28-08-2023 MUHARRAM |
|
بسم
الله الرحمن الرحيم |
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
நபி மூஸா அலை அவர்களும், அவர்களின்
சமூகத்தினரும் காப்பாற்றப்பட்டு
ஃபிர்அவ்னும் அவனது படையும் அழிக்கப்பட்ட நாள்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ
اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى
الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ
صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ
فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ
بِصِيَامِهِ (بخاري)باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ -كتاب الصوم
ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட விதம் பற்றி
விரிவாக...
إِنَّ بَنِي
إِسْرَائِيل لَمَّا خَرَجُوا مِنْ مِصْر فِي صُحْبَة مُوسَى عَلَيْهِ
السَّلَاموَهُمْ فِيمَا قِيلَ سِتّمِائَةِ أَلْف مُقَاتِل
سِوَى الذُّرِّيَّة وَقَدْ كَانُوا اِسْتَعَارُوا مِنْ الْقِبْط حُلِيًّا كَثِيرًا
فَخَرَجُوا بِهِ مَعَهُمْ فَاشْتَدَّ حَنَق فِرْعَوْن عَلَيْهِمْ فَأَرْسَلَ فِي
الْمَدَائِن حَاشِرِينَ يَجْمَعُونَ لَهُ جُنُوده مِنْ أَقَالِيمه فَرَكِبَ
وَرَاءَهُمْ فِي أُبَّهَة عَظِيمَة وَجُيُوش هَائِلَة لِمَا يُرِيدهُ اللَّه
بِهِمْ وَلَمْ يَتَخَلَّف عَنْهُ أَحَد مِمَّنْ لَهُ دَوْلَة وَسُلْطَان فِي
سَائِر مَمْلَكَته فَلَحِقُوهُمْ وَقْت شُرُوق الشَّمْس"فَلَمَّا تَرَاءَى
الْجَمْعَانِ قَالَ أَصْحَاب مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ" أَنَّهُمْ لَمَّا
اِنْتَهَوْا إِلَى سَاحِل الْبَحْر وَفِرْعَوْن وَرَاءَهُمْ وَلَمْ يَبْقَ إِلَّا
أَنْ يُقَاتِل الْجَمْعَانِ وَأَلَحَّ أَصْحَاب مُوسَى عَلَيْهِ
السَّلَام عَلَيْهِ فِي السُّؤَال كَيْف الْمَخْلَص مِمَّا
نَحْنُ فِيهِ؟ فَيَقُول إِنِّي أُمِرْت أَنْ أَسْلُك هَهُنَا" كَلَّا إِنَّ
مَعِيَ رَبِّيسَيَهْدِينِي" فَعِنْدَ مَا ضَاقَ الْأَمْر اِتَّسَعَ
فَأَمَرَهُ اللَّه تَعَالَى أَنْ يَضْرِب الْبَحْر بِعَصَاهُ فَضَرَبَهُ
فَانْفَلَقَ الْبَحْر فَكَانَ كُلّ فِرْق كَالطَّوْدِ الْعَظِيم أَيْ كَالْجَبَلِ
الْعَظِيم وَصَارَ اِثْنَيْ عَشَر طَرِيقًا لِكُلِّ سِبْط وَاحِد وَأَمَرَ اللَّه
الرِّيح فَنَشَّفَتْ أَرْضه " فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْر
يَبَسًا لَا تَخَاف دَرْكًا وَلَا تَخْشَى" وَتَخَرَّقَ الْمَاء بَيْن
الطُّرُق كَهَيْئَةِ الشَّبَابِيك لِيَرَى كُلّ قَوْم الْآخَرِينَ لِئَلَّا يَظُنُّوا
أَنَّهُمْ هَلَكُوا وَجَاوَزَتْ بَنُو إِسْرَائِيل الْبَحْر فَلَمَّا خَرَجَ
آخِرهمْ مِنْهُ اِنْتَهَى فِرْعَوْن وَجُنُوده إِلَى حَافَّته مِنْ النَّاحِيَة
الْأُخْرَى وَهُوَ فِي مِائَة أَلْف أَدْهَم فَلَمَّا رَأَى ذَلِكَ هَالَهُ
وَأَحْجَمَ وَهَابَ وَهَمَّ بِالرُّجُوعِ وَهَيْهَاتَ نَفَذَ الْقَدَر
وَاسْتُجِيبَتْ الدَّعْوَة وَجَاءَ جِبْرِيل عَلَيْهِ السَّلَام عَلَى فَرَس
وَدِيق حَائِل فَمَرَّ إِلَى جَانِب حِصَان فِرْعَوْن فَحَمْحَمَ إِلَيْهَا
وَاقْتَحَمَ جِبْرِيل الْبَحْر فَاقْتَحَمَ الْحِصَان وَرَاءَهُ وَلَمْ يَبْقَ
فِرْعَوْن يَمْلِك مِنْ نَفْسه شَيْئًا فَتَجَلَّدَ لِأُمَرَائِهِ وَقَالَ لَهُمْ
لَيْسَ بَنُو إِسْرَائِيل بِأَحَقّ بِالْبَحْرِ مِنَّا فَاقْتَحَمُوا كُلّهمْ عَنْ
آخِرهمْ وَمِيكَائِيل فِي سَاقَتهمْ لَا يَتْرُك مِنْهُمْ أَحَدًا إِلَّا
أَلْحَقَهُ بِهِمْ فَلَمَّا اسْتَوْسَقُوا فِيهِ وَتَكَامَلُوا وَهَمَّ أَوَّلهمْ
بِالْخُرُوجِ مِنْهُ أَمَرَ اللَّه الْقَدِير الْبَحْرَ أَنْ يَرْتَطِم عَلَيْهِمْ
فَارْتَطَمَ عَلَيْهِمْ فَلَمْ يَنْجُ مِنْهُمْ أَحَد وَجَعَلَتْ الْأَمْوَاج
تَرْفَعهُمْ وَتَخْفِضهُمْ وَتَرَاكَمَتْ الْأَمْوَاج فَوْق فِرْعَوْن
وَغَشِيَتْهُ سَكَرَات الْمَوْت فَقَالَ وَهُوَ كَذَلِكَآمَنْت أَنَّهُ لَا إِلَه
إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيل وَأَنَا مِنْالْمُسْلِمِينَ"
فَآمَنَ حَيْثُ لَا يَنْفَعهُ الْإِيمَان (تفسير ابن كثير)
சுருக்கம்-
ஃபிர்அவ்னிடம் அடிமைப் பட்டுக் கிடந்த பனீ இஸ்ராயீல் சமூகத்தை மீட்பதற்காக அல்லாஹ்
நபி மூஸா அலை அவர்களை அனுப்பினான். நபி மூஸா அலை அவர்களோடு எகிப்தை விட்டும்
வெளியேறிய பனீ இஸ்ராயீல் சமூகத்தினர் குழந்தைகள் அல்லாமல் சுமார் ஆறு இலட்சம்
பேர். இவர்கள் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நிறைய நகைகளை இரவலாக
வாங்கியிருந்தார்கள். அந்த நகைகளுடன் தான் அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
எனவே அவர்களை விரட்டிப் பிடிக்க ஃபிர்அவ்னின் படைகள் துரத்திக் கொண்டு வந்தனர்.
இஷ்ராக் நேரத்தில் பனூ இஸ்ராயீல் சமூக மக்கள் கடற்கரையை அடைந்தனர். கடல் குறுக்கே
வந்தவுடன் இனிமேல் நாங்கள் எப்படி ஃபிர்அவ்னிடமிருந்து தப்பிக்க முடியும் என மூஸா
அலை அவர்களிடம் கேட்டபோது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தன்னிடம் உள்ள கைத்தடியை
கடல் நீரில் அடித்தார்கள். கடல் பிளந்து கடலுக்குள் 12 பாதைகள் உருவாயின. இரு
புறமும் மலை போன்று கடல் நீர் விலகி அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க அப்படியே
நின்றது. கீழே இறங்கி நடந்து செல்லும் 12 பாதைகளிலும் சகதிகள் ஒட்டாத அளவுக்கு
உடனடியாக அதைக் காய வைத்து வேகமாக நடப்பதற்குத் தோதுவாக அல்லாஹ் ஆக்கி வைத்தான். ஒவ்வொரு பாதையிலும் பயணம் செய்பவர்கள் மறு
பாதையில் பயணம் செய்பவர்களை அவர்கள் நிம்மதியாக கடற்கரையை அடைகிறார்களா என்று
பார்க்கும் அளவுக்கு ஒரு பாதைக்கும் மற்றொரு பாதைக்குமிடையே ஜன்னல்களையும் அல்லாஹ்
உருவாக்கினான்.
அவர்கள் இறங்கி நடந்து மற்றொரு கடற்கரையை
அடைந்து அவர்களில் கடைசி நபரும் கரையை அடையும் நேரம் ஃபிர்அவ்னும் அவனது பட்டாளமும்
அங்கு வந்தனர். அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அங்கிருந்து திரும்பிச் செல்ல
நினைத்தாலும் அவனை அழிக்கும்படி மூஸா அலை கேட்ட துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டதால்
ஃபிர்அவ்ன் விதியை நோக்கி இழுக்கப்பட்டான். ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் பெண்
குதிரையில் வருகை தந்தார்கள். ஃபிர்அவ்ன் பயணம் செய்த து ஆண் குதிரை. எனவே
ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் பெண் குதிரையை முன்னே ஓட்டிச் செல்ல அதைத் தொடர்ந்து
ஃபிர்அவ்ன் பயணம் செய்த ஆண் குதிரையும் அதை விரட்டிச் சென்றது. ஃபிர்அவ்னால்
அந்தக் குதிரையை கட்டுப் படுத்த முடியவில்லை. பிளந்து கிடந்த பாதை வழியாக
ஃபிர்அவ்ன் பயணம் செய்த ஆண் குதிரை சென்றதைக் கண்டவுடன் அவனது பட்டாளத்தினர் பயணம்
செய்த அத்தனை குதிரைகளும் அவற்றில் பயணம் செய்தவர்கள் அந்தப் பாதையில் உள்ளே
புகுந்தனர். ஜிப்ரயீல் அலை தனது பெண் குதிரையை படையின் முன்னே செலுத்தியது போன்று
மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படையின் பின்னால் இருந்து அவர்களில் யாரும் தப்பி
விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். இறுதியாக படை நடுப் பகுதியை
அடைந்தவுடன் பிளந்த கடல் மூடிக் கொண்டது. ஃபிர்அவ்ன் கடைசி நேரத்தில் தவ்பா
செய்தான். ஆனால் அவனது தவ்பா ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நபி
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் மலை மீது கரை ஒதுங்கிய நாள்
وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ ابْنَهُ
وَكَانَ فِى مَعْزِلٍ ياَبُنَىَّ ارْكَبَ مَّعَنَا وَلاَ تَكُن مَّعَ
الْكَافِرِينَ قَالَ سَآوِىإِلَى جَبَلٍ يَعْصِمُنِى مِنَ الْمَآءِ قَالَ لاَ
عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلاَّ مَن رَّحِمَ وَحَالَ بَيْنَهُمَا
الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ وَقِيلَ ياَأَرْضُ ابْلَعِى مَآءَكِ
وَياَسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ الْمَآءُ وَقُضِىَ الاَمْرُ وَاسْتَوَتْ عَلَى
الْجُودِىِّ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (سورة هود)
عن عبد العزيز بن عبد الغفور عن أبيه قال رسول الله صلى الله عليه وسلمفي أول يوم من رجب ركب نوح السفينة فصام هو وجميع من معه،وجرت بهم السفينة
ستةَ أشهر، فانتهى ذلك إلى المحرم، فأرست السفينة على الجوديّ يوم عاشوراء، فصام
نوح ، وأمر جميع من معه من الوحش والدوابّ فصامُوا شكرًا لله -عن ابن جريج قال:
كانت السفينة أعلاها للطير، ووسطها للناس وفي أسفلها السباع وكان طولها في السماء
ثلاثين ذراعًا، ودفعت من عَين وردة يوم الجمعة لعشر ليالٍ مضين من رجب، وأرست على
الجوديّ يوم عاشوراء،(زاد المسير)
ரஜப் ஆரம்பத்தில் கப்பல் பயணத்தை
துவங்கியது. அன்றைய தினம் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன்
இருந்தவர்களும் நோன்பு வைத்தார்கள். ஆறு மாதங்கள் ஓடிய பின் ஜூதி மலை மீது தரை
தட்டியது. அப்போதும் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும்
நோன்பு வைத்தார்கள்.
படிப்பினை- துவங்கும் காரியம் அல்லது
பயணம் சிறப்பாக அமைவதற்காக நோன்பு வைக்கும் வழமை அன்றே இருந்துள்ளது.இன்றும்
முஸ்லிம்களிடம் நிகாஹ் போன்ற வைபவங்கள் நடைபெறும்முன் இந்த வழமை உள்ளது
கப்பலின் மேற்பகுதியில் பறவைகளும்
நடுப்பகுதியில் மனிதர்களும் கீழ் பகுதியில் விலங்குகளும் இருந்த நிலையில் கப்பல்
புறப்பட்ட பின் பறவைகள் விலங்குகள் உட்பட அனைவரும் நோன்பை கடைபிடித்தனர்.
عَنِ
ابْنِ عَبَّاسٍرض كَانَ مَعَ نُوحٍ فِي السَّفِينَةِ ثَمَانُونَ رَجُلا
مَعَهُمْ أَهْلُوهُمْ وَأَنَّهُمْ كَانُوا فِي السَّفِينَةِ مِائَةً وَخَمْسِينَ
يَوْمًا وَأَنَّ اللَّهَ وَجَّهَ السَّفِينَةَ إِلَى مَكَّةَ فَزَارَتِ الْبَيْتَ
أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ وَجَّهَهَا اللَّهُ إِلَى الْجُودِيِّ فَاسْتَقَرَّتْ
عَلَيْهِ فَبَعَثَ نُوحٌ الْغُرَابَ لِيَأْتِيَهُ بِخَبَرِ الأَرْضِ، فَذَهَبَ
فَوَقَعَ إِلَى الْجِيَفِ يَعْنِي فَأَبْطَأَ عَلَيْهِ فَبَعَثَ الْحَمَامَةَ
فَأَتَتْهُ بِوَرِقِ الزَّيْتُونِ وَلَطَّخَتْ رِجْلَيْهَا بِالطِّينِ فَعَرَفَ
نُوحٌ أَنَّ الْمَاءَ قَدْ نَضَبَ فَهَبَطَ إِلَى أَسْفَلِ الْجُودِيِّ فَأَتَى
قَرْيَةً وَسَمَّاهَا ثَمَانِينَ، فَأَصْبَحُوا ذَاتَ يَوْمٍ وَقَدْ تَبَلْبَلَتْ
أَلْسِنَتُهُمْ عَلَى ثَمَانِينَ لُغَةً أَحَدُهَا اللِّسَانُ الْعَرَبِيُّ
فَكَانَ بَعْضُهُمْ لا يَفْقَهُ كَلامَ بَعْضٍ وَكَانَ نُوحٌ يُعَبِّرُ عَنْهُمْ
(تفسير ابن ابي حاتم
அந்தக் கப்பல் சுமார் 150 நாட்கள்
பயணம் செய்தது. வரும் வழியில் மக்காவில் மட்டும் கஃபாவை நாற்பது நாட்கள் அக்கப்பல்
சுற்றிச் சுற்றி வந்தது. (கஃபாவின் உண்மையான உயரம் பைத்துல் மஃமூர் வரை என்பது
குறிப்பிடத்தக்கது.) பின்பு ஜூதி மலையில் தரை தட்டிய பின் நபி நூஹ் அலை நீர் வற்றி விட்டதா
என்று பார்க்க காகத்தை அனுப்ப, அது ஒரு பிணத்தைப் பார்த்தவுடன் அதன் மீது
உட்கார்ந்து சாப்பிடத் துவங்கி விட்டது. திரும்பி வரத் தாமதம் ஆனதால் புறாவை
அனுப்பினார்கள். அது சென்று பார்த்து விட்டு வந்த போது அதன் காலில் சேறும், அதன்
வாயில் ஜைத்தூன் மர இலையும் இருப்பதைக் கண்டார்கள். (தூஃபானுக்குப்
பின் முதலில் விளைந்த மரம் ஜைத்தூன் மரம் தான்.) நீர்
வற்றியதை அறிந்து அங்கிருந்து கீழே இறங்கி மலையடிவாரத்தில் தங்கினார்கள். அந்த
இடத்திற்கு ஸமானூன் என்று பெயரும் வைத்தார்கள். காரணம் அவர்கள் மொத்தம் 80 பேர்
இருந்தார்கள். அந்த 80 பேரும் தூங்கும்போது ஒரே பாஷை பேசுபவர்களாக இருந்தனர்.
ஆனால் தூங்கி எழுந்த பின் அவர்களின் பாஷைகள் அனைத்தயும் அல்லாஹ் மாற்றி
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாஷை பேசுபவர்களாக மாறி விட்டனர். ஒருவரின் பாஷை
மற்றவருக்குப் புரியாது. எல்லா பாஷைகளையும் புரிந்தவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்
மட்டும் தான். அல்லாஹ் தன் ஆற்றலை வெளிக்காட்ட இவ்வாறு செய்தான்.
இப்போதுள்ள
நதிகள், ஆறுகள், கடல்கள் உருவானது வெள்ளப் பிரளயத்திற்குப் பின்னால் தான்
{وقيل
يا أرض ابلعي ماءك} وقف قوم على ظاهر الآية وقالوا : إِنما ابتلعت مانبع منها ،
ولم تبتلع ماء السماء فصار ذلك بحاراً وأنهاراً
وهو معنى قول ابن عباس وذهب آخرون إِلى أن المراد: ابلعي ماءك الذي عليك
وهو ما نبع من الأرض ونزل من السماء وذلك بعد أن غرق ما على وجه الأرض (زاد
المسير)
வானமும் தன் நீரை பொழிந்தது. பூமியும் தனக்குள் உள்ள நீரை
வெளியே மேலே கொண்டு வந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் அல்லாஹ் வானமே நீ உன் தண்ணீரை
நிறுத்திக்கொள். பூமியே நீ உன் தண்ணீரை மீண்டும் விழுங்கிக் கொள் என அல்லாஹ்
உத்தரவிட்டான். அதன் படி பூமி தன்னுடைய தண்ணீரை மட்டும் தான் விழுங்கியது. வானம்
பொழிந்த நீரை விழுங்கவில்லை. அவைகள் ஆறுகளாகவும், நதிகளாகவும், கடல்களாகவும் ஆகி
விட்டன என்பது சிலரின் கூற்றாகும்.
யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்துக்கு
வேதனை அருகில் வந்த பின் வேதனை விளக்கிக்
கொள்ளப்பட்ட தினம்
عَنْ عَلِيٍّ، قَالَ:"تِيبَ عَلَى قَوْمِ يُونُسَ يَوْمَ عَاشُورَاءَ(تفسير
ابن ابي حاتم)روي عن ابن مسعود وغيره: أنّ
قوم يونس كانوا بأرض نِيْنَوى من أرض الموصل ، فأرسل الله تعالى إليهم يونس عليه
السلام ،يدعوهم إلى الإيمان فدعاهم فأبوا فقيل له :إنّ
العذاب مصبحهم إلى ثلاثة أيام فأخبرهم بذلك فقالوا: إنا لم نجرب عليك كذباً
،فانظروا فإن بات فيكم تلك الليلة فليس بشيء،وإن لم يبت فاعلموا أنّ العذاب مصبحكم
فلما كان في جوف تلك الليلة خرج يونس عليه السلام من بين أظهرهم ، فلما أصبحوا
تغشاهم العذاب فكان فوق رؤوسهم قدر ميل. وقال وهب : غامت السماء غيماً عظيماً ،
أسود هائلاً يدخن دخاناً عظيماً فهبط حتى غشى مدينتهم واسودّت سطوحهم ، فلمارأوا
ذلك أيقنوا بالهلاك ، فطلبوا يونس بينهم فلم يجدوه وقذف الله تعالى في قلوبهم
التوبة، فخرجوا إلى الصعيد بأنفسهم ونسائهم وأولادهم ودوابهم ولبسوا المسوح وأظهرواالإيمان والتوبة وأخلصوا النية ، وفرّقوا بين كل والدة وولدها
من النساء والدواب فحنّ بعضها إلى بعض وعلت أصواتها واختلطت بأصواتهم ، وعجوا وتضرّعوا
إلى الله تعالى وقالوا آمنا بما جاء به يونس عليه السلام فرحمهم الله تعالى واستجاب دعاءهم وكشف عنهم العذاب بعد ما أظلهم. وكل ذلك يوم
عاشوراء يوم الجمعة ،وقيل :خرجوا إلى شيخ من بقية علمائهم فقالوا :قد نزل بنا
العذاب فما ترى ؟فقال لهم : قولوا يا حيّ حين لا حيّ ، ويا حيّ محيي الموتى ، ويا
حيّ لا إله إلا أنت. فقالوها ، فكشف عنهم. (تفسير السراج المنير)
யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
இராக்கில் உள்ள நீனவா என்ற ஊருக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அந்த மக்கள்
இஸ்லாத்தை ஏற்காத போது அல்லாஹ்வின் கட்டளைப்படி உங்களுக்கு மூன்றே நாளில் வேதனை
வரும் என்று கூறினார்கள். இதன் பின்பு அவர்களின் உள்ளத்தில் பயம் வந்து விட்டது.
இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் யூனுஸ் அலை சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.
நாம் அந்த நாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். அந்த நாளில் அவர் நம்மோடு இருந்தால்
நாம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவர் நம்மோடு இல்லாமல் வெளியேறி விட்டால் அவர்
சொல்வதை நம்புவோம் என்று முடிவு செய்தனர்.
யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அந்த
நாளுக்கு முந்தைய இரவில் வெளியேறினார்கள். அடுத்த நாள் காலையில் வானில் கருமேகம்
போன்று வேதனை ஒரு மைல் தூரத்தில் இறங்கி வந்து கொண்டே இருந்தது. எல்லாம் இருட்டாகி
விட்டது. அப்போது அம்மக்கள் திருந்தி தவ்பா செய்தவர்களாக யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்
தேடினார்கள். பின்பு மைதானத்தில் அவர்களும் அவர்களின் குழந்தைகளும் முதியவர்களும்
கால்நடைகளும் கந்தலான ஆடைகளுடன் ஒன்று கூடி அழுதார்கள். அல்லாஹ் கடைசி நேரத்தில்
அவர்களின் மீது வர வேண்டிய வேதனையை விலக்கிக் கொண்டான். இது ஆஷூரா நாளில்
நடைபெற்றது.
فَلَوْلَا
كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا
آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا
وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ (98) يونس
படிப்பினை - கடைசி நேரத்தில் தவ்பா
ஏற்றுக் கொள்ளப்பட்டது இவர்கள் விஷயத்தில் மட்டும் தான். மற்ற மனிதர்கள்
விஷயத்தில் கடைசி நேர தவ்பா ஏற்கப்படாது.
الشرط الخامس للتوبة :
أن تكون في زمن تقبل فيه التوبة فإن تاب في زمن لا تقبل فيه التوبة لم تنفعه
التوبة وذلك على نوعين: النوع الأول باعتبار كل إنسان بحسبه . والنوع الثاني
باعتبار العموم .أما الأول: فلابد أن تكون التوبة قبل حلول الأجل يعني الموت، فإن
كان بعد حلول الأجل فإنها لا تنفع التائب لقول الله سبحانه { وليست التوبة للذين
يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن } هؤلاء ليس لهم توبة . وقال
تعالى { فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك
ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنت الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون
} فالإنسان إذا عاين الموت وحضره الأجل فهذا يعني أنه يسن من الحياة فتكون توبته
في غير محلها بعد أن يئس من الحياة وعرف أنه لا بقاء له يذهب فيتوب هذه توبة
اضطرار فلا تنفعه ولا تقبل منه لابد أن تكون التوبة سابقة .
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ
يُغَرْغِرْ (ابن ماجة
النوع الثاني هو العموم
فإن الرسول عليه الصلاة والسلام أخبر بأن الهجرة لا تنقطع حتى تنقطع التوبة ولا تنقطع
التوبة حتى تطلع الشمس من مغربها . فإذا طلعت الشمس من مغربها لم تنفع أحداً توبة
قال الله سبحانه { يوم يأتي بعض آيات ربك لا ينفع نفساً إيمانها لم تكن آمنت من
قبل أو كسبت في إيمانها خيراً } وهذا البعض هو طلوع الشمس من مغربها كما فسر ذلك
النبي عليه الصلاة والسلام . (شرح رياض
الصالحين)
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ
مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ
وَذَلِكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا ثُمَّ قَرَأَ الْآيَةَ (بخاري
தவ்பாவின் நேரம் முடிந்து விடுவது 2 வகை. 1.தனி
மனிதனைக் கவனித்து 2.ஒட்டு மொத்த மனிதர்களையும் கவனித்து
முதலாவது வகை ஒரு மனிதனுக்கு மரண நேரம்
நெருங்கும்போது நரகத்தை கண்கூடாக பார்த்த பின்பு அவனது தவ்பா ஏற்கப்படாது. இது
ஒவ்வொரு தனி மனிதனுக்கானது.
இரண்டாவது வகை ஒட்டு மொத்த மனிதர்களுக்கானது.
அதாவது கடைசி காலத்தில் சூரியன் மேற்கில் உதயமான பின்பு யாருடைய தவ்பாவும்
ஏற்கப்படாது இதற்கு சான்றாக குர்ஆன் வசனமும் ஹதீஸும் உள்ளன.
நபி யஃகூப்
அலைஹிஸ்ஸலாம் தன் பிள்ளைகளுக்கு பிரார்த்தனை செய்வதற்காக தேர்ந்தெடுத்த நாள்
قَالُوا
يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97) قَالَ
سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (98سورة
يوسف)قال ابن عباس : أخَّر دعاءه إلى السحر وقال المثنى بن الصباح عن طاوس قال :
سحر ليلة الجمعة ووافق ذلك ليلة عاشوراء (قرطبي)
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
கைத்தடி ராட்சத பாம்பாக மாறி,
சூனியக்காரர்கள் உருவாக்கிய பாம்புகள் அனைத்தையும் விழுங்கியதும், அந்த
சூனியக்காரர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றதும் இதே நாளில் தான்
قَالَ أَجِئْتَنَا
لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى(57)فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا
وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى (58) قَالَ
مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحًى (59) فَتَوَلَّى
فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَى (60....قَالُوا يَا مُوسَى إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ
نَكُونَ أَوَّلَ مَنْ أَلْقَى (65) قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ
يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى
(66) فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى- قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى (68) وَأَلْقِ مَا فِي يَمِينِكَتَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا
صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى (69)
فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (طه) عَنِ
ابْنِ عَبَّاسٍرضأَنَّ يَوْم الزِّينَة الْيَوْم الَّذِي أَظْهَرَ اللَّه
فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْن وَالسَّحَرَة يَوْم عَاشُورَاء(تفسير
ابن كثير
ஃபிர்அவ்னின் உடல் இன்று வரை பாதுகாப்பாக
இருப்பது உலக மக்களுக்கு மாபெரும் படிப்பினை
فَالْيَوْمَ
نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً
وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (يونس92)
உனது உடலை நாம் பாதுகாப்போம் என்ற இறை
வசனத்திற்கேற்ப ஃபிர்அவ்னின் உடல் கி.பி. 1889 இல் கண்டு பிடிக்கப்பட்டு எகிப்து
தலைநகர் கெய்ரோவிற்கு கொண்டு வரப்பட்டு 1907 முதல் அரச சடலங்கள் வைக்கப்பட்டுள்ள
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1975 –ல் இது பரிசோதிக்கப்பட்டு நீரில்
மூழ்கி இறந்த ஃபிர்அவ்னின் உடல் தான் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற அரச
சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது ஃபிர்அவ்னின் சடலம் மட்டும்
உருக்குலையாமல் கண்டெடுக்கப்பட்டது குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்துவதாகும்
நூஹ் அலைஹிஸ்ஸலாம் உடைய கப்பலும் இன்று
வரை பாதுகாக்கப்படுகிறது
முதல் உலக யுத்தத்தின் போது விளாடி மீர்
என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆர்மீனியா மலைத் தொடரிலுள்ள ஜூதி என்ற மலை உச்சியில்
பனிப்படலத்திற்கு அடியில் கப்பல் ஒன்று இருப்பதை கண்டு பிடித்துச் சொன்ன போது
மாஸ்கோவிலிருந்து சில ஆராய்ச்சிக் குழுவினர் சென்று பனிப்பாறைகளை பிளந்து அந்த
கப்பலை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் பல பெரிய அறைகளும் பல சிறிய அறைகளும்
இருந்தன. ரஷ்ய புரட்சியின்காரணமாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரபலமடையவில்லை.
பிறகு துருக்கி நாட்டிலிருந்து ஒரு குழுவினர் ஒரு ஐரோப்பிய நிபுணருடன் சென்று
ஆராய்ந்து அந்த கப்பல் கோபர் என்ற ஒரு வகை சவுக்கு மரத்தினால் செய்யப்ப்பட்டது
என்றும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் அந்த மரம்
தாக்குப்பிடிக்காது என்றாலும்
பனிப்படலங்கள் அந்த கப்பலை சுமார் 5000 வருடங்களாக காத்து வருகிறது என்றும்
கண்டு பிடித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் “அராரத் மலைச் சிகரத்தில் கண்டு
பிடிக்கப்ட்டது பைபிளில் கூறப்பட்ட நோவாவின் கப்பலா? என்ற தலைப்பில் தினத்தந்தியில் கட்டுரை
வெளியானது
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திற்கு
உயர்த்தப்பட்டதும் இந்த தினத்தில்...
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى بْنَ
مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ
لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ
مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ
رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (النساء158) وقال
الضحاك : رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء .(بحر العلوم)
ஆஷூரா நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ
فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا
الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ (بخاري)باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
-كتاب الصوم- عن بْن عَبَّاسٍ رَضِيَ
اللَّهُ عَنْهُحِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ
يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ
اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ
حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) بَاب أَيُّ
يَوْمٍ يُصَامُ فِي عَاشُورَاءَ-كِتَاب الصِّيَامِ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக