செவ்வாய், 11 ஏப்ரல், 2023

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா

 

20- ம் தராவீஹ்  பயான்

وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (31) المؤمن

அல்லாஹ் முஃமின்களுக்குப் பரிசாக ஏற்கெனவே படைத்து வைத்திருக்கும் சுவனம் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இன்பங்கள் நிறைந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ} (بخاري

அல்லாஹ் கூறுகிறான் நான் என் அடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத எந்த செவியும் கேட்டிராத எந்த உள்ளமும் கற்பனை செய்து பார்த்திராத இன்பங்களை வைத்துள்ளேன்

உலகில் நாம் பார்த்த எந்த அசுத்தங்களையும் குரோதங்களையும் அங்கே பார்க்க முடியாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلُ زُمْرَةٍ تَلِجُ الْجَنَّةَ صُورَتُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَا يَبْصُقُونَ فِيهَا وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَتَغَوَّطُونَ آنِيَتُهُمْ فِيهَا الذَّهَبُ أَمْشَاطُهُمْ مِنْ الذَّهَبِ وَالْفِضَّةِ وَمَجَامِرُهُمْ الْأَلُوَّةُ وَرَشْحُهُمْ الْمِسْكُ وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ يُرَى مُخُّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنْ الْحُسْنِ لَا اخْتِلَافَ بَيْنَهُمْ وَلَا تَبَاغُضَ قُلُوبُهُمْ قَلْبٌ وَاحِدٌ يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا (بخاري

  சுவனத்தில் முதலாவது நுழையும் குழுவின் தோற்றம் பௌர்ணமி இரவின் நிலவு போன்றதாகும். அவர்கள், அதில் (எச்சில்) துப்ப மாட்டார்கள், மூக்கு சிந்தமாட்டார்கள், மலம் கழிக்கமாட்டார்கள், அவர்களின் சீப்புக்கள் தங்கம், வெள்ளியினாலானதாகும், அவர்களின் வாசனைத் தட்டு உலுவ்வா எனப்படும் மணக்கட்டையாகும். அவர்களின் வியர்வை வாசனை நிறைந்த கஸ்தூரியாகும், அவர்கள் ஒவ்வொருக்கும் இரு மனைவியர் இருப்பார்கள், அழகின் காரணமாக அவ்விருவரினதும் கெண்டைக்கால் மஜ்ஜை உள்ளிருந்து தெரியும். அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகளோ, குரோதமோ இருக்காது, அவர்களின் இதயங்கள் ஒரு மனிதனின் இதயம் போன்றதாகும். அவர்கள், காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வை துதிப்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்- அவர்களின் இதயங்கள் ஒரு மனிதனின் இதயம் போன்றதாகும் என்றால் அனைவரின் மனதில் உள்ள குரோதங்களை அல்லாஹ் முற்றிலும் நீக்கி விடும்போது ஒரு விஷயத்தில் ஒருவருக்கொருவர் மாற்றி சிந்திப்பது கூட இன்றி ஒரே மாதிரி சிந்திப்பவர்களாக ஆகி விடுவார்கள். அந்த அளவு ஒற்றுமை.

சுவன வாசிகளின் தோற்ற அமைப்பு

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا ثُمَّ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنْ الْمَلَائِكَةِ فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَقَالُوا السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِ فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ فَلَمْ يَزَلْ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الْآنَ  (بخاري

ஆதம் அலை அவர்களை அறுபது அடி உயரம் உள்ளவர்களாக அல்லாஹ் படைத்து பன்பு அவர்களிடம் அதோ அங்கே மலக்குகள் உள்ளார்கள் அவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் அதற்கு அவர்கள் கூறும் பதில் வாழ்த்தைக் கேளுங்கள். அந்த வாழ்த்து உமக்கும் உம் சந்த திக்கும் ஒருவரையொருவர் பார்க்கும்போது சொல்ல வேண்டிய வாழ்த்தாகும் என்று கூறினான். அவ்வாறே நபி ஆதம் அலை சென்று ஸலாம் சொன்னார்கள் மலக்குகள் பதில் சலாம் சொன்னார்கள் சுவனத்தில் நுழைவோர் அனைவரும் ஆதம் அலை அவர்களின் உயரத்தில்  இருப்பர். மனிதனை முதலில் அந்த உயரத்தில் தான் அல்லாஹ் படைத்தான். பிறகு இன்று வரை படைப்புக்கள் (உருவத்தில்) குறைந்து கொண்டே இருக்கிறார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

சுவனவாசிகள் அனைவருக்கும் ஒரே வயது. 33 வயது. எத்தனை கோடி வருடமானாலும் கூடாது

عن معاذ بن جبل أن النبي صلى الله عليه وسلم قال : ( يدخل أهل الجنة الجنة جرداً مرداً مكحلين أبناء ثلاثين أو ثلاث وثلاثين سنة ) رواه الترمذي

சுவனத்தில் சுவனத்தில் நுழையும்போது மொழு மொழுவென்ற உருவத்தோடு அதாவது தாடி மீசை அற்றவர்களாக அதே நேரத்தில் அழகானவர்களாக சுர்மா இட்டவர்களாக நுழைவார்கள் அனைவருக்கும் ஒரே வயது. 33 வயது

கிழவிகள் சுவனம் செல்ல மாட்டார்கள் என்றவுடன் அழுத மூதாட்டி

وعن انس رض عن النبي صلى الله عليه وسلم قال لامرأة عجوز : " إنه لا تدخل الجنة عجوز " فقالت : وما لهن ؟ وكانت تقرأ القرآن . فقال لها : " أما تقرئين القرآن ؟ ( إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا )  (مشكاة

 (அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு மூதாட்டி வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தில் நுழைவிக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.) நபி (ஸல்) அவர்கள், மூதாட்டிகள் சுவனத்தில் நுழையமாட்டார்கள் எனக் கூறியதும் (அப்பெண் அழுதவராக திரும்பினார். அவரிடம், சுவனத்தில் அம்மூதாட்டி (அவரது வயோதிக தோற்றத்தில் நுழையமாட்டார் எனக் கூறிவிட்டு,) அல்லாஹ் அல்குர்ஆனில் (சுவனவாதிகளான) அவர்களை நாம் புதுப்படைப்பாக்கி, கன்னியர்களாகவே ஆக்கியுள்ளோம் என்ற அல்வாகிஆ அத்தியாத்தில் இடம் பெறும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

சுவனத்தில் விவசாயம் செய்ய ஆசைப் படும் விவசாயின் ஆசையையும் அல்லாஹ் பூர்த்தி செய்வான் ஆனால் சற்று நேரத்திலேயே விளைந்து சற்று நேரத்திலேயை அறுவடையும் முடிந்து விடும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒருநாள் தினம் ஹதீஸ் கூறிக் கொண்டிருந்த போது அவர்களுடன் கிராமப்புற மனிதர் ஒருவரும் கூட அமர்ந்திருந்தார். அப்போது சுவனத்தில் விவசாயம் செய்ய ஒரு மனிதன் தனது இரட்சகனிடம் அனுமதி கோருவார். அதற்குப் பதில் தரும் வகையில் அல்லாஹ் நீ விரும்பியது (இங்கு) உனக்கில்லையா எனக் கேட்பான். அவர் ஆம். என்பார், அப்படியானால் நான் விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என அவன் அல்லாஹ்விடம் கூறுவான் (அதில் அவன் ஈடுபட்டதும்) அது உடன் முளைத்து, அதன் தளைகள் கண்பார்வைக்கு கவர்ச்சியானதாகி, அது நன்றாக வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையையும் எட்டி, மலைகள் போன்று ஆகிவிடும். அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ், ஆதமின் மகனே உன்னை நான் விட்டுவிடுகின்றேன். உன்னை எதனாலும் மன நிரப்பம் அடையச் செய்ய முடியாது என்று கூறுவான். உடனே அக்கிராமவாசி: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! விவசாயம் செய்ய விரும்பும் அந்த மனிதர் , ஒன்று குரைஷியராக அல்லது அன்ஸாரி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அவர்கள்தாம் விவசாயிகள், நாம் விவசாயிகள் அல்லவே! என்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் (புகாரி)

கடைசியாக சுவனத்தில் நுழையும் முஃமினைப் பற்றிய அற்புத சம்பவம்

عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « آخِرُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ فَهُوَ يَمْشِى مَرَّةً وَيَكْبُو مَرَّةً وَتَسْفَعُهُ النَّارُ مَرَّةً فَإِذَا مَا جَاوَزَهَا الْتَفَتَ إِلَيْهَا فَقَالَ تَبَارَكَ الَّذِى نَجَّانِى مِنْكِ لَقَدْ أَعْطَانِىَ اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ. فَتُرْفَعُ لَهُ شَجَرَةٌ فَيَقُولُ أَىْ رَبِّ أَدْنِنِى مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلأَسْتَظِلَّ بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا. فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا ابْنَ آدَمَ لَعَلِّى إِنْ أَعْطَيْتُكَهَا سَأَلْتَنِى غَيْرَهَا.

فَيَقُولُ لاَ يَا رَبِّ. وَيُعَاهِدُهُ أَنْ لاَ يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لأَنَّهُ يَرَى مَا لاَ صَبْرَ لَهُ عَلَيْهِ فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ هِىَ أَحْسَنُ مِنَ الأُولَى فَيَقُولُ أَىْ رَبِّ أَدْنِنِى مِنْ هَذِهِ لأَشْرَبَ مِنْ مَائِهَا وَأَسْتَظِلَّ بِظِلِّهَا لاَ أَسْأَلُكَ غَيْرَهَا. فَيَقُولُ يَا ابْنَ آدَمَ أَلَمْ تُعَاهِدْنِى أَنْ لاَ تَسْأَلَنِى غَيْرَهَا فَيَقُولُ لَعَلِّى إِنْ أَدْنَيْتُكَ مِنْهَا تَسْأَلُنِى غَيْرَهَا . فَيُعَاهِدُهُ أَنْ لاَ يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لأَنَّهُ يَرَى مَا لاَ صَبْرَ لَهُ عَلَيْهِ فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا. ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ عِنْدَ بَابِ الْجَنَّةِ هِىَ أَحْسَنُ مِنَ الأُولَيَيْنِ. فَيَقُولُ أَىْ رَبِّ أَدْنِنِى مِنْ هَذِهِ لأَسْتَظِلَّ بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا لاَ أَسْأَلُكَ غَيْرَهَا. فَيَقُولُ يَا ابْنَ آدَمَ أَلَمْ تُعَاهِدْنِى أَنْ لاَ تَسْأَلَنِى غَيْرَهَا قَالَ بَلَى يَا رَبِّ هَذِهِ لاَ أَسْأَلُكَ غَيْرَهَا. وَرَبُّهُ يَعْذِرُهُ لأَنَّهُ يَرَى مَا لاَ صَبْرَ لَهُ عَلَيْهَا فَيُدْنِيهِ مِنْهَا فَإِذَا أَدْنَاهُ مِنْهَا فَيَسْمَعُ أَصْوَاتَ أَهْلِ الْجَنَّةِ فَيَقُولُ أَىْ رَبِّ أَدْخِلْنِيهَا.

فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِى مِنْكَ أَيُرْضِيكَ أَنْ أُعْطِيَكَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّى وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ ». فَضَحِكَ ابْنُ مَسْعُودٍ فَقَالَ أَلاَ تَسْأَلُونِّى مِمَّ أَضْحَكُ فَقَالُوا مِمَّ تَضْحَكُ قَالَ هَكَذَا ضَحِكَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-. فَقَالُوا مِمَّ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ قَالَ « مِنْ ضِحْكِ رَبِّ الْعَالَمِينَ حِينَ قَالَ أَتَسْتَهْزِئُ مِنِّى وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ فَيَقُولُ إِنِّى لاَ أَسْتَهْزِئُ مِنْكَ وَلَكِنِّى عَلَى مَا أَشَاءُ قَادِرٌ ». (بخاري

சுவனத்தில் இறுதியாக நுழையும் ஒரு மனிதனை அல்லாஹ் நரகத்தை விட்டும் தப்பிக்க வைக்கும்போது அவன், நரகத்தை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே ஒரு தடவை நடந்தும், மற்றொரு தடவை தவழ்ந்தும் செல்வான்.(வழியில்) நரகத்தின் ஜுவாலை அவனை சில போது தீண்டிவிடும். அவன் அந்தப் பாலத்தைக் கடந்ததும் நரகின் பக்கமாக திரும்பிப் பார்த்து

تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ

உன்னில் இருந்தும் என்னைப் பாதுகாத்தானே அவன் (அல்லாஹ்) மகத்துவம் நிறைந்தவன், அவன் முதல், மற்றும் இறுதியாக வந்தவர்கள் எவருக்கும் வழங்காத (பல வெகுமதிகளை) எனக்கு அவன் வழங்கியுள்ளான் எனக் கூறுவான். (முஸ்லிம்).

மற்றொரு தொடரில் ….. ‘அப்போது அவன் முன்பாக (சுவனத்து) மரம் ஒன்று உயர்த்தப்படும், எனது இரட்சகனே! அதன் நிழலில் நிழல் பெறவும், அதன் கீழ் ஓடும் நீரைப்பருகவும் என்னை இந்த மரத்தின் பக்கம் நெருக்கி வைப்பாயாக என வேண்டுவான். ஆதமின் மகனே! நான் இதை உனக்கு வழங்கினால் வேறு எதையும் நீ என்னிடம் கேட்பாயா என அல்லாஹ் கேட்பான். அவன் இல்லை எனது இரட்சகனே! நான் அதைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என வாக்குறுதி செய்ததும் அல்லாஹ் அதை வழங்குவான். பின்னும் அதைவிட அழகான மரம் ஒன்று கொடுக்கப்படுவான். பின்னும் அவன் அதில் ஆசை வைத்து அதன் நீரை அருந்திட, நிழல் பெற மீண்டும் கேட்பான், அல்லாஹ் அவனிடம் ஆரம்ப வாக்குறுதியை நினைவுபடுத்திக் கூறும்போது இதன் பின் எதையும் கேட்கமாட்டேன் எனக் கூறுவான். அந்த மரத்தில் இருந்து ஆரம்பமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவனவாசல்வரை நெருக்கப்படுவான். அப்போது அவன் சுவனவாதிகளின் சப்தத்தை செவிமடுப்பான். எனது இரட்சகனே! என்னை அதில் நுழைவிப்பாயாக! எனக் கூறுவான். ஆதமின் மகனே நான் உனக்கு உலகையும், அதை போன்றதொரு மடங்கும் தருவேன். அதைக் கொண்டு நீ பொருந்திக் கொள்வாயா எனக் கேட்பான்,

قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ

அப்போது அந்த சுவனவாதி, நீ அகிலங்களின் அதிபதியாக இருந்து கொண்டு என்னைப் பரிகாசம் செய்கின்றாயா? எனக் கேட்பான்  அறிவிப்பாளரான இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சிரித்தார்கள். இதை செவிமடுத்தோரிடம் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறே சிரித்தார்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன அடிப்படையில் சிரித்தார்கள் எனக் கேட்டபோது அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் சிரிப்பின் மூலம் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவனத்தின் முதல் உணவு

عن أَنَس رض أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ بَلَغَهُ مَقْدَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَأَتَاهُ يَسْأَلُهُ عَنْ أَشْيَاءَ فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ ثَلَاثٍ لَا يَعْلَمُهُنَّ إِلَّا نَبِيٌّ مَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمَا بَالُ الْوَلَدِ يَنْزِعُ إِلَى أَبِيهِ أَوْ إِلَى أُمِّهِ قَالَ أَخْبَرَنِي بِهِ جِبْرِيلُ آنِفًا قَالَ ابْنُ سَلَامٍ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنْ الْمَلَائِكَةِ قَالَ أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُهُمْ مِنْ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ الْحُوتِ وَأَمَّا الْوَلَدُ فَإِذَا سَبَقَ مَاءُ الرَّجُلِ مَاءَ الْمَرْأَةِ نَزَعَ الْوَلَدَ وَإِذَا سَبَقَ مَاءُ الْمَرْأَةِ مَاءَ الرَّجُلِ نَزَعَتْ الْوَلَدَ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّكَ رَسُولُ اللَّهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ فَاسْأَلْهُمْ عَنِّي قَبْلَ أَنْ يَعْلَمُوا بِإِسْلَامِي فَجَاءَتْ الْيَهُودُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ رَجُلٍ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ فِيكُمْ قَالُوا خَيْرُنَا وَابْنُ خَيْرِنَا وَأَفْضَلُنَا وَابْنُ أَفْضَلِنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ قَالُوا أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ فَأَعَادَ عَلَيْهِمْ فَقَالُوا مِثْلَ ذَلِكَ فَخَرَجَ إِلَيْهِمْ عَبْدُ اللَّهِ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ قَالُوا شَرُّنَا وَابْنُ شَرِّنَا وَتَنَقَّصُوهُ قَالَ هَذَا كُنْتُ أَخَافُ يَا رَسُولَ اللَّهِ

யூத அறிஞர்களில் ஒருவராக இருந்த பின்வரும் மூன்று கேள்விகள் கேட்டு சரியான பதில் கிடைத்த பின் இஸ்லாத்தில் இணைந்து கொண்ட அப்துல்லாஹ் பின் ஸலாம் இவ்வாறு கேட்டார்கள்.

முஹம்மத் அவர்களே! உம்மிடம் மூன்று கேள்விகள் நான் கேட்க விரும்புகின்றேன். அதை ஒரு நபியைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க (அறிவிக்க) முடியாது எனக் கூறி விட்டு, மறுமையின் முதலாவது அடையாளம் என்ன? சுவனவாதிகளின் முதல் உணவு யாது? ஒரு குழந்தை தனது தந்தை அல்லது தாயின் சாயலில் இருப்பதன் அளவீடு என்ன? இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று முன்னர்தான் இது பற்றி ஜிப்ரீல் எனக்கு அறிவித்து தந்தார்கள்

 மறுமையின் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மனிதர்களை கிழக்கில் இருந்து மேற்கிற்கு விரட்டும், சுவனவாதிகள் முதலாவது உண்ணும் உணவு மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் சுவை நிரம்பிய ஒரு பாகமாகும். ஆணின் விந்து (கருவரையில்) முந்திச் சென்றால் குழந்தை தந்தையின் சாயலில் பிறக்கின்றது, தாயின் நீர் முந்திச் சென்றால் குழந்தை தாயைப் போன்று பிறக்கின்றது. இரண்டு சம நிலையில் சென்றால் உறவினர்களில் ஒருவரைப் போன்று குழந்தை பிறக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் தூய திருக்கலிமாவை மொழிந்தவர்களாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். (புகாரி).

விளக்கம் - இந்த உலகில் நாம் சாப்பிட்டுப் பழகாத ஒரு பொருளைக் கூட அல்லாஹ் மறுமையில் சுவை மிகுந்த தாக ஆக்கி சாப்பிடுவதற்கு விருப்பமானதாக அல்லாஹ் ஆக்கி விடலாம்

அல்லாஹ்வைப் பார்ப்பது சுவனத்தின் இன்பங்களை விட மிகப் பெரும் இன்பம்

عَنْ صُهَيْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ

 சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்ததும், நான் உங்களுக்கு அதிகப்படியாக ஏதேனும் தந்திட நீங்கள் விரும்புகின்றீர்களா?என அல்லாஹ் கேட்பான். அதற்கு அந்த சுவனவாதிகள், எமது முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா? எம்மை நீ சுவனத்தில் நுழைவிக்கவில்லையா? எம்மை நீ நரகத்தில் இருந்து காப்பாற்றவில்லையா? (இதை விடவும் வேறு என்ன இருக்கின்றது) என பதில் அளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். இந்நிலையில் அவர்கள் தமது இரட்சகனைப் பார்ப்பதை விட வேறு எந்த ஒன்றும் இவர்களுக்கு விருப்பமானதாகக் கொடுக்கப்பட்டமாட்டார்கள் (முஸ்லிம்:

சுவனத்தில் வீண் பேச்சு இல்லை

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا
ஹூருல் ஈன் என்பது சுவனத்து ஆண்கள், சுவனத்துப் பெண்கள் இருவருக்கும் பொதுவான ஒரு வார்த்தையாகும். அதாவது இந்த உலகில் வாழ்ந்து சுவனம் செல்லாத சுவனத்திலேயே வசிப்பவர்கள் தான் ஹூருல் ஈன். ஆனால் அவர்களை விட இந்த உலகில் வாழ்ந்து சுவனம் செல்பவர்களுக்கு அல்லாஹ் அதிக அழகைத் தருவான்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...