வியாழன், 31 ஜூலை, 2025

பாடப் புத்தகங்களில் மறைக்கப் படும் வரலாறுகள்

   

01-08-2025 بسم الله الرحمن الرحيم  

பாடப் புத்தகங்களில் 

மறைக்கப் படும் வரலாறுகள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்குமான பூர்வீகமான தொடர்பு என்ற தலைப்பிலும் இதைப் பேசலாம்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6) الحجرات

 எந்த சமூகம் தன்னுடைய முன்னோர்களின் கடந்த கால வரலாறுகளை மறந்து விடுமோ அல்லது எந்த சமூகத்தின் வரலாறுகள் மறக்கடிக்கப் பட்டு விடுமோ அந்த சமூகம் தானாக அழிந்து விடும் என்று சொல்வார்கள். 

   பாசிச ஆட்சியாளர்கள்  முஸ்லிம்களை எப்படியேனும் அழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பல விதமான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கெல்லாம் முஸ்லிம்களை நினைவு கூரும் வகையில் ஊரின் பெயர்கள் வைக்கப்பட்டதோ அதையெல்லாம் மாற்றி வருகிறார்கள். உதாரணமாக மகாராஷ்டிராவில் இஸ்லாம்பூர் என்ற ஊர் ஈஸ்வர்பூர் என்று அங்குள்ள இந்துத்துவ அமைப்பின் வற்புறுத்தல் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. இதுபோல் நாடு முழுவதும் நிறைய ஊர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

அதேபோல் திரைப்படங்கள் மூலமாகவும் மீடியாக்கள் மூலமாகவும் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறது. மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகங்கள் மூலமாகவும் முஸ்லிம்கள் கெட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். N.C.E.R.T. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள C.B.S.E. பள்ளிக் கூடங்களுக்கான 8, 11, மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பதாக உள்ளது. இதுபற்றி மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது

  எட்டாம் வகுப்பு பாடநூலில் முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தை இந்து மத ஆலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட காலங்களாகவும் முகலாய ஆட்சியாளர்களை காட்டுமிராண்டிகளாகவும் வன்முறையாளர்களாகவும் காட்டப்படுகிறது. 11-ம் வகுப்பு பாடநூலில் குஜராத் படுகொலை பற்றிய பாடம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பாடநூலில் முகலாய அரசுகளைப் பற்றிய 29 பக்கங்கள் கொண்ட 9-வது அத்தியாயம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. காந்தியைக் கொன்ற கோட்சே பற்றிய விபரமும் நீக்கப்பட்டுள்ளது. 

1998 ல் பாசிச பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன்  ICHR எனப்படும்  இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் சுமித், K.N. பணிக்கர் ஆகியோர் தயார் செய்திருந்த இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்று ஆவண ஆய்வுத் திட்டத்தை முடக்கினார்கள். உண்மையான வரலாறுகளை ஆய்வு செய்யும்  நடுநிலையான வரலாற்று  ஆய்வாளர்களை நீக்கி விட்டு பாசிச சிந்தனை கொண்டவர்களை வரலாற்று ஆய்வாளர்களாகவும்  நியமித்தார்கள். அன்று முதல் இன்று வரை பாடப் புத்தகங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்கள் இடம் பெற்று வருகிறது. எனவே இதைப் பற்றி முடிந்தவரை மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புர்வை ஏற்படுத்த வேண்டியது  நமது கடமையாகும்.                                                                                                                            

  நம்முடைய முன்னோர்கள் எப்படியெல்லாம் முன்னுதாரணமாக வாழ்ந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தால் பின்னுள்ள சமுதாயத்தில் எழுச்சி ஏற்படும். அதனால் அல்லாஹ் குர்ஆனில் முன்னோர்களின் வரலாறுகளை நிறைய கூறியுள்ளான்

. اهدنا الصراط المستقيم- صراط الذين انعمت عليهم

 நீ யார் மீது அருள் புரிந்தாயோ அவர்களின் நேர்வழியைக் காட்டு என்று அல்ஹம்து சூராவில் கேட்கிறோம். அப்படியானால் முன்னோர்களின் வரலாற்றை அறிய வேண்டும். திருக்குர்ஆனில் உள்ள 114 சூராக்களில் 22 சூராக்கள் கடந்த கால வரலாறுகளுடன் தொடர்புடைய சூராக்களாகும்.  குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி கடந்த கால வரலாறுகளைக் கூறும் வசனங்களாகும். அதனடிப்படையில் தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 131 தடவை, நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் 47 தடவை, ஃபிர்அவனின் பெயர் 74 தடவை, மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் பெயர் 34  தடவையும் கூறப்பட்டுள்ளது. இதுவெல்லாம் வரலாறுகள் அறிவது முக்கியம் என்பதை உணர்த்துகிறது. 

முஸ்லிம்களின் வரலாறுகளை மக்களுக்குத் தெரிய வைப்பதற்காகவே  இப்னு பதூதா என்ற 

வரலாற்று ஆசிரியர் உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்தார்.

வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடுகிறார். இவர் ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் பயணி ஆவார். இவர் மொராக்கோவைச் சேர்ந்தவர் இங்கிருந்து புறப்பட்டு சுமார் 24 வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (69)النمل -  قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ (20)العنكبوت

என்ற வசனங்களுக்கேற்ப இந்த பூமியின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து தனது அனுபவத்தை ரஹீலா என்ற பெயரில் நூலாக எழுதினார். அதில் அவர் குறிப்பிடும்போது நாங்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியதாக கூறப்படும் ஸரந்தீப் எனும் மலையை பார்த்தோம். அது கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமாக இருந்தது. அதை கடலில் இருந்து நாங்கள் பார்த்த போது எங்களுக்கும் அதற்கும் இடையில் 9 நாட்கள் தொலை தூரம் இருந்தது. எப்படியோ அதில் நாங்கள் ஏறிய போது எங்களுக்கும் தாழ்வாக ஒரு மேகம் இருந்த து. அம்மலையில் சில மரங்கள் இருந்தன. அதன் இலைகளோ பூக்களோ உதிர்வதில்லை. அங்கு ஃபஸீஹ் என்றொரு இடம் உள்ளது.அங்குள்ள ஒரு உயரமான கரும்பாறையில் ஆதம் அலை அவர்களின் புனிதப் பாதங்கள் சுவடுகள் காணப்பட்டன. அந்த இடம் மட்டும் சிறிது பள்ளமாக காட்சியளித்தது              நூல் – துஹ்ஃதுன் னளாயிர், புன்யானுல் மர்சூஸ் பக்கம் 57

வரலாறுகள் மறக்கடிக்கப்பட்ட சமூகம்  விரைவில் அழிந்து விடும். ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிப்பதற்கு வரலாறுகளை மாற்றி எழுதும் சதித் திட்டம் தான் அரங்கேற்றப்பட்டது

 கி.பி.712-இல் இருந்து கி.பி.1492 வரை சுமார் 780 ஆண்டுகள் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி நீடித்திருந்தது. எப்படி நம் இந்தியாவில் மொகலாயர்களின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்களோ அதுபோல் ஸ்பெயினில் முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அதன் பின்பு முஸ்லிம்களை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வகுத்த திட்டம் ஓரு ஆண்டுத் திட்டமோ,ஐந்தாண்டுத் திட்டமோ அல்ல. மாறாக 120 ஆண்டுத் திட்டம். இறுதியில் 1612-ல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். முதலில் முஸ்லிம்களின் கடைசி பகுதியான கிரனடா விழுந்தவுடன் முஸ்லிம்களில் ஒரு பலர் மொராக்கோ போன்ற அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்து போய் விட்டனர். அவ்வாறு குடி பெயர்ந்து போனவர்கள் அனைவரும் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்கு போய் சேர்ந்து விடவில்லை. அதில் சிலர் போகும் வழியிலேயே கொலை செய்யப்பட்டனர். ஸ்பெயினிலேயே தங்கி விட்ட முஸ்லிம்களை வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்கள், ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள் என்றஎல்லாம் வரலாறுகளை மாற்றி எழுதி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மீது பாய்ச்சினார்கள். அப்படியிருந்தும் அந்த முஸ்லிம்கள் நம் தாய் நாட்டிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற முடிவில் இருந்தனர். இந்நிலையில் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த மன்னன்  கிறிஸ்தவ மன்னன் பெர்டினன்ட் ஒருஅறிக்கை வெளியிட்டார். எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமை உண்டு. பாதுகாப்பு உண்டு என்பதே அந்த அறிவிப்பாகும். இந்த உறுதிமொழியை பல முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால் அந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே ஆங்காங்கே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்கள் முஸ்லிம்களின் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன. ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்று முஸ்லிம்களை அழித்தது. 

மேலும் ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஆங்காங்கே கொலை செய்யப்பட்ட அங்குள்ள அரசு முஸ்லிம்களை அரசுப்பணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. மேலும் முஸ்லிம்களின் மொழியான அரபுமொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றிலும்அகற்றப் பட்டது. அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாறு திரிக்கப்பட்டு அவர்கள் கொடுமையாளர்கள் எள்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் இருண்ட காலம் என்று இட்டுக்கட்டப்பட்டது. முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினரால் சூறையாடப்பட்டன. இதற்கு அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று காரணம் கூறப்பட்டன. இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை நம்பிய பாமர மக்கள் முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கு வந்தனர். கிறிஸ்தவ மதத்திலிருந்து முஸ்லிமாக மாறியவர்கள் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு வந்து விடும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என முதல் சட்டம் வந்தது. பின்பு இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணம் செல்லாது அறிவிக்கப்பட்டது. இதனால் முஸ்லிம்கள் தங்கள் திருமணங்களை இரகசியமாக வீட்டுக்குள் செய்து கொள்வார்கள். காலப்போக்கில் இதை அறிந்த அதிகாரிகள் அந்த திருமணங்களை கண்டு பிடித்து அதை செய்தவர்களை தண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து அண்டை நாடுகளில் குடியேறினர். இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டு கி.பி.1612     (தகவல்: தலித் வாய்ஸ் ஆசிரியர்Dr. ராஜசேகர் எழுதிய நூல்)

(அல்லாஹ்வின் கிருபையால் இன்று ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது ஆறுதலான விஷயம்)

இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உள்ள தொடர்பு  பூர்வீகமானது 

ஆனால் அதை பாசிச வாதிகள் மறைக்கப் பார்க்கிறார்கள் 

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38)البقرة

.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن كثير

 நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும் இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின. நபி ஆதம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்...  

விளக்கம்- அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த இலங்கையில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கினார்கள் என்றால் இன்று அது இந்தியாவில் இல்லையே பிறகு எப்படி நாம் அதைப் பற்றிப் பெருமையாகப் பேச முடியும் என்று சிலர் கேட்கலாம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியது வேண்டுமானால் இலங்கையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பல அடையாளச் சின்னங்கள் இன்றும் இந்தியாவில் தான் உள்ளன. உதாரணமாக இராமேஸ்வரத்தில் உள்ள  ராமர் பாலம்  என்பது இன்று வரை ஆதம் பாலம் என்றே இந்திய வரை படங்களில் உள்ளது. சேது சமுத்திரத் திட்டம், சேதுபதி மன்னர்கள் என்றெல்லாம் கூறும்போது அந்த சேது என்பது நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஷீத் அலைஹிஸ்ஸலாம் என்பதிலிருந்து மருவி வந்ததாகும். ஹாபீல், காபீல் உடைய அடக்கஸ்தலம்  இராமேஸ்வரத்தில் உள்ளது என்பதையும் நாம் அறிவோம். 

عن ابن عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام ( وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريحا الهند هبط بها آدم عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)

 அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலை அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

நபி ஆதம் அலை அவர்களுக்குப் பின்னால் பல நபிமார்கள் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கலாம்

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الَعَزِيزُ الْحَكِيمُ (4)ابراهيم –

 وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا (36)النحل – 

என்ற வசனங்களின் படி ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் நபிமார்களை அனுப்பாமல் இருக்கவில்லை என்று அல்லாஹ் கூறியுள்ளான். தமிழ் மிகவும் பழமையான மொழியாகும். நிச்சயமாக தமிழ் மொழியிலும் பல நபிமார்கள் வந்திருக்கலாம் என்பதை மேற்படி வசனங்கள் உணர்த்துகிறது.           

இந்த நாட்டில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டு வந்ததில் அரபு முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் அரபிக்கடல் வழியேவணிகர்களாக  தென்னிந்தியாவுக்கு கேரளாவுக்கு முஸ்லிம்கள் வந்த போது அவர்களின் நேர்மை நாணயம் இதையெல்லாம் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றனர். அதற்கு முன்பே அதாவது நபி ஸல் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்கலூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.            

என்ற வார்த்தை தான் மருவி கேரளா என்று மாறியதாக கூறுவர் ஏனெனில் அப்போதே அந்த பூமி செழிப்பானخير الله

பூமியாக இருந்ததால் வளம் நிறைந்த அல்லாஹ்வின் பூமி என்று கூறிஅதுவே கேரளா என மாறியதாம்.

இன்றைக்கும் கேரளாவை GOD’S OWN COUNTRY என்பர். அது அந்த அரபு வார்த்தையின் பொருளாகும்

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் இவ்வளவு நெருங்கிய இருந்ததால் தான் இந்திய மண்ணை அந்நியர்களிடம் விட்டுக் கொடுக்க முஸ்லிம்கள் இடம் கொடுக்கவில்லை

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த நேரத்தில் மூத்த ஆலிம்களுக்குள் உரையாடல் நடைபெற்றது நாமும் பாகிஸ்தானுக்குச் சென்று விடுவோம். இனிமேல் அது தான் நமக்குப் பாதுகாப்பான ஒரு நகரம் என்று சில ஆலிம்கள் முடிவெடுத்த நேரத்தில் ஹுசைன் அஹ்மது மதனீ ரஹ் மற்றும் அவர்களுடன் இருந்த நம்முடைய முன்னோடிகளான ஆலிம்கள் அதை மறுத்து நாம் எதற்காக இந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டும். இது நாம் பிறந்த மண். நாம் பிறந்த நாடு. கடைசி வரை இங்கே இருந்து நாம் போராட வேண்டும் என்று அறிவுரை கூறி அந்தச் செய்தியை மக்களிடம் பரப்பினார்கள். அதாவது நம்மை யாரும் நிர்பந்தமாக வெளியேற்றாமல் நாம் இங்கிருந்து வெளியேறக் கூடாது என்ற கொள்கையை மக்களிடம் பரப்பினார்கள்.    

இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி  பிரபல எழுத்தாளர்...

1975 டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். “இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது”. டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னமான இந்தியா கேட் எனும் பகுதியில் இந்தியாவுக்காக  உயிர் நீத்த 95,300 இராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945  பேர் முஸ்லிம்கள்.

பாடப் புத்தகங்களில் மொகலாய  மன்னர்களைப் பற்றிய பொய்யான செய்திகளை முஸ்லிம்களில் சிலர் கூட நம்புகிறார்கள்

அவுரங்கசீப் ரஹ் அவர்களைப் பற்றி பல பொய்யான வரலாறுகள் பாடப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன.

இந்துக்கள் மாபெரும் தலைவராக கருதும் மராட்டிய மன்னன் (சத்ரபதி) சிவாஜியை அவுரங்கசீப் சிறையில் அடைத்ததாகவும், மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்று நூல்களில் திரித்து எழுதுவார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் சிவாஜி சிறை பிடிக்கப்பட்டாரே தவிர, மற்றபடி சிறையில் அவர் இருக்கும்போது கவுரமாக நடத்தப்பட்டார். மேலும் அவுரங்கசீப் ரஹ் அவர்கள் சிவாஜியின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு முறை சிவாஜி மதுராவில் இருக்கும் கோவிலுக்கு தாம் இரண்டு குதிரைகளை தானமாக வழங்க எண்ணியிருப்பதாகவும் அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று அவுரங்கசீப் அவர்களிடம் கோரிக்கை வைத்த போது அவுரங்கசீப் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்ற வசதி செய்து கொடுத்தார் 

படிப்பினை- சிவாஜியின் நேர்ச்சை விஷயத்தில் அவுரங்கசீப் அவர்களுக்கு அறவே உடன்பாடு இல்லா விட்டாலும் தன்னுடைய கொள்கையை மற்றொருவர் மீது திணிக்கவில்லை.

மொகலாய மன்னர்கள் கோவில்களை இடித்து  விட்டு பள்ளிவாசல்களை கட்டியதாக பொய்யான வரலாறு

பாபர், அவுரங்கசீப் போன்றவர்கள் மன்னர்கள் என்ற அடிப்படையில் கோவில்கள் கட்ட அரசு சார்பில் மானியம் வழங்கிய வரலாறுகள் எவ்வளவோ உள்ளன. எந்த கோவிலையும் இடித்த வரலாறு இல்லை. கோயில்களை மஸ்ஜித்களாக ஆக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் மொகலாய மன்னர்களுக்கு இருந்திருந்தால் இந்துக்கள் நிறைந்த இந்த நாட்டில் 800 வருடங்கள் அவர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது. ஆனால் அத்தகைய மொகலாய மன்னர்களைப் பற்றி கோவில்களை இடித்தார்கள் என்றஎல்லாம் தவறான வரலாறுகள்  மாணவர்களின் பாட புத்தக்கங்களில் திணிக்கபட்டுள்ளன.                         

  பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார். தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற ஒரு இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன.அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக்கொண்டு கிடந்தாள். வசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.  இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது. 

உலகையே உலுக்கிய குஜராத் கலவரம் பற்றிய செய்திகள் பாடப் புத்தகங்களில் நீக்கப் பட்டுள்ளன

ஆஜ்தக் தொலைக்காட்சியும், Tehalkaவும் இணைந்து நடத்திய புலன்விசாரணையில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் எரித்ததையும், அகதமபாதில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும், அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது இவ்வளவு கொடூரமான சம்பவத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து நீக்கி விட்டார்கள். 

காலப் போக்கில் உண்மயான வரலாறுகள் மறைக்கப்பட்டு பொய்யான வரலாறுகள் பாடப் புத்தகங்களில் அதிகமாக இடம் பெறலாம். எனவே நம்முடைய வருங்கால சந்த திகளுக்கு மட்டுமாவது உண்மையான வரலாறுகளை அடிக்கடி சொல்ல வேண்டும்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6)سورة الحجرات

عن ابن عباس في هذه الآية قال: كان رسول الله صلى الله عليه وسلم بَعَثَ الوليد بن عقبة بن أبي مُعَيْط إلى بني المصطلق ليأخذ منهم الصدقات، وإنهم لما أتاهم الخبر فرحوا وخرجوا يتلقون رسولَ رسولِ الله صلى الله عليه وسلم، وأنه لما حُدِّثَ الوليد أنهم خرجوا يتلقونه، رجع الوليد إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إن بني المصطلق قد منعوا الصدقة. فغضب رسول الله صلى الله عليه وسلم من ذلك غضبا شديدا، فبينا هو يحدث نفسه أن يغزوهم إذ أتاه الوفد فقالوا: يا رسول الله، إنا حُدِّثْنا أنَّ رسولك رجع من نصف الطريق، وإنا خشينا أن ما رده كتاب جاء منك لغضب غضبته علينا، وإنا نعوذ بالله من غضبه وغضب رسوله. وإن النبي صلى الله عليه وسلم استغشهم وهمّ بهم، فأنزل الله  عذرهم في الكتاب، فقال: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا } إلى آخر الآية (تفسير ابن كثير) 

பனூ முஸ்தலக் என்ற கூட்டத்தினரிடம் ஜகாத் வசூலிப்பதற்காக வலீத் என்பவரை நபி ஸல் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். வசூலகர் வருகிறார் என்று தெரிந்து தங்களுக்கான ஜகாத்தை அவர்கள் தயாராக வைத்திருந்தார்கள் ஆனால் அவர் அங்கு செல்லவேயில்லை. அவருக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள பகை காரணமாக அங்கு செல்லாமலேயே நபி ஸல் அவர்களிடம் வந்து நான் சென்று கேட்டேன் அவர்கள் ஜகாத் தர மறுத்து விட்டார்கள் என்று பொய் சொன்னார். அதை நம்பி நபி ஸல் அவர்கள் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி விட்ட பிறகு அவர்களே நேரடியாக வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களில் தூதர் வருவார் என நாங்கள் பொறுமை காத்தோம். அவர் வராததால் நாங்களே கொண்டு வந்தோம் என்று கூறிய பின்பு தான் உண்மை புரிந்தது. இந்த வசனமும் அப்போது இறங்கியது.               

நம்மைப் பற்றிய தவறான பிரச்சாரங்களை ஒழிக்க நாம் செய்ய வேண்டியவை 

  பாசிச ஆட்சி இருக்கும் வரை தொடர்ந்து இதுபோன்று நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஸ்பெயினைப் போன்று இந்தியாவை மாற்ற நினைக்கிறார்கள். எனவே ஒவ்வொரு நேரமும் இந்த பாசிச ஆட்சி நீங்க அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். 1998 ல் பாசிச பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன்  ICHR எனப்படும்  இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் சுமித், K.N. பணிக்கர் ஆகியோர் தயார் செய்திருந்த இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்று ஆவண ஆய்வுத் திட்டத்தை முடக்கினார்கள். உண்மையான வரலாறுகளை ஆய்வு செய்யும்  நடுநிலையான வரலாற்று  ஆய்வாளர்களை நீக்கி விட்டு பாசிச சிந்தனை கொண்டவர்களை வரலாற்று ஆய்வாளர்களாக  நியமித்தார்கள். அன்று முதல் இன்று வரை வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்கள் இடம் பெற்று வருகிறது. எனவே சட்ட ரீதியாக நமது எதிர்ப்புகளைத் தெரிவிப்பதுடன் எந்த அளவுக்கு நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை விதைக்கிறார்களோ அந்த அளவுக்கு நம்மைப் பற்றிய நல்ல கருத்துக்களை மாற்று மதத்தவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நம் வீட்டு வைபவங்களில் நமக்கு அருகிலுள்ள பிற சமய சகோதரர்களை அழைக்க வேண்டும். அவர்களின் சிரமங்களைக் குறைப்பதில் பங்கெடுக்க வேண்டும். இதுவும் நபிகளார் காட்டித் தந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.                                 

  நமது மஹல்லா மஸ்ஜிதில் அவ்வப்போது நடைபெறும் விழாக்களில் பிற சமய சகோதரர்களை, குறிப்பாக மத குருமார்களையும் காவல்துறையினரையும், அரசு அதிகாரிகளையும் அழைத்து சமய நல்லிணக்க விழாக்கள் நடத்தி அவர்களை கண்ணியப் படுத்துவதுடன் அவர்களின் நாவினால் நம்முடைய இஸ்லாத்தைப் பற்றிய நல்ல கருத்துக்களைச் சொல்ல வைக்க வேண்டும்.

ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் குழந்தைகளுக்கு ஓதிப் பார்க்க வரும் பிற சமய சகோதரர்கள் அமருவதற்கு சிறந்த இட வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன் முடிந்தால் ஸ்நாக்ஸ் ஏதேனும் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். சென்னையில் ஒரு மஸ்ஜிதில் இவ்வாறு தொடர்ந்து செய்ததன் பலனாக இஸ்லாம் மீது நல்ல எண்ணம் ஏற்பட்டு சிலர் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

நமது வாகனங்களில் மாற்றார்களின் மனதை ஈர்க்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்ல நபிமொழிகளை எழுதி ஒட்ட வேண்டும்.மருத்துவமனைகளுக்கு ஒரு குழுவாகச் சென்று மத பாகுபாடு பார்க்காமல் அங்குள்ள நோயாளிகளை நலம் விசாரிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கித் தர வேண்டும். கிறிஸ்தவ மதம் பரவியது இப்படித்தான். 

 

 மாற்றார்களுடன் வியாபாரம் செய்யும்போது நம்பிக்கை, நாணயம், குறைந்த லாபம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இஸ்லாம் இவ்வாறு தான் பரவியது.எல்லாவற்றும் மேலாக அனைத்து விஷயங்களிலும் நம்மிடம் இறையச்சம் மேலோங்க வேண்டும். நாம் அனைவரும் உண்மை முஃமின்களாக மாறி விட்டால் வெகு விரைவில் பாசிச ஆட்சியை அல்லாஹ் இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிவது நிச்சயம். 

மஹல்லா தோறும் முஸ்லிம் பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும் 

 முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்வதற்காகவே நாடு முழுவதும் 16,000 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. அங்கு பயிலும் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை ஊட்டுகிறார்கள். நாளடைவில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அந்த  வெறுப்புணர்வு தீயாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விடுகிறது. முஸ்லிம்களைக் கண்டால் கொல்ல வேண்டும் என்ற வெறி பிடித்தவர்களாக ஆக்கப் படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தங்களுடைய தொழில் தங்களுடைய குடும்பம் என்ற சுயநலத்துடன் சமுதாய அக்கறையில்லாத சமூகமாக இருந்து வருகிறார்கள்.  

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11)  الرعد

நம்மைப் பற்றிய தவறான சிந்தனைகளை விஷமிகள் விதைக்கக்கூடாது என்பதற்காக 

முன் கூட்டியே எச்சரிக்கையாக நடந்து கொள்வது நபி ஸல்  அவர்களின்  சுன்னத்

عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُورُهُ وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا بَلَغَ قَرِيبًا مِنْ بَابِ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِمَا رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا  (بخاري 3101

 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்கு அருகில் பள்ளிவாசலின் தலைவாயிலை நான் அடைந்தபோது அன்சாரிகளில் இருவர் கடந்து சென்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்விருவரும் சலாம் கூறினர். அப்போது அவ்விருவரிடமும் நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்று நில்லுங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை தான்” எனக் கூறினார்கள்.அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா சந்தேகிப்போம்!) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக் கும் பெரிய விஷயமாகப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்துவிடுவானோ என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாடப் புத்தகங்களில் மறைக்கப் படும் வரலாறுகள்

    01-08-2025 بسم الله الرحمن الرحيم   பாடப் புத்தகங்களில்  மறைக்கப் படும் வரலாறுகள் https://chennaijamaathululama.blogspot.com என்ற...