறிவிப்பாகும். மறரொரு அறிவிப்பில் கொல்ல வந்த யூதர்களில் ஒருவன் ஈஸா அலை இருக்கும் அறையில் நுழைந்தவுடன் ஈஸா நபியை அல்லாஹ் உயர்த்தி, அந்த யூதனுக்கு ஈஸா நபியின் உருவத்தை அல்லாஹ் கொடுத்தான் என்றும் அவனைத் தான் சந்தேகத்துடனேயே யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது– தஃப்ஸீர் இப்னுகஸீர்

ஒரு நபியின் உயிருக்கு ஆபத்து வரும்போது தன் உயிரைக் கொடுத்து பாதுகாப்பது தோழர்களின் கடமை என்பதால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இப்படி கூறினார்கள். இவ்வாறே உஹது போரில் நபி ஸல் அவர்களும் இவ்வாறு கூறினார்கள்

عَنْ أَنَسِ رضي الله عنهأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا(مسلم) بَاب غَزْوَةِ أُحُدٍ-  مَا أَنْصَفْنَا أَصْحَابَنَاأي ما أنصفت قريش الأنصار لكون القرشيين لم يخرجا للقتال بل خرجت الأنصار واحدا بعد واحد- وأنه يجب على الناس أن يقوا رسول الله بأنفسهم فلما قال ( من يردهم عنا ) كان ينبغي للكل أن يبادر فتأخر بعضهم ليس بإنصاف (شرح مسلم)

உஹதுப் போரின் போது நபி ஸல் அவர்கள் ஏழு நபித்தோழர்கள் மட்டும் பாதுகாப்புக்காக சுற்றி நின்றிருந்த நிலையில் கூட்டத்தை விட்டு தனித்து விடப்பட்டார்கள். ஏழு நபர்கள் மட்டும் தானே கூட இருக்கிறார்கள் என்றெண்ணி எதிரிகள் தைரியம் கொண்டு நபி ஸல் அவர்களைச் சுற்றி வளைத்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் தம் தோழர்களிடம் இப்போது உங்களில் எவர் கேடயமாக இருந்து என்னைப் பாதுகாப்பாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார் என்று கூறியவுடன் நபி ஸல் அவர்களின் உயிரைப் பாதுகாக்க தம் உயிரையும் தியாகம் செய்ய ஒரு அன்சாரித்தோழர்  உடனே முன்வந்தார். முடிந்தவரை நபிகளாரை நெருங்க விடாமல் எதிரிகளுடன் போராடி இறுதியில் ஷஹீதாக்கப்பட்டார். மறுபடியும் எதிரிகள் நபிகளாரை முன்னோக்கி வர மீண்டும்  நபி ஸல் அவர்கள் இப்போது உங்களில் எவர் கேடயமாக இருந்து என்னைப் பாதுகாப்பாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார் என அறிவிப்புச் செய்தார்கள். அப்போதும் மற்றொரு அன்சாரித் தோழர் முன் வந்தார். அவரும் ஷஹீதாக்கப்பட்டார். இவ்வாறே ஏழு அன்சாரிகள் ஷஹீதாக்கப்பட்டனர்.                                                                   

தன் உயிர் போனாலும் நபி ஸல் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று அன்சாரி சஹாபியின் அறிவுரை

ஹழ்ரத் ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் நபி ஸல் அவர்களுக்குப் பிரியமான அன்சாரீ  சஹாபீ. நபி ஸல் அவர்களை மதீனாவுக்கு வரும்படியும் அங்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் தருகிறோம் என்று கூறி அகபாவில் ஒப்பந்தம் செய்தவர்களில் இவரும் ஒருவர். உஹதுப் போர் முடிந்த போது நபி ஸல் அவர்கள் தோழர்களிடம் உங்களில் யாரேனும் சென்று ஸஃது இப்னு ரபீஉ ரழி எந்த இடத்தில் குற்றுயிராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு அவர் இறுதியாக என்ன சொல்கிறார். என்பதையும் கேட்டு வரும்படி அனுப்புகிறார்கள். ஹழ்ரத் ஜைதுப்னு தாபித் ரழி அவர்கள் சென்று பார்த்தபோது ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் எழுபது வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக மயக்கமுற்றுக் கிடந்தார்கள். அந்த எழுபது வெட்டுகளில் 12 மட்டுமே அன்னாரின் விழிப்பு நிலையில் எதிரிகள் வெட்டியதாகும் மீதி அனைத்தும் அன்னார் மயக்கமுற்ற பிறகு வெட்டியதாகும். மயக்கம் தெளிந்த பின் அவர்கள் ஜைது ரழி அவர்களை நோக்கி நான் இன்னும் சற்றுநேரத்தில் இறந்து விடுவேன். என் பாசமுள்ள நபிக்கு என் சலாமைக் கூறுங்கள். மேலும் இத்தகைய ஷஹாதத் என்னும் மாபெரும் பாக்கியத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்ததற்காக என் சார்பில் நன்றியும் கூறுங்கள். என் நண்பர்கள் அனைவருக்கும் என் சலாமைக் கூறுங்கள் மேலும் எனது நண்பர்களிடம் கூறுங்கள். நம் தோழர்களில் யாரேனும் உயிருடன் இருக்கும் நிலையில் நமது உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை எதிரிகளில் ஒருவன் நெருங்கினால் அந்த தோழரின் கண்களில் மட்டுமே உயிர் ஒட்டியிருந்தாலும் சரி, அந்த நிலையில் அவர் நமது நபியைப் பாதுகாக்கத் தவறினால் அவரை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான் என்று கூறுங்கள் என்றார்.இந்த வார்த்தையைக் கூறிய சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. நூல் ஜாதுல் மஆத்                                                                                              

நபி ஸல் அவர்களைப் பற்றி ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறிய முன்னறிவிப்புகள் இன்றைய பைபிளில்....

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف:6

மேற்கானும் வசனம் பைபிளில் பின்வருமாறு- நான் பிதாவைவேண்டிக்கொள்ளுவேன். அப்போதுஎன்றைக்கும் உங்களுடனே கூடஇருக்கும்படிக்கு சத்தியஆவியாக வேறொரு தேற்றரவாளரைஅவர் உங்களுக்குத்தந்தருள்வார் (யோவான் 14:16)'பிதாவிடத்திலிருந்து நான்உங்களுக்குஅனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்துபுறப்படுகிறவருமாகிய சத்தியஆவியான தேற்றரவாளர் வரும்போது, அவர் என்னைக் குறித்துச்சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26)'அப்பொழுது கர்த்தர் என்னைநோக்கி,. உன்னைப் போல ஒருதீர்க்க தரிசியை நான்அவர்களுக்கு அவர்கள்சகோதரர்களிடமிருந்துஎழும்பப்பண்ணி, என்வார்த்தைகளை அவர் வாயில்அருளுவேன். நான் அவருக்குக்கற்பிப்பதையெல்லாம்அவர்களுக்குச் சொல்லுவார்.என் நாமத்திலே அவர் சொல்லும்என் வார்த்தைகளுக்குச்செவிகேடாதவன் எவனோ அவனை நான்விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19) பைபிளில் இடம்பெற்றுள்ள இந்த வசனங்களில் நபியவர்களின் பெயரை திரித்துதேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்பர்.                                                                    

ஈஸா அலை போதித்த உண்மை வழிமுறை எது என்பது ஜோர்டான் குகைவாசிகளின் குகையிலிருந்து வெளிப்பட்டுள்ளது

أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا - وَقَالَ عَلِيّ بْن أَبِي طَلْحَة عَنْ اِبْن عَبَّاس : الرَّقِيم الْكِتَاب (تفسير ابن كثير)

இந்த வசனத்தில் குகைவாசிகள் என்றுமட்டும் குறிப்பிடாமல் ரகீம் உடையவர்கள் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். இந்த ரகீம் என்ற வார்த்தைக்கு நபித்தோழர்கள் பல விளக்கங்கள் கூறினாலும் அதில் இப்னு அப்பாஸ் ரழி கூறும் ஒரு விளக்கம்சுவடிகள், ஏடுகள் உடையவர்கள் என்பதாகும். அந்தஏடுகள்பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள்தெரிய வரும் என்பதற்காகவே அல்லாஹ்அவ்வாறு கூறியிருக்க முடியும். அது என்ன ஏடு என்பதுகடந்து நூற்றாண்டின் இறுதியில் அம்பலமாகியுள்ளன. "சாவுக்கடல் சாசனச் சுருள்கள்" என்ற தலைப்பில் 1998ஆம் ஆண்டு ஒரு மாதத்தில்பல தடவை பி.பி.சி. தொலைக் காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றுஒளிபரப்பப்பட்டது. அதன் விபரமாவது –

 

1947ஆம் ஆண்டு ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போனதனது ஆட்டைத்தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி "கும்ரான் மலைப் பகுதி" என்றுஅழைக்கப்படுகிறது.ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண்பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக்கண்டுள்ளான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத்தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறு நாள் தந்தையும், மகனும் சேர்ந்துகுகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்துசேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணியஅந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்தவார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியின்கீழிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம்காண்பித்திருக்கிறார்.ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச்செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்குவாங்கிக் கொண்டார்.கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்தகிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது.அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும்ஆர்வம் காட்டினர்.அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், "அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாகஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும்" என்று விண்ணப்பித்தார். ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், "அது தனியார் சொத்து" என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சிலகுழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த குகைகளில்தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டுவந்து விட்டனர்.1952 செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப்பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்தன.

 

பதினைந்தாயிரம்கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்போது கணக்கிட்டு உள்ளனர்.கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிக்க ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால்அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.இவ்விதமாக இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாகவைக்கப்பட்டு வந்தன.

இந்த இரகசியக் காப்பில் போப் ஆண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன்ரகசியக் காப்பாளர்கள் அவற்றை நுண்ணிய படச்சுருளாக எடுத்தார்கள்.அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்குப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர்நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின்நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப்படித்தார்.அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம்அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவசபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்த உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர்ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர்கருதிய 100கையெழுத்துப் பிரதிகளை ஆங்கிலத்தில்மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாககிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்தடாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடுஇருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்குஉட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர்குறிப்பிடுகிறார்.அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்கவிரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும்அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது. கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச்சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

 













17 12 2021


17-12-2021

10-05-1443

 

بسم الله الرحمن الرحيم                

நல்லோர்களைப் பின்பற்றுதல்

(கடந்த வாரத் தொடர்)

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

ஆட்டு மந்தைக் கோட்பாடு என்ற தலைப்பில் கடந்த வாரத் தலைப்பைப் பார்த்தோம். அடிப்படையில்லாத விஷயங்களில்  கண்ட கண்ட கலாச்சாரங்களை கண்மூடித்தனமான பின்பற்றுதல் தான் ஆட்டு மந்தைக் கோட்பாடு என்று அறியப்படும். ஆனால் அடிப்படையுள்ள விஷயங்களில் நல்லோர்களைப் பின்பற்றுவது இதில் கட்டுப்படாது.                                                                   

அடிப்படையில்லாமல் பின்பற்றியவர்கள் தான் நாளை மறுமையில் உன்னால் நான் கெட்டுப் போனேன் என ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வர்.

وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِنْدَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ (31) قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ (32) سبا

ஸஹாபாக்களைப் பின்பற்றுவது, மேலும்  நபி ஸல் அவர்களால் சிறந்த காலம் என்று வர்ணிக்கப்பட்ட பொற்காலத்தைச் சார்ந்தவர்களான  நான்கு இமாம்களைப் பின்பற்றுவது, இறைநேசர்களைப் பின்பற்றுவது, ஷைகுமார்களைப் பின்பற்றுவது, தொழுகையில் இமாமைப் பின்பற்றுவது  ஆகியவை  அடிப்படையுடன் கூடிய பின்பற்றுதலாகும்.

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (100) التوبة   -  أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (133)البقرة  -   وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ (21)الطور

பிரயாணம் என்றால் கூட நமக்குள் ஒருவரை அமீராக ஆக்கி அவரின் ஆலோசனையைப் பின்பற்ற மார்க்கம் வலியுறுத்துகிறது.

عَنْ نَافِعٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ قَالَ نَافِعٌ فَقُلْنَا لِأَبِي سَلَمَةَ فَأَنْتَ أَمِيرُنَا (ابوداود

வேறு எந்த மதத்திலும் இல்லாத வகையில் ஒரு இமாமைப் பின்பற்றி ஒரே சீராக  தொழுவது  நம்முடைய சிறப்பம்சம்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا وَإِذَا قَالَ{ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ } فَقُولُوا آمِينَ وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعِينَ  (ابن ماجة

நல்லோர்களைப் பின் தொடர்ந்து சென்ற நாய்க்குக் கூட நற்பாக்கியம் கிடைத்தது.

سَيَقُولُونَ ثَلَاثَةٌ رَابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَيْبِ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ قُلْ رَبِّي أَعْلَمُ بِعِدَّتِهِمْ (22)الكهف

وقال كعب: مروا بكلب فنبح لهم فطردوه فعاد فطردوه مرارا، فقام الكلب على رجليه ورفع يديه إلى السماء كهيئة الداعي، فنطق فقال: لا تخافوا مني أنا أحب أحباء الله تعالى.. (قرطبي

குகைவாசிகளான இளைஞர்கள் ஓடியபோது கூடவே சேர்ந்து நாயும் ஓடி வந்தது. அதனை விரட்டினார்கள்.ஆனால் அது மீண்டும் பின் தொடர்ந்து வந்த து. இறுதியில் அது தன் கைகளை வானத்தின் பால் உயர்த்தி துஆக் கேட்ட நிலையில் அவர்களிடம் நான் அல்லாஹ்வின் நேசர்களை நேசிக்கிறேன் எனவே உங்களைப் பின் தொடர்கிறேன் என்று பேசியது. அவர்கள் அந்த நாயையும் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.அவர்கள் தூங்கிய 300 வருடங்கள் அந்த நாயும் தூங்கியது. அவர்கள் விழித்த போது அந்த நாயும் விழித்தது.                                                                     

முஸ்லிம்களுக்கென ஒழுங்கான  ஒரு தலைமை அமைந்து விட்டால் அதைப் பின்பற்றியே தீர வேண்டும். இல்லா விட்டால் கடும் விளைவை முஸ்லிம்கள் சந்திப்பார்கள்.

عن حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَيْرِ وَكُنْتُ أَسْأَلُهُ عَنْ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ نَعَمْ وَفِيهِ دَخَنٌ قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا فَقَالَ هُمْ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ قَالَ فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ (بخاري

எல்லோரும்  நடைபெறப்போகும் நன்மையைப் பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டார்கள். ஆனால் நான் நடைபெறப்போகும் தீமையைப் பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அது என்னை அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு கேட்டேன். அப்போது நபி ஸல்  ஆம் எனக்குப் பின்னால் மக்களை நரகத்துடைய வாசல்களின்  பக்கம் அழைக்கக்கூடிய ஒரு கூட்டம் தோன்றும்.  அவர்களுக்கு பதில் அளிப்பவர்களை அவர்கள் நரகின் படுகுழியில் தள்ளி விடுவார்கள். என்று கூறினார்கள்.. பின்பு நான் அவர்களை வர்ணித்துக் காட்டுங்கள் என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் அது நம்முடைய இனம் தான்.  நம்முடைய பாஷை பேசுபவர்கள் தான்.  என்றார்கள். பின்பு நான் நபி ஸல் அவர்களிடம் அந்த நிலையை நான் அடைந்தால் நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள்  முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அதன் தலைமையையும் நீ பற்றிப் பிடித்துக் கொள். (கூட்டமைப்பை விட்டும் இமாமுக்குக் கட்டுப்படுவதை விட்டும் நீ விலகி விடாதே.). அந்த நேரத்தில் ஒழுங்கான தலைமையே இல்லா விட்டால் நீ எந்தக் கூட்டத்துடனும் சேராமல் ஒதுங்கி விடு.  மலை உச்சியில் ஒரு மரத்தின் கிளையை பற்களால் கடித்துத் தொங்கிய படி வாழ்க்கையை கழித்தாலும் சரி   (கீழே விழுந்து  குழப்பங்களின் கூடாரத்தில் சிக்கி விடாதே.. )

நான்கு இமாம்களில் ஒருவரை தக்லீத் செய்வதின் (பின்பற்றுவதின்) அவசியம் பற்றி...

சிறந்த காலம் என்று போற்றப்பட்ட  காலங்களில் வாழ்ந்தவர்கள் தான் இமாம்கள் அவர்கள் செய்த ஆய்வுகள் சரியாகத்தான் இருக்கும் என நம்பி ஆதாரங்களைத் தேடாமல் அவர்களைப் பின்பற்றுவதே தக்லீத்.. 

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ (بخاري

 குர்ஆன் ஹதீஸ் போதும் மத்ஹபுகள் வேண்டாம் என்று சொல்பவர்கள் தங்களை அறியாமலேயே ஒரு மத்ஹபைப் பின்பற்றுகின்றனர்.  என்ன சந்தேகம் என்றாலும் தங்களின் தலைவரிடம் சென்று சந்தேகத்தைக் கேட்கின்றனர். அவர் சொல்லும் விளக்கத்தை அப்படியே ஏற்று அண்ணன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நம்புகின்றனர். அதையே நாம் கூறும்போது இதே நம்பிக்கையை நபி ஸல் அவர்களால் சிறந்த காலம் என்று போற்றப்பட்ட  காலங்களில் வாழ்ந்த  இமாம்கள் மீது வையுங்கள் என்கிறோம்.                                                                                                           

சஹாபாக்கள் காலத்தில் இருந்ததா என்று  கேட்பவர்களுக்கு பதில்- புகாரீ ஷரீஃபில் பின்வரும் ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. நபி ஸல் அவர்கள் கூறியதை இரண்டு விதமாக புரிந்து நபித்தோழர்கள் செயல்பட்டபோது இரண்டையும் ஆமோதித்தார்கள்

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ لَا يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلَّا فِي بَنِي قُرَيْظَةَ فَأَدْرَكَ بَعْضُهُمْ الْعَصْرَ فِي الطَّرِيقِ فَقَالَ بَعْضُهُمْ لَا نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي لَمْ يُرِدْ مِنَّا ذَلِكَ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ (بخاري) باب صَلاَةِ الطَّالِبِ وَالْمَطْلُوبِ رَاكِبًا وَإِيمَاءً – كتاب صلاة الخوف

அஹ்ஜாப் போரில்  நபி ஸல் அவர்கள் படையை அனுப்பும்போது உங்களில் எவரும் பனூ குரைழா கோத்திரத்தார் வசிக்கும் இடத்திற்குச் சென்றே தவிர அசர் தொழ வேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள். செல்லும் வழியிலேயே அசர் நேரம் வந்து விட்டதால் (அங்கு செல்வதற்குள் அசர் முடிந்து விடுமோ என்று சிலர் அஞ்சினர். நபி ஸல் அவர்கள் கூறியது நாம் சீக்கிரமாக அந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்று எண்ணி) வழியிலேயே அசர் தொழுது விட்டார்கள். வேறு சிலர் அங்கு சென்ற பின்பே அசர் தொழுதனர்.  நபி ஸல் அவர்கள் அந்த இரு சாராரில் எவரையும் கண்டிக்கவில்லை. (இரண்டும் சரி தான் என்பது அதற்கு அர்த்தம்.

  மத்ஹபுகள் உருவானது குர்ஆனில் இருந்து தான்...

குர்ஆனில் சில இடங்களில் ஒரு அரபி வார்த்தைக்கு இரு விதமான அர்த்தங்கள்  இருக்கும். அந்த இரு அர்த்தங்களும் முரண்பாடானதாகவும்  இருக்கும். அத்தகைய அரபி வார்த்தைகளை அல்லாஹ் பல இடங்களில் கூறியிருப்பது ஏன் என்று சிந்தித்தாலே போதும். சட்டங்களில் கருத்து வேறுபாடுகள் தவிரக்க முடியாதவை என்பது புரிந்து விடும்.

وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلاَثَةَ قُرُوءٍ (البقرة (228) أي ثلاث حيض وقال بعضهم ثلاثة أطهار

மேற்படி வசனத்தில் குரூஉ என்ற அரபி வார்த்தைக்கு முரண்பாடான இரு அர்த்தங்கள் உண்டு. இதில் ஒன்று ஹனஃபீ மத்ஹப், மற்றொன்று ஷாஃபிஈ மத்ஹப். இது எப்படி குர்ஆனுக்கு மாற்றமாக இருக்க முடியும்

எந்த பிரச்சனைகளுக்கான தீர்வை குர்ஆனிலும், ஹதீஸிலும் நேரடியாக பெற்றுக் கொள்ள முடியவில்லையோ  அத்தகைய பிரச்சினைகளில் குர்ஆனையும், ஹதீஸையும்,  அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யும் போது கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. இன்னும் சொல்லப் போனால் இந்த வேலையை மத்ஹப் மறுப்பாளர்களும் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். நவீன பிரச்சினைகளுக்கு அவர்கள் வெளியிட்ட ஃபத்வா நூல்களில் ஆயிரக்கணக்கான சட்டங்கள் குர்ஆன், ஹதீஸிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதல்ல. கியாஸ் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. அப்படியானால் அதைத் தானே இமாம்களும் செய்தார்கள். அதை ஏன் குறை கூற வேண்டும்.  

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் பேணுதல், கொடைத்தன்மை, ஆகியவற்றைப் பற்றி ஷாஃபிஈ இமாம் கூறுவது

நான்கு இமாம்களில் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.

وفي تهذيب الكمال عن الإمام الشافعي الناس عيال على أبي حنيفة في الفقه وعن ابن مبارك ما رأيت أورع من أبي حنيفة وعن مكي بن إبراهيم كان أعلم أهل زمانه. لما مات صلي عليه ست مرات كثرة الزحام وعن وكيع قال: كان أبو حنيفة عظيم الأمانة، وكان يؤثر رضا الله تعالى على كل شىء،- وعن ابن المبارك، قال: قلت لسفيان الثورى: ما أبعد أبا حنيفة من الغيبة، ما سمعته يغتاب عدوًا له قط، قال: هو والله أعقل من أن يسلط على حسناته ما يذهب بها. وعن على بن عاصم، قال: لو وزن عقل أبى حنيفة بعقل نصف أهل الأرض لرجح بهم.

وعن قيس بن الربيع، قال: كان أبو حنيفة ورعًا، فقيهًا، كثير البر والصلة لكل من لجأ إليه، كثير الأفضال على إخوانه، وكان يبعث البضائع إلى بغداد فيشترى بها الأمتعة، ويجلب إلى الكوفة، ويجمع الأرباح من سنة إلى سنة، فيشترى بها حوائج الأشياخ المحدثين وأثوابهم وكسوتهم، وما يحتجون إليه، ثم يعطيهم باقى الدنانير من الأرباح، ويقول: أنفقوها فى حوائجكم، ولا تحمدوا إلا الله تعالى، فإنه والله ما يجريه الله لكم على يدى، فما فى رزق الله حول لغيره. (تهذيب الأسماء واللغات للعلامة أبى زكريا محيي الدين بن شرف النووي)

ஃபிக்ஹ் விஷயத்தில் மக்கள் அனைவரும் இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களின் பிள்ளைகள் என இமாம் ஷாஃபிஈ ரஹ் கூறினார்கள்.            

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களைப் போன்ற பேணுதலான ஒருவரை நான் கண்டதில்லை என இப்னுல் முபாரக் ரஹ் கூறினார்கள்

அவர்கள் வஃபாத்தான போது இட நெருக்கடியால்  ஆறு தடவை ஜனாஸா தொழுகை  நடைபெற்றது.  அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்கள்.  என வகீஃ ரஹ் அவர்கள் கூறினார்கள்

அவர்கள் வாழ்வில் யாரைப் பற்றியும் புறம் பேசியதில்லை. என  இப்னுல் முபாரக் ரஹ் கூறினார்கள்

இமாம் அவர்களின் அறிவுத்திறனையும் உலக மக்களில் பாதிப்பேருடைய  அறிவுத் திறனையும் ஒப்பிட்டால் இமாம் அவர்களின் அறிவுத் திறன் தான் மிஞ்சி நிற்கும் என அலி இப்னு ஆசிம் ரஹ் அவர்கள் கூறினார்கள்

இமாம் அவர்கள் மிகவும் பேணுதல் உடையவர்களாக, தன்னை நாடி வருபவர்களுக்கு அதிகம் உதவி செய்பவர்களாக இருந்தார்கள். வியாபாரத்தின் மூலமாக கிடைக்கும் இலாபங்களை முஹத்திஸீன்களில் வறியவர்களுக்காக செலவு செய்வார்கள் என கைஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள்.                            

இமாம் அவர்களின் பேணுதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு

قال يزيد بن هارون رايته (أي ابا حنيفة رح) جالسا يوما في الشمس عند باب انسان فقلت له يا ابا حنيفة لو تحولت الي الظل فقال لي علي صاحب هذه الدار دراهم ولا احب ان اجلس في ظل فناء داره   (الابداع)

மேற்படி ஹதீஸின் பொருள் - ஒரு நான் இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் வெயிலில் ஒரு வீட்டின் நிழலருகே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் (அந்த வீட்டின்) நிழலுக்குச் சென்று நீங்கள் அமரலாமே என்றேன். அதற்கு இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் கூறியதாவது அந்த வீட்டுடையவர் என்னிடம் கடனாக வாங்கிய சில திர்ஹங்கள் மீதமுள்ளது. அதனால் அவரின் வீற்றின் முற்றத்தில் நான் அமர விரும்பவில்லை. (ஏனெனில் அது கூட வட்டியாகி விடுமே என்ற அச்சம் தான்) என்று பதில் கூறினார்கள்     மற்றொரு நேரத்தில் இமாமுல் அஃழம் ரஹ் அவர்களுக்கு கடன் பாக்கி வைத்திருந்த ஒரு யூதரின் வீட்டை இமாம் அவர்கள் கடந்து செல்லும்போது அவர்களின் செருப்பில் நஜீஸ் ஆகி விட்டது அதை உதறும்போது அதனுடைய ஒரு துளி அந்த யூதரின் வீட்டுச் சுவற்றின் மீது பட்டு விட்டது. உடனே இமாம் அவர்கள் மிகவும் கவலைப்பட்டவராக இப்போது நான் என்ன செய்ய செய்வேன். அந்த நஜீஸை நான் சுரண்டினால் அந்த வீட்டின் சுண்ணாம்பு மற்றும் காரையின் சில பகுதிகளை நான் பெயர்த்தவனாக ஆகி விடுவேன். (அந்தக் காலத்து வீடுகள் அந்த அமைப்பில் தான் இருக்கும்)  அதே வேளையில் அதை நான் அப்படியே விட்டு விட்டால் அடுத்தவரின் வீட்டை அசிங்கப்படுத்திய குற்றம் என் மீது வந்து விடுமே நான் என்ன செய்யட்டும் என்று புலம்பிய நிலையில் அவருடைய வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். அவரோ இமாம் அவர்கள் கடனை வசூல் செய்யத் தான் வந்துள்ளார் என்று எண்ணி வேகமாக வந்து கதவைத் திறந்து நீங்கள் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா? என்றார் ஆனால் இமாம் அவர்கள் நான் அதற்கு வரவில்லை உங்கள் வீட்டுச் சுவற்றை நான் இப்படி அசிங்கம் செய்து விட்டேன் அதை சுத்தம் செய்யும் வழியை எனக்குக் கூறுங்கள் என்று கூற, அவர் ஆச்சரியமடைந்தவராக கொஞ்சம் இருங்கள். என் வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும் முன்பு நான் என் உள்ளத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறி இஸ்லாத்தை ஏற்றார்  

இமாம்கள் ஆய்வு செய்த எதுவும் குர்ஆன்  ஹதீஸுக்கு முரணாக  இருந்ததில்லை

ماتتْ امرأة لبعض أهل العلم، قال: فجاء يحيى بن معين والدورقي. قال: فلم يجدوا امرأة تغسلها إلا امرأة حائض. قال: فجَاء أحمد بن حنبل، وهم جلوس، فقال: ما شأنكم؟ فقال أهل المرأة: ليس نجد غاسلة إلا امرأة حَائض، قال: فقال أحمد بن حنبل: أليس تروون عن النبي صلى الله عليه وسلم " يا عائشة، ناوِليني الْخُمْرَةَ. قَالَتْ: إني حَائِضٌ، فَقَال: إن حَيْضَتَكِ لَيْسَتْ في يَدَكِ " يجوزُ أن تغسلها. قال: فخجلوا وبقوا. (: ذيل طبقات الحنابلة

ஒரு பெண் இறந்து விட்டார். அந்தப் பெண்ணைக் குளிப்பாட்டுவதற்கு மாதவிடாய் உள்ள ஒரு பெண்ணைத் தவிர அங்கு யாரும் இல்லை. அப்போது அந்தப் பெண் சம்பந்தப்பட்ட உறவினர்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்களிடம் வருகை தந்து மாதவிடாய்ப் பெண்  ஜனாஸாவைக் குளிப்பாட்டலாமா  என்று கேட்டார்.  அப்போது  இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் நபி ஸல் அவர்களுடைய ஹதீஸை  சுட்டிக்காட்டினார்கள்.  ஆயிஷா ரழி அவர்கள் மாதவிடாய் நிலையில் இருந்த போது அவர்களிடம்  நபி ஸல் அவர்கள் தொழுகை விரிப்பை எடுக்கும்படி கூறியபோது  நான் மாதவிடாய் நிலையில் இருக்கிறேன் என அன்னை அவர்கள்  கூற  மாதவிடாய் என்பது உன் கையில் இல்லையே என்று நபி ஸல் கூறினார்கள்.  அந்த ஹதீஸை அடிப்படையாக வைத்தே நான் இச்சட்டத்தைக் கூறினேன் என்றார்கள்.                                    

ஒரு குழந்தை தாய் வயிற்றில் அதிக பட்சம் இரண்டு வருடங்கள் வரை இருக்கலாம் என்ற ஃபிக்ஹ் சட்டத்திற்கு ஆதாரம்

أَنَّ رَجُلًا غَابَ عَنْ امْرَأَتِهِ سَنَتَيْنِ ثُمَّ قَدِمَ وَهِيَ حَامِلٌ فَهَمَّ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ بِرَجْمِهَا فَقَالَ مُعَاذٌ رَضِيَ اللَّهُ عَنْهُ إنْ يَكُ لَك عَلَيْهَا سَبِيلٌ فَلَا سَبِيلَ لَك عَلَى مَا فِي بَطْنِهَا فَتَرَكَهَا حَتَّى وَلَدَتْ وَلَدًا قَدْ نَبَتَتْ ثَنِيَّتَاهُ يُشْبِهُ أَبَاهُ فَلَمَّا رَآهُ الرَّجُلُ قَالَ ابْنِي وَرَبِّ الْكَعْبَةِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَتَعْجَزُ النِّسَاءُ أَنْ يَلِدْنَ مِثْلَ مُعَاذٍ لَوْلَا مُعَاذٌ لَهَلَكَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَدْ وَضَعَتْ هَذَا الْوَلَدَ لِأَكْثَرَ مِنْ سَنَتَيْنِ ثُمَّ أَثْبَتَ نَسَبَهُ مِنْ الزَّوْجِ (المبسوط

ஒருவர் தன் மனைவியை விட்டும் பிரிந்திருந்து இரண்டு வருடங்கள் கழித்து திரும்பி வந்தார் அப்போது அந்த மனைவி  நிறை மாத கர்ப்பமாக இருந்தார். உடனே சந்தேகப்பட்ட அவர் உமர் ரழி அவர்களிடம் கூற, கலீபா உமர் ரழி அவர்கள் அப்பெண்ணை ரஜ்ம் செய்யச் சொன்னார்கள்.  அப்போது முஆத் ரழி அவர்கள் சற்று பொறுங்கள் குழந்தை பிறக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று கூற, அதை உமர் ரழி  ஏற்றார்கள். பிறகு அக்குழந்தை பிறந்த போது அக்குழந்தை தந்தையின் ஜாடையில் அதாவது இரண்டு வருடங்கள் கழித்து திரும்பி வந்த கணவரின் ஜாடையில்   அப்படியே இருந்தது.  அதைக கண்ட இது சத்தியமாக என் குழந்தை தான் என்றார்.  அதன் பின்பு உமர் ரழி அவர்கள்  நிச்சயமாக முஆத் இல்லா விட்டால் இந்த உமர் நாசமாகி இருப்பார் என்றார்கள்

 

                     

 -------------------------------------------------------





10 12 2021

10-12-2021

03-05-1443

 

بسم الله الرحمن الرحيم             

ஆட்டு மந்தைக் கோட்பாடு

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

2005 ம் ஆண்டு துருக்கியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றது.  மலைப்பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று மலை உச்சியில் ஏறி அருகாமையில் உள்ள மலைப்பாறை மீது குதித்துப் பார்த்துள்ளது.  இரு மலைகளுக்கு இடைப்பட்ட தூரம் அதிகம் என்பதால் அந்த ஆடு கீழே விழுந்து இறந்து போனது.  இதில் அதிசயம் என்னவென்றால் அதனைப் பின்தொடர்ந்து அங்கே மேய்ந்து கொண்டிருந்த சுமார் ஆயிரக்கணக்கான ஆடுகளும்  ஒன்றன்பின் ஒன்றாக  அப்படியே அதேபோல் துள்ளிப்பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொண்டன. பிற்காலத்தில் ஆட்டு மந்தைக் கோட்பாடு (HERD BEHAVIOUR)  பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்தது.  தவறு என்று தெரிந்தும் அடிப்படை இல்லாத மற்றவர்களின் சடங்கு சம்பிரதாயங்களை அப்படியே பின்பற்றுவது தான்  ஆட்டு மந்தைக் கோட்பாடாகும்.   

எங்களுடைய மூதாதையர்கள் செய்தார்கள். எனவே நாங்களும் செய்கிறோம் என அடிப்படை இல்லாத சடங்கு சம்பிரதாயங்களை பலர் பின்பற்றுகின்றனர். ஷிர்க் அதில் பிரதானமானதாகும்.                                            

குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்தக் கோட்பாடு பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய மூதாதையர்கள் வழிகேட்டில் இருந்தார்கள் என்று தெரிந்தும் அதையே நீங்கள் பின்பற்றுகிறீர்களா என இப்றாஹீம் அலை தனது சமூக மக்களிடம் கேட்டார்கள்.

وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِنْ قَبْلُ وَكُنَّا بِهِ عَالِمِينَ (51) إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ (52) قَالُوا وَجَدْنَا آبَاءَنَا لَهَا عَابِدِينَ (53) قَالَ لَقَدْ كُنْتُمْ أَنْتُمْ وَآبَاؤُكُمْ فِي ضَلَالٍ مُبِينٍ (54) الانبياء

وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ (170)البقرة

கொள்கை விஷயத்தில் மட்டும் முன்னோர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே நாங்களும் இருப்போம் என்று அடிப்படை இல்லாத விஷயங்களில் முன்னோர்களைப் பின்பற்றுவர்கள் உலக விஷயங்களில் மட்டும் அவ்வாறு எண்ணுவதில்லை. மூதாதையர்கள் குடிசை வீட்டில் இருந்தார்கள் என்பதற்காக இவர்கள் குடிசை வீட்டில் வசிப்பதில்லை. மூதாதையர்கள் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக இவர்கள் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவதில்லை. சொகுசான கார்களில் பவனி வருகிறார்கள். ஷைத்தான் இவர்களை சிந்திக்க விடுவதில்லை என்பது தான் உண்மையாகும்.                     

புதிதாக எதைக் கண்டாலும் அது நல்லதா கெட்டதா என்று சிந்திக்காமல் பின்பற்றும் கூட்டம் அன்று முதல் இன்று வரை உள்ளது.

قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَأَضَلَّهُمُ السَّامِرِيُّ (85) فَرَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِنْ رَبِّكُمْ فَأَخْلَفْتُمْ مَوْعِدِي (86) قَالُوا مَا أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَكِنَّا حُمِّلْنَا أَوْزَارًا مِنْ زِينَةِ الْقَوْمِ فَقَذَفْنَاهَا فَكَذَلِكَ أَلْقَى السَّامِرِيُّ (87) فَأَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَهُ خُوَارٌ فَقَالُوا هَذَا إِلَهُكُمْ وَإِلَهُ مُوسَى فَنَسِيَ (88) طه

அந்த ஸாமி(ரி)யின் பரம்பரையில் உருவாகி, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இன்று இந்தியாவையே கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் தான் ஆரியர்கள் என்ற பிராமணர்கள் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.          

சிரமப்பட்டு பனீ இஸ்ரவேல்ரகளைக் காப்பாற்றி நேர்வழியில் செலுத்த மூஸா அலை அவர்கள் முயற்சி செய்த போதும் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்ட அச்சமூகம் இதுபோல் எங்களுக்கும் வேண்டும் என்றார்கள்.

وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتَوْا عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى أَصْنَامٍ لَهُمْ قَالُوا يَا مُوسَى اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ (138)الاعراف

கடைசி காலத்தில் சவூதியிலும் சிலை வணக்கம் உருவாகி விடும் என்று நபிகளாரின் முன்னறிவிப்பும் இதே அடிப்படையில்தான்

عن ابي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ (بخاري- باب تَغْيِيرِ الزَّمَانِ حَتَّى يَعْبُدُوا الأَوْثَانَ- كتاب الفتن 7116

(அரபிகளில் அபூஹுரைரா அவர்களின் கோத்திரமான) தவ்ஸ் குலப் பெண்களின் பித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் அளவுக்கு துல்- கலசா சிலையை சுற்றி வரும் நிலை வராமல் கியாமத் நாள் ஏற்படாது. துல்- கலசா என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வணங்கி வந்த சிலையாகும். இஸ்லாம் வந்த பிறகு அது ஒழிக்கப்பட்டது.  பிற்காலத்தில் அதற்கு புத்துயிர் கொடுத்து அதை வணங்கும் நிலை அரபு நாட்டில் ஏற்படும் என நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அதன் அறிகுறிகள் இன்றே தொடங்கி விட்டன.                                                                                                   

عَنْ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ قَالَ قَالَ لِي جَرِيرٌ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ وَكَانَ بَيْتًا فِي خَثْعَمَ يُسَمَّى كَعْبَةَ الْيَمَانِيَةِ قَالَ فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ قَالَ وَكُنْتُ لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ فِي صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ أَصَابِعِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا فَانْطَلَقَ إِلَيْهَا فَكَسَرَهَا وَحَرَّقَهَا ثُمَّ بَعَثَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْبِرُهُ فَقَالَ رَسُولُ جَرِيرٍ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا جِئْتُكَ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْوَفُ أَوْ أَجْرَبُ قَالَ فَبَارَكَ فِي خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ  (بخاري 3020

சுருக்கம்- ஜரீர் ரழி அவர்கள் கூறினார்கள்- என்னிடம் நபி ஸல் அவர்கள் துல்-கலசா சிலையிடமிருந்து எனக்கு நிம்மதியை யாரேனும் பெற்றுத் தர மாட்டீர்களா என்று கேட்டார்கள். அதாவது அதை யாரேனும் அழித்து விட்டு வர மாட்டீர்களா என்று கேட்டார்கள். நான் சுமார் 150 குதிரை வீரர்களுடன் அதை அழிக்கப் புறப்பட்டேன். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே என்னால் குதிரையின் மீது சரியாக ஏறி சவாரி செய்ய முடியவில்லை. எப்போது ஏறினாலும் அடிக்கடி விழுந்து விடுகிறேன். அவ்வாறு விழாமல் இருக்க துஆச் செய்யுங்கள் என்றேன். நபி ஸல் அவர்கள் என் மீது தன் முபார்க்கான கையால் அடித்து எனக்காக துஆச் செய்தார்கள். முஃஜிஸா என்ற அடிப்படையில் அந்தக் கைகள் என் நெஞ்சின் மீது அப்படியே பதிந்து விட்டது. அதன்பின்பு ஒருபோதும் நான் குதிரையில் இருந்து விழுவதில்லை. பின்பு அந்தக் குதிரைப் படை  துல்-கலசா சிலை இருக்கும் இடத்திற்குச் சென்று அதை உடைத்து எரித்து விட்டு வந்தார்கள்.                                                                                          

கஃபாவுக்குள் வைத்து தவறு செய்த ஆண், பெண் இருவரையும் அல்லாஹ் கல்லாக மாற்றினான். அவமானத்தின் சின்னமாகிய அதையும் சிலர் வணங்க ஆரம்பித்த போது அதையும் பலர் பின்பற்றினார்கள்.

ذَكَرَ مُحَمَّد بْن إِسْحَاق فِي كِتَاب السِّيرَة أَنَّ إِسَافًا وَنَائِلَة كَانَا بَشَرَيْنِ فَزَنَيَا دَاخِل الْكَعْبَة فَمُسِخَا حَجَرَيْنِ فَنَصَبَتْهُمَا قُرَيْش تُجَاه الْكَعْبَة لِيَعْتَبِر بِهِمَا النَّاسُ فَلَمَّا طَالَ عَهْدهمَا عُبِدَا ثُمَّ حُوِّلَا إِلَى الصَّفَا وَالْمَرْوَة فَنُصِبَا هُنَالِكَ فَكَانَ مَنْ طَافَ بِالصَّفَا وَالْمَرْوَة يَسْتَلِمهُمَا -  وَقَالَ الشَّعْبِيّ : كَانَ إِسَاف عَلَى الصَّفَا وَكَانَتْ نَائِلَة عَلَى الْمَرْوَة وَكَانُوا يَسْتَلِمُونَهُمَا فَتَحَرَّجُوا بَعْد الْإِسْلَام مِنْ الطَّوَاف بَيْنهمَا فَنَزَلَتْ " نَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ (158)البقرة (تفسير ابن كثير)

இஸாஃப், நாஇலா என்ற இருவர் கஃபாவுக்குள் வைத்து தவறு செய்தனர்.  இருவரையும் அல்லாஹ் கல்லாக மாற்றினான். அவமானத்தின் சின்னம் என்ற அடிப்படையில் அவை இரண்டும் கஃபாவுக்கு எதிரில் நட்டி வைக்கப்பட்டது.  அசிங்கமான இந்த வரலாற்றை  அறியாமல் சிலர் அதை வணங்க ஆரம்பித்தனர். காலப்போக்கில் இஸாஃப் சிலை ஸஃபா மலையிலும், நாஇலா சிலை மர்வா மலையிலும் வைக்கப்பட்டது. அறியாமைக் காலத்தில் ஹஜ் செய்தவர்கள்  ஸஃபா, மர்வா இடையே தவாஃப் செய்த போது இவற்றையும் முத்தமிட்டு வந்தனர். இஸ்லாம் வந்த பிறகும்  ஸஃபா, மர்வா இடையே தவாஃப்  சட்டமாக்கப்பட்ட போது இந்த வரலாற்றை அறிந்த முஸ்லிம்கள்  இந்த மலைகள் இரண்டும் அந்த சிலைகள் இருந்த இடம் ஆயிற்றே என மனதில் சங்கடமாக கருதினார்கள். அப்போது அல்லாஹ்  மேற்படி வசனத்தை இறக்கினான். ஸஃபா, மர்வா இடையே தவாஃப் செய்வது வாஜிப் என்றிருந்தும் செய்தால் தவறில்லை என்ற வாசகத்தைப் போன்று அல்லாஹ்  கூறியிருப்பதன் காரணம் இது தான்.         

ஆட்டு மந்தைகளைப் போல் இருப்பவர்களை மனிதர்களாக மாற்ற வேண்டும் என்பதால் நபிமார்களுக்கு முதலில் அல்லாஹ் ஆடுகள் மேய்ப்பதற்கு பயிற்சி அளித்தான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلَّا رَعَى الْغَنَمَ فَقَالَ أَصْحَابُهُ وَأَنْتَ فَقَالَ نَعَمْ كُنْتُ أَرْعَاهَا عَلَى قَرَارِيطَ لِأَهْلِ مَكَّةَ (بخاري

தவறு என்று தெரிந்தும் பலரும் செய்கிறார்கள் என்பதற்காக அதை அப்படியே முஸ்லிம்கள் பின்பற்றும் காலம் வரும்.

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ ؟ (بخاري

உங்களுக்கு முன்னாள் வாழ்ந்கவர்களின் கலாச்சாரங்களை அங்குலம் அங்குலமாக, முழம் முழமாக நீங்கள் பின்பற்றுவீர்கள் என நபி ஸல் கூறிய போது முன்னாள் வாழ்ந்தவர்கள் என யூத, கிறிஸ்தவர்களைத் தான் கூறுகிறீர்களா என்று கேட்க, வேறு யார் என நபி ஸல் கேட்டார்கள்.

படிப்பினை -  திருமணம் போன்ற வைபவங்களில் அடிப்படையில்லாத அனாச்சாரங்களை, சடங்குகளை  மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்கிறோம். ஆட்டம் கொண்டாட்டங்களை  மற்றவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக நாமும் செய்கிறோம். கிழிந்த அசிங்கமான ஆடைகளை மாடல் என்று மற்றவர்  உடுத்துகிறார்கள் என்பதற்காக நாமும் உடுத்துகிறோம்.  கரடி மாதிரி, நரி மாதிரி கண்டபடி மற்றவர்கள் முடிகளை வெட்டுகிறார்கள் என்பதற்காக நாமும் செய்கிறோம். இங்கு நாம் சுய புத்தியை இழந்தவர்களைப் போன்று ஆகி விடுகிறோம். இதை விட்டும் நாம் நீங்கி மனிதர்களாக வாழ வேண்டும்.

நல்ல விஷயங்களை ஒருவர் தொடங்கி வைத்து மற்றவர்கள் அதைப் பின்பற்றிச் செய்வது வரவேற்புக்குரியது

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ جَاءَ نَاسٌ مِنَ الأَعْرَابِ إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَيْهِمُ الصُّوفُ فَرَأَى سُوءَ حَالِهِمْ قَدْ أَصَابَتْهُمْ حَاجَةٌ فَحَثَّ النَّاسَ عَلَى الصَّدَقَةِ فَأَبْطَئُوا عَنْهُ حَتَّى رُئِىَ ذَلِكَ فِى وَجْهِهِ - قَالَ - ثُمَّ إِنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ جَاءَ بِصُرَّةٍ مِنْ وَرِقٍ ثُمَّ جَاءَ آخَرُ ثُمَّ تَتَابَعُوا حَتَّى عُرِفَ السُّرُورُ فِى وَجْهِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ سَنَّ فِى الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا وَلاَ يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ وَمَنْ سَنَّ فِى الإِسْلاَمِ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا وَلاَ يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَىْءٌ ». (مسلم

ஜரீர் ரழி அவர்கள் கூறினார்கள்- நபி ஸல் அவர்களிடம் கிராமப்புற அரபிகளில் சிலர் வருகை  தந்தார்கள். அவர்களுடைய வறுமை நிலையை உணர்ந்த நபி ஸல் அவர்கள் அந்த ஏழைகளுக்கு உதவி செய்யும்படி ஆர்வமூட்டினார்கள்.  (சஹாபாக்களின் மனதில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் உடனே யாரும் ஆரம்பித்து வைக்காமல்) தாமதப்படுத்தினார்கள்.  அதனால் ஏற்பட்ட கவலை நபி ஸல் அவர்களின் முகத்தில் உணரப்பட்டது. அப்போது ஒரு அன்சாரி சஹாபீ வெள்ளியால் ஆன நகையைக் கொண்டு வந்(து உதவி செய்வதை ஆரம்பித்து வைத்)தார். அதைத் தொடர்ந்து மற்றவர்களும்  தர்ம ம் செய்தனர். நபி ஸல் அவர்களின் முகத்தில் சந்தோஷம் உணரப்பட்டது. அப்போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். எவர் நல்ல நடைமுறையை ஆரம்பித்து வைத்து அதைத் தொடர்ந்து மற்றவர்களும் அதைப் பின்பற்றினால்  அதைச் செய்தவர்களின் நன்மையைப் போன்று ஆரம்பித்து வைத்தவருக்குக் கிடைக்கும்.  ஆனால் எவர் கெட்ட நடைமுறையை ஆரம்பித்து வைத்து அதைத் தொடர்ந்து மற்றவர்களும் அதைப் பின்பற்றினால்  அதைச் செய்தவர்களின் தீமையைப் போன்று ஆரம்பித்து வைத்தவருக்குக் கிடைக்கும். 

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُقْتَلُ نَفْسٌ إِلَّا كَانَ عَلَى ابْنِ آدَمَ الْأَوَّلِ كِفْلٌ مِنْهَا (بخاري

உலகில் முதல் கொலையை காபீல் தொடங்கி வைத்ததால் அதற்குப் பிறகு யாரெல்லாம் கொலை செய்கிறார்களோ அதற்குரிய 

பாவத்தின் ஒரு பங்கு காபீலுக்கு உண்டு.


====================






03 12 2021

03-12-2021

 

 

                    بسم الله الرحمن الرحيم         

இன்டர் நெட்டும் குழந்தைகளும்

 

 

WWW. ULAMA. IN என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

 

 

லாக் டவுன் காலம் நிறையக் குழந்தைகளின் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது. ஸ்கூல் திறக்கப்பட்டு விட்டாலும் லாக் டவுன் காலங்களில் ஆன்லைன் பாடங்களுக்காகவும் மற்ற நேரங்களில் விளையாட்டுகளுக்காகவும் செல்ஃபோனும் கையுமாக இருந்த பிள்ளைகளுக்கு அதை விட்டு மீள முடியவில்லை. அத்தகைய பிள்ளைகளுக்கு ஸ்கூல் மற்றும் மத்ரஸா பாடங்கள்  பெரும் சுமையாகவே உள்ளன. பிள்ளைகளை  செல்ஃபோன் என்ற மாயையில் இருந்து மீட்டெடுப்பது பெற்றோர் மீது முக்கியக் கடமையாகும். இக்காலத்தில் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பது பெரும் சிரமம்தான். காரணம் எங்கு திரும்பினாலும் ஆபாசம், சினிமா, இணைய தளம் என ஷைத்தானின் மாயவலைகள் நிறைந்துள்ள இக்காலத்தில் நம் பிள்ளைகளை அவற்றைவிட்டுப் பாதுகாப்பது முட்கள் நிறைந்த பாதையில் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது போல்தான். எனினும் நம் பிள்ளைகளை நரக நெருப்புக்கு இரையாகும்படி விட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதைத் தவிர வேறு வழியில்லை.                                                                                                        

பெற்றோர்களுக்குப் பிள்ளைகள்மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ..(6)التحريم عن عَبْد اللَّه بْنَ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ... (بخاري)

பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதைவிட மிகப் பெரிய அன்பளிப்பைப் பெற்றோர்கள் தந்து விட முடியாது

عن أَيُّوب بْن مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ (ترمذي)  عن أَنَس رضي الله عنها عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ (ابن ماجة)

பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டி அமைந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ مَلِكٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ وَكَانَ لَهُ سَاحِرٌ فَلَمَّا كَبِرَ قَالَ لِلْمَلِكِ إِنِّي قَدْ كَبِرْتُ فَابْعَثْ إِلَيَّ غُلَامًا أُعَلِّمْهُ السِّحْرَ فَبَعَثَ إِلَيْهِ غُلَامًا يُعَلِّمُهُ فَكَانَ فِي طَرِيقِهِ إِذَا سَلَكَ رَاهِبٌ فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلَامَهُ فَأَعْجَبَهُ فَكَانَ إِذَا أَتَى السَّاحِرَ مَرَّ بِالرَّاهِبِ وَقَعَدَ إِلَيْهِ فَإِذَا أَتَى السَّاحِرَ ضَرَبَهُ فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ فَقَالَ إِذَا خَشِيتَ السَّاحِرَ فَقُلْ حَبَسَنِي أَهْلِي وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ حَبَسَنِي السَّاحِرُ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسَتْ النَّاسَ فَقَالَ الْيَوْمَ أَعْلَمُ آلسَّاحِرُ أَفْضَلُ أَمْ الرَّاهِبُ أَفْضَلُ فَأَخَذَ حَجَرًا فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ حَتَّى يَمْضِيَ النَّاسُ فَرَمَاهَا فَقَتَلَهَا وَمَضَى النَّاسُ فَأَتَى الرَّاهِبَ فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ الرَّاهِبُ أَيْ بُنَيَّ أَنْتَ الْيَوْمَ أَفْضَلُ مِنِّي قَدْ بَلَغَ مِنْ أَمْرِكَ مَا أَرَى وَإِنَّكَ سَتُبْتَلَى فَإِنْ ابْتُلِيتَ فَلَا تَدُلَّ عَلَيَّ وَكَانَ الْغُلَامُ يُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَيُدَاوِي النَّاسَ مِنْ سَائِرِ الْأَدْوَاءِ فَسَمِعَ جَلِيسٌ لِلْمَلِكِ كَانَ قَدْ عَمِيَ فَأَتَاهُ بِهَدَايَا كَثِيرَةٍ فَقَالَ مَا هَاهُنَا لَكَ أَجْمَعُ إِنْ أَنْتَ شَفَيْتَنِي فَقَالَ إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَإِنْ أَنْتَ آمَنْتَ بِاللَّهِ دَعَوْتُ اللَّهَ فَشَفَاكَ فَآمَنَ بِاللَّهِ فَشَفَاهُ اللَّهُ فَأَتَى الْمَلِكَ فَجَلَسَ إِلَيْهِ كَمَا كَانَ يَجْلِسُ فَقَالَ لَهُ الْمَلِكُ مَنْ رَدَّ عَلَيْكَ بَصَرَكَ قَالَ رَبِّي قَالَ وَلَكَ رَبٌّ غَيْرِي قَالَ رَبِّي وَرَبُّكَ اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الْغُلَامِ فَجِيءَ بِالْغُلَامِ فَقَالَ لَهُ الْمَلِكُ أَيْ بُنَيَّ قَدْ بَلَغَ مِنْ سِحْرِكَ مَا تُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَتَفْعَلُ وَتَفْعَلُ فَقَالَ إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الرَّاهِبِ فَجِيءَ بِالرَّاهِبِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَدَعَا بِالْمِئْشَارِ فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِجَلِيسِ الْمَلِكِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِالْغُلَامِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ إِلَى جَبَلِ كَذَا وَكَذَا فَاصْعَدُوا بِهِ الْجَبَلَ فَإِذَا بَلَغْتُمْ ذُرْوَتَهُ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاطْرَحُوهُ فَذَهَبُوا بِهِ فَصَعِدُوا بِهِ الْجَبَلَ فَقَالَ اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَرَجَفَ بِهِمْ الْجَبَلُ فَسَقَطُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ اللَّهُ فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ فَاحْمِلُوهُ فِي قُرْقُورٍ فَتَوَسَّطُوا بِهِ الْبَحْرَ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاقْذِفُوهُ فَذَهَبُوا بِهِ فَقَالَ اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَانْكَفَأَتْ بِهِمْ السَّفِينَةُ فَغَرِقُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ اللَّهُ فَقَالَ لِلْمَلِكِ إِنَّكَ لَسْتَ بِقَاتِلِي حَتَّى تَفْعَلَ مَا آمُرُكَ بِهِ قَالَ وَمَا هُوَ قَالَ تَجْمَعُ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَتَصْلُبُنِي عَلَى جِذْعٍ ثُمَّ خُذْ سَهْمًا مِنْ كِنَانَتِي ثُمَّ ضَعْ السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ ثُمَّ قُلْ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ ارْمِنِي فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتَنِي فَجَمَعَ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَصَلَبَهُ عَلَى جِذْعٍ ثُمَّ أَخَذَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ ثُمَّ وَضَعَ السَّهْمَ فِي كَبْدِ الْقَوْسِ ثُمَّ قَالَ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ رَمَاهُ فَوَقَعَ السَّهْمُ فِي صُدْغِهِ فَوَضَعَ يَدَهُ فِي صُدْغِهِ فِي مَوْضِعِ السَّهْمِ فَمَاتَ فَقَالَ النَّاسُ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ فَأُتِيَ الْمَلِكُ فَقِيلَ لَهُ أَرَأَيْتَ مَا كُنْتَ تَحْذَرُ قَدْ وَاللَّهِ نَزَلَ بِكَ حَذَرُكَ قَدْ آمَنَ النَّاسُ فَأَمَرَ بِالْأُخْدُودِ فِي أَفْوَاهِ السِّكَكِ فَخُدَّتْ وَأَضْرَمَ النِّيرَانَ وَقَالَ مَنْ لَمْ يَرْجِعْ عَنْ دِينِهِ فَأَحْمُوهُ فِيهَا أَوْ قِيلَ لَهُ اقْتَحِمْ فَفَعَلُوا حَتَّى جَاءَتْ امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا فَقَالَ لَهَا الْغُلَامُ يَا أُمَّهْ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ (مسلم)7703

இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுடைய தாய் ஆரம்பத்தில் இவர்களைத் துணி துவைக்கும் வண்ணானிடம் அனுப்பி வைத்தார்கள். அங்கே போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று. ஆனால் இமாம் அவர்களோ அந்தக் காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் கல்வி கற்கச் சென்றார்கள்.  மகன் காசு இல்லாமல் வெறுங்கையோடு வருவதைக் கண்ட அந்தத் தாய் நேராக இமாமுல் அஃழம் ரஹ் அவர்களிடம் சென்று என்ன... என் மகனின் மனதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா ? வண்ணானிடம் சென்றாலும் நாலு காசு சம்பாதிப்பான். நீங்கள் அவனுடைய மனதை மாற்றி உங்களுடன் அமர வைத்துக் கொண்டீர்” என்று கோபப்பட, இமாமுல் அஃழம் பொறுமையுடன், “தாயே! நீங்கள் உங்களுடைய மகனைத் துணி துவைக்கும் வண்ணானாக ஆக்கப் பார்க்கிறீர்கள் ஆனால் நானோ இவரை இந்த நாட்டு மன்னருடன் சரி சமமாக உட்கார்ந்து ஃபாலூதா என்னும் உயர்வகை பானத்தை அருந்துபவராகப் பார்க்கிறேன் பிற்காலத்தில் இவர் அப்படி வருவார் என்று நினைக்கிறேன்” என்றார்கள். அதன்பின்பு அந்தத் தாய் மகனுடைய விருப்பத்தில் தலையிடுவதில்லை. இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் பிற்காலத்தில் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்று அவருடைய திறமையின் காரணமாக அந்த நாட்டின் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களால் உயர்ந்த நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் ஒரு நேரத்தில் மன்னர் விருந்துக்கு அழைத்த போது, அங்கே சென்று மன்னருக்கு அருகில் அமர்ந்து ஃபாலூதாவை அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுக்கு பழைய நினைவு வருகிறது. அன்று என் தாய் என்னை வண்ணானிடம் அனுப்ப, நான் இமாமுல் அஃழம் அவர்களிடம் சென்று கல்வி பயின்றேனே. அப்போது அவர்கள் கூறியது இப்போது நிஜமாகி இருக்கிறதே என்று சந்தோஷத்தால் கண்கலங்கினார்கள்  

                                                        

2.ஒரு சிறுவர் தன் வீட்டில் தன் தாய் அருகில் இருந்த போது அந்த அன்னை வீட்டில் அடுப்பெரித்துக் கொண்டிருக்கிறார்கள்.சிறிய சுள்ளிகளை - விறகுகளை முதலில் எரிய விட்டு அதன் பிறகு பெரிய விறகுகளை வைத்து நெருப்பை மூட்டினார். அதுசிறிய வீடு. ஒரே ஓர் அறை மட்டுமே. புகை மூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்தச் சிறுவர் அழுது கொண்டிருக்கிறார். அந்த அன்னை தன் பிள்ளையிடம், “மகனே புகை மூட்டம் அதிகம் இருப்பதால் கண் எரிகிறதா நீ வேண்டுமானால் அம்மாவின் அடுப்பு வேலை முடியும் வரை வெளியே நின்று கொள் மகனே” என்று அன்புடன் கூற அது கேட்ட அந்த மகன் இவ்வாறு கூறினார்: அன்னையே நான் புகை மூட்டத்தைக் கண்டு அழவில்லை. மாறாக நீங்கள்  முதலில் சிறு சுள்ளிகளை வைத்து அடுப்பு நன்றாக எரிய ஆரம்பித்தவுடன் பெரிய விறகுகளை வைத்தீர்கள் அல்லவா? அப்போது என் மனதில் குர்ஆனின் வசனம் நினைவுக்கு வந்தது  நரகத்தின் எரி கொள்ளிகள் என மனிதர்களையும் கற்சிலைகளையும் அல்லாஹ் கூறியுள்ளான் நீங்கள் சிறு சுள்ளிகளை ஆரம்பத்தில் வைத்ததைப் போன்று அல்லாஹ்வும் எங்களைப் போன்ற சிறுவர்களை முதலில் நரகில் போட்டு நன்றாக எரிய ஆரம்பித்தவுடன் பெரியவர்களைப் போடுவானோ என்ற அச்சம் எனக்குள் வந்தது அதனால் அழுகிறேன் என்றார்கள் அந்த அளவுக்குப் பிஞ்சு உள்ளத்தில் இறையச்சம் இருந்தது. அவர்கள்தாம் நபி ஸல் அவர்களின் பரம்பரையில் வந்த இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ் அவர்கள்.

                           

பிள்ளைகள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்

كان أحد الرجال في أحد البيوت يقول: مرة تأخرتُ عن الجماعة فصليتُ في البيت، وكان هذا الرجل من المداومين على المسجد من أهل الروضة ومن أهل الصف الأول لا تفوته الصلاة أبداً، لكن يوماً من الأيام فاتتْه الصلاة فصلى في البيت فقام ابنه الصغير وقال:يا أبي أأنت امرأة يوم تصلي في البيت أم أنت رجل؟وهذا سؤال طيب ينبئ على أن الابن مربى على عقيدة سليمة ومبدأ خالد(دروس للشيخ عائض القرني)

நல்லடியார்களுள் ஒருவர் எப்போதும் மஸ்ஜிதுன் நபவியில் ஜமாஅத்துடன் ரவ்ழாவில் சென்று தொழுபவர். முதல் ஸஃப்பில் இருப்பவர். அவருக்கு ஒரே ஒரு தடவை ஜமாஅத் தவறிவிட்டது.  அவர் அன்று மட்டும் அத்தொழுகையை வீட்டில் தொழுதார். அப்போது அவரின் இளைய ஆண் குழந்தை அவரிடம் தந்தையே.. நீங்கள் எப்போது பெண்ணாக மாறினீர்கள். பெண்கள்தாமே வீட்டில் தொழுவார்கள் என்று கேட்டார். இப்படிக் கேட்கும் அளவுக்கு அவர்களின் வளர்ப்பு இருந்தது. 

     

பிள்ளைகளுக்கு ஒழுக்கம் போதிக்காமல் உலகக்கல்வியை மட்டும் போதிக்க நினைக்கும் பெற்றோர்களைப் பற்றி.

ஒழுக்கம் இல்லாத  கல்வி கழுதையின் முதுகில் இருக்கும் பொதி போன்றது

مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا (الجمعة5)أَيْ كَمَثَلِ الْحِمَار إِذَا حَمَلَ كُتُبًا لَا يَدْرِي مَا فِيهَا فَهُوَ يَحْمِلهَا حَمْلًا حِسِّيًّا وَلَا يَدْرِي مَا عَلَيْهِ وَكَذَلِكَ هَؤُلَاءِ فِي حَمْلِهِمْ الْكِتَاب الَّذِي أُوتُوهُ حَفِظُوهُ لَفْظًا وَلَمْ يَتَفَهَّمُوهُ (تفسير ابن كثير)

ஒழுக்கம் கற்பிக்காமல் மகனை வளர்த்த தந்தைக்கு ஏற்பட்ட கதி..

يُروَى أن أحد العلماء جاءه رجل، فقال له: ابني ضربني، قال: تعال بابنك، فأتى به فإذا هذا الابن كبير سمين بدين كأكبر ما يكون من الرجال، فقال له: أضربتَ أباك؟ قال: نعم. ضربتُه، قال: لِمَ ضربتَه؟ قال: وهل يحرم أن يضرب الابن أباه؟ أي: هل في الشريعة أنه لا يجوز ضرب الابن لأبيه؟ قال العالم للأب: أعلَّمتَ ابنك شيئاً من القرآن؟ قال: لا والله.قال: أعلمتَه شيئاً من السنة؟ قال: لا والله.قال: أعلمتَه شيئاً من آداب السلف ؟ قال: لا.قال: فماذا صنعت معه في حياته؟ قال: أطعمتُه وسقيتهُ وآويتُه حتى كَبُر، قال: تستحق أن يضربك؛ لأنه ظن أنك. بقرة؛ فضربك فاحمدِ الله حيث لم يكسر رأسك (دروس للشيخ عائض القرني)

முற்காலத்தில் ஒரு மார்க்க அறிஞரிடம் ஒருவர் வந்து என் மகன் என்னை அடிக்கிறான் என்று முறையிட்டார். உங்கள் மகனை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று அந்த ஆலிம் கூற, அவர் அவனை அழைத்து வந்தார். அப்போது அவன் கொழுத்த, அதிக பருமனான உடம்போடு இருந்தான். அவனிடம் உன் தந்தையை நீ அடித்தாயா என அந்த ஆலிம் கேட்டார். அவன் ஆம் என்றான். எதற்காக அடித்தாய் என்று கேட்டபோது, மகன் தந்தையை அடிப்பது தவறா என்று அவன் திருப்பிக் கேட்டான். அந்த அளவுக்கு மார்க்கம் தெரியாமல் அவனை தந்தை வளர்த்திருந்தார். இதைப் புரிந்து கொண்ட ஆந்த ஆலிம் உன் மகனுக்கு குர்ஆனைக் கற்றுத் தந்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். உம் மகனுக்கு நபி ஸல் அவர்களின் நடைமுறைகளைக் கற்றுத் தந்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். முன்னோர்களின் நல்ல நடைமுறைகளைச் சொல்லித் தந்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார்.  வேறு என்னதான் அவனுக்குச் செய்தீர் என்று கேட்க, “அவன் விரும்பிய உணவுகளை, குடிபானங்களை வாங்கித் தந்தேன்; அவன் பெரிதாகும் வரை அவனை வளர்த்தேன்” என்று கூற, அதற்கு அந்த ஆலிம் அவர்கள்  “நீர் உன் மகனிடம் அடி வாங்குவதற்குத் தகுதியானவர்தாம். அவன் உன்னை மாடு என்று நினைத்து அடித்திருப்பான்; உன் மண்டையை உடைக்காமல் விட்டதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து” என்றார்.

 

ஒருவரிடம் ஒன்பது நல்ல குணங்கள் இருந்து ஒரே ஒரு தீய குணம் இருந்தால் அந்த ஒரு தீய குணம் மற்ற ஒன்பது நல்ல குணங்களையும் கெடுத்து விடும்

وقال عمر بن الخطاب إذا كان في الانسان عشر خصال تسعة منها صالحة وواحدة هي سوء الخلق أفسدت هذه الخصلة تلك التسعة (غرر الخصائص الواضحة

ஒரு தந்தை தம் பிள்ளைக்கு பல இலட்சம் செலவில் கார் வாங்கிக் கொடுத்தால், அல்லது விமானம் வாங்கிக் கொடுத்தால் அவர் உயிரோடு இருக்கும் வரைதான் அவரை இவன் புகழ்வான். (MY DADDY’S  GIFT  என்று தன் காரில் எழுதி வைப்பது போல.) ஆனால் ஒழுக்கத்தைக் கற்றுத்தந்தால் தந்தை இறந்த பிறகும் அவருக்காக துஆ செய்வான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ صَدَقَةٌ جَارِيَةٌ وَعِلْمٌ يُنْتَفَعُ بِهِ وَوَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ (ترمذي)عن سعيد بن المسيب يقول : إن الرجل ليرفع بدعاء ولده من بعده . وقال بيده فرفعها إلى السماء (مؤطا مالك- باب الدعاء-أبواب السير) إن الرجل ليرفع أي في درجاته ومنزله- أي أشار ابن المسيب بيده فرفعها إلى السماء تفهيما لعلو درجات الرجل

ஒழுக்கம் கற்பிக்கப்படாததால் பொழுது போக்கில் மூழ்கி வாழ்க்கையைப் பாழாக்கிய சிறுவனைப் பற்றிய உண்மைச் சம்பவம்

பல வருடங்களுக்கு முன்பு சென்னை மண்ணடியில் ஒரு பள்ளி மாணவன் (முஸ்லிம்) தனக்குப் பாடம் போதித்த டீச்சரையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு அந்த மாணவனைப் பற்றி வந்த செய்திகள் சிந்திக்க வேண்டியவை. அவனுக்கு அவனுடைய பெற்றோர் மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்துள்ளனர். பாக்கெட் மணியாக தினமும் 100 ரூபாய் தருவார்களாம். அவன் ஆசைப் பட்டதையெல்லாம் அவனது தந்தை அவனுக்கு வாங்கித் தருவார். விலை உயர்ந்த செல்ஃபோன், கேமரா போன்ற ஆடம்பரமான பொருட்களைப் பள்ளிக்குக் கொண்டு வந்து சக மாணவர்களிடம் பெருமையடித்துக் கொள்ளும் அவனுக்குப் படிப்பு துளியும் ஏறவில்லை. சம்பந்தப்பட்ட அவனுடைய டீச்சர்  இவனது ஆடம்பரமான போக்கைப் பற்றித் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. கடைசியில் அவனுடைய பெற்றோர்களிடம் பலமுறை இதை அந்த டீச்சர் சொல்ல, அவர்கள் சற்றுச் சுதாரித்து அவனைக் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். அவனுடைய ஆடம்பரப்பொருட்களையும் பிடுங்கி வைத்துக் கொண்டபோது அவனுடைய கோபம் அனைத்தும் டீச்சர்மீது திரும்பியுள்ளது. இது மட்டுமன்றி இவனுடைய கதை போன்றே டீச்சரைக் கொலை செய்யும் கதையம்சம் கொண்ட இந்தி சினிமாவை 15 தடவை பார்த்துள்ளான். அது இவனுடைய உள்ளத்தில் மேலும் கொலைவெறியைத் தூண்டியுள்ளது. அதனால் அவன் அந்த டீச்சரைக் கொலை செய்துவிட்டான்.                             

பொழுது போக்கு அம்சங்கள் பிஞ்சு மனதிலும் நஞ்சை விதைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு. 

ஜெர்மனியில் நடந்த சம்பவம்- மிக்கா என்ற 7 வயதுச் சிறுவனும், அன்னா என்ற 6 வயதுச் சிறுமியும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தவர்கள். சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருப்பார்கள். பாழாய்ப் போன சினிமாவைப் பார்த்து அவர்களின் மனதிலும் நாம் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. சிறுவர்கள் என்பதால் யாரும் தவறாக நினைக்கவில்லை. ஆனால் அந்த இரு சிறுசுகளின் மனதிலும் சினிமாவில் காதலிப்பவர்கள் எங்காவது ஓடிப் போவார்களே அதுபோல் நாமும் ஓடிப் போக வேண்டும் என்று எண்ணியதோடு, சினிமாவில் ஓடிப்போய்த் திருமணம் செய்பவர்கள் சாட்சிக்கு ஆள் அழைத்துச் செல்வதைப் பார்த்து அன்னாவின் 5 வயது தங்கையையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். பெற்றோர் தூங்கும் நேரம் பார்த்து, அம்மூன்று பேரும் இரவோடு இரவாகப் பெட்டி படுக்கையோடு கிளம்பி இரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். நடு இரவில் இந்த மூன்று சிறுசுகளும் இரயில் நிலையத்தில் திருதிருவென விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களை அழைத்து விசாரிக்க அவர்கள் மழலை மொழியில் விவரத்தைச் சொல்ல உடன் இருந்த போலீஸ்காரர்கள் அனைவரும் விழுந்து விழுந்துச் சிரித்துள்ளனர். அவர்களுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தம் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். நன்றி-தினகரன்(08-01-2009

 

இங்கிலாந்து போன்ற மேலை  நாடுகளில் மாணவ, மாணவிகளின் ஒழுக்கம் மிகவும் சீரழிந்துள்ளது

இங்கிலாந்தில் 15 வயதுக்கு முன்பே உடலுறவு கொண்ட மாணவர்கள் 20 சதவீதம் பேர். பள்ளிகளிலேயே கருக்கலைப்பு மையங்கள் பெருமளவில் இருப்பது இங்கிலாந்தில்தான். மேலும் ஆண்டுதோறும் 12 ஆயிரம் பள்ளிப் பருவப் பிரசவங்கள் நடைபெறுகின்றன என சர்வே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபிரான்ஸ் அரசாங்கம் பள்ளி, கல்லூரிகளில் நர்சு ஒருவரை நியமித்து கருத்தடை மாத்திரைகளை வழங்கிவருகிறது. (தினசரி நாளிதழ்-30-12-2006 

                                                                   

செல்ஃபோனில் ஆன்லைன் விளையாட்டுகள் மாணவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள்

ஆன்லைன் விளையாட்டுகள் பல  மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளன. சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த மாணவர் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி அதில் நிறையப் பணத்தை இழந்து வேறு வழியின்றித் தான் வேலை பார்த்த கடையிலேயே 20 ஆயிரத்தைத் திருடியுள்ளார். இறுதியில் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் பெரம்பலூர் அருகே 5-ஆம் வகுப்பு படித்த மாணவனுக்கு ஆன்லைன் பாடங்களுக்காகப் பெற்றோர் செல்ஃபோன் வாங்கித் தந்துள்ளனர். பாட நேரம் போக மற்ற நேரங்களில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய மாணவன், அதற்கு அடிமையாகித் தற்கொலை செய்துகொண்டான். இது எட்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். இதுபோல் நிறையச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

                                  

ஆகுமான விஷயமாக இருந்தாலும்  அதற்கு அடிமையாகி விடக்கூடாது என்று எச்சரிக்கும் இஸ்லாம்

عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ إِيَّاكُمْ وَاللَّحْمَ فَإِنَّ لَهُ ضَرَاوَةً كَضَرَاوَةِ الْخَمْرِ (مؤطا

உமர் ரழி அவர்கள் கூறினார்கள்: தொடர்ந்து இறைச்சி உண்ணும் விஷயத்தில் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் மதுவுக்கு இருப்பது போன்று மனிதனை அடிமைப் படுத்தும் தன்மை இறைச்சிக்கும் உண்டு.                                

படிப்பினை: தொடர்ந்து இறைச்சி சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு நாள்கூட அது இல்லாமல் உணவு உள்ளே இறங்காது. இந்த நிலை ஒரு முஃமினுக்கு இருக்கக்கூடாது என உமர் ரழி அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

                                 

நம்முடைய வாழ்வின் நேரங்கள் வீணாகக் கழியும் போது அது ஷைத்தானின் செயல்களின் பால் இட்டுச் செல்லும்

والنفس البشرية جُبلت على أن الإنسان إن لم يشغلها بالخير شغلته بالشر.وروي عن الإمام الشافعي في هذا المعني (الكتاب:الوقت وأهميته في حياة المسلم)

கழிவறையை விட்டு வெளியே வந்தவுடன் முதலில்  غُفرانك   என்று துஆ ஓத வேண்டும். இதன் பொருள் இறைவா! என்னை மன்னிப்பாயாக! என்பதாகும். கழிவறைக்குள் நாம் என்ன தவறு செய்தோம்: எதற்காகக் கழிவறையில் இருந்து வெளியே வந்த பின் மன்னிப்புக் கேட்கிறோம் என்பதற்கு விளக்கமளிக்கும் மார்க்க அறிஞர்கள் கூறுவது என்னவென்றால் நாம் கழிவறையில் இருக்கும் நேரம் இறைவனை திக்ர் செய்ய முடியாத நேரம் என்பதால், “இறைவா! இந்த நேரத்தில் உன்னை திக்ரு செய்ய முடியாமல் போனதற்காக என்னை மன்னித்து விடு!” என்று அல்லாஹ்விடம் கேட்கிறோம். சிறிது நேரம்கூட இறை தியானமின்றி இருப்பது தவறு என்பதை இது காட்டுகிறது.

 

பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் விதிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு தம் சுதந்தரத்திற்கு இடையூறாகவும், மகிழ்ச்சிக்கு தடைக்கற்களாகவும் இருப்பதாக மாணவர்களும் குழந்தைகளும் எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறு. வளர்கின்ற மரம், செடி, கொடிகளைப் பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அவை காடாகவும், முட்புதராகவும் மாறும் அல்லது நீரின்றி வாடிக் கருகிவிடும். அவற்றை ஒழுங்குபடுத்தினால் அவை தோப்பாகவும், தோட்டமாகவும், எழில்கொஞ்சும் சோலையாகவும் மாறும். எந்தப் பொருளும் இரும்பு உட்பட, கெட்டுப் போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. அதனை அப்படியே விட்டுவிட்டால் போதும். அது தானாகக் கெட்டுவிடும். எனவே, ஒரு பொருளை உருவாக்கிப் பாதுகாப்பதற்குத்தான் முயற்சிகள் தேவை. அது அழிந்து போவதற்கு முயற்சிகள் தேவையில்லை. பட்டத்தை வானில் பறக்கவிட்டுப் பார்த்திருப்போம். பட்டம் பறப்பதற்கு நூல்தான் ஆதாரம். நூல் இல்லையேல், பட்டம் வானில் உயரப் பறக்க முடியாது. ஆனால், நூல் உங்கள் பெற்றோரின் கைப்பிடியில் இருக்கிறது. பட்டம் தான் விரும்பியவாறு சுதந்திரமாக விண்ணில் பறப்பதற்கு தனக்கு நூல் ஒரு தடையாக இருக்கின்றது என்று எண்ணி, கட்டுப்பாட்டை விரும்பாமல் நூலை அறுத்துக் கொண்டால் என்ன நேரும்? விண்ணில் உயரப் பறந்த பட்டம், நூல் அறுந்துவிடும்போது  மண்ணில் முட்புதரில் வீழ்ந்து தாறுமாறாகக் கிழிந்து அழியும். அதுபோல்தான், மாணவர்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமெல்லாம் வெற்றியைநோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பார்கள்.

 

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ (بخاري) باب مَا قِيلَ فِى أَوْلاَدِ الْمُشْرِكِينَ-كتاب الجنائز -دَلَّ الحديث على أن المولود لو ترك مع فطرته الأصلية لما كان على شيء من الأديان الباطلة  وأنه إنما يقدم على الدين الباطل لأسباب خارجية ، وهي سعي الأبوين في ذلك

 

பிள்ளைகளின் மனதில் சிறிதளவும் கெட்ட எண்ணம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தொலைநோக்குச் சிந்தனையுடன் நபி (ஸல்) சொல்லித் தந்த அறிவுரை

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ -بَاب مَتَى يُؤْمَرُ الْغُلَامُ بِالصَّلَاةِ-كتاب الصلاة

يعني أنهم لا يضطجع بعضهم مع بعض؛ حتى لا يحصل شيء من دواعي الشر أو شيء من الشيطان بحيث يحرك بعضهم على بعض فلا يكون هناك اضطجاع من بعضهم مع بعضهم، وإنما يكون هناك تفريق، سواء أكانوا ذكوراً وإناثاً أم ذكرواً فقط أم إناثاً فقط؛ لأنه عندما يحصل التقارب يحصل بسببه شيء من تحريك الشهوة أو الفتنة أو ما إلى ذلك، فجاءت السنة بأن يمرنوا على ذلك، وأن يعودوا على ذلك وهم صغار، بحيث يبتعد بعضهم عن بعض، ولا يكون هناك تلاصق وتقارب بحيث يحصل معه شيء لا تحمد عقباه.(شرح ابي داود)

 

 ==========================






26 11 2021


26-11-2021

ரபீஉல் ஆகிர்-20

 

    بسم الله الرحمن الرحيم

பழுதடையாத கேமராக்கள்

எந்நேரமும் மனிதனைக் கண்காணிக்கும் மலக்குகள்

 

 

WWW. ULAMA. IN என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

  مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ (18)-ق

முன்னுரை - ஓர் அலுவலகத்திலோ பொது இடங்களிலோ நம்மைச் சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அங்கிருப்பவர்கள் கவனத்துடன் செயல்படுவார்கள். காரணம் நம்மைச் சுற்றி கேமராக்கள் உள்ளன என்ற உணர்வு தவறு செய்வதைவிட்டுப் பெரும்பாலும் தடுக்கிறது. ஆனால் அந்த உணர்வு  மனிதனைச் சுற்றி அவனைக் கண்காணிக்கும் மலக்குகள் விஷயத்தில் இருப்பதில்லை. கேமராவை ஏதாவது சூழ்ச்சி செய்து மறைத்து விட முடியும். ஆனால் அல்லாஹ்வின் கேமராக்களான மலக்குகளின் கண்காணிப்பைவிட்டு ஒருபோதும் தப்பிவிட முடியாது. அவர்கள் பதிவு செய்த தை அழித்து விடவும் முடியாது. எப்போதும் நான்கு மலக்குகள் புடைசூழ ஒரு முஃமின் இருப்பார்.

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11)الرعد أَيْ لِلْعَبْدِ مَلَائِكَة يَتَعَاقَبُونَ عَلَيْهِ حَرَس بِاللَّيْلِ وَحَرَس بِالنَّهَارِ يَحْفَظُونَهُ مِنْ الْأَسْوَاء وَالْحَادِثَات كَمَا يَتَعَاقَب مَلَائِكَة آخَرُونَ لِحِفْظِ الْأَعْمَال مِنْ خَيْر أَوْ شَرّ مَلَائِكَة بِاللَّيْلِ وَمَلَائِكَة بِالنَّهَارِ فَاثْنَانِ عَنْ الْيَمِين وَالشِّمَال يَكْتُبَانِ الْأَعْمَال صَاحِب الْيَمِين يَكْتُب الْحَسَنَات وَصَاحِب الشِّمَال يَكْتُب السَّيِّئَات وَمَلَكَانِ آخَرَانِ يَحْفَظَانِهِ وَيَحْرُسَانِهِ وَاحِد مِنْ وَرَائِهِ وَآخَر مِنْ قُدَّامه فَهُوَ بَيْن أَرْبَعَة أَمْلَاك بِالنَّهَارِ وَأَرْبَعَة آخَرِينَ بِاللَّيْلِ (تفسير ابن كثير(

விளக்கம்-பகலில் நான்கு பேர். இரவில் வேறு நான்கு பேர். அதாவது நன்மை, தீமை எழுதும் மலக்குகள் அன்றி நமக்கு முன்னால் ஒரு மலக்கும் பின்னால் ஒரு மலக்கும் எப்போதும் இருப்பார்கள்.

 

وَفِي الْحَدِيث الْآخَر " إِنَّ مَعَكُمْ مَنْ لَا يُفَارِقكُمْ إِلَّا عِنْد الْخَلَاء وَعِنْد الْجِمَاع فَاسْتَحْيُوهُمْ وَأَكْرِمُوهُمْ "(تفسير ابن كثير

நீங்கள் உடலுறவு கொள்ளும் நேரத்திலும் கழிவறைக்குச் செல்லும் நேரத்திலும் தவிர உங்களைவிட்டுப் பிரியாத மலக்குகள் இருக்கிறார்கள். எனவே வெட்கத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 

வலது, இடது மலக்குகளில் யாருக்கு யார் அமீர்?

عَنْ كِنَانَة النَّهْدِيّ النَّسَائِيّ : دَخَلَ عُثْمَان بْن مَاجَهْ عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُول اللَّه أَخْبِرْنِي عَنْ الْعَبْد كَمْ مَعَهُ مِنْ مَلَك ؟ فَقَالَ " مَلَك عَنْ يَمِينك عَلَى حَسَنَاتك وَهُوَ أَمِير عَلَى الَّذِي عَلَى الشِّمَال فَإِذَا عَمِلْت حَسَنَة كُتِبَتْ عَشْرًا وَإِذَا عَمِلْت سَيِّئَة قَالَ الَّذِي عَلَى الشِّمَال لِلَّذِي عَلَى الْيَمِين اُكْتُبْهَا ؟ قَالَ لَا لَعَلَّهُ يَسْتَغْفِر وَيَتُوب فَيَسْتَأْذِنهُ ثَلَاث مَرَّات فَإِذَا قَالَ ثَلَاثًا قَالَ اُكْتُبْهَا أَرَاحَنَا اللَّه مِنْهُ فَبِئْسَ الْقَرِين...  (تفسير ابن كثير(

இடப்புறம் உள்ள, தீமையை எழுதும் மலக்குக்கு வலப்புறம் உள்ளவர்தாம் அமீர். நீ நற்காரியம் செய்தால் வலப்புறம் உள்ளவரே பத்து நன்மைகளைப் பதிவு செய்து விடுவார். ஆனால் நீ தீமை செய்தால் இடப்புறம் உள்ள மலக்கு வலப்புறம் உள்ளவரிடம் எழுதட்டுமா என்று ஆலோசிப்பார். அவர் வேண்டாம் சற்று பொறு. தவ்பா செய்ய வாய்ப்பு உண்டு என்பார். இவ்வாறு மூன்று முறை கேட்பார். அதற்குப் பின்பே தீமையை எழுத அனுமதி தருவார். அப்போது இருவரும் கூறுவார்களாம்: இந்தப் பாவி நம்மை வைத்துக் கொண்டே தீமை செய்துள்ளான். நமக்கென்ன... எழுதி விடுவோம் எனச் சபித்துக்கொண்டே எழுதுவர்.

 

இரவு பகல் இரண்டிலும் மொத்தம் பத்து மலக்குகள் மனிதனைச் சுற்றி இருப்பர் என மற்றொரு ரிவாயத்

لَهُ مُعَقِّبَات مِنْ بَيْن يَدَيْهِ وَمِنْ خَلْفه " الْآيَة ; وَمَلَك قَابِض عَلَى نَاصِيَتك فَإِذَا تَوَاضَعْت لِلَّهِ رَفَعَك وَإِذَا تَجَبَّرْت عَلَى اللَّه قَصَمَكَ ; وَمَلَكَانِ عَلَى شَفَتَيْك لَيْسَ يَحْفَظَانِ عَلَيْك إِلَّا الصَّلَاة عَلَى مُحَمَّد صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَمَلَك قَائِم عَلَى فِيك لَا يَدَع أَنْ تَدْخُل الْحَيَّة فِي فِيك وَمَلَكَانِ عَلَى عَيْنَيْك فَهَؤُلَاءِ عَشَرَة أَمْلَاك عَلَى كُلّ آدَمِيّ يَنْزِلُونَ مَلَائِكَة اللَّيْل عَلَى مَلَائِكَة النَّهَار لِأَنَّ مَلَائِكَة اللَّيْل سِوَى مَلَائِكَة النَّهَار فَهَؤُلَاءِ عِشْرُونَ مَلَكًا عَلَى كُلّ آدَمِيّ وَإِبْلِيس بِالنَّهَارِ وَوَلَده بِاللَّيْلِ "...  (تفسير ابن كثير(

முன் நெற்றியின் மீது ஒரு வானவர் சாட்டப்பட்டுள்ளார். நீ பணிந்து நடந்தால் உன்னை உயர்த்துவார். பெருமையடித்தால் பழி வாங்குவார். நீ ஸலவாத்தை மொழிந்தால் உன் உதடுகளிலும் இரு மலக்குகள் இருந்து கொண்டு பாதுகாப்பார்கள். அவர்களுள் ஒருவர் உன் வாய்க்கு வெளியில் இருந்து கொண்டு உன் வாய்க்குள் எந்த ஈ எறும்பும் தூசு துரும்பும் செல்லாமல் பாதுகாப்பார். இதுபோல் உன் கண்களைப் பாதுகாக்க இரு மலக்குகள். ஆக மொத்தம் இந்த ஐந்து பேர். பகல் ஷிஃப்ட். இதேபோல் ஐந்து பேர் நைட் ஷிஃப்ட். ஆக மொத்தம் பத்து மலக்குகள் உனது பாதுகாவலர்கள். நீ தீமை செய்தால் அவர்களே உன் எதிரிகள். இதுவல்லாமல் பகலில் தந்தை  இப்லீஸும் இரவில் குட்டி இப்லீஸும் உன்னை வழி கெடுக்க உன்னோடு இருப்பர். அப்பனும் பிள்ளையும் மாறி மாறி உன்னைக் கண்காணிப்பர். (மொத்தத்தில் நீ தனி ஆள் இல்லை.)  

 

إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ (27)الاعراف

وَقَالَ كَعْب الْأَحْبَار : لَوْ تَجَلَّى لِابْنِ آدَم كُلّ سَهْل وَكُلّ حَزْن لَرَأَى كُلّ شَيْء مِنْ ذَلِكَ شَيْئًا يَقِينًا لَوْلَا أَنَّ اللَّه وَكَّلَ بِكُمْ مَلَائِكَة يَذُبُّونَ عَنْكُمْ فِي مَطْعَمكُمْ وَمَشْرَبكُمْ وَعَوْرَاتكُمْ إِذًا لَتُخُطِّفْتُمْ وَقَالَ أَبُو أُمَامَة : مَا مِنْ آدَمِيّ إِلَّا وَمَعَهُ مَلَك يَذُود عَنْهُ حَتَّى يُسَلِّمهُ لِلَّذِي قُدِّرَ لَهُ (تفسير ابن كثير)

 

இன்பமும் துன்பமும் நமக்கு எப்படி ஏற்படுகிறது என மனிதனுக்குத் தெரிய வந்தால் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் மலக்குகளின் பங்களிப்பு இருப்பதை அவர் உணர்வார். அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் மலக்குகளைச் சாட்டா விட்டால் உங்கள் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமலும் போய் விடலாம். (ஒருவர் தமது வாய்க்கு மிக அருகில் கொண்டு சென்ற உணவை ஒரு பறவை வந்து கொத்திச் சென்ற சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதுவும் மலக்குகளின் வேலைதான்.) உங்களுக்கென்று அல்லாஹ் ரிஜ்கை ஏற்படுத்தி இருந்தாலும் அதைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை மலக்குகள்தாம் கச்சிதமாகச் செய்கிறார்கள்

இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும்போது அல்லாஹ்விடம் உதவி கோரினால் காப்பாற்றும் மலக்குகள்

قصة: عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال  كان رجل من أصحاب رسول الله صلى الله عليه و سلم من الأنصار يُكنى : أبا معلق وكان تاجرا يتجر بمال له ولغيره يضرب به في الآفاق5 وكان ناسكا ورعا6فخرج مَرَّة فلقيه لُصٌّ7 مقنع في السلاح فقال له : ضَعْ ما معك فإني قاتلك قال : ما تريد إلى دمي ؟ شأنك بالمال قال: أما المال فلي ولست أريد إلا دمك قال: أما إذا أبيتَ فذَرْني أُصلي أربع ركعات قال : صَلِّي ما بدا لك فتوضأ ثم صلى أربع ركعات فكان من دعائه في آخر سجدة أن قال:يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد أسألك بِعِزِّك الذي لا يرام وملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك أن تكفيني شر هذا اللص يا مغيث أغثني يا مغيث أغثني ثلاث مرات قال : دَعَى بها ثلاث مرات فإذا هو بفارس قد أقبل بيده حِرْبة8 واضعها بين أذني فرسه فلما بصر به اللص أقبل نحوه فطعنه فقتله ثم أقبل إليه فقال:قُمْ قال:من أنت بأبي أنت وأمي؟ فقد أغاثني الله بك اليوم قال: أنا ملك من أهل السماء الرابعة دعوتَ بدعائك الأول فسمعتُ لأبواب السماء قعقعة9 ثم دعوت بدعائك الثاني فسمعت لأهل السماء ضجة ثم دعوت بدعائك الثالث فقيل لي :دعاء مكروب فسألتُ الله تعالى أن يوليني قتله قال أنس:فاعلم أنه من توضأ وصلى أربع ركعات ودعا بهذا الدعاء استجيب له مكروبا كان أو غير مكروب(مجابو الدعوة لإبن أبي الدنيا)

 

பல்வேறு நாடுகளுக்கு வியாபாரச் சரக்குகளைக் கொண்டு செல்லும் ஒருவரை கொள்ளையன் ஒருவன் வழிமறித்தான். பணம் தானே உனக்கு வேண்டும் எடுத்துக் கொள் என்று அவர் கூறியும் அவன், “பணமும் வேண்டும்; உன் உயிரும் வேண்டும்” என்றான். இறுதியில் அவர், “நான்கு ரக்அத் தொழ என்னை விட்டுவிடு” என்று கேட்க அவன் சம்மதித்தான். அவர் தொழுது விட்டு அந்தக் கொள்ளையனிடமிருந்து காப்பாற்றும்படி மூன்று முறை துஆ செய்தபோது குதிரையில் ஒருவர் வேகமாக ஈட்டியுடன் வந்து அத்திருடனைக் குத்திக் கொன்றார். அவரிடம் நீங்கள் யார் என்று அவர் கேட்க. நான் நான்காவது வானத்தில் உள்ள மலக்குகளுள் ஒருவர். நீர்  ஒவ்வொரு முறையும் துஆ செய்தபோது விண்ணில் உள்ளவர்களிடையே பெரும் சத்தமும் கொந்தளிப்பும் உருவானது. இறுதியில் நான் அல்லாஹ்விடம் அந்தக் கொள்ளையனைக் கொன்றுவிட்டு வரும் பொறுப்பை என்னிடம் தரும்படி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான். நான் அவனைக் கொன்றேன். அனஸ் (ரழி) கூறும் போது, இத்தகைய சூழ்நிலையில் எவர் இந்த துஆவை ஓதினாலும் அவருக்கு ஈடேற்றம் கிடைக்கும்” என்றார்கள்.   

   

மலக்குகளுடைய எண்ணிக்கையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ள ஒரு ஹதீஸ்.

ஏழாவது வானத்தில் பைத்துல் மஃமூர் பள்ளிவாசலில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் மலக்குகள் அங்கு வழிபட உள்ளே நுழைகின்றனர். மீண்டும் அவர்கள் மறுமை நாள் வரை அதனை நோக்கி வருவதில்லை.

 

وَرَأَى سِدْرَة الْمُنْتَهَى وَغَشِيَهَا مِنْ أَمْر اللَّه تَعَالَى عَظَمَة عَظِيمَة مِنْ فَرَاش مِنْ ذَهَب وَأَلْوَان مُتَعَدِّدَة وَغَشِيَتْهَا الْمَلَائِكَة وَرَأَى هُنَاكَ جِبْرِيل عَلَى صُورَته وَلَهُ سِتّمِائَةِ جَنَاح وَرَأَى رَفْرَفًا أَخْضَر قَدْ سَدَّ الْأُفُق .وَرَأَى الْبَيْت الْمَعْمُور وَإِبْرَاهِيم الْخَلِيل بَانِي الْكَعْبَة الْأَرْضِيَّة مُسْنِد ظَهْره إِلَيْهِ لِأَنَّهُ الْكَعْبَة السَّمَاوِيَّة يَدْخُلهُ كُلّ يَوْم سَبْعُونَ أَلْفًا مِنْ الْمَلَائِكَة يَتَعَبَّدُونَ فِيهِ ثُمَّ لَا يَعُودُونَ إِلَيْهِ إِلَى يَوْم الْقِيَامَة .(تفسير ابن كثير)

 

உயிரைக் கைப்பற்றும் வானவர் ஒருவர் மட்டுமில்லை. அதற்கு ஒரு குழு  உண்டு. அதன் தலைவர் மலக்குல் மவ்த் ஆவார்.

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ (61)الانعام

 

காற்று, மழை, கடல், குளம், ஏரி போன்ற இரணம் சம்பந்தப்பட்டவற்றிற்கு மீகாயீல் (அலை) தலைமையில் ஒரு குழு உள்ளது.

 

நாம் சொல்லும் திக்ருகளை அல்லாஹ்விடம் கொண்டு போய்ச் சேர்க்கும் மலக்குகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنْ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ (بخاري 6408(


அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் 'என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?' என்று கேட்கிறான். அவ்வானவர்களைவிட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவான். அதற்கு அவர்கள், “உன்னை அவர்கள் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்' என்று வானவர்கள் கூறுகின்றனர்.

 

அதற்கு இறைவன், 'அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?' என்று கேட்பான். வானவர்கள், 'உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?' என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், 'அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்' என்பார்கள். அதற்கு இறைவன், 'அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?' என்று கேட்பான். வானவர்கள், 'சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடியிருப்பார்கள்' என்று பதிலளிப்பார்கள்.

 

இறைவன், 'அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?' என்று வினவுவான். வானவர்கள், 'நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)' என்று பதிலளிப்பர். இறைவன், 'அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். வானவர்கள், 'இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்ததில்லை' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?' என்று கேட்பான்.

 

வானவர்கள், 'நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருந்திருப்பார்கள்' என்பர். அப்போது இறைவன், 'எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்' என்று கூறுவான். அப்போது அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், '(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிறவர்களுள் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்' என்பார். அதற்கு இறைவன், 'அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்' என்று கூறுவான்.   

 

நாம் சொல்லும் ஸலவாத்துகளை நபியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் மலக்குகள்

عَنْ عَبْد اللَّه بْن مَسْعُود أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ لِلَّهِ مَلَائِكَة سَيَّاحِينَ فِي الْأَرْض يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلَام (تفسير ابن كثير(

உலகெங்கும் ஒரு நொடி கூட இடைவெளி இன்றி நபிகளாரின் மீது ஸலாம் கூறப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

மார்க்க ரீதியில் நண்பரைச் சந்திக்கச் சென்றால் வாழ்த்துவதற்கும் மலக்குகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ قَالَ هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لَا غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ (مسلم)

 

மனிதனைச் சோதிப்பதற்கும் மலக்குமார்கள்

மூன்று பேரை அல்லாஹ் சோதிக்க நாடி வானவரை மனிதத் தோற்றத்தில் அனுப்பிய சம்பவம்- புகாரீ: 346

 

====================




19 11 2021












12 11 2021
 12 11 2021 




1 கருத்து:

  1. MS Word மற்றும் PDF இவ்விரு முறைகளிலும் வாராவாரம் பயானை பதிவேற்றுங்கள். சேமித்து வைக்கவும், பேசுவதற்கும் இதுவே சிறந்த முறை.

    பதிலளிநீக்கு

வணிகர் தினம்

  கடந்து சென்று விட்ட மே 1 உழைப்பாளர் தினத்தையும் அடுத்து வரப் போகிற மே 5 வணிகர் தினத்தையும் உள்ளடக்கி எடுக்கப்பட்ட தலைப்பு ஒவ்வொன்றுக்க...