வியாழன், 20 ஜூலை, 2023

ஆஷூராவின் இரு நோன்புகளும் ஹிஜ்ரத் தரும் படிப்பினைகளும்

 


20-08-2023    MUHARRAM

 

بسم الله الرحمن الرحيم 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 



முஹர்ரம் 9, 10 ல் நோன்பு வைக்க வேண்டும். முடிந்தால் இந்தப் பத்து நாட்களும் நோன்பு வைத்தாலும் நல்லது

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ (بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ -كتاب  الصوم-

மற்ற நோன்புகளை விட இந்த ஆஷூரா தினத்தின் நோன்பையும்  ரமழான் மாதத்தின் நோன்புகளையும்  நபி ஸல் அவர்கள் மிகவும் பேணுதலாக கடைபிடித்தார்கள்.

عن بْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) بَاب أَيُّ يَوْمٍ يُصَامُ فِي عَاشُورَاءَ-كِتَاب الصِّيَامِ

நபி ஸல் அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு வைத்து மற்றவர்களையும் நோன்பு வைக்க ஏவிய போது அல்லாஹ்வின் தூதரே இந்த நாளை யூத, நஸாராக்களும் கண்ணியப் படுத்துகிறார்களே என்று நபித் தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் அடுத்த வருடம் நான் இருந்தால் பிறை 9 லும் சேர்த்து நோன்பு வைப்பேன் என நபி ஸல் அலர்கள் கூறினார்கள்.                                                 

      தவிர்க்க முடியாத நிலையில் பிறை 9 ல் நோன்பு வைக்க முடியா விட்டால் பிறை 10, 11 வைக்கலாம்

عَنْ اِبْن عَبَّاس رض مَرْفُوعًا صُومُوا يَوْم عَاشُورَاء وَخَالِفُوا الْيَهُود، صُومُوا يَوْمًا قَبْلَهُ أَوْ يَوْمًا بَعْدَهُ (فتح الباري

இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருப்பதால் தவிர்க்க முடியாத நிலையில் பிறை 9 ல் நோன்பு வைக்க முடியாதவர்கள் பிறை 10, 11 ல் நோன்பு வையுங்கள்

அறியாமைக் காலத்தில் குறைஷிகளாலும் கண்ணியப்படுத்தப்பட்ட ஆஷூரா தினம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ لَا يَصُومُهُ بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ – كتاب الصوم-  

கருத்து- அறியாமைக் காலத்தில் குறைஷிகள் இந்த ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். பிறகு நபி ஸல் அவர்களும் அவ்வாறே நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். மதீனாவுக்கு வந்த போதும் அதே நாளில் தானும் நோன்பு வைத்து மற்றவர்களையும் அந்த நாளில் நோன்பு வைக்க ஏவினார்கள். பின்பு ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு ஆஷூரா நோன்பு சுன்னத்தாக ஆக்கப்பட்டது.  

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى(جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ

ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு ஆஷூரா நோன்பு ஃபர்ளைப் போன்று இருந்தது.  அன்று தான் கஃபாவின் திரையும் மாற்றப்படும்.

فَإِنَّهُ يُفِيد أَنَّ الْجَاهِلِيَّة كَانُوا يُعَظِّمُونَ الْكَعْبَة قَدِيمًا بِالسُّتُورِ وَيَقُومُونَ بِهَا ,وَيُسْتَفَاد مِنْ الْحَدِيث أَيْضًا مَعْرِفَة الْوَقْت الَّذِي كَانَتْ الْكَعْبَة تُكْسَى فِيهِ مِنْ كُلّ سَنَة وَهُوَ يَوْم عَاشُورَاء وَكَذَا ذَكَرَ الْوَاقِدِيُّ بِإِسْنَادِهِ عَنْ أَبِي جَعْفَر الْبَاقِر أَنَّ الْأَمْر اِسْتَمَرَّ عَلَى ذَلِكَ فِي زَمَانهمْ، وَقَدْ تَغَيَّرَ ذَلِكَ بَعْدُ فَصَارَتْ تُكْسَى فِي يَوْم النَّحْر(فتح الباري)  

கடந்த வருடத்திற்கு முந்தைய வருடங்களில் அரஃபா நாளில் கஃபாவின் திரை (கிஸ்வா) மாற்றப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இருந்து முஹர்ரம் முதல் நாளில் அதாவது இஸ்லாமியப் புத்தாண்டில் கஃபா திரை மாற்றப்படுகிறது

கஃபாவின் மீது போர்த்தப் படும் திரை (கிஸ்வா) பற்றிய வரலாறு

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32) الحج

கஃபாவைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் துணிக்கு கிஸ்வா என்று சொல்லப்படும்.  இது ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ்பிறை 9-ல் ஹாஜிகள் அரபாவில் இருக்கும் சமயம் போர்வை மாற்றப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு இருந்து முஹர்ரம் முதல் நாளில் அதாவது இஸ்லாமியப் புத்தாண்டில் கஃபா திரை மாற்றப்படுகிறது இதை தயாரிப்பதற்கென்றே வருடம்முழுவதும் FACTORY தொழிற்சாலை இயங்குகிறது. கஃபா ஆண்டுக்கு மூன்று முறை திறக்கப்பட்டு ஜம்ஜம் நீரால் கழுகி சுத்தம் செய்யப்படும். ஆண்டுக்கு ஒரு தடவை கஃபாவின் மீது ஏறி கிஸ்வா ஆடை போர்த்தப்படும். கருப்பு கிஸ்வா துணி சுமார் 670 கிலோ எடையுள்ள பட்டுத் துணியால் தயாரிக்கப்படுகிறது. மேலும் குர்ஆன் ஆயத்துக்களை எழுத 150 கிலோ எடை கொண்ட தங்கம் மற்றும் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை ஒன்றாக இணைப்பதற்கு முன் கிஸ்வா 47 அங்கங்களாக இருக்கும். ஒவ்வொரு துணியும் 14 மீட்டர் நீளமும், 95 சென்டு மீட்டர் அகலமும் உள்ள நிலையில் இருக்கும். இவற்றை இணைத்த பின் கிஸ்வா துணி 658 சதுர மீட்டர் அளவு இருக்கும். இதை தயாரிக்க ஆகும் செலவு  இருபது மில்லியன் சவூதி ரியால்கள்.

கிஸ்வாவின் வரலாறு

1.முதன் முதலில் துப்பஉல் ஹிம்யரீ  என்ற மன்னர் தான் கிஸ்வாவை  அறிமுகம் செய்தார். கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத் தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்கு உள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் அவர் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க, அவர் நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. முன்பு இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.

2. பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.

3. கலீபா உமர்(ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.

4. கலீபா உஸ்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப் பட்டது.

5. முஆவியா(ரலி)ஆட்சிக் காலத்தில் முஹர்ரம் 10-ம் நாள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள். இவர் காலத்தில் தான் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.

6.காலப்போக்கில்ஒருமுறைஅணிவித்த கிஸ்வாவை மாற்றாமல் அதன் மீதே மீண்டும் புதிய கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெரும் பளு சேரவே, ஹிஜ்ரி  160-ல் கலீஃபா அல்-மஹதீ  அல்- அப்பாஸீ பழைய கிஸ்வாக்களை அகற்றி விட கட்டளையிட்டார்.

7.சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலத்தில் கிஸ்வாக்கள் போர்த்தப் பட்டு வந்தன. பின்பு கலீஃபா அந்நாஸிருல் அப்பாஸீ காலத்தில் முதன் முதலில் கறுப்பு நிற கிஸ்வா போர்த்தப்பட்டது.

8. கி.பி 1342 ஹிஜ்ரி 743-ல் எகிப்தை ஆண்ட மன்னர் கிஸ்வா தயாரிப்புக்கும், கஃபாவின் பராமரிப்புக்கும் எகிப்தின்மூன்று விவசாயகிராமங்களின் வருவாயை வழங்கினார். அவருக்குப் பின் முன்னூறு வருடம் கழித்து ஆட்சிக்கு வந்த மன்னர் உஸ்மானியசுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருவாயை அன்பளிப்பாக வழங்கினார். பலநூறு ஆண்டுகளாக எகிப்தில் இருந்து தான் கிஸ்வாக்கள் மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளைக் கொண்டு வர 15-க்கும் மேல் ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. அழகிய பல்லக்குகளில் கிஸ்வாவை ஏற்றி இந்த ஒட்டகங்கள் புறப்படும்போதே எகிப்தில் விழாக் கோலம் காணப்படும். எகிப்தில் இருந்து புறப்படும் போதும், மக்காவிற்கு அந்த ஒட்டகங்கள் வரும் போதும்  இசை,  மேளதாளங்கள் என மார்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடைபெற்று வந்தன. 

 பின்னர் கி.பி 1924-ல் மன்னர் அப்துல் அஜீஸ் இப்னு ஸஊது அவர்கள் இத்தகைய அனாச்சாரங்களைக் கண்டித்தார்.  இதனால் மினாவில் வைத்து எகிப்து மக்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டே கிஸ்வாவை அனுப்புவதை எகிப்து நிறுத்தியது. அவ்வாண்டே மன்னர் அப்துல்அஜீஸ் இந்தியாவில் இருந்து கைதேர்ந்த தொழிலாளிகளைக் கொண்டுவந்து கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். 1927- இறுதியில் ஸவூதியில் தயாரான கிஸ்வா போர்த்தப்பட்டது. இது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது. பின்பு 1950-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்குப் பின்பு எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் பொறுப்பை ஏற்றது. இது 1962 வரை தொடர்ந்தது. அதன் பின்பு ஸஊது பின் அப்துல் அஜீஸ் ஆட்சியில் மீண்டும் மக்காவிலேயே கிஸ்வா தயாரிக்கத் தொடங்கினர். இதுவரை அது நீடிக்கிறது.

வருடம் தோறும் கிஸ்வா மாற்றப் படும்போது பழைய கிஸ்வாக்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதி நிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், முஸ்லிம்  அருங்காட்சியகங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகின்றன.

ஹிஜ்ரீ என்ற பெயர் வந்த காரணம் ஹிஜ்ரத் சம்பவத்தை இறுதி வரை மக்கள் மறக்கக் கூடாது என்றுதான்

 

 

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இஸ்லாமிய மாதங்கள் இருந்தன. மேலும் இதே பெயர்கள் தான் இருந்தன.

வருடங்களுக்கான பெயர்கள் மட்டும் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களை வைத்து மாற்றப்பட்டன

قال الله تعالي إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ سورة التوبة:36 عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبٌ شَهْرُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ (بخاري) باب مَا جَاءَ فِى سَبْعِ أَرَضِينَ- كتاب بدء الخلق

 

قال الزُّهريُّ والشعبيُّ: أرَّخ بنو إسماعيل من نار إبراهيم عليه السلام إلى بنيان البيت حين بناه إبراهيم وإسماعيل عليهما السلام ثم أرَّخ بنو إسماعيل من بنيان البيت حتى تفرَّقت وكان كلما خرج قوم من تهامة أرَّخوا مخرجهم ومن بقي بتهامة من بني إسماعيل يؤرخون من خروج سعدٍ ونهدٍ وجهينة بن زيد من تهامة حتى مات كعب بن لؤي فأرَّخوا من موت كعب بن لؤي إلى الفيل فكان التاريخ من الفيل حتى أرَّخ عمر بن الخطاب رضي الله عنه من الهجرة وذلك سنة سبع عشرة أو ثمان عشر.تاريخ الطبري)

 

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குண்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதை வைத்து அவர்களின் சந்ததிகள் வருடங்களைக் கணக்கிட்டனர். அதன் பின்பு கஃபா கட்டப்பட்ட வருடத்தில் இருந்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகள் அவரவர் எங்கே குடியேறினார்களோ அதை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு அந்தப் பரம்பரையில் கஃப் என்பவர் முக்கிய நபராக கருதப்பட்டதால் அவர் மரணமடைந்த வருடத்தை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். பின்பு யானைச் சம்பவம் பிரபலமாக இருந்த தால் அதை வைத்து வருடங்களைக் கணக்கிட்டனர். அதுவும் காலப்போக்கில் மறந்து மாதங்களை மட்டும் கூறும் வழக்கம் ஏற்பட்ட போது கடைசியாக உமர் ரழி அவர்களின் காலத்தில் ஹிஜ்ரத்தை வைத்து ஹிஜ்ரீ கணக்கு உருவானது.

 

ஹிஜ்ரீ என்று பெயர் வைக்கப்பட்டதன் பின்னனி

ولم يكن التاريخ السنوي معمولا به في أول الإسلام حتى كانت خلافة عمر رض ففي السنة الثالثة أو الرابعة من خلافته كتب إليه أبو موسى الأشعري :إنه يأتينا منك كتب ليس لها تاريخ.فجمع عمر الصحابة فاستشارهم فيقال إن بعضهم قال:أرخوا كما تؤرخ الفرس بملوكها كلما هلك ملك أرخوا بولاية من بعده"فكره الصاحبة ذلك،فقال بعضهم:أرخوا بتاريخ الروم"فكرهوا ذلك أيضا،فقال بعضهم:أرخوا من مولد النبي وقال آخرون:من مبعثه" وقال آخرون:من مهاجره"فقال عمر الهجرة فرقت بين الحق والباطل فأرخوا بها فأرخوا من الهجرة"واتفقوا على ذلك (تاريخ الرسل والملوك) (تاريخ الطبري)  

عن محمد بن سيرين قال:قام رجل إلى عمر بن الخطاب فقال: أَرِّخُوْا فقال عمر :ما أرخوا ؟ قال:شيء تفعله الأعاجم يكتبون في شهر كذا من سنة كذا فقال عمر بن الخطاب:حسنٌ فأرخوا فقالوا: من أي السنين نبدأ ؟ قالوا: مِنْ مبعثه وقالوا: مِنْ وفاته؛ ثم أجمعوا على الهجرة ثم قالوا: فأي الشهور نبدأ ؟ فقالوا: رمضان ثم قالوا المحرم فهو منصرف الناس من حجهم؛ وهو شهرٌ حرام فأجمعوا على المحرم  (تاريخ الرسل والملوك)

காலப்போக்கில் வருடங்களை மறந்து மாதங்களை மட்டும் கூறும் வழக்கம் ஏற்பட்ட போது உமர் ரழி அவர்களின் ஆட்சிக்கலத்தில் அபூ மூஸா அஷ்அரீ ரழி அவர்கள் உமர் ரழி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்போது தாங்கள் அனுப்பும் கடிதங்களில் வெறும் மாதங்களை மட்டும் குறிப்பிடுகிறீர்கள் எந்த வருடம் என்று குறிப்பிடுவதில்லை என்று அபூ மூஸா அஷ்அரீ ரழி அவர்கள் எழுதினார்கள். அதன் பின்பு  உமர் ரழி அவர்கள் ஒரு மஷ்வராவுக்கு ஏற்பாடு செய்தார்கள். வருடங்களுக்குப் பெயர் சூட்டுவது பற்றி அதில் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினார்கள். பாரசீகர்கள் எவ்வாறு ஒரு அரசர் இறந்து அடுத்த அரசர் பதவிக்கு வரும்போது அவரது பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடுவார்கள். அதுபோன்று கணக்கிடலாம் என்று சிலர் கூறியபோது அதை சிலர் வெறுத்தனர். கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடுவது போல கணக்கிடலாம் என்று சிலர் கூறியபோது அதை சிலர் வெறுத்தனர். நபி ஸல் அவர்களின் பிறப்பை வைத்து வருடங்களைக் கணக்கிடலாம் அதாவது நபி ஸல் அவர்கள் பிறந்த வருடத்தை முதல் வருடம் என்று கணக்கிடலாம் என்று சிலர் கூறினர். வேறு சிலர் நபி ஸல் நபியாக அனுப்பப்பட்டதை வைத்து வருடங்களைக் கணக்கிடலாம் என்று கூறியபோது அப்போது நாமெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்று கூறி அதையும் பலர் வெறுத்தனர். கடைசியாக ஹிஜ்ரத் நடந்த வருடத்தை முதல் வருடம் என்று கணக்கிடலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டபோது அதற்கு உமர் ரழி அவர்கள் ஆதரவு தெரிவித்து அந்த ஹிஜ்ரத் தான் சத்தியத்துக்கும் அசத்தியத்தும் இடையில் வேறு படுத்திக் காட்டியது எனவே அதையே வருடங்களுக்குப் பெயராக வைக்கலாம் என்று கூற, மற்றவர்களும் ஆதரித்தார்கள்.      

எந்த மாதத்தை முதல் மாதமாக வைப்பது என்ற ஆலோசனையின் போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறினார்கள். ரமழான் என்று சிலரும் முஹர்ரம் என்று வேறு சிலரும் கூறினார்கள். இறுதியில் முஹர்ரம் தான் முதல் மாதம் என முடிவானது. ஹஜ்ஜை முடித்து விட்டு ஹாஜிகள் திரும்பி தங்களின் தொழிலைத் துவங்கும் மாதத்தை முதல்மாதமாக வைத்தால் கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் அதுவே முடிவானது. 

ஹாஜிகளின் வருகையை கவனித்து வருடத்தின் முதல் மாதத்தை முடிவு செய்யும் அளவுக்கு ஹாஜிகளின் வருகை அன்றிலிருந்தே கண்ணியமாக கருதப்பட்டு வந்தது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ (أحمد

ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பியவரைக் கண்டால் அவருக்கு சலாம் சொல்லி அவரிடம் முஸாஃபஹா செய்யுங்கள். உங்களுக்காக அவரை துஆச் செய்யச் சொல்லுங்கள். ஏனெனில் அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார்.

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

முஸ்லிம்கள் தம் எதிரிகளால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான பின்பு தான் ஹிஜ்ரத் செய்யும்படி உத்தரவு வந்தது

عن خَبَّابً  رض:أَتَيْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم وَهْوَ مُتَوَسِّدٌ بُرْدَةً وَهْوَ فِى ظِلِّ الْكَعْبَةِ وَقَدْ لَقِينَا مِنَ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ أَلاَ تَدْعُو اللَّهَ فَقَعَدَ وَهْوَ مُحْمَرٌّ وَجْهُهُ فَقَالَ لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ4 الْحَدِيدِ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَيُوضَعُ الْمِنْشَارُ5 عَلَى مَفْرِقِ رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَيْنِ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَلَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ مَا يَخَافُ إِلاَّ اللَّهَ وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ (بخاري)

நபி ஸல் அவர்கள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது ஹப்பாப் ரழி அவர்கள் வந்து நாம் இணை வைப்பாளர்கள் மூலமாக கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். தாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களுக்கு முனபு வாழ்ந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதற்காக இரும்புக் கத்தரிக்கோலால் அவரது எலும்புகளுக்கும் சதைகளுக்குமிடையே குத்தி வேதனை செய்யப்பட்டார். அப்போதும் அவர் ஈமானை இழக்கவில்லை. பொறுமை கொண்டார். மற்றொருவரின் நடு மண்டை ரம்பத்தால் பிளக்கப்பட்டு அவரது உடல் இரண்டு துண்டாக ஆனது. அப்போதும் அவர் ஈமானை இழக்கவில்லை. பொறுமை கொண்டார். நீங்களும் பொறுமை கொள்ளுங்கள், விரைவில் அல்லாஹ் இதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவான் என்றார்கள்.                         

தன் சொத்து, சுகங்களை துறந்து அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு அல்லாஹ் தரும் கண்ணியம்

وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ (42)النحل

أَنَّ عُمَر بْن الْخَطَّاب رَضِيَ اللَّه عَنْهُ كَانَ إِذَا أَعْطَى الرَّجُل مِنْ الْمُهَاجِرِينَ عَطَاءَهُ يَقُول خُذْ بَارَكَ اللَّه لَك فِيهِ هَذَا مَا وَعَدَك اللَّه فِي الدُّنْيَا وَمَا اِدَّخَرَ لَك فِي الْآخِرَة أَفْضَل ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَة " لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَة وَلَأَجْر الْآخِرَة أَكْبَر لَوْ كَانُوا يَعْلَمُونَ(ابن كثير)

உமர் ரழி அவர்கள் கனீமத் பொருட்களைப் பங்கிடும்போது முஹாஜிர்களுக்கு அதிகம் தருவார்கள். மேலும் இது அல்லாஹ் உங்களுக்குத் தந்த கண்ணியம் என்று கூறுவார்கள்

{وَمِنَ النَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللَّه (البقرة207) }نزلت في علي رضي الله عنهبات على فراش رسول الله صلى الله عليه وسلّم ليلة خروجه إلى الغار ، ويروى أنه لما نام على فراشه قام جبريل عليه السلام عند رأسه ، وميكائيل عند رجليه ، وجبريل ينادي : بخ بخ مَنْ مِثْلُك يا ابن أبي طالب يباهي الله بك الملائكة ونزلت الآية.(تفسير الرازي)

நபி ஸல் அவர்களின் படுக்கையில் அலீ ரழி அவர்கள் தூங்கிய போது அவர்களுக்குப் பாதுகாப்பாக தலை மாட்டில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கால் மாட்டில் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பாதுகாப்புக்கு இருந்தார்கள். உங்களுக்கு நிகராக யார் இருக்க முடியும். உங்களைப் பற்றி மலக்குகள் அனைவரும் பாராட்டிப் பேசுகிறார்கள் என்றும் அவ்விருவர் கூறினார்கள். அன்று தான் அலீ ரழி மிக நிம்மதியாக உறங்கினார்கள் என்றும்...    

மிகுந்த சிரமம், சித்ரவதைகளை தாங்கிய படி ஹிஜ்ரத் செய்தவர்களில் சிலரை அல்லாஹ் பாராட்டுவது பற்றி...

وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً...وقال أكثرُ المفسِّرين: نزلت في صُهَيب بن سِنان مَوْلى عبد اللَّهِ بنِ جُدْعانَ الرُّومِيِّ وفي عمَّارِ بن ياسِرٍ وفي سُمَيَّة أُمَّه وفي ياسِرٍ أَبيه وفي بلالٍ مَوْلَى أبي بَكرٍ, وفي خَبَّاب بن الأَرَتّ وفي عابس مَوْلَى حُوَيْطِب أخذَهُم المشرِكُون فَعَذَّبوهم ؛ فقال لهم صُهَيبٌ : إِنِّي شيخٌ كَبيرٌ لا يَضُرُّكُمْ أَمِنْكُمْ كُنْتُ أم مِن عَدوِّكم فهل لكم أَنْ تَأْخُذُوا مَالِي وتذَرُوني؟ ففعلوا  وكان شرط عليهم راحلةً ونَفَقَةً , فأقام بمكةَ ما شاء اللَّهُ ثم خرج إلى المدينَةِ فتَلَقَّاهُ أَبُو بكرٍ وعُمرُ في رجال فقال له أَبُو بَكْرٍ : رَبَحَ بَيْعُكَ يا أَبَا يَحيى فقال: وبيعُكَ فلا تخسر ما ذاك ؟ فقال: أنزل اللَّهُ فيك كذا وقرأ عليه الآية.وأما خباب بن الأرت وأبو ذر فقد فرا وأتيا المدينة وأما سُمَيَّة فرُبِطَتْ بين بعيرين ثم قُتِلَتْ وقُتل ياسر،وأما الباقون فأَعْطَوْا بسبب العذاب بعض ما أراد المشركون فتركوا (تفسيرالرازي)

ஹிஎதிரிகள் மிக அருகில் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற ஆழமான நம்பிக்கை

إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا[التوبة:40] عَنْ أَنَس أَنَّ أَبَا بَكْرحَدَّثَهُ قَالَ:قُلْت لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الْغَار لَوْ أَنَّ أَحَدهمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ لَأَبْصَرَنَا تَحْت قَدَمَيْهِ فَقَالَ يَا أَبَا بَكْر مَا ظَنّك بِاثْنَيْنِ اللَّه ثَالِثهمَا(بخاري)فأعمى الله أبصار المشركين حتى لم يحن لأحد منهم التفاتة إلى ذلك الغار

கொல்ல வந்த எதிரிகளின் கண்களை விட்டும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மறைத்தான்

இதே நம்பிக்கை தான் அந்த குகைவாசிகளையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றியது

குகைக்குள் நுழைந்தவுடன் எதிரிகளின் கண்களை விட்டும் அல்லாஹ் அந்தக் குகையையும் குகைவாசிகளையும் அல்லாஹ் மாயமாக்கி விட்டான்.

இறைத் தூதரை கொல்ல வந்த சுராகா என்பவர் இறைத்தூதரின் பாதுகாவலராக மாறிய சம்பவம்.

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: اشْتَرَى أَبُو بَكْرٍ مِنْ عَازِبِ رَحْلا بِثَلاثَةَ عَشَرَ دِرْهَمًا، فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ: مُرْهُ لِي فَقَالَ لَهُ عَازِبٌ: لا حَتَّى تُخْبِرَنِي كَيْفَ صَنَعْتَ أَنْتَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجْتُمَا وَالْمُشْرِكُونَ يَطْلُبُونَكُمَا فَقَالَ: ارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا فَلَمْ يُدْرِكْنَا مِنْهُمْ غَيْرُ سُرَاقَةَ بْنِ جَشْعَمٍ عَلَى فَرَسٍ لَهُ، فَقُلْتُ لَهُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ:"لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا" فَلَمَّا أَنْ دَنَا كَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قِيدُ رُمْحٍ أَوْ ثُلُثَهُ فَقُلْتُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ وَبَكَيْتُ، فَقَالَ: مَا يُبْكِيكَ ؟ فَقُلْتُ:وَاللَّهِ مَا عَلَى نَفْسِي أَبْكِي وَلَكِنْ أَبْكِي عَلَيْكَ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اللَّهُمَّ اكْفِنَاهُ، فَسَاخَتْ بِهِ فَرَسُهُ إِلَى بَطْنِهَا فَوَثَبَ عَنْهَا، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ فَادْعُ اللَّهَ أَنْ يُنَجِّينِيَ مِمَّا أَنَا فِيهِ فَوَاللَّهِ لأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِي مِنَ الطَّلَبِ وَهَذِهِ كِنَانَتِي فَخُذْ سَهْمًا فَإِنَّكَ سَتَمُرُّ عَلَى إِبِلِي وَغَنَمِي بِمَكَانِ كَذَا فَخُذْ مِنْهَا حَاجَتَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا حَاجَةَ لَنَا فِي إِبِلِكَ، فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ رَاجِعًا إِلَى أَصْحَابِهِ وَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ".(تفسير ابن كثير)

பொருள்-1,சீதோஷ்னம் ஒத்து வராததாக கருதுவது, 2,விறகு பொறுக்குதல் 3,அணை (மதகு) உடைவது 4,கோடாரி 5, ரம்பம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...