25-07-2025 بسم الله الرحمن الرحيم
கியாமத் நெருக்கத்தில்
மஹ்தீ (அலை) அவர்களின் வருகை
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
கியாமத் நாளின் பல்வேறு அடையாளங்களை நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பும் ஒன்றாகும். இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கியாமத் நாளின் கடைசி அடையாளங்கள் தோன்றும் போது தான் வருவார்கள் என பல்வேறு ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் இன்று அவரவர் தன்னை மஹ்தீ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த தலைப்பின் மூலம் கியாமத் நாளின் அடையாளங்களைப் பற்றியும் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையைப் பற்றியும் நபி ஸல் அவர்களுக்குப் பிறகு வேறு இறைத்தூதர் வர மாட்டார்கள் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
சிறிய அடையாளங்கள் தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரிய அடையாளங்கள் இன்னும் வரவில்லை
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை இஸ்லாத்தின் மறுமை நாளின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். மறுமையின் அடையாளங்கள் சிறிய அடையாளங்கள், பெரிய அடையாளங்கள் எனப் பிரிக்கப் படுகின்றன. சிறிய அடையாளங்கள் நிகழ்ந்து முடிவுற்ற பின்னர் மஹ்தி (அலை) வெளிப்படுவார். அதன் பின்னரே பெரிய அடையாளங்கள் நிகழ ஆரம்பிக்கும். எனவே, மஹ்தி (அலை) அவர்களின் வருகை சிறிய, பெரிய அடையாளங்களை இணைக்கும் ஓர் பாலமாக அமையப் போகும் மிக முக்கிய நிகழ்ச்சியாகும்.
தற்போது நடைபெறும் சிறிய அடையாளங்களில் சில....
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள், பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல், குடிசைகள் கோபுரமாகுதல், விபச்சாரம், மதுப்பழக்கம் பெருகுதல், தகுதியற்றவர்களிடம் பொறுப்பு, காலம் சுருங்குதல், கொலைகள் பெருகுதல், நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல், பள்ளிவாசல்களை வைத்து பெருமை பேசுதல், நெருக்கமான கடை வீதிகள், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், உயிரற்ற பொருட்கள் பேசுதல், தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல், இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் தோன்றல், முந்தைய சமுதாயத்தை பின்பற்றல் என்பனவற்றை நடைபெறும் நிகழ்வுகளாகக் குறிப்பிடலாம்.
وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي كَذَّابُونَ ثَلَاثُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي (ترمذي
எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதீ, அபூ தாவூத்.
தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர், இன்றும் கூட சிலை வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வதைக் காணலாம்.குழந்தை இல்லாத முஸ்லிம் பெண்களில் சிலர் தமக்கு குழந்தை வேண்டி, கோவில்களில் தொட்டில் கட்டி விடும் நிகழ்ச்சியைக் காண்கிறோம். கோவில் விழாக்களில் முழு அளவில் பங்கெடுக்கும் சில முஸ்லிம்களும் உண்டு. பொங்கல் கொண்டாடும் முஸ்லிம்களும் உண்டு. இவை மறுமை நாளின் அடையாளமாகும்.
அறியாமை பெருகும்
عَنْ أَنَسِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَثْبُتَ الْجَهْلُ وَيُشْرَبَ الْخَمْرُ وَيَظْهَرَ الزِّنَا (بخاري
عَنْ أَنَسِ رض قَالَ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لَا يُحَدِّثُكُمْ أَحَدٌ بَعْدِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَقِلَّ الْعِلْمُ وَيَظْهَرَ الْجَهْلُ وَيَظْهَرَ الزِّنَا وَتَكْثُرَ النِّسَاءُ وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ(بخاري
கல்வி உயர்த்தப்படுவதும், அறியாமை மேலோங்குவதும், விபச்சாரம் பெருகுவதும், மதுபானம் அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஓர் ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மறுமை நாளின் அடையாளங்களாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு பாலிக் (ரலி) நூல் - புகாரீ, முஸ்லிம், அஹ்மத், நஸயீ.
அநியாயமாக ஓர் உயிரைப் பறிக்கும் கொலைபாதகச் செயலை செய்யும் முன் பலமுறை யோசித்தது அந்தக் காலம். இப்போதோ கொலை செய்வதற்கு என கூலிப் படைகள் உண்டு. கையை வெட்ட ஒரு கூலி, காலை எடுக்க ஒரு கூலி, உயிரைப்பறிக்க ஒரு கூலி என 'பேரம்' பேசி கொலை செய்யும் கும்பல் அதிகரித்து விட்டது.
காலம் சுருங்கும்
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا تقوم الساعة حتى يتقارب الزمان، فتكون السنة كالشهر، ويكون الشهر كالجمعة، وتكون الجمعة كاليوم، ويكون اليوم كالساعة، وتكون الساعة كاحتراق السعفة، أو الخوصة (ابن حبان
காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
عن أَبي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَارَبُ الزَّمَانُ وَيَنْقُصُ الْعَمَلُ وَيُلْقَى الشُّحُّ وَيَكْثُرُ الْهَرْجُ (بخاري
(மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7061.
காலம் சுருங்கி உள்ளது உண்மைதான். ஒரு காலத்தில் ஒரு ஊருக்குப் பயணம் எனில் பலமாதம், பலவாரம், பல மணிநேரம் என செலவழித்து ஒட்டகை-குதிரை என பயணம் புறப்பட வேண்டும். ஆனால், ஒரு மாத காலம் பணம் செய்து போய் சேர வேண்டிய காலத்தை, சிலமணி நேரங்களில் போய் சேரும் அளவுக்கு விமான வழிபோக்குவரத்து மூலம் காலத்தைச் சுருக்கி விட்டோம். செய்திகள் பரிமாற பறவை, மிருகம் போன்வற்றைப் பயன்படுத்தி சில வாரங்களுக்குப் பின் அச்செய்தியை சேர்க்க படாதபாடு பட்ட மனித இனம், இன்று ஈமெயில், இன்டர்நெட் என செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது, காலம் சுருங்கி விட்டது, மறுமை வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
குழப்பங்கள் பெருகும்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَكُونُ فِتَنٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنْ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنْ الْمَاشِي وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنْ السَّاعِي مَنْ تَشَرَّفَ لَهَا تَسْتَشْرِفْهُ فَمَنْ وَجَدَ مِنْهَا مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ (بخاري
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாக) உட்கார்ந்திருப்பவன், (அதற்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன், நடப்பவனை விடவும், அதற்காக நடப்பவன்-அவற்றில், ஈடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். எவர் இதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவரை அவை அழிக்க முயலும். அப்போது ஒருவர் ஒரு புகலிடத்தையோ, பாதுகாப்பிடத்தையோ பெற்றால், அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் - புஹாரி 7081.
மோசமான ஆட்சியாளர்கள் வருவார்கள்.
عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ قَالَ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنْ الْحَجَّاجِ فَقَالَ اصْبِرُوا فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري
ஹஜ்ஜாஜ் ஆளுநர் மூலம் நாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றி நாங்கள் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் முறையிட்டோம். அப்போது, அவர்கள் நீங்கள் பொறுமையாக இருங்கள். உங்களிடம் உள்ள இந்த காலத்திற்குப்பின், இதனையும் விட மிக மோசமான காலம் வராமல் இருக்காது. இது உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை தொடரும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் அறிவிப்பளர்: சுபைர் இப்னு அதீ (ரஹ்) நூல்-புஹாரி - 7068.
பள்ளிவாசல்கள் பெருமைக்காக அமையும்
عَنْ أَنَسِ قَالَ : خَرَجْنَا مَعَهُ إِلَى الْحَرَمِ فَحَضَرَتِ الصَّلاَةُ ، فَقَالَ : أَلاَ تَنْزِلُوا نُصَلِّي ؟ فَقُلْتُ : لَوْ تَقَدَمْتَ إِلَى هَذَا الْمَسْجِدِ ، فَقَالَ أَيُّ مَسْجِدٍ ؟ قِيلَ : مَسْجِدُ بَنِي فُلاَنٍ ، فَفَزِعَ ، وَقَالَ : سَمِعْتُهُ يَقُولُ صلى الله عليه وسلم : يَأْتِي عَلَى أُمَّتِي زَمَانٌ يَتَبَاهَوْنَ بِالْمَسَاجِدِ ، وَلاَ يَعْمُرُونَهَا إِلاَّ قَلِيلاً.(مسند الجامع
மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் வகையில் பள்ளிவாசலைக் கட்டுவர். இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறிப்பாளர் அனஸ் (ரலி) நூல் - நஸயீ.
பள்ளிவாசல் தொழுவதற்காக அமைக்கபடுகின்ற ஒன்று. இறைவனை சிந்திக்க, இறைவனை வணங்க, அவனை நினைவு கூர பள்ளிவாசல் அவசியம் ஆகும். ஆனால் இன்று பள்ளிவாசல்களோ ஆடம்பர அடையாளங்களாக மாறி நிற்கின்றன.100 பேர் மட்டும் வாழும் பகுதிகளில் 10,000 பேர் நின்று தொழும் அளவுக்கு பள்ளிவாசல் அமைவதைக் காணலாம். சில ஊர்களில் பள்ளிவாசலை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் கொட்டிச் சீரழிப்பதைக் காணலாம். 'எங்களூர் பள்ளிவாசலே பெரும் பள்ளி' என்று பெருமை கொள்ள பள்ளிவாசல் கட்டிடங்கள் அமைக்கப்படுகிறது என்பதே உண்மை. இதுவும் 'மறுமை நாளின் சிறிய அடையாளங்களில் உள்ளதாகும் உள்ளது'
இது வரை நிகழாத சிறிய அடையாளங்கள்
யூதர்களுடன் மாபெரும் யுத்தம், கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல், யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல், கஹ்தான் இன மன்னரின் ஆட்சி, அல்ஜஹ்ஜாஹ் எனும் பெயருடைய மன்னரின் ஆட்சி, எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் கலீபா ஒருவரின் ஆட்சி, செல்வம் பெருகுதல், மாபெரும் யுத்தம், பெண்களின் எண்ணிக்கை பெருகுதல் பைத்துல் முகத்தஸ் வெற்றி ஆகியவை.
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَحْسِرَ الْفُرَاتُ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ يَقْتَتِلُ النَّاسُ عَلَيْهِ فَيُقْتَلُ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ وَيَقُولُ كُلُّ رَجُلٍ مِنْهُمْ لَعَلِّى أَكُونُ أَنَا الَّذِى أَنْجُو ».(مسلم)
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنْ الْحَبَشَةِ. (بخاري
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடைபெறப் போகும்
மாபெரும் யுத்தம் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ (مسلم 5157
கருத்து- கியாமத் நெருக்கத்தில் ஷாம் பகுதியில் உள்ள அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய ஊர்களை ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) சுற்றி வளைப்பார்கள்.அப்போது மதீனாவில் இருந்து (இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தலைமையில் ஒரு படை அவர்களை எதிர் கொள்ளும். அந்தப்படையினர் அப்போதைய மக்களில் சிறந்தவர்களாக இருப்பர் அந்தப்படையினர் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) அந்தப்படையை நோக்கி எங்களுடைய மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மட்டும் எங்களிடம் விட்டு விடுங்கள் என்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் கூறுவார்கள். அவர்கள் எங்களின் சகோதரர்கள். அவர்களை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறுவர். அதன் பின்பு சண்டை நடைபெறும்.ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்குத் தோல்வியே மிஞ்சும். முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்படுவார்கள். மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் விரண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் நம்பிக்கை இழந்து விடாமல் தொடர்ந்து போர் செய்வார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தருவான். ரோமர்களின் தலை நகரத்தை வெற்றி கொள்வார்கள். அவர்கள் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஷைத்தான் அங்கு வந்து உங்களின் வீடுகளுக்கு தஜ்ஜால் வந்து விட்டான் என ஒரு பீதியைப் பரப்புவான். அச்செய்தி உண்மையாக இருக்காது. ஏனெனில் அப்போது தான் தஜ்ஜால் அவனது தீவில் இருந்து கிளம்புவான். அதன் பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள். தஜ்ஜாலைக் கொல்லுவார்கள்.
படிப்பினை- ஆரம்பத்தில் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு எடுத்த எடுப்பிலேயே அல்லாஹ் வெற்றியைத் தரவேண்டும் என்பது நியதி அல்ல
மேற்படி யுத்தம் நடைபெறும் நேரம் மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்பட்டு விட்ட நேரமாகவும் இருக்கலாம். மஹ்தீ (அலை) அவர்கள் வெளிப்பட்டுவிட்டால் பெரிய அடையாளங்கள் நிகழப் போகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். “மஹ்தி” எனும் சொல்லின் பொருள் “வழிகாட்டப்பட்டவர் அல்லது வழிப்படுத்துபவர்” என்பதாகும். இது அவர்களின் பெயரல்ல. மாறாக, அவருக்கு வழங்கப்படும் சிறப்புப் பட்டமாகும். ரசூல் (ஸல்) அவர்கள், நான்கு கலிபாக்களையும் “மஹ்திய்யீன்” என ஓர் ஹதீஸில் கூறியிருக்கின்றார்கள். எனவே “மஹ்தி” என்பது வழிகாட்டப்பட்டவர் என்பதைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகும்.
عَنْ عَلِيٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ لَمْ يَبْقَ مِنْ الدَّهْرِ إِلَّا يَوْمٌ لَبَعَثَ اللَّهُ رَجُلًا مِنْ أَهْلِ بَيْتِي يَمْلَؤُهَا عَدْلًا كَمَا مُلِئَتْ جَوْرًا (ابوداود
“இவ்வுலகில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் வழித்தோன்றலைச் சேர்ந்த ஒருவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான், அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும், அவரது தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயராகும், போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் அவர் நிலை நிறுத்துவார்கள்” என கண்மணி நாயகம் (ஸல்) கூறிய ஹதீஸ்கள் திர்மீதி மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. எனவே மஹ்தி (அலை) என சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படப் போகும் அவரின் உண்மையான பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். ஒரேயொரு நாள் எஞ்சியிருந்தாலும், அவருக்காக அந்த நாள் நீட்டப்படும் என்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் உணர்த்தப் படுகின்றது. அவரின் வருகை நிகழாமல் உலக அழிவு ஏற்படாது என்பது ஊர்ஜிதமாகின்றது. பெரிய பத்து அடையாளங்களும் அவரின் வருகை நிகழாமல் நிகழாது என்பதும் தெளிவாகின்றது.
சிறிய அடையாளங்கள் அனைத்தும் நிகழ்ந்த பிறகு அதன் கடைசியாக இமாம் மஹ்தீ அலை வருவார்கள்
இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள்
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ كُنَّا عِنْدَ أُمِّ سَلَمَةَ فَتَذَاكَرْنَا الْمَهْدِيَّ فَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمَهْدِيُّ مِنْ وَلَدِ فَاطِمَةَ (ابن ماجة)
عَنْ أَبِي سَعِيدٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما قَالَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يَقْسِمُ الْمَالَ وَلَا يَعُدُّهُ (مسلم) كتاب الفتن-
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَمْلِكَ الْعَرَبَ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي(ترمذي
"என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரபுகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்"
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنَ جَزْءٍ الزَّبِيدِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ نَاسٌ مِنْ الْمَشْرِقِ فَيُوَطِّئُونَ لِلْمَهْدِيِّ يَعْنِي سُلْطَانَهُ (ابن ماجة
மக்களுக்கு வாரி வாரி வழங்குபவர்களாக இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் இருப்பார்கள். சுமக்க முடியாத அளவுக்கு அவர்கள் வழங்கிய பொருட்களை ஒருவர் கொண்டு செல்வார்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ خَشِينَا أَنْ يَكُونَ بَعْدَ نَبِيِّنَا حَدَثٌ فَسَأَلْنَا نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ فِي أُمَّتِي الْمَهْدِيَّ يَخْرُجُ يَعِيشُ خَمْسًا أَوْ سَبْعًا أَوْ تِسْعًا زَيْدٌ الشَّاكُّ قَالَ قُلْنَا وَمَا ذَاكَ قَالَ سِنِينَ قَالَ فَيَجِيءُ إِلَيْهِ رَجُلٌ فَيَقُولُ يَا مَهْدِيُّ أَعْطِنِي أَعْطِنِي قَالَ فَيَحْثِي لَهُ فِي ثَوْبِهِ مَا اسْتَطَاعَ أَنْ يَحْمِلَهُ (ترمذي
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَكُونُ فِي أُمَّتِي الْمَهْدِيُّ إِنْ قُصِرَ فَسَبْعٌ وَإِلَّا فَتِسْعٌ فَتَنْعَمُ فِيهِ أُمَّتِي نِعْمَةً لَمْ يَنْعَمُوا مِثْلَهَا قَطُّ تُؤْتَى أُكُلَهَا وَلَا تَدَّخِرُ مِنْهُمْ شَيْئًا وَالْمَالُ يَوْمَئِذٍ كُدُوسٌ فَيَقُومُ الرَّجُلُ فَيَقُولُ يَا مَهْدِيُّ أَعْطِنِي فَيَقُولُ خُذْ (ابن ماجة
இமாம் மஹ்தீ அலை அவர்கள் வந்து விட்டால் தவழ்ந்து வந்தேனும் அவர்களிடம் பைஅத் செய்யுங்கள்
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَ فِتْيَةٌ مِنْ بَنِي هَاشِمٍ فَلَمَّا رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ وَتَغَيَّرَ لَوْنُهُ قَالَ فَقُلْتُ مَا نَزَالُ نَرَى فِي وَجْهِكَ شَيْئًا نَكْرَهُهُ فَقَالَ إِنَّا أَهْلُ بَيْتٍ اخْتَارَ اللَّهُ لَنَا الْآخِرَةَ عَلَى الدُّنْيَا وَإِنَّ أَهْلَ بَيْتِي سَيَلْقَوْنَ بَعْدِي بَلَاءً وَتَشْرِيدًا وَتَطْرِيدًا حَتَّى يَأْتِيَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَعَهُمْ رَايَاتٌ سُودٌ فَيَسْأَلُونَ الْخَيْرَ فَلَا يُعْطَوْنَهُ فَيُقَاتِلُونَ فَيُنْصَرُونَ فَيُعْطَوْنَ مَا سَأَلُوا فَلَا يَقْبَلُونَهُ حَتَّى يَدْفَعُوهَا إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي فَيَمْلَؤُهَا قِسْطًا كَمَا مَلَئُوهَا جَوْرًا فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَأْتِهِمْ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ (ابن ماجة
இமாம் மஹ்தீ அலை அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு அம்சம்
عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ (بخاري) وهي وإن لم يكن فيها التصريح بلفظ المهدي إلا أنها تدل على صفات رجل صالح يأم المسلمين في ذلك الوقت. وقد جاءت الأحاديث في السنن والمسانيد وغيرها مفسرة لهذه الأحاديث التي في الصحيحين، ودالة على أن ذلك الرجل الصالح يسمى: محمد بن عبد الله ، ويقال له: المهدي ، (شرح ابي داود
عن جابر رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ فَيَقُولُ أَمِيرُهُمْ : تَعالَ صَلِّ لَنَا فَيَقُولُ لاَ إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أَمِيرٌ تَكْرِمَةَ الله لِهذِهِ الأُمَّةِ (فتح الكبير
கடைசி காலத்தில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கும்போது அது தொழுகை நேரமாக இருக்கும். அப்போது இமாம் மஹ்தீ அலை அவர்களும் இருப்பார்கள். அவர்கள் ஈஸா நபியைத் தொழ வைக்கச் சொல்லும்போது உங்களின் அமீரே உங்களுக்குத் தொழ வைக்கட்டும் என்று கூறுவார்கள். இதைப் பற்றி நபி ஸல் கூறும்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் பின்னால் நின்று தொழுக உங்களில் ஒருவர் இமாமாக நின்று தொழ வைப்பது எவ்வளவு பெரிய சிறப்பு என்று பெருமையுடன் கூறினார்கள். இதில் அப்போது தொழ வைப்பவர் யார் என்பது தெளிவாக இல்லா விட்டாலும் அவர்கள் இமாம் மஹ்தீ அலை அவர்கள் என சூசகமாக ஹதீஸ்கள் சுட்டிக் காட்டுகிறது.- அபூதாவூத் விளக்கவுரை
முஸ்லிம்கள் மீது அளவுக்கதிகமான அநீதங்கள் கட்டவிழ்த்து விடப்படும்போது மஹ்தீ அலை வருவார்கள்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ ، فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا ، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ ، لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا ، وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ ، يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ [ مصنف عبد الرزاق ]
முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்படும் அநியாயத்தின் காரணமாக முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையில் தான் அல்லாஹ் என்னுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை அனுப்புவான். எந்த அளவுக்கு இந்த பூமி அநியாயத்தால் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தை அவர் நிலை நாட்டுவார். விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்களும் அவரைப் பொருந்திக் கொள்வார்கள். வானம் தன் பங்கை இந்த பூமியின் பொழியாமல் இருக்காது. பூமி தன் விளைச்சலை விளைவிக்காமல் இருக்காது. விவசாயம் பரக்கத்தாக இருக்கும். அப்போது உயிருடன் இருப்பவர்கள் இறந்த விட்ட தமது உறவினர்களை எண்ணி அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் இவருடைய ஆட்சியின் நலவை அனுபவித்திருப்பார்களே என்று ஏங்குவார்கள். இவ்வாறு இமாம் மஹ்தீ அலை அவர்கள் ஏழு வருடங்களோ அல்லது எட்டு வருடங்களோ அல்லது ஒன்பது வருடங்களோ ஆட்சி செய்வார்கள்.
படிப்பினை- எப்படி இருந்தாலும் இமாம் மஹ்தீ அலை அவர்கள் வந்த பின்பு ஒன்பது, பத்து வருடங்களுக்குள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் வந்து விடுவார்கள் என்பது தெளிவாகிறது. ஆகவே இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்கு இன்னும் பல காலங்கள் உள்ளது என்பது உறுதியான விஷயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக