ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல. இஸ்லாத்திற்கும்
எதிரிகளாக இருந்தார்கள். மூவாயிரம் குர்ஆன் பிரதிகளை எரித்தார்கள். மஸ்ஜித்களில்
தொழுகை நடைபெறும்போதே முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள். இதனால் தான் நம்முடைய
முன்னோர்களான ஆலிம்கள் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதை மார்க்கத்தின் கடமையைப் போன்று
கருதினார்கள்.ஜும்ஆ மேடைகளை அதற்காக பயன்படுத்தினார்கள். பல்லாயிரக்கணக்கான
ஆலிம்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார்கள். அத்தகைய ஆலிம்களின் தியாகத்தை இன்று நினைவு கூர்வது நமது
கடமையாகும். وَمَنْ أَظْلَمُ
مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي
خَرَابِهَا (البقرة114
தான் பிறந்த சொந்த ஊரை சொந்த நாட்டை நேசிப்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்
وأخرج
الأزرقي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لما خرج من مكة « أما
والله اني لأخرج وإني لأعلم أنك أحب البلاد إلى الله وأكرمها على الله ، ولولا أن
أهلك أخرجوني منك ما خرجت » .وأخرج الترمذي عن
ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمكة « ما أطيبك من بلدة وأحبك
إليّ ، ولولا أن قومك أخرجوني ما سكنت غيرك (در المنثور
நபி ஸல் அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய
போது மக்காவை நோக்கிப் பேசுவது போல பின்வரும் வார்த்தையைச் சொன்னார்கள்.
ஊர்களிலேயே எனக்குப் பிரியமான ஊராகிய மக்கா என்ற உன்னை விட்டும் நான்
வெளியேறுகிறேன். நிச்சயமாக உன்னிடம் வசிப்பவர்கள் என்னை வெளியேற்றியிருக்கா
விட்டால் நான் ஒருபோதும் வெளியேறியிருக்க மாட்டேன்.
நபி (ஸல்) அவர்களின் கூறியதைப் போலவே நமது இந்திய ஆலிம்களின் நாவிலும் அல்லாஹ் அது
போன்ற வார்த்தையை அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டினான்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த நேரத்தில்
மூத்த ஆலிம்களுக்குள் உரையாடல் நடைபெற்றது நாமும் பாகிஸ்தானுக்குச் சென்று
விடுவோம். இனிமேல் அது தான் நமக்குப் பாதுகாப்பான ஒரு நகரம் என்று சில ஆலிம்கள் முடிவெடுத்த
நேரத்தில் ஹுசைன் அஹ்மது மதனீ ரஹ் மற்றும் அவர்களுடன் இருந்த நம்முடைய
முன்னோடிகளான ஆலிம்கள் அதை மறுத்து நாம் எதற்காக இந்த மண்ணிலிருந்து வெளியேற
வேண்டும். இது நாம் பிறந்த மண். நாம் பிறந்த நாடு. கடைசி வரை இங்கே இருந்து நாம்
போராட வேண்டும் என்று அறிவுரை கூறி அந்தச் செய்தியை மக்களிடம் பரப்பினார்கள்.
அதாவது நம்மை யாரும் நிர்பந்தமாக வெளியேற்றாமல் நாம் இங்கிருந்து வெளியேறக் கூடாது
என்ற கொள்கையை மக்களிடம் பரப்பினார்கள்.
நமது முன்னோர்களான ஆலிம்கள் இந்தியாவை விட்டுக் கொடுக்காத காரணம்
இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் தான்.
عن ابن
عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في
الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام (
وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريحا الهند هبط بها آدم
عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)
அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின்
நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின்
கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச்
சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில்
மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த
கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம்
இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலை அவர்கள் இறக்கப்பட்டார்கள்.
அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
عن ابن
عباس رضي الله عنهما قال قال علي رضي الله عنه :أطيب ريح في الأرض الهند أهبط بها آدم
عليه الصلاة و السلام فعُلِّق شجرُها من ريح الجنة (حاكم
عن
علي رضي الله
عنهما قال: خير واديين في الناس وادي بكة وواد بالهند الذي هبط
به آدم ومنه يؤتى بالطيب الذي تطيبون به (كنز العمال
இரண்டு இடங்கள் சிறந்ததாகும்.
1.மக்காவின் பள்ளத்தாக்கு 2.இந்தியாவில் ஆதம் அலை இறங்கிய பள்ளத்தாக்கு.
அங்கிருந்து தான் நீங்கள் தடவிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள் கொண்டு
வரப்படுகின்றன.
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا
يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ
وَلَا هُمْ يَحْزَنُونَ (38)البقرة
.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه
تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم
بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة
فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء
بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم
وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن
كثير
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில்
இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும்
இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின.
நபி ஆதம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை
விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்...
இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் இவ்வளவு நெருங்கிய இருந்ததால் தான் இந்திய
மண்ணை அந்நியர்களிடம் விட்டுக் கொடுக்க ஆலிம்கள் இடம் கொடுக்கவில்லை
சுதந்திரப்
போரில் ஆலிம்களின் பங்கு மகத்தானது
ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவீ ரஹ் அவர்கள்
பிரிட்டிஷ்
அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக்
கண்டு வேதனைப்பட்ட ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவீ ரஹ் அவர்கள் இந்தியாவை ‘தாருல் ஹர்ப்’ எனப் பிரகடனம் செய்தார்கள்.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவது மார்க்கத்தின் கடமை எனப் பிரகடனம் செய்தார்கள்.
மெளலவி
அஹ்மத்துல்லாஹ் ஷாஹ் மதராஸி
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில்
சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா
மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின்
அதிபராக இருந்தவர்.இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது.
இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை
உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு
ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. தலைமறைவாக
இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில்
சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறுவேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென்
என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி
ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசைப் பெற்றான்.
வரலாற்று ஆசிரியர் தாம்சன் என்பவர் குறிப்பிடும் முக்கியச்
செய்தி
டெல்லியில் ஒரு கேம்ப் ஒன்றில் நான் தங்கியிருந்த போது மனித உடல்கள் எரிக்கப்படும் வாடையை நுகர
முடிந்தது நான் ஒரு வித அச்சத்தோடு வெளியில் எட்டிப் பார்த்த போது அங்கே நான் கண்ட
என் காட்சி மனதை பதற வைத்தது. சுமார் 40 மார்க்க அறிஞர்கள் உடம்பில் துணி இல்லாமல்
நிர்வாணமாக நெருப்புப் பள்ளத்திற்கு
அருகில் கைகளை கட்டி நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களைச் சுற்றி
ஆங்கிலேயர்கள் நின்று கொண்டு ஒவ்வொருவராக நெருப்பில் தூக்கி வீசுகிறார்கள் அவ்வாறு
வீசப்படும்போது அவர்களிடம் கேட்கிறார்கள் நீங்கள் உங்களுக்கு எதிரான போராட்டத்தை
விட்டு விட்டால் உங்களை உயிரோடு விட்டு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் ஆனால் அந்த
ஆலிம்கள் நாங்கள் கொல்லப்பட்டாலும் உங்களுக்கு எதிராகவே இருப்போம் என்று
கூறுகிறார்கள் கடைசியில் அந்த நாற்பது
ஆலிம்களும் நெருப்பில் தூக்கி வீசப்படும் காட்சி இன்றளவும் என் நெஞ்சை விட்டு
நீங்கவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்
ஆங்கிலேயர்களை
எதிர்த்துப் போராடிய ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ்
ஆங்கிலேயர்களை
எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ்
அவர்கள் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்கள் தன் கையை தொட்டு விட்டால் அந்தக்
கையைக் கழுவாமல் எந்தப் பொருளையும் தொட மாட்டார்கள் எனவே தான் ஒரு ஆங்கிலேயன்
கூறுவான் மஹ்மூதுல் ஹஸன் அவர்ளை மால்டா சிறையில் எந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள்
சித்ரவதை செய்தார்கள் என்பதை அவர்கள் வஃபாத்தான பின் குளிப்பாட்டும்போது தான் உணர
முடிந்தது. அதாவது அவர்களை
குளிப்பாட்டும்போது இடுப்பில் சதையே இல்லை அது பற்றி அவருடன் சிறையில் இருந்த
ஹுஸைன்அஹ்மத் மதனீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க
காய்ச்சி அவரது இடுப்பில் சூடு வைப்பார்கள் அதனால் தான் அவரது இடுப்பில் சதையே
இல்லை என்றார்கள்
காந்தியை
பிரபலப்படுத்தியது மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள்
காந்திக்கு மகாத்மா என்று
பட்டம் கொடுத்தது மெளலானா அப்துல் பாரீ ரஹ் அவர்கள்
ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ்
அவர்கள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் ஏழு மாதம் சிறை
வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களையும், அவர்களுடன் இருந்த
நால்வரையும் 1920 ஜூன் 20- ம் தேதி ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அவ்வாறு
விடுதலை செய்யப்பட்ட அவர்கள் மால்டா விலிருந்து மும்பை துறைமுகத்திற்கு
அழைத்து வரப்பட்டனர். அப்போது ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்களை
வரவேற்பதற்காக பல்வேறு ஆலிம்கள், முக்கியத்தலைவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர்.
அவ்வாறு வருகை புரிந்த தலைவர்களில் காந்திஜியும் ஒருவர்.பிறகு மும்பையில் ஒரு
அறையில் காங்கிரஸ் தலைவர்களும், மற்றும் உலமாக்களும் இந்தியாவின் நிலை பற்றி
ஆலோசனை நடத்தினார்கள். இனிமேல் அகிம்சை வழியில் போராட வேண்டும் என்பது ஆலோசனையின்
முக்கிய அம்சமாக இருந்தது. அகிம்சைப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம்
ஒப்படைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஷைகுல் ஹிந்த் அவர்கள் பகலில் தன்னை
வரவேற்க வந்தவர்களில் இளம் ஃபாரிஸ்டர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கே ? என்று கேட்டு அவரையே அதாவது காந்தியையே தலைவராக
நியமிக்கச் சொன்னார்கள். அதன் பின்பு காந்தியை தலைவராக அறிமுகப்படுத்தவும்
மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை
வளர்க்கவும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு
செய்தது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மெளலானா அப்துல் பாரீ
ஃபரங்கீ மஹல்லீ ரஹ் அவர்கள் தான் முதலில் காந்தியை மாகாத்மா என பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அன்று முதல் அப்பெயர் பிரபலமடைந்தது.
சுதந்திரப்
போரில் முஸ்லிம்கள்
இந்த நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்
ஒரு முஸ்லிம்
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத்
திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல
செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன.
அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம்
நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை
விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப்
போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள
முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
சுதந்திரப்
போரின் முன்னோடிகள் முஸ்லிம்கள்
ஆங்கிலேயர்
வணிகம் செய்ய வந்த காலத்தில் இருந்தே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள்
முஸ்லிம்கள்.அவர்களில் முஸ்லிம் மன்னர்கள் அதிகம் இருந்தனர். ஆங்கிலேயருக்கு
நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து அவர்களை
எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தொவ்ளா ஆவார். முதல் இந்தியபோராட்டம்என்று
அறியப்படும் 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்
புரட்சியில் அதிகப்படியான
இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் அதிகப்படியானோர் தங்கள்
உயிரையும் இழந்தனர்.
இந்தியாவின்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் தன்
சுயசரிதையான சத்தியசோதனையில்,
விடுதலை போராட்ட ஆரம்ப காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஆதம் ஜவேரி சகோதரர்கள் குறித்து
குறிப்பிடுகின்றார். அன்றைய தேதிக்கு சுமார் 150 கோடி
சொத்துக்களை சுதந்திரப் பணிக்காக இழந்திருந்தனர் இந்த சகோதரர்கள்.[ தென் தமிழகத்தில்
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன்னுடைய சுதேசி கப்பல் லட்சியத்தை அடைய பொருளாதாரம்
மிகப்பெரும் தடையாக இருந்தது.அந்நேரத்தில், சுமார் இரண்டு லட்சம்
மதிப்பிலான 8000 பங்குகளை வாங்கி
வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர்
சேட்.
நேதாஜி
உருவாக்கிய கடல் கடந்த இராணுவமான இந்திய தேசிய இராணுவத்தில் தளபதி பொறுப்பு
முதற்கொண்டு பல்வேறு பதவிகளை முஸ்லிம்கள் அலங்கரித்திருந்தனர். நேதாஜி
வியந்து போற்றும் அளவு அதிகப்படியான பொருளாதார உதவிகளையும் இஸ்லாமிய வணிகர்கள்
அளித்தனர்.
மார்க்க
அறிஞர்கள்,
சுதந்திர எண்ணங்களைத் தீவிரமாக விதைக்கும் வண்ணமாக, கதராடை
அணியாத மணமகன் திருமணத்தில் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும்
ஆங்கிலேயர்களின் மொழியான ஆங்கிலம் படிக்க க்கூடாது என்றும் ஃபத்வா அளித்திருந்தனர். பக்கீர்கள்
எனப்படும் யாசகம் தேடுவோர் வீடு வீடாக சுதந்திரக் கீதங்களைப்பாடி மக்களின் விடுதலை
எண்ணங்களைத் தீவிரப்படுத்தினர்.
இந்திய
விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருந்தனர்.
சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார்.[16]
1975 டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல
ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். “இந்திய
விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும்
இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட
விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது”.
டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னமான
இந்தியா கேட் எனும் பகுதியில் இந்தியாவுக்காக
உயிர் நீத்த 95,300 இராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில்
61,945 பேர் முஸ்லிம்கள்.
சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி உதவி செய்ததில் முஸ்லிம் பிரமுகர்களின்
மாபெரும் பங்களிப்பு.
போராடும்
காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில்
காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம்
தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு
கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர்
நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில்
60
லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப்
பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி
அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன்
இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு
லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் நிதி
திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர்
சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர்
நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை
வழங்கினார்.காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த
தொகையை வாசித்த போது ஆச்சரியத்தால் விரிந்தது.காங்கிரஸ் கமிட்டியின் நிதி
திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற
மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி
என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக
அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக் காசோலையை உமர்
சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும்
வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி
வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர்
சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய்
மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான
நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானியின்
பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக்
குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து
நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்
சுதந்திரப்
போருக்காக வாரி வழங்கிய வள்ளல் ஹபீப்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்
விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு
கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும்
கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம்
சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக்
கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த
இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி
நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று
அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார். சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது
செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம்
நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அம்மாநிலத்தில் பல இடங்களில்
கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன்
மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை
விதிக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 12ஆம் தேதியன்று
ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ்
கான் மீது விசாரணை நடைபெற்றது. ‘நீ
முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால்
உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்’ என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள்.
இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல்
நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத்
தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக்
கழுத்திலே தொங்கப் போட்டார்.ஹாஜிகளைப் போன்று ‘லப்பைக் லப்பைக்’ என கூறிக் கொண்டிருந்தார்.
சுதந்திரத்திற்காக
தமிழகத்தில் முஸ்லிம்களின் தியாகம்
தென்னகத்தின்பல
பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி
செய்தனர். 1800ஆம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி
நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. குடகுப்
பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன்
ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில்
இவர்கள் இருவரும் 1800ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம்
தேதியன்று தூக்கிலிடப்பட்டனர்.
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர். கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர்
கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும்
நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில்
அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது.
அதனால் இவர்வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு
படைத்தவர்.
ஆங்கிலேய
அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன்.
சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன்.
இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும்
போராட்டம் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
நடைபெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார்.
இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த
அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன்
முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
மருத நாயகம் என்னும் கான் சாகிபு
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக
இருந்து, பிறகு
அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர்
சுபேதார், முஹம்மது
யூசுப், கும்மந்தான், கம்மந்தான்
சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில்
ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு
சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத்
துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக்
கொன்றனர். இவரது உடலும் தலையும் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்டது. அவரது தலை
அடக்கம் செய்யப்பட்ட இடம்மதுரை அருகே சம்மட்டி புரத்தில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக