19- ம் தராவீஹ் பயான்
சகல வசதிகளுடனும் மாபெரும் செல்வந்தராக வாழ்ந்த
நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அனைத்தையும் இழந்தார்கள். சொத்துக்கள், பிள்ளைகள்
எல்லாவற்றையும் இழந்து அதன்பின்பு நோயினாலும் மிகவும் சோதிக்கப்பட்டார்கள். அதனால்
அவர்களின் குடும்பம் ஊரை விட்டுமே தள்ளி வைக்கப்படும் சூழ்நிலை உருவானது. ஆனாலும்
பொறுமை கொண்டார்கள் நீண்ட காலத்திற்குப் பிறகே அல்லாஹ்விடம் நோய் நீங்க துஆச்
செய்தார்கள் அல்லாஹ் நோயை நீக்கியதுடன் இதற்கு முன்பு இருந்ததை விட சிறப்பான
வாழ்க்கையை அல்லாஹ் தந்தான். இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
فَقَالَ الْحَسَن وَقَتَادَة اُبْتُلِيَ أَيُّوب عَلَيْهِ السَّلَام
سَبْع سِنِينَ وَأَشْهُرًا مُلْقًى عَلَى كُنَاسَة بَنِي إِسْرَائِيل تَخْتَلِف
الدَّوَابّ فِي جَسَده فَفَرَّجَ اللَّه عَنْهُ وَأَعْظَمَ لَهُ الْأَجْر
وَأَحْسَنَ عَلَيْهِ الثَّنَاء (تفسير ابن
كثير
ஏழு வருடங்கள் மற்றும் சில மாதங்கள் உடம்பில்
புழுக்கள் வைத்த நிலையில் ஒதுக்குப் புறமான இடங்களில் கிடத்தப்பட்டார்கள். அதன்
பின்பு அல்லாஹ் குணமளித்தான்.
ஒருவரிடம் மார்க்கப்பற்று எந்த அளவுக்கு இருக்குமோ அந்த
அளவுக்கு அவர் சோதிக்கப்படுவார்
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ
اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ الْأَنْبِيَاءُ ثُمَّ الصَّالِحُونَ
ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ مِنْ النَّاسِ يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ
دِينِهِ فَإِنْ كَانَ فِي دِينِهِ صَلَابَةٌ زِيدَ فِي بَلَائِهِ
وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ خُفِّفَ عَنْهُ وَمَا يَزَالُ الْبَلَاءُ
بِالْعَبْدِ حَتَّى يَمْشِيَ عَلَى ظَهْرِ الْأَرْضِ لَيْسَ عَلَيْهِ خَطِيئَةٌ
(مسند أحمد) عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ
إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا قَالَ أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ
رَجُلَانِ مِنْكُمْ قُلْتُ ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ قَالَ أَجَلْ ذَلِكَ
كَذَلِكَ مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى شَوْكَةٌ فَمَا فَوْقَهَا إِلَّا
كَفَّرَ اللَّهُ بِهَا سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا (بخاري)
كتاب المرضى
மனிதர்களில் அதிகம் சோதிக்கப்பட்டவர்கள் யார் என்று நான்
கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் அதிகம் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்கள் பிறகு
நல்லடியார்கள் அதற்குப் பிறகு இறையச்சத்தில் அந்த நல்லடியார்களைப் போன்றவர்கள்
அதிகம் சோதிக்கப்படுவார்கள் ஆக ஒருவரின் உள்ளத்தில் எந்த அளவுக்கு இறையச்சம்
உள்ளதோ அந்த அளவுக்கு சோதிக்கப்படுவார். மார்க்கப் பற்று அதிகம் இருந்தால்
சோதனைகள் அதிகரிக்கும். மார்க்கப் பற்று குறைவாக இருந்தால் சோதனைகள் குறையும். ஒரு
அடியான் இவ்வாறு சோதிக்கப்பட்டு அதனால் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இறுதியில்
குற்றமற்றவராக இந்த பூமியில் அவர் நடமாடுவார்
சோதிக்கப்பட்ட நபிமார்களில் முக்கியமானவர் நபி அய்யூப்
அலைஹிஸ்ஸலாம்
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் மிகப் பெரும் செல்வந்தராக
இருந்தார்கள். இந்நிலையில் அனைத்தையும் இழந்து இவ்வளவு சோதிக்கப்பட்டதற்கு பல
காரணங்கள் கூறப்பட்டுள்ளது 1.ஷைத்தான்
அல்லாஹ்விடம் நீ இவருக்கு நிறைய செல்வங்கள் தந்திருப்பதால் தான்
வணங்குகிறார். இவற்றை நீக்கி விட்டால் அவர் வணங்க மாட்டார் என்று கூற, நீ
வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக் கொள் என்று கூறியதால் அவர்களின் 70 வது வயதில்
ஷைத்தானால் தொழுநோய் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ
أَرْحَمُ الرَّاحِمِينَ (83) يَذْكُر تَعَالَى عَنْ أَيُّوب " مَا كَانَ
أَصَابَهُ مِنْ الْبَلَاء فِي مَاله وَوَلَده وَجَسَده وَذَلِكَ أَنَّهُ كَانَ
لَهُ مِنْ الدَّوَابّ وَالْأَنْعَام وَالْحَرْث شَيْء كَثِير وَأَوْلَاد كَثِيرَة
وَمَنَازِل مُرْضِيَة فَابْتُلِيَ فِي ذَلِكَ كُلّه وَذَهَبَ عَنْ آخِره ثُمَّ اُبْتُلِيَ فِي جَسَده يُقَال بِالْجُذَامِ فِي سَائِر بَدَنه وَلَمْ
يَبْقَ مِنْهُ سَلِيم سِوَى قَلْبه وَلِسَانه يَذْكُر بِهِمَا اللَّه عَزَّ وَجَلَّ
حَتَّى عَافَهُ الْجَلِيس وَأُفْرِدَ فِي نَاحِيَة مِنْ الْبَلَد وَلَمْ يَبْقَ
أَحَد مِنْ النَّاس يَحْنُو عَلَيْهِ سِوَى زَوْجَته كَانَتْ تَقُوم بِأَمْرِهِ
وَيُقَال إِنَّهَا اِحْتَاجَتْ فَصَارَتْ تَخْدُم النَّاس مِنْ أَجْله (تفسير ابن كثير
கடுமையான நோயால் ஏழு வருடங்கள் சிரமப்பட்ட போதும் அந்த நோயை
நீக்கும்படி துஆ செய்யாமல் இறுதியில் எதனால் துஆச் செய்ய முன்வந்தார்கள் என்பதற்கு
பல காரணங்கள்
70 வருடங்கள் அல்லாஹ் என்னை ஆரோக்கியமாக வைத்திருந்தான் 7
வருடங்கள் சோதித்தால் என்ன தவறு
قَالَ السُّدِّيّ : تَسَاقَطَ لَحْم أَيُّوب
حَتَّى لَمْ يَبْقَ إِلَّا الْعَصَب وَالْعِظَام فَكَانَتْ اِمْرَأَته تَقُوم
عَلَيْهِ وَتَأْتِيه بِالرَّمَادِ يَكُون فِيهِ فَقَالَتْ لَهُ اِمْرَأَته لَمَّا
طَالَ وَجَعه يَا أَيُّوب لَوْ دَعَوْت رَبّك يُفَرِّج عَنْك فَقَالَ قَدْ عِشْت
سَبْعِينَ سَنَة صَحِيحًا فَهُوَ قَلِيل لِلَّهِ أَنْ أَصْبِر لَهُ سَبْعِينَ
سَنَة (ت: ابن كثير
قيل له سل الله العافية فقال : أقمت في النعيم سبعين سنة وأقيم في البلاء
سبع سنين وحينئذ أسأله فقال :{ مسني الضر }(قرطبي
நோயின் காரணமாக நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம்
எலும்பும் தோலுமாக ஆகி விட்ட அந்த நிலையில் அவர்களின் மனைவி நீங்கள் அல்லாஹ்விடம்
துஆச் செய்யக்கூடாதா என்று கேட்க, அதற்கு நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் பின்வருமாறு
கூறினார்கள் அல்லாஹ் எழுபது வருடங்கள் என்னை ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்போடும்
வைத்திருந்தான் அதற்கு பதிலாக ஏழு வருடங்கள் நான் இந்த சோதனையைப் பொறுத்துக்
கொள்வது மிகவும் குறைவு என்றார்கள்.
தனக்காக தன் மனைவி படும் சிரமத்தை சகிக்க முடியாமல் துஆச்
செய்தார்கள்
فَخَرَجَتْ تَسْعَى عَلَيْهِ فَحُظِرَ عَنْهَا الرِّزْق فَجَعَلَتْ
لَا تَأْتِي أَهْل بَيْت فَيُرِيدُونَهَا فَلَمَّا اِشْتَدَّ عَلَيْهَا ذَلِكَ
وَخَافَتْ عَلَى أَيُّوب الْجُوع حَلَقَتْ مِنْ شَعْرهَا قَرْنًا فَبَاعَتْهُ مِنْ
صَبِيَّة مِنْ بَنَات الْأَشْرَاف فَأَعْطَوْهَا طَعَامًا طَيِّبًا كَثِيرًا
فَأَتَتْ بِهِ أَيُّوب فَلَمَّا رَآهُ أَنْكَرَهُ وَقَالَ مِنْ أَيْنَ لَك هَذَا
قَالَتْ عَمِلْت لِأُنَاسٍ فَأَطْعَمُونِي فَأَكَلَ مِنْهُ فَلَمَّا كَانَ الْغَد
خَرَجَتْ فَطَلَبَتْ أَنْ تَعْمَل فَلَمْ تَجِد فَحَلَقَتْ أَيْضًا قَرْنًا
فَبَاعَتْهُ مِنْ تِلْكَ الْجَارِيَة فَأَعْطَوْهَا أَيْضًا مِنْ ذَلِكَ الطَّعَام
فَأَتَتْ بِهِ أَيُّوب فَقَالَ وَاَللَّه لَا أَطْعَمهُ حَتَّى أَعْلَم مِنْ
أَيْنَ هُوَ فَوَضَعَتْ خِمَارهَا فَلَمَّا رَأَى رَأْسهَا مَحْلُوقًا جَزِعَ
جَزَعًا شَدِيدًا فَعِنْد ذَلِكَ دَعَا اللَّه عَزَّ وَجَلَّ فَقَالَ " رَبّ
إِنِّي مَسَّنِيَ الضُّرّ وَأَنْتَ أَرْحَم الرَّاحِمِينَ"
நபி
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உணவுத் தேவைக்காக அவர்களின் மனைவி வீட்டு வேலைகள்
செய்து அதன் மூலம் கிடைக்கும் உணவை கணவனுக்குக் கொண்டு வருவார்கள். ஒரு சில
தினங்கள் வீட்டு வேலையும் சரியாக அமையவில்லை. வேறு வழியில்லாமல் தன் பாதிக்
கூந்தலை அறுத்து அதை அந்த ஊரின் பணக்காரச் சிறுமிக்கு சவுரி முடி என்ற
அடிப்படையில் விற்றார்கள் அதன் மூலம் கிடைக்கும் உணவை கணவனுக்குக் கொண்டு வந்தார்கள்.
தலையை மூடியே இருந்ததால் நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது
இந்த உணவு எவ்வாறு கிடைத்தது என்று கேட்க. வீட்டு வேலை செய்தேன் அதனால் கிடைத்த
உணவு என பொய் சொன்னார்கள். கூந்தலை விற்றதைச் சொல்லவில்லை. அடுத்த நாளும் அவ்வாறே
வீட்டு வேலை அமையாத போது தன் மீதிக் கூந்தலையும் அறுத்து விற்றார்கள். அதன் மூலம்
கிடைக்கும் உணவை கணவனுக்குக் கொண்டு வந்தார்கள். தலையை மூடியே இருந்ததால் நபி
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சந்தேகம்
அதிகமானது. இந்த உணவு எவ்வாறு கிடைத்த து என்று சொல்லாமல் சாப்பிட்ட
மாட்டேன் என்றார்கள் அப்போது தான் அந்த அம்மையார் தலை முக்காட்டை கீழே இறக்கியபோது
தலை முடி முற்றிலுமாக நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள் அதற்கு
மேலும் தனக்காக தன் மனைவி படும் சிரமத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அல்லாஹ்விடம்
மேற்படி துஆவைச் செய்தார்கள். அப்போது கூட என் நோயை நீக்கு என்ற வார்த்தை
அவர்களின் நாவில் இருந்து வரவில்லை மாறாக
رَبّ إِنِّي مَسَّنِيَ الضُّرّ وَأَنْتَ أَرْحَم الرَّاحِمِينَ"
ரப்பே எனக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது நீயே
கிருபையாளர்களுக்கெல்லாம் கிருபையாளன் என்ற வார்த்தைகளை மட்டுமே கூறினார்கள்.
அல்லாஹ் இவர்களிடமிருந்து இதையேனும் எதிர் பார்த்துக் காத்திருந்ததைப் போல உடனே
அய்யூப் அலை அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
இவர் ஏதோ பெரிய பாவம் செய்திருப்பார் போலும் அதனால் தான்
இந்த நோய்என்று
மக்கள் பேசிக் கொள்ளும் நிலை வந்ததால் துஆச் செய்தார்கள்
عَنْ نَوْف الْبِكَالِيّ أَنَّ الشَّيْطَان الَّذِي عَرَجَ فِي
أَيُّوب كَانَ يُقَال لَهُ مَبْسُوط قَالَ وَكَانَتْ اِمْرَأَة أَيُّوب تَقُول
اُدْعُ اللَّه فَيَشْفِيك فَجَعَلَ لَا يَدْعُو حَتَّى مَرَّ بِهِ نَفَر مِنْ
بَنِي إِسْرَائِيل فَقَالَ بَعْضهمْ لِبَعْضٍ مَا أَصَابَهُ مَا أَصَابَهُ إِلَّا
بِذَنْبٍ عَظِيم أَصَابَهُ فَعِنْد ذَلِكَ قَالَ " رَبّ إِنِّي مَسَّنِيَ
الضُّرّ وَأَنْتَ أَرْحَم الرَّاحِمِينَ "
ஒவ்வொரு கெடுதியை ஏற்படுத்தும் ஷைத்தான்களுக்கும்
ஒவ்வொரு பெயர்கள் உண்டு. உளூவில் வஸ்வாஸை ஏற்படுத்தும் ஷைத்தானுக்கு வலஹான் என்று
பெயர். அதுபோல அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இந்த நோய் உண்டாவதற்குக் காரணமான
ஷைத்தானுக்கு மப்ஸூத் என்று பெயர். இந்த நோயில் இருந்து விடுபட அய்யூப்
அலை
துஆச் செய்யாமலே இருந்தபோது சிலர் பேசிக் கொண்டார்கள் இவர் ஏதோ பெரிய பாவம்
செய்திருப்பால் போலும் அதனால் தான் இவருக்கு இவ்வளவு பெரிய நோய் ஏற்பட்டுள்ளது
என்று பேசிக் கொண்ட போது அது அய்யூப் அலை அவர்களின் உள்ளத்தை பாதித்த து
அதன் பின்பே துஆச் செய்தார்கள்
أن عثمان بن أبي العاص أتى النبي صلى الله عليه
وسلم فقال: يا رسول الله إن الشيطان قد حال بيني وبين صلاتي وبين قراءتي يلبسها
علي فقال رسول الله صلى الله عليه وسلم: "ذاك شيطان يقال له خنزب، فإذا
أحسسته فتعوذ بالله منه (قرطبي
தொழுகையில் ஷைத்தான்
என்னிடம் குறுக்கிடுகிறான். என்னை கிராஅத் ஓத விடாமலும் தடுக்கிறான் என உஸ்மான்
இப்னு அபில் ஆஸ் ரழி அவர்கள் முறையிட்டபோது அவன் தான் ஹின்ஜப் எனும் ஷைத்தான்.
அவனுடைய வஸ்வாஸை நீங்கள் உணர்ந்தால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்
என்றார்கள்.
عن أبي بن كعب عن النبي صلى الله عليه وسلم أنه
قال: "إن للوضوء شيطانا يقال له الولهان فاتقوا وسواس الماء" (حاكم
உளூவில் வஸ்வாஸை ஏற்படுத்தும் ஷைத்தானுக்கு
வலஹான் என்று பெயர்.எனவே உளூவில் வஸ்வாஸ் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
உடம்பெல்லாம் நடமாடிய
புழுக்கள் திக்ரு செய்யும் நாவையும் தாக்க, வேறு வழியின்றி துஆச் செய்தார்கள்
أن الدود كان يتناول بدنه فصبر حتى تناولت دودة قلبه وأخرى لسانه فقال : {
مسني الضر } لاشتغاله عن ذكر الله (قرطبي
குர்துபி தஃப்ஸீரில்
இதுவும் காரணமாக கூறப்பட்டுள்ளது. எதுவரை புழுக்கள் உடலை மட்டும் பாதித்த தோ
அதுவரை அவர்கள் துஆச் செய்யவில்லை எப்போது திக்ர் செய்யும் நாவையும் உள்ளத்தையும்
தாக்க ஆரம்பித்ததோ அப்போது தான் வேறு வழியின்றி ஷிஃபாவுக்காக துஆச் செய்தார்கள்
عَنْ عَبْد اللَّه بْن عُبَيْد بْن عُمَيْر قَالَ كَانَ لِأَيُّوبَ
عَلَيْهِ السَّلَام أَخَوَان فَجَاءُوا يَوْمًا فَلَمْ يَسْتَطِيعَا أَنْ
يَدْنُوَا مِنْهُ مِنْ رِيحه فَقَامَا مِنْ بَعِيد فَقَالَ أَحَدهمَا لِلْآخَرِ
لَوْ كَانَ اللَّه عَلِمَ مِنْ أَيُّوب خَيْرًا مَا اِبْتَلَاهُ بِهَذَا فَجَزِعَ
أَيُّوب مِنْ قَوْلهمَا جَزَعًا لَمْ يَجْزَع مِنْ شَيْء قَطُّ فَقَالَ :
اللَّهُمَّ إِنْ كُنْت تَعْلَم أَنِّي لَمْ أَبِتْ لَيْلَة قَطُّ شَبْعَان وَأَنَا
أَعْلَم مَكَان جَائِع فَصَدِّقْنِي......(قرطبي
عَنْ أَنَس اِبْن مَالِك أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ : " إِنَّ نَبِيّ اللَّه أَيُّوب لَبِثَ بِهِ بَلَاؤُهُ
ثَمَانِي عَشْرَة سَنَة فَرَفَضَهُ الْقَرِيب وَالْبَعِيد إِلَّا رَجُلَيْنِ مِنْ
إِخْوَانه كَانَا مِنْ أَخَصّ إِخْوَانه لَهُ كَانَا يَغْدُوَانِ إِلَيْهِ فَقَالَ
وَيَرُوحَانِ فَقَالَ أَحَدهمَا لِصَاحِبِهِ تَعْلَم وَاَللَّه لَقَدْ أَذْنَبَ
أَيُّوب ذَنْبًا مَا أَذْنَبه أَحَد مِنْ الْعَالَمِينَ فَقَالَ لَهُ صَاحِبه
وَمَا ذَاكَ ؟ قَالَ مُنْذُ ثَمَانِي عَشْرَة سَنَة لَمْ يَرْحَمهُ اللَّه
فَيَكْشِف مَا بِهِ فَلَمَّا رَاحَا إِلَيْهِ لَمْ يَصْبِر الرَّجُل حَتَّى ذَكَرَ
ذَلِكَ لَهُ فَقَالَ أَيُّوب عَلَيْهِ السَّلَام مَا أَدْرِي مَا تَقُول غَيْر
أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ يَعْلَم أَنِّي كُنْت أَمُرّ عَلَى الرَّجُلَيْنِ
يَتَنَازَعَانِ فَيَذْكُرَانِ اللَّه فَأَرْجِع إِلَى بَيْتِي فَأُكَفِّر
عَنْهُمَا كَرَاهِيَة أَنْ يَذْكُرَا اللَّه إِلَّا فِي حَقّ (قرطبي
சகல வசதிகளுடன் இருக்கும்போது ஒட்டி உறவாடிய
சொந்தங்கள் இந்த நோய் ஏற்பட்டு அனைத்தையும் இழந்த பின் அனைவரும் விலகி விட்டனர்.
ஆனாலும் இரண்டு சகோதரர்கள் மட்டும் அடிக்கடி வருவார்கள் அவர்களும் அருகில் வராமல்
தூரத்தில் இருந்தே பேசுவார்கள் ஒருநாள் அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம் இவ்வளவு
வருடமாக அல்லாஹ் இவருக்கு ஷிஃபாவைத் தராமல் இருக்கிறானோ அப்படியானால் இவர் யாரும்
செய்யாத பெரிய பாவம் செய்திருப்பாரோ என்றார். இந்தக் கருத்தில் இன்னொரு சகோத ர
ருக்கு உடன்பாடில்லை. அதனால் அவர் மனம் பொறுக்க முடியாமல் அதை நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து
சொன்னார் அதன்பிறகு அய்யூப் அலைஹிஸ்ஸலாம் நான் என்ன தவறு செய்தேன் என்று
நினைவில்லை. ஒருமுறை இரண்டு நபர்கள் சேர்ந்து அல்லாஹ்வைப் பற்றி தவறாக கருத்தைப்
பேசிக் கொண்டிருந்தனர். நான் அவர்களைக் கடந்து சென்றேன். அந்த இடத்தில் எதுவும்
என்னால் சொல்ல முடியவில்லை. வீட்டுக்கு வந்து அவ்விருவருக்காக அல்லாஹ்விடம்
மன்னிப்புக் கேட்டேன். ஒருவேளை அது தவறாக இருக்கலாமோ என்றார்கள். அதன் பிறகு
அல்லாஹ்விடம் நீண்ட சஜ்தா செய்து மன்னிப்பும் தேடினார்கள்.
அல்லாஹ்விடம் துஆச் செய்தவுடன் நோய் நீங்கிய விதம்
قَالَ اِبْن عَبَّاس وَرَدَّ عَلَيْهِ مَاله وَوَلَده عِيَانًا
وَمِثْلهمْ مَعَهُمْ وَقَالَ وَهْب بْن مُنَبِّه أَوْحَى اللَّه إِلَى أَيُّوب
قَدْ رَدَدْت عَلَيْك أَهْلك وَمَالك وَمِثْلهمْ مَعَهُمْ فَاغْتَسِلْ بِهَذَا
الْمَاء فَإِنَّ فِيهِ شِفَاءَك وَقَرِّبْ عَنْ صَحَابَتك قُرْبَانًا
وَاسْتَغْفِرْ لَهُمْ فَإِنَّهُمْ قَدْ عَصَوْنِي فِيك رَوَاهُ اِبْن أَبِي حَاتِم .
இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள் அய்யூப்
அலைஹிஸ்ஸலாம் துஆக் கேட்டவுடன் அல்லாஹ் உடனே ஷிஃபாவைத் தந்தான் அல்லாஹ் குளிக்கச்
சொன்ன அந்த இடத்தில் சென்று குளித்தவுடன் ஏதோ மாயாஜாலம் போன்று கண் பார்க்கவே
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடல் பழைய உடம்பை விட அழகான உடலாக மாறியது. இழந்த
சொத்துக்களை விட இரு மடங்காக அல்லாஹ் தந்தான். பிள்ளைகளும் பிறந்தார்கள். பின்பு
அல்லாஹ் வஹீ அறிவித்தான் உம்முடைய விஷயத்தில் உம்முடைய உறவினர்கள் நிறைய துரோகம்
செய்து விட்டாரகள் அவர்களுக்காக நீர் மன்னிப்புத் தேடுங்கள் என்று அறிவித்தான்
அவ்வாறே அய்யூப் அலை அவர்களுக்காக மன்னிப்புக் கேட்டார்கள்.
படிப்பினை- நான் நோயாக இருக்கும்போது யாரும் என்னைப்
பார்க்கவில்லையே என்று எண்ணி உறவுகளை முறித்துக் கொள்ள அல்லாஹ் கூறவில்லை. மாறாக
அவர்களுக்காக அய்யூப் அலை அவர்களை பாவமன்னிப்புக் கேட்க வைத்தான்
நோய் நீங்கியவுடன் நடைபெற்ற சுவாரசியமான
சம்பவங்கள்
عَنْ اِبْن عَبَّاس قَالَ : وَأَلْبَسَهُ اللَّه حُلَّة مِنْ
الْجَنَّة فَتَنَحَّى أَيُّوب فَجَلَسَ فِي نَاحِيَة وَجَاءَتْ اِمْرَأَته فَلَمْ
تَعْرِفهُ فَقَالَتْ يَا عَبْد اللَّه أَيْنَ ذَهَبَ هَذَا الْمُبْتَلَى الَّذِي
كَانَ هَهُنَا لَعَلَّ الْكِلَاب ذَهَبَتْ بِهِ أَوْ الذِّئَاب فَجَعَلَتْ
تُكَلِّمهُ سَاعَة .فَقَالَ وَيْحك أَنَا أَيُّوب قَالَتْ أَتَسْخَرُ مِنِّي يَا
عَبْد اللَّه ؟ فَقَالَ وَيْحك أَنَا أَيُّوب قَدْ رَدَّ اللَّه عَلَيَّ جَسَدِي (تفسير
ابن كثير
அழகான
உடம்பை அல்லாஹ் கொடுத்தவுடன் அந்த நேரத்தில் மனைவி இருந்திருக்கவில்லை. வீட்டு
வேலைக்காகச் சென்று விட்டார்கள். மனைவி திரும்பி வரும்போது மனைவிக்கு இன்ப
அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று எண்ணி நோயாளியாக படுத்திருந்த இடம் அல்லாத வேறு
இடத்தில் ஓரமாக நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் நின்று கொண்டார்கள். மனைவி வந்தவுடன்
கணவனைக் காணாமல் பதறினார்கள். அங்கே நிற்பது தன் கணவர் என்று தெரியாமல் அவர்களிடமே
விசாரித்தார்கள் இங்கே இருந்த என் கணவர் எங்கே அவரை ஏதேனும் நாய் கொன்று சென்று
விட்டதா என்று அழுதபடி விசாரிக்க, அய்யூப் அலைஹிஸ்ஸலாம் தனக்குள் சிரித்தபடி சற்று
நேரம் அழுகட்டும் பார்க்கலாம் என்று விட்டு விட்டார்கள். அதன்பின்பு நான் தான்
அய்யூப் உனக்குத் தெரியவில்லையா என்று கூற, அல்லாஹ்வின் அடியாரே நீங்கள் என்னை
கிண்டல் செய்கிறீர்களா நீங்கள் என் கணவர் அல்ல என்று மனைவி கூற, அதன்பின்பு நபி
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் நான் தான் அய்யூப். அல்லாஹ் எனக்கு பழைய உடலைத் தந்து
விட்டான் என்றார்கள். அல்லாஹ் இருவருக்கும் பழைய உடலைத் தந்தான்.
நோய் நீங்கியவுடன் தங்க வெட்டுக் கிளிகளை அல்லாஹ் மழை
போன்று மடியில் விழச் செய்தான்
عَنْ أَبِي هُرَيْرَة عَنْ النَّبِيّ صَلَّى
اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " لَمَّا عَافَى اللَّه أَيُّوب أَمْطَرَ
عَلَيْهِ جَرَادًا مِنْ ذَهَب فَجَعَلَ يَأْخُذ مِنْهُ بِيَدِهِ وَيَجْعَلهُ فِي
ثَوْبه قَالَ فَقِيلَ لَهُ يَا أَيُّوب أَمَا تَشْبَع ؟ قَالَ يَا رَبّ وَمَنْ يَشْبَع
مِنْ رَحْمَتك ؟ (تفسير ابن كثير
குறிப்பு- அந்தக் காலத்தில் வெட்டுக் கிளிகள்
கிளி அளவுக்கு பெரிதாக இருக்கும்
நோய் நீங்கியவுடன் அந்தக் காலத்து வெட்டுக்
கிளியின் அளவுள்ள தங்கத்தை அல்லாஹ் மழை போன்று மடியில் விழச் செய்தான் அதை கையால்
பிடித்து தன்னுடைய துணியில் சுருட்டிக் கொண்டார்கள் பின்பு அல்லாஹ் போதுமா என்று
கேட்க, அதற்கு அய்யூப் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள் யாஅல்லாஹ் நீ கொடுத்தால் யார்
வேண்டாம் என்று சொல்வார்கள்.
وَخَرَجَتْ اِمْرَأَته
تَعْمَل لِلنَّاسِ فَخَبَزَتْ لِأَهْلِ بَيْت لَهُمْ صَبِيّ فَجَعَلَتْ لَهُمْ
قُرْصًا وَكَانَ اِبْنهمْ نَائِمًا فَكَرِهُوا أَنْ يُوقِظُوهُ فَوَهَبُوهُ لَهَا
فَأَتَتْ بِهِ إِلَى أَيُّوب فَأَنْكَرَهُ وَقَالَ مَا كُنْت تَأْتِينِي بِهَذَا
فَمَا بَالك الْيَوْم فَأَخْبَرَتْهُ الْخَبَر قَالَ فَلَعَلَّ الصَّبِيّ قَدْ
اِسْتَيْقَظَ فَطَلَبَ الْقُرْص فَلَمْ يَجِدهُ فَهُوَ يَبْكِي عَلَى أَهْله
فَانْطَلِقِي بِهِ إِلَيْهِ فَأَقْبَلَتْ حَتَّى بَلَغَتْ دَرَجَة الْقَوْم
فَنَطَحَتْهَا شَاة لَهُمْ فَقَالَتْ تَعِسَ أَيُّوب الْخَطَّاء فَلَمَّا صَعِدَتْ
وَجَدَتْ الصَّبِيّ قَدْ اِسْتَيْقَظَ وَهُوَ يَطْلُب الْقُرْص وَيَبْكِي عَلَى
أَهْله لَا يَقْبَل مِنْهُمْ شَيْئًا غَيْره فَقَالَتْ : رَحِمَهُ اللَّه يَعْنِي
أَيُّوب فَدَفَعَتْ إِلَيْهِ الْقُرْص وَرَجَعَتْ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக