வியாழன், 30 நவம்பர், 2023

மண்ணுக்கும் மனிதனுக்கும் தொடர்பு

 மண்ணுக்கும் மனி மண்ணுக்கும் மனிதனுக்கும் தொடர்புதனுக்கும் தொடர்பு

முன்னுரை 

மண்ணின் சிறப்புத் தன்மைகள் மனிதனிடம் வர வேண்டும்

                                                                                                                                                     :பயான் தர்தீப்

மண்ணில் நான்கு சிறப்புத் தன்மைகள் உண்டு அந்த நான்கு சிறப்புத் தன்மைகள் மனிதனிடம் வர வேண்டும்

1.மறைக்கக் கூடிய தன்மை

2.உள்வாங்கும் தன்மை

3. பிரதி பலிக்கும் தன்மை

4. பணிவு

 விரிவாக ...

1. மறைக்கக் கூடிய தன்மை

ஒரு சடலத்தை அல்லது ஏதேனும் ஒன்றை புதைத்தால் அதை மறைத்துக் கொள்கிறது

அதேபோல மனிதன்  மற்றவர்களின் குறைகளை அவசியம் இன்றி வெளிப்படுத்துவது கூடாது

குறை இருந்தால் கூட அவசியம் இன்றி வெளிப்படுத்த வேண்டாம் என்றிருக்க  இல்லாத குறையைக் கூறி ஒரு முஃமினைக் கேவலப் படுத்துவது பெரும் பாவம்

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய சம்பவம்

சஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம்

இரண்டாவது தன்மை உறிஞ்சும் தன்மை அதாவது உள்வாங்கிக் கொள்ளும் தன்மை

மண்ணிடம் இருப்பது போல் பிறர் அறிவுரை கூறினால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வர வேண்டும்

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம்

ஹாரூன் ரஷீத் மன்னரின் சம்பவம்

மார்க்க சட்டம் அறிந்தும் கூட அதை செயல்படுத்தாதவருக்கு  அதாவது அதை உள் வாங்கிக் கொள்ளாதவருக்கு ஏற்பட்ட கதி

உள்ளம் முத்திரை இடப் பட்டு விட்டால் எந்த அறிவுரையையும் ஏற்க மனம் வராது

 மூன்றாவது தன்மை

பிரதி பலிக்கும் தன்மை

மண்ணில் ஒரு விதையை ஊன்றினால் அதை செடியாக  மரமாக வெளிப்படுத்தும்

அதேபோல மனிதன் தாம் உள் வாங்கும் நல்ல செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி வெளிப் படுத்த வேண்டும் 

 நான்காவது தன்மை பணிவு

மண் எப்போதும் தாழ்ந்தே இருக்கும் அதனால் அதன் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தினான் 

இறை நேசரின் சம்பவம்

 மண்ணுக்கும் மனிதனுக்கும் தொடர்பு

مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى (55) طه

மண்ணுக்கும் மனிதனுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இனம் இனத்தோடு தான் சேரும் என்பார்கள்.

كُلُّ شَيْئِ يَرْجِعُ الي أَصله

 ஒவ்வொரு பொருட்களும் அதனுடைய அசலின் பக்கம் தான் செல்லும் என்று அரபியில் பழமொழி இதனால் மனிதன் இறந்தாலும் மண்ணுக்குள் அடக்கம் செய்யப் படுகிறான். அந்த மண்ணும் அவனை உள் வாங்கிக் கொள்கிறது. அல்லாஹ் மனிதனை மண்ணால் படைத்ததன் நோக்கம் நான்கு என்றும் மண்ணிடம் உள்ள அந்த நான்கு தன்மைகளும் மனிதனிடம் வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளன.                                                      

1. மறைக்கக் கூடிய தன்மை.

மண்ணிலே எதைப் போட்டு மறைத்தாலும் மறைந்து விடும். ஒரு சடலத்தைப் போட்டு மறைத்தாலும் மறைந்து விடும். அதுபோல மறைக்க வேண்டிய விஷயங்களை மறைக்க க் கூடிய தன்மை மனிதனிடம் வர வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் மக்கள் தனக்குப் பிடிக்காத நபரிடம் சிறிய குறை தென்பட்டாலும் அதை வெளிப்படுத்தி அவர்களைக் கேவலப் படுத்த நினைக்கிறார்கள். தனக்குப் பிடிக்காத நபரிடம் நல்ல தன்மை இருந்தாலும் அதை தவறாக மாற்றி பிறரிடம் சொல்கிறார்கள்.

ஒரு அடியானின் குறையை வெளிப்படுத்தி கேவலப் படுத்தக் கூடாது என்பது அல்லாஹ்வின் தன்மை. அந்த தன்மை மனிதனிடமும் வர வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

 قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ... يَدْنُو أَحَدُكُمْ مِنْ رَبِّهِ حَتَّى يَضَعَ كَنَفَهُ عَلَيْهِ فَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ وَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ فَيُقَرِّرُهُ ثُمَّ يَقُولُ إِنِّي سَتَرْتُ عَلَيْكَ فِي الدُّنْيَا فَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ (بخاري)

உங்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருங்குவார். அல்லாஹ் திரையை ஏற்படுத்தி மற்ற மக்களின் பார்வையை மட்டும் அவரை மறைத்து விடுவான். அந்த அடியானிடம் நீ இன்னின்ன பாவம் செய்தாயா என்ற கேள்விகள் தோடரும். அந்த அடியான் யாருகுக்கும் தெரியாமல் அதைச்செய்திருப்பான். கடைசியில் அல்லாஹ் கூறுவான். உலகிலும் நீ செய்த பாவத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்தேன். இப்போதும் நான் உன்னை மன்னித்து விட்டேன் என்று கூறுவான்.                              

படிப்பினை- அல்லாஹ் தன்னுடைய சில தன்மைகளை மனிதனிடம் எதிர் பார்க்கிறான். அதில் இதுவும் ஒன்றாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَسْتُرُ اللَّهُ عَلَى عَبْدٍ فِي الدُّنْيَا إِلَّا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ (مسلم)

எவர் பிறரின் குறையை மறைப்பாரோ அவரின் குறையை மறுமை நாளில் அல்லாஹ் மறைப்பான்.

ஒரு முஃமினிடம் இருக்கிற குறையைக் கூட அவசியமின்றி அதை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என மார்க்கம் சொல்லும்போது முஃமினைப் பற்றி இல்லாத குறையைப் பரப்புவது மாபெரும் பாவமாகும்.

சஃது ரழி அவர்களைப் பற்றி இல்லாத அவதூறைப் பரப்பியவருக்கு ஏற்பட்ட கதி

جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ شَكَا أَهْلُ الْكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَعَزَلَهُ وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّارًا فَشَكَوْا حَتَّى ذَكَرُوا أَنَّهُ لَا يُحْسِنُ يُصَلِّي فَأَرْسَلَ إِلَيْهِ فَقَالَ يَا أَبَا إِسْحَاقَ إِنَّ هَؤُلَاءِ يَزْعُمُونَ أَنَّكَ لَا تُحْسِنُ تُصَلِّي قَالَ أَبُو إِسْحَاقَ أَمَّا أَنَا وَاللَّهِ فَإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَخْرِمُ عَنْهَا أُصَلِّي صَلَاةَ الْعِشَاءِ فَأَرْكُدُ فِي الْأُولَيَيْنِ وَأُخِفُّ فِي الْأُخْرَيَيْنِ قَالَ ذَاكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْحَاقَ فَأَرْسَلَ مَعَهُ رَجُلًا أَوْ رِجَالًا إِلَى الْكُوفَةِ فَسَأَلَ عَنْهُ أَهْلَ الْكُوفَةِ وَلَمْ يَدَعْ مَسْجِدًا إِلَّا سَأَلَ عَنْهُ وَيُثْنُونَ مَعْرُوفًا حَتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ أُسَامَةُ بْنُ قَتَادَةَ يُكْنَى أَبَا سَعْدَةَ قَالَ أَمَّا إِذْ نَشَدْتَنَا فَإِنَّ سَعْدًا كَانَ لَا يَسِيرُ بِالسَّرِيَّةِ وَلَا يَقْسِمُ بِالسَّوِيَّةِ وَلَا يَعْدِلُ فِي الْقَضِيَّةِ قَالَ سَعْدٌ أَمَا وَاللَّهِ لَأَدْعُوَنَّ بِثَلَاثٍ اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا قَامَ رِيَاءً وَسُمْعَةً فَأَطِلْ عُمْرَهُ وَأَطِلْ فَقْرَهُ وَعَرِّضْهُ بِالْفِتَنِ وَكَانَ بَعْدُ إِذَا سُئِلَ يَقُولُ شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ قَالَ عَبْدُ الْمَلِكِ فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَى عَيْنَيْهِ مِنْ الْكِبَرِ وَإِنَّهُ لَيَتَعَرَّضُ لِلْجَوَارِي فِي الطُّرُقِ يَغْمِزُهُنَّ (بخاري) باب وُجُوبِ الْقِرَاءَةِ لِلإِمَامِ وَالْمَأْمُومِ فِى الصَّلَوَاتِ كُلِّهَا –كتاب الأذان

  இச்சம்பவம் சஃது ரழி அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கராமத் என்ற வகையில் உள்ளதாகும். சஃது ரழி அவர்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நபர்களில் ஒருவராகவும், மேலும் நபி ஸல் அவர்களால் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டவராகவும் இருந்தார்கள் அவரை கூஃபாவின் அதிகாரியாக உமர் ரழி நியமித்திருந்தார்கள் இந்த நிலையில் தான் சஃது ரழி அவர்களின் மீது கூஃபாவாசிகளில் ஒரு சிலர் மேற்கானும் புகாரை கூறினார்கள் உடனே உமர் ரழி அவர்கள் சஃது ரழி அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து அபூ இஸ்ஹாக் நீங்கள் முறையாக தொழ வைப்பதில்லை என்று கூறுகிறார்களே அது உண்மையா என்று கேட்டார்கள் அதற்கு சஃது ரழி அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி ஸல் அவர்கள் தொழுது காட்டிய முறையில் தான் நான் அவர்களுக்கு தொழ வைத்தேன் அதை விட நான் குறைத்து விடவில்லை நான் இஷா தொழ வைக்கும்போது முதல் இரண்டு ரக்அத்துகளில் நீளமாக ஓதியும் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் சுருக்கமாக ஓதியும் தொழ வைக்கிறேன் என்று பதிலளித்தார்கள் அதற்கு உமர் அவர்கள் அபூ இஸ்ஹாக் ! உங்களைப் பற்றி நமது எண்ணமும் அதுவே என்று கூறினார்கள். இருப்பினும் உமர் ரழி அவர்கள் சிலரை சஃது ரழி அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பி இது தொடர்பாக விசாரிக்கச் சொன்னார்கள் விசாரிக்கச் சென்றவர்கள் கூஃபாவாசிகளிடம் விசாரணை மேற்கொண்டார் கூஃபாவில் ஒரு பள்ளிவாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் விசாரித்தார்அனைவரும் சஃது ரழி அவர்களைப் பற்றி நல்ல விதமாகவே கூறினர். இறுதியில் கைஸ் குலத்தின் ஒரு பிரிவான பனூ அப்ஸ் குலத்தாரிடம் விசாரித்த போது அபூசஅதா என்ற உஸாமா இப்னு கதாதா எழுந்து நின்று நான் என் கருத்தைக் கூறுகிறேன் சஃது அவர்கள் தாம் அனுப்பும் படைப்பிரிவுடன் செல்ல மாட்டார் சமமாக பங்கிட மாட்டார் தீர்ப்பு அளிக்கும்போது நீதியுடன் நடக்க மாட்டார் என்று குறை கூறினார். இதைக் கேட்ட ஸஃது ரழி அவர்கள் அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக மூன்று துஆக்களை நான் செய்யப் போகிறேன் யாஅல்லாஹ் உன்னுடயை இந்த அடியார் என்னைப் பற்றிப் பொய் செல்லியிருந்தால், பகட்டுக்காகவும், பெருமைக்காகவும் அவர் இவ்வாறு என்னை குறை கூறியிருந்தால் அவரது வாழ்நாளை நீட்டி அவரைத் தள்ளாமையில் வாட்டி விடுவாயாக அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக என்று துஆ செய்தார் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார். பிற்காலத்தில் சஃது ரழி அவர்களின் மீது பொய் குற்றச்சாட்டுகளைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார். அவரிடம் நலம் விசாரிக்கப்பட்டால் நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன் சஅத் ரழி அவர்களின் துஆ எனக்கு பலித்து விட்டது என்று கூறுவார் அப்துல் மலிக் அவர்கள் கூறுகிறார்கள் பின்னாளில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன் முதுமையினால் அவருடைய புருவங்கள் அவருடைய கண்கள் மீது விழுந்து விட்டிருந்தன. இந்நிலையிலும் அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களை கிள்ளி அவர்களை துன்புறுத்துவார். அதற்காக பழிக்கப்படுவார்.   

  நூல் புகாரீ 755         

மேற்கானும் சஃது அவர்களின் சம்பவத்திலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்

1.மக்களின் தலைவர்களாக இருப்போருக்கு இதுபோல் சோதனைகள் இருக்கும்.அதை சகித்துக் கொள்ள வேண்டும்

2.அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு அநீதி இழைக்கப்படும்போது அல்லாஹ்விடம் தனக்கு அநீதி இழைத்தவருக்கு எதிராக துஆச் செய்யலாம். 3.அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவை அல்லாஹ் உடனே ஏற்றுக் கொள்வான்.    

ஆயிஷா ரழி அவர்களைப் பற்றி அவதூறு பரப்பியவர்களையும் அல்லாஹ் கண்டித்தான்.

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (19)النور

عن عَائِشَةُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ أَزْوَاجِهِ فَأَيُّهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُ قَالَتْ عَائِشَةُ فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزْوَةٍ غَزَاهَا فَخَرَجَ فِيهَا سَهْمِي فَخَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ مَا أُنْزِلَ الْحِجَابُ فَكُنْتُ أُحْمَلُ فِي هَوْدَجِي وَأُنْزَلُ فِيهِ فَسِرْنَا حَتَّى إِذَا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَتِهِ تِلْكَ وَقَفَلَ دَنَوْنَا مِنْ الْمَدِينَةِ قَافِلِينَ آذَنَ لَيْلَةً بِالرَّحِيلِ فَقُمْتُ حِينَ آذَنُوا بِالرَّحِيلِ فَمَشَيْتُ حَتَّى جَاوَزْتُ الْجَيْشَ فَلَمَّا قَضَيْتُ شَأْنِي أَقْبَلْتُ إِلَى رَحْلِي فَلَمَسْتُ صَدْرِي فَإِذَا عِقْدٌ لِي مِنْ جَزْعِ ظَفَارِ قَدْ انْقَطَعَ فَرَجَعْتُ فَالْتَمَسْتُ عِقْدِي فَحَبَسَنِي ابْتِغَاؤُهُ قَالَتْ وَأَقْبَلَ الرَّهْطُ الَّذِينَ كَانُوا يُرَحِّلُونِي فَاحْتَمَلُوا هَوْدَجِي فَرَحَلُوهُ عَلَى بَعِيرِي الَّذِي كُنْتُ أَرْكَبُ عَلَيْهِ وَهُمْ يَحْسِبُونَ أَنِّي فِيهِ وَكَانَ النِّسَاءُ إِذْ ذَاكَ خِفَافًا لَمْ يَهْبُلْنَ وَلَمْ يَغْشَهُنَّ اللَّحْمُ إِنَّمَا يَأْكُلْنَ الْعُلْقَةَ مِنْ الطَّعَامِ فَلَمْ يَسْتَنْكِرْ الْقَوْمُ خِفَّةَ الْهَوْدَجِ حِينَ رَفَعُوهُ وَحَمَلُوهُ وَكُنْتُ جَارِيَةً حَدِيثَةَ السِّنِّ فَبَعَثُوا الْجَمَلَ فَسَارُوا وَوَجَدْتُ عِقْدِي بَعْدَ مَا اسْتَمَرَّ الْجَيْشُ فَجِئْتُ مَنَازِلَهُمْ وَلَيْسَ بِهَا مِنْهُمْ دَاعٍ وَلَا مُجِيبٌ فَتَيَمَّمْتُ مَنْزِلِي الَّذِي كُنْتُ بِهِ وَظَنَنْتُ أَنَّهُمْ سَيَفْقِدُونِي فَيَرْجِعُونَ إِلَيَّ فَبَيْنَا أَنَا جَالِسَةٌ فِي مَنْزِلِي غَلَبَتْنِي عَيْنِي فَنِمْتُ وَكَانَ صَفْوَانُ بْنُ الْمُعَطَّلِ السُّلَمِيُّ ثُمَّ الذَّكْوَانِيُّ مِنْ وَرَاءِ الْجَيْشِ فَأَصْبَحَ عِنْدَ مَنْزِلِي فَرَأَى سَوَادَ إِنْسَانٍ نَائِمٍ فَعَرَفَنِي حِينَ رَآنِي وَكَانَ رَآنِي قَبْلَ الْحِجَابِ فَاسْتَيْقَظْتُ بِاسْتِرْجَاعِهِ حِينَ عَرَفَنِي فَخَمَّرْتُ وَجْهِي بِجِلْبَابِي وَ وَاللَّهِ مَا تَكَلَّمْنَا بِكَلِمَةٍ وَلَا سَمِعْتُ مِنْهُ كَلِمَةً غَيْرَ اسْتِرْجَاعِهِ وَهَوَى حَتَّى أَنَاخَ رَاحِلَتَهُ فَوَطِئَ عَلَى يَدِهَا فَقُمْتُ إِلَيْهَا فَرَكِبْتُهَا فَانْطَلَقَ يَقُودُ بِي الرَّاحِلَةَ حَتَّى أَتَيْنَا الْجَيْشَ مُوغِرِينَ فِي نَحْرِ الظَّهِيرَةِ وَهُمْ نُزُولٌ قَالَتْ فَهَلَكَ مَنْ هَلَكَ وَكَانَ الَّذِي تَوَلَّى كِبْرَ الْإِفْكِ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ (بخاري) حَدِيثُ الإِفْكِ-المغازي

  2.மண்ணின் இரண்டாவது தன்மை. உறிஞ்சக் கூடிய தன்மை.

மண்ணின் மீது நீரை ஊற்றினால் அதை உறிஞ்சக் கூடிய தன்மை அதாவது அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மண்ணிடம் உள்ளது. அதேபோல் ஒரு முஃமின் மற்றவர் ஏதேனும் அறிவுரை கூறும்போது அந்த அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் வர வேண்டும். பல பேருக்கு அறிவுரைகள் சொன்னால் பிடிக்காது. வேறு சிலர் அதைக் கேட்டாலும் அதை உள்வாங்குவதில்லை.            

மற்றவர்கள் தனக்கு அறிவுரை கூறுவதை மிகவும் விரும்பிய சஹாபாக்கள்

وقد كان السلف يطلب هذا بعضهم من بعض . قال أبو بكر رضي الله عنه حين خطب : إن أحسنت فأعينوني ، وإن زغت فقوموني . وروي أن رجلا قال لعمر : اتق الله يا عمر ، فأنكر عليه بعضهم ، فقال عمر : دعه ، فما نزال بخير ما قيل لنا هذا . (تفسير القران للسمعاني)

நமது முன்னோர்களில் ஒருவரை மற்றவரைக் கண்டால் தனக்கு ஏதேனும் உபதேசம் செய்யும்படிக் கேட்டுக் கொள்வார்கள். அபூபக்கர் ரழி அவர்கள் (ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன்) மக்களுக்கு உரையாற்றிய போது நான் நல்லபடியாக நடந்து கொண்டால் எனக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குங்கள். நான் ஏதேனும் தவறு செய்வதைக் கண்டால் என்னை உடனே அப்புறப்படுத்தி விடுங்கள் என்றார்கள்.

கலீஃபா உமர் ரழி அவர்களை நோக்கி ஒருவர் உமரே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றார். அதைக் கேட்ட மக்கள் அமீருல் முஃமினீன் அவர்களைப் பார்த்து இந்த வார்த்தையைக் கூறுகிறாரே என மனதில் அதை வெறுத்தார்கள். ஆனால் உமர் ரழி அவர்கள் அதை வரவேற்றார்கள். மேலும் உமர் ரழி கூறினார்கள். அவரை விடுங்கள். இவ்வாறு அறிவுரைகள் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை தான் நாங்கள் நலமோடு இருக்க முடியும் என்றார்கள்.

يروى أن رجلا قال لعمر بن الخطاب أَمْثَل الحُكّام : اتق الله ، فقال بعض الحاضرين أو تقول لأمير المؤمنين : (اتق الله) فالتفت الفاروق ، وقال : ألا فليقلها ، لا خير فيكم إذا لم تقولوها ، ولا خير فينا إذا لم نسمعها! وعمر هذا هو الذى صاح عندما تولى : من رأى منكم فى اعوجاجا فليقومه فقال أعرابى : والله لو رأينا فيك اعوجاجا لقومناه بسيوفنا! فقال أبو حفص : الحمد لله الذى جعل فى أمة محمد من يقوم عمر إذا اعوج!   : (زهرة التفاسير)

மற்றொரு அறிவிப்பில்  நீதிமான்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னுதாரணமான உமர் ரழி அவர்களை நோக்கி ஒருவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றார். அதைக் கேட்ட மக்களில் ஒருவர் அமீருல் முஃமினீன் அவர்களைப் பார்த்து இந்த வார்த்தையைக் கூறுகிறாரே என்றார். அதற்கு உமர் ரழி இந்த வார்த்தையை நாம் பிறரை நோக்கி சொல்லா விட்டாலோ அல்லது நமக்கு யாரேனும் இதைச் சொல்லி நாம் அதை செவி மடுக்கா விட்டாலோ நம்மிடம் எவ்வித நன்மையும் இல்லை என்றார்கள்.

இதற்கு மாற்றமாக சிலர் தனக்கு அறிவுரை சொல்லப்பட்டால்

அதை கண்ணியக் குறைவாக கருதுவர். அவர் செல்லுமிடம் நரகம் ஆகும்.

وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ (206)البقرة
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என அவனிடம் கூறப்பட்டால்

பாவம் கலந்த கவுரவம் அவனை ஆட்கொண்டு விடும்.   

أن يهوديا قال  عند  هارون الرشيد ، وهو خارج ، وقال له : اتق الله يا أمير المؤمنين وذكر حاجته ، فنزل هارون عن دابته وخر ساجدا ، ثم أمر فقضيت لليهودى حاجنه ؟ فقيل له : يا أمير المؤمنين نزلت عن دابتك لقول يهودى! قال : لا ، ولكن تذكرت قول الله تعالى : (وإذا قيل لة اتق الله أخذته العزة بالإثم فحسبة جهنم ولبئس المهاد(زهرة التفاسير) 

  மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களிடம் யஹூதி ஒருவர் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று அதட்டலாகக் கூறி, தனது தேவையை முறையிட்டார். அதைக் கேட்டவுடன் தன் வாகனத்தை விட்டும் கீழே இறங்கிய மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் அல்லாஹ்வுக்கு சஜ்தா செய்தார்கள். உடனே அவர்களிடம் ஒரு யூதர் சொன்னார் என்பதற்காக கீழே இறங்கி அல்லாஹ்வுக்கு சஜ்தா செய்கிறீர்களே என்று கேட்க அதற்கு மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் எனக்கு அல்லாஹ்வின் வசனம் நினைவுக்கு வந்தது. அதனால் தான் சஜ்தா செய்து என் பணிவை வெளிப்படுத்தினேன் என்றார்கள்.                              

இல்மைக்கற்று அதன்படி அமல் செய்வதும் உள்வாங்குதல் என்ற தன்மையில் கட்டுப்பட்டது

மண்ணிடம் எப்படி உள்வாங்கும் தன்மை உள்ளதோ அதுபோன்று இல்மைக் கற்று அதை உள்வாங்கவும் வேண்டும். அதாவது அமல் செய்யவும் வேண்டும். அமல் இல்லாத இல்மை இல்ம் என்று கூறப்படாது. அது வெறும் தகவல் மட்டும் தான். எத்தனையோ பேரிடம் தகவல் மட்டுமே உள்ளது.

وَلَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا لَأَسْمَعَهُمْ (23) الانفال

அல்லாஹ் அவர்களிடம் நல்லதை நாடி விட்டால் நல்ல விஷயங்களைக் கேட்க வைப்பான்.

சிலரின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டு விடுவான்.உள்வாங்கும் தன்மை அவர்களிடம் அறவே இருக்காது

خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (7) البقرة

தொடர் பாவங்களால் உள்ளம் முத்திரையிடப்படுவதை அல்லாஹ் குர்ஆனில் பல உவமைகளுடன் விபரிக்கிறான்

خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ (7) البقرة - أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ (108)النحل - وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا (125)الانعام - كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ (14)المطففين

1.முத்திரையிடுதல்- சீல் வைத்து விட்டால் வெளியில் இருந்து எதுவும் உள்ளே போகாது. எத்தனை உபதேசங்கள் கேட்டாலும் பலன் இருக்காது 2. அச்சுப்பதித்தல்-print  செய்யப்பட்டால் நீக்க முடியாது குறிப்பாக நாணயங்களில் print  செய்யப்பட்டு விட்டால் நீக்க முடியாது 3.இறுகிய உள்ளமாக ஆக்கி விடுதல் 4. துருப்பிடித்து விடுதல்  

மார்க்கத்தை அறிந்தும் அதை உள் வாங்காததால் செயல் படுத்தாததால் ஏற்பட்ட விளைவு

وقال ابن حجر يحتمل أن يكون على حقيقته فيكون ذلك مسخا خاصا والممتنع المسخ العام كما صرحت به الأحاديث الصحاح وأن يكون مجازا عن البلادة ويؤيد الأول ما حكي عن بعض المحدثين أنه رحل إلى دمشق لأخذ الحديث عن شيخ مشهور بها فقرأ عليه جملة لكنه كان يجعل بينه وبينه حجابا ولم ير وجهه فلما طالت ملازمته له ورأى حرصه على الحديث كشف له الستر فرأى وجهه وجه حمار فقال له اِحْذَرْ يا بُني أن تسبق الإمام فإني لما مَرَّ بي في الحديث استبعدتُ وقوعَه فسبقتُ الإمام فصار وجهي كما ترى (مرقاة شرح مشكاة) شرح ابن ماجة للسيوطي- تحفة الاحوذي

சிரியாவில் பிரபலமான ஆசிரியர் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரிடம் ஹதீஸ் படிக்க  ஒரு மாணவர் சென்றார். அந்த ஆசிரியர் சிலவற்றை இவருக்கு கற்றுத் தந்தாலும் தன் முகத்தை காட்டாமலேயே திரைக்குப் பின்னால் இருந்து பாடம் நடத்தினார். ஒரு கட்டத்தில் இந்த மாணவரின் ஆர்வத்தைக் கண்ட  ஆசிரியர் தன்னையும் மறந்து திரையை அவரே விலக்க, அங்கே கண்ட காட்சி மாணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருடைய உடம்பெல்லாம் மனித உடலாகவும், தலை மட்டும் கழுதையின் தலையாகவும் இருந்தது. பின்பு அந்த ஆசிரியர் சோகத்துடன் அதற்கான காரணத்தைக் கூறினார். மகனே தொழுகையில் இமாமை ஒரு போதும் நீ முந்துபவனாக ஆகி விடாதே ஏனெனில் அவ்வாறு முந்துபவர்களின்  தலை கழுதையில் தலையாக மாற்றப்படக் கூடும் என்ற  ஹதீஸை நான் பலமுறை படித்தேன் அப்படியிருந்தும் அதை நான் நம்பாமல்  தொழுகையில் இமாமை முந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதனால் அல்லாஹ் என்னை இப்படி ஆக்கி விட்டான். என்று அழுதபடி கூறினார்

  3. மண்ணின் மூன்றாவது தன்மை. பிரதி பலிக்கக் கூடிய தன்மை.

மண்ணிலே எந்த ஒரு விதையை விதைத்தாலும் அது ஒரு மரமாகவோ அல்லது செடியாகவோ வருகிறது அதுபோல் மனிதனுக்குள்ளேயும் ஒரு தன்மை இருக்க வேண்டும். எந்த ஒரு நல்ல விஷயத்தை அவன் கேட்டாலும் அதை முடிந்த வரை பிறருக்குச் சொல்ல வேண்டும்.         

 நபி ஸல் அவர்களோடு ஹஜ்ஜதுல் விதாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நபித்தோழர்கள் கலந்து கொண்டனர். அதன்படி பார்த்தால் மதீனாவில் நபி ஸல் அவர்களின் கப்ரு இருப்பதைப் போலவே சுமார் இரு இலட்சம் நபித்தோழர்களின் கப்ருகள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று மதீனாவில் உள்ள பகீஃ கப்ருஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது சுமார் 14 ஆயிரம் நபித்தோழர்கள் தான். அப்படியானால் மீதமுள்ள நபித்தோழர்களின் கப்ருகள் எங்கே என்ற கேள்விக்கான பதில் பின்வருமாறு-

 நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நபித்தோழர்கள் மத்தியில் உருக்கமான உரை நிகழ்த்தி விட்டு இங்கே இருப்பவர்கள் இங்கே இல்லாதவர்களுக்கு செய்தியை எத்தி வைத்து விடுங்கள் என்றார்கள். அங்கிருந்து அப்படியே புறப்பட்டுச் சென்ற ஹஜ்ஜதுல் விதாவில் அதிகமான நபித்தோழர்கள் பல நாடுகளுக்கும் சென்று இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அங்கேயே தன் வாழ்நாளைக் கழித்து அங்கேயே மரணமடைந்தனர். இதனால் தான் உலகம் முழுவதும் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே சில சஹாபிகள் கப்ரு இருக்கும். சீனாவிலும் நபித்தோழர்களின் கப்ருகள் உள்ளன.                                          

4. மண்ணின் நான்காவது தன்மை. பணிவு.

மண் எப்போதும் தாழ்ந்தே இருக்கிறது. அதனால் அதன் அந்தஸ்தை அல்லாஹ் எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் ஆக்கியுள்ளான். சுத்தம் செய்வதற்கு தண்ணீர் இல்லாத போது இந்த மண் ஒரு முஃமினை சுத்தம் செய்யும் கருவியாகவும் ஒரு முஃமினின் தொழுகையை ஆகுமாக்கி வைக்கக் கூடியதாக ஆக்கப்பட்டுள்ளது

 عن أبى ذر عن النبي صلى الله عليه و سلم قال : إن الصعيد الطيب وضوء المسلم ولو الى عشر حجج  (دار قطني

ஒருவருக்கு பத்து வருடங்கள் தண்ணீர் கிடைக்கா விட்டாலும் சுத்தமான மண் அவரின் உளூவாகும்

உள்ளம் சீராகுவதற்கு பணிவு அவசியம் என்பதற்கு உதாரணமான ஒரு சம்பவம்

இறை நேசரிடம் மாணவராக இருந்த   ஒருவர் சுமார் 12 வருடங்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டார் அப்போது அவர் ஷைகு அவர்களிடம் பயணம் கூறும்போது நான் இத்தனை வருடங்களாக என் மனதில் வைத்துள்ள ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இத்தனை வருடத்தில் நான் உங்களிடம் எந்த கராமத்தையும் நான் கண்டதில்லையே என்று கூற ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதாவது ஒரு நேரம் இமாம் ஜமாஅத்தை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள் இல்லை என்று இவர் பதில் கூறினார் மீண்டும் ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதேனும் ஒரு நேரம் தக்பீர் தஹ்ரீமாவை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்க இல்லை என்று இவர் பதில் கூறினார் அதற்கு ஷைகு அவர்கள் இதை விட என்ன அற்புதம் உமக்கு வேண்டும் என்றார்கள்... உடனே அந்த சீடர் ஷைகு அவர்களை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தியவராக  உங்களுடைய நிலையை நானும் அடைய வேண்டும் நான் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்ப உங்களிடம் எப்போது வரட்டும் என்று கேட்டார் அதற்கு ஷைகு அவர்கள் "நான்" இறந்த பிறகு வா என்றார்கள் உடனே அந்த சீடர் ஷைகு அவர்களே நீங்கள் இறந்த பின்பு வருவதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நான் இறந்த பிறகு என்று என்னுடைய மவ்த்தை நான் குறிப்பிடவில்லை மாறாக "நான்" என்ற அகம்பாவம் எப்போது உன் உள்ளத்தில் அழியுமோ, இறந்து விடுமோ அப்போது என்னிடம் வா என்ற பொருளில் தான் நான் கூறினேன் என்றார்கள்

01-12-2023

بسم الله الرحمن الرحيم 

 மண்ணுக்கும் மனிதனுக்கும் தொடர்பு

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

v

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...