புதன், 12 ஏப்ரல், 2023

அவரவருக்குத் தகுந்தாற்போல் அல்லாஹ் தருவான்

 

21- ம் தராவீஹ்  பயான்

وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَا يَشَاءُ (27) الزخرف

 கருத்து-அல்லாஹ் அனைத்து அடியார்களுக்கும் தன் இரணத்தை விசாலமாக்கி விட்டால் பிறகு அவர்கள் அல்லாஹ்வை மறந்து அநீதம் செய்ய ஆரம்பித்து விடுவர் எனவே அல்லாஹ் அவரவருக்குத் தகுந்தாற்போல் அளந்தே அருளுகிறான்.                                                     

விளக்கம்- நாம் பல நேரங்களில் அல்லாஹ்விடம் பல கோரிக்கைகளை முன்வைக்கிறோம். சில நேரங்களில் அது நிறைவேறுகிறது. சில நேரங்களில் அது நிறைவேறுவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஹலாலான வருவாய் இல்லா விட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை. ஆனால் ஹலாலான வருவாய் இருந்தும் பல கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை என்றால் அல்லாஹ் அதில் நமக்குத் தெரியாத மறைவான சூட்சுமங்களை வைத்திருக்கலாம். அதை நாம் அறிய மாட்டோம். இவனுக்கு அதிகமாக தந்தால், கேட்பதையெல்லாம் தந்தால் அல்லாஹ்வை மறந்து விடுவான் இவனை இந்த அளவுக்கு வைத்திருந்தால் மட்டுமே கொஞ்சமேனும் இறை நினைவோடு இருப்பார் என்பது கூட காரணமாக இருக்கலாம்.                                     

 எத்தனையோ நல்லோர்கள் தம் மனதில் நாம் ஐவேளை தொழுகிறோம். அமல் செய்கிறோம். வியர்வை சிந்தி உழைக்கிறோம் அவ்வாறிருந்தும் அல்லாஹ் நம்மை ஏழ்மையில் வைத்துள்ளானே என்ற எண்ணம் சில நேரம் வரும். இந்த எண்ணம் வராமல் இருக்க ஒரு குட்டிக் கதை-  ஒரு தாய்க்கு மூன்று ஆண் மக்கள். மூவரும் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ஒரு உறவினர் அப்பெண்ணின் வீட்டுக்கு வருகிறார்.  வந்தவரை உபசரித்து அவருக்காக பிரியாணி தயார் செய்கிறார். இந்நிலையில் மூத்த மகன் மதிய உணவுக்காக வீட்டுக்கு வருகிறான். விருந்தாளியுடன் சேர்த்து அவனுக்கும் பிரியாணியை அப்பெண் பரிமாறுகிறார். சற்று நேரத்தில் இன்னொரு மகனும் வருகிறான். அவன் எனக்கும் பிரியாணி வேண்டும். என்கிறான். ஆனால் அந்த தாய் உனக்கு ரசம் சோறு தான் என்று கூறி அவனுக்காக தனியாக சமைத்து வைத்த ரசம், சோற்றைப் பரிமாறுகிறார். சற்று நேரத்தில் மூன்றாவது மகன் வருகிறான். அவனும் வந்து பிரியாணி கேட்க, உனக்கு பிரியாணி கிடையாது என்கிறார். ரசம் சோறாவது தரும்படி கேட்க, அதுவும் உனக்கு இல்லை என்று கூறி வெறும் கஞ்சியை கொடுத்து அனுப்புகிறார். மூவரும் சென்ற பின் விருந்தாளி அப்பெண்ணிடம் கேட்டார். மூவரும் உன்னுடைய பிள்ளைகள் தானே. அவ்வாறிருக்க மூத்த மகனுக்கு மட்டும் பிரியாணி தந்தாய். இரண்டாது மகனுக்கு வெறும் ரசம் சோறு தந்தாய்.  மூன்றாவது மகனுக்கு அது கூட இல்லை. வெறும் கஞ்சியைக் கொடுத்து அனுப்பி விட்டாய். ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்க அந்த தாய் கூறினார். என் மூத்த மகன் உடல் நலத்தோடு இருக்கிறான். அதனால் அவனுக்கு பிரியாணி தந்தேன். இரண்டாம் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அதனால் அவனுக்கு ரசம் சோறு தந்தேன். என்றார். உடனே விருந்தாளி சரி... அது போகட்டும். மூன்றாம் மகனுக்கு ஏன் வெறும் கஞ்சி..? என்று கேட்க, அந்த தாய் சொன்னார். அவனுக்கு பேதி ஏற்பட்டு இன்று தான் இனிமா கொடுக்கப்பட்டது. கெட்டியான உணவு அவனுக்கு ஆகாது. அதனால் அவனுக்கு கஞ்சியைக் கொடுத்தேன் என்றார். அந்த தாயின் பாசத்தைக் கண்டு அவர் நெகிழ்ந்து போனார். இதேபோல் தான் அல்லாஹ் தன்னுடைய நல்லடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான். யாரை எப்படி வாழ வைத்தால் அவர்களுக்கு நல்லது என்றிருக்குமோ அப்படி வைப்பான்.                                                     

என்னுடைய துஆவை அல்லாஹ் ஏற்கவில்லை என்று ஒருபோதும் எண்ணி விடக்கூடாது

ஒரு முஃமினின் துஆ மூன்று வகையில் ஏதேனும் ஒரு வகையில் ஏற்கப்படும். 1.அவர் கேட்டதை அல்லாஹ் உடனே தந்து விடுவான். 2. அவர் கேட்டதை இப்போது அதற்குப் பகரமாக மறுமையில் மிகவும் சிறப்பாக தருவான். 3. அவர் கேட்டதைத் தராமல் அதற்குப் பகரமாக அவருக்கு ஏற்படவிருந்த சோதனையை விட்டும் அவரைப் பாதுகாப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய போது அப்படியானால் நாங்கள் அளவுக்கு அதிகமாகவே அல்லாஹ்விடம் கேட்கலாமா என தோழர்கள் கேட்க, நபி ஸல் அவர்கள் அல்லாஹ் கொடுப்பதில் மிகப் பெரியவன் என்றார்கள்.        

عن جَابِرِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:يَدْعُو اللهُ بِالْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُوقِفَهُ بَيْنَ يَدَيْهِ فَيَقُولُ: عَبْدِي إِنِّي أَمَرْتُكَ أَنْ تَدْعُوَنِي؟وَوَعَدْتُكَ أَنْ أَسْتَجِيبَ لَكَ، فَهَلْ كُنْتَ تَدْعُونِي؟ فَيَقُولُ:نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: أَمَا إِنَّكَ لَمْ تَدْعُنِي بِدَعْوَةٍ إِلَّا اسْتَجَبْتُ لَكَ أَلَيْسَ دَعَوْتَنِي فِي يَوْمِ كَذَا وَكَذَا لِغَمٍّ نَزَلَ بِكَ أَنْ أُفَرِّجَهُ عَنْكَ فَفَرَّجْتُهُ عَنْكَ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: إِنِّي عَجَّلْتُهَا لَكَ فِي الدُّنْيَا، وَدَعَوْتَنِي يَوْمَ كَذَا وَكَذَا لِغَمٍّ نَزَلَ بِكَ أَنْ أُفَرِّجَ عَنْكَ فَلَمْ تَرَ فَرَجًا ؟قَالَ:نَعَمْ يَا رَبِّ فَيَقُولُ: إِنِّي ادَّخَرْتُ لَكَ بِهَا فِي الْجَنَّةِ كَذَا وَكَذَا وَدَعَوْتَنِي فِي حَاجَةٍ أَقْضِيهَا لَكَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فَقَضَيْتُهَا ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ، فَيَقُولُ: فَإِنِّي عَجَّلْتُهَا لَكَ فِي الدُّنْيَا، وَدَعَوْتَنِي فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي حَاجَةٍ أَقْضِيهَا فَلَمْ تَرَ قَضَاءَهَا ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ، فَيَقُولُ: إِنِّي ادَّخَرْتُهَا لَكَ فِي الْجَنَّةِ كَذَا وَكَذَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:فَلَا يَدَعُ اللهُ دَعْوَةً دَعَا بِهَا عَبْدُهُ الْمُؤْمِنُ إِلَّا بَيَّنَ لَهُ إِمَّا أَنْ يَكُونَ عَجَّلَ لَهُ فِي الدُّنْيَا، وَإِمَّا أَنْ يَكُونَ ادَّخَرَ لَهُ فِي الْآخِرَةِ " قَالَ: " فَيَقُولُ الْمُؤْمِنُ فِي ذَلِكَ الْمَقَامِ: يَا لَيْتَهُ لَمْ يَكُنْ عُجِّلَ لَهُ شَيْءٌ مِنْ دُعَائِه (حاكم) (الترغيب) كتاب الذكر والدعاء

அல்லாஹ் ஒரு முஃமினை மறுமை நாளில் அழைத்து தனக்கு முன்னால் நிற்க வைத்துஎன் அடியானே என்னிடம் துஆச் செய்யும்படி ஏவியிருந்தேனே இன்னும் உனது துஆவுக்கு பதில் தருவதாகவும் கூறியிருந்தேனே துஆச் செய்தாயா என்று கேட்கும்போது ஆம் ரப்பே என்று அந்த அடியான் கூறுவான்.அதற்குஅல்லாஹ் நிச்சயமாக உன் துஆக்கள் அனைத்துக்கும் நான் பதிலளித்தேன். என்று கூறி விட்டு அடியானே இன்ன நாளில் நீ உனது சிரமத்தை நீக்கச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த சிரமத்தை நான் நீக்கினேன் அல்லவா என்று கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே அந்த துஆவின் பலனை உடனே பெற்றேன் என்பான். மறுபடியும் அல்லாஹ் அடியானிடம்  இன்ன நாளில் நீ உனது சிரமத்தை நீக்கச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த சிரமம் உனக்கு நீங்கியிருக்காதே என்று அல்லாஹ் கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே என்பான். அதற்கு அல்லாஹ் உன்னுடைய நீக்கப்படாத அந்த சிரமத்திற்காக சுவனத்தில் இத்தகைய பாக்கியங்களை வைத்துள்ளேன் என்பான். மறுபடியும் அல்லாஹ் அடியானிடம்  இன்ன நாளில் நீ உனது உன் தேவையை நிறைவேற்றச் சொல்லி துஆச் செய்தாய் அல்லவா அந்த தேவை உனக்கு நிறைவேறியிருக்காதே என்று அல்லாஹ் கூறும்போது அநத அடியான் ஆம் ரப்பே என்பான். அதற்கு அல்லாஹ் உன்னுடைய நிறைவறாத அந்த தேவைக்கு பதிலாக சுவனத்தில் இத்தகைய பாக்கியங்களை வைத்துள்ளேன் என்பான். இந்த அடியானைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய போது அந்த அடியான் கேட்ட எல்லா துஆக்களும் இவ்வாறாக ஏற்கப்பட்டிருக்கும். சில துஆக்களுக்கு உடனே உலகத்திலும் சில துஆக்கள் ஏற்கப்பட்டதற்கு பகரமாக மறுமை நாளிலும் அது தரப்படக்கூடியதாகவும் அமைந்திருக்கும். இறுதியாக அந்த அடியான் கூறுவான். நான் கேட்டும் உலகில் தரப்படாத துஆக்களுக்கு பதிலாக அல்லாஹ் இவ்வளவு இன்பங்கள் வைத்திருப்பது தெரியாமல் போய் விட்டதே நான் கேட்ட எந்த துஆவுக்கும் பதில் உலகில் தரப்படாமல் மறுமையில் தரப்பட்டிருக்க வேண்டுமே என்பான்.                      

கருத்து- துஆவில் தான் கேட்ட கோரிக்கைகளுக்குப் பகரமாக அல்லாஹ் மறுமையில் வைத்துள்ள இன்பங்களைக் கண்டு தான் கேட்ட அனைத்து துஆக்களுக்கும் பிரதிபலன் உலகில் தரப்படாமல் மறுமையிலேயே கிடைத்திருக்க வேண்டுமே எனக் கருதுவான்

ஒரு முஃமின் ஹலாலை உண்பவராக இருந்து அவர் செய்யும் துஆ ஆகுமாக்கப்பட்ட துஆவாக, உறவைத் துண்டிக்காத துஆவாக, நம்பிக்கையுடன் கூடியதாக இருக்கும் பட்சத்தில் அவருடைய துஆவை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ قَالَ يَقُولُ قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ (مسلم) كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ

படிப்பினை- பல முஃமின்களின் வாழ்க்கையில் அவர்களின் துஆ முறையாக இருந்தும் அவர்களின் கோரிக்கைகளைகளை இந்த உலகில் அல்லாஹ் நிறைவேற்றாமல் இருப்பது அவர்களின் நன்மைக்காக என்று விளங்க வேண்டும்.

மூஸா அலை, ஹாரூன் அலை இருவரின் துஆ ஏற்கப்பட்ட பிறகும் என்று 40 வருடங்கள் கடந்தே ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டான்

وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا..(يونس)قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة

அதிகமாக செழிப்பைத் தந்தால் அநியாயம் செய்வார்கள் என்பதை அல்லாஹ் அறிந்தும் சில நேரங்களில் அல்லாஹ் கொடுக்கலாம் அது அவர்களை மொத்தமாக தண்டிப்பதற்காக  

இதற்கு உதாரணம் மேலே சொல்லப்பட்ட ஃபிர்அவ்னுக்கு அல்லாஹ் தந்த தை எடுத்துக் கூறலாம். மூஸா அலைஹிஸ்ஸலாம் துஆச் செய்யும்போதும் இதைத் தான் குறிப்பிட்டுக் காட்டினார்கள். ரப்பே நீ அவனுக்கு நிறைய தந்திருக்கிறாய் அதனால் தான் அவன் இவ்வாறு அநியாயம் செய்கிறான். எனவே இனிமேல் அவனுக்குத் தராதே என்று துஆச் செய்தார்கள் இந்த துஆவை ஏற்றுக் கொண்ட பின்பும் கூட நாற்பது வருடங்கள் அல்லாஹ் அவனுக்கு செழிப்பத் தந்து கொண்டேயிருந்தான். அதன் மூஸா அலைஹிஸ்ஸலாம் செய்த துஆ வேலை செய்ய ஆரம்பித்த து. அவனுடைய சுகபோகங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு அவன் அழிக்கப்பட்டான். 

ஸஃலபாவுடைய விஷயத்திலும் இதுதான் நடந்தது. அல்லாஹ் நிறைய தந்தால் பாவம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லுக்கு ஏற்ப அவர் விஷயத்தில் நடந்தது. அதை அவருக்கு உணர்த்தவும் செய்தார்கள். வேண்டாம் தஃலபாவே.. இப்போதுள்ள நிலையே உமக்கு நல்லது என அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர் கேட்கவில்லை

வசதி வந்த பின்பு ஜகாத் தராமல் இழுத்தடித்த ஸஃலபாவின்  பரிதாப நிலை

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ (76) فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ (77) التوبة

عَنْ أَبِي أُمَامَة الْبَاهِلِيّ عَنْ ثَعْلَبَة بْن حَاطِب الْأَنْصَارِيّ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ اُدْعُ اللَّه أَنْ يَرْزُقنِي مَالًا قَالَ فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَيْحك يَا ثَعْلَبَة قَلِيل تُؤَدِّي شُكْره خَيْر مِنْ كَثِير لَا تُطِيقهُ قَالَ ثُمَّ قَالَ مَرَّة أُخْرَى فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُون مِثْل نَبِيّ اللَّه ؟ فَوَاَلَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ شِئْت أَنْ تَسِير الْجِبَال مَعِي ذَهَبًا وَفِضَّة لَسَارَتْ .

قَالَ وَاَلَّذِي بَعَثَك بِالْحَقِّ لَئِنْ دَعَوْت اللَّه فَرَزَقَنِي مَالًا لَأُعْطِيَنَّ كُلّ ذِي حَقّ حَقّه فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ اُرْزُقْ ثَعْلَبَة مَالًا قَالَ فَاتَّخَذَ غَنَمًا فَنَمَتْ كَمَا يَنْمِي الدُّود فَضَاقَتْ عَلَيْهِ الْمَدِينَة فَتَنَحَّى عَنْهَا فَنَزَلَ وَادِيًا مِنْ أَوْدِيَتهَا حَتَّى جَعَلَ يُصَلِّي الظُّهْر وَالْعَصْر فِي جَمَاعَة وَيَتْرُك مَا سِوَاهُمَا ثُمَّ نَمَتْ وَكَثُرَتْ فَتَنَحَّى حَتَّى تَرَكَ الصَّلَوَات إِلَّا الْجُمُعَة وَهِيَ تَنْمِي كَمَا يَنْمِي الدُّود حَتَّى تَرَكَ الْجُمُعَة فَطَفِقَ يَتَلَقَّى الرُّكْبَان يَوْم الْجُمْعَة لِيَسْأَلهُمْ عَنْ الْأَخْبَار فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ ثَعْلَبَة ؟ فَقَالُوا يَا رَسُول اللَّه اِتَّخَذَ غَنَمًا فَضَاقَتْ عَلَيْهِ الْمَدِينَة فَأَخْبَرُوهُ بِأَمْرِهِ فَقَالَ يَا وَيْح ثَعْلَبَة يَا وَيْح ثَعْلَبَة يَا وَيْح ثَعْلَبَة وَأَنْزَلَ اللَّه جَلَّ ثَنَاؤُهُ خُذْ مِنْ أَمْوَالهمْ صَدَقَة . الْآيَة .

وَنَزَلَتْ فَرَائِض الصَّدَقَة فَبَعَثَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَيْنِ عَلَى الصَّدَقَة مِنْ الْمُسْلِمِينَ رَجُلًا مِنْ جُهَيْنَة وَرَجُلًا مِنْ سُلَيْم وَكَتَبَ لَهُمَا كَيْف يَأْخُذَانِ الصَّدَقَة مِنْ الْمُسْلِمِينَ وَقَالَ لَهُمَا مُرَّا بِثَعْلَبَة وَبِفُلَانٍ رَجُل مِنْ بَنِي سُلَيْم فَخُذَا صَدَقَاتهمَا فَخَرَجَا حَتَّى أَتَيَا ثَعْلَبَة فَسَأَلَاهُ الصَّدَقَة وَأَقْرَآهُ كِتَاب رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : مَا هَذِهِ إِلَّا جِزْيَة مَا هَذِهِ إِلَّا أُخْت الْجِزْيَة مَا أَدْرِي مَا هَذَا ؟ اِنْطَلِقَا حَتَّى تَفْرُغَا ثُمَّ عُودَا إِلَيَّ فَانْطَلَقَا وَسَمِعَ بِهِمَا السُّلَمِيّ فَنَظَرَ إِلَى خِيَار أَسْنَان إِبِله فَعَزَلَهَا لِلصَّدَقَةِ ثُمَّ اِسْتَقْبَلَهُمَا بِهَا فَلَمَّا رَأَوْهَا قَالُوا مَا يَجِب عَلَيْك هَذَا وَمَا نُرِيد أَنْ نَأْخُذ هَذَا مِنْك فَقَالَ بَلَى فَخُذُوهَا فَإِنَّ نَفْسِي بِذَلِكَ طَيِّبَة وَإِنَّمَا هِيَ لَهُ فَأَخَذَاهَا مِنْهُ وَمَرَّا عَلَى النَّاس فَأَخَذَا الصَّدَقَات ثُمَّ رَجَعَا إِلَى ثَعْلَبَة فَقَالَ : أَرُونِي كِتَابكُمَا فَقَرَأَهُ فَقَالَ مَا هَذِهِ إِلَّا جِزْيَة مَا هَذِهِ إِلَّا أُخْت الْجِزْيَة اِنْطَلِقَا حَتَّى أَرَى رَأْيِي فَانْطَلَقَا حَتَّى أَتَيَا النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَآهُمَا قَالَ يَا وَيْح ثَعْلَبَة قَبْل أَنْ يُكَلِّمهُمَا وَدَعَا لِلسُّلَمِيّ بِالْبَرَكَةِ فَأَخْبَرَاهُ بِاَلَّذِي صَنَعَ ثَعْلَبَة وَاَلَّذِي صَنَعَ السُّلَمِيّ فَأَنْزَلَ اللَّه عَزَّ وَجَلَّ وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّه لَئِنْ آتَانَا مِنْ فَضْله لَنَصَّدَّقَنَّ .الْآيَة .

قَالَ وَعِنْد رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ رَجُل مِنْ أَقَارِب ثَعْلَبَة فَسَمِعَ ذَلِكَ فَخَرَجَ حَتَّى أَتَاهُ فَقَالَ : وَيْحك يَا ثَعْلَبَة قَدْ أَنْزَلَ اللَّه فِيك كَذَا وَكَذَا فَخَرَجَ ثَعْلَبَة حَتَّى أَتَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ أَنْ يَقْبَل مِنْهُ صَدَقَته فَقَالَ إِنَّ اللَّه مَنَعَنِي أَنْ أَقْبَلَ مِنْك صَدَقَتك فَجَعَلَ يَحْسُو عَلَى رَأْسه التُّرَاب فَقَالَ لَهُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ هَذَا عَمَلك قَدْ أَمَرْتُك فَلَمْ تُطِعْنِي .

فَلَمَّا أَبَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ أَنْ يَقْبِض صَدَقَته رَجَعَ إِلَى مَنْزِله فَقُبِضَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ وَلَمْ يَقْبَل مِنْهُ شَيْئًا ثُمَّ أَتَى أَبَا بَكْر رَضِيَ اللَّه عَنْهُ حِين اُسْتُخْلِفَ فَقَالَ قَدْ عَلِمْت مَنْزِلَتِي مِنْ رَسُول اللَّه وَمَوْضِعِي مِنْ الْأَنْصَار فَاقْبَلْ صَدَقَتِي فَقَالَ أَبُو بَكْر لَمْ يَقْبَلهَا مِنْك رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَى أَنْ يَقْبَلهَا فَقُبِضَ أَبُو بَكْر وَلَمْ يَقْبَلهَا .

فَلَمَّا وُلِّيَ عُمَر رَضِيَ اللَّه عَنْهُ أَتَاهُ فَقَالَ : يَا أَمِير الْمُؤْمِنِينَ اِقْبَلْ صَدَقَتِي فَقَالَ لَمْ يَقْبَلهَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَبُو بَكْر وَأَنَا أَقْبَلهَا مِنْك ؟ فَقُبِضَ وَلَمْ يَقْبَلهَا فَلَمَّا وُلِّيَ عُثْمَان رَضِيَ اللَّه عَنْهُ أَتَاهُ فَقَالَ : اِقْبَلْ صَدَقَتِي فَقَالَ لَمْ يَقْبَلهَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَبُو بَكْر وَلَا عُمَر وَأَنَا أَقْبَلهَا مِنْك ؟ فَلَمْ يَقْبَلهَا مِنْهُ فَهَلَكَ ثَعْلَبَة فِي خِلَافَة عُثْمَان . (تفسير ابن كثير    

அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸஅலபா பின் ஹாத்திப் அல்அன்சாரீ என்பவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், (இறைத்தூதரே!) இறைவன் எனக்குச் செல்வத்தை வழங்க வேண்டுமெனஅவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸஅலபா! உமக்குக் கேடுதான்! உம்மால் நன்றி செலுத்த முடிகின்ற அளவுக்கு நீர் குறைவான செல்வத்தைப் பெற்றிருப்பதே, நீர் நன்றி செலுத்த இயலாத அளவுக்கு அதிகமான செல்வத்தைப் பெற்றிருப்பதைவிடச் சிறந்ததாகும் என்று கூறினார்கள். அவர் மற்றொரு முறையும் அதே கோரிக்கையை முன்வைத்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், நீர் அல்லாஹ்வின் நபியைப் போன்று (குறைந்த செல்வம் உடையவராக) இருக்க விரும்பவில்லையா? என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது ஆணையாக! இந்த மலைகள் வெள்ளியாகவும் பொன்னாகவும் (மாறி) என்னுடன் வர வேண்டும் என்று நான் நினைத்தால் கண்டிப்பாக அவ்வாறே வந்துவிடும் என்று கூறினார்கள். அதற்கு அவர், உங்களை உண்மையுடன் அனுப்பிய (இறை)வன் மீது சத்தியமாக! நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து, அதையடுத்து இறைவன் எனக்குச் செல்வம் வழங்கினால், நான் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமைகளை நிச்சயமாக வழங்கிவிடுவேன் என்றார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! ஸஅலபாவுக்குச் செல்வத்தை வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

பின்னர் அவர் ஓர் ஆட்டைப் பெற்றார். அந்த ஆடு, புழுக்கள் பல்கிப் பெருகுவதைப் போன்று பல்கிப் பெருகியது எனவே, அவருக்கு மதீனா நெருக்கடியாகத் தோன்றியது. எனவே, அங்கிருந்து நகன்று, மதீனாவின் (புறநகரிலுள்ள) பள்ளத்தாக்குகளில் ஒன்றில் வசித்தார்.

இஸ்லாத்தில் ஐவேளைத் தொழுகை என்பது கட்டாயக் கடமை. ஆனால் ஸஅலபா நாளடைவில் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளுக்கு மட்டுமே (மதீனாவுக்குச் சென்று) கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டுவிட்டு, மற்ற தொழுகைகளைக் கைவிடலானார். அதன் பின்னரும் அந்த ஆட்டு மந்தை பல்கிப் பெருக, அந்த இடத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். அதன் விளைவாக, வாரம் ஒருமுறை தொழப்படும் கூட்டுத் தொழுகையான ஜுமுஆ தொழுகையைத் தவிர மற்ற கடமையான தொழுகைகள் அனைத்தையும் கைவிடும் நிலைக்கு ஸஅலபா ஆளானார்.

அந்த ஆட்டு மந்தை இன்னும் அதிகமாகப் புழுக்கள் பெருகுவதைப் போன்று பல்கிப் பெருகவே, இறுதியில் ஜுமுஆ தொழுகையைக்கூடக் கைவிட்டுவிட்டார். வெள்ளிக்கிழமையன்று, (மதீனாவின்) தகவல்களை விசாரிப்பதற்காக (அங்கிருந்து வரக்கூடிய) பயணக் கூட்டத்தாரை எதிர்பார்த்துக் காத்திருக்கலானார்.

இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஅலபாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர் ஓர் ஆட்டைப் பெற்றார். (அது பல்கிப் பெருகி பெரிய மந்தையாகவே) அவருக்கு மதீனா நெருக்கடியாகத் தோன்றிற்று என அவர் தொடர்பான தகவல்களைத் தெரிவித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே!” என்று கூறினார்கள்.அதையடுத்து வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன், (நபியே!) அவர்களின் செல்வங்களிலிருந்து தர்மத்தைப் பெற்று அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக” (9:103) எனும் வசனத்தை அருளினான். கட்டாய தர்மம் தொடர்பான சட்டதிட்டங்களும் நபியவர்களுக்கு அருளப்பெற்றன.எனவே, முஸ்லிம்கள் வழங்கியாக வேண்டிய (கட்டாய தர்மமாகிய) ஸகாத் பொருட்களைத் திரட்டுவதற்காக இரண்டு பேரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஸ்லிம்களிடமிருந்து தர்மப் பொருட்களை எவ்வாறு வசூலிக்க வேண்டும் எனும் விவரத்தை அவ்விருவருக்கும் எழுதிக் கொடுத்தார்கள்.

அவ்விருவரிடமும், நீங்கள் இருவரும் ஸஅலபாவிடமும் பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த இன்ன மனிதரிடமும் சென்று அவ்விருவரும் தருகின்ற தர்மப் பொருட்களைப் பெற்று வாருங்கள் என்று கூறினார்கள்.அவ்விருவரும் புறப்பட்டு ஸஅலபாவிடம் வந்து, அவர் வழங்க வேண்டிய (கட்டாய) தர்மத்தை வழங்குமாறு அவரிடம் கோரினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுதிக் கொடுத்த குறிப்பை அவரிடம் படித்தும் காட்டினர்.அதற்கு ஸஅலபா, கண்டிப்பாக இது ஒரு வரிதான்; வரியின் இன்னொரு வடிவம்தான் இது; இது எனக்கு என்னவென்றே தெரியாது; எனவே, நீங்கள் (இப்போது) போய்விட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுப் பிறகு வாருங்கள் (பார்க்கலாம்)” என்று கூறினார். எனவே, அவ்விருவரும் சென்றுவிட்டனர். பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்தவரோ (ஸகாத் பொருட்களை வசூல் செய்வதற்காக) அவ்விருவரும் வந்துள்ளனர் என்று கேள்விப்பட்டு, தம் ஒட்டகங்களில் விலைமதிப்புள்ள தரமான ஒட்டகத்தைத் தேடிக் கண்டு பிடித்து, அதைத் தர்மம் வழங்குவதற்காகத் தனியாகப் பிடித்து, அவ்விருவரும் இருந்த இடத்திற்குத் தாமாகவே அழைத்துச் சென்றார்.அவ்விருவரும் அந்த ஒட்டகத்தைக் கண்டபோது, இவ்வளவு உயர்ந்த ஒட்டகத்தை நீர் செலுத்த வேண்டியதில்லை; உம்மிடமிருந்து இதை வசூலிப்பதும் எங்கள் திட்டமன்று என்று கூறினர். அதற்கு அவர், பரவாயில்லை; இதையே பெற்றுக்கொள்ளுங்கள்; இதை நான் மனமுவந்தே கொடுக்கிறேன் என்றார். அவ்விருவரும் அந்த ஒட்டகத்தைப் பெற்றுக்கொண்டனர்.பின்னர் மற்ற மக்களிடம் சென்று அவர்கள் வழங்கிய தர்மப் பொருட்களையெல்லாம் வசூல் செய்துவிட்டுப் பின்னர் மறுபடியும் ஸஅலபாவிடம் சென்றனர். அப்போது ஸஅலபா, நீங்கள் கொண்டுவந்துள்ள ஏட்டைக் கொடுங்கள், பார்க்கிறேன் என்று கூறி, அதை (வாங்கி)ப் படித்தார்.பின்னர், கண்டிப்பாக இது ஒரு வரிதான்; வரியின் இன்னொரு வடிவம் தான் இது; எனவே, நீங்கள் சென்று வாருங்கள்; நான் யோசித்துவிட்டுப் பின்னர் சொல்கிறேன் என்றார். அவ்விருவரும் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.  அவ்விருவரிடமும் பேச்சுக் கொடுப்பதற்கு முன்னர், ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே!” என்று நபியவர்கள் கூறினார்கள். பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபித்தோழருக்கு அருள் வளம் வேண்டிப் பிரார்த்தனையும் புரிந்தார்கள். பின்னர் அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் ஸஅலபாவின் நடவடிக்கையையும் பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபித்தோழரின் நடவடிக்கையையும் தெரிவித்தனர்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்,  மேற்படி மூன்று வசனங்களை (75-77) அருளினான்.  அவரின் உள்ளத்தில் நிஃபாக் விதிக்கப்பட்டது இனிமேல் தந்தாலும் வாங்க வேண்டாம் என்பது அதன் கருத்தாகும். இவ்வசனம் இறங்கியவுடன் ஸஅலபாவின் உறவினர் சென்று உடனே அதை ஸஅலபாவிடம் சொல்ல அவர் அப்போது உணர்வு வந்தவர் போல ஜகாத்தை எடுத்துக் கொண்டு நபி ஸல் அவர்களிடம் வந்தார். ஆனால் நபி ஸல் ஏற்கவில்லை. அவர் தன் தலை மீது மண்ணைப் போட்டுக் கொண்டு அழுதார் ஆனால் பலனில்லை அந்த ஸஅலபா அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணமடைந்தார். அதுவரை ஒவ்வொரு ஆட்சியாளர்களிடமும் அவர் சென்று என்னுடைய ஜகாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார் யாரும் ஏற்கவில்லை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...