22-
ம் தராவீஹ் பயான்
மனிதனின் உறுப்புகளில்
மிக முக்கியமானது நாவு. இதைக் கொண்டு ஒருவர் சிறந்த நிலையை அடைய முடியும் இதைக்
கொண்டே ஒருவர் மிக மோசமான நிலையை அடைய முடியும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو - رضى
الله عنهما - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « الْمُسْلِمُ مَنْ
سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ، (بخاري
எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே
உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்:
புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
عَنْ
سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ « مَنْ
يَضْمَنْ لِى مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ
الْجَنَّةَ »(بخاري
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு
தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ
அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
புறம்பேசுதல்
இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-
يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ
إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ
أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ
اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ (12)
முஃமின்களே!
(சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில்
நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர்
குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில்
சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில்
எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!)
அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக
பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க
கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
புறம்
பேசியவருக்கு இந்த உலகில் கிடைக்கும் தண்டனைகள்:
عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلْ الْإِيمَانُ
قَلْبَهُ لَا تَغْتَابُوا الْمُسْلِمِينَ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ
فَإِنَّهُ مَنْ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعُ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ
يَتَّبِعْ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي بَيْتِهِ(ابوداود)
ஒரு முறை நபி(ஸல்)
அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில்
இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம்
பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து
கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி
திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர
ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது
வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்(நூல்:
அஹ்மத்)
புறம்
பேசியவருக்கு கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: –
عَنْ ابْنِ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ مَرَّ بِقَبْرَيْنِ يُعَذَّبَانِ فَقَالَ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا
يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ
الْبَوْلِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ثُمَّ أَخَذَ
جَرِيدَةً رَطْبَةً فَشَقَّهَا بِنِصْفَيْنِ ثُمَّ غَرَزَ فِي كُلِّ قَبْرٍ
وَاحِدَةً فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا فَقَالَ لَعَلَّهُ
أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا .(بخاري
‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற
போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு
பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை.
அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை.
மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று
கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி
அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி
நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என
கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும்
போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என
இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.
புறம்
பேசியவருக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்:
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ
وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ
الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ (ابوداود)
“மிஃராஜின்
போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான
நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும்
காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச்
சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.”அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.
புறம் பேசுபவர் தாம்
சிரமப்பட்டு செய்த நற்செயல்களின் நன்மையை யாரைப் பற்றி புறம் பேசினாரோ அவருக்கு
தந்து விடுகிறார்
அதனால் தான் தன்னைப் பற்றிப் புறம் பேசியவருக்கு ஹஸன் பஸரீ
ரஹ் சன்மானம் கொடுத்தனுப்பினார்கள் அவர் திகைத்த போது
சொன்னார்கள் நீங்கள் என்னைப் பற்றி புறம் பேசி உங்களின் நன்மைகளை எனக்குத் தந்து
விட்டீர்கள் உங்களுக்கு நான் சன்மானம் தரக்கூடாதா என்றார்கள் عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قِيلَ يَا رَسُولَ
اللَّهِ مَا الْغِيبَةُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ قِيلَ أَفَرَأَيْتَ
إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدْ
اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهَتَّهُ (ابوداود)
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என
நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது
தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய
சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய
சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?
என்று
கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள்,
நீ
கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ
கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய்
என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)
இங்கே ஒரு பேச்சு அங்கே ஒரு
பேச்சு என இரட்டை நாவு கூடாது
மறுமை நாளில் மனிதர்களில் மிகக் கெட்டவர்கள் இரட்டை
நாவு கொண்டவர்கள்.இவர்களுக்கு நெருப்பாலான நாவு தரப்பட்டு தண்டிக்கப்படும்.
عن عمار بن ياسر، عن
النبي صلى الله عليه وسلم قال: "من كان ذا وجهين في الدنيا كان له لسانان من
نار يوم القيامة" (دارمي
كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة
دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا
استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله
. فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً
شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله
الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء
أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك والثاني : بالحسد ، حسدت أصحابي والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته
عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت
عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)
ஃபுழைல்
இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு
ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து
யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர்
கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல
மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில்
அவர் மரணித்தார். இதைக் கண்ட ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும்
கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த
வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள்.
அவரிடம் ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த
மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர்
கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம்.
நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப்
பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன். 3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி
மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி
விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த
ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது- நூல் மனாஜிலுல் ஆகிரா
புறம் பேசியதற்கான பரிகாரங்களில் ஒன்று
عن أنس
قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن من كفارة الغيبة أن تستغفر لمن اغتبته تقول : اللهم اغفر لنا وله
" . رواه البيهقي
நீ யாரைப் பற்றி புறம் பேசினாயோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று அல்லாஹ்விடம்
நீ மன்னிப்புக் கேட்பது அவரைப் பற்றி நீ
புறம் பேசியதற்கான பரிகாரமாகும்
நமக்கு முன்னால்
மற்றவரைப் பற்றி புறம் பேசப்படும்போது நம்மால் முடிந்தால் தடுக்க வேண்டும் அல்லது
அந்த இடத்தை விட்டும் அகல வேண்டும்.
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி
உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப்
பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை
நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
عن أبي
الدرداء قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " ما من مسلم
يرد عن عرض أخيه إلا كان حقا على الله أن يرد عنه نار جهنم يوم القيامة " .
ثم تلا هذه الآية : ( وكان حقا علينا نصر المؤمنين ) رواه في " شرح السنة " مشكاة
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை
தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து
விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
பிறரைக் கேலி செய்யும்
விதத்தில் பேசக் கூடாது: –
முஃமின்களே!
ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில்
(பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே)
எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில்
இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில்
ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்
(உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான்
கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள்
(இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
அல்-குர்ஆன் 49:11)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக