ஹஜ்ஜை முடித்த ஹாஜிக்கு மட்டுமல்லாமல்
பொதுவாகவே ஒரு முஸ்லிம் மிகச் சிறந்த நற்காரியத்தைச் செய்து முடித்த பிறகு அந்த
நற்காரியம் ஏற்கப்பட்டது என்பதற்கான அடையாளங்களாக கீழ்காணும் தன்மைகள் அவரிடம்
உருவாக வேண்டும். ரமழான் நோன்புக்கும் இது பொருந்தும்.
عن
علي رض:"كونوا لقبول العمل أشد
اهتماما منكم بالعمل ألم تسمعوا الله عز وجل يقول "إنما يتقبل الله من
المتقين" (المائدة /27).(كتاب
أذكار الحج والعمرة)
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்- ஒரு அமலைச் செய்வதில்
எந்த அளவுக்கு கவனம் செலுத்தினோமோ அதை விட அதிகமாக அந்த அமல் ஏற்கப்பட்டதா
என்பதில் கவனம் செலுத்துங்கள்.
ஒரு அமலைச்
செய்த பின் அது ஏற்கப்படுவது பற்றி அதிகம் கவலைப்பட்ட நல்லோர்கள்
قال عبد العزيز بن أبي
رواد: "أدركتهم يجتهدون بالعمل الصالح, وإذا فعلوه وقع عليهم الهم؛ أيقبل
منهم أم لا؟!".
முன்னோர்கள் கஷ்டப்பட்டு உளத்தூய்மையுடன்
அமல் செய்தாலும் அது மக்பூலா என்ற கவலை நீடித்திருக்கும்
كان بعض السلف إذا صلى
صلاة كان يستغفر من تقصير فيها كما يستغفر المذنب من ذنبه.
நல்லோர்களில் ஒருவர் பாவம் செய்தவர் தவ்பா
செய்வது போல ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் அதில் ஏதும் குறை செய்திருந்தால்
மன்னிக்கும்படி அல்லாஹ்விடம் தவ்பா செய்வார்
قال كعب: "من صام
رمضان وهو يحدث نفسه إن فرغ من رمضان أنه لا يعود إلى العصيان دخل الجنة بغير
مسألة".
யார் ரமழானில் நோன்பு வைக்கும்போது அவரின்
மனதில் ரமழான் முடிந்து நான் பாவம் செய்ய மாட்டேன் என மனதில் எண்ணுவாரோ அவர்
கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வார் என கஃப் ரழி அவர்கள் கூறினார்கள்.
أن سلفنا الصالح كانوا
يدعون الله ستة أشهر ستة أشهر أن يقبل الله منهم رمضان
முன்னோர்களில் ஒருவர் ரமழான் முடிந்து ஆறு
மாதங்கள் வரை அந்த ரமழானின் அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்ப்பட வேண்டும் என
துஆச் செய்வார்கள்.
وقال [مالك ابن دينار]
الخوف على العمل أن لا يتقبل- أشد من العمل-
மாலிக் இப்னு தீனார் ரஹ் அவர்கள் கூறும்போது
அமல் செயிவதை விட அந்த அமலின் மக்பூலிய்யத் பற்றி கவலைப்படுவது தான் மிகப்பெரிய
விஷயம் என்றார்கள்
முதல் அடையாளம்.
தாம் செய்த அமலில் இக்லாஸ் உருவாகுவது தான்
முதல் அடையாளம்.
அந்த அமலை வைத்து பெருமை
இருக்கக்கூடாது. ஹாஜி
என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் போடுவதை மிகவும் விரும்புவது. அதைப் போடா
விட்டால் கோபித்துக் கொள்வது போன்றவைகள் கூடாது. எந்த அமலை அல்லாஹ்வுக்காக மட்டும்
செய்ய வேண்டுமோ அதை பிறரிடம் பெயர் வாங்குவதற்காகச் செய்வது ஷிர்க்
முந்திய உம்மத்தில் இக்லாஸ் இல்லாமல் அமல்
செய்தவர்களை அல்லாஹ் பகிரங்கப் படுத்தினான்
முற்காலத்தில் குர்பானி கொடுப்பவர் ஒரு மலை
மீது கொண்டு வந்து தனது குர்பானியை வைத்து விடுவார். ஒரு நெருப்பு வந்து அதைக்
கரித்துச் சென்றால் மக்பூல் என்பதற்கு அடையாளம்.
وَاتْلُ عَلَيْهِمْ
نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا
قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ َ
(27)المائدة
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا
يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا
وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا
وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا
فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ
فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا
عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ
فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ
فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ
رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ
فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ
فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ
النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا
وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري 3124
நபிமார்களில் ஒரு நபி போருக்குப் புறப்பட்டார்.
அப்போது தன் கூட்டத்தாரிடம் ஒரு பெண்ணின் கற்பை புதிதாக சொந்தமாக்கிக் கொண்டு
அவளுடன் உறவு கொள்ளத் தயாராக இருப்பவர் (புது மாப்பிள்ளை) என்னோடு வர வேண்டாம். வீட்டைக் கட்டி அதற்கு இன்னும் மேல்தளம்
அமைக்காதவர் என்னோடு வர வேண்டாம். ஆடுகளை வாங்கி அது குட்டி போடுவதை எதிர்
பார்த்துக் காத்திருப்பவர் என்னோடு வர வேண்டாம். (இவர்களெல்லாம்
போருக்கு வந்தால் முழு கவனத்தோடு போர் செய்ய மாட்டார்கள் என்று எண்ணியதால் அவ்வாறு
கூறினார்கள். அக்காலத்தில் பகல் நேரம் முடிவதற்குள் போர் செய்து முடிக்க வேண்டும்
என்ற நியதி இருக்கும் நிலையில்) அசர் நேரத்தில் தான் அந்த
ஊரையே நெருங்கினார்கள். அப்போது சூரியனிடம் (பேசினார்கள். )நீயும் குறித்த நேரத்தில் மறைய வேண்டும் என ஏவப்பட்டுள்ளாய். நானும் (இன்றைய பகல் முடிவதற்குள் போர்
செய்யும்படி) ஏவப்பட்டுள்ளேன். என்று கூறி விட்டு யாஅல்லாஹ்
நாங்கள் போர் செய்து முடிக்கும் வரை எங்களுக்காக சூரியனைத் தடுத்து வை என்று துஆ
செய்தார்கள். அவ்வாறே சூரியன் தடுத்து வைக்கப்பட்டது. அல்லாஹ் வெற்றியைத் தந்தான்.
ஙனீமத் பொருட்களை அந்த நபி சேகரித்து மலை மீது வைத்தார். நெருப்பு வந்தது. ஆனால் அதைக்
கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி ஙனீமத் பொருட்கள் அனைத்தையும் இங்கு
கொண்டு வந்து சேர்ப்பதில் உங்களுக்குள் ஏதோ ஊழல் நடந்துள்ளது. எனவே உங்களில்
ஒவ்வொரு குடும்பத்தின் சார்பில் ஒருவர் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும்
என்றார்கள். அப்போது ஒருவரின் கை அந்த நபியின் கையோடு ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு
குறிப்பிட்ட அந்த நபரின் குடும்பத்தினர் ஒவ்வொரு நபரும் தன்னிடம் வந்து கை கொடுக்க
வேண்டும் என்றார்கள். அப்போது அவர்களில் இருவரின் கை அல்லது மூவரின் கைகள் அந்த
நபியின் கையோடு ஒட்டிக் கொண்டது. அப்போது அந்த நபி உங்களிடம் தான் ஊழல் உள்ளது
என்று எச்சரித்தார்கள். உடனே அவ்விருவரும் ஒரு மாட்டின் தலை அளவுக்கு தாங்கள்
மறைத்து வைத்திருந்த தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அதையும் சேர்த்து ஙனீமத்
பொருட்களுடன் வைத்த போது நெருப்பு வந்து அதைக் கரித்துக் கொண்டு சென்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ:قَالَ
رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:قَالَ اللهُ
عَزَّ وَجَلَّ:فَمَنْ عَمِلَ فِيَّ عَمَلًا أَشْرَكَ فِيهِ غَيْرِي فَأَنَا مِنْهُ
بَرِيءٌ هُوَ لِلَّذِي أَشْرَكَ-(رواه البيهقي شعب الايمان)
யார் ஒரு அமலைச் செய்து
அதில் அல்லாஹ்வுடன் மற்றொருவரைக் கூட்டாக்கிக் கொள்வாரோ அவரை விட்டும் நான் நீங்கி
விட்டேன் என அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் நவின்றார்கள்
عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ
الْأَصْغَرُ قَالَ:وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ:الرِّيَاءُ إِنَّ اللهَ
يَقُولُ يَوْمَ يُجَازِي الْعِبَادَ بِأَعْمَالِهِمِ:اذْهَبُوا إِلَى الَّذِينَ
كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ
جَزَاءً أَوْ خَيْرًا(بيهقي شعب الايمان-
நான் சிறிய ஷிர்கை
உங்களிடம் மிகவும் அஞ்சுகிறேன் என நபி ஸல் கூறிய போது சிறிய ஷிர்க் என்றால் என்ன
என்று கேட்டதற்கு முகஸ்துதி என நபி ஸல் கூறி விட்டு யார் முகஸ்துதிக்காக அமல் செய்தார்களோ
அவர்களிடம் அல்லாஹ் நீங்கள் யாருக்காக இந்த நற்காரியம் செய்தீர்களோ அவர்களிடம்
சென்று நற்கூலியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என்றார்கள்.
عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه خَرَجَ إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَإِذَا هُوَ بِمُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله
عنه عِنْدَ قَبْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي،فَقَالَ: مَا يُبْكِيكَ يَا مُعَاذُ ؟ قَالَ:
يُبْكِينِي مَا سَمِعْتُ مِنْ صَاحِبِ هَذَا الْقَبْرِ . قَالَ: مَا هُوَ ؟ قَالَ:
سَمِعْتُهُ يَقُولُ: " إِنَّ يَسِيرًا مِنَ الرِّيَاءِ شِرْكٌ، وَإِنَّ مَنْ
عَادَى أَوْلِيَاءَ اللهِ فَقَدْ بَارَزَ اللهَ بِالْمُحَارَبَةِ، وَإِنَّ اللهَ
يُحِبُّ الْأَبْرَارَالْأَخْفِيَاءَ الْأَتْقِيَاءَ الَّذِينَ إِنْ غَابُوا لَمْ
يُفْتَقَدُوا، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ
مَصَابِيحُ الدُّجَى يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ (رواه البيهقي
شعب الايمان)
முஆத் ரழி அவர்கள் நபி
ஸல் அவர்களின் கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள் எதற்காக அழுகிறீர்கள்
என்று கேட்ட போது இந்த கப்ரு உடையவர் கூறிய வார்த்தைகள் என்னை அழ வைத்து விட்டது.
சிறிதளவு முகஸ்துதியும் கூட ஒரு வகையில் ஷிர்க் என நபி ஸல் கூறினார்கள்.
முகஸ்துதிக்காக
அமல் செய்பவர்களுக்கு காத்திருக்கும் நரகம்
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ
(4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ
(6)سورة الماعون -عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ
النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي جَهَنَّم لَوَادِيًا
تَسْتَعِيذ جَهَنَّم مِنْ ذَلِكَ الْوَادِي فِي كُلّ يَوْم أَرْبَعمِائَةِ مَرَّة
أُعِدَّ ذَلِكَ الْوَادِي لِلْمُرَائِينَ مِنْ أُمَّة مُحَمَّد لِحَامِلِ كِتَاب
اللَّه وَلِلْمُصَّدِّقِ فِي غَيْر ذَات اللَّه وَلِلْحَاجِّ إِلَى بَيْت اللَّه
وَلِلْخَارِجِ فِي سَبِيل اللَّه (طبراني)
நரகத்தில் ஒரு பகுதி உள்ளது அதன் தீங்கை
விட்டும் நரகத்தின் மற்ற பகுதிகள் தினமும் 400 தடவை அல்லாஹ்விடம் பாதுகாப்புக்
கேட்கும். அந்த பகுதி இந்த உலகத்தில் முகஸ்துதிக்காக அமல் செய்த வர்களுக்காக
உருவாக்கப்பட்டுள்ளது. என
நபி ஸல் கூறினார்கள்.
முகஸ்துதிக்காக
அமல் செய்தவர்கள் மறுமையில் அல்லாஹ்வை காணும்போது உண்மையாக வணங்க நினைத்தாலும்
அவர்களின் முதுகுகள் வளையாது
عَنْ أَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى
رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ هَلْ تُضَارُونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ
وَالْقَمَرِ إِذَا كَانَتْ صَحْوًا قُلْنَا لَا قَالَ فَإِنَّكُمْ لَا تُضَارُونَ
فِي رُؤْيَةِ رَبِّكُمْ يَوْمَئِذٍ إِلَّا كَمَا تُضَارُونَ فِي رُؤْيَتِهِمَا
ثُمَّ قَالَ يُنَادِي مُنَادٍ لِيَذْهَبْ كُلُّ قَوْمٍ إِلَى مَا كَانُوا
يَعْبُدُونَ فَيَذْهَبُ أَصْحَابُ الصَّلِيبِ مَعَ صَلِيبِهِمْ وَأَصْحَابُ
الْأَوْثَانِ مَعَ أَوْثَانِهِمْ وَأَصْحَابُ كُلِّ آلِهَةٍ مَعَ آلِهَتِهِمْ
حَتَّى يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ وَغُبَّرَاتٌ
مِنْ أَهْلِ الْكِتَابِ ثُمَّ يُؤْتَى بِجَهَنَّمَ تُعْرَضُ كَأَنَّهَا سَرَابٌ
فَيُقَالُ لِلْيَهُودِ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ عُزَيْرَ
ابْنَ اللَّهِ فَيُقَالُ كَذَبْتُمْ لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ وَلَا وَلَدٌ
فَمَا تُرِيدُونَ قَالُوا نُرِيدُ أَنْ تَسْقِيَنَا فَيُقَالُ اشْرَبُوا
فَيَتَسَاقَطُونَ فِي جَهَنَّمَ ثُمَّ يُقَالُ لِلنَّصَارَى مَا كُنْتُمْ
تَعْبُدُونَ فَيَقُولُونَ كُنَّا نَعْبُدُ الْمَسِيحَ ابْنَ اللَّهِ فَيُقَالُ
كَذَبْتُمْ لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ وَلَا وَلَدٌ فَمَا تُرِيدُونَ
فَيَقُولُونَ نُرِيدُ أَنْ تَسْقِيَنَا فَيُقَالُ اشْرَبُوا فَيَتَسَاقَطُونَ فِي
جَهَنَّمَ حَتَّى يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ
فَيُقَالُ لَهُمْ مَا يَحْبِسُكُمْ وَقَدْ ذَهَبَ النَّاسُ فَيَقُولُونَ
فَارَقْنَاهُمْ وَنَحْنُ أَحْوَجُ مِنَّا إِلَيْهِ الْيَوْمَ وَإِنَّا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِيَلْحَقْ كُلُّ قَوْمٍ بِمَا
كَانُوا يَعْبُدُونَ وَإِنَّمَا نَنْتَظِرُ رَبَّنَا قَالَ فَيَأْتِيهِمْ
الْجَبَّارُ فِي صُورَةٍ غَيْرِ صُورَتِهِ الَّتِي رَأَوْهُ فِيهَا أَوَّلَ
مَرَّةٍ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا فَلَا
يُكَلِّمُهُ إِلَّا الْأَنْبِيَاءُ فَيَقُولُ هَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُ آيَةٌ
تَعْرِفُونَهُ فَيَقُولُونَ السَّاقُ فَيَكْشِفُ عَنْ سَاقِهِ فَيَسْجُدُ لَهُ
كُلُّ مُؤْمِنٍ وَيَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ لِلَّهِ رِيَاءً وَسُمْعَةً
فَيَذْهَبُ كَيْمَا يَسْجُدَ فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا.....(بخاري)
இரண்டாவது
அடையாளம் அந்த அமலுக்குப் பின் பாவத்தை விட்டும் திருந்தி வாழ்வது
உதாரணமாக
தொழுகையை ஜமாஅத்துடன் தொழும் வழமையை உருவாக்கிக் கொள்வது
நபி ஸல் அவர்களின் காலத்தில் தொழ
நேரமில்லை என்று கூறியவர்கள் முனாஃபிக்கீன்கள் மட்டும் தான்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ
الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا
وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ
رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ
مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ
بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)
தொழுகையை விட தொழிலை பெரிதாக
கருதினால்...
قُلْ إِنْ
كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ
وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا
وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ
وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى
يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
(24)سورة التوبة
நபி ஸல் அவர்களின் காலத்தில் எந்த ஒரு
முஸ்லிமும் தொழுகையை விட தொழிலை பெரிதாக கருதவில்லை
قَالَ عَمْرو
بْن دِينَار الْأَعْوَر كُنْت مَعَ سَالِم بْن عَبْد اللَّه وَنَحْنُ
نُرِيد الْمَسْجِد فَمَرَرْنَا بِسُوقِ الْمَدِينَة
وَقَدْ قَامُوا إِلَى الصَّلَاة وَخَمَّرُوا مَتَاعهمْ فَنَظَرَ سَالِم إِلَى
أَمْتِعَتهمْ لَيْسَ مَعَهَا أَحَد فَتَلَا سَالِم هَذِهِ الْآيَة" رِجَال
لَا تُلْهِيهِمْ تِجَارَة وَلَا بَيْع عَنْ ذِكْر اللَّه(النور37)"ثُمَّ
قَالَ هُمْ هَؤُلَاءِ(تفسير ابن كثير
وَقَالَ
مَطَر الْوَرَّاق كَانُوا يَبِيعُونَ وَيَشْتَرُونَ وَلَكِنْ كَانَ أَحَدهمْ إِذَا سَمِعَ النِّدَاء
وَمِيزَانه فِي يَده خَفَضَهُ وَأَقْبَلَ إِلَى الصَّلَاة (تفسير ابن كثير)
தொழிலை விட தொழுகையை பெரிதாக
கருதியவர்களுக்கு சிறப்பு
عَنْ أَسْمَاء بِنْت
يَزِيد بْن السَّكَن قَالَتْ قَالَ رَسُول اللَّه
صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَمَعَ اللَّه الْأَوَّلِينَ وَالْآخِرِينَ يَوْم الْقِيَامَة جَاءَ مُنَادٍ فَنَادَى بِصَوْتٍ يُسْمِع
الْخَلَائِق سَيَعْلَمُ أَهْل الْجَمْع مَنْ أَوْلَى بِالْكَرَمِ لِيَقُمْ الَّذِينَ
لَا تُلْهِيهِمْ تِجَارَة وَلَا بَيْع عَنْ ذِكْر اللَّه فَيَقُومُونَ وَهُمْ قَلِيل
ثُمَّ يُحَاسَب سَائِر الْخَلَائِق(طبراني
ஹஜ் என்பது
மனிதனைப் புனிதனாக்கும் வணக்கம். அன்று பிறந்த பாலகனைப் போல பாவமற்றவராகத்
திரும்பும் ஒரு ஹாஜி திரும்பவும் தவறுகளில் ஈடுபடுவது கீழ்காணும் உதாரணங்களைப்
போன்றதாகும்
وَلَا
تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ
غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا (92)النحل- أن امرأة يقال لها ربطة ابنة
سعد كانت تغزل بمغزل كبير فإذا أبرمته وأتقنته أمرت جارتها فنقضته عَنِ السُّدِّيِّ، قَالَ: كَانَتِ امرأة بمكة،
كانت تسمى خرقاء مكة، كانت تغزل،
فإذا أبرمت غزلها تنقضه".
மக்காவில் ஒரு பெண்
இருந்தாள். ரப்தா என்பது அவள் பெயர். மெல்லிய நூல்களை ஒன்றாக சேர்த்து பெரிய நூல்
கண்டை உருவாக்குவாள். அந்த நூல் கண்டு உறுதியான ஒரு நிலையை அடைந்த பின்பு தன்னுடைய
பணிப் பெண்ணிடம் சொல்லி அவற்றைப் பிரித்து பழைய நிலைக்கே ஆக்கி விடச் சொல்லுவாள்.
இதனாலேயே அவள் மடத்தனமான பெண் என அழைக்கப்பட்டாள்.
உதாரணம் 1- ஒரு பெண்
காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி, பின்னல்
போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு புது
மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும்
அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப் போன்று நீங்கள் ஆகி விட வேண்டாம்.
கதாதா ரஹ் அவர்கள் இத்தகைய ஒரு பெண்ணை நீங்கள் பார்த்தால் அவளை என்ன முட்டாள்
தனமான வேலை செய்கிறாள் என்பீர்கள். அவளைப் போல் நிறைய முட்டாள்கள் உள்ளனர்.
உதாரணம் 2- ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும்
நேர்த்தியாக கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து,
கதவு இங்கே அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை
ஏவி, இரவும், பகலும் விழித்திருந்து, ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக
எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து
அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்
உதாரணம்- 3- ஒருவர் மாடியிலிருந்து கீழே
விழுந்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு
அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள் கழித்து மருத்துவர் இவரிடம்
நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய வீட்டு மாடிப்படியில் முடிந்த
வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி செய்யுங்கள் என்கிறார். இவரும்
தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற முடிகிறது. பிறகு முடியவில்லை.
எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ ஒரு நாளில் அனைத்து
மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு மாடிக்குச் சென்றவர்
பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை உடைத்துக் கொண்டார்.
எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்
உதாரணம்- 4- ஒருவர் நடந்து செல்லும் போது
சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி.
அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ
காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை
அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, “தம்பி... பார்த்துப் போ! மறுபடியும்
சேற்றில் விழுந்து விடாதே! என்று எச்சரித்து அனுப்ப, அவனோ
மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப் பற்றி நாம் என்ன
நினைப்போம்
இதுபோன்று ஹாஜிகள் தமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட பின்
மறுபடியும் பாவத்தில் விழுந்து விடக்கூடாது
ஹஜ் மக்பூல் ஆனதற்கு அடையாளம் அதுபோன்று அமல்களைத்
தொடர்ந்து செய்வதாகும்
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا
تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا
وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)فصلت
சம்பவம் - இறைநேசர் சிர்ரிய்யுச் சிக்திய்யீ
ரஹ் அவர்கள் ஒரு மரத்திடம் பேசினார்கள். அந்த
மரம் கூறியது . என்னைக் கல்லைக் கொண்டு எரிகிறார்கள் ஆனால்
நான் அவர்களுக்கு பழங்களையே தருகிறேன். நான் பல விதங்களிலும் மனிதர்களுக்கு
பயன்படுகிறேன் என்று தன் பெருமைகளைக் கூறியபோது அப்போது அந்த இறைநேசர் கேட்டார் நீ
இவ்வளவு தூரம் மனிதர்களுக்காக அற்பணிக்கிறாய் ஆனால் உன்னைப் போய் எரிக்கிறார்களே
அப்போது அந்த மரம் கூறியது. நான் செய்வதெல்லாம் சரி தான்.
ஆனால் என்னிடம் ஒரு தவறு உள்ளது நான் காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து விடுவேன்
அதனால் தான் என்னை எரிக்கிறார்கள் என்றது. அதுபோல்
மனிதர்களில் சிலர் ஒரு நிலையில்லாமல் இப்படியும் அப்படியும் சாய்பவர்களாக சில நேரம்
நல்ல மனம் இருந்தால் தொழுவது சில நேரம் தொழுகையை விடுவது இப்படி இருப்பதால் தான்
நரகம்
சிறிதளவு செய்தாலும் தொடர்ந்து
செய்தால் தான் பலனைத் தரும்
عَنْ
عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا
وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ مَنْ هَذِهِ قَالَتْ فُلَانَةُ تَذْكُرُ مِنْ
صَلَاتِهَا قَالَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لَا يَمَلُّ
اللَّهُ حَتَّى تَمَلُّوا
وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَاوَمَ عَلَيْهِ صَاحِبُهُ (بخاري)
பல்வேறு விஷயங்களில்
சஹாபாக்களின் இஸ்திகாமத்
عَنْ اِبْن عَبَّاس قَالَ : تُلِيَتْ
هَذِهِ الْآيَة عِنْد النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي
الْأَرْض حَلَالًا طَيِّبًا فَقَامَ سَعْد بْن أَبِي وَقَّاص فَقَالَ يَا رَسُول
اللَّه اُدْعُ اللَّهَ أَنْ يَجْعَلنِي مُسْتَجَاب الدَّعْوَة فَقَالَ " يَا
سَعْد أَطِبْ مَطْعَمك تَكُنْ مُسْتَجَاب
الدَّعْوَة وَاَلَّذِي نَفْس مُحَمَّد بِيَدِهِ إِنَّ الرَّجُل لِيَقْذِف
اللُّقْمَة الْحَرَام فِي جَوْفه مَا يُتَقَبَّل مِنْهُ أَرْبَعِينَ يَوْمًا
وَأَيّمَا عَبْد نَبَتَ لَحْمه مِنْ السُّحْت وَالرِّبَا فَالنَّار أَوْلَى بِهِ
(ابن
ஸஃதுப்னு அபீ
வக்காஸ் ரழி இந்த அறிவுரைக்குப் பின்னால்
வாழ்நாள் முழுக்க ஹராமை சாப்பிட்டதே கிடையாது. அவர்கள் கூஃபாவில் இருந்த காலத்தில்
அவர்களுடைய ஆடு வெறு ஒருவருடைய
தோட்டத்தில் சென்று மேயந்து விட்டது என்பதற்காக
அந்த ஆட்டில் இருந்து இனிமேல் பால் கூட நான் கறக்க மாட்டேன் என்று கூறும் அளவுக்கு
இஸ்திகாமத்துடன் இருந்தார்கள்.
சின்னச் சின்ன
விஷயங்களிலும் இமாம்களின் இஸ்திகாமத்
இமாம் அபூஹனீஃபா ரஹ் வாழ்நாள் முழுக்க யாரைப்பற்றியும் புறம்
பேசியது கிடையாது
இமாம் ஷாஃபிஈ ரஹ் வாழ்நாள் முழுக்க ஒரு பொய் கூட பேசியதே கிடையாது
இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் பேசினால் கல்வியைத்தவிர வேறு
எதுவும் பேசியதில்லை
இன்றைக்கு
எந்த விஷயத்திலும் நம்மிடம் இஸ்திகாமத் இருப்பதில்லை. சில இளைஞர்கள் ஷரீஅத் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும்
என்று நினைத்தாலும் அவர்களின் பெற்றோர்
அல்லது அவர்களின் ஊர் நடைமுறை என்பது போன்று விஷயங்கள் குறுக்கே வரும்போது
அவர்களின் இஸ்திகாமத் தளர்ந்து விடுகிறது.
ஹஜ்ஜே மக்பூலுக்கான அடையாளங்களில் மீதமுள்ளவை
3வது அடையாளம் அந்த அமலை அல்லாஹ்
கபூல் செய்வான் என்ற நம்பிக்கை இருப்பதுடன் 2ஏற்கா விட்டால் என்ன
செய்வது என்ற கவலையும் இருக்க வேண்டும்.
4.தான் செய்த அமலை அமலை மிகவும்
சொற்பமானதாக கருதுவது
5.வது அடையாளம். குரோதம் பொறாமை
போன்ற தீய பண்புகளில் இருந்து விலகி இருப்பது.
6-வது அடையாளம் ஒவ்வொரு அமல்களிலும்
மீதும் ஆர்வம் ஏற்படுவது
7-வது அடையாளம் ஒவ்வொரு
வணக்கத்திற்குப் பின்னாலும் துஆ 1திக்ரை
அதிகப்படுத்துவது-
நூல் மஜாலிஸே ரமழானிய்யா
1فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ
فَاذْكُرُوا اللَّهَ (200)البقرة
تَتَجَافَى
جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا
رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (16)السجدة
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக