வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மூட நம்பிக்கைகள் அன்றும் இன்றும்





 அறியாமைக் கால மூட நம்பிக்கைகள். அடிப்படை இல்லாமல் ஒரு நிகழ்வை மற்றொரு நிகழ்வோடு சம்பந்தப்படுத்தி பேசுவது

عن الْمُغِيرَة بْن شُعْبَةَ رض قال انْكَسَفَتْ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ فَقَالَ النَّاسُ انْكَسَفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ (وفي رواية وَلَكِنَّ اللَّهَ تَعَالَى يُخَوِّفُ بِهَا عِبَادَهُ ) فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَادْعُوا اللَّهَ وَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ (بخاري) -كتاب الكسوف-

நபி ஸல் அவர்களின் மகனார் இப்றாஹீம் ரழி அவர்கள் இறந்த போது மக்கள் இப்றாஹீம் ரழி அவர்களின் இறப்பின் காரணமாகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அதை மறுத்து நிச்சயமாக சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும். யாருடைய இறப்பின் காரணமாகவோ அல்லது பிறப்பின் காரணமாகவோ இது நடப்பதில்லை. மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ் இவ்வற்றின் மூலம் மக்க எச்சரிக்கிறான். எனவே இந்த அடையாளங்களை நீங்கள் கண்டால் உடனே நீங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். கிரகணம் நீங்கும் வரை தொழுகையில் ஈடுபடுங்கள் என்றார்கள்.           

புறப்பட்ட பயணம் ரத்தாகி திரும்பி வந்தால் வீட்டின் முன்வாசல் வழியாக வரக்கூடாதாம்..

وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا (189البقرة)

وَقَالَ الْحَسَن الْبَصْرِيّ:كَانَ أَقْوَام مِنْ أَهْل الْجَاهِلِيَّة إِذَا أَرَادَ أَحَدهمْ سَفَرًا وَخَرَجَ مِنْ بَيْته يُرِيد سَفَره الَّذِي خَرَجَ لَهُ ثُمَّ بَدَا لَهُ بَعْد خُرُوجه أَنْ يُقِيم وَيَدَع سَفَره لَمْ يَدْخُل الْبَيْت مِنْ بَابه وَلَكِنْ يَتَسَوَّرهُ مِنْ قِبَل ظَهْره فَقَالَ اللَّه تَعَالَى وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوت مِنْ ظُهُورهَا(تفسير ابن كثير)

இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் கூறினார்கள். அறியாமைக் கால மக்கள் பிரயாணம் செய்ய நாடி வீட்டை விட்டும் புறப்பட்டு வெளியே சென்ற பிறகு அதற்குப் பின் அந்தப் பிரயாணத்தை ரத்து செய்ய நாடினால் அவர் (திரும்பி வரும்போது) வீட்டின் முன் வாசல் வழியாக நுழைய மாட்டார். மாறாக வீட்டின் பின் வாசல் வழியாக (நுழைவார். பின்வாசல் என்பது இல்லா விட்டால்) துவாரம் ஏற்படுத்தியேனும் நுழைவார். இந்த மூட நம்பிக்கையை எச்சரித்து அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கினான்.   

عن الْبَرَاء رَض يَقُولُ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِينَا كَانَتْ الْأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ وَلَكِنْ مِنْ ظُهُورِهَا فَجَاءَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ فَنَزَلَتْ "وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنْ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا (بخاري- باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا) كتاب العمرة

மற்றொரு அறிவிப்பில்(ஆரம்ப காலத்தில்) அன்சாரிகள் ஹஜ்ஜை முடித்து விட்டு (வீட்டுக்குத் திரும்பி) வரும்போது வீட்டின் முன் வாசல் வழியாக நுழைய மாட்டார்கள். மாறாக வீட்டின் பின் வாசல் வழியாக நுழைவார்கள். அவ்வாறிருக்க ஒரு அனாசாரி வழமையை மாற்றி முன்வாசல் வழியாக நுழைந்தார். இதை மற்றவர்கள் குறையாக பேசினார்கள். அப்போது இந்த மூட நம்பிக்கையை எச்சரித்து அல்லாஹ் மேற்படி வசனத்தை இறக்கினான்.   

 

 இதற்கு ஒப்பான மூடநம்பிக்கைகள் இன்றும் உள்ளன. உதாரணமாக மய்யித்து வீட்டுக்குச் சென்றால் குளிக்காமல் வீட்டுக்குள் வரக் கூடாது என்ற மூடநம்பிக்கை சிலரிடம் குறிப்பாக பெண்களிடம் உள்ளது. இது மாற்றுமத கலாச்சாரமாகும். மய்யித்தை குளிப்பாட்டியவர்கூட அவர் மீது ஏதேனும் நஜீஸ் பட்டிருக்கலாம் என்பதால் குளிப்பது முஸ்தஹப் என கூறப்பட்டுள்ளது.                                                                

மவ்த்துடைய இத்தா விஷயத்தில் மூட நம்பிக்கை

عن أُمَّ سَلَمَةَ رضي الله عنها تَقُولُ جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَقَدْ اشْتَكَتْ عَيْنَهَا أَفَتَكْحُلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا كُلَّ ذَلِكَ يَقُولُ لَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ وَقَدْ كَانَتْ إِحْدَاكُنَّ فِي الْجَاهِلِيَّةِ تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ (بخاري) كتاب الطلاق - قَالَ حُمَيْدٌ فَقُلْتُ لِزَيْنَبَ وَمَا تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ فَقَالَتْ زَيْنَبُ كَانَتْ الْمَرْأَةُ إِذَا تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا دَخَلَتْ حِفْشًا وَلَبِسَتْ شَرَّ ثِيَابِهَا وَلَمْ تَمَسَّ طِيبًا حَتَّى تَمُرَّ بِهَا سَنَةٌ ثُمَّ تُؤْتَى بِدَابَّةٍ حِمَارٍ أَوْ شَاةٍ أَوْ طَائِرٍ فَتَفْتَضُّ بِهِ فَقَلَّمَا تَفْتَضُّ بِشَيْءٍ إِلَّا مَاتَ ثُمَّ تَخْرُجُ فَتُعْطَى بَعَرَةً فَتَرْمِي ثُمَّ تُرَاجِعُ بَعْدُ مَا شَاءَتْ مِنْ طِيبٍ أَوْ غَيْرِهِ سُئِلَ مَالِكٌ مَا تَفْتَضُّ بِهِ قَالَ تَمْسَحُ بِهِ جِلْدَهَا (بخاري)  باب تُحِدُّ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا- كتاب الطلاق

 நபி ஸல் அவர்களிடம் ஒரு பெண் வந்து என் மகளுடைய கணவன் இறந்து விட்டார். அதற்காக அவள் இத்தா இருக்கிறாள். இந்நிலையில் அவள் கண்களில் ஒரு வலி  உள்ளது. அந்த வலி நீங்க சுர்மா இட்டுக்கொள்ளலாமா என்று கேட்க. நான்கு மாதம் பத்து நாள் இத்தா காலம் முடியும் வரை அவ்வாறு சுர்மா இட்டுக் கொள்ளக்கூடாது என்று மூன்று முறை கூறி, பின்பு அறியாமைக்காலத்தில் கணவன் இறந்த பின் ஒரு வருடம் இத்தா இருப்பாள். ஆண்டின் முடிவில் இத்தா முடிந்ததற்கான அடையாளமாக ஒட்டகச்சானத்தை எறிவாள். அதுபோன்ற சிரமமும், மூடநம்பிக்கையும் இப்போது இல்லை என விளக்கினார்கள். எனினும் சுர்மா இடுவதை தடுத்தார்கள். நபி ஸல் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்று சுருக்கமாக கூறியதை இரண்டாவது ஹதீஸில் ஜைனப் ரழி விளக்கிக் கூறியுள்ளார்கள். அதாவது கணவன் இறந்த பின் மூடநம்பிக்கை அடிப்படையில் மிகச் சிறிய ஒரு குடிசையில் சென்று தங்கிக் கொள்வாள். அவளுடைய ஆடைகளில் மிக மோசமான ஆடையை அணிந்து கொள்வாள். ஒரு வருடம் வரை நறுமணம் பூச மாட்டாள். (குளிக்கவும் மாட்டாள்) ஒரு வருடம்  கழிந்த பின் ஏதேனும் ஒரு கால்நடை அவளிடம் கொண்டு வரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலை)   கடுமையாக தேய்த்துக் கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும்போது அந்த கால்நடை (அவளது உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருக்காது. (பெரும்பாலும் செத்து விடும்) பின்பு அவள் குடிசையை விட்டு வெளியே வருவாள். அவளிடம் ஒட்டகச் சாணம் தரப்படும். அதை தனக்கு முன் பக்கத்தில் வீசி எறிந்து இத்தாவை முடித்துக் கொள்வாள். நூல்- புகாரீ 5337

அறியாமைக் காலத்தைப் போல் கணவனை இழந்த விதவைகள் விஷயத்தில் இன்றும் நிறைய மூட நம்பிக்கைகள் உள்ளன

சஃபர் மாதத்தை பீடையாக கருதுவது பற்றி எச்சரிக்கும் நபிமொழி

عن أَبي هُرَيْرَةَ  رضي الله عنه قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ وَفِرَّ مِنْ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنْ الْأَسَدِ (بخاري) باب الْجُذَامِ .- كتاب الطب وَلاَ صَفَرَ :قال البيضاوي : ويحتمل أن يكون نفيا لما يتوهم أن شهر صفر تكثر فيه الدواهي والفتن (مرقاة)

قال أبو داود في سننه قال بقية سألت محمد بن راشد عنه قال كانوا يتشاءمون بدخول صفر فقال النبي لا صفر (مرقاة)

லா சஃபர என்பதற்கான என்பதற்கான பல விளக்கங்களில் ஒன்று

ஸஃபர் மாதம் வந்து ட்டால் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகி விடும் என நம்பி அதை பீடை மாதமாக கருதினார்கள் அதை தடுக்கும் விதமாக லா ஸஃபர ஸஃபர் பீடை மாதம் அல்ல என நபி ஸல் விளக்கினார்கள் 

لاَ عَدْوَى விளக்கம்

 தொற்று நோய் கிடையாது என்ற ஹதீஸுக்கும், தொழுநோயாளியை விட்டும் விரண்டோடு என்ற ஹதீஸுக்கும் இணைப்பு – அன்று அறியாமைக் கால மக்கள் நோய் உண்டாக காரணமே தொற்று தான் என்றும் இறைவனுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும் கருதினர். அதை களையும் விதமாக நபி ஸல் இவ்வாறு கூறினார்கள். அதாவது நோயாளியுடன் கலந்திருப்பதால் மட்டுமே நோய் வருவதில்லை. அல்லாஹ்வின் நாட்டமும் இருந்தால் தான் நோய் ஏற்படும். நோயாளியை தாக்கியுள்ள வைரஸ் கிருமிகள் காற்று வாயிலாகவும், நீர் வாயிலாகவும் இடம் பெயர்ந்து மற்றவர்களுக்கும் நோய் பரவ இடமுண்டு. இவ்வாறு பரவ வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஆணையாக இருக்கும். எனவே தான் தொழு நோயாளிகளிடமிருந்து விலகி இருங்கள். என்றார்கள். மற்றொரு விளக்கம்- இறை நம்பிக்கையாளர் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை சார்ந்திருப்பார். மற்ற காரணங்களை நம்ப மாட்டார். இத்தகையவருக்கு சொல்லப்பட்டதே தொற்று நோய் கிடையாது என்ற வார்த்தை. அதே நேரத்தில் வெளிக்காரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இறைசக்தியின் மீது பலவீனமான நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்களின் இறை நம்பிக்கை மேலும் பலவீனமாக ஆகக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்டதே  தொழுநோயாளியை விட்டும் விரண்டோடு என்பதாகும். ஆக நோய் உண்டாக காரணமாகலாம் என அறிவியல் ரீதியாகவோ, அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்டால் அதிலிருந்து விலகி இருக்கலாம். அதே நேரத்தில் அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் ஏற்படுவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் ( ஃபத்ஹுல் பாரீ )

لاَ طِيَرَة விளக்கம்

பறவை சகுனம் என்பது அறியாமைக் காலப் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். அன்று ஒருவர் ஒரு காரியத்திற்காக வெளியே புறப்படும்போது அவருக்கு வலப்பக்கமாக பறவை ஏதேனும் பறந்து சென்றால் அதை நல்ல சகுனமாக கருதி காரியத்தை தொடர்வார். இடப் பக்கமாக பறந்து சென்றதைப் பார்த்து விட்டால் அதை கெட்ட சகுனமாக கருதி திரும்பி விடுவார். சிலர் இதற்காக பறவையை பறக்க விட்டு சகுனம் பார்த்ததும் உண்டு. இந்த மூட நம்பிக்கையை ஒழித்து பறவைகள் பறப்பதற்கும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நடக்கப்போவதை தெரிவிக்கும் ஆற்றல் பறவைக்கு கிடையாது என விளக்கினார்கள்-   அறியாமைக் காலத்தைப் போல் இன்றும் நம்மில் சிலர் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்றும், வெளியில் புறப்படும்போது எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் போகிற காரியம் உருப்படாது என்றும் கருதுகின்றனர். (ஃபத்ஹுல் பாரி)

துற்குறி என்பது இல்லை. ஆனால் நற்குறி உண்டு. அதாவது வெளியில் புறப்படும்போது செவியேற்கும் நல்ல வார்த்தைகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا طِيَرَةَ وَخَيْرُهَا الْفَأْلُ قَالَ وَمَا الْفَأْلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ (بخاري) كتاب الطب -عَنْ أَنَسِ رض أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ إِذَا خَرَجَ لِحَاجَةٍ أَنْ يَسْمَعَ يَا رَاشِدُ يَا نَجِيحُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي الطِّيَرَةِ-كِتَاب السِّيَرِ

وَلاَ هَامَةَ  என்பதன் விளக்கம்  (ஃபத்ஹுல் பாரி)

ஆந்தை சகுனம் குறித்து அன்றைய அரபுகளிடம் இரு விதமான மூடநம்பிக்கை இருந்தது. ஒரு வீட்டில் ஆந்தை வந்து உட்கார்ந்தால் அந்த வீட்டில் யாரேனும் இறந்து விடுவார்கள் என்று நம்பினர். இதை மறுக்கும் விதமாக ஆந்தை சகுனம் கிடையாது என்றார்கள்   மற்றொரு விளக்கம்- இறந்து போனவரின் எலும்புகள் ஆந்தையாக உருமாறி சுற்றிக் கொண்டிருக்கும என நம்பினர். இதை மறுக்கும் விதமாக லா ஹாம்மத்த இறந்தவர் ஆந்தையாக உருமாறுவதில்லை என்றார்கள். மற்றொரு விளக்கம்- அறியாமைக்கால அரபுகளிடம் மற்றொரு மூடநம்பிக்கையும் இருந்தது. ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது கொலைக்கு பழி வாங்கப்படா விட்ட்டால் கொலையுண்டவரின் தலையிலிருந்து ஒரு புழு வெளியேறி அவரது கப்ரை சுற்றிக் கொண்டே இருக்கும். எனக்கு நீர் புகட்டுங்கள் எனக்கு நீர் புகட்டுங்கள் என அது கூறும். பழி வாங்கப்பட்டு விட்டால் அது போய் விடும். இல்லையேல் அங்கேயே தங்கி விடும். இந்தப்புழுவுக்கும் ஹாமத் என்றே கூறுவர். இதன்படி இந்த ஹதீஸின் அர்த்தம் புழு குறித்த நம்பிக்கை கூடாது என்பதாகும்

وَلاَ صَفَرَ  என்பதன் விளக்கம்    (ஃபத்ஹுல் பாரி)

வயிற்றிலுள்ள ஒரு புழுவால் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கும் ஒரு வகை நோய் தான் ஸஃபர் என்று இமாம் புகாரீ ரஹ் அவர்கள்  விளக்கமளித்துள்ளார்கள். சொறி, சிரங்கை விட வேகமாய் பரவும் ஒரு தொற்று நோய் என இதை அரபுகள் கருதினர். இதை மறுக்கும் விதமாக லா ஸஃபர ஸஃபர் என்பது ஒரு தொற்று நோய் கிடையாது என நபி ஸல் அவர்கள் விபரித்தார்கள். இன்னொரு விளக்கம்- வயிற்றில் ஸஃபர் என்னும் புழு இருப்பதாகவும், மனிதனுக்கு பசி வரும்போது அப்புழு வயிற்றைக் கடித்து தொல்லை தரும் என்றும் அரபுகள் நம்பினர் அப்படி ஒரு புழுவே கிடையாது என உணர்த்த நபி ஸல்  இவ்வாறு கூறினார்கள். மற்றொரு விளக்கம் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள புனித மாதங்கள் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் என்றிருக்க, அரபுகள் முஹர்ரம் மாதத்தை போர் செய்ய அனுமதிக்கப்பட்ட மாதமாகவும், அதற்கு பதிலாக ஸஃபர் மாதத்தை புனித மாதமாகவும் தங்களின் சுய இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தனர். இதை தடுக்கும் விதமாக... லா ஸஃபர... ஸஃபர் மாதம் போர் செய்ய தடுக்கப்பட்ட புனித மாதம் அல்ல என விளக்கினார்கள். மற்றொரு விளக்கம் ஸஃபர் மாதம் வந்து விட்டால் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகி விடும் என நம்பி அதை பீடை மாதமாக கருதினார்கள் அதை தடுக்கும் விதமாக லா ஸஃபர ஸஃபர் பீடை மாதம் அல்ல என நபி ஸல் விளக்கினார்கள் 

முடிவுரை- மூடநம்பிக்கைகள் ஈமானை பாதிக்கும். மூட நம்பிக்கைகளை விட்டால் தான் ஈமான் முழுமை பெறும். இந்த உம்மத்தில் 70 ஆயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வர். அவர்களில் சகுனம் பார்க்காதவர்களும் அடங்குவர் புகாரீ5752

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَجَعَلَ يَمُرُّ النَّبِيُّ مَعَهُ الرَّجُلُ وَالنَّبِيُّ مَعَهُ الرَّجُلَانِ وَالنَّبِيُّ مَعَهُ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَرَجَوْتُ أَنْ تَكُونَ أُمَّتِي فَقِيلَ هَذَا مُوسَى وَقَوْمُهُ ثُمَّ قِيلَ لِي انْظُرْ فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَقِيلَ لِي انْظُرْ هَكَذَا وَهَكَذَا فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَقِيلَ هَؤُلَاءِ أُمَّتُكَ وَمَعَ هَؤُلَاءِ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ فَتَفَرَّقَ النَّاسُ وَلَمْ يُبَيَّنْ لَهُمْ فَتَذَاكَرَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا أَمَّا نَحْنُ فَوُلِدْنَا فِي الشِّرْكِ وَلَكِنَّا آمَنَّا بِاللَّهِ وَرَسُولِهِ وَلَكِنْ هَؤُلَاءِ هُمْ أَبْنَاؤُنَا فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَتَطَيَّرُونَ وَلَا يَسْتَرْقُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ أَمِنْهُمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ نَعَمْ فَقَامَ آخَرُ فَقَالَ أَمِنْهُمْ أَنَا فَقَالَ سَبَقَكَ بِهَا عُكَاشَة (بخاري)

சஃபர் மாதத்தில் நடைபெற்ற மற்ற மகிழ்ச்சியான விஷயங்கள்

وأما فاطمة فتزوجها ابن عمها على بن أبى طالب في صفر سنة اثنتين، فولدت له الحسن والحسين، ويقال ومحسن، وولدت له أم كلثوم وزينب. الكتاب :  (السيرة النبوية لابن كثير)

ஹிஜ்ரீ இரண்டாம் வருடம் சஃபர் மாதத்தில் ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கும் அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) , முஹ்ஸின் ரழி ஆகிய ஆண்மக்களும் இரண்டு பெண் மக்களும் பிறந்தனர். அவ்விரு பெண்மக்களுக்கும் தன்னுடைய சகோதரிகளான ஜைனப் (ரழி) உம்மு குல்ஸூம் (ரழி) ஆகியோரின் பெயரையே வைத்தார்கள்.

படிப்பினை- தன் குடும்பத்தில் முக்கியமானவர்களின் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு வைப்பது தவறல்ல.

وقد تزوج عمر بن الخطاب في أيام ولايته بأم كلثوم بنت على بن أبى طالب من فاطمة وأكرمها إكراما زائدا، أصدقها أربعين ألف درهم لاجل نسبها من رسول الله صلى الله عليه وسلم، فولدت له زيدا بن عمر بن الخطاب. (السيرة النبوية لابن كثير)

அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரழி) அவர்களை பிற்காலத்தில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்தார்கள். நபி ஸல் அவர்களின் வாரிசு என்பதால் நல்ல முறையில் அந்தப் பெண்ணை கவனித்துக் கொண்டார்கள். உம்மு குல்ஸூம் (ரழி) அவர்களுக்கு மஹராக 40 ஆயிரம் திர்ஹங்களை வழங்கினார்கள். அவ்விருவர் மூலம் ஜைத் என்ற குழந்தை பிறந்தது.

 

وقد تزوج عمر بن الخطاب في أيام ولايته بأم كلثوم بنت على بن أبى طالب من فاطمة وأكرمها إكراما زائدا، أصدقها أربعين ألف درهم لاجل نسبها من رسول الله صلى الله عليه وسلم، فولدت له زيدا بن عمر بن الخطاب. (السيرة النبوية لابن كثير)

அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரழி) அவர்களை பிற்காலத்தில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்தார்கள். நபி ஸல் அவர்களின் வாரிசு என்பதால் நல்ல முறையில் அந்தப் பெண்ணை கவனித்துக் கொண்டார்கள். உம்மு குல்ஸூம் (ரழி) அவர்களுக்கு மஹராக 40 ஆயிரம் திர்ஹங்களை வழங்கினார்கள். அவ்விருவர் மூலம் ஜைத் என்ற குழந்தை பிறந்தது.

وقد كان عبدالله بن جعفر تزوج بأختها زينب بنت على وماتت عنده أيضا،  . (السيرة النبوية لابن كثير)

மற்றொரு மகளான ஜைனப் (ரழி) அவர்களை அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் திருமணம் செய்தார்கள்

அன்னை ஃபாத்திமா ரழி அவர்களின் மண வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்

ஃபாத்திமாவை ரழி பலர் பெண் கேட்ட போதும்  அலீ ரழி அவர்களையே மருமகனாக தேர்வு செய்தார்கள்

عَنْ عَلِىٍّ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ: لَقَدْ خُطِبَتْ فَاطِمَةُ بِنْتُ النَّبِىِّ صلى الله عليه وسلم فَقَالَتْ لِى مَوْلاَةٌ لِى : هَلْ عَلِمْتَ أَنَّ فَاطِمَةَ تُخْطَبُ؟ قُلْتُ : لاَ أَوْ نَعَمْ قَالَتْ: فَاخْطُبْهَا إِلَيْهِ قَالَ قُلْتُ: وَهَلْ عِنْدِى شَىْءٌ أَخْطُبُهَا عَلَيْهِ قَالَ فَوَاللَّهِ مَا زَالَتْ تُرَجِّينِى حَتَّى دَخَلْتُ عَلَيْهِ وَكُنَّا نُجِلُّهُ وَنُعَظِّمُهُ فَلَمَّا جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ أُلْجِمْتُ حَتَّى مَا اسْتَطَعْتُ الْكَلاَمَ فَقَالَ هَلْ لَكَ مِنْ حَاجَةٍ. فَسَكَتُّ فَقَالَهَا ثَلاَثَ مَرَّاتٍ قَالَ :لَعَلَّكَ جِئْتَ تُخْطُبُ فَاطِمَةَ  قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَىْءٍ تَسْتَحِلُّهَا بِهِ قَالَ قُلْتُ: لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ  فَمَا فَعَلَتِ الدِّرْعُ الَّتِى كُنْتُ سَلَّحْتُكَهَا قَالَ عَلِىٌّ:وَاللَّهِ إِنَّهَا لَدِرْعٌ حُطَمِيَّةٌ مَا ثَمَنُهَا إِلاَّ أَرْبَعُمِائَةِ دِرْهَمٍ قَالَ  اذْهَبْ فَقَدْ زَوَّجْتُكَهَا وَابْعَثْ بِهَا إِلَيْهَا فَاسْتَحِلَّهَا بِهِ (سنن الكبري للبيهقي)

ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் கூறினார்கள். அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பலர் பெண் கேட்டார்கள். எனக்கும் அந்தச் செய்தி வந்த போது என்னுடைய பணியாளர் என்னிடம் அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பலரும் பெண் கேட்கிறார்கள். நீங்களும் கேளுங்கள் என்றார். ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்யும் அளவுக்கு என்னிடம் என்ன தகுதி உள்ளது என்று தயங்கினேன். இருந்தாலும் மனதில் ஆசை இருந்தது. நாங்கள் நபி ஸல் அவர்களை மிகவும் கண்ணியப் படுத்துவோம். எனவே அவர்கள் முன்னிலையில் என் மனதில் உள்ளதை சொல்ல முனைந்த போது எனக்கு வார்த்தை வரவில்லை. நபி ஸல் அவர்கள் என்ன விஷயம் என்று கேட்டார்கள். நான் மவுனமாக இருந்தேன். மூன்று முறை நபி ஸல் அவர்கள் கேட்டும் கூட என்னால் பதில் கூற முடியவில்லை. பிறகு நபி ஸல் அவர்களே என்னிடம் ஃபாத்திமாவை பெண் கேட்க வந்தீர்கள் அல்லவா என்றார்கள். ஆம் என்றேன். உம்மிடம் என்ன மஹர் உள்ளது என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். என்னிடம் எதுவும் இல்லை என்று நான் கூற, நான் உமக்கு அன்பளிப்பாக கொடுத்த உருக்குச் சட்டையை என்ன செய்தீர் என்று கேட்க, அது இருக்கிறது. ஆனால் அது வெறும் நானூறு திர்ஹம் மதிப்புக்குக் கூட வராதே என்று நான் கூறினேன். பரவாயில்லை. அதைக் கொண்டு வாரும் என்று நபி ஸல் அவர்கள் கூற, அதை நான் கொண்டு வந்தேன். அதை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கொடுத்தனுப்பச் சொன்ன நபி ஸல் அவர்கள் இந்த மஹருக்குப் பகரமாக நான் ஃபாத்திமாவை உமக்கு திருமணம் செய்து வைத்தேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.       

 

பெரிய தந்தை அல்லது சிறிய தந்தையின் மகனையோ அல்லது மகளையோ மணமுடிக்கக்கூடாது என்று சிலர் கருதுகின்றனர். அதேபோல் பெரிய தாயார் அல்லது சிறிய தாயாரின் மகனை அல்லது மகளை  மணமுடிக்கக்கூடாது  என்றும் சிலர் கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ஏனெனில் ஃபாத்திமா ரழி அவர்கள் திருமணம் செய்தது தன் தந்தையின் தகப்பனாருடைய அதாவது பாட்டனாருடைய சகோதரர் மகனாகும். பாட்டனாரின் சகோதரர் மகனை திருமணம் செய்வது எவ்வாறு கூடுமோ அவ்வாறே தந்தையின் சகோதரர் மகனையும் திருமணம் செய்வது கூடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.                                                            

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، أَنَّهُ قَالَ : يَا رسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي بِنْتِ عَمِّكَ بِنْتِ حَمْزَةَ ، فَإِنَّهَا أَجْمَلُ فَتَاةٍ فِي قُرَيْشٍ ؟ قَالَ : أَمَا عَلِمْتَ أَنَّ حَمْزَةَ أَخِي مِنَ الرَّضَاعَةِ ، وَإِنَّ اللَّهَ حَرَّمَ مِنَ الرَّضَاعَةِ مَا حَرَّمَ مِنَ النَّسَبِ (مشكاة) وفي رواة لمسلم أَلَا تَخْطُبُ بِنْتَ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ إِنَّ حَمْزَةَ أَخِي مِنْ الرَّضَاعَةِ (كِتَاب الرِّضَاعِ)  قال الله تعالي  حُرِّمَتْ عَلَيْكُمْ......   وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ (النساء:24

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் உங்களுடைய சிறிய தந்தை ஹம்ஜா ரழி அவர்களின் மகளை மணமுடித்திருக்கலாமே என்று வினவப்பட்ட போது நானும் ஹம்ஜா ரழி அவர்களும் ஒரே தாயிடம் பால் அருந்தியதால் அவரது மகள் என் சகோதரி என்று தான் கூறினார்களே தவிர தன் சிறிய தந்தையின் மகள் என்பதை திருமண உறவுக்கான தடையாக நபி ஸல் அவர்கள் கூறவில்லை.  

ஹழ்ரத் அலீ (ரழி), ஃபாத்திமா (ரழி) வாழ்வில் நடந்த படிப்பினைக்குரிய சம்பவங்கள்.

خرج علي بن أبي طالب رضي الله عنه يبيع إزار فاطمة رضي الله عنها ليأكلوا بثمنه فباعه بستة دراهم فرآه سائل فأعطاه إياها فجاءه جبريل في صورة أعرابي ومعه ناقة فقال يا أبا الحسن اشتر هذه الناقة فقال ما معي ثمنها قال إلى أجل فاشتراها بمائة ثم عرض له ميكائيل في طريقه فقال أتبيع هذه الناقة قال نعم واشتريتها بمائة قال ولك من الربح ستون فباعها له فعرض له جبريل قال بعته الناقة قال نعم قال ادفع إليّ ديني فدفع له مائة ورجع بستين فقالت له فاطمة من أين لك هذا قال تاجرت مع الله بستة فأعطاني ستين ثم جاء إلى النبي صلى الله عليه وسلم واخبره بذلك فقال البائع جبريل والمشتري ميكائيل والناقة لفاطمة تركبها يوم القيامة.  (السيرة الحلبية- الحاوي للفتاوي للسيوطي

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சிரமமான சூழ்நிலை காரணமாக ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னிடமிருந்த ஒரு ஆடையைக் கொடுத்து அதை விற்று அதைக் கொண்டு உணவு வாங்கி வரும்படி கணவரிடம் கூறினார்கள். அந்த துணி ஆறு திர்ஹம் விலை போனது. திரும்பி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை வந்து யாசகம் கேட்டவுடன் தன்னுடைய நிலையைப் பற்றி யோசிக்காமல் அதை தர்ம ம் செய்து விட்டார்கள். வெறும் கையுடன் வந்து கொண்டிருந்த போது ஒரு கிராமவாசியின் தோற்றத்தில் ஒருவர் வந்தார். அவரிடம் ஒரு ஒட்டகம் இருந்த து. அதை வாங்கிக் கொள்ளும்படி ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை வற்புறுத்தினார். ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, பரவாயில்லை. பணம் வரும்போது தந்தால் போதும் என்றார் அவர்.   

  நூறு திர்ஹத்திற்கு அந்த ஒட்டகத்தை தவனை வியாபார அடிப்படையில் வாங்கிக் கொண்டு இன்னும் சற்று தூரம் சென்ற போது மற்றொரு மனிதர் வந்தார். இந்த ஒட்டகம் எனக்கு வேண்டும் என்றார். நானே இதற்கு இன்னும் பணம் தரவில்லை என்று ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் கூற, பரவாயில்லை. நான் தருகிறேன் என்று கூறினார். ஒட்டகத்தின் விலை 100 திர்ஹங்கள் என்று கூறியவுடன் அந்த நபர் நான் உங்களுக்கு 160 திர்ஹங்கள் தருகிறேன். நீங்கள் யாரிடம் ஒட்டகத்தை வாங்கினீர்களோ அவருக்கு 100 திர்ஹங்கள் தந்து விட்டு நீங்கள் இலாபமாக 60 திர்ஹங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி திர்ஹங்களை ஒப்படைத்தார். அந்த திர்ஹங்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒட்டகத்தை முதலில் விற்றவர் வந்தார். அவரிடம் 100 திர்ஹங்களை ஒப்படைத்து மீதம் 60 திர்ஹங்களுடன் அலீ (ரழி) அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள்.                                               

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் ஆறு திர்ஹங்கள் மட்டுமே மதிப்புடைய துணிக்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது என்று ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்க, நான் அல்லாஹ்வுடன் ஆறு திர்ஹங்களுக்கு ஒரு வியாபாரம் செய்தேன். அல்லாஹ் எனக்கு அதை பத்து மடங்காக திருப்பித் தந்தான் என்றார்கள். இருவரும் சேர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.   

இந்த விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அலீ ரழி அவர்கள் கூறியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். முதலில் உம்மிடம் ஒட்டகத்தை விற்பது போன்ற தோற்றத்தில் வந்தவர்கள் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். பின்பு உம்மிடம் அதை வாங்குவது போல் வந்தவர்கள் ஹழ்ரத் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். 

படிப்பினை- இன்பம் துன்பம் எல்லா நிலையிலும் இணைந்து வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கையாகும்.

கணவன், மனைவி இடையே எப்போதாவது மனஸ்தாபம் சகஜம். அதை ஊதிப் பெரிதாக்காமல் சமரசம் ஏற்படுத்தும் பெற்றோர்கள் தான் சிறந்தவர்கள்

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَيْهِ لَأَبُو تُرَابٍ وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا وَمَا سَمَّاهُ أَبُو تُرَابٍ إِلَّا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ فَاضْطَجَعَ إِلَى الْجِدَارِ إِلَى الْمَسْجِدِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُهُ فَقَالَ هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الْجِدَارِ فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَامْتَلَأَ ظَهْرُهُ تُرَابًا فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ اجْلِسْ يَا أَبَا تُرَابٍ  (بخاري

ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை மற்றவர்கள் அபுத்துராப் மண்ணின் தந்தையே என்று அழைத்தால் அது ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். முதன் முதலில் ஹழ்ரத் அலீ (ரழி) அவர்களை அவ்வாறு அழைத்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான். ஒருநாள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது ஏற்பட்ட மனச்சங்கடம் காரணமாக அவர்கள் மஸ்ஜிதுக்குச் சென்று வெறும் தரையில் சுவற்றை நோக்கி படுத்துக் கொண்டார்கள். இதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று நேரத்தில் அங்கு வந்து அலீ (ரழி) அவர்களை எழுப்ப, அலீ (ரழி) அவர்களின் முதுகு முழுவதும் மண்ணாக இருப்பதைக் கண்டு யா அபத்துராப்  மண்ணின் தந்தையே என்று அழைத்தார்கள். பின்பு அலீ (ரழி) அவர்களின் முதுகில் இருந்த மண்ணைத் தட்டி விட்டார்கள். யா அபத்துராப் எழுந்து அமருங்கள் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். நூல் புகாரீ 

          

நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் முதன்முதலாக அவர்கள் போருக்கு புறப்பட்டது சஃபர் மாதத்தில் தான்

غزة الأبواء أو ودان :في صفر سنة 2 هـ، الموافق أغسطس سنة 623م، خرج رسول الله صلى الله عليه وسلم فيها بنفسه في سبعين رجلاً من المهاجرين خاصة يعترض عيراً لقريش، حتى بلغ ودان، فلم يلق كيداً، واستخلف فيها على المدينة سعد بن عبادة رضى الله عنه وهذه أول غزوة غزاها رسول الله صلى الله عليه وسلم،  (الرحيق المختوم)

வரலாற்றுச் சிறப்பு மிக்க கைபர் வெற்றியும் சஃபர் மாதத்தில் நிகழ்ந்தது. ஏழு பேர் சேர்ந்து தூக்க முடியாத கோட்டைக் கதவை அலீ ரழி அவர்கள் தனி நபராக தூக்கி அதை கேடயமாக பயன்படுத்தி நீண்ட நேரம் போரிட்டதும் இந்த கைபரில் தான். பல வருடங்களுக்கு முன்னால் மக்காவிலிருந்து அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற முஸ்லிம்கள் குறிப்பாக நபியவர்களின் சிறிய தந்தை ஆகியோர் மதீனா திரும்பிய போது நபியவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்ததும் இந்த கைபர் வெற்றியின் போது தான்

عَنْ الشّعْبِيّ : أَنّ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللّهُ عَنْهُ قَدِمَ عَلَى رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ يَوْمَ فَتْحِ خَيْبَرَ ، فَقَبّلَ رَسُولَ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ بَيْنَ عَيْنَيْهِ وَالْتَزَمَهُ وَقَالَ مَا أَدْرِي بِأَيّهِمَا أَنَا أُسَرّ : بِفَتْحِ خَيْبَرَ ، أَمْ بِقُدُومِ جَعْفَرٍ ؟ (السيرة النبوية لابن كثير)

அந்தக் காலத்தில் அரபிகள் ஷவ்வால் மாதத்தையே பீடையாக கருதி அம்மாதத்தில் எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள் அதனால் தான் ஆயிஷா ரழி அவர்கள் அந்த மூட நம்பிக்கையை தகர்க்கும் விதமாக பெரும்பாலும் தாம் நடத்தி வைக்கும் திருமணங்களை ஷவ்வால் மாதத்திலேயே ஏற்பாடு செய்வார்கள்

عَنْ عَائِشَةَ قَالَتْ تَزَوَّجَنِى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى شَوَّالٍ وَبَنَى بِى فِى شَوَّالٍ فَأَىُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّى. قَالَ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِى شَوَّالٍ(مسلم) باب اسْتِحْبَابِ التَّزَوُّجِ وَالتَّزْوِيجِ فِى شَوَّالٍ وَاسْتِحْبَابِ الدُّخُولِ فِيهِ.- كتاب النكاح

 

 

 

கிஸ்ரா மன்னர்களின் ஆட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றியதும்,

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் பதவியை ஏற்றதும் இம்மாதத்தில் தான்.

عن ابن الدقيل قال لما نزل سعد نهر شير طلب السفن ليعبر بالناس فلم يقدر على شيء وجدهم قد ضموا السفن فأقاموا أياما من صفر وفجئهم المدفر أي رؤيا أن خيول المسلمين اقتحمتها فعبرت وقد أقبلت دجلة من المد بأمر عظيم فعزم لتأويل رؤياه على العبور فجمع الناس وقال إني قد عزمت على قطع هذا البحر إليهم فأجابوه فأذن للناس في الإقتحام وقال قولوا نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل لا حول ولا قوة إلا بالله العلي العظيم ثم اقتحموا دجلة وركبوا اللجة وأنها لترمي بالزبد وأنها لمسودة وأن الناس ليتحدثون في عومهم وقد اقترنوا كما كانوا يتحدثون في مسيرهم على الأرض فعجب أهل فارس بأمر لم يكن في حسابهم فأجهضوهم واعجلوهم عن جمهور أموالهم ودخلها المسلمون في صفر سنة عشر واستولوا على كل ما بقي في بيوت كسرى (الخصائص الكبرى)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு பின்பு கிஸ்ரா ஆட்சிக்கு எதிரான போரின் போது ஸஃது ரழியல்லாஹு அன்ஹு என்ற சஹாபியின் தலைமையில் திஜ்லா நதியைக் கடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்களுக்கு கப்பல் கிடைக்கவில்லை. அதன் கரையில் சில நாட்கள் தங்கும் நிலை நீடித்த து. அப்போது முஸ்லிம்களில் பலருக்கு ஒரு கனவு தோன்றியது. முஸ்லிம் படைகள் அந்த திஜ்லா நதியை வெறும் காலால் கடந்து செல்வது போலவும் திஜ்லா நதி அதற்கு வழி விடுவது போலவும் கனவு கண்டார்கள்.         

        அடுத்த நாள் முஸ்லிம்களை ஒன்று கூட்டி இந்த கனவை நனவாக ஆக்கி விட எண்ணி நஸ்தஈனு பில்லாஹி....... என்ற வாசகங்களை ஓதி அல்லாஹ்விடம் துஆக் கேட்டவர்களாக அந்த நதியைக் கடந்தார்கள். தண்ணீருக்குள் ஒரு சுரங்கம் போன்று பாதைகள் உருவானது. அதற்குள் நுழைந்து நடந்தார்கள். தரையில் நடப்பது போன்று ஒருவருக்கொருவர் பேசியபடி நடந்து சென்றார்கள். பாரசீகர்கள் இவர்களின் விரைவான வருகையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இறுதியாக பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. இது நடெபெற்றுது சஃபர் மாதம். 

 

 

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...