வெள்ளி, 14 ஏப்ரல், 2023

லைலத்துல் கத்ரு & ஃபித்ரா விளக்கம்

 


14-03-2023

RAMZAN – 24

 

بسم الله الرحمن الرحيم 

 

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 





{قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى}ولإبن خزيمة من طريق كثير بن عبد الله عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه و سلم سئل عن هذه الآية فقال نزلت في زكاة الفطر (فتح الباري

மேற்படி வசனம் பற்றி நபி ஸல் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது இவ்வசனம் சதக்கத்துல் ஃபித்ரு விஷயமாக இறங்கியது என பதில் கூறியதாக ஃபத்ஹுல் பாரீ போன்ற நூல்களில் உள்ளது

நபி ஸல் அவர்களின் காலத்தில் கோதுமையாகவோ, பேரீத்தம்பழமாகவோ, பாலாடைக்கட்டியாகவோ, உலர் திராட்சையாகவோ கொடுக்கப்பட்டிருக்கிறது. பெருநாள் தொழுகைக்கு வரும் முன் கொடுத்து விட வேண்டும்

عَنْ ابْنِ عُمَرَ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ وَالذَّكَرِ وَالْأُنْثَى وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ (بخاري -  عن أَبي سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ أَقِطٍ أَوْ صَاعًا مِنْ زَبِيب(بخاري) بَاب صَدَقَةِ الْفِطْرِ صَاعٌ مِنْ طَعَامٍ-كتاب الزكاة

நபி ஸல் அவர்களின் காலத்தில் வழமையில் இருந்த ஸாஃ என்பதை நம்முடைய நாட்டின் கிலோ, கிராம் கணக்கோடு ஒப்பிடும்போது தான் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் தான் ஹனஃபீ, ஷாஃபீ வித்தியாசம் வருகிறது. ஹனஃபீ மத்ஹபில் பணமாகவும் கொடுக்கலாம். ஏனெனில் அதைப் பெற்றுக் கொள்ளும் ஏழைகள் தமக்குப் பிரியமான உணவை வாங்கிக்  கொள்ளலாம். என்பது அவர்களின் கருத்து

الدَّقِيقُ أَوْلَى مِنْ الْبُرِّ وَالدَّرَاهِمُ أَوْلَى مِنْ الدَّقِيقِ فِيمَا يُرْوَى عَنْ أَبِي يُوسُفَ وَهُوَ اخْتِيَارُ الْفَقِيهِ أَبِي جَعْفَرٍ لِأَنَّهَا أَدْفَعُ لِلْحَاجَةِ وَأَعْجَلُ بِه(هداية)الدَّقِيقُசலித்தகோதுமை

ஜகாத், ஃபித்ரா வேறுபாடு

ஜகாத் கடமையாகுவதற்கு அதற்குரிய நிஸாபை அடைந்திருக்க வேண்டும். ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரையும் கணக்கிடத் தேவையில்லை. ஆனால் ஃபித்ரா அப்படியல்ல. அன்றைய அவசியமான செலவுகள் போக கையிருப்பு வைத்திருப்பவர் தனக்காகவும், தன் குடும்ப நபர்களுக்காகவும் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அன்று அதிகாலையில் பிறந்த குழந்தையையும் கணக்கிட்டுத் தர வேண்டும்.

هي صدقة يعطيها المسلم في يوم عيد الفطر لمن تصرف إليهم الزكاة - أمرنا بها سيدنا النبي صلى الله عليه وسلم في السنة الثانية من الهجرة

ஜகாத்தை எந்த ஏழைகளுக்குத் தர முடியுமோ அத்தகையவர்களுக்கு இந்த ஃபித்ராவைத் தரலாம். எனவே இந்த ஃபித்ராவை முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தரக்கூடாது.  ஹிஜ்ரி இரண்டாம் வருடம் இது கடமையானது

ஃபித்ராவின் நான்கு விதமான நோக்கங்கள்

الاول :  إغناء الفقراء عن ذل السؤال في هذا اليوم العظيم   -   الثاني: إدخال الفرح والسرور عليهم في هذا اليوم الذي يفرح فيه المسلمون جميعا   - الثالث :  تطهير مال الصائم بعد أن تطهر جسده بالصوم   الرابع:  جبر ما عساه أن يكون من خلل في صومه

قال سيدنا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث (نور الايضاح

1.மகத்தான அந்த நாளில் எந்த ஏழைகளையும் கையேந்தும் நிலையை விட்டும் பாதுகாப்பது 2.அனைவரும் சந்தோஷமாக இருக்கும் அந்த நாளில் ஏழைகளையும் மகிழ்ச்சியாக்கி வைத்தல் 3.நோன்பாளி தம் உடலை பல்வேறு நோய்களை விட்டும் சுத்தப்படுத்தியது போன்று ஃபித்ரா மூலம் தம் பொருளை சுத்தப் படுத்துவது 4.நோன்பில்  ஏற்பட்ட  சிறிய தவறுகளுக்குப் பரிகாரம்

عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِىَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِىَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ. (ابوداود

நோன்பு வைக்காதவர்கள் ஃபித்ரா கொடுக்கலாமா ?

ஃபித்ரா என்பது நோன்பில்  ஏற்பட்ட  சிறிய தவறுகளுக்குப் பரிகாரம் என்பதால் நோன்பு வைக்காதவர்கள் தர வேண்டிய அவசியமில்லை என்று சிலர் விளங்கி வைத்துள்ளனர். அது தவறு ஃபித்ரா வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். நோன்பு வைத்தவர், நோன்பு வைக்காதவர் என்ற வேறுபாடு கிடையாது

ஈதுப் பெருநாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு கொடுக்கலாமா ?

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ.. فَكَانَ ابْنُ عُمَرَ يُعْطِي عَنْ الصَّغِيرِ وَالْكَبِيرِ حَتَّى إِنْ كَانَ لِيُعْطِي عَنْ بَنِيَّ  وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ .(بخاري) باب صَدَقَةِ الْفِطْرِ عَلَى الْحُرِّ وَالْمَمْلُوك-كتاب الزكاة

இப்னு உமர் ரழி அவர்கள் தன்னுடைய பெரிய பிள்ளைகளுக்கும் சிறிய பிள்ளைகளுக்கும் சேர்த்தே ஃபித்ரா கொடுப்பவர்களாக இருந்தார்கள். மேலும் ஈத் பெருநாளுக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பாக கொடுப்பவர்களாக இருந்தார்கள்

وقال : هذا حسن ، وأنا أستحبه - يعني تعجيلها قبل يوم الفطر – (فتح الباري

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்பே கொடுப்பதை விரும்புபவர்களாக ஆயிருந்தார்கள்

ويصح أداؤها مقدما عن يوم الفطر أو مؤخرا عنه إلا أنه يستحب أداؤها قبل الخروج الى المصلى (نور الايضاح

ஃபித்ரா கடமையாகுவது பெருநாள் அன்று அதிகாலையின் தான் என்றாலும் ஃபித்ராவை ஈதுப் பெருநாளுக்கு முன்பு கொடுத்தாலும் கூடும். நிர்பந்தம் காரணமாக சற்று பிற்படுத்துவதும் கூடும் எனினும் ஈதுத் தொழுகைக்கு வரும் முன்பு தருவது முஸ்தஹப்பாகும்- நூருல் ஈழாஹ்

 

ஃபித்ராவை முன்பே கொடுக்கலாம் என்பதற்குத் தோதுவான சம்பவம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَبِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ وَقُلْتُ وَاللَّهِ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَعُودُ فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ لَا أَعُودُ فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ وَهَذَا آخِرُ ثَلَاثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لَا تَعُودُ ثُمَّ تَعُودُ قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الْآيَةَ فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ مَا هِيَ قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الْآيَةَ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الْخَيْرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلَاثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ لَا قَالَ ذَاكَ شَيْطَانٌ (بخاري)2311

شرح: (وكلني رسول الله - صلى الله عليه وسلم - بحفظ زكاة رمضان) أي في حفظ زكاة الفطر من رمضان (مرعاة المفاتيح شرح مشكاة المصابيح)

சுருக்கம்- ஃபித்ரா தானியங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அபூஹுரைரா ரழி அவர்கள் ஈடுபட்டிருந்த போது தான் மேற்படி சம்பவம் நடந்தது. ஷைத்தான் மூன்று தடவை அதைத் திருட முற்பட்டான். அவன் ஷைத்தான் என அந்த சஹாபிக்குத் தெரியாது. முதல் இரண்டு தடவைகளில் அவன் தனது வறுமையைச் சொல்லி கெஞ்சியதால் விட்டு விட்டார்கள் மூன்றாவது முறை அவனை எப்படியேனும் பிடித்து நபி ஸல் அவர்களிடம் ஒப்படைக்க எண்ணிய போது தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸீயை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற இரகசியத்தைக் கூறி அவன் தப்பித்தான். ஆகா அற்பதமான விஷயம் கூறியுள்ளானே என்று அந்த சஹாபீ அவனை விட்டு விட்டார்கள். நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அவன் சொன்னது உண்மை தான் என்று கூறியதுடன் அவன் தான் ஷைத்தான் என்றும் கூறினார்கள்.        

ஆயத்துல் குர்ஸீயை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் ஸலாம் கொடுத்தவுடன் எப்போதும் ஓதினால் சுவனம் செல்வதற்கு மவ்த்தைத் தவிர வேறு தடை இல்லை என்ற நபிமொழி

: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ:"مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ، إِلا الْمَوْتُ"،(طبراني

ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஓத வேண்டிய வேறு சில திக்ருகள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى فُقَرَاءُ الْمُسْلِمِينَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ،"ذَهَبَ ذَوُو الأَمْوَالِ بِالدَّرَجَاتِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَحُجُّونَ كَمَا نَحُجُّ، وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَتَصَدَّقُونَ مِنْهَا، وَلَيْسَ لَنَا مَا نَتَصَدَّقُ، فَقَالَ: أَلا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ، وَلَمْ يَلْحَقْكُمْ مِنْ خَلْفِكُمْ إِلا مَنْ عَمِلَ بِمِثْلِ مَا عَمِلْتُمْ بِهِ؟ تُسَبِّحُونَ اللَّهَ دُبُرَ كُلِّ صَلاةٍ ثَلاثًا وَثَلاثِينَ، وتحَمَدُونَهُ ثَلاثًا وَثَلاثِينَ، وَتُكَبِّرُونَهُ أَرْبَعًا وَثَلاثِينَ، فَبَلَغَ ذَلِكَ الأَغْنِيَاءَ، فَقَالُوا مِثْلَ مَا قَالُوا، فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، فَأَخْبَرُوهُ، فَقَالَ: ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ"، (معجم الكبير للطبراني

ஏழைகள் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே செல்வந்தர்கள் எங்களை விட அந்தஸ்தால் முன் சென்று விட்டனர் எங்களைப் போன்று தொழுகின்றனர். எங்களைப் போன்று நோன்பு வைக்கின்றனர். எங்களைப் போன்று ஹஜ்ஜும் செய்கின்றனர் ஆனால் அவர்களுக்கு வசதி உள்ளது தர்மம் செய்கின்றனர் எங்களால் செய்ய முடியவில்லையே என்றபோது நபி ஸல் அவர்கள் நான் உங்களுக்கு ஒரு செயலை அறிவிக்கிறேன். அதைச் செய்தால் உங்களை விட முந்தி விட்டவர்களின் சிறப்பை நீங்கள் அடைவீர்கள் என்று கூறி, தஸ்பீஹே பாத்திமாவை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஓதும்படி கற்றுத் தந்தார்கள் எப்படியோ இவ்விஷயம் செல்வந்தர்களுக்கும் தெரிய வந்தபோது அவர்களும் இந்த தஸ்பீஹை ஓத ஆரம்பித்தார்கள் மறுபடியும் ஏழைகள் வந்து நபி ஸல் அவர்களிடம் வந்து கூறிய போது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தரும் அருள் என்றார்கள்  

 

عَنْ وَرَّادٍ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ كَتَبَ الْمُغِيرَةُ إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا سَلَّمَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ (بخاري

இனி மீதமுள்ள நாட்களிலும் லைலத்துல் கத்ரை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும்

லைலத்துல் கத்ரு இரவில் தான் இவ்வருடம் முதல் அடுத்த வருடம் வரை உள்ள மனிதர்களின் விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படுகிறது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்

قال الله تعالي إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ- فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ(سورة الدخان) أَيْ فِي لَيْلَة الْقَدْر يُفْصَل مِنْ اللَّوْح الْمَحْفُوظ إِلَى الْكَتَبَة أَمْر السّنَة وَمَا يَكُون فِيهَا مِنْ الْآجَال وَالْأَرْزَاق وَمَا يَكُون فِيهَا إِلَى آخِرهَا وَهَكَذَارُوِيَ عَنْ اِبْن عُمَر وَمُجَاهِد وَأَبِي مَالِك وَالضَّحَّاك وَغَيْر وَاحِد مِنْ السَّلَف (تفسير ابن كثير) عَنِ ابْنِ عَبَّاس رضي الله عنه قَالَ:إِنَّكَ لَتَرَى الرَّجُلَ يَمْشِي فِي الْأَسْوَاقِ وَقَدْ وَقَعَ اسْمُهُ فِي الْمَوْتَى، ثُمَّ قَرَأَ" إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ-فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ  يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ قَالَ: فَفِي تِلْكَ اللَّيْلَةِ يُفْرَقُ أَمْرُ الدُّنْيَا إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ مَوْتٌ أَوْ حَيَاةٌ أَوْ رِزْقٌ كُلُّ أَمْرِ الدُّنْيَا يُفْرَقُ تِلْكَ اللَّيْلَةَ إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ (تفسير ابن ابي حاتم)                                      

واعلم أن تقدير الله لا يحدث في تلك الليلة فإنه تعالى قدر المقادير قبل أن يخلق السموات والأرض في الأزل ، بل المراد إظهار تلك الليلة المقادير للملائكة في تلك الليلة بأن يكتبها في اللوح المحفوظ وهذا القول اختيار عامة العلماء (تفسير الرازي)

விதிகளை மலக்குகளிடம் ஒப்படைக்கும் இரவு ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு என்பதும் சிலரின் கருத்தாகும். ஆகவே இந்த இரண்டு இரவுகளிலும் பரக்கத்தான ரிஜ்க்கையும், நலவான அமலின் பேரில் ஆயுள் நீடிப்பதையும், துன்பங்கள் நீங்குவதையும் அல்லாஹ்விடம் வேண்டுவது ஏற்றமானதாகும்.

وقال عكرمة  هي ليلة النصف من شعبان يبرم فيها أمر السنة وينسخ الأحياء من الأموات ويكتب الحاج فلا يزاد فيهم أحد ولا ينقص منهم أحد (قرطبي)-عن عُثْمَان بْن مُحَمَّد بْن الْمُغِيرَة بْن الْأَخْنَس قَالَ : إِنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " تُقْطَع الْآجَال مِنْ شَعْبَان إِلَى شَعْبَان حَتَّى إِنَّ الرَّجُل لَيَنْكِحُ وَيُولَد لَهُ وَقَدْ أُخْرِجَ اِسْمه فِي الْمَوْتَى (حَدِيث مُرْسَل) (تفسير ابن كثير                               

            قوله تعالى:{سلام هِىَ حتى مَطْلَعِ الفجر} في قوله سلام وجوه أحدها : أن ليلة القدر إلى طلوع الفجر سلام أي تسلم الملائكة على المطيعين وذلك لأن الملائكة ينزلون فوجاً فوجاً من ابتداء الليل إلى طلوع الفجر فترادف النزول لكثرة السلام وثانيها:وصفت الليلة بأنها سلام ثم يجب أن لا يستحقر هذا السلام لأن سبعة من الملائكة سلموا على الخليل في قصة العجل الحنيذ فازداد فرحه بذلك على فرحه بملك الدنيا بل الخليل لما سلم الملائكة عليه صار نار نمروذ عليه برداً وسلاما أفلا تصير ناره تعالى ببركة تسليم الملائكة علينا برداً وسلاماً لكن ضيافة الخليل لهم كانت عجلاً مشوياً وهم يريدون منا قلباً مشوياً بل فيه دقيقة وهي إظهار فضل هذه الأمة فإن هناك الملائكة نزلوا على الخليل وههنا نزلوا على أمة محمد صلى الله عليه وسلم وثالثها:أنه سلام من الشرور والآفات ورابعها: قال أبو مسلم: سلام أي الليلة سالمة عن الرياح والأذى والصواعق إلى ما شابه ذلك وخامسهاسلام لا يستطيع الشيطان فيها سوءاً (تفسير الرازي)                              

عَنْ جَابِر بْن عَبْد اللَّه أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنِّي رَأَيْت لَيْلَة الْقَدْر فَأُنْسِيتهَا وَهِيَ فِي الْعَشْر الْأَوَاخِر مِنْ لَيَالِيهَا طَلْقَة بَلْجَة لَا حَارَّة وَلَا بَارِدَة كَأَنَّ فِيهَا قَمَرًا لَا يَخْرُج شَيْطَانهَا حَتَّى يُضِيءَ فَجْرُهَا (تفسير ابن كثير)

லைலத்துல் கத்ரு இரவு என்பது அதிக வெப்பம் இல்லாத, அதிக குளிரும் இல்லாத மிதமான சீதோஷ்னம் கொண்ட இரவாகும்

லைலத்துல் கத்ரு இரவு முடிந்து அடுத்த பகலில் வெப்பம் அதிகம் இல்லாத நிலைக்குக் காரணம்

عن كعب رض ...وأول من يصعد جبريل حتى يصير أمام الشمس فيبسط جناحين أخضرين لا ينشرهما إلا تلك الساعة من تلك الليلة ثم يدعو ملكاً ملكاً فيصعد الكل ويجتمع نور الملائكة ونور جناح جبريل عليه السلام  فيقيم جبريل ومن معه من الملائكة بين الشمس وسماء الدنيا يومهم ذلك مشغولين بالدعاء والرحمة والاستغفار للمؤمنين ولمن صام رمضان احتساباً فإذا أمسوا دخلوا سماء الدنيا (الرازي

லைலத்துல் கத்ரு இரவு முழுவதும் இந்த பூமியில் ஜிப்ரயீல் அலை அவர்களின் தலைமையில் மலக்குகளின் பெரும் கூட்டம் இருந்து அமல்களில் ஈடுபடும் மனிதர்களுக்காக துஆச் செய்வார்கள். பிறகு ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் முதலில் வானத்தை நோக்கி செல்பவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்கள் தான். பிறகு மற்ற மலக்குகளும் அங்கு வந்து சேருவார்கள். சூரியனுக்கு முன்னால் தன்னுடைய ராட்சத இறக்கைகளை விரித்த வண்ணமாக அன்று பகல் முழுவதும் ஜிப்ரயீல் அலை அவர்கள் இருப்பார்கள் அதுபோன்று வேறு எப்போதும் அந்த இறக்கைகளை விரிக்க மாட்டார்கள். மற்ற மலக்குகளும் சூரியனுக்கு முன்னால் தங்களின் இறக்கைகளை விரித்த படி அன்று பகல் முழுவதும் இருப்பார்கள்

عن عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ  رض....وَأَمَارَتُهَا أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لَا شُعَاعَ لَهَا (مسلم

லைலத்துல் கத்ரு இரவின் அடையாளம் அன்று பகலில் சூரியன் வெப்பமின்றி உதயமாகும்- இப்னு மஸ்ஊத் ரழி 

லைலத்துல் கத்ரு இரவில் பாவமன்னிப்பு என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது

عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو قَالَ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي(ابن ماجة

والعفو هو التجاوز عن الخطأ، كأنه أمرها بأن تعترف بأنها مقصرة وليس لها مطلب إلا العفو، وهكذا سائر العباد، فالعبد عليه أن يحتقر عمله ولو كان كثيراً، فيكون منتهى طلبه المغفرة والعفو عن الخطأ وعن التقصير، فهذا مطلب من المطالب التي تطلب في ليلة القدر، والدعاء فيها مرجو أن يستجاب، وكذلك كثرة الذكر وكثرة القراءة وطول القيام وما أشبه ذلك، فإذا أدام العبد ذلك رجي أن يثيبه الله وأن تحصل له المغفرة التي رتبت على تلك الأعمال، والله أعلم.(شرح عمدة الاحكام)

லைலத்துல் கத்ரு இரவில் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவது மிக முக்கியமானது

عن سعيد بن المسيب أنه قال : من شَهِدَ العِشاء  ليلة القدر فقد أخذ بحظَّه منها (سنن الصغري للبيهقي)

லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றி....

أنه تعالى أخفى هذه الليلة لوجوه أحدها: أنه تعالى أخفاها كما أخفى سائر الأشياء فإنه أخفى رضاه في الطاعات حتى يرغبوا في الكل وأخفى الإجابة في الدعاء ليبالغوا في كل الدعوات وأخفى الاسم الأعظم ليعظموا كل الأسماء وأخفى في الصلاة الوسطى ليحافظوا على الكل وأخفى قبول التوبة ليواظب المكلف على جميع أقسام التوبة وأخفى وقت الموت ليخاف المكلف فكذا أخفى هذه الليلة ليعظموا جميع ليالي رمضان وثانيها : كأنه تعالى يقول : لو عينت ليلة القدر وأنا عالم بتجاسركم على المعصية  فربما دعتك الشهوة في تلك الليلة إلى المعصية فوقعت في الذنب فكانت معصيتك مع علمك أشد من معصيتك لا مع علمك  فلهذا السبب أخفيتها عليك روي أنه عليه السلام دخل المسجد فرأى نائماً فقال : يا علي نَبِّهْه ليتوضأ  فأيقظه علي  ثم قال علي: يا رسول الله إنك سباق إلى الخيرات فلم لم تنبهه؟ قال : لأن رده عليك ليس بكفر ففعلت ذلك لتخف جنايته لو أبى فإذا كان هذا رحمة الرسول فقس عليه رحمة الرب تعالى فكأنه تعالى يقول: إذا علمت ليلة القدر فإن أطعت فيها اكتسبت ثواب ألف شهر وإن عصيت فيها اكتسب عقاب ألف شهر ودفع العقاب أولى من جلب الثواب ثالثها:أني أخفيت هذه الليلة حتى يجتهد المكلف في طلبها فيكتسب ثواب الاجتهاد ورابعهاأن العبد إذا لم يتيقن ليلة القدر فإنه يجتهد في الطاعة في جميع ليالي رمضان على رجاء أنه ربما كانت هذه الليلة هي ليلة القدر فيباهي الله تعالى بهم ملائكته يقول:كنتم تقولون فيهم يفسدون ويسفكون الدماء  (تفسير الرازي

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...