23-
ம் தராவீஹ் பயான்
وَأَنْزَلْنَا
الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ (25) الحديد
இரும்பை நாமே வானில் இருந்து இறக்கி வைத்தோம். அதில் உறுதித் தன்மை
இருக்கிறது. மக்களுக்கு நிறைய பயன்பாடுகள் உள்ளன
ஒரு கட்டிடம் கட்டுவதாக இருந்தாலும் வாகனம் தயாரிப்பதாக இருந்தாலும் இன்னும்
பல்வேறு விதமான விஷயங்களுக்கு இரும்பின் பயன்பாடுகள் மிகவும் அதிகமாக உள்ளது. பூமிக்குள்
இருந்து நமக்குக் கிடைக்கும் தங்கம் வெள்ளி போன்ற தாதுப் பொருட்களில் இரும்பு தான்
அதிகம். எங்கெல்லாம் பாலங்கள் கட்டப்
படுகிறதோ அங்கெல்லாம் இரும்பு இல்லாமல் அவற்றை உருவாக்குவது சாத்தியம் இல்லை.
இரும்பு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா நான்காவது இடத்தில்
உள்ளது. இந்தியாவில் அதிக இரும்புத் தாதுவை உற்பத்தி செய்யும் மாநிலமாக ஒடிசா
மாநிலம் விளங்குகிறது
இரும்பு வானில் இருந்து இறங்கியதாக அல்லாஹ் கூறுவதன் விளக்கம்
தங்கம் எப்படி மண்ணுக்கு அடியில் இருந்து
பெறப்படுகிறதோ அதேபோல மண்ணுக்கு அடியில் இருந்து பெறப்படும் உலோகம் தான் இரும்பு.
ஆனால் அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது இரும்பை நாம் இறக்கி வைத்தோம் என்று
கூறுகிறான். இதில் எது உண்மை. நிச்சயமாக குர்ஆனின் கூற்று ஒருபோதும் பொய்யாகி
விடாது. அப்படியானால் இதற்கு அறிஞர்களின் விளக்கம் என்னவெனில் உலகில் மனிதன்
படைக்கப்படும் முன்பே இந்த பூமி இருந்தது. மழை எப்படி இப்போது பூமியில் அவ்வப்போது
பெய்யுமோ அதுபோன்று இரும்புத் துகள்களை அல்லாஹ் வானில் இருந்து இறக்கிக்
கொண்டிருந்தான் மனிதனை அல்லாஹ் படைத்த பின்பு தான் ஓசோன் என்ற பாதுகாப்பு முகடுகளை
அல்லாஹ் ஏற்படுத்தி மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்காதவைகளை மட்டுமே அல்லாஹ் இறக்க
ஆரம்பித்தான். ஆகவே முற்காலத்தில் நிறையவே அல்லாஹ் இறக்கி வைத்த அந்த இரும்புத்
தாதுக்கள் மனிதனின் தேவை அளவுக்கு மண்ணுக்குள் படிந்து கிடக்கின்றன. அதைத் தான்
மனிதன் மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்துப் பயன்படுத்துகிறான்
இரும்பு
பூமியில் உருவாகும் சாத்தியம் இல்லை. வேறு உலகில் இருந்து தான் வந்திருக்க
வேண்டும் என்ற நாசா விஞ்ஞானிகளின் கூற்று குர்ஆனை உண்மைப் படுத்துகிறது
இப்பூமியிலுள்ள இரும்பு பூமிக்குள்
இருந்து பெறப்பட்டாலும் பூமியில் இருந்து உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க
காரணத்துடன் விளக்கியுள்ளனர். ஒவ்வொரு தாதுக்களும் உருவாவதற்கு அதற்கேற்ற வெப்பம் இருக்க வேண்டும். ஆனால் இரும்பு என்ற
தனிமம் உருவாவதற்குத் தேவையான வெப்பம்இந்த பூமியில் எந்தவொரு காலகட்டத்திலும்
இருக்கவில்லை. இப்பூமியில் கிடைக்கும் பொருட்கள் இங்கேயே உருவாவதற்கான காரணங்கள்
இல்லாவிட்டால் அப்பொருள் வெளி உலகத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பதில்
ஐயமில்லை. 30 கோடி டிகிரி வெப்பமுடைய பல நட்சத்திரங்கள்
பால்வெளியில் உள்ளன. இந்த நட்சத்திரங்களிலிருந்து எரி கற்கள் முற்காலத்தில் நிறைய விழுந்துள்ளன.
அவற்றின் துகள்கள் பூமிக்குள் வந்து இறங்குகியுள்ளன. கோடானு கோடி ஆண்டுகளாக இப்படி
விழுந்த இரும்புத் துகள்களைத்தான் பூமியிலிருந்து எடுத்துப் பயன்படுத்துகிறோம்.
இது
குறித்து நாசா விஞ்ஞானிகள் மேலும் கூறுகின்றனர். இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு
சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப் போல் நான்கு மடங்கு ஆற்றல் தேவைப்படும்.
எனவே பூமியில் காணப்படும் இரும்பு எங்கிருந்தோ வானத்தில் இருந்து தான் வந்திருக்க
முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரும்பு இப்பூமியில்
உற்பத்தியாகவில்லை, மேலிருந்து
தான் இறக்கப்பட்டது என்பதை அற்புதமாக அறிவித்திருப்பதன் மூலம் திருக்குர்ஆன்
இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.
மனித உடம்புக்குள்
இரும்பு
இரும்பு
இல்லாமல் உலகம் இயங்காது என்ற வார்த்தை எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு
இரும்பு இல்லாமல் மனித உடலும் இயங்காது என்பது உண்மை
மனிதனின் இரத்தத்தில்
இரும்பு முக்கியமானது இரத்தத்தில்
உள்ள இரும்புச் சத்தாகிறது ஆக்சிஜனை உடலெங்கும் உள்ள செல்களுக்கு அனுப்பி
உயிர்வாழச் செய்கின்றது மனித உடலில் ஒரு
ஆணி தயாரிக்குமளவு இரும்பு உள்ளது
நம் உடம்பில் போதுமான அளவு ஹீமோகுளோபின் உருவாவதற்கு
இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும்.
பருப்புகள், காய்கறிகள், முழு
தானியங்கள், பழங்கள், இறைச்சிகள்
உள்ளிட்டவை இரும்புச்சத்து நிறைந்த
உணவுகளாகும். 100 கிராம் பாதாம் பருப்பில் 4.8 மிகி
இரும்புச்சத்து உள்ளது,
வேர்க்கடலை பாதாம் பிஸ்தா வால்நட் போன்றவைகளும் இரும்புச்சத்தை அதிகப்
படுத்துபவையாகும்.
இரும்பின் வலிமையை உதாரணம் காட்டி
தர்மத்தின் வலிமையை உணர்த்திய நபி ஸல்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ
الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَعَادَ بِهَا عَلَيْهَا
فَاسْتَقَرَّتْ فَعَجِبَتْ الْمَلَائِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ قَالُوا يَا
رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْجِبَالِ قَالَ نَعَمْ الْحَدِيدُ
قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْحَدِيدِ قَالَ
نَعَمْ النَّارُ فَقَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ
النَّارِ قَالَ نَعَمْ الْمَاءُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ
أَشَدُّ مِنْ الْمَاءِ قَالَ نَعَمْ الرِّيحُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ
خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الرِّيحِ قَالَ نَعَمْ ابْنُ آدَمَ تَصَدَّقَ
بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ (ترمذي
அல்லாஹ் பூமியைப் படைத்த பொழுது அது
அசைந்து நடுங்கியது. உறுதியாக நிலை நிறுத்தி அதன் மேல் அவன் மலைகளை வைத்தான்.
பிறகு வானவர்கள் இறைவனிடம், “இறைவா!
உன் படைப்பில் இந்த மலைகளை விட வலிமையுள்ளது எது?” என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழியாக, “மலைகளை விட இரும்பு வலிமையுள்ளது. ஏனென்றால்
அது அவற்றை உடைக்கிறது” என்றான்.
பின்னர் வானவர்கள், “இரும்பை
விட வலிமையானது எதுவும் உண்டா?” என்று
கேட்டார்கள். அதற்கு இறைவன், “ஆம், நெருப்பு
இரும்பை விட பலமுள்ளது. ஏனெனில், அது இரும்பை உருக்கி விடுகின்றது” என்றான். மறுபடியும் வானவர்கள், “இறைவா, நெருப்பை
விட வன்மை அதிகமுள்ளது வேறு ஏதும் உண்டா?” என்று
வினவினார்கள். “ஆம்
தண்ணீர் இருக்கிறது. ஏனென்றால், அது நெருப்பை அணைத்து விடுகிறது” என்றான் இறைவன். உடனே வானவர்கள், “தண்ணீரை விட வலைமையானது வேறு ஏதும்
இருக்கிறதா?” என்றூ
கேட்டார்கள். இறைவனும், “ஆம்.
காற்று இருக்கிறதே. அது தண்ணீரை வெற்றி கொண்டு அலையாடச் செய்து விடுகிறது” என்றான். அதன் பின்னர் வானவர்கள், “இறைவா, காற்றை
விட வலிமையானது எதுவும் உன் படைப்பில் இருக்கின்றதா?” என்று கேட்டனர். கடைசியாக இறைவன், “ஆம், தானம்
செய்யும் நல்ல மனிதன். இடது கையால் தானம் செய்து, அதை
வலது கையிலிருந்து மறைப்பவன். அவன் எல்லாவற்றையும் வெற்றி கொள்வான்” என்றான்.
தாவூத் அலை
அவர்களுக்கு இரும்பை மெழுகு போல வளையக் கூடியதாக அல்லாஹ் ஆக்கித் தந்தான்.முதன்
முதலில் இரும்பைக்கொண்டு தொழில்செய்தவர்கள் அவர்கள் தான்
(وألنا له الحديد) قال ابن عباس: صار عنده كالشمع. وقال الحسن: كالعجين، فكان يعمله من غير نار.وقال السدي: كان الحديد في يده
كالطين المبلول والعجين والشمع، يصرفه كيف شاء، من غير إدخال نار ولا ضرب بمطرقة. وكان يفرغ من الدرع في بعض اليوم أو بعض الليل، ثمنها ألف درهم. (قرطبي
நாம் இரும்பை
வளைப்பதாக இருந்தால் அதற்கான கருவியைக் கொண்டே தவிர வளைக்க முடியாது ஆனால் தாவூத்
அலை தன் கைகளாலேயே நினைத்த மாதிரி வளைப்பார்கள். நெருப்பு இல்லாமல் அதை நாம்
துண்டாக்க முடியாது. ஆனால் தாவூத் அலை தன் கைகளாலேயே நினைத்த மாதிரி துண்டிப்பார்கள்.
ஒரே நாளில் ஆயிரம் திர்ஹம் மதிப்புள்ள போர்க் கவச உடைகளைத் தயார் செய்வார்கள்
அல்லாஹ் தாவூத் அலை அவர்களுக்கு இரும்பை
வசப்படுத்திக் கொடுத்ததற்கு க் காரணம்
وسبب ذلك أن داود عليه السلام، لما ملك بني إسرائيل لقي ملكا وداود يظنه
إنسانا، وداود متنكر خرج يسأل عن نفسه وسيرته في بني إسرائيل في خفاء، فقال داود
لذلك الشخص الذي تمثل له: (ما قولك في هذا الملك داود) ؟ فقال له الملك(نعم العبد
لولا خلة فيه) قال داود: (وما هي) ؟ قال: (يرتزق من بيت المال ولو أكل من عمل يده
لتمت فضائله).فرجع فدعا الله في أن يعلمه صنعة ويسهلها عليه، فعلمه صنعة لبوس كما
قال عزوجل في سورة الانبياء (2)، فألان له الحديد فصنع الدروع، فكان يصنع الدرع
فيما بين يومه وليلته يساوي ألف درهم، حتى ادخر منها كثيرا وتوسعت معيشة منزله،
ويتصدق على الفقراء والمساكين، وكان ينفق ثلث المال في مصالح المسلمين، وهو أول من
اتخذ الدروع وصنعها (قرطبي
வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது
நபி தாவூத் அலை அவர்கள் தமது
ஆட்சியின் போது தம்மை இனம் காட்டிக் கொள்ளாமல் மாறுவேடத்தில் வெளியே வந்து தம்மைப்
பற்றியும் தமது நடத்தை பற்றியும் பயணிகளிடம் விசாரிப்பது வழக்கம் அவ்வாறு அவர்கள்
யாரிடம் விசாரித்தாலும் அந்த நபர் நபி தாவூது அலைஹி அவர்களின் வழிபாடு, நடத்தை, நீதி ஆகியவை தொடர்பாக பாராட்டாமல் இருந்ததில்லை.இந்த நிலையில் ஒரு நாள் அல்லாஹ் வானவர் ஒருவரை மனித உருவில்
அனுப்பி வைத்தான். அந்த வானவரை தாவூத் அலை அவர்களை
சந்தித்தார்கள் மற்றவர்களிடம் விசாரிப்பது போன்ற அவரிடமும் தாவூது (அலை)
விசாரித்தார்கள். அதற்கு அவர் தாவூத் அலை அவர்கள் மக்களிலேயே தமக்கும் தம்
சமுதாயத்தாருக்கும் நல்லவர்கள் தான். இருந்தாலும் அவரிடம் ஒரே ஒரு பழக்கம் உள்ளது
அது மட்டும் அவரிடம் இல்லை என்றால் அவர் முழுமை பெற்றவராகிவிடுவார் என்று
பதிலளித்தார்கள். தாவூது அலை அவர்கள் அது என்ன பழக்கம் என்று கேட்டார்கள். அதற்கு
அந்த வானவர் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் ஆன உணவு ஆதாரத்தை முஸ்லிம்களின்
நிதியான பொது நிதியிலிருந்தே அவர் பெறுகிறார் என்று பதிலளித்தார்.அப்போது நபி
தாவூத் அலை அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டு
தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தன்னிறைவை தரும்படியான கைத்தொழில் ஒன்றை நமக்கு
கற்றுத் தருமாறு துஆ கேட்டார்கள். அரசராக மற்றும் நபியாக
இருந்தும் தனக்காக வேண்டி ஒரு தொழிலை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்.அதனை
அடுத்து அல்லாஹ் நபி தாவூது (அலை) அவர்களுக்கு இரும்பை இலகுவாக்கி வைத்தான் கவச
ஆடைகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்தான் அதன்பின் கவச ஆடை தயாரிக்கும்
தொழிலை மேற்கொண்டார்கள் கவச ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டவர் இவரே
முதலாமவர்.(தஃப்சீர்
இப்னு கஸீர்)
தன் கைகளால் உழைத்து
உண்ணுவது சிறப்பு என்ற படிப்பினை
في هذه الآية دليل على تعلم أهل الفضل
الصنائع، وأن التحرف بها لا ينقص من مناصبهم،
وفي الصحيح عن النبي صلى الله عليه وسلم
قال: (إن خير ما أكل المرء من عمل يده وإن نبي الله داود كان يأكل من عمل يده).
தனது கையால் உழைத்துச்
சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை
வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து
சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)
عَنْ أَنَسِ أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ جَاءَ إِلَى النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَسْأَلُهُ فَقَالَ لَكَ فِي بَيْتِكَ شَيْءٌ قَالَ بَلَى حِلْسٌ
نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَدَحٌ نَشْرَبُ فِيهِ الْمَاءَ قَالَ
ائْتِنِي بِهِمَا قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ بِيَدِهِ ثُمَّ قَالَ مَنْ يَشْتَرِي هَذَيْنِ فَقَالَ رَجُلٌ أَنَا
آخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ
رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ
الدِّرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا
طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي
بِهِ فَفَعَلَ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَدَّ فِيهِ عُودًا
بِيَدِهِ وَقَالَ اذْهَبْ فَاحْتَطِبْ وَلَا أَرَاكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا
فَجَعَلَ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَقَالَ
اشْتَرِ بِبَعْضِهَا طَعَامًا وَبِبَعْضِهَا ثَوْبًا ثُمَّ قَالَ هَذَا خَيْرٌ لَكَ
مِنْ أَنْ تَجِيءَ وَالْمَسْأَلَةُ نُكْتَةٌ فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ
إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِي غُرْمٍ
مُفْظِعٍ أَوْ دَمٍ مُوجِعٍ(ابن ماجة-بَاب بَيْعِ الْمُزَايَدَةِ
நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக்
கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என
நபியவர்கள் வினவ, முரட்டுக்
கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார்.
பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர்
குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை
அவர் கொண்டு
வந்தார்.
அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு
அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என
நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன்
எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.
பின்பு
அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு
திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும்
வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு
திர்ஹங்களையும்
அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால்
அந்தக் கோடாரிக்கு கணை போட்டு
அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து
நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே
செய்தார்.
சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில்
அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும்
வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம்
தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும்
நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில்
இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக