ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

யாசீன் சூராவின் சிறப்பு

 18-ம்  தராவீஹ்  பயான் 

عَنْ أَنَس رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ لِكُلِّ شَيْء قَلْبًا وَقَلْب الْقُرْآن يس وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّه لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَة الْقُرْآن عَشْر مَرَّات (تفسير ابن كثير ") ترمذي

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனின் இதயம் (சூரா) யாஸீனாகும். எவர் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான். நூல்கள் : திர்மிதீ (2812), தாரமி (3282)

 عَنْ مَعْقِل بْن يَسَار رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : إِنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الْبَقَرَة سَنَام الْقُرْآن وَذِرْوَته نَزَلَ مَعَ كُلّ آيَة مِنْهَا ثَمَانُونَ مَلَكًا وَاسْتُخْرِجَتْ " اللَّه لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ الْقَيُّوم " مِنْ تَحْت الْعَرْش فَوُصِلَتْ بِهَا - أَوْ فَوُصِلَتْ بِسُورَةِ الْبَقَرَة - وَيس قَلْب الْقُرْآن لَا يَقْرَؤُهَا رَجُل يُرِيد اللَّه تَعَالَى وَالدَّار الْآخِرَة إِلَّا غُفِرَ لَهُ وَاقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ " وَكَذَا رَوَاهُ النَّسَائِيّ

சூரா பகரா குர்ஆனுடைய திமிலாகும். மேலும் குர்ஆனின் உயர்வானதுமாகும். சூரா பகராவின் ஒவ்வொரு ஆயத்துடன் எண்பது மலக்குகள் இறங்கிறார்கள். இன்னும் அல்லாஹு லாயிலாஹு இல்லாஹுவ அல் ஹய்யுல் கையூம் என்ற வசனம் அர்ஷின்கீழ் இருந்து எடுக்கப்பட்டு பகரா சூராவுடன் இணைக்கப் பட்டுள்ளது. யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும். எவர் இறைப் பொருத்தத்தை நாடி அதை ஓதுகிறாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் (எனவே) உங்களில் மரண நெருக்கத்தில் உள்ளவருக்கு அதை ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அஹ்மத் (19415)

عن أم الدرداء عن النبي صلى الله عليه وسلم قال: "ما من ميت يقرأ عليه سورة يس إلا هون الله عليه (قرطبي

மரண நெருக்கத்தில் உள்ளவரிடம் இதை ஓதினால் அவரின் சகராத் வேதனை இலகுவாக்கப்படும்.

யாசீன் சூராவின் நாயகர் ஹபீபுன் நஜ்ஜார் (ரழி)

  கல்புல் குர்ஆன் (குர்ஆனின் இதயமாக) விளங்கும் சூரா யாசீனுக்குரியவர் என்ற சிறப்பை ஹபீபுன் நஜ்ஜார் (ரழி) அவர்கள் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் அன்தாகியா என்ற ஊரைச் சார்ந்தவர்கள்.

அன்தாகியா நகரம் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்ட நகரம் ஆகும். கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகாஅலெக்சாண்டரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அன்தாகியாவை நிறுவினார். ஹபீபுன் நஜ்ஜார் (ரழி) அவர்கள் அன்தாகியா நகரம் அழிக்கப்படும் முன்பு  இந்நகரில் கடைக்கோடியில் வாழ்ந்து வந்தார்கள். இந்நகரத்தில் இவர்கள் வாழும் காலத்தில் அந்தீகஸ் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.இவர்முதலில் கொடுங்கோல் மன்னராகவும் சிலையை வணங்குபவராகவும் இருந்தார். 

هذه القرية هي أنطاكية وكان بها فرعون يقال له أنطيخس بن أنطيخس يعبد الأصنام؛(قرطبي

அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள்:-

 

இந்த மன்னரின் ஆட்சியில் அல்லாஹ் மூன்று நபிமார்களை அந்த மக்களுக்கு அனுப்பினான். இம்மூவரும் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மூலமாக அனுப்பப்பட்டனர். ஆனால் அந்த மக்கள் அல்லாஹ் அனுப்பிய நபிமார்களை பொய்யாக்கினார்கள்!

 

இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

وَٱضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَٰبَ ٱلْقَرْيَةِ إِذْ جَآءَهَا ٱلْمُرْسَلُونَ

إِذْ أَرْسَلْنَآ إِلَيْهِمُ ٱثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوٓا۟ إِنَّآ إِلَيْكُم مُّرْسَلُونَ

 நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு அவ்விருவரையும் நாம் வலுப்படுத்தினோம்.ஆகவே நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்" என்று அவர்கள் கூறினார்கள்.

 

குர்துபீ என்ற தஃப்ஸீரில் கூறப்பட்ட விரிவுரை

   وفي القصة: أن عيسى أرسل إليهم رسولين فلقيا شيخا يرعى غنيمات له وهو حبيب النجار صاحب {يس} فدعوه إلى الله وقالا: نحن رسولا عيسى ندعوك إلى عبادة الله. فطالبهما بالمعجزة فقالا: نحن نشفي المرضى وكان له ابن مجنون. وقيل: مريض على الفراش فمسحاه، فقام بإذن الله صحيحا؛ فآمن الرجل بالله. وقيل: هو الذي جاء من أقصى المدينة يسعى، ففشا أمرهما، وشفيا كثيرا من المرضى، فأرسل الملك إليهما - وكان يعبد الأصنام - يستخبرهما فقالا: نحن رسولا عيسى. فقال: وما آيتكما؟ قالا: نبرئ الأكمه والأبرص ونبرئ المريض بإذن الله، وندعوك إلى عبادة الله وحده. فهم الملك بضربهما. وقال وهب: حبسهما الملك وجلدهما مائة جلدة؛ فانتهى الخبر إلى عيسى فأرسل ثالثا. قيل: شمعون الصفا رأس الحواريين لنصرهما، فعاشر حاشية الملك حتى تمكن منهم، واستأنسوا به، ورفعوا حديثه إلى الملك فأنس به، وأظهر موافقته في دينه، فرضي الملك طريقته، ثم قال يوما للملك: بلغني أنك حبست رجلين دعواك إلى الله، فلو سألت عنهما ما وراءهما. فقال: إن الغضب حال بيني وبين سؤالهما. قال: فلو أحضرتهما. فأمر بذلك؛ فقال لهما شمعون: ما برهانكما على ما تدعيان؟ فقالا: نبرئ الأكمه والأبرص. فجيء بغلام ممسوح العينين؛ موضع عينيه كالجبهة، فدعوا ربهما فأنشق موضع البصر، فأخذا بندقتين طينا فوضعاهما في خديه، فصارتا مقلتين يبصر بهما؛ فعجب الملك وقال: إن ها هنا غلاما مات منذ سبعة أيام ولم أدفنه حتى يجيء أبوه فهل يحييه ربكما؟ فدعوا الله علانية، ودعاه شمعون سرا، فقام الميت حيا، فقال للناس: إني مت منذ سبعة أيام، فوجدت مشركا، فأدخلت في سبعة أودية من النار، فأحذركم ما أنتم فيه فآمنوا بالله، ثم فتحت أبواب السماء، فرأي شابا حسن الوجه يشفع لهؤلاء الثلاثة شمعون وصاحبيه، حتى أحياني الله، وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن عيسى روج الله وكلمته، وأن هؤلاء هم رسل الله. فقالوا له وهذا شمعون أيضا معهم؟ قال: نعم وهو أفضلهم. فأعلمهم شمعون أنه رسول المسيح إليهم، فأثر قوله في الملك، فدعاه إلى الله، فآمن الملك في قوم كثير وكفر آخرون. وحكى القشيري أن الملك آمن ولم يؤمن قومه، وصاح جبريل صيحة مات كل من بقي منهم من الكفار.  (تفسير القرطبي

 நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக முதலில் இரண்டு தூதர்கள் அன்தாகியா என்ற அந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர். அந்த இருவரும் ஊர் எல்லையில் ஒரு பெரியவரைச் சந்தித்தார்கள். அவர் பெயர் ஹபீபுன் நஜ்ஜார். அவரிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது அதற்கு ஏதேனும் ஆதாரங்களை அவர் கேட்டார். அதற்கு அந்தத் தூதர்கள் இருவரும் நாங்கள் நீங்கள் விரும்பும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுகிறோம். இறைவன் அருளால் நாங்கள் எப்படிப்பட்ட நோயாளியையும் குணப்படுத்துவோம் என்று கூறினார்கள். 

 அதற்கு ஹபீபுன் நஜ்ஜார் எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்.அவனை நீங்கள் குணப் படுத்த வேண்டும் என்றனர். அதற்கு அவர்கள் சம்மதிக்க அந்த மகன் அழைத்து வரப்பட்டார். அவனை இருவரும் தங்கள் கைகளால் தடவினார்கள். அவன் குணமடைந்தான். ஹபீபுன் நஜ்ஜார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரின் ஈமான் வலுவானதாகவும் ஆகி விட்டது.

 இதற்கிடையில் இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது. இவ்விருவர் மூலம் மேலும் சில நோயாளிகள் குணமடைந்து அவர்கள் இஸ்லாத்தையும் ஏற்றனர்.  

இறுதியாக அந்தச் செய்தி அந்த ஊர் அரசருக்குத் தெரிந்து அரசர் அவ்விருவரையும் சிறையில் அடைத்தார். அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்தவுடன் நபி ஈஸா அலை அவர்கள் மூன்றாவதாக ஷம்ஊன் என்ற ஒருவரை அனுப்பி வைத்தார்கள். அவர் ஊருக்குள் வந்தவுடன் சட்டென்று இஸ்லாத்தை எடுத்துக் கூறவில்லை. முதலில் அரசருக்கு நெருக்கமானவர்கள் யாரென்று அறிந்து அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர்கள் மூலம் அரசருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதுவரை தன்னை யார் என்றே காட்டிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் ஒருநாள் அரசருடன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஷம்ஊன் மெதுவாக அரசரிடம் நீங்கள் யாரோ இருவரை சிறையில் அடைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன் அது உண்மையா? என்று கேட்க,அவர் ஆம் என்றார். நான் அவர்களிடம் பேசிப்பார்த்து அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை அறியட்டுமா? என்று கேட்க, அரசர் சம்மதித்தார் அவ்விருவரும் அங்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் தங்களின் வாதத்தை எடுத்து வைக்க, அதுகேட்ட ஷம்ஊன் நீங்கள் சொல்வதற்கு என்ன சாட்சி?என்று கேட்க, நாங்கள் பிறவிக் குருடரையும் குஷ்டரோகிகளையும் இறை அருளால் குணப்படுத்துவோம் என்று கூறினார்கள். உடனே அங்கு ஒரு சிறுவனை அழைத்து வரப்பட்டது. அவனுடைய இரு கண்கள் இருக்கும் இடம் நெற்றியைப் போன்றிருந்தது. அவ்விருவரும் அல்லாஹ்விடம் துஆச்செய்தார்கள். உடனே அங்கு இரு துவாரங்கள் உருவானது. பின்பு அச்சிறுவனின் கண்களில் மண்ணாலான இரு குண்டுகளைப் பொருத்தி தம் கைகளால் தடவினார்கள். அவனுக்குப் பார்வை வந்தது.

 

  இதுபோன்று இன்னொரு இறந்து போன சிறுவனையும் உயிர்ப்பித்தார்கள். அவன் எழுந்து இம்மூவரும் சொல்வதை நம்புங்கள் என்று ஷம்ஊனையும் சேர்த்துக்கூற, ஷம்ஆனும் இவர்களுடன் சேர்ந்தவரா? என்று மக்கள் கேட்க ஆம் என அச்சிறுவன் பதில் கூறினான். ஷம்ஊனும் அதை உண்மைப் படுத்தினார். மூவரும் சேர்ந்து மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்தனர். இது அரசர் மனதை மாற்றியது. மற்றவர்கள் ஈமான் கொள்ளவில்லை.மற்றவர்கள் இம்மூவரையும் திட்டித் தீர்த்தனர். அடித்தனர்.

 

وَجَآءَ مِنْ أَقْصَا ٱلْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَٰقَوْمِ ٱتَّبِعُوا۟ ٱلْمُرْسَلِينَ

 இதற்கிடையில் முதலில் ஈமான் கொண்ட ஹபீபுன் நஜ்ஜார் ஊர் எல்லையில் இருந்து அங்கு வந்தார். இம்மூவரும் சொல்வதை நம்புங்கள் என அவரும் கூற, நீ தான் முதல் காரணம் என்று கூறி அவர் மீது பாய்ந்து அவரை அடித்தே கொன்றனர். அவர் உடனே சுவர்க்கத்தில் நுழைய வைக்கப் பட்டார். (ஷுஹதாக்கள் இறந்தவுடன் அந்த ஆன்மாக்கள் உடனே சுவனம் சென்று ஒரு பறவையின் உடம்புக்குள் அது வைக்கப்படும் என்பதை நாம் அறிவோம்.) சுவனம் சென்ற ஹபீபுன் நஜ்ஜார் (ரழி) அவர்கள் அல்லாஹ்விடம் எனக்குக் கிடைத்த இந்த அந்தஸ்தைப் பற்றி நான் சென்று என் சமூக மக்களிடம் சொல்கிறேன். அதைக் கேட்டேனும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பார்கள் அல்லவா என்றார்கள். அல்லாஹ் அதற்கு அனுமதி மறுத்து விட்டான்.

 

  இதற்கிடையில் ஹபீபுன் நஜ்ஜாரை அடித்துக் கொன்றும் ஆத்திரம் அடங்காத அம்மக்கள் அம்மூவரையும் தாக்கினர். இறுதியில் அல்லாஹ் பெரும் இடிசப்தத்தை ஏற்படுத்தி அந்த மக்களை அழித்தான்.

    

إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً فَإِذَا هُمْ خَٰمِدُونَ

 

ஒரே ஒரு சப்தம் தான். அவர்கள் சாம்பலாயினர். 36:29)

قال المفسرون. بعث الله تعالى إليهم جبريل عليه الصلاة والسلام, فأخذ بعضادتي باب بلدهم, ثم صاح بهم صيحة واحدة, فإذا هم خامدون عن آخرهم لم تبق بهم روح تتردد (تفسير ابن كثير

தஃப்ஸீர்களில் கூறப்பட்டுள்ளது அல்லாஹ்வை ஏற்காத அந்தக் கூட்டத்தாரிடம் ஜிப்ரயீல் அலை அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்கள் ஒரு சப்தமிட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் உடனே எரிந்து சாம்பலாயினர். சற்று நேரம் உயிருக்குப் போராடும் அவகாசம் கூட இல்லை

 ஒரு கேள்வியும் அதற்கான பதிலும்

فان قلت فلم أنزل الجنود من السماء يوم بدر والخندق؟ فقال: {وَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحاً وَجُنُوداً لَمْ تَرَوْهَا } [الأحزاب: 9]، وقال: {بِثَلاثَةِ آلافٍ مِنَ الْمَلائِكَةِ مُنْزَلِينَ} [آل عمران: 124]. {بِخَمْسَةِ آلافٍ مِنَ الْمَلائِكَةُ مُسَوِّمِينَ } [آل عمران: 125].

قلت: إنما كان يكفي ملك واحد، فقد أهلكت مدائن قوم لوط بريشة من جناح جبريل، وبلاد ثمود وقوم صالح بصيحة، ولكن الله فضل محمدا صلى الله عليه وسلم بكل شيء على سائر الأنبياء وأولي العزم من الرسل فضلا عن حبيب النجار، وأولاه من أسباب الكرامة والإعزاز ما لم يوله أحدا؛ فمن ذلك أنه أنزل له جنودا من السماء، وكأنه أشار بقوله: {وَمَا أَنْزَلْنَا}. {وَمَا كُنَّا مُنْزِلِينَ} إلى أن إنزال الجنود من عظائم الأمور التي لا يؤهل لها إلا مثلك، وما كنا نفعل لغيرك. {إِنْ كَانَتْ إِلاَّ صَيْحَةً وَاحِدَةً} قراءة العامة {وَاحِدَةً } بالنصب على تقدير ما كانت عقوبتهم إلا صيحة واحدة. (تفسير القرطبي

 

படிப்பினைகள்

1.இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதில் புத்தி சாதுர்யம் அவசியம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

 

2. ஹபீபுன் நஜ்ஜாரை அடித்துக் கொல்வதற்கு முன்பாகவே அல்லாஹ்வின் உதவி வந்திருக்கலாம். ஏன் தாமதம் என்ற கேள்வி எழும். உண்மை நம் பக்கம் இருந்தாலும் உடனே உதவிட வேண்டுமென்பது அல்லாஹ்வுக்கு கடமையில்லை. ஹபீபுன் நஜ்ஜாருக்கு ஷஹீத் என்ற பதவியைத் தருவதற்கு அல்லாஹ் நாடி விட்டான் என்பதும் தெளிவாகிறது.

 

3. இறந்தவருக்கு அல்லாஹ் தரும் கண்ணியம் அல்லது வேதனை பற்றி உயிரோடு இருப்பவர்களுக்கு அல்லாஹ் தெரிவிப்பது இல்லை.மிக அபூர்வமாக அல்லாஹ் யாரேனும் சிலருக்கு ஏற்படுத்தினாலே தவிர..

وروي أن عيسى لما أمرهم أن يذهبوا إلى تلك القرية قالوا: يا نبي الله إنا لا نعرف أن نتكلم بألسنتهم ولغاتهم. فدعا الله لهم فناموا بمكانهم، فهبوا من نومتهم قد حملتهم الملائكة فألقتهم بأرضى أنطاكية، فكلم كل واحد صاحبه بلغة القوم  (قرطبي

ஈஸா அலைஹிஸ்ஸலாம் தூதர்களை அந்த ஊருக்குச் செல்ல ஏவிய போது அந்த ஊரின் பாஷை எங்களுக்குத் தெரியாதே என்றார்கள். அப்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். அந்த நபர்களின் தூங்கும்போதே தூக்கத்திலேயே அவர்களுக்கு அந்த பாஷையை அல்லாஹ் அறிய வைத்தான். தூங்கி எழும்போது அந்த பாஷை பேசுபவர்களாக அவர்கள் ஆகி விட்டார்கள். மேலும் அவர்களை மலக்குகள் சுமந்து சென்று அந்த ஊரில் கொண்டு போய் விட்டார்கள்.

 தூக்கத்தில் அல்லாஹ் மக்களின் பாஷைகளை மாற்றியமைப்பது நூஹ் அலை காலத்திலும் நிகழ்ந்தது

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:"كَانَ مَعَ نُوحٍ فِي السَّفِينَةِ ثَمَانُونَ رَجُلا مَعَهُمْ أَهْلُوهُهُمْ، وَأَنَّهُمْ كَانُوا فِي السَّفِينَةِ مِائَةً وَخَمْسِينَ يَوْمًا وَأَنَّ اللَّهَ وَجَّهَ السَّفِينَةَ إِلَى مَكَّةَ فَدَارَتْ بِالْبَيْتِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ وَجَّهَهَا إِلَى الْجُوادِيِّ، فَاسْتَقَرَّتْ عَلَيْهِ، فَبَعَثَ نُوحٌ الْغُرَابُ لَيَأْتِيهِ بِخَبَرِ الأَرْضِ، فَذَهَبَ فَوَقَعَ عَلَى الْجِيَفِ، فَأَبْطَأَ عَلَيْهِ فَبَعَثَ الْحَمَامَةَ، فَأَتَتْهُ بِوَرِقِ الزَّيْتُونِ، وَلَطَخَتْ رِجْلَهَا بِالطِّينِ، فَعَرَفَ نُوحٌ أَنَّهُ الْمَاءُ قَدْ نَضَبَ، فَهَبَطَ إِلَى أَسْفَلِ الْجُودِيِّ فَبَنَى قَرْيَةً وَسَمَّاهَا ثَمَانِينَ، فَأَصْبَحُوا ذَاتَ يَوْمٍ وَقَدْ تَبَلْبَلَتْ أَلْسِنَتُهُمْ عَلَى ثَمَانِينَ لُغَةٍ أَحَدُهُمَا اللِّسَانُ الْعَرَبِيُّ فَكَانَ لا يُفَقِّهُّ بَعْضُهُمْ كَلامَ بَعْضٍ، وَكَانَ نُوحٌ عَلَيْهِ السَّلامُ يُعَبِّرُ عَنْهُمْ".(تفسير ابن كثير)

அந்தக் கப்பல் சுமார் 150 நாட்கள் பயணம் செய்தது. வரும் வழியில் மக்காவில் மட்டும் கஃபாவை நாற்பது நாட்கள் அக்கப்பல் சுற்றிச் சுற்றி வந்தது.  (கஃபாவின் உண்மையான உயரம் பைத்துல் மஃமூர் வரை என்பது குறிப்பிடத்தக்கது.) பின்பு ஜூதி மலையில் தரை தட்டிய பின் நபி நூஹ் அலை நீர் வற்றி விட்டதா என்று பார்க்க காகத்தை அனுப்ப, அது ஒரு பிணத்தைப் பார்த்தவுடன் அதன் மீது உட்கார்ந்து சாப்பிடத் துவங்கி விட்டது. திரும்பி வரத் தாமதம் ஆனதால் புறாவை அனுப்பினார்கள். அது சென்று பார்த்து விட்டு வந்த போது அதன் காலில் சேறும், அதன் வாயில் ஜைத்தூன் மர இலையும் இருப்பதைக் கண்டார்கள். (தூஃபானுக்குப் பின் முதலில் விளைந்த மரம் ஜைத்தூன் மரம் தான்.) நீர் வற்றியதை அறிந்து அங்கிருந்து கீழே இறங்கி மலையடிவாரத்தில் தங்கினார்கள். அந்த இடத்திற்கு ஸமானூன் என்று பெயரும் வைத்தார்கள். காரணம் அவர்கள் மொத்தம் 80 பேர் இருந்தார்கள். அந்த 80 பேரும் தூங்கும்போது ஒரே பாஷை பேசுபவர்களாக இருந்தனர். ஆனால் தூங்கி எழுந்த பின் அவர்களின் பாஷைகள் அனைத்தயும் அல்லாஹ் மாற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாஷை பேசுபவர்களாக மாறி விட்டனர். ஒருவரின் பாஷை மற்றவருக்குப் புரியாது. அதாவது 80 பேரும் 80 பாஷை பேசுபவர்களாக ஆகி விட்டனர். அந்த பாஷைகளில் அரபு மொழியும் ஒன்றாகும். எல்லா பாஷைகளையும் புரிந்தவர்கள் நபி நூஹ்அலைஹிஸ்ஸலாம் மட்டும் தான். அல்லாஹ் தன் ஆற்றலை வெளிக்காட்ட இவ்வாறு செய்தான்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...